Search This Blog

19.12.07

"மாகாளி பராசக்தி உருஷ்ய நாட்
டினில் கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி"

இந்த அடிகளை வைத்துக்கொண்டு உருசிய நாட்டில் 1917 நவம்பர் 7-ல் நடந்த தோழர் இலெனின் தலைமையிலான பாட்டாளி வகுப்புப்புரட்சியை பாரதி வரவேற்றதாகக் கூறி, அவரை பெரிய பொதுவுடைமையாளர் என புளுகித்தள்ளிவிட்டனர்
ஆனால் பாரதியாரோ உண்மையிலேயே புகழ்ந்து பாடிய புரட்சி எது எனின் 1917 மார்ச் 15 -ல் நடந்தேறிய புரட்சியேயாகும். எனவே தான் அப்பாடலுக்கு அவர் பொருத்தமாக "ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி" என்றே பெயரிட்டிருந்தார்.ஆகவே பாரதி புகழ்ந்து பாடிய"புரட்சி" உருசிய முதலாளிய வகுப்பின் 1917 மார்ச் புரட்சியே ஆகும்.
மேலும் லெனினைப் பல இடங்களில் பழித்துக் கூறியுள்ளார். எடுத்துக்காட்டாக
"இதற்கு நாம் என்ன செய்வோம்!கொலையாளிகளை அழிக்க கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேரிடுகிறது.அநியாயம் செய்வோரை அநியாயத்தால் தானே அடக்கும்படி நேரிடுகிறது என்பதே இலெனின் கொள்கை" என பாரதி கண்டிக்கிறார்.
மேலும் இலெனின் கொள்கையை மார்க்சியத்தை தாழ்த்தி அது இந்தியாவிற்குப் பொருந்தாது என "இந்து" மத வழி ஆய்ந்து கூறினார்.
இப்படிப்பட்ட பாரதியார் பொதுவுடைமையை விரும்பினார், பொதுவுடைமை ஆட்சியை விரும்பினார் என்பதில் எங்கே நீதி இருக்கிறது.உண்மைக்கு புறம்பாக மார்ரிப் பேசுவது ஏன்?
தமிழ், தமிழ்தேசியம் பேசிய பாவேந்தரை"இனவாதம்" என் கொச்சைப்படுத்துபவர்கள் பாரதியை மட்டும் வானளாவிய உயரத்திற்குத் தூக்கிப் பிடிப்பது ஏன்?
இவர்கள் இந்த நாட்டில் இந்து மதக் குப்பைகளைச் சீய்த்து ஆய்ந்து பகவத்கீதையில் மார்க்சியத்தைத் தேடுவார்கள். பாரதியின் வைதீகவெறியில் மார்க்சியத்தைத் தேடுவார்கள், ஆனால் தேசிய இனச்சிக்கலைச் சுட்டிக்காட்டும் போது வெறியர் போலக் கூச்சலிடுவார்கள். இது என்ன பொதுவுடைமை? புரியவில்லையே!
ஆக பொதுவுடைமைக் கட்சியினர் பாரதியைத் தூக்கிப்பிடிக்கும் அளவிற்கு பாரதியிடம் ஒன்றுமே இல்லை!.ஆக பாரதியார்
-------இந்திய தேசிய விடுதலை என்ற பெயரில் இந்துமத, இந்துதேச விடுதலையைக் கேட்டார்.
-------இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் சமற்கிருதத்தை ஆட்சிமொழியாக்க விரும்பினார்.
-------சாதிசமரசம் பேசி நால்வருண சாதிக் கோட்பாட்டை நிலைநிறுத்தி வைதீக இந்துமதத்தை நிலை நிறுத்தப் பாடுபட்டார்.
--------வேதம் புராணம் நீடிக்கும் பார்ப்பனியப் பண்பாட்டையே விரும்பினார்.பொதுவுடைமை, பெண்விடுதலைப்பற்றி பேசாமலேயே பேசியதுபோல் காட்டியுள்ளார்.

-----------------நூல்:"பாரதியாரின் மறுபக்கம்"-பக்கம்- 7,8.

0 comments: