Search This Blog

13.1.11

பொங்கல் விழா எதற்குக் கொண்டாடப்படுகிறது? பெரியார் விளக்கம்

பொங்கல் விழா எதற்குக் கொண்டாடப்படுகிறது என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது. உண்மையில் தமி ழர்களுக்கு என்று தமிழர்களின் நாகரிகம் பண்பு இவைகளுக்குப் பொருத்தமான பண்டிகை ஒன்று கூடக் கிடையாது.

அப்படி இருந்தும் நம் மக்களுக்கு பண்டிகைகளுக்கு அளவே இல்லாது பல பண்டிகைகள் இருந்து வருகின்றன.

முதலில் அப்பண்டிகைகளின் பெயர்களைப் பார்த்தால் அவை அத்தனையும் சமஸ்கிருத பெயராகவே இருக்கும். தமிழர்களுக்கென்றும், தமிழர்களின் பண்பு நாகரிகம் கலாசார பழக்க வழக்கம் இவைகளைக் கொண்டதாகவும் ஒரு பண்டிகை இருக்குமானால் அதற்கு தமிழிலேயே பெயர் இருக்க வேண்டும். ஆனால் வட மொழியில் இருக்குமானால் எப்படி தமிழர் களுக்குண்டான பண்டி கையென்று கூறமுடியும்?

பொங்கல் பண்டிகை

ஏதோ பொங்கல் பண்டிகை என்று கூறும் முறையில் தமிழ்ப்பெயராக இருப்பதும் அன்றி நம் மக்களுக்கு ஏற்ற பண்டிகையாகவும் இருக்கிறது. மேலும் இதற்குக் கூட பார்ப்பனர்கள் சங்கராந்தி என்று பெயர் கொடுத்து அப்பண்டிகைக்காக கட்டுக்கதைகளை இயற்றிவிட்டு அது இந்திரனுக்குக் கொண் டாடப்படும் பண்டிகை என்பதாக மாற்றிவிட் டார்கள். பண்டிகைகள் ஒவ்வொன்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் இப்பண்டிகையை மட்டும்தான் பார்ப்பனப் பண்டிகையிலிருந்து தமிழர் பண்டிகையாக மாற்றம் செய்ய முடிந்தது. தமிழர்களின் பண்புக் கேற்றவண்ணம் அதன் அவசியத்தையும், கொண் டாடும் முறையையும் விளக்கிவருகிறோம்.

உழவர் திருநாள்

இப்பண்டிகை நம் மக்களில் பெரும்பான்மையானவர்களாகிய விவ சாயிகளுக்குண்டான பண்டிகையாகும். அவர்கள் இந்த ஆண்டு முழுதும் விவசாயம் செய்து தானியங்களைத் தங்கள் இல்லத்தில் கொண்டு வந்து அத் தானியத்தை முதன்முதலாக சமைத்து உண்ணும் பொழுது தாங்கள் சந் தோஷமாக இருக்கும் அறிகுறியைக் காட்டும் முறையில் இப்படிக் கொண்டாடப்பட்ட முறைகள் அறிவுக்கும் பண்புக்கும் பொருத்த மற்றதாகும் என்பதை விளக்கி நம்முடைய பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவண்ணம் கொண் டாடும் முறையைப் பின் பற்றுகிறோம்.

உறவைக் கூட்டும் விழா

இந்நன்னாளில் ஒருவருக்கொருவர் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்ள தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். இப் பண்டிகை மட்டும்தான் தமிழர்களுக்கென்று உள்ள பண்டிகை.

இதைத் தவிர மற்ற வையாவும் பார்ப்பனப் பண்டிகைகள், அப்பண்டி கைகள் அத்தனைக்கும் கூறப்படும் கதைகள் அறிவுக்குப் பொருத்தமற் றவைகள். நாகரீக காலத் திற்கு ஏற்றவை அல்ல. அப்போது காட்டு மிராண்டித்தனம் மலிந்த காலத்தில் அதற்கேற்ற வண்ணம் பார்ப்பனர்கள் கதைகளைக் கட்டிவிட் டார்கள்.

அறிவுக்கு அளவுகோல்

இப்போது விஞ்ஞானம் மலிந்த காலம்; ஆராய்ச்சியாளர்கள் மிகுந்து அதிசய - அற் புதங்கள் பலவற்றை சாதித்துக்காட்டும் காலம். இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் காலத்தில் புராணக் கதைகள் இருப்பது சிறிதும் அறிவுக்குப் பொருத் தமற்றதாகும்.

அவைகள் இன்னமும் நிலைத்து நிற்பதன் காரணம் நம்முடைய முட்டாள்தனம் எத்தனை டிகிரி இருக்கிறது என் பதை எடுத்துக்காட்டுகிறதே அன்றி அறிவின் தரத்தைக்காட்டுவதில்லை.

------------------ சேலம் நகராண்மைக் கழகக் கல்லூரி விழாவில்தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து _ ”விடுதலை” 26.1.1956

0 comments: