
இதுதான் பார்ப்பனர் ஒழிப்பு
பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால் அவர்களை கொன்றழிப்பது என்பதல்ல. நாலு பார்ப்பனர்கள் போனால் நாளைக்கு வேறு நாலு பார்ப்பனர்கள் வருகிறார்கள்.மலேரியா வந்தால் கொயினா(மாத்திரையின் பெயர்) கொடுத்தால் மலேரியா எப்படி ஒழியும்?.
எனக்கு தோன்றுவதெல்லாம் பார்ப்பனர் செல்வாக்குக்குக் காரணம் கடவுள்கள்,கோயில்கள்,இராமாயண,பாரத இதிகாசங்கள்,மதம், சாஸ்திரங்கள் இவைதான்.இவைகளெல்லாம் ஒழிக்கப்பட்டால் பார்ப்பான் ஒழிந்துவிடுவான்.சாக்கடைக் கசுமாலம் ஒழிந்தால் எப்படி கொசு ஒழியுமோ, அப்படி இந்துமதம்,கடவுள்,கோயில்,புராணங்கள் ஒழிந்தால் பார்ப்பனர் ஒழிந்து விடுவார்கள்.
-------------தந்தைபெரியார்-"விடுதலை"-13.10.1953
5 comments:
today only i happen to see ur blog..i am happy that some one from my hometown is writing a blog.
பார்பனர்களில் பலர் இன்று இந்து மதம்,புராணம் இத்தியாதிகளை வைத்துக் கொண்டு பிழைப்பதில்லை.
பல வேலைகளை செய்கிறார்கள்,
பிழைக்கிறார்கள். பெரியார் பெயரைச்
சொல்லிக் கொண்டு வயிறு வளர்க்கும்
வீரமணிதான் பெரியாரிய பூசாரியாகவும், மடாதிபதியாகவும்
இருக்கிறார்.அவருக்கு பின்னால்
பஜனை பாட ஒரு கூட்டம்.
இவர்களை ‘ஒழிப்பது' எப்படி
என்றுதான் உண்மையான
பெரியாரியவாதிகள் யோசிக்க வேண்டும்.
இன்பா அவர்களுக்கு நன்றி.மண்வாசனையை மதிக்கும் பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. மிக்க நன்றி.
பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு வயிறு வளர்க்கும் அவசியம் வீரமணிக்கு எப்பவும் இருந்ததில்லை.
உங்களைப் போன்றவர்கள் விவரம் புரியாமல் இன்னும் இருப்பதால்தான் வீரமணி பெரியாரின் கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகிறார். நீங்கள் எல்லாம் உண்மையை உணர்ந்து இழிவு ஒழிக்கும் பணியில் சிறு துரும்பையாவது அசைத்தால் கூடப் போதும்.நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுமோம்.
எங்களுக்கு என்ன பார்ப்பனர்களை எதிர்க்க வேண்டும் என்ற ஆசையா?
எங்களை எங்கள் தமிழினத்தை இழிவு
படுத்தாமல் இருந்தால் எல்லோரையும் வாழ்வைப்பான் தமிழன்.
இன்றளவும் ராமகோபலன்களும், ஹெச்.ராஜாக்களும் போடும் ஆட்டத்தை பார்த்திருக்க மாட்டீர்கள் நீங்கள்.
சமுதாயம்,அரசியல், அரசாங்கம் போன்ற துறைகளில் பல வேலைகளைப் பார்ப்பனர்கள் செய்தாலும் அவர்களின் குணம் மட்டும் இன்னும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது. ஒருசில பார்ப்பனர்கள் முற்போக்காக இருப்பார்கள். அதையும் ஆராய்ந்து பார்த்தால் அவர்களின் உண்மை முகம் படு கோரமாக இருக்கும்.
நடுநிலையுடன் ஆராய்ந்து பாருங்கள் உண்மை புரியும், ஏபி.
பார்ப்பனர்களிடமும் - மற்றவர்களிடமும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறார் பெரியார் கேளுங்கள்:
ஒரு தாயின் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு,அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்க்கை குணமாக இருக்குமோ அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத்தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப்போய்,வலிவு குறைவாய் இருக்கிற மகனுக்கு , மற்றக் குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையை விட எப்படி அதிக போசனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரி சமசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ,அது போலத்தான் நான் வலுக் குறைவான பின் தங்கிய மக்களிட்ம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும்,மற்ற வகுப்பு மக்களிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சியாகும்.
------தந்தைபெரியார்
Post a Comment