Search This Blog

1.11.10

பழந்தமிழ் இலக்கியத்தில் தீபாவளிக்கு ஆதாரம் உண்டா?


பழந்தமிழ் இலக்கியத்தில் தீபாவளிக்கு ஆதாரம் உண்டா?
வினா எழுப்புகிறார் பேராசிரியர் அ.கி. பரந்தாமனார்
வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!

தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக்கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும். வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம்= விளக்கு; ஆவலி= வரிசை; தீப-ஆவலி=தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.

ஆசிரியர்: பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்

நூல்: மதுரை நாயக்கர் வரலாறு, பக்கம்: 433,434

இடையில் புகுந்த இந்த மூடப் பண்டிகை தமிழ்நாட்டில் பரவலாகக் கொண்டாடப்படுவது எப்படி? இந்த வடநாட்டுப் பண்டிகையைத் தென்னாட்டுத் தமிழன் கொண்டாடலாமா? சிந்திப்பீர்!

2 comments:

ராவணன் said...

தீபாவளி என்றால் என்னவென்றே தெரியாமல் கொண்டாடும் மக்கள் ஒருபுறம் என்றால்....இந்த பேராசிரியர்
என்ன படித்தாரோ என்ன கிழித்தாரோ?

நம்பி said...

//ராவணன் said...

தீபாவளி என்றால் என்னவென்றே தெரியாமல் கொண்டாடும் மக்கள் ஒருபுறம் என்றால்....இந்த பேராசிரியர்
என்ன படித்தாரோ என்ன கிழித்தாரோ?
November 1, 2010 8:04 PM //

தெரிந்தால் ஏன்? கொண்டாடப்போகிறார்கள்...மானமுள்ள....
திராவிடர்கள். அதனால் தான் பேராசிரியர் நார் நாராக கிழிக்கிறார். படித்ததினால் இன்னும் அதிகமாகவே கிழிக்கிறார்.