
பாமரர்களை உருட்டி விளையாடும் கொடுமை
சிலரே பொதுமக்களின் அறியாமையைக் கொண்டு அவர்கள் அறியாமையின் பெயரால் வேலை இல்லாமையை அதிகரித்தும், கூலியைக் குறைத்தும், வரியை அதிகரித்தும், உலகப் போர்களை விளைவித்தும் வருகின்றார்களென எண்ணலாமேயொழிய, பாமர மக்களின் பகுத்தறிவால் இந்த அநீதிகள் யாவும் நிகழுகின்றனவென எண்ணலாகாது. வல்லரசுகள் செய்யும் திருவிளையாடல்களில் நமது பாமர மக்களைப் பகடையைப் போல் உருட்டி, ஜெயமோ அபஜெயமோ பெறுகின்றார்களேயொழிய, தாங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கெல்லாம் பாமர மக்களின் தெளிவுபட்ட சம்மதத்தைக் கொண்டு இந்த அரசியல் திருவிளையாடல்களை நிகழ்த்துகின்றார்களென எண்ணுவதற்கும் இடமில்லை. வல்லரசுகள் மாத்திரமல்ல; இந்தக் கொடூரத் திருவிளையாட்டுகளில் இவர்களுடன் மதக் குருக்களும் கலந்தே பாமர மக்களின் புத்தியின்மையைக் கையாளுகின்றார்கள்.
------------------- மா. சிங்காரவேலர்
0 comments:
Post a Comment