Search This Blog

16.7.12

டெசோ என்றால் கடுகடுப்பு - ஏன்


டெசோ என்றால் கடுகடுப்பு - ஏன்

டெசோ அமைப்புப் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை முன் வைத்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தக்க முயற்சி எடுத்து அதனை மீண்டும் செயல்படுத்தும் பணியைக் காலத்தால் மேற்கொண்டார்.

அந்நாள் முதல் பார்ப்பன ஊடகங்களும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டோரும் சேற்றை வாரி இறைக்கும் பணியில் வீராவேசமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட நான்தான் காரணம் என்றும், யுத்தம் என்று வந்தால் பொதுமக்கள் சாவது இயற்கைதான் என்றும், ஈழத்தில் யுத்தத்தை நிறுத்தச் சொல்லுவது விடுதலைப் புலிகளைக் காப்பாற்றத்தான் என்றும் வெளிப்படையாகச் சொல்லி வந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் அவர்களைப் பற்றி விமர்சிக்கமாட்டார்கள். ஆனால் இந்தக் கால கட்டத்தில் உலக அளவில் தனியீழம் தேவைதான் என்ற ஒத்த கருத்து மேலோங்கி நிற்கும் தருணத்தில், அதனை ஒருமுகப்படுத்தி, மாபெரும் அழுத்தம் கொடுப்பது என்ற அடிப்படையில டெசோ மாநாட்டை நடத்திட முன் வந்தால், பிரச்சினையின் மீது அக்கறை கொண்டவர்கள் இரு கரம் நீட்டி வரவேற்கவே செய்வார்கள். எதையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

குறிப்பாக இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் தற்போது டெசோ மாநாடு யாருக்காக நடத்துகிறார் என்பதுதான் புரியவில்லை. கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கூறி இருக்கிறார். (தினமலர் 16-7-2012 முதல் பக்கம்)

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் பிரச்சினையில் சீரான தொடர்ச்சியான கருத்துகளைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை.

29-5-1997 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகளின் பிரதிநிதிகள் கூட - பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் கருதி அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க - இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் பங்கேற்கவில்லை. பங்கு கொள்ளாததுடன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அதிகாரபூர்வமான ஏடான ஜனசக்தி (20-6-1997) என்ன எழுதிற்று தெரியுமா?

தமக்குப் பந்த் நடத்த தகுதியோ, திறமையோ இல்லாத கட்சிகள் அதற்காக அறைகூவல் விடுத்தது - அப்பட்டமான அகம்பாவமும் அதிகப்பிரசிங்கித் தனமும், அரசியல் ஆதாயம் தேடுவதுமாகும் என்று எழுதிற்றே!

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகளை இணைத்து திராவிடர் கழகம் நடத்திய முழு வேலை நிறுத்தத்தைத்தான் இப்படி கூறியது ஜனசக்தி. இந்தக் கட்சிகளை விட இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிதான் பந்த் நடத்த தகுதி உள்ளது போலும். இதைவிட இன்னொரு தகவலும் உண்டு. இலங்கைத் தமிழர்களின் துன்பம் தொடர்கதையாவதற்கு இலங்கையில் இன்றைய அரசு மட்டுமே காரணமல்ல. பிரபாகரன் வகையறாவும்தான் காரணம் என்பதை, தமிழ் ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் - போலித் தீவிரர்கள் ஏற்றுக் கொள்ளாமல் ஏமாறுகின்றனர் அல்லது ஏமாற்றுகின்றனர் என்று எழுதியது கட்சியின் அதி காரபூர்வ ஏடான ஜனசக்திதான் (20-6-1997).

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் அது இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கண்ணோட்டத்தில் ரத்தக் கொதிப்பாம்! (சோ, இந்து ராம் போன்றோரின் அப்பட்டமான ரத்தவாடையல்லவா இது).

இவற்றையும் கடந்து மற்றொன்று முக்கியம்! முக்கியம்!! அதி முக்கியம்!!!

ஈழத் தமிழர் பிரச்சினை இலங்கையின் பொறுப்பு. அவர்கள் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்வது அவர்கள் கடமை. நாம் தலையிடுவது - இன்னொரு நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைப்பதாகும் என்று எழுதியதும் அதே ஜனசக்திதான்.

இத்தோடு விட்டு விட முடியுமா? இதே கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் பேசுகிறார்:

இலங்கைப் பிரச்சினைக்காக எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன்வைக்க மாட்டோம். (புதினம் இணையப் பதிவு 15-2-2009).

இவற்றிற்கு விளக்கங்கள் தேவையில்லை.

இவர்கள்தான் டெசோ மாநாட்டை விமர்சிப்பவர்கள்; கொச்சைப்படுத்துபவர்கள்.

உலகத் தமிழர்களே புரிந்து கொள்வீர்!

-------------------”விடுதலை” தலையங்கம் 16-7-2012

20 comments:

தமிழ் ஓவியா said...

பூனை!


பூனை தன் கண்ணை மூடிக் கொண்டால் பூலோகமே இருண்டு விடுமா என்ற பழமொழி ஒன்று நம் நாட்டில் புழக்கத்தில் உள்ளது.

இது யாருக்குப் பொருந்துமோ, பொருந் தாதோ - தினமலர் பூனைக்கு மட் டும் கண்டிப்பாக நூற் றுக்கு நூறு பொருந்தி விடும்.

டெசோ என்ற சொல்லைக் கேட்டவுடன் புட்டத்தில் தேள் கொட் டியது போலத் துடிக்கும் இந்த தினமலர்ப் பார்ப் பனக் கூட்டம் இன்று அதே வகையில்தான் தன் கொடுக்கை நீட்டி, தனது அற்பப் புத்தியை அப்பட்ட மாகக் காட்டிக் கொண்டு இருக்கிறது.

நடக்குமா கருணா நிதி நடத்தும் டெசோ மாநாடு என்ற தலைப்பில் முதல் பக்கத் தலைப்புச் செய்தியை வெளியிட்ட இந்தப் பார்ப்பன ஏடு உள்ளுக்குள் செய்தியை எப்படி வெளியிட்டுள்ளது தெரியுமா?

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் தலைவராக கருணாநிதியும், உறுப்பி னர்களாக அன்பழகன், சுப.வீரபாண்டியன், சுப்பு லட்சுமி ஜெகதீசன் உள் ளிட்டோரும் நிர்வாகி களாக அறிவிக்கப்பட்ட னர் என்ற செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இடத்தில்தான் தினமலர் பூனை கண்களை மூடி இதோ பாரீர். பூலோகம் இருண்டு விட்டது! என்று ஊரை நம்ப வைக்க முயற்சிக்கிறது.

டெசோவில் திரா விடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நிர்வாகியாக இல்லையா? தினமல ருக்கு இது தெரியாதா? மற்றவர்கள் பெயர்களை எல்லாம் நினைவு வைத் துக் கொண்டு செய்தி வெளியிடத் தெரிந்த அக்ர கார ஏட்டுக்கு வீரமணி அவர்களின் பெயர் மட்டும் மறந்துவிடுமா என்ன?

தினமலர் வெளியிட் டுத்தான் வீரமணி அவர் கள் அறிமுகமாக வேண் டிய நிலையில் இல்லை. அதே நேரத்தில் பார்ப் பனர்கள் திராவிடர் கழகத்தையும் அதன் தலைவரையும் ஜென்மப் பகைவர்களாகக் கருது கின்றனர் என்பது கழகத் துக்கு, கழகத் தலை வருக்குக் கிடைத்திட்ட மகத்தான அங்கீகாரமே!

அதனை நம் தமிழர் களும், வீடணர்களும் உணர்வார்களாக. இதில் திருமாவளவன் அவர் களின் பெயரையும் தின மலர் இருட்டடிப்பு செய் துள்ளது என்பது கூடுதல் தகவலாகும்.

- மயிலாடன் 16-7-2012

தமிழ் ஓவியா said...

பார்ப்பன தர்மம்

பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன. - பெரியார்(விடுதலை, 5.1.1966)

தமிழ் ஓவியா said...

தமிழா! தமிழா!!


பார்ப்பனர்கள் மாறி விட்டார்கள் என்று கூறும் "படித்த" "பட்டங் கள் பெற்ற"

நல்ல நிலையில் உள்ள தமிழர்கள் பேசுவதும் எழுதுவதும் மிகப் பெரிய துரோகமாகும்.

இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு, அனைவரும் அர்ச்ச கராக எதிர்ப்பு, தமிழுக்கு எதிர்ப்பு, தமிழினத்திற்கு எதிர்ப்பு, சமஸ்கிருத ஆதரவு, மந்திரம் எனும் தந்திரத் தால் ஏமாற்றி இறைவனின் தனி ஏஜண்டுகளாக இவர்களும், சமஸ்கிருதமுந்தான் இருக்க வேண்டும் இதெல்லாம் அவாள் எண்ணங்களும் செயல்பாடு களும். இதையும் ஆடு மாடு போல் தலையாட்டும் மேற்படித் தமிழர்கள் சொல்வதுதான் "பார்ப்பனர்கள் மாறி விட்டார்கள்" என்பது.

இன்னும் எங்கே பார்த்தாலும் ஒரு குலத்துக்கொரு நீதி தலை விரித்தாடுவது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

காஞ்சி சுப்புணிக்கு ஒரு நீதி, நித்யானந்தாவிற்கு ஒரு நீதி என்று மேற்படித் தமிழர்களே ஒத்துக் கொள் கின்றீர்களே, வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா?

தமிழன் தவறு செய்தால் இமயமலை, பார்ப்பான் தவறு செய்தால் கடுகு மலை!

இது தானே இன்று உங்கள் போக்கு.இந்த மூளைச் சலவை செய்யும் தினமலரையும், தினமணி,துக்ளக் இவற்றைக் கையால் தொட உங்களுக்கு அருவருப் பில்லையே.

எலும்புத்துண்டிற்காக பார்ப்பன ஏடுகளில் எழுதும் என்னரும் " தமிழ் சொல் வீரர்களே" அதிலே தந்தை பெரியார் என்றோ, அறிஞர் அண்ணா என்றோ ஏன் கல்வி வள்ளல் பெருந்தலைவர் காமராசர் என்றோ எழுதி வெளியிடச் சொல்லுங்கள் பார்ப்போம். ஓடி னாலும், ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்தாலும் காஞ்சி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் தானே !

பார்ப்பானையும், பார்ப்பன ஏடுகளையும் பார்த்துப் பயந்த அரசியல் தலைவர்களுக்குத் துணிவும் தெளிவும் வேண்டாமா? அவர்களிடம் ஒட்டி உறவாடி என்ன சாதிக்கப் போகின்றீர்கள். அவர்கள் என்று உங்களை ஆதரிக்கப் போகின்றார்கள். இந்து ராம், சிவராமன்கள் மும்மூர்த்திகளாகப் பார்ப்பன ஆதரவுதானே தரு வார்கள். பார்ப்பனப் பதிப்பகங் களின் சூழ்ச்சி இன்று எங்கும் பரவியுள்ளதே.

தாழ்த்தப்பட்டவரும், பிற்படுத்தப்பட்டவரும் ஒன்று சேர்ந்தால்தானே தமிழினம் முன்னேற முடியும் . இன்னும் படிக்கட்டு சாதியளவில் மேலே உள்ளவனைப் பார்த்து ஆத்திரமும் எரிச்சலும் அடையாமல்,கீழே உள்ளதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்துவதும், இழிவு செய்வதும் தமிழரின் நலனுக்கா? அழிவுக்கா?

ஜாதியற்ற இளைய தலைமுறை உருவாக அவர்களுக்குப் பிடித்த இசை, நாடகம், விளையாட்டு, சமுதாயத் தொண்டு, திருக்குறள் படித்தல் என்று ஆங்காங்கே அனைவரும் செய்திடல் வேண்டாமா? அதில்தானே இணைவார்கள்.

இன்றைய கணினி முன்னேற்றத்தில் அனைவர்க்கும் அடையாள எண் அளிக்கும் போது ஜாதி அடையாளத் தையும் சேர்த்து விடலாமே. பின்னர் அவர்கள் ஜாதிச் சான்றிதழ் அடையாளம் இல்லாமல் அவை பயன் படுத்தப்படலாமே.இது எளிதாகச் செய்யக் கூடியது தானே. ஜாதியை ஒழிக்கச் செய்து விடலாமே. படிப்பிற் கும், வேலை வாய்ப்பிற்கும் அந்த எண்ணே போதுமே.

தமிழ் வளர்ப்போர் ஆங்காங்கே திருக்குறள் சங்கங்கள் வைக்கட்டும்.

தமிழர் இனம் வளர்ப்போர் இசைப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் என்று இணைக்கட்டும்.

-இளசு 16-7-2012

தமிழ் ஓவியா said...

ஆகஸ்ட் 12ஆம் தேதி டெசோ ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடாக சென்னையில் நடைபெறும்!

டெசோ தலைவர் கலைஞர் வெளியிட்ட கருத்துரு

சென்னை, ஜூலை 17 - சென்னையில் ஆகஸ்ட் 12 அன்று ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் விவாதிக் கப்பட உள்ள பொருளடக்க கருத்துருவை நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டார். கலைஞர் அவர்கள் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் ``டெசோ மாநாட்டில் விவாதிக்க விருக்கும் பொருளடக்கம் குறித்த (கூநஅந-ஞயயீநச கடிச கூநுளுடீ ஊடிகேநசநஉந) கருத்துருவை வெளியிட்டார். அது வருமாறு:-

தமிழ் ஓவியா said...

இலங்கை அரசு அதன் சொந்த மக்கள் மீதே தொடுத்த இனப் படுகொலைப் போரின் பேரச் சங்கள், நாதியற்ற தமிழ் மக்களை இன்னும் நீண்ட காலத்திற்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கும். ஆனால் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் காலம் காலமாக இலங்கையில் தமிழர் கள் அவர்களுக்குரிய உரிமைகளும், வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்துள்ளனர் என்பதை நாம் காணலாம்.

தமிழர்கள் தங்களது கவுரத்தையும், கலாச்சார அடையாளத்தையும் பாதுகாக்க பேச்சு வார்த் தைகள் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், நாடாளு மன்ற விவாதங்கள், அமைதியான போராட்டங்கள், மூன்றாம் தரப்புத் தலையீடுகள் மற்றும் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் உட்பட தமிழர்கள் பல்வேறு முயற்சிகள் செய் துள்ளதை நாம் காண முடியும். ஆனால் இலங்கை அரசால் மீண்டும் மீண்டும் அவர்களது நம்பிக்கை பொய்ப் பிக்கப்பட்டு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.

சிங்களவர் குடியேற்றம்

20,000-க்கும் மேற் பட்ட சிங்களவர்கள் தமிழர் பகுதி களுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். முன்பு சிங்கள மக்கட் தொகை இல்லாத வடக்குப் பகுதியில் 33 சதவீத சிங்களவர்கள் தமிழர்கள் முழுவதுமாக வாழும் பகுதிகளில் குடிபெயரக் கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளனர்.

1983ஆம் ஆண்டு சிறைக் கோட்டத்துக்குள் தமிழர்களை தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் நடந்தபோது, அப்போதைய இந்தியப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி நாடாளுமன்றத்தில் அதை அரசு நடத்திய இனப்படுகொலை என்று அறுதி யிட்டுக் கூறினார்.

போர் முடிந்த பிறகும் எந்த வசதியுமின்றி பாதுகாப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்

அந்தச் சம்பவம் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை இராணுவப் படைகளுக்கும் இடையி லான ஆயுதம் தாங்கிய மோதலாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப் பட்டனர். உடல் ரீதியாகவும், மன ரீதியிலும்சிதைக்கப்பட்டனர்.

பயங்கரவாதிகளையும், பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவது என்ற போர்வையில் இலங்கை அரசு பட்டப் பகலில், உலக சமுதாயத்தின் முழுப்பார்வையில் தமிழினத்துக்கு எதிராக இனப்படு கொலையைத் தொடுத்தது. அய்க்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையும், பல மனித உரிமை அமைப்புகளின் உண்மை அறியும் அறிக்கைகளும் இலங்கை அரசும், இராணுவமும் பல மோசமான போர்க் குற்றங் களை இழைத்துள்ளதை உறுதி செய்கின்றன.

`தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட - அரசு கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளுக்குச் சாட்சியாக இருக்கக் கூடாது என்பதற்காக ஊடகங்களும் தன்னார்வ சேவை அமைப்புகளும் வெளி யேற்றப்பட்டன. போர் முடிந்த பிறகுகூட தமிழர்கள் வாழ்க் கைக்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பாதுகாப்பு முகாம்களில் வைக்கப் பட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

முகாம்களும், தமிழர்கள் வாழும் பகுதிகளும் கூட எல்லா இடங்களில் இராணுவத்தினர் காணப் படுவதுடன் இராணுவப் படைவீரர்கள் பகுதி போல உள்ளது. உள்ளாட்சி வசதிகள் இல்லாததால் அங்குள்ள தமிழர் களுக்கு தங்களது குறைகளை எடுத்துக் கூறவும், பேசுவதற்கும் அமைதியான முறையில் போராடவும் அவர்களுக்கு ஜனநாயக இடமில்லை. அவர்கள் எப்போதும் அச்சத்திலும், பீதியிலும் நிம்மதியின்றி கவலையுடன் வாழ் கின்றனர் என்ற நிலைமை தான் உள்ளது.

கண்ணிவெடிகள்!

எல்லா இடங்களிலும் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்ற வேண்டும் என்று காரணம் கூறும் அரசு, அதற்கு மாறாக சாத்திய மான வகைகளில் எல்லாம் தமிழர் பகுதிகளையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து வலுவிழக்கச் செய்தும், அழித்தும் அவற்றை மென்மேலும் சிங்களக் குடியிருப்புப் பகுதிகளாக மாற்றி வருகிறது.

பல தமிழ் இளைஞர்கள் எந்தவிதமான அறிகுறியும் இன்றி காணாமல் போயுள்ளனர். அவர்களில் பலர் சித்ரவதை முகாம்களில் சொல்ல முடியாத வேதனைகளுக்கும், துயரத்துக்கும் ஆளாக்கப் பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தமிழ்ப் பெண் கள் இராணுவப் படையின ரின் சகலவிதமான வன்முறைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.

தமிழ் குழந்தைகள் துப்பாக்கிகள், இராணுவப் படையினர் கட்டவிழ்த்து விடும் வன்முறை ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டே வாழ்கின்றனர்.
உலகம், குறிப்பாக இந்தியாவின் முன்முயற்சியில் நடைபெறும் நிவாரண நடவடிக்கைகள் அல்லலுறும் தமிழ் மக்களைச் சென்றடை வதில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில், அந்த நாட்டில் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளின் முன் னேற்றம், வளர்ச்சிக்காகவும், ரயில்வே நவீன மயமாக் கலுக்கும், சாலைக் கட்டமைப்புகள், மீன்பிடி படகுகள் தரம் உயர்த்தல், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களின் கட்டுமானப் பணியை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் வீட்டு வசதி, மருத்துவமனை வசதிகளை அளிக்கவும் இந்தியா ஆயிரம் மில்லியன் டாலர் பொருளாதார உதவி வழங்கியுள்ளது.

ஆனால் இந்த நிவாரண நடவடிக்கைகளில், நிதி உதவிகளில் பெரும்பாலானவை பாதிக்கப்பட்டத் தமிழர்களுக்கு இல்லாமல் சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.

இலங்கைத் தமிழர்களின் நிலைப்பாடு!

போர் முடிந்த பிறகும், அய்க்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கண்டனம் தெரிவித்தும் உள்விசா ரணை நடத்தக் கோரியும் தீர்மானம் நிறை வேற்றிய பிறகும் கூட இலங்கைத் தமிழர்களின் நிலைமை பின்வருமாறு உள்ளது:-

1. இலங்கை அரசு கூறுவது போல மெனிக் தோட்டத்தில் 6,000 பேர் மட் டுமே மீதமுள்ளனர் என்பது உண்மை தான். பெரும் பாலான மக்கள் அடிப் படை வசதிகள் இல்லாத அவர்களது கிராமங்களுக்கு அனுப் பப்பட்டுள்ளனர். சிலர் மரங்களின் அடியில் தங்கியுள்ளனர். மற்றவர்கள் அவர்களது உறவினர்களின் தயவில் உள்ளனர்.

2. முகாம்களை விட்டு வெளியேறும் குடும்பங் களுக்கு அளிக்கப்படும் உதவி மிகக் குறைவாக உள்ளது. சில மாதங்களுக்குப் பிறகு, அக்குடும்பங் கள் அடிப்படைத் தேவைகளுக்குப் போராட வேண்டியுள்ளது. கிடைப்பதற்கு வேலை ஏதும் இல்லாததால், மறுகுடி யமர்த்தப்பட்ட தமிழர்கள் மிக மோசமான நிலையில் உள்ளனர்.

3. இராணுவம் குடிமக்கள் வாழ்க்கையிலும் அனைத்துப் பகுதிகளிலும் வியாபித்து பொரு ளாதாரத்தை மேற்கொண்டுள்ளது. முடிதிருத் தங்கள் கூட இராணுவத்தால் நடத்தப்படு கின்றன. எனவே தமிழர்களின் பொருளா தார மீட்சிக்கான வாய்ப்பு இல்லை.

4. தமிழர் பகுதிகள் சிங்கள மயமாக்கப்படு வது உண்மை. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் ஏ-9 நெடுஞ்சாலையில் முன்பு பல தமிழர் களின் பெட்டிக் கடைகளும், வியாபாரிகளும் இருந்தனர். தற்போது அவை அனைத்தும் சிங்கள முன்னாள் இராணுவப் படைகளுக்கு அளிக்கப் பட்டு விட்டன.

தமிழ் ஓவியா said...

5. இராணுவம் அதன் நடவடிக்கைகள் தமிழர் பகுதிகளில் ஏராளமான வீடுகளை எடுத்துக் கொண்டுள்ளது. காலியாக உள்ள வீடுகளை மேற்கொள்ளும் இராணுவம் காலி செய்ய மறுக்கிறது.

6.இராணுவத்தின் அனுமதியின்றி வடக்கு, கிழக்கு பகுதிகளில் எந்த சமூக நிகழ்ச்சி களும் நடத்த முடியாது. இராணுவம் அனுமதிக் காமல் தமிழர்கள் அவர்களது வீடுகளில் வேறு எவரையும் தங்க வைக்க முடியாது.

7. இராணுவம் பெரும் பரப்பிலான நிலங் களை எடுத்துக் கொண்டுள்ளது. இதனால் சமீபத்தில் மன்னாரில் ஒரு போராட்டம் நடை பெற்றது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எங்கும் வியா பித்துள்ள சிங்க இராணுவம் பற்றி யாழ்ப்பாணத் திலிருந்து `வாஷிங்டன் போஸ்ட் ஏட்டுக்கு சைமன் டென்பெர் என்ப வர் அனுப்பி, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட் டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ள தாவது:-

``நாட்டின் வடக்குப் பகுதியில் வேளாண்மை மற்றும் காய்கறி விற்பனை, ஓட்டல்கள், ரெஸ் டாரண்டுகள், முடித்திருத்தகங்களைக் கூட நடத்தல் போன்ற பொருளாதார வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இராணுவம் தன்னைத்தானே நுழைத்துக் கொண் டுள்ளது.

அப்பகுதியிலுள்ள வட் டாரங்கள் தெரிவித்ததைப் பற்றிய அந்தச் செய்தியில் நில அபகரிப்புகள், அன்றாடத் துன்புறுத்தல், மக்கள் கூடுவதற்கான உரிமை தடுப்பு, பொது நிகழ்ச்சிகளில் வலுக்கட்டாயமான குறுக்கீடுகள் என தமிழர் தாய் மண்ணில் இராணுவம் எப்படி அவசரகால நிலை மையை நடத்துகிறது என்பதைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

சமீபத்தில் `போருக்குப்பிறகு சமரச நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப் பட்ட பிறகு, அச் சுறுத்தல் அதிக ரித்துள்ளது என்று `அமைதி மற்றும் சமரசத்துக்கான மையத்தைச் சேர்ந்த பாதிரியார் எஸ்.எம்.பிரவீன் என்பவர் கூறிய தாக அந்தச் செய்தியாளர் தெரி வித்துள்ளார்.

நிலைமை இப்படி இருக்கையில் இலங்கை மண் ணில் தமிழர்கள் எப்படி கவுரவத்துடனும், சம உரிமையுட னும் வாழ முடியும்? தனது சொந்தக் குடி மக்களைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பை நிறைவேற் றாத ஒரு அரசால் சகல விதத்திலும் மனிதாபிமானமற்ற முறையிலும் சமத் துவமின்றியும் நடத்தப்படும் ஒரு இன, கலாச்சார, மொழி இனத்தைக் காப்பாற்ற - வழிமுறை களைக் காண்பதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டில் பரிசீலிக்கப்பட இருப்பவை!

இந்த மாநாட்டில் பரிசீலிப்பதற்காக இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம், கவுரவம், அமைதியான வாழ்வு ஆகியவற்றை உறுதி செய்ய நிவாரண நடவடிக்கைகளாக சில பரிந்துரைகள் இங்கு தரப்பட்டுள்ளன:-

அ) மேற்கூறிய பிரச்சினைகளை கவனிக் காமலும், அடிப்படை உரிமை கள் மீறப்படு வதற்கு முற்றுப் புள்ளி வைக்காமலும், இலங் கைத் தமிழர் களின் மறுவாழ்வு என்பது ஒரு கண் துடைப்பாகவும், தொலைதூரக் கனவாக வுமாகவே இருக்கும்.

ஆ) இலங்கையில்; ஐக்கிய நாடுகள் அமைப்பு தேர்தல் நடத்த வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையைப் பிரதானப்படுத்த வேண்டும்.

இ) இந்தியாவிலுள்ள அனைத்து இலங்கை அகதி களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் இங்கு நிம்மதி யாக வாழ முடியும். இதன் மூலம் இலங்கை அகதிகளிடையே ஆள் கடத்தல் கட்டுப்படுத்தப்படும்.

தமிழ் ஓவியா said...

ஈ.) கலாச்சார மறுவாழ்வு மற்றும் தமிழ் பாரம் பரிய இடங்கள், கலாச்சார முக்கியத் துவம் கொண்ட இடங்களின் பாதுகாப்பு ஆகியவை அவசியம். கலாச்சாரத்தை இழந்து விட்டால் எந்த இனமும், மக்களும் வாழவோ, தங்களது மொழியையும், அடையாளத்தையும் பாதுகாக்க முடியாது. இலங்கை அரசு தமிழர் கலாச்சாரமும், மொழியும் பாதுகாக்கப்படு வதை உறுதி செய்ய வேண் டும். ஆனால் அவற்றை அழிப்பதற்கு எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை. ஓர் அரசாட்சி மொழி என்ற முறையில் தமிழ் வலுவிழக்கச் செய்யப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

உ) ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிடிக் கப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். வழக்குகள் இல்லாத அனைவரும் விடுதலை செய் யப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

ஊ) தமிழ் குழந்தைகளின் எதிர் காலத்துக் கும், தமிழர் பகுதிகளில் கல்வி அறிவை மேம்படுத்தவும், வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் முழுமையாகச் செயல்படும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புதல் ஆகியவை முக்கிய மாகும்.

எ) கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதி கள் ஆகியவற்றை அமைக்கவும், இதர நடவடிக்கைகளில் பங்கேற்கவும் முன்வர விரும்பும் பல நிறுவனங்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் (கார்ப்பரேட்கள்) ஆகியவை உள்ளன. தமிழர் பகுதிகளில் வசதிகளை மீண்டும் கட்டுவதற்கு உதவிப் பங்களிப்பதற் காக அவர்களை ஈடுபடுத்தலாம். போரில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிபுணத்துவ சேவைகளுடன் மருத்துவ வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக போர் / குடும்ப இழப்பு ஆகிய வற்றால் ஏற்பட்டுள்ள மன ரீதியிலான / நரம்பியல் ரீதியான அழுத்த நிலைமைகள் கவனிக்கப்பட வேண்டும். மனச் சோர்வு, அழுத்தம் ஆகியவை நிச்சயமாக போரின் நினைவுகளாகும்.

தமிழ் ஓவியா said...

ஏ) அங்குள்ள தமிழர்களுக்கு நீதி, மறு வாழ்வு அளிக்கும் நடைமுறையில் இந்திய அரசு தீவிரமாக தங்களை ஈடு படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை அரசு மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசியல் மற்றும் பொருளாதார நிர்ப்பந்தங்களைக் கொண்டுவர இந்திய அரசு ஒத்த கருத்துள்ள நாடு களுடன் விவாதித்து சாத்தி யமான பேச்சுவார்த் தைகளை நடத்த வேண்டும்.

ஐ) தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், நில தாவாக்களை தீர்த்து வைப்பதில் ஈடுபடவும், பாரம் பரிய வாழ்க்கை முறையைப் பேணவும் முயலும் நாடுகளின் குழுவை உருவாக்கு வதற்கு இந்தியா முன்னிலையில் இருக்க வேண்டும்.

ஒ) இலங்கையில் மாற்றத்தை நோக்கி முழு மையான ஈடுபாட்டுடன் பணியாற்றும் நபர்களின் குழுவை இந்திய அரசு உருவாக் கலாம்.

ஓ) இலங்கைத் தமிழர்களுக்கு பாது காப்பையும், நிவாரணத்தையும் உறுதி செய்யும் போது, இலங்கை கடற்படை யினால் இந்திய மீனவர்கள் மீது தொடுக்கப்படும் கொடுமை களிலிருந்து அவர் களைப் பாதுகாப்பது நமது கடமையாகிறது. இலங்கை கடற்படையால் அப்பாவியான, நிராயுத பாணியான மீனவர்கள் ஈவிரக்கமின்றி தாக்கப் படவும், சுட்டுக் கொல்லப்படவும், அவர்களது மீன்பிடி படகு கள் மூழ்கடிக்கப்பட்டும், அவர்கள் பிடித்த மீன்கள் கைப்பற்றப்பட்டும், ஓர் மனி தாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர்.

இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட, இந்திய அரசு வெற்று நிலமான தனுஷ்கோடி அல்லது மண்டபம் கேம்ப்பில் இந்திய கடற் படைப் பிரிவு ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும்.

ஔ) தங்களது நாட்டை விட்டு உயி ருக்குப் பயந்து, தங்களது வீடுகளை விட்டு உலகம் முழு வதும் பல்வேறு நாடுகளில் வாழும் இலங் கைத் தமிழர்கள் தங்களது தாய் நாட்டுக்கு பத்திரமாகவும், சவுகரிய மாகவும் திரும்ப தாராளமாக அனுமதிக்கப் பட வேண்டும்.

கலைஞர் அவர்களது தலைமை யிலும் வழி காட்டுதலிலும் 12 ஆகஸ்ட் 2012 அன்று சென்னையில் நடைபெறவுள்ள ``டெசோ மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படவுள்ள கருத்துருவில் இந்தப் பிரச்சினைகள் அடங்கும்.

இந்த மாநாட்டில் உருவாக்கப்படும் தீர்வு களும், ஆலோசனைகளும் இலங்கை அரசின் போக்கை மாற்றாமல், தமிழர்கள் இதே சிரமங்களுக்கும், மனிதாபிமானமற்ற முறை யில் நடத்தப் படுவதற்கும் ஆளாக்கப்பட்டால், அதன் பிறகு எதிர்கால நடவடிக்கையை முடிவு செய்ய இந்த மாநாடு மீண்டும் கூடும்.

- டெசோ

(தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு),

அண்ணா அறிவாலயம், சென்னை - 600018

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்....

டி.எம்.நாயர் அவர்களின் நினைவுநாள் கருத்தரங்கம்

திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் மதிக்கப் பெற்ற நீதிக்கட்சியின் முப்பெரும் தலைவர் களுள் ஒருவரான டாக்டர் டி.எம். நாயர் அவர்களின் மறைவு நாள் இந்நாள் (1919) டாக்டர் நாயர் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டு திருவல்லிக்கேணியில் பார்ப் பனர்கள் கோயில்களுக்கு தேங்காய் உடைத்துக் கொண்டாடினர். 17-7-2012

தமிழ் ஓவியா said...

எந்த நெருக்கடிக்கும் அஞ்ச மாட்டேன்! தனியீழம் என்பது தான் என் ஆசை - டெசோ மாநாடு குறித்து கலைஞர் பேட்டி


சென்னை, ஜூலை 17- தனியீழம் என்பதுதான் என் ஆசை என்று கூறிய தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், சென்னையில் ஆகஸ்டு 12இல் நடக்க உள்ள டெசோ மாநாட்டில் கலந்துகொள்ப வர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

செய்தியாளர் :- டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதாக இதுவரை ஒப்புக் கொண்டுள்ள தலைவர்கள் யார் யார்?

கலைஞர் :- மத்திய அமைச்சரும், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திரு சரத் பவார் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான திரு.பரூக் அப்துல்லா சம்மதம் தெரிவித்து கடிதம் எழுதி யிருக்கிறார். அய்க்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் திரு.சரத் யாதவ் சம்மதம் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார். லோக் ஜனசக்திக் கட்சித் தலைவர் திரு.ராம் விலாஸ் பஸ்வான் சம்மதம் தெரிவித்து கடிதம் அனுப்பியிருக்கிறார்.



.

தமிழ் ஓவியா said...

நைஜீரிய நாட்டின் ஈடோ மாநில வர்த்தகத் துறை அமைச்சர் திரு. அல் ஹாஜி மூசா அகமத் வருவதற்கு சம்மதம் தெரிவித்து ஈ. மெயில் அனுப்பியிருக்கிறார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைத் தூதர் திரு. நாசிம் மாலிக் சம்மதம் தெரிவித்து, ஈ. மெயில் அனுப்பியிருக்கிறார்.

மாநாட்டில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள உலக அளவில் உள்ள ஈழத் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் - அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் மாநாட்டில் கலந்து கொள்பவர்களாகவும், பார்வையாளர்களாகவும் வரவிருக்கிறார்கள்.

தமிழர் தேசிய கூட்டணித் தலைவர் திரு. சம்பந்தன், எம்.பி., தமிழர் தேசிய கூட்டணி பொதுச் செயலாளர் திரு. மாவெ சேனாதிராஜா, எம்.பி., ஆகிய இருவரும் வருவது பற்றி ஒப்புதல் தந்து பேசியிருக்கிறார்கள். திரு.எஸ். யோகேஸ் வரன், எம்.பி., மாநாட்டிற்கு வர ஒப்புதல் தந்திருக் கிறார்.

தமிழர் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், President, Tamil National Peoples Front, தமிழர் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் திரு செல்வராஜ் கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், திரு. சுமேந்திரன், எம்.பி., ஆகியோரெல்லாம் மாநாட் டிற்கு வருவதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். இவர்கள் தவிர திரு.சரவணபவன், எம்.பி., அவர்களும் பேசியிருக்கிறார். நான் முதலில் சொன்னபடி, உலக அளவில் உள்ள பல ஈழத்தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொள்பவர்களாகவும், பார்வையாளர்களாகவும் இந்த மாநாட்டிற்கு வருகிறார்கள்.

தனியீழம் பற்றி

செய்தியாளர்:- இந்த டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரி வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்ற வாய்ப்புகள் இருக்கிறதா?

கலைஞர் :- தனி ஈழத்தைப் பற்றி கருத்து இருக்கிறதே தவிர, அதை இப்போது அழுத்தந் திருத்தமாகச் சொல்லி, அதற்கான கிளர்ச்சிகளை நடத்துவதாக உத்தேசமில்லை. ஏனென்றால் அங்கே நடைபெற்ற ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு, ஆயுதப் போராளிகளை சிங்கள ராணுவம் அழித்து ஒழித்துள்ள இந்த நேரத்தில் எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாது காப்பது, அவர்களின் வாழ்வாதாரங்களை வளப் படுத்துவது, அவர்களுக்கு போரினால் ஏற் பட்ட இன்னல்களைக்களைவது, இவற்றில் எப்படி யெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம், நாட்டம் செலுத்தலாம், ஆதரவு கோரலாம் என்பதற்காகத் தான் இந்தமாநாட்டைக்கூட்டி, அதிலே கலந்து கொள்கின்றவர்களின் அறிவுரை, கருத்துரை ஆகியவற்றையும் நாங்கள் முக்கியமாகக்கருதி, அவற்றின் அடிப்படையில் அமைதியான முறையில் அறவழியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதுதான் இந்த மாநாட்டை நடத்துகின்ற எங்களுடைய திட்டமாகும்.

செய்தியாளர் :- ஏற்கெனவே தனி ஈழம் தான் எங்களின் குறிக்கோள் என்று சொல்லியிருந்தீர்கள். தற்போது அதை மாற்றுவதற்கு, மத்திய அரசிலே இருந்து தி.மு.க.விற்கு ஏதாவது நெருக்கடி இருக்கிறதா?

தமிழ் ஓவியா said...

கலைஞர் :- மத்திய அரசின் நெருக்கடி எதுவும் இல்லை. நீங்களாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

செய்தியாளர் :- டெசோ மாநாட்டில் போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீர்மானம் நிறை வேற்றப்படுமா?

கலைஞர்:- ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய அரசும் ஆதரிக்க வேண்டு மென்று வலியுறுத்திய இயக்கங்களில் தி.மு.கழகமும் பிரதானமாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள். அதனால் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து கிடையாது.

செய்தியாளர்:- விடுதலைப் புலிகள் இயக்கத் திற்கு இருந்த தடையை மத்திய அரசு நீடித்திருக் கிறதே, இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர்:- விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதைப் பற்றி நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. அது விடுதலைப் புலி களுக்கு மட்டுமான தடை என்று கருத முடியாது. பொதுவாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தீவிர வாதம், ஆயுதப் போராட்டங்கள் நடைபெறக் கூடாது என்பதில் நானும் அழுத்தந்திருத்தமான கருத்து கொண்டவன்.

செய்தியாளர் :- நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் உங்களைச் சந்தித்த போது டெசோ மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித் தார்களா? அதைப்பற்றி பேசினார்களா?

கலைஞர் :- அது பற்றி பேசவில்லை.

செய்தியாளர்:- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் விடுத்த அறிக்கையில் டெசோவிற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவில்லை என்றும், ஒருங்கிணைந்த இலங்கைதான் இருக்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- ஞானதேசிகன் அவசரப்பட்டு அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்று கருதுகிறேன். நானும் அவரும் சந்தித்துப் பேசக் கூடிய நிலை, மிகுந்த இடைவெளி வாய்ந்தது அல்ல. ஒருவரோடொருவர் கலந்து பேசி கருத்துக்களைத் தெரிந்து கொள்ளலாம். ஏன் இந்த மாநாட்டை நடத்துகிறோம் என்பதைப் பற்றிக்கூட அவர் அறிந்து கொள்ள விரும்பாமல், அறிக்கை வெளி யிட்டிருப்பது கெட்டவாய்ப்பே!.

தனித் தமிழீழம் என் நிறைவேறாத ஆசை

செய்தியாளர் :- நீங்கள் ஒரு கூட்டத்தில் பேசும் போது, என்னுடைய நிறைவேறாத ஆசை தமிழ் ஈழம்தான் என்று சொல்லியிருந்தீர்கள். இப்போது அதைப்பற்றி?

கலைஞர் :- அதை எப்போதும் சொல்வேன். இப்போதும் சொல்கிறேன். என்னுடைய நிறை வேறாத ஆசை அதுதான்.
செய்தியாளர்:- தற்போது கொடுக்கப்பட்டுள்ள விவாதத்திற்கான கருத்துரு பேப்பரில், பொது வாக்கெடுப்பு பற்றிய எந்தக் கருத்தும் சொல்லப் படவில்லையே?

ககலைஞர் :- இந்த மாநாட்டிற்கு வருகின்ற பிரதிநிதிகளின் கருத்துக்களையெல்லாம் அறிந்து பிறகு முடிவெடுப்பதுதான் ஜனநாயகம் என்ற காரணத்தால், நான் எதையும் முன் கூட்டியே சொல்லி யாரையும் கட்டுப்படுத்த விரும்பவில்லை, அது நல்லதும் அல்ல.

செய்தியாளர்:- தனி ஈழம் பற்றி தற்போது திறந்த மனதோடு இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

தமிழ் ஓவியா said...

கலைஞர்:- தனி ஈழத்துக்காக போராட்டமோ, கிளர்ச்சிகளோ எதுவும் இப்போது இல்லை. இப்போது இருப்பதெல்லாம் அடிபட்டுக் கிடக்கின்ற இலங்கைத் தமிழர்களுடைய ரணத்தை ஆற்றுவது - அவர்களுடைய பசியைப் போக்குவது - அவர்களுடைய வாழ்வாதாரங்களை வளப்படுத் துவது என்பதுதான். இப்போதுள்ள அவசரமான தேவை இதுதான்.

தமிழ் ஓவியா said...

சிங்கள ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சியா?

செய்தியாளர் :- சிங்கள ராணுவத்திற்கு தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி கொடுத்துக் கொண்டு வருகிறார்களே? கலைஞர் :- நாமும் அதைத் தொடர்ந்து எதிர்த்து கண்டன அறிக்கை கொடுத்துக் கொண்டு வருகிறோம். அவர்களும் அவ்வப்போது நம் முடைய மாநிலத்தில் உள்ள கட்சிக ளின் சார்பாகத் தருகின்ற கண்டனங்களை ஏற்றுக் கொண்டு, நடவடிக்கை எடுக்கிறார்கள்.

செய்தியாளர் :- டெசோ மாநாட்டிற்கு காங் கிரசை அழைப்பீர்களா?

கலைஞர் :- எல்லோரையும் அழைப்போம்.

செய்தியாளர் :- நேற்று சிதம்பரம் அவர் களைச் சந்தித்த போது, அவரை அழைத்தீர்களா?

கலைஞர் :- அவர் அரசியல் விஷயங்களைப் பேசுவதற்காக நேற்று வரவில்லை. சென்னைக்கு வந்தபோது, என்னைப் பார்த்தார். அவ்வளவுதான்.

செய்தியாளர் :- நீங்கள் கூட்டத்தில் பேசும் போது மீண்டும் டெசோ அமைப்பை உருவாக்கப் போவதாகவும், அதன் மைய நோக்கம் தனி ஈழம் அமைவதுதான் என்றும் சொல்லியிருந்தீர்கள்.

கலைஞர் :- தனி ஈழம் கிடைத்தால் யாரும் வேண்டாமென்று சொல்ல மாட்டார்கள். ஆனால் இப்போதுள்ள நிலையைப் பார்க்க வேண்டும். இந்தியா சுதந்திரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய சுதந்திரம்தான் நம்முடைய குறிக்கோளாக இருந்தது. அதற்காக பல ஆண்டுகள் பல முறை களில் போராட்டங்களை நடத்தினோம். அதைப் போலத்தான் இதுவும்.

நெருக்கடி கொடுக்கப்பட்டதா?

செய்தியாளர் :- தனி ஈழம் என்பதை மாற்றிட, உங்களுக்கு ஏதோ ஒரு நெருக்கடி என்பதுதான் உண்மையா?

கலைஞர் :- நான் எந்த நெருக்கடிக்கும் பயப்பட மாட்டேன்.

செய்தியாளர் :- விடுதலைப் புலிகள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள். பிரபாகரன் இறந்து விட்டார் என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடை தேவைதானா?

கலைஞர்:- இது அரசுகளுக்கு இடையேயான பிரச்சினை. அதைப்பற்றி தமிழக அரசுதான் கவலைப்பட வேண்டும். எனவே இதுபற்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மாநில அரசினர்தான்.

செய்தியாளர் :- தனித் தமிழ் ஈழம் என்னுடைய குறிக்கோள் என்று முன்பு சொன்னீர்கள். இப்போது அப்படிச் சொல்ல ஏன் தயங்குகிறீர்கள்?

கலைஞர் :- நான் தயங்கவில்லை. தனி ஈழம் ஒரு காலத்தில் அமையலாம். டெசோ மாநாட்டிற்கு மறுநாளே தனி ஈழம் அமைந்து விடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எதற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும்.

செய்தியாளர் :- இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதைப் பற்றி உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்ன?

கலைஞர் :- அது தவறு என்பதுதான் என்னு டைய கருத்து.

செய்தியாளர் :- இந்த மாநாட்டிற்கான தலைப்பு?

கலைஞர் :- மாநாட்டின் தலைப்பு - ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்பு மாநாடு.
தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை, என்னைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை. விரும்பாததற்குக் காரணம் முடி யாது என்பதல்ல, கூடாது என்பதல்ல, அகிம்சை முறையிலேதான் அதை அடைய வேண்டும் என்பது கூட அல்ல, நம்முடைய போராளிகளுடைய ஆயுதங்கள், சிங்கள ராணுவத்திலே உள்ள ஆயுதங்கள் - இந்த இரண்டு பலத்தையும் வைத்துப் பார்த்தால் போராளிகளால் வெல்ல முடியாது. ராணுவத்தை வைத்துக் கொண்டிருக்கின்ற சிங்கள அரசு தான் கடைசியாக வெற்றி பெறும் என்ற அந்த அடிப்படையிலேதான் நான் அதை அன்று முதல் சொல்லி வருகிறேன்.

செய்தியாளர் :- உலகத்தில் பல நாடுகளில் மக்கள் பலத்தால் ராணுவத்தை வெற்றி கண்டிருக் கிறார்களே? ஆனால் ஆயுதப் போராட்டம் தேவை யில்லை என்று நீங்கள் சொல்கிறீர்களே?

கலைஞர் :- ஆயுதப் போராட்டம் தேவை யில்லை என்பது ஒரு கருத்து. ஆயுதப் போராட் டத்தில் ராணுவங்களை எதிர்த்து அரசுகளை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்பதும் அனுபவ ரீதியாக நாம் புரிந்து கொண்டிருக்கின்ற கருத்து.
செய்தியாளர் :- இந்த முறை டெசோ தன் னுடைய இலக்கை அடையுமா?

கலைஞர் :- நீங்கள் எல்லாம் ஒத்துழைத்தால் அடையும்.

செய்தியாளர் :- இலங்கையின் தளபதி, இந்தியாவின் முழு ஆதரவோடுதான் போரை நடத்தி முடித்தோம் என்று சொல்லி யிருக்கிறாரே?

கலைஞர் :- அதிலே விவாதங்கள் நிறைய இருக்கின்றன. எனவே நான் அதைப்பற்றி இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை.

-இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார். 17-7-2012

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க, செயல்திட்டங்களை வகுக்க தொடங்குகிற உடனடி முயற்சிதான் இந்த மாநாடு


சென்னை, ஜூலை 19- ஈழத் தமிழர் களைப் பாதுகாக்கவும், உரிய தீர்மானங் களை நிறைவேற்றவும், அவற்றை நடை முறைக்குக் கொண்டு வருவதற்கான செயல் திட்டங்களை வகுக்கவும் நாம் தொடங்குகின்ற உடனடி முயற்சிதான் இந்த மாநாடு என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார். இன்று (19.7.2012) முரசொலியில் அவர் எழுதிய கடிதம் வருமாறு:

இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்க ளின் உரிமைகளைக் கோரிப் பெற வேண்டும் என்பதிலும்; இலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத் திற்குப் பிறகு; சிங்கள ராணுவம் ஈழத் தமிழர்களை அழித்து ஒழித்திட முனைந் துள்ள இந்த நேரத்தில், எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக் கவும், அவர்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தவும், அவர்களுக்கு போரி னால் ஏற்பட்ட இன்னல்களைக் களைந் திடவும், எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம்;

எதில் நாட்டம் செலுத் தலாம்; எத்தகைய ஆதரவு கோரலாம்; போருக்குப் பிறகும், ஒரு பொதுவான அமைதி அங்கே ஏற்படாமல் தொடர்ந்து சிங்கள ராணுவத்தின் அட்டூழியங்கள் தமிழர்கள் மீது தொடர்வதைக் கண் டிக்கவும்; அவற்றிலிருந்து இலங்கையி லுள்ள ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வும்; அறவழியில் எத்தகைய நடவடிக்கை களை மேற்கொள்ளலாம் என்பதுதான் ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் நாம் நடத்த இருக்கின்ற மாநாட்டின், திட்டமாகவும், தீர்மானமாகவும் இருக்கும் என்பதையும்;

மாநாட்டில் இத்தகைய தீர்மானங்கள் விவாதிக்கப் படுவதாலோ - அல்லது நிறைவேற் றப்படுவதாலோ தமிழ் ஈழம் என்ற குறிக்கோளை திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட்டு விட்டதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்று, அந்த மாநாட்டைப் பற்றிய விளக்கங் களை அளித்த செய்தியாளர்கள் கூட் டத்தில் நான் திட்டவட்டமாகத் தெரி வித்திருக்கிறேன்.

ஆனால் சில செய்தி ஏடுகள் மற்றும் சில நண்பர்கள் தெளிவாக நான் அளித்த அந்தப் பேட்டியையே குழப்பம் என்று குதர்க்க வாதம் செய்வதையும்; நாம் தமிழ் ஈழக் கோரிக்கையையே கை விட்டு விட்டோம் என்பதைப் போல பேசுவதை யும், எழுதுவதையும், அறிக்கைகள் விடுவதையும் காணும் போது;

தமிழ் ஓவியா said...

எந்தக் கருத்தை தி.மு. கழகம் மக்கள் முன்னால் எடுத்து வைத்தாலும்; அதற்கு மாறுபட்ட கருத்தைச் சொல்லி குழப் பம் ஏற்படுத்த முயற்சி செய்வதையோ, நமது கருத்தைக் கேலி செய்வதையோ வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் களிடமிருந்து நாம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. அவர்களின் ஒட்டு மொத்த கருத்தெல்லாம், நாம் சொல்லுகின்ற கருத்து என்ன என்பதை விட, நாம் என்ன சொன்னாலும் எதிர்ப் பதுதான் தங்கள் வாழ்நாள் திட்டம் - பிறவிப்பயன் என்று நினைப்பவர்களிட மிருந்து - நம்முடைய கருத்தை ஏற்று ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நாம் நினைக்க முடியாது.

தனித் தமிழ் ஈழம் வேண்டும், அதுவும் இன்றைக்கே வேண்டும், அதற்கு ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று நாம் சொன்னால், உடனே ஆகா, இவர் இப்படிச் சொன்ன தால் தான் இலங்கைத் தமிழர்கள் அடிபட்டு சாக வேண்டி இருக்கிறது, அவர்களின் அழிவுக்கு இவர்தான் காரணம் என்பார்கள். முதலில் இலங்கைத் தமிழர்களின் தற்போதைய துன்பங்கள் தீரவேண்டுமென்றும், மற்றவற்றைப் பற்றி நேரம் பார்த்துச் சிந்தித்துச் செயல்படலாம் என்றும் சொன்னால், ஆகா, பார்த்தீர்களா, தமிழ் ஈழம் கொள்கையையே விட்டு விட்டார் என்பார்கள்.

தமிழ் ஓவியா said...

எனவே அவர்களின் தரத் திற்கு அதைத்தான் எதிர்பார்க்க முடியும். இலங்கையில் தமிழ் இனம் - சிங்கள ராணுவத்தால் நடத்தப்பட்ட மனித நேயம் மற்றும் மனித உரிமைக்கு எதி ரான தாக்குதலில்; பெரும் அழிவுக்கும் அவதிக்கும் உள்ளாகி ஆதரவற்ற நிலையில் கை கொடுப்பார் யாரும் இல்லையா? கருணை காட்டுவோர் எவருமில் லையா? என்று கண்ணீரும் கம்பலை யுமாக தேம்பித் திரிகின்ற இந்த நேரத் தில் அவர்களின் காயங்களுக்கு மருந்து போடவும், ரணம் பட்ட உடல்களுக்கு அவசர சிகிச்சை செய்யவும், இனியும் இத்தகைய அழிவுக்கு உள்ளாகாமல் அவர்கள் காப்பாற்றப்படவும்; உடனடி நிவாரணமாக என்ன செய்யலாம்?

இந்திய அரசானாலும் - உலக நாடுகளில் உதவிக்கு வரக்கூடிய அரசுகளானாலும் அவற்றையெல்லாம் வலியுறுத்தி, ஈழத் தமிழர்களின் வாட்டம் போக்கிட உட னடி நடவடிக்கை என்ன என்பதைச் சிந்தித்து, விவாதித்து, செயல்படுத்துவது தான் இந்த மாநாட்டைக் கூட்டுகின்ற நம்முடைய கடமையும், கலந்து கொள் கிறவர்களுடைய கடமையும் ஆகும்.

அந்தக் கடமைகளைப் பற்றி விரி வாக விவாதித்து ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கவும் உரிய தீர்மானங்களை நிறைவேற்றவும், அவற்றை நடை முறைக்குக் கொண்டுவருவதற்கான செயல் திட்டங்களை வகுக்கவும் நாம் தொடங்குகிற உடனடி முயற்சிதான் இந்த மாநாடு.

இந்த மாநாடு பற்றிய விளக்கங்களை அளிப்பதற்கு நான் கூட்டிய செய்தி யாளர்கள் கூட்டத்தில்,

இந்த டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரி வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்ற வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டபோது, நான் விரிவாக அளித்த பதிலை மீண்டும் இப்போது நினை வூட்ட விரும்புகிறேன். அந்தப் பதில் வருமாறு :-

தனி ஈழத்தைப் பற்றி கருத்து இருக்கிறதே தவிர, அதை இப்போதே அழுத்தந்திருத்தமாகச் சொல்லி, அதற்கான கிளர்ச்சிகளை நடத்துவதாக உத்தேசமில்லை. ஏனென்றால் அங்கே நடைபெற்ற ஆயுதப் போராட்டத்திற் குப் பிறகு, ஆயுதப் போராளிகளை சிங்கள ராணுவம் அழித்து ஒழித்துள்ள இந்த நேரத்தில் எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பது, அவர் களின் வாழ்வாதாரங்களை வளப்படுத் துவது, அவர்களுக்கு போரினால் ஏற் பட்ட இன்னல்களைக் களைவது, இவற் றில் எப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம், நாட்டம் செலுத்தலாம், ஆதரவு கோரலாம் என்பதற்காகத்தான் இந்த மாநாட்டைக் கூட்டி, அதிலே கலந்து கொள்கின்றவர் களின் அறிவுரை, கருத்துரை ஆகியவற்றையும் நாங்கள் முக்கியமாகக் கருதி, அவற்றின் அடிப் படையில் அமைதியான முறையில் அற வழியில் நடவடிக்கை களை மேற்கொள் ளலாம் என்பதுதான் இந்த மாநாட்டை நடத்துகின்ற எங்களுடைய நோக்க மாகும் என்று நான் தெளிவாகவே குறிப் பிட்டதோடு;

தமிழ் ஈழம் இதுவரை எனது நிறை வேறாத கனவு என்று நான் அன்று சொன்னதை எப்போதும் சொல்வேன், இப்போதும் சொல்கிறேன். என்னு டைய நிறைவேறாத ஆசை அதுதான். தனித் தமிழ் ஈழம் என்று முன்பு நான் சொன்னதை இப்போதும் சொல்வதற்கு தயங்கவில்லை. தனி ஈழம் ஒரு காலத்தில் அமையலாம். அதற்கும் ஒரு கால அவ காசம் வேண்டும்
என்றும் நான் திட்டவட்டமாக என்னுடைய உணர்வுகளை வெளிப் படுத்தியிருக்கிறேன். மேலும் செய்தியா ளர்கள் சந்திப்பில், பொது வாக்கெடுப்பு பற்றிய எந்தக் கருத்தும் விவாதத்திற்கான கருத்துரு தொடர்பான அறிக்கையில் சொல்லப்படவில்லையே? என்று கேட்கப்பட்ட போது,

இந்த மாநாட்டிற்கு வருகின்ற பிரதி நிதிகளின் கருத்துக்களை யெல்லாம் அறிந்த பிறகு, முடிவெடுப்பது தான் ஜனநாயகம் என்ற காரணத்தால், நான் எதையும் முன்கூட்டியே சொல்லி யாரையும் கட்டுப்படுத்த விரும்ப வில்லை, அது நல்லதுமல்ல என்றும் விளக்கியிருக்கிறேன்.

இவ்வளவிற்கும் பிறகும் ஒரு சிலர் தமிழ் ஈழத்தைக் கருணாநிதி விட்டு விட்டார் என்றெல்லாம் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பார்களானால், அவர்கள் அப்படியே சஞ்சரிக்கட்டும். நாம் நம் வழியிலே நடப்போம்.

இதிலே ஒன்றும் குழப்பம் இல்லை. எப்படியாவது இதையும் குழப்ப வேண்டும் என்று எண்ணுகிற குதர்க்க வாதிகளுக்கு, செய்தி யாளர்கள் கூட்டத் தில் நான் அளித்துள்ள இந்த விளக்கமே தக்க பதிலாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

அன்புள்ள,
மு.க. 19-7-2012