Search This Blog

24.2.12

திராவிடத்தால் வீழ்ந்தோமா?


டாக்டர் நடேசனார், டாக்டர் டி.எம். நாயர், முத்தையா முதலியார் சிலைகள் நிறுவுவோம்

திராவிடர் கழகத் தலைவரின் கொள்கை அறிக்கை



டாக்டர் சி.நடேசனார் நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

டாக்டர் சி.நடேசனார் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1937).

இந்த மாமனிதருக்கு பார்ப்பனர் அல்லாதார் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. நன்றி உணர்வென்னும் உணர்வின் கண்ணீர்த் துளிகளால் மாலை சூட்டி நம் மரியாதை உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.

திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்று நெஞ்சில் ஈரமின்றி, வரலாற்று அறிவுமின்றி நுனிப்புல் மேயும் சிலர் நம்மினத்திற்குக் கிடைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

நன்றி விசுவாசம் இல்லையே!

நன்றி விசுவாசம் காட்டுவதும் நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்றார் தமிழினப் பாதுகாவலராம் தந்தை பெரியார். இந்தக் கண்ணோட்டத்தில் இந்த நன்றி கெட்ட மனிதர்களையும் புறந்தள்ளி நாம் நடந்து வந்த பாட்டையை ஒரு கணம் எண்ணுவோம்.
முதன்மையான மனிதர் நடேசனார்

1912 இல் - இன்றைக்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனர் அல்லாதா ருக்கென ஓர் அமைப்பு வேண்டும் என்று நினைத்ததே கூட சாதாரணமானதல்ல.

அப்படி நினைத்த பெருமகனார்களில் டாக்டர் சி.நடேசனார் முதன்மையான மனிதர். சென்னை பெரிய தெருவில் உள்ள அவரது இடமே அதற் கான பிரசவ அறையாகும்.

சென்னை அய்க்கிய சங்கம் (Madras United League) உருவாக்கப் பட்டது. அதுவே பின்னர் 1913-இல் திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

பிற்காலத்தில் 1916 நவம்பர் 20 இல் தென்னிந் திய நல உரிமைச் சங்கமாகிய நீதிக்கட்சி தோற்றுவிக்கப் பட்டதற்கான உந்து சக்தி டாக்டர் சி.நடேசனார் அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிட சங்கமேயாகும்.

அதனால்தான் நீதிக்கட்சி என்பதை திராவிடர் சங்கத்தை நிறுவிய நடேசனாரின் குழந்தை என்றார் கே.எம்.பாலசுப்பிரமணியம்.

தியாகராயரையும், நாயரையும் இணைத்த பாலம்

காங்கிரஸ்காரர்களாக இருந்து தங்களுக்குள் மாறுபட்டு நின்ற வெள்ளுடை வேந்தர் பி.தியாக ராயரையும், டாக்டர் டி.எம். நாயரையும் இணைக் கும் பாலமாக இருந்தவரும் டாக்டர் சி.நடே சனாரே!

இந்த மும்மூர்த்திகளும்தான், திராவிடர் இயக்கத்தின் முக்கிய மூன்று தூண்கள்!

அந்தக் காலத்தில் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமானால் பெருநகரங்களாகிய சென்னை, திருச்சியைத் தேடித்தான் செல்லவேண்டும். ஆனால் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு விடுதிகள் கிடையாது. இருந்த விடுதிகளும் பார்ப்பனர்களுக்கானது. அங்கே பார்ப்பனர் அல்லாதார் தங்குவதற்கு அனுமதி கிடையாது. வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு எடுத்து வரலாம்.

இந்த நிலையில் பார்ப்பனர் அல்லாத மாணவர் தங்கிப் படிப்பதற்கென்றே ஒரு விடுதியை ஏற்படுத் தினார் (1916) டாக்டர் நடேசனார். இந்த ஆக்கபூர்வமான - ஆதார சுருதியான செயலை செய்த இந்த ஒன்றுக்காக மட்டுமே அந்தப் பெருமகனுக்கு நம் நெஞ்சத்தில் நிரந்தர இடத்தை அளிக்க வேண்டும்!

அந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் துணை வேந்தராக விளங்கிய டி.எம்.நாராயணசாமி பின்னை, பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார்.

இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக வந்த ஆர்.கே.சண்முகம் (செட்டியார்) பாரிஸ்டர் ரங்கராமானுஜ (முதலியார்) போன்றவர்கள் கூட இந்த இல்லத்தில் தங்கிப் படித்தனர் என்கிறார் திராவிடப் பெருந்தகை தியாகராயர் என்ற நூலில் மயிலாடுதுறை கோ. குமாரசாமி அவர்கள்.

டி.எம்.நாயர் ஊட்டிய ஊக்கம்

ஒவ்வொரு ஆண்டும் பட்டம் பெற்று வெளி யேறும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தியதும் திராவிடர் சங்கமே.

டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்கள் எல்லாம் உரையாற்றி உற்சாகப்படுத்தியுள்ளனர். அப்பொ ழுது ஒரு முறை டாக்டர் நாயர் “Awake, Arise or Be Forever Fallen” என்று கூறியிருந்தார்.

பார்ப்பனர்கள் அல்லாத பட்டதாரிகளே, விழியுங்கள்! எழுங்கள்! இன்றேல் நீவிர் வீழ்ச்சி அடைவீர்! என்று எழுச்சிக் குரல் கொடுத்தார் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு. உளவியல் ரீதியான தூண்டுதலையும் எழுச்சியையும் ஊட்டி நின்றார்.
1912 இல் நம் நிலை என்ன?

1912 இல் பார்ப்பனர் அல்லாதாருக்கான ஓர் அமைப்பைத் தொடங்கிய கால கட்டத்தில் நம் நாட்டின் நிலை என்ன?

டெபுட்டி கலெக்டர்கள் 55ரூ , சப் ஜட்ஜ்கள் 83ரூ, மாவட்ட முன்சீப்புகள் 72ரூ பார்ப்பனர் களாகவே இருந்தனர் என்ற நிலையை நினைத் துப் பாருங்கள்.

1901 ஆம் ஆண்டில் கல்வியின் நிலை என்ன?

பார்ப்பனர்கள் (தமிழ்நாடு) 73.6% }

தெலுங்குப் பார்ப்பனர்கள் 67.3%

நாயர்கள் 39.5%

செட்டியார் 32%

இந்தியக் கிறிஸ்தவர் 16.2%

நாடார் 15.4%

பலிஜா நாயுடு, கவரை 14.3%

வேளாளர் 6.9%

கம்மா 4.8%

காப்பி, ரெட்டி 3.8%

வௌமா 3.5%

(Census of India, Madras 1921 XIII Part I, 128-129)

இந்தப் புள்ளி விவரங்களை அறிந்தால்தான் இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதாரின் வளர்ச் சிக்கு எந்த இயக்கம் அடிப்படை? எந்தத் தலைவர்கள் காரணம்? என்பதை ஒழுங்காக அறிய முடியும்.

திராவிடத்தால் வீழ்ந்தோமா?

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறி பார்ப்பனர்களுக்குச் சேவை செய்யத் துடிக்கும் பேர்வழிகளின் அடையாளத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை பற்றிய ஒரு புள்ளிவிவரம் இதோ:

திறந்த போட்டி 460 இடங்கள்

பிற்படுத்தப்பட்டவர்கள் 300 பேர்

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 72 பேர்

தாழ்த்தப்பட்டவர்கள் 18 பேர்

முசுலிம்கள் 16 பேர்

முற்படுத்தப்பட்டோர் 54 பேர்

200-க்கு, 200 கட் ஆஃப் மதிப் பெண்கள் பெற்றவர்கள் 8 பேர். இதில் பிற்படுத்தப்பட்டவர் 7 பேர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ஒருவர்.

இன்றைக்குச் சென்னைப் பல்கலைக் கழகம் உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல் லாத மாணவர்களின் எண்ணிக்கை 1,45,450 (89 விழுக்காடு) என்று துணைவேந்தர் முனைவர் திருவாசகம் சொன்னாரே! (20-11-2010). இந்த வளர்ச்சிக்கு அடித்தள மிட்டு வளர்த்தது திராவிடர் இயக்கம்தானே! மறுக்க முடியுமா?

பார்ப்பனர்களின் ஆதிக்கபுரியாக இருந்த உத்தியோக மண்டலத்துக்கு முடிவு கட்ட பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கொண்டு வரப்படக் காரணமாக இருந்தவரும் டாக்டர் சி.நடே சனாரே!

அதிர்வை ஊட்டிய நடேசனாரின் தீர்மானம்

பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விகிதாச்சார அளவுக்கு உத்தியோகம் கிடைக் கும் வரையில் இனிமேல் அரசாங்க உத்தி யோகங்கள் யாவும் பார்ப்பனரல்லாதாருக்கே கொடுக்கப் படவேண்டும் என்ற தீர்மானத்தை அன் றைய சென்னை மாநில சட்டசபையில் கொண்டு வந்து சபையையே அதிர வைத்த சமூக நீதியின் சண்டமாருதம் நடேசனாரே!

பெண்களுக்கு வாக்குரிமை வந்தது எப்படி?

பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டதும் நீதிக் கட்சி ஆட்சியிலேயேதான்! மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பன சதி வலையை கிழித்தெறிந்ததும் நீதிக் கட்சியே!

தேவதாசி முறை ஒழிப்பு, இந்து அறநிலையத் துறைப் பாதுகாப்புச் சட்டம் இவற்றைக் கொண்டு வந்ததும் திராவிடர் இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சியே!

நீதிக்கட்சியின் சாதனைக் குவியல்கள்

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை (1920-23) சாதனைகள் பற்றி தனி அரசாணையே வெளியிடப்பட்டதே! (ஆணை எண் 116).

  • பொதுத் துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன

  • துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர்களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.

  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

  • தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

  • *தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.

  • தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. * குறவர்களை எல்லா வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

  • கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25- நிதி உதவிகள் (ஸ்காலர்ஷிப்புகள்) அளிக்கப் பட்டன.

  • ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப் பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற சாதியினரிடமிருந்து பாதுகாப்பு - அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன. தாழ்த்தப்பட்டவர் களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.

  • ஆதி திராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.

  • அருப்புக் கோட்டையில் குறவர் பையன் களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப் பட்ட தொகையை உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.

  • மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.

  • கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.

  • நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்து வோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

  • பி. அண்டு சி வேலை நிறுத்தத்தின் விளைவு களால் ஏற்பட்ட பாதிப்பு களுக்கு உதவிகள் செய்யப்பட்டன.

  • தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டு கோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.

  • ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டு கோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.

  • குடிப் பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப்படுத்த ஆணை வெளி யிடுதல்.

  • ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.

  • தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.

  • மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

  • சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளை களுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

  • கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

  • உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும் போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.

  • மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (Stipend) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

  • *அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டு தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.

  • *தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

  • *சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப் பட்டு இருந்தது.

  • *கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.

  • *தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.

    அரசு ஆணைகளின் தொகுப்பு:

1. பெண்களுக்கு வாக்குரிமை அரசாணை எண். 108 நாள்: 10.05.1921

2. பஞ்சமர் என்ற சொல் நீக்கப் பெறல் - ஆதிதிராவிடர் என அழைக்கப்பெறல். அரசாணை எண். 817 நாள் 25.3.1922

3. கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைத்தல். அரசாணை எண். 536 நாள் 20.5.1922.

4. கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் அரசாணை எண். 849 நாள் 21.6.1923.

5. தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க வேண்டும். அரசாணை எண். (அ) 205 நாள்: 11.2.1924; (ஆ) 1825 நாள்: 24.9.1924.

6. இந்து சமய அறநிலையச் சட்டம் அரசாணை எண். 29 நாள். 27.01.1925.

7. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பது குறித்த ஆணை அரசாணை எண். (அ) 636 நாள்: 20.5.1922. (ஆ) 1880 நாள் 15.9.1928

8. வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அரசாணை எண்.226 நாள் 27.2.1929

9. சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல் அரசாணை எண். 484 நாள் 18.10.1929.

எடுத்துச் சொன்னால் ஏடு தாங்காது.

69 சதவிகிதம் வரை...

இந்தி திணிப்பு முறியடிப்பு, தமிழ்மொழியின் மறுமலர்ச்சி (பெயர்கள் சூட்டுவது உட்பட) செம்மொழி, சுயமரியாதைத் திருமணச் சட்டம், சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், 69 சதவிகித இடஒதுக்கீடு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
திராவிடத்தால் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா என்பதை நேர்மையுடன், அறிவு நாணயத்துடன் சிந்தித்துப் பார்க்கட்டும்!

தந்தை பெரியாரின் இரங்கல்

திராவிட இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய பெருமான் சி. நடேசனார் தமது 62ஆவது வயதில் மறைவுற்றார். அப்பொழுது தந்தை பெரியார் எழுதினார் குடிஅரசில் (21.2.1937).

டாக்டர் நடேச முதலியார் நலிந்தார் என்ற சேதி கேட்டு நம் நாட்டில் வருந்திடாத பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி, அவருக்கு நன்றி விசுவாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவனும் எந்நாட்டிலும் இருக்க மாட்டான். தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது, வஞ்சகம் அற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவ தும் மூன்றாவதுமாகும்.

சூதற்றவனும் - வஞ்சகமற்றவனும் உலகப் போட்டியில் ஒரு நாளும் வெற்றி பெற மாட்டான் என்கிற தீர்க்க தரிசன ஆப்தவாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த நடேசன் அவர்கள், தனது தொண்டிற்கும், ஆர்வத்திற்கும், உண்மையான கவலை கொண்ட ஊக்கத்திற்கும் உள்ள பலனைத் தம் சொந்தத்திற்கு அடையாமல் போனதில் நமக்குச் சிறிதும் ஆச்சரியமில்லை. ஏன்? தனக்கென வாழாதார் தான் பிறர்க்கென வாழ முடியும். ஆதலால் நடேசன் அவர்களால் தமிழ் மக்களுக்கு எண்ணரிய நன்மைகள் ஏற்பட்டிருப்பதை அவரது எதிரிகளும் மறுக்கார்.

கொள்கை வீரர் - தன்னலமற்ற பெருந்தகை நடேசனார் நலிந்ததாலேயே தமிழ் மக்களுக்கு உழைக்கும் தயாளர் இல்லை என்ற நிலை ஏற்படக் கூடாது என்பது நமது அவா. ஆதலால் ஒரு நடேசன் நலிந்ததால் நாம் நலிவு கொண்டு விடாமல் ஆயிரம் நடேசனார் காணுவோமாக! நாம் ஒவ்வொருவரும் நடேசனாக நாடுவோமாக! என்று எழுதினார் தந்தை பெரியார்.

தலைநகரில் நடேசனாருக்குச் சிலை!

திராவிடர் இயக்கத்தின் பிரசவ அறையாக இருந்த டாக்டர் நடேசனாருக்கு தலைநகரில் ஒரு சிலை இல்லை. திராவிடர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டு காணும் இவ்வாண்டிலாவது அவரது சிலையை - அவர் வாழ்ந்து வந்த சென்னை திருவல்லிக்கேணி வட்டாரத்தில் நிறுவிட வேண்டும் - அது நமது கடமை. அதே போல தென்னாட்டு லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் போற்றப் பெற்ற டாக்டர் டி.எம். நாயர், முதல் வகுப்புரிமை ஆணையக் கொண்டு வந்து செயல்படுத்திய சிற்பி எஸ். முத்தையா முதலியார் ஆகியோர்களின் சிலைகள் தலைநகரில் நிறுவப்பட வேண்டும். இவ்வாண்டில் நீதிக்கட்சி - திராவிடர் இயக்கத் தொடர்பான முக்கிய நூல்களும் வெளியிடப்படும். இதற்கான முயற்சியில் திராவிடர் கழகம் மேற்கொள்ளும். திராவிடர் சங்க நூற்றாண்டு விழாவையும் நாடு தழுவிய அளவில் கொண்டு சென்று - திராவிடர் இயக்கத்தையும், திராவிடர் என்ற இனப்பெயரையும் சிறுமைப்படுத்தும் சக்திகளை முறியடிப்போம்!
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம்!

நீதிக் கட்சியின் பவள விழாவினை 1991இல் சேலத்தில் சிறப்பாக நடத்திய திராவிடர் கழகம் இதனையும் உரிய வழியில் கொண்டாடும்.

வாழ்க நடேசனார்! வளர்க திராவிட இயக்க இலட்சியம்!

---------------கி.வீரமணி ----தலைவர், திராவிடர் கழகம்


குறிப்பு: இந்த அறிக்கையும் தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் அறிக்கையும் ஒரே நேரத்தில் வெளிவருவது மகிழ்ச்சி; உண்மையான திராவிடர் இயக்கத்தினர் ஒரே மாதிரியாகத்தான் சிந்திப்போம் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டே!

------------------ "”விடுதலை”18-2-2012


15 comments:

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் பதை பதைப்பது - ஏன்?



இன எழுச்சிக்கு எடுக்கும் விழா! என்னும் தலைப்பில் தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் இன்றைய முரசொலியில் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அதில் டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் சென்னை ஸ்பர்டங் சாலையில் ஆற்றிய புகழ் மிக்க உரையிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக்காட்டியுள்ளார்.

அதற்கு இன்றைய தினமலர் முதல் பக்கத்தில் எப்படி தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டுள்ளது தெரியுமா?

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்! - கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் என்பதுதான் தினமலரின் முதல் பக்கச் செய்தி.

டாக்டர் டி.எம். நாயர் சொன்னதைத்தான் கலைஞர் எடுத்துக்காட்டியுள்ளார். அதனைக் கலைஞர் அவர்கள் எழுதுவதுபோல் எடுத்துக்காட்டுவதுதான் தினமலரின் நோக்கம்; அப்படியே மானமிகு கலைஞர் அவர்கள் எழுதியிருந்தாலும், பேசியிருந்தாலும் அதில் என்ன தவறு? என்ன குற்றம்?

மானமிகு கலைஞர் அவர்கள் நடந்து வந்த பாதை சுயமரியாதை இயக்கப் பாதை - பகுத்தறிவுப் பாதை - இனமானப் பாதை.

பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் வாழும் நாடு கடும்புலி வாழும் காடு என்று பார்ப்பன நீதிபதிகள் முன்னாலேயே கர்ச்சித்த தந்தை பெரியார் அவர்களின் பாதை.

ஆரிய மாயை எழுதிய அண்ணாவின் பாதை. பார்ப்பனர்கள் இன்னும் பூணூல் அணியவில்லையா? மாநாடு கூட்டி ஆவணி அவிட்டத்திற்கு (பூணூல் அணிவதற்கு) அரசு விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லையா?

இன்றைக்கும் தாழ்த்தப்பட்டோர் உள்பட கோவிலில் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், அதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதி மன்றம் செல்லவில்லையா?

கடவுளுக்கு மேலே பிராமணன் என்று அருந் தொண்டாற்றிய அந்தணர்கள் எனும் நூல் வெளியீட்டு விழாவில், அவாளின் லோகக் குரு காஞ்சி சங்கராச் சாரியார் - காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் புகழ் ஜெயேந்திர சரஸ்வதி பேசவில்லையா?

மானமிகு கலைஞர் அவர்களோ, தி.மு.க.வினரோ பார்ப்பனர்கள்பற்றி அதிகம் பேசாமல் இருந்திருக்கலாம்; தினமலர்கள் மீண்டும் அழுத்தமாகப் பேச வைத்திருக்கின்றன. அதற்காக தினமலருக்கு நன்றி! நன்றி!!

தினமலரில் முதல் பக்க செய்தி வர வேண்டு மானால், பார்ப்பனர்களின் - ஆதிக்கத்தை, பித்த லாட்டத்தைத் தோலுரிக்க வேண்டுமோ! --"விடுதலை” 24-2-2012

தமிழ் ஓவியா said...

நீதிபதி வர்மா அப்படி என்னதான் கூறினார்?

ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், இந்துத்துவாவாதிகளும் ஒன்றை விடாமல் சொல்லிக் கொண்டுள்ளனர். கிளிப்பிள்ளைப் பாடம்போல ஒப்புவித்துக் கொண் டுள்ளனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ். வர்மா அவர்கள் இந்துத்துவா என்பது ஒரு மதம் அல்ல. கலாச்சாரம் - ஒரு வாழ்க்கை வழிமுறை என்று கூறிவிட்டதாகச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடுவதுபற்றி சென்னை உயர்நீதிமன்றம் கூறிய சரியில்லாத தீர்ப்பை வரவேற்கும் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் ஆசிரியர் நீதிபதி வர்மா கூறியதாகத்தான் எடுத்துக்காட்டுகிறார்.

உண்மை என்னவென்றால் அதே நீதிபதி ஜே.எஸ். வர்மா அவர்கள் தன் தீர்ப்புக் குறித்து விளக்கமும் அளித்தார்.

இந்துத்துவா குறித்து தாம் கூறிய கருத்து அரசியல்வாதிகளால் திரித்துக் கூறப்பட்டு விட்டது (இந்து 6.2.2003) என்று கூறியதை சத்தம் போடாமல் கோழியின் கழுத்தைத் திருகியதுபோல அடக்கி மடக்கி அமுக்கி விட்டார்களே!

இந்தப் பார்ப்பன சதியும், வஞ்சகமும் யாருக்குத் தான் வரும்?
"விடுதலை” 24-2-2012

தமிழ் ஓவியா said...

ஆண்டு முழுவதும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா!


தொடக்க விழாவுக்கு (பிப்.27) வாரீர்! வாரீர்!! தி.மு.க. தலைவர் கலைஞர் அழைப்பு!

சென்னை, பிப்.24-திராவிட இயக்க நூறாம் ஆண்டு தொடக்க விழா வரும் 27ஆம் தேதி மாலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. அவ்விழாவிற்கு வருகை தருமாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள கடிதம் வருமாறு: உடன்பிறப்பே, திராவிட இயக்க 100ஆம் ஆண்டு தொடக்க விழா வரும் 27-2-2012 அன்று நமது தலைமைக் கழகத்தின் சார்பாக சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் மாலை 5 மணியளவில் எனது தலைமையில், நமது இனமானப் பேராசிரியர் முன்னிலையில் நடை பெறும் என்ற அறிவிப்பு வெளிவந்திருப்பதைக் கண்டிருப்பாய்! அந்தத் தொடக்க விழாவில் தமிழர் தலைவர், இளவல், கி. வீரமணி அவர்களும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, திரு.மோகன் அவர்களும், பேராசிரியர் நன்னன் அவர்களும், பேராசிரியர் தம்பி சுப. வீரபாண்டியன் அவர்களும் உரையாற்றவுள்ளனர். திராவிட இயக்கத்தின் தோற்றம் குறித்தும், அதன் மேன்மை பற்றியும் விளக்கிடவிருக்கிறார்கள்.

ஒருவன் உள்ளவரையில் - குருதி

ஒரு சொட்டு உள்ளவரையில் திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச் சிறிதும் பின் னிடல் இல்லை! என்றார் பாவேந்தர் பாரதிதாசன். 1856இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற அரிய ஏட்டை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற மொழி நூல் அறிஞர் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் என்று குறிப் பிட்டார். தென்னிந்திய மொழிகளையும், அவற் றைப் பேசும் மக்களையும் குறித்து எழுதிய போது, திராவிடர் என்ற பெயரை அவர் தான் முதன் முதலாக உபயோகித்தார் என்ற குறிப்புகளும் உள்ளன. தமிழுக்குத் தொண்டாற்றி ஒப்பிலக்கணம் தந்த அந்த கால்டுவெல் வாழ்ந்து மறைந்த இடை யன்குடி இல்லத்தை நினைவு இல்லமாக ஆக்கிட கழக ஆட்சியிலேதான் ரூ. 18.50 இலட்சம் ஒதுக்கீடு செய்து 4-2-2010 அன்று அரசாணை வெளியிடப் பட்டது. அதன்படி அந்த இல்லம் புதுப்பிக்கப் பட்டு, கால்டுவெல் அவர்களின் மார்பளவு வெண்கலச் சிலையும் நிறுவப்பட்டு - 17.2.2011 அன்று காணொலிக் காட்சி வாயிலாக என்னால் திறந்து வைக்கப்பட்டன.

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
மனோன்மணியம் எழுதிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள், தனது பாடலான,
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொ ழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கச் சிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதில்சிறந்த திரவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோ லனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
என்பதில் திரவிடநல் திருநாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் காலம் 1855 முதல் 1897 ஆகும்.

1912ஆம் ஆண்டு தோன்றிய அமைப்பான சென்னை அய்க்கிய சங்கம் என்ற மெட்ராஸ் யுனைட் டெட் லீக் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழா 1913ஆம் ஆண்டு டாக்டர் நடேசனாரின் மருத்துவ மனைத் தோட்டத்திலே நடைபெற்றபோது, சங்கத்தின் பெயர் அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்ப தாக இல்லை, எனவே அந்தப் பெயரை மாற்ற வேண்டுமென்று ஒருசிலர் பேசிய நிலையில்தான், பெயரை எப்படி மாற்றலாம் என்று சில கருத்துக்கள் கூறப்பட்டன. அப்போது டாக்டர் நடேசனார் தான், பார்ப்பனர் என்ற ஒரு சாதியைக் குறிப்பிட்டு, அச்சாதி அல்லாத வர்கள் என்று நாம் ஏன் சொல்ல வேண்டும்? நமக்கென்று ஓர் இனம் இல்லையா? அதற்கென்று ஒரு பெயர் இல்லையா? என்று கேட்டு, திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம், ஏனென்றால் நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே? என்று முடி வினைத் தெரிவித்தார்கள். அந்த முடிவினை அனை வரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.

டாக்டர் நடேசனாரின் கவனத்தை அந்த நேரத்தில் கவர்ந்தவர்களாக வெள்ளுடை வேந்தர் தியாக ராயரும், டாக்டர் டி.எம். நாயரும் இருந்தார்கள். ஆனால், இவர்கள் இருவரும் சென்னை மாநக ராட்சியில் நடைபெற்ற ஒரு பிரச்சினை காரணமாக வேறுபட்டு பேச்சு வார்த்தையின்றி இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அவ்விருவரையும் இணைத்து, ஒருசேரச் செயலாற்றச் செய்ய வேண்டுமென்று டாக்டர் நடேசனார் கருதினார்.

பிறப்பினால் உயர்வு - தாழ்வு திராவிடர் மரபன்று

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி தியாகராயர் திராவிட இனத்தின் மீது மாறாத அன்பு கொண்டவர். தொடக்கத்தில் தியாகராயர் பெரும் வைதீகராக இருந்தார். தன் இல்லத்திலேயே சிலை வைத்து புரோகிதரைக் கொண்டு பூஜை புனருத்தாரணம் எல்லாம் செய்து வந்தார். அப்படிப்பட்டவர் டாக்டர் நடேசனாருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, வைதீகத்திலிருந்து விலகி வந்து, பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பில் அதிகத் தீவிரம் காட்டத் தொடங்கினார். அப்படிப்பட்ட தியாகராயர் 1917ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண முதலாவது நீதிக் கட்சி மாநாட்டில் உரையாற்றும்போது, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று. திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்துதித்தோர் யாம் என்று பெருமை பேசினாரில்லை. பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பித் தோரும் நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டி னோரும் ஆரியரே.

அவ்வருணாச்சிரமக் கோட் டையை இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார், முடியவில்லை! பின்னர் வந்த பற்பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர், தோற்றனர். இராமானுசரும் புரோகிதக் கொடுமை களைக் களைந்தெறிய செல்லும் வழியெல்லாம் முயன்றார், தோல்வியே கண்டார்! பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை - அண்டாமை - பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையை தகர்த்தெறிய, இதுவே தக்க காலம்! இதுவே தக்க வாய்ப்பு! என்று முழங்கினார்.

தமிழ் ஓவியா said...

பி அண்ட் சி மில்லில் அப்போது ஒரு வேலை நிறுத்தப் போராட்டம். அதுகுறித்து தியாகராய ருக்கும், ஆளுநராக இருந்த வெல்லிங்டன் பிரபுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, அதில் ஆத்திரமடைந்த தியாகராயர் வெளியே வந்து விட்டார். அப்போது முதலமைச்சர் பதவியில் இருந்த பனகல் அரசர் தியாகராயர் வெளியே வந்ததைக் கேள்விப்பட்டு, உடனடியாக ஆளுநரைச் சந்தித்து, எம் தலைவரிடம் மன்னிப்புக் கேட்காவிட்டால், எங்கள் மந்திரிசபை ராஜினாமா செய்யும் என்று தெரிவித்தாராம். ஆளுநரும் அவ்வாறே உடனடியாக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாராம்.

மக்களை உணர்ச்சி கடலில் ஆழ்த்தும் டி.எம்.நாயரின் பேச்சுகள்

டாக்டர் நடேசனாருக்கு துணை நின்ற மற்றொரு பெருமகன் டாக்டர் டி.எம். நாயர். ஆரியர் வருகையிலிருந்து அவர் பேச்சைத் தொடங்கினால், இடையிலே புராண, இதிகாசக் கதைகளையெல்லாம் கூறி மக்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தக் கூடிய பேச்சாளர். தென்னகத்தில் ஒன்றிரண்டு தவிர, மற்ற எல்லாப் பதவிகளிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து விட்டார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பட்ட ஒன்பது இந்தியரில், எட்டு பேர் பார்ப்ப னர்கள், ஒருவர் நாயர். உதவி கலெக்டர்கள் 146 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள். 125 மாவட்ட நீதிபதிகளில் 93 பேர் பார்ப்பனர்கள். மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள், இத்தனை வேலைகளில் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று இந்தப் புள்ளி விவரங் களை அடுக்கிச் சொல்லி, இந்த அநீதியை இப்படியே தொடர விடலாமா? என்று கர்ச்சிப்பார். டாக்டர் டி.எம். நாயர் 7-10-1917 அன்று சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும் - சர். பிட்டி. தியாகராயர் 20-12-1918 அன்று நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம் என்ற அறிக்கையும் - திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் என்று போற்றப்படுகின்றன.

டாக்டர் நாயர் அவர்களின் புகழ் பெற்ற அந்த உரையில், வீரத் திராவிடர்களே! என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். லண்டனிலும், சென்னையிலும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்கிறார்கள். நான் எம்.டி. பட்டதாரி. எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது. என் செலவு போக, என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம், என்னருமைத் தலைவர் திரு. பிட்டி தியாகராய வள்ளல் அவர்களைப் போன்று, உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப்படுகிறேன். திராவிடத் தோழர்களே! நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியர்களுக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள்! கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள்! நம் பத்திரிகைகள் வளர்ந்தால்தான், நம் மக்களுக்குப் பலம் வரும். நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும். உண்மை மக்களாட்சி உதயமாகும். என்று முழங்கியதைத் தான் நான் இப்போதும் திரும்பக் கூற விரும்பு கிறேன்.

தமிழ் ஓவியா said...

திராவிட இயக்க வரலாறு என்ற முரசொலி மாறன் எழுதிய நூலில், உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால் உடனே தனது நியமன அதிகார வரம்பிற்குட்பட்ட பிற பதவி களிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும் என்று எழுதியதோடு அதற்கு உதாரணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். வருவாய்த்துறை வாரியம் ஒருமுறை ஆய்வு நடத்திய போது ஜி. வெங்கட்ரமணையா என்கிற உயர் பதவி வகித்த பிராமணருக்கு உறவினர்களும், தொடர்புடையவர்களும் மாத்திரம் அந்தத் துறையில் 49 பேர் இருந்தது தெரியவந்ததாம்.

வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம் 1890-களில் செங்கற்பட்டிலும், சென்னை நகரிலும் தோன்றிய வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம் (புகழ் பெற்ற சர். பாஷ்யம் அய்யங்கார் வகையறா) ஆங்கிலேயர் ஆட்சியில் கிடைக்கும் உத்தியோகங்களையெல்லாம் நன்கு நுகர்ந்தது. 1861லிருந்து 1921 வரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வர்களில் அய்வர் சட்டசபை உறுப்பினர்களாகவும், இருவர் அட்டர்னி ஜெனரல்களாகவும், மூவர் உயர்நீதி மன்ற நீதிபதிகளாகவும், மூவர் ஸ்மால் காஸ் கோர்ட் நீதிபதிகளாகவும், மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தில் உதயமான ஆட்சியில் ஒருவர் உள்துறை அமைச்சராகவும், மூவர் மாநில அரசின் துணை செகரட்டரி களாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் பலர் தாசில்தாரர்களாகவும், பப்ளிக் பிராசிகியூட்டர் களாகவும், டெபுடி கலெக்டர்களாகவும் இருந் தனர் என்று தம்பி மாறன் அந்த நூலில் குறிப் பிட்டுள்ளார்.

தொடக்க விழாவுக்கு...

அந்த உண்மை வரலாறுகளையெல்லாம் திராவிடர்களுக்கு - தமிழர்களுக்கு நினைவு படுத்தும் வகையில்தான் திராவிட இயக்க 100ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நம்மைப்பற்றி புரிந்துகொள்ள - தெரிந்து கொள்ளத்தக்க பல விவரங்களை சான் றோர் பலர் விளக்கிட உள்ளார்கள். திராவிட இயக்க 100ஆம் ஆண்டு விழாவினை இந்த ஆண்டு முழு வதும் கொண்டாடப் போகிறோமே, தொடக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என்று நினைத்து விடக் கூடாது! ஏனென்றால் இது நம் இன எழுச்சிக்கு எடுக்கும் விழா! இடையில் இரண்டு நாட்கள்தான்! 27ஆம் தேதியன்று நேரில் சந்திப்போம்!

அன்புள்ள,
மு.க.
(நன்றி : முரசொலி 24.2.2012

தமிழ் ஓவியா said...

நீர் பொங்குமாம்!
எழுத்துரு அளவு


12 வருடத்திற்கு ஒருமுறை மகாமகக் குளத்தில் நீர் பொங்கி வருவதாக நேரில் பார்த்ததாகவே சிலர் கூறுகிறார்கள்.

தண்ணீரை நெருப்பில் வைத்துக் காய்ச்சினா லல்லது பொங்குகிற வஸ்துவை அதில் போட்டாலல் லது தண்ணீர் எப்படிப் பொங்கமுடியும்? மாமாங்கத் தினத்தன்று தண்ணீர் குளத்தில் விட்டு வைத்த அளவுக்கு மேல் அதிகமாகக் காணப்படுவதாக சில பார்ப்பனர்கள் கதை கட்டி விடுகிறார்கள்.

மக்களைத் தண்ணீருக்குள் இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி பிறகு தண்ணீரை பார்த்தால் அப்போது அது பொங்குகிறதா இல்லையா என்பதின் உண்மை கண்டுபிடிக்க முடியும். அப்படிக்கில்லாமல் பதினாயிரக் கணக்கான மக்களைக் குளிக்கவிட்டு, அதன் பிறகு தண்ணீர் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படி தண்ணீர் என்றே சொல்ல முடியும்?
குளிக்கப்போகும் மக்கள் அந்தக் குளிரில் தங்கள் சிறுநீரைக் கழிக்க அந்தக் கூட்டத்தில் குளக்கரையில் எங்கு இடம் காண முடியும்?

ஆதலால் குளிக் கிறவர்கள் அவசர அவசரமாகத் தண் ணீரில் இறங்கி அங்கு சிறுநீர் கழிக்க ஏற்பட்டு விடுவதன் மூலம் குளத்தின் தண்ணீர் பெருகி இருக்கலாம்.

அந்த சிறுநீரின் தன்மையால் குளத்தில் இறங்குவதாலும் தண்ணீர் உயர்ந்து இருக்கலாம். இந்த மாதிரி காரணங்களால் தண்ணீர் மட்டம் 4, 2 படிக்கட்டுகளுக்கு உயர்ந்து விட்டால், அதைப் பொங்கிற்று என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று கேட்கிறோம்.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

அப்பா, ஒரு சந்தேகம்!



மகன்: ராஜகோபுரத்தின் முன்னே தீ அணைப்பு மோட்டார் நிறுத்தி வைத்திருக்கிறார்களே எதற்கு?

தகப்பனார்: தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கு.

மகன்: சாமி நெருப்பு பிடிக்காமல் பார்த்துக் கொள்ளாதா?

தகப்பனார்: (மகனை முறைத்து பார்க்கிறார்.)

மகன்: (பயந்து கொண்டு) அப்பா.

தகப்பனார்: என்னடா?

மகன்: என் மேலே கோவிக்காமல் சொல்லுப்பா.

தகப்பனார்: சரி என்னத்தை கேக்கப்போற?

மகன்: சாமி தூக்கி வரும்போது பக்கத்திலேயே ஏராளமான போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு வருகிறார்களே எதுக்கப்பா?

தகப்பனார்: அட, இது தெரியலியே உனக்கு! சாமிக்கு போட்டு வைத்திருக்கிற தங்கம்,

வைரம், இவைகளைக் கொண்டு செய்த விலை மதிப்பு போட முடியாத நகைகளை

திருடர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு போகாமல் பாதுகாத்துக் கொள்ள வருகிறார்கள்.

மகன்: சாமியே பார்த்துக் கொள்ளாதா அப்பா?

தகப்பனார்: சரி, சரி நீ வீட்டுக்கு வாடா உன் தோலை உரித்துவிட்டு மறு வேலை

பார்க்கிறேன்.

- வி.வாசுதேவன், திருவொற்றியூர், சென்னை

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...



பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன்வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும். இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் கூற்று!



மதாசாரியார்கள், குருக்கள், இறைவன் புதல்வர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், முனிவர்கள் இவர்கள் எல்லாம் உலகத்திற்கு ஒரு சிறிதும் பயன்படாதவர்கள். அவர்களில் பலர் தொழில் செய்வதில்லை; கைத் தொழில் செய்யவில்லை. பிறருடைய உழைப்பால் அவர்கள் வயிறு வளர்த்து வந்தார்கள். பிறர் அவர்களுக்காக பாடுபட்டால், அவர்கள் பிறரைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள். மக்களுக்கு இதோபதேசம் செய்யவே கடவுள் தங்களை படைத்ததாக அவர்கள் சொல்லிக் கொள்வார்கள் இவர்களே இழிவானவர்கள், என்றும் துன்பத்தை உண்டாக்கக் கூடியவர்கள், அயோக்கியர்கள்.

தமிழ் ஓவியா said...

இளைஞர்களே, உங்களுக்குத் தெரியுமா?

நூற்றாண்டு காணும் திராவிடர் இயக்கம் - ஆட்சி - சாதனைகளைப் பாரீர்!

கல்விக் கண்களைத் திறந்த ஆட்சி -இயக்கம் (கட்சி)

கட்டாய ஆரம்பக் கல்வி, செகண்டரி (உயர்நிலை) மற்றும் கல்லூரிக் கல்வி இவைகளை அனைவருக்கும் குறிப்பாக பார்ப்பனரல்லாத - திராவிடர்கள், ஆதி திராவிடர்கள் அனை வருக்கும் இலவச கல்வி தர வேண்டும் என்பதை 1916 - சர்.பி. தியாகராயர் தந்த பார்ப்பனரல்லாத மக்களின் அறிக்கையில் குறிப்பிட்டதை ஆட்சிக்கு வந்தவுடன் சென்னை, சைதாப் பேட்டை மற்றும் திருவாடி யூனியம் ஆகியவைகளில் அமல்படுத்தினர்.

பெண்களுக்கு - குறிப்பாக ஆதிதிராவிட சமூகப் பெண்களுக்கு படிப்புத் தரப்படல் வேண்டும்.

ஏழை மாணவிகளுக்கு எட்டாம் வகுப்பு வரை இலவசமாக கல்வி கற்க வழி செய்ய வேண்டும் என்று ஆணையிட்டு 200 பள்ளிக் கூடங்களை 1920 - லேயே நடைமுறைப்படுத்தியது திராவிடர் இயக்க ஆட்சி (நீதிக்கட்சி ஆட்சி!) (ஆதாரம்: ஜஸ்டிஸ் இயர் புக் - பக்கம் 91-92 ஆங்கிலம்)

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்பது மனுதர்மம்.

மனுவின் மொழியை மறுத்து, மன்னர்கள் செய்யாததை சமதர்மப் பாதையில் செய்தது திராவிடர் இயக்க ஆட்சி அல்லவா? புரிந்து கொள்வீர்! 24-2-2012

தமிழ் ஓவியா said...

திராவிட இயக்கதொடக்கம்: நூற்றாண்டு விழா எடுப்போம்!


உடன்பிறப்பே,

நாள்தோறும் உதயசூரியனோடு சேர்ந்து எழுகின்ற பழக்கமுடைய நான்; இன்றும் அவ்வாறே துயில் நீங்கி எழுந்தேன். என் செவிகளில் தம்பி சுப. வீரபாண்டியன் கலைஞர் தொலைக் காட்சியில் உரை நிகழ்த்தும் குரல் கேட்டது - ஒன்றே சொல்! - நன்றே சொல்! என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையில் - திராவிடர் இயக்கச் சரித் திரம் பற்றி குறிப்பிட்டு விட்டு - அந்தத் திராவிடர் சங்கத்தின் நூற்றாண்டு இந்த ஆண்டு பெப்ரவரி முதல் தொடங்குகிறது என்றும், 2013ஆம் ஆண்டு அந்த இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு பெறுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியபோது, மறைந்த தம்பி முரசொலி மாறனும், மற்றொரு தம்பி மறைந்த கே.ஜி. இராதா மணாளனும், மற்றொரு தம்பி க.திரு நாவுக்கரசும் எழுதிய திராவிட இயக்க வரலாறு எனும் நூலும் நினைவுக்கு வரவே; இது திராவிட இயக்க நூற்றாண்டு என்பதற்கான ஆண்டுக் குறிப்புகள் அந்த நூல்களில் இடம் பெற்றிருக் கிறதா என்பதை அறிந்திட அவற்றைப் புரட்டிப் பார்த்தேன்.

திராவிட இயக்கத் தோற்றம் என்ற துணைத் தலைப்பில் மாறன் எழுதியுள்ள திராவிட இயக்க வரலாறு எனும் நூலுக்கான முகப்புரையின் முதலாவது அத்தியாயத்தைப் படித்த போது, அதை அப்படியே வார்த்தை பிசகாமல் உனக்கு நினைவூட்ட வேண்டுமென்பதால் இந்தக் கடிதத்தில் அதனை இணைத்து எழுதுகிறேன். மாறன் எழுதியது வருமாறு :-

இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலம்...

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், 1912 ஆம் ஆண்டு!

சென்னை நகரில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் சிலர், தாங்கள் பிராமணரல்லாதாராய் இருந்த ஒரே காரணத்தாலேயே உத்தியோகத் துறையில் புறக்கணிக்கப்பட்டதையும், வேலை உயர்வு - போன்ற நியாயமாகக் கிடைக்க வேண் டிய வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டதையும் உணர்ந்து, மனம் புழுங்கிக் கலந்துரையாடவும், இணைந்து செயல்படவும், ஒன்றுபட்டுத் தங்கள் குறைகளை எடுத்துரைக்கவும் 1912ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைடெட் லீக் (ஆயனசயள ருவைநன டுநயபரந) என்னும் அமைப்பினை உருவாக்கினர்.

வழிகாட்டிய நாடேடுகள்

இந்த அமைப்பிற்கு வழிகாட்டியாகவும், துணை யாகவும் இருந்தவர் அப்போது சென்னையில் சிறந்த டாக்டர்களில் ஒருவராக விளங்கிய நடேசனார் ஆவார். அவர்தாம் திராவிட இயக்கத்தின் நிறுவுநர். அவரே அந்த அமைப்பின் செயலாளராகவும் இருந்து அரும்பணியாற்றினார். ஓராண்டிற்குள் அந்த அமைப்பின் உறுப்பினர் தொகை 300 ஆயிற்று. லீக்கின் கூட்டங்கள் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அமைந்திருந்த டாக்டர் நடேசனார் இல்லத்திலேயே நடைபெற்றன.

தமிழ் ஓவியா said...

திரு. சரவண பிள்ளை (பின்னால் தஞ்சையில் டெபுடி கலெக்டர் ஆனவர்), திரு. ஜி. வீராசாமி நாயுடு, திரு.துரைசாமி முதலியார் (பொறியியல் துறையைச் சேர்ந்தவர்), திரு. எஸ். நாராயணசாமி நாயுடு (வருவாய் வாரியத்தின் ஷெரீப்பாகப் பணி யாற்றியவர்) - போன்ற பின்னாளில் பெரும் உத்தி யோகங்கள் ஏற்ற பிராமணரல்லாதார் மெட்ராஸ் யுனைடெட் லீக் அமைவதற்குப் பாடுபட்டதாகத் திரு. பி. ரெங்கசாமி நாயுடு கூறுகிறார்.

முதன் முதலாக அவர்கள் ஏற்றுக் கொண்ட சமுதாயப் பணி முதியோர் கல்வியாகும். அதன் உறுப்பினர்களாகவிருந்த அரசு ஊழியர்களே தங்களது மாலை நேர ஓய்வு காலத்தை இந்தப் பணிக்குச் செலவிட்டனர். ஆண்டுதோறும் பல் கலைக் கழகப் பட்டம் பெறும் பிராமணரல்லாத இளம் பட்டதாரிகளுக்கு வரவேற்பு நடத்தி, அவர் களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி, அவர்களது சமுதாயக் கடமையை நினைவுறுத்து வதும் அந்த அமைப்பின் பணிகளில் ஒன்றாக இருந்தது. அப்போதெல்லாம் பல்கலைக் கழகப் பட்டம் பெறும் பிராமணரல்லாத மாணவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருந்தமை யால் இது சாத்தியமாயிற்று.

ஒருமுறை திவான்பகதூர் பி. கேசவப் பிள்ளை தலைமையில் அத்தகைய வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது. (சர்) பி. தியாகராயர், பனகல் அரசர் போன்றோர் அந்த வைபவத்திற்கு வருகை தந்திருந் தனர். பட்டதாரிகளின் சார்பாக வரவேற்பிற்கு நன்றி கூறிப் பேசிய ஓர் இளைஞர் தமது பேச்சுத் திறனால் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தார். அவர்தாம் பின்னாளில் நீதிக் கட்சிப் பிரமுகராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகவும் விளங்கிய (சர்) ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) ஆவார்.

1913ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக்கின் முதலாவது ஆண்டு நிறைவு விழாக் கூட்டம் டாக்டர் நடேசனாரின் மருத்துவமனையில் உள்ள தோட்டத்தில் நடைபெற்றது. அன்று அங்கு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஓர் இனத்தின் தனித்தன்மையைக் கண்டறிந்து, ஓர் இயக்கத்திற்கே பெயர் சூட்டிய தீர்மானமாகும். அது மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்கிற பெயரை மாற்றுவது பற்றிய தீர்மானம்! சங்கத்தின் பெயர் அதன் நோக்கங்களைப் பிரதிபலிப்பதாக இல்லை - என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டு அதற்குச் சரியான பெயரைச் சூட்டும் விவாதம் நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...

என்ன பெயர்கள் சூட்டலாம்!

பிராமணரல்லாதார் சங்கம் - எனப் பெயரி டலாம் என்கிற கருத்து சொல்லப்பட்டது. அது எதிர்மறைப் (நேபயவஎந) பெயராக இருப்பதால் அப்பெயருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, இறுதியில், மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்னும் பெயரை திராவிடர் சங்கம் (னுசயஎனையை ஹளளடிஉயைவடி) என்று மாற்றுவதென்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் அந்தச் சங்கம் இயக்கிவிட்ட உணர்வுகள் திராவிட இயக்கம் என்று பெயர் பெறலாயின.

திராவிடர் சங்கம் - என்று பெயர் மாற்றப்பட்ட பிறகு அதன் உறுப்பினர் தொகை 500 ஆயிற்று.

1914ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி உயர் நிலைப் பள்ளி ஒன்றின் மாடியில் உள்ள கூடத்தில் திராவிட சங்கத்தின் முதலாண்டு நிறைவு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியோடு பிராமணரல் லாத பட்டதாரி களுக்கு ஒரு வரவேற்பும் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

விழாவிற்குத் தலைமை வகிக்க ஒப்புக் கொண் டிருந்த வெங்கடகிரி அரசர் உடல்நலக் குறைவு காரணமாக வர இயலவில்லை. அப்போது ஸ்மால்காஸ் கோர்ட்டுகளின் பிரதம நீதிபதியாக வும் (ஊநைக துரனபந டிக ளுஅயடட ஊயரளந ஊடிரசவள), பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உயர்ந்த சி. கிருஷ்ணன் அந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அன்றையதினம் சிறப்புரையாற்றியவர் டாக்டர் டி.எம். நாயர் ஆவார். கூடியிருந்த மாணவர்களும், அரசு ஊழியர்களும் என்றும் நினைவுகூரத்தக்க அரியதோர் உரையை அவர் ஆற்றினார். இளைஞர்கள் துணிவு பெற வேண்டு மென்றும், தங்கள் குறைபாடுகளைத் தைரியத்துடன் எடுத்து வைக்க வேண்டுமென்றும், அந்த அமைப்பின் தேவையைப் பொதுமக்கள் உணரு மளவிற்கு அதை வலிவுள்ளதாக்கப் பாடுபட வேண்டுமென்றும் அவர் வற்புறுத்தினார்.

விழியுங்கள்! எழுங்கள்!! இன்றேல் என்றும் நீவிர் வீழ்ந்துபட்டோராவீர்!!! (ஹறயமந, ஹசளைந டிச நெ கடிச நஎநச கயடடந!) என்று கூறி அவர் தமது சொற்பொழிவை முடித்தாரென்றால் அன்றைய பிராமணரல்லாத இளைய தலைமுறையினரி டையே அவர் எத்தகைய எழுச்சியுரையாற்றினார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இரு நூல்கள்

போதிய நிதி வசதி இல்லாத நிலையில் திராவிட சங்கம் இரண்டு கருத்து விளக்க நூல்களை 1915இல் வெளியிட்டது. அவற்றில் குறிப்பிடத்தக்கது பிராம ணரல்லாதார் கடிதங்கள் (சூடி-க்ஷசயாஅ டுநவவநசள) என்பதாகும். அப்போதைய சென்னை மாகாணத் தில் பிராமணரல் லாதாரின் இழிநிலையை விளக்கி, அவர்களை ஒன்றுபட்டு இயங்கக் கோரும் 21 கடிதங்கள் அந்தப் பிரசுரத்தில் அடங்கியிருந்தன.

எஸ்.என்.கே. என்னும் புனைபெயரில் இந்த நூல் எழுதப்பட்டிருந்தது. இன்னொரு நூல் சர். சி. சங்கரன் நாயர் எழுதிய னுசயஎனையை றுடிசவாநைள என்பதாகும். பிராமணரல்லாதார், பிரித்துக் கொட்டிய நெல்லிக்காய் மூட்டை போல ஒற்றுமை யிழந்து சிதறிக் கிடக்கின்றனர். ஒன்றுபட மறுப்பது மட்டுமல்ல; ஒருவருக்கொருவர் பொறாமையால் பிளவுபட்டும் இருக்கின்றனர்.

கல்வி கற்பதில் கவனம் செலுத்தாமல், தங்கள் பரம்பரைத் தொழிலையே மேற்கொண்டு அதிக பட்சம் துபாஷி களாக வேண்டும் - என்பதற்கு மேல் அவர்கள் குறிக்கோள் செல்வதில்லை.

தமிழ் ஓவியா said...

பிராமணரல்லாத முதலாளிகளாலேயே அவர் களது பிராமணரல்லாத சகோதரத் தொழிலாளிகள் இழிநிலையில் நடத்தப்படுகின்றனர். இந்த இழி நிலைக்குப் பிராமணரல்லாதார் தங்களைத் தாங் களேதான் குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும்.
ஏனெனில், அவர்கள் அரசாங்கத் துறையில் உத்தியோக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள் ளத் தவறியிருக் கின்றனர்.

அதே நேரம் பிராமணர்களைப் பாருங்கள்! கல்வியின் முக்கியத்தை உணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொண்டு எவ்வளவு ஒற்றுமையாகச் செயல்படுகிறார்கள்!

ஆனால், பிராமணரல்லாதார் மனு ஸ்மிருதியின் மயக்கத்திலாழ்ந்து தங்களது கேடு கெட்ட நிலைக்குத் தாங்களேயல்லவா காரணமானவர் களாக இருக்கிறார்கள்!

பிராமணரல்லாத சமூகத்தினர் சென்னை மாகாணப் பொது வாழ்வில் தங்களுக்குரிய இடத்தைப் பெற வேண்டுமானால் திராவிடர்கள் அனை வரையும் அமைப்பு ரீதியில் ஒன்று சேர்க்க வேண்டும்; திராவிடத் தாய் மொழிகளில் கற்பிக்கும் தேசியக் கல்லூரியைத் துவக்க வேண்டும். இத்தகைய உண்மைப் படப்பிடிப்பைக் கொண்ட பிரசுரங்கள், படித்த பிராமணரல்லாதாரிடையே விழிப்புணர்ச் சியை ஏற்படுத்தி வந்தன.
நாடெங்கும் விழா எடுப்போம்!

உடன்பிறப்பே, தம்பி முரசொலி மாறனின் இந்தப் புத்தகத்திலிருந்தும், தம்பி சுப. வீரபாண் டியன் ஆற்றிய தொலைக்காட்சி உரையிலிருந்தும் நடேசனார் தொடங்கிய அந்த திராவிடர் சங்கம் தான் இன்றைக்கு வளர்ந்துள்ள மொழி உணர்வு, பகுத்தறிவு உணர்வு, சமூக நீதிக் கெல்லாம் அடித் தளம் போன்றது என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த உணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய நமது திராவிட இயக்கத் தின் நூற்றாண்டு விழாவினை இந்த ஆண்டு முழுவதும் தமிழர்களாகிய, திரா விடர்களாகிய நாமனைவரும் கொண்டாட வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே திரா விடர் இயக்கத்தின் நூற்றாண்டு விழா நமது கழகத்தின் சார்பில் - இந்த 2012ஆம் ஆண்டு தொடங்கி 2013ஆம் ஆண்டு வரையில் சிறப்பாக கொண்டாடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

திராவிட இயக்கம் வளர்த்த பெரியவர்களின் பெருமை களையெல்லாம் அந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் நாம் பேசவேண்டும். திராவிட இயக்க நூற்றாண்டு விழா தமிழன் ஒவ்வொரு வருக்கும் பெருமை சேர்க்கும் விழா என்பதை மனதிலே கொள்வோம். அதற்காக விழா வினை நாடெங்கும் எடுப்போம். திராவிட இயக்க நூற்றாண்டு விழா நாம் கொண்டாட வேண்டிய தன்மான உரிமைத் திருவிழா! குறிப்பிட்ட அந்த நாள்; எந்த நாள் என்று இல்லாமல் - இந்த ஆண்டு முழுவதுமே அந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாட முனைவோம் - அதற்கு இன்று முதல் முரசு ஒலிப்போம் - அந்த முழக்கம் இன்று பிப்ரவரி 18இல் தொடங்கட்டும்! பின்னர் மாவட்டத் தலை நகரங்களில் தொடங்கி இந்த நூற்றாண்டு விழா எழுச்சிநிறை விழாக்களாக நடக்கட்டும்! அங்கிங்கெனாதபடி எங்கெங்கும்! நடக்கட்டும்!

அன்புள்ள,
மு.க 18-2-2012