
பிரதமர் கனவில் மிதக்கும் அத்வானி, அயோத்தியில் ராமன் கோயி லைக் கட்டப் போவதாகவும், இந்தப் பிரச்சினையைப் பேசியதால்தான் மத்தியில் ஆட்சிக்கு வர முடிந்தது என்றும் கூறியுள்ளார்.
கோயில் பிரச்சினையை பா.ஜ. கட்சி மறந்துவிட வில்லை. இதைப் பேசியதால் தான் மத்தியில் ஆட்சிக்கு வர முடிந்தது எனவும், அதனால் இந்திய அரசியலின் பாதையே மாறிப் போனது எனவும் அவர் கூறியுள்ளார். இன்றளவும் கட்சி கோயில் கட்டும் விசயத்தில் உறுதியாக உள்ளது. ராமஜெயம் என்பது கோயிலைக் கட்டி முடித்தால்தான் நிரூபணமாகும் என்று ராஷட்ர ரக்ஷோ விஜய் சங்கல்பட் பேரணியில் பேசும்போது குறிப்பிட்டார்.
தேர்தல் வெற்றிக்காக ராமன் கோயிலைக் கையில் எடுப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தி பேசியுள்ளார். கோயில் கட்டுவதற்காக மட்டுமே பா.ஜ. கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்று கேட்கிறார். நாட்டின் மதச்சார்பற்ற தன்மை காற்றில் பறப்பதை அவர் கவனிக்கவில்லை.
----------------நன்றி: "விடுதலை" 16-2-2009
1 comments:
வெள்ளைக்காரன் ஆட்சியின் போது வழக்காடு மன்றத்திலே ஐயருக்கும் ஐயங்காருக்கும் வித்தியாசம் தெரியாமல் அது என்ன என்று கேட்டானாம்..? , அதாவது நெற்றியில் விபூதி பட்டையிடுவதற்கும் நாமம் போடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்று நினைக்கிறேன் - அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது அல்லவா..? அது பற்றி எழுத முடியுமா? கி.வீரமணி அவர்கள் கூட சில மேடைகளில் இது பற்றி பேசியிருக்கிறார்கள்.
Post a Comment