Search This Blog

4.10.13

கடவுளைப் பற்றி விமர்சனம் செய்யக் கூடாதா?-தொல் திருமாவளவன்.


தந்தை பெரியாரும்,  தமிழர் தலைவரும் பாடுபடா விட்டால்
கோவணம் கட்டிக் கொண்டு ஆடு மாடுகள்தான் மேய்த்திருப்போம்!

தமிழக அரசே குற்றவாளிகளை உடனே கைது செய்க!

மந்தைவெளி பொதுக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் போர்க் குரல்!

சென்னை, அக்.4- தமிழர்களின் தன் மானத் துக்காக, சமூக நீதிக்காக அயராது பாடுபடும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்மீது, தாக்குதல் தொடுத்த குற்றவாளிகளை, தமிழக அரசின் காவல் துறை உடனே கைது செய்ய வேண்டும் என்றார், எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன்.

சென்னை மந்தைவெளி மார்க்கெட் அருகில், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், நேற்று (3.10.2013) மாலை நடைபெற்ற தமிழர் தலைவர் தாக்கப் பட்டதைக் கண்டித்து, நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

அரசியல், பதவிப் பக்கம் சாயாமல் சமூக நீதிக்காக மக்கள் 
மூடநம்பிக்கையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்காக, தமிழர்களின் தன்மான உணர்வுக்காக 80 வயதிலும் மாதத்தில் பெரும்பாலான நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவரை - தமிழர் தலைவரை ஒரு கும்பல் தாக்கியதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்  கொள்கிறது.
இதன் பின்னணியில் காவல்துறையும் இருந்திருக் கிறது. குறிப்பாக விருத்தாசலம் பகுதி துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) துணை போயிருக்கிறார்.

தமிழர் தலைவர் பதவிப் பக்கம் போகாதவர்!

நான்கூட 13 முறைகள் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறேன். எங்களை வேண்டுமானாலும் அரசியல்வாதிகள், தேர்தலில் நிற்கக் கூடியவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

திராவிடர் கழகத் தலைவர் அரசியல்வாதியல்ல தேர்தல் பக்கம் செல்லக் கூடியவர் அல்ல. பதவி தேடி அலைபவரும் அல்லர்.

அவர் பாடுபடுவது எதற்காக? மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளைப் போக்க; ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி உரிமையும், வேலை வாய்ப்பும் கிடைத்தாக வேண்டும் என்பதற்காகக் களப்பணி ஆடக் கூடிய தலைவர் அல்லவா! இதில் நூற்றுக்கு நூறு தகுதி உள்ள தலைவர் ஆசிரியர் ஆவார்கள்.

தமிழர் தலைவர் செய்வது தூய தொண்டு!

அரசியல் தலைவர்கள் செய்வது தொண்டு என்றால் தமிழர் தலைவர் மேற்கொண்டிருப்பது தூய தொண் டாகும்.

ஒன்பது வயதில் தொடங்கப்பட்ட அவருடைய பொதுப் பணி 80 வயதிலும் தொடர்கிறது. இந்தக் கால கட்டத்தில் எத்தனை எத்தனையோ தலைவர்களுடனும் பழகி இருப்பார். எவ்வளவோ அனுபவங்கள் அவருக்கு உண்டு.

எந்தக் கால கட்டத்திலும் அது கொள்கை ரீதியான உறவாகத் தானிருக்கும் - பதவிப் பேரம் பேசும் நோக்கு அதில் இருக்காது.

69 சதவீதம் நிலை பெற்றது தமிழர் தலைவரால் அல்லவா!

இந்தியாவிலேயே 69 சதவிகித இடஒதுக்கீடு தமிழ் நாட்டிலே தாழ்த்தப்பட்டவர்களுக்குப், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு முழுக் காரணமாக இருந்தவர் தமிழர் தலைவர்தானே - கிருஷ்ணன் என்ற கடவுளா வாங்கிக் கொடுத்தான்?

50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் தமிழர் தலைவர் தானே அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தார் - போராடினார்

சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்தது - ஏன்?

இன்றைக்கு இருக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதா தான் அப்பொழுதும் முதல் அமைச்சர்.

திராவிடர் கழகத் தலைவர் வழிகாட்டியதன் அடிப் படையில் தானே புது சட்டம் உருவாக்கப்பட்டது - மறுக்க முடியுமா?

69 சதவிகித இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற சட்டம் செய்த காரணத்தால் தானே சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தையும் தமிழர் தலைவர் அளித்தார்.  குறைந்தபட்சம் அதைக்கூட முதல் அமைச்சர் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் தந்தவரைப் பாதுகாக்கும் உரிமை இந்த முதல் அமைச்சருக்கு இல்லையா?

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த வருமான வரம்பை ஒழித்துக் கட்டிய தலைவர்

எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டில் பொருளா தார வரம்பினை அறிமுகப்படுத்தியவர். அதனை முதல் வரிசையில் நின்று கடுமை யாக எதிர்த்தவர் திராவிடர் கழகத் தலைவர் தான்.

1980இல் நடந்த மக்களவைத் தேர் தலில் அதன் காரணமாக எம்.ஜி.ஆர். பெருந் தோல்வியைச் சந்தித்த நிலையில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 31 சதவீ தத்தை 50 ஆக உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளார் என்பது வரலாறு.

தமிழர் தலைவர் வீரமணி அவர்களும், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் வருமான வரம்பு ஆணையைக் கடுமை யாக எதிர்த்தவர்கள் வருமான வரம்பு ஆணையை திராவிடர் கழகம் கொளுத்தி அதன் சாம்பலை கோட்டைக்கு அனுப்பி வைத்தார்களே!

தலைவர் கலைஞரின் சமூகநீதி உணர்வு

இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் பிற்படுத்தப்பட்டோர் என்பதையும் தாண்டி மிகவும் பிற்படுத் தப்பட்டோர் என்று தனியாகப் பிரித்து 108 ஜாதியினருக்கு 20 சதவீத இடஒதுக் கீட்டுக்கு வழி செய்யப்பட்டது? 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் தான்.

தந்தை பெரியார் பாசறையில் பயிற்சி பெற்ற காரணத்தால் தான் கலைஞர் அவர்களுக்கு அந்தவுணர்வு வந்தது.

சமூக நீதிக்கு வித்திட்டது பகவான் கிருஷ்ணனா?

இந்தச் சமூக நீதி உணர்வுக்கு வித் திட்டது பகவான் கிருஷ்ணனா? பகவான் கிருஷ்ணனை நம்பினால் அவனைப் போல மாடு மேய்க்கப் போக வேண்டியதுதான்.

இன்றைய தினம் இந்தியா முழுமைக் கும் இந்துத்துவா மேலாண்மை தலை தூக்கி நிற்கிறது. நம்முடைய பெயர்கள் எல்லாம்கூட சமஸ்கிருதமயமாக்கப்பட்டு விட்டன. தமிழனுக்குத் தாழ்வு மனப்பான்மை; இந்தத் தாழ்வு மனப்பான்மையைப் போக்கித் தன்மான உணர்வை ஊட்டிய தந்தை பெரியார் வழியில் அயராது பாடுபடுபவர் தமிழர் தலைவர்.

மூன்று முறை இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட தலைவர்

80 வயதில் உழைக்கிறார்; அவருக்கு மூன்று முறை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேறு யாராக இருந்தாலும் நமக்கு ஏன் பொதுப் பணி எதற்கு என்றுதான் ஒதுங்கிக் கொண்டு இருப்பார்கள்.

ஆனால் தமிழர் தலைவரோ அதைப்பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் உழைக்கிறார் - உழைத்துக் கொண்டே இருக்கிறார். அப்படிப்பட்ட தலைவரைத் தாக்க எப்படித்தான் மனம் வந்தது? அவரைத் தாக்கினாலும் அவர்களுக்காக - அவர்களைச் சார்ந்த சமுதாயத்தின் சமூக நீதிக்காகப் போராடுபவர்தான் தமிழர் தலைவர்.

கடவுளைப் பற்றி விமர்சனம் செய்யக் கூடாதா?

சமுதாய மாற்றம் விரும்புபவர்கள் எந்தப் பிரச்சினை குறித்தும் விமர்சனம் தான் செய்வார்கள். புராணங்களில் ஆபாசங்களை, கற்பனைகளை விளக்கித் தான் கூறுவார்கள். அதுவும் திராவிடர் கழகம் இன்று நேற்றா இந்தப் பிரச் சாரத்தைச் செய்கிறது?

இராமனைப்பற்றி அண்ணா, அம்பேத்கர் எழுதவில்லையா?

புராணமும், வரலாறும் ஒன்றா? அண்ணா, அம்பேத்கர் அவர்கள்கூட The Riddles of Hinduism

என்ற அருமையான நூலை எழுதி இருக்கிறார். ராமனையும், கிருஷ்ணனையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது அண்ணல் அம்பேத்கரின் நூல் களை பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய ஆவன செய்தார்; தமிழில்கூட 35 தொகுதிகள் வெளிவந்துள்ளன.

ஆனால் Riddles of Hinduism என்ற அண்ணலின் நூல் மட்டும் மொழியாக்கம் செய்யப்படவில்லை. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? தமிழில் மொழி பெயர்க்கப்பட்டால் தமிழின இளைஞர்கள் மத்தியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில், எழுச்சி ஏற்பட்டு விடும் என்ற நோக்கம் தானே!

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும்!

தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் தனித் தனியே கருத்துக்களை எடுத்துச் சொல் லியிருந்தாலும் அவை எல்லாம் ஒத்த கருத்துக்களாகத்தான் இருக்கின்றன.

ராமன் கற்பனை என்பது எல்லோருக் குமே தெரியும். முதல் அமைச்சர் ஜெய லலிதாவுக்கும் தெரியும்; சுப்பிரமணிய சாமிகளுக்கும் தான் தெரியாதா?
மக்களின் பாமரத்தனத்தை, மூடநம் பிக்கையைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்.

புராணமும் - வரலாறும் ஒன்றா?
வரலாறும் புராணமும் - ஒன்றா?

புராணக் கற்பனை என்பதால் தானே ராமன்பற்றி வரலாற்றுப் பாடத்தில் இடம் பெறச் செய்யவில்லை.

இதனைத் திராவிடர் கழகமும், விடு தலைச் சிறுத்தைகளும் எடுத்துக் காட் டும்போது ஏன் கோபம் வர வேண்டும்?

கண்ணியமான கூட்டம்

இதுபோல சந்தர்ப்பத்தில் கண்டனக் கூட்டம் போட்டால் அவன் - இவன் என்றுதான் பேசுவார்கள்.

நாகரிகத்தை நாட்டுக்குக் கற்றுக் கொடுத்த  தலைவரின் தொண்டர்கள் நடத்தும் கூட்டம் என்பதால் எல்லோரும் இங்குக் கண்ணியமாகப் பேசினார்கள் - வரம்பு மீறாமல் பேசினார்கள்.

மோடிக்குப் பாதுகாப்பு ஆசிரியருக்கு மறுப்பா?

இந்துத்துவாவைக் காப்பாற்றவரும் நரேந்திர மோடிக்குப் பலத்த பாதுகாப்பு கொடுக்க முடிகிறது. 80 ஆண்டில் 70 ஆண்டு இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக் காக அயராது பாடுபடும் தமிழர் தலைவ ருக்குப் பாதுகாப்புக் கொடுக்க தமிழ் நாடு அரசு மறுப்பது - ஏன்?

மோடியால் நம் மக்களுக்குச் சமூக நீதி கிடைத்ததா? தமிழர் தலைவரால் நமக்குச் சமூகநீதி கிடைத்ததா?

தமிழர் தலைவர் யாருக்கு எதிரி? ஆதிக்கவாதிகளுக்கு எதிரி! சமூகநீதி எதிர்ப்பாளர்களுக்கு எதிரி! தமிழ்  நாட்டு மக்கள் மத்தியில் அரசியலைத் தாண்டி மதிக்கப்படும் தன்மான இயக்கத்தின் தலைவர் ஆயிற்றே. அவருக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்க வேண்டியது அரசின் கடமையல்லவா!

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்!

இந்தக் கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். தமிழர் தலைவர்மீது தாக்குதல் தொடுத்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இவர்களின் பின்னணியில் இருந்த விருத்தாசலம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஓர் அணியில் திரளுவோம்!

சமூக நீதிக்காக தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்கள் ஓர் அணியில் நிற்போம் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் எம்.பி. அவர்கள்.



நரேந்திரமோடியை அறிவித்திருப்பது
பார்ப்பனர்களின் ஒரு யுக்தியே!

இன்றைக்கு ஒரு யுக்தியை இந்துத்துவாவாதிகள் மேற்கொண்டுள்ளனர். யுக்திகள்பற்றி நாம் எப்பொழுதும் கவலைப்படவில்லை.
நரேந்திர மோடியைப் பிரதமருக்கான வேட்பாளராக அறிவித்தது பி.ஜே.பி.கூட அல்ல. ஆர்.எஸ்.எஸ்.தான் அவரைப் பிரதமருக்கான வேட்பாளர் என்று கட்டளையிட்டுள்ளது.

ஒரு முறை அகில இந்திய பி.ஜே.பி.யின் தலைவராக பங்காரு லட்சுமணன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை அறிவித்தார்கள். அது ஒரு ஸ்ட்ரேட்டஜி (strategy).
இபபொழுது நரேந்திர மோடி என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை பிரதமருக்கான வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளனர்.

மோடி என்ன பார்ப்பனரா? ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வரையல்லவா பிரதமருக்கான வேட்பாளராக நிறுத்தியுள்ளோம் என்று தந்திரமாகக் கூறுவார்கள். இதில் நாம் ஏமாந்துவிடக் கூடாது.
ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்தநிலையிலேயே இரண்டாயிரத் துக்கும் மேற்பட்ட முஸ்லீம்களைக் கொடூரமான முறையில் கொன்று குவித்தவர் அவர். இத்தகைய ஒருவர் பிரதமரானால் குஜராத்தில் அவரால் நடத்திக் காட்டப்பட்டதை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்த மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இந்தியாவின் ராஜபக்சேதான் நரேந்திரமோடி!
 
மனித உரிமைக்கு எதிராகச் செயல்பட்டார் என்பதால்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் விசா கொடுக்க மறுத்து வருகின்றன. அமெரிக்காவுக்குத் தெரிந்தது -  நம் நாட்டு மக்களுக்குத் தெரியாதா? தெரிய வேண்டாமா? இந்தியாவில் நடப்பது அதிபர் தேர்தல் அல்ல - முன்கூட்டியே வேட்பாளரை அறிவிப்பதற்கு.

இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் - வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர். இதுபற்றி எல்லாம் இந்த நாட்டு ஊடகங்களுக்குத் தெரியாதா? ஏன் அதுபற்றி எல்லாம் எழுதப்பட வில்லையா? பார்ப்பனர்களின் யுக்தியை பார்ப்பனர் அல்லாத மக்கள் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் சிறுபான்மையினர்,  புரிந்து கொள்ள வேண்டும்.

- சென்னை மந்தைவெளியில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் 3.10.2013



கோவணம் கட்டிக் கொண்டு ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்போம்!

ஆசிரியர் தாக்குதலுக்கு ஆளானார் என்று கேள்விபட்டபோது பதறிப் போனேன். தொலைப்பேசி மூலம் உடனே தொடர்பு கொண்டேன். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களோடு தொடர்பு கொண்டு விருத்தாசலத்தில் நடந்தது பற்றி அறிந்து கொண்டேன்; பிற்பகலுக்கு மேல்தான் ஆசிரியர் அவர்களிடம் தொடர்பு கிடைத்தது.

எனது அதிர்ச்சியைத் தெரிவித்தேன். அப்பொழுதுகூட சிறிதும் பதற்றம் இல்லாமல் என்னைத் தேற்றினார்.

யார்மீதும் அவர் குற்றம் சொல்லவில்லை. பொதுத் தொண்டில் இதெல்லாம் சகஜம் என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார். அத்தகைய முதிர்ச்சி மிக்க தலைவர் அவர். அந்தச் சூழ்நிலையில் தம் இயக்கத் தோழர்கள் உணர்ச்சி வயப்பட அவர் இடம் கொடுக்கவில்லை. தாக்கப்பட்ட பிறகும்கூட மாநாட்டில் தொடர்ந்து பேசியிருக்கிறார். கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.

தந்தை பெரியார் காலத்திலும் சரி, அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழர் தலைவரும் சரி - அவர்கள் இந்தச் சமுதாயப் பணியை ஆற்றத் தவறியிருந்தால் நம் நிலை என்ன?

நீயும் நானும் கோவணம் கட்டிக் கொண்டு ஆடு, மாடுகளைத்தானே மேய்த்துக் கொண்டு இருந்திருப்போம்.

கிருஷ்ணனுக்காக வக்காலத்து வாங்குபவர்களைக் கேட்கிறோம் கிருஷ்ணன் யார்? அவனும் ஆடு மாடு மேய்த்தவன் தானே!

கிருஷ்ணனைக் குல தெய்வமாகக் கொண்டவர்கள் கிருஷ்ணனைப் போல ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு கிடக்கக் கூடாது. அவர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி வாய்ப்பும், உத்தியோக வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சமூக நீதி கோரி போராடிய தலைவரைத் தாக்கிட எப்படித்தான் மனம் வந்தது?

-------------------------- சென்னை மந்தைவெளிக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் -------"விடுதலை” 04-10-2013
               

23 comments:

தமிழ் ஓவியா said...


அவசியம்


மூட நம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம்.
(விடுதலை, 12.10.1967)

தமிழ் ஓவியா said...


அவசியம்


மூட நம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம்.
(விடுதலை, 12.10.1967)

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத் தலைவர்மீது மதவெறிக் கும்பல் தாக்குவதா?


பிரபஞ்சன், எஸ்.வி. இராசதுரை, பேரா. அ. மார்க்ஸ் உள்ளிட்ட பெரு மக்கள் கண்டனம்!

சென்னை அக். 05- திராவிடர் கழகத் தலைவரைத் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து சமூக ஆர்வலர் கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று விருத்தாச்சலத்தில் நடை பெற்ற கடலூர் மண்டல மாணவர் மாநாட்டிற்குச் சென்ற தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வந்த வாகனத்தை காவிக் கொடி ஏந்திய வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கியுள் ளது. தேசிய யாதவர் மகாசபை என் னும் அமைப்புடன், இந்து முன்னணி முதலான இந்துத்துவ அமைப்புகள் இதில் பங்குபெற்றுள்ளன.

தாக்கியவர்களை ஒன்றும் செய் யாத காவல்துறையினர், ஆசிரியரைக் காப்பாற்ற ஓடி வந்த தி.க தொண் டர்களைத் தாக்கியுள்ளனர். எனினும் அமைதியாக இருக்குமாறு கி.வீரமணி அவர்கள் வேண்டிக் கொண்டதை ஏற்று மாநாடு சிறப்புற நடந்துள்ளது.
வீரமணி அவர்கள் வந்த வாக னத்தை மதவெறியர்கள் தாக்கியது, காப்பாற்ற ஒடி வந்த தொண்டர்களை காவல்துறையினர் தாக்கியது என இரு புகார்கள் கொடுக்கப்பட்டும், காவல் துறையினர் முதல் புகாரை மட்டுமே பதிவு செய்துள்ளதாக அறிகிறோம். அந்தப் புகாரின் அடிப்படையிலும் இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை.

காவல்துறையினரின் ஒப்புதலுடன்

காவல்துறையினரின் ஒப்புதலு டனேயே இத் தாக்குதல் நடைபெற் றுள்ளது என்கிற அய்யம் உள்ளது. முன்னதாக அப்பகுதி டி.எஸ்.பி வெங்கடேசன், ஊர்வலத்திற்கு அனு மதி மறுத்துள்ளார். எனினும் மேலதி காரிகளைத் தொடர்பு கொண்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. விருத் தாச்சலம் என்பது ஒரு சிறிய ஊர். தாக்குதல் நடத்திய கும்பலைக் கண்டுபிடித்து கைது செய்வது மிக எளிதான ஒன்று. ஆனால் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாதது கடுமையாகக் கண்டிக்கத் தக்கது.

இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந் திக்கு அரசியல் தலைவர்கள் எல்லாம் வாழ்த்துத் தெரிவித்தபோது வீரமணி அவர்கள் மட்டும் வருணாசிரமத் தையும், வருண அடிப்படையிலான தொழில் மற்றும் ஏற்றத் தாழ்வு களையும் நியாயப்படுத்திய கிருஷ்ண னின் பிறந்த நாளை ஏன் தமிழக மக்கள் கொண்டாட வேண்டும் என்கிற பொருள்பட வெளியிட்ட அறிக்கையே தாக்குதலின் உடனடிக் காரணமாக இருந்ததாகத் தெரிகிறது. இந்த அறிக்கையைக் கண்டித்துக் கடுமையாக ஒரு சிலர் தொலைக் காட்சியில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியும் உள்ளனர். தந்தை பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட திராவிடர் கழகம், சுமார் ஒரு நூற் றாண்டு காலமாக வருணாசிரம எதிர்ப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம் ஆகியவற்றை உலக அளவில் ஒரு முன்னுதாரணமாகச் செய்து வருகிறது. எந்நாளும் அவர்கள் வன்முறையைக் கையில் எடுத்ததாக வரலாறே கிடையாது. எனினும் ஆணித்தரமான அவர்களின் வாதங்களுக்குப் பதில் சொல்ல இயலாதவர்கள் இப்படியான வன்முறைகளைப் தந்தை பெரியாரின் காலந் தொட்டே மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் மாநாடு நடத்துவது, கருத்துக்களைப் பிரச் சாரம் செய்வது என்பதெல்லாம் நமது அடிப்படை உரிமைகள். மதவெறிக் கும்பல்கள் இவ்வாறு கருத்துப் பிரச் சாரங்களுக்கு எதிராக வன்முறை விளைவிப்பதும் அதற்குக் காவல் துறையினர் துணை போவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கன,

தமிழக அரசு உடனடியாக நட வடிக்கை மேற்கொண்டு வன்முறை யாளர்களைக் கைது செய்ய வேண் டும். வன்முறையாளர்களுக்கு ஆதர வாக மெத்தனம் காட்டும் காவல் துறையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

சமூக ஆர்வலர்கள்

பிரபஞ்சன், (மூத்த எழுத்தாளர், சென்னை),

அறிஞர் எஸ்.வி. இராசதுரை, (மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி),

பேரா. அ.மார்க்ஸ், (மனித உரிமை களுக்கான மக்கள் கழகம், சென்னை),

கோ.சுகுமாரன், (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி),

பேரா. பிரபா.கல்விமணி, (பழங் குடி இருளர் பாதுகாப்பு சங்கம், திண்டிவனம்),

வழக்குரைஞர் பொ.இரத்தினம், (உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர், மதுரை)

வழக்குரைஞர் ரஜினி, (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், மதுரை)

வழக்குரைஞர் தய்.கந்தசாமி, ( தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப் பூண்டி)

வழக்குரைஞர் மனோகரன், (மக்கள் வழக்குரைஞர் சங்கம், சென்னை)

வழக்குரைஞர் கி. நடராசன், (மக்கள் வழக்குரைஞர் சங்கம், சென்னை),

கல்வியாளர் முனைவர் ப.சிவகுமார், (முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை),

கல்வியாளர் பேரா.மு. திருமாவள வன், (முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை),

சுகுணா திவாகர், (பத்திரிகை யாளர், சென்னை)

பேரா. சே.கோச்சடை, (மக்கள் சிவில் உரிமைக் கழகம், காரைக்குடி)

விடுதலை வீரன், (அமைப்புச் செய லாளர், ஆதித் தமிழர் பேரவை, மதுரை) தொடர்பு: அ.மார்க்ஸ், 3/5.முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை- 20. செல்: 9444120582

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தாக்கப்பட்டது ஜனநாயக விரோத செயல் சி.பி.எம். கண்டனம்



சென்னை, அக். 5- திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி மீது நடந்த தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற் குழுக்கூட்டம் 2 நாள் கூட்டம் சென்னையில் வியாழனன்றுதுவங்கியது. மாநில செயற்குழு உறுப் பினர் கே.கனகராஜ் கூட் டத்திற்கு தலைமை வகித் தார். இக்கூட்டத்தில் கட்சியின்அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் கே.வரதராசன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப் பினர்கள் டி.கே.ரங்க ராஜன் எம்.பி., பி.சம்பத், உ.வாசுகி, அ.சவுந்தர ராசன்எம்எல்ஏ, கே.பால கிருஷ்ணன் எம்எல்ஏ மற்றும் மாநில செயற் குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள் பின்வருமாறு: திராவிடர் கழகத் தலை வர் திரு.கி.வீரமணி அவர்கள் விருத்தாச்சலத் தில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றபோது பாலக் கரை அருகே அவரு டைய வாகனத்தையும் உடன் வந்த வாகனங் களையும் தாக்குவதற்கு சிலர் முயன்றிருக்கிறார் கள். கருத்துக்களை வன் முறையின் மூலம் எதிர் கொள்ளும் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை அனுமதிக்க கூடாது. கி.வீரமணி தாக் கப்பட்ட இந்த ஜன நாயக விரோதச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. வன்முறை யாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில காவல்துறையை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தோழர் இந்திரஜித் கண்டனம்

திருச்சியில் நேற்று (4.10.2013) நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி மாவட்ட சி.பி.அய். செயலாளர் இந்திரஜித் தம் கண்ட னத்தைப் பதிவு செய்தார். திராவிடர் கழகத் தலைவர் மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோயில் சிலைகள் கொள்ளை



கோபி, அக்.5- கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையம் அய்யப்பா நகர் பகுதியில் சுமார் 100 ஆண்டு பழமையான லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிறீதேவி, பூதேவி மற்றும் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சுமார் 1.5 அடி உயரத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அய்ம்பொன் சிலைகள் இருந்தன. ஆண்டு தோறும் புரட்டாசி மற்றும் முக்கிய நாட்களில் அய்ம்பொன் சிலைகளை வைத்து வழிபடுவதும் பிறகு அவற்றை மடப்பள்ளிகளில் பாதுகாப்பாக வைப்பதும் வழக்கமாம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் அர்ச்சகர் கோயிலை பூட்டி விட்டு சென்று விட்டார். மாலை வந்து பார்த்த போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு 3 அய்ம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. புகாரின் பேரில் பங்களாபுதூர் காவல்துறையில் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின் றனர். தகவலறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை பார்வையிட்டு விசாரித்தனர்.

தமிழ் ஓவியா said...


பெரியாரின் கொள்கை வாரிசு மானமிகு வீரமணி அவர்களைத் தாக்குவதா?


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் கண்டனம்

சென்னை, அக்.5- திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணிமீது தாக்குதல் நடந்துள்ள முயற்சிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ் லீம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநி லத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், விருத்தாசலத் தில், சமூக விரோதி களால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்னும் செய்தி அறிய மிகவும் வேதனையாக இருக்கிறது.

பகுத்தறிவு சிந்த னையை தமிழக மக் களுக்கு பாலூட்டும் தாயைப் போல் இருந்து பரப்பி வந்தவர் பெரி யார் அவர்கள். அந்தப் பெரியார் இல்லாதிருப் பராகில், தமிழ்நாடு பண்பாடற்ற காடாகத் தான் காட்சி தந்திருக் கும். பகுத்தறிவு ஒளி விளக்கை ஊரெல்லாம் உள்ளமெல்லாம் ஏற்றி வைத்துச் சென்ற பெரி யாரின் வாரிசானவர் அவரின் கொள்கையை பரப்புவதே தனது வாழ்க்கை லட்சியம் என வாழும் மானமிகு வீரமணி அவர்களை தாக்குவதற்கு மனம் எப்படித் துணிந்தது என்று தெரியவில்லை.

தேவை நடவடிக்கை

தமிழகத்திலும், அமைதியைக் கெடுத்து, அட்டூழியத்தை வளர்ப் பதற்கு மதவாத சக்திகள் தலையெடுத்து வருகின் றன என்பதற்கு அடை யாளம்தான் இந்த வன் முறை. இத்தகைய பண் பாடற்ற வன்முறையை இந்திய யூனியன் முஸ்லீ ம் லீக் வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற நிகழ்வு ஒரு போதும் நடக்க விடாது தடுப்பதும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதும் தமிழக காவல்துறையின் கடமையாகும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்


ஏழமலையானுக்குச் சிக்கல்!

தெலுங்கானா பிரச்சினை காரணமாக ஆந்திரா வில் 3 நாள் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்துக்கு பக்தர்கள் வருவதில் சிக்கலாம் (வசூல் குறைந்து விடும் என்ற கவலை! தீராத வினைகளைத் தீர்க்கும் கோவிந்தம் தனக்கு வந்த வினையைத் தீர்க்க மாட்டாரோ!)

தாக்கியவர் பெண்

சென்னையை அடுத்த ஆவடி சேக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயபாக்கியம் என்ற பெண்மணி தன் மகனுக்காக ஜாதி சான்றிதழ் கேட்டார் கிராம நிர்வாக அதிகாரியிடம். காலதாமதம் செய்ததால் அதிகாரியை ஜெயபாக்கியம் தாக்கியுள்ளார். (தாக்கியது தவறுதான். ஆனாலும் அதிகாரிகள் உரிய நேரத்தில் தன் கடமையைச் செய்யத் தவறினால், இத்தகு அசம்பாவிதங்கள் தவிர்க்க முடியாததாகி விடும். பெண்கள் மத்தியிலும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதே).

மூக்கறுப்பு

அச்சிறுபாக்கம் அருகே மூதாட்டியின் காது, மூக்கை அறுத்து நகைகளைப் பறித்துச் சென்றனர் என்பது செய்தி. (மூதாட்டிக்கு மூக்கறுப்பு என்பதை விட நாட்டின் சட்டம் ஒழுங்குக்குத்தான் மூக்கறுப்பு!)

தேவேகவுடா

ஊழல் கறை படிந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடன், ஊடகங்கள் நரேந்திர மோடியை வளர்த்து வருகின்றன. மதவாதம் மற்றும் ஊழல் வாதத்தில் கவலைதான் நரேந்திரமோடி. இவை இரண்டும் நாட்டுக்குக் கேடு விளைவிக்கும்.
(மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவர் என்பதைக் காலந் தாழ்ந்தாவது நிரூபித்து விட்டார் - சபாஷ்!)

தடுப்பு

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நீரைத் தடுக்க 7 ஆம் தேதி போராட்டம் நடத்திட ஆந்திரப் போராட்டக் குழு அறிவித்துள்ளது. (தமிழ்நாட்டின் வயிற்றில் அடிப்பதற்கென்று நாலு திசையிலும் ஆசாமிகள் இருக்கிறார்கள்).

ஒழுக்க சீலர்கள்!

நண்பர்களைத் திருப்திபடுத்த இளம் பெண்களின் அரை நிர்வாண நடனத்தை கருநாடகாவில் பீதர் மாவட்ட பிஜேபி செயலாளர் பாபு வாலி ஏற்பாடு! (தார்மீகப் பண்பு மிகுந்தது - பிஜேபி என்பதை நம்பித் தொலையுங்கள்)

தமிழ் ஓவியா said...


செயங்கொண்டம் வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்

செயங்கொண்டம், அக். 5- விருத்தாசலம் காவல் நிலையத்தில் வழக்குரைஞரைத் தாக்கியதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்
3.10.2013 அன்று காலை 10 மணியளவில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்குரைஞர்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் எஸ்.எம்.அன்புமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் கடந்த 28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடை பெற்ற அரசியல் கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரவு 11 மணியளவில் ஜெயங்கொண்டம் திரும்புவதற்கு விருத்தாசலம் பாலக்கரையடுத்த நான்கு ரோட்டில் அரியலூர் மாவட்டம், உடை யார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் எம்.இராசா அவர்கள் வரும்போது அங்கிருந்த விருத்தாசலம் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் வழக்கறிஞர் என நன்கு தெரிந்து ஒருமையில் காமக் குரோத வார்த்தைகளால் திட்டி, நெட்டித் தள்ளி அவமானப்படுத்தி, வழக்கறிஞர் என்றால் பெரிய கொம்பா என திட்டியபோது, அவருக்கு உடந்தை யாக உடனிருந்த பண்ருட்டி துணைக் கண்காணிப் பாளர், மற்றும் காவல்துறை உயரதிகாரிகளையும் கண்டிக்கும் வகையிலும், முறையான விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டியும் 3.10.2013 அன்று ஒரு நாள் மட்டும் நீதிமன்றப் புறக்கணிப்பினை நமது சங்கமும் மேற்கொள்வதென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வழக்குரைஞர் புகார்

அய்யா, வணக்கம்.

நான் செயங்கொண்டத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறேன். திராவிடர் கழகத்தில் திருச்சி மண்டல இளைஞரணி செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறேன். கடந்த 28.9.2013 அன்று நான் விருத்தாசலத்தில் நடந்த கடலூர் மண்டல மாண வரணி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு செயங் கொண்டம் திரும்பிக் கொண்டிருந்தபோது விருத்தாசலத்தைச் சேர்ந்த இளந்திரையன், கதிரவன் என்ற தோழர்கள் தங்களை காவல்துறையினர் வழிமறித்து மிரட்டுவதாக போனில் தெரிவித்தனர். நான் மீண்டும் விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட போலீசார் நின்று கொண்டு இளந் திரையன் மற்றும் கதிரவன் ஆகியோரை பார்த்து னுளுஞ வெங்கடேசன் என்னடா? விருத்தாசலத்தில் தி.கா.காரன் எல்லாம் ரவுடியிசம் செய்கிறீர்களா நான் நினைத்தால் உங்களை உள்ளூர் ரவுடிகளை வைத்தே காலி செய்துவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்தார். அவர்களின் அருகிலேயே கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அவரது காரில் அமர்ந்திருந்தார். அப்போது, நான் னுளுஞ வெங்கடேசன் அவர்களை பார்த்து சார் என்ன பிரச்சினை ஏன் அவர்களை மிரட்டுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர் நீ யாருடா என்னை கேட்பதற்கு என்று என்னை நோக்கி வந்தார். நான் வழக்குரைஞர் என்றேன். அதற்கு அவர் நீ என்னடா பெரிய வக்கீல், உன்னால் என்ன செய்ய முடியும் நீ வக்கீல் என்றால் கோர்ட்டில் தான் உன்னை இங்கேயே காலி செய்து விடுவேன் என்று என் நெஞ்சில் கை வைத்து நெட்டித் தள்ளினார். அவருக்கு பின்னால் இருந்து ஒருவர் ஏய் என்று சொல்லி கையை ஓங்கிக் கொண்டு வந்தார். பின்னர் விசாரித்த போது அவர் பண்ருட்டி காவல் துறை துணை கண்காணிப்பாளர் என தெரியவந்தது. மேற்படி சம்பவங்கள் அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கண் பார்வை யிலேயே நடைபெற்றது. எனவே என்னை வழக் குரைஞர் என்றும் பாராமல் பேசி அதிகார துஷ்பிர யோகம் செய்து கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயன்ற விருத்தாசலம் காவல் துணைக் கண்காணிப் பாளர் வெங்கடேசன், பண்ருட்டி துணை கண் காணிப் பாளர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
எம்.இராசா

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் ஜோசப்பின் குட்டிக்கரணம்


சென்னை அரசாங்கத்தில் கிறிஸ்தவர் என்கிற சலுகையின் பேரில் ஸ்ரீமான் ஆரோக்கியசாமி முதலியாருக்கு மந்திரி பதவி கிடைத்ததிலிருந்து ஸ்ரீமான் நமது ஜோசப்புக்கு நாக்கில் தண்ணீர் சொட்ட ஆரம்பித்து விட்டது. அதோடு மாத்திரமல்லால் அந்த மந்திரி பதவி பார்ப்பனர்கள் மூலமாகத் தான் விற்கப்படுகிறதென்கிற தீர்மானமும் ஏற்பட்டு விட்டது. அதோடு கூட அம்மாதிரி பதவிக்கு பார்ப்பனர்களுக்குக் கொடுக்க வேண்டிய விலை ஜஸ்டிஸ் கட்சியைத் திட்டி பார்ப்பன ரல்லாதாரை காட்டிக்கொடுக்க வேண்டியது தான் என்கிற முடிவும் அவருக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சமீபத்தில் மதுரையில் பேசினதும் ஸ்ரீ சத்தியமூர்த்தியைப் புகழ்ந்ததும் மற்றும் அவர் தெரிவித்த அபிப்பிராயமும், ஸ்ரீமான் ஜோசப்பின் புதிய பிறப்பைக் காட்டுகிறது. ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை ஒரு மனிதர் புகழ்வாரானால் அம்மனிதருடைய யோக்கி யதை இன்னதென்று நாம் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. உதாரணமாக மலம் நல்ல வாசனை யாயிருக்கிறதென்று ஒருவர் சொல்லுவாரா னால் அவர் மூக்கின் யோக்கியதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? என்ற பழமொழி ஒன்றுண்டு.

அதுபோலவே ஸ்ரீமான் சத்திய மூர்த்தியின் யோக்கியப் பொறுப்பும், நாணயமும் நன்றாக அறிந்த ஸ்ரீமான் ஜோசப்பு அவர்கள் அவரைப் புகழ்வதும் சுயராஜ்யக் கட்சியின் யோக்கிய தையும், தென்னாட்டுப் பார்ப்பனர்களின் யோக்கி யதையும் நன்றாக அறிந்த ஸ்ரீமான் ஜோசப்பு இவைகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசவதுமானால் பீசு இல்லாமல் பேசுகிறார் என்று யாராவது நினைக்க முடியுமா? இதன் பயனாக கிறிஸ்தவர் என்கிற முறையில் ஸ்ரீமான் ஜோசப்புக்கு ஒரு சமயம் மந்திரி உத்தியோகம் அல்லது அதற்குச் சமானமான பதவி கிடைப்பதாயிருந்தாலும் ஸ்ரீமான்ஜோசப்பின் வாழ்க்கையின் பெருமை அடியோடு ஒழிந்து போகுமென்றே பயப்படு கின்றோம்.

இந்து மதம் என்கிற புரட்டை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள், தாங்கள் பெரிய ஜாதியார்கள் என்று சொல்லிக் கொண்டும் அம்மதத்தினர் என்பவர்களுக் குள்ளாகவே தாங்களொழிந்த மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியாராக்கி நிரந்தரமாய்ப் பிழைக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அரசியல் இயக்கம் என்பவைகளிலுள்ள சூழ்ச்சியை வெளிப்படுத்தப் பார்ப்பனரல்லாதார் பார்ப்ப னருடன் சண்டை இடும் போது ஸ்ரீமான் ஜோசப் போன்றவர்கள் இரு (ஆட்டுக்குட்டி) வர் சண்டை யிலிருந்து ஒழுகும் இரத்தத்தைக் குடிக்கும் (குள்ளநரியாக) வீரராகத் தோன்றியது மிகவும் பழிசொல்லத்தக்க காரியம்.

தேசாபிமானம் என்பதற்கு ஸ்ரீமான் ஜோசப் என்ன பொருள் கொண்டிருக்கிறார் என்பது விளங்கவில்லை. தென்னாட்டுப் பார்ப்பனர்களின் அயோக் கியத் தனத்தைத்தான் ஸ்ரீமான் ஜோசப் அவர்கள் தேசாபிமானம் என்று கொள்வாரா னால் அவரையும் பார்ப்பனக் கூட்டத்தில் சேர்த்துத்தான் கணக்கு பார்க்கவேண்டும், ஏனெனில் ஸ்ரீமான் ஜோசப்புக்கும் பார்ப்பன ருடன் சேருவதற்கு உரிமையுண்டு.

என்ன வென்றால் இந்துக்களில் பார்ப்பனரல்லா தார் அதிகமானவர்கள், பார்ப்பனர்கள் மிகுந்த குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள், அதிக எண்ணிக்கை உள்ளவர்கள் எய்தி ஆதிக்கம் பெற வேண்டுமானால் ஏதாவது ஒரு சூழ்ச்சியின் மூலம் தான் முடியும் என்பது பார்ப்பனர்களின் முடிவு.

அது போலவே ஸ்ரீமான் ஜோசப் அவர்களும் தங்கள் குறைந்த எண்ணிக் கையை உத்தேசிக்கும் போது தாங்களாகத் தனித்த ஒரு தந்திரமோ அல்லது பார்ப்பனர் களின் தந்திரத்தில் கூட்டு வியாபாரமோ செய்ய வேண்டியதுதான் கிரமமானது என்கிற முடிவுக்கு வரவேண்டியவர்தான். ஆனால் யோக்கியமான முறையில் கிடைக்காத எந்த ஆதிக்கமும் நிலைக்காது என்பதும், நிலைத் தாலும் வாசனையுள்ளதாயிருக்காது என்பதும் எமது துணிவு.

- குடிஅரசு - கட்டுரை - 19.06.1927

தமிழ் ஓவியா said...


மலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள்


சேலம் ஜில்லாபோர்டு தலைமைப் பதவிக்குத் திருவாளர் எல்லப்ப செட்டியார் அவர்கள் வரக்கூடாதென்பதற்காக சேலத்திலுள்ள சில பார்ப்பனர்களும், அவர்களது தயவில் முன்னுக்கு வரலாமென்று கருதி அவர்களது வாலைப்-பிடித்துக்கொண்டு திரியும் சில பார்ப்பனரல் லாதார்களும் ஒன்றுகூடிச் சுயமரியாதைக்குப் பங்கமுண்டுபண்ணும் கூட்டத்திற்கனுதாபம் காட்டி வருகிற மந்திரியைப் பிடித்துக் கசக்கி என்னென்னமோ சூழ்ச்சிகளெல்லாம் செய்து பார்த்தும் வேண்டு மென்றே மனச்சாட்சிக்கு விரோதமான எத்தனையோ அக்கிரம மான உத்தரவுகைளப் போடச்செய்து கடைசியாக கனம் மந்திரி சுப்பராயனுடைய அக்கிரமங்களையும் ஜெயித்து திருவாளர் எல்லப்ப செட்டியாருடைய (தலைவர்) தேர்தல் சர்க்காரால் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது. பார்ப்பனர்களால் செய்யப்பட்ட இவ்வளவு சூழ்ச்சிகளாலும் கனம் சுப்பராயரின் மந்திரி தன்மை தன்மானங்கெட்டு நாடு சிரிக்கயேற்பட்டதுதானே தவிர பார்ப்பனர்களுக்காவது திரு. எல்லப்ப செட்டியாருக்காவது ஒருவித நஷ்டமும் ஏற்பட்டு விடவில்லை.

நமது நாட்டுச் சரித்திரத்தில் ஆயிரக்கணக்கான வருடங்கள் தொட்டு நாளது வரையில் யாராவது ஒரு பார்ப்பனரல்லாதார் எந்தப் பார்ப்பனருடைய பேச்சையாவது கேட்டு யோக்கியமடைந்ததாகவாவது முன்னுக்கு வந்ததாகவாவது, எந்த ஆதாரத்தைக் கொண்டாவது ருஜுப்பிக்க முடியுமா? பார்ப்பனரல்லாதாரை ஒழிப்பதற்காக பார்ப்பனர்களுக்குக் கை ஆயுதமாக இருந்த பார்ப்பனரல்லா தார்களில் யாராவது ஒருவர் பார்ப்பனர்களால் சபிக்கப்படாமலும், தூஷிக்கப் படாமலும் தப்பித்துக் கொண்டவர்கள் ஒருவராவது இருக்கிறார்களா? இன்றைய தினம் பார்ப்பனர்களாலும் அவர்கள் பத்திரிகைகளாலும் வசை கேட்டுக் கொண்டிருக்கும் தேசிய வீரர்கள்.

தேச பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர் களெல்லாம் ஒரு காலத்தில் பார்ப்பனர்களின் கை ஆயுதங்களாக இருந்து கொண்டு தேச பக்தர்கள், தேசாபிமானிகள் தலைவர்கள் பிரமரிஷி ராஜரிஷி என்கிற பெருமையை அடைந்து கொண்டு இருந்தவர்கள்தான் ஆயினும் பார்ப்பனர்கள் தங்கள் வேலை முடிந்தவுடனே திடீரென்று கீழே தூக்கிப்போட்டு மிதித்து விடுகிறார்கள். உதாரணமாக இப்பொழுது நமது நாட்டிலுள்ள பார்ப்பனர்களெல்லாம் ஒரே அடியாய் ஸ்ரீமான்கள் ஷண்முகம் செட்டியார், வரதராஜுலு நாயுடு, எஸ்.முத்தையா முதலியார் ஆகியவர்களை வைத வண்ணமாக இருக்கிறார்கள்.

இவர்களை இதே பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம் தூக்கிவைத்து கவி பாடிக்கொண்டு பின்னால் திரிந்தார்கள் என்பது ஜனங்கட்குத் தெரியும். பார்ப்பனர்கள் தனியாய் எங்கேயாவது போனால் பொது ஜனங்களால் கல்லடி சாணி உருண்டை முதலிய மரியாதைகள் கிடைக்கும் என்று தோன்றுகிற இடங்களுக்கெல்லாம் மேற்படி கனவான்களைக் கூட்டிக்கொண்டு போவதும் அவர்களை வண்டியில் வைத்து இழுப்பதும், ஜே! போடுவதும் அவர்களது படங்களை பள்ளி அறையில் வைத்துப் பூஜித்து விட்டும் கொஞ்சமாவது இவர்களுடைய அக்கிரமங்களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்து விட்டால் உடனே அவர்கள் மேல் கத்தி தீட்டுவதுமான செய்கைகளை நாம் பார்த்துக் கொண்டே வருகிறோம்.

அல்லாமலும் சுயமரியாதையுள்ள எந்தப் பார்ப்பனரல்லாதாரை யாவது தங்களுடன் சேர்த்துக் கொண்டோ அல்லது வையாமலாவது இருக் கிறார்களா என்பதைப் பார்த்தால் இது அனுபவத்தில் தெரியவரும். இவற்றை எதற்காகச் சொல்லுகிறோமென்றால் இதே ஸ்ரீமான் சுப்பராயன் அவர்கட்கும் சேலத்தில் உள்ள அவரது கோஷ்டிக்கும் கொஞ்சம் சுயமரியாதை உதயமான உடனே இவர்கள் பேரிலும் இதே பார்ப்பனர்கள் கத்தி தீட்டுவார்களென்பதை அறிவுறுத்துவதற்காகவேயன்றி வேறல்ல.

திரு. எல்லப்ப செட்டியார் வெற்றியானது பார்ப்பன சூழ்ச்சியின் தன்மையை வெளிப்படுத்தவும், பார்ப்பன சூழ்ச்சியின்று தப்புவதானால் எவ்வளவு பிரயாசை இருக்கிறதென்பதை வெளிக்காட்டவும் ஒரு அறி குறியாகக் கொள்ளலாமே யல்லாமல் மற்றபடி பிரமாதமாய் பாராட்டத்தகுந்த விஷயம் அதில் ஒன்று மில்லை என்பதே எமது அபிப்பிராயம்.

- குடிஅரசு - கட்டுரை - 19.06.1927

தமிழ் ஓவியா said...

ஈரோடு முனிசிபாலிட்டி

ஈரோடு முனிசிபல் சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள் மீட்டிங்கு கூட்டிய விதத்தைப் பற்றி சென்ற வாரம் எழுதி இருந்தோம். அதாவது, சில கவுன்சிலர்கள் முனிசிபாலிடியில் இருப்பதால் ஸ்ரீமான் முதலியாரின் நன்மைக்கும் மற்றும் சில காரியம் செய்வதற்கும் தடையாய் இருப்பதாகக் கருதி அவர்களை நீக்கிவிடவேண்டி ஒரு மீட்டிங்கை ஒரு நாள் 5.30 மணிக்கு கூட்டி 5 மணிக்கே தான் ஆபீசுக்கு வந்து கோரம் இல்லை என்பதாக மீட்டிங்கை ஒத்தி வைத்துவிட்டு வேறுயாரும் வந்து மீட்டிங்கு நடத்தாமல் இருக்கும் பொருட்டு காவலாக தாம் வெளியில் வந்து நின்றுகொண்டு இருந்ததும், கவுன்சிலர்கள் வந்து சண்டை போட்டதுமான விஷயங்களைப் பற்றி ஒரு நிருபர் எழுதியதை சென்ற வாரம் எழுதி ஒரு குறிப்பும் போட்டிருந்தோம்.

இப்போது அதற்கேற்றார்ப் போலவே, இவ்வாரம் ஒரு அவசர மீட்டிங்கு போட்டு ஒரு கவுன்சிலரை மூன்று மீட்டிங்குக்கு வராததால் அவர் நீக்கப்பட்டுவிட்டதாக தானே ஏற்பாடு செய்து கொண்டு அவருக்கு நோட்டீசு தராமல் மீட்டிங் கூட்டிவிட்டார். அதற்குள் அக்கவுன் சிலர் விஷயம் தெரிந்து தானாகவே போய் உட்கார்ந்து கொண் டிருக்கையில் அவரை வெளியே போகும்படி கட்டாயப்படுத்தி வெளியாக்கி விட்டு தனது சவுகரியத்திற்கேற்றபடி இரண்டொரு தீர்மானத்தைச் செய்து பலனடைந்து கொண்டார்.

அது எப்படியோ இருக்கட்டும். வெளிப்படுத்தப்பட்ட கவுன்சிலர் உடனே சென்னைக்குச் சென்று அய்க்கோர்ட்டில் விண்ணப்பம் போட்டு சேர்மென் நடவடிக்கை சரியில்லை என்பதாக வாதாடி தாம் கவுன்சிலராக இருக்கலாம் என்பதாக உத்தரவு பெற்று வந்து விட்டார்.

இது மற்ற பத்திரிகைகளில் வந்திருக்கிறது. இந்தியர்கள் சுயஆட்சிக்கு அருகதை உள்ளவர்கள் என்பதும், வெள்ளைக்காரர்கள் நமது நிர்வாகத்தை மேற்பார்வை பார்க்க யோக்கியதை உள்ள தர்மகர்த்தர்கள் என்பதும் ருஜுவு செய்ய நமது மந்திரி கனம் சுப்பராயன் அவர்கள் நமது சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள் நமது ஈரோடு முனிசிபாலிட்டியில் உள்ள கவுன்சிலர்கள், பாதிரியார் உள்பட அவரது நண்பர்கள் அந்த ஆபீசிலுள்ள சிப்பந்திகள் நமது ஜில்லா கலெக்டர் ஸ்ரீமான் காக்சு துரை அவர்கள் ஆகிய இவர்களே போதுமான அத்தாட்சி ஆவார்கள். இந்தியாவின் மானகேட்டுக்கும், இந்தியர்களின் இழிதன்மைக்கும் வெள்ளைக்காரர்கள் யோக்கியதைக்கும் இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?

- குடிஅரசு - கட்டுரை - 12.06.1927

தமிழ் ஓவியா said...


கோவை: தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு, நாடகமாடிய பா.ஜனதா பிரமுகர் கைது


வடவள்ளி, அக். 5-கோவை வடவள்ளியில் தனது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு நாடக மாடிய பா.ஜனதா பிரமுகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை வடவள்ளி, சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 35). பாரதீய ஜனதா பிரமுகர். இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் கீழ் தளத்தில் வீட்டு உரிமையாளரும், மேல் தளத்தில் ராம நாதனும் வசித்து வந்தனர்.

கோவையில் உள்ள இந்து அமைப்பு பிரமுகர் களுக்கு கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து, ராமநாதனுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் இளங்கோ என்பவர் நியமிக்கப்பட்டு 24 மணிநேர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.

பெட்ரோல் குண்டு

இதற்கிடையே கடந்த 26 ஆம் தேதி இரவில் ராமநாதன் தங்கி இருக்கும் வீட்டின் மேல் பகுதியில் 'டமார்' என்ற சத்தத்துடன் ஏதோ ஒரு பொருள் வெடித்த சத்தம் கேட்டது. உடனே அங்கு பாது காப்புக்கு நின்றிருந்த காவலர் சென்று பார்த்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் மற்றும் வடவள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவருடைய வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

நரேந்திர மோடி திருச்சி வருவதற்கு கண்டனம் தெரிவித்து ஒருசிலர் போஸ்டர்களை ஒட்டியதால், அதுதொடர்பாக ராமநாதன் காவல்துறையில் புகார் செய்து இருந்தார். எனவே அவர்கள் ராமநாதன் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ராமநாதன் மீது காவல்துறையின ருக்குச் சந்தேகம் எழுந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, தனக்கு கட்சியில் குறைந்துவிட்ட செல் வாக்கை அதிகரிக்க தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டை வீசியதை அவர் ஒப்புக் கொண்டார்.

சிறையில் அடைப்பு!

அதைத்தொடர்ந்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது மதக் கலவரத்தை தூண்டுதல், மோசடி செய்தல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவு பிணையில் வெளியே வரமுடி யாதது ஆகும். பின்னர் ராமநாதனை காவல் துறையினர் கோவை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தமிழ் ஓவியா said...

அது எந்த மதத்துல இருந்தா என்ன?


நீங்கள் நாத்திகர் என்பதை அறிவேன். ஆனால், நீங்களும் மற்றவர்களைப் போலவே இந்து மத நம்பிக்கைகளை மட்டுமே விமர்சனம் செய்கிறீர்கள். ஏன் இந்தப் பாரபட்சம்? மற்ற மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்ட என்ன தயக்கம்?

என் அம்மா தீவிர கிறிஸ்டியன். காட் ப்ளஸ் யூ மை சைல்டுனு அவங்க சொல்லும்போது, ஒரு சிஸ்டர் மாதிரியே இருக்கும். சமீபத்துல எங்க தோட்டத்துக்கு வெள்ளை அங்கி போட்டுக்கிட்டு ஒரு ஃபாதர் வந்திருந்தார். எங்க அம்மா, வாராவாரம் போற சர்ச்ல ஃபாதர் அவர். என் தோட்டத்துல இருக்கிற செடிகளை ஆசீர்வாதம் பண்றதுக்காக வந்திருக்கேன்னு சொன்னார்.

எல்லா செடிகள் மேலேயும் லேசா தண்ணியைத் தெளிச்சிட்டு, கடவுள் உன் தோட்டத்தை ஆசீர்வதிச்சிட்டார்னு சொன்னப்ப, எனக்குச் சிரிப்பு வந்துடுச்சி. என் அம்மாவுக்கு என் மேல கோபம். எல்லாருடைய தோட்டத்தையும் ஆசீர்வதிச்சா, நாட்ல காய்கறி விலையாவது குறையுமேனு நான் சொன்னதும் என்னைத் திட்டினாங்க. இயேசுவே, என் பையன் அறியாமல் பிழை செய்கிறான். மன்னிச்சிடுங்கனு பிரார்த்தனை பண்ணாங்க.

சின்ன வயசுல இருந்து இந்தச் சண்டை, என் வீட்ல நடந்துக்கிட்டேதான் இருக்கு. மூடநம்பிக்கை கண்டிப்பா விமர்சிக்கப்பட வேண்டியதுதான். அது எந்த மதத்துல இருந்தா என்ன?

உங்களின் உண்மையான அக்கறையையும் மனதையும் கண்டுகொள்ளாமல், ஆயிரம்தான் இருந்தாலும் நீ தமிழனில்லை என்று உங்களை யாரேனும் காயப்படுத்தியது உண்டா? அது யார் எவரென்று சொல்லாவிடினும், என்ன நிகழ்வு என்று சொல்லுங்களேன்!?

சில நேரங்கள்ல அப்படி, முட்டாள்தனமா யாராவது சொல்வாங்க. அதுக்கெல்லாம் காயப்பட்டா, அடிக்கடி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக வேண்டியிருக்கும்.

இலங்கையில் தமிழர்கள் மேல் அரசாங்கமே குண்டு போட்டு கொத்துக் கொத்தா மக்கள் இறந்துட்டு இருந்த நேரம். அந்த சமயம் அமெரிக்காவுல நியூ ஜெர்ஸி தெலுங்கு அசோசியேஷன்ல என்னைச் சிறப்பு விருந்தினராக் கூப்பிட்டிருந்தாங்க.

அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான தெலுங்கு மக்கள் கூடி இருந்த சபை அது. நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னால, போரில் அநியாயமா சாகடிக்கப்பட்ட மக்களுக்காக இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தலாம்னு சொன்னேன். எல்லோரும் எழுந்து நின்னாங்க. நீங்க கர்நாடகா, தெலுங்கு நிகழ்ச்சிக்கு வந்திருக்கீங்க. தமிழர்களுக்கு எதுக்காக அஞ்சலி செலுத்துறீங்க-னு புலனாய்வு செஞ்சு கேட்டார் ஒருத்தர்.

சக மனுஷனா, யாரு வேணும்னாலும் இதைச் செய்யலாம். எந்த மொழியா இருந்தா என்னனு நான் சொன்னேன். காவிரி நீர் பிரச்சினை வரும்போதெல்லாம், உங்க கருத்து என்ன?னு கேட்பாங்க. அரசியல்வாதிகளும், அறிஞர்களும், மக்களும் கருத்துச் சொல்ல வேண்டிய ஒரு விஷயத்தை, ஒரு நடிகன்கிட்ட ஏன் கேட்கிறாங்கனு தெரியலை.

தெரிய வேண்டியவர்களுக்கு நம்மளைப் பத்தி நல்லாத் தெரிஞ்சா போதும். எல்லார்கிட்டயும், நன்னடத்தைச் சான்றிதழ் கேட்டுட்டும் இருக்க முடியாது. நம்மளை விமர்சிக்கிறவங்ககிட்ட, அதைக் காட்டிட்டும் இருக்க முடியாது!

நன்றி : ஆனந்த விகடன், 25.9.2013

தமிழ் ஓவியா said...

இவர்தான் பாரதியார்


தமிழர்களில் யாரொருவர் அறிவாளியாக இருந்தார்களோ அவர்களைக் கொச்சைப்படுத்துவது பார்ப்பனர்களின் சுபாவம். அதற்கு பாரதியாரும் விதிவிலக்கல்ல. பாரதியார் கட்டுரைகள் என்ற நூலில் (ஸ்ரீமகள் கம்பெனி வெளியீடு) சமூகம் என்ற தலைப்பில் பக்கம் 74இல் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். பகவன் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஔவை, திருவள்ளுவர், கபிலர், பரணர், உப்பை, உறுவை, வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து... என்று எழுதியிருக்கிறார். பாரதியார் ஒரு கவிஞர்; ஆராய்ச்சியாளர் அல்ல. ஔவை, திருவள்ளுவர், கபிலர், பரணர் ஆகியோர் வாழ்ந்தது வரலாறு. அவரவர் இயற்றிய பாடல்களைத் தவிர அவர்களைப் பற்றிய வேறு சான்றுகள் யாதும் கிடையாது.

குறிப்பாக அவர்கள் பிறந்த வருடம், மாதம், தேதி, பெற்றோர் பெயர் போன்ற எதுவும் ஆதாரப்பூர்வமாகக் கிடையாது. அவ்வாறிருக்க அவர்களின் தகப்பனார் பார்ப்பனன் என்று கூறுவது அவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும்.

மேலும் பாரதியாரின் ஜாதி வெறி எவ்வளவு என்பதை மேற்படி புத்தகத்தின் 79ஆம் பக்கத்தில் பார்க்கலாம். அது அந்தப்படி இந்தியா முழுவதையும் பிராமண தேசமாக செய்துவிட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்பிராயம் என்று கூறியுள்ளார். வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருத்துப்படி ஆரியர்கள் வந்தேறிகள். அதாவது, ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக இன்றைய இந்தியாவிற்கு வந்தவர்கள். திராவிடர்கள் இந்நாட்டின் பூர்வகுடிகள். இனத்தால் ஆரியர்கள், மனுதர்ம சாஸ்திரப்படி பிராமணர்கள். அதாவது நான்கு வர்ணத்தில் முதல் வர்ணம். தமிழகத்தைப் பொறுத்தவரை அவர்கள் பார்ப்பனர்கள். அதைப் பாரதியாரே ஒப்புக் கொண்டு அவருடைய கவிதைகள் அனைத்திலும் பார்ப்பனன் என்றுதான் பாடியிருக்கிறார். இந்தியாவில் மொத்த ஜனத்தொகையில் பார்ப்பனர்கள் 100க்கு 3 வீதம் ஆவர்.

அவ்வாறு 100க்கு 3 வீதம் உள்ள மக்கள் பெயரால் 100க்கு 97 வீதம் வாழும் மக்கள் உள்ள நாட்டை (அதிலும் முகம்மதியர், கிறிஸ்தவர், சீக்கியர், பௌத்தர் மேலும் மதநம்பிக்கை அற்றவர்கள் கணிசமாக வாழும் நாட்டை) பிராமண தேசமாக மாற்றிவிட வேண்டும் என்று தன் ஜாதி அபிமானத்தை/அபிப்பிராயத்தைத் தெரிவித்துள்ளார்.

- ஆர்.டி.மூர்த்தி, திருச்சி

தமிழ் ஓவியா said...

உடல் உறுப்புதானம் தமிழ்நாட்டிற்குப் பெருமை!


உடல் உறுப்பு தானத்தால் கடந்த 5 ஆண்டுகளில் 2,076 பேர் பயனடைந்துள்ளனர்.

சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 83 சதவீதம் பேரும், தீவிர நோயினால் மூளைச்சாவு அடைந்த 17 சதவீதம் பேரும் உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். இவர்களில் 64 சதவீதம் பேர் 21 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள்.

சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடையும் 80 சதவீதம் பேர் ஆண்களாகவே உள்ளனர். 10 லட்சம் பேரில் 1.1 சதவீதம் பேர் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துக்கொள்கின்றனர்.

தமிழகத்தில் 34 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2008 முதல் இதுவரை 689 சிறுநீரகம், 339 கல்லீரல், 58 இதயம், 24 நுரையீரல் என 1,110 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. 578 கண்கள், 380 இதய வால்வுகள், 1 தோல் தானமாகப் பெற்று 969 திசுக்கள் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 800 பேர் சிறுநீரகத்துக்காகவும், 80 பேர் கல்லீரலுக்காகவும் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

உயர் கல்வியின் நிலை


மக்கள் தொகைப் பெருக்கத்திற்கேற்ப கல்வி நிறுவனங்களும, பல்கலைக்கழகங்களும் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. மத்திய அரசும் உயர் கல்விக்காக பல ஆயிரம் கோடி ரூபாயைச் செலவுசெய்து வருகிறது.

எனினும், உலக அளவில் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் டில்லி அய்.அய்.டி.க்கு 222ஆவது இடமே கிடைத்துள்ளது.

முதலிடத்தில் அமெரிக்காவின் மாசாசூட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும், இரண்டாமிடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகமும், மூன்றாமிடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் இருப்பதாக லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் குவாகுரேலி சைமன்ட்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மும்பை அய்.அய்.டி. 233ஆம் இடத்தையும் சென்னை அய்.அய்.டி. 331ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. ஆசிய அளவில் ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும், ஹாங்காங் பல்கலைக்கழகமும் இரண்டாம் இடத்தையும், சியோல் தேசிய பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. டில்லி அய்.அய்.டி. 38ஆம் இடத்தையும் மும்பை 39ஆம் இடத்தையும் சென்னை 49, கான்பூர் 51, காரக்பூர் 58, ரூர்க்கி 66ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

இந்தியாவில் 600க்கும் அதிகமாக பல்கலைக்கழகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

உயிர்களின் பிறப்பிடம் செவ்வாய் கிரகம்?


உலகம் எப்படித் தோன்றியது? படைத்தது யார்? உயிர்கள் தோன்றியது எப்படி? போன்ற பல வினாக்கள் நம்முன் தோன்றிக் கொண்டுதான் உள்ளன. இந்த வினாக்களுக்கு விடைதேடி விஞ்ஞானிகள் பலர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இப்படி ஆய்வுசெய்துவரும் அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவன் பென்னர், ஃப்ளோரன்சில் நடைபெற்ற 23ஆவது கருத்தரங்கில், மாலிப்டினத்தில் அதிக அளவில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்ந்ததுதான் உயிரினங்கள் உருவாவதன் தொடக்கமாக இருந்தது. இந்த மாலிப்டினம் பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்தில் இருந்திருக்கவே முடியாது. காரணம், 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மிகக் குறைவான அளவே ஆக்ஸிஜன் இருந்தது. ஆனால் அதே நேரம் செவ்வாய் கிரகத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தது.

செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியில் வந்து மோதிய விண்கல்லால்தான் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்க முடியும் என்ற தத்துவத்துக்கு இந்த ஆதாரம் வலு சேர்ப்பதாக உள்ளது. உயிரிகள் உருவாக செவ்வாய்தான் பொருத்தமான கிரகம் என்றாலும், அவை பரிணாம வளர்ச்சியடைவதற்கு பூமி ஏற்ற கிரகமாக இருந்தது.

இந்த ஆதாரங்களிலிருந்து நாமெல்லோரும் செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது. அங்கு உருவாகி, ஒரு பாறை மூலமாக பூமிக்கு வந்த உயிரிகளின் வழித்தோன்றல்கள்தாம் நாம் என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

எங்கும் வடமொழி; எதிலும் வடமொழியா?


கேள்வி கேட்கும் இந்தி அல்லாத மாநிலங்கள்

தாய் மொழி, வடமொழி என்றெல்லாம் பேசினாலே திராவிட இயக்கங்கள் இப்படித்தான் பேசும் என்று கடந்து போய்விடுவார்கள் சிலர். ஆனால், பின்வரும் கட்டுரை ஆங்கில இதழான அவுட்லுக்கில் பிரணாய் சர்மா என்பவர் எழுதியது.

பெயரில் என்ன இருக்கிறது? இந்தக் கேள்வியை இந்திய கப்பற்படை விரும்பாது. அண்மையில் அய்.என்.எஸ். சிந்துரக்ஷக் என்ற நீர்மூழ்கிக் கப்பல் துண்டுதுண்டாக சிதறிப்போனது.

சற்று கூர்ந்து கவனித்துப் பார்த்தால் நமது பல கப்பல்கள், அவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும் பெரும்பாலும் இந்துமதக் கட்டுக்கதைகளிலிருந்தோ சமஸ்கிருதத்திலிருந்தோதான் பெயரிடப்பட்டு உள்ளன.

1948லிருந்து புதுப்படைக் கப்பல்களுக்குப் பெயர் வைப்பதில் இந்தியா தனக்காக ஒரு கொள்கையை வகுத்திருந்தது. இந்தியாவில் தோன்றிய பெயர்களை அவை கொண்டிருக்க வேண்டும். அதன்படி இலகுரக கப்பல்கள் மலைகளின் பெயர்களையோ _ அதன் உச்சிகளின் பெயர்களையோ கொண்டுள்ளன. பெரும் போர்க் கப்பல்கள் தேசியத் தலைநகரங்களின் பெயர்களைக் கொண்டிருக்கும். தாக்கி அழிக்கும் கப்பல்கள் ஒரே முன்னெழுத்துக்களைக் கொண்டிருக்கும். பல ஆயுதங்களைக் கொண்ட விமானங்கள் ஆறுகளின் பெயர்களிலும், நீர்மூழ்கிக் கப்பல் தாக்கிகள் இந்திய ஆயுதங்கள் பெயரிலும், நீர்மூழ்கிக் கப்பல்கள் பல்வகை மீன்கள் பெயரிலும், புதைகுண்டுகள் அழிப்பான்கள், இந்திய மாநிலங்கள் பெயரிலும் அழைக்கப்படுகின்றன.

அரிஹந்த், விக்ரந்த் போன்ற பெயர்களை வடமொழியிலிருந்து எடுப்பது சில ஆண்டுகளாக இந்திய கப்பற்படை கடைப்பிடித்துவரும் முறைகளில் ஒன்றாகும்.
சில கப்பல்களின் பெயர்கள், சக்ரா, விக்கிரமாதித்யா, சிந்துகோஷ், சிந்துத்வாஜ், ஷங்குல், ஷால்கி, சங்குஷ், ஷிவாலிக், அய்ராவத், திரிசூல், நிர்பிக், வினாஷ், பிரபால் மற்றும் பிரளயா என்று உள்ளன. அவை முழுதும் வடமொழியே; சில மட்டும் இந்துக் கட்டுக்கதைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. நமது ஏவுகணைகள் பிரித்வி, ஆகாஷ், திரிசூல், மற்றும் நாக் என்று பெயரிடப்பட்டுள்ளன. நமது போர் டாங்கி அர்ஜுன் என்றும் பல்முனைத் திறன் கொண்ட ஜெட் போர் விமானம் தேஜாஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

அண்டையில் உள்ள பாகிஸ்தான் மத அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட நாடு. கடந்த 60 ஆண்டுகளில் தனது இஸ்லாமியத்தனத்தைக் காட்ட அது தவறியதே இல்லை. நாட்டில் ஆயுதங்கள் முதலியவற்றிற்குப் பெயரிடும்போது, இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்லிம் மன்னர்களின் பெயர்கள் இடப்படுகின்றன. ஆனால் அவ்வாறு பெயர் வைக்கப்பட்ட மன்னர்கள் இந்துக்களை மட்டும் அல்லாது, ஏராளமான முஸ்லிம் குடிமக்களையும் வேதனைப்படுத்தியுள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தானின் செயல்களை ஒரு கண்ணாடி போல் பிரதிபலிக்க விரும்புகிறதா? இந்தியா அதிக அளவில் இந்துக்களைக் கொண்ட நாடாக இருக்கலாம். ஆனால் மதச் சார்பற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நாடு. இன்று பேசப்படும் பல மொழிகளுக்கு வடமொழி பெற்ற மொழியாக இருக்கலாம். ஆனால் நமது பல மொழிகள், வடமொழியுடன் சிறிதும் தொடர்பில்லாதவை. நவீன, மதச்சார்பற்ற, இந்தியாவை பல்வேறு கலாச்சாரங்களும் மொழிகளும், மதங்களும் உண்டாக்கியிருக்கின்றன. நாம் ஏன் நமது அறிவியலாளர்களின் சாதனைகளை, அவர்களது பெயர்களை வைத்துக் கவுரவப்படுத்தக் கூடாது? வடமொழியைப் பற்றி நாம் கொண்டுள்ள மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
உண்மையில் மதச்சார்பற்ற பன்முக இந்தியாவின் உண்மையான கொண்டாட்டமாக, இனி நாம் நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஏவுகணைத் தாங்கிகளுக்கு, பரந்த, ஆழமான சொற்களைக் கொண்ட ஒரு தொகுப்பிலிருந்து பெயர் பொறுக்குவோமாக.

மேற்கண்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல கடற்படையில் மட்டுமல்ல; விமானங்கள், விண்கலங்கள், மத்திய அரசின் திட்டங்கள் என எல்லாமே சமஸ்கிருதப் பெயர்களுடனேயே உலா வருகின்றன என்பது கண்கூடு. அண்மையில் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ள விண்கலத்துக்கு செவ்வாய் என்பதன் சமஸ்கிருதப் பெயரான மங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. திட்டங்களுக்கேற்ற பெயர்களை இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் சுழல் முறையில் ஏன் வைக்கக் கூடாது என்னும் கேள்வி இன்றைய இளைய தலைமுறையினரால் சமூக ஊடகங்களில் எழுதப்படுகிறது. இந்தி ஆதிக்கமும், சமஸ்கிருதத் திணிப்பும் பல்வேறு வழிகளில் நடப்பதை இன்று தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களும் கவனித்து வருகின்றன. இதற்கென தனித்தனிக் குழுமங்களில் மொழிச் சமஉரிமைக்காக விவாதங்களும் நடக்கின்றன. இந்த உணர்வு வரவேற்கத்தக்கதேயாகும். இன்னும் இதை உணராமல் மத்திய அரசு செயல்படுமானால் வலுவான குரல்கள், போராட்டங்கள் எழும் என்பதே உண்மை.

- சமன், தமிழில் ராமதாஸ்

தமிழ் ஓவியா said...

சமாதி ஆதல் எனும் ஏமாற்று வேலை


இலங்கை தலைநகர் கொழும்பு புறநகரில் வசித்தவர் மாக்சி காஸ்ட்ரோ (32). மந்திரவாதியான அவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஆசிரியரின் வீட்டிலிருந்து துஷ்ட ஆவியை விரட்டச் சென்றார். அதற்காக ஒரு பூனையை நரபலியிட்டார்.

பிறகு வீட்டருகே சிறிய குழிதோண்டி அதற்குள் சமாதியிலிருந்து மீண்டு வருவேன் என்றும், குழிக்குள் இருந்து வாளை நீட்டி சிக்னல் கொடுத்த பிறகே மண்ணைத் தோண்டவேண்டும் என்றும் கூறினார். அதுபோலவே குழிக்குள் அவரை வைத்து மண்ணைப் போட்டு மூடினர். 3 மணி நேரமாகியும் வாள் வெளியே தெரியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் குழியைத் தோண்டியபோது மந்திரவாதி மயங்கிக் கிடந்தார். உடனே அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இந்த விவரம் போலீசுக்குத் தெரியவரவே பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்துகிறார்கள்.

இப்படி ஒரு செய்தி தினத்தந்தியில் வந்துள்ளது. சமாதியிலிருந்து மீண்டு வரலாம் என்று யாரோ சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு செயல்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

சமாதியிலிருந்து உயிரை விடலாமே தவிர உயிரோடு மீண்டும் திரும்பிவர முடியாது. இதுவும் ஒரு வகையான தற்கொலை மாதிரித்தான். துறவிகள் இந்தத் தற்கொலையைச் செய்து கொள்வதால் அது சமாதி என்ற பெயரைப் பெற்றுக் கொள்கிறது.

மனிதர்களைப் போலவே துறவிகளுக்கும் சலிப்பு உண்டாகும். அந்தச் சமயத்தில் சமாதியாகப் போகிறேன் என்று பக்தர்களிடம் தெரிவித்து விட்டு, தனியறையில் போய் அமர்ந்து கொண்டு மூக்கைப் பிடித்து மூச்சை அடக்கி உயிரை விட்டு விடுவார்கள். இதற்கும் பெரிய மன உறுதி வேண்டும். என்றாலும் சில துறவிகள் பேர் வாங்கவேண்டும் என்பதற்காகவும் இப்படிச் செய்கிறார்கள். பொதுமக்கள் மத்தியில் தான் சமாதியாக வேண்டும் என்று நிபந்தனை ஏற்படுத்தினால் எந்தச் சாமியாராலும் சமாதி ஆக முடியாது. வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்கிறவர்களில் சிலர் உயிர் போகவில்லை என்று தெரிந்தால் மூச்சை அடக்கி செத்துப் போவார்கள். எனவே சமாதி என்பது பெரிய ஏமாற்று வேலைதான்.

- தேன் தினகரன்

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுப் பூந்தோட்டம்


துண்டு போடுவதை - தோளில்
துண்டு போடுவதை
அனுமதித்தவன் நீ.
ஆனால் தமிழன்
துண்டு படுவதை
ஆட்சேபித்தவனும் நீயே.

நீ ஓட்டுக் கேட்க வரவில்லை - செய்திகளை
ஒட்டுக் கேட்கவும் இல்லை - ஆனால்
ஒட்டுத் துணி உடுத்தி வீதி ஓரங்களில் ஒதுக்கி வைத்திருந்தவர்களின் விழி ஓரங்களில் வழிந்தோடிய விழிநீரைத் துடைத்து
ஒற்றுமைக் கொடியை உயர்த்திப் பிடித்திட்ட
ஒரே தலைவன் நீதான்.

முகத்தைப் பார்த்தாலே
பணம் வாங்கும்
பல வைத்தியர்களிடையே -
பணம் வாங்காமலேயே
சமுதாய வைத்தியம் செய்த
அதிசய வைத்தியன் நீ - தமிழினத்தின்
அன்புத் தந்தையும் நீயே.

மூட நம்பிக்கை என்ற
ஒட்டடை படிந்து இருந்த
ஒவ்வொரு தமிழனின் இதயத்தில் இருந்த
தூசியை அகற்றி - தூய்மைப்படுத்தி
பகுத்தறிவு ஓவியம் வரைந்திட்ட
பைந்தமிழ் லியனார்டோ-டா-வின்சியும் நீயே.

நீ தோழமையின் தொங்குந் தோட்டம்
தினமும் பார்க்க வேண்டிய
தித்திக்கும் தேரோட்டம்.
நீ இங்கு தோன்றவில்லை என்றால்
இருந்திருக்காது தமிழருக்கு
இரத்தத்தில் இன உணர்வோட்டம்.
என்றுமே நீ(ங்கள்)
பகுத்தறிவுப் பூந்தோட்டம்.

தமிழ் ஓவியா said...

பிஞ்சுகளைப் பலி வாங்கிய ஊர்வலம்


சென்னை _ திருச்சி நெடுஞ்சாலையில் வேப்பூருக்கும் உளுந்தூர்பேட்டைக்கும் நடுவில் உள்ளது ஆதனூர் கிராமம். 11.9.2013 அன்று மூன்று மணிக்குத் தொடங்கிய பிள்ளையார் ஊர்வலத்தின்போது, கல் ஏரிக்குச் சென்று கரைக்கப் போறோம். வர்றவங்க ஏறி வேன்ல பிள்ளையார் பக்கத்தில் உட்காருங்க என்று ஒர் இளைஞன் சொன்னதும் சிறுவர்கள் ஓடிச் சென்று ஏறினர்.

வழக்கமாக 2, 3 காகிதப் பிள்ளையார் இருக்கும் கிராமத்தில் இந்த ஆண்டு 7 பிள்ளையார் கள் உருவெடுத்திருந்தனர். அதில் மூன்றைக் கொண்டு சென்று கரைத்துவிட்டுத் திரும்பினர். சென்ற சிறுவர்களுள் எதிர் எதிர் வீட்டில் வசிக்கும் 9 வயது கணேச மூர்த்யையும் 14 வயது சந்தோஷ்குமாரும் வீட்டிற்கு வரவில்லை. எங்கே சென்றாலும் ஒன்று போல் செல்லும் இவர்களைக் காணாமல் ஏரிக்குத் தேடி ஓடினர்.

பூக்கள், மாலைகள், காகித அட்டைகளுடன் இரண்டு பிஞ்சுகளும் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்த பெற்றோரும் உறவினர்களும் ஊராரும் கதறி அழுதுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

மோடி விளம்பரம் : தேன் தடவிய விஷ உருண்டை

ஆர்.எஸ்.எஸ். என்ற ஹிந்துத்துவா, ஹிந்து ராஷ்டிரம் என்பதையே மய்யப்படுத்தி இந்தியாவை ஹிந்துஇயாவாக மாற்றத் துடிக்கும் அமைப்பின் அரசியல் பிரிவு - உருவாக்கம்தான் பாரதீய ஜனதா (BJP) என்பது.

எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இல்லாத விசித்திர நிலை பா.ஜ.க.வுக்கு; அது சுதந்திரமாக இயங்கும் அரசியல் கட்சி அல்ல; மாறாக, அதன் மூக்கணாங் கயிறு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் கையில்தான் உள்ளது.

பிரதமராக யார் (பிஜேபி மூலம்) வருவது என்பதை மட்டுமல்ல; யாருக்கு எந்தத் துறை (இலாகா) அளிப்பது என்பதைக்கூட ஆர்.எஸ்.எஸ். எஜமானர்கள்தான் நிர்ணயிக்க வேண்டும்; அதனை அப்படியே செயல்படுத்துவது மட்டும்தான் பா.ஜ.க.வின் வேலை!



அதன்படிதான் பி.ஜே.பி. தலைவராக, நிதின்கட்காரி என்ற பார்ப்பன தொழிலதிபரையே இரண்டாம் முறைக்கும் கொண்டுவர அது முயற்சித்து தோற்றுவிட்ட நிலையில்தான், திடீரென்று ராஜ்நாத்சிங்கைப் பா.ஜ.க. தலைவர் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவித்தது.

அதுபோலவே மோடி வித்தையும்கூட; வேறு வேறு நபர்கள் அத்வானி போன்றவர்களால் முன்னிறுத்தப்படக் கூடுமோ, அதன் மூலம் நமது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்வாக்கும், அதிகாரமும் சரியக் கூடிய நிலை ஏற்படுமோவென்று கருதியே, திடீரென்று அவசர அவசரமாக தங்கள் கருத்துப்படியே மோடியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து விட்டது ஆர்.எஸ்.எஸ்.

மத்திய இணையமைச்சர் திரு. ஜெயராம் ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளதுபோல்,
தேர்தல் போட்டி காங்கிரசுக்கும் ஆர்.எஸ்.எசு.க்கும் தானே ஒழிய, மற்றபடி காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும்கூட அல்ல. அதுதான் உண்மை என்று கூறியுள்ளது 100-க்கு 100 சரியான கணிப்பு ஆகும்!

பாபர் மசூதியை இடித்தவர்கள், மீண்டும் நாட்டில் மதவெறியைப் பரப்பி, சிறுபான்மையிரை மிரட்டி, ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை -_ சமூகநீதியைப் பறித்து, மீண்டும் இராமர் கோவில் கட்டுவது தொடங்கி நாட்டை இந்து நாடாகவே ஆக்கி, ஜனநாயகத்திற்கு மெல்ல விடை கொடுத்து பாசிசத்தினை அரியணை ஏற்றி, மனுதர்மத்தையே இன்றைய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மூலதாரச் சட்டமாக்கும் முயற்சியின் முன்னோடிச் செயல்களில் முதன்மையானதே மோடியைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்துள்ளதன் ரகசியம்.

அய்க்கிய ஜனதா தளத்தின் தலைவரும், சமூகநீதியில் உறுதியான நிலைப்பாடு கொண்டவருமான சரத்யாதவ் அவர்கள் மோடி பற்றி மற்றொரு முக்கிய பின்னணியையும் தோலுரித்துக் காட்டியுள்ளார்!

பன்னாட்டு பெரு நிறுவனங்களின் (விறீவீஸீணீவீஷீஸீணீறீ) நெருக்குதல் காரணமாகவே மோடி முன்னிறுத்தப்பட்டுள்ளார் என்று விளக்கியுள்ளார்.

அம்பானிகள், டாட்டா போன்ற இங்குள்ள பெரும் தொழில் நிறுவனங்களும் மற்றும் வெளியே தெரியக் கூடாத பன்னாட்டுத் திமிங்கலங்கள் திணித்துள்ளதன் விளைவே மோடி முன்னிறுத்தப்படுவது.

தினம் தினம் ஒவ்வொன்றாக அள்ளி விட்டு, பெருங்கூட்டத்தைக் காட்டி, தமிழ்நாடே ஏதோ காவிமயமாக்கப்பட்டுவிட்டது போல், பார்ப்பன பனியா _- ஊடகங்களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறதே!

பன்மதங்கள், பன்மொழிகள், பல கலாச்சாரங்கள் -_ பண்பாடுகள் நிலவும் நாட்டில் ஒரு மதம் _ -ஹிந்து மதம் ஒரு மொழி _- சமஸ்கிருதம் ஒரு கலாச்சாரம் _- பார்ப்பனீய _ ஆரிய சனாதன மதக் கலாச்சாரம்,

(குஜராத்தில் பள்ளிப் பாட புத்தகங்களில் இவை பாடமாக வைத்துச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன)

18 வயதுள்ள வாக்காளர்களான இளைஞர்கள் _ வெறும் இந்த விளம்பர வெளிச்சம் இணையதள மத்தாப்புகள் கண்டு ஏமாந்து விடுவார்கள் என்ற ஒரு தப்புக் கணக்குப் போட்டே காவிக் கூட்டம் இந்த முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி செயல்படும் நிலை!

மக்கள் அவ்வளவு விவரம் தெரியாதவர்கள் அல்லர்; அப்பாவி இளைஞர்களுக்கு ஹிந்துத்துவா ஆபத்தை விளக்குவதோடு, குஜராத்தில் வளர்ச்சிப் பொருளாதாரம் என்ற மாயத் திரையையும் கிழித்து, ஏழை -_ எளிய விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, பெரு முதலாளிகள் வசம் ஒப்படைத்து, அவர்களைத் தெருப் பிச்சைக்காரர்களாக மாற்றுவதா வளர்ச்சி? என்று கேட்கும், மைனாரிட்டி சமூகத்தை அடியோடு வாழ்வுரிமையற்றவர்களாக்கி, ஒரு வகை கொத்தடிமைகளாக்கிட முயலுவதுதானா வளர்ச்சி? (Growth) அப்படியும் அங்கு _- மோடி ஆளும் குஜராத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் ஆந்திராவை விட, கர்நாடகத்தைவிட, மற்ற பல மாநிலங்களைவிட மிக அதிகம் என்பதை ஏடுகளில் வந்த புள்ளி விவரங்கள் மூலம் விளக்குவது அவசர அவசியமாகும்!

தேன் தடவிய விஷ உருண்டை இது என்பதை இடையறாத பிரச்சாரத்தின் மூலம் இணையதளங்களில் தொடங்கி, எல்லா ஊர்களிலும் பிரச்சாரமான பாசீசப் படையெடுப்பிலிருந்து, இந்திய நாட்டின் மதச் சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகத்தைக் காப்பாற்றிட கட்சிகளை மறந்து முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓர் அணியில் திரள வேண்டும்.

தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால், மாட்டுச் சாணிக்குப் பயந்து மனுஷ சாணியில் காலை வைத்து விடக் கூடாது! எச்சரிக்கை!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

வரதட்சணைக் கொடுமை


ஆணுக்குப் பெண் சமம்; எந்த விதத்திலும் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் அல்லர் பெண்கள் என்று நிரூபித்து வரும் நிலையில், வரதட்சணைக் கொடுமை மட்டும் பெண்களை விட்டு நீங்கியதாகத் தெரியவில்லை.

2012ஆம் ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்து 233 வரதட்சணை சம்பந்தப்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் இந்தியாவில் பலியாகிறாள். 2007_2011க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் வரதட்சணைக் கொடுமை தொடர்புடைய இறப்புகள் அதிகரித்துள்ளன. குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் விகிதமோ 35.8லிருந்து 32 ஆகக் குறைந்துள்ளது.

இந்த அறிக்கை குறித்து, 1983ஆம் ஆண்டு திருத்தி இயற்றப்பட்ட வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வரதட்சணை இறப்புகளில் பிடுபடும் குற்றவாளிகள் எளிதாக ஜாமீனில் வெளியில் வரவும், தண்டனையில் இருந்து தப்பிவிடவும் காரணமாக உள்ளது. இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து உரிய தண்டனையைப் பெற்றுத் தருவதில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் நீடித்து வருகின்றன என்று சட்ட வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.