Search This Blog

3.4.10

சானியா மிர்சாவின் திருமணமும் - இந்துத்துவா கும்பலும்

சானியா மிர்சா

டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சாவின் திருமணம் தேவையற்ற சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டு விட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சோயிப் மாலிக்கும், சானியாவுக்கும் திருமணம் வரும் 15ஆம் தேதி அய்தராபாத்தில் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் எப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்ற வினாவை இந்துத்துவாவாதிகள் கிளப்புகின்றனர்.

இந்து மக்கள் கட்சி என்றும் பஜ்ரங் தள் என்னும் (பஜ்ரங் என்றால் குரங்கு என்று பொருள்) சொல்லிக் கொள்ளும் இந்து வெறி அமைப்புகள் சானியாவின் படங்களைத் தீயிட்டுக் கொளுத்தியிருக்கின்றனர்.

ஒருவர் யாரைத் திருமணம் செய்துகொள்வது என்று அந்த ஒருவரின் தனிப்பட்ட உரிமையாகும். அதில் குறுக்கிட இந்தக் குரங்குகள் கூட்டத்திற்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

இந்துத்துவா கும்பலின் கண்மூடித்தனமான மதவெறிதான் இதில் தலை கொழுத்து நிற்கிறதே தவிர, அறிவுப்பூர்வமான தலையீடு இதில் கிஞ்சிற்றும் இருக்கிறதா?

இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று தடை சட்ட ரீதியாக ஏதேனும் உள்ளதா?

இவ்வளவுக்கும் பார்த்தால் திருமணம் செய்து-கொள்ளப் போகும் இருவரும் இஸ்லாமியர்கள் மத மறுப்புத் திருமணம் கூட இல்லை. சானியா இந்துவாக இருந்து, பாகிஸ்தான் முஸ்லிமை திருமணம் செய்துகொண்டால், அடேயப்பா நாடே பற்றி எரிந்திருக்குமோ!

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட இந்தியா வந்த நிலையில் ஆடுகளத்தையே சேதப்படுத்திய வானரக் கும்பல் ஆயிற்றே!

பிரிட்டீஷ் ராணியும், போப்பும் இந்தியா வந்தபோதுகூட, அவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய வானரப் படைகள் எதைத்தான் செய்யமாட்டார்கள்?

மத உணர்வோடு இதுபோன்ற போக்கிரித்தனமான வேலைகளில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டாமா?

வன்முறைக்கு வைத்தியம் சட்டரீதியான அடக்குமுறைதான். இல்லாவிட்டால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்தான்!

------------------- மயிலாடன் அவர்கள் 2-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

7 comments:

வஜ்ரா said...

சானியா திருமணம் அவளது சொந்த விசயம். மாற்றுக்கருத்தே இல்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாம். இன்னும் அந்தப் பெண்ணுக்கு முத்தலாக்கு கொடுக்கவில்லையாம். அதைப்பற்றி தங்கள் மேலான கருத்தை பதிக்கலாமே...

முத்தலாக்கு முறையில் பெண்ணை திருமண பந்தத்திலிருந்து விடுவிப்பது தான் பெண் விடுதலையா என்று கேட்டுச் சொல்லவும்.

ஜாஹிர் ஹுஸைன் said...

வஜ்ரா அவர்களே
தலாக் என்றால் என்ன?முத்தலாக் என்றால் என்ன ?என்று யாரிடமாவது கேட்டு தெறிந்து கொண்டு அதன் பின் பிண்ணூட்டமிடலாமே.இஸ்லாம் என்றால் என்ன? என்று எதாவது தெரியுமா?.கண்னை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று சொன்னால் எப்படி.இது தான் வெளிச்சம் என்று இன்றைய தேதியில் உலகில் உள்ள 4 பேரில் ஒருத்தன் சொல்கிறோமே.அது ஏன் சிந்திக்க மாட்டீர்களா?
தலாக் சொல்லி விடுதலை கொடுக்காமல் கேஸ் ஸ்டவ் வெடித்து விடுதலை கொடுக்க சொல்கிறீர்களா? தயவு செய்து யோசியுங்கள்.

ஜாபர் அலி said...

இலங்கை முரளிதரன், இந்தியப் பெண்ணை மணந்தபோது, எங்கே போயிருந்தார்கள் இந்த வீரர்கள்?

ஜாபர் அலி said...

இங்கு அவர்களின் பிரச்னை நாடு அல்ல; மதம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

நிழல் said...

Rendu peruum rendu naatai represent panravanga thats only problem.. Madham alla.... Sania oru saadharana [akistaniyai manam cheythaal intha problem vanthirukkathu... maariage appuram indiavukkga sania eppadi represent panna mudiyum!!!

நம்பி said...

இருவருமே ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்...திருமணம் புரிவது அவரவர் தனிப்பட்ட விஷயம்...விளையாட்டு சுவாரசியத்தின் அடிப்படையில்...நாட்டை சார்ந்த உத்வேகத்தில் வருவது வெற்றி...

சிக்கலில் இருந்து விடுபட இருவருமே அந்தந்த நாட்டு விளையாட்டுகளில் இருந்து விலகி அடுத்து வரும் நபருக்கு வாய்ப்பளிக்கலாமே...ரசிகர்களின் விருப்பமும் அதனடிப்படையில் தான். இருவருமே அந்தந்த நாட்டு உளவுப்பிரிவால் கண்காணிக்கப்படுவது நிச்சயம்.

சானியாவும் என் கணவரின் ஆட்டம் பிடிக்கும்...கணவர் என்ற அடிப்படையில் அவர் வெற்றிபெறுவதை ஊக்குவிப்பேன்...நாட்டு குடிமகன் என்ற அடிப்படையில் நாடு வெற்றிபெறுவதை ஊக்குவிப்பேன் என்று சானியா பேட்டியளிப்பது..சற்று மிகையான விஷயம் (பத்திரிகையில் வந்த செய்தி)...அப்படி இரண்டு மனத்துடன் விளையாட்டு வீரர், போர் வீரர் (ராணுவம்) என்ற துறைகளில் எல்லாம் சாத்தியமில்லை.....இருந்தாலும் மக்களால் ஏற்றுக்கொள்ள இயலாது..சாதாரணமாக வழக்கம்போல் தோற்றாலும் காரணம் கற்பிப்பார்கள், அவர்களின் விளையாட்டு விமர்சினத்திற்கு ஆளாகும்.... இரு நாட்டினராலும்....இதை உறுதிப்படுத்துவது போல், இப்படி பதிலளிக்கவும் தேவையில்லை. (தனிப்பட்டட கருத்து)

இந்துத்துவா...சங்பரிவார்... வழக்கம் போல மதவெறிக்காக இதை கையிலெடுத்து கொண்டு உள்ளது.