Search This Blog

5.11.08

ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடாமல் புறக்கணித்த முசுலிம்கள்!

"ஜோத்பூர்"

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமுந்தாதேவி கோயில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள்; பன்னூறு பேர் காயமடைந்தனர். மனிதாபிமான முறையில் பகுத்தறிவாளர்களின் இரக்கம் அதன்பால் உண்டு. அதேநேரத்தில், பகவான் அருள் பாலிப்பார் - சர்வசக்தி வாய்ந்தவர் என்று சகட்டுமேனிக்குச் சொல்லி வந்தார்களே - அது சுத்தப் புரூடா என்பது மெய்ப்பிக்கப்படவில்லையா? என்ற வினாவும் பகுத்தறிவின் அடிப் படையில் எழத்தான் செய்கிறது.

மனிதாபிமான அடிப்படையில் ஜோத்பூரில் வாழும் முசுலிம்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

தம்மைச் சுற்றி வாழும் இந்து மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கும்போது, நாம் மட் டும் விழா கொண்டாடி விருந்துகள் நடத்தி, தடபுடல் செய்யக் கூடாது; அவர்களின் துக்கத்தில் நாமும் பங்கு கொள்ளவேண்டும் என்று கருதி இவ்வாண்டு ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடாமல் புறக்கணித்துள்ளனர் என்கிற சேதி சாதாரணமான தல்ல.


அதுவும் பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இப்படி ஒரு எடுத்துக்காட்டான செயலை இஸ்லாமிய மக்கள் செய்து காட்டி, தங்களின் மகத்தான மானுடப் பண்பை இமயச் சிக ரத்தில் ஏற்றிக் காட்டியுள்ளனர்.

இந்தியாவில் சிறுபான்மையினர் தங்கள் மதத்தினை இந்(து) திய மயமாக்கிக் கொள்ளவேண் டும் என்றும், இராமன், கிருஷ்ணன் என்ற ஹிந்துக் கடவுள்களை அவர்கள் வழிபடவேண்டும் என்றும் குடிமக்கள் உரிமையு மின்றி வாழ்ந்திடத் தயராகவேண்டும் என்றும் கொஞ்சம்கூட இங்கிதமின்றி கூக்குரல் போடும், கெடுமதியாளர்கள் ஹிந்துத்துவா பேர்வழிகள் - சங் பரிவார்க் கும்பல், ஜோத்பூரில் இஸ்லாமியர்கள் செய்துகாட்டிய இந்த எடுத்துக்காட்டான நிகழ்வுக்குப் பிறகாவது, தங்களின் அழுக்கடைந்த பாசிசப் புத்தியைக் கொஞ்சம் புளி போட்டு விளக்கிக் கொள்ள முன்வருவார்களா?

பொழுது விடிந்து பொழுது போகிறவரையிலும் சிறுபான்மை மக்களைத் தீர்த்துக் கட்டுவதி லேயே, அவர்களின் அன்றாட வாழ்வில் புயலெனப் புகுந்து சீரழிப்பதிலேயே தங்களின் கருத்தையும், கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கும் காட்டுவிலங்காண்டித்தனத்துக்கு "சவுக்கடி" கொடுப்பதுபோல இஸ்லாமியர்கள் நடந்துகாட்டியுள்ளனர். இன்னா செய்தாரை இனிய முறையில் இதைவிட எப்படி ஒறுத்தல் (தண்டித்தல்) முடியும்?

மதம் சார்ந்த வாழ்வு - மதம் சாராத பகுத்தறிவு வாழ்வு என்பதெல்லாம் அவரவர்களின் வாழ்வுரிமையைச் சார்ந்தது. கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம்; அதேநேரத்தில், கலகம் செய்து பிறர் கருத்துகளைக் காவு கொடுத்துவிடலாம் என்று நினைப்பது கழிசடைக் குணமே! சிந்திப்பார்களாக!

-------------- மயிலாடன் அவர்கள் 5-11-2008 "விடுதலை" இதழில் எழுதிய கட்டுரை

0 comments: