Search This Blog

3.11.08

இந்துத்துவ பயங்கரவாதத்தின் புதியமுகம் மாலேகான் குண்டுவெடிப்புக்கு காரணம் சவர்க்கர் உருவாக்கிய அபினவ் பாரத் அமைப்புதான்






மாலேகான் மதரசா குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து புதிய தொரு இந்துத்துவ பயங்கரவாத அமைப்பு பற்றியும் பர வலாகப் பேசப்படுகிறது. இந்துத்துவ அரசியலுக்கு உள்ள வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்பட்ட வி.டி.சவர்க்கார் உருவாக்கிய அபினவ்பாரத் என்ற அமைப்புதான் மாலேகான் குண்டு வெடிப்புக்குக் காரணமானது.

தற்போது இது பற்றி நடந்து வரும் காவல்துறை விசாரணையில் ராணுவஅதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகிதனுக்கும் அபினவ் பாரத் அமைப்புடன் தொடர்பு உண்டு என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அபினவ்பாரத் அமைப்பின் தலைவர் வேறு யாருமல்ல. மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம்கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேவின் மகளும் சவர்க்காரின் சகோதரரின் மருமகளுமான ஹிமானி சவர்க்கார்தான் இந்த அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

1893 இல் சவர்க்கார் அபினவ்பாரத்தை உருவாக்கினார். 1952 இல் அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹிமானி சவர்க்கார் மீண்டும் அதற்கு உயிர் கொடுத்தார். கோட்சேயும் சவார்க்கரும்தான் அந்த அமைப்பின் வழிகாட்டிகள்.


இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பது என்பதுதான் இதன் அறிவிக்கப்பட்ட லட்சியமாகும். அமைப்பின் இணையதளத்தில் முற்றிலும் ஆத்திரமூட்டும் லட்சியப் பிரகடனங்களும் அதற்கான செயல் திட்டங்களும் வெளியிடப்பட்டு இருந்தன. ஆனால், மாலேகான் குண்டு வெடிப்புகளின் பேரில் அபினவ்பாரத் ஊழியர்கள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட உடன் இணைய தளம் திடீரென திரும்பப் பெறப்பட்டது.

நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில், இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை சகித்துக் கொள்ளமாட்டோம். எந்த வகையிலும் பதிலடி கொடுப்போம் என்று அதன் தலைவர் ஹிமானி சவர்க்கார் அறிவித்துள்ளார். மாலேகான் குண்டு வெடிப்புக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று அவர் கூறிக்கொள்கிறார். ஆனால் கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் பிரபாகர் குல்கர்னிக்கும், ரமேஷ் உபாத்யாயாவுக்கும் தேவையான சட்ட உதவிகள் இந்த அமைப்பின் சார்பில் அளிக்கப்படுமாம். இவர்கள் இருவரும் அபினவ்பாரத்தின் ஊழியர்களாவர். குல்கர்னி இதன் மத்தியப் பிரதேசப் பொறுப்பாளராகச் செயல்பட்டு வருபவர் ஆவார். பிரபலமான இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளான பஜ்ரங்தளத்தையும், விசுவ இந்து பரிசத்தையும், மீண்டும் உயிர் பெற்ற இரண்டு ஆண்டு களிலே அபினவ்பாரத் மிஞ்சி விட்டது. இந்த அமைப்பின் ஊழியர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் முக்கியப் பிரமுகர்கள் ஆவர்.

அபினவ்பாரத் மறுபடியும் உருவான 2006 க்குப் பின்னர் தான் நாட்டில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து உள்ளன. மாலேகான் குண்டுவெடிப்புகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தரைப் படை லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித்திடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக அவர் மும்பை கொண்டு செல்லப்பட்டார்.

------------------நன்றி: "விடுதலை" 3-11-2008

3 comments:

Robin said...

ராணுவத்துக்குள்ளும் காவிகள் ஊடுருவியிருப்பது மிகவும் ஆபத்தான விஷயம். இந்த களைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும்.

Robin said...

//நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில், இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை சகித்துக் கொள்ளமாட்டோம். எந்த வகையிலும் பதிலடி கொடுப்போம் என்று அதன் தலைவர் ஹிமானி சவர்க்கார் அறிவித்துள்ளார். // இதுதான் காவிகளின் தந்திரம்.

தமிழ் ஓவியா said...

காவிகளின் குள்ளநரித்தனத்திற்கு பலியாகமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.