Search This Blog

20.7.08

வெளிச்சத்திற்கு வரும் மகரஜோதியின் ரகசியம்!

நீண்ட நெடுங்காலமாக நாட்டிலுள்ள இந்து பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு அண்டை மாநிலங்களிலுள்ள கோவில்களுக்குச் சென்று கடவுளைத் தரிசிப்பதையும் காணிக்கை செலுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் மற்றும் திருத்தணி, திருச்செந்தூர், பழனி முருகன் கோவில்கள் சென்னை மாநகரிலேயே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயில், திருவேற்காடு மாரி யம்மன் கோவில் போன்ற ஏராளமான கோயில்கள் இருந்தும் மற்ற மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநில கோவில்களுக்குச் சென்று வழிபட்டு காணிக்கை செலுத் துவதையே ஒரு கவுரவமாகவும், வழக்கமாகவும் கொண்டுள்ளனர். அதனால் அம்மாநிலங் களுக்குத் தான் அதிக வருமானம் ஏற்படுகிறது.

அதிலும் சுயமரியாதைச் சிந்தனைக்கு உரமிட்ட பகுத்தறிவு கொள்கைக்கு அடித்தளம் அமைத்த தமிழ் மண்ணில் வாழும் பக்தர்கள், தன் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு கொள்கைக்கு பாடுபட்ட மூடநம்பிக்கையை ஒழிக்க முழு மூச்சுடன் செயல்பட்ட தந்தை பெரியார் தோன்றிய மண்ணில் அக்கொள்கை முழக்கங்களில் அவற்றுக்குத் துணையாக இருந்து உழைத்த பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் இன்று வரையில் பகுத்தறிவுக் கொள்கையில் இம்மிளவும் தடம் புரளாமல் மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடி வரும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வாழும் மண்ணில் இவ்வித மான பக்தர்கள் பெருகிவருவது வேதனையளிக்கிறது.

அதிலும் பக்தர்களின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவர்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் அண்டை மாநிலங்களிலுள்ள கோயில்களில் பக்தர்களுக்கு தெரியாத வகையில் அதன் நிர்வாகத்தினர் சில மோசடிகளில் ஈடுபட்டு வருவதை இந்நாள் வரை பக்தர்கள் அறிந்துகொள்ளாமல் மூடநம்பிக்கையில் மூழ்கிய பகுத்தறிவு சிந்தனை கொண்ட வர்கள் அனைவரையும் வருத்தப்பட வைக்கின்றது. இப்படி பலவித மோசடிகள் நடை பெற்றாலும் முழுவதுமாக வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ள ஒரு சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளதாக நாளிதழ்களில் வெளியாகி உள்ளது.

அந்தச் செய்தி, சபரிமலையிலுள்ள அய்யப்பன் கோயில் மலையில் தோன்றும் மகர விளக்குக் குறித்த விவகாரம். மகர சங்கராந்தி அன்று கோயில்களில் தோன்றும் மகர விளக்கு கோயில் ஊழியர்களால் ஏற்றப்படும் விளக்கு தான் என்று சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ்வரரு அறிவித்துள்ளதுதான். மகர விளக்கு என்பது இயற்கையான நிகழ்வு என்று காலம் காலமாக நம்பிக் கொண்டிருக்கும் லட்சக் கணக்கான பக்தர்களின் மத்தியில் தந்திரியின் இந்த அதிரடி மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து குறிப்பாக தமிழ் நாட்டிலிருந்து லட்சக்கணக் கான பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். மகர விளக்கு தரிசனத்தை தெய்வ தரிசனமாக கருதி வருகிறார்கள். அந்த விளக்கு பொன்னம்பலம் மலைப் பகுதியில் மூன்று முறை தோன்றி மறையும் அந்த ஒளியை தரிசனம் செய்த பின்னரே பக்தர்கள் வீடு திரும்புவர்.

இந்த மகர விளக்கு மனிதர்களால் ஏற்றப்படுவதுதான் என விபரம் அறிந்தவர்கள், பகுத் தறிவுவாதிகள் குறிப்பாக நாத்திகர்கள் கூறி வந்தாலும், அல்ல அல்ல அது தெய்வத் தினால் ஏற்றப்படும் இயற்கை யான தெய்வீக விளக்கு என்று தான் இன்னமும் பெரும்பாலான பக்தர்கள் நம்புகின்றனர். அந்த விளக்கு தோன்றும் போது சாமியே சரணம் அய்யப்பா என்று பக்தர்கள் எழுப் பும் முழக்கமானது விண் ணையே முட்டும்படியாக இருக்கும். அதிகளவிற்குப் பக்தர்களிடையே பக்திப் பரவசம் நிரம்பி வழியும்.

ஆனால், அந்த விளக்கு இயற்கையானது அல்ல செயற்கையானது என தந்திரி குடும்பத்தாரும், திருவாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் ராமன் நாயரும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மகர விளக்கு மனிதர்களால் ஏற்றப்படுகிறது என்பது அரசுக்குத் தெரியும். இருப்பினும் மதப் பிரச்சினை உருவாகும் என்ற காரணத்தால் இந்த நடைமுறையை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சிக்க வில்லை என தேவசம் போர்டு அமைச்சர் ஜி. சுதாகரன் விளக்கம் அளித்தார்.

கன்னட நடிகை ஜெயமாலா, கருவறை வரை சென்ற விவகாரம் முதல் பணிக்கரின் மோசடி பிரசன்னம் என ஏற்கெனவே பல்வேறு சர்ச்சை களில் சிக்கித் தவிக்கும் அய்யப்பன் கோயில் பற்றி தற்போது முத்தாய்ப்பாய் மீண்டும் ஒரு சதி. முக்கிய பிரச்சினை வெட்ட வெளிச்சத்திற்கு வந் துள்ளது. இதுகுறித்து பக்தர்கள் என்ன முடிவெடுக்கிறீர்கள் என்பதற்கு எதிர்காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

ஆக இனியாகிலும் பக்தர்கள் குறிப்பாக தமிழ் நாட்டு பக்தர்கள் இளிச்சவாயர்களாக ஏமாளிகளாக மூட நம்பிக்கையில் மூழ்கி தங்களது நேரத்தையும், பணத்தையும் விரயமாக்கிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் உண்மையை உணர்ந்து சிந்திப்பார்களாக.

------------------------------ நன்றி: "செம்பரிதி" - 15-6-2008

0 comments: