Search This Blog

3.12.13

காது குத்துவது பெண்களை அடிமைப்படுத்தும் சடங்கே!


காது குத்துவது பெண்களை அடிமைப்படுத்தும் சடங்கே!

இதில் வந்து நான் கலந்து கொள்வது, இதன் மூலம் நம் கருத்தினைச் சொல்லலாம் என்பதற்காகத்தானே தவிர, இது சரியானது என்பதால் அல்ல. இக்காரியம் முட்டாள்தனமானது தான். கொஞ்சம் நாளானால் தானாகவே மறைந்து விடும். பல பழக்க வழக்கங்கள் நம்மிடையே மறைந்து போகவில்லையா, அதுபோன்று இதுவும் மறைந்து விடும்.

 உண்மையான தத்துவம் தம் தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களை ஆண்களுக்கு அடிமையாக்கப் பலவிதச் சடங்குகளைச் செய்கின்றனர். அவற்றில் ஒன்று தான் இந்தக் காது குத்துவதுமாகும். இந்த நகைகள் - ஓட்டைகள் எல்லாம் எதற்காக என்றால், கொஞ்சம் வலுவான பெண்கள் ஆண்கள் (தங்கள் கணவன்) அடிக்கும் போது எங்கே திருப்பி அடித்து விடுவார்களோ என்று, ஆண்கள் அவர்கள் திரும்ப அடிக்காமல் முதுகைக் காட்டும்படிச் செய்வதற்காகவே இவை யாவும், காதிலும், மூக்கிலும் ஓட்டையைப் போட்டு நகையை மாட்டினால் ஆண் அடிக்கப் போனால் பெண் தன் முகத்தையும், காதையும் பொத்திக் கொண்டு முதுகைக் காட்டுவாள். அதற்குத் தான் இந்த நகைகள் பயன்படுகின்றன. ரொம்ப பேர் எங்கள் பக்கங்களில் சம்மதிப்பது கிடையாது.

சாமி, குளம் இதெல்லாம் எதற்காக என்றால், நாம் கீழ்ஜாதி என்பதை உறுதிப்படுத்துவதேயாகும்.

 நம் மக்கள் சமுதாயத்தில் ஒற்றுமையில்லாமல் பிரிந்து, பல ஜாதி, பல இனம், பல சமுதாயம், இனப்பற்று அற்று ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுக்கும் தன்மையில் இருப்பதால் இவற்றையெல்லாம் கண்டு நாம் சும்மா திரிகிறோமே, இந்தத் துறையில் பணியாற்றலாம் என்று கருதி, இதில் இறங்கினேன். எனது தொண்டு ஒன்றும் பயனற்றுப் போகவில்லை. ஓரளவு மக்களையாவது நம் பக்கம் திருப்பி இருக்கிறது. சமுதாயத்துறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

 தாய்மார்கள் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க வேண்டும். நல்லவர்களோடு பழக விட வேண்டும். முன்பு உறை போட்டுக் கொண்டிருந்த துலுக்கப் பெண்கள் இப்போது பனியன்கள் போட்டு குஸ்திச் சண்டைக்கு வருகின்றார்கள். வெள்ளைக்காரப் பெண்களும் சமமாகப் பழகுகின்றனர். அதுபோல நம் பெண்களும் ஆண்களோடு எல்லா காரியங்களிலும் சரிநிகராகப் போட்டிப் போட வேண்டும். சமுதாயத்தில் பாதி அளவு இருக்கும் பெண்கள் தங்கள் அடிமைத் தன்மையால் சமுகத்திற்குப் பயன்படாமல் போய் விடுகின்றார்கள். அவர்கள் விடுதலை பெற்றால் தான் நம்நாடு முன்னேற்றமடைய முடியும். சமுதாயம் முன்னேற்றமடைய முடியும் என்பதால், நாங்கள் சமுதாயச் சீர்திருத்தம் செய்யக் கூடியவர்களானதால் இதையெல்லாம் எடுத்துச் சொல்லி மக்கள் திருந்த வேண்டுமென்று பாடுபடுகின்றோம்.



-------------------- 16.06.1968 அன்று அன்பரசி காதணி விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை.- "விடுதலை" 07.07.1968

25 comments:

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும். - (விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


வெற்றி மாரத்தானைத் தொடங்கி விட்டோம்!


கழகத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்ற அதே தஞ்சையில் நேற்று, பெரியார் உலகத்திற்கு (தந்தை பெரியார் 95 அடி உயர பேருருவ வெண்கலச் சிலை அமைப்பு) ஆயிரம் சவரன் தங்கத்திற்குச் சமமான நிதி அளிக்கும் விழாவும், திராவிடர் கழகத் தலைவர் - தமிழர்தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் தஞ்சை மண்ணிலே அந்த மண்ணுக்கே உரித்தான கம்பீரமாக - மிளிரோடு நடைபெற்றது என்று சொல்ல வேண்டும்.

காலை முதலே தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறினார்கள். மாலைக் குப் பதிலாக நிதியை அளித்து மகிழ்ந்தனர்.

சிறப்பான கருத்தரங்கம், செழிப்பான உரைகள் கருத்தரங்கில் தனியம்சமாகும். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விழா நாயகர் விடையளித்த பாங்கு இதுவரை எங்கும் கேள்விப்படாத தனி அம்சமாகும். வேகமான வினாக்களும், விரைவான பதில்களும் என்று அதற்குத் தலைப்பு அளிக்கப்பட்டிருந்தது. நல்ல பசி நேரத்தில்கூட வயிற்றுப் பசியைப் புறந்தள்ளி அறிவுப் பசிக்கு முன்னுரிமை கொடுத்தது மெச்சத் தகுந்த ஒன்றாகும்.

இந்த விழாவின் முக்கிய பகுதி என்பது - பெரியார் உலகிற்கு - தந்தை பெரியார் அவர்களுக்கு 95 அடி உயரத்தில் சிறுகனூரில் அமையவிருக்கும் முழு உருவ வெண்கலச் சிலைக்கு நிதி அளிக்கும் நிகழ்ச்சியாகும்.

முதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதி அளிப்பது (ஒரு சவரன் ரூ.25 ஆயிரம் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டிருந்தது) என்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு, பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அரிதின் முயன்று அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டி விட்டனர்.

ஆயிரத்திற்கும் மேலாக 1005 சவரன் தங்கத் திற்கான தொகையான ரூ.2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கியது சாதாரணமானதல்ல.

கழகம் எடுத்த எந்த முடிவும் வெற்றி இலக்கை அடைந்தது என்பதைத் தவிர அதன் வரலாற்றில் வேறு அத்தியாயத்தைப் பார்க்கவே முடியாது.

அதுவும் இதுவரை கழகம் எடுத்த திட்டங்களில் - இப்பொழுது பெரியார் உலகம் என்று கழகம் மேற்கொள்ளும் திட்டம் மிகவும் வித்தியாசமானது - கேட்பவர்களை மலைக்க வைக்கக் கூடியது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

மிகப் பெரிய அளவுக்கு நிதி திரட்டப்பட வேண்டும் என்பதும் உண்மைதான். பெரியார் உலகத்தைப் பொறுத்தவரை கழகப் பொறுப்பாளர்கள் தெரிவித்த தகவல்கள் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.

எந்த இடத்தில் யாரிடம் வசூலுக்குச் சென்றாலும் 25,000 ரூபாயை பெரிய தொகை என்று நினைக்காமல் மிகவும் வரவேற்று, பெரியாருக்குக் கொடுக்காமல் வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறோம்? என்று வெளிப்படையாகவே உப சரித்து, நிதியையும் அளித்தனர் என்றால் - தமிழர்கள் மீது வைத்த நம்பிக்கை மிகவும் சரியானது தான் என்பதை மெய்ப்பிக்கிறது.

திராவிடர் கழகத் தலைவரின் 50 ஆண்டு விடுதலைப் பணிக்காக 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை அளித்தோம் - என் ஆயுளும் நீளும் என்று புளகாங்கிதம் அடைந்தார்.

இப்பொழுது இந்த பிரம்மாண்டமான திட்டத்தை அவர் எண்ணத்தில் உதித்த இந்தக் கருவை - செயல்படுத்திக் காட்டுவதன் மூலம் மேலும் அவரின் ஆயுளை நீட்டித்துக் கொடுப்பார்கள் தமிழர்களும் கழகத் தோழர்களும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

பெரியார் உலகம் என்பது 15 ஆண்டுக்கால திட்டம். இப்பொழுது நம் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 81 என்றால் அவரின் 96ஆம் அகவையில் இது நிறைவடையும் என்று பொருள்.

அவர் தலைமையில் தான் அந்த விழா என்கிறபோது தந்தை பெரியார் அவர்களின் வயதை எட்டுவார் என்கிற அடி நீரோட்டமும் இதில் அடக்கமாகும்.

நேற்று நடைபெற்ற தஞ்சை விழா என்று சொல்லுகிறபோது கொட்டும் மழையிலும் பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து திறந்த வெளியாக நடைபெற்ற விழாவை வெற்றியாக்கிக் கொடுத் தார்களே - இது வேறு எந்த அமைப்பாலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. கொள்கைக் கூட்டத்தின் முன் கொட்டும் மழையும் தோற்றது.

வெற்றி மாரத்தானைத் தொடங்கி விட்டோம் - முழு வெற்றியைத் தங்கப் பேழையில் வைத்துக் கொடுப்போம் - வாழ்க பெரியார்! வாழ்க தமிழர் தலைவர்!!

தமிழ் ஓவியா said...


மாற்றுத் திறனாளிகளுக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: கலைஞர் பட்டியல்

சென்னை, டிச.3- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை அக்கட்சியின் தலைவர் கலைஞர் பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற் றுத் திறனாளிகள் தினம் கொண்டா டப்படுகிறது. இந்நாளில் அவர் களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு மாற் றுத் திறனாளிகள் தினத்தில் 50-க்கும் அதிகமானோர் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல இந்த ஆண்டும் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என மாற்றி அவர்களுக் காக தனித் துறை திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

1974 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற் காலிகள், அலுமினியத் தாங்கிகள், கறுப்புக் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

திமுக ஆட்சியில் 1-11-1974-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூ தியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 1989-90 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் தாங்கிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் வண்டி கள், ஊன்றுகோல்கள் போன்ற பொருள்களுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது.

அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளி களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. 2010-11 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக் கான நிதி நான்கு மடங்காக அதாவது ரூ. 176 கோடியாக உயர்த்தப்பட்டது.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 2006 திமுக ஆட்சியில் ரூ. 200-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தப் பட்டது.

மாற்றுத் திறனாளிகள் தங்களுக் குள் திருமணம் செய்து கொண்டால் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 2009-10 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2007 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டன.

"இளைஞன்' படத்துக்கு கதை, வசனம் எழுதியதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 45 லட்சத்தை முதல மைச்சர் பொது நிவாரண நிதி மூலம் மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் துக்கு வழங்கினேன்.

திமுக ஆட்சியில் மாற்றுத் திற னாளிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை இந்த ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறார்கள் என கலை ஞர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


மாற்றுத் திறனாளிகளுக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: கலைஞர் பட்டியல்

சென்னை, டிச.3- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை அக்கட்சியின் தலைவர் கலைஞர் பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற் றுத் திறனாளிகள் தினம் கொண்டா டப்படுகிறது. இந்நாளில் அவர் களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு மாற் றுத் திறனாளிகள் தினத்தில் 50-க்கும் அதிகமானோர் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல இந்த ஆண்டும் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என மாற்றி அவர்களுக் காக தனித் துறை திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

1974 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற் காலிகள், அலுமினியத் தாங்கிகள், கறுப்புக் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

திமுக ஆட்சியில் 1-11-1974-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூ தியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 1989-90 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் தாங்கிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் வண்டி கள், ஊன்றுகோல்கள் போன்ற பொருள்களுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது.

அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளி களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. 2010-11 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக் கான நிதி நான்கு மடங்காக அதாவது ரூ. 176 கோடியாக உயர்த்தப்பட்டது.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 2006 திமுக ஆட்சியில் ரூ. 200-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தப் பட்டது.

மாற்றுத் திறனாளிகள் தங்களுக் குள் திருமணம் செய்து கொண்டால் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 2009-10 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2007 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டன.

"இளைஞன்' படத்துக்கு கதை, வசனம் எழுதியதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 45 லட்சத்தை முதல மைச்சர் பொது நிவாரண நிதி மூலம் மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் துக்கு வழங்கினேன்.

திமுக ஆட்சியில் மாற்றுத் திற னாளிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை இந்த ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறார்கள் என கலை ஞர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


பெரியார் வெறும் சிலையல்ல - சீலம்! பெரியார்காணவிரும்பியஉலகம்சித்தரிக்கப்படும்


பெரியார் உலகம் - பெரியார் பேருருவச் சிலை

பெரியாருக்குமுன்-பெரியாருக்குப்பின்-உட்பட

பெரியார்காணவிரும்பியஉலகம்சித்தரிக்கப்படும்

பெரியார் வெறும் சிலையல்ல - சீலம்!

தஞ்சை, டிச.3- தந்தை பெரியார் வெறும் சிலையல்ல - சீலம் - தத்துவ விளக்கம் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழ் ஓவியா said...

2.12.2013 அன்று தஞ்சையில் நடைபெற்ற பெரியார் உலகத்திற்கு 1000 பவுனுக்குரிய தொகை வழங்கும் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு, இயற்கை யோடு போராடி, மழையோடு போராடி, மழை நம்மை மிரட்டி னாலும், இந்த மக்கள் மழையையும் மிரட்டுவார்கள் என்று சொல் லக்கூடிய அளவில், ஒரு மகத்தான வரலாற்று பூர்வமான நிகழ்ச்சியாக இந்த தஞ்சையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக் கக்கூடிய பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் மானமிகு அய்யா பொத்தனூர் க.சண்முகம் அவர்களே,

கடமைக்குரிய பலன் நிச்சயமாகக் கிடைக்கும்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சியில், இறுதியில் தந்தை பெரியார் அவர்களுடைய 95 அடி உயர சிலை, மிகப்பெரிய பெரியார் உலகம், அதில் பெரியார் அவர் களுடைய சாதனை இவற்றையெல் லாம் உள்ளடக்கமாக வைக்கப் படக்கூடிய அந்தத் திட்டத்திற்கு, முதல் தவணையாக நிதி திரட்ட வேண் டும் - அது ஆதார நிதியாக முயற்சி களுக்கு அமைய வேண்டும் என்று முடிவெடுத்த நேரத் தில், நம்முடைய தோழர்கள் மட்டுமல்ல, அனைத்துப் பெருமக்களும், எல்லையற்ற மகிழ்ச்சி யோடு ஒரு சிறு சங்கடத்தைக் கூட பெறாமல், ஒரு பவுன் என்று சொன் னால், ரூ.25 ஆயிரம் என்று கழகம் முடிவு செய்து - அதனைத் தாருங்கள் என்று ஒரு வேண்டுகோள் விடுத்த நேரத்தில், ஒன்றரை மாத குறுகிய காலகட்டத்தில், நம்முடைய தோழர்கள் தேனீக்களைப் போல பறந்து பறந்து, பெரியார் பற்றா ளர்கள் உள்பட எல்லோரிடத்திலும் மிகப்பெரிய அளவிற்கு நிதியைத் திரட்டி, நாங்களேகூட எதிர்பாராத வகையில், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொருளாளர் என்ற தனித் தகுதியும், அதே நேரத்தில், நாளைய தமிழகம் இவரால்தான் விடியல் பெற இருக்கிறது என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பையும் பெற்ற எனது அருமை சகோதரர் அவர்கள், தளபதி அவர்களுடைய வருகை, இந்த முயற்சியை மென்மேலும் எங்களுக்கு ஊக் கத்தைத் தந்திருக்கிறது.

அப்படிப்பட்ட தளபதி அவர்களே, பல பேர் இங்கிருந்து மலையேறுகிறார்கள்; மலைக்குச் சென்ற நீங்கள் மக்களைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறீர்கள். அங்கும் மக்களிடத்தில் என்ன கடமையைச் செய்ய வேண்டுமோ, அந்தக் கடமையைச் செய்திருக் கிறீர்கள். அந்தக் கடமைக்குரிய பலன் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதில் மிகப்பெரிய ஒரு வாய்ப்பு இருக்கிறது.

சமுதாய இழிவு ஒழிவதற்காக யார் பாடுபடுகிறார்களோ, அவர்கள்தான் முக்கியம்!

நீங்கள் தளபதி என்பதற்கு அடையாளமே, மற்றவர்கள் போரிடத்தயங்கி ஒதுங்கிக் கொண் டிருக்கக் கூடிய காலத்தில்கூட, நான் தளபதி கடைசிவரையில் போரிடுவேன், எனக்கு வெற்றி - தோல்வி என்பதுகூட இரண்டாம் பட்சம்தான் என்ற நிலையில், அந்த அரசியல் போராட்டத்தில், நீங்கள் களத்தில் கடைசி கட்டத்தில் நின்று, அதற் கடுத்தபடியாக, இங்கே இணைப்புரை வழங்கிய, டாக்டர் அன்பழகன் கூறியதைப் போல, எது தாய் வீடோ, அந்தத் தாய் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள்; ஈரோட்டுக் களத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது ஈரோட்டுக்களம் மட்டு மல்ல, இதுதான் திராவிடர் இயக்கத்தின் அடித்தளம். ஆகவேதான், மிக முக்கியமாக இங்கே வந்திருக்கின்ற உங்களுக்கும், அதேபோல, இந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் மழையையும் பொருட்படுத்தாமல், டில்லி யில் நடைபெறவிருக்கின்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் - அதே நேரத்தில், எங்கள் சமுதாய இழிவு ஒழிவதற்காக யார் பாடுபடுகிறார்களோ, அவர்கள்தான் முக்கியம் என்று சொல்லி, தளபதி அவர்கள் கூறி யதைப்போல, இரட்டைக்குழலாக திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும் இருப் பதைப்போல, அதில் இன்னொரு குழலும் இணைந்தது - அதுதான் விடுதலை சிறுத்தை களுடைய அமைப்பு என்று சொல்லத்தகுந்த அளவிலும், இவைகளுக்குத் தோட்டா வழங்கு வதற்குத்தான் பக்கத்தில் இருக்கின்ற இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்; அதுபோல, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையினுடைய இணையற்ற பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

தமிழ் ஓவியா said...

மேடையில் வீற்றிருக்கக்கூடிய அருமை இன் னாள், முன்னாள் அமைச்சர் பெருமக்களே மற்றும் பெருமக்களே, ஒவ்வொருவரையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமின்மை காரணத்தால், நான் சுருக்கமாக என்னுடைய நன்றியுரையை, ஏற்புரையை இங்கே வழங்கவிருக்கிறேன்.

மழையையும் பொருட்படுத்தாமல் வெள்ளம் போல் திரண்டிருக்கின்ற உங்களுக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1005 பவுனுக்குரிய தொகையைக் கொடுத்திருக்கிறார்கள்!

தோழர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்; தஞ்சை தந்தை பெரியார் அவர்களுக்கு மிகப்பெரிய நஞ்சை. அந்த அடிப்படையில்தான், அதிகமாக எந்த மாவட்டம் வசூலிக்கிறதோ, அந்த மாவட்டத் தில்தான் விழா என்று சொன்னவுடன், தஞ்சை தோழர்கள்தான் இந்த இடத்தில் அந்த விழா நடைபெறவேண்டும் என்று முயற்சி எடுத்து, அதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 1000 பவுன் தருவதாகச் சொல்லி, இங்கே கொடுத்திருப்பதோ, 1005 பவுனுக்குரிய தொகையைக் கொடுத்திருக் கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்வத்தோடு கொடுத்திருக்கிறார்கள்; எல்லோ ரும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி. நேற்று காலையில் நான் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து, அவருடைய வாழ்த்தினைப் பெற்று, நான் வந்தேன். மாலையில், பேராசிரியர் அவர்களிடத் திலும் செல்லவேண்டும் என்ற உணர்வோடு, நம் முடைய இனமானப் பேராசிரியர் அவர்களைச் சந்தித்தேன். அவருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது சொன்னேன், இயக்கப் பொறுப் பாளர்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றும், மிகுந்த ஈடுபாடோடும், உறுதியோடும், விரைவாகவும் செய்கிறார்கள் என்று சொன்னேன்.

திராவிடர் கழகக் கேட்டிற்குள் நுழைந்தாலே அது தானே வந்துவிடுமே!

உடனே பேராசிரியர் அவர்கள் சொன்னார், அது இருப்பதால்தானே திராவிடர் கழகத்தில் இருக்கிறார்கள்; திராவிடர் கழகக் கேட்டிற்குள் நுழைந்தாலே அது தானே வந்துவிடுமே என்று சொல்லிவிட்டு, நாங்கள் விடைபெறும்பொழுது, ஒரு நீள கவரில் ரூ.25 ஆயிரத்தினை வைத்து, பெரியார் உலகத்திற்காக நிதி என்று சொல்லி, என்னுடைய பெயரையும் எழுதிக் கொடுத்தார்கள். அது இன்றைய விடுதலையிலும் செய்தியாகவும் வெளிவந்துள்ளது.

இங்கே விடுதலை சிறுத்தைகளின் சார்பாக, ரூ.50 ஆயிரத்தினை பெரியார் உலகத்திற்காக அளிக் கிறேன் என்று அறிவித்தார்கள். நாளை அதனை உங்கள் அலுவலகத்தில் வந்து கொடுக்கிறேன் என்று சொன்னார்கள்.

தமிழ்ச் சமுதாயத்தினுடைய நன்றிக் கடன்!

பணம் முக்கியமல்ல நண்பர்களே, நம்முடைய இனத்தினுடைய உறுதிப்பாடு இதில் இருக்கிறது. தமிழ்ச் சமுதாயத்தினுடைய நன்றிக் கடன் என்பது வந்திருக்கிறது.

தளபதி அவர்களுக்குத் தொல்லை கொடுத் தார்களே என்று எனக்கு வருத்தம்தான். ஏனென் றால், கடந்த மூன்று நாள்களாக ஓய்வின்றி சுற்று பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். அப்படிப் பட்டவருக்கு நாம் தொந்தரவு கொடுக்கவேண்டுமா என்று கழகத்தவரிடம் தெரிவித்தபொழுது, தளபதி அவர்களே மகிழ்ச்சியாக, மாலை 5 மணிக்கு தேர்தல் பிரச்சாரத்தினை முடித்துக் கொண்டு இங்கே வந்திருக்கிறார் என்று சொன் னால், இங்கே கொடுக்கப்பட்ட நிதியினை திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களும், தலைவர்கள் முன்னிலையில், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத் தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை, இன்னும் ஏனைய பற்றாளர்கள் ஆகியவர்களின் முன்னிலையில் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த விழாவிற்கு தளபதி வந்ததில் ஒரு மிகப் பெரிய பொருத்தம் என்னவென்று சொன்னால், பெரியார் சமத்துவபுரம் திட்டம் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்தனை சமத்துவபுரத்திலும் பெரியார் சிலையை திறந்து வைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால், அவர்தான் நம்முடைய தளபதி அவர்கள்; சமத்துவபுரம் இந்த நேரத்தில், கொஞ்சம் அலட்சியப்படுத்த புரமாககக்கூட இருக்கலாம், ஆட்சியாளர்களால்! ஆனால், அது நிரந்தரமல்ல நிச்சயமாக! பெரியாரை அலட்சியமாகக் கருதியவர் களை, மக்கள் அலட்சியப்படுத்துவார்கள் என்பது தான் வரலாறு.

தமிழ் ஓவியா said...


கலைஞர் அவர்கள்தான் எமது 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னின்று நடத்தினார்

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தளபதி அவர்கள் இந்த விழாவிற்கு வந்து, ஒரு சிறப்பான பணியை செய்திருப்பதற்காக, நன்றியை தெரிவிக்கின்ற நேரத்தில், என்னுடைய பிறந்த நாள் விழாவை, நான் எப்பொழுதுமே கொண்டாடுவதை விரும்பாதவன் மட்டுமல்ல; தோழர்களிடமும்கூட அகப்படாதவன். ஆனால், என்னை முதலிலே சிக்க வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்னுடைய 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நான் முன்னின்று நடத்துகிறேன் என்று சொல்லி, 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை நடத்தினார்கள்; அவருடைய சொல் லைத் தட்ட முடியாமல், ஏற்றுக்கொண்டேன். அன்று எல்லோரும் என்னை சந்தித்தார்கள்; பிறகு அதேபோல, 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்று சொன்னார்கள்; அதற்கு சரியென்று சொன்னேன்; இப்பொழுது 81 ஆம் ஆண்டு என்று சொன் னார்கள். சரி, இவ்விழாவில் என்னை முன்னிலைப் படுத்தக் கூடாது; தந்தை பெரியாரைத்தான் முன்னிலைப்படுத்தவேண்டும். ஆகவே, தந்தை பெரியாருக்குப் பேருருவச் சிலை; பெரியார் உலகம்; ஆகவே, அதனைச் செய்யவேண்டும் என்பதற்காக, முடிவு செய்து சொன்ன நேரத்தில், தோழர்கள் அற்புதமான ஒரு பணியினை முதற்கட்டமாக செய்து, 2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் ரூபா யினை இங்கு முதல் தவணையாகக் கொடுத்திருக் கிறார்கள்.

தோழர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்!

பெரியார் உலகத் திட்டம் 15 ஆண்டுகாலத் திட்டமாகும். இந்த உலகம், பெரியாருக்கு முன்னால்; பெரியாருக்குப் பின்னால்; பெரியார் காண விரும்பிய சமுதாயம் - அறிவியல் சமுதாயம் - அறிவியலுக்கும், மூட நம்பிக்கைக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடுகள்; அறிவியலால் ஏற்படும் நன்மைகள்; மூட நம்பிக்கையால் ஏற்படும் தீமைகள்; இவைகளையெல்லாம் ஒருமுனைப்படுத்தி, ஒரே இடத்தில், ஒரு நகருக்குள்ளே, ஒரு உலகத்திற் குள்ளே சென்று திரும்பும்பொழுது, பழைய நம்பிக் கைகள் உள்ளவர்கள் கூட மாறிவருவார்கள் என்று சொல்லி, பெரியார் கண்ட, காண விரும்பிய ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்ற பணி, அங்கே தொடர்ச்சியாக இருக்கும். அதற்காகத் தோழர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அமீர கத் தமிழர்கள் இங்கே வந்து சிறப்பு செய்தார்கள்; தளபதி அவர்களுக்கும் சிறப்பு செய்தார்கள்.

பெரியார் சிலையாக மட்டுமல்ல, சீலமாகவும்!

அமீரகத் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வுகளை அங்கே நடத்திக் கொண்டிருக் கிறார்கள். அதுபோல, அமெரிக்காவில், பெரியார் பன்னாட்டு நிறுவனத்தின் சார்பாக, டாக்டர் சோம. இளங்கோ அவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள். பேராசிரியர் சாகு அவர்கள், பெரியாரின் கருத்து களை ஒடிசா மொழியில் மொழியாக்கம் செய்து, உத்கல் பல்கலைக் கழகத்தில் ஒடிசா அரசாங்கமே அந்த நூலினை வெளியிட்டிருக்கிறது. பெரியாரு டைய கருத்துகள் மிகப்பெரிய அளவிற்கு உலக ளாவிய நிலையில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தப் பெருமை நிலைக்கவேண்டும் என்பதற்காகத் தான், எதிர்காலத்தில் இந்தப் பணியினை செய்யக்கூடிய வாய்ப்பினை இன்றைக்கு நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். அதற்கு சிறப்பான வகையில் ஒத்துழைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்கின்ற நேரத்தில், பெரியார் சிலையாக மட்டுமல்ல, சீலமாகவும், வழிகாட்டுகின்ற ஒளி யாகவும் நமக்குப் பயன்படவேண்டிய ஒரு கால கட்டம் இப்பொழுது.

தமிழ் ஓவியா said...

ஏனென்றால், பெரியார் கொள்கைகளை தலைகீழாக மாற்றிவிடலாம்; பெரியார், அண்ணா கொள்கைகளை - கலைஞர் ஆட்சி செய்தது; ஆகவே, அவர் செய்த காரியங்களையெல்லாம் தலைகீழாக மாற்றிவிடலாம் என்கிற ஒரு முயற்சி, ஆரியத்தாலே, இப்பொழுது திட்டமிட்டு நடத் தப்படுகின்றது. அது மிகப்பெரிய ஆபத்திற்குரிய ஒன்று.

அதற்காக நிறைய சொல்லவேண்டிய அவசிய மில்லை; அண்மையில் நடந்துகொண்டிருக்கக் கூடிய ஒரு செய்தியை உங்களுக்கு சுருக்கமாக சொல்கிறேன்.
சிதம்பரம் கோவில் வழக்கு!

சிதம்பரம் கோவில், நம்முடைய சோழர்கள் கட்டிய கோவில். அதற்கு ஆதாரங்கள் இருக் கின்றன. பராந்தர சோழன், பொன்மேடு வேய்ந் தான் என்பதெல்லாம் வரலாறு. எந்த ஒரு பார்ப் பனரும், இதுவரை ஒரு கோவில் கட்டியதாகக்கூட வரலாறு கிடையாது. கோவிலில் நுழைந்த பெருச்சாளிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள், இதுதான் வரலாறு.

இவ்வளவு பெரிய கோவிலைக் கட்டிய, இதே தஞ்சையில் பெரிய கோவில், வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த கோவிலைக் கட்டிய, இராஜராஜ னுக்கு ஒவ்வொரு ஆண்டும் சதய திருவிழா மிகப்பெரிய அளவிற்கு நடைபெறுகிறது. ஆனால், அந்த சிலை எங்கே இருக்கிறது, கோவிலுக்கு வெளியேதான் இருக்கிறது; அதுவும் கலைஞர் எடுத்த முயற்சியால்தான். கலைஞர் எவ்வளவு பெரிய கெட்டிக்காரர் என்பதற்கு அடையாளம், ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார். சிலையை உள்ளே வைக்க அனுமதி இல்லை என்று தொல்பொருள் துறை சொல்லியது. சரி, சிலையை வெளியே வைப்போம் என்று வெளியில் சிலை வைத்தார். உள்ளே போகவில்லை. இதிலிருந்து ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள், கோவில் கட்டு கின்ற தமிழன் வெளியில்தான் நிற்கவேண்டுமே தவிர, கோவிலுக்குள் போக முடியாது; பார்ப் பான்தான் போக முடியும் என்பதை, சொல்லாமல் சொன்னார் கலைஞர். நாங்கள் வெளிப்படையாக சொல்வோம். இதுதான் திராவிடர் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உள்ள வேறுபாடு.

சிதம்பர ரகசியம் என்ற நூலில்...

அதுபோல, சிதம்பரம் கோவிலை, காலங் காலமாக சுரண்டித் தின்ற, 3000 தீட்சதர்கள்; அவர்களுக்குப் பெற்றோர்களே கிடையாது; நேராக மேலே இருந்து வந்தவர்கள் என்று அவர்கள் புராணம் எழுதி வைத்தார்கள். அவர் களுக்கு எந்தச் சட்டமும் பொருந்தாது; குழந்தை மணமா - அவர்கள் நடத்திக் கொண்டிருப்பார்கள். இதனை எடுக்கவேண்டுமென்று, எம்.ஜி.ஆர். ஆட்சியில்கூட அவர் கடுமையாக முயற்சி செய்தார்; பலரும் முயற்சி செய்தனர். அத்தனைப் பேரும் தோற்று போன இடத்தில், சிதம்பரம் நகர மக்கள், கோடானகோடி பக்தர்கள் - அங்கே திருவாசகம், தேவாரம் ஓதவேண்டும் என்பது வரலாறு - ஏற்கெனவே அந்தக் கோவில் தீட்சதர் களுக்குச் சொந்தமில்லை என்கிற தீர்ப்பு நூறாண்டு களுக்கு முன்பு வந்திருக்கிறது - அந்தத் தீர்ப்பினை கொடுத்தது யார் என்றால், முத்துசாமி அய்யர் - ஒரு பார்ப்பன நீதிபதிதான் இந்த வரலாற்றைச் சொல்லியிருக்கிறார் - சிதம்பர ரகசியம் என்ற நூலில் இந்தப் புள்ளி விவரங்களைக் கொடுத் திருக்கிறோம்.

இதையெல்லாம் ஆதாரமாக வைத்துத்தான், மிகப்பெரிய அளவில், அந்தக் கோவிலை, மக்களுக்காக, பக்தர்களின் கோரிக்கைக்காக - மிகப்பெரிய அளவில் அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வந்த பெருமை - கலைஞர் ஆட்சியைச் சார்ந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!

உடனே சுப்பிரமணியசாமி போன்றவர்கள் வழக்கு மன்றம் சென்றார்கள்; தனி நீதிபதி அந்த வழக்கினை விசாரித்து, ஆணி அடித்ததுபோல அசைக்க முடியாத அளவில் தீர்ப்பு எழுதினார்.

பிறகு அவர்கள் மேல்முறையீடு செய்தார்கள்; மேல்முறையீட்டில் இரண்டு நீதிபதிகள் அமர் விலும், அரசாங்கம் கோவிலை எடுத்தது சரிதான் என்று தீர்ப்பளித்தார்கள்.

புள்ளி விவரத்தோடு சொன்னார்கள்; தீட்ச தர்கள் இருந்தபொழுது எவ்வளவு சுரண்டி னார்கள்; அரசாங்கம் எடுத்த பிறகு வருமானங்கள் முறையாக அறநிலையத் துறைக்கு வந்திருக்கிறது என்று அந்தத் தீர்ப்பில் சொன்னார்கள்.

ஆட்சிகள் மாறியவுடன், காட்சிகள் மாறு கின்றன என்று சொல்வதுபோல, ஆரியம் எப்படி சிலிர்த்து எழும்புகிறது என்பதற்கு அடையாளமாக, இப்பொழுது உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வழக்குப் போட்டுள்ளனர். எதைப்பற்றியும் கவலைப்படக் கூடியவர்கள் அல்லர் நாங்கள்!

உச்சநீதிமன்றத்தின் நீதிப்போக்கு எப்படி இருக்கிறது என்பது உலகம் முழுவதும் தெரியும். இது தனிக்கூட்டமாக இருந்தால் நான் விரிவாக உரையாற்றுவேன்; எதைப்பற்றியும் கவலைப்படக் கூடியவர்கள் அல்லர் நாங்கள். ஆனால், இவர் களை யெல்லாம் மேடையில் வைத்துக் கொண்டு, அந்த வேலைக்கு நான் இப்பொழுது போகமாட் டேன். ஆனால், தேவைப்படும்பொழுது நாங்கள் நிச்சயமாக அதனைச் செய்வோம்.

தமிழ் ஓவியா said...


கடவுளையே தூக்கி எறிகின்ற நமக்கு, நீதிமன்றம் என்ன? நீதியாக இருந்தால், அது நீதிமன்றம். நீதியைப் போட்டு புதைக்கின்ற மாதிரி இருந்தால் - யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று வந்தால், நீதிமன்றத்தினுடைய யோக்கியதை என்னவென்று இப்பொழுது உங்களுக்குப் புரியாதா?

ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள செய்தியைப் பாருங்கள்!

சங்கரராமன் கொலை வழக்கில் என்னாயிற்று. 81 சாட்சியம் பிறழ் சாட்சியம். தர்மம் வென்றது; உண்மை நிலைத்தது என்று விளம்பரம் கொடுக் கிறார்கள். தர்மம் எப்படி வென்றது என்றால், கொலை செய்யப்பட்ட அய்யரின் மனைவியைக் கேளுங்கள்; ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள செய்தியைப் பாருங்கள் உண்மை புரியும்- இதுதான் நீதிமன்றத்தின் போக்குகள்.

உச்சநீதிமன்றத்தினுடைய நீதிபதி கங்குலி அய்யர்; அவர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக இருந்தார்; அவர்தான் 2ஜி வழக்கு களில், ராசா போன்றவர்கள் பதவியில் இருக்கக் கூடாது என்று சொல்லி, பதவி விலகவேண்டும் என்று சொன்னாரே, தி.மு.க.விற்கு அவமானத்தை உண்டாக்கவேண்டும் என்பதற்காகச் செய்தார் களே, அந்தக் கங்குலியின் இன்றைய பெருமை என்ன? பெண்ணிடத்தில் தவறாக நடந்துகொண் டார்; அவருக்கு என்ன வயது? உச்சநீதிமன்றத்தின் நீதிபதியினுடைய யோக்கியதையை ஒரு பெண் வழக்குரைஞர் சொல்லும்பொழுது, நீதி, நியாயம் என்று நினைக்கும்பொழுது, எங்களுடைய ரத்தம் கொதிக்கிறது - பெரியார் தொண்டர்களாகிய எங்களுக்கு அடுத்த தேர்தலைப்பற்றி கவலை யில்லை - அடுத்த தலைமுறையினரைப்பற்றித்தான் கவலைதான் எங்களுக்கு.

சுப்பிரமணியசாமி உண்மையைப் பேசுபவரா?

சிதம்பரம் கோவில் சம்பந்தமாக, சுப்பிரமணிய சாமி உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்யும்பொழுது, தில்லைவாழ் அந்தணர்கள் 3000 பேரும் மேலே இருந்து குதித்தார்கள் என்று சொன்னவுடன், உடனே தடையாணை வருகிறது. 3 ஆம் தேதியன்று தமிழக அரசு பதில் சொல்லவில்லையானால், சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்கே உரியது என்று நீதிபதி கூறியதாக, சுப்பிரமணியசாமி சொல்லி யிருக்கிறார். சுப்பிரமணியசாமி உண்மையைப் பேசுவாரா என்பது வேறு விஷயம். ஆனால், அதேநேரத்தில், அப்படி இருந்தால், அதன் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா? கலைஞர் என்ன அவருக்காகவா செய்தார்; மக்களுக்காகத்தானே செய்தார். தி.மு.க.வுக்கு என்ன நட்டம்? தி.க.வுக்குத்தான் என்ன நட்டம்?

நீதிக்கட்சியினால் கொண்டு வரப்பட்ட சட்டம்

தமிழ் ஓவியா said...

சில பேர் புரியாமல் கேட்கிறார்கள், இவர்கள் தான் கடவுள் இல்லை என்கிறார்களே, அவர் களுக்கு எவன் கொள்ளையடித்தால் என்ன என்று; இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை சட்டமே - நீதிக்கட்சியினால் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம். அந்த வரலாற்றினை தெரிந்துகொள்ளவேண்டும்.

எனவே, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு இவ்வளவு பெரிய கொடுமை நடந்து கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் கோவில் தொடர் பான வழக்கு வருகின்ற நேரத்தில், தமிழக அரசின் சார்பில், ஜூனியர் வழக்கறிஞர்கள் இரண்டு பேர் இருந்தார்கள் என்று சொன்னால், இது என்ன கொடுமை?

மனித உரிமை என்பதுதான் மிக முக்கியம்

தமிழ் ஓவியா said...

இந்தக் கூட்டத்தின் வாயிலாக, தமிழக அரசிற்கு ஒரு வேண்டுகோளை நாம் வைக்கிறோம்; ஒரு அரசு செய்த காரியம்; இன்னொரு அரசு என்று வரும் பொழுது - அது கொள்கை முடிவாக வந்த நேரத்தில் - அதனை நிச்சயமாக அலட்சியப்படுத்தக் கூடாது; அலட்சியப்படுத்த முடியாது; அதுமட்டு மல்ல, அது எந்தக் கட்சி செய்தது என்பது முக்கியமல்ல; அதில் இருக்கின்ற நியாயங்கள் மிக முக்கியம். அதனை செய்யவேண்டும். மீறி, வேறு விதமாக நடந்தால், மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்பது மிகமிக முக்கியமானது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் தெளிவாக இருக்கிறார்கள்; திரா விடர் கழகம் தெளிவாக இருக்கிறது. பக்தர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இதில் பக்தி இருக் கிறதா? பக்தி இல்லையா? என்பது முக்கிய மல்ல; மனித உரிமை என்பதுதான் மிக முக்கியம். இப்படி எத்தனையோ பிரச்சினைகள்.

ஒரு பக்கம் ஜாதியம், இன்னொரு பக்கம் மதவெறி இவைகளெல்லாம் வருகின்றபொழுது, பெரியார் சிலையாக நின்றால் மட்டும் போதாது; பெரியாரைப் பின்பற்றப்படவேண்டிய சீலமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி என்று சொல்லி, கொட்டும் மழையானா லும், கொளுத்தும் வெயிலானாலும் கொள்கை யாளர்களுக்கு அவை பொருட்படுத்த முடியாத வைகள்; எங்களுடைய பயணங்கள் என்றும் தடைபடாது; சென்றுகொண்டே இருக்கும்.

தமிழ் ஓவியா said...

அதேநிலையில், இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு செய்த உங்களுக்கு நன்றி, நன்றி!

கூடுதல் தகுதியோடு அந்தப் பணியை செய்வார் நம் தளபதி!

அதேநேரத்தில், இந்த சிலை, நிச்சயமாக, இந்தப் பெரியார் உலகம் இன்றைக்குத் துவக்கத்தை நம்முடைய தளபதி செய்திருக்கிறார்கள்; ஆனால், அடுத்தபடியாக, நிச்சயமாக அந்தப் பெரியார் உலகத்திற்கு தளபதி அவர்கள் அங்கே வருவார்கள்; அந்தப் பணியை செய்வார்கள்; அதுமட்டுமல்ல, அப் பொழுது கூடுதல் தகுதியோடு அந்தப் பணியை செய்வார் என்பதை நான் மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் சொல்லி, இது எங்கள் விருப்பம் மட்டு மல்ல, வரலாற்று கட்டாயம் என்று கூறி முடிக் கிறேன், நன்றி, வணக்கம்!
இங்கே வந்திருக்கின்ற அனைத்துத் தலைவர் களுக்கும் நன்றி! விட்டு விட்டு பெய்யும் மழைக்கும் நன்றி! உங்களுக்கும் நன்றி!

வாழ்க பெரியார்! வாழ்க பகுத்தறிவு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் உரையாற்றினார்.





தமிழர் தலைவருக்குச் சிறப்பு

பிறந்த நாள் விழா காணும் தமிழர் தலைவருக்கு விழாவில் பங்கேற்க வந்த பல்வேறு கட்சித் தலைவர்களும் கழகத் தலைவ ருக்குச் சால்வை அணிவித்து வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொண் டனர். விழாவில் பங்கேற்று உரை யாற்றிய பல்வேறு கட்சிகளின் தலை வர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார்.


பெரியார் பேருருவச் சிலைக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.50,000

பெரியார் உலகம் - பெரியார் பேருருவச் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.50 ஆயிரத்தை அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல் - திருமாவளவன் தஞ்சை விழாவில் பலத்த கரஒலிக்கிடையே அறிவித்தார்.


பெரியார் உலகத்திற்கான நிதி ரூ.2 கோடியே 51 லட்சத்து 33,000

பெரியார் உலகம் - 95 அடி பெரியார் பேருருவச் சிலைக்கு 1005 சவரன் தங்கத்துக்கான நிதியாக ரூபாய் 2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் கழகத் தலைவரிடம் பலத்த கரஒலிக்கிடையே அளிக்கப்பட்டது. முன்னதாக தமிழர் தலைவருக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சால்வை அணிவித்தார். கழகத் தலைவரின் இணையர் மோகனா அவர்களுக்குக் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி சால்வை அணிவித்தார்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழா மாட்சிகள்

பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விழா நாயகர் பதில் அளித்த புதுமை

தஞ்சை, டிச. 3- திரா விடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்களின் 81-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 2.12.2013 அன்று எழுச்சி யோடு கொண்டாடப்பட் டது.
தஞ்சை பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத் தின் திறந்தவெளி அரங் கில் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தன.

81-ஆம் ஆண்டு பிறந்த நாள் என்கிற சிறப்போடு, திருச்சி, சிறுகனூரில் அமைய விருக்கின்ற பெரியார் உலகம் என்கிற பேருருவ திட்டத்திற்காக 1000 பவுன் நிதி வழங்கும் விழாவும் நடைபெற்றது.

காலை 7 மணி முதலே தோழர்கள் திரளத் தொடங்கினர். ஒன்பது மணிக்கெல்லாம் அரங்கம் நிறைந்திருந்தது.

அரங்கில் நுழைந்ததும் வலப்புறம் திராவிடன் புத்தக நிலையம் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தது. அதுமட்டுமின்றி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 12 வகையான புதிய நூல்களை வெளி யிட தயாராய் வைத்திருந் தனர்.

வலப்புறம் இப்படி என்றால், இடப்புறம் தந்தை பெரியாரின் வாழ் வும் பணிகளும் என்ற தலைப்பில் பெரியாரின் நிழற்படக்காட்சி வைத்தி ருந்தனர். அதில் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் 111 படங்களாக (போட்டோ) வரிசைகட்டி அழகு செய்தன.

தமிழ் ஓவியா said...

அதனைத் தொடர்ந்து பெரியார் உலகம் நன்கொடை மய்யம் என்கிற பிரிவு அமைக்கப் பட்டு, நன்கொடை வழங்கியவர்களைக் கணினியில் பதிவு செய்து, கணக்குகளை நேர்த்தியோடு முறைப்படுத்தி இருந்தார்கள்.

இந்நிகழ்வுகளின் மற்றொரு பெரும் சிறப்பு மருத்துவ முகாம்கள்! ஆம்! ஆசிரியரின் 81-ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி அய்ம்பெரும் மருத்துவ முகாம்களாக கண்பரிசோதனை, காது, மூக்கு தொண்டைப் பரி சோதனை, பல்சிகிச்சை இருதயச் சோதனை, சர்க் கரை நோய் பரிசோதனை ஆகியவை நடைபெற்றன.

தொடர்ந்து மேடை யில் முப்பெரும் பொரு ளாளர்கள் வரவேற்று மகிழ்ந்தார்கள்; ஆம்! பழைய கோட்டை அர்ச்சு னன், தஞ்சை கா.மா. குப்புசாமி, கல்லை கோ. சாமிதுரை ஆகியோரின் பெயரில் அம்மேடை அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான பொலிவு மிகுந்த அரங்கிற்கு காலை 9.45-மணிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர்! மேடையில் ஒலிவாங்கி மூலம் தோழர்கள் ஆசிரி யரை வரவேற்று முழக்கமிட, நம் தோழர்களோ தாங்கள் ஒவ்வொருவரும், ஆசிரியருடன் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்து ஒலி இசைத்தனர்.

தமிழ் ஓவியா said...

ஆசிரியரும் தோழர்கள் எவரையும் விட்டுவிடா மல் வாழ்த்துக்களை பெற்று, நன்றி கூறியவாறே முகமலர்ந்து மேடை நோக்கி நகர்ந்தார்.

அங்கே ஆசிரியருக்கு ஓர் அதிர்ச்சிக் காத்திருந் தது. ஆம்! 81-இல் 135-அய் ஆக்கும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கள்! என எழுதப்பட்ட மூன்றுக்கு இரண்டு என்ற அளவில் கேக் ஒன்று மேஜையில் இருந்தது. அதை ஆசிரியர் அவர்கள் வெட்ட வேண்டும் என எல்லோரும் அன்புக்கோரிக்கை வைக்க, அரங்கம் ஒலி எழுப்பி ஆடியது.
ஆசிரியரும் அகமலர்ந்து கேக் வெட்டினார். அருகிலிருந்த மோகனா அம்மையார் அவர்களுக்கு ஊட்டினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொரு வருக்கும் கேக் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தோழர்கள் வாழ்த்து

வாழ்த்துக்களை பெறத் தயாரானார் ஆசிரியர். திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் அவருடைய இணையர் வெற்றிச்செல்வி, பிற்பட் டோர் கூட்டமைப்பின் தலைவர் கோ.கருணாநிதி, தஞ்சை முன்னாள் நகர் மன்றத் திமுக தலைவர் ஆர்.ஜெயபால், அஞ்சுகம்பூபதி, கிருஷ்ணமூர்த்தி, திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணே சன் அவர் தம் வாழ்விணையர் தேவநிதி, ஆர்.நித்ய ராஜ், கண்ணன், சங்கர், பேராசிரியர் நம்.சீனிவாசன், திருக்குவளை மேகநாதன், மாலையூர் ஊராட்சி மன்றம் செந்தில், வேளாங்கண்ணி, எம்.இளங்கோ மற்றும் ஆர்.திருமூர்த்தி, தஞ்சை மருத்துவர் நரேந்திரன், தாராபுரம் வழக்குரைஞர் செல்வராஜ் மற்றும் சக்திவேல், பரமசிவம், ஈரோடு லட்சுமி அம்மாள், மதிவதினி, வடசேரி கோ.அய்யாவு, உரத்தநாடு சேக்தாவூது, வடசேரி சங்கர், தஞ்சாவூர் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர் கள், தஞ்சை சுரேசு, சுபாஸ், தினத்தந்தி ராஜூ, சென்னை தீனதயாளன் மற்றும் சீனிவாசன், பேரா சிரியர் அருணன், தஞ்சை அருண் உணவக உரிமை யாளர், பொறியாளர் சிதம்பரம், ரெஜினா பால்ராஜ், சென்னை தங்கமணி, தனலெட்சுமி, விழிகள் பதிப் பகம் உரிமையாளர், வேதாரண்யம் சட்டமன்ற முன் னாள் உறுப்பினர் ம.மீனாட்சி சுந்தரம், சிங்கப்பூர் செம்மொழி ஆசிரியர் இலியாஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் வரிசையில் வந்த வண்ணம் இருந்தனர்.

தமிழ் ஓவியா said...

இது தவிர, தமிழ்நாட்டு இயக்கத்தோழர்கள், வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த இயக்கத் தோழர்கள் என எண்ணற்றோர் வாழ்த் துக்கள் கூறி மகிழ்ந்தனர். தொடர்ந்து பெரியார் கல்வி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் நன்கொடை வழங்கினர்.

இதில் பெரும் சிறப்பு என்னவென்றால் பெரும் பாலும் பொன்னாடைகளை தோழர்களும், மற்ற வர்களும் பயன்படுத்தவில்லை. அனைவருமே சிறுகனூரில் அமையவுள்ள பெரியர் உலகத்திற்கு நன்கொடையாகக் கொடுத்து மகிழ்ந்தனர் (தனி உண்டியல் வைக்கப்பட்டிருந்தது அதில் நிதி அளித்தனர்) தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங் கிற்கு செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு, வழக்குரைஞர் அணி மாநிலச் செயலாளர் ச.இன்பலாதன், பெரியார் மருத்துவர் அணி செயலா ளர் ஜி.எஸ்.குமார், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் பெரியார் மருத்துவர் அணி செயலாளர் பழ.ஜெகன் பாபு வரவேற்க, மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன் இணைப்புரை வழங் கினார்.

தமிழர் தலைவரின் முத்திரைகளும், சாதனை களும் எனும் பொதுத்தலைப்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இக்கருத்தரங்கில் அறிவியல் பகுத்தறிவு என்கிற கோணத்தில் பேராசிரியர் அருணன் மற்றும் இரா.பெரியார்செல்வன் பேச, சமூகநீதி எனும் கோணத்தில் பேராசிரியர் நம்.சீனிவாசன், இராம. அன்பழகன் பேச, கல்வி தொண்டறப் பணிகள் எனும் அம்சத்தில் பேராசிரியர் பழநி அரங்கசாமி, டெய்சி மணியம்மை ஆகியோர் பேசினர்.

தொடர்ந்து பாலியல் நீதி எனும் தலைப்பில் நீதிபதி பொ.நடராசன் அவர்களும், அயல் மாநிலங்களில் - நாடுகளில் பெரியார் கொள்கைப் பரப்புதல் எனும் தலைப்பில் வீ.குமரேசன், பூவை.புலிகேசி ஆகியோர் பேசினர்.

கருத்தரங்கில் முன்னதாக திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார். தொடர்ந்து கருத்தரங்கில் பேசிய அனைவருக்கும் கழகத்தின் பொருளாளர் பிறைநுதல் செல்வி மற்றும் வீ.அன்புராஜ் ஆகியோர் பயனாடைகள் அணிவித்துச் சிறப்பித்தனர். நகரச்செயலாளர் சு.முருகேசன் நன்றி கூறினார்.

திராவிடர் கழகத்தின் பொருளாளராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மருத்துவர் பிறைநுதல் செல்வி அவர்களை பாராட்டி ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்தார்.

இறுதியில் வேகமான வினாக்களும் விரைவான பதில்களும் என்ற தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா நாயகர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார்.

முதல் கேள்வியை கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் எழுப்பினார்.

1) பெண்ணுரிமை விசயத் தில் நானே முழுதாக இருக்க வில்லை என்கிறீர்களே, அது எப்படி சரியானதாகும்?

2) நம்.சீனிவாசன்: உங்க ளின் உண்மையான மகிழ்ச்சி எது?

3) 70 ஆண்டுகளில் சலிப்பு, விரக்தி, ஏற்பட்டதா?

4) பேராசிரியர் முனைவர் பழனி அரங்கசாமி: இயற்கை தான் கடவுள் என்று சொல்ப வர்களிடம் இப்போது நமக் குப் பயம் ஏதுமில்லை என்று பெரியார் சொன்னது ஏன்?

5) சோம.இளங்கோவன் (அமெரிக்கா): இவ்வளவு பிரச்சாரம் செய்தும் படித்தவர்கள் ஏற்பதில்லையே ஏன்?

6) பேரா.அருணன்: மதவாத, ஜாதியவாத பிரச்சினைகள் குறித்து கலைஞரிடம் பேசியதாக ஒரு பேட்டியில் கூறினீர்களே? அதை விளக்க முடியுமா?

7) ஊமை செயராமன் (தருமபுரி): பெரியார் அம்பேத்கர் கருத்துகளை சிலர் ஏற்காமல் இருக்கிறார்களே ஏன்?

8) வெ.செயராமன் (தஞ்சை மண்டல தி.க.தலைவர்): சிலர் பெரியார் உலகத்திற்கு நன்கொடை கொடுக்க மறுக்கிறார்களே ஏன்?

9) சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர்): உங்களு டைய பெரியாரியல் நூலைப்படித்த நண்பர்கள் உங்களை ஒரு பாஸ்வேடு போல தந்தை பெரியாருக்கு நீங்கள் வாய்த்ததாகக் கூறினார்களே அது பற்றி தங்கள் கருத்தென்ன?

இந்த கேள்விகளுக்கு விழா நாயகர் கி.வீரமணி பதிலளித்தார். (விரிவாக பின்னர் வெளிவரும்).

தமிழ் ஓவியா said...


தஞ்சை!

கொட்டு மழை
முத்தில் குளித்த
கொள்கையூர்
தங்கங்களே!

குவலயத்தின்
உச்சியிலன்றோ
குடியேறி
விட்டீர்கள்!

அடடா, என்ன
காட்சி அது!
கண்டது கனவா -
நனவா!

மழையப்பனை
விரட்டி
வாலைச் சுருட்டச் செய்தீர்களே!

மேடையில்
வீற்றிருந்த
தலைவர்கள்
என்ன பேசினார்கள்?

தணல் தொட்டியில்
எப்படி உருக்கி
வார்த்திருக்கின்றார்
தந்தை பெரியார்?

இந்தக் கருஞ்சட்டைகள்
சுவாசிப்பதெல்லாம்
இலட்சியத் தீயின்
துண்டங்களா?

இந்தத் தொண்டர்
குழாம் உண்பதெலாம்
தியாக நெருப்பின்
பண்டங்களா?

ஆசா பாசங்கள்
அண்டாதா?
ஆசையால்
அடிதான் சறுக்காதா?

சபலங்கள்
சேட்டை செய்யாதா?
சஞ்சல நோய்களும்
தீண்டாதா?

கட்டுப்பாடெனும்
கட்டிலின்
நான்கு கால்கள்
இவர்கள் தானோ!

பெரியாரோடு
ஒழிந்ததா?
நரியார் எண்ணங்கள்
பலித்ததா?

பெரியார் விட்டுச்
சென்ற வித்து
வீரமணி யெனும்
பெருஞ் சொத்து!

அவர்தம்
கண்ணசைப்பில்
கருஞ்சட்டைப்
பட்டாளம்

கண்டது காண்
தஞ்சையெனும்
கொள்கை அருவியின்
குற்றாலம்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


என்ன?



காட்டுமிராண்டித்தன்மை என்றால் என்ன? மனிதன் அறிவுப் பக்குவம் அடையாமல் மிருகப் பிராயத்தில் இருக்கும் தன்மையைக் குறிப்பிடும் சொல். இது உலகத்தில் எல்லா நாடுகளிலும் எந்தச் சமூகத்திலும் இருந்து வந்த நிலைமையேயாகும்.
(விடுதலை, 24.1.1968)

தமிழ் ஓவியா said...


நேற்றைய ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் சிதம்பரம் கோயில்

நேற்றைய (03.12.2013) ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் (தந்தி தொலைக்காட்சி) சிதம்பரம் கோயில் தொடர்பான விவாதம் பார்த்தேன். தொடர்புடைய நால்வரைப் பங்கேற்க வைத்தது சரிதான்.அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை வைத்ததும் சரிதான் என்றாலும், ஆயுத எழுத்து நிகழ்ச்சியை நடத்திய ரங்கராஜ் பாண்டே, ஆயுதத்தை கையிலெடுக்காத குறையாய் அவரும் வெங்கடேச தீட்சிதரோடு சேர்ந்து குரல் கொடுத்து தனது இனப் பாசத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதோடு அவருக்கும் ஒரு படி மேலே சென்று, விட்டேனா பார் எனத் துள்ளித் குதித்து அடேயப்பா!என்ன ஒரு இனப்பற்று. மேலும் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை பேசவிடாமல் அவரது கருத்துக்களை திசைதிருப்பியும் திரு.செந்தில்நாதன் சொன்ன அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரானால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்றதை மிக லாவகமாக புறந்தள்ளி ஒரு வழியாக விவாதத்தை முடித்தார்.இடையில் பேசிய அந்த தீட்சிதர் போகிற போக்கில் சும்மா தமிழ்,தமிழ்னு இனியும் பேசிக்கிட்டு இருக்காதீங்க என்று சொல்கிறார். இத்தனையும்வெல்க தமிழ் என்று தனது நாளிதழில் அடைமொழி போட்டுக்கொள்ளும் நம் தமிழர் நடத்திய தந்தி தொலைக்காட்சியில் தான்.இதுதான் தமிழ் தேசியத்தின் இறுதி வடிவம் என்று சொல்லாமல் சொல்லும் தந்தி தொலைக்காட்சி.
கொடுமை! கொடுமை!!

- தி. என்னாரெசு பிராட்லா, மாவட்ட செயலாளர், காரைக்குடி

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் சல்மான் குர்ஷித்: கலைஞர் பேட்டி


சென்னை, டிச.24- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக நடைபெறும் விவாதத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்றார் டெசோ தலைவர் கலைஞர்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

செய்தியாளர் :- தமிழகம் முழுவதும் மீண்டும் மின்வெட்டு நடைமுறைக்கு வந்துவிட்டதே; சென்னையிலேயேஅன்றாடம் இரண்டுமணிநேரம் மின்வெட்டு செய்யப்படுகிறதே?
கலைஞர் :- சந்தோஷம்!

செய்தியாளர் :-ஆனால் மின் வெட்டு ஏற்படும் போதெல்லாம், முதலமைச்சர் ஜெயலலிதாஅதற்கு தி.மு. கழகத்தின் மீது பழிபோடுகிறாரே? மேலும் மத்தியஅரசும், தி.மு. கழகமும் சேர்ந்து சதிசெய்வதாகச் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- அது அவர்களுடைய வாடிக்கை. தாங்கள் செய்கிற தவறை மறைக்க பிறர் மீது பழி போடுவது என்பது ஜெயலலிதாவுக்கு இன்று நேற்றல்ல; என்றுமே வாடிக்கை.

செய்தியாளர் :- கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் பிரச்சினையில் இரு தரப்பினருடன் பேசி சுமூகமான முடிவெடுக்க வேண்டுமென்று சொல்லி யிருந்தீர்கள். ஆனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறதே?

கலைஞர் :- நாட்டின் பொருளாதாரம் அல்லது விஞ்ஞான வளர்ச்சிக்காக சிலநடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. விவசாயத் துறையின் வளர்ச்சிக் காக இயந்திரமயம் என்றபெயரால் சில காரியங்கள் நடக்கின்றன. அதேநேரத்தில் விவசாயத்திற்கு கேடு விளைவிக்காமல் இருக்க மற்ற துறையினரும், தொழில் துறையினரும் அக்கறைகாட்டவேண்டும். அதனால் தான் இரு சாராரும் பேச்சுவார்த்தைநடத்தி அதனை ஒரு முனைப்படுத்த வேண்டும் என்று நான் தெரி வித்தேன்.

செய்தியாளர் :- மத்தியஅமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைசென்றது பற்றி வருகின்ற நாடாளு மன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் விவாதம் வருமென்றுசொல்கிறார்களே?

கலைஞர் :- அப்படியொரு விவாதத்திற்கு அங்கே அனுமதிக்கப்படுமானால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்கள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் அங்கே விவாதத்தில் பங்கேற்பார்கள். செய்தியாளர் :- நேற்றையதினம் கேப்டன் தொலைக் காட்சியைச் சேர்ந்த செய்தியாளர்களை ஒருகுழுவினர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். ஆனால் காவல்துறையினர் தொலைக்காட்சிநிறுவனத்தைச் சேர்ந்தவர்களையே கைது செய்திருக்கிறார்கள். 200 பேருக்குமேல்பத்திரிகையாளர்களைபோலீசார் கைதுசெய்திருக்கிறார்களே?

கலைஞர் :- இதனை வன்மையாகக் கண்டிக் கிறேன்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லை

சரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை. - (விடுதலை, 26.8.1967)

தமிழ் ஓவியா said...


போர்க் குற்றங்கள்மீது நடவடிக்கை:


இலங்கைக்கு,அமெரிக்காஎச்சரிக்கை

சர்வதேச சமூகம் பொறுமை காக்காது!

இலங்கை உள்நாட் டுப் போரில், ராணுவத் தின் அட்டூழியம் மற் றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாடு நடவடிக்கை எடுக்கா விடில், சர்வதேச சமூகம் இனியும் பொறுமையாக இருக்காது என்று தெற் காசிய விவகாரங்களுக் கான அமெரிக்க வெளி யுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஸ் வால் கூறினார்.

போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசின் நடவடிக்கை யில் வரும் மார்ச் மாதத் துக்குள் எந்த முன்னேற் றமும் இல்லாவிட்டால் அய்.நா. தலைமையி லான விசாரணை கோரு வோம் என்று இங்கி லாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த மாதம் கூறியிருந்தார். இக் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் நிஷா பிஸ் வால் இவ்வாறு கூறி யுள்ளார்.

அய்.நா. அறிக்கை

2009-ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி மாதங் களில், சிங்கள ராணுவத் தால் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என் றும், ராணுவத்தினர் கடும் போர்க் குற்றங் களில் ஈடுபட்டதாகவும், அய்.நா. அறிக்கை கூறு கிறது.

இந்நிலையில், போர்க் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்கும் விவகாரத்தில் இலங்கை அரசு தாமாக முன்வந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிஷா பிஸ்வால் கூறியுள் ளார்.

இந்த விவகாரத்தில் இலங்கை தங்கள் நாட்டு சட்ட திட்டங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவ் வாறு நடந்து கொள்ளும் என்றும் நம்புகிறோம். மேலும் போருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையத் தின் பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறை வேற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லா விட்டால் சர்வதேச சமூகம் இனியும் பொறு மையாக இருக்காது என்றார் நிஷா பிஸ்வால்.

இலங்கை ராணுவத் தின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை அனு மதிக்க முடியாது என்று கூறிவரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, உள் நாட்டு விசாரணைக்கும் உத்தரவிட மறுத்து வருகிறார். ராணுவத்தின் அத்துமீறல் குற்றச்சாட் டுகளையும் அவர் மறுத்து வருகிறார்.

அதிகாரப் பகிர்வை நோக்கி சிறு நடவடிக் கையாக கடந்த செப் டம்பர் மாதம் நடை பெற்ற இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி வெற்றி பெற்ற போதி லும், அங்கு ஊடகங்கள் மீதான நெருக்குதல், மனித உரிமை மீறல்கள் போன்ற சமீபத்திய செய் திகள் அதிர்ச்சி அளிக் கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மோடிக்கான விசா வழங்கும் கொள்கையில் மாற்றம் எதுவும் செய்யவில்லை அமெரிக்கா மீண்டும் அறிவிப்பு


வாஷிங்டன், டிச.5- அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருந் தாலும் அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக வும், மோடிக்கு விசா வழங்குவது தொடர் பான கொள்கையில் மாற்றம் எதுவும் செய் யப்படவில்லை என்றும் அதிபர் ஒபாமாவின் அமெரிக்க நிர்வாகம் மீண்டும் தெரிவித்துள் ளது.

இதுகுறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசியா விற்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:

அமெரிக்க விசா விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின் றேன். அனைவரது விசா விண்ணப்பத்தின் மீதும் உரிய ஆய்வு நடத்தப் படும். அதன்படி விசா விண்ணப்பம் சமர்ப்பிக் கும் அனைவரது விண் ணப்பமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அந்த நடைமுறையின் இறுதி முடிகள் குறித்து பேச இயலாது என்றார் பிஸ் வால்.

அப்போது நரேந்திர மோடிக்கு விசா வழங் குவது குறித்து செய்தி யாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப் பினர். அதற்கு பதில் அளித்த பிஸ்வால், "அமெரிக்க விசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. விசா விண்ணப்பங்கள் எப்போதும் விண்ணப் பத்துக்கு தகுந்தவாறு பரிசீலனை செய்யப் படுகின்றன.

அரசு விசா, அரசு அதிகாரிகளுக்கான விசா, சுற்றுலா விசா என விசாக்களில் பல்வேறு விசாக்கள் உள்ளன.

எனவே, விசா விண் ணப்பத்தின் தன்மை மற்றும் யார் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்கள் என்பதைப் பொறுத்தே அதன் மீதான முடிவுகள் இருக்கும்' என்று கூறினார்.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கலவ ரத்தைத் தொடர்ந்து, 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது. அதே நிலைதான் தற்போ தும் நீடித்து வருகிறது என்பதை அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழ் ஓவியா said...


பெரியார் சமத்துவபுரத்தில் கோயிலா?


கரூர் மாவட்டம், வெள்ளியணையில் இம்மாவட்டத்தில் முதல் பெரியார் சமத்துவபுரம் உள்ளது. இச்சமத்துவபுரத்தில் கடந்த 2010 ஆண்டு மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி அவர்கள் மார்பளவு பெரியார் சிலையை நிறுவினார். சிலையின் அருகில் புற்றுக் கண் கோயில் திடீரென முளைத்துள்ளது. சமத்துவபுரத்தின் உள்ளே பால நாகம்மா கோயில் என இரண்டு கோயில்கள் சமத்துவபுரத்தில் உள்ளன. இந்த இரண்டு கோயில்களிலும் பாம்பு புற்றின் அருகில் சாமி படங்களும், மஞ்சள் துணி கட்டி மஞ்சள், சந்தனம், குங்குமம் தெளித்து தினம் பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்த கோயில் அருகே வேப்ப மரம், மற்றும் கோயிலை கீற்றுக் கொட்டகை அமைத்து பெரியார் சமத்துவபுரத்தின் நுழைவு பகுதியில் பெரியார் சிலை அருகே கோயில் அமைத்து சில சமூக விரோதிகள் தீய செயலில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அந்த கோயிலை அப்புறப்படுத்தி ஜாதி சமய ஏற்றத் தாழ்வுகளை அகற்ற முன்னால் முதல்வர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால் கழகத் தோழர்களையும், பகுத்தறிவு சிந்தனை யாளர்களையும் ஒன்று திரட்டி பெரிய போராட்டம் நடைபெறுவதை தவிர்க்க உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும். எந்த நோக்கத்துக்காக பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கப்பட்டதோ அதை உருக்குலைக்க சதி நடக்கிறது. அரசு தலையிடட்டும்.