Search This Blog

10.7.12

தேசியமாம் தேசியம்- என்னாங்கப்பா தேசியம்?


தேசியமாம் தேசியம்- என்னாங்கப்பா தேசியம்? திராவிடர் கழகப் பேரணிகளில் கருஞ் சிறுத்தைகள் முழக்க மிடுவதுண்டு. இது ஏதோ கோபதாபத்தில், எரிச்சலில் போடப்பட்ட முழக்கம் இல்லை.

நாட்டு நடப்பின் நாடியைப் பிடித்து ஒலிக்கப்பட்ட முழக்கம். குறிப்பாக இந்தி யாவில் நதிநீர்ப் பிரச்சினை ஒன்று போதும் - இந்தியாவில் தேசிய நீரோட்டம் எந்த டி.எம். சியில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள!

இதில் என்ன வேடிக்கையென்றால், இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசாக இருந்தாலும் சரி, சர்வ தேசியம் பேசும் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, நதிநீர்ப் பிரச்சினையில் குள்ள மனிதர்களாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.

குறிப்பாக கருநாடக மாநிலத்தில் காங்கிஸ், ஜனதாதளம், பி.ஜே.பி. ஆட்சிகள் மாறி மாறி வந்திருந்தாலும் சட் டப்படி தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுக்காமல் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் காட்டி வருகின்றன.

முல்லைப்பெரியாறு நீர்ப் பிரச்சினையில் கம்யூனிஸ்டு ஆட்சியானாலும் சரி, காங்கிரஸ் ஆட்சியானாலும் சரி உச்ச நீதிமன்றம் சொன்னாலும் போய் வா மகனே! என்று போர் முரசு கொட்டுகின்றன.

இப்பொழுது டில்லிக்கும், அரியானாவுக்கும் இடையே உடைசல் எழுந்துள்ளது. யமுனை நதியிலிருந்து டெல்லிக்கு அளிக்கப்பட்டு வந்த குடிதண்ணீருக்கும் பிரச்சினை!

குடிநீருக்கே வயிற்றில் அடியாம்! ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற டில்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் தம் வீட் டுக்கு, அமைச்சர்கள் வீட்டுக்குத் தடையில் லாமல் வழங்கப்பட்டு வந்த குழாய் இணைப்பைத் துண்டிக்கச் செய்துவிட்டாராம்.

இப்பொழுது கொஞ்சம் யோசித்துப் பார்க்கட்டும் 22 கேரட் தேசிய திலகங்கள். திராவிடர் கழகப் பேர ணியில் கருஞ்சிறுத்தைகளின் முழக்கம் நியாய மானதுதானே!

--------------- ------- மயிலாடன் அவர்கள் 10-7-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

9 comments:

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் போல் மற்ற அரசியல்வாதிகளும் தொண்டு புரிய வேண்டும்

அமெரிக்கப் பேராசிரியை தமிழர் தலைவரிடம் பாராட்டு

பாஸ்டன் அருகில் உள்ள (Studbury) ஸ்டட்பர்ரி என்ற சிறு நகரத்தில் அமைந்துள்ள பிரபல ஆங் கிலக் கவிஞர் ஹென்ரி வேர்ஸ்ஒர்த் லாங்பெல்லோ (H.W.Longfellow) அவர்கள் பெயரில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவத்துடன் அமைக்கப்பட்டுள்ள லாங்க்பெலோ இன் (Longfellow Inn) உணவகத்தில், World Teach உலக நாடுகளுக்கு ஆங்கிலத்தினை நன்கு எழுதப் பேச உதவிடும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் பேராசிரியை ஹெலன் கிளாரி செலிவெர்ஸ் (Helan Clariessievers) அவர்கள் தமிழர் தலைவருக்கு சிறப்பான மதிய உணவுக்கொப்ப சிற்றுண்டி விருந் தினை (Breakfast) 8.7,2012 ஞாயிறு காலை 9.30 மணி அளவில் கொடுத்து வரவேற்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் - நமது கல்வி நிலையங்கள், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களின் சீரிய சமூகப் புரட்சித் தொண்டு பற்றியும், அதை நாம் தொடருவது பற்றியும் மிகவும் பாராட்டி, ஊக்கமூட்டும் வகையில் கலந்துரையாடினார்.

சென்னை, திருச்சி, தஞ்சை கல்வி நிறுவனங்களை பெரியார் அறக்கட்டளைகள் நடத்துவதை நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்த அந்த அம்மையார் (இவர் ஹார்டு வேர்டு பல்கலைக்கழக அமைப்பில் உள்ள உலக நாடுகளுக்கு ஆங்கில ஆசிரியர்களை அனுப்பி உதவும் தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆவார்). நமது நிறுவனங் களுக்கு அமெரிக்காவின் உயர் நிலைப் பள்ளி - குழந்தைகள் இல்லம் குழந்தைகள் பயன்படும் வகையில் ஆசிரியைகளை அனுப்பியுள்ளார். நமது இயக்கம், சமூகப் புரட்சியை அமைதியான வழியில் நடத்தி வருகிறது என்றும் இந்திய அரசியல்வாதிகள் பெரியார், காந்தி போன்ற தலைவர்களைப் பின்பற்றி தங்களின் நாட்டில் ஒரு புதிய சமூ கத்தை அமைக்கலாம் என்று கூறி னார். தமிழர் தலைவர் அவர்களுடன் அசோக்ராஜ் அவர்களும் சென்றி ருந்தார். பெரியார் உலகமயமாகி வருவதற்கு இது ஒரு அருமையான சான்று ஆகும்.

தமிழர் தலைவர் அவர்கள் தன்னு டன் காலைச் சிற்றுண்டி அருந்தவும், பேசவும் முன்வந்தமைக்கு நன்றி தெரிவித்து அசோக்ராஜ் அவர் களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது:

மகிழ்ச்சியெல்லாம் என்னுடை யதே! அன்று காலை உணவு அருந்திய நிகழ்ச்சி எனக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. நீங்கள் இருவரும் கூறியவை அனைத்தும், நீங்களும் உங்கள் தந்தையும், சகோ தரரும் செய்துவரும் நற்செயல்கள் அனைத்தும் மிகுந்த ஆர்வமும் தூண்டுதலும் அளிப்பதாக இருந்தன. என்னை சந்தித்துப் பேச டாக்டர் வீரமணி முன்வந்ததை நான் மிகவும் பாராட்டுகிறேன் எனக்காக அவரிடம் எனது நன்றியைத் தெரிவிக்கவும். 10-7-2012

தமிழ் ஓவியா said...

பெரியார் நினைவு சமத்துவபுரம்


பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற கருத்தோட்டம் மானமிகு கலைஞர் அவர்களின் சிந்தனையில் உதித்து மலர்ந்ததாகும்.

வாழ் நாள் முழுவதும் சமத்துவத்துக்காகப் போராடிய சிற்பி தந்தை பெரியார். தம் நோக்கத்தை ஒரே வரியில் கூறினார்.

பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம் (குடிஅரசு 11-11-1944) என்பதுதான் அந்தச் சிறப்பு மிகு வாசக மணியாகும்.

வேறு எந்த அரசியல் கட்சிகளையும்விட சமூக மாற்றத்திற்கான சட்டங்களையும், திட்டங்களையும் ஆணைகளையும் உருவாக்கியதில் முதல் இடம் தி.மு.க. ஆட்சிக்கே உண்டு.

சுயமரியாதைத் திருமணச் சட்டம் முதற் கொண்டு அடுக்கிக் கொண்டே போகலாம். மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கான திட்டத்தை அறிவித்தார்.

(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை ((நிஎ 4) நாள் 22-10-1997)

இப்படி உருவாக்கப்படும் வளாகத்தில் நூறு வீடுகள் இருக்கும். ஒவ்வொரு வீடும் அய்ந்து சென்டில் உருவாக்கப்பட்டவை. சாலை வசதி, பாதுகாக்கப்பட்டகுடிதண்ணீர் வசதி, பூங்கா, கல்விக் கூடம் (தேவைப்படும் இடங்களில்) உள் ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை உள்ளடக் கிய தன்னிறைவுத் தோட்டமாக உருவாக்கப்பட் டது. ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையும் நிறுவப் பட்டது.

வீடுகள் ஒதுக்குவதில் சமூக நீதியும் பின்பற்றப் பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு 40, பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 25, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 25 மற்றவர்களுக்கு (பார்ப்பனர் உட்பட) 10 வீடுகள் என்று உருவாக்கப்பட்டன.

பொது மயானமும் இருக்கும். அதே நேரத்தில் எந்த மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலமும் இருக் கக்கூடாது. (பிரச்சினையே இங்கு தானே உருவா கிறது) அவரவர் வீட்டுக்குள் சாமி கும்பிடுவது தடுக்கப்படவில்லை.

இந்தியாவிலேயே வேறு யாருக்கும் தோன்றி யிராத இத்திட்டத்தை - மானமிகு சுயமரியாதைக் காரரான - பெரியார் தொண்டன் என்பதில்தான் எனக்குப் பெருமை என்று கூறுபவரான கலைஞர்தான் உருவாக்கினார்.

ஜாதி - வருணம் என்னும் பார்ப்பனிய சமூக அமைப்பு முறையை எதிர்த்து பிரச்சாரம் ஒரு பக்கம்! ஆக்க ரீதியான இத்தகைய செயல் திட்டம் என்பது இன்னொரு புறம்! குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று வினா தொடுப்பவர்களின் விலாவில் வீசப்பட்ட வெடிகுண்டு இது.

கடந்த 15 ஆண்டு காலமாக எங்கும் நடை பெறாத ஒரு செயல்; மதுரை மாவட்டம் உசிலம் பட்டியையடுத்த போச்சம்பட்டி ஊராட்சியில் உருவாக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் திடீரென்று இரு கோயில்களை அமைக்கும் நச்சு வேலையில் ஒரு சிலர் இறங் கினர்; இதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் போர்க்கொடி தூக்கிய நிலையில், உசிலம்பட்டி கோட்டாட்சியர், வட்டாட்சியர் தலையிட்டு, போச்சம்பட்டி பெரியார் நினைவு சமத்துவ புரத்திலிருந்து அந்த சாமி சிலைகளை அகற்றியது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். தன் கடமையைச் சிறப்பாக நிறைவேற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளைப் பாராட்டுகிறோம்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடிக்கடி பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நேரில் பார்வையிடுவதை ஒரு வழமையாகக் கொள்வது நல்லது.

தி.மு.க. அரசு கொண்டு வந்தது என்பதற்காக பெரியார் நினைவு சமத்துவபுரங்களை மேலும் உருவாக்காமல் இருப்பது நல்லதல்ல.

பெரியார், அண்ணா பெயர்களை உச்சரிக்கும் கட்சிதானே அ.இ.அ.தி.மு.க. அந்த முறையில் பார்த் தாலும் நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவப் புரங்களை மேலும் உருவாக்குவதில் ஆர்வம் காட்டலாம் அல்லவா?

அது பற்றி இவ்வாட்சி சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

தமிழ் ஓவியா said...

இலங்கைக்கு அதிக அழுத்தத்தை இந்தியா கொடுக்க வேண்டும்


கடந்த மார்ச் மாதத்தின்போது அய்.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத் தில் இலங்கை அரசுக்கு எதிராக இந் தியா வாக்களித்ததை அடுத்து, இலங்கை வாழ் தமிழ் மக்களின் நியாயமான குறைகளைத் தீர்க்கக் கோரி இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப் பதுதான் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜூன் 29 அன்று கொழும்பு விற்குச் செல்வதன் நோக்கமாகக் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகும், இலங்கை ராணுவத்தினர் நிகழ்த்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பிரச்சினை பற்றி விசாரணை நடத்துவதிலோ, தீர்வு காண்பதிலோ, இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக உறுதி அளிக்கப்பட்டு வரும் மாகாண சுயாட்சி அளிக்கும் நடைமுறையிலோ எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதே இலங்கை அரசுக்கு இத்தகைய அழுத்தம் அளிக்க வேண்டியதன் தேவையை உருவாக்கியுள்ளது. அதற்கு மாறாக, வடக்குப் பகுதியில் அதிக அளவில் ராணுவம் குவிக்கப்பட்டு ராணுவ மயமாக் கப்பட்டு வருவதும், அப்பகுதிகளில் அதிக அளவில் சிங்கள மக்கள் குடியேற்றப் படுவதும் தமிழ் மக்களிடையே பரவலான கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

தமிழ் மக்களுடன் உண்மையான முறையில் சமரசம் செய்து கொண்டு செயல்படுவதை விட்டுவிட்டு, அவர் களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப் புகளை காலில் போட்டு மிதிக்கும் வகையில்தான் ராஜபக்சே அரசு நடந்து கொள்கிறது. குறுகிய நோக்கம் கொண்ட இத்தகைய ஓர் அணுகுமுறை தமிழ் மக்கள் மீண்டும் வன்முறையைக் கையில் எடுப்பதற்கு வழி வகுப்பதாக அமைந்து விடக்கூடும்.

தனது இலங்கைப் பயணத்தின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அதிபர் ராஜபக்சே, அயல்துறை அமைச்சர் பெரிரிஸ், பாதுகாப்பு செயலாளர் கோத பயராஜபக்சே மற்றும் பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் பாசில் ராஜ பக்சே ஆகியோரை மட்டும் சந்திக்க வில்லை; தமிழ் தேசியக் கூட்டணித் தலைவர் சம்பந்தனையும் சந்தித்திருக் கிறார். இன்றைய நிலையில் மிகவும் தேவை என்று கருதப் படும் அளவுக்கான பேச்சு வார்த்தைகளை கொழும்புவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நடத்தியுள் ளார் என்பது அவர் பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து தெரிய வருகிறது.

தமிழ் ஓவியா said...

இந்த விவகாரத்தில் இந்தியாவின் அதிருப்தி பற்றிய செய்தியை இலங்கை ஊடகங்கள் நன்றாகவே அறிந்து கொண் டுள்ளன. தேசியம் பற்றிய கேள்வியில் ஓர் அரசியல் தீர்வினை உருவாக்குவதில் ஏற் பட்டுள்ள முட்டுக்கட்டையை விலக்கு வதற்கும், வடக்குப் பகுதியில் இருக்கும் நிலப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அங்கு நியமிக்கப்பட்டுள்ள ராணுவத் தினரின் அளவைக் குறைக்கவும் இலங்கை அரசு தவறிவிட்டது பற்றி இந்தியா வருந்துகிறது என்று சொல்லும் அளவுக்கு டெய்லி மிர்ரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் மாதத்தில் ஜெனிவாவில் நடக்க இருக்கும் அய்.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றிய விவகாரம் வரும்போது, கண் மூடித்தனமாக இலங்கை அரசை இந்திய அரசு ஆதரிக்கும் என்று இலங்கை அரசு எதிர் பார்க்க முடியாது என்பதையும் தேசிய பாதுகாப்பு ஆலோச கர் சுட்டிக் காட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா இவ்வாறு மேற்கொண்ட ஓர் உறுதியான நிலை பற்றி இலங்கையில் ஒரு எதிர்மறையான கருத்து வெளிப்படுத் தப்பட்டது எதிர்பாராத ஒன்றல்ல. எடுத்துக் காட்டாக, தமிழ் நாட்டிலிருந்து அளிக்கப்படும் நியாயமற்ற, பொருத்தமற்ற நிர்பந்தமே இதன் காரணம் என்றும், வெளிநாடுகளின் ஆலோசனைகள் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உதவாமல் இடையூறு ஏற்படுத்தவே உதவும் என்றும் தி அய்லாண்ட் என்ற பத்திரிகை தனது வாதங்களை முன் வைத்துள்ளது. தேசிய அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் இது போன்ற பிரிவினை சக்திகளின் பிரச் சினைகளை அனைத்து தெற்காசிய நாடுகளும் சந்தித்தே உள்ளன என்று வாதத்தை முன்வைக்கும் அது, வட்டார, இன அடிப்படையிலாள கவுன்சில்களுக்கு பரவலாக அதிக அதிகாரம் அளிப்பதில் உள்ள ஆபத்தைப் பற்றி இலங்கை எச் சரிக்கையாக இருப்பதாகவும் கூறுகிறது. மிகப் பெரிய விலை கொடுத்து இலங்கை அமைதியை நிலைநாட்டி இருப்பதாகவும், அது எவ்வாறாகிலும் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது.

இலங்கை பற்றி அய்.நா.மனித உரிமைக் குழுக் கூட்டத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததை அடுத்து இலங்கைத் தலைவர்கள் இந்தி யாவுக்கு எதிராக விடுத்த அறிக்கை களின் ஒரு பகுதிதான் இந்த மேற்கூறிய எதிர்மறை கருத்துகளும். இலங்கையில் தொடர்ந்து அமைதியை யும், நிலைத் தன்மையை யும் உருவாக்கத் தேவை யான சமாதான நட வடிக்கைகளின் வெற் றியை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் மக்களின் நியாயமான கவலைகளைப் போக்கி, எதிர்பார்ப்புகளை நிறை வேற்ற இலங்கை அரசை வலியுறுத்தும் முயற் சியை மேற்கொள்ளும் தனது வழியை விட்டு இந்தியா விலகிக் செல்ல இத்தகைய எதிர்மறைக் கருத் துகள் காரணமாக அமைந்து விடக்கூடாது.

இத்தகையதொரு கொள்கையைக் கடைப்பிடிப்பதால், சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் தன்னை நெருக்கமாகக் காட்டிக் கொள்ளும் அளவுக்கு இலங்கை செல்வதன் மூலம் இலங்கையுடனான இந்திய உறவுகளில் ஒரு தற்காலிகமான எதிர்மறை பாதிப்பு ஏற்படவும் கூடும்.

நமது நீண்ட கால நலன்களைக் கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகள் மீண்டும் புத்துயிர் பெறாமல் தடுக்கவும், அமைதி நிறைந்த நாடாக தன்னை இலங்கை உருவாக்கிக் கொள்ள உதவவும் இந்தியாவால் மட்டுமே முடியும் என்பதால், தனது உறுதியான நிலையில் இருந்து இந்தியா பின்வாங்குவதற்கு இது ஒரு காரணமாக இருந்துவிடாது என்று நம்புகிறோம்.

இலங்கைவாழ் தமிழ் மக்களின் நியாயமான நம்பிக்கைகளையும், எதிர் பார்ப்புகளையும் நிறைவேற்ற இலங்கையை வலியுறுத்தும் தனது முயற்சிகளில், எதிர் மறை மற்றும் ஆக்கபூர்வமான நெம்புகோல் களைப் பயன்படுத்தி தானாக முன்வந்து இந்தியா இப்போது செயல்பட வேண்டும். இது பற்றி எடுக்க இயன்ற நடவடிக்கை களில் சில :

தமிழ் ஓவியா said...

தமிழ் மக்களின் மனித உரிமைக் கவலைகளை இலங்கை அரசு தீர்க்கா விட்டால், இலங்கைக்கு எதிரான அய்.நா. வின் மனித உரிமை மீறல் தீர்மானங்களை ஆதரிப்பது தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்பதை இந்தியா தெளிவாக இலங் கைக்குத் தெரிவித்துவிட வேண்டும்.
இலங்கைக்கு கடந்த இரண்டு ஆண்டுகாலத் தில் இந்தியா 1,100 மில் லியன் டாலர் அளவுக்கு பொருளாதார உதவி அளிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிதி உதவி அளிக்கப் படும் அளவு மற்றும் நேரம், இலங்கை வாழ் தமிழ் மக்களின் கவலைகளை எந்த அளவுக்கு இலங்கை அரசு தீர்த்து வருகிறது என்பதுடன் தொடர்பு கொண்டதாகச் செய்யப்பட வேண்டும். இலங்கை அரசு நியாயமாக நடந்து கொள்வதாகத் தோன்றினால் நிதி உதவி கூட்டப்படலாம்; தற்போ துள்ள கடினமான நிலையையே இலங்கை கடைப்பிடிப்பதாகத் தோன்றினால் நிதி உதவியைக் குறைக்கலாம்.

இலங்கையின் பொருளாதார நிலை யையே முற்றிலுமாக மாற்றியமைப்பதற்கு உதவுவதற்கு ஏற்ற ஒரு துணிவான, கற்பனைவளம் மிகுந்த ஒரு திட்டத்தை இந்தியா வகுக்கவேண்டும். இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் ஆக்கபூர்வமான செயல் களை இலங்கை அரசு கடைப்பிடிப்பதே இந்த பொருளாதாரத் திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கான நிபந்தனை யாக விதிக்க வேண்டும்.
தங்களின் சொந்த நலனுக்காகவே, இலங்கையில் உள்ள மக்கள் அனை வரும் அமைதியாகவும், இணக்கமாகவும் வாழவேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தி அனைத்து பிரிவு மக்களை யும் ஏற்றுக் கொள்ளச் செய்ய ஒரு ஒருங் கிணைந்த முயற்சி, செயல்திட்டம் மேற் கொள்ளப்படவேண்டும். இப்பணி யில், மக்களை மட்டுமல்லாமல், புத்த பிட்சுக் கள், முஸ்லிம்கள் போன்ற எதிர்ப்பாளர் களையும் ஈர்க்கும் முயற்சிகள் மேற் கொள்ளப் படவேண்டும்.

காலம் காலமாக நம்பிக்கையே அற்றுப் போன தமிழ் தலைவர்களுட னான நெருங்கிய தொடர்பும் உருவாக் கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த ஒரே இலங்கை என்ற கோட்பாட்டின் கீழ் இலங்கைவாழ் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதில் உதவி செய்ய இந்தியா எப்போதும் தயா ராக உள்ளது என்பது உறுதி செய்யப் படுவதும் அவசியமானதாகும். அரசு அவ்வப்போது அளிக்கும் சலுகை களைப் பயன்படுத்திக் கொள்ள அவர் களுக்குத் தூண்டுதல் அளிக்கவும், தீவிரவாத செயல் திட்டங்களை மேற்கொள்வதிலிருந்து தடுக்கவும் இது உதவும்.

(நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 9.7.2012 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)

தமிழ் ஓவியா said...

பெரியார் ஒருவரே!

மயிலாடுதுறைக்கு வந்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு.ச. இராமதாசு அவர்களுக்குக் கட்சியினர் வரவேற்புப் பதாகைகளை அமைத் துள்ளனர். அதில் காணப்படும் வாசகம் இளம் பெரியாரே! வருக! வருக!!

இதனை மருத்துவர் இராமதாசு கண்டிக்க வில்லை. இந்த நாட்டில் பெரியார் ஒருவரே! அய்யா என்றாலும் அவரே!! இதற்கு ஆய்வுகள் தேவைப் படாது. கட்சிகள், கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு ஏற்கப்பட்டுவிட்டவை இவை.

இளம் பெரியார், நடுத்தரப் பெரியார், முதிய பெரியார் என்றெல்லாம் யாரும் கிடையாது. அப்படி யாராவது சொல்ல ஆசைப்பட்டால், அது அவருக்கு அவரே செய்துகொண்ட கேலியும் கிண்டலுமே! 29 பதவிகளைத் தூக்கி எறிந்த புடம் போட்ட, பொது வாழ்வில் தன்னை மூழ்கடித்துக் கொண்ட ஒப்பற்ற உயர் எண்ணங்கள் மலரும் சோலை பெரியார்.

ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி

அணிந்திரா அணியாவார்

அறிந்திராத அறிவாவார்!

என்று புரட்சிக் கவிஞரால், பொறுக்கு மணிச் சொற்களால் கணிக்கப்பட்ட காலக்கதிரவன் பெரியார்! உண்மையான புரட்சித் தலைவரும் கூட! தன்னை நாடி வந்து கதவைத் தட்டிய முதல் அமைச்சர் பதவியை மூக்கறுத்து வெளியில் விரட்டிய வெண்தாடி வேந்தர் அவர்.

அறிவார்ந்த மக்களை உருவாக்கும் சிற்பி அவர். அடிமைத்தனத்தில், அடி முட்டாள்தனத்தில் மயங்கிக் கிடக்கும் மக்களின் பின்னால் ஓடுபவர் அல்லர்! வாக்குகளுக்காக தம் வாக்கினை மாற்றிக் கொள்ளாத மாபெரும் மானுடத் தந்தை பெரியார்.

அவரோடு ஒப்பிட்டுக்கொள்ள ஆசைப்பட வேண்டாம்! அவர் கொள்கைகளை நேசிக்க, சுவாசிக்க முதலில் கற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானது - ஆரோக்கியமானது.

குறிப்பு: திராவிடத்தை வெறுக்கும் மருத்துவர் திராவிடர் என்பதன் அவசியத்தை வலியுறுத்திய தந்தை பெரியாரை எப்படி ஏற்றுக்கொள் கிறாராம்? 11-7-2012

தமிழ் ஓவியா said...

தெரிந்து கொள்வீர்!


103

044-28521323

044-23452362

9003130103

ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு போக் குவரத்துக் குறித்த புகார் களைப் பதிவு செய்யலாம்.

தமிழ் ஓவியா said...

அமர்நாத்தில் பனிலிங்கமா?


தெற்குக் காஷ்மீர்ப் பகுதியில் இமயமலையில் 3890 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை லிங்கத்தை வழிபடச் சென்றவர்கள் 3 நாட்களில் மட்டும் 14 ஆயிரம் பக்தர்கள், பலியானோர் எண்ணிக்கை 5 பேர் என்பது செய்தி.

அமர்நாத்தில் இருப்பது பனியாலான சிவலிங்கம் தானா? அப்படியென்றால் ஆண்டு முழுமையும் அந்தப் பனிலிங்கம் இல்லாதது ஏன்?

பனிக்காலத்தில் மட்டும் லிங்கம் போல் அந்த உருவம் தெரிவது ஏன்?

இந்தக் கேள்விக்கு இது வரை எந்த பக்த சிரோன் மணிகளும் பதில் சொன் னார்கள் இல்லை.

உண்மைதான் என்ன?

குகையின் மேல் பாகத்தில் உள்ள ஒரு இடுக்கிலிருந்து கசிந்து வருகின்ற தண்ணீர் துளித் துளிகளாகக் கீழே விழுகின்றது. பனிக் காலத் தில் கடும் குளிரில் உரு வாகும் பனிக் கட்டியைத் தான் பனி லிங்கம் என்று கரடி விடுகிறார்கள். குளிரின் தன்மைக்கேற்பவும் தட்பவெப்ப நிலையில் பனி லிங்கத்தின் வடிவம்கூட மாறுபடுகிறது என்பதுதான்உண்மை.

இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தின் செயலாளர் சேனல் எடமருகு ஒருமுறை அந்த இடத்திற்கே சென்று ஒளிப்படம் எடுத்து வந்ததுண்டு.

குளிர் காலம் அல்லாத கோடை மாதங்களில் பனி உருகிப் போய்விடுவதால் சிவலிங்கமும் உருகிக் காணாமல் போய் விடுகிறது.

பனிக்காலத்தில்கூட சிவலிங்கம் உருவம் தெரிகிறதே - அதன் பக்கத்தில் ஒரு சூடான பொருள்களைக் கொண்டு சென்றால் பித்தலாட்டம் பொடிப் பொடியாக நொறுங்கிப் போய் விடுமே!

தோட்டத்தில் பாம்புபோல் பூ பூத்திருந்தால் அதனை நாகேசுவரன் என்று சொல்லி மக்களை ஏமாற்றி பணம் பறி என்றான் கவுடில்யன் என்னும் சாணக்கியன் அர்த்த சாஸ்திரத்தில்.

அன்று அந்தப் பார்ப்பான் தூவிய அந்த நச்சுவிதை இன்று மரமாகி பனி லிங்கமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு மக்களின் உயிரையும் பலி வாங்குகிறது - வெட்கக்கேடு! 12-7-2012

தமிழ் ஓவியா said...

அமர்நாத்தில் பனிலிங்கமா?


தெற்குக் காஷ்மீர்ப் பகுதியில் இமயமலையில் 3890 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை லிங்கத்தை வழிபடச் சென்றவர்கள் 3 நாட்களில் மட்டும் 14 ஆயிரம் பக்தர்கள், பலியானோர் எண்ணிக்கை 5 பேர் என்பது செய்தி.

அமர்நாத்தில் இருப்பது பனியாலான சிவலிங்கம் தானா? அப்படியென்றால் ஆண்டு முழுமையும் அந்தப் பனிலிங்கம் இல்லாதது ஏன்?

பனிக்காலத்தில் மட்டும் லிங்கம் போல் அந்த உருவம் தெரிவது ஏன்?

இந்தக் கேள்விக்கு இது வரை எந்த பக்த சிரோன் மணிகளும் பதில் சொன் னார்கள் இல்லை.

உண்மைதான் என்ன?

குகையின் மேல் பாகத்தில் உள்ள ஒரு இடுக்கிலிருந்து கசிந்து வருகின்ற தண்ணீர் துளித் துளிகளாகக் கீழே விழுகின்றது. பனிக் காலத் தில் கடும் குளிரில் உரு வாகும் பனிக் கட்டியைத் தான் பனி லிங்கம் என்று கரடி விடுகிறார்கள். குளிரின் தன்மைக்கேற்பவும் தட்பவெப்ப நிலையில் பனி லிங்கத்தின் வடிவம்கூட மாறுபடுகிறது என்பதுதான்உண்மை.

இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தின் செயலாளர் சேனல் எடமருகு ஒருமுறை அந்த இடத்திற்கே சென்று ஒளிப்படம் எடுத்து வந்ததுண்டு.

குளிர் காலம் அல்லாத கோடை மாதங்களில் பனி உருகிப் போய்விடுவதால் சிவலிங்கமும் உருகிக் காணாமல் போய் விடுகிறது.

பனிக்காலத்தில்கூட சிவலிங்கம் உருவம் தெரிகிறதே - அதன் பக்கத்தில் ஒரு சூடான பொருள்களைக் கொண்டு சென்றால் பித்தலாட்டம் பொடிப் பொடியாக நொறுங்கிப் போய் விடுமே!

தோட்டத்தில் பாம்புபோல் பூ பூத்திருந்தால் அதனை நாகேசுவரன் என்று சொல்லி மக்களை ஏமாற்றி பணம் பறி என்றான் கவுடில்யன் என்னும் சாணக்கியன் அர்த்த சாஸ்திரத்தில்.

அன்று அந்தப் பார்ப்பான் தூவிய அந்த நச்சுவிதை இன்று மரமாகி பனி லிங்கமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு மக்களின் உயிரையும் பலி வாங்குகிறது - வெட்கக்கேடு! 12-7-2012