Search This Blog

3.7.12

ஆண்டாள் என்பாள் இருந்தாளா?

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பாடப் புத்தகத்தில் ஆழ்வார்களுள் ஒருவராகிய ஆண்டாள் அம்மையாரைப் பற்றித் தவறான செய்திகள் இடம் பெற்றுவிட்டதாம், ஆகாயத்துக்கும் பூமிக்குமாக சிலர் குதிக்க ஆரம்பித்துள்ளனர். பார்ப்பன ஊடகங்களும் உசுப்பி விடும் வேலையில் வேகமாக இறங்கியுள்ளன.
என்ன அப்படி ஆண்டாளைப் பற்றி அசிங்கமாக எழுதப்பட் டுள்ளது!

ஆண்டாள் - பெரியாழ்வாருக்குத் திருட்டுத்தனமாகப் பிறந்தவள் என்றும், வல்லபதேவன் என்னும் மன்னன் ஆண்டாள்மீது மோகம் கொண்டதாகவும் எழுதப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினைக்குக் காரணமாம்.

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும், புராணம் என்பது வேறு, வரலாறு என்பது வேறு; இரண்டும் ஒன்றல்ல! ஏதோ வரலாற்றைத் திரித்து எழுதி விட்டதாக தையத்தக்கா என்று குதிக்கிறார்களே - ஆண்டாள் கதை என்ன வரலாறா?


ஆண்டாளைப் பற்றி அவதூறாக ஆபாசமாக குறிப்பிட்டதாக ஆர்ப் பாட்டம் செய்கிறார்களே! இந்த ஆண்டாள் எழுதாத ஆபாசமா?

பக்தையாக இருப்பவர்களுக்குக் கடவுள் தந்தையாகக் கருதப்படுவது தான் உலக வழக்கு - ஒரு வகையில் ஒழுக்கமும்கூட!


ஆனால் ஆண்டாள் என்ன பாடுகிறாள்? அந்தக் கடவுளையே புருஷனாக ஆக்கிக் கொள்ள அடங்கா ஆசைப்படுகிறாளே! கடவு ளோடு புணர வேண்டும் என்று வெறி பிடித்துத் துடியாய்த் துடிக் கிறாளே!


ஆண்டாளைப் பற்றி அவதூறா? பொறுக்க மாட்டோம் என்று பொங்கி எழுகிறார்களே, ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே! இந்த அசிங்கத் துக்குத்தான் வக்காலத்தா?


இந்த ஆண்டாளைப் பற்றி சாட்சாத் வைணவ மெய்யன்பரான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி) என்ன கூறுகிறார்?


ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆண்டாள் பாடிய தாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங் களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று திரிவேதி என்னும் ஆங்கில மாத இதழில் (1946) செப்டம்பர் இதழில்) ராஜாஜி எழுதியுள்ளாரே - இதற்கு என்ன பதில்?

இல்லாத ஒரு கற்பனைப் பாத்திரத்தைப் பற்றி.. ஏன் அலறல் - கூக்குரல்!

ஆண்டாளின் திருப்பாவையில் ஆயர் குலப் பெண்களை அடிமுட் டாள்கள் என்று சொல்லியிருக்கிறாரே - ஆயர் குலப் பெண்கள் கிளர்ந்தெழுந்து திருப்பாவையைக் கொளுத்தும் போராட்டத்தில் இறங்கினால் என்ன செய்வார்களாம்?


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னை
சிறுபேர் அழைத்தளவும் சீறீ அருளாதே,
இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.


இப்பாடலில் இரண்டாவது வரியில் காணப்படுவது என்ன? அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலம் என்று கூறப்படுகிறதே.


இதற்கு என்ன பதில்?

-------------------------"விடுதலை”1-7-2012

5 comments:

தமிழ் ஓவியா said...

ஆரியப் பண்டிகைகள்

ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது;

இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள்.
(தந்தைபெரியார்-விடுதலை,18.1.1951)

தமிழ் ஓவியா said...

முன்னோடிப் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி

முத்துலட்சுமி ரெட்டி (1886 - ஜூலை 22, 1968) புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியாவில் ஒரு முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக் கோகர்ணம் என்ற இடத்தில் கவுரவமான ஒரு குடும்பத்தில் 1886-ஆம் ஆண்டு. நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார் முத்துலட்சுமி இவர் உடன் பிறந்தவர்கள் சுந்தரம்மாள், நல்லமுத்து என்று இரண்டு தங்கைகள், இராமையா என்று ஒரு தம்பியும் ஆகும் 1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய செற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமை களாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார். அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார். 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத் தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த அய்ந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை. அனாதையாக்கப்பட்ட குழந்தை களை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி. சென்னையில் புற்றுநோய் மருத்துவ மனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.

முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு பத்ம பூஷண் விருது கொடுத்து கவுரவித்தது. முத்துலட்சுமி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார்.3-7-2012

தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டம்
தமிழர்களின் நீண்டகாலக் கனவான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் செயல்பாடுகள் ஓடி விளையாடு பாப்பா! என்ற பாடலைத்தான் நினைவு படுத்துகிறது. ரூ.2427 கோடி செலவு திட்டத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

2005 ஜூலை 2ஆம் நாள் பெரும் எதிர்பார்ப்புக் கிடையே இந்தத் திட்டம் ஆரம்பமானது.

30 மீட்டர் அகலம் 12 மீட்டர் ஆழத்தில் 167 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணியில் பெரும் பாலான அளவுக்கு முடித்து விட்ட நிலையில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கினைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றம் திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்ததானது. பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில், பொருளாதாரக் கண்ணோட்டத்தில் எந்த வகையிலும் ஏற்கவே முடியாததாகும்.

யாரோ ராமனாம், 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டு களுக்குமுன் பாலம் கட்டினானாம். அந்த ராமன் பாலத்தை இடித்துவிட்டு இந்தத் திட்டத்தை நிறை வேற்றக் கூடாது என்று சொல்லுகிறார்கள் என்றால் நாம் தற்காலத்தில் இருக்கிறோமா? அல்லது கற்காலத்தில் இருக்கிறோமா? என்ற அய்யப்பாட்டைத்தான் ஏற்படுத்து கிறது.

ஏற்கெனவே தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள பணிகளை மேலும் தொடர விடாமல் மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆராயுமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத் தில் இப்பொழுது கூறிவிட்டது. 37 பக்கம் கொண்ட பச்சுவரி அறிக்கையினை மத்திய அரசின் வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) ரோஹிண்டன் நரிமன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ராமர் பாலத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மாற்றுப் பாதை தேடுவது என்பது ஏற்கத்தக்கதல்ல; பொது நலன் அடிப்படையில் அமைந்ததும் அல்ல.

ஆய்வின் அடிப்படையிலும், நிர்வாக அணுகு முறையின் அடிப்படையிலும் மட்டுமல்லாமல், சுற்றுச் சூழல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் பார்க்கிறபோது - மாற்றுத் திட்டம் என்று சொல்லப் படுகின்ற 4ஏ பாதையில் (தனுஷ்கோடிக்குக் கிழக்கில்) என்பது கேள்விக்குறியே!

விரிவான ஆய்வுகளில் எழுந்த அய்யப்பாடு களைத் தொடர்ந்து 4ஏ பாதையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவது உசிதமான ஒன்றாக இருக்காது. இந்த மாற்றுத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர் அறிக்கை மிகவும் தெளிவாக திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

அறிக்கையைத் தயாரித்தது அரசியல்வாதியும் அல்லர். பிரபலச் சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே. பச்சுவரி தலைமையிலான நிபுணர் குழுவாகும்.

இதற்குமேல் கற்பனைப் புராணச் சகதியை மனதிற் கொண்டு, மக்கள் நலத் திட்டத்தை மண் மூடச் செய்யலாம் என்றால், அதைவிட அபத்தமும், பொறுப்பற்ற தனமும் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது - முடியவே முடியாது.

இன்றைக்குச் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ராமன் பாலத்தை உடைத்து நிறைவேற்றக் கூடாது என்று கொடி பிடிக்கிறார்களே - இதே பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருந்த போதுதான் இதே பாதையில் (வழித் தடம் 6) அதாவது ராமன்பாலம் இருப்பதாகச் சொல்லப்படுகின்ற இதே பாதையில் திட்டத்தை செயல் படுத்த முடிவு செய்யப்பட்டது என்பது அடிக் கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும். அன்றைக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் (பிஜேபி) ஆவார்.
அப்பொழுது ராமன் பிரச்சினை ஏன் வரவில்லை? என்பது முக்கியமான வினாவாகும்.

அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்கள் அந்தத் துறைக்குப் பொறுப்பாக இருந்து செயல்படுத்தினார்; அதன் அரசியல் லாபம் திமுகவுக்கும் போய்ச்சேர்ந்து விடுமே என்கிற அரசியல் சுயநலக் காழ்ப்பே இதன் பின்னணியில் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

அ.இ.அ.தி.மு.க. இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், இந்தத் திடீர் தலைகீழ் மாற்றத்திற்குக் காரணம் என்ன?

நாட்டு நலனைவிட சொந்த அரசியல் சுயநலம் மேலானதா? பொது மக்களே சிந்திப்பீர்!

மத்திய அரசு தன் நிலையை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து விட்டது. அதற்கு மேலும் உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போடாது என்று நாடே எதிர்பார்க் கிறது.
மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51ஹ() கூறுவதை நாம் உச்சநீதிமன்றத்திற்கு நினைவூட்ட வேண்டிய அவசியம் இல்லை 3-7-2012

தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டம் - ஒரு புதிய திருப்பம்! புதிய பாதையில் நிறைவேற்ற சாத்தியம் இல்லை


ராமன் பாலம் பேசியவர்களுக்கு வாய்ப்பூட்டு!
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த நிபுணர் குழுவின் அறிக்கை

புதுடெல்லி, ஜூலை.3- சேது சமுத்திர திட் டத்தை மாற்றுப்பாதை யில் நிறைவேற்ற வாய்ப்பே இல்லை என்று வல்லுநர் குழு அறிக்கையை சுட்டிக் காட்டி, உச்சநீதிமன்றத் தில் மத்திய அரசு அறிவித்தது.

தமிழ்நாட்டில், ராமேசுவரத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2-ஆம் தேதி சேது சமுத்திரத் திட் டப்பணிகள் தொடங்கி, முழு வீச்சில் நடந்து வந்தன. சேது சமுத்திர திட்டப்பணிகள் 30 மீட்டர் அகலம், 12 மீட் டர் ஆழம், 167 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டி நிறைவேற்று வது ஆகும்.

சேது சமுத்திர திட் டப்பணிகளை ஏற்கெ னவே திட்டமிட்டிருந்த பாதையில் நிறைவேற்றி னால், கப்பல்கள் இந்திய பெருங்கடலில் இருந்து இலங்கையை சுற்றாமல் சேது சமுத்திரக் கால் வாய் வழியாக வங்கக் கடலை நேராக அடை வதற்கு வழி பிறக்கும்.

சேது சமுத்திர திட்டப்பணிகள் நடந்து வந்தபோது, இந்தியா வுக்கும், இலங்கைக்கும் இடையே பாக் ஜல சந்திப்பகுதியில், ராம னின் வானரப் படையினால் கட்டப் பட்ட பாலம் என்று கதைக்கப்பட்டது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து சேது சமுத்திர திட்டத் துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால், ரூ.2 ஆயிரத்து 487 கோடி மதிப்பில் நிறைவேற்றப் படவிருந்த திட்டம் கிடப் பில் போடப்பட்டது.

தமிழ் ஓவியா said...

மேலும், சேது சமுத் திர திட்டத்தை மாற் றுப்பாதையில் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும்படி, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்ச வுரி குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்தக் குழு தனது ஆய்வு அறிக்கையை மத் திய அரசிடம் சமர்ப் பித்துள்ளது.

இதற்கிடையே ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது ராமர் பாலத்தை பாரம் பரியச் சின்னமாக அறி விப்பது குறித்து பரிசீ லிக்க வேண்டும் என கோரி உள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசா ரித்த உச்சநீதிமன்றம், இது குறித்த மத்திய அரசின் கருத்தை கேட் டது. அதற்கு மத்திய அரசு, இந்த விஷயத்தில் முடிவு எடுத்து அறிவிக்க விருப்பம் இல்லை என்றும், அது குறித்து உச்சநீதிமன்றமே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என கூறி விட்டது.

இந்த நிலையில் சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல். டட்டு, சி.கே.பிரசாத் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் (மத்திய அரசு வழக்கறிஞர்) ரோஹிண் டன் நரிமன், பச்சவுரி குழுவின் 37 பக்க அறிக் கையை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

மாற்றுப் பாதை உசிதமல்ல

ராமர் பாலத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப் படையில், மாற்றுப் பாதை தேடுவது என்பது ஏற்கத்தகுந்த யோசனை அல்ல. அது பொது நலன் அடிப்படையில் அமைந்ததும் அல்ல.

ஆய்வின் அடிப் படையிலும், நிர்வாக இழப்பு அணுகுமுறை யின் அடிப்படையிலும் மட்டுமல்லாமல் சுற்றுச் சூழல் மற்றும் பொரு ளாதார கோணத்திலும் பார்க்கிறபோது, 4 ஏ வரிசையில் (தனுஷ் கோடிக்கு கிழக்கில்) மாற்றுப்பாதை திட்டம் என்பது கேள்விக்குறி தான்.

விரிவான ஆய்வு களில் எழுந்த சந்தேகங் களை தொடர்ந்து, 4 ஏ வரிசையில் சேது சமுத் திர திட்டத்தை நிறை வேற்றுவது என்பது பொது நலனுக்கு உசித மான ஒன்றாக இருக் காது. இந்த மாற்றுத் திட்டம் சுற்றுச்சூழ லுக்கு ஆபத்தை ஏற்படுத் தும். இந்த நிலையில், எளிதில் பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழலில் மாற் றுத்திட்டத்தை நிறை வேற்றுவதற்கான சாத்தி யக்கூறுகள் தொடர்பாக மேலும் ஆய்வு தேவைப் படும்.

தற்போதைய நிலை யில், 4 ஏ வரிசையில் இந்த திட்டத்தை நிறை வேற்றுவது என்பது சுற்றுச்சூழலுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அந்த பகுதிகளில் (திட் டப்பகுதிகளில்) சுற்றுச் சூழலுக்கு ஆபத்தாக அமையும்.

இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள் ளது. அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிண்டன் நரிமன், நீதிபதிகள் முன்னிலை யில் கூறியதாவது:-

பச்சவுரி குழு அறிக்கை

பிரபல சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்ச வுரி கமிட்டி, சேது சமுத் திர திட்டத்தை மாற் றுப்பாதையில் நிறை வேற்றுவது குறித்து பரி சீலித்துள்ளது. அதில், பொருளாதார ரீதியி லும், சுற்றுச்சூழல் ரீதியி லும் சேது சமுத்திர திட் டத்தை மாற்று வழிப் பாதையில் நிறைவேற்ற சாத்தியமில்லை என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிண்டன் நரிமன் கூறினார்.

2 மாதம் ஒத்தி வைப்பு

இதையடுத்து சேது சமுத்திர திட்டத்தை எதிர்காலத்தில் நிறைவேற்றுவது குறித்து அறிவிப்பதற்கு மத்திய அரசுக்கு 8 வார கால அவகாசம் வழங்கி, அதுவரை வழக்குகளை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 3-7-2012