Search This Blog

21.2.12

ராமர் அப்படி என்ன ஒழுக்கத்தைப் போதித்து விட்டார்?

ராமன் ஒழுக்கத்தைப் போதித்தானா?

கேள்வி: உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்கிறதே பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை.

பதில்: அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்பது அத்வானிக்குத் தெரியும். ராமருக்கும் தெரியும். முதலில் ராமர் கோவில் கட்டுவதை விட்டுவிட்டு, அவர் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு ராமரின் ஒழுக்கத்தைப் போதிக்கட்டும். - ஆனந்தவிகடன் கேள்வி - பதில், 22.2.2012

ராமர் அப்படி என்ன ஒழுக்கத்தைப் போதித்து விட்டார்?

மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து கோழைத்தனமாக வாலியைக் கொன்றாரே அந்த ஒழுக்கத்தையா?

சக்ரவர்த்தி திருமகன் எழுதிய ராஜகோபாலாச் சாரியாரே வாலி வதம் படலத்தில் ராமனின் கோழைத் தனத்தை நியாயப்படுத்த முடியாமல் மூச்சு முட்டத் திணறி நிற்கிறாரே!

கோழைத்தனமாக மரத்தின் பின்னால் மறைந்து நின்று தன்னைக் கொன்ற ராமனை நோக்கி வாலி என்ன சொல்லுகிறார்?

ராமனே! தசரத சக்கரவர்த்தியின் புத்திரனா வாய். உத்தம குலத்தில் பிறந்த நீ, பெரும் புகழும் அடைந்த நீ, ஏன் இப்படிச் செய்தாய்? உன் நற்குணங்களும், ஒழுக்கமும் உலகம் அறிந்த விஷயம். இப்படியிருக்க நான் வேறொருவனிடம் யுத்தம் செய்துகொண்டு அதில் மனம் முற்றிலும் செலுத்தி வந்த சமயத்தில் என் கண்களுக்குத் தென்படாமல் மறைந்து நின்று என்மேல் பாணம் விட்டு என்னைக் கொன்றாய். உன்னைப் பற்றி ஜனங்கள் சொல்லும் புகழ் மொழிகளுக்கு இது முற்றிலும் விரோதமாயிருக்கிறதே! எல்லாப் பிராணிகளிடமும் கருணை கொண்டவன், தோஷ எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் புலன் களையும், உள்ளத்தையும் அடக்கியாள்பவன், அற வழியில் நிற்பவன், பொறுமை, சாந்தி, தருமம், சத்திய பராக்கிரமம் முதலிய உத்தம குணங்களை எல்லாம் பெற்றவன் என்று கீர்த்தி பெற்றாயே, இப்போது அவையெல்லாம் என்ன வாயின? என்னைக் கொன்று நீ என்ன லாபம் பெறுவாய்? யோசிக்காமல் இந்த அதரும காரியம் செய்தாய். என் மனைவி உன்னைப் பற்றி என்னை எச்சரித்தாள்.

அவள் பேச்சைத் தட்டி விட்டு வந்தேன். நீ வேஷதாரியென்றும், துன் மார்க்கன் என்றும், புல்லால் மூடப்பட்ட பாழுங்கிணறு போன்ற பாவி என்றும் தெரி யாமல், மனைவியின் பேச்சைக் கேளாமல், நான் என் தம்பியுடன் யுத் தத்துக்கு வந்தேன். உனக்கு என்ன தீமை நான் செய்தேன்? உன்னுடன் யுத்தம் செய்யவா நான் வந் தேன்? அதருமத்தில் இறங்கி என்னை மறைந்து நின்று கொன்றாய். நல்ல அரசு குலத்தில் பிறந்து பெரும் பாவத்தைச் செய்தாய். நிரபராதி யைக் கொன்றாய். நீ அரச பதவிக்குத் தகுந்த வனல்ல.

மோசக்காரனான உன்னைப் பூதேவி மணக்க விரும்பமாட்டாள். நீ எப்படித் தசரதனுக்கு மகனாகப் பிறந்தாய்? தருமத்தை விட்டு நீங்கின நீசனால் கொல்லப் பட்டேன். என் கண்ணுக்கு முன் நின்று நீ யுத்தம் செய்திருந்தாயேல் இன்றே நீ செத்திருப்பாய். என்னை நீ வேண்டிக் கொண்டி ருந்தால் ஒரே நாளில் சீதையை உன்னிடம் அழைத்து வந்து விட்டிருப்பேனே! சுக்ரீவனுக்காக என்னைக் கொன்றாயே. ராவணனைக் கொன்று பிரேதத்தைக் கழுத்தில், கயிறு போட்டுக் கட்டி உன்னிடம் இழுத்துக் கொண்டு வந்து விட்டிருப்பேனே! மைதிலியை எவ்விடம் மறைத்து வைத்திருந்தாலும் கண்டுபிடித்து உன்னிடம் ஒப்புவித்திருப்பேனே! பிறந்தவர்கள் இறப்பது விதி. ஆயினும் நீ முறை தவறி என்னைக் கொன்றாய். உன் குற்றம் பெருங்குற்றம்.

இவ்வாறு தேவேந்திர குமாரனான வாலி மரணாவஸ்தையில் ராமனைக் கண்டித்தான்.

வாலியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ராமன் என்ன பதில் சொல்ல முடியும்? ஏதோ சொன்ன தாகவும், அதைக் கேட்டு வாலி சமாதானப்பட்ட தாகவும் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படு கிறது. அதில் சாரம் இல்லை என்று விட்டு விட்டேன். பெரியோர்கள் மன்னிப்பார்கள்.

- ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தி திருமகன், பக்கம் 205-206

கோழைத்தனமாக வாலியைக் கொன்ற ராமனின் பதிலில் சாரம் இல்லை என்று ஆச்சாரியாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்ட பிறகு, ஆனந்த விகடன்கள் ராமனைக் காப்பாற்றிட முயற்சிப்பானேன்?

ராமனை ஒழுக்கவான் என்று தூக்கி நிறுத்த ஆசைப்படுவானேன்?

பக்தியைக் காப்பாற்றாவிட்டால் பிராமணன் என்ற பிறவி அந்தஸ்து பறிபோய்விடுமே - அதுதானே காரணம்?

----------------------- “விடுதலை” 21-2-2012

5 comments:

தமிழ் ஓவியா said...

ஜெயேந்திரர்மீது கொலை முயற்சி வழக்கு ராதாகிருஷ்ணன் பரபரப்பான வாக்குமூலம்

சென்னை, பிப்.21-ஜெயேந்திரர் மீதான கொலை முயற்சி வழக் கில் மந்தைவெளி ஆடிட் டர் ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

சென்னை மந்தை வெளியை சேர்ந்த ஆடிட் டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002ஆம் ஆண்டு அவரது வீட்டில் தாக் கப்பட்டார். இது சம் பந்தமாக, ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், மீனாட்சி சுந்தரம், ஆனந்தகுமார், பூமிநாதன், கண்ணன், சின்னகுமார், லட்சு மணன், ரவிசுப்பிரமணி யம் ஆகியோரை பட்டி னம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். இவர் கள் மீது, கொலை முயற்சி, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

இந்த வழக்கு முத லாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி கலாவதி முன் னிலையில் நேற்று விசா ரணைக்கு வந்தது. ராதா கிருஷ்ணன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரை அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.விஜய ராஜ் விசாரணை செய் தார். அதன் விவரம் வரு மாறு:

கடந்த 2002 செப்டம் பர் 20 ஆம் தேதி மந்தை வெளியில் உள்ள எனது வீட்டில் ஹாலில் அமர்ந்து நானும் எனது மனைவி ஜெயசிறீயும் தொலைக் காட்சி பார்த்துக் கொண் டிருந்தோம். எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவ ரைக் கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட் டிருந்து கிருஷ்ணன் என் பவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந் தார்.

இரவு 7 மணிக்கு 2 பேர் எங்கள் வீட்டுக்குள் வந்தனர். அதில் ஒருவர், இவன்தான் கொல்லுடா என்று சொல்லிக் கொண்டே என்னை கத்தியால் வெட்டினார். (வெட்டிய வரையும் கத்தியையும் அடையாளம் காட்டினார்) அதை எனது வலது கையால் தடுத்தபோது கையில் கடுமையான வெட்டுக்காயம் ஏற் பட்டது. (வெட்டுத் தழும்பையும் நீதிபதியிடம் காட்டினார்) மற் றொருவரும் என்னை அரிவாளால் வெட்ட வந்தார். அதை எனது மனைவி தடுத்ததால் அவரது இடது கையில் வெட்டு விழுந்தது. (அரி வாளால் வெட்டியவரையும் அரி வாளையும் அடையாளம் காட்டி னார்). இதையடுத்து, அங்கு வந்த கிருஷ்ணனின் தலையில் இருவரும் வெட்டினார்கள். அவர் வெட்டுப் பட்டு கீழே விழுந்தார்.

வீட்டில் நடந்த இந்த கொடூர சம்பவத்தால் நிலை குலைந்த நாங்கள் அலறினோம். அப்போது, அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்த வர்கள் ஓடிவந்ததால் வெட்டிய இருவரும் தப்பி ஓடினர். உடனடியாக எனது தம்பி நாராயணனுக்கு போன் செய்தேன்.

இரண்டு வீடுகள் தள்ளியிருந்த எனது சகோதரிக்கும் போன் செய் தேன். நாராயணன் உடனடியாக எனது வீட்டுக்கு காருடன் வந்து சுயநினைவற்று இருந்த கிருஷ்ணனை காரில் தூக்கிக் கொண்டு தேவகி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு கிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தம்பி மகன் ஹரீஷ் ஆட்டோவில் வந்து என்னையும் எனது மனைவி யையும் ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். இருவரும் அங்கு சிகிச்சை பெற் றோம். எனது மனைவியின் இடக் கையில் நரம்புகள் அறுந்ததால் அந்த கை செயலிழந்து போனது.

சம்பவம் தொடர்பாக என்னை விசாரிக்க பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் நாராயணசாமி மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் நடந்த விஷயங்களை சொன்னேன். மீண்டும் என்னை விசாரிப்பதற்காக அக்டோபர் 5ஆம் தேதி காவல்துறையினர் வந்தனர்.

எதற்காக என்னை கொலை செய்ய வந்தார்கள் என்று தெரிய வில்லை. எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன். மீண்டும் வந்த காவல்துறையினரிடமும் சம்பவம் குறித்து விவரமாக தெரிவித்தேன்.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் சாட்சியம் அளித்தார். இந்த சாட் சியங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, சாட்சி விசாரணை மார்ச் 9 ஆம் தேதி தொடரும் என்று உத்தர விட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார் 21-2-2012

தமிழ் ஓவியா said...

பக்தி வளர்க்கும் ஒழுக்கத்தின் இலட்சணம் பாரீர்!


கடவுள் பக்தி அவசியம் என்று வக்காலத்து வாங்கும் பெரிய மனிதர்கள் ஒன்று சொல்லுவது உண்டு. கடவுள் பக்தியிருந்தால்தான் மனிதன் குற்றம் செய்யப் பயப்படுவான் என்ற கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அதாவது உண்மை என்று சொல்லுவதற்கு நாட்டு நடப்புகள் அறவேயில்லை. லோக குரு என்று பார்ப்பன வட்டாரங்கள் தலையில் தூக்கி வைத்துக் கரகாட்டம் போடும் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதிகளின் யோக்கியதை களை, ஒழுக்கக் கேடுகளை, காம லீலைகளைத் தெரிந்து கொண்டபின், அந்தக் கீறல் விழுந்த இசைத் தட்டைத் தூக்கி எறிந்திட வேண்டியதுதான்.

கோவில் கருவறைக்குள்ளேயே கருவை உருவாக்கும் காலிகள் அர்ச்சகர்களாக (காஞ்சீபுரம் மச்சேந்திர கோவில் மற்றும் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அர்ச்சகர்கள் எடுத்துக்காட்டாக) உள்ளனர் என்ற நிலைமை வெளிச்சத்துக்கு வந்த பிறகு, கடவுள் நம்பிக்கை - பக்தி சமாச்சாரங்களின் யோக்கியதை கேவலத்தின் ஊற்றுக் கண்கள் என்பதைப் பாமர மக்களும் அறியும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இதில் ஒன்றும் ஆச்சரியத்துக்கோ, அதிர்ச்சிக்கோ இடமும் கிடையாது. இந்து மதத்தின் கடவுள்களே விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளனவே! 60 ஆயிரம் கோபிகாஸ்திரீ களுடன் கொஞ்சிக் குலவினான் எங்கள் கோபால கிருஷ்ணன் என்று பெருமையாகக் கூறிக் கொண்டு திரியும் நாட்டில் ஒழுக்கத்தை எந்தக் காயிலாங் கடையில் தேடுவது?

பக்தையாகிய ஆண்டாள் எனும் வைணவப் பெண்மணி தந்தையெனப் போற்றத்தகுந்த கடவுளுடன் புணர ஆசைப்பட்டு விரகதாபத்தில் விழுந்து புரள்கிறாள் என்கிறபோது, நல்லொழுக் கத்தை நினைத்துத்தான் பார்க்க முடியுமா?

சபரிமலை அய்யப்பன் கோவில் உண்டியலில் சுருட்டல்பற்றி தணிக்கை அதிகாரி அம்பலப்படுத்தி யுள்ளார். திருப்பதி கோவிலிலும் இந்தக் கந்தாயம் ஊர் சிரித்ததுண்டு.

உண்டியல் பணத்தை எண்ணும் இடத்தில் காமிரா வைத்துக் கண்காணிக்கிறார்கள் என்றால், கடவுளின் சக்தி, அந்தக் கடவுள் மீதுள்ள பக்தி எந்தத் தராதரத்தில் உள்ளன என்பதும் வெளிப்படை!

ஏழுமலையான் டாலர் மோசடி சர்வசாதாரணம் - டாலர் சேஷாத்திரி என்ற அந்த ஊழல் பேர்வழியைப் பட்டம் கொடுத்து அழைக்கின்றனர் என்றால் பாருங்களேன்.

ஏழுமலையானுக்குச் சொந்தமான நகைகளில் மோசடியாம்! தங்க நகைகளுக்குப் பதிலாக தங்கமுலாம் பூசப்பட்ட நகைகளை வைக்கும் மோசடி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சர்வசாதாரண மாம்!

ஏழுமலையான் கோவிலில் நடந்துள்ள நகை மோசடி குறித்து ஆந்திர மாநில சட்டப்பேரவையிலேயே உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனரே!

மன்னன் கிருஷ்ண தேவராயர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அவ்வப்பொழுது காணிக்கை செலுத்திய தங்க, வைர நகைகளே காணோமாம்.

பிரச்சினை உயர்நீதிமன்றம்வரை சென்று, நகை பற்றிய விவரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

திருப்பதியில் பக்தித் தொழில் மட்டுமா? விபச்சாரத் தொழிலும் ஓகோவென்று நடக்கிறது என்று ஆனந்தவிகடனே (25.2.2007) வெளி யிட்டுள்ளதே!

எந்தப் பாவம் செய்தாலும் அதற்கு எளிதாகப் பரிகாரங்கள் வேறு! 12 வருடம் பஞ்சமா பாதகங்கள் செய்தாலும், கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் அந்தப் பாவங்கள் விலகி ஓடி, மோட்சம் கிட்டும் என்று கூறுகிற ஒரு அமைப்பில் ஒழுக்கத்துடன் வாழ்பவன்தான் பைத்தியக்காரன் என்று கருதப்படமாட்டானா?

நாட்டில் ஒழுக்கம் வளர வேண்டுமானால், முதலில் கோவிலையும், பக்தி சிறுபிள்ளைத்தனத்தையும், அவற்றைப் பறைசாற்றும் புராணக் குப்பைகளையும் தலப் புராணங்களையும் ஒரே இடத்தில் குவித்து தீவைத்துப் பொசுக்க வேண்டாமா?

சிந்திப்பீர்! -”விடுதலை” தலையங்கம் 21-2-2012

techsatish said...

கடவுளே இல்லை என்று வாதிடும் தங்களுக்கு ராமர் ஒழுக்கத்தை போதித்தால் என்ன போதிக்காவிட்டால் உங்களுக்கென்ன சரி அதை விடுங்க பெரியார் எந்த ஒழுக்கத்தை போதித்தார் வயதுள்ள பெரியவுங்க சின்னகுட்டிங்களா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிடனும் என்று போதித்தாரே அதை பற்றி எழுதுங்க முதலில்

Anonymous said...

நாட்டுல... அவனவன் நாலு அடியில சொந்தமா ஒரு வீடு கூட இல்லையேன்று ஏங்கி தவிச்சிட்டிருக்கிறான்... ராமருக்கு கோயில் கேட்குதாம் கோயில்... மக்களின் அடிப்படைத் தேவையை முதலில் இவங்க பூர்த்தி செய்யட்டும்...

Anonymous said...

உங்கள் பதிவுகளை hotlinksin.comல் இணைத்திடுங்கள்...