மேன்மை தங்கிய கனம் நீதிபதிகள் அவர்களே சமூகம் கோர்ட்டார் எனக்கு அனுப்பியிருக்கும் நோட்டீசில், சமூகம் கோர்ட்டை அவமதித்ததாகவும், அதற்கு ஏன் நான் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்குக் காரணம் காட்ட வேண்டுமென்றும் கோரப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு சிவசாமி (முதலியார்) என்பவரால் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரிகையில் (Write petition) ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 இல் சமூகம் கோர்ட்டு தீர்ப்பில், கனம் திருச்சி ஜில்லா கலெக்டரைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பவைகளைக் குறித்து, திருச்சி பொதுக்கூட்டத்தில், நான் 4.11.1956 ஆம் தேதியில் மேற்படி தீர்ப்பைச் சொன்ன கனம் நீதிபதிகளைக் குறை கூறியிருப்பதாகவும், அந்த நீதிபதிகளைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியிருப்பதாகவும், அவர்களுக்கு உள்ளெண்ணம் கற்பித்துத் தாக்கியிருப்பதாகவும், அதனால் சமூகம் கோர்ட்டின் கவுரவம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சமூகம் கோர்ட் நீதிபரிபாலனத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும் இருக்கிறதென்றெல்லாம் கண்டிக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டு வார்த்தைகளில், நேரிடையான பொருளுக்கு, ஏற்றமாதிரி நான் யாதொரு குற்றம் செய்தவனல்ல. பொதுவாக, மனித சுபாவத்தைப் பற்றியும், நீண்ட காலமாக அது பிரதிபலித்து வருவதைப் பற்றியுமே எடுத்துச் சொல்லி, அதற்குப் பரிகாரம் தேடவே முயற்சித்து இருக்கிறேன். உதாரணமாக பிரஸ்தாபத் தீர்ப்பில் ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 தீர்ப்பில் பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு திராவிடர். அதிலும் தமிழர் (Non-Brahmin) மீது தீர்ப்புக் கொடுத்திருக்கிறவர்கள் பிராமணர்கள் என்று சொல்லப்படுகிற பார்ப்பனர்கள். இந்தத் தீர்ப்பின்மீது என்னுடைய ஆராய்ச்சிக்கு எட்டிய கருத்து, பாதிக்கப்பட்டவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதாலும், தீர்ப்புக் கூறினவர்கள் பார்ப்பனர்களாயிருப்பதாலும் இம்மாதிரி ஏற்பட்டது என்பது எனது தாழ்மையான முடிவு...
மநுதர்ம சாஸ்திரத்தின்படி, ஒரு பார்ப்பனரல்லாதவன் (சூத்திரன்) ஒரு நாட்டிலே (பார்ப்பனர்களும் வாழும் நாட்டிலே) நீதிபதியாகவோ, நிர்வாக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ, அரசனாகவோ, உயர் பதவியாளனாகவோ இருக்கக்கூடாது என்பது தர்மமாகும். அப்படியிருக்கவிடக்கூடாது என்பதும் பார்ப்பனர் தர்மமாகும். இந்த மநு தர்மந்தான் நீதிபதிகள் கையாளும் இந்துச் சட்டத்திற்கு மூலாதாரமாகும். இதற்கு உதாரணங்கள் அதிகம். கனம் கோர்ட்டார் அவர்களுக்குக் காட்டவேண்டியதில்லை என்றே கருதுகிறேன்... ஆகையினால்தான் பார்ப்பனர்கள் எந்தப் பதவியிலிருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம், பார்ப்பனரல்லாதார்களை ஒழித்துக் கட்டுவதில், தலையெடுக்கவிடாமல் செய்வதில், சரியாகவோ, தப்பாகவோ, காலாகாலம் பாராமல் தங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டுதான் வருவார்கள். இப்படி இவர்கள் நீண்ட நாட்களாக செய்து வருகிறார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் எடுத்துக் காட்ட முடியும்...
...என்னுடைய குறிப்பெல்லாம் பொதுவான பார்ப்பன ஜட்ஜுகள் யாராக இருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சட்டத்தைப் பொறுத்து எப்படி நடந்து கொண்டாலும், தமிழனுக்குத் தன்னாலான கேடு செய்து அழுத்தவோ, அழிக்கவோ செய்ய வேண்டியது, அவர்கள் ஜாதி மதக் கடமை என்பதும், இதில் யாரும் எந்தப் பார்ப்பனரும், மறந்தும் தவறி நடக்க மாட்டார்கள் என்பதும், இந்த நிலை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மற்றவர் கடமை என்பதும்தான்... நான் சொல்வதெல்லாம் எங்களைக் "கீழ் சாதி' என்றும், நாங்கள் மேலே வருவது தங்களுக்கு ஆபத்து என்றும், தங்கள் மதத்திற்குக் கேடு என்றும், தங்களை மேல் ஜாதி என்றும், இந்த ஜாதிப் பிரிவுகள் இப்படியே இருக்க வேண்டும் என்றும் கருதிக் கொண்டிருக்க மநுதர்ம இந்து பார்ப்பனர்கள் ஜட்ஜுகளாகவும், வேறு எந்த உத்தியோகஸ்தர்களாகவும் எங்கள் நாட்டில் எங்களுக்கு வேண்டாம். வேறு நாட்டில் அவர்களுக்கு எவ்வளவு உயர் பதவி வேண்டுமானாலும் கொடுங்கள். அவற்றில் நாங்கள் குறுக்கிடவில்லை. இந்தக் கருத்தை வெளியிடும் வகையில்தான் பிரஸ்தாப வழக்கு பேச்சில் நான் பேசியிருக்கிறேன்...
பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் அடிபட வேண்டியதுதான். "எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா?' என்று கனம் ஜட்ஜுகள் சிந்தித்து, நான் சொல்வதைத் தவறு என்று கருதலாம்...
...இந்த மாதிரி விஷயம் எப்படி இருந்தாலும், உண்மையில் விவாதத்திற்கு இடமில்லாமல், ஒரு நீதிபதி என்பவர் தவறானது என்று சொல்லும்படியான தன்மையில் நடந்து கொண்டால், தீர்ப்பு அளித்தால், அதற்குப் பரிகாரம் தேட வேண்டுமானால், பொதுமக்களுக்கு வழி என்ன இருக்கிறது? அப்பீலுக்கே போய்த் தீரவேண்டுமானால், எல்லோருக்கும் எல்லாக் காரியங்களிலும் அப்பீலில் இடமிருக்குமா? அரசாங்கத்தில் அரசர் ராஷ்டிரபதி பிரதமர் முதலமைச்சர் முதலியவர்களுடைய போக்குகளைப் பற்றியும், உத்தரவுகளைப் பற்றியும், பொதுக்கண்டனங்களும் கிளர்ச்சிகளும் செய்யத் தாராளமாக இடம் சட்ட அனுமதியும் கிடையாது என்றால், மக்களுக்குச் சுதந்திரம் எங்கே இருக்கின்றது? பரிகாரம் எப்படித் தேடுவது? பொதுஜனங்களுடைய உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதற்கு, 23.4.1957 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தைபெரியார் அளித்த வாக்கு மூலம்
Search This Blog
17.2.08
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
பார்ப்பான் ன்னு சொல்லறவங்க இந்தி ஜாதிகளுக்கு தமிழகத்துல இடஒதுக்கீடு கொடுக்கறத நியாப்படுத்தறாங்க!!!
தமிழ் நாட்டுல பீஹார் போன்ற மாழிலத்திலிந்து சாலை போன்ற பணிக்கு வந்து பெருகிவறாங்க..
பார்ப்பான் பார்ப்பான் கூவுற நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக இந்தி இந்திக்காரங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கறது …அதுக்கு என்ன சொல்லுவீங்க!!!
தமிழ் பேசற பார்ப்பான் இல்லேனா தமிழ்நாடு நல்லா இருக்கும் சொல்லிறீங்க….இந்தி பேசுறவங்க வந்தா தமிழ்நாடு உருப்பிடுமோ??
உன்ன வந்து ஆட்டிப்படைக்கிறவன் பாப்பான் இல்ல…இந்திக்கார..10 வருஷம் பொறுங்க…மஹாரஷ்டிரா ல நடக்குறுது வரும் தமிழ் நாட்டில…அப்பவும் பாப்பான் பாப்பான் ன்னு கூவினா, உன்ன இளிச்சவாயன் ஆக்கிடுவாங்க இந்திக்காரங்க… தமிழ் ன்னு சொல்லி இடஒதுக்கீடு வாங்கிடுவாங்க…
இப்பவே 10 இந்தி ஜாதிகள் தமிழ் நாட்டுல இடஒதுக்கீடு வாங்கறாங்க…
உத்தப்புரத்து பாப்பான் வரல…இரட்டை தம்ளர் முறைல பார்ப்பான் வரல…’தமிழ்’ கட்சிக ஏற்பாடு…இந்திகாரன் கூப்பிட்டு வேல தர்றாங்க நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக…Madras Airportக்கு போய் பார்!!!
Post a Comment