Search This Blog

2.11.08

கந்தசஷ்டி கொண்டாடும் பக்தர்கள் சிந்தனைக்கு

கந்தன் சஷ்டியாம்!

கந்தன் சஷ்டி எனும் பெயரால் 6 நாள்கள் உற்சவமாம்! திருச்செந்தூரில் பெரிய விசேடமாம். முருகன் கோயில்கள் எல்லாவற்றிலும் அமர்க்களமாம்! இங்கு கந்தசஷ்டி கவசம் எனும் பாடல் பாடப்படும். சில கோரிக்கைகளை முன் வைத்து பக்தர்கள் பாடுவது தேவராயசாமி என்பவர் எழுதியது. அதில் சிலவரிகள் மட்டும்:


பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க
விதி செவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்து இருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
என்இளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க

என் உடம்பைக் காக்க என்று பொதுவில் பாடக்கூடாதா? ஒவ்வொரு உறுப்பாகச் சொல்லிப் பாடவேண்டுமா?

-------------- "விடுதலை" - 30-10-2008


கந்தன் சஷ்டியாம்!

கந்தன் சஷ்டியில் பாடப்படும் கவசம், சிரிப்பான வேண்டு கோள்களை முருகக் கடவுளுக்கு வைத்து வேலை வாங்குகிறது. படியுங்கள்:

சேர் இளமுலையைத் திருவேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வடடக் குதத்தை வல்வேல் காக்க
பனைத் தொடையிரண்டும் பருவேல் காக்க


இந்து மதக் கடவுளுக்கு வேறு வேலையே கிடையாது, மேலே கூறியவற்றைத் தவிர. கந்த சஷ்டி என்றால் என்ன, தெரியுமா? கந்தன் (முருகன்) சஷ்டியில் பிறந்ததால் கந்த சஷ்டி!
கந்த புராணமும் ராமாயணமும் ஒன்றே! ஒன்றுக்கு ஒன்று போட்டியாக எழுதப்பட்டவை. வேலும் வில்லும் என்று ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய நூல் தெளிவாக்கும். அதேபோல அன்னை மணியம்மையார் எழுதிய ஆராய்ச்சி நூல் கந்த புராணமும் ராமாயணமும் ஒன்றே எனும் நூல். இவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுக் காட்டும். சைவ, வைணவப் போட்டியில் முகிழ்த்த கற்பனை ஆபாசக் கதைகள்!

---------------- "விடுதலை" - 31-10-08



கந்த சஷ்டியாம்!


சிவனிடம், பார்ப்பனர்கள் (தேவர்கள்) முறையிட்டார்களாம், அசுரர்களால் தங்களுக்குத் தொல்லைகள் வருகின்றன என்று! அசுரர்களை அழிக்கவல்ல ஒரு வீரனைப் பெற்றுக் கொடுக்கிறேன் என்று பிரஜோற்பத்தியில் முனைந்தானாம் சிவன். பார்வதியும் பரமசிவனும் கூடிக் கலவி செய்தனராம், செய்தனராம், செய்து கொண்டேயிருந்தார்களாம். இவர்களின் காமச்சேஷ்டை நீண்டு கொண்டே போனதால் வருடக் கணக்கில் உலகின் இயக்கம் பாதிக்கப்பட்டு விட்டதாம்.
அதனால் கவலைப்பட்டுக் கஷ்டப்பட்ட தேவர்கள் மீண்டும் சிவனின் வீட்டுக்குப் போய் முறையிட்டார்களாம். சிவன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லையாம். அவர் பாட்டுக்குக் கலவியே கண்ணாய் இருந்தாராம். தேவர்களும் விடவில்லை. போட்டுத் தொல்லைப்படுத்திக் கொண்டே இருக்கவே, சிவன் கோபத்துடன் பிடுங்கிக் கொண்டு எழுந்தானாம். விந்து பீய்ச்சி அடித்துச் சரவணப் பொய்கையில் விழந்ததாம். ஒவ்வொரு விந்துத் துளியும் ஒவ்வொரு குழந்தையாகிச் சரவணப் பொய்கையே குழந்தைகள் மயமாகி விட்டதாம்.
அங்கே குளித்துக் கொண்டிருந்த ஆறு கார்த்திகைப் பெண்களும் எல்லாக் குழந்தைகளையும் கூட்டிப் பிடித்துக் கட்டி அணைத்தார்களாம். அவ்வளவுதான், ஓராறு முகமும், ஈராறு கரமும் கொண்ட ஆறுமுகனாக - கந்தனாக - முருகனாக - கடம்பனாக - கார்த்திகேயனாக - உருவாகி விட்டதாம்.

அந்த நாள் கந்தசஷ்டியாம்!

ஆறுமுகம், 12 கைகள் வருகையில் கால்கள் மட்டும் ஏன் இரண்டாகவே இருந்து விட்டன? பக்தர்கள் யோசிக்கட்டும்!

---------------- "விடுதலை" - 1-11-2008

2 comments:

கோவி.கண்ணன் said...

//சேர் இளமுலையைத் திருவேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வடடக் குதத்தை வல்வேல் காக்க
பனைத் தொடையிரண்டும் பருவேல் காக்க//

கிட்டதட்ட ஒரு நாட்டு வைத்தியரிடம் முறையிடுவது போல் இருக்கிறது.
:)

தமிழ் ஓவியா said...

இந்த ஆபாசத்தை, அசிங்கத்தைத்தான் பக்தி போர்வையில் பொருள் தெரியாமல் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
முதலில் இவர்கள் இதைப் புரிந்து நிறுத்திக் கொண்டாலே போதும்.

என் நண்பர் ஒருவரின் வீட்டில் தினமும் இப்படி பாடுவது வழக்கமாம். நான் ஒரு முறை இதை நேரில் பார்த்து உண்மையை எடுத்துக் கூறிய பின் அதை நிறுத்திவிட்டார்கள்.

இதைப்படிக்கும் மற்ற தோழர்களும் இந்த ஆபாசத்தை பாடாமல் நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி.