
இலங்கைப் பிரச்சினையில் முதல்வர் கலைஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து தீவிரவாதம் தலைதூக்கி உள்ளது கவலை அளிக்கிறது. மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ராணுவ ஊழியருக்குத் தொடர்பு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல ஆண்டுகளாக இவர் பயங்கரவாதச் சம்பவங்களுக்கு உறுதுணையாக இருந்து ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து சப்ளை செய்திருப்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.
சங்பரிவார் அமைப்புகள் பயங்கரவாத இயக்கங்கள் போல் செயல்படுகின்றன. இந்த அமைப்புகள்மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற மதத்தினர் மீது பழி சுமத்துவதற்காக இந்த அமைப்புகள் திட்டமிட்டு சில சம்பவங்களில் ஈடுபடுகின்றன. பயங்கரவாதத்தில் ஈடுபட 500 பேருக்கு பயிற்சி அளிப்பதாக தகவல் தெரிகிறது. இதைத் தடுக்க வேண்டும்.
மத்திய அரசு திட்டமிட்டு சில காரியங்கள் செய்யச் சொன்னாலும் ஆர்.எஸ்.எஸ்.சின் அர சியல் அங்கமான பா.ஜ.க. தலைமையிலான மாநில அரசுகள் அவற்றைச் செய்யத் தயாராக இல்லை. 1992 இல் நடந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கு இன்னும் முடிவடையவில்லை. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட லிபரான் கமிஷனுக்கு ரூ 40 கோடி செலவு செய்தும் இன்னும் அது தனது அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.
எந்த மதத் தீவிரவாதமாக இருந்தாலும் அதைச் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண் டும். தீவிரவாத இயக்கங்களை ஆதரிக்கக்கூடாது. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தயவு, தாட்சண்யம் காட்டக்கூடாது.
இலங்கை அதிபர் ராஜபக்சே தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அங் குள்ள தமிழர்களை அழிக்கி றார். அங்கு உள்ள தமிழர்க ளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
சென்னை சட்டக்கல்லூரி மாணவர் மோதல் சம்பவம் மிகவும் வேதனையானது. இது தமிழ் நாட்டில் உள்ள அனை வருக்கும் பெரும் தலைக்குனிவு ஆகும். இந்த சம்பவத்தில் மாநில அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது அவர்களின் எதிர்காலத்திற்கு உகந்ததில்லை. இதற்கு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட் டுள்ளது.
இதற்குப் பின்னால் இருப்பது எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பொதுச்சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் ஏற்படுத்தக் கூடாது. பெற்றோர்கள், மாண வர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். மக்களை பாதிக்கும் வகையில் நடை பெறும் சாலை மறியலை சட்ட பூர்வமாகத் தடை செய்ய வேண்டும்.
நெருக்கடியான நேரங்களில் காவல்துறை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்தில் விதிவிலக்கு செய்ய வேண்டும்.
இலங்கைப் பிரச்சினைக்காக முதல்வரும், மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகத் தேவை இல்லை. அவ்வாறு செய்தால் அது மதவாதச் சக்திகளுக்கு இடம் கொடுத்து விட்டது என்ற பழி தி.மு.க.மீது ஏற்பட்டுவிடும்.
- இவ்வாறு அவர் தமது பேட்டியில் தெரிவித்தார்.
--------------------நன்றி: "விடுத்லை" 18-11-2008
0 comments:
Post a Comment