
இலங்கை இனப் பிரச்சினையில் அய்.நா. சபை உள்பட எந்த நாடும் தலையிட அனுமதிக்க மாட் டோம் என்று அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
கொழும்பு புறநகர் பகுதியான ஹேமகமவில் மருத்துவமனை ஒன்றினை திறந்து வைத்து அவர் பேசியதாவது:
இலங்கையில் போர் நிறுத் தம் செய்ய வேண்டும் என்று உலகின் பல்வேறு நாடுகளும் சொல்கின்றன. அய்.நா. சபை மூலம் போரை நிறுத்த இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.
எங்கள் இனப் பிரச்சினையில் யாரும் தலையிட முடியாது. அய்.நா. சபை உள்பட எந்த ஒரு நாடும் இலங்கை விவகாரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டோம்.
மக்களைப் பாதுகாக்கும் முறைகள் பற்றி இலங்கைக்கு எந்த நாடும் சொல்லித் தர வேண்டியதில்லை. நாங்கள் மக்களை எப்படி பாதுகாக் கிறோம் என்பதை அறிய அய்.நா. சபையின் செயலாளர் நாயகம் இங்கு வந்து பார்த்து விட்டுப் போகட்டும்.
இலங்கை மக்களை அனைத் துலக நாடுகளின் கண்காட்சி பொருளாக்க மாட்டோம். இதற்கு என் தலைமையிலான அரசாங்கம் ஒரு போதும் இடம் கொடுக்காது என ஆணவத்துடன் பேசியுள்ளார் அதிபர் ராஜபக்சே.
----------------நன்றி:- "விடுதலை" 19-2-09
0 comments:
Post a Comment