
ஆர்.எஸ்.எஸ். பரிவார்களின் செயல் பாரீர்!
முதல்வர் கலைஞரின் தலையை வெட்டச் சொல்லி பரிசு அறிவித்த வி.எச்.பி. தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ராம்விலாஸ் வேதாந்தி எனும் நபர், தனக்கு சிமி, அல்கொய்தா பயங்கரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் வந்திருப்பதாக முன்பு புகார் கூறியிருந்தார். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு மிரட்டல் தொலைபேசிகள் எங்கு இருந்து வந்தன என்பதைத் தொலைபேசித் துறைமூலம் கண்டறிந்தனர்.
கத்ரா நகர பஜ்ரங்தள் தலைவர் ரமேஷ் திவாரி (பார்ப்பனர்) என்பவரும் அவரது கூட்டாளிகளும் தொலைபேசி மிரட்டல்களைத் தந்துள்ளனர். என்ன காரணம்? கான்பூர் குண்டு வெடிப்பு விசாரணையைத் திசை திருப்பவும், வேதாந்திக்குக் கூடுதல் பாதுகாப்புப் போலீசார் நியமிக்கப்படவும் வேண்டி, தொலைப்பேசி மிரட்டல் விடுக்குமாறு பஜ்ரங்தள் மேலிடம் கட்டளை இட்டதாம்.
ரமேஷ் திவாரி உள்பட அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எப்படி இருக்கிறது, ஆர்.எஸ்.எஸ். பரிவார்களின் செயல் தன்மைகள்?
----------------நன்றி: "விடுதலை" 27-11-2008
0 comments:
Post a Comment