Search This Blog

9.2.09

மதுபானம் அருந்த நல்ல நாளாம் - பஞ்சாங்கப் பித்தலாட்டம்


பஞ்சாங்கம் படுத்தும் பாடு

தமிழர்களை சிந்திக்க விடாமல் எத்தனை குறுக்கு வழி இருக்கோ அத்தனை குறுக்கு வழிகளையும் கையாண்டு பார்ப்பான் உடலுழைப்பு இல்லாமலேயே தமிழர்களின் இரத்தத்தை உறிஞ்சி குடித்துக் கொண்டு சொகுசு வாழ்வு வாழ்ந்துகிட்டிருக்கான்.

பார்ப்பான் பிறர் கையை எதிர்பார்ப்பவனே பார்ப்பான் என புரட்சிக்கவிஞர் சொன்னதற்கேற்ப உலகளந்த பெருமாள், முதல் கோடீசுவரன் (ஆனால் குபேரனின் கடங்காரன் இது தான் கடவுளின் லட்சணம்) இருக்கிற திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 2003 (சுபானு) ஆண்டு பஞ்சாங்கம் வெளியிட்டுள்ளது.

வழக்கம் போல் நல்லநாள், கெட்ட நாள், அமாவாசை, பருவம், ராகுகாலம், எமகண்டம், குளிகை, சூலம், வீடு கட்ட, மனைவாங்க, பண்டிகை, வாஸ்து, பல்லி கத்தறது, விழுந்ததுக்கு பலன்னு ஏகப்பட்ட புளுகைகளை புரள விட்டதுமில்லாமல் இந்த வருடம் புதுசா ஒன்னு வெளியிட்டிருக்காங்க.

அந்த பஞ்சாங்கத்தின் 130ஆம் பக்கத்தில் மனைவாங்க, வாகனம் வாங்க, பயணம் செய்ய குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் கடைசியில் மதுபானம் அருந்த என்ற தலைப்பில் நல்ல நாளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

----------- நன்றி:- "விடுதலை" 6-2-2009

0 comments: