
கனடாவைப் பாரீர்!
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவினை வெளிப்படுத்தும் வகையில், அங்கு நடத்தப்படும் போரை உடனே நிறுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி கனடாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மனித சங்கிலி பேரணியை நிகழ்த்தி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை சாதாரணமானதன்று - மிகப் பிரம்மாண்டமானது என்பதை எதிரிகள்கூட ஒப்புக் கொள்வார்கள்.
ஈழத்தில் மிகக் கொடூரமான முறையில் சிங்கள இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள், பச்சிளங் குழந்தைகளின் புகைப்படங்கள் சென்னையில் தீக்குளித்த முத்துக்குமார் படங்கள் அடங்கிய பதாகைகளையெல்லாம் ஏந்திச் சென்றனராம்.
15 கி.மீட்டர் நீளத்துக்கு இந்த மனிதச் சங்கிலி காணப்பட்டன. போரை நிறுத்து - பேச்சைத் தொடங்கு என்று குரல் கொடுத்துள்ளனர். இதில் கனடா அரசு தமக்குரிய பங்கினை, கடமையினை ஆற்றவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
டொரண்டோ நகரில் இது நடைபெற்றுள்ளது (30.1.2009). இதனைத் தொடர்ந்து, கனடாவின் முக்கிய நகரங்களான ஒட்டாவா, மான்ட்ரியல், கல்சேரி மற்றும் வான்கோவர் முதலிய நகரங்களிலும் இத்தகைய பேரணிகள் நடைபெற உள்ளன.
டொரன்டோ நகரில் நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலி குறித்து அந்நாட்டு அமைச்சர் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பங்கேற்ற தமிழர்களின் உணர்வு களை மதிப்பதாகவும், கனடாவாழ் தமிழர்களின் மன வலிமையைத் தாம் புரிந்து கொள்வதாகவும், இதுகுறித்து அமைச்சரவையில் விவாதித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் இத்தகைய உணர்வு கொழுந்துவிட்டு எரிவதை உலகம் அறிந்துதானி ருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால், மிகப்பெரிய எழுச்சியைக் காட்டுவதற்குப் பாத்தியப்பட்ட இந்தியாவில்தான் (தமிழ்நாட்டைத் தவிர) இத்தகு உணர்வுகள் மந்த நிலையில் உள்ளன.
ஈழப் போரில் இந்திய அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர் என்பது போன்ற தகவல்கள் உலகத் தமிழர்களிடையே உக்கிரத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு அங்கு என்ன வேலை என்கிற நியாயமான வினாக்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன. தமிழர் களின் உணர்வுகளை இந்திய அரசு மதிக்கும் இலட்சணம் இதுதானா? என்ற எண்ணம் அனைவரையும் உலுக்கி எடுத்து வருகிறது.
போரை நிறுத்து என்று இலங்கையை நோக்கி இந்திய அரசு அழுத்தமாக, வேகமாக வலியுறுத்த முடி யாமைக்குக் காரணம் இந்தக் குற்ற உணர்வுதான்!
பிஜி தீவில் சிந்தியர்கள் பாதிக்கப்பட்டபோதும், உகாண்டாவில் அரியானாக்காரர்கள் பாதிக்கப்பட்ட போதும் இந்திய அரசு எப்படி நடந்துகொண்டது?
லண்டனுக்குச் செல்லும் இந்தியப் பெண்களுக்குக் கன்னித்திரை பரிசோதனை செய்யப்பட்டபோது இந்திய அரசு துள்ளிக் குதிக்கவில்லையா?
இலண்டனில் சீக்கியர்கள் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவது குறித்த பிரச்சினை வரை இந்தியா தன் மூக்கை நுழைக்கவில்லையா?
தமிழர்கள் என்று வரும்போது மட்டும் அலட்சியம் ஏன்? இந்தக் கேள்வி தொடர்ந்து வட நாட்டு மக்களையும், பெரும்பாலும் வட மாநிலங்களின் மய்யமாக இயங்கி வரும் மத்திய அரசையும் துரத்திக்கொண்டுதானிருக்கும்.
வடக்கு - தெற்கு பிரச்சினை என்பது மீண்டும் பேருரு எடுக்கவேண்டுமா என்று முடிவு செய்யும் பந்து குறிப்பாக மத்திய அரசிடம் தானிருக்கிறது!
--------------------”விடுதலை” தலையங்கம் -2-2-2009
6 comments:
//ஈழப் போரில் இந்திய அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர் என்பது போன்ற தகவல்கள் உலகத் தமிழர்களிடையே உக்கிரத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு அங்கு என்ன வேலை என்கிற நியாயமான வினாக்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன. தமிழர் களின் உணர்வுகளை இந்திய அரசு மதிக்கும் இலட்சணம் இதுதானா? என்ற எண்ணம் அனைவரையும் உலுக்கி எடுத்து வருகிறது.//
இந்திய அரசின் இரட்டைவேடத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
தமிழனையும்,
தமிழினத்தையும் ஏமாற்றும்
காங்கிரசு ஈழத்தில் புரிவது இனப்
படுகொலை.
இதற்கு முடிவு கட்டாமல் இன்னும்
தமிழர்களை ஏமாற்ற விடலாமா?
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்
தமிழருக்காக தன்னையே எரித்து கொண்ட திருச்செந்தூர் முத்துகுமாரின் தியாகத்தை போற்றி கவிதை
சத கோடி நிலவெரிக்கும் தமிழ் சூரியன் முத்துகுமார்
அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாம் அன்று சொன்னான் ஒரு தமிழன்;
இங்கோ அறமும் பிழைக்கவில்லை அரசியலும் பிழைக்கவில்லை;
செல்வம் கொழிக்கும் அரசியல்வாதிகள் கையில் அராஜக ஆட்சி;
ஆளுக்கு ஒரு வேட்டு ஆட்டு மந்தையாக்க கிரிக்கெட்டு
அடமானம் மக்கள் ஓட்டு அன்னிய வங்கியில் நாட்டு மக்கள் நோட்டு
ஆட்டுகறி கோழிகறி ஆட்சிக்கு வந்தால் மனித கறி
சாதி அரசியல் சாக்கடையிலும் ஊழல்
நதியெல்லாம் கூவம் நாடெல்லாம் காடு
நந்தவனமெல்லாம் நாசமான குப்பைமேடு
இது நல்ல மாற்றமாம் சமூக வளர்ச்சியாம்;
இது புரத சத்தின் திரட்சி என்கிறான் பொறுப்பற்றவன்;
இல்லை இது புற்று நோயின் அறிகுறி என்கிறான் புரிந்தவன்;
வெளிப்படையான அரசாங்கமாம், சொல்கிறார் வெளி நாட்டில் படித்த மந்திரிமார்கள்;
ஆனால் அவர்களது சொத்து கணக்கு மட்டும் சோதனைக்காளாக கூடாதாம்!
அடுத்த நாட்டு அரசியலில் தலையிட கூடாதாம் அதிகாரிகளின் வாதம்;
ஆனால் ஆயுதம் வழங்கி இன அழிப்பை இன்முகத்துடன் தொடரலாமாம்;
சிந்தனையை சிதறடிக்கும் சினிமா அரசியல்
சிந்திப்பவரை நிந்திக்கும் சில்லரை அரசியல்
மக்கள் உரிமைகளை மறக்கடிக்கும் மதவாத அரசியல்
திருடர்களை விட்டு விட்டு தெருவில் போவோரை சிதைக்கும் தீவிரவாத அரசியல்
சரியாய் சொன்னாய் செந்தூர் முத்து
அரசாட்சி செய்வது மட்டும்தானா அரசியல்?
புரட்சியும் அரசியல்தான்!
அரியனை துறப்பதும்தான்!
அறம் வெல்ல நின் வாழ்வினையல்லவா துறந்தாய்!
சதகோடி நிலவெரிக்கும் சூரியன் நீ
தங்களால் எங்களுக்கு இரவில்லை இனி
எவருக்கும் இரவில்லை இனி
தன்னிலே சதகோடி நிலவெரிக்கும் வெண்முத்து நீ
தங்களால் தமிழருக்கு இரவில்லை இனி
தரணிக்கு இனி இரவில்லை!
செந்தில்
senthil.thiruchenthil@gmail.com
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்.
Post a Comment