Search This Blog

6.2.12

பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒன்றே பரிகாரம்


கடவுள் பைத்தியம் (கடவுள் உண்டு என்ற அறியாமை) நீங்கினால் ஒழிய, மனித சமுதாயம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை அடைய முடியாது.

கடவுள் என்பதாக ஒன்று இல்லை. யாவும் மனிதனாலும், இயற்கை நியதியாலும் ஆக்கப்படுவதும் ஆனவையும்தானே ஒழிய, கடவுளால் ஆவது, ஆனது என்பதாக எதுவுமே இல்லை.

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுளுக்கு என்று என்ன வேலை கொடுக்கிறார்கள்? கடவுள் சக்தி என்று எதைச் சொல்லுகிறார்கள்? எல்லா மக்களும் தங்களுக்கு மறைக்கப்பட வேண்டிய அவயவம் (உறுப்பு) இருக்கிறது என்று அறிந்தே ஆடை அணிந்து மறைத்துக் கொண்டு நடக்கிறார்களே, அதுபோலவே கடவுள் இல்லை; கடவுளால் தங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. எதுவும் இல்லை என்று அறிந்தும் கூட, பழக்கம் காரணமாக நம்புவதாகக் காட்டிக் கொண்டு எல்லாக்காரியத்தையும் தானே செய்து கொள்ள வேண்டியது என்று உறுதியாய்க் கருதியே நடந்து கொள்கிறார்கள்.
இதன் பயனாய் வளர்ச்சியைக் கெடுத்துக் கொள்கிறான்.

கடவுளுக்கு உருவம் கற்பித்தவனும், கடவுளை மனிதன் போல் சிருஷ்டித்தவனும், கடவுளுக்கு பிறப்பு, இறப்பு, மனிதன் போன்ற குணம், பெண்டு, பிள்ளை, சோறு, துணி, வசிக்க வீடு என்று கற்பித்தவன் எவனும் தன்னைக் கடவுள் நம்பிக்கைக் காரன் என்றுதான் நினைத்துக் கொள் கிறானேயொழிய, இவை கடவுள் நம்பிக் கைக்கு மாறான செய்கையென்று அவன் கருதுவதில்லை.

தனக்கோ, தன் பிள்ளைக்குட்டி, தாய் தந்தைக்கோ சிறு நோய் வந்தா லும் உடனே, டாக்டரை அணுகுகிறவன் எவனும் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்று கருதுவ தில்லை. அது வேறு விஷயம்; இது வேறு விஷயம் என்றே நினைக்கிறான்; அல்லது டாக்டரையும் நம்புகிறான், மருந்தையும் நம்புகிறான், கடவுளையும் நம்புகிறான், அதுவும் பல கடவுள்களில் தனக்கு வேண்டிய கடவுளையே நம்புகிறான்!

மற்றும் கடவுள் நம்பிக்கைக்காரன் கோவில்களை நம்புகிறான். அவற்றிலும் ஒரே கடவுள் உள்ள கோவில்களில் ஒரு ஊர் கோவிலை பெரியதாகவும், மற்ற ஊர் கோவிலை சிறிதாகவும் மதிக்கிறான். அதுபோலவே ஒரு ஊர் குளத்தைப் பெரிதாகவும், ஒரு ஊர் குளத்தை மட்டமாகவும் மதிக்கிறான். இந்தப் பேதம் சமுத்திரத்தில் கூட காட்டுகிறான். ஒரு ஊர் சமுத்திரம் பெரிதாகவும் (விசேஷமாகவும்) மற்ற ஊர் சமுத்திரம் சாதாரணமானதாகவும் மதிக்கிறான்.

150 கோடி மக்களால் மதிக்கப்படும் யேசு கிறிஸ்து, கோவில்கள் எல்லாம் கள்ளர் குகை; திருட்டுப் பசங்கள் வசிக்குமிடம் என்று சொன்னார்! அது மாத்திரமல்லாமல், சுமார் 40 கோடி மக்களால மகாத்மா என்று கருதப்படும் காந்தி கோவில்கள் விபசாரிகள் விடுதி, குச்சுக்காரிகள் வீடு என்று சொன்னார். கடவுள் நம்பிக்கைக்காரர்களில் யார் இதை நம்புகிறார்கள்? அனுசரிக்கிறார்கள்?

கக்கூசு எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோல் கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது. இதனால் 300 கோடி மக்கள் வாழும் உலகம் வளர்ச்சி கெட்டு எவ்வளவு காட்டு மிராண்டித்தனமாய் இருக்கிறது?

50 கோடி மக்கள் வாழும் நமது இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை சாமி, எத்தனை கோவில், எத்தனை தீர்த்தம், எத்தனை சொத்து, எத்தனை சாமியார், எத் தனை எத்தனை பக்தர் முட்டாள்கள்!

எவ்வளவு சொத்து பண விரயம் - நேர விரயம் - முயற்சி விரயம். படித்தவர்களில் எத்தனை அறிவிலிகள்! புலவர்களில் எத்தனை முட் டாள்கள்! இலக்கியங்களில் எத்தனை அழுக்கு - ஆபாசம் இருந்து வருகின்றன!

இதற்குப் பரிகாரம் புலவர்கள் எல்லாம் ஒன்று கூடி ஒரேயடியாக கடவுள் இருக்கிறது என்பது முட்டாள்தனம்; இனிமேல் புலவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகள் (நாத்தி கர்கள்) என்று பிள்ளை களுக்குப் பிரச்சாரங்களில், காலட்சேபங்களில் பகுத்தறிவு பற்றியே பேசுவது; பகுத்தறிவுக்கு ஒவ்வாத இலக்கியங்களை இகழ்வது என்று உறுதி செய்து கொண்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும், எவ்வளவு பகுத்தறிவு வாதிகளாய் நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக் கூடாது; சேர்க்கக் கூடாது.

இப்படிச் செய்யாவிட்டால் இனி எந்தப் புலவருக்கும் மதிப்பு இருக்காது! கண்டிப்பாய் மதிப்பு இருக்காது! இலக்கியங்கள் கொளுத்தப்படும்!

----------------------பெரியார் எழுதிய தலையங்கம், "விடுதலை" 20.10.1967

4 comments:

senthil velayuthan said...

150 கோடி மக்களால் மதிக்கப்படும் யேசு கிறிஸ்து, கோவில்கள் எல்லாம் கள்ளர் குகை; திருட்டுப் பசங்கள் வசிக்குமிடம் என்று சொன்னார்.

இங்கு உங்கள் பகுத்தறிவு அடி வாங்குகின்றதே.
எப்படி கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் எவ்வாறு இறைத்தூதுவரை மேற்கோள் காட்டுகின்றீற்கள்.

கடவுள் இல்லை என்று நம்புகின்றவன் தான் நானும்.

அங்கு ஏசு,கிருஸ்ணன் இன்னும் பிற தெய்வங்களும் இல்லை.

தெய்வம் மனிதன் உருவாக்கியவை தாம் .
தெய்வம் என்பது மிகைப்படுத்த பட்ட தனி நபர் துதி பாடலால் உருவானதே.
இன்னும் காலம் செல்லும் போது பெரியார்,அண்ணா, கருணாநிதி முதலிய தெய்வங்களும் தமிழக ,இந்திய வரலாற்றில் வலம் வரும்.

தமிழ் ஓவியா said...

அப்படி ஒரு நிலை உருவாகி விடக்கூடாது என்று தான் பெரியார் சிலையின் கீழ் கடவள் மறுப்பு வாசகம் இடம்பெற்றுள்ளது

தமிழ் ஓவியா said...

செய்திச் சிதறல்கள்!


2ஜி விவகாரத்தில் பி. சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடியான காரணத்தால் மத்திய அரசு ஊழல் மிகுந்தது என்ற அபிப்ராயம் மாறிவிடாது.

- பா.ஜ.க.,

கொக்கு ஒட்டகத்தைப் பழித்ததாக ஒரு கதை சொல்லுவார்கள். அதுதான் இது! தன் முதுகில் ஆயிரம் வண்டி ஊழல் அழுக்கை வைத்துக் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்யலாமா பா.ஜ.க.? ஊழல் நாற்றமெடுத்துதானே கருநாடக மாநில முதல் அமைச்சர் எடியூரப்பாவை (பா.ஜ.க.) பதவியிலிருந்து கழுத்தைப் பிடித்துத் தள்ள நேர்ந்தது!

வாஜ்பேயியின் 13 நாள் ஆட்சியிலே என்ரான் ஊழல் மறைந்து போய் விட்டதா?

வைத்தியரே, வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

உலகத்திலேயே முதன் முறையாக திருநங்கை ஒருவரை (பாரதி என்று பெயர்) தேவாலயத்தின் ஆயர் பணிக்கு தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.அய்.) சென்னை பேராயம் முடிவு செய்துள்ளது.

வரவேற்கத்தகுந்த முடிவாகும். ஆணையும், பெண்ணையும் படைத்தவன் கடவுள் என்று ஒப்புக் கொண்ட மதவாதிகள் - அந்தக் கடவுள் இருப்பதாகச் சொல்லப்படும் தேவாலயங்களில் ஒரு பெண்ணை நியமிப்பதில் என்ன தவறு?

இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், திருநங்கை ஒருவரை நியமித்திருப்பதுதான். இதனைப் பார்த்தாவது கடவுளை சிவனாகவும், சக்தியாகவும் பார்க்கிற இந்துத்துவாவாதிகள் குறிப்பாகப் பார்ப்பனர்கள் திருந்துவார்களா?

திருந்த மாட்டார்கள். இங்கேதான் ஆண்களில் கூட பார்ப்பனர்கள் தவிர அர்ச்சகர் ஆகக் கூடாது என்று அடம் பிடிக்கிறார்களே! அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர்கள் உரிமை என்று சட்டம் செய்தால், அதனை எதிர்த்து உச்சநீதி மன்றம் வரை ஓடுகிறார்களே - அய்யயோ, இந்து மதத்திலிருந்து கிறித்துவ மதத்திற்கு மத மாற்றம் நடைபெறுகிறதே என்று வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொள்ளும் இந்துத்துவாவாதிகளும், பார்ப்பனர்களும் கிறித்துவ மதத்தைப் பார்த் தாவது புத்தி கொள்முதல் பெறுவார்களா?

உத்தரப்பிரதேசம் 2ஆம் கட்ட தேர்தலில் 118 கிரிமினல்கள் போட்டி.

இரண்டாம் கட்ட தேர்தலில் 337 பேர்கள் போட்டிப் போடுகின்றனர் என்றால் இதில் 118 பேர் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாம்.

நமது நாட்டு ஜனநாயகத்தின் யோக்கியதை எத்தனை செங்குத்தில் நிற்கிறது என்பதற்குக் கடைந்தெடுக்கப்பட்ட எடுத்துக்காட்டு இது. வாக் காளர்கள் அடி மடையர்களாக இருந்தாலும் சரி, பணம் வாங்கிக் கொண்டு (அதுவும் லஞ்சம் தானே!) வாக்களித்தாலும் அவர்களின் பிரதிநிதி கள் இந்தத் தரத்தில்தானே இருப்பார்கள்?

நீயே லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுறே. தேர்தலில் தண்ணியா செலவழிச்ச பணத்தை ஜெயித்ததற்கப்புறம் சம்பாதிக்க ஆசைப்படமாட்டானா?

தேர்தலில் செலவழிச்ச பணத்தை ஒளிவு மறைவு இல்லாமல் தேர்தல் கமிஷனுக்குக் கொடுக்கிறானா? இந்த யோக்கியதையில் தான் இருக்கு நம்ப ஜனநாயகம் என்பார் தந்தை பெரியார்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவைபற்றி எதையும் தெரிந்திராத பொருளாதார நிபுணர்கள் நாட்டின் கொள்கைகளை வகுப்பதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

- நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியாசென்

நல்ல போடு போட்டுள்ளார் அமர்த்தியாசென். இந்தியாவின் பிரதமரும், திட்டக் குழுத் துணைத் தலைவரும் பொருளாதார நிபுணர்கள் என்று சொல்லப்படுபவர்கள்தான். இவர்களின் பெயர் களைச் சொல்லாமல் சொல்லுகின்றார். இவர் களின் கவலையெல்லாம் மேல்தட்டு மக்களைப் பற்றிய கனவுதானே தவிர அடிதட்டு மக்களைப் பற்றியல்ல!

உலகில் பட்டினியால் வாடும் நாடுகளின் தர வரிசையில் இந்தியா 67ஆம் இடத்தில் உள்ளது. 70 சதவிகித மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானம் உடையவர்கள் என்றால், இவற்றைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் பொருளாதார நிபுணர்கள் என்ற அடைமொழியோடு இருந்து என்ன பயன்? அமர்த்தியா சென்னின் கேள்வி சாதாரணமானதல்ல. நெற்றியடி கேள்வி. (Million Dollar Question).
--"விடுதலை” 6-2-2012

தமிழ் ஓவியா said...

புதியன புகுதல் அல்ல! புதியன புகுத்துதல் தேவை!


புதுமையான எண்ணங்கள், புதிய வழித் தடங்களுக்கு, புதிய கண்டுபிடிப்பு களுக்கு, புதிய சிந்தனைகளை அடிப் படையாகக் கொண்ட புத்தாக்க செயலாக் கங்களுக்கு நாம் என்றுமே தயாராக இருக்க வேண்டும்.

பழையன கழிதல் - புதியன புகுதல் என்று படித்தால், பாட்டுக்குப் பதவுரை, கருத்துரை சொன்னால் மட்டும் போதுமா? அதைவிட ஒரு படி மேலே செல்ல வேண் டும்.

பழையன கழிதலுக்காக, புதிய புகுதலுக்காக காத்திருக்காமல், அதை சற்று மாற்றி யோசிக்க வேண்டும்; பழையன கழியட்டும்; புதியன புகட்டும் என்று யோசித்துக் கொண்டிருக்காமல், பழையன கழித்தல் புதியன புகுத்தல் என்பதை கடைப்பிடித்தால்தான் முன் னேற்றம், உண்மையான வளர்ச்சி என்பது ஏற்படும்.

சில நாள் முன்பு வாழ்வியல் கட்டு ரையில் குறிப்பிட்டபடி, ஸ்வீடன் நாட்டு அறிஞர் பிரடெரிக் ஹரேன் எழுதிய வளரும் நாடுகள் என்ற புத்தகத்தில் இந்தக் கருத்தினை மிக மிக அருமையாக விளக்கி, பொருத்தமான எடுத்துக்காட்டு களையும் நம் முன் வைத்துள்ளார். வளர்ந்த நாடுகள் - பெருமிதம் கொண்ட தால் ஒரு தேக்கத்தை அடைந்து விடு கிறார்கள்! இதற்குமேல் போக என்ன விருக்கிறது? என்ற ஒரு கேள்வியை எழுப்பி எல்லையை முடித்து விடு கிறார்கள்!

ஆனால், வளர்ந்து கொண்டுள்ள நாடுகள் (Developing Countries) அந்தப் படி இல்லாமல், வளர வேண்டும் என்ற உந்துதல் காரணமாக, புதிய புதிய முயற்சிகளில், புத்தாக்கத்தை நோக்கிப் பயணம் செய்து, புதுப்புது வழி முறை களைக் காணத் துடித்த வண்ணம் உள்ளனர்!

2008-இல் சீனாவில் உலக விளை யாட்டுப் போட்டி - ஒலிம்பிக் கேம்ஸ் நடத்தினார்கள். அதற்கு அவர்கள் அமைத்த விளையாட்டுத் திடல்கள், உணவு விடுதிகள், அரங்குகள், நீச்சல் குளங்கள், ஸ்டேடியங்கள் ஆகியவை களை (கடந்த அக்டோபரில்) நேரில் சென்று பார்க்கும்போது பிரமித்துப் போனோம் நாங்கள்.

அதுபற்றி சுவையான தகவல்கள் இரண்டு - கட்டடங்கள், அமைப்புக் கட்டு மானங்கள் - இவை ஒருபுறமிருந்தாலும், புத்தாக்க சிந்தனை சிறு விஷயங் களில்கூட அவர்களிடையே உருவாகி, கலந்து கொண்ட போட்டியாளர்களி டையே அது மிகப் பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது என்றே கூற வேண்டும்.

மின்சாரம் சார்ஜ் செய்து கொள்ளுவ தற்குரிய Socket என்ற மின் கருவிகள் பொதுவாக, அமெரிக்க, அய்ரோப்பிய, ஆசிய நாடுகளிடையே அளவீட்டில் வேறுபாடு ஏற்பட்டு, அதற்கேற்ப நாம் மின் கருவிகளை வாங்கி கையில் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது!

உதாரணமாக, அமெரிக்காவில் மின் பயன் பொருள்கள் வாங்கினால், மின் சாரம் 110 வோல்டேஜ் (Voltage அளவு உள்ளதால், அதற்கென ஒரு மின்மாற்றி (Cowerfer) தேடிப் பிடித்து வைத்துத்தான் பயன்படுத்த முடியும்.

ஒலிம்பிக் போட்டியில், பல்வேறு நாட்டினர் கலந்து கொள்ளும்போது, இந்த மின்வசதி அவர்தம் அன்றாடத் தேவைகளுக்கு - கணினியை இயக்கு வது முதல் பல்வேறு அம்சங்களுக்கு இது முக்கியத் தேவை அல்லவா?

இதில் தக்க கவனம் செலுத்தி - சுவரில் அமெரிக்க, ஆசிய பிளக்குகள் (Plugs) மற்ற சீன சாக்கெட்டுகளுடன் (Sockets) பொருந்துமாறு ஒரு புதிய மின்பொருள் வசதியை உருவாக்கி, வந்தவர்களுக்கு மிகப் பெரிய வசதி வாய்ப்பை ஏற்பாடும் செய்தனர்!
சிறிய விஷயம் - பெரிய மகிழ்ச்சியைத் தருவது அல்லவா?

அது போலவே மற்றொன்று, இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் அளிக்கப்பட்டு வந்த மெடல்கள், பழைய முறையிலே அமைக்கப்படுவதற்குப் பதிலாக பழைய முறையில், கூயனந என்ற ஒளியூட்டும் (சீனாவில் இது மிகவும் பிரபலமான கைத் தொழிலும்கூட) வகையை இணைத்து அதிக பிரகாசமான தோற்றத்தை அளிக் கும்படி புதுமையை இணைத்து விட்டார்கள்!

இதன்படி தங்க, வெள்ளை ஜேட் மெடல்கள் வெற்றியாளருக்கு, வெள்ளி, மஞ்சள் ஜேட் இரண்டாம் இடத்தவர் களுக்கு வெண்கலம், பச்சை ஜேட் மூன்றாம் இடத்தவர்களுக்கு என்று மாற்றத்தைப் புகுத்தி, அழகுக்கு அணி செய்தனர்!
வெற்றி ஒளி வீசியது!

இப்படி புதியன புகுத்தல், அனைத்து மக்களுக்கும் இளைய தலைமுறையிலும் செய்யப்பட வேண்டியது மிகவும் தேவை! எண்ணுக! இறங்குக செயலில்!!
-கி.வீரமணி“விடுதலை” 6-2-2012