Search This Blog

8.12.13

கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் விடுதலை-மேல் முறையீடு இல்லையென்றால் மக்கள் கிளர்ச்சி!


விசாரணை சரியாக நடைபெறவில்லை என்பது பொது மக்கள் கருத்து
தமிழ்நாடுஅரசுமேல்முறையீடுசெய்யவேண்டும்
இல்லையெனில்மக்கள்கிளர்ச்சிஉறுதி!
தமிழர் தலைவரின் அறிக்கை
என்னை வாழ்நாள் கடனாளியாக்கிவிட்டீர்களே!  தமிழர் தலைவரின் உருக்கமும், உயர்நோக்கமும் கொண்ட அறிக்கை
காஞ்சீபுரம் சங்கரராமன் படுகொலை வழக்கு - புதுச்சேரி நீதிமன்றத்தில் சரியாக நடைபெறவில்லை என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது.இந்தத் தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்; இன்றேல் மக்கள் கிளர்ச்சி உறுதி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலி லேயே அதன் முக்கிய  பக்தர்களில் ஒருவரான சங்கரராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அக்கொலைபற்றி முதலில் போலிக் குற்ற வாளிகளை கைது செய்து, பிறகு உண்மையான குற்றவாளிகள் இவர்கள்தான் என்று கண்டறிந்து காவல்துறையின் ஆழ்ந்த புலன் விசாரணைக் குப்பின், காஞ்சி மடாதிபதிகள் சங்கராச்சாரியார் ஜெயேந்திரரும், அவரது அடுத்த சீடரான விஜேயேந்திரரும், இதில் குற்றவாளி ஒன்று, குற்றவாளி இரண்டு என்று கைது செய்யப்பட்டு மற்றும் பலருமாக 25 பேர்மீது குற்றப் பத்திரிக்கை தரப்பட்டது. கொலைக் குற்றத்திற்காக, இந்த இரண்டு சங்கராச்சாரியார்களும் சிறையில் சில காலம் இருந்து, பிணையில் (ஜாமீனில்) வெளி வந்தனர்!

காஞ்சி சங்கராச்சாரியார்களை மடாதிபதி பொறுப்பிலிருந்து விடுவித்திருக்க வேண்டும்

இந்து  அறநிலையப் பாதுகாப்புத்துறை, மடங்களையும் கோயில்களையும் கண்காணிக்கும் துறை என்ற நிலையில், இவ்விருவரும் மடாலயப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்; அது ஏனோ நடைபெறவில்லை!

வழக்கினை தமிழ்நாடு நீதிமன்றங்கள் விசா ரிக்கக் கூடாது; வேறு மாநிலத்தில் விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்து, அதன் தீர்ப்புப்படி புதுவை நீதிமன்றம் விசாரித்தது.

தொலைபேசி உரையாடல் என்னாயிற்று?

புதுவையில் வழக்கு நடக்கும்போதே தொலை பேசியில் அந்த நீதிபதியை அழைத்து, ஜெயேந் திரர் பேசியதாக ஒலி நாடாவை வைத்து அதற்குத் தனி விசாரணை நடைபெற்றது; அப்போது விசா ரித்த நீதிபதி இராமசாமி என்பவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு நீதிபதி (செஷனில்) வந்து வழக்கை நடத்தினார்.
இந்த விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று பொது மக்களிடையே பரவலாகப் பேசப் படும் செய்தியாகும்; அந்த ஒலி நாடா பேச்சு சரியாகக் கேட்கவில்லை; ஆகவே அதைத் தள்ளுபடி என்ற  செய்தி; அது பூசி மெழுகப்பட்ட நிலையில் இணையதளங்களில் ஒலிக்கும் அதே நாடா எப்படி துல்லியமாகக் கேட்கிறது என்ற கேள்வியும் ஒரு சிக்கலான கேள்வியாகும்.

பிறழ் சாட்சிகள்மீது நடவடிக்கை எடுக்காதது - ஏன்?

இது ஒருபுறம் இருக்க, வழக்கில் 81 சாட்சி யங்கள் பிறழ் சாட்சியங்கள் (ழடிளவடைந றுவைநேளள)  ஆகியுள்ளனர்.

அப்ரூவர் ரவிசுப்ரமணியன் என்பவரே பல்டி அடித்துள்ளார். இப்படி ஒரு பிறழ்சாட்சியம் துவங் கும்போதே, அரசு அவர்மீது குற்ற நடவடிக்கை எடுத்து வழக்குப் போட்டு நீதிமன்றங்களில் நிறுத்தியிருந்தால், ஏனைய பிறழ் சாட்சியங்கள் தொடர் கதையாக ஆகியிருக்காது!

ஏனோ காவல் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்தார்கள்? அரசின் முக்கிய பொறுப்பாளரின் கண் ஜாடையோ, அல்லது ஏதோ காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது சட்டவட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இத்தீர்ப்பில் குற்றஞ்சாட்டப் பெற்ற அத் துணைப் பேரும் விடுதலை செய்யப்பட்டனர்! இந்த இரண்டு சங்கராச்சாரியார்கள் இப்படி ஒரு விசித்திர தீர்ப்பைப் பெற்ற  விசித்திர வழக்காக இது கருதப்படுகிறது. உடனடியாக மேல் முறை யீடு செய்ய வேண்டிய அவசரக் கடமை தமிழக அரசிற்கு உண்டு.
கொலைக் குற்றம் செய்தோர் என்று குற்ற ஆய்வில் கண்டறிந்ததற்குப் போதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

துவக்கத்தில் கைது செய்ய ஆந்திராவிற்குப் போன காவல்துறை அதிகாரிகளிடமே பேரம் நடந்தது என்றெல்லாம்கூட செய்திகள் கசிந்தன.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் துணிவான முடிவு அன்று

துணிந்து அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள், நீதியை நிலைநாட்ட துணிந்து இந்த இருவரையும் கைது செய்ததன் மூலம் அவரது துணிச்சலுக்காக பெருமை பெற்றவராக ஆனார். நாமும் பாராட்டினோம். நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்தோம்.

பெரிய இடத்து சிபாரிசுகளுக்குக்கூட முதல்வர் இணங்காமல் அப்போது நீதி வெல்ல வேண்டும் என்று நின்றார்!

மேல் முறையீடு செய்க!

இப்போதும் அவரே முதல் அமைச்சர் என்ற நிலையில் இவ்வழக்கில் இப்படி நீதி, கேலிக் கூத்தாவதைப் பார்த்து முதலமைச்சர் சும்மா இருக்கலாமா?
உடனடியாக மேல் முறையீட்டினைச் (அப்பீல்) செய்ய சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு அவசர கதியில் ஆணை பிறப்பித்து, தனிக் குழுவை அமைத்து, நடவடிக்கையைத் தொடர வேண்டும் என்று நாடே எதிர்பார்க்கிறது.
நமது வேண்டுகோளும் அதுவே!

தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு... நக்கீரன் வாரம் இருமுறை ஏட்டில் வெளிவந் துள்ள ஒரு செய்தியை தமிழக அரசின் முக்கிய பார்வைக்கு வைக்கிறோம்:
புதுச்சேரி கோர்ட்டில் அரசு வக்கீலாக ஆஜரான தேவதாஸ், காஞ்சீபுரம் சி.பி.சி.அய்.டி. டி.எஸ்.பி.க்கு ஒரு லெட்டர் எழுதியிருக்காரு. அதில், சங்கரராமன் கேஸ் அப்பீலுக்கு தகுதியான கேஸ்னு 7 பாயிண்ட்டுகளை சுட்டிக்காட்டியிருக்காரு 

1. அப்ரூவர் ரவிசுப்ரமணியம் பல்டி சாட்சியான தால் அது சம்பந்தமா தனி வழக்கத் தொடுத்து விசாரிக்கணும். ஆனா, அவரை வழக்கிலிருந்தே விடுதலை செஞ்சிருக்காரு நீதிபதி முருகன். இந்திய சட்ட வரலாற்றிலேயே இப்படி நடந்ததில் லையாம். மறுவிசாரணை நடத்த இந்த பாயிண்ட்டே போதும். 
2. சங்கரராமனுக்கும், ஜெயேந்திரருக்கும் முன்விரோதம் இல்லைன்னு நீதிபதிதன் தீர்ப்பில் சொல்லியிருக்காரு, ஆனா, சோமசேகர கன பாடிகள்ங்கிற பேரில் ஜெயேந்திரருக்கு எதிரா எழுதப்பட்ட லெட்டர்களெல்லாம் சங்கரராமன் தன் கைப்பட எழுதியதுதான்னு கையெழுத்து நிபுணர்கள் அளித்த சாட்சியத்தை நீதிபதி கவனத்தில் எடுத்துக்கலை.
 3. இந்த வழக்கில் பல்டி சாட்சியான பலரும் ஏற்கெனவே ஒரு நீதிபதி முன்பு 164 ஸ்டேட் மெண்ட் கொடுத்தவர்கள்தான்; அதை அப்படியே நீதிபதி முருகன் நிராகரிச்சிருக்காரு.

4. காஞ்சி மாஜிஸ்டிரேட் முன்பாக நடந்த அணிவகுப்பில் கொலையாளிகளை சங்கரராமன் குடும்பத்தினர் அடையாளம் காட்டியதையும் அவர் கவனத்தில் எடுத்துக்கலை.

மற்ற பாயிண்ட்டுகள்?
பாயிண்ட்
5. கொலை நடந்தபோது சிறையில் இருந்த ஒருவன், ஜெயேந்திரரின் தூண்டுதலால் தான் போலி குற்றவாளியாக சரணடைந்தான் என அரசுத் தரப்பு நிரூபித்திருப்பதும் நீதிபதியின் தீர்ப்பில் இடம் பெறலை. 

6. ஜாமீன் கொடுத்தபோது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை விசாரணை நீதிமன்றம் அப்படியே எடுத்துக்கக்கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட்டே சொல்லியிருந்தும், ஜெயேந்திரர் கொலைக்கான சதித் திட்டத்தை தீட்டினாருங்கிறதுக்கு  முகாந் திரம் இல்லைன்னு அப்படியே எடுத்துக் கொண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்குது.

7. கொலைக்காக 5 லட்ச ரூபாய் மடத்தி லிருந்து கொடுக்கப்பட்டிருப்பதையும் அதில் ஒரு லட்சத்தை ஜெயேந்திரரே கொடுத்திருக்கிறார்னு அரசுத் தரப்பு நிரூபித்த ஆதாரங்களும் ஏற்கப் படலை. இதெல்லாம் அந்த லெட்டரில் சொல்லப்பட் டிருக்குது. அது அப்படியே சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.க் குப் போக, அவர் அதை சி.எம். அலுவலகத்துக்கு அனுப்பிட்டாரு            (நக்கீரன் 7.12.2013)

சட்டப்படி சம்பவம் நடந்தது, விசாரித்தது, எல்லாம் தமிழக அரசும் காவல்துறையும்தான்;

விசாரணை நீதிமன்றம் புதுச்சேரியாக இருப்ப தால் அந்த அரசுக்கே மேல் முறையீடு செய்ய உரிமை என்ற சட்ட வியாக்யானம் ஏற்கத்தக்க தல்ல.

மேல் முறையீடு இல்லையென்றால் மக்கள் கிளர்ச்சி!

நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டத் துறை என்று மூன்றும் தனியே வந்தபோது, புதுச்சேரி நீதிமன்றம் விசாரித்ததோடு அவர்களது, அதிகார எல்லை (துரசளைனஉவடி) முடிந்ததாகக் கொண்டு, விசாரித்து வழக்கைத் தாக்கல் செய்த அரசுக்கே மேல் முறையீட்டு உரிமையும், கடமையும் உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலைநாட் டிட, நீதி, நியாயம் நிலைக்க, தமிழக அரசும், முதல் அமைச்சரும் முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இன்றேல் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம் ஏற்படக் கூடும்.

-----------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை  7.12.2013

81 comments:

தமிழ் ஓவியா said...


சிருங்கேரியார்?


சிருங்கேரி மடம்பற்றி ஒரு நூல் வெளி வந்துள் ளது. நூலின் பெயர் - சிருங்கேரி மடம் - ஓர் ஆய்வு; அதன் ஆசிரியர் முனைவர் இரா. இரா ஜேஸ்வரன்.

இந்த நூலைப்பற்றி கல்கி இதழ் (25.11.2013) நூல் அறிமுகம் என்ற பகுதியில் மதிப்புரை எழுதியுள்ளது.

வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி என்று குறிப்பிடப்பட் டுள்ள அதில் காஞ்சி மடம்பற்றி குறிப்பேதும் இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்....

ஓர் அற்புதத்தை அவர் மீது ஏற்றிக் கூறுகிறது இந்நூல்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் ப்ளேக் என் னும் ஆட்கொல்லி நோய் பரவியபோது, சிறீ சச்சி தானந்த சிவாபிநவ நரசிம்மபாரதி சுவாமிகள் ஏதாவந்தம் ஸமயம் ஸர்வாபத் பயோசபி ரக்ஷ ணம் க்ருத்வா... என்று தொடங்கும் துர்காஸ் தவம் ஸ்லோகத்தை மனமுருகிப் பாடி நோய்ப் பரவாமல் காத்தார் என் றும் எழுதுகிறார் இந்த ஆய்வாளர்; நல்ல நூல் என்று குறிப்பிட்டுள்ளது கல்கி இதழ்.

ப்ளேக் என்னும் நோய்க்குக் காரணம் ஒரு வகைக் கிருமி. அதனைக் குணப்படுத்துவதற்கென அறிவியல் முறையில் மருத்துவம் உண்டு.

ஒரு சுலோகத்தை மன முருகிப் பாடி சங்க ராச்சாரியார் விரட்டினார் என்றால் அது எப்படி? என்ன நிரூபணம்? ஊருக் குள்ளேயே வரவிடாமல் விரட்டி விட்டாராமே?

சுலோகத்தால் இது போன்று நோய்களை விரட்ட முடியுமென்றால் கருநாடக மாநிலத்தில் உள்ள மருத்துவமனை களை யெல்லாம் இழுத்து மூடிவிடலாமே!

இந்தியா முழுமையும் இவரைச் சுற்றுப் பயணம் செய்யச் சொல்லி அல் லது காணொலி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் சுலோகத்தைச் சொல்லச் சொல்லி நோய் களை விரட்டலாம் அல் லவா!

ஆனால் இது போன்ற அற்புதங்களையெல்லாம் காஞ்சி சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்வதில்லை.

கொல்கத்தாவில் சந்திரசேகரேந்திர சரஸ் வதி தங்கி இருந்தபோது மந்திர மாயாஜாலங்கள் பற்றி செய்தியாளர் ஒரு வர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:

மந்திரங்கள், மாயா ஜாலங்கள் மதத் துறை யைப் பிடித்த ஒரு சாபக்கேடு. ஆன்மீக உலகின் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய யுக்திகளும், தந்திரங்களும் சமயத் துறையின் அங்கங்க ளாகப் பாவிக்கப்படுவது பெருந் தவறு. இந்து மதம் வெறும் மாய வித்தைகள் கொண்டதல்ல (23.10.1974 செய்தி ஏடுகளில் வெளி வந்தது) என்றாரே - கல்கி என்ன சொல்லு கிறது?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

நெல்சன் மண்டேலா மறைவிற்கு இரங்கல் தீர்மானம்!

6.12.2013 வெள்ளி மாலை, சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்ற தமிழக மூதறிஞர் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம் வருமாறு: தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து அமைதி தவழும் முறையில் தொடர் போராட்டங்களை நடத்தி, அதன் காரணமாக 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவரும், அதன் விளைவாக தென்னாப்பிரிக்காவில் மனித உரிமையை நிலைநாட்டி, ஆட்சித் தலைவராக விளங்கியவரும், மனித குல வரலாற்றில் மிகச் சிறந்த மனித உரிமைப் போராளியாக நிலை பெற்றவருமான நெல்சன் மண்டேலா (வயது 95)வின் மறைவிற்கு (5.12.2013) இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மனித குலத்திற்கு அவர் ஆற்றிய அரும்பெரும் தொண்டிற்கு வீர வணக்கத்தையும் செலுத்துகிறது.

(அனைவரும் எழுந்து நின்று இரு மணித்துளிகள் அமைதி காத்தனர்!)

தமிழ் ஓவியா said...


இட்லர்கூட தேர்தலில் நின்று வெற்றி பெற்றுதான் 12 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார் ஜெர்மனியில்


நான் ஒரு இந்து நேஷனலிஸ்ட் என்று கூறுபவரை

ஆட்சியில் அமர்த்தினால் நாடு என்ன ஆகும்?

தமிழக மூதறிஞர் குழுக் கூட்டத்தில் மணிசங்கர அய்யர் எம்.பி. எழுப்பிய வினா

சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்த மணிசங்கர அய்யர் தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகூறி பயனாடை அணிவித்தார். (சென்னை - 6.12.2013)

சென்னை, டிச.7- தேர்தலில் நின்று வெற்றி பெற்று இட்லர் 12 ஆண்டுகள் ஜெர் மனியை ஆண்டான் - படாதபாடுபடுத் தினான் அன்று. இப்பொழுது நான் ஒரு இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு மோடி புறப்பட்டுள்ளார். அவரை ஆட்சியில் அமர வைத்தால் நாடு எந்த கதிக்கு ஆளாகும்? என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பினார் மணி சங்கர அய்யர் எம்.பி.,

சென்னை பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று நடை பெற்ற தமிழக மூதறிஞர் குழுக் கூட்டத்தில் மதச் சார்பின்மைக்கு எதிரான அறை கூவல்கள் என்னும் தலைப்பில் உரையாற்று கையில் மணி சங்கர அய்யர் எம்.பி. அவர்கள் குறிப்பிட்டதாவது:

மயிலாடுதுறையில் 38 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அந்தத் தொகுதியில், நாத்திகனான நான், மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளேன்.

நண்பர்களோடு கோயிலுக்குச் சென்றுள் ளேன். அவர்களின் வற்புறுத்தலால்; நண்பர் களுக்கு அது கடவுளாகப் பட்டது. எனக்கோ அது வெறும் கல்லாகத்தான் தெரிந்தது.

மத ஆட்சி நடைபெறும் நாடுகளில்...

சில நாடுகளில் ஒரு மத ஆட்சி நடைபெறுகிறது. ஆனாலும் அங்கெல்லாம் அமைதிக்குப் பதில் அமளி தான் நடந்து கொண்டு இருக் கிறது - பாகிஸ்தானில் ஒரு மதத்துக் குப் பல பிரிவுகள் - மோதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்தியாவில் பல மதங்கள் உள்ளன. மதச் சார்பற்ற தன்மையை சட்ட ரீதியாக நாம் ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். அதனால் நிம்மதியாக இருக்கிறோம். இங்கு பிஜேபியோ இந்து மதஆட்சியைக் கொண்டு வரத் துடிக்கிறது.

மூதறிஞர் குழு கூட்டத்தில் உரையாற்ற வருகை தந்த மணிசங்கர அய்யருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். நீதியரசர் மோகன், இயக்க நூல்களை வழங்கினார். உடன் வரியியல் அறிஞர் ச. ராஜரத்தினம் உள்ளார். (சென்னை - 6.12.2013)

இந்தியா தப்பித்தது - ஏன்?

இந்தியாவில் 85 சதவீத மக்கள் இந்துக்கள், 15 சதவீத மக்கள் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள். மதச் சார்பின்மையை நாம் கடைப் பிடிப்பதால் பிரச்சினைகள் ஏதும் இல்லை.

தமிழ் ஓவியா said...


நாடு சுதந்திரம் அடைந்த நிலையில் இந்தியாவில் உள்ள முசுலிம்கள் விரும்பினால் பாகிஸ்தான் சென்று விடலாம்; இந்தியாவிலேயே தங்கி இருக்க விரும்பினால் தாராளமாகத் தங்கிக் கொள்ளலாம் என்று கூறப் பட்டது. சென்றவர்களும் உண்டு; இந்தியா விலேயே தங்கியவர்களும் உண்டு. அத்தகைய முசுலிம்கள் மீது சந்தேகப் படலாமா? அப்படி சந்தேகப்படுவது சரியா? நியாயமா?

ராமன் கோயில் கட்டுவோம் என்று பிஜேபி சொல்லுகிறது. கட்டுங்கள் - யார் வேண்டாம் என்று சொன்னது? பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில்தான் ராமன் கோயிலைக் கட்ட வேண்டுமா? என் பதுதான் பிரச்சினை. கோயில் கட் டுவதாக இருந்தால் மயிலாடுதுறை வாருங்கள் அங்கு ஏற்கனவே 38 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.

ராமன் அயோத்தியில்தான் பிறந்தானா?

ராமன் அயோத்தியில் தான் பிறந்தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? தசரதனுக்குப் பத்தா யிரம் மனைவிமார்களாம் பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல ராமன் அயோத்தியில் பிறந்தான் என்று சொல்லலாமா?

10ஆம் நூற்றாண்டில் கஜினி முகம்மது சோமநாத புரத்தில் இருந்த சிவன் கோயிலைக் கொள்ளை அடித்தான் என்பதற்காக 1200 ஆண்டுகளுக்குப்பின் சோமநாத புரத்தை மய்யப்படுத்தி, அத்வானி அங்கிருந்து ரத யாத்திரை சென்றார் என்றால் அதன் பொருள் என்ன? மக்களை மத ரீதியாகத் தூண்டுவது தானே?

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி யின் பிறந்தநாள் அன்று இராமேசு வரத்தில் தொடங்கி பைசாபாத் வரை யாத்திரை ஒன்றை மேற் கொண் டேன்; என்னோடு பத்து பன்னி ரெண்டு நண்பர்கள் வந்தனர். நவம் பர் 14ஆம் தேதியோடு நேரு பிறந்த நாளில் எங்கள் யாத்திரை நிறை வுற்றது. பைசாபாத் சென்றபோது என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அமைதி தேடி போன எனக்குச் சிறை. கரசேவை என்ற பெயரால், பாபர் மசூதியை இடிக்கப் போனவர்களையல்லவா தடுத்திருக்க வேண்டும்?

உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதம் என்னாயிற்று?

உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் (கல்யாண்சிங்) உச்சநீதிமன்றத் திலேயே உத்தரவாதம் கொடுத்தார் நாங்கள் கரசேவைதான் செய்யப் போகிறோம்; பாபர் மசூதியைத் தொட மாட்டோம் என்றார் - சொன்னபடி நாணயமாக நடந்து கொண்டார்களா? பாபர் மசூதியை இடித்தவர்கள், குழந்தை ராமன் சிலையை மீண்டும் அங்கு கொண்டு வந்து வைத்தார்கள்; அதனைத் தடுத்திருக்க வேண்டாமா?

இந்து நேஷனலிஸ்ட் பிரதமர் ஆனால் நாட்டின் நிலை என்ன?

பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திர மோடி நிறுத்தப்பட்டுள் ளார். அவர் தன்னை இந்து நேஷன லிஸ்ட்டு என்று தெரிவித்துக் கொள் கிறார். அப்படியானால் இந்துக்கள் அல்லாதாரின் நிலை என்ன?

நான் அத்வானியைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன்.

இந்தியா என்பது 100 சதவீதம் இந்தியாவா? 85 சதவீதம் உள்ள மக்களுக்கான இந்தியாவா? என்று கேட்டேன் - இதுவரை பதில் இல்லை.

பாகிஸ்தான் பிரியாமல் இருந் திருந்தால் இந்தியாவில் 50 கோடி முசுலிம்கள் இருந்திருப்பார்கள். அப் பொழுது இவர்கள், இந்து ராஜ்ஜியம் பற்றிப் பேசியிருப்பார்களா?
வாக்கு வங்கி அரசியலா?

சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக, வாய்ப்புக்காகப் பேசி னால் ஓட்பேங்க் என்று முத்திரை குத்துகிறார்கள், அவர்கள் ராமன் கோயில் கட்டுவேன் என்கிறார்களே அது மட்டும் ஓட்பேங்க் இல்லையா?

தென் மாநிலங்களைவிட, வட மாநிலங்களில் வாழும் முசுலீம்கள் வறுமையில் வாடிக் கொண்டு இருக் கிறார்கள். போதிய கல்வி வளர்ச்சியும் இல்லை. அவர்கள் வளர்ச்சி அடைய வேண்டாமா? இந்தியாவின் அடையாளத்துக்கே ஆபத்து!

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். இப்பொழுது நம்முன் உள்ள பிரச்சினை 2014இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மதச் சார்பின்மை காப்பாற்றப்பட வேண் டுமா? வேண்டாமா? என்பதுதான் பிரச்சினை. இந்தியாவின் அடையா ளத்துக்கே இப்பொழுது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அறைகூவல் ஏற்பட் டுள்ளது இந்தக் கூட்டத்தின் பொருளே தலைப்பே இதுதான்.

நாடே தோற்றுப் போக வேண் டுமா என்பதுதான் முக்கிய கேள்வி.

இட்லரும் - நரேந்திரமோடியும்

தேர்தலில் வெற்றி பெற்றுத்தான் இட்லர் ஆட்சிக்கு வந்தான். 12 ஆண்டு கள் நாட்டை ஆண்டான். மக்கள் என்ன பாடுபட்டார்கள்? அதே ஆபத்து இந்தியாவுக்கும் வர வேண்டுமா?
நான் நினைத்துக்கூடப் பார்க்க வில்லை பெரியார் திடலிலிருந்து திராவிடர் கழகத் தலைவரிடமிருந்து இங்குப் பேசிட எனக்கும் ஓர் அழைப்பு வரும் என்று. இப்படிப் பட்ட ஒரு புகழ் எனக்கு இதுவரை கிடைத்ததில்லை. வாய்ப்புக்கு நன்றி என்று பேசினார் மாநிலங்களவை உறுப்பினர் மணிசங்கர அய்யர்.

தமிழர் தலைவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து

தமிழக மூதறிஞர் குழு சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு மணி சங்கர அய்யர் எம்.பி. அவர்களும், நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். மோகன் அவர்களும் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லி சால்வை அணிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


மதச் சார்பின்மை பற்றிய மதி விளக்கம்!


நாட்டு மக்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. 77 சதவீத மக்களின், நாள் வருமானம் 20 ரூபாய் என்று கூறப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் குந்த குடிசைகூட இல்லாத மக்கள் 30 லட்சம் பேர் என்பது இன்னொரு புள்ளி விவரம்.

இன்னும் வறுமைக்கோடு பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம். இதைப்பற்றியெல்லாம் பாரதீய ஜனதா கட்சிக்குக் கவலையில்லை; அவர்களின் எண்ண மெல்லாம் அடுத்த மதக்காரர்களின் வழிபாட்டுத் தலத்தை இடிப்பது, இடித்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவது என்பதுதான்.

சென்னையில் நேற்று (6.12.2013) தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழக மூதறிஞர் குழுத் தலைவருமான நீதியரசர் திரு எஸ். மோகன், திரு மணிசங்கர அய்யர் எம்.பி., ஆகியோர் இந்தியாவில் மதச் சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள அறைகூவல்கள் பற்றி சிறந்த கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

இந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்று சொல்லுகிறவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மையை எப்படிக் காப்பாற்றுவார்கள் என்ற வினாவை எழுப்பினர்.

மக்கள் தொகையில் 85 சதவீதத்தினர் இந் துக்கள் மற்ற 15 சதவீதத்தினர் வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இந்து ராஜ்ஜியத்தை அமைத்தால் மீதி 15 சதவீத மக்களின் நிலை என்ன? ஆட்சி அதி காரத்தில் அவர்களின் பங்களிப்பு என்ன? பாதுகாப்பு என்ன? என்ற வினாக்களும் எழுப்பப்பட்டன.

பாகிஸ்தான் பிரிந்தபோது - இந்தியாவில் உள்ள முசுலிம்கள் பாகிஸ்தான் பகுதிக்குச் செல்ல விரும்பினால் தாராளமாகச் செல்லலாம் என்ற வாய்ப்பு அளிக்கப்பட்டது. சென்றவர்கள் போக மீதி உள்ளவர்கள் இந்தியாவிலேயே தங்கி விட்டார்கள். உலகில் இந்தோனேசியாவை அடுத்து அதிக முசுலீம் மக்கள் வாழும் நாடு இந்தியா, அடுத்துதான் பாகிஸ்தான்.

சுதந்திரத்திற்குப்பின் பாகிஸ்தானுக்குச் செல்ல அவர்களுக்கு வாய்ப்பு இருந்தும், அங்கே செல்ல விரும்பாமல் இந்தியாவிலேயே தங்கினார்களே - அவர்களின் உணர்வினை மதிக்க வேண்டாமா? பாராட்ட வேண்டாமா? என்ற வினாவும் சிறப்புக் கூட்டத்தில் எழுப்பப்பட்டது.
இன்னொரு தகவல், திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் முன் வைக்கப்பட்டது. இந்தியாவில் வாழும் அந்த முசுலீம்கள்கூட, அரேபியாவிலிருந்து வந்தவர்கள் அல்லர்; கிறித்தவர்கள் இசுரேலிலி ருந்தும் வந்தவர்கள் அல்லர்.

இந்து மதத்தில் இருந்த அவர்களை வேற்று மதங்களுக்கு விரட்டியவர்கள் யார்? இந்து மத - வருணாசிர வெறியர்கள்தானே! கிட்டே வராதே! என்றாய், தொடதே என்றாய், தீண்டத்தகாதவன் என்றாய், தீட்டு! என்றாய். மற்ற மதக்காரர்களோ அவர்களைத் தீண்டினார்கள், கட்டியணைத்தார்கள் தழுவினார்கள்.

தங்களைச் சக மனிதர்களாக மதித்தவர்களின் மதங்களின் பக்கம் அவர்கள் சென்றார்கள். அது, அவர்கள் மீது குற்றமா? என்ற அறிவுப் பூர்வமான கருத்து எடுத்து வைக்கப்பட்டது.

தன்னை இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவர்தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி.

இந்துவாக இருந்தால் தேசியவாதியாக இருக்க முடியுமா? தேசியவாதியாக இருந்தால் இந்துவாக இருக்க முடியுமா? இந்தியாவா? இந்துவா? என்ற வினாக்களை எடுத்து வைத்தார் திராவிடர் கழகத் தலைவர்.

ஒரு மதத்தைச் சேர்ந்த ஆட்சியாக இருந்தால் பாகிஸ்தானில் இப்பொழுது நடக்கும் குழப்பமும், அமைதியின்மையும்தான் மிஞ்சும். இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லாமல் இருப்பதற்குக் காரணம் மதச் சார்பின்மையை ஏற்றுக் கொண்டு இருப்பதுதான் என்றார் திரு மணிசங்கர அய்யர் அவர்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் நேற்றைய சிறப்புக் கூட்டத்தில் வெளிப்பட்ட கருத்துக்கள் நாடு தழுவிய அளவில் எடுத்துச் செல்லப்பட வேண்டியவை! மதச் சார்பற்ற சக்திகள் இணைந்து செயல்படட்டும்!

தமிழ் ஓவியா said...


அவசியம்


மூட நம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம்.
(விடுதலை, 12.10.1967)

தமிழ் ஓவியா said...


மக்கள் நீதிமன்றம்


நாடு தழுவிய லோக் அதாலத் என்னும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் அமைப்பின் மூலமாக நிலுவையிலுள்ள தேங்கிக்கிடக்கும் வழக்குகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற அரிய நோக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பி.சதாசிவம் மேற்கொண்ட நடவடிக்கையை கருநாடகத் திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டி வரவேற்கிறது. வாகன விபத்துகளில் இழப்பீடு வழங்குதல், வங்கி செக் வழங்குதலில் மோசடி வழக்குகள், வங்கிகளில் கடன் பெற்றோர் வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், சொத்துகள் தொடர்பான சிவில் நடமுறை வழக்குகள் மற்றும் சமூக சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க் கையில் கணவன், மனைவி இருவருக்குமிடையே ஏற் படும் மன முறிவு வழக்குகள் போன்றவற்றை இரு தரப்பினரையும் நேருக்கு நேர் அழைத்து காலம் கடத்தாது பேச்சு வார்த்தைகளின் மூலமாக பேசி தீர்வு காணும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஒரே நாளில் 39 லட்சம் வழக்குகளில் முடிவுக்கு கொண்டு வந்த நீதிமன்றங்களின் விரைவு நடவடிக்கை பாராட்டி வரவேற்கிறது.

ஆற்றலாளரும், சமூக அக்கறையாளரும் ஆட்சி அதிகாரப் பொறுப்புக்கு வந்தால்தான் குறிஞ்சிப்பூ பூப்பது போன்ற அதிசயம் நிகழும். அந்த வகையில் நாடு தழுவிய அளவில் நீதித்துறையில் அரிய செயல்புரிந்த உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிதேவன் மாட்சிமைத் தாங்கிய அய்யா பி.சதாசிவம் அவர்களை கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டி மகிழ்ந்து, இந்நிகழ்வினை வரவேற்கிறோம்.

- எம். ஜானகிராமன், தலைவர், கர்நாடக மாநில திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


என் வாழ்நாளில் நீக்கமற நிறைந்திருக்கும் முதல் நிகழ்ச்சி தந்தை பெரியார் - அறிஞர் அண்ணாவின் சந்திப்புத்தான்



முத்தமிழ் அறிஞர் கலைஞர்

சென்னை, டிச. 7 - என் வாழ்நாளில் நீக்கமற நிறைந்திருக்கும் நிகழ்ச்சி என்பது முதன்முதலில் தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் சந்தித்தது தான் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள். நியஸ் சைரன் வார இதழுக்கு கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி :- தங்களது நீண்ட வாழ்வில் முதன்முதலாக நினைவில் பதிந்த நிகழ்ச்சி எது என்று நினைவலைகளில் தேடிச் சொல்ல முடியுமா?

கலைஞர் :- தந்தை பெரியார் அவர்களையும், பேரறிஞர் அண்ணா அவர்களையும் முதன் முதலாக நான் சந்தித்த நிகழ்ச்சிதான் என் நினைவில் என்றென்றும் நீக்கமற நிறைந் திருக்கும் நிகழ்ச்சியாகும்.

கேள்வி :- பகுத்தறிவுவாதியாக தங்களை மாற்றியது எது?

கலைஞர் :- சிறு வயதில் பள்ளிக்கூடம் போவது மட்டுமின்றி, இசைக் கல்விக்கும் என் தந்தை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் இசைப் பயிற்சியில் எனக்கு நாட்டம் செல்லவில்லை. பெரிய மனிதர்கள் இருக்குமிடத்தில் சட்டை போட்டுக் கொண்டு போக முடியாது. மேல் துண்டையும் எடுத்து இடுப்பிலே கட்டிக் கொள்ள வேண்டும். செருப்பு அணிந்து கொள்வதும் தவறு. இப்படியெல்லாம் கடுமையான அடிமைத்தனம்; தெய்வீகத்தின் பெயராலும், ஜாதி, மத, சாத்திரச் சம்பிரதாயங்களின் பெயராலும் ஒரு சமுதாயத் தைக் கொடுமைக்கு ஆளாக்குவதை என் பிஞ்சு மனம் வன்மையாக எதிர்க்கக் கிளம்பியது. அதன் காரணமாகவே இசைப் பயிற்சியை வெறுத்தேன். இதுவே என்னை ஒரு பகுத்தறிவுவாதியாக அந்த வயதிலேயே மாற்றியது.

கேள்வி :- நண்பர்களுடன் கூடி கலாட்டா செய்த அனுபவம் உண்டா?

கலைஞர் :- கலாட்டா என்று கூற முடியாது. சிறு வயதிலேயே நண்பர்களுடன் இணைந்து ஈடுபட்ட சம்பவம் ஒன்றை வேண்டுமானால் கூறுகிறேன். ஏற்கனவே கூறியதுதான். கிருபானந்த வாரியார் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ஆத்தீகப் பழம். அப்படிப் பட்டவர் நான் இளைஞனாக, பள்ளி மாணவனாக இருந்த போது அடிக்கடி திருவாரூருக்கு வருவார். திருவாரூரில் ஆலயத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் அவருடைய நிகழ்ச்சி நடைபெறும். ஒரு முறை அப்பர் திருவிழாவிற்காகப் பேச வந்திருந்தார். நாங்கள் மாணவர்கள் எல்லாம் என் தலைமையிலே சென்று அங்கே அமர்ந்திருந்தோம். பேசும்போது அவர் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசினார். அப்பர் திருநாள் என்பதால் புலால் சாப்பிடக் கூடாது, உயிர்களைக் கொல்லக்கூடாது என்று அவர் பேசிக் கொண்டு வரும்போதே, நான் எழுந்து - மனிதர்களுக்கு நீங்கள் இந்த உபதேசத்தைச் செய்கிறீர்கள். இது எல்லா உயிர்களுக்கும் பொது வானதா? என்று கேட்ட போது அவர் ஆமாம் என்று சொன்னார். சாப்பிடுவதற்காக எந்த உயிரையும் ஆண்டவன் படைக்கவில்லை, ஆடு - மாடு - கோழி போன்றவைகளையெல்லாம் சாப்பிடுவதற்காக ஆண்டவன் படைக்கவில்லை என்றார். நான் எழுந்து - சிங்கம், புலி சாப்பிடுவதற்காக ஆண்டவன் எந்த உயிரைப் படைத்தான்? என்று கேட்டேன். அவ்வளவு பெரிய அவையிலே ஒரு சின்னப் பையன் எழுந்து அப்படிக் கேட்டது தவறுதான். ஆனால் கேட்ட கேள்வியிலே இருந்த தத்துவம் தவறானது அல்ல. அதைப் புரிந்து கொண்ட வாரியார் அவர்கள், உட்கார், உட்கார் பிறகு சொல்கிறேன் என்று முதலில் சொல்லி விட்டு - பிறகு கூறும்போது, அந்த உயிர்கள் வாழ்வதற்காக எந்த உயிரையும் ஆண்டவன் படைக்கவில்லை என்று சொன்னேன், சில குறும்புக் கார பையன்கள் குறுக்கிட்டு ஏதோ கேட்டு விட் டார்கள். அவர்கள் எல்லாம் வேறு ஆட்கள் என்பது எனக்குத் தெரியும், அதனால் நான் பதில் சொல்ல வில்லை என்று சொல்லிவிட்டு, பிறகு சொன்னார்.

தாவரங்களிலே முருங்கைக்காய், கத்தரிக்காய் என்றெல்லாம் இருக்கிறது, தாவரங்களைச் சாப் பிட்டால் உயிருக்கு ஆபத்து இல்லையா என்றுகூட பையன் கேட்பான். அப்படி தாவரங்களைச் சாப் பிடுவதால் உயிர்களுக்கு ஆபத்தில்லை. ஏனென்றால் முருங்கைக்காயைச் சாப்பிடுவதால் மரம் சாகாது, கத்தரிக்காயை சாப்பிடுவதால் செடி சாகாது, ஆகவே அது பாவம் இல்லை என்றார். நான் விடவில்லை, எழுந்து அய்யா, கீரைத் தண்டை அப்படியே பிடுங்கி, அடியோடு குழம்பு வைத்துச் சாப்பிடுகிறார்களே; அப்போது செடி முழுதும் சாகவில்லையா என்று கேட்டேன். அப்போது அப்படிக் கேட்டாலும் நான் கிருபானந்த வாரியார் மீது கொண்ட ஆழமான மதிப்பை எப்போதும் மாற்றிக் கொண்டதில்லை. இப்போதும் மாற்றிக் கொள்ளவில்லை, இனியும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

தமிழ் ஓவியா said...


இயக்க வரலாற்றில் தஞ்சைக்குள்ள சிறப்பு


தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் அமர்சிங்

தஞ்சை, டிச.7- தஞ்சாவூரில் வர லாற்றுச் சிறப்பு மிக்க கழக நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெற்றுள்ளன. பெரியார் உலகம் நிகழ்ச்சிக்கு ஆயிரம் சவரன் தங்கம் வழங்கும் விழாவும், இங்கு நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியது என்றார் தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, பெரியார் பேருருவச் சிலைக்கு நிதி வழங்கும் விழாவின்போது (2.12.2013) தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்கள் ஆற்றிய வரவேற்புரை:

வரலாற்றுச் சிறப்புமிக்க முப்பெரும் விழாக்களின் தலைவர் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்களே! தந்தை பெரியாரை இழந்த மானுடம் பெரும் ஆறுதல் பெறுவது இவரிடம் என்று சொல்லத்தக்க வண்ணம் - பெரியார் உலகைக் காண நாளும் உழைத்துக் கொண்டிருக்கக் கூடிய விழா நாயகர் தமிழர் தலைவர் அவர்களே! விரைவில் இங்கு வருகை தரவிருக்கும் திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே! விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்களே! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தமிழ் மாநிலத் தலைவர் மதிப்பிற்குரிய பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்களே! திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு சுப.வீரபாண் டியன் அவர்களே!

தந்தை பெரியார் அவர்கள் கருத்துக் களை ஒடியா மொழியில் மொழி பெயர்த்த - பல்கலைக்கழக பேரா சிரியர், ஒடிசா மாநில பகுத் தறிவாளர் கழகத் தலைவர் தானேஸ்வர் சாகு அவர் களே! திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், மேனாள் அமைச்சருமான மானமிகு கோ.சி.மணி அவர்களே! நூல்களை வெளியிட்டுப் பெருமை சேர்க்கக்கூடிய மேனாள் மத்திய அமைச்சர் தஞ்சை மாவட்ட திமுக செயலாளர் மானமிகு எஸ்.எஸ். பழனி மாணிக்கம் அவர்களே! மூத்த வழக் குரைஞர் தஞ்சை அ.இராமமூர்த்தி அவர்களே, மேனாள் அமைச்சரும் தஞ்சை நகர திமுக செயலாளருமான மானமிகு எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களே! பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் - இந்த விழா விற்காக அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே! பெரியார் பன்னாட்டு மய்யத் தின் துபாய்க் கிளை துணைத் தலைவர் ஏ.எஸ்.மூர்த்தி அவர்களே! அறிமுகவுரை ஆற்றவரும் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே! தொடக்கவுரை ஆற்றவிருக்கும் முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் ராஜகிரி கோ.தங்கராஜ் அவர்களே! விழாவிற்கு முன்னிலை வகிக்கக்கூடிய கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களே! செய லவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களே! பொதுச் செயலாளர் டாக்டர் துரை.சந்திர சேகரன், வீ.அன்புராஜ், தஞ்சை இரா. செயக்குமார், உரத்தநாடு இரா.குண சேகரன் ஆகிய தோழர்களே! அமைப்புச் செயலாளர் களே, இளை ஞரணி, மாணவரணி, மகளிரணி, தொழி லாளர் அணி மற்றும் மண்டல மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்களே! தலைமைச் செயற்குழு உறுப்பினர்களே! நன்றி யுரையாற்ற விருக்கும் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டி ருக்கும் டாக்டர் க.அன்பழகன் அவர்களே! வெள்ளம் போல கூடி யிருக்கும் தமிழ்ப் பெருமக்களே, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்திருக்கக் கூடிய கழகக் குடும்பத்தினரே!

உங்கள் அனைவருக்கும் மண்டல, மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அன்புகனிந்த நல்வரவேற்பையும் வணக் கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சைக்குள்ள தனிச்சிறப்பு

1957இல் தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய்கள் அளிக்கப்பட்ட இதே தஞ்சையில்தான்! பெரியார் நூற்றாண்டு விழவில் 100 சவரன் தங்கத்தை இதே தஞ்சையில் தான் அளித்தோம். அது பெரியார் நூற்றாண்டு விழா பாலிடெக்னிக்காக ஒளி வீசித் திகழ்ந்து கொண்டு இருக்கின்றது.

இதே தஞ்சையில்தான் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் அளிக்கப்பட்டது. அது இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் பெரியார் மய்யமாகப் பட்டொளி வீசிக் கொண் டிருக்கிறது.

தமிழர் தலைவர் அவர்களின் இந்த பிறந்த நாள் விழாவில் முதல் தவணையாக ஆயிரம் சவரன் தங்கத்துக்கான நிதியை அளிக்க இருக்கிறோம்.

அது பெரியார் உலகமாக - அங்கே 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவச் சிலையாக நின்று உலகத் திற்கே புத்தொளிப் பரப்பும் பகுத்தறிவு பகலவனாக காட்சி அளிக்கப் போகிறார்.

பெரியார் உலகத்தை சிறுகனூரில் தமிழர் தலைவர் தலைமையில் நிறுவப் போகிறோம். அதற்கான அச்சார விழா வரலாற்றில் என்றென்றும் பதிவாகும் விழா இது.
அத்தகைய விழாவினை தஞ்சையில் நடத்திட சிறப்பான வாய்ப்பினைக் கொடுத்த தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து, அனைவரையும் வருக வருக என மீண்டும் வரவேற்று விடைபெறுகிறேன்.

தமிழ் ஓவியா said...


மதச்சார்பின்மைக்கு எதிரான அறை கூவல்கள்


தமிழக மூதறிஞர் குழு சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் சிறப்புக் கூட்டம்

மதச்சார்பின்மைக்கு எதிரான அறை கூவல்கள்

நீதியரசர் எஸ்.மோகன், மணிசங்கர் அய்யர் எம்.பி., தமிழர் தலைவர் உரையாற்றினர்


சென்னை, டிச.7- தமிழக மூதறிஞர் குழு சார்பில் நேற்று (6.12.2013) சென்னை பெரியார் திடலில், அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதச்சார்பின்மைக்கு எதிரான அறை கூவல்கள் என்ற தலைப்பில் நீதியரசர் எஸ்.மோகன், எம்.பி. மணி சங்கர்அய்யர், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் உரையாற்றினர்.

தமிழக மூதறிஞர் குழுவின் சிறப்புக் கூட்டம் நேற்று (6.12.2013) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டமாக மாலை 6.45 மணியளவில் நடைபெற்றது.

நெல்சன் மண்டேலாவிற்கு
இரங்கல் தெரிவிக்கப்பட்டது

இக்கூட்டத்தின் தொடக்கத்தில், மறைவுற்ற கறுப்பினத்தின் உரிமைப் போராளி நெல்சன் மண்டேலா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் அதன் செயலாளர் மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ் ஜோதி இரங்கல் அறிக்கையை வாசித்தார். பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்தனர்.

மதச்சார்பின்மைக்கு எதிரான அறைகூவல்கள்

இதைத் தொடர்ந்து மதச்சார்பின்மைக்கு எதிரான அறைகூவல்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழக மூதறிஞர் குழுவின் துணைத் தலைவர் வரியியல் அறிஞர் எஸ்.ராஜரத்தினம் அவர்கள் வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். தமிழக மூதறிஞர் குழுவின் தலைவரும், மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான எஸ்.மோகன் அவர்கள் உரையாற்றுகையில், இந்தியா ஒரு சிறந்த மதச்சார்பற்ற நாடு என்ற பெயர் வரவேண்டும் என்றால் தந்தை பெரியார் அவர் களின் கருத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய, காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த திரு.மணி சங்கர் அய்யர் எம்.பி., அவர்கள், நாட்டின் அடையாளத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் தற்போது ஆபத்து ஏற் பட்டுள்ளதை பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்து ரைத்தார்.

நிறைவுரையாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரை நிகழ்த்தினார். தமிழக மூதறிஞர் குழுவின் செயலாளர் மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி நன்றி கூறினார்.

மணிசங்கர் அய்யர் எம்.பி.க்கு
சிறப்பு செய்யப்பட்டது

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பாக உரை யாற்றிய திரு. மணிசங்கர் அய்யர் எம்.பி., அவர் களுக்கு,தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் அதன் தலைவர் நீதியரசர் எஸ்.மோகன், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் சால்வை அணிவித்து பெரியார் நூல்களை வழங்கி சிறப்பித்தனர்.

தமிழர் தலைவருக்கு மணிசங்கர் அய்யர் சிறப்பு

81ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களுக்கு, திரு. மணிசங்கர் அய்யர் எம்.பி., அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பயனாடை அணிவித்து, சிறப்பித்தார்.

இக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பின் தலைவர் கோ.கருணாநிதி, பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன் (காங்கிரஸ்), தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் இரா.வில்வ நாதன், வழக்குரைஞர் வீரமர்த்தினி, முன்னாள் துணை வேந்தர் முத்துகுமரன் மற்றும் கல்வியாளர்கள், கழகத் தோழர் - தோழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...


இது மக்கள் பிரச்சினை - மக்கள் தீர்ப்பு வேறு மாதிரியாகப் போகும்!


கலைஞர் ஆட்சியில் கையகப்படுத்தப்பட்டது என்பதற்காக சிதம்பரம் கோயில் வழக்கில் அதிமுக அரசு அலட்சியம் காட்டக்கூடாது

இது மக்கள் பிரச்சினை - மக்கள் தீர்ப்பு வேறு மாதிரியாகப் போகும்!

சிதம்பரம் ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்

4.12.2013 அன்று சிதம்பரம் கோவில் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
கொட்டும் மழையாக இருந்தாலும், கொளுத் தும் வெயிலாக இருந்தாலும் நம்முடைய பணி என்பது தேவையானது; நடந்தே தீரும். அந்த வகை யில்தான், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, தமி ழுக்கு இடம் வேண்டும்; தமிழருக்குரிய உரிமைகள் வந்தாகவேண்டும். தமிழர்களுடைய சொத்து இந்த சிதம்பரம் கோவில் என்ற முறையில், சோழ மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்ட சிதம்பரம் கோவில். எந்தப் பார்ப்பனரும் இந்தக் கோவிலை கட்டியவர்கள் அல்ல. இதற்கு வரலாற்று ரீதியாக ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன.

சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்குச் சொந்தமல்ல!

சிதம்பர ரகசியம் என்ற பெயராலே 1982 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன், அப்பொழுது நான் பேசிய உரை புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அந்நூலில் ஆழமான பல செய்திகளைச் சொல்லி யிருக்கிறோம். இன்றைக்கு அவை எல்லாம் மறக்கப் படக்கூடிய சூழலில், தில்லைவாழ் அந்தணர்கள் 3000 தீட்சதர்களுக்கே சொந்தம் என்று, இடையில் அவர்கள் அபகரித்துக்கொண்டு, அதையே மீண்டும் மீண்டும் தங்களுடைய உரிமை என்று அவர்கள் கேட்டுக்கொண்டிருப்பது, நியாயமல்ல; சட்ட விரோதமாகும்; வரலாற்றுக்குப் புறம்பானதாகும்.

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்குச் சொந்த மல்ல என்ற தீர்ப்பு இப்பொழுது வந்ததல்ல; ஏற் கெனவே இரண்டு தீர்ப்புகள் உச்சநீதிமன்றத்தால் அண்மையில் கொடுக்கப்பட்டன. அருமை நண் பர்களே, நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்தத் தீர்ப்பு என்பது முதல்முறையாக வந்தபொழுது, மிக முக்கியமான ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும், ஆதாரபூர்வமான அந்தச் செய்தியை சொல்லவேண்டும் என்று நினைத்தால், ஒரு குறிப் பினை உங்களுக்குச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டி ருக்கிறோம்.

திருவாரூர் டி.முத்துசாமி எழுதிய தீர்ப்பு

முதன்முறையாக தீட்சதர்களிடையே இரண்டு வகையான குழுக்கள் 1883 இல், அதாவது 150 ஆண்டுகளுக்கு மேலாக, தென்னாற்காடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு 1887 ஆம் ஆண்டு வந்தது. பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்ற பொழுது, 1888 ஆம் ஆண்டு, நம்மைப் போன்ற வர்கள் பிறக்காத காலத்தில், அப்பொழுதே ஏற் பட்ட அந்த டிவிஷன் பெஞ்ச் என்ற அமர்வு மிகத் தெளிவாக வெள்ளைக்கார நீதிபதி ஷெப்பர்டு, அவரோடு அமர்ந்து தீர்ப்பு எழுதிய மற்றொருவர் இந்தியர். முதல் இந்தியராக ஒரு நீதிபதியாக பொறுப்பேற்ற பெருமைக்குரியவர் திருவாரூர் டி.முத்துசாமி அய்யர் அவர்கள் ஆவார்.

தமிழ் ஓவியா said...

அப்படிப்பட்ட முத்துசாமி அய்யர் கொடுத்த தீர்ப்பு இருக்கிறதே, அதிலே தெளிவாக எழுதியிருக் கிறார்கள். முற்காலம் தொட்டே இக்கோவில் ஒரு பொது வழிபாட்டுக்குரிய இடமாக உபயோகப் படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இக்கோவில் தீட்சதர் களுக்குச் சொந்த சொத்து என்பதற்கு சிறுதுளியும் ஆதாரம் கிடையாது என்பதுதான் மிகமிக முக்கிய மான ஒன்றாகும். ஆகவே, ஆதாரம் கிடையாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, தீட்சதர்கள் நேரே வந்தவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஆகவே, இவ்வளவு ஆதாரங்கள் இருந்த அடிப்படையில்தான், இந்த வாதம் எடுத்து வைக்கப்பட்டது.
தவறுகளை நீக்க உரிமையுள்ளதுதான் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை என்பதிருக்கிறதே, எங்கே தவறு நடந்தாலும், தனிப்பட்டவர்கள் என்ற பெயராலே நடந்தாலும், அந்தத் தவறுகளை நீக்க உரிமையுள்ளதுதான் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை. தமிழக அரசு இதில் தெளிவு பெறவேண்டும்.

திட்டமிட்டு பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தவறான வாதங்களை அடுக்கிக் கொண்டு போனால், அங்கே இருக்கின்றவர்களும் புரியாமல் ஏதோ செய்கிறார்கள் என்று சொன்னால், சுட்டிக்காட்டவேண்டியது நம்முடைய கடமை யாகும்.
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை என்பது என்ன? கோவிலைக் கொள்ளையடிக்கும் கோவில் பெருச்சாளிகளிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்பதற்காக, நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றபோது, பனகல் அரசர் கொண்டு வந்த சட்டம். அந்தச் சட்டப்படி, எந்தக் கோவிலாக இருந்தாலும், அதில் தவறு நடைபெற்றால், அந்தக் கோவிலை கையகப் படுத்தி, கணக்கு வழக்குகளை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயம் அந்த அறநிலையப் பாது காப்புத் துறைக்கு உண்டு. ஆகவேதான், இதற்கு முன்பு பல கோவில்கள், பல நிகழ்வுகள் நடை பெற்றிருக்கின்றன.

இது ஒரு தனிக்கோவில் என்றெல்லாம் வாதம் செய்வது இருக்கிறதே, அது தவறான - நீதியை திசை திருப்புவதாகும். அதுமட்டுமல்ல நண்பர்களே, இன்னொன்றைக் குறிப்பிடவேண்டும்,

பொதுவாக, தீட்சதர்களின் ஆதிக்கத்திலிருந்த சிதம்பரம் கோவிலில் எவ்வளவு வசூல் என்று கேட்டபொழுது, உயர்நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்கள். ஆண்டு ஒன்றுக்கு உண்டியல் வசூல் ரூ.37,199 என்று சொன்னார்கள். ரூ.199 தான் மிச்சம் என்று கணக்குக் காட்டினார்கள். ஆனால், இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை கையகப் படுத்திய பிறகு ஒன்றரை ஆண்டுக்குப்பின் உண் டியல் வருமானமாக 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் வசூலானது வெட்ட வெளிச்சமானது. இவ்வழக்கில் இரு நீதிபதிகள் ஆதாரபூர்வமான தீர்ப்பை எழு திய பிறகு, மேல்முறையீட்டிற்கு சுப்பிரமணியசாமி சென்றார்.

டிவிஷன் பெஞ்சில் இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு எழுதினார்கள். அந்தத் தீர்ப்பில், மிகத் தெளிவாக, இதற்கு ஆதாரங்கள் இல்லை; இந்து அறநிலையத் துறை கையகப்படுத்திய பிறகு பல லட்ச ரூபாய் வசூலானது உண்மைதான் என்பதை அந்த இரு நீதிபதிகளும் தீர்ப்பில் கூறினர்.

எனவே, முத்துசாமி அய்யர் தீர்ப்பிலிருந்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள்வரை இவை களையெல்லாம் தலைகீழாக மாற்றி, மீண்டும் பார்ப் பன சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க, உச்சநீதிமன்றம் துணை போகுமானால், ஒன்றை நாங்கள் இந்த சிதம்பரம் மக்கள் சார்பாக மட்டுமல்ல, தமிழகத் திலுள்ள தமிழர்களின் சார்பாக தெளிவாக தெரி வித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

உச்சநீதிமன்றம் சட்டப்படி உயர்ந்தநீதிமன்றமாக இருக்கலாம்; ஆனால், அதோடு முடிந்துவிடுவ தாகாது; அதற்குமேலே சக்தி வாய்ந்த மன்றம் ஒன்று உண்டு. அதுதான் மக்கள் மன்றம். அதனை மறந்துவிடக்கூடாது. அந்த மக்கள் திரண்டால், எந்த ஆட்சியாக இருந்தாலும், அடுத்த நொடிப் பொழுதில், அவர்கள் தங்களுடைய ஆட்சியை இழக்கவேண்டிய கட்டாயம் வரும். ஆகவே, மக்களுடைய உணர்வு என்ற நெருப்போடு ஆட்சியாளர்கள் விளையாடக்கூடாது. அதனை அவர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

தமிழ் ஓவியா said...

உங்களது வாக்கு வங்கியும் ஆடும்;

உங்களுடைய ஆட்சியும் ஆடும்!

நம்முடைய காலத்தில், தமிழிலே ஒதுவதற்காக, திருவாசகம் பாடுவதற்காக, ஓதுவார் ஆறுமுகசாமி அவர்கள் அடிவாங்கி, எலும்பு முறிந்து, அந்த உரிமையை பெற்றிருந்தார். ஆனால், இப்பொழுது திருவாசகம் பாடக்கூடாது என்று சொன்னால், இப்பொழுது மீண்டும் சமஸ்கிருதம் உள்ளே புகுந்துவிட்டது என்றால், மொழிப் போர் உரிமை - அந்தத் தீயை இப்பொழுது அவர்களே வைத்திருக் கிறார்கள் என்றுதான் அர்த்தம். இந்தத் தீ பரவட்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நாங்கள் இறங்கினால், எவ்வளவு நேரமாகும்? எண்ணிப் பார்க்கவேண்டும். எனவே, உங்களது வாக்கு வங்கியும் ஆடும்; உங்களுடைய ஆட்சியும் ஆடும்.

எனவே, முந்தைய ஆட்சி செய்தது, ஆகவே, அதனை மாற்றுவோம் என்று தயவு செய்து நினைக் காதீர்கள். இது திராவிடர் இயக்கத்தினுடைய கொள்கை அல்ல; பக்தர்களுடைய வேண்டுகோள். எங்களை சில பேர் கேட்கிறார்கள், இவர்கள் நாத்திகர்கள், இவர்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் என்று. ஆம், நாங்கள் நாத்திகர்கள் தான்; நாங்கள் கடவுள் இல்லை என்று சொல்ப வர்கள்தான். நாங்கள் நடராஜர் கோவிலுக்குள் சென்று ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்பதற்காக கேட்கிறோம்; இல்லை, நாங்கள் பக்தி செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த உரிமையைக் கேட்கிறோம். இல்லை, நண்பர்களே, ஏராளமான பக்தர்கள் இருக்கிறார்களே, அவர்களுடைய உரிமைகளைக் காப்பாற்றவேண்டும். எனவே, இது வெறும் பக்திப் பிரச்சினையல்ல; மனித உரிமைப் பிரச்சினை. மனித உரிமை என்பதிருக்கிறதே, பக்தர் களுக்கும் சேர்த்து நாங்கள் வாதாடக் கூடியவர் களாக இருக்கிறோமே தவிர வேறொன்றுமில்லை. கோவிலில் தீப்பிடித்துக் கொண்டது என்று சொன்னால், கோவிலில் உள்ள அத்தனைப் பேரும் அணைப்பார்கள்; நாங்கள் அந்த வழியாகச் சென்றால் உடனே ஓடிச்சென்று தீயை அணைப் போமே தவிர, கோவில்தானே, எரியட்டும் என்று வேடிக்கை பார்ப்பது மனிதாபிமானம் அல்ல; அந்த வேலையை நாங்கள் செய்யமாட்டோம். எங்களுடைய மனிதநேயக் கடமையை செய்வோம்.

எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்பதுபோல...

அதுபோலத்தான், இப்பொழுது பலர் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வதுபோல, தீ வைத்துக் கொண்டிக் கிறார்கள்; தீயை மூட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தீ பரவினால், தமிழகத்தில் அமைதி இருக்காது; ஆபத்து ஏற்படும். அதெல்லாம் கூடாது என்பதற்காகத்தான், அமைதி வழியில், அறப்போர் நடத்துகின்றோம். ஆட்சியாளர்கள் உரிய முறையில் தங்களுடைய வாதங்களை நடத்த வேண்டும். ஏதோ ஒப்புக்குச் சப்பாணி என்பது போல, ஏதோ ஒரு வழக்குரைஞரை, எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்பது போல, ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் இருப்பவர்கள் மிகவும் சாதாரண மானவர்கள். மற்ற மற்ற வழக்குகளுக்கெல்லாம் பெரிய பெரிய வழக்குரைஞர்களைத் தேடுகின்ற ஆட்சியாளர்கள், இந்த வழக்கில் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றால், இது கூட்டு முயற்சியா? அல்லது ஒப்புதலோடு செய்யப்பட்ட ஒரு ஏற்பாடா? என்று சந்தேகம் வலுக்கிறது.

ஆட்சியாளர்களின் தவறான செய்கையை சுட்டிக்காட்டுவதற்கு, எச்சரிக்கை செய்வதற்கு, அபாய சங்கு ஊதுவதற்கு, போர்ச் சங்குக்கு முன் னோட்டமாக இந்தப் போராட்டம் இங்கே வெடித் திருக்கிறது. இது ஒரு தொடக்கம்; இது முடிவல்ல.

தமிழ் ஓவியா said...


ஏற்கெனவே, சென்ற ஆட்சியாளர்களினால் பாது காக்கப்பட்ட சமஸ்கிருதம் - தமிழில் அர்ச்சனை என்பதற்கு இடமே கிடையாது; தமிழருக்கு இடம் கிடையாது. ஆறுமுகசாமி திருவாசகத்திற்கு உருகார் - ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று சொன்னார்; அந்தத் திருவாசகம் அனுமதிக்கப் படாதது ஏன்?

88 வயதிலும்கூட, வி.வி.சாமிநாதன் அவர்கள் போராடுகிறார்...

இதற்காகத்தான் நம்முடைய அய்யா வழக்கறி ஞர், இந்த மண்ணின் சொந்தக்காரர்; இந்த நகரின் தலைவர்; இந்தப் பகுதியினுடைய பெருமைமிகுந்த அமைச்சராக இருந்து - இதற்காக வாழ்நாளெல் லாம் போராட்டக் களத்தில் நிற்பவராக - இந்த 88 வயதிலும்கூட, அய்யா வி.வி.சாமிநாதன் அவர்கள் போராடுகிறேன் என்று குமுறிச் சொல்கிறார்களே, அவர் யார்? நினைத்துப் பார்க்கவேண்டாமா? அவர்கள் பொதுவாழ்க்கையில் வந்தபொழுது, இங்கேயுள்ள பலர் பிறந்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சிறப்பான ஒருவர் இதைப்பற்றி சொல்கிறார் என்றால், அதிலுள்ள நியாயத்தைப் பார்க்கவேண்டும்.

எங்களுக்கு அரசியல் பார்வை கிடையாது, இந்த ஆட்சியைக் கீழே தள்ளிவிட்டு, அங்கே போய் நாங்கள் அமரவேண்டும் என்பதற்காகவா இந்தப் பிரச்சாரத்தை செய்கிறோம், நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். எந்த ஆட்சியாக இருந்தாலும் - கலைஞர் செய்தார் என்பதற்காக இதனை மாற் றலாம் அல்லது பார்ப்பனர்களுக்கு ஆதரவாக நடந் தால், பார்ப்பனர்களுடைய வாக்கு தங்களுக்குக் கிடைக்கும் என்று நினைத்தால், பார்ப்பனர்களு டைய வாக்கு உங்களுக்குக் கிடைக்கலாம் - அதில் நீங்கள் வெற்றியும் பெறலாம். ஆனால், பார்ப்பன ரல்லாதார்தான் இந்த நாட்டிலே மிகப்பெரும் பாலானோர் - அவர்கள் நினைத்தால், அலை அடித்து பல பேர் காணாமல் போய்விடுவார்கள். அதுதான் மிக முக்கியம். எனவே, ஒழுக்கம் காப்பாற்றப்படவேண்டு மானால், பக்தர்களின் உரிமைகள் காப்பாற்றப் படவேண்டுமானால், தங்களுடைய எண்ணங்கள் நிறைவேறவேண்டுமானால், நிச்சயமாக அந்த உரிமையைப் பறிக்கக்கூடாது.

ஏற்கெனவே உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு....

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் என்ன உளறிவிட்டார்களா? அவர்கள் எழுதிய ஆதாரப்பூர்வமான தீர்ப்பு பொய்யா?

நீதி சாயுமானால், மனு நீதி நடக்கிறது என்று நாட்டு மக்கள் உணர்ந்து கொள்வார்கள். நாட்டில் மனித நீதி தேவையா? மனுநீதி தேவையா? இதுதான் மிக முக்கிய பிரச்சினையாக இனிமேல் வெடிக்கப் போகிறது.

பொறுமையாக அறப்போராட்டத்தில்...

எனவே, நீதிமன்றத்தில் நீதி வென்றுவிட்டது; நாங்கள் உள்ளே வரலாம் என்று சொன்னால், அத்தனை தமிழர்களும் திரண்டால் என்னாகும்? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். சட்டத்தை நாம் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. சட்டம் அதனுடைய கடமையைச் செய்யவேண்டும் என்ற அந்த உணர்வினால்தான், நாங்கள் பொறுமையாக இதுபோன்ற அறப்போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

இந்த நியாயத்தைப் புறக்கணிக்காதீர்கள்; கண்ணை மூடிக்கொள்ளாதீர்கள். எப்படியோ நடக்கட்டும் என்று ஒரு பக்கத்தில் சாய்ந்து விடாதீர்கள். இதைத்தான் ஆட்சியாளர்களுக்கு நாங்கள் சொல்கிறோம். ஆட்சியாளர்களினுடைய காதுகள் இங்கே இருக்கின்றன. ஆட்சியாளர்க ளுடைய கண்கள் இங்கே பார்த்துக் கொண்டிருக் கின்றன. ஆகவே, செய்யவேண்டியதை செய்யட்டும்!

வரலாற்றினுடைய பிழைகள் சரிபடுத்தப்பட்டன

எத்தனை நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்திருக் கின்றன. ஆனால், அந்தத் தீர்ப்புகள் நிலைத்த தில்லை. சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று இரண்டு பார்ப்பன நீதிபதிகள் உயர்நீதி மன்றத் தீர்ப்பில் எழுதினார்கள். ஆனால், என்னா யிற்று? மக்கள் மன்றம் பேரறிஞர் அண்ணாவை முதல்வராக ஆக்கியவுடன், சுயமரியாதைத் திரு மணங்கள் செல்லும்; இதற்கு முன் நடைபெற்ற திருமணங்களும் செல்லும் என்று சட்டம் வந்தது. ஒரு அரை நூற்றாண்டுக்குப் பிறகு. அப்பொழுது தான் வரலாற்றினுடைய பிழைகள் சரிபடுத்தப் பட்டன. அதேநிலை வரும்.

ஆனால், இப்பொழுது போகின்ற போக்கு இருக்கிறதே, இனி எல்லோரும் அமைதியாக நின்று சொல்லக்கூடிய நிலை வராது; எங்கள் காலத்தில் நாங்கள் அறப்போராட்டத்தில் இருப்போம்; அடுத்து இளைஞர்கள் வந்தால், அது அறப் போராட்டத்தோடு நிற்குமா? என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.

எனவே, நிதானத்தோடு சிந்தித்துப் பார்க்கட்டும்; மீண்டும் சிதம்பரம் கோவிலை தீட்சதர்களிடம் ஒப்படைத்தால், நீங்கள் உங்கள் ஆட்சியையும், மற்றவற்றையும் ஒப்படைத்துவிட்டீர்கள் என்று தான் அதற்குப் பொருள் என்பதை மிகத் தெளி வாகவே சொல்லி, அதனை எச்சரிக்கையாக சொல்லி விடைபெறுகிறேன், வணக்கம், நன்றி!
நண்பர்களே, இந்தப் போராட்டம் தொடர்ந்து பல வகைகளிலும் வரும் என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

யார் பொய்யர்?

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர், ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியார் வீட்டில், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாளின் தேவதாசிகளின் தீர்மானம் விஷயமாய்ப் பேசிக் கொண் டிக்கும்போது, கிறிஸ்தவ கன்னியாஸ்திரீகளைப் பற்றியும், மற்றும் பல விஷயங்களைப்பற்றியும் பேசிய பேச்சுக்களை இல்லை என்று மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு பத்திரிகை, அய்யர் சொன்னதாக குறிப்பிட்ட விஷயங்களை ருஜுப்படுத்து வதாக பந்தயம் கூறிற்று. அய்யர் அடங்கிவிட்டார். ஸ்ரீமதி முத்து லட்சுமி அம்மாளும், அய்யர் கிறிஸ்தவ கன்னியாஸ்திரீ களைப்பற்றி பேசியதும், மற்றும் தமிழ்நாடு பத்திரிகையில் கண்ட விஷயங்களும் உண்மை யென்று ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதற்கு ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் அவர்களும் மேலொப்பம் இட்டிருக்கிறார். இந்நிலையில், தமிழ்நாடு நிருபர், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள், ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியார் ஆகிய இம்மூவர்கள் சொல்வது பொய்யா அல்லது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் சொல்வது பொய்யா என்பதை உணர பொது ஜனங்கள் ஆவலாயிருப்பார்கள்.

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் இதற்குமுன் எத்தனையோ தடவைகளில் பொய்யர் பட்டம் வாங்கி தேறியிருக்கின்றார். அல்லாமலும், தமிழ்நாடு பந்தயம் கூறினபிறகும், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள் அய்யரின் யோக்கியதையை வெளிப் படுத்திய பிறகும், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி உலர்ந்த மாமிசம் திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி போல் பேசாமல் இருப்பதால், அய்யர்தான் பேசிவிட்டு இப்போது இல்லை என்று சொல்லுகின்றார் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க நியாயமில்லை. இம்மாதிரி அடிக்கடி பேசிவிட்டு இல்லை என்று சொல்லிக் கொண்டே வருவதைவிட கண்ணியமாய் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தால் அது மிகுதியும் நன்மையாயிருந்திருக்கும். இப்போது பேசிய குற்றமொன்று, அதை மறுத்து இல்லையென்று பொய் சொல்லும் குற்றம் ஒன்று. ஆக இரண்டு குற்றத்தைச் சுமந்திருக்கிறார். இவர்தான் இந்திய அரசியல் கட்சியின் தலைவருள் பிரதானமானவராம். கவர்னருக்கும், சட்டமெம்பருக்கும் மந்திரிக்கும் அந்தரங்க விசுவாசியாம்.
- குடிஅரசு - கட்டுரை - 20-11-1927

தமிழ் ஓவியா said...

பார்ப்பன சூழ்ச்சி

நீல் சத்தியாக்கிரக விஷயமாய் பார்ப்பனர்கள், நாட்டில் தங்களுக்கும், இக்காரியத்திற்கும் ஆதரவு இல்லையென்பது தெரிந்தே ஸ்ரீமான் காந்தியவர்கள் பெயரை வைத்துக்கொண்டு வெறும் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். இது காங்கிரசின் போது வெளிநாட்டிலிருந்து வரும் ஜனங்களை ஏமாற்றுவதற்காகச் செய்யும் சூழ்ச்சியென்பதோடு, இம்மாதிரி அனாவசியமான காரியங்களில் சத்தியாக்கிரகம் செய்து சத்தியாக்கிரகம் என்பதின் யோக்கியதையைக் கெடுத்துவிட்டால், நாளைக்குப் பார்ப்பனக் கொடுமைகள் நீங்கச் செய்யப்படும் சுயமரியாதை சத்தியாக் கிரகத்திற்கும், ஜனங்களின் ஆதரவு இல்லாமல் போகட்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தின் பேரில் செய்யும் காரியமென்றுமே சொல்லுவோம். இனியும், எத்தனை நாளைக்குத் தான் இப்படி இவர்கள் சூழ்ச்சியும், ஏமாற்றமும் செய்யக் கூடுமென்பதையும், இக்கூட்டத்திற்கு எத்தனை நாளைக்குத்தான் ஸ்ரீமான் காந்தி உதவிசெய்து வருவார் என்பதையும் பொறுமையோடு பார்த்து வருவோமாக.

- குடிஅரசு - கட்டுரை - 13.11.1927

தமிழ் ஓவியா said...

பார்ப்பன சூழ்ச்சி

நீல் சத்தியாக்கிரக விஷயமாய் பார்ப்பனர்கள், நாட்டில் தங்களுக்கும், இக்காரியத்திற்கும் ஆதரவு இல்லையென்பது தெரிந்தே ஸ்ரீமான் காந்தியவர்கள் பெயரை வைத்துக்கொண்டு வெறும் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். இது காங்கிரசின் போது வெளிநாட்டிலிருந்து வரும் ஜனங்களை ஏமாற்றுவதற்காகச் செய்யும் சூழ்ச்சியென்பதோடு, இம்மாதிரி அனாவசியமான காரியங்களில் சத்தியாக்கிரகம் செய்து சத்தியாக்கிரகம் என்பதின் யோக்கியதையைக் கெடுத்துவிட்டால், நாளைக்குப் பார்ப்பனக் கொடுமைகள் நீங்கச் செய்யப்படும் சுயமரியாதை சத்தியாக் கிரகத்திற்கும், ஜனங்களின் ஆதரவு இல்லாமல் போகட்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தின் பேரில் செய்யும் காரியமென்றுமே சொல்லுவோம். இனியும், எத்தனை நாளைக்குத் தான் இப்படி இவர்கள் சூழ்ச்சியும், ஏமாற்றமும் செய்யக் கூடுமென்பதையும், இக்கூட்டத்திற்கு எத்தனை நாளைக்குத்தான் ஸ்ரீமான் காந்தி உதவிசெய்து வருவார் என்பதையும் பொறுமையோடு பார்த்து வருவோமாக.

- குடிஅரசு - கட்டுரை - 13.11.1927

தமிழ் ஓவியா said...

ராயல் கமிஷனும் சுயமரியாதையும்

ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு ராயல் கமிஷன் விஷயத்தில் அவர்கள் நடந்துகொள்ள வேண்டிய தன்மையைப்பற்றி ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தனது அபிப்பிராயமாக தெரிவித்துக் கொண்டிருக்கும் செய்தியாவது:-

பிரிட்டிஷாரின் ஏகபோக ஆதிக்கத்தை இந்தியர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிற வரையில், இம்மாதிரியான ராயல் கமிஷன்களில் இந்தியர்களுக்குப் பதவி அளிக்காதது, நம்மவர்களின் சுயமரியாதையை பாதிக்கக் கூடியதாயிருக்கின்றது என்று எண்ணுவதில் கொஞ்சமாவது அர்த்தமில்லை.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஓர் அம்சமாகவே, இந்த கமிஷன் நியமிக்கப் பட்டிருக்கின்றது. இந்தியரின் சுயமரியாதையை அடியோடு அழித்ததான பஞ்சாப் அநீதிபோன்ற காரியங் களில் ஒன்று சேர்ந்து பரிகாரம் தேட சம்மதிக் காத ஒரு கூட்டத்தார், இப்போது பகிஷ்காரத் தைப் பற்றி வீண் கூப்பாடு போடுவது கேலிக் கிடமானதென்றே சொல்லவேண்டும்.

உண்மையில் ராயல் கமிஷனை பகிஷ் கரிப்பது என்பது, எந்த அரசாங்கத்தாரால் இந்த ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டதோ, அதே அரசாங்கத்தின் அம்சங்களான சட்டசபை களையும், மந்திரி முதலிய பதவிகளையும் உத்தியோகங்களையும் பகிஷ்கரிக்கத்தக்க கொள்கையுடையதாயிருக்க வேண்டும். அப்படிக் கில்லாமல், ஒரு விதமான தியாகத்திற்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாத தான, வெறும் வார்த்தையளவில் பகிஷ்காரம் என்று கூச்சல் போடுவதானது சுயமரியாதை உள்ள தேசத்தார் என்பவர்களுக்குக் கொஞ்சமும் அழகாகாது. உண்மையிலேயே, முழு விடுதலைக்கும் நம்முடைய நாட்டார் தயாராயிருக்கின்றார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால், அந்தக் காலத்தில் பார்ப்பனரல்லாதாரே முன்னணியில் நின்று விடுதலைப்போர் புரிவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

ராஜீய விஷயங்களில் சாத்தியமானதும், காரியத்தில் நடக்கக் கூடியதுமான துறையில் பாடுபடும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், வேண்டு மென்றே பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக மற்ற கட்சியார் செய்யும் சூழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பது அறிவுடைமையாகாது.

கோயமுத்தூரில் கூடிய தென்னிந்திய நலவுரிமைச்சங்க மகாநாட்டில் மாகாண சுயாட்சி கிடைக்கும் வரையிலும் பதவிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்திருக் கிறார்கள்.

ஆதலால், முழு சுதந்திரமும் கேட்கக் கூடியகாலம் வரும் வரை ஜஸ்டிஸ் கட்சிக் காரர்கள் மாகாண சுயாட்சிக்காகவும் நம்முடைய நாட்டிலுள்ள எல்லா வகுப்பாளர் களுக்கும் சமமான நீதியும், பங்கும் கிடைக்கும் படியாகவும், ஒரு வகுப்பார் மற்ற வகுப்பாரைவிட உயர்ந்தவர்கள் என்று கொண்டாடும் பாத்தி யதையை நிராகரிக்கவும் ஒரே நிலையாக இருந்து பாடுபட்டு வரவேண்டியவர்களாவார்கள், ஜஸ்டிஸ் கட்சியாரின் வெளிப்படையான இந்தக் கொள்கையை நம்முடைய தேசமக்களிடமும், மற்றும் அந்நிய நாட்டாரிடமும், அவர்களால் ஏற்படுத்தப்படும் சபைகளின் முன்னிலையிலும் ஸ்தாபிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

கமிஷன் அங்கத்தினர்களில் இந்திய அங்கத்தினர்கள் ஒருவரும் இல்லாதது ஒரு கெடுதியாகக் கொள்ள வேண்டிய அவசிய மில்லை, கவர்ன்மெண்டார் ஒரு சமயம் இந்தியர் களில் யாரையாவது நியமிப்பதானால் இப்போ தைய நிலைமையில், நியமனம் பெறக்கூடிய இந்தியர்கள் பொதுவாக பிராமணரல்லா தாருக்கு தீங்கிழைக்கக் கூடியவர்களாகத்தான் இருக்க முடியும்.

தவிர, ஆதியில் ரவுலட் கமிட்டியில் இந்தியர் ஒரு அங்கத்தினராயிருந்துங் கூட அக்கமிட்டி யின் சிபாரிசானது இந்திய மக்களை அரசாங் கத்தோடு ஒத்துழையாமை செய்யவேண்டிய அளவுக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டது. பொதுவாக யோசிக்குமிடத்து கமிஷனில் அங்கம் பெறக் கூடியவர்கள் ஏகபோக உரிமையாளர் களான பார்ப்பனர்களாகவே இருந்து விடக்கூடும் என்கிறதை நினைக்கும்போது அக்கமிஷனில் இந்தியர்களை நியமிக்காதது ஒரு பாக்கிய மென்றே சொல்லவேண்டும்.

- குடிஅரசு -கட்டுரை - 27.11.1927

தமிழ் ஓவியா said...


பாலியல் புகார்: நீதிபதி கங்குலிக்கு தேசிய மகளிர் ஆணையம் தாக்கீது


புதுடில்லி, டிச.7- சட்ட பயிற்சி மாணவி கூறிய பாலியல் புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலிக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடியாக தாக்கீது அனுப்பியுள்ளது. சட்ட பயிற்சி மாணவி ஒருவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று தமது வலைபக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்த விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுத்தவர் நீதிபதி ஏ.கே. கங்குலி என தெரியவந்தது. இதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் அக்குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வெளியிட்ட அறிக்கை யில், கங்குலி மீதான புகாருக்கு முகாந்திரம் இருக்கிறது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஏ.கே. கங்குலி மீதான புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. மேலும் தம் மீதான புகார் குறித்து ஏ.கே. கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு தாக்கீது அனுப்பி வைத்திருக்கிறது. அத்துடன் சட்ட பயிற்சி மாணவியின் புகார் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கேட்டு டில்லி காவல் துறையினருக்கும் மகளிர் ஆணையம் தாக்கீது அனுப்பி வைத்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...

பணத்தின் வரலாறு


மனித வாழ்க்கைக்கு அத்தியாவசிய மானவற்றுள் ஒன்று பணம். நாட்டுக்கு நாடு பணத்தின் பெயர் வித்தியாசப் படுகிறது. அப்படிப்பட்ட பணத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்வோம்.

* நாணயம் உருவாக்கும் நவீன இயந்திரத்தை John Prinsep என்ற ஆங்கிலேயர் 1769-இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். 1819-இல் இவரது மகன் James Prinsep கல்கத்தா வந்து எடைகளையும், அளவீடுகளையும் சீரமைத்தார். இந்திய நாணயங்களையும் இவர் சீரமைத்தார். இவர்கள் இருவரும் இந்திய நாணய முறை வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர்.

* 1796-இல் பர்மா அரசர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கல்கத்தா நாணயச் சாலையிலிருந்து பர்மாவுக்கு நாணயங்கள் தயாரித்து அனுப்பப் பட்டன. பர்மாவிலிருந்து இந்திய பாணி வெள்ளி நாணயப் புழக்கம், கம் போடியா, தாய்லாந்து, தெற்கு வியட் நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடு களுக்கும் பரவியது.

* 1835-இல் பிரிட்டிஷார் கொண்டு வந்த நாணயச்சட்டம் (Coinage Act) மூலம் சீரான நாணயங்கள் வெளி வந்தன. இதில் பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களின் உருவங்கள் இடம் பெற் றன. ஆப்கானிஸ்தானோடு நிலவிய வர்த்தகம் மூலமாக ஈராக், ஈரான், எதியோப்பியாவிலும் பிரிட்டிஷாரின் ஆளுகைக்குட்பட்ட பர்மா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, பெர்சிய வளைகுடா, சோமாலியா, கிழக்கு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்திய ரூபாய்கள் புகழ் பெற்றிருந்தன.

* 1950-இல் இந்தியா குடியரசானதும் புதிய நாணயங்கள் வெளியிடப்பட்டன. ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள், 1957-இல் 100 பைசாக்களைக் கொண்ட ஒரு ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ் ஓவியா said...

பிற்காலத்தில் ஒரு பைசா, இரண்டு, மூன்று, அய்ந்து, பத்து, இருபது, இருபத்தைந்து பைசா நாணயங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன. 1990-களில் அய்ந்து, இரண்டு ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2006-இல் பத்து ரூபாய் நாணயங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன.

* காகிதப்பணம் முதன் முதலில் சீனாவில் கி.பி. 1000-இல் உருவானது. சீனாவில் Mongol Yuan வம்சத்தைச் சேர்ந்த (1206-1367) Jin என்பவரால், 1189-ஆம் ஆண்டு காகிதப்பணம் வெளி யிடப்பட்டது.

* தனது சீனப்பயணத்தை முடித்துக் கொண்டு அய்ரோப்பா திரும்பிய மார்க் கோபோலோ, சீனாவில் காகிதப்பணம் புழக்கத்திலிருந்த செய்தியைச் சொன்ன போது, முதலில் அய்ரோப்பியர்கள் நம்பவில்லை. அய்ரோப்பாவில் 1574-இல் தான் காகிதப்பணம் வெளியானது.

* இந்தியாவில் 1770-இல் பாங்க் ஆஃப் இந்துஸ்தான் முதன் முதலில் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. 1861-இல் காகிதப் பணச்சட்டம் (Paper Currency Act) அமலுக்கு வந்தது. இதன் மூலம் பிரிட்டிஷ் இந்திய அரசே, பணம் வெளியிடும் உரிமைளைப் பெற்றது.

* பிரிட்டிஷ் இந்திய அரசு முதன் முதலில் வெளியிட்ட நோட்டுகளில் விக்டோரியா மகாராணியின் உருவம் இடம் பெற்றது. முதல் உலகப்போர் தொடங்கியபோது குறைந்த மதிப் பிலான ரூபாய் நோட்டுகள் வெளியிட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. அப்போது முதன் முதலாக ஒரு ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது.

1923-இல் அரசின் உருவம் தாங்கிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. 1935-வரை இந்த நிலை நீடித்தது. 1935-க்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகளை வெளியிடும் அதிகாரம் பெற்றது.

* இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின், 1949-இல் ஒரு ரூபாய் நோட்டு வெளி யிடப்பட்டது. 1951 முதல் இந்தி மொழி யிலும் ரூபாய் நோட்டுகளில் வார்த் தைகள் இடம் பெற்றன. 1954-இல் ரூபாய் 10,000 மதிப்புள்ள நோட்டுகள் வெளி யிடப்பட்டன. அவற்றில் இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தைப் பிரதி பலிக்கும் படங்கள் இடம் பெற்றன. ஒரு முறை ஆயிரம் ரூபாய் நோட்டில் தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரத்தின் படம் இடம் பெற்றது. சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் 1980-இல் பொறிக்கப்பட்டது.

* பிற்காலத்தில் 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்படுவதாகக் கருதிய அரசு, அவற்றை விலக்கிக்கொண்டு விட்டது.

* ஜெர்மனி மொழி வார்த்தையான Thaler என்பதிலிருந்து அமெரிக்கப் பணமான டாலர் என்ற சொல் பிறந்தது. 1519-இல் செக் குடியரசில் உள்ள பொஹிமியா என்ற இடத்தில் முதன் முதலில் வெள்ளி டாலர் நாணயம் உருவானபோது இப்பெயர் சூட்டப் பட்டது.

* அமெரிக்காவைத் தவிர கயானா, கனடா, ஆஸ்திரேலியா, கிரனெடா, கிழக்கு டிமெர், சாலமன் தீவுகள், சிங்கப்பூர், ஜிம்பாப்வே, சுரினாம், செயின்ட் கிட்ஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்லெட், டொமினிகா, தூவலு, நமீபியா, நௌரு, பலாவ், பஹாமாஸ், புரூணே, பிஜி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, லைபீரியா, ஜமைக்கா, தைவான், நியூசிலாந்து, ஹாங்காங், பார்படாஸ், பெலிஸ் ஆகிய நாடுகளிலும் டாலரே நாணயமாகத் திகழ்ந்தாலும், ஒவ்வொரு நாட்டு டாலருக்கும் வெவ்வேறு மதிப்புகள் உண்டு.

* அய்ரோப்பிய யூனியனில் 27 நாடுகள் உள்ளன. இவற்றில் 16 நாடுகள் ஒன்று சேர்ந்து யூரோ என்ற பொது வான நாணயத்தை உருவாக்கி, 2002 ஜனவரி முதல் தேதியில் இருந்து புழங்கி வருகின்றனர். யூரோ நாணயத்தின் ஒரு பக்கம் பொதுவாகவும் மற்றொரு பக்கத்தில் குறிப்பிட்ட நாடு தேர்ந் தெடுத்து உள்ள சின்னமும் இடம் பெற் றிருக்கும்.

* ஜப்பான் நாட்டு நாணயத்தின் பெயர் யென். இதற்கு வட்டம் என்று பொருள். யென் முதன் முதலில் 1872-இல் அறிமுகமான போது அதன் எடை 24.26 கிராம் வெள்ளி அல்லது 1.5 கிராம் தங்கத்திற்கு சமமாக இருந்தது.

* தினார் என்ற சொல் கிரேக்க வார்த்தையிலிருந்து பிறந்தது. இதற்கு கொடு என்று பொருள். தினார் அல்ஜீரியா, பஹ்ரைன், ஈராக், குவைத், ஜோர்டான், லிபியா, துனீஷியா உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளில் நாணயமாகத் திகழ்கிறது. இது கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலேயே அறிமுகமான நாணயம்.

- க.ரவீந்திரன்

தமிழ் ஓவியா said...


கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

இஃது உலகநீதிச் செய்யுள்களில் ஒன்று. இதன் பொருள் வருமாறு:-

கோயில் - = அரசியல்; இல்லா -= இல்லாத ஒழுங்குமுறையமையாத ஊரில் = ஊரிலே குடியிருக்க வேண்டாம் =- குடியிருக்கக் கூடாது என்பது பொருள்

கோயில் என்பது அரசன்; அரண்மனை, அரசியல் என்று பொருள் தருவதை பழம் தமிழ் நூற்கள் நன்றாக விளக்கும்.

"மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
அறத்துறை விளங்கிய அந்தணர் பள்ளியும்"
என்ற சிலப்பதிகார அடிகளை நோக்குக!
அரசியல் அமைந்த இடம் என்றால் என்ன?
அது அமையாத இடம் என்றால் என்ன என்பதை ஆராய வேண்டும்.

பண்டைத் தமிழ்நாட்டில் துறவிகள் ஒழுங்குமுறை வகுத்தார்கள். அதைத் தான் மன்னன் தன் ஆட்சிமுறைக்கு அடிப்படையாக வைத்து ஆண்டு வந்தான்.

இவ்வாறு ஒழுங்கு முறை வகுக்கபடாத காலம் ஒன்றிருந்திருக்கும். அக்காலத்து வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்திருப்பர். அதைத்தான் அரசியல் அற்ற இடம் என்பது. அத்தகைய இடத்தில் மக்களின் வாழ்வு நல்லபடி நடக்கவே முடியாது. ஆதலால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்றருளிச் செய்யப்பட்டது.

_- பாரதிதாசன் கட்டுரை, குயில், 18-.10.-1960

இப்படி ஒரு அர்த்தத்தில் சொன்ன உலகநீதி செய்யுளை நம்ம ஆட்கள் கடவுளை, மதத்தை பரப்பப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்...ஏதும் அறியாத அப்பாவி மக்கள் கடவுள் என்று சொன்னாலே கண்ணை மூடிக் கொண்டு நம்புவதால் இப்படி எத்தனை புளுகுகள் புராணத்தில், வரலாற்றில் புதைத்து வைத்திருக்கிறார்களோ?

சிந்தியுங்கள் தோழர்களே!
- க. பரணீதரன்

தமிழ் ஓவியா said...


ஓர் வயது முதிர்ந்த நாத்திகனின் கருத்துகள்

தந்தை பெரியாரின் ஆதாரபூர்வ மான கருத்தாழம் மிக்க நாத்திக, பகுத் தறிவு கொள்கைகளை 63 ஆண்டு களாக கேட்டு, படித்து, அறிவுபெற்ற நான் சில கருத்துகளை எழுத விழை கிறேன். தந்தை பெரியாரின் சொற் பொழிவுகள் குடி அரசு, உண்மை, விடுதலை ஆகிய இதழ்களில் வந் துள்ளதை பல தலைப்புகளில் நூல் களாக, சுயமரியாதைப் பிரச்சார நிறு வனம் குறைந்த விலையில் வெளியிட் டுள்ளதைப் படித்து லட்சக்கணக் கானோர் தெளிவுபெற்றுள்ளதை யாவரும் அறிவர்.

தந்தை பெரியாருக்குப் பிறகு அவ ரது மனிதாபிமான கொள்கைகளைத் தொடர்ந்து பட்டிதொட்டிகளிலும், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் தனது உடல் நலத்தையும் கவனியாது சூறாவளிப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் கடவுள், மதம், முதலியவை பற்றிக்கூறிய பல கருத்துகள் ஆங்கில மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதால், வடநாட்டிலும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளை அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்தம் கொள்கைகளை ஆய்வு செய்து, வெளிநாட்டுப் பல் கலைக்கழகங்களில் டாக்டர் பட்டங் கள் பெற்ற இந்தியரும், வெளி நாட்டவரும் உண்டு. இத்தொண்டு களினால் பொதுச் செயலாளர், தந்தை பெரியாரின் சிறந்த மனிதாபிமானக் கொள்கைகளை உலகம் பூராவும் பரப்பிவருவது மிகவும் போற்றத்தக்கது.
கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் தம் சொற்பொழிவுகளில் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு விஞ் ஞான ரீதியாக அளிக்கும் விளக்கங்கள், ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும் தனித் தன்மை வாய்ந்தவை. அவர்கள் (பொதுச்செயலாளர்) மனிதாபிமான பகுத்தறிவு, நாத்திகம், பார்ப்பனியக் கலாச்சார ஆதிக்கம், இன்றைய அரசியல், சமுதாய நீதி, சட்ட நுணுக் கங்கள் ஆகிய எந்த பொருள்களில் சொற்பொழிவு ஆற்றினாலும் அவை, தக்க ஆதாரத்துடன் கேட்போருக்கு அலுப்பு ஏற்படாத வகையில், வார்த்தைகளை அளந்து பேசுவதில் அவருக்கு அவரே உதாரணம்.

இந்த வகையில் எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமானால், தந்தை பெரி யார்-சேலம் கல்லூரியில் சொற்பொழி வாற்றிய தத்துவ விளக்கங்கள் என்ற இந்த அரிய நூலின் ஆழ்ந்த கருத் துக்களைப்பற்றி பொதுச்செயலாளர் ஆற்றிய உரைகள், விளக்கங்கள் ஆகியவை. பொதுச்செயலாளரின் புலமை மிக்க சிறப்புகளை எடுத்துக் காட்டுவதாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்றைய துணைவேந்தர் டாக்டர் அனந்த கிருட்டிணன் அவர்கள் உலகில் பல பல்கலைக்கழகங்களின் பட்டங்களைப் பெற்ற ஓர் சிறந்த அறிஞர், அவர் சில மாதங்களுக்கு முன்னர் பெரியார் திடலில் நடந்த ஒரு சிறப்புக்கூட்டத்தில் சொற்பொழி வாற்றியபோது, அவருக்கு முன்னதாகப் பேசிய பொதுச்செயலாளரின் கருத் துக்களைப் புகழ்ந்து, பொதுச் செயலாளரின் பேச்சுக்களை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று பெருமிதத்தோடு சொன்னார்கள் என்றால், வேறு விளக்கங்கள் தேவையில்லை. நீதி அரசர் அறிஞர் வேணுகோபால் அவர்களும், பொதுச்செயலாளரின் மேன்மையான சொற்பொழிவுகளைப் பற்றிப் பல சமயங்களில் புகழ்ந்துள் ளார்கள்.

ஆகவே, குறைந்தது சென்ற பத்து ஆண்டுகளாக, விடுதலை, உண்மை, போன்ற இதழ்களில் வெளியிடப்பட் டுள்ள பொதுச்செயலாளரின் சொற் பொழிவுகளையும், அறிக்கைகளையும், தலையங்கங்களையும், இவ்விதழ்களி லிருந்து மேற்படி பக்கங்களை எடுத்து, ஓர் ஆல்பமாக பைண்டு செய்து வைத்தால் அவைகளிலிருந்து நாத்திகம் மனிதநேயம், சமுதாய நீதி - அவை களுக்கெதிரான பார்ப்பனிய நூல்களின், தேன் கலந்த நச்சுகளை யாவரும் புரிந்து கொண்டு, அவைகளை வெறுத்து ஒதுக்கும் வண்ணம் பயன்படும். அந்த ஆல்பங்களிலிருந்து தனித்தனி தலைப் புகளில், பொதுச்செயலாளரின் ஆதார முள்ள கருத்துக்களை, நூல்களாக வெளியிடலாம். அவைகளை ஆங்கி லத்திலும், இந்தி முதலான மற்ற முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடலாம்.

அதனால் தந்தை பெரியாரின் மனிதாபிமான கொள்கைகளுக்கு உண்மையான விளக்கங்கள், மேலும் உலகம் பூராவும் பரவ நல்ல வாய்ப் பாகும்.

இந்தப்பணிகளை உடனடியாகத் தொடங்கினால் மிக்க நன்மை பயக்கும் என்பது, என்னைப்போன்றோரின் தாழ்மையான எண்ணம்.

- விடுதலை (5.2.1993)

தமிழ் ஓவியா said...


அடித்து நொறுக்காமல்....


- வா.நேரு -

சுத்தியலெடுத்து கல்லை
அடித்து நொறுக்குவதுபோல
மனதிற்குள் அந்த உணர்வை
அடித்து நொறுக்காமல்
அகலாது சாதி உணர்வு !

மூளைக்குள் போட்ட
விலங்கு என்றார் பெரியார்
மூர்க்கத்தனமாய்
உழைப்பவரை ஒடுக்க
பார்ப்பான் ஏற்படுத்திய
ஏணிப்படி அமைப்பே
சாதி என்றார் அண்ணல் .

வாழும்போதும்
வெந்து சாகும் போதும்
பின்னிப் பிணைத்திருக்கிறான்
பார்ப்பான் தமிழரின் பிணம் தின்னும் கழுகுகளாய்
சாதிக்கொரு சடங்குகளை! கை நகத்தில் மறைந்திருக்கும்
அழுக்குகள் போல
நீ செய்யும் சடங்குகள்
ஒவ்வொன்றிலும் உன்
ஜாதி இழிவு ஒளிந்திருக்கிறது !

பார்ப்பனன் உயர்வென்பதுவும்
உழைப்பவன் தாழ்வென்பதுமே
எழுதப்படாத விதி
எல்லாச்சடங்குகளிலும் !

சாதியால் கொழுக்கும்
பார்ப்பான்
சடங்குகளால் பிழைக்கிறான் !
நம்மை இன்னும்
கருவறைக்குள் விடுவதை
கடுமையாக எதிர்க்கிறான் !

பூணூலை எதிர்க்காமல்
ஒரு நூல் கூட
நம் இனத்தின்
முன்னேற்றம் இல்லை !

சடங்குகளை மறுத்து
அதன் மிச்ச சொச்சங்களைத்
தூக்கி நெருப்பில் போடு !

பார்ப்பானை வைத்துக்
கல்யாணம்,
காது குத்தல், கருமாதி,
தெவசம், திதி
அது இது, இது அது
அனைத்தையும் மறு !
அப்போதுதான்
தந்தை பெரியாரை
அண்ணல் அம்பேத்கரைச்
சொல்லும் தகுதி உண்டு
என்பதனை உணர் ! உணர்த்து !

தமிழ் ஓவியா said...

உள்ளேயும் வெளியேயும்!


- சிவகாசி மணியம்

சிவாயம் என்றிருப்போருக்கு அபாயம் ஏதுமில்லை என்பார் கே.பி.சுந்தராம்பாள் ஒரு திரைப்படத்தில். அதனைச் சொல்லியபடி, ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலை வைத் துப் படுத்துப் பார்த்தால் தெரியும். அபாயம் இருக்கட்டும். ஆதாயமாவது இருக்குமா? கேட்டதும் கொடுப்பவனாம் கீதையின் நாயகன்! அப்படி ஒரு பாடல் வரி. அப்படிக் கிடைத்திருந்தால் ஏழை, ஏதிலி, இல்லாதவன், வறுமை என்ற சொற்களே அகராதியில் இருந்திருக் காதே!

கடவுள்களின் பெருமைகளை நடந்து முடிந்ததுபோல புளுகினாலும் கவுண்ட மணி - செந்தில் காமெடிக் காட்சிதான் நம் நினைவுக்கு வருகிறது. இவ்வார ஆனந்த விகடனில் (30.10.2013) நானே கேள்வி பதில் பகுதியில் ஒருவர் எழுதி யிருப்பது அப்படித்தான் இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

இறைவன் ஏன் இறைவனாக இருக்கிறான்? என்பது கேள்வி. பதிலாக வருவது ஒரு குட்டிக்கதை. கடவுளிடம் பேசிக்கொண்டிருந்த மனிதன் அவரிடம் ஒரு கேள்வி கேட்டான். சாமி உங்களுக்கு ஒரு கோடி வருஷங்கிறது எவ்வளவு நேரம்? அதற்கு கடவுள் எனக்கு ஒரு நிமிடம் என்றாராம். அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த மனிதன் அப்ப ஒரு கோடி ரூபாய்ங்கிறது சாமி? என்று கேட்க ஒரு ரூபாய் போல என்றாராம் கடவுள். கடவுளை உடனே மடக்க நினைத்து சாமி எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன் என்றானாம் பக்தன். கறார் பேர்வழியான கடவுளோ ஒரு நிமிடம் பொறு என்றாராம். அதனால் தான் அவர் இறைவன் என்கிறார் இவர். ஒரு ரூபாயை ஒரு கோடி என்று வைத்துக்கொண்டால் அதைப் பெற ஒரு கோடி ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றாகிறது. அதுதாண்ணே இது என்று சொல்லி ஏமாற்ற முயற்சிப்பதற்கும் இதற்கும் அதிக வேறுபாடு இருக்க முடியாது. ஒரு கோடி பெற ஒரு கோடி வருஷம் காத்திருக்க யாரால் முடியும்? எத்தனை தலைமுறைகள் தோன்றி மறையும்? நூறு ஆண்டைத் தொடுவதே அரிதாய் இருக்கிறபோது? இப்படிப்பட்ட பித்தலாட்டங்களைத்தான் இறைவனின் லீலைகள் என்று சொல்லிக் கொண்டாடு கிறார்கள்.

இப்பொழுதெல்லாம் சிலருக்கு ஒரு கோடி சம்பாதிக்க ஒரு நொடி போதும் சான்றுக்கு கேத்தன் தேசாய் ஒரு ஆள்போதுமே. பொதுச்சொத்துக்கள் என்றில்லை. கடவுளின் பெயர்களில் இருக்கும் சொத்துக்களையே கபளீகரம் செய்யும் அக்கிரமங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. கோயில் நில மீட்பு எனும் தலைப்பில் (துக்ளக் 30.10.2013) வெளிவந்துள்ள கட்டுரை விலாவாரியாக விளக்குகிறது. கடவுள் தலையிலேயே கைவைத்து சொத்து குவித்தவர்களை சந்திக்கிழுக்கிறது.

கோயில் நிலம் கோயிலுக்கு மட்டுமே சொந்தமானது என்று கடந்த ஜூலை மாதம் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கோவை புளியங்குளத்தின் பெரிய மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 60 சென்ட் இடத்தை இந்து அறநிலையத் துறையினர் மீட்டனர். ஆக்கிரமிப்பு பற்றிய தகவல் பரவியதால் வீடுகளில் இருந்த பொருட்களை அகற்றி ஒத்துழைப்புக் கொடுத்தார்களாம், ஆக்கிரமிப்பாளர்கள். காங்கேயம், திருப்பூர், உடுமலைப்பேட்டை, கோவை நகரம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் 700 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டதாம்!

திருப்பூர் நல்லூரில் வீரவேசுவர சாமி - விசாலாட்சி அம்மன் - சுப்ரமணியசாமி கோயில்களுக்குச் சொந்தமான சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் மீட்கப்பட்டுள்ளது. காங்கேயம் வட்டத்தில் உள்ள சிவன் மலை சுப்ரமணியசாமி கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளத்தையே ஆக்கிரமிப்பு செய்திருந்த ஒருவர் அதை கோயில் வசம் ஒப்படைத் திருக்கிறார்.

காங்கேயம் காசி விசுவநாத சாமி கோயிலுக்குச் சொந்தமான 38 சென்ட் நிலம் வீராணம் பாளையத்தில் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாயாம்! நத்தக் காடையூர் ஜெயங்கொண்டேசுவரர் மற்றும் வரதராஜப்பெருமாளுக்குச் சொந்தமான 96 சென்ட் நிலம் குட்டப்பாளையம் என்ற ஊரில் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய். சிவன் மலை சுப்ர மணியசாமி கோயிலுக்குச் சொந்தமான 24 சென்ட் நிலம் நால்ரோடு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. 6 கோடி மதிப்பிலான இந்த இடத்தை அலேக் செய்தவர் கோயில் வசம் திருப்பித் தந்துள்ளார். கோயில் நில மீட்பு செய்திகளைப் பத்திரிகைகளில் பார்த்த பொதுமக்கள் எங்கள் பகுதியிலும் நிலம் உள்ளது. உடனே வாருங்கள் என்று தகவல்களைத் தருகிறார்களாம்.

கடவுளுக்கோ, மனசாட்சிக்கோ, நியாயத்திற்கோ பயந்திருந்தால் இந்த நில அபகரிப்பு எனும் பகற்கொள்ளை நிகழ்ந்திருக்குமா? கோயில் நிலம்தானே, சாமி என்ன பார்த்துக் கொண்டா இருக்கப்போகுது; அது வெறும் பொம்மைதானே என்ற எண்ணமே சுயநலத்திற்கும், சொத்து சேர்க்கும் ஆசைக்கும் காரணம். சட்டத்தின் கரங்களுக்கும், காவல்துறையினருக்கும், நீதிமன்ற தண்டனைக்கும் பயந்தே அவற்றை ஒப்படைக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆக்கிர மிப்பாளர்கள் அத்தனை பேரும் அக்மார்க் ஆன்மீக ஆசாமிகள் தானே? கடவுள் மறுப்பாளராய் எவரும் இருக்க வாய்ப்பில்லை. சாமி கண்ணைக் குத்திடும், தெய்வகுற்றம், குலநாசம் என்றெல்லாம் கயிறு திரிப்பவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் கட்டாயம் சிறுசிறு கோயில்கள் இருக்கும். அப்போது ஆளும் கட்சிக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் அடையாளங்கள் இருக்கும். அத்தனையும் பாதுகாப்பு வளையங்கள்!

இங்கே நாம் பார்த்தது தமிழகத்தின் மேற்கே ஒரு சிறு பகுதி. இன்னும் நாடு முழுக்க நிலம் விழுங்கி மகாதேவன்கள் எத்தனைப்பேர்களோ?

ஆபத்து, அபாயம் என்றதும் சிவாயம் என்று குரல் கொடுத்தவர்கள் இருக்கிறார்களா என்பது கணக்கில் வரவில்லை!

கோயில் கருவறைக்குள் மட்டும் தான் என்றில்லை. அதன் வெளியேயும் சுரண்டல் தொழில் ஜாம்ஜாமென்று நடந்து கொண்டுதான் இருக்கிறது.

போலித்தனமாக அவர்கள் நம் பிக்கை வைத்திருக்கும் கற்பனைக் கடவுள்களுக்கே வெளிச்சம்.

தமிழ் ஓவியா said...


நாத்திகத்தை ஆன்மீகம் நாடும் முறை


- மு.வி.சோமசுந்தரம்

பீட்டர் ஹிக்ஸ்யுடன் சேர்ந்த மற்றொரு விஞ்ஞானிக்கும் சேர்த்து இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பீட்டர் ஹிக்ஸ் (றிமீமீக்ஷீ பிவீரீரீ) ஒரு நாத்திகர். 1960-ஆம் ஆண்டு ஹிக்ஸ், அணுவில் உள்ளடக்கி யத்துகள் உள்ளது என்ற உண்மையை அவரின் ஆராய்ச்சி மூலம் கூறினார். இதனை ஹிக்ஸ் போசோன் (பிவீரீரீ - ஙிஷீஷீஸீ) என்று அழைத்தார்.

ஒன்றுமே இல்லை என்ற கூற்றி லிருந்து மாறுபட்டு, அறிவு பூர்வமாக ஒன்று உண்டு என்பதை ஹிக்ஸ் - போசோன் கூறுகிறது. சுவிட்சர்லாந் தில் விஞ்ஞானிகள் நடத்திய பிரமிக்க வைத்த ஆழ்துளை ஆய்வுக்கூட சோதனை மூலம் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டது.

இந்த நிரூபணத்திற்காக நோபல் பரிசு பெற்றவர், ஹிக்ஸ் - போசோன் துகள் என்பதைக் கடவுள் துகள் என்று அழைப்பதை அவர் ஏற்றுக் கொள்ள வில்லை. விஞ்ஞானியாகவும் நாத்திகரு மான, ஹிக்கிளின் எதிர்ப்பு (கடவுள் துகள்) என்று கூறுவதற்கு நியாய மானதே.
தனிப்பட்ட குறைகளுக்காகவோ, தனிப்பட்ட பாதிப்புக்காகவோ (எனக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை, கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?) கடவுள் மறுப்பு கூறாமல், அழுத்தமான, அறிவு பூர்வ மான விவாதத்தின் அடிப்படையில் கடவுள் மறுப்பு கூறுவது, நாத்திகத் தத்துவமாக அமைகிறது. ஆன்மீக வழியில் உண்மையைத் தேடுவோர் கூறும் எல்லைக்கப்பால் என்ற கருத்து, இரண்டுக்கும் ஒரு பொதுத்தன்மை உள்ளதை உணர்த்துவதாக இருக்கிறது. எல்லை என்று ஒன்று இல்லாது, எப்பொழுதும் நீடித்துக்கொண்டே இருக்கும் உணர்வை எல்லைக்கப்பால் என்று கூறலாம். விஞ்ஞானிகள், அவர்களின் அறிவின் அடிப்படையிலும், ஆராய்ச்சிக் காரணத்தின் அடிப்படை யிலும் நாத்திகர்களாக விளங்குபவர்கள், எல்லை ஒன்று இல்லாத ஒன்றைத் தேடிச் செல்வதால், எல்லை கடந்த வர்கள் என்று அழைக்கப்படலாம். பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி, தன் கண்டுபிடிப்பு முழுக்க முடிவின் நிரூபணம் என்பதை விட இந்த உலகில் புதைந்து கிடக்கும் பலவற்றைத் தேடும் துவக்கம் என்று கூறிய முதல் மனிதர்.

கடவுள் துகள் கண்டுபிடிப்பில் அமைந்த பிரச்சினை, கடவுள் என்ற எல்லையைத் தாண்டி, லட்சுமணன் கோடு உள்ளது போல் நினைத்து, கடவுள் நம்பிக்கையாளர்களை ஒதுக்கியிருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையாளர்கள், கடவுளின் செயல்பாடுகளை அறிய வேண்டிய வேலை இல்லை. கடவுள் எண்ணத் துக்குக் கட்டுப்பட்டு போகவேண்டும். அனைத்தையும் கடவுளிடம் ஒப் படைத்து விடு என்பதாகும்.

நாத்திகத்தில் கூறுவது போல் விஞ்ஞானத்தில் கடவுள் இல்லை, எல்லை வரையறை கிடையாது. மணலில் கோடு போட்டு, அதைத் தாண்டிப் போகக்கூடாது என்று கூறுவது இல்லை, மணலில் தடை கோடு போடுவது, அதைத்தாண்டி போக வேண்டும் என்று தூண்டி விடுவதாக மாறி விடுகிறது. மேலும் செல்லத்தான் தூண்டிவிடும்.

இது போலவே, நாத்திக தத்துவம் உணர்வின் விரிவாக்கத்துக்கு எல்லை வகுப்பதில்லை. கல்லில் செதுக்கப் பட்டுள்ள விவாதத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகளைகேள்வி கேட்கக்கூடாது என்பதை ஏற்றுக் கொள்வதில்லை.

கடவுள் துகள், கடவுள் மறுப்புத் துகள் என்று பெயர் சூட்டப்படுமா னால் ஒரு வேளை ஹக்ஸ் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா: 24.10.2013 இதழின், ஜிலீமீ ஜீமீணீளீவீஸீரீ க்ஷீமீ கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழ் ஓவியா said...


ஓய்வறியா எம். தலைவர் திட்டம் வெல்க


எண்பத்தொரு வயதினிலும் இளமைத் தோற்றம்
எடுத்துவைக்கும் அடியிலெல்லாம் இனிமை தோன்றும்.
தொண்டு செய்து பழுத்தபழம் பெரியார் தன்னை
தொல்லுலக மக்களெல்லாம் போற்று கின்ற
பெரும்பணியை செய்துவரும் தலைவர், அய்யா
பேருருவ சிலைவடிக்கும்திட்டம் கண்டார்.
பெரும்வெற்றி அதில் கண்டார். நிகரே இல்லா
பெரியார் உலகத்தை, உலகே போற்றும்.

யார்க்குவரும் யார்க்குவரும் இந்த எண்ணம்
அகிலமெல்லாம் அகிலமெல்லாம் வியக்கும் வண்ணம்.
கூர்மதியால் தீட்டியவோர் திட்ட மன்றோ
பெரியார் கொள்கைதனை உலக மெல்லாம்
ஓர்வழியாய் கொண்டு செல்லும் நோக்க மன்றோ
ஓய்வறியா எம்தலைவர் திட்டம் வெல்க.
வேர்விட்டு வளர்ந்திடட்டும் பெரியார் கொள்கை
வெளிச்சத்தில் வாழ்ந்திடட்டும் உலக மக்கள்

தங்கத்தை தாவென்றால் தருவோம் நாங்கள்
தலைவணங்கா தலைவருக்கா இல்லை என்போம்.
எங்கள்மன மகிழ்ச்சியெல்லாம், தலைவர் என்றும்
இன்றுபோல் இளமையுடன் வாழ வேண்டும்
தங்குதடை இல்லாமல் பெரியார் கொள்கை
தரணியெங்கும் பரவி ஒளி வீச வேண்டும்
உங்கள்கை விரலசைவில் தமிழர் எல்லாம்
ஒன்றாகி ஓரணியில் நிற்க வேண்டும்.

- சி. சுப்பிரமணியன், (மாவட்ட தலைவர், சேலம்)

தமிழ் ஓவியா said...


தமிழைக் கொண்டாடும் ரஷியா

தமிழ், கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி இது. ஒன்று "ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது' என்ற தலைப்பில் ஓர் இணையதளம் கீழ்க்காணும் செய்தியை வெளியிட்டுள்ளது. "தமிழன் தமிழில் எழுதினாலோ பேசி னாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய் விட்டது நம் மொழி. ஆனால், தமிழ் மொழியின் அருமையை தமிழர்கள் அனைவரும் தெரிந்திருக்கிறார்களோ இல்லையோ, பிற நாட்டினர் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது.

அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது. உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக் கில் இல்லை. உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மிகச்சரியான, தகுதியான மொழியாக, வரலாற்றுச் சிறப்பும் இலக் கியச் செழுமையுமுள்ள மொழியான தமிழ்மொழி எங்களுக்குத் தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை' எனத் தமிழில் எழுதினோம்'' என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று. வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக் கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் பேசத் தயங்கும் தமிழர்கள் இனியாவது தமிழ்மொழியின் அருமை பெருமையை உணர்ந்தால் சரி!

- முகநூல் நண்பர் (தென்னரசு - செப்டம்பர் 2013, பக்கம் - 2)

தமிழ் ஓவியா said...


தாயாரின் இறுதிச் சடங்கில் மகனின் திருமணம்


அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது நல்லுடலின் முன்னிலையில் தாலி கட்டினார் மகன்.

இந்த திருமணம் மலேசியாவில் உள்ள பெர்சியாரான் ராஜா மூடா மூசா என்னும் இடத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நடந்தது என மலேசிய பத்திரிகைகள் தெரிவித்தன.

கோலக்கிள்ளானைச் சேர்ந்த நாராயணியின் (வயது 47) மகன் பி.சஞ்சீவிராஜனுக்கு இம்மாதம் 30-ஆம் தேதி அந்த ஊரில் உள்ள சிறீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

மகனி; திருமணத்துக்காக புடவைகள், அணிகலன் கள் வாங்குவதற்காக கணவர் பெருமாளுடன் நாராயணி கடந்த வாரம் சென்னை சென்றார். அங்கு அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

சென்னை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரது நல்லுடல் செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது.

அவரது அகால மரணத்தால் பெரும் அதிர்ச்சிக் குள்ளாகி இருந்த மணமகன் குடும்பத்தினர், மண மகளின் குடும்பத்தினருடன் கலந்து பேசி புரோகி தர்களின் ஆலோசனைகளையும் கேட்டு தாயின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.

காலையில் நல்லுடல் வீட்டுக்குக் கொண்டு வரப்பட் டதும் வரவேற்பறையில் உடல் வைக்கப்பட்டு சடங் குகள் நடத்தப்பட்டன. தாயின் சவப்பெட்டி அருகே தந்தை பெருமாள் நிற்க, மணமக்கள் இருவரும் பாதபூசை செய்தனர்.

பின்னர் இரு புரோகிதர்கள் மந்திரம் ஓத, மணமகள் சசிகலா (வயது 25) கழுத்தில் மணமகன் சஞ்சீவிராஜன் (வயது 28) தாலி கட்டி, சவப்பெட்டியை வலம் வந்தார். திருமணச் சடங்கு முடிந்ததும் நாராயணியின் நல்லுடல் அங் குள்ள இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் என ஏறக்குறைய 2,000 பேர் இச்சடங்கில் பங்கேற்றனர்.

மரணமடைந்த நாராயணிக்கு இரு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர். ஒரு மகளுக்கு மணமாகி விட்டது. சஞ்சீவி ராஜன் இரண்டாவது மகன்.

- தகவல்: ஆரூர் சபாபதி (சிங்கப்பூர்)

தமிழ் ஓவியா said...


அன்றிருந்த நிலை


1915-ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் பார்ப்பனரல்லாதாரின் சமூக நீதி இயக்கம் தோன்றிய காரணத்தையும், அவசியத்தையும் நன்கு உணர முடியும். 1915-இல் கல்வி இலாகாவில் இருந்த மொத்த உத்தியோகங்கள் 518. அந்த 518 இடங்களில் அமர்ந்திருந்த பார்ப்பனர் 399 பேர், கிறித்துவர்களும், ஆங்கிலோ இந்தியர்களும் 73 பேர், முஸ்லிம்கள் 18 பேர் (ஆதிதிராவிடர் உட்பட).

ஆம்! அவ்வளவு உத்தியோகங்களிலும் நாட்டுக்குரிய திராவிட மக்களுக்கு 18 உத்தியோகங்கள் தான்.

மக்கள் தொகையில் 100-க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர்களுக்கு 399 உத்தியோகங்கள் கிடைத்திருக்கையில், 100க்கு 81 பேர்களாக உள்ள - பார்ப்னரல்லாத இந்துக்களுக்கு 18 உத்தியோகங்கள் தான் கிடைத்திருந்தன.

பார்ப்பனர்களுக்கு 399 உத்தியோகங்கள், அவர்களைப் போல் 30 மடங்கு மக்கள் தொகை கொண்ட சமூகத்தாருக்கு 18 உத்தியோகங்கள் தான். இதற்குப் பெயர்தான் அரசாங்கக் கல்வி இலாகா அக்கால நீதிப்படி 1915-இல் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் 100-க்கு 7 அல்லது 8 பேரே ஆவர். அதில் 3 சதவீதம் உள்ள பார்ப்பனரோ தங்களில் 100-க்கு 75 சதவீதத்திற்குக் குறையாமல் படித்திருந்தனர். மற்ற மக்கள் எல்லோருமே 100-க்கு 5 சதவீதத்தினரே படித்திருந்தனர். பார்ப்பனரல்லாத இந்துக்களோ 100-க்கு 3 சதவீதத்தினர் தான் படித்திருந்தனர்.

(பேராசிரியர் பெருந்தகை அவர்களின் வகுப்புரிமை போராட்டம் நூலில் 13-ஆம் பக்கத்தில்)

- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...

சங்கர மடத்துக்கு சென்று இருந்தபோது
ஜெயேந்திரர், என்னிடம் தவறாக நடக்க முயன்றார்
பிரபல பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் பரபரப்பு புகார்



``சங்கர மடத்துக்கு சென்று இருந்தபோது ஜெயேந்திரர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்" என்று பிரபல பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் பரபரப்பான புகாரை கூறியிருக்கிறார்.

அறிக்கை

பிரபல பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் நேற்று திடீரென்று சென்னை திருவான்மிïரில் உள்ள தனது வீட்டில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

பேட்டியின்போது அவர் 6 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அநëத அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடந்தது என்ன?

உங்கள் சகோதரியிடமிருந்து சில உண்மை வார்த்தைகள்:

அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய பத்திரிகையாள, தொலைக்காட்சி நண்பர்களுக்கு வணக்கம்.

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் கைதான தினத்திலிருந்து அவரைப் பற்றிய பல செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த செய்திகளில் ஒன்றிரண்டில் என் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. `நடந்தது என்ன' என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி சேனல்களும், என் மீது அன்பு வைத்திருக்கும் பலரும் கேட்டு வருகிறார்கள்.

வாழ்க்கையில் பல சோதனைகளை கடந்து வந்திருக்கும் நான் இப்பொழுது தேவையற்ற பரபரப்புகளிலிருந்து ஒதுங்கி வாழவே ஆசைப்படுகிறேன். ஆனாலும், என்னைப் பற்றிய செய்திகளை நானே சொல்லாமல், ஆளாளுக்கு நினைத்தபடி எழுதுவதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ப தாலேயே உங்களையெல்லாம் சந்திக்கிறேன்.

உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். `அனுராதா ரமணன்' என்கிற தனிப்பட்ட நபராக என்னைப் பார்க்காமல், உங்கள் சகோதரி உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகளாகவே இவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.

சங்கரமடம் அழைப்பு

1992-ம் வருடம் சுபமங்களா என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து விலகி, `வளை யோசை' என்ற சொந்தப் பத்திரிகை நடத்தி நான் நஷ்டப்பட்டிருந்த நேரம் சங்கர மடத்தில் இருந்து ஒரு ஆன்மீக பத்திரிகை வெளிவர இருப்பதாகவும், அது தொடர்பாக என்னை ஜெயேந்திரர் பார்க்க விரும்புவதாகவும் அழைப்பு வந்தது.

தமிழ் ஓவியா said...


காஞ்சி சங்கர மடத்தின் மீதும், பரமாச்சார்யாள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் குடும்பத்தில் வளர்ந்தவள் நான். `கடவுளே அழைத்திருக்கிறார்' என்று சொல்லித்தான் என் தந்தை அனுப்பி வைத்தார். என்னை அழைத்துப்போக சங்கர மடத்திற்கு நெருக்கமாக இருந்த ஒரு பெண்மணி வந்தாள். அவளுடைய காரிலேயே காஞ்சிக்கு அழைத்துப் போனாள்.

முதல் சந்திப்பில் ஜெயேந்திரர் `அம்மா' என்ற ஆன்மீகப் பத்திரிகை பற்றி விவரித்து, அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்குமாறு என்னிடம் சொன்னார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். பத்திரிகை தொடர்பாக ஜெயேந்திரருடன் பேச ஒவ்வொரு முறையும் அந்த பெண்மணியே என்னைத் தன் காரில் காஞ்சிக்கு அழைத்துப் போவாள். பத்திரிகை தொடர்பாக முழுமையான ஈடுபாட்டுடன் பல யோசனைகளை நான் முன்வைத்தேன்.

மதிய நேரம்

பக்தர்களை சந்தித்து முடித்து ஜெயேந்திரர் ஓய்வெடுக்கும் மதிய நேரத்திலேயே ஒவ்வொரு முறையும் சந்திப்பு நடந்தது. அந்த அறையில் ஒரு மூலையில், காணிக்கையாக வந்த பணத்தை எண்ணிப் பிரித்து அடுக்கும் வேலையில் வேத பாடசாலை மாணவர்கள் மும்முரமாயிருப்பார்கள். மற்றபடி நான், என்னை அழைத்துப் போகும் பெண்மணி, ஜெயேந்திரர் என்று மூவர் மட்டுமே அந்த அறையில் இருப்போம். பத்திரிகை பற்றி பேசும் போது, யாருடைய இடைïறும் இருக்க வேண்டாம் என்று அந்த மாணவர்களை ஜெயேந்திரர் வேறு வேலையாக வெளியே அனுப்பி விடுவதும் உண்டு.

முதல் நான்கு சந்திப்புகளில் ஆன்மீகத்தைப் பற்றியே இருந்த ஜெயேந்திரரின் பேச்சு திடீரென்று ஆபாசத்திற்கு மாறியது. அதிர்ந்து போனேன். எழுதிக் கொண்டிருந்ததிலிருந்து நிமிர்ந்து பார்த்தால் மேலும் அதிர்ச்சி, என்னை அழைத்துப் போயிருந்த பெண்மணியும், அவரும் இருந்த நெருக்கமான நிலை கண்டு புயலால் தாக்கப்பட்டவள் போல் நிலை குலைந்து போனேன்.

காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இருந்தவர் கேவலமான காமுகன் பேசுவது போல் சில தகாத வார்த்தைகளைச் சொல்லி என்னைப் பற்றியும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அதிர்ச்சி

ஆத்திரமும், அதிர்ச்சியும் என்னை நடுக்க, பதறி எழுந்தேன். `ச்சீ, நீ ஒரு மனுஷனா?' என்று கத்தினேன். `இது உனக்குக் கிடைக்கும் பாக்கியம்' என்று அந்தப் பெண்ணும் ஏதோ உளறினாள். `வழக்கம் போல இவகிட்டயும் சொல்லித்தானே அழைச்சிட்டு வந்தே?' என்று அவர் அந்த பெண்ணிடம் கேட்டு `இல்லை' என்று அவள் சொன்னதால் அதிர்ந்தார். அவளைப் பலவாறு திட்டினார்.

உடனடியாக அந்த அறையை விட்டு வெளியேற முற்பட்டேன். அந்த பெண் என்னைவிட வலுவானவள். தடுத்து நிறுத்தினாள்.

`இதோ பார், சம்மதித்தால், உனக்கு எல்லா வசதிகளும் செய்து தருகிறேன். இது என் இருப்பிடம், சுற்றி இருப்பவர்கள் என் மனிதர்கள் கணவனை இழந்த பின்னும், பொட்டும், அலங்காரமுமாக சுற்றிக் கொண்டிருப்பவள் நீ. என்னைப் பற்றி வெளியே நீ சொன்னால், உன்னுடன் தொடர்பு வைத்திருப்பதாக பத்து ஆண்களை உனக்கெதிராக சாட்சி சொல்ல வைக்கும் செல்வாக்கு எனக்கு இருக்கிறது' என்று ஜெயேந்திரர் சொல்ல, திரும்பிப் பார்க்காமல் வெளியேறினேன். அந்த பெண் என் பின்னாலேயே வந்து சமாதானம் செய்ய முற்பட்டாள்.

அழுகை
உள்ளே இருக்கும் மனிதரின் உண்மையான முகம் தெரியாமல், வெளியே காத்திருக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்களைப் பார்த்ததும், அழுகை குமுறிக்கொண்டு வந்தது. அந்தப் பெண்ணிடம் பேசக்கூடப் பிரியப்படாமல், அவள் காரைத் தவிர்த்து, பஸ் பிடித்து சென்னை திரும்பினேன்.

தமிழ் ஓவியா said...

வீட்டிலும் யாரிடமும் எதுவும் பேசவில்லை. அன்றிரவு தூக்கம் போனது. பெண் எழுத்தாளராக இருந்து கொண்டு, பெண்களைக் கேவலப்படுத்தும் மனிதர்களைப் பற்றி வெளியே சொல்லாமல் மறைப்பதா என்று தவிப்பு ஒரு பக்கம், இந்த உண்மை வெளிப்பட்டால், ஒரு தனி மனிதனின் கேவலமான நடவடிக்கைகளால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் மிகச்சிறந்த பாரம்பரியம் கொண்ட சங்கர மடத்தின் மேன்மையே குலைந்து, நாட்டிலேயே பெரும் கலவரம்மூள நான் காரணமாகி விடுவேனோ என்ற தவிப்பு இன்னொரு பக்கம் என்று மனதில் போராட்டம்.

மறுநாளே அந்தப் பெண் என் வீடு தேடி வந்தாள். வாய்க்கு வந்தபடி கத்தினாள். என்னைக் கன்னத்தில் அறைந்து என் பெற்றோரையும் தாக்கினாள்.

அடிபட்டு பொறி கலங்கிப்போன நான், உடனடியாக எனக்கு சிநேகிதியாக விளங்கிய ஒரு பெரிய பெண் போலீஸ் அதிகாரியை சந்தித்து உடைந்து அழுதேன். நடந்தவற்றைக் கூறினேன். துடித்துப் போனார். `எழுத்துப் பூர்வமாக புகார் கொடு. உடனடியாக சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன்' என்று ஆதரவாகச் சொன்னார்.

ஆனால், என் பெற்றோரைப் போலவே கோடிக்கணக்கானவர்கள் மதிக்கும் சங்கர மடத்தின் கவுரவத்தையே பாதிக்குமே என்று புகார் கொடுக்கத் தயங்கினேன். போலீஸ் பாதுகாப்பை மட்டும் வேண்டினேன். உடல் ரீதியாக அடிபட்டதிலும், மன ரீதியாக பெரும் கொந்தளிப்பிற்கு ஆளானதிலும், அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கேயே செயலிழந்து விழுந்தேன். உடனடியாக ஒரு வாகனம் வரவழைத்து என்னை போலீஸ் அதிகாரியான அந்த சிநேகிதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பக்கவாதம்

என் இடது கால் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு விட்ட தாக மருத்துவர்கள் சொல்லி சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்தனர். தனிமையில் என் அம்மா வின் கழுத்தைக் கட்டிக் கொண்டு உண்மைகளை அவளிடமும் சொன்னேன். மிகுந்த அதிர்ச்சிக் குள்ளானாள். பொங்கி அழுதாள்.

கிட்டத்தட்ட அடுத்த ஒரு வருடத்திற்கு எந்தப் பத்திரிகைக்கும் எழுத முடியாதபடி என் உடல் நிலை மோசமாகவே இருந்தது.

இதற்கிடையில் ஜெயேந்திரரிடமிருந்து மறுபடி மிரட்டலும், கேட்கும் பணம் தருவதாக பேரங்களும் தொடர்ந்தன. எதையும் நான் பொருட்படுத்தவில்லை.

ஜெயேந்திரர் கைப்பட எழுதியதாக ஒரு மன்னிப்புக் கடிதத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்டிய அவருடைய உதவியாளர் அதைக் கையோடு வாங்கிப் போய் விட்ட சம்பவமும் நடந்தது.

தமிழ் ஓவியா said...


மன்னிப்பு

என்னிடம் நேரில் மன்னிப்பு கேட்க விரும்புவதாக ஜெயேந்திரரிடமிருந்து மீண்டும் மீண்டும் தூது வர, மிகுந்த வற்புறுத்தலுக்குப்பின் என் நெருங்கிய உறவினர் துணை வர சென்னையில் தங்கியிருந்த ஜெயேந்திரரை சந்திக்க சம்மதித்தேன்.

என்னை சந்தித்ததும், "போதாத காலம். என் புத்தி பிசகி விட்டது. மன்னித்து விடு. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று ஜெயேந்திரர் கேட்டார்.

"காவியைத் துறந்துவிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதி என்ற பதவியிலிருந்து இறங்கி சாதாரண மனிதராக வெளி நடப்பு செய்யுங்கள். கடவுள் உங்களை மன்னிப்பார்" என்றேன்.

ஆனால், என் காதுபட அங்கே வந்திருந்த வேறொரு வி.ஐ.பி. பெண்ணை வர்ணித்து அவர் தரக்குறைவாக பேசியதும் கொதித்துப் போனது மனது.

உண்மைத் தொடர்

ஜெயேந்திரர் துறவிக் கோலத்தைத் துறக்கவில்லை. எத்த னையோ அப்பாவிக் குடும்பங்களும், குறிப்பாய்ப் பெண்களும் ஜெயேந்திரர் போன்றவர்களின் உண்மையான முகத்தைத் தெரிந்து கொள்ளாமல், ஆபத்திற்குள்ளாவதைத் தடுக்கும் பொறுப்பு எனக்கிருப்பதாக உள் மனம் அரித்துக் கொண்டேயிருந்ததால், மிகுந்த யோசனைக்குப் பிறகு, ஒரு பத்திரிகையில் என் பெயரைச் சொல்லாமல் ஒரு உண்மைத் தொடர் எழுதத் துவங்கினேன். ஜெயேந்திரருக்கு சமூகத்தில் இருந்த செல்வாக்கு காரணமாக அத்தொடர் முழுமையாக வெளிவரும் முன், நிறுத்தப்பட்டது.

சமூகத்தில் எனக்கு அவரால் தொடர்ந்து பல இன்னல்கள் இழைக்கப்பட்டன. என் உயிருக்கே ஆபத்து வரும் என்று மிரட்டல்கள் வந்தன. என் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த சில பெரிய மனிதர்களின் நல்லெண்ணத்தால்தான் நான் உயிர் பிழைத்திருந்தேன் என்று கூட சொல்வேன். அவர்களுக்கு என்றைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

என் மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பும் வரையிலாவது உயிர் பிழைத்திருக்க வேண்டுமே என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தான் வாழ்ந்திருந்தேன்.

பக்குவப்பட்டது

யோக வகுப்புகளுக்குப் போய் வந்து என் மனம் மேலும் பக்குவப்பட்ட ஒரு கட்டத்தில், ஜெயேந்திரர் ஒன்றும் தெய்வப் பிறவி அல்ல, சாதாரண மனிதன் தானே என்று, அந்த தனி மனிதனை மன்னித்து மறக்கும் நிலையை ஏற்றேன்.

பெண்களுக்கு துணையிருக்க வேண்டிய பெண் தெய்வங்களே ஸ்ரீ ஜெயேந்திரரைப் போன்றவர்களின் அநியாயங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா என்று கோவில்களில் குமுறி அழுதிருக்கிறேன். தெய்வங்கள் இப்போது ஜெயேந்திரரை வேறு வழியில் பொதுவிற்கு கொண்டு வந்திருக்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்கு எதிராக எதையும் சொல்லி விடாதே என்ற மிரட்டல்கள் ஒரு புறம், உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள் என்று வற்புறுத்தல்கள் ஒருபுறம்.

மறுபடியும் சொல்கிறேன். இந்த மேடையை ஜெயேந்திர ருக்கு எதிராக குற்றம் சுமத்த நான் பயன்படுத்தியதாக நினைக்க வேண்டாம். யாரிடமிருந்தும் எந்த ஆதாயத்தையும் நான் எதிர் பார்க்கவில்லை. எந்த நீதிமன்றத்திலும் நான் அவர் மீது வழக்கு தொடரவில்லை.

தமிழ் ஓவியா said...

தவறான தகவல்கள்

எதைப்பற்றியும், சொல்லாமல், அமைதியாக இருப்பதையே நான் விரும்பினேன், விரும்புகிறேன். ஆனால் ஜெயேந்திரருடன் என்னைத் தொடர்புபடுத்தி ïகங்களின் அடிப்படையில் தவறான தகவல்களை சில பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்ததால் இந்த தன்னிலை விளக்கத்தை நான் தர முடிவு செய்தேன்.

ஜெயேந்திரரையும், என்னை காஞ்சிக்கு அழைத்துப் போன பெண்ணையும் மேலும் இழிவுபடுத்தும் சில விவரங்களை நான் இங்கே முழுமையாக சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு உறுதியை மட்டும் என்னால் தர முடியும். நான் சொன்னவை அத்தனையும் பொய்க்கலப்பற்ற சத்திய வார்த்தைகள்.

உங்கள் மனதில் எழுகின்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த அறிக்கையிலேயே விடைகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன். தயவு செய்து என்னைத் தொடர்ந்து வேறு கேள்விகள் கேட்டு துரத்தாதீர்கள். ஏற்கனவே மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கும் என்னை நிம்மதியாக இருக்கவிடுங்கள்.

துணிச்சல்

என்னைப் போல பாதிப்புக்குள்ளாகி வெளியே சொல்ல முடியாத வேறு சில பெண்களும் நிச்சயம் இருப்பார்கள். அவர்களும் துணிச்சல் கொண்டு பிற்பாடு வெளியே வரக்கூடும்.

ஒரு தனிப்பட்ட மனிதரின் மோசமான அணுகுமுறை பற்றி நான் வெளிப்படையாக சொல்லியிருக்கிறேனே தவிர, நான் பெரிதும் மதிக்கிற காஞ்சி மடத்தையோ, இந்துக்களின் உணர்வுகளையோ அவமதிக்கும் எந்த நோக்கமும் சிறிதளவும் எனக்கு இல்லை.

பத்திரிகைகளையும் என்னையும் பிரித்து பார்க்க முடியாத படி, என் வாழ்வின் முக்கியத் திருப்பங்களில் எல்லாம் பத்திரிகைகள் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. இப்போதும் உங்கள் குடும்பத்தில் ஒரு சகோதரியாகவே என்னை நினைத்து மேற்கொண்டு என்னைப்பற்றிய அவ தூறுகளை எழுதாமல் நிறுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அனுராதா ரமணன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

கண்ணீர்

இந்த அறிக்கையை முழுமையாக அனுராதா ரமணன் நிரு பர்கள் மத்தியில் வாசித்தார். அப்போது இடைஇடையே அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கொலை செய்ய முயற்சி

கேள்வி:- இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு நாட்கள் சொல்லவில்லை?

பதில்:- சங்கரமடத்தின் கவுரவத்தை பாதிக்கும் என்று புகார் கொடுக்க தயங்கினேன். அதோடு தொடர்ந்து மிரட்டல்கள். என்னை கொலை செய்ய நடந்த முயற்சிகள் எனது மகள்களின் எதிர்காலத்தை நினைத்து போலீஸ் பாதுகாப்பை மட்டும் வேண்டினேன்.

அதோடு எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு ஒரு கால், கை, வாய் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டேன். அங்கும் காஞ்சி மடத்து ஆட்கள் 2 பேர் வந்து என்னை தேடினார்கள்.

எனக்கு ``டிரிப்" ஏற்றப்பட்ட போது அதில் வேறு மருந்தை சேர்த்து கொடுத்து என்னை கொலை செய்ய முயன்றனர். அதனால் அங்கு கொடுத்த மருந்து, மாத்திரைகளை சாப்பிடவில்லை. சிகிச்சை அளிக்க வேண்டாம் என்றும் மறுத்து விட்டு உடனடியாக அந்த ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி விட்டேன். என்மீது லாரியை ஏற்றவும், எனது மகள்கள் மீது ஆசிட் வீசவும் தயாராக இருந்தனர்.

போலீசில் வாக்குமூலம்

கேள்வி:- ஜெயேந்திரர் நடந்து கொண்டது பற்றி இப்போது போலீசில் புகார் செய்துள்ளீர்களா?

பதில்:- போலீஸ் சூப்பிரண்டு பிரேம்குமார், இன்ஸ்பெக்டர் சரசுவதி ஆகியோர் என்னிடம் விசாரித்தனர். அவர்களிடம் நடந்த விஷயம் பற்றி வாக்குமூலம் கொடுத்துள்ளேன். ஜெயேந்திரர் பற்றி தோண்ட தோண்ட பல விஷயங்கள் வெளிவரும்.

யார் அந்த பெண்?

கேள்வி:- காஞ்சிக்கு ஜெயேந்திரரிடம் உங்களை அழைத்து சென்ற பெண் யார்?

பதில்:-அவரை பற்றி சொல்ல விரும்பவில்லை. நிச்சயம் கடவுள் தண்டனை உண்டு. நடந்த சம்பவத்துக்கு சாட்சி இல்லை. 4 சுவர்களுக்குள் நடந்தது பற்றி சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று ஜெயேந்திரர் என்னிடம் கூறினார்.

இதை காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில் சொல்லி கதறி அழுதேன். இந்த சம்பவத்துக்கு நீதி கிடைத்த பிறகு தான் உனக்கு அபிஷேகம், எனக்கு அலங்காரம் என்று சொல்லி விட்டு வந்தேன். 12 வருடங்களுக்கு பிறகு இப்போது உண்மை வெளிவந்துள்ளது. நான் சொன்னது அத்தனையும் சத்தியம்.

இவ்வாறு அனுராதாரமணன் கூறினார்.

பாதுகாப்பு அளிக்க வேண்டும்

அப்போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

``ஜெயேந்திரர் மீது பாலியல் புகார் கூறியுள்ள அனுராதா ரமணன் எங்களது முழு ஆதரவை கேட்டுள்ளார். அவருடைய உயிருக்கும், உடமைக்கும் தமிழக அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த பிரச்சினையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விïகம் அமைத்து செயல்படுவோம்" என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் கூறினார்கள். 30-11-2004

தமிழ் ஓவியா said...

பல்டி அடித்த சாட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை
ஜெயேந்திரனைக் காப்பாற்ற அரசு தரப்பு தீவிரம்
அம்பலப்படுத்துகிறார் காவல்துறை அதிகாரி

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பார்ப்பனர் காஞ்சி ஜெயேந்திரன் “தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி” என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை கடந்த 23 ஆம் தேதி தொடங்கியுள்ளார். ஆவடி இரவிச்சந்திரன் என்ற தொழிலதிபர் கட்சியின் தலைவராம். மதமாற்றத் தடை சட்டம், பசுவதை தடை சட்டம், கோயில் நிர்வாகத்தை அரசிடமிருந்து எடுத்தல், மக்களை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்தி, தூய்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்குதல் ஆகியவை இக்கட்சியின் கொள்கைகளாகும் என்று ஜெயேந்திரன் கூறியுள்ளார். இக்கட்சி உடனடியாக தேர்தலில் ஈடுபடாது என்றும் கூறியுள்ளார். மதத் தலைவர்கள், அரசியல் கட்சி தொடங்குவதில் தவறு இல்லை என்று ‘துக்ளக்’ சோ கூறி, கட்சியை வரவேற்றுள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்ற மற்றொரு பார்ப்பனரான பா.ஜ.க. தலைவர் இல. கணேசன், இந்த ஆன்மிக கட்சி, பா.ஜ.க. கொள்கைகளோடு இணைந்து நிற்கிறது என்றார். சீக்கிய பார்ப்பனரான மேனகா காந்தி, முன்னாள் அய்.ஏ.எஸ். பார்ப்பன அதிகாரி சந்திரலேகா ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்று ஜெயேந்திரன் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

சங்கர் ராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காஞ்சி ஜெயேந்திரனைக் காப்பாற்றுவதற்கு தமிழக காவல்துறையே முயற்சி செய்து வருகிறது. சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறி வருகின்றனர். வழக்கை விசாரித்த முக்கிய காவல்துறை அதிகாரியான எஸ்.பி. சக்திவேலு என்பவரையே சங்கராச்சாரிக்கு எதிராக சாட்சி கூற வேண்டாம் என்று தமிழக காவல்துறை அதிகாரிகள் கூறியதை எதிர்த்து எஸ்.பி. சக்திவேலு, உயர்நீதிமன்றம் வந்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் அவர் சார்பாக கழக வழக்கறிஞர் எஸ்.துரைசாமி வழக்கு மனுதாக்கல் செய்தார். வழக்கறிஞர்கள் எஸ். குமாரதேவன் மற்றும் எஸ்.சி.வி. விமல்பானி பெயர்களில் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தயாரித்த மனுவில் காவல்துறை அதிகாரி சக்திவேலு கூறியுள்ள விவரங்கள்:

காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் நிர்வாகி சங்கர்ராமன், கோயிலுக்குள்ளேயே அடையாளம் தெரியாத 5 நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் காஞ்சி ஜெயேந்திர சரசுவதி எனும் சுப்பிரமணியனுக்கு தொடர்பு இருப்பதாக புலனாய்வில் தெரியவந்தது. உடனே ஆந்திர மாநிலம் அய்தராபாத் மகபூப் நகரில் பதுங்கி இருந்த காஞ்சி ஜெயேந்திரனை, கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த நானும், மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த பிரேம்குமாரும் கைது செய்து, காஞ்சிபுரம் பெருநகர நீதிமன்றத்தில் நிறுத்தினோம். ஜெயேந்திரன் நீதித் துறை காவலில் வைக்கப்பட்டார். பின்னர் ஜெயேந்திரன் காவல்துறை விசாரணையின்போது பல உண்மைகளை ஒப்புக் கொண்டார்.

2001 ஆம் ஆண்டு ஜெயேந்திரன் சீனாவுக்கு செல்ல திட்டமிட்டதை சங்கரராமன் தான் - அது மடத்தின் சம்பிரதாயத்துக்கு விரோதம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை செய்தார். அதைத் தொடர்ந்து ஜெயேந்திரன் மடத்துக்கு சொந்தமான நிலத்தை மிகக் குறைந்த விலையில் விற்க முயன்றபோது சங்கர்ராமன், இந்து அறநிலையத் துறை ஆணை யருக்கு புகார் கடிதம் எழுதினார். (27.12.2001) ஜெயேந்திரனின் இந்த முறைகேடான நடவடிக்கையால் மடத் துக்கு ஒரு கோடியே 13 லட்சத்து 55 ஆயிரத்து 766 ரூபாய் இழப்பு ஏற்பட் டுள்ளதாகவும், எனவே ஜெயேந்திரனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தி இருந்தார்.

காஞ்சி ஜெயேந்திரனும் அவரது ‘ஜூனியரான’ விஜயேந்திர சரசுவதியும் மடத்துக்குள் ‘ஒழுக்கக் கேடான’ வாழ்க்கை நடத்தி வருவது பற்றி, மீண்டும் அறநிலையத் துறை ஆணையருக்கு ‘சோம சேகர கனபாடிகள்’ என்ற பெயரில் சங்கர்ராமன் ஒரு கடிதம் எழுதினார் (21.5.2002). காஞ்சி ஜெயேந்திரன் ஒரு பெண்ணுக்கு, அவரே கைப்பட எழுதிய காதல் கடிதமும், பெண்களுடன் ஜெயேந்திரன் பாலியல் உறவு கொள்ளும் படங்களும், தம்மிடம் இருப்பதாக சங்கர்ராமன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைத் தவிர, திருமதி உஷா என்ற பெண்ணிடம் காவல்துறை விசாரணை நடத்தியபோது ஜெயேந்திரன் செல்பேசி வழியாக பல்வேறு பெண்களுடன் பாலியல் உறவு குறித்து பேசுவது வழக்கம் என்ற விவரங்கள் கிடைத்தன.

தமிழ் ஓவியா said...

சங்கர்ராமன் சோமசேகர கனபாடிகள் என்ற தனது புனைப் பெயரில் அறநிலையத் துறை ஆணையருக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் (26.6.2003) பல தகவல்கள்இடம் பெற்றிருந்தன. அக்கடித்தில் இருந்த வாசகங்கள்:

“ஏற்கனவே ஜெயேந்திரனுக்கு ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு இருந்ததை நான் பலரது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன். அது பழைய கதை. இப்போது புதிய கதை ஒன்றை நான் கூறுகிறேன். காஞ்சியில் ஜெயேந்திரனுக்கு ஒரு ‘வைப்பாட்டி’ இருக்கிறார். இது எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஜெயேந்திரனின் வைப்பாட்டிகளில் இவர்தான் ‘சீனியர்’. காஞ்சிபுரம் நகரம் முழுமைக்கும் இவர்களின் உறவு பற்றி தெரியும். மடத்துக்குள்ளேயே ஜெயேந்திரன், தனக்கு தேவைப்படும்போது, இந்த பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்வார். அந்தப் பெண்ணின் கணவர் கண் முன்னே இது நடக்கும். கணவர் கவலைப்படமாட்டார். ஜெயேந்திரன் அறைக்கு அடுத்த அறை அவரது உதவியாளர் ரகுவின் அறை. ரகு அறைக்கதவை பாதி திறந்த நிலையிலேயே வைத்துக் கொண்டு ஜெயேந்திரருக்கு நெருக்கமான அதே பெண்ணிடம் தகாத உறவு கொண்டிருந்தபோது, கதவைத் திறந்த ஜெயேந்திரர் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்து, விளக்கை அணை என்று கூச்சல் போட்டார். உதவியாளர் ரகு, ஜெயேந்திரனின் கூச்சலை காதிலே போட்டுக் கொள்ளவே இல்லை.

பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு, பிறகு அந்தப் பெண்களை மடத்தின் செலவிலேயே சில அப்பாவிகளைப் பிடித்து திருமணம் செய்து வைத்து விடுவார்கள். (இப்படி ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவருமே தகாத உறவு கொண்டிருந்த பெண்கள், அவர்களால் கருவுற்ற பெண்கள், பிறகு அவர்களுக்கு கணவர்களாக திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் எல்லோருடைய பெயர்களையும் அந்தக் கடிதத்தில் சங்கர்ராமன் குறிப்பிட்டிருந்தார்.) அடையாறில் ‘ஜூனியர்’ விஜயேந்திரர் பாலியல் வியாதிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்.”

தமிழ் ஓவியா said...


இப்படி பல தகவல்களை சங்கர்ராமன் அறநிலையத் துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் விரிவாக விளக்கியிருந்தார்.

இவற்றால் சங்கர்ராமன் மீது ஜெயேந்திரனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இத்தகைய ஒழுங்கற்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால், மக்களிடம் உண்மைகளை அம்பலப்படுத்துவேன் என்று சங்கர்ராமன் இறுதியாக ஜெயேந்திரனுக்கே கடிதம் எழுதி (16.7.2004) இறுதி எச்சரிக்கை செய்தார். தொடர்ந்து ‘தினமலர்’ நாளேட்டின் ஆசிரியருக்கு இந்த ஒழுக்கக் கேடுகளை விளக்கி சங்கர்ராமன் ஒரு கடிதம் எழுதினார் (14.8.2004) - ‘தினமலர்’ ஆசிரியர் அந்தக் கடிதத்தை தனது பத்திரிகையில் வெளியிடுவதற்கு பதிலாக ஜெயேந்திரனிடமே நேரில் கொடுத்து விட்டார். இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி விடுமாறும் கேட்டுக் கொண்டார். கடைசியாக ஜெயேந்திரனுக்கு சங்கர்ராமன் தனது வழக்கமான புனைப் பெயரில் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதினார்.

“உங்களுடைய ஒழுக்கக் கேடான நடவடிக்கைகள் மடத்தின் பெயரை பாழாக்கிவிட்டது. மடத்தின் பெயரைக் காப்பாற்ற தியாகம் செய்வதுகூட தவறு கிடையாது. இப்போது நான் தியாகத்துக்கு தயாராகி விட்டேன். உம்முடைய அனைத்து ஒழுக்கக் கேடுகளையும் சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகளையும் வெளிக் கொண்டு வரப் போகிறேன். எங்கெங்கே உமக்கு தொடர்பு உண்டு என்பது எனக்கு தெரியும். விஜயவாடா, பம்பாய், திருப்பதி, இலியாத்திராங்குடி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள தொடர்புகள். கல்லூரி பெண்கள் விடுதியில் நடந்த கொலை, ரகுவின் ஒழுக்கக்கேடுகள் எல்லாவற்றையும் வெளியிடப் பேகிறேன். தேவைப்பட்டால் நீதிமன்றம் வழி யாகவும் அம்பலமாக்குவேன்” - என்று அந்தக் கடிதத்தில் எச்சரித்திருந்தார்.

அந்தக் கடிதம் - ஜெயேந்திரனிடம் வந்தவுடன் (30.8.3004) ஆத்திரத்தின் எல்லைக்குப போன ஜெயேந்திரன், ரவி சுப்பிரமணியத்தை அழைத்தார். கிருஷ்ணசாமி என்கிற அப்புவையும், கதிரவனையும், உடனே அழைத்து வர ஆணையிட்டார். இதற்காக 50 லட்சம் பணம் தர ஜெயேந்திரன் முன் வந்தார். மடத்தின் கணக்காளர் சுந்தரேச அய்யரை அழைத்து மடத்தின் கணக்கி லிருந்து அந்தத் தொகையை ரவி சுப்ரமணியத்திடம் தருமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அப்பு கதிரவனிடம் சங்கர்ராமனின் கதையை முடித்துவிட உத்தரவிட்டார். அதன்படி கதிரவனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்கள் 3.9.2004 மாலை 5.45 மணிக்கு கோயில் வளாகத்துக்குள்ளேயே சங்கர் ராமனை கொலை செய்தார்கள்.

என்னுடைய (சக்திவேலு) புலனாய் வில் பல உண்மைகள் தெரிய வந்தன. அதாவது கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன், ஜெயேந்திரன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்துமே உண்மை. பல பெண்களுடன் அவர் தகாத உறவு கொண்டிருந்ததும் உண்மை. உதாரணத்துக்கு ஒன்றை கூற வேண்டுமானால், திருவரங்கத்தில் உள்ள திருமதி உஷா பற்றிக் கூறலாம் அந்தப் பெண்ணிடம் விடியற்காலை 4 மணியிலிருந்து 5 மணி வரை அடிக்கடி செல்பேசியில் பாலியல் பற்றி ஜெயேந்திரர் பேசுவது வழக்கம். இதற்கான சான்று ஆவணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுடன் தனக்கிருந்த முறைகேடான உறவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு மடத்தின் பணத்தை அவ்வப்போது ஜெயேந்திரன் கொடுத்து வந்துள்ளார்.

அனுராதா ரமணன் என்ற பிரபல தமிழ் எழுத்தாளரிடம் தகாத உறவுக்கு ஜெயேந்திரர் முயன்றதை, அந்தப் பெண்ணே பத்திரிகையாளர்களிடம் அம்பலப்படுத்தினார். அவரிடம் வாக்குமூலம் பெற்று, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன். ஜெயேந்திரருக்கு உலகம் முழுதும் சீடர்கள் உண்டு. அனுராதா ரமணன் கண்பார்வையிலேயே வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்ட ஜெயேந்திரன், அதற்குப் பிறகு, குளிக்கக் கூட போகாமல், தன்னுடைய பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியதை நேரில் பார்த்ததாக அனுராதா ரமணன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

நான் (சக்திவேலு) இந்த வழக்கில் 500 சாட்சிகளை விசாரித்துள்ளேன். ஆயிரக்கணக்கான சான்று ஆதாரங்களைத் திரட்டியுள்ளேன். அனைவருமே தாமாக முன் வந்து சாட்சியம் அளித்தார்கள். எனவே அவர்கள் ‘பல்டி’ அடித்து பிறழ்சாட்சியாக மாறுவதற்கான வாய்ப்புகளே இல்லை. இந்த வழக்கில் 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இரண்டாவது குற்றவாளியான ரவி சுப்ரமணியம், ‘அப்ரூவர்’ ஆனார். அவர் அளித்த வாக்குமூலம் (இ.பி.கோ. 164-வது பிரிவின் கீழ்) நீதிபதி முன் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் முடிவில் குற்றத்தை ஒப்புக் கொண்டதற்காக அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. (இ.பி.கோ.307வது பிரிவின் கீழ்) செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை ஜெயேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனுபோட்டு கேட்டுக் கொண்டதற்காக வேறு மாநிலமான புதுவைக்கு மாற்றப்பட்டது. 2005 ஆம் ஆண்டிலிருந்து புதுச்சேரி நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

வழக்கு விசாரணை நடக்கும்போதே நான் (சக்திவேலு) ஓய்வு பெற்று விட்டேன். அதன் பிறகு, அரசு தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக என்னைக் கலந்து ஆலோசிப்பது இல்லை. ஜெயேந்திரனுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால், வழக்கைக் குலைக்க முயற்சிப்பார் என்பதால்தான், இ.பி.கோ.164 ஆவது பிரிவின் கீழ் சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்தோம். சாட்சிகளைக் கலைத்தாலும்கூட வாக்கு மூலங்கள் உறுதியாக நிற்கும் என்பதால்தான் இந்த ஏற்பாட்டை செய்தோம். அப்ரூவராக மாறி வாக்கு மூலம் தந்த ரவி சுப்ரமணியமே பல்டி அடித்து பிறழ் சாட்சியாகிவிட்டது, எனக்கு அதிர்ச்சியளித்தது. இ.பி.கோ. 164 பிரிவில் வாக்கு மூலம் தந்தவர், தனது கருத்தை மாற்றிக் கொள்வது குற்றம். பொய்யான வாக்குமூலம் தந்தமைக்காக அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை; அரசு தரப்பினரே குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரனுடன் சேர்ந்து கொண்டு சாட்சிகளை குலைத்து விட்டார்கள் என்ற உண்மை எனக்கு தெரிய வந்தது.

இதுவரை விசாரிக்கப்பட்ட 176 சாட்சிகளில் 76 பேர் பிறழ்சாட்சிகளாகி பல்டி அடித்து விட்டனர். அதில் அப்ரூவர் ரவிசுப்பிரமணியமும் ஒருவர். இதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஜெயேந்திரன் கைது செய்யப்பட்டது ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில். அதற்குப் பிறகு ஆட்சி மாறியது; ஆட்சி மாறிய பிறகே ஜெயேந்திரன் மீதான வழக்கு விசாரணை தொடங்கியது. சாட்சிகளாக விசாரிக்கப்பட்ட அரசு அதிகாரிகளே பிறழ்சாட்சிகளாகி விட்டனர். வழக்கு விசாரணைக்கு அரசோடு ஒத்துழைக்க அதிகாரி மறுத்தால், அவர் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அரசுப் பணியில் இருந்தால் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது நடக்கும் ஆட்சி, பல்டி அடித்த சாட்சிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்ரூவராக மாறியவரே பிறழ் சாட்சியானபோதும்கூட இ.பி.கோ. 308வது பிரிவின் கீழ் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்கவில்லை.

இந்த வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியே நான் தான். அந்த அடிப்படையில் நான் தயாரித்த வழக்கு டைரியின் அடிப்படையில் என்னை விசாரணைக்கு அழைத்தாக வேண்டும். 500-க்கும் மேற்பட்ட சாட்சிகளின் பதிவுகள் இடம் பெற்றுள்ள வழக்கு டைரி, ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்டது. ஆனால், கடந்த மார்ச் 14 ஆம் தேதி வரை எனக்கு அரசு தரப்பிலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. ஆனால், அழைப்பை ஏற்காமல் நான் தவிர்த்து வருவதாக பத்திரிகைகளுக்கு தவறான தகவல் தந்து மார்ச் 23 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்துள்ளனர். தேர்தலுக்கு முன் வழககை முடித்து ஜெயேந்திரரைக் காப்பாற்றுவதில் காவல்துறை அவசர அவசரமாக செயல்பட்டு வருகிறது.

தமிழ் ஓவியா said...

இந்த நிலைமையை அறிந்தவுடன், நான் (சக்திவேலு) காஞ்சிபுரத்தில் வழக்குக்கு பொறுப்பாக உள்ள மாவட்ட காவலதுறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு, நான் சாட்சி சொல்வதற்கு, எனது வழக்கு டைரியைத் தருமாறு கேட்டேன். அதைப் படித்தால் தான் மறந்து போனவற்றை நினைவூட்டிக் கொள்ள முடியும். ஆனால், நான் தயாரித்த வழக்கு டைரியை என்னிடம் கையளிப்பதற்கு அந்த அதிகாரி மறுத்துவிட்டார். விசாரணைக் கூண்டில் ஏறி நிற்கும்போது வழக்கு டைரியைக் காட்டுவோம் என்றும், அரசு எடுத்துள்ள நிலைக்கு (ஜெயேந்திரரை காப்பாற்றுவது) ஒத்துழைக்க மறுத்தீர்களேயானால், உங்களை பிறழ் சாட்சியாகவே கருதி, வழக்கை முடித்து விடுவோம் என்றும் கூறினார்.

இந்த நிலையில் அரசு தரப்பின் இந்த நடவடிக்கைகளுக்கு நான் உடன்பட விரும்பவில்லை. பெயரளவில் கூண்டில் ஏறி சாட்சியாக நிற்க விரும்பவில்லை. நான் சாட்சியாக விசாரிக்கப்படுவதற்கு முன்பு பிறழ் சாட்சி கூறியவர்கள் மீதும், ‘அப்ரூவராகி’ பிறகு மாறியவர் மீதும் அவர்களை அழைத்து, ஏற்கனவே இ.பி.கோ. 164 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட அவர்களது சாட்சியங்கள் இ.பி.கோ.161 ஆவது பிரிவின் கீழ் கூறிய சாட்சியத்திலிருந்து முரண்பட்டு நிற்பதை பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் தயாரித்த வழக்கு டைரியை முழுமையாக நான் படிப்பதற்கு உரிய அவகாசம் தர வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விடுவிப்பதற்கு அரசு தரப்பு ஆர்வம் காட்டி செயல்படுகிறது. இத்தனைக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றத்தை நிரூபிக்கும் சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. கோயில் வளாகத்துக்குள்ளேயே ஒரு அப்பாவி மனிதரை திட்டமிட்டு தீர்த்துக் கட்டியுள்ளனர். அவர் செய்த தவறு வேறு ஒன்றும் இல்லை. தான் மிகவும் மதித்துப் போற்றிய புனிதமான மடத்தின் பெருமைகள் குலைந்து விடாமல் காப்பாற்ற துடித்தார். ஜெயேந்திர சரசுவதி ஏராளமான பெண்களுடன் வைத்திருந்த தகாத உறவுகளை தடுக்க முயன்றார். அதற்காகவே பலியானார்.

பிறழ் சாட்சிகளாக பல்டி அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை மீண்டும் மறு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அரசு தரப்பு என்னையும் பிறழ் சாட்சியாகக் கருதி செயல்படாதிருக்க நீதிமன்றம், ஆணை பிறப்பிக்க வேண்டும். எனக்கு இந்த நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை.

உடனடியாக இப்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். தடை விதிக்கா விட்டால் உண்மையான குற்றவாளிக்கு எதிராக நான் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும், நடவடிக்கைகளும் வீணாகி விரயமாகிவிடும். இவ்வாறு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சக்திவேலு தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணையின் நடுவில் தலையிட இயலாது என்று கூறிய நீதிமன்றம், நீதிபதி எஸ்.பி. சக்திவேலுவிடம் காவல்துறை டைரியை ஒப்படைக்குமாறு ஆணையிட்டுள்ளது.
----------பெரியார் முழக்கம் மார்ச்2011

தமிழ் ஓவியா said...


நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க!


அலகாபாத் கும்பமேளாவில் நித்யானந்தர் பீடத்திற்கு நேரில் வந்து நித்யானந்தா ஜெயேந்திரர் சந்தித்தபோது எடுத்த படம்.


மகா கும்பமேளாவில் ஜெயேந்திர சரஸ்வதி நித்யானந்தரை சந்தித்தார்!

அலகாபாத், பிப்.12- காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் உள்ள நித்யானந்த தியான பீடத்திற்கு வருகை புரிந்தார். கும்பபுரியில் உள்ள நித்யானந்த தியான பீடத்தையும், பரமஹம்ஸ நித்யானந்தரையும் நேரடியாக சந்தித்துப் பேசினார். பரமஹம்ச நித்யானந்தர் ஜெயேந் திரரை பாரம்பரிய மரியாதை யோடு வரவேற்றார்.

நித்யானந்த பீடம் பல வருடங் களாக பல ஊர்களில் உலகப் புகழ் பெற்று ஆசிரமங்கள் அமைத்து பல பணிகளை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றது. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் ஸ்தாபனம்.

யோகங்கள், தியானங்கள், ஸ்தோத்திர பாடங்கள் மற்றும் பல பணிகளெல்லாம் செய்து உலகிற்கு பல சேவைகளை செய்து வரு கின்றது. பரமஹம்ச நித்யானந்த சுவா மிகள் மற்றும் அவரின் இந்த உல களாவிய இயக்கமான நித் யானந்த தியானபீடமும் உலகிற்கு செய்து வரும் சேவைகள் மிகவும் மகத்தானவை.

நித்யானந்த சுவாமிகளுக்கும், தியான பீடத்திற்கும் நான் என் னுடைய முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றேன். இந்த தியான பீடம், நித்யானந்த சுவாமிகளும் மேலும் மேலும் புகழ் பெற்று விளங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அப் போது ஜெயேந்திரர் கூறினார்.- மாலைமுரசு 11.2.2013 பக்கம் 3

கல்யாணத்துக்கெல்லாம் ஜோடிப் பொருத்தம் பார்ப்பதுண்டு, இதோ இந்த ஜோடிப் பொருத்தத் துக்கு இணையாக இன்னொன்றை எடுத்துக்காட்ட முடியுமா?

அதுவும் அந்த விஷயத்தில் இவர்களை அடித்துக் கொள்ள யார் இருக்கிறார்கள்? நித்யானந்தாவின் பரமார்த்த சீடர்களுள் ஒருவர் அமெரிக்கர் (மடையர்கள் இந்தியாவில் மட்டும் தானா இருக்கிறார்கள்?) அவர் பெயர் டக்ளஸ் மெக்கெல்லர். அவர் அமெரிக்காவில் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலிடம் நித் யானந்தா பற்றி என்ன சொன்னார்?

தமிழ் ஓவியா said...


அறைகளில் நித்யானந்தா பெண்களுடன் இருக்கும்போது என்னைத்தான் பாதுகாப்புக்காக நிறுத்தி வைப்பார். நித்யானந்தா நடத்தும் யாக குண்டங்களில் காய்ந்த கஞ்சா விதைகளைப் போடு வார்.

2007ஆம் ஆண்டு நித்யானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருவரை கலிபோர்னியாவுக்குக் கூட்டி வந்தாரு. அந்த நடிகை திருமணம் ஆனவர்தான். அந்த நடிகைகூட என் வீட்டில் 15 நாள் தங்கி இருந் தார். அந்த நடிகைக்கும், நித்யா னந்தாவுக்கும் செக்ஷுவல் ரிலேசன் ஷிப் இருந்ததை நான் புரிஞ்சிக் கிட்டேன். அதைப்பற்றி அவரிடமே கேட்டேன்

கடவுளை அடைய ஆனந்த மான வழி இதுதான்னு என்னிடம் சிரிச்சிக்கிட்டே சொன்னார் என்று எழுத்து வடிவத்திலேயே கலிபோர் னியா அட்டர்னி ஜெனரலிடம் கொடுத்துள்ளாரே நித்யானந்தா வின் அமெரிக்க சீடர்!

பாலுறவு மூலம் மோட்சத்தை அடைய முடியும் என்ற நிபந்தனையை ஏற்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் வாங்கிக் கொண்டு பெண்களிடம் லீலைகளை நடத்தி னார் என்றால் எப்படிப்பட்ட கில்லாடி இந்த நித்யானந்தா?

- இந்தத் தகவல்கள் எல்லாம் கருநாடகக் காவல்துறையின் 430 பக்கக் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளனவே!

நம்ப காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார் ஜெயேந்திர சரஸ்வதி இந்த விடயத்தில் காமக் கோடியாயிற்றே!

படுகொலை செய்யப்பட்ட சங்கர ராமன் உயிரோடு இருந்தபோது எழுதிய கடிதங்களில் நித்யானந் தாவை விஞ்சும் விவ(கா)ரங்கள் ஏராளம் உண்டே!

அக்கிரகாரத்துப் பெண்மணி யாகிய எழுத்தாளர் அனுராதா ரமணன் கண்ணீரும் கம்பலையு மாகக் கொட்டியழுதாரே - இந்த ஜெயேந்திர சரஸ்வதி தன்னிடம் எவ்வளவு கேவலமாக நடந்து கொண் டார் என்று தொலைக்காட்சிகளில் கொட்டித் தீர்த்தாரே!

கும்பகோணம் விஜயா, குண்டூர் காமாக்ஷி, தெனாலி சுவாசினி, புதுக் கோட்டை பேபி என்ற ஜெயலட்சுமி, திருவிடைமருதூர் சந்திரா என்று ஒரு நீண்ட பட்டியலை சங்கரராமன் கொடுத்ததை ஜெயேந்திரரின் ஆன்மீகமும் அரசியலும் என்ற நூலில் ஏ.ஆர். ரகுநாதன் பதிவு செய்துள்ளாரே!

இப்பொழுது சொல்லுங்கள் - கும்பமேளாவில் காஞ்சி சங்கராச் சாரியாரும், நித்யானந்தாவும் அன்னியோன்யமாக ஒன்று கலந் தது பொருத்தத்திலும் பொருத்தம் மகா பொருத்தம் தானே!

நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க என்ற சினிமா பாடல் நினைவுக்கு வந்தால் நாம் பொறுப் பல்ல.

கூடுதல் தகவல் (Tail Piece) : நித்யானந்தா பீடமும், நித்யானந்தா வும் மேலும் புகழ் பெற்று விளங்க வேண்டும் (எதில்?) என்று இறை வனைப் பிரார்த்திக்கிறாராம் ஜெயேந்திரர் (பரவாயில்லை ஒரு சூத்திர மடத்துக்கு ஜெகத்குரு சென்றுள்ளாரே - ஒரு மாற்றம் தான்!) காஞ்சி மச்சேந்திர நாதன் கோயில் புகழ் தேவநாதனுக்கும் ஒருக்கால் அழைப்புக் கிடைத்தாலும் கிடைக்கக் கூடும்; யார் கண்டா?
--------------http://www.viduthalai.in/page-1/54658-2013-02-12-10-57-43.html

தமிழ் ஓவியா said...

Unmaionline 2012 ஜூன் 01-15 சந்தி சிரிக்கும் சாமியார்கள்


- இளையமகன்

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவாலலாயருள்
பெண்ணகத்து எழில் சாக்கியர் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே! - -

- திருஞானசம்பந்தர்

கற்பழிக்க அருள்வேண்டிய திருஞானசம்பந்தரால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாக கூறப்படும் மதுரை ஆதீன மடத்தில்தான் சர்ச்சை சுழல்கிறது. ஏன் இந்த சர்ச்சை? சிடி புகழ் நித்தியானந்தா மதுரை ஆதீனத்தின் 293வது தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நியிமித்தது 292வது நடப்பு மதுரை ஆதீனம். இந்த அறிவிப்பையடுத்து நித்தியானந்தா 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். திருவாளர் 292 வது ஆதினமோ பதிலுக்கு தங்கச் செங்கோல் வழங்கி, நித்திக்கு தங்க கிரீடத்தையும் சூட்டினார். அதற்கு பிறகு பேட்டியளித்த மதுரை ஆதீனம் அருணகிரி, திருஞான சம்பந்தரால் 1500 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தை, எனக்குப் பிறகு யார் கண்ணியமாக(!) கண்காணிக்கப் போகிறார்கள் என்ற கவலையில் பல நாட்கள் தூக்கமின்றி தவித்தேன். அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமான் என் கனவில் தோன்றி, நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு என்று சொன்னார். அதன்பிறகு பெங்களூரு ஆசிரமத்திற்கு வந்து பழகிப்பார்த்தேன்; அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவருடைய ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களை மறந்தபடி ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். நானும் நேற்று அவர்களோடு சேர்ந்து ஆடினேன். அடடா ஆதீனமே ஆடுதே என ஆச்சர்யமாக பார்த்தார்கள். இப்படித்தான் எலோரும் ஜாலியாக இருக்க வேண்டும். சொத்துக்களை நிர்வகிப்பது குறித்து பேசுகையில் 1250 ஏக்கர் நிலத்தையும், கோவில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே நீங்கள் அனைவரும் அவரை ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்தா ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் என்று அழைக்க வேண்டும் என்றிருக்கிறார். (6.5.12 ஜூனியர் விகடன்)


தமிழ் ஓவியா said...


உழைத்து, உழைத்து ஓடாய் போனவர்கள் வாழும் நாட்டில். வறுமைக்கு வாழ்க்கைப் பட்டவர்களை பெரும்பான்மையாக கொண்டு வாழும் நாட்டில், இன்னும் மக்களை சேரியில் இருத்தி வைப்பதும், வாயில் மலம் திணிப்பதும், மலம் அள்ளுவதற்கென்றே ஒரு குறிப்பிட்ட சாதியார்களை மட்டும் கட்டாயமாக பணிக்கும் இந்த நாட்டில் கோடியாய் பணப்பரிமாற்றம் நடக்கிறது, மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்டு யார் கண்காணிப்புமின்றி கைமாறுகிறது. இதைக் குறித்து தட்டிக்கேட்க வக்கில்லாதவர்கள், சைவ வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்தான் மடத்திற்கு வரவேண்டும், நித்தியானந்தா சைவவேளாளர் இல்லை என்கிறார் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் கணபதி சந்தானம். இன்னொருவர் நித்தியானந்தா மண்டையிலிருந்து மயிரை மழிக்கவில்லை. ஆகையால் அவர் தகுதியற்றவர் என்கிறார்.

இந்துக்கள் அனைவரும் ஒரே சமூகம் என்பதுபோலும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை கயமைத்தனத்தோடு மறைத்துவிட்டு கிறித்துவ, இஸ்லாமியர், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக வன்மத்தை வளர்த்தே அரசியலில் சுகம் காண துடிப்பவர்கள், புராணங்கள் முழுக்க ஆபாச குப்பைகளை வைத்துக் கொண்டும், ஒழுக்க கேட்டையே பண்பாடாய் வைத்துக் கொண்டு ஊருக்கு ஒழுக்கம் கற்பிக்க முனையும் இந்து மதவெறி அமைப்புகளுக்கு நித்தியானந்தா தொண்டையில் சிக்கிய முள்ளைப்போல பெரிய இடைஞ்சலாக இருந்திருக்க வேண்டும். பெரிய மனப்போராட்டத்தை தந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அயோத்தியில் இராமர் பாலம் கட்டும் அதிஉயர்(!) பிரச்சினையை பற்றி பேசிய வாய்கள், மதுரை ஆதீனமாக மிகப்பொருத்தமாக நித்தியானந்தா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இத்தனை எதிர்ப்புகள் பதிவாகியிருக்காது. இந்து மக்கள் கட்சி நித்தியானந்தாவை மதுரை ஆதீன பதவியிலிருந்து கீழிறக்கும் வரை போராடப் போவதாக அறிவித்திருந்தது. இன்னும் கூடுதலாக மதுரை மடத்திற்குள் புகுந்து சிவனை வழிபடுவோமென்று வேறு எச்சரிக்கை(!) செய்திருக்கின்றனர். இதைக்கண்டு சீற்றம் கொண்டோ, சிறிய/பெரிய அளவில் பணம் பெற்றோ கொஞ்சமும் வெட்கமின்றி தென்னாடு முன்னேற்ற கழக தலைவர் சரவணன் என்பவர், நித்தியானந்தா நியமனத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவரின் நியமனத்தை எதிர்த்து பேரணி நடத்துபவர்களுக்கு, எதிராக நான் பேரணி நடத்துவேன் என்று முனங்கியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


தொலைக்காட்சிகளிலெல்லாம் தமிழ், தமிழ் என்று முழங்கும் நெல்லை கண்ணன் நித்தியானந்தா நியமனத்தை தடைச்செய்ய உயிரை கூட கொடுப்பேன் என்கிறார். யாரும் இது சமூக பற்று என்று கொள்ள வேண்டாம். இந்த சீற்றத்திற்கான காரணம் சைவ சாதி வெறிதான். இதுபோதாதென்று அங்கங்கு மடங்கள் என்னும் கடைவிரித்து தமிழ் வளர்ப்பதாய் கூறிக் கொண்டு தொப்பை வளர்த்து சொகுசாய் வாழும் அனைத்து மடாதிபதிகளின் கூட்டம், நித்தியானந்தாவை மடாதிபதியாக நியமனம் செய்ததை, 10 நாளில் திரும்பப் பெற வேண்டும் என்கிறது. இதற்கெல்லாம் அசராமல் பதிலளித்த நித்தியானந்தா, என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய ஆதீனங்கள் அவர்களுடைய அறையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ரகசிய கேமராக்கள் வைப்பார்களா? நான் அதை வைக்க தயார். அப்போது தெரியும் பாலியல் குற்றச்சாட்டில் யார் சிக்குகிறார்கள் என்று பார்ப்போம்.

மக்கள் சொத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்றுதான் நீதிகட்சி 1930களில் பல கோவில்களை அரசுடைமையாக்கியது. இன்று வீடியோ கண்காணிப்பில்லாமல்தான் இந்த மடங்களின் போலி புனிதம் காக்கப்படுகிறது என்று சொல்லாமல் சொல்கிறார் நித்தியானந்தா.
வழக்குகளிலிருந்து தப்பிக்கவே இந்த செட்டப்

நித்தியானந்தாவின் நியமனத்தின் மீது தொடர்ந்து விமர்சனம் வரவும் அருணகிரியார் ஒரு பேட்டியளித்திருந்தார், அதில், ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். ஆக, தன் மீதான வழக்குகளிலிருந்து தப்பிக்கவே இப்படியான நியமனத்தை வலிந்து நித்தியானந்தா பெற்றிருப்பதாக யூகிப்பது தவறாக இருக்க முடியாதென்றே தோன்றுகிறது.

மேற்சொன்ன நித்தியானந்தா எதிர்ப்புக்கெல்லாம் ஆதரவாக பேரதிர்ப்பை ஜகத்குரு ஜெயேந்திரர் தெரிவித்திருந்தார்.

ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். அவர் கூடவேதான் இருப்பேன்னு சொல்லி கூடவே இருக்காங்க. இதுவும் ஆன்மிகத்திற்கு எதிரானது. திருஞான சம்பந்தர் வழியில் வந்த பெருமைவாய்ந்த மடத்திற்கு நித்தியானந்தா, ரஞ்சிதாவுடன் வருவது பெருத்த அவமானம். ரூ.1 கோடி லஞ்சமாக கொடுத்தே நித்தியானந்தா முடி சூட்டிக்கொண்டார். எனவே ஆதின மடத்தில் இருந்து நித்தியானந்தாவை உடனே வெளியேற்ற வேண்டும்.

கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் தன் மீது பாலியல் புகார் உள்பட சங்கர் ராமன் கொலை வழக்கு கூட உள்ளது, இந்த அயோக்கியத்தனங் களுக்கெல்லாம் சீனியர் என்ற உணர்வேயில்லாமல் என்னை விடுத்து நித்தியானந்தாவை எப்படி தேர்ந்தெடுக்கலாமென்ற கோபம் வந்தாலும் வந்திருக்கலாம். ஆனால், இந்த எதிர்ப்பு அறிக்கைக்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் சங்கரமடத் திலிருந்து ஒரு அறிக்கை வந்தது.

தமிழ் ஓவியா said...

சுவாமி நித்யானந்தா நியமனத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எந்தவித ஆதரவோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரியப் படுத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விடுதலையில் வந்த செய்திகள் ஜெயேந்திரர் கவனத்திற்கு செல்லவும், எதிர்ப்பு என்னும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தனிக்கதை. ஜகத்குருவின் நேர்மையின் யோக்கியதை இந்த அளவில்தான் உள்ளது.

தமிழ் ஓவியா said...

ஆனால், நித்தியானந்தா விடுவாரா? இந்து மதத்தை அம்பலப்படுத்துவதில் அவர் காட்டும் முனைப்பை நம்மால் ரசிக்காமலும் இருக்க முடியவில்லை.

ரஞ்சிதாவுடன் இருக்கும் நித்தியானந்தாவை மதுரை ஆதினமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சங்கராச்சாரியார் கூறியிருக்கிறார். ஆனால் என் மீது எந்த கொலை வழக்கும் இல்லை. அவர் மீது கொலை வழக்கு உள்ளது. குற்ற பின்னணி உள்ள அவர் என்னை பற்றி குற்றம் சொல்ல அருகதை இல்லை. அவர்தான் போதை ஊசி போட்டு காஞ்சி பெரியவரை கொன்றார். நான் மதுரை ஆதினத்துக்கு எந்த ஊசியும் போடவில்லை.

ஜெயேந்திரர் யோக்கியனாகும் முயற்சிக்கு மேற்கண்டவாறு நித்தி பதிலளித்ததும், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், தன்னை நித்தி மொத்தமாக அம்பலப்படுத்திவிடக்கூடுமென்று சமாதானத்தூது அனுப்பியிருக்கிறார். சமாதானத்தூது அனுப்பிய இந்த ஜெகத் குருவின் யோக்கியதையை நம் வாசகர்களுக்கு மீண்டும் நினைவூட்ட அனுராதா ரமணன் ஒரு பத்திரிக்கை பேட்டியில் அம்பலப்படுத்திய செய்திகளிலிருந்து ஒரு பத்தி மட்டும் கீழே தரப்படுகிறது

தமிழ் ஓவியா said...

சில ஆண்டுகளுக்கு முன் சங்கர மடத்திலிருந்து என்னை அழைப்பதாக சங்கர மடத்திற்கு நெருக்கமான ஒரு பெண் என்னை அழைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார்களை தெய்வமாக நினைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவள் நான். எனவே தெய்வமே என்னை அழைத்துள்ளதாக எனது தந்தை சந்தோஷப்பட்டார். உடனே செல்லுமாறு என்னைஅனுப்பி வைத்தார். நானும் மிகவும் சந்தோஷமான மன நிலையில் அந்தப் பெண்மணியுடன் காஞ்சிபுரம் சென்றேன். சங்கர மடம் சார்பில் தொடங்கப்படவுள்ள அம்மா என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றுவது தொடர்பாக என்னுடன் ஜெயேந்திரர் பேசினார். அவர் பேசியவற்றில் சிலவற்றை எனது குறிப்பேட்டில் நான் எழுதிக் கொண்டிருந்தேன். தற்செயலாக நான்நிமிர்ந்து பார்த்தபோது, என்னை அழைத்து வந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் ஜெயேந்திரர். அவர்கள் இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு செய்த அசிங்கம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அதிலிருந்து நான் சுதாரிப்பதற்குள், ஆன்மீகவாதியாக பேசிக் கொண்டிருந்த ஜெயேந்திரர் ஆபாசமாக பேசத்தொடங்கினார். அறுவறுப்பான சிரிப்புடன் அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் மிகவும் அநாகரீகமானவை.

தமிழ் ஓவியா said...

அந்தப் பெண்மணியைப் போலவே என்னையும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதிர்ந்து போன நான் சட்டென எழுந்து விட்டேன். சீ, நீயும் ஒரு மனுஷனா என்று வேகமாக கேட்டவாறே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். உடனே அதிர்ந்த ஜெயேந்திரர், முன் கூட்டியே இவளிடம் (என்னிடம்) எல்லாவற்றையும் கூறவில்லையா என்று அந்தப் பெண்ணிடம் ஆவேசமாக கேட்டார். அவர் இல்லை என்றவுடன், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் அந்தப் பெண்மணியை திட்டினார். பின்னர் அதே வேகத்தில் என்னிடம் திரும்பி, என்னுடன் ஒத்துழைத்துப் போனால் நல்லது. இங்கு நடந்தவற்றைவெளியில் கூற நினைத்தால், உனக்கும் 10 ஆண்களுக்கும் தொடர்பு உள்ளதாக கதை கட்டி உன் வாழ்க்கையையே சீரழித்து விடுவேன் என்று மிரட்டினார். புருசனை இழந்த நீ என்ன விதவைக் கோலத்திலேயா இருக்கே... பூவும் பொட்டுமாகத்தானே இருக்கே என்று கூறியவாறே என் உடலை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த அசிங்கத்தில் கூனிக் குறுகிப் போன நான் அங்கிருந்து எப்படியோ திரும்பி விட்டேன் என்று தனக்கு நேர்ந்த அவமானத்தை வெளியிட்டிருந்தார். இப்படிப்பட்ட ஜெயேந்திரரின் விமர்சனத்தை சர்வ சாதாரணமாக எதிர்கொணடார் நித்தியானந்தா.

ஜெயேந்திரரது பாலியல் கூத்துக்களை அம்பலப்படுத்தியதால்தான் சங்கரராமன் கொல்லப்பட்டார். சங்கராச்சாரியின் கூலிப்படை கோவிலில் வைத்தே கொன்றது. என்பதுதான் குற்றச்சாட்டு. அதன்மீதுதான் வழக்கு நடக்கிறது. தேவநாதனது கருவறை செக்ஸ் சி.டி தோற்றுவித்த அதிர்வலைகள் கூட வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கொடூரத்திற்கு ஏற்படவில்லை. தேவநாதன் கூட பக்தர்களின் நம்பிக்கையைத்தான் இழிவுபடுத்தினார். ஜெயேந்திரரோ, பக்தர்கள் தன்னை கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக சங்கர ராமன் கொலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டால் புதுச்சேரி நீதிமன்றப்படிகளில் நிற்கிறார். சங்கரமடத்தின் மானம் கைய்யில் தண்டத்தோடு நடந்துகொண்டிருக்கிறது. இதை குறித்தெல்லாம் கேட்க வக்கில்லாத இந்துத்துவ அமைப்புகள்தான் நித்தியானந்தாவை கேள்வி கேட்கின்றன. நித்தியானந்தாவை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்பதல்ல நம் கேள்வி. பார்ப்பானைவிட பார்ப்பனியத்தைத் தாங்கிப்பிடித்துக் கொண்டு அரதப்பழசான இந்து மதத்தை அறிவியலின் துணையோடு இன்றைய கார்ப்பொரேட் கலாச்சார இந்துக்களைக் கவரும் நித்தியானந்தா உள்ளபடியே மிகவும் ஆபத்தானவர் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. அதேநேரத்தில் இந்து மதத்தின் உயிர் நாடியான ஜாதிமுறையைக் காக்கும் பணிகளில் ஒன்றான மடங்களைக் காக்க இந்த இந்துத்துவாக்கள் துடிப்பது ஏன்? எல்லோரும் இந்துக்கள் தான் என்று வெட்கமின்றி சொல்லிக்கொண்டே ஆதீன மடத்திற்கு சென்று வழிபடுவேன் என்று உறுமும் அறிக்கை விடும் நபர்களால் சங்கர மடத்திற்குள் சென்று இவர் கோவணத்தை அவிழ்க்க முடியவில்லை. இந்து மதக்காவலர்களாக வேடம் பூணுபவர்கள் முதலில் உள்நுழைய வேண்டியது சங்கரமடத்தில். துணிச்சல் இருக்கிறதா? இல்லையா? பூணூல் தடுக்கிறதா? உங்கள் மதத்தின் பெருமை சீரழிந்துவிடுமா? சீரழிய என்ன இருக்கிறது. சீரழிந்த மதத்தில் சீரழிய என்ன இருக்கிறது. அழியத்தான் கொஞ்சம் உங்கள் மதம் மீதமிருக்கிறது.



ஒரு சி.டி

விரைவில் நித்தி பற்றி குறும்படம் ஒன்று எடுக்க இருக்கிறாராம் நடிகை ரஞ்சிதா. ஏற்கெனவே எடுத்த குறும்படம் தான் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறதே. அதற்குள் அடுத்த குறும்படமா? என்று குதூகலித்து கமெண்ட் போடுகிறார்கள் இணையதள இளைஞர்கள்.

ஒரு இடி!

நித்தியானந்தா ரஞ்சிதா என்ற பெண்ணோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று ஜெயேந்திரர் கொடுத்த அறிக்கைக்கு நித்தி பதில் சொல்வது ஒரு புறம் என்றால், என்னைப் பற்றிப் பேச ஜெயேந்திரருக்குத் தகுதியில்லை என்று ரஞ்சிதா விட்ட அறிக்கை சங்கர மடத்துக்குக் கிடைத்த இடி. சபாஷ்! சரியான போட்டி! எங்கே பார்ப்போம். ஒவ்வொருவரின் வண்டவாளங் களையும் தண்டவாளத்தில் ஏற்றி, மாறி மாறி உங்களை நம்பும் மடப் பதர்களுக்கு நீங்களே விளக்கத்தையும் கொடுத்து விடுங்கள். எங்கள் பணி கொஞ்சம் குறையும்.

தமிழ் ஓவியா said...



ஜெயேந்திரர் முதல் தேவநாதன் வரை

காஞ்சிபுரம் மூக்கைத் துளைக்கிறது; கசுமாலம் _ இப்படியும் ஒரு பக்தியா? ஜென்மங்களா? என்று நாக்கைப் பிடுங்க நாலு கேள்விகளைப் பெண்கள் நடு வீதியில் கேட்டுக் கொண்டுதானிருக்-கிறார்கள்.

மச்சேஸ்வரர் கோயிலாம் _ அந்தக் கோயில் அர்ச்சகன் தேவநாதனாம் _ கோயில் கருவறையிலே கரு உற்பத்தி பண்ணிக்கொண்டு கிடக்கிறானாம்.

பகவான் கர்ப்பக் கிரகத்தில் சரச-மாடினால் முதுமை வந்து முட்டாதாம் _ என்றும் இளமையில் சுகிக்கலாமாம்! அர்ச்சகன் தேவநாதனின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி பாவையர் பலர் அவன் மடியில் வீழ்ந்தனராம்.

ஒரு பக்கம் அர்ச்சனைத் தட்டில் காசு விழுமாம் _ இன்னொரு பக்கம் கர்ப்பக்-கிரகத்தில் காமச் சேட்டை பூஜைகள் நடக்குமாம்.

எவ்வளவு கொழுப்பும், வக்கிரமும் இருந்தால் இந்தக் கேவலத்தை கை தொலைபேசி மூலம் படம் பிடித்து வைத்து, பிறகு தனியே போட்டுப் பார்த்து ரசிப்பானாம்.


தமிழ் ஓவியா said...

ஒரு பெண், இரு பெண் அல்ல; 15 பெண்கள் வரை பட்டியல் நீள்கிறது. விஷயம் வெளியுலகுக்கு வரவே, ஆசாமிதன் குடும்பத்தோடு தலைமறை-வாகி விட்டான்! இப்பொழுது நீதிமன்றத்தில் சரண் அடைந்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.

காமகோடி பீடாதிபதியே இந்தத் தரத்தில் உள்ளவர் என்கிறபோது இந்தத் தேவநாதன்தான் எம்மாத்திரம்!

காஞ்சி சங்கரமடத்தில் நடக்காத-வைகளா இந்தக் கோயிலில் நடந்து விட்டது?

காமத்தையறுத்த மடாதிபதியே காமக் குளத்தில் விழுந்து நீச்சல் அடிக்-கிறார் என்றால், அவாள் சிஷ்யாள் _ அவாள் வயதுக்கு எவ்வளவு ஆட்டம் போடுவா?

ஒவ்வொரு நாளும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு திருவரங்கத்திலிருந்து உஷா என்ற பெண் ஜெயேந்திரரோடு சல்லாப மொழிகளில் உல்லாசப் பேச்சுகளைப் கைப்பேசியில் பேசுவார் என்ற தகவல் எல்லாம் ஊர் சிரிக்கவில்லையா? அனுராதா ரமணன் என்ற பிரபல பார்ப்பனப் பெண் எழுத்தாளர், சங்கராச்-சாரி வேங்கையிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பதை கண்ணீ-ரும் கம்பலை-யுமாக தொலைக்காட்சி-களில் குமுறினாரே கொட்டியழுது வேதனை-யின் சூட்டைத் தணித்துக் கொள்ள-வில்லையா? மைதிலி என்ற பெண்ணுடன் தன் எதிரிலேயே அந்த மடாதிபதி உறவு வைத்தார் என்று ஊருக்கும் உலகுக்கும் அறிவித்தாரே _ அதைப் பார்க்கும்-போது இந்த தேவநாதன் விஷயம் அற்-பமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

வடக்கே குஜராத் மாநிலம் தபோயில் உள்ள சவுமியநாராயண் கோயிலில் என்ன நடந்தது?

அர்ச்சகர்ப் பார்ப்பனர்களான சந்த், தேவ்வல்லப் கோயிலுக்குள் உள்ள குடிலிலேயே கூத்தும் குடியுமாகக் கும்மாளம் போட்ட காட்சிகள் எல்லாம் வீடியோ கோப்புகளாக வெளியில் வந்த,, காரித் துப்பினார்களே!

சபரி மலைக் கோயிலின் மூத்த தந்திரி-யான மோகனரு விபச்சாரிகளின் வீட்டில் கையும் களவுமாகப் பிடிபட வில்லையா?

தமிழ் ஓவியா said...


இவையெல்லாம் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் சர்வ சாதாரண-மாயிற்றே!

ஓம் என்பதற்கு அவர்கள் கூறும் தத்-துவம் என்ன? ஆண் -_ பெண் சேர்க்கை-யின் வடிவம் என்றுதானே விளக்கம் சொல்லுகிறார்கள்?

பெண்கள் நெற்றியில் திலகமிட்-டால், அது வீட்டு விலக்கான பெண்-ணின் குருதியின் அடையாளம் என்று தானே கூசாமல் சொல்லுகிறார்கள். நாமம் தரிக்கிறீர்களே, அது என்ன என்று கேட்டால் அதற்கும் ஒரு தத்து-வத்தைத் தயாராகவே வைத்துள்ளனரே!

வெள்ளைக் கோடுகள் இரண்டும், விஷ்ணுவின் தொடைகள் என்றும், நடுவில் உள்ள சிவப்புக் கோடு விஷ்ணு-வின் ஆண் குறி என்றும்... அடேயப்பா, எவ்வளவு அட்சரப்பிசகு இல்லாமல் சொல்லுகிறார்கள்.

இந்து மதத்தை எடுத்துக் கொண்-டால் மும்மூர்த்திகளும் சரி, அவர்களின் சீடகோடிகளும் சரி, தேவாதி தேவர்-களும் சரி _ கற்பழிப்புக் குற்றம் செய்யாத ஒரே ஒரு கடைக்குட்டி சாமியைக் காட்ட முடியுமா?

காஞ்சிபுரம் தேவநாதன் இப்படி-யென்றால் அந்தத் தேவநாதனாகிய இந்திரன் கவுதமமுனிவரின் மனைவி அகலிகையை மாறுவேடம் பூண்டு கற்பழிக்கவில்லையா! சரசுவதியையே பெண்டாண்டவன் தானே படைத்தல் கடவுளான பிரம்மா.

தாருகாவனத்தில் இருந்த ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறையாடி தன் சிசுனத்தை இழந்தவன் தான் முழு-முதற் கடவுளான சிவன். மகாவிஷ்ணுவைப்பற்றி கேட்கவும் வேண்டுமா? அதற்கென்றே ஒரு அவ-தாரமே எடுத்து (கிருஷ்ணாவதாரம்) காம வேட்டை யாடியவன் ஆயிற்றே!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மோட்சம் அளித்த _ மாபாதகம் தீர்த்த புராணங்-கள் இந்துமதத்தைத் தவிர வேறு எங்குண்டு?

கோயில்களைப் பாருங்கள் _ அங்கு கொக்கோகக் காட்சிகள்; தேர்களைப் பாருங்கள் _ தேவர்களின் லீலா வினோத காட்சிகள்; இந்து மதத்தின் எந்தப்பரப்பை நோக்கினாலும் இத்-தியாதி, இத்தியாதி காம சேட்டைகளின் களேபரக் காட்சிகள்தாம்.

அதற்காக வெட்கப்படுவதில்லை; இன்னும் சொல்லப் போனால் அந்தராத்மாவும் பரமாத்வாவும் ---ஆலிங்கனம் செய்கின்றன என்று அதற்குத் தத்துவ வார்த்தைகள் எல்லாம் தடபுடலாகவே உண்டு.

சாஸ்திர ரீதியாகவே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்-ளனர்.

வேஸ்யாதர்சனம் புண்யம்

ஸ்பர்சிவனம் பாபநாஸம்

சம்பனம் சர்வ தீர்த்தானாம்

மைதுனம் மோக்ஷ சாதனம்

பொருளும் வேண்டுமா?

வேசிகளைப் பார்ப்பதே புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவங்கள் நாசமாகும்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய-தற்குச் சமம்; உடலுறவு கொள்வது மோட்சத்தை அடையும் வழி என்று மோட்சத்திற்குக் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து வைத்துள்ளது இந்தக் குள்ளநரிக் கூட்டம்.

இந்தப் பார்ப்பனர்களின் யோக்-கியதையை அவாளின் செல்லப் பிள்-ளையான கம்பனே கூறி வைத்திருக்-கிறான்.

இராமன் வனவாசம் சென்றபோது உயிர்கள் எல்லாம் அழுதன; மரங்கள் கருகின. ஆனால் பார்ப்பனர்கள் ராமனி-டம் தங்களுக்கு இளம் பசுவும் கன்றும் தேவை என்று கேட்டுப் பெறுகின்றனர். ராமன் வனவாசம் முடிந்து நாடு திரும்பும்போது வாடிய பயிர்கள் துளிர்த்தன, உயிர்கள் மகிழ்ந்தன. மக்கள் கூடினார்கள். அப்பொழுது விலைமகள் வீடுகளில் இருந்த பார்ப்-பனர்கள் வேசியர்களின் புடவையைக் கட்டிக் கொண்டும், வேசியர்கள் வேட்டிகளை கட்டிக் கொண்டும் வெளியில் வந்தனர் என்கிறான் கம்பன்.

வேசியர் உடுத்த கூறை வேதியர் சுற்ற வெற்றிப் பாசிழை மகளிர் ஆடை யந்தணர் பறித்துச் சுற்ற வாசம், மென் கலவைச் சாந்து என்று இனையன மயக்கந் தன்னால் பூசினர்க்கு இரட்டி ஆனார்

பூசலார் புகுந்துளோரும்

காளமேகப் புலவர் என்ற குடந்தை பார்ப்பான், தான் மோகம் கொண்ட தாசிப் பெண்ணுக்காக தான் வரித்துக் கொண்ட வைணவத்திலிருந்து விலகி சிவத்துக்கு தாண்டினான் என்பதெல்-லாம் காமக்குரோ தங்களுக்குமுன் கடவுளாவது கத்தரிக்காயாவது _ வேதங்களாவது வெண்டைக்காயாவது _ மதங்களாவது மண்ணாங் கட்டிகளா-வது _ சர்வம் சரணம் காம சுகப்பவது.

ஒன்றைக் கவனிக்க வேண்டும்; காஞ்சிக் கோயில் தேவநாதன் அர்ச்சகப் பார்ப்பானின் சமாச்சாரம்பற்றி திருவா-ளர் துக்ளக் மூச்சு விட்டதுண்டா? கல்கி கண்டு கொண்டதுண்டா? தினமணி தீண்டியதுண்டா?

பக்தி போதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய நேரமும், இடமும் இது!

இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையீரல் எரிந்து விடும் என்று விவேகானந்தரி-டம் கூறினாராம் மாக்ஸ்முல்லர், எந்த அர்த்தத்தில் கூறினாரோ தெரிய-வில்லை _ இதயத்துக்கும், மூளைக்கும் பாயும் ரத்தம் கெட்டுப் போய்விடும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
http://viduthalai.periyar.org.in/20091121/snews01.html

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதியின் காம லீலைகள்


வேலைக்கு போகும் பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்று சொன்ன சங்கராச்சாரி யோக்கியதை தெரியுமா? காஞ்சி காம கோடி ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என பிராமணர்களால் அழைக்கப்படும் ஜெயந்திரனின் வண்டவாளங்கள், தில்லுமுல்லுகள் சங்கர ராமன் கொலை விழக்கை விசாரிக்கும் போது தெரியவந்தது

சங்கர ராமன் கொலை வழக்கு விசாரணையின் போது சங்கராச்சாரியின் காம லீலைகள் வெளியாயின. சங்கராச்சாரியின் பாலியல் களியாட்டங்களை விசாரிக்க பெண் போலீஸாரைக் கொண்ட தனிப் படையும் அமைக்கப்பட்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

தண்டத்தை போட்டு விட்டு ஓட்டம்:

தமிழ் ஓவியா said...

1986 இல் ஜெயெந்திரன் தண்டத்தை போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல், வெங்கெட்ராமன் என்பவரின் பெண்ணை இழுத்து கொண்டு ஓடினார். ஒரு மாததிற்கு மேல் குடும்பம் நடத்தினார். அப்போது ஓடி போன இந்த ஓடுகாலி சங்கராசாரியை , சிபிஐ கொண்டு தேடி கண்டு பிடித்தனர். பின்னர் தலைகாவிரிக்கு போய் அந்த பெண்ணை பிரித்து வந்த தகவல்கள மிகவும் ஆச்சரியமானவை. அந்த கால இடைவெளியில் சின்ன சங்கராச்சாரி விஜயேந்திரனை நியமித்தது சங்கரமடம். இது தான் இரண்டு சங்கராச்சாரிகள் இருப்பதன் ரகசியம்.

பெண் எழுத்தாளரை விருப்பத்துக்கு இணங்கும்படி வற்புறுத்திய ஜெயந்திரன்:




பிரபலமான பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சங்கராச்சாரியார் தன்னிடம் முறை தவறி நடந்து கொண்டது குறித்து நவம்பர் 29, 2004 தேதி புகார் கொடுத்தார்.

அப்போது நிருபர்களுக்கு அணுராதா ரமணன் கொடுத்த பேட்டி:Criminal Sankarachari Vijayendra Saraswathi Swamigal"காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அடிக்கடி இளம்பெண்கள் பலரை மடத்துக்கே வரவழைத்து சந்தித்திருக்கிறார். இதில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அனுராதா என்ற பெண்ணும் ஒருவர். இதேபோல, கும்பகோணம் வனஜா, ஆந்திராவைச் சேர்ந்த ஜெயா உள்ளிட்டப் பெண்கள் ஜெயேந்திரரை அடிக்கடி சந்தித்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஞ்சி சங்கர மடத்துடனும், ஜெயேந்திரருடனும் நெருங்கிய தொடர்புவைத்திருந்த நடிகைகளில் சொர்ணமால்யா முக்கியமானவர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் சொர்ணமால்யாவுக்கு திருமணம் நடந்தது. ஆனால், திடீரென்று தன் கணவரிடமிருந்து சொர்ணமால்யா விவாகரத்துக் கோரினார். இந்த விவகாரம் சங்கர மடத்திலும் வைத்து பஞ்சாயத்து செய்யப்பட்டது. சங்கர மடத்துடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கணவரிடமிருந்து நிரந்தரமாகப் பிரிய சொர்ணமால்யா முடிவெடுத்தார்.

Actress Swarnamalya - Who had link with Junior Sankarachari Vijayendra Saraswathi Swamigalசொர்ணமால்யா தன் கணவரை பிரிந்து விடுவதற்கு ஜெயேந்திரரே ஆலோசனை வழங்கினார். இந்தச் சூழ்நிலையில் காண்ட்ராக்டர் ரவி சுப்ரமணியம் மூலம் சென்னையில் சொர்ணமால்யாவுக்கு வீடு ஒன்றை ஜெயேந்திரரே வாங்கி கொடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சொர்ணமால்யா அடிக்கடி சங்கர மடத்துக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதேபோல சங்கர மடப்புள்ளிகளும் சென்னையில் உள்ள சொர்ணமால்யாவின் வீட்டுக்கே தேடிச் சென்று அவரைச் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சொர்ணமால்யாவுக்கும் சங்கர மடத்திற்கும் இருந்த நெருக்கம் குறித்து பரபரப்பான தகவல்களை அவரின் கணவரே காவல்துறையிடம் கூறினார்.


Sankarachari & Jayalalitha

ரவி சுப்பிரமணியம் வாக்குமூலம்:

ஜெயேந்திரர் பல பெண்களுடன் இருந்துள்ளதை நேரில் பார்த்த ரவி சுப்பிரமணியம் கூறிய அதிர்ச்சிகரமான தகவல்கள்:

லீலாவுடன் அரட்டை:

நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். என் மனைவி சித்ரா, நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 1994ம் ஆண்டில் எனக்கும்மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியதால் பிரிந்துவிட்டோம்.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த நான் பின்னர் கட்டட காண்ட்ராக்ட் எடுத்து செய்ய ஆரம்பித்தேன். என் நண்பர்விஸ்வநாதன் மூலமாக காஞ்சி மடத்துடன் தொடர்பு கிடைத்தது. விஸ்வநாதனின் அக்காள் லீலாவுக்கும் ஜெயேந்திரருக்கும்நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

தமிழ் ஓவியா said...

லீலாவும் ஜெயேந்திரரும் மணிக்கணக்கில் டெலிபோனில் அரட்டை அடிப்பது வழக்கம். அவர் மூலமாக ஜெயேந்திரரின்அறிமுகம் கிடைத்தது.

சரஸ்வதியிடம் தகாத செயல்:

1995ம் ஆண்டில் நான், விஸ்வநாதன், அவரது மனைவி சரஸ்வதி மூன்று பேரும் தாம்பரத்தில் ஜெயேந்திரர் தங்கியிருந்தகல்யாண மண்டபத்தில் அவரை சந்திக்கப் போனோம். இரவு நேரத்தில் ஜெயேந்திரரை நாங்கள் தனித்தனியாக சந்திக்கவைக்கப்பட்டோம்.

பின்னர் மூவரும் வீட்டுக்குத் திரும்பியபோது, தன்னிடம் ஜெயேந்திரர் தகாத முறையில் நடக்க முயன்றதாக சரஸ்வதி எங்களிடம்கூறினார்.

இதையடுத்து ஜெயேந்திரரை கண்டிக்குமாறு லீலாவிடம் சொன்னோம். அவரும் ஜெயேந்திரருடன் பேசினார். இதைத் தொடர்ந்துசரஸ்வதியிடம் டெலிபோனிலேயே ஜெயேந்திரர் மன்னிப்பு கேட்டார்.

அதே சமயம் நானும் லீலாவும் தொடர்ந்து, அடிக்கடி காஞ்சி மடத்துக்கு சென்று வந்தோம். லீலாவுடன் மணிக்கணக்கில்ஜெயேந்திரர் தனியே பூட்டிய அறையில் இருப்பார். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்து போனதால், என்னை சங்கராகல்லூரிக் குழுவின் உறுப்பினராக ஜெயேந்திரர் நியமித்தார்.

அந்தக் கல்லூரிக்காக கட்டடம் கட்ட ரூ. 1.6 கோடி செலவிட திட்டமிட்டார். அந்தப் பணியை என்னிடம் தந்தார். நான் கட்டித்தந்தேன். இதையடுத்து காஞ்சி மடத்தின் பல கட்டட வேலைகளை எனக்குத் தந்தார் ஜெயேந்திரர்.

மதிய நேரத்தில் பெண்களுடன்:

ஜெயேந்திரருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய தொடர்பு இருந்தது. மதிய நேரத்திலேயே தனது அறைக்குள் பல பெண்களுடன்அவர் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

பிரேமா:

மடத்தின் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் இயக்குனர் நடராஜனின் மனைவி பிரேமா, ஹைதராபாத்தில் ஆல் இந்தியாரேடியோவில் வேலை பார்க்கும் பெண் ஆகியோரை ஜெயேந்திரருடன் தவறான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

பத்மா-ரேவதி:

மருத்துவமனையின் கேண்டீன் வைத்திருக்கும் பத்மாவையும் மதிய நேரத்தில் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன். மடத்துக்குச்சொந்தமான நசரத்பேட்டை பள்ளியின் முதல்வர் ரேவதியும் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன்.

மதிய ஓய்வு நேரத்தில், பக்தர்களை சந்திக்காதபோது இவர்களுடன் இருந்துள்ளார் ஜெயேந்திரர்.

புளு பிலிம்:

இதைத் தவிர நிறைய புளு பிலிம் படங்களையும் ஜெயேந்திரர் பார்ப்பார். மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரைஇதெல்லாம் நடக்கும்.

2000ம் ஆண்டில் ஒருநாள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் ஜெயேந்திரர் இருந்தார். அநத நேரத்தில் ஒரு மிகப் பெரியதொழிலதிபரின் மனைவி ஜெயேந்திரரை சந்திக்க வந்துவிட்டார். அவர் மிகப் பெரிய இடம் என்பதால் அனுமதி இல்லாமலேயேஜெயேந்திரரின் அறைக்குள் நுழைய வந்துவிட்டார்.

அரைகுறை ஆடையுடன் இளம்பெண்:

இதனால் பக்கத்து அறையில் இருந்த என்னை அவரசமாக அழைத்த ஜெயேந்திரர், அந்த ஆந்திரா பெண்ணின் கணவரைப் போலநடிக்குமாறு கூறினார். ஜெயேந்திரின் அறைக்குள் அரைகுறை ஆடையுடன் இருந்த அந்த இளம் பெண்ணின் அருகில் அவரதுகணவர் போல நடித்தேன். தொழிலதிபரின் மனைவி வந்துவிட்டுப் போகும் வரை அப்படியே உட்கார்ந்திருந்தேன்.


Sankarachari & Vajpayee

இங்கு குறிப்பிட்டவை வெகு சிலவே. தட்ஸ்தமிழ், தினபூமி நாளிதழ்களில் வந்த துண்டு செய்திகளை கொண்டு தொகுத்துள்ளேன். ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களின் பழைய பதிப்புகளை புரட்டி பார்த்தால் தான் சங்கராச்சாரி ஜெயந்திரனின் உண்மையான முகம் தெரியும்.

சங்கராச்சாரியை மக்களிடம் அம்பலபடுத்துவோம்!
சங்கர மடம் & நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த நிர்பந்த்திப்போம்!
பார்ப்பனீயத்தை திரை கிழிப்போம்!


நன்றி: தட்ஸ்தமிழ், தினபூமி
-----------------http://www.tamilcircle.net/index.php?view=article&catid=204%3A2008-09-29-07-10-56&id=6069%3A2009-08-06-07-00-57&option=com_content&Itemid=50

தமிழ் ஓவியா said...

சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்!



விவரங்கள்
வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 02 டிசம்பர் 2013 02:59

சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்!

சங்கரராமன்....

ஒரு செய்தியாளனாக என்னால் மறக்க முடியாத நபர், நண்பர்.



காஞ்சிபுரத்தில் நான் இருந்த நாட்களில் தினசரி காலையும் மாலையும் என்னை தவறாமல் சந்திக்க வந்து விடுவார். அவருடன் ஒரு மெல்லிய துண்டு போர்த்திக் கொண்டு அவரது மகன் கொழுக் மொழுக்கென்று வந்து நிற்பான். சின்னகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற நண்பர்தான் சங்கரராமனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஒவ்வொரு கோயிலிலும் நடக்கும் முறைகேடுகள் பற்றி துல்லியமாக புள்ளிவிவரம் தருவார் சங்கரராமன். எந்தக் கோயிலில் என்ன விசேஷம், அதன் வரலாறு, இப்போதுள்ள நிலைமை என எனக்குத் தேவையான விவரங்களை தினமும் தருவது அவர் வழக்கம். முடிந்தவரை தமிழகத்தின் அனைத்து கோயில்கள் பற்றியும் எனக்குப் புத்தகங்கள் தந்திருக்கிறார்... ஒரு நாள் விட்டு ஒருநாள் நான் எழுதிய கோயில் கட்டுரைகளை இப்போது தொகுத்தாலும் தனிப் புத்தகம் தேறும். அதற்கான பெருமை சங்கரராமனுக்குத்தான்!

ஒரு முறை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 400 ஏக்கர் நிலமிருந்தும் ஒரு மூட்டை நெல்லுக்கு வழியில்லை என்ற தகவலை ஆதாரங்களோடு தந்தார். 'குத்தகைதாரர்கள் தெய்வத்தையே ஏமாற்றும் கொடுமையை யாரும் எழுதமாட்டறாளே' என குமுறினார். அதை படங்களோடு முதல் பக்க செய்தியாக்கினோம். சில தினங்களில் வரதராஜருக்கு வரவேண்டியவற்றில் ஓரளவுக்காவது வர ஆரம்பித்ததை மகிழ்ச்சியோடு சொல்லி, அந்தக் கோயிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமான 'படி இட்லி' - புதினா சட்னியை கொடுத்துவிட்டுப் போனார்!

இந்தக் கோயிலில் நடந்த இன்னொரு அக்கிரமம்... கட்டாய அர்ச்சனை டிக்கெட் விற்பனை. அதாவது கோயிலுக்குள் நுழையும்போதே இந்த டிக்கெட்டை பணம் கொடுத்து பெற்றே தீர வேண்டும். கிட்டத்தட்ட நுழைவுச் சீட்டு. இது மிகப் பெரிய மோசடி என்பதை கவனத்துக்குக் கொண்டு வந்தார் சங்கரராமன். அப்புறமென்ன.. முதல் பக்க செய்தியானது. அதன்பிறகு, அந்த டிக்கெட் கவுன்டர் காணாமல் போனது.

சங்கர மடத்தில் எதிர்மறையாக என்ன நடந்தாலும், அது செய்தியாக வெளிவரக் கூடாது என்பது எழுதப்படாத உத்தரவு. எனவே புதிதாக வந்த என்னிடம்தான் அவர் சங்கர மடத்து சமாச்சாரங்களை அதிகமாகப் பகிர்ந்து கொள்வார்.

அந்த மடத்தில் அடிக்கடி பிணங்கள் விழும். இளம் ஆண் பிணங்கள். அதனை எந்த செய்தித் தாளிலும் செய்தியாகப் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும், மின்சாரம் தாக்கி பலி என்பதோடு நின்றுவிடும். பெரும்பாலும் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் அல்லது வெளி மாநில இளம் பக்தர்கள் இப்படி ஷாக்கடித்து இறந்திருப்பார்கள்.

தமிழ் ஓவியா said...

அதி நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட சங்கர மடத்தில் ஏன் அடிக்கடி ஷாக் அடிக்கிறது என்பது குறித்து சங்கரராமன் சொன்ன பின்னணி பயங்கர ஷாக்கான சமாச்சாரம்!

ஜெயேந்திரரைப் பார்க்க வரும் வெளி மாநில, வெளிநாட்டுப் பக்தர்கள், தரும் ரொக்க - தங்க காணிக்கைகள் குறித்து அவர் அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார். சங்கரராமனுக்கு ஜெயேந்திரர் வைத்திருந்த பெயர் துஷ்டன்! நேருக்கு நேர் பார்த்தால் பக்கத்திலிருப்பவர்களிடம் 'இந்த துஷ்டப் பய எதுக்கு வந்திருக்கான் கேளு.. அவனை முதல்ல போகச் சொல்லு', என்பாராம். இதுவும் சங்கரராமன் சொன்னதுதான்.

எழுத்தாளர் அனுராதா ரமணன் ஜெயேந்திரர் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளை, தொன்னூறுகளிலேயே பலரிடமும் சொன்னவர் சங்கர்ராமன்.

பல முறை தன்னை யாரோ துரத்தியதாகவும், தாக்க முயன்றதாகவும் சங்கரராமன் சொல்வார். ஆனால் அதை பெரிதாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு நாள் தன்னை சங்கர மடத்து ஆட்கள் அடித்துவிட்டார்கள் என்று கூறி, முழங்காலில் ரத்த காயத்துடன் வந்தார்.

அதன் பிறகு அவரைப் பார்த்தாலே மற்ற நிருபர்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர். 'இதுக்கு வேற வேலயே இல்ல. கண்டுக்காதீங்க... இதுமேலயும் தப்பு இருக்கு,' என்றனர்.

ஒரு கட்டத்தில் சங்கரராமன் தரும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை என்னால் செய்தியாக வெளியிட முடியவில்லை. காரணம், அலுவலகத்தில் பலரும் சங்கர மடத்தின் அறிவிக்கப்படாத பிஆர்ஓக்களாக செயல்பட்டதுதான்.

இதனால் நானே கூட சில சந்தர்ப்பங்களில் சங்கரராமனைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். ஆனால் அந்த மனிதர் புரிந்து பக்குவமாகத்தான் நடந்து கொண்டார்.

டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்... ஒருநாள் சங்கரராமன் வந்தார். 'சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா... குடிச்சிட்டு பூஜை பண்றான்... வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகம் முடிஞ்சதும், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது... இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,' என்று வந்து நின்றார்.

"ஸாரி சங்கரராமன்... ஒரு வார்த்தை கூட இதுபத்தி இப்போ இருக்கிற பேப்பர்ல எழுத முடியாது," என்றேன். 'என்னண்ணா சொல்றேள்...' என சற்று அதிர்ச்சியுடன் கேட்டபடி வெளியேறினார் சங்கரராமன்.

ஆனால் அவருடனான நட்பில் மாற்றமில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் போனாலே போதும், எங்கிருந்தாலும் ஓடி வருவார்... ஒவ்வொரு பிரகாரம், சந்நிதிகளுக்கும் அழைத்துப் போய் கோயிலின் பெருமை சொல்வார். தவறாமல் படி இட்லி பிரசாதம் பெற்றுத் தருவார். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், கற்சங்கிலிகள் குறித்து அவர் தரும் விளக்கம் சிறப்பாக இருக்கும்.

கடைசியாக 2001-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் என்னைப் பார்க்க படி இட்லியோடு வந்திருந்தார் சங்கரராமன்.
பத்திரிகைகள் கைகொடுக்காத நிலையில், ஒரு நாள் தன்னுடைய சொந்த பெயரிலே 'எச்சரிக்கை' என்ற தலைப்பில் ஜெயந்திரர், விஜயேந்திரர், ரகு மற்றும் மேலும் சிலர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதை திருத்திக்கொள்ளும்படி கேட்டு ஜெயந்திரருக்கு அனுப்பி வைத்தார்.

அடுத்த நான்காவது நாள், சங்கரராமன் ஒரு நாற்காலியோடு மல்லாக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துப் பதைத்தேன்!

இதையெல்லாம் விலாவாரியாக சொல்லக் காரணம், சங்கரராமன் என்ற மனிதர் ஜெயேந்திரருக்கு எந்த அளவுக்கு பெரும் தலைவலியாகத் திகழ்ந்தார் என்பதைச் சொல்லத்தான்!

தகவல்: சங்கர் http://www.inneram.com/thoughts/others-best/3702-sankararaman-and-sankaramadam.html

தமிழ் ஓவியா said...

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரன் பேசுகின்றேன்!


காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதிமீது கொலைக் குற்றம் இருந்தும், காமவெறியர் என்று மக்களால் தூற்றப்பட்டும்கூட அவருக்கு 76ஆம் ஆண்டு பிறந்த நாளை ஜெயந்தியை வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ஆசாமியும் கொஞ்சமும் லஜ்ஜையின்றி

ராஜ நடை போட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்.

சங்கை கெட்டுப் போன சங்கராச்சாரியாரை பார்ப்பனர்கள் தூற்றுவதில்லை; விட்டுக் கொடுப்பதில்லை. காரணம் இனவுணர்வுதான். தமிழர்களின் நிலை என்ன?

உண்டகலத்தில் ரெண்டுக்குப் போகும் மனிதர்கள் தானே!(தந்தை பெரியார் கூறிய உவமை இது.) நான் யார் தெரியுமா?

இதோ காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பேசுகிறார்:

1) என்மீதுள்ள வழக்குகள் குற்றப்பிரிவு 302, 120பி,34, 201 ஆகிய பிரிவுகள் கொலை செய்யத் தூண்டுதல் கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை இந்தப் பிரிவுகளில் என்னைக் கைது செய்துள்ளனர். (11.11.2004). என்மீதுள்ள முக்கிய குற்றச்சாற்று. காஞ் சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் ஆனந்த சர்மா மகன் சங்கரராமனைக் கொலை செய்தது. (3.9.2004)

தமிழ் ஓவியா said...

2) என்மீதுள்ள இன்னொரு குற்றச்சாற்று சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது (இ.பி.கோ. 120பி, 307).

3) மற்றொரு குற்றச்சாற்றும் உண்டு. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது (31.8.2004) நெல்லை மாவட்டம் திருக்கருக்குடி பெருமாள் கோயிலில் இருந்த சிவன் கோயிலை நான் இடித்தேன். இடித்தது தவறு என்றுகூறி இந்த மாதவன் மறுபடியும் சிவன் கோயிலைக் கட்ட முயற்சி செய்தான். அதனால் மாதவனைத் தாக்கியது.


4) 1987இல் (23.8.1987) காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக தண்டத்தை விட்டு விட்டு தலைக் காவேரிக்கு ஓடினேன் (நேபாள பெண்மணி ஒருவருடன்)

5) தண்டத்தை மடத்தில் விட்டு விட்டு ஓடியதால் மடத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றாகி விட்டது. காமத்தைத் துறந்த நிலையிலிருந்து விடுபட்டு, காதல் உலகில் சஞ்சரித்ததாக இதன் பொருள். நான் தண்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு மடத்தைவிட்டு ஓடியதால், காஞ்சிப் பெரியவாள் அவசர அவசரமாக விஜயேந்திரனுக்கு அடுத்த பட்டத்தைச் சூட்டி விட்டார்.

6) அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் முயற்சியால் மீண்டும் காஞ்சி மடத்துக்குக் கொண்டு வரப்பட்டேன். தண்டத்தைத் துறந்து மடத்தைவிட்டு நான் வெளியேறி விட்டதால், மடத்துக்கும் எனக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை என்று சொன்னதை மகா பெரியவாள் கடைசி வரை வாபஸ் வாங்கவேயில்லை. ஆனாலும் விவஸ்தைகெட்டு மடத்தில் இருந்தேன் இருக்கிறேன். 7) என்மீது வேறு குற்றச்சாற்றுகளும் உண்டு.


திருப்பதி தோமலை சேவையின்போது குலசேகரன் படியில் அமர்ந்து ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணி) அர்ச்சனை செய்தேன். கோயில் அர்ச்சகரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று தெரிந்தும் அதனைச் செய்தேன். அர்ச்சகர் என்னைத் தடுத்தார்; நான் அதைச் சிறிதும் சட்டை செய்யவேயில்லை. (3.11.2000). 8) பெண் விஷயத்திலும் என்மீது ஏகப்பட்ட புகார்கள். இந்த வகையில் பிரேமானந்தா. நித்யானந்தாக்களுக்கு முன்னோடி நான். அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து நான் இழுத்ததாக டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக எடுத்துக்கூறி என் மானத்தைக் கப்பலேற்றிவிட்டார்.

9) திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் செய்து அணிவித்தேன் (5.4.2002) இதன் மூலம் கடவுளையும் என் பிராமண ஜாதிக்குள் கொண்டு வந்து விட்டேன்.

தமிழ் ஓவியா said...

10) தாம்ப்ராஸ் என்னும் பார்ப்பன சங்கத்தின் மூலம் வெளியிடப்பட்ட அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் நூல் வெளியீட்டு விழாவில் கடவுளுக்கும் மேலே உயர்ந்தவன் பிராமணன் என்று பேசினேன் (9.10.2002). இதன்மூலம் என் ஜாதி ஆணவத்தை வெளிப்படுத்தினேன். (மும்மலத்தையும் அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் கடந்தவர்கள் தான் காமகோடி என்று சொல்லப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரை இவற்றிற்கு ஆட்பட்டவன் தான்).

11) மதுரை மாவட்டம் தும்பைப்பட்டிக்குச் சென்றேன், (10.11.2002). கக்கன் பிறந்த ஊர்அது. ஹரிஜன்கள் என்னைத் தொட்டு விடாதபடி தோளில் தொங்கிய துணியை எடுத்துக் காலில் சுற்றிக் கொண்டேன்.

இதன் மூலம் நான் தீண்டாமையை ஆதரிக்கும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டேன்.

12) எல்லா ஜாதியாருக்கும் ஒரே சுடுகாடு கூடாது என்ற கருத்தைச் சொன்னவன் நான் (விடுதலை 8.3.1982). இதனால் ஜாதி வெறியன் என்று தூற்றப்பட்டேன்.

13) பா.ஜ.க., ஆட்சியின் போது அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதற்கு எனது பாராட்டுதலை வெளிப் படையாகத் தெரிவித்தேன் (தினமணி 16.5.1998).

இதன் மூலம் உலகில் சாந்தம் தழைக்க வேண்டும் ஹானி நீடிக்கக் கூடாது என்கிற பொதுவான மனிதப் பண்புக்கு எதிரியாக அடையாளம் காட்டப்பட்டேன்.

14) ரஜினியுடன் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம் என்று விஜயகாந்துக்கு அட்வைஸ் செய்தேன்.

(குமுதம் 18.1.2001)

இதன் மூலம் ஒரு மதத் தலைவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை உடைத்தவன் ஆனேன்.

15) அயோத்தியில் கட்டடத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை என்று கூறினேன் தினமணி (27.11.2000). இதன்மூலம் வன்முறைக்கு வித்திட்டவன்; சட்டத்தை மதிக்க மறப்பவன் என்று விமர்சிக்கப்பட்டேன்.

16) தமிழில் குடமுழுக்கு கூடாது என்றேன்.(இந்தியா டுடே 2.10.2002).

இதன் மூலம் தமிழ் நீஷப்பாஷை என்று என் குருநாதர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்தில் உறுதியாக நான் இருந்ததால் தமிழர்களால் நான் தூற்றப்பட்டேன்.

17) பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்றேன் (தி பயனீர் 17.3.1997)

பெண்களால், எதிர்க்கப்பட்டேன். விதவைப் பெண்களைத் தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டுப் பேட்டி அளித்தேன். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும் கூறினேன்.

மகளிர் உண்டு இல்லை என்று எதிர்ப்புச் சூட்டைக் கிளப்பினார்கள். தி.க. மகளிர் அணியினர் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டமே நடத்தினர் (9.3.1998).

18) கொலை செய்யப்பட்ட சங்கரராமன் என் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி விட்டான். எனது இன்னொரு பக்கமான ஆபாச நடவடிக்கைகளை எல்லாம் வண்டி வண்டியாக ஏற்றி விட்டான். (தனிப் பட்டியல் கீழே)

19) குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படும்வரை மடத்தின் பதவியிலிருந்து நான் விலக வேண்டும் என்று துவாரகா பீடம் ஸ்வரூபானந்துகூட கூறினார். (தி இந்து 3.12.2004) நான் சட்டை செய்யவில்லையே! ஆனாலும் பார்த்தேளா, எனது 76ஆவது ஜெயந்தி விழா ஜாம்ஜாமென்று நடக்கிறது. பத்திரிகைகளில் எல்லாம் பக்கம் பக்கமாக விளம்பரங்கள்! பிராமணாள் ஒரு பக்கம் சூத்திராள் இன்னொரு பக்கம் ஜமாயிக்கிறார்கள். எவ்வளவு கேவலமாக எங்கள் நடத்தை இருந்தாலும் எங்களவாள் விட்டுக் கொடுக்க மாட்டவே மாட்டாள். இவ்வளவு நடந்திருக்கே... எங்க மனுஷாள் என்மீதோ, மடத்தின் மீதோ கரித்துக் கொட்டியதுண்டா?

உங்களவாள் மாதிரியா? உண்ட வீட்டுக்கே ரெண்டகம் என்பதெல்லாம் எங்களைப் பொறுத்தவரை இல்லாத ஒன்று. ஆயிரம் பெரியார் தான் வரட்டுமே உங்களில் விபீஷணன்களை நாங்கள் உற்பத்தி செய்து கொண்டே இருப்போம்!

அந்தக் கைத்தடிகள் அனுமார்கள் இனாமாக எங்களுக்குக் கிடைக்கும் போது எங்களுக்கு ஏது பயம்?

ஹி... ஹி....

-------------- விடுதலை (31.07.2010) மின்சாரம் எழுதியது

தமிழ் ஓவியா said...



அவாள் அப்பன் வீட்டுச் சொத்தோ!

மின்சாரம்

பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்பது ஒரு பழமொழி, இன்றைக்கு இந்தியன் வங்கியும் இந்த வகையில் பூணூல் கயிற்றில் மனு நீதிக் கொடியை ஏற்றி பார்! பார்!! எங்கள் பார்ப்பன தர்பாரைப் பார்! என்று பழிப்புக் காட்டுகிறது தமிழர்களைப் பார்த்து

கடந்த வாரத்தில் இரு தகவல்கள் வெளி-வந்துள்ளன. ஒரு சேதி இந்து ஏடு வெளியிட்ட-தாகும்.

Sankara Nethralaya Activities Hailed என்ற தலைப்பில்18.3.2010 அன்று வெளியானது.

The Bank donated Rs.1 crore to sankara Nethralaya for revamping infrastructure and introducing new services. இன்னொரு தகவல் தினமணியில் (18.3.2010) சங்கரா பல்கலைக் கழகத்துக்கு இந்தியன் வங்கி ரூ.1 கோடி நிதியுதவி என்பது தான் இந்த இரண்-டாவது சேதியாகும்.

இந்தியன் வங்கியின் தலைவராக (Chairman) இருக்கும் எம்.எஸ். சுந்தர்ராஜன் என்ற பார்ப்பனர் இந்த நிறுவனங்களுக்கு அரசுடைமையாக்கப்பட்ட இந்தியன் வங்கியின் பணத்திலிருந்து அண்டை வீட்டு நெய்யே அக்கிரகார மாமியின் கையே! என்ற போக்கில் தூக்கிக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பார்ப்பனர்மீது சி.பி.அய். விசார-ணை-யெல்லாம் நடைபெற்றதுண்டு. எப்படியோ அவற்றிலிருந்து எல்லாம் தப்பித்து இந்தியன் வங்கியின் தலைவராகி, தங்கள் இனத்தைச் சேர்ந்த வாளுக்கு இப்படியெல்லாம் அள்ளிக் கொடுக்கிறார்.

இவ்வளவுக்கும் இந்தப் பார்ப்பனர் வரும் ஏப்ரலில் ஓய்வு பெற உள்ளார். அதற்குள் நம்ம-வாளுக்கு எதையாவது செய்து கொடுக்க வேண்-டும்-என்ற துரித வெறியில் ஈடுபட்டு இருப்ப-தாகத் தெரிகிறது.

சங்கரா நேத்திராலாயா நிறுவனத்தின் உரிமையாளரான எஸ்.எஸ். பத்ரிநாத் என்ப-வரும் ஆந்திராவைச் சேர்ந்த - _ சங்கர மடத்தின் அத்தியந்த சிஷ்யக் கோடி.

இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் எல்லாம் சங்கராச்சாரியார் தான் தலைமை விருந்தினர்.

அதேபோல காஞ்சி மடம் ஏனாத்தூரில் மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர் பெயரில் நடத்தும் பல்கலைக் கழகத்துக்கும் கொலைக் குற்றத்தின்கீழ் திரிந்து கொண்-டிருக்கும். ஜெயேந்திர சரஸ்வதியிடம் ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை இந்தியன் வங்கித் தலைவர் சுந்தர்ராஜன் கொடுத் துள்ளார்.

வங்கித் தலைவரான சுந்தர்ராஜன் தன்னிச்சையாகத் தூக்கிக் கொடுத்திருக்க முடியாது. அதன் தலைமை அமைப்பின் (Board) ஒப்புதல் பெற்றுத்தான் கொடுத்திருக்க வேண்டும்.

மத்திய அரசின் பிரதிநிதி, ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி என்று பல இயக்குநர்கள் அடங்கிய கூட்டத்தில் இதனைத் தீர்மானித்திருப்பர் என்பது உண்மைதான்.

ஆனாலும் அந்த இயக்குநர்களும் யார்? எல்லாம் அக்கிரகாரத்து மடிசஞ்சிக் கூட்டம்தானே!

இந்தியன் இ.பி.கோ. குற்றப் பிரிவின்கீழ் (302, 120-_பி, 34, 201) கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை உள்ளிட்ட பிரிவின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டு, கைதும் செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறைச்சாலையில் 61 நாள்கள் கம்பி எண்ணிக் கொண்டிருந்த ஓர் அசிங்கமான பிறவிதான் ஜெயேந்திரர் என்பது ஊர் சிரித்த செய்தியாகும்.

தமிழ் ஓவியா said...

இந்த யோக்கியதையுள்ள ஒரு மனிதரிடம் நாட்டுடைமையாக்கப்பட்ட அரசு வங்கியின் தலைவர் மக்கள் பணத்தை ஒரு கோடி தூக்கிக் கொடுக்கிறார் கொஞ்சம்கூட கூச்ச நாச்ச-மின்றியென்றால், பார்ப்பனர்களின் இனவெறி எந்த நிர்வாணக் கோலத்தில் கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு கூத்தாடுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

கொலைக் குற்றம் மட்டுமல்ல; பெண்கள் விஷயத்திலும், எவ்வளவு பெரிய பச்சை இந்த ஜெயேந்திரர் சரஸ்வதி என்பதை, பார்ப்பனப் பெண்ணான அனுராதா ரமணன் என்ற எழுத்-தாளரே தொலைக்காட்சியில் அம்பலப்-படுத்தினாரே!

தன் எதிரிலேயே ஒரு பெண்ணுடன் இந்தப் பெரியவாளு உடலுறவு கொண்ட அகோரத்தை என்ன சொல்ல என்று தலையில் அடித்துக் கொண்டாரே!

ஆனாலும் பார்ப்பனர்களின் இனப்பற்று இருக்கிறதே அது மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவி நிற்கும் தடிமன் கொண்டது.

வேசியர்களிடத்தில்கூட வெட்கமிருக்கும்; ஆனால் இந்த வேதியக் குலக் கொழுந்துகளிடம் மருந்துக்கும்கூட வெட்கம், கூச்சம் என்பது கிடையவே கிடையாது என்பதற்கு ஜெயேந்திர சரஸ்வதிகளையும் இவர்களைத் தாங்கிப் பிடிக்கும் சுந்தர்ராஜன்களையும் பார்க்கும்பொழுது புரியவில்லையா?

இந்த ஏனாத்தூர் பல்கலைக் கழகத்திலும், விடுதிகளிலும் பச்சையாக தீண்டாமைப் பாம்பு படம் எடுத்து ஆடியதே நினைவிருக்கிறதா? திராவிடர் கழகம் அதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் கூட நடத்தியதே!

இந்தியன் வங்கி ஒரு கோடி ரூபாயை, தூக்கிக் கொடுத்துள்ளதே -_ அந்தப் பல்கலைக் கழகம் யார் பெயரால் அமைந்தது? மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியான் பெயரால் அமைந்ததுதான்!

அவர் யார்? தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறிய இந்திய அரசமைப்புக் சட்டத்தின் 17ஆவது பிரிவின்கீழ் தீண்டாமை ஒழிப்புக் குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டியவர். அத்தகைய ஒருவரின் பெயரால் அமைந்திருக்கும் ஒரு பல்கலைக் கழகத்துக்கு அரசு வங்கி இவ்வளவு பெரிய தொகையைத் தானமாக வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள பொது நல விரும்பிகள் _ தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் எந்த அடிப்படையில் சங்கரா நிறுவனங்களுக்கு இந்தியன் வங்கி இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தது? இதற்குமுன் இந்த மடத்துக்கு எப்பொழுதெல்லாம் அரசு வங்கியின் பணம் தாரை வார்க்கப்பட்டது?

இப்படி நிதியைக் கொடுக்க இந்தியன் வங்கி வைத்துக் கொண்டிருக்கும் அளவுகோல், நிபந்தனைகள் என்னென்ன? வேறு யார் எல்லாம் இப்படி நன்கொடை கேட்டனர்? அவர்களுக்கெல்லாம் அளிக்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேளுங்கள்! கேளுங்கள்!!

கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் தங்கள் குலத் தலைவர் சங்கராச்சாரியார்! அவரை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கும் இந்தப் பார்ப்பனர்களை _ தமிழர்களே, தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்களின் இனநலம் எங்கே? நம் மக்களின் இனநலம் எங்கே? சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!
http://viduthalai.periyar.org.in/20100327/snews01.html

தமிழ் ஓவியா said...

ஏனில்லை பெரியார் படம்? - தமிழேந்தி

வரலாற்றைத் திருத்தும் வேலை

வழக்கமாய்ப் பார்ப்பான் வேலை

பெரியாரைத் தலைகீ ழாகப்

பிழைபடக் காட்டும் வேலை

சரியாய் அவ் வேலை தன்னைத்

தமிழ்த்தேசம் பேசு வோர்கள்

விரிவாகச் செய்கின் றார்கள்

விதைநெல்லை அவிக்கின் றார்கள்!

புராணங்கள் பொய்கள் தம்மைப்

பூணூலார் சதிகள் தம்மை

இராப்பகல் எடுத்துச் சொல்லி

இனமானம் காத்து நின்றார்

திராவிடர் தமிழர் என்றார்

திருக்குறள் மேன்மை சொன்னார்

பொறாமையால் இவரை மாற்றான்

போலன்றோ பழிக்கின் றார்கள்!

ஒருபக்கம் சாதிக் கேடோ

உழைப்பாளர் தமைப்பி ளக்கும்

மறுபக்கம் மதத்தின் ஆட்டம்

மாத்தமிழ் நாட்டு மாண்பின்

திறத்தையே சிதைக்கும்; இந்தத்

தீமைக் கெலாம்ம ருந்து

உரத்தோடே அய்யா தந்த

ஒப்பருங் கருத்தி யல்தான்!

காட்டமாய்க் கொதித்தெ ழுந்து

காங்கிரசின் தலையில் போடு

போட்டவர் பெரியார்; சீறும்

புயலாகித் தமிழர் நாடு

கேட்டவர் பெரியார்; இங்குக்

கீழ்ச்சாதி யாம்,நம் மானம்

மீட்டவர் பெரியார்; எல்லா

மேன்மைக்கும் பெரியார் தான்வேர்!

புடைப்பத்தோள் உயர்த்தி நாளும்

புலிவீரம் பேசிப் பேசித்

தடைக்கெல்லாம் பெரியார் செய்த

தவறென்றே சொல்லிச் செல்லி

முடக்கினர் அவர்ப டத்தை

முள்ளிவாய்க்கால் முற்றந் தன்னில்!

விடைவர லாறு கூறும்

வெறுங்கூச்சல் கரைந்தே போகும்!
- தமிழேந்தி

தமிழ் ஓவியா said...


மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பற்றாக் குறைக்கான தீர்வு தமிழர் தலைவரின் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை


என்னை வாழ்நாள் கடனாளியாக்கிவிட்டீர்களே! தமிழர் தலைவரின் உருக்கமும், உயர்நோக்கமும் கொண்ட அறிக்கை

மத்திய அரசின் பொருளாதார நெருக்கடிகளைச் சரி செய்யவும், மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித் தும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

நமது மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையெல் லாம் சிறிது சிறிதாக விற்று, தனியார் உடைமைகளாக அவை ஆவதற்கு வழி வகை செய்யும் வேதனையான போக்கு - அரசியல் சட்டத்தின் பீடிகையில் குறிப்பிடப்பட்ட குறிக்கோளான சமதர்மத்தைக் காணாமற் போகவே வழி வகுக்கின்றது.

காரணம் கூறும்போது, நிதிப் பற்றாக் குறை என்பதால், பல்வேறு துறைகளில் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தை, கசக்கிப் பிழியும் கொடுமையும் ஏற்பட்டு வருகின்றது.

சுவிஸ் வங்கியில் பல லட்சம் கோடி ரூபாய்

அதே நேரத்தில் சுவிஸ் வங்கிகளில் இந்தியாவி லிருந்து போடப்பட்டுள்ள பல லட்சம் கோடி ரூபாய்களைக் கொணர, நாடாளுமன்றத்தில் வாக்குறுதி கொடுக்கப்பட் டதே தவிர, உருப்படியான முயற்சிகள் இல்லை; பல லட்சம் கோடி ரூபாய்களை நம் நாட்டிற்குக் கொண்டு வந்தால், நமது நிதிப் பற்றாக்குறை சுமை என்பது பெரிதும் குறையும்.

அது மட்டுமா? நாட்டின் பெரும் பணத் திமிங்கலங் களும், பண முதலைகளுமான பலருக்கும் சலுகை களுக்கு மேல் சலுகை! சலுகையால் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் என்ற சாக்கில் தரப்பட்டு வாராக் கடன்களாக் கப்பட்டு, வசூலிக்கப்படாத நிலுவைத் தொகைகள் பல லட்சணக்கான கோடி ரூபாய்கள் ஆகும்!

அவர்களது (பெரிய மனிதர்கள்) கடன் பற்றி ரிசர்வ் வங்கியோ, துறைகளோ வெளிப்படையாக ஏன் விளம்பரம் தந்து, வசூலிக்கத் தயங்குகின்றன?

ஏழை விவசாயிக்குக் கொடுத்த கடன், அவனுடைய நட்டத்தால் திரும்பக் கட்ட முடியாத நிலை என்றால் உடனே துள்ளிப் பாய்கின்ற நடவடிக்கைகள்.

மாணவர்களுக்காக பெற்றோர் கள் கல்விக் கடன் பெற படாதபாடு படவேண்டியிருக்கிறது தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில்!

கடனைத் திருப்பித் தராத திமிங்கலங்கள்

பெரும் கடன் வசூலாகாத வர்களில் 50 பேர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது; அதில் காணப்படும் முக்கிய விவரங்கள் இதோ.

வாராக்கடன் தொகை மொத்தம் ரூ.5 லட்சம் கோடி யாம்! (இந்திய ஊழியர்கள் சங்கம் தந்துள்ள தகவல் இது!)

கிங்பிஷர் என்ற விமான சேவை துவங்கிய விஜய் மல்லய்யா என்ற பெரு முதலாளி, மது உற்பத்தியில் நாட் டிலேயே நம்பர் ஒன் என்று பெயரெடுத்த சாராயத் தொழிற்சாலைகளுக்கு அதிபர், அவர் செலுத்த வேண்டிய தொகை 2,673 கோடி ரூபாய்கள்!

172 பெரிய தொழில் நிறுவனங்கள் ரூ. நூறு கோடிக் கும் மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் உள்ளன.

ஒரு கோடிக்கும் மேல் கடன் வைத்திருப்பவர்கள் 7,295 பேர்கள்.

இதில் மிகவும் அதிர்ச்சியூட்டக் கூடிய ஒரு செய்தி.

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கே.எஸ். ராவ் என்பவர் கடன் பெற்று திருப்பித் தராமல் இருக்கும் தொகை ரூ.350 கோடியாம்!

இவை உதாரணத்திற்கு, ஒரு பானை அல்ல; ஒரு சில பருக்கைச் சோறுகள்.

அதே நேரத்தில் மற்ற ஏழை, எளிய, தொழிலாளர்கள், பாக்கிகளை வைத்தால் அவற்றை வசூலிப்பதில் அரசு காட்டும் மும்முரம் ஏன் இந்தப் பெரிய மனிதர்களிடம் மட்டும் பாய்வதில்லை?

விஜய்மல்லய்யா அவர்கள் திருப்பதி வெங்கடா ஜலபதிக்கு தங்கத்தில் நறுக்கென்று சுமார் ரூ.700 கோடி. (?) பக்தி காணிக்கை செய்கிறார்; மத்திய அரசுக்கும், அவரிடம் வேலை பார்த்த ஊழியர்களின் சம்பள பாக்கிக்கும் பட்டை நாமம் போடுகிறார்!

பக்தி எப்படியெல்லாம் பயன் தருகிறது பார்த்தீர்களா?

மணல் வியாபாரத்தை மாநில அரசே செய்யலாமே!

அதுபோலவே மாநில அரசு, தமிழக அரசு, மணல் வியா பாரக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த காலந்தாழ்ந்து கண் விழித்துக் கொண்டது. (உயர்நீதிமன்ற ஆணை காரணமோ என்னவோ)

மணலை அரசே எடுத்து விற்பனை செய்வதன்மூலம் பல்லாயிரக்கணக்கில் அதற்கே லாபம் வர வாய்ப்பு உண்டு.

அதற்கென ஒரு தனித் துறையை உருவாக்கிடலாம். அரசு, தன் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்.

அரசு, மது விலக்கைச் செயல்படுத்தி சாராய வியா பாரத்தை ஒழித்து விட்டுக்கூட, மணல் போன்ற பல்லா யிரக்கணக்கான ரூபாய் லாப வருவாய் வரும் துறையை எடுத்து, ஓட்டை இன்றிச் செய்தால் அவ்வருமானமே பல்லாயிரம் கோடி ஒரு ஆண்டிற்கே வரக்கூடும்!

மக்களுக்கும் தட்டுப்பாடின்றி மணல் கிடைக்கும்; கட்டுமானப் பணிகளும் சீராக, சிறப்பாக நடைபெற உதவிடக் கூடும்.

வீண் விளம்பரச் செலவுகளைக் குறைக்கலாம்

மத்திய, மாநில அரசுகள் தேவையற்ற வீண் விளம்பரச் செலவுகளைக் குறைத்து இது போன்று, வருவாய் பெருக் கலையும், செலவைச் சுருக்கலையும் செய்தால், கல்விப் பணிகளை அரசு, பல வகையிலும் மேம்படுத்திட இயலும்.

மத்திய, மாநில அரசுகள் சிந்திக்கட்டும்!

சென்னை
8.12.2013

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பக்தர் அளித்த ரூ.3 கோடி மதிப்புள்ள பவள மாலை எங்கே? தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம்


சிதம்பரம், டிச.8- சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் அளித்த ரூ.3 கோடி மதிப்புள்ள பவள மாலை பற்றிய விவரம் கேட்டு தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம் அனுப்பி உள் ளது. சிதம்பரம் நடரா ஜர் கோயில் ஆகாயத் தலமாக விளங்கி வரு கிறது.

பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப் பாட்டில் இருந்து வந்த இக்கோயில் பல்வேறு போராட்டங்களின் விளைவாக தமிழக அரசின் இந்து அற நிலையத்துறை கட்டுப் பாட்டில் சில ஆண்டு களுக்கு முன்பு வந்தது. பூஜை, வழிபாடுகளை தீட்சிதர்களே வழக்கம் போல் செய்து வருகின் றனர்.

இந்நிலையில், சென் னையை சேர்ந்த பக்தர் ஒருவர் அவரது குடும்பத் தினர் சார்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி சிதம் பரம் நடராஜனுக்கும் சிவகாமசுந்தரி அம்பா ளுக்கும் அணிவிப்பதற் காக ரூ.3.50 கோடி மதிப்பிலான இரு பவள மாலைகளைக் காணிக் கையாக வழங்கினார்.

இத்தாலியில் இருந்து வரவழைக்கப்பட்ட விலை உயர்ந்த பவள மணிகளைக் கொண்டு 20 பவுனில் இந்த மாலை கள் உருவாக்கப்பட்டன. இந்த பவளமாலைகள், அதன் மதிப்பு மற்றும் அதனை வழங்கிய உபய தாரர் ஆகிய முழு விவ ரத்தையும் பெறுமாறு சிதம்பரம் நடராஜர் கோயில் செயல் அலுவ லருக்கு அறநிலையத் துறை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்பேரில் மேற் கண்ட விவரங்களை அளிக்குமாறு நடராஜர் கோயில் பொது தீட்சி தர்களின் செயலருக்கு கோயில் செயல் அலு வலர் முருகன் தாக்கீது அனுப்பி உள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்களிடம் ஒப்படைக்குமாறு பொது தீட்சிதர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத் தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், ரூ.3 கோடி பவளமாலை குறித்து விவரம் கேட்டு தீட்சிதர்களுக்கு அரசு தாக்கீது அனுப்பி உள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் ஓவியா said...


சாய்பாபா கோயிலில் கொள்ளை


சிக்மகளூர், டிச. 8- கர்நாடக மாநிலம், சிக்மகளூர் சாய்பாபா கோயில் கொள்ளை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்மகளூர் மாவட் டம், மதுவனலே அவுட் டில் சாய்பாபா கோயில் உள்ளது. இந்த கோயி லுக்கு சுற்றுப்புறங் களைச் சேர்ந்த பக்தர் கள் சாமி தரிசனத்துக் காக வருகின்றனர். பக் தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில், கோயில் வளாகத்தில் உண்டியல் வைக்கப்பட் டுள்ளது.

நேற்று முன்தினம், பூசாரி நாகராஜ் கோயில் நடையை பூட்டி விட்டுச் சென்றார். நேற்று காலை கோயிலுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந் ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வளாகத்தில் இருந்த பீரோ, உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததும், அதிலிருந்த ரூ.25 ஆயி ரம் பணத்தை திருடிச் சென்றதும் தெரிந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், சம்பவ இடத் துக்கு விரைந்து வந்த காவலர், துப்பறியும் மோப்ப நாய் உதவியு டன் திருடர்களை தேடும் பணியில் ஈடுபட் டனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


கூறுவது கல்கி


நேருவுக்குப் பதில் பட்டேல் பிரதமர் ஆகியிருந் தால் நாட்டின் தலையெழுத்து மாறியிருக்கும் என்று மோடி பேசியதை விமர்சித்து, மறக்கப்பட்ட வாக்குறுதி என்ற கட்டுரையை எழுதினார் ஹிந்து பத்திரிகையாளர் வித்யா சுப்பிரமணியம். அந்தக் கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சித்து பட்டேல் எழுதிய கடிதத்தைப் பற்றி ஆதாரபூர்வமாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் கடுப்படைந்த சங்கக் குடும்பத்தினர் பத்திரிகையாளருக்கு அலைபேசி மூலமாக அசிங்கமாகப் பேசி கொலை மிரட்டலும் விட்டிருக்கின்றனர். வித்யா காவல்துறையில் புகார் செய்ய டில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய் திருக்கிறது. எந்தெந்த நம்பர்களில் இருந்து மிரட்டல் வந்தது என்று பார்க்கும்போது பெரும்பாலான அழைப்புகள், தமிழ் நாட்டிலிருந்து அதுவும் கோவை யிலிருந்து வந்திருப்பது தெரியவந்தது.

இதுபற்றிய விவரங்களை டில்லி காவல்துறை தமிழக அரசுக்கு அனுப்பியிருந்தும் கோவை காவல்துறை இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்வதில் ஆர்வம் காட்டாமல் சுணக்கம் காட்டுகிறது என்கிறார்கள். இது என்ன அரசியலோ?

சென்னையில் உள்ள சுமார் ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் கணக்கில் வராமல் புரளும் பணம் மாதத்துக்கு சுமார் ஐந்து கோடி என்கிறார்கள். போலி மது விற்பது, டாஸ்மாக் சரக்கையே அதிக விலைக்கு விற்பது போன்றவற்றால் வரும் வருமானம் இது. பொதுவாக கடை மூடும் போதும், கூட்டம் அதிகமாக இருக்கும் போதும் அதிக விலைக்கு விற்பது, போலி மதுவை விற்பது போன்றவை நடக்கின்றன.

அவசரத்திலும், பதற்றத்திலும் குடிமகன்கள் இதைக் கண்டு கொள் வதில்லை. இந்த வரும்படி மேல்மட்டம் வரை பாய்கிறதாம். டாஸ்மாக் ஏரியா மானேஜர்கள் லட்சக்கணக்கில் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்து நல்ல ஏரியா போஸ்டிங் வாங்குகிறார் களாம்.

(கல்கி 8.12.2013 பக்கம் 16)

தமிழ் ஓவியா said...


சடங்கு என்ற பெயரால் மனித குலத்துக்கு இழைக்கப்படும் அநீதி

பார்ப்பனர்கள் உணவருந்திய எச்சில் இலைகள்மீது மற்ற ஜாதியினர் உருளும் அவலம்!

சடங்கு என்ற பெயரால் மனித குலத்துக்கு இழைக்கப்படும் அநீதி

கர்நாடகாவில் மடாதிபதிகள், பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் கடும் கண்டனம்

மங்களூரு, டிச. 9- பார்ப்பனர்கள் உணவருந்திய எச்சில் இலைகள்மீது மற்ற ஜாதியினர் உருளும் அவலம் சடங்கு என்ற பெயரால் மனித குலத்துக்கு இழைக் கப்படும் அநீதி என கர்நாடகாவில் மடாதிபதிகள், பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரி வித்து பட்டினிப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

பார்ப்பனர்கள் உணவருந்திய எச்சில் இலைகள் மீது மற்ற ஜாதியினர் உருளும் சடங்கு கர்நாடகாவின் பெருமைக்கு இழுக்கா கும் என்பதுடன் மனித குலத்துக்கு இழைக்கப் படும் அநீதியும், இந்திய பண்பாட்டின் மீது சுமத் தப்படும் களங்கமு மாகும் என்று தார் வாட் ரேவன சித்தேஸ்வர மடாதிபதி சிறீ பசவ ராஜா தேவாரு கூறினார். மங்களூர் அருகே உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலில் நடைபெற்று வரும் இந்த மூடநம்பிக்கை சடங்கினை எதிர்த்து நடைபெற்ற ஒருநாள் பட்டினி போராட்டத் தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

கர்நாடகா ராஜ்ய இந்து லிடா வர்க்கலா ஜகுருடா வேதிக் பிற்படுத்தப்பட் டோர் நல அமைப்பு சனிக் கிழமையன்று மங்களூர் துணை ஆணையாளர் அலு வலகம் எதிரில் மடேஸ் நானாவை எதிர்த்து சனிக் கிழமை யன்று ஒருநாள் பட்டி னிப் போராட்டம் நடத் தியது. எச்சில் இலைகள் மீது உருளுவதால் யாரும் குணம் அடை வதில்லை. பார்ப்பனர் களின் அகந்தையின் அடையாளமாக இது இன்றும் நீடிக்கிறது. எச்சில் இலை மீது உருளும் மக்கள் அப் பாவிகள் என்றும் நம் பிக்கையின் பெயரால் அவர்கள் நசுக்கப்படு கிறார்கள் என்றும் உதவி யற்றவர்கள் ஆக ஆக்கப் படுகிறார்கள் என்றும் தேவாரு குறிப்பிட்டார். மாநில முதல்வர் உடன டியாக இதில் தலை யிட்டு இது போன்ற மனித விரோத செயல் களை நிறுத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண் டும் என்றும் அவர் சொன்னார்.

இந்த மூடநம் பிக்கைப் பழக்கம் பல ஆண்டுகளாக நீடிக் கிறது. கடந்த நான்காண் டுகளாக தங்களது அமைப்பு இதை எதிர்த்து வருகிறது. இதற்காக தன்மீது தாக்குதல் நடத் தப்பட்டது இது இந்திய சமுதாயத்துக்கு விடுக்கப் படும் சவால் . இந்த பழக்கம் நிறுத்தப்படும் வரை தங்களுடைய எதிர்ப்பு தொடரும் என் றும் பிற்படுத்தப்பட் டோர் அமைப்பின் மாநில தலைவர் சிவ ராமு கூறினார். மைசூர் பேட்டாடபுரா மடாதி பதி சிறீரச்சோட்டி சிவாச் சார்ய சுவாமிஜியும் இந்த மடேஸ்நானா நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அமைச்சர் எதிர்ப்பு

தெற்கு கன்னடாவில் உள்ள குக்கே சுப்ர மணியா கோவிலில் நடைபெற்று வரும் மடேஸ்நானா போன்ற குருட்டுத்தனமான மூட நம்பிக்கைப் பழக்கங் களை மக்கள் ஆதரிக் கக்கூடாது என்று கர் நாடகா சமூக நலத்துறை அமைச்சர் எச்.ஆஞ்ச நேயா செய்தியாளர்களி டம் கூறினார். இது ஒரு மனித விரோத முட்டாள் தனமான நடைமுறை என்றும் அவர் கூறினார். இதில் கலந்து கொண் டவர்களை முட்டாள் கள் அல்லது அறி வாளிகள் என்று தன் னால் கூற இயலவில்லை என்றும் அவர் சொன் னார். எச்சில் இலைகள் மீது உருளுவதால், அவர் களின் தோல் மேலும் பாதிக்கப்படுமே தவிர அவர்கள் நம்புவது போல் தோல் வியாதிகள் குணம் அடைவதில்லை என்றும் அவர் கூறினார்.

இது போன்ற மூட நம்பிக்கைகளை சட்டங்களால் அகற்ற முடியாது என்றும் அவர் கூறினார். பல்வேறு மடாதிபதிகளும், மதத் தலைவர்களும் இது வொரு மனிதாபிமான மற்ற நடைமுறை என்று அறிவித்த பின்பும் மக்கள் இதில் ஈடுபடுவது வருந்தத்தக்கது என்றும் அவர் சொன்னார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மடேஸ்நானாவை எதிர்த்து இயக்கம் நடத் திய சிவராமுவை மத வெறி அமைப்புகள் கடு மையாக தாக்கின. இத னால் கடந்த இரண் டாண்டுகளாக பலத்த பாதுகாப்புடன் மடேஸ்நானா நடத்தப் பட்டு வருகிறது. இவ் வாண்டு கோவில் வளா கத்தில் நூற்றுக்கு மேற் பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோயில் உண்டியல்கள் கொள்ளை


திட்டக்குடி,டிச.9- ராமநத்தம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற வர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவரு கின்றனர்.

ராமநத்தத்தை அடுத்துள்ள எழுத்தூர் கிராம எல்லையில் நல்லதங்காள் கோவில் உள்ளது. சம்பவத்தன்று மாலை இந்த கோவில் பூசாரி ராஜா வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கோவி லின் முன்பக்க கதவுகளை உடைத்து அங்கிருந்த உண்டியலோடு பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுபற்றி தகவல் அறிந்துதம் ராமநத்தம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், யாரோ சிலர் முன்புற இரும்பு கேட் மீது ஏறி உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு 2 உண்டியல்களை தூக்கி அருகில் சோளக்காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த இடத்தில் உண்டியல்களை உடைத்துப் போட்டுவிட்டு பணத்துடன் ஓடியது தெரியவந்தது.

இதுகுறித்து ராமநத்தம் காவல் நிலையத்தில் பூசாரி ராஜா புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் விஜி வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்றவர்களை தேடி வரு கின்றார்.

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


இளைஞர்களே, இயந்திரங்கள் வழி தானா?

உலகத்தின் தலைசிறந்த மனோ தத்துவ அறிவியல் சிந்தனையாளர் களில் ஒருவர் டேனியல் கோல்மென் (Daniel Goleman) அவர்கள்.

நியூயார்க் டைம்ஸ் என்ற பிரபல அமெரிக்க நாளேட்டின் அறிவியல் செய்தியாளராக நிருபராக இருந்தவர்; இதுவரை பல லட்சம் விற்பனையாகும் 13 புத்தகங்களை எழுதியவர்.
மக்கள் தொடர்புக்குரியதான நிறுவனங்கள், இயக்கங்கள், அமைப்பு களை நடத்துவோர் அனைவரும் எப்படி மனிதவளத்தைச் சீரிய முறை யில் நல்லுறவோடு பயன்படுத்தி முழுப் பயனைத் துய்ப்பது என்பதுபோன்ற கருத்துகளையே பலவித கோணங் களில் அந்த புத்தாக்கச் சிந்தனை ஊற்றான நூல்கள் நமக்குத் தருவன வாகும்.

அவர் 2013இல் எழுதி, 2014இல் வெளிவரவிருக்கும் ஒரு புதுப் புத்தகம் - (இப்போது கடைகளுக்கு வந்து விட்டது) வாங்கினேன். படித்தேன். சுவைத்தேன்.

‘Focus’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது அந்த புத்தகம் (‘The Hidden Driver of Exellence’) என்பது அதன் அடித்தலைப்பு ஆகும்.

இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படித்து, தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அந்நூல் பல அரிய தகவல் களை அவர்களுக்கு அளிக்கிறது!

இன்றைய குழந்தை- வளர் இளம் பிராயத்தினர் எப்போதும் கைத் தொலைப் பேசி முதல் பல் வகை மின் கருவிகளோடு தான் வாழ்ந்த வண்ணம் உள்ளனர்.

இந்த உலகத்தைவிட டிஜிட்டில் உலகத்தில் (Digital World) தான் அவர்கள் சதா வாழ்கின்றனர்!

எங்கும் எதிலும் ‘Wifi’ - மின் இயந்தி ரங்களோடு இன்றைய இளையர்கள் தங்கள் வாழ்க்கையைச் செலவு செய் கின்றனர்!

உணவு, உறக்கம், படிப்பு - இவை களைக் கூட விட்டுவிட்டு - குடும்ப உறவுகளுடன் ஆசிரியர்களுடன்கூட உரையாடுவதைத் தவிர்த்து விட்டு, சதா சர்வ நேரமும் மின் இயந்திரக் கருவி களோடு, இணை பிரியா வாழ்வு வாழுகின்றனர்!

இவர் இதைப்பற்றி ஒரு அருமையான தேவையான எச்சரிக்கையை விடுத் துள்ளார்.

இப்போது இவர்களது நேரம் - காலம் - எல்லாம் அதிகம் நேரம் இந்தியரங் களுடன்; குறைந்த நேரமே மனித உறவு களுடன் என்ற போக்கு அண்மையில் பெரிதும் வளர்ந்துள்ளது.

இது விரும்பத்தக்கதல்ல; காரணம் குழந்தைகள், இளைஞர்களின் மூளை வளர்ச்சி என்பது, சமூக மற்றும் வளர்ச்சி பூர்வமான விஷயங்களைக் கற்று பெருக்கம் அடைவது என்பது மனிதத் தொடர்புகள் (Contacts) மற்றும் கலந்து உரையாடல்கள் (Conversatiion) மூலம்தான் ஒவ்வொரு நாளிலும் உருவாகிறது. இப்படி கலந்து பேசி உறவாடுதல் தான் மூளையின் ரத்த ஒட்டப் பாதையை பக்குவப்படுத்தி சிறப்பாக அமைய உதவி புரிகிறது. (Mold Brain Circutory)

குறைந்த நேரமே மனிதர்களுடன் பேசுவதில், விவாதிப்பதில் செலவிடப் படுமானால் மூளை வளர்ச்சி சிறப்பாக அமைவதற்கு அதுவே (அதாவது இயந்திரங்களை அதிக நேரம் செல விடப்படுதல்) பெருந்தடையேயாகும்.

அவ்வளவு தூரம் ஏன் போவா னேன்? நாம் வாய்ப்பாடு படித்தோம்; நினைவுவன்மையை அதிகப்படுத் தியது.

இப்போது Calculator கால் குலேட்டர் எதற்கெடுத்தாலும் பயன் படுத்துவது, அவசர விடை கிடைத்தா லும், மூளை வளர்ச்சிக்கு உதவவில் லையே! அது ஒன்றே போதாதா?

பல வகுப்பு நண்பர்களுக்கு உரை யாடல் சக்திகூட பலவீனமாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

(எஞ்சியவை நாளை) --k.veramani

தமிழ் ஓவியா said...


4 மாநில சட்டசபை தேர்தல் முடிவு தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து


சென்னை, டிச.9- 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவை வைத்து பார்க்கும் போது, காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவுதான் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் சென் னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (8.12.2013) மாலை செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தி யாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கலைஞர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி:4 மாநில தேர்தல் முடிவுகளைப்பற்றி...!

கலைஞர்:அந்த மாநிலங்களில்இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் என்னுடைய வாழ்த்துகள்.

கேள்வி:இந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?.

கலைஞர்:யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. காங் கிரசை பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவு தான்.

கேள்வி:ஏற்காடு இடைத்தேர்தலில் நடைபெற்ற அராஜகங்களை சுட்டிக்காட்டியிருக் கிறீர்கள். அதற்குப்பிறகும் கணிசமான வாக்குகள் தி.மு.க.விற்கு கிடைத்திருக் கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் உங்கள் புகார்களை கண்டு கொள்ள வில்லையே!.

கலைஞர்: தேர்தல் ஆணையம் முதல் அமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் கண்டனம் தெரிவித் திருக்கிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கேள்வி:ஏற்காடு இடைத்தேர்தல் அராஜகங்களை பார்க்கும்போது, இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி என்ற நிலை இருக்கிறது!

கலைஞர்:ஆளுங்கட்சியின் அராஜகங்களை தடுக்க முடியவில்லையே, என்ன செய்வது?
கேள்வி: இதற்கு முடிவுதான் என்ன?

கலைஞர்: உங்களைப் போன்ற பத்திரிகைகாரர்கள் இதைப் பற்றி விளக்கி எழுத வேண்டும். அப்படித் துணிந்து எழுதினால் பயன் கிடைக்கும்.
- இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


தஞ்சை விழாவில் பெருமக்கள் கொட்டு முரசம்


தந்தை பெரியார் புகழ் உலகம் முழுவதும் பரவுவதற்குக் காரணமானவர் ஆசிரியர்
தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் குழு செயலாளர் எல்.கணேசன்


2.12.2013 அன்று மாலை தஞ்சையில் நடை பெற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - பெரியார் உலகத்திற்காக 1000 பவுனுக்குரிய தொகை வழங்கும் விழாவில் பாராட்டுரை வழங்கினார்கள்.

தி.மு.க.தேர்தல் பிரச்சாரக் குழு செயலாளர் எல்.கணேசன்

நான் ஒன்றே ஒன்றை மேற்குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். ஒரு தலைவருடைய புகழ், ஒரு தலைவருடைய வரலாறு நிலைப்பது என்பது அந்தத் தலைவராலே என்று நான் நினைப்பது இல்லை. தந்தை பெரியார் அவர்களுடைய புகழ் இன்றைக்கு அகில இந்திய அளவில், ஏன் இந்த அகில அளவில் நிலை நாட்டப்படுகிறது என்று சொன்னால், அதற்கு அடிப்படையான காரணம், அவருடைய வழித்தோன்றலாக, அவருக்குப் பின்னாலே அந்த இயக்கத்தைக் கட்டிக் காத்து வருகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள்தான்.

நான் இன்னும் சொல்லுவேன், அதுதான் உண்மை. உங்களுக்குத் தெரியும், அறிஞர் அண்ணா அவர்களுடைய புகழை, நிலை நிறுத்திய பெருமை அண்ணன் கலைஞர் அவர் களுக்குத்தான் உண்டு. அந்த மறுமலர்ச்சியை, யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமா னாலும் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்று அண் ணாவின் பெயரை அந்த மறுமலர்ச்சித் திட்டத் திற்கு வைப்பதற்கு, ஒரு கலைஞர்தான் தேவைப் பட்டார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

அதைப்போலத்தான், நாம் சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா, இந்தச் சொற்களை நாம் எங்கேயிருந்து கடன் பெற்றோம் தெரியுமா? பிரெஞ்ச் புரட்சி யின் மூலப் பிதாக்களாக இருந்த ரூசோ, வால் டேர் போன்றவர்கள் முழங்கிய முழக்கம்தான் சமத்துவம். ஆனால், நண்பர்களே, தந்தை பெரி யார் நினைவு சமத்துவபுரம் என்று பெயர் வைக்க, ஒரு கலைஞர்தான் தேவைப்பட்டிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

ஆகவேதான், என்னைப் பொறுத்தவரையில், திராவிடர் இயக்கம் - தந்தை பெரியார் அவர்கள் கொள்கையைத் தந்தார் - இலட்சியத்தைக் கொடுத்தார் - அதுவும் புரட்சிகரமான இலட் சியத்தையும், கொள்கைகளையும் கொடுத்தார். அதோடு நின்றிருந்தால், பெரியார் நிலைத்திருக்க மாட்டார் - பெரியார் நிலைத்து நிற்கிறார் என்பதற்குக் காரணம், அவர் விட்டுச் சென்ற சொத்துக்களில் தலையாய சொத்து - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான். அவர்களுக்கு இன்று 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. இந்த பிறந்த நாள் விழாவில், இதயம் திறந்து வாழ்த்து கிறேன். வாழ்த்துவதற்கு வயதெல்லாம் வேண்டிய தில்லை - உள்ளம்தான் வேண்டும். எனக்கு நிரம்ப உள்ளம் உண்டு - அவர் வாழவேண்டும், வாழ வேண்டும் என்பதற்குத் தமிழ்ச் சமுதாயம் தந்தை பெரியார் வழியில் நடப்பதற்கு அவர் பாடுபட வேண்டும் என்பதற்காக அவர் வாழவேண்டும், வாழவேண்டும் என்று வாழ்த்தி விடைபெறு கிறேன், நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்

தமிழர் தலைவர் அவர்கள் பாலப் பருவம் முதல் 81 வயது வரை 71 ஆண்டுகளுக்கும் மேலான பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக - தந்தை பெரியாரால் அடையாளம் காணப்பட்டு 71 ஆண்டு காலம் ஒரே கட்சி - ஒரே கொடி - ஒரே தலைமை என்று இன்றைக்கும் ஒரு போர்க்கள நாயகராகத் திகழ்ந்துகொண்டிருக்கக்கூடிய உத்தமத் தலைவராக இந்தியத் துணைக் கண்டத்தில் திகழ்ந்து வருபவர் தமிழர் தலைவர் அவர்கள்தான்.

எந்த ஒரு தலைமைக்கும் இல்லாத சிறப்பும், பெருமையும் 71 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 வயதில் மேடை ஏறி பேசத் தொடங்கி, கம்ப ராமாயணத்திலும், கடவுள் காம லீலைகளிலும் ஊறித் திளைத்திருக்கும் என்னருமை தமிழகப் பெருமக்களே என்று தமிழ்நாட்டு மக்களுடைய உள்ளத்திலே ஒரு விழிப்புணர்ச்சியை, அறியா மைக்கு எதிரான ஒரு அறப்போர் உணர்வைத் தூண்டிவிட்ட அந்தத் தலைவர்தான், இன்றைக்கு ஒரு மாபெரும் தலைவராக உயர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட தலைவரை வாழ்த்திப் பெருமை சேர்க்க வெறும் பிறந்த நாள் விழாவாக மட்டும் இல்லாமல், இந்த நிகழ்ச்சியை, பெரியார் உலகம் காண - 95 அடி உயர பெரியார் சிலை - பீடத்தை யும் சேர்த்து 135 அடி உயர பெரியார் சிலையை உருவாக்கி - அந்தச் சிலை உருவாக்கத்திற்காக இந்தப் பிறந்த நாள் விழாவைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு தலைவராக, அப்பழுக்கற்ற ஒரு தலைவராக திகழ்ந்துகொண்டிருக்கக்கூடிய தத்துவப் பேராசான்தான் தந்தை பெரியாரின் அரிய கண்டுபிடிப்புதான் - இவர்! வழிகாட்டக் கூடிய ஒரு மாபெரும் தலைவராக அடையாளப் படுத்தி இருக்கக்கூடிய அந்தத் தலைவரை வாழ்க, வாழ்க என நெஞ்சார வாழ்த்தக் கூடிய வகையில், இன்றைக்கு மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என்று சொல்லக்கூடிய வகையில், இயற்கையே இன்றைக்கு எங்கள் தலைவரை வாழ்த்துகிறது.

இந்தத் தலைவர் வாழவேண்டும்; ஒரு புரட்சிக்காரராக, புதுமையாளராக, பெரியாரின் கொள்கையைப் பரப்புகின்ற ஒரு பணியாளராக, பெரியார் கொள்கையைப் பேசாத நாளெல்லாம் தன் வாழ்க்கையில் வெறும் நாள் என அறிவித்து, பெரியாரின் கொள்கையைப் பேசிக்கொண்டே யிருக்கக் கூடிய அந்தத் தலைவர் - இன்றைக்கு அவரைத் தமிழகமே வாழ்த்துகிறது என்று சொல்லி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி

நம்மால் முடியாதது யாராலும் முடியாது
யாராலும் முடியாதது நம்மால் மட்டும் முடியும் என்று இன்று நிரூபித்துக் காட்டி, மிக அமைதியாக இருக்கும் திராவிட இயக்கத்தின் அருமை மிகு உறவுகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினை தெரிவித் துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர் செய்த மிகப்பெரிய சமூகப் பணிகளை இளைஞர் சமுதாயமும், மாணவர் சமுதாயமும் தெரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில், தமிழர் தலைவர் அய்யா அவர்கள், சிறுகனூரில் தந்தை பெரியார் அவர்களுக்கு 95 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கவேண்டும் என்று, அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தின்படி, சிறுகனூரில் பெரியார் உலகம் அமைய, பெரியாரின் 95 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கவேண்டுமானால், 500 டன் சிமெண்ட், 300 டன் இரும்பு, 146 டன் வெண்கலம் மேலும், நூலகம், ஆய்வகம், உணவு விடுதி, சிறுவர் பூங்கா இவை அனைத்தும் அமைய வேண்டுமென்று சொன்னால், 39 கோடியே 85 லட்சம் ரூபாய் தேவை என்ற நிலையில், இது முதல் ஆரம்பமாக, முதல் சுற்றாக, திராவிடர் கழகத்தின் தோழர்கள் தேனீக்கள் போல பறந்து பறந்து சேகரித்து, 43 நாள்களில் 2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் (அதாவது 1005 பவுன்) ரூபாய் சேகரிக்கப்பட்டு முதல் தவணையாக இது அளிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய தோழர்கள் தேனீக்களைப் போல சுற்றிச் சுற்றி இந்தத் தொகை யினை வசூலித்திருக்கிறார்கள். இது முதல் தொகை தான். இன்னும் 7 கோடி தமிழர்கள் இருக்கக் கூடிய சூழ்நிலையில், எல்லோரிடத்திலும் வசூ லித்து, இந்த 39 கோடியே 85 லட்சம் ரூபாயினை நாம் அடைவோம் என்று சூளுரைப்போம். இவ் வாறு திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

தமிழர்க்கு உலகில் எந்த மூலையில் இடர்ப்பாடு வந்தாலும் முதலில் குரல் கொடுக்கக்கூடிய தலைவர் ஆசிரியர் வீரமணி - டாக்டர் சோம.இளங்கோவன் படப்பிடிப்பு

பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் (அமெரிக்கா) அவர்கள் உரையாற்றுகையில்,

அருமைத் தமிழ் நெஞ்சங்களே, தந்தை பெரியார் வாழ்கிறார், வாழ்ந்து கொண்டிருக் கிறார் - சிலையாக இல்லை, சிந்தனையாக உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை, தினந்தோறும் தமது கடும் உழைப் பால், தமிழகம் மட்டுமன்றி, உலகெங்கும் பரப்பி வரும் தமிழர் தலைவர் அவர்களே, கூடியுள்ள பெரியோர்களே, தாய்மார்களே, ஆர்வமிக்க தொண்டர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஓரிரு செய்திகளைச் சொல்லி, தமிழர் தலைவர் அவர்களை வாழ்த்த விரும்புகிறேன். எந்தத் தமிழனுக்கு உலகத்தில் எந்த ஒரு மூலையில் கெடுதல் நடந்தாலும், முதலில் துடிக்கும் இதயம் நம்முடைய தமிழர் தலைவர் இதயமாகத்தான் இருக்கும். தமிழ்நாடு அறக்கட்டளை என்று அமெரிக்காவிலுள்ள நாங்கள் இங்கே நிறுவினோம்; அதற்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டது. அந்த இடத்திற்கு ஒரு ஆபத்து வந்தது. உடனே தமிழர் தலைவர் அவர்கள் எங்களை அழைத்து, அதற்கு ஆவன செய்ய அறிவுரை வழங்கினார். அந்த இடம் காப் பாற்றப்பட்டு, இன்றைக்கு தமிழ்நாடு அறக்கட் டளை பல பணிகளைச் செய்து வருகிறது.

அதேபோல், அமெரிக்காவில் ஒரு செய்தி வந்தது; ராஜபக்சே அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கப் போகிறான் என்று; அந்தச் செய்தியைத் தெரிவித்தவுடனே தமிழர் தலைவர் அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன், முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து, என் னென்ன செய்ய முடியுமோ, அத்தனையையும் செய்தார்கள். அடுத்த நாள் முதல்வர் கலைஞர் அவர்கள், யாருக்கும் தெரியாமல் உண்ணா விரதம் இருந்தார். ஆனால், கொடுங்கோலன் ராஜபக்சே, பொய் சொல்லி, ஏமாற்றி விட்டான்.

தந்தை பெரியார் அவர்களின் வாரிசு என்று சொன்னார்கள்; அது கொள்கை வாரிசாக இன்று உலகமெங்கும் பெரியாரின் கொள்கை யைப் பரப்புவதற்காக நாங்கள் எல்லாம் பாடுபடுகின்றோம் அவரின் தலைமையில்.

அவர் வெளிநாட்டிற்கு வந்துவிட்டால், ஈ மொய்க்கும் கும்பல்போல் தமிழர்களின் கூட்டம் அவரிடம் அன்போடு பழகுவதைப் பார்த்தால், ஆசிரியரும், பெரியாரும் என்றும் வாழ்வார்கள் என்பதை நாம் மிகவும் உறுதி யாகச் சொல்லிக் கொள்ளலாம்.
திராவிடர் கழகம், தமிழர் தலைவர் அவர்கள் ஒரு ஏணி போன்று. அந்த ஏணியில் ஏறியவர்கள் பலர் உண்டு.

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்
என்றார் திருவள்ளுவர்.

எல்லாப் புகழும் வேண்டாம் - தமிழர் தலை வரின் ஆணை மட்டும் போதும்; எங்களுக்குப் புகழ் வேண்டாம் - உங்கள் கடமைகளை நிறைவேற்றுவோம் என்று ஆயிரம் ஆயிரம் கருஞ்சட்டைப் படையினர் தயாராக உள்ளனர். ஆயிரம் பொற்காசுகள் ஒன்றும் பெரிய செய் தியல்ல - அவருடைய ஆணையை நிறைவேற்ற ஆயிரம் ஆயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். அவர் நீண்டு வாழவேண்டும்; தமிழர்களுக்கு இன விடுதலை முக்கியம்; அந்த இன விடுதலை கிடைக்கும்வரை வாழ்ந்து அவர் சாதித்துக் காட்டவேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
- இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


ஸ்டெம்செல்கள் மூலம் செயல்பாட்டு நுரையீரல் செல்கள்: மருத்துவ உலகில் புதிய சாதனை

ஸ்டெம் செல்களைக் கொண்டு புதிய நுரையீரல் செல்களை உரு வாக்கி அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் புதிய சாதனை படைத் துள்ளனர். ஸ்டெம்செல்கள் மூலம் இதுவரை இதய செல்கள், கணைய பீட்டா செல்கள், குடல் செல்கள், கல்லீரல் செல்கள், நரம்பு செல்கள் போன்றவை உருவாக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்டெம் செல்கள் மூலம் முதன்முறையாக செயல்பாட்டு நுரையீரல் செல்களை உருவாக்கி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள்.

நுரையீரல் செல்கள்.... அமெரிக்காவின் கொலம் பியா மருத்துவ மய்யத்தின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனித ஸ்டெம்செல்களைக் கொண்டு முதன்முறையாக செயல்பாட்டு நுரையீரல் செல்களை உருவாக்கியுள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்தது.... இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், நுரையீரல் நோய் குறித்த மாதிரிகளை ஆய்வு செய்வதிலும், மருந்துகளைப் பரி சோதிப்பதிலும், மனித நுரையீரல் வளர்ச்சிகளைப் பற்றி அறிவதிலும், மாற்று நுரையீரல் திசு உருவாக்கு வதிலும் முக்கியத்துவம் பெறுவதாக கருதப்படுகிறது.

புதிய முன்னேற்றம்.... தனது ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மருத் துவ பேராசிரியர் ஹான்ஸ் வில்லியம் கூறுகையில், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது பெரிய முன்னேற்றத்தை இதுநாள்வரை கொண்டிருக்க வில்லை. எனவே, தற்போதைய கண்டுபிடிப்பு இந்த சிகிச்சையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

நுரையீரல் மாற்றுச் சிகிச்சை.... இவற்றை முறையாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பல வருடங்கள் ஆகும் என்றபோதிலும், ஒரு நோயாளிக்கு அவரது தோலைப் பயன்படுத்துவதன் மூலம் நுரையீரல் மாற்று சிகிச்சை அளிப்பது குறித்து நாம் யோசிக்கத் தொடங்கமுடியும்' எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

உடல் நலம் காக்க...

கீரை சாப்பிடுங்க கீரைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது.
வெந்தயக்கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள், பேதியை குறைக்கும். அதிகமாக இரும்புச்சத்து கொண்டது.

முருங்கை கீரை: உடலுக்கு சக்தியையும், வலிமை யையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை குறைக்கும். ரத்தசோகையை குறைக்கும்.

அரைக்கீரை: உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி பெற்றது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கும். தளர்ச்சியைப் போக்கும். குடல் புண்னை ஆற்றும். குடலுக்கு வலிமையை தரும். தொடர்ந்து அரைக்கீரை சாப்பிட்டால் தேமல், சிரங்கு, சொறி, போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
சிறுகீரை: மலச்சிக்கலைக் குறைக்கும். தொடர்ந்து இந்த கீரையைச் சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப் படியான பித்தத்தைக் குறைக்கும். உடலுக்கு ஊக்கம் அழித்து தளர்ச்சியை போக்கும்.

அகத்திக்கீரை: உடலில் காணப்படும் அதிகஅளவு வெப்பத்தை குறைக்கும் குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம், தலைச்சுற்றல், மயக்கம், போன்றவை வராமல் தடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும்.
மணத்தக்காளி கீரை: வயிற்று புண்களை போக்கும். குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும்.

பசலைக்கீரை: உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. தாய்ப்பால் பெருகும்

தமிழ் ஓவியா said...


இன்று (டிச. 9) சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்

இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக இருக் கக்கூடிய பிரச்சினைக ளில் முதலிடத்தை பிடித் திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளா தார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக் கக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டிச., ஒன்பதாம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப் படுகிறது.

"பொதுச் சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது, அதிகா ரத்தை தவறாக பயன் படுத்துவது, பொதுப் பணத்தில் முறைகேடு செய்வது' ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண் டர்களில் விரும்பியவர்க ளுக்கு வளைந்து கொடுப் பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல் பெருகுகிறது.
டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷன்ல்' 2013ஆம் ஆண்டுக்கான "ஊழல் குறைவு முதல் அதிகம் வரை' என்ற அடிப்படையில் பட்டி யலை சமீபத்தில் வெளி யிட்டது. மொத்தம் 177 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஊழல் குறைவாக உள்ள இப்பட்டியலில் டென் மார்க், நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியா, 94ஆவது இடத் தில் உள்ளது. அப்படி யெனில் இந்தியாவை விட, 93 நாடுகளில் ஊழல் குறைவாக உள்ளது.

லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தா லும், இதனால் தண் டனை பெற்ற அதிகாரி கள் எண்ணிக்கை மிகக் குறைவே. அரசு அலுவலங் களில் மட்டும் அல்ல, முக்கிய பொது இடங் களில், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, போன் எண்களை தெளி வாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், மக் கள் தைரியமாக புகார் செய்ய முன்வர வேண் டும். ஊழல் வழக்கில் கைது செய்யப்படுபவர்க ளின் பெயர்களை, பொது இடங்களில் விளம்பரப் படுத்த வேண்டும். ஊழல் வாதிகளுக்கு கடும் தண் டனை வழங்க வேண்டும். அவர்களது வேலையை யும் பறிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர் களிடம் அந்த எண் ணமே வராது.