Search This Blog

14.10.13

கடவுளை மற; மனிதனை நினை என்பதற்கு இதோ இரண்டு எடுத்துக்காட்டுகள்!


  • திட்டமிட்ட மனித முயற்சியால் ஃபாலின் புயல்  கொடுமையிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டனர்
  • பக்தி மூடநம்பிக்கையால் ம.பி.யில் 120-க்கும் மேற்பட்டோர் பலி!
கடவுளை மற மனிதனை நினை என்பதற்கு
இவ்விரண்டும் பொருத்தமான எடுத்துக்காட்டுகள்!


தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2013/mar/19/29.jpg
ஒடிசாவின் கடும் புயலிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டது மனிதர்களின் முயற்சி; மத்தியப் பிரதேசத்தில் கோயில் திருவிழாவில் 120-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் - முன்னது மனித முயற்சியால் மனித உயிர்கள் காப்பாற்றப் பட்டன; பின்னது கடவுள் நம்பிக்கையால் பக்தர்கள் பரிதாபகரமாக மாண்டனர்; கடவுளை மற - மனிதனை நினை என்ப தற்கான எடுத்துக்காட்டுகள் இவை என்று சுட்டிக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 

கடவுளை மற; மனிதனை நினை என்பதற்கு இதோ இரண்டு எடுத்துக்காட்டுகள்!

கடந்த 12.10.2013 அன்று மாலை 6 மணியளவில் ஒடிசா  மாநிலம் கோபால்பூர் அருகே வங்கக் கடலில் மய்யம் கொண்டிருந்தது ஃபாலின் என்று பெயர் சூட்டப்பட்ட புயல்! கடல் சீற்றத்துடன் 3ஙூ அடி முதல் 5 அடி வரை   அலைகளை எழுப்பிய புயல் தரையின்மீது இறங்கி வீசியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கக் கூடும்; இதுவரை வீசிய புயல்களிலேயே இதுதான் மிகவும் கடுமையான தாகவும், கொடுமையானதாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வகத்தின் சார்பில் எச்சரிக்கை விடப் பட்டது.

பாராட்டத்தக்க தகுந்த முன்நடவடிக்கைகள் ஒடிசாவின் கோபால்பூர், பாரதீவ் துறைமுகம் பகுதி மட்டுமல்ல; ஆந்திராவின் சிறீகாகுளம், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளும், பக்கத்து மாநிலங்களான ஜார்கண்ட், சத்தீஸ்கர் - மேற்குவங்கப் பகுதிகளிலும் இதன் தாக்கம் இருக்கக் கூடும் என்று மத்திய, மாநில அரசுத் துறைகளால் அறிவிக்கப்பட்டது.

புயல் தரையைக் கடக்கும் முன்பே, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை - வரலாறு காணாத வகையில் மத்திய அரசின் தேசிய பேரிடர் தடுப்பு அமைப்பு மற்றும் இராணுவம், காவல்துறை, நிர்வாகத் துறைகளும் இணைந்து, விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தீயணைப்புத் துறை போன்ற பல்வேறு துறையினரின் ஒருங்கிணைப்பை அற்புதமாகச் செய்தன.
எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள ஆயத்தமான நிலையை அரசு அதிகாரிகளும் மத்திய அரசு, ஒடிசா அரசு, ஆந்திர அரசு - எல்லாம் ஒருங்கிணைந்து செய்தன.

ஊடகங்களும், தொலைக்காட்சிகளும்கூட மக்களுக் குப் போதிய எச்சரிக்கையை விடுத்தன.

நான்கரை லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்

இதுவரை கேள்விப்பட்டிராத அளவில் ஒடிசா மாநிலத்தில் கடற்கரை ஓரப் பகுதியில் வாழும் சுமார் 4ஙூ லட்சம் பேர்களை குழந்தை குட்டிகளுடன் பாதுகாப்பான பகுதிகளுக்கு, இடம் பெயரச் செய்தனர்; உணவு, குடி தண்ணீர் முதலியவற்றையும் அவர்களுக்கு அளித்தனர்!

ஆந்திராவிலும், சிறீகாகுளம், விசாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டிய பகுதியிலும் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை இடம் பெயரச் செய்து பாதுகாத்தனர்.

மொத்தம் 5ஙூ லட்சம் பேர்களை - சில நாள்களில் அவசரமாக இடம் பெறச் செய்துள்ள இது நம் நாட்டு வரலாற்றில் மிகப் பெரிய வியக்கத்தக்க சாதனையாகும்.

ஏழை, எளிய மக்கள் எளிதில் தங்கள் வீடுகள் குடியிருப்புகளை - அவை குடிசைகளானாலும் அவற்றை விட்டு வர சம்மதிக்க மாட்டார்கள்; இதனை உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே அவர்கள் தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய பிரதமர் மன்மோகன்சிங் இதுபற்றி மேற்பார்வையிட்டதும் ஒடிசா முதல் அமைச்சர் நவீன்பட்நாயக்கும், ஆந்திரா முதல்வர் கிரண்ரெட்டியும், அவர்களது அரசு  அதிகாரிகளும் சிறப்பான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

210 மைல் வேகத்தில் வீசிய புயல்

200 முதல் 210 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கொடும் புயல் காரணமாக, இதுவரை பல்லாயிரக்கணக் கில் ஏற்பட்டிருக்க வேண்டிய சேதம், வெறும் 23 பேர் உயிர்ப் பலியோடு முடிந்தது. (அந்த 23 உயிர்களும்கூட பாதுகாக்கப்பட வேண்டிய விலை மதிப்பற்ற மனித உயிர்கள்தான்!) என்றாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பதுபோல நடந்து, நிவாரணப் பணிகள் முழு வீச்சில் அங்கே இப்போது நடந்து கொண்டுள்ளன. பர்காம்பூர், புவனேஸ்வர் முதலிய நகரங்களிலும் ஆந்திராவிலும் சகஜ நிலை திரும்பிக் கொண்டுள்ளது.

கோயில் திருவிழாவில் பக்தர்கள் பலி!

இந்த நிலையில் மத்திய பிரதேசம் தாதியா மாவட்டத்தில் ரத்தன்கர்  கோயில் திருவிழாவில் கூடிய 5 லட்சம் பேருக்கு மேல் உள்ள கூட்டத்தினர் மத்தியில் பாலம் விழப் போகிறது; அதற்குமுன் கடந்து விடுங்கள் என்ற ஆதாரமற்ற வதந்தியை, பொய்ச் செய்தியைப் பரப்பியதன் விளைவாக மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடிய நெரிசல் காரணமாக சுமார் 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்துள்ளனர். சுமார் 250 பேருக்கு மேல் படுகாயப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்!
மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க., ஆட்சி நடைபெறுகிறது; ஹிந்துத்துவாவை முன்னிறுத்தும் கட்சியினர் ஹிந்துக்கள் கூடிய திருவிழாவில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதினால் இந்த வேதனையும், துயரமுமான கோர மரணங்கள் நிகழ்ந் துள்ளன!

உத்தரகாண்டில் நடந்தது என்ன?

வருமுன்னர் காப்பதே அறிவுடைமை; ஆளும் திறன் ஆகும்.
பக்தி மூடத்தனத்தின் விளைவாக உத்தரகாண்டில் ஏற்பட்ட புயல் வெள்ளம், மழை காரணமாக பல்லாயிரக் கணக்கில் வீடுகள், ஓட்டல்கள் இடிந்து, யாத்திரீகர்கள், பக்தர்கள் இறந்தனரே சில மாதங்களுக்கு முன்பு!
சரியான வானிலை எச்சரிக்கைத் தரப்படாததே காரணம் என்று கூறப்பட்டது.
இது எதைக் காட்டுகிறது? இதன் அறிவார்ந்த படிப்பினைதான் என்ன?
உயிர்கள் - பக்தர்கள் உயிரானாலும், பகுத்தறிவா ளர்கள் உயிரானாலும் காப்பாற்றப்பட வேண்டிவை களேயாகும்; ஆனால் கடவுள் நம்மைக் காப்பார்  என்றும் கடவுள் கருணையே வடிவானவர் என்றும் கூறுவது எத்தகைய அறியாமையில் வடித்தெடுத்த மூடநம்பிக்கை என்பதை மக்கள் உணர வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும்

கடவுள் கருணையே வடிவானவராக இருப்பின் இப்படி மக்களை அதுவும் திருவிழாவிற்கு கும்பிட வந்தவர்களை பலி வாங்குவானா?

அதைவிட, சர்வ சக்தி வாய்ந்தவனாக இருப்பின் புயல் போன்ற விபத்துக்கள் போன்றவை ஏற்படாமலேயே தடுத்திருக்க வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும்;
புத்தி வந்தால் பக்தி போகும் என்ற

தந்தை பெரியாரின் அறிவு மொழியை மக்கள் சிந்தத்தால் தான் வளர முடியும்.
கடவுளை மறந்து, மனித முயற்சிகள் காரணமாக பெரும் புயல் காரணமாக பல லட்சம் மக்கள் காப்பாற்றப் பட்டனர்; பக்தி செய்ய முடியாததை புத்தி செய்து காட்டியுள்ளது.

இனியாவது பக்திப் போதையிலிருந்து பக்தர்களே, விடுபடுங்கள்: முயற்சியும் உழைப்பும் தான் நம்மை வாழ வைக்கும் என்பதை உணருங்கள்.
 
-----------------------கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் சென்னை   14.10.2013

31 comments:

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயம்



நாட்டினுடைய வளப்பம் மனித சமுதாயத்தின் அத்தனைப் பேரையும் பொறுத் ததே ஒழிய, மூன்றே முக்கால் பேர்களைப் பொறுத்தது அல்ல.
(விடுதலை, 2.4.1966)

தமிழ் ஓவியா said...


பிராமின் டுடே!


பிராமின் டுடே என்ற ஒரு இதழைப் பார்ப்பனர்கள் நடத்தி வருகிறார்கள். அதனைப் புரட்ட நேர்ந்தபோது பிரா மணர்களும் உயர் கல்வியும் எனும் தலைப்பில் ஒரு கட் டுரை.

கடந்த 5 வருடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி களில் தகுதியான அடிப் படையில் அனுமதி பெற்று உள்ளே நுழைந்த பிராமணர் கள் ஒற்றை இலக்கத்தை ஒரு போதும் தாண்டியதில்லை

பணம் படைத்த பார்ப் பனர்கள் தனியார் கல்லூரி களில் தகுதியின் அடிப் படையில் படித்து மருத்துவ ராக முடியுமேயன்றி, தன் மான இனக்குஞ்சுகளுக்குக் கிட்டியதுபோக மருத்துவக் கல்லூரியை ஏழைப் பிராம ணர்கள் எட்டிப் பார்க்க முடி யாது என்று எழுதுகிறது. அந்த ஏடு.

அவர்களை அறியாம லேயே, ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளதைக் கவனிக்க வேண்டுமே! கடந்த 5 ஆண் டுகளாகத்தான், அவாளுக்கு மருத்துவக் கல்லூரியில் ஒற்றை இலக்கத்தைத் தாண்ட முடியவில்லை - அப்படியானால் 5 ஆண்டு களுக்குமுன் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்பட்டன என்பது சொல்லாமலே விளங்கும்.

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்த வர்களை எப்படி அடைமொழி கொடுத்து அந்த ஏடு எழுது கிறது என்பதைக் கவனித் தீர்களா?

தன்மான இனக்குஞ்சு களாம் இதற்குள்தான் எவ் வளவு ஆத்திரமும் ஏகடியமும் அலை அடித்து நிற்கின்றன!

தன்மான இனக்குஞ்சு என்பதில் உள்ள தன்மானம் என்பது பார்ப்பனர் அல்லா தார் உணர்வினைத் தட்டி எழுப்பிய இயக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது - இனக்குஞ்சு என்பது அவாள் வேறு இனம், திராவிடர்கள் வேறு இனம் என்பதை இனம் பிரித்துக்காட்டுகிறதா இல்லையா?

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்தி ருக்க வேண்டும், என்று நிபந்தனை வைத்திருந்த போது, எந்த இனக்குஞ்சுகள் மருத்துவக் கல்லூரி இடங் கள் முழுவதையும் முழுச் சுளையாக முழுங்கின?

இந்த நேரத்தில், தமிழர் செல்வம் சர். ஏ.டி. பன்னீர் செல்வம் கூறியதை, நினைத் துப் பார்க்க வேண்டும்.

திரு. பனகல் அரசர் காலத்தில்தான், மருத்துவ இலாக்கா வெள்ளையரிட மிருந்து பிடுங்கித் தமிழர் கையில் ஒப்படைக்கப்பட் டது. ஆனால் அதன் பயன் என்ன ஆயிற்று என்றால் டாக்டர் ராஜன் அய்யங்கார் என்ற ஒரு பார்ப்பனர் வைத்திய இலாகா மந்திரி யாக வந்தவுடன், கவுரவ டாக்டர்களை நியமிக் கிறேன் என்கிற பெயரால், ஒரு சில மாதங்களுக்குள் 225 பேர்களைக் கவுரவ டாக்டர்களாக நியமித்தார். இந்த 225 பேர்களில் 125 பேர் பார்ப்பனர்கள்; இதில் ஒரு பெரிய அக்கிரமம் என்னவென்றால், ஜெனரல் ஆஸ்பத்திரியில் பிரபல டாக்டராக இருந்த டாக்டர் சடகோபனை வெளியேற்றி விட்டு, அவருக்குப் பதி லாக, மூன்று பார்ப்பனர் களைத் திணித்தார். இவ்வித ஆட்சியை இனி நடத்தவிட மாட்டோம் என்பதன் அறிகுறிதான் பெரியார் அவர்கள் கூறும் தமிழ்நாடு தமிழருக்கே ஆகும் என்று சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சொன் னதைக் கொஞ்சம் நினைத் துப் பார்த்தால் பிராமின் டுடேயின் அங்கலாய்ப்பில் சற்றும் நியாயம் இல்லை என்பது விளங்காதா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


கருணையே வடிவானவன் கடவுளா? ம.பி.யில் பக்தர்கள் 120 பேர் பலி!

ரத்தன்கர், அக்.14- மத்தியப் பிரதேச மாநி லம் ரத்தன்கர் கோயி லில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குறைந் தது 120 பேர் உயிரிழந் திருப்பர் என்று அஞ்சப் படுகிறது. பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் நீதி விசா ரணைக்கு உத்தரவிட் டுள்ளார். மேலும், டிஜிபி, தலைமைச் செயலர் ஆகியோரை தாதியா பகுதிக்கு விரைந்து சென்று நிலைமையைக் கண்காணிக்குமாறும், பாதுகாப்பில் ஈடுபடு மாறும் உத்தரவிட் டுள்ளார்.

தேர்தல் கால நன்ன டைத்தை நெறிமுறை கள் அமலில் உள்ள மாநிலம் என்பதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இழப் பீடு அறிவித்துள்ளார் சிவராஜ் சிங் சவுஹான். உடனடி இழப்பீடாக ரூ.1.5 லட்சம் உயிரிழந் தோரின் குடும்பத்தின ருக்கும், ரூ. 50 ஆயிரம் பலத்த காயமடைந்தோ ருக்கும், ரூ. 25 ஆயிரம் லேசான காயமடைந் தோருக்கும் என அறி வித்துள்ளார் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான்

ஞாயிற்றுக்கிழமை அன்று துர்கா பூஜை நேரத்தில், கோயிலுக்குச் செல்லும் சிந்த் ஆற்றின் பாலத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமா னோர் கடந்து செல்ல முற்பட்டுள்ளனர். அப் போது நெரிசல் அதிக ரித்து உயிரிழப்பு ஏற் பட்டுள்ளது. அதேநேரத் தில், கூட்டத்தைக் கட் டுப்படுத்தி கோயிலுக்கு வரிசையாகச் செல்ல வைக்க காவல்துறையி னர் முயன்றுள்ளனர். அப்போது லேசான தடியடி நடத்தப்பட்டுள் ளது. இதனால், நூற்றுக் கும் அதிகமான பக்தர்கள் அலறியடித்து, சிந்த் ஆற்றின் பாலத்தை நோக்கி ஓடியுள்ளனர். அந்த நேரத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. இதில் சிக்கியும் சிலர் உயிரிழந் தனர் என்று கூறப்படு கிறது.

ஆனால், காவல்துறை யினர் லேசான தடியடி நடத்தினர் என்று கூறப் படுவதை டிஜிபி சம்பால் ரான்சே மறுத்துள்ளார். இது, கூட்டத்தில் குழப் பத்தை ஏற்படுத்தி நெரி சலை ஏற்படுத்த ஒரு சில ரால் பக்தர்களிடையே பரப்பட்ட வதந்தி என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட் டனர். நிலைமை சீரடைய சுமார் 2 மணி நேரம் ஆனது. இந்தக் களேபரத்தில் ஆற்றினுள் சுமார் 40 பக்தர்கள் விழுந்திருக்கலாம் என் றும் அவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டி ருப்பதாகவும் கூறப்படு கிறது.

தமிழ் ஓவியா said...


நீதிப் போதனையா?


மாணவர்கள் மத்தியில் ஒழுக்கக் கேடு தலை விரித்தாடுகிறது, பள்ளியில் படிக்கும் மாண வர்களே ஆசிரியரைக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போய் விட்டது என்று பொதுவான அலறல் சத்தம் நாடு எங்கும் கேட்கிறது.

மாணவர்களை மட்டும் தனியே பிரித்துக் குற்றப் பத்திரிகை படிப்பதில் பயனில்லை; ஒட்டு மொத்த சமூகத்தின் சுற்றுச் சூழலேகூட ஒரு வகையில் பொறுப்புதான்.

ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள்? வழக்குரைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்? மருத்துவர்கள் எப்படி இருக்கிறார்கள்? அரசியல்வாதிகள் எப்படி இருக்கிறார்கள்? ஏன், சில நீதிபதிகளே எப்படி நடந்து கொள் கிறார்கள்?

உலகத்துக்கே புத்திமதி சொல்லப் புறப் பட்டுள்ளதாக மார்தட்டிக் கொள்ளும் ஊடகங்களின் யோக்கியதை தான் என்ன?

மதவாதிகள் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்? காவி வேடம் தரிக்கும் சாமியார்களின் லீலைகள் தான் சாதாரண மானவையா? அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் எப்படி நடந்து கொண்டான்? லோகக் குரு சங்கராச்சாரியாரின் உண்மை சுயரூபம் தான் என்ன... என்ன?

நாம் வணங்கும் கடவுள்களின் கதை என்ன? கற்பழிக்காத கடவுள் உண்டா, சண்டை போடாத கடவுள் உண்டா? திருமங்கை ஆழ்வார் நாகப்பட்டினத்தில் இருந்த அய்ம்பொன் னாலான புத்தர் சிலையைத் திருடித்தானே சிறீரங்கம் ரெங்கநாதன் கோயிலுக்கு மதிற் சுவர் எழுப்பினான்? இப்படிப்பட்டவன்முக்கிய ஆழ்வார் பட்டியலில் இடம் பிடித்து விட்டானே.

பவுத்த, சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள் தருவாயாக என்று கடவுளிடம் விண்ணப்பம் போடுபவன் தானே சைவ சமயக் குரவனான திருஞானசம்பந்தன் - இவன் சாதாரணமானவனா? பார்வதித் தேவியாரின் ஞானப் பால் உண்டவனாயிற்றே!

சர்வமும் கந்தையாக ஒழுக்கக் கேடாக மலிந்து கிடக்கும் ஒரு நாட்டில் மாணவர்களை மட்டும் பிரித்துப் பார்ப்பதில் பயன் என்ன?

பிள்ளைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தானே அரைகுறை ஆடை ஆபாசப் படக் காட்சிகளைப் பார்க்கிறார்கள் பெற் றோர்கள்.

தந்தை பெரியார் சொன்ன பகுத்தறிவும், மனிதநேயம், ஒழுக்கம் இவை சிறுவயதிலிருந்து கற்பிக்கப்பட்டாலொழிய மீட்சிக்கு மார்க்கம் இல்லை.

பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு முன்பு போல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சிலர் இதோபதேசம் செய்யப் புறப்பட்டுள்ளனர்.

முன்பு இத்தகு வகுப்புகள் இருந்ததுதான்; அந்த வகுப்பில் எதைச் சொல்லிக் கொடுத் தார்களாம்? புராண இதிகாச மூடத்தன கதாபாத்திரங்கள் பற்றித்தானே சொல்லிக் கொடுத்தார்கள் - கிருஷ்ண பகவானைப்பற்றி சொல்லிக் கொடுத்தால் மாணவன் திருடாமல் இருப்பானா? பெண்களைக் கேலி செய் யாமல்தான் இருப்பானா?

தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்ததுபோல மாணவர்களுக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பது என்ற பெயரால் நமது புராணக் குப்பைகளை மாணவர்கள் மூளையில் திணித்தால் அறிவு வளர்ச்சி ஏற்படுமா? ஒழுக்க ரீதியான மனப்பான்மை தான் வருமா?

இவற்றிற்கும் பதிலாக நூலகம், உடற்பயிற்சி, அறிவியல் கண்காட்சி இவற்றில் ஈடுபடுத் தினால் மாணவர்களின் சிந்தனையில் மாற்றம் வருவதற்கு வாய்ப்புண்டே!

பாடத் திட்டத்தில் ஒழுக்க நெறியும், அறிவு நெறியும், பயிற்சியும் அளிக்கப்படுவது அவசியம்.

குளிக்கப் போய்ச் சேற்றில் விழுந்த கதையாக ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுக் கிறேன் என்று கூறி நீதி போதனை என்ற பெயரால் பழைய குப்பைகளை மாணவர்களின் மூளையில் கொட்ட வேண்டாம் -வேண்டவே வேண்டாம்!

தமிழ் ஓவியா said...


புகைஞ்சர்களே, ஏன் வீணே 10 ஆண்டு ஆயுளை இழக்கிறீர்கள்?


ஆஸ்திரேலியாவில் சாக்ஸ் என்ற மருத்துவ ஆய்வு அமைப்பு ஒன்று சுமார் 2,00,000 பேர்களை வைத்து - அவர்கள் எல்லாம் புகைஞ்சர்கள் (Smokers) - வயது 45க்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

இவர்களைக் கொண்டு நடத்திய ஆய்வுபற்றி ஆஸ்திரேலிய மருத்துவப் பேராசிரியர் எமிலி பேங்க்ஸ் (Emily Banks) என்பவர் கொடுத் துள்ள பேட்டி 12.10.2013 டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு செய்தியாக வெளி வந்துள்ளது!

அதில் அவர்கள் இப்படி புகை பிடிக்கும் புகைஞ்சர்கள் - வாழ்வில் அகால மரணமடைகிறார்கள்; சுமார் 10 ஆண்டுகள் தங்கள் ஆயுளை இழக்கின்றனர்; லேசான புகையிலையின் தாக்கமே - பழக்கமே இவர்களது ஆயுள் குறைப்பானாக ஆகி விடுகிறதாம்.

இந்நிலையில் இளைஞர்கள், மாணவர்கள் நாகரிக உணர்வைக் காட்டி பெண்களும்கூட புகைஞ்சர்களாக, குடிகாரர்களாக மாறி வரும் கொடுமை நாளும் அதிகமாகி வருகிறது.

கணினியுகத்தில் பொறியாளர்களாகி, திடீரென்று அளவுக்கு மீறிய சம்பளத்தைப் பார்க்கையில் திசை தடுமாறி, குடி, புகைத்தல் மற்றும் சில ஒழுக்கக் கேடுகளில் இளைஞர்கள் பலியாகி விடும் கொடுமை - மிக அதிகமாகி வருகிறது!

புகைபிடிக்கும் பழக்கம் ஒருமுறை ஏற்பட்டு விட்டால் எளிதில் அதைக் கைவிட்டு விட முடிவதில்லை பலரால்; தேவையின்றி தானே இப்படி தற்கொலை மாத்திரைகளை ஒவ்வொரு புகைப்பிடித்தலின் போதும் விழுங்குகின்றனரே! இழுக்க இழுக்க இன்பம்; இன்னும் வேகமாக விரட்டும் துன்பமும் முடிவும் என்பது செத்த பின்பு தான் தெரியும்!

புற்று நோய் அபாயம் போன்றவை புகைபிடித்தல், புகையிலை மெல்லுதல், பொடி போடுதல் போன்ற பழக்க வழக்கங்களால் என்பது ஒரு புறம்.

அது இல்லாமல் இது சாதா ரணமாக புகைஞ்சர்கள் ஆயுளே 10 ஆண்டு குறைகிறது.

அதைவிட பொருளாதாரத் தினைக் கணக்கிட்டுப் பார்த்தீர்களா?

என் வாழ்நாளில் நான் புகைஞ்சனாகியிருந்தால் எவ்வளவு அனாவசியப் பொருள் விரையம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

உடலையும் வாழ்வையும் காப்பாற்றிட நீங்கள் புகைஞ்சர்களாக இருந்தால் உடனே கை விடுங்கள்;

நமது மதிப்பிற்குரிய தமிழ்நாட்டுத் தலைவர்களைக் கூட நாம் இழந்துள்ளோமே!

அதனால் அவர்கள் வீட்டுக்கு ஏற்பட்ட நட்டத்தை விட நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் மிகவும் அதிகம் அல்லவா?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் இசையமுது முதல் தொகுதியில் இந்த ஆபத்தினை நன்றாக புகைச் சுருட்டு என்ற தலைப்பில் மிக அருமையாக விளக்கியுள்ளாரே!

புகைச் சுருட்டு

புகைச்சுருட்டால் இளமை பறிபோகும்
பொல்லாங் குண்டாகும்
புகைச் சுருட்டால்!

முகமும் உதடும் கரிந்துபோகும்
முறுக்கு மீசையும் எரிந்து போகும்
புகைச் சுருட்டால்!

மூச்சுக் கருவிகள் முற்றும் நோய் ஏறும் - பிள்ளை
முத்தம் தருநே ரத்தில் வாய் நாறும்
ஓய்ச்சல் ஒழிவில் லாதிருமல்சீறும் - நல்
ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்
பேச்சுக் கிடையில் பிடிக்கச் சொல்லும்
பெரியார் நெஞ்சம் துடிக்கச் சொல்லும்
புகைச் சுருட்டால்!

காசு பணத்தால் தீச்செயலை வாங்கிப் - பின்
கைவிட எண்ணினும் முடியாமல் ஏங்கி
ஏசிக் கொண்டே விரலிடையில் தாங்கி - நீ
எரிமலை ஆகா திருதுன்பம் நீங்கி
மாசில்லாத செந்தமிழ் நாடு
வறுமை நோய்பெற ஏன் இக்கேடு?
புகைச் சுருட்டால்!

தமிழ் ஓவியா said...


தொண்டறம் தொடரும்!... முடிவில் வெல்லும்!!...

மதிப்பிற்குரிய தமிழினத் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் அவர்கள் 28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாண வரணி கடலூர் மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற வருகை தந்தபோது கருத்துக் குருடர்கள் சிலர் காரை மறித்துத் தாக்கியதாக வந்த செய்தி கேட்டு ம

னிதநேயம் கொண்ட அத்தனை உள்ளங்களும் துடிதுடித்துப் போயின!.

21-ஆம் நூற்றாண்டிலும், ஏனிந்த கொலை வெறி? நம் நாடு குடியரசு நாடே தவிர கொடுங்கோல் மன்னர்கள் வாழ்ந்த அரசியல் பண்பாடே அறியாத காட்டுமிராண்டிகள் வாழ்கின்ற நாடல்லவே!

நாட்டின் வரலாறோ... மொழியின் வரலாறோ... இனத்தின் வரலாறோ சிறிதும் அறியாத சில மதவெறியர்கள் தான் இத்தகைய கீழ்த்தரமான செயல் களிலே ஈடுபட்டு அவமானத்தைத் தேடிக்கொள்கிறார்கள்!...

வன்முறை சிறிதும் கலவாது அறப் போராட்டங்களின் வாயிலாகவே ஒரு பெரிய சமுதாய மாற்றத்தையே உருவாக் கிக் காட்டினாரே தந்தை பெரியார்! அன்று கற்களை வீசியும் முட்டைகளை வீசியும், செருப்பை வீசியும் அவரை அவமானப்படுத் முனைந்தவர்கள் எல் லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள்! ஆனால்

தந்தை பெரியாரின் புகழோ இன்று உலக மயமாகி வருகிறது! அவருடைய பகுத்தறிவுக் கருத்துக்களை மதித்துப் போற்றி பாராட்டாத நாடுகளே, இல்லை என்ற நிலை இன்று ஏற்பட்டிருக்கிறதே. இது யாரால்?

தன்னலம் கருதாது... உடல் நலத் தையும் பாராமல் தமிழினத்தின் மேன் மைக்கு உழைத்துக் கொண்டிருக்கிற அய்யா ஆசிரியர் அவர்களது அயராத தொண்டறத்தால் தானே!

திராவிடர் கழகம் என்ற சமுதாய இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் அமைப்பும் இல்லை யென்றால்... தமிழ்ச் சமுதாயமே இன்று பூண்டற்றுப் போயிருக்குமே!. அமெரிக்கர் களின் வருகையால் அமெரிக்க ஆதி குடிகளான செவ்விந்தியர் அடியோடு அழிந்து போனதுபோல...

ஆரியர்களின் வருகையால் தமிழினம் அழிந்து ஒழிந்து போயிருக்குமே! அந்த அழிவைத் தடுத்து நிறுத்தி தமிழி னத்தைக் காத்தது மட்டுமல்ல; இன்று வரை காப்பாற்றி அவர்களை மீண்டும் உச்சிக்கு உயரச்செய்ய இன்றுவரை களத் திலே நின்று போராடிக்கொண்டிருப்பது இவ்விரு இயக்கங்களும், அதன் தலை வர்களும் தானே! அதற்குப் பரிசா இது? சிந்திக்க வேண்டாமா?

மதத்தையோ, கடவுளையோ, காப்பாற்றப் புறப்பட்டிருக்கும் இவர்களுக்கு அந்த அதிகாரத்தைத் தந்தவர்கள் யார்? இவர்கள் காப்பாற்றித் தீரவேண்டிய அளவுக்கு அவ்வளவு பலவீனமானவையா அவைகள்?

கருவறையில் தேவனாதனே கடவுள் இல்லை என்பதை தனது செய்கையால் நிரூபித்துக் காட்டி விட்டதற்குப் பிறகுமா இத்தகைய கொலை வெறி? இந்து மதத்தின் அதாரிட்டி காஞ்சிப் பெரியவாள் (!) ஜெயிலுக்கும் பெயிலுக் குமாக அலைந்து கொண்டிருப்பதைக் கண்ட பிறகுமா கருத்துக்குருடர்களாக இருப்பது? சிறிதேனும் சிந்திக்க வேண் டாமா? அய்யனார் கோயில் குதிரை சவாரிக்கு உதவாது! பந்தயத்திற்கும் பயன்படாது!!

சினத்தை ஒதுக்கிவிட்டு.. சற்று சிந்திப்பார்களா? அதுவரை திராவிட இயக்கங்களின் தொண்டரம் தொடரும்!

முடிவில் வெல்லும்!!

- குடந்தை நெய்வேலி தியாகராசன்

தமிழ் ஓவியா said...


சபரிமலை வரும் பக்தர்களுக்கு கைதிகள் தயாரித்த உணவாம்


திருவனந்தபுரம், அக்.14 சபரிமலை வரும் பக்தர்களுக்கு கைதிகள் தயாரிக்கும் உணவை குறைந்த விலையில் விற்க கேரள சிறைத்துறை தீர்மானித்துள்ளது.

திருவனந்தபுரம் மத்திய சிறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கைதி கள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை தொடங்கப்பட்டது. 1 சப்பாத்தி ரூ.2 என மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாலும், தரமானதாக இருந்ததாலும் பொது மக்களிடையே இந்த சப்பாத்திக்கு அமோக வரவேற்பு காணப்பட்டது. பொதுமக்களின் ஆதரவு அதிக ரித்ததை தொடர்ந்து கேரளாவின் மற்ற பகுதிகளான கண்ணூர், திருச்சூர், பத்தனம்திட்டா உட்பட மேலும் பல சிறைகளிலும் உணவு தயா ரிக்கப்பட்டது. சப்பாத்தி, இட்லி, சிக்கன் ஆகிய வற்றை வாங்க சிறை வாசலில் நீண்ட வரிசை யில் மக்கள் நின்றனர். அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதி கம் கூடும் இடங்களில் கைதிகள் தயாரிக்கும் உணவு விற்பனை தற் போது அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஒரு நாளைக்கு கேரள சிறைகளில் 4 லட்சம் சப்பாத்தியும், 1 டன் கோழிக் குழம்பும் விற்கப்படுகிறது. திருவனந்த புரத்தில் மட்டும் தினமும் 1 லட்சம் சப்பாத்தியும், 30 ஆயிரம் இட்லியும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கும் கைதிகள் தயாரிக்கும் உணவை விற்பனை செய்ய கேரள சிறைத்துறை தீர்மானித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பத்தனம் திட்டா சிறையில் நடந்து வருகிறது.

தற்போது முதல்கட்டமாக சபரிமலை செல்லும் வழியில் மைலப்ரா, வடசேரிக்கரை மற்றும் நிலைக்கல் ஆகிய இடங்களில் வாகனங்கள் மூலம் இட்லி, சாம்பார், சப்பாத்தி மற்றும் காய் கறிக் குழம்பு ஆகிய வற்றை விற்பனை செய்ய தீர்மா னிக்கப்பட்டுள்ளது.

ரூ.2க்கு சப்பாத்தி, இட்லி கிடைக் கும். காய்கறிக் குழம்பு ரூ.10-க்கும், சாம்பார் ரூ.5-க்கும் கிடைக்கும். பம்பையில் தேவசம் போர்டு இடம் கொடுத்தால் அங்கும் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக சிறைத் துறை இயக்குநர் அலெக்சாண்டர் ஜேக்கப் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

விண்வெளிக்குச் சென்றது கடவுளுக்கு விரோதம்: விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்


விண்வெளியில் கடவுளைக் காணவில்லை - யூரி ககாரின்

- நி.சித்து முருகானந்தம் எம்.எஸ்.சி., (இயற்பியல்)


பெரியார் நூலக வாசகர் வட்ட சார்பில் நடை பெற்ற பெரியார் - அண்ணா விழாவில் பாராட்டப் பெற்ற அறிவியல் அறிஞர்களில் ஒருவரான நி.சித்து முருகானந்தம் அவர்கள் ஆற்றிய முக்கியவுரையின் முக்கிய தகவல்கள்:-

அறிவியல் பணிக்காக நாங்கள் இந்தக்கூட்டத்தில் பாராட்டப்படுகிறோம். தகுதியானவர்களிடமிருந்து, பொருத்தமானவர்களிடமிருந்து, நாத்திகர்களிட மிருந்து, பகுத்தறிவு வாதிகளிடமிருந்து இந்தப் பாராட்டு எங்களுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி யாகவும், பெருமையாகவும், நிறைவாகவும் இருக்கிறது. விஞ்ஞானிகளில் இரண்டுவகையுண்டு. நாத்திக விஞ்ஞானிகள், ஆத்திக விஞ்ஞானிகள். ஆத்திக விஞ்ஞானிகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்பு களைச் செய்யும்போது அவை அவர்கள் இது நாள்வரை நம்பிய மத, கடவுட்கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறபோது சங்கடத்துடன் நெளிவார்கள்.

தமிழ் ஓவியா said...


நமது நாட்டிலேயே இது நடந்திருக்கிறது. சர்.சி.வி.ராமன். இவர் 1930-இல் நோபல் பரிசு வாங்கியவர், 1961-இல் யூரி ககாரின் உலகின் முதல் மனிதராக விண்வெளிக்குச் செல்கிறார். 1930-க்கும், 1961-க்கும் இடையில் 31 வருடங்கள். எந்த மனிதருக்கும் வயது ஆக ஆக அறிவும், அனுபவமும், பக்குவமும் வளரும். அதுதான் இயற்கை. ஆனால் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்றதைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

பார்ப்பனர்களின் மதக்கோட்பாட்டின்படி விண்ணுலகு கடவுள்கள் வாழ்கிற இடமாதலால், கடவுள்கள் வாழ்கிற விண்வெளிக்கு மனிதன் இந்த பூத உடலுடன் செல்வது மிகப்பெரிய பாவம் என்று பத்திரிகையாளரிடம் பேட்டி கொடுத்துவிட்டார். விடுவார்களா பத்திரிக்கையாளர்கள்? நேரே யூரி ககாரினிடம் சென்று கேட்டுவிட்டார்கள், விண் வெளி கடவுள்கள் வாழ்கிற இடமென்றும் மனிதன் தன் பூத உடலுடன் அங்கு செல்வது பெரிய பாவம் என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் சொல்கிறாரே என்று. இதற்கு யூரி ககாரின் என்ன சொன்னார் தெரியுமா? நானும் விண்வெளியில் சுற்றிப்பார்த்தேன் அங்கு எந்தக்கடவுளும் இல்லை என்றார் சாட்டையால் அடித்தது போல் இதைவிட பெரிய சங்கடம் சர்.சி.வி.ராமனுக்கு வேண்டுமா? இது சாதாரணக் சங்கடம் இல்லை, இதற்குப் பெயர்தான் தர்மசங்கடம். அவாளின் தர்மத்துக்கே ஏற்பட்ட சங்கடம், இந்த மாதிரி சங்கடங்களெல்லாம் நாத்திக விஞ்ஞானிகளுக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அவர்கள் மகிழ்ச்சியுடனேயே விஞ்ஞான உண்மை களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ப்ராங்க் வில்செக் என்பவர் ஒரு மிகச்சிறந்த விஞ்ஞானி, 2004-இல் அசிம்டோடிக் ப்ரீடம் என்ற அணுவுக்குள் இருக்கும் ஒரு இயக்கத்திற்காக நோபல் பரிசு பெற்றவர். தன்னைப்பற்றி எழுதும்போது தான் ஒரு பாதிரியாரின் மகனென்றும் மதக்கருத்துகளால் வளர்க்கப்பட்டவனென்றும் விஞ்ஞானத்தில் ஆர்வம் ஏற்பட்டு விஞ்ஞான உண்மைகளை படிப்படியாகத் தெரிந்து கொண்டபோது மதக்கருத்துகள் எவ்வளவு மோசடியாகவும் மக்களை ஏமாற்றுபவையாகவும் இருக்கின்றன என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்து அவற்றைப் புறக்கணித்து விஞ்ஞானத்தை ஏற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார்.

சமீபத்தில் நீங்கள் ஒரு செய்தியைப் படித்திருப் பீர்கள். வாயேஜர் 1, என்ற விண்கலம் சூரியக் குடும்பத்தின் எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்டது என்பது பற்றி 1977-இல் அனுப்பப்பட்ட அந்த விண்கலம் 36 வருடங்கள், ஏறக்குறைய 1900 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து இப்போதும் சென்று கொண்டிருக்கிறது. அதில் நமது பூமியைப் பற்றிய விவரங்கள் ஏராளமாக இருக்கின்றன. நமது விண்மீனாகிய சூரியன் இந்த பால்வெளி மண்ட லத்தில் எந்த இடத்தில் இருக்கிறது. இந்த பூமி என்ற கோள் சூரியனின் மூன்றாவது கோளாக இருப்பது, பூமியில் ஆறுகள் ஓடுகிற சத்தம், பிரபலமான இசை, இங்கு மனிதர்கள் எப்படியிருப்பார்கள் என்பது பற்றிய ஆண், பெண் படம் அதிகமாக மக்கள் பேசக்கூடிய பல மொழிகளைத் தேர்ந்தெடுத்து அந்தந்த மொழிகளின் வாழ்த்துச் செய்திகள் போன்ற பல சிறப்பான செய்திகளை ஒரு தங்க ரிக்கார்டில் பதிவு செய்து அணுப்பியிருக்கிறார்கள். மிகவும் பிரபலமான விண்வெளி அறிஞர் கால் சேகன் தான் இந்த செயல்களுக்கு பொறுப்பேற்று செய்திருக்கிறார். யாராவது வெளியுலகவாசிகள் இருந்தால் நமது பூமியைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அப்படிப் பதிவு செய்யப்பட வாழ்த்துச் செய்திகளில் இந்திய மொழிகளில் மட்டும் 9 வாழ்த்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான் 1999-இல் நாசாவின் வாயேஜர் இணைத்தளத்தைப் பார்த்த போது அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால் அந்த இந்திய மொழிகளில் நமது தமிழ் இல்லை. எனக்கு ஆத்திரமாக வந்தது. ஏழுகோடி மக்கள் பேசுகிற மொழி, 4 நாடுகளின் ஆட்சி மொழியாக இருபது, உலகின் தொன்மையான மொழி எப்படி விடுபட்டுப் போனது என்று இந்த விவரங்களைச் சொல்லி நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் அது ஏற்புடையது அல்ல என்று சற்றுக்கடுமையாகவே அவர்களுக்கு இமெயில் கடிதம் எழுதினேன்.

தமிழ் ஓவியா said...

உடனேயே ஒன்றரை மணி நேரத்துக்குள் இரண்டு பக்கத்துக்கு அவர்கள் எனக்கு பதில் அனுப்பியிருந் தார்கள். அந்த பதில் ஒரு விஷயத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டியது. பார்ப்பனர்கள் சூழ்நிலையை, சின்ன புத்தியை. அவர்கள் சொன்னது இதுதான். தமிழ் எங்கள் பட்டியலில் இருந்தது. இங்கிருக்கும் இந்தியச் சங்கங்களைத் தொடர்புகொண்டு வணக்கம் என்ற தமிழ் வாழ்த்துச் சொல்லை பதிவு செய்வதற்கு நேரம் குறித்து வரச்சொல்லியிருந்தோம். ஆனால் யாரும் வரவில்லை. பார்ப்பனர்களின் ஆதிக்கத்த்திலிருக்கும் இந்தியச் சங்கங்கள் இதை வேண்டுமென்றே புறக் கணித்துவிட்டனர். ஏனென்றால் ஹிந்தி, உருது, தெலுங்கு, பெங்காலி, ஒரியா, குஜராத்தி, மராத்தி, கன்னடம், ராஜஸ்தானி இவையெல்லாம் இருக் கின்றன தமிழ் மட்டும் இல்லை. அது சூழ்ச்சி இல்லாமல் வேறென்ன?

திராவிட மொழியான தமிழுக்கு இந்தச் சிறப்பு ஒரு போதும் போய்ச்சேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகக்குறியாக இருந்திருக்கிறார்கள். நாசா நிறுவனத் தினர் சமஸ்கிருதம் ஒரு வழக்கொழிந்து போன மொழியாதலால், அதைத் தேர்ந்தெடுக்கவில்லை. அப்படி அவர்கள் அதை தேர்ந்தெடுத்திருந்தால் சமஸ்கிருதத்தில் வாழ்த்துச் சொல்லை சொல்வதற்கு அங்கு கியூவில் நின்றிருப்பார்கள். வணக்கம் என்று ஒரு சொல்லைச் சொல்வதற்கு ஒரு ஆளும் இல் லாமல் போய்விட்ர்களா அதற்கு நேரம் தான் இல்லையா? உண்மை அதுவல்ல. மனம் இல்லை.

தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்; என்பது நமது ஆசை ஆனால் இந்தப்போராட்டம் முழுவதும் தேமதுரத் தமிழோசை கேட்பதற்கான வாய்ப்பைத் திட்டம் போட்டுக்கெடுத்துவிட்டார்கள். ஒரு வெளிஉலக மனிதனுக்கு இந்தச்செய்தி போய்ச்சேர்ந்தால் அது அங்கு வாழும் கோடிக்கணக்கானவர்களைப் போய்ச் சேர்ந்ததற்குச் சமம். பொறுக்குமா இவர்களுக்கு? எவ்வளவு குறுகிய புத்தி பாருங்கள்.

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவாளர் வாசகர் வட்டம் அமைப்பது; ஏடுகளுக்குச் சந்தா சேர்ப்பது - ப.க.வின் திட்டங்கள்

மகாராட்டிர மாநிலத்தில் நிறைவேற்றியதுபோல தமிழ்நாட்டிலும் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை!

இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மண்டபங்களில் நாத்திகர்களுக்கு இடமில்லை என்ற ஆணையைத் திரும்பப் பெறுக!

மாநிலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானங்கள்

சென்னை, அக்.14- மகாராட்டிர மாநிலத்தில் நிறைவேற்றியதுபோல, தமிழ்நாட்டிலும் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்றவேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தீர்மானம் உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் கி.வீரமணி அவர்களின் தலைமையில், சென்னை - பெரியார் திடலில் 13.10.2013 அன்று நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் மாநில கலந்துரை யாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட

தீர்மானங்கள்:
இரங்கல் தீர்மானம்:

மராட்டிய மாநில சீரிய பகுத்தறிவாளரும், மூட நம்பிக்கை ஒழிப்புப் போராளியுமான டாக்டர் நரேந்திர தபோல்கர் ஆகஸ்டு 20ஆம் நாளன்று புனே நகரில் மத வெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். டாக்டர் தபோல்கரின் மறைவு பகுத்தறிவாளர் அமைப்பினருக்கு மூடநம்பிக்கை ஒழிப்பு களத்தில் எதிர்பாராத பேரிழப்பாகும்.
தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் துணைத் தலைவர் மானமிகு சித்ரா சுந்தரம் அவர்கள் சென்னையில் செப்டம்பர் 14ஆம் நாள் உடல்நலக்குறைவால் காலமானார். பகுத்தறிவாளர் கழகச் செயல்பாட்டில் மானமிகு சித்ரா சுந்தரம் ஆற்றிய பங்கு அருமையானது. பெரியார் இயக்கச் செயல் பாடுகளில் அவரது ஈடுபாடு அளப்பரியது. மறைந்த பகுத்தறிவாளர்களின் நினைவுகளை போற்றி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


தீர்மானம் 1:

விருத்தாசலத்தில் திராவிடர் கழக மாணவரணி மண்டல மாநாட்டில் பங்கேற்றிடச் சென்ற திராவிடர் கழகத் தலைவரும், பகுத்தறிவாளர் கழகப் புரவலரு மான தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களை 30 பேர் கொண்ட ஜாதி வெறி- மதவெறிக்கும்பல் திட்டமிட்டு நடத்திய தாக்குதலை பகுத்தறிவாளர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மதவெறிக் கும்பலின் திட்டமிட்ட செயல் காவல் துறைக்கு முன்பே தெரிந்திருந்தும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தாக்கப்பட்ட காட்சி ஏடுகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் ஒளிப்படங்களுடன் வெளிவந்து, தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த பின்னரே, திராவிடர் கழகத்தின் சார்பாக கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடத்திய பிறகு தான் மிகவும் காலம் தாழ்த்தி ஒரு வாரத்திற்குப் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் பா.ஜ.க; மற்றொருவர் இந்து முன்னணியினைச் சேர்ந்தவர் என்பதிலிருந்து தமிழர் தலைவர் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதலின் பின்னணி வெளிப்படையாகத் தெரிந்து விட்டது. இந்த தாக்குதலில் தொடர்புடைய இன்னும் பலரையும் கைது செய்து, சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை யினரை இந்த கலந்துரையாடல் கூட்டம் வலியுறுத்துகிறது. தமிழர் தலைவர் மீது கடந்த காலங்களில் நடைபெற்ற நான்கு முறை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தொடுக் கப்பட்ட வழக்குகள், நடவடிக்கைகள் போல் அல்லாது, தாக்குதலை நடத்தியவர்கள் உரிய வகையில் தண்டிக்கப் பட வேண்டும் என்பதை இந்தக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தமிழர் தலைவருக்குத் தேவையான பாதுகாப்பை காவல்துறை அளிக்கத் தவறும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை திராவிடர் கழகம் மேற்கொள்வது என்றும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானத்தை வழிமொழிந்து அதன் உறுதியான நடவடிக்கைகளுக்கு பகுத்தறிவாளர் கழகம் உறுதுணையாக இருக்கும் என்பதை இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 2:
மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம்!

தமிழ் ஓவியா said...

கடவுள் மறுப்பினை முன்னிறுத்தாத மூடநம்பிக்கை ஒழிப்பு சமுதாயத்தில் முழுமை அடையாது; நிலையாகவும் இருக்காது. கடவுள் நம்பிக்கை குறைந்தாலும், மூட நம்பிக்கைகள் மலிந்துள்ள நாடு செஞ்சீனம் என்பது நிகழ்கால உண்மை. தொலைநோக்குப் பார்வையுடன், சீரிய, பகுத்தறிவின் அடிப்படையில் தந்தை பெரியாரால் வார்க்கப்பட்ட கடவுள் மறுப்போடு கூடிய மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பணியின் உன்னதத்தை உரிய முறையில் மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பகுத்தறிவாளர் கழகம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பணியினை மேலும் அழுத்தமாக நடத்திடத் தீர் மானிக்கப்படுகிறது இதற்கான பிரச்சாரக் கூட்டங்கள், வீதி நாடகங்கள், எடுத்துக்காட்டு விளக்கமுறைகள், மந் திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாவட்டத் திலும் பரவலாக நடத்திடத் தீர்மானிக்கப்படுகிறது. மந் திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை பரந்துபட்டு நடத்திடும் வகையில், அந்தந்தப் பகுதியில் நிகழ்ச்சியினை நடத்திடும் ஆர்வம் உள்ள தோழர்களுக்கு உரிய பயிற்சியினை அளித் திடவும் அதில் புதிய தோழர்களை ஊக்குவிக்கும் வகை யில் பலரைப் பங்கேற்றிடச் செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3:
பெரியார்-1000 வினா - விடை

தந்தை பெரியாரின் 135ஆவது பிறந்தநாளினை ஒட்டி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டியில் வெற்றிகரமாக, பெரும் எண்ணிக்கையில் பள்ளி மாணவ, மாணவியர் பங் கேற்றனர். வரலாறு காணாத வகையில் பெருந்திரளாக மாணவச் செல்வங்கள் பங்கேற்றிடும் வகையில் திட்டமிட்டு ஒருங் கிணைத்து நடத்திய திராவிடர் கழகம், பகுத் தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மணியம்மை பல் கலைக்கழக ஆசிரிய, அலுவலர் பெருமக்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுதலையும், நன்றியினையும் தெரி வித்துக் கொள்கிறது. வரும் காலங்களிலும் பெரியார் ஆயிரம் என்பது மேலும் பல்வேறு விரிவான செய்திகளை உள்ளடக்கி, இளம் பிஞ்சுகளின் உள்ளத்தில் பகுத்தறிவுக் கருத்துக்களை பாய்ச்சும் விதமாக நடத்திட வேண்டும். அதற்கான செயல் திட்டங்களுக்கு பகுத்தறிவாளர் கழகம் உறுதுணையாக இருந்து ஆக்கம் கூட்டிடும் என தீர்மானிக்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் 4:

பகுத்தறிவாளர் கழகப் பணி என்பது சீரிய சமுதாய மனிதநேயப் பணி. மனிதநேயப் பணியில் ஆர்வமுள்ள துவக்கநிலைத் தோழர்களை ஈடுபடுத்திட பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்ப்புப் பணி மிகுந்த அக்கறையுடன் நடைபெற வேண்டும். மாவட்ட, ஒன்றிய, நகர, சிற்றூர் அளவில் ஆர்வமுள்ள தோழர்களை பகுத்தறிவாளர் கழக உறுப்பினராகச் சேர்க்கும் பணியினை விரைந்து முடித் திட பொறுப்பாளர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5:
இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான திருமண மண்டபமும் - உத்தரவும்!
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பொது மண்டபத்தினை பகுத்தறிவாளர்களுக்கு பொது நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகள் நடத்திட அளிக்கக் கூடாது என்னும் தமிழக அரசு உத்தரவினை இக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்து அற நிலையத்துறையின் பணி வெறும் கோயில் நிர்வாகப் பணி மட்டுமே. வழிபாட்டை ஊக்குவிப்பதற்காக உரு வாக்கப்பட்டதல்ல. பொதுமக்கள் நிதி பங்களிப்பில் கட்டப்பட்ட கோயில் மண்டபத்தை சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பயன்பாட்டுக்கும், தேவை களுக்கும் அளித்திட வேண்டும் என்பதை வலியுறுத் துகிறது. பகுத்தறிவாளர்களுக்கு கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுநிகழ்ச்சி மண்டபங்கள் தொடர்ந்து வழங்கப்படும் வகையில், பயன்பாடு மறுக் கப்பட்ட அரசு உத்தரவு திரும்பப் பெற இந்து அற நிலையத்துறையினை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6:

மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி தபோல்கரின் மறைவினை ஒட்டி, மராட்டிய மாநில அரசால் பில்லி, சூனிய, மூடநம்பிக்கை ஒழிப்பிற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அவசரச் சட்டத்தின் கீழ் பில்லி, சூனியம் நடத்திட்ட சிலர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டன.

மூடநம்பிக்கையினை ஒழிக்கும் அறிவியல் மனப் பான்மையினை வளர்ப்பதை இந்திய அரசியலமைப்பு சட்டம் குடிமக்களின் அடிப்படைக் கடமையாக வலி யுறுத்தும் வேளையில், தமி ழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தினை உருவாக்கிட, நடைமுறைப் படுத்திட தமிழக ஆட்சியாளர் களை பகுத்தறிவாளர் கழகம் கேட்டுக்கொள்கிறது. சட்ட உருவாக்கப் பணியில் தேவைப்படும் அனைத்து வித கொள்கை சார் விவரங்களை அரசுக்கு அளித்திட பகுத்தறிவாளர் கழ கம் அணியமாக உள்ளது என்பதையும் இக்கூட்டத்தின் வாயிலாக அரசினருக்கு தெரியப்படுத்திக் கொள்கிறது.

தீர்மானம் 7:
வாசகர் வட்டம்

பெரியார் இயக்க இதழ்களான விடுதலை நாளிதழ், உண்மை இருவார இதழ், பெரியார் பிஞ்சு குழந்தை களுக்கான மாத இதழ், தி மாடர்ன் ரேசனலிஸ்ட் (கூந ஆடினநச சுயவடியேடளைவ) ஆங்கில மாத இதழ்களுக்கு சந்தா சேகரிப்புப் பணியினை, புதிய தளத்தில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்திடும் வகையில் மேற்கொள்ள வேண் டும் என தீர்மானிக்கப்படுகிறது. ஆங்கில மாத இதழான தி மாடர்ன் ரேசனலிஸ்ட் புதிய பொலிவுடன் வரும் சூழலில், அந்தந்த பகுதியில் உள்ள கல்லூரி, பள்ளி நூலகங்களில் அவை கிடைக்கச் செய்யும் வகையில் சந்தா சேகரிப்புப் பணியில் பொறுப்பாளர்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகி றார்கள். மேலும் விடுதலை வாசகர் வட்டம், பகுத் தறிவாளர் வாசகர் வட்டம் - (சுயவடியேடளைவ சுநயனநசள ஊடர-சுசுஊ) என்பதாக அமைத்து வாசிக்கவும், படிக் கவும், பகுத்த றிவு அடிப்படையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெற உகந்த பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்படுகிறது

தமிழ் ஓவியா said...

அடுத்த ஆண்டு பெரியார் 1000 வினா - விடைப் போட்டி ஆசிரியப் பெருமக்களுக்கு நடத்தப்படும்

பொறுப்பாளர்களுக்கான மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு

பகுத்தறிவாளர் கழக மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற பொறுப்பாளர்கள்

சென்னை, அக். 14- சென்னை - பெரியார் திடலில் 13.10.2013 அன்று பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்களின் மாநில கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

சமுதாய நலனில் அக்கறை, ஆர்வம் மிக்க தோழர்களை அடையாளம் கண்டு உறுப்பினர் களாக்கி, பரந்துபட்ட அளவில் பகுத்தறிவாளர் கழகத்தின் பணி அமைய வேண்டும். தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டு வரும் தற்காலச் சூழலில் இணையதளத்தின் மூலம் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணி அமைப்பு அடிப்படையில் தொடங்கப்படல் வேண்டும் என பகுத்தறிவாளர் கழகப் புரவலர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வழிகாட்டி நெறியுரை ஆற்றினார்.

பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டத் திற்கு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் முனைவர் வா.நேரு தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கள் வீ.குமரேசன் மற்றும் வடசேரி வ.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்கள் தாங்கள் மேற்கொண்ட கடந்த கால செயல்பாடுகளை சுருக்கமாக எடுத்து ரைத்தனர். திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள். தமிழர் தலைவர், பகுத்தறிவாளர் கழகத்தின் வருங் காலச் செயல்பாடுகள் குறித்து வழிகாட்டும் நெறி யுரை ஆற்றினார்.

வருகை தந்தோரை வரவேற்றுப் பேசிய பகுத்தறி வாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் பகுத்தறிவாளர் கழகத்தின் தமிழகம் தாண்டிய பிற மாநிலத் தொடர்புகள் மற்றும் பிரச்சாரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

தமிழ் ஓவியா said...

ஒரியா மொழியில் முதன்முறையாக தந்தை பெரியாரின் சிந்தனைகள் புத்தக வடிவில் வெளிவரு வதையும், அதனை ஒடிசா மாநில அரசு நிறுவன மான ஒடிசா பாடநூல் கழகம் வெளியிட இருப் பதையும் விளக்கமாகக் கூறினார். ஆங்கிலத்தி லிருந்து ஒரியா மொழியாக்கப் பணியினை ஒடிசா மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு மேற்கொண்டுள்ளார். இந்த ஆண்டு தமிழர் தலைவரின் 81ஆவது பிறந்த நாளில் (டிசம்பர் 2) தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆண்டு மலர் (கூந ஆடினநச சுயவடியேடளைவ ஹரேயட சூரஅநெச 2013) வெளியிடும் பணியில் கடந்த ஆண்டு 2012 மலருக்கு ஈடுபாடு மேற்கொண்ட பணியினை பகுத்தறிவாளர் கழகம் தொடரும் எனக் குறிப்பிட்டார்.

தலைமை வகித்துப் பேசிய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் முனைவர் வா.நேரு, பெரியார் ஆயிரம் வினா - விடைப் போட்டியில் பெருமள வில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ - மாணவி கள் பங்கேற்றிடச் செய்து வெற்றிகரமாக முடித்திடு வதில் பணியாற்றிய பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்களைப் பாராட்டிக் கூறினார். மேலும் இணையதளத் தொடர்பில் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் நல்ல முறையில் பயிற்சி பெற்று, பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியினை வலுப்படுத்தவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இணையதளத்தில் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணி நடத்துவது குறித்த ஒரு செயல்திட்டத்தினை பகுத் தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் கோ.ஒளி வண்ணன் முன்வைத்தார்.

வீ.அன்புராஜ்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் அண்மையில் கானா, துபாய் நாடுகளுக்குச் சென்று அங்கு நடைபெற்ற தந்தை பெரியாரின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட செய்திகளை எடுத்துக் கூறினார். தந்தை பெரியாரின் கருத்துகள் உலகமயமாகி வரும் சூழலை விளக்கி, பகுத்தறிவாளர் கழகம் அந்த பிரச்சாரத் தளத்தில் பணியாற்றிட வேண்டும். அத்தகைய பணிகளை தனித்துவத்தோடு நடைமுறைப்படுத்த பகுத்தறி வாளர் கழகம் முன்வரவேண்டும் என்று கூறினார்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

பெரியார் இயக்கத்தில் சென்ற தலைமுறையில் தொடர்பில் இருந்தவர்கள், இயக்கத்தின் செயல் பாட்டால் பயன் பெற்றவர்கள், நன்றி உணர்வாளர் கள் என பலர் இருக்கின்றனர். அவர்களை முறை யாகச் சந்தித்து, இயக்கத்தில் அவர்களை ஈடுபடுத் திடவோ, இயக்கப் பணிகளுக்கு ஆதரவு அளித் திடவோ, இயக்கத்திற்கு உதவிகரமாக இருந்திடச் செய்வதற்கு பகுத்தறிவாளர் கழகம் தனி முயற்சி எடுத்திட வேண்டும். பகுத்தறிவாளர் கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கை இத்தகைய செயல்களி னால் அதிகப்படும்; பல்கிப் பெருகும். அதற்கான பணியினை பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் கள் திட்டமிட்டுச் செயலாற்றிட முன்வரவேண்டும்.

தமிழர் தலைவர் வழிகாட்டு நெறியுரை

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி, வழிகாட்டும் உரையில் குறிப்பிட்ட தாவது:-

தந்தை பெரியாரின் 135ஆவது பிறந்த நாள் விழாவில் நடைபெற்ற பெரியார் ஆயிரம் வினா - விடை ஒரு பெரிய வரலாற்று திருப்புமுனையாக அமைந்துவிட்டது. ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர் தந்தை பெரியார் பற்றி, அவரது சிந்தனைகள் பற்றி இளம் வயதிலேயே தெரிந்து கொள்ளும் சூழல் அமைந்து விட்டது. இதனுடைய தாக்கம் வருங்காலத்தில் சமுதாய மனப்போக்கில் பல்வேறு மாறுதல்களை உருவாக்கிடும்.

அடுத்த ஆண்டிலிருந்து பெரியார் ஆயிரம் போட்டிகள் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசி ரியப் பெருமக்களுக்கும் நடத்தப்படும். பங்கேற்கும் மாணவர்களின் பங்கு, நுகர்வுப்பண்டங்களைப் (ஊடிளேரஅநச படிடினள) போன்றது; ஆசிரியர்களின் பணி உற்பத்தியாளர் பண்டங்களைப் (ஞசடினரஉநச படிடினள) போன்றது. பகுத்தறிவுக் கருத்துகளை உள்வாங்கிடும் நுகர்வுப் பயனாளர்கள் மாணவர்கள். ஆனால் ஆசிரியர் பெருமக்களோ பகுத்தறிவுக் கருத்துகளை விதைத்து வளர்க்கின்ற செயல்களின் மூலம் உரு வாக்கப் பணியில் உள்ளவர்கள். எனவே பெரியார் - ஆயிரம் நிகழ்ச்சி ஆசிரியப் பெருமக்களுக்கு நடத்தப் படுவது இன்னும் பரவலாக தந்தை பெரியாரின் சிந்தனைகள் பலரையும் சென்றடையக் கூடிய வாய்ப்பா அமையும்.

தமிழ் ஓவியா said...


வரும் ஆண்டுகளிலும் இந்த பெரியார் ஆயிரம் நிகழ்ச்சி மேலும் பல செய்திகளை உள்ளடக்கி, இன்னும் மிகப் பெரும் பலருக்குச் சென்று சேர்வ தாக, பிற மாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதற்கு பகுத்தறி வாளர் கழகம் தனிப்பட்ட அக்கறை, முயற்சிகள் எடுத்திட வேண்டும்.

பெரியார் உலக மயம் பணியில் பிற மாநிலங் களில் வெளிநாடுகளில் உள்ள பகுத்தறிவாளர் அமைப்புகளோடு, ஏடுகளோடு தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் பகுத்தறிவாளர் கழகம் பணி ஆற்றிட வேண்டும். அந்தந்த மொழியிலே தந்தை பெரியாரின் கருத்துகள் சென்றடையக் கூடிய வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இணைய தளத்தின் மூலம் பிரச்சாரப் பணியில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு முறையான பயிற்சிகள் பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
பிரச்சாரப் பணியில் புத்தாக்க வழி முறைகளைக் கைக்கொண்டு பணியாற்றிட பகுத்தறிவாளர் கழகம் முன்வரவேண்டும். இத்தகைய பரந்துபட்ட பணி களை மேற்கொள்ள உறுப்பினர் பலம் தேவை. சமூக அக்கறை, ஆர்வம் உள்ள தோழர்களை உறுப்பினர் களாக சேர்த்திடும் பணியிலும் முனைப்பாக பகுத்தறிவாளர் கழகம் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

பெரியார் ஆயிரம் வினா - விடைப் போட்டியில் அதிக அளவில் மாணவ மாணவியரைப் பங்கேற்கச் செய்திட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டங்களுக்கு பாராட்டு அடையாளமாக பொறுப்பாளர்கள் அரியலூர் தங்க.சிவமூர்த்தி, திருவாரூர் சிவகுமார், வடசென்னை கோவி.கோபால் ஆகியோர்க்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து பெருமைப்படுத் தினார்.

பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்பு மாற்றம், புதிய பொறுப்பாளர்கள் - நியமனங்கள் பற்றிய செய்திகளை, புரவலர் தமிழர் தலைவரின் அனுமதியோடு தலைவர் வா.நேரு அறிவித்தார்.

கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானங்களை பகுத்தறிவாளர் கழகத்தில் புதிய பொறுப்பினை ஏற்ற பொதுச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி வாசிக்க, பங்கேற்ற பொறுப்பாளர்கள் தங்களது கரவொலி மூலம் நிறைவேற்றினர். நிகழ்ச்சியின் நிறைவாக புதுச்சேரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் கோ.மு.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

மாநில, மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் மாற்றம் / நியமனம்

மாநில பொறுப்பாளர்கள் துணைத் தலைவர் - மா.அழகர்சாமி

பொதுச் செயலாளர் - தகடூர் தமிழ்ச்செல்வி
மாவட்ட பொறுப்பாளர்கள்
நாகை மாவட்டம்
தலைவர் - இல.மேகநாதன்
செயலாளர் - மு.க.ஜீவா
அமைப்பாளர் - முத்துகிருட்டிணன்
அரியலூர் மாவட்டம்
தலைவர் - பு.கா.அன்பழகன்
செயலாளர் - தங்க.சிவமூர்த்தி
அமைப்பாளர் - பா.இளங்கோவன்
மா.துணைத் தலைவர் - த.ஜெயராஜ்
பெரம்பலூர் மாவட்டம்
தலைவர் - முனைவர் ச.தங்கபிரகாசம் செயலாளர் - ஆசிரியர் பெ.நடராசன்
கடலூர் மாவட்டம்
தலைவர் - முனைவர் ஜெயக்குமார்
திருவாரூர் மாவட்டம்
அமைப்பாளர் - சசிகுமார் (நு.க்ஷ.)
கோவை மாவட்டம்
செயலாளர் - வெள்ளளூர் மணி
தென்சென்னை மாவட்டம்
துணைத் தலைவர் - எம்.ஆர்.மாணிக்கம்
சேலம் மாவட்டம்
தலைவர் - பொறியாளர் மு.செல்வராசு
தாராபுரம் மாவட்டம்
தலைவர் - கணியூர் ச.ஆறுமுகம்
செயலாளர் - பு.முருகேசு
அமைப்பாளர் - உடுமலை வே.கலையரசன்.

தமிழ் ஓவியா said...


மனிதனின் கடமை


மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும், ஆண்மை யோடும் நின்று விசயங்களை நன்றாய் ஆராய்ச்சி செய்து, காலத்துக்கும், அவசியத்துக்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்யவேண்டி யது பகுத்தறிவு கொண்டவன் என்னும் மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.

- (குடிஅரசு, 20.1.1935)

தமிழ் ஓவியா said...


ராமன் கோயில்


கேள்வி:ராமர் கோயில் பிரச்சினை தேர்தலில் முக் கியத்துவம் பெறும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: ஏதோ சில மேடை களில் இது பேசப்படலாம் சம்பிரதாயத்துக்காக; பா.ஜ.க. வின் தேர்தல் பிரகடனத் திலும்கூட இது ஒரு சிறிய இடத்தைப் பெறலாம். மற்றபடி தேர்தலில் இந்த விஷயத் திற்கு எந்த முக்கியத்துவமும் கிட்டாது என்றே நான் நினைக்கிறேன்.
- துக்ளக் 16.10.2013 பக்கம் 2

ராமன் கோயில் பிரச் சினை தேர்தலில் முன்னி றுத்தப்படக் கூடாது; தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறக் கூடாது என்று சொல்லும் அறிவு நாணயம் இந்த சோ அய்யருக்கு இல்லை என்பது இதன்மூலம் வெளியாக வில்லையா?

மேடைகளில் பேசுவார் களாம், தேர்தல் அறிக்கை யிலும்கூட ஒரு சிறிய இடத்தைப் பெறலாமாம் -ஆனாலும் அதற்கு எந்தவித முக்கியத்துவம் கிட்டாதாம்.

எந்தவித முக்கியத்துவ மும் கிட்டாத ஒன்றை எதற்குத்தான் மேடையில் பேச வேண்டும்? எதற்காகத் தான் அது சிறிய இடத்திலும் இடம் பெற வேண்டும்? விளக் குவாரா வேதியபுரத்தார்.

ராம பக்தர்களையும் குறிப் பாக சங்பரிவார்க் கும்பலை யும் ஏமாற்ற வேண்டும்; இன்னொரு பக்கத்தில் வாக்காளர்களையும் ஏமாற்ற வேண்டும் என்ற இரட்டை நாக்குப் புத்திதான் இது.

ராமன் என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்று காலங் கடந்தாவது சோ ஒப்புக் கொண்டதற்காகக் கொஞ்சம் பாராட்டலாம் தான்!

சேலம் 1971அய் அவர் மறந்திருக்க மாட்டார் அல்லவா!

ராமன் கோயில் கட்டு வதுதான் எங்கள் கொள்கை, பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த இடத்தில் ராமன் கோயிலை எழுப்பியே தீரு வோம் என்று மார்தட்டித் தேர்தலைச் சந்திக்கும் திராணி, அறிவு நாணயம் பி.ஜே.பி.க்கு உண்டா? அதைத் தேர்தல் பிரச்சினை யாக வைத்துத்தான் தீர வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் திரில் ஆர்.எஸ். எசுக்குத்தான் உண்டா?

பிரதமர் வாஜ்பேயி அமெரிக்காவின் ஸ்டேட்டன் தீவில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் பேசும்போது, நாங்கள் பெரும்பான்மை பெற்றால் ராமன் கோயிலைக் கட்டு வோம் என்றாரே - அதையே தேர்தல் பிரச்சாரக்களத்தில் முன் வைப்பார்களா?

பெரும்பான்மை தாருங் கள் ராம பிரான் கோயிலைக் கட்டிக் காட்டுகிறோம் என்று இந்திய வாக்காளர்கள் மத்தியில் வைக்க வேண்டி யது தானே - யார் தடுத்தது?

இரட்டை நாக்கில் பேசு வதில் இவர்களை அடித்துக் கொள்ள யார் இருக்க முடியும்?

காசியும், மதுராவும் எங்கள் அஜண்டாவில் இல்லை. ஆனால் இவை இரண்டும் எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ளன. ஆனால் இந்தத் தேர்தலில் ஸ்திரமான, நேர்மையான அரசு என்பது தான் பிரதான அஜண்டா வாக இருக்கும் என்றார் அத்வானி (இந்து 30.12.1997)

அத்வானி பேசியது குறித்து வாஜ்பேயிடம் கேட்ட போது அவர் என்ன சொன் னார்? அஜண்டாவில் இல்லையென்றால் அதன் பொருளென்ன? தற்சமயம் அஜண்டாவில் இல்லை; அவ்வளவுதான். எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் உறுதி யிட்டுக் கூற முடியாது. (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 8.1.1998) பேசு நா இரண்டு டையாய்ப் போற்றி என்று ஆரிய மாயையில் அண்ணா அர்ச்சித்ததுதான் நினை விற்கு வந்து தொலைக்கிறது!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத் தலைவரைத் தாக்குவதா?

மக்களாட்சியின் அடிப்படையே புரியாத காட்டுமிராண்டிகளின் தடித்தனம்
- சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன்

கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதியன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் இயக்க மாணவர் மாநாட்டுக்குச் செல்லும் வழியில் திராவிடர் கழகத் தலைவரும், விடுதலை இதழாசிரியரும், சமூக நீதிக்காகவும் மூடத்தன ஒழிப் புக்காகவும் தம் வாழ்வு முழுவதும் துணிந்து போராடிப் பல வெற்றிகளை நமக்கு ஈட்டித்தந்த பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்கள் வழியில் தொடர்ந்து பணியாற்றி வருபவருமான கி.வீரமணி அவர்கள் வந்த வாகனத்தை வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கிச் சேதப்படுத்தியிருக் கிறது என்ற செய்தி அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அளிக்கிறது. மதவெறியும், ஜாதி வெறியும் கைகோர்த்து இந்த மிருக வெறித் தாக்குதலை நிகழ்த்தியிருப்பது மக்க ளாட்சிக் கோட்பாட்டுக்கே முற்றி லும் முரணான பாசிச வழிமுறை.

இதில் மேலும் அதிர்ச்சி தரும் காரியம் என்னவென்றால், வீரமணி அவர்களைப் பாதுகாக்க ஓடி வந்த திராவிடர் இயக்கத் தொண்டர் களைக் காவல்துறையினரே தடுத்துத் தாக்கியிருக்கிறார்கள் என்ற சேதி, வீரமணி அவர்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் அதைச் செய்யாமல் பாதுகாக்க ஓடிவந்த திராவிட இயக்கத் தொண்டர்களை தாக்கியிருக்கிறார்கள் என்று அறியும் போது மனம் கொந்தளிக்கிறது.

இன்னும் ஒரு கொடுமை இந்தக் கொடுஞ்செயல்களைப் பற்றிப் புகா ரளிக்கக் காவல் நிலையத்துக்குச் சென்ற திராவிடர் கழகத் தோழர் களிடமிருந்து தோழர் வீரமணியின் கார் தாக்கப்பட்டது பற்றிய புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், காவல் துறையினரின் தாக்குதல் பற்றிய புகார் மனுவைப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்ட தாகவும் அறியவரும் செய்தி.

மக்களாட்சியின் அடிப்படைப் பண்பே சமூக மனிதர்களுக்குரிய கருத்துச் சுதந்திரம். நீண்ட வரலாற் றுக்குரிய திராவிட இயக்கம் இந்த நாட்டின் ஆகப்பெரிய நோயான வர்ணாசிரம் நோயையும் அதன் உள் நோய்களான மூடத்தனங்களையும் ஒழித்து அறிவு பூர்வமான ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்கத் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்தக் கொள்கைகளை ஏற் றுக் கொள்ளாதவர்கள் இவற் றைச் சனநாயக வழிகளில் எதிர்த் துப் பிரச்சாரங்கள் செய்யலாம். அதை விட்டு வன்முறையில் ஈடுபடுவது அவர்களுடைய கொள்கைகளின் உள்அழுகலை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவர்கள் நம்பும் அடிப்படை ஆயுதமான வன்முறையின் வெளிப்பாடும் ஆகும்.

இந்தக் கொடூரமான சட்ட மீறலுக்கும், வம்முறைக்கும் எதி ரான கடுமையான சட்டபூர்வ மான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனத் தமிழக அரசைக் கோருகிறேன்.

தமிழ் ஓவியா said...


கலைஞர் சார்பில் பிரதமரிடம் டி.ஆர். பாலு முறையீடு


புதுடில்லி, அக். 15- இலங்கையில் நடை பெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது! என்ற தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் களின் கோரிக்கையினை இந்தியப் பிரதமர் மன் மோகன்சிங் அவர்களி டம், நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு நேற்று நேரில் உறுதிபட எடுத்துரைத் தார்.

இந்தக் கோரிக்கை யினை வலியுறுத்தி தொடர் பட்டினிப் போராட்டம் நடத்தி வரும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு வின் மோசமான உடல் நிலை குறித்தும் டி.ஆர். பாலு, பிரதமரிடம் எடுத்துவிளக்கினார்.

அதனைக் கனிவுடன் கேட்டறிந்த இந்தியப் பிரதமர் அவர்கள், இவ் விஷயத்தில் தி.மு.க. மற்றும் தமிழர்களின் உணர்வுகளை மதித்து உரிய நல்ல முடிவு எடுப்போம்! என்று உறுதியளித்தார். தியாகு பட்டினிப் போராட் டத்தைக் கைவிட கலை ஞர் அவர்கள் நடவ டிக்கை எடுக்க வேண் டும்! என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

அதனை பிரதமர் மன்மோகன்சிங் அவர் கள், கடிதமாகவே வடித்து கலைஞர் அவர்களுக்கு டி.ஆர்.பாலு மூலம் கொடுத்தனுப்பினார்.

புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் அவர்களை அவரது இல்லத்தில், நேற்று இரவு 8 மணியளவில் தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் சந்தித்துப் பேசினார்.

சுமார் 25 நிமிடத் திற்கு மேல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது டி.ஆர்.பாலு இந்த ஆண்டு நவம்பர் திங் களில் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர் களின் கூட்டத்தில் இந் தியா கலந்துகொள்ளக் கூடாது என்கின்ற கோரிக் கையினை கலைஞர் அவர் கள் சார்பில் வைத்து, அதனை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.

ஓரணியில் நின்று தமிழ் இன உணர்வாளர்கள் நடத்தும் போராட்டம்!

நான்கு ஆண்டுக ளுக்கு முன்னால் இலங் கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள் நாட் டுப் போரின் போது, ஒரு இலட்சத்து அய்ம் பதாயிரத்திற்கும் மேற் பட்ட அப்பாவி இலங் கைத் தமிழர்களின் உயிரைப் பறித்த சிங்கள இனவெறி அரசு நடத் தும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற தமிழகத்தின் ஒரு மித்த குரலுக்கு பிரதமர் செவி சாய்க்க வேண்டும் என்றுதமிழகத்தின் பல்வேறுஅரசியல் இயக் கங்களும் - நாடாளு மன்ற உறுப்பினர்களும் - மாணவர்களும் - உலகத் தமிழ் இன அமைப்பு களும் பல்வேறு கால கட்டங்களில்தொடர்ந்து போராடி வருவதை கலைஞர் அவர்களின் சார்பில் டி.ஆர். பாலு சுட்டிக் காட்டினார்.

தமிழ் ஓவியா said...


தீர்வு காண முடியாத பிரச்சினையே கிடையாது

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு தமிழர் தலைவர் அளித்த பேட்டி

சென்னை, அக். 15- ஈழப் பிரச்சினை மட்டுமல்ல; எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. இன்று (15.10.2013) சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:- கேள்வி: காமன்வெல்த் மாநாட்டு அமைப் பிலிருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்று கோரிக்கையை வைத்திருக்கிறீர்கள்; அது எந்த அளவிற்குச் சாத்தியமாகும்?

பதில்: சட்டத்திற்காக மனிதர்கள் அல்ல; மனிதர்களுக்காகத்தான் சட்டம். இதற்கு முன்னால் எங்கும் இதுபோன்ற கொடுமைகள் நடைபெற்றது கிடையாது. ஆகவே, அந்தக் கொடுமைகள் இலங்கையில் நடைபெற்றதின் காரணமாக, நீக்கக் கூடிய அளவிற்கு அய்.நா.விற்கு சக்தி இருந்து, நியாயங்கள் தோன்றுமேயானால், நிச்சயமாக அதனை செய்யவேண்டும். சமூகத்திற் காகத்தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக சமூகம் கிடையாது.

கேள்வி: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்று இந்திய அரசாங்கம் குற்றம் சொல்வதுபற்றி...?

பதில்: எல்லை தாண்டி செல்கிறார்கள் என் றால், காஷ்மீரில் பாகிஸ்தான் பக்கத்தில் முள் வேலி போட்டிருப்பதைப்போல, கடலில் ஒன்றும் முள்வேலி போட முடியாது. எல்லோரும் தெரிந்த ஒன்று என்னவென்றால், காற்றடித்தால், தானாக அந்தப் படகுகள் நகர்ந்து போகும். உடனடியாக அதனைத் தடுக்கவேண்டியதும், பாதுகாக்கவேண்டியதும் நம்முடைய கப்பற் படையின் கடமையாகும். தமிழக மீனவர்களின் வலைகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; மீன்களைக் கொள்ளையடிக்கிறார்கள்; இரண்டு நாள்களுக்கு முன்னாலேகூட தமிழக மீனவரை கத்தியைக் கொண்டு வெட்டி இருக்கிறார்கள். இதைவிட வெட்கக்கேடு வேறு எதாவது உண்டா?

கேள்வி: இரு தரப்பு மீனவர்களும் (தமிழக - இலங்கை) பேச்சுவார்த்தையின்மூலம் தீர்வு ஏற்படும் என்று சொல்கிறார்களே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: இரு தரப்பு அமைச்சர்களே பேசி முடிவுக்கு வரவில்லையென்றால், இரு தரப்பு மீனவர்கள் பேசி என்ன முடிவிற்கு வர முடியும்? இது ஒரு சடங்காச்சாரமாக இருக்குமே தவிர, இதனால் எந்தவித பயனும் ஏற்படாது. சட்ட பூர்வமாக எப்படி மற்றவர்களைக் கண்டிக்கிறீர் களோ, அதுபோல சட்டபூர்வமாக செய்யுங்கள். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொடுப் பதை நிறுத்துங்கள்; போர்க் குற்றம் இன்னும் செய்துகொண்டிருப்பவர்களுக்கு, பயிற்சிக்கு போர்க் கப்பல்களை அனுப்புவோம் என்று சொல்வதையெல்லாம் முதலில் நிறுத்திவிட் டோம்; உங்களுடைய செயல்பாடுகளில் எங் களுக்கு திருப்தி இல்லை என்று அழுத்தந்திருத்த மாக வார்த்தைகள் இருக்கவேண்டும். ஆனால், இதுவரையில், கவலைப்படுகிறோம், அதனைப் பற்றி யோசிக்கிறோம், இது தடுக்கப்பட வேண்டும் என்று எவ்வளவு மென்மையான மொழியிலே, செல்லக் கோபமாகத்தான் காட்டு கிறார்களே தவிர, அவர்கள் அழுத்தந்திருத்த மாக தமிழக மீனவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செய்வதில்லை.
கேள்வி: தமிழக மீனவர் பிரச்சினை என்பது ஆண்டாண்டு காலமாக இருந்து கொண்டு வருகின்றது; இதற்கு ஒரு தீர்வு என்பது உண்டா?

பதில்: தீர்வு இல்லாத பிரச்சினைகளே உலகத் தில் கிடையாது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. அண்மையில், ரசாயனக் குண்டு வைத்திருக்கிறது என்று சொல்லி, சிரியாமீது அமெரிக்கா படையெடுக்கப் போகிறது என்கிற வுடன், மற்ற நாடுகள் அதனைத் தவிர்த்து, போர் வரக்கூடாது என்று ஒரு தீர்வு கண்டார்கள். ஆகவே, மனமிருந்தால் மார்க்கம் உண்டு. அறி விருக்கிறதுபொழுது தீர்வுக்குப் பஞ்சமிருக்காது. அதை செய்வதற்கு தெம்பும், திராணியும், மன உறுதியும் அரசாங்கத்திற்கு வேண்டும்.
கேள்வி: அடுத்த கட்ட நடவடிக்கையாக திராவிடர் கழகம் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க உள்ளது?

பதில்: டெசோ அமைப்பிலும் திராவிடர் கழகம் அங்கம் வகிக்கிறது. இந்த நேரத்தில், மற்றவர்கள் தெளிவான ஒரு சூழ்நிலையில் என்னென்ன செய்யவேண்டும் என்பதை அணுகு கிறபொழுது, தமிழகத்தில் இருக்கின்றவர்கள் தனித்தனியாக இந்தக் காரியங்களைச் செய் கிறார்கள்; எல்லோரும் ஒன்றுபடமாட்டார்கள் என்கிற நிலையை மாற்றக்கூடியது மிகமிக முக் கியம். குறைந்தபட்சம் அதற்கு ஒத்தக் கருத்துள்ள வர்கள் அவரவர்கள் அவரவர் இடத்திலிருந்து ஆதரவு கொடுத்தால்கூட போதும் ஒருவருக்கொ ருவர் தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

இரண்டாவதாக, அடுத்தகட்டமாக எதைச் செய்தால், மத்திய அரசுக்கு மிகப்பெரிய அள விற்கு உரைக்குமோ, மத்திய அரசு நல்ல இணக்க மாக சிந்திக்கிறோம் என்று ஒரு உறுதியை கலைஞர்மூலமாக அளித்திருக்கிறார்கள். நாம் பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு அடுத்தபடி யாக நேரிடையாக நடவடிக்கைகள் இருக்கும். திண்டிவனத்தில் வருகிற 20 ஆம் தேதி கூடவிருக் கின்ற திராவிடர் கழக மத்தியக் குழுவில் அறி விப்போம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கலைஞர் தொலைக்காட்சிக்கு பேட்டி யளித்தார்.

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் உரிமைகள், தமிழக மீனவர் பாதுகாப்புகளை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது

சென்னை, அக்.15- ஈழத் தமிழர் உரிமைகள், தமிழக மீனவர் பாதுகாப்புகளை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (15.10.2013) காலை தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை பெரியார் திடலில் 7.10.2013 அன்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இன்று (15.10.2013) தமிழகம் முழுவதும் கழக மாவட்டங்கள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

சென்னைமாவட்டஆட்சியர் அலுவலகம் முன் இன்று (15.10.2013) காலை 11 மணியளவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர் தோழியர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் கீழ்க்கண்ட ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன!

மத்திய அரசே புறக்கணிப்பாய், இலங்கையில் கூடுகின்ற, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப் பாய்.

இனப்படுகொலையாளன் ராஜபக்சே தலைமை யில் கூடுகின்ற காமன்வெல்த் மாநாட்டை புறக் கணிப்பாய்,

மத்திய அரசே, வழங்காதே இலங்கை அரசுக்கு போர்க்கப்பலை வழங்காதே,

தமிழர்களைக் கொன்று குவித்த இனவெறி அரசுக்கு போர்க்கப்பலா? தமிழன் என்றால் நாதியற்ற கும்பலா,

மத்திய அரசே, தடுத்து நிறுத்து, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து,

கச்சத்தீவை மீட்டெடு, தமிழக மீனவர்களை காத்திடு.

போராடுவோம், வெற்றி கிட்டும் வரை போராடுவோம். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்



பார்ப்பனர்கள் இந்நாடு எவ்விதச் சமுதாய மாறுதலும் அடையக் கூடாது என்ற தன்மையினையே தங்கள் மூலாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.
(விடுதலை, 30.12.1972)

தமிழ் ஓவியா said...


அம்புலி மாமா!


அம்புலி மாமா என்ற பத்திரிகை சிறுவர்கள் இதழ் என்பது எல்லோருக்கும் தெரி யும். சிறுவர்களுக்கு அந்த இதழ் எப்படிப்பட்டவற்றைச் சொல்லிக் கொடுக்கிறது என்பதுதான் முக்கியம்.

சிறு வயது பிள்ளை களின் நெஞ்சில் உண்மை விதைகளைத் தூவவேண் டாமா?

நல்லனவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்திற்குத் தண் ணீர் ஊற்றவேண்டாமா?

இம்மாத இதழில் காவிரி பிறந்தது என்பது முதல் படைப்பு.

காவிரி எப்படிப் பிறந்த தாம்? சூரபதுமன் என்றொரு ராட்சசன் இருந்தான் (பார்ப் பனர்கள் எதற்கெடுத்தாலும், ராட்சசன், அரக்கன், அசுரன் என்பவற்றைச் சொல்லாமல் இருக்கவேமாட்டார்கள் - இவ்வாறு குறிக்கப்படுகிறார் கள் திராவிடர்கள் என்பது வரலாற்று அறிஞர்களின் கணிப்பு) அவன் ஆட்சி ஈரெழு உலகெங்கும் நடந்து வந்ததாம். தேவேந்திரன்கூட அவனுக்குப் பயந்து ஓடி பூலோகத்தில் மூங்கிலாக வளர்ந்து விட்டானாம்.

கோடையில் எல்லா மரங்களும் பட்டுவிட்டனவாம் - ஆனால், இந்த மூங்கில் மட்டும் பச்சைப் பசேலெனக் காட்சி அளித்ததாம். தேவேந் திரனாகிய அந்த மூங்கி லுக்குப் பயம் வந்து பிடித்து விட்டதாம்.

இதனைப்பார்த்தால் சூரபதுமன் வெட்டச் சொல்லி விடுவானோ என்ற பயம் தான்! மற்ற மரங்களையும் பசுமையாகக் கொழிக்கச் செய்துவிட்டால்... தன்னைக் கண்டுகொள்ள மாட்டான் அல்லவா! உடனே என்ன செய்தான்? விநாயகனைத் தொழுதானாம்.

விநாயகனும் தோன்றினானாம்; அவனிடம் தனது நிலையை தேவேந்தி ரனாகிய அந்த மூங்கில் மரம் கூறிற்றாம்.

எல்லா மரங்களையும் பசுமையாக இருக்கச் செய் யத் தண்ணீர் வேண்டுமே என்று யோசித்தாராம் விநா யகர். பொதியமலையில் உள்ள அகத்தியர் நினை வுக்கு வந்தாராம். அகத்திய ரின் கமண்டலத்தில் தண் ணீர் இருக்கிறதல்லவா? அந்தக் கமண்டலத்தை நான் கவிழ்த்துவிட்டால் தண்ணீர் ஆறாக ஓடும் - இம்மரங்கள் எல்லாம் தழைத்து விடும் என்றாராம் விநாயகக் கடவுள்.

அகத்தியர் தியானத்தில் இருக்கும்போது விநாயகன் காக்கை உருவத்தில் பறந்து சென்று அந்தக் கமண்டலத் தைக் கவிழ்த்து விட்டாராம்.

கமண்டலத்தில் இருந்த தண்ணீர் நதியாக ஓடிற்றாம் - அதுதான் காவிரியாம்.

கொஞ்சம்கூட ஈவு இரக் கமின்றி, அறிவு நாணய மின்றி பச்சைப் பிள்ளை களின் சிறுவர்களின் நெஞ் சில் இந்த மூடத்தனமான நச்சு விதைகளைத் தூவு கிறார்களே - இது மன்னிக் கத் தகுந்ததுதானா?

இப்படியெல்லாம் கற்பித் தால் ஒரு கலிலியோவோ நியூட்டனோ தோன்ற முடி யுமா?

விஞ்ஞான மனப்பான் மையை மக்கள் மனதில் தூண்ட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் ஒரு பக் கத்தில் சொல்லிக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் சிறுவர்களின் புத்தியை நாசப்படுத்தி வரு கிறது இன்னொரு கூட்டம்.

இந்த நேரத்தில்தான் ஒன்றை நினைக்கவேண்டும் - பெரியார் திடலிலிருந்து குழந்தைகளுக்காகப் பெரியார் பிஞ்சு மாத இதழ் எத்தகைய சமூகப் பொறுப் போடு வெளிவந்து கொண் டிருக்கிறது.

பார்ப்பான் எதைச் செய் தாலும், அது பாழாகத்தானி ருக்கிறது.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


இன்று உறவினர் ஏற்றதை... நாளை உலகமே ஏற்கும்!...



அய்யா ஆசிரியர் அவர்கட்கு வணக்கம். 30.9.2013 விடுதலை இதழில் தாங்கள் திராவிடர் கழக மாணவரணி கடலூர் மண்டல மாநாட்டினை யொட்டிய கருத்தரங்கில் ஆற்றிய நிறைவுரையையும், கைமேல் பலன் என்று தலைப்பிட்டு வந்த பெட்டிச் செய்தியினையும் இல்லத்தில் எல்லோரும் படித்தோம்!.

படித்து முடித்ததும், எனது இணை யர் அந்த இதழினை பழைமையில் ஊறித் திளைத்த, எங்கள் தெரு விலேயே வசிக்கும் எங்கள் உறவினர் ஒருவரிடம் தந்து, தயவு செய்து இதனைப் படித்துப்பாருங்கள் என அவரிடம் கொடுத்துவிட்டு வந்தார்!.

இரண்டு நாட்களுக்குப் பிறகு விடுதலை இதழோடும், தனது இளைய மகளோடும் எங்கள் இல்லத் திற்கு வந்தார்.

அம்மா எங்களிடம் கொடுத்து வந்த விடுதலையை நான் படித்து விட்டு, வீட்டிலுள்ளோரையும் படிக்கச் சொன்னேன். மறுப்பு சொல்லாமல் அனைவரும் படித்தார்கள். காரணம் அண்மையில் ஒரு சோதிடரை நம்பி, ஏமாந்து, பணத்தை இழந்ததுதான். எங்களுக்கு இரண்டும் பெண் குழந்தை கள்; அதனால் மற்றவர்கள் மூட்டிய அச்சத்தினால் தான் நாங்கள் பூசாரியை, சோதிடரை நம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது கைமேல் பலன் என்ற செய்தியைப் படித்த பிறகு தான், எங்களது அறியாமை எங்களுக்குப் புரிகிறது. என் இளையமகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். கையிலே நிறைய மந்திரித்த கயிறு கட்டியிருப்பாள். இப் போது அதையெல்லாம் அறுத்தெறிந்து விட்டாள். நான் பணம் தருகிறேன் எனக்கும் விடுதலை கிடைக்க வழி செய்யுங்கள் என்றார். எனக்கு அளவிலா மகிழ்ச்சி, ஆம்! ஒரு பெட்டி செய்திக்கே இத்தகைய ஆற்றல் இருக்கிறதென்றால் இவர்கள் தொடர்ந்து விடுதலை இதழைப் படித்து சிந்திக்க ஆரம்பித்தால்?

தன்னம்பிக்கை உள்ளவனுக்கு இறை நம்பிக்கை தேவையில்லை என்ற அய்யாவின் கருத்துகளை அவர் களுக்கு விளக்கிவிட்டு... அய்யாவின் நூல்கள் சிலவற்றை அவரிடம் தந்து அனுப்பி வைத்தேன். இனி அவர்கள் தெளிவு பெறுவதோடு தங்களைச் சார்ந் தோரையும் பகுத்தறிவாளர்களாக மாற்று வார்கள் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

ஆனால் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஒருவர் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கி யதிலிருந்து தமிழகம் சிறப்பாக உள்ளது என மிகப் பரவசத்தோடு பேசி இருக் கிறார். இதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் பாராட்டுரை வழங்கி இருக்கிறார்! ஆனால்

அதே நாளில் தமிழ்நாட்டில் நடந்த கொலைகள் அய்ந்து, கொள்ளை, திருட்டு, தற்கொலை, பாலியல் வன்கொடுமை களால் செய்தி ஏடு நிரம்பி இருந்தது! வீதியில் நடமாடவே மக்கள் அஞ்சி அஞ் சிச் சாகும் நிலை! இதுதான் தமிழ்நாடு சிறப்பாக உள்ளதற்கான இலக்கணமா?
திராவிடர் கழகத்தினரைவிட தேவ நாதன் போன்ற குருக்கள் தான் கடவுள் இல்லை, இல்லவே இல்லை! என்பதை தெளிவாக மக்களிடத்திலே, கர்ப்பக்கிரகத் திலேயே காம லீலைகளை நடத்தி, மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்!

தாங்கள் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல இதனை முறியடித்து, அய்யா வின் பகுத்தறிவு பூமியிலே, பார்ப்பனீ யத்திற்கு இனி வேலையில்லை என்பதை தெளிவாக்க, இன்று துறவிகளைவிட மேலான தொண்டறச் செம்மல்களான திரா விடர் கழகத் தோழர்களின் பரப் புரைகளே, பெருவெற்றியைக் குவிக்க இருக்கிறது. வீதிக்கொரு பஜனை மடம் அன்று செய்த வேலையை... வீட்டுக்கொரு தொலைக்காட்சிப் பெட்டி இன்று செய்து பார்ப்பனீயத்தைப் பாதுகாத்து வருகிறது!

சிறிய வெடிகுண்டு - பெரிய மலையைத் தகர்த்தெறிவதைப் போல.... அய்யாவின் கொள்கைகளை...

இன்று என் உறவினர் ஏற்றதைப் போல.. நாளை உலகமே எற்கும் என்பது உறுதி! ஆம்.
அய்யாவின் கொள்கைகள் என்றுமே தோற்காது!

- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

தமிழ் ஓவியா said...


கடவுள் நம்பிக்கை படுத்தும் பாடு! பிணங்களை நதியில் தூக்கி எறிந்த கொடூரம்!

போபால் அக்.16- மத்தியபிரதேச மாநி லம் ததியா மாவட்டத்தில் உள்ள ரத்தன் கட் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கர நெரிசல் காரணமாக சுமார் 115 பேர் மரணமடைந்தது அனை வரும் அறிந்ததே. ஆனால் சம்பவம் நடந்த பிறகு அதை மூடிமறைக்க காவ லர்கள் செய்த மனிதாபிமானமற்ற செயல் நாட்டையே வேதனையில் ஆழ்த் தியுள்ளது, அங்கிருந்த பார்வையாளர்கள் கூறும் போது, நெரிசலில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடலை ஆற்றில் தூக்கி எறிந்தனர். அவர்களில் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்ததை பார்த்ததாகவும், மேலும் காவலர்களும் அங்கிருந்த சிலரும் பிணங்களில் இருந்த நகைகள் மற்றும் பணங்களை எடுத்து தங்கள் பைகளில் போட்டுக்கொண்டு இருப்ப தையும் பார்த்ததாக கூறினர்.

ஆற்றில் தூக்கி எறிந்தனர்!

இந்தச் சம்பத்தை கண்ணால் பார்த்த ரகுவன்ஷி யாதவ் என்பவர் நவ்பாரத் டைம்ஸ் செய்தியாளரிடம் கூறியதாவது:

இந்த பயங்கர சம்பவம் நடந்த பிறகு பலர் அங்கும் இங்கும் ஒடிக்கொண்டு இருந்தனர்; எங்கும் மரண ஓலம் தான் எனது அன்னை மற்றும் எனது ஊர்க் காரர்கள் இந்தக் கூட்டத்தில் சிக்கிக் கொண்டதால் நான் பிணக்குவியலில் அவர்களைத் தேடிக்கொண்டு இருந் தேன். கடுமையான காயங்களுடன் பலர் முணங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது சில காவலர்களும், வேறு சிலரும் குழந்தைகள் மற்றும் சிறுவர் களை ஆற்றில் தூக்கிப்போட்டுக் கொண்டு இருந்தனர். அதில் பலர் உயி ருடன் இருந்தனர். இந்தக் காட்சியை கண்டு பதைபதைத்து நான் 5 குழந்தை களை அந்த பிணக்குவியலின் மத்தியில் இருந்து மீட்டு வந்தேன். ரகுவன்ஷி மற்றும் அவரது ஊர்க்காரர் பிரஜாபதி இருவரும் சேர்ந்து உயிருடன் வீசப்பட்ட ஒரு குழந்தையை ஆற்றிலிருந்து காப்பாற்றியதாகவும் கூறினார்கள். இது குறித்து மத்தியபிரதேச டி.ஜி.பி. நந்தன் குமார் டுபே கூறிய தாவது:

இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இந்த சம்பவத்தை நான் மறுக்கவில்லை. இது நடந்த போது உள்ளூர் ஆட்கள் சிலர் தான் இப்படி செய்திருக் கலாம். எப்படியோ இது காவல்துறை மீது புகாராக வந்துவிட்டது. காவல் துறையில் யாராவது இந்த பாதகச் செயலை செய்திருந்தால், அது கடுமை யாகக் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். ரத்தன்கட் கோவிலுக்குச் செல்லும் வழியில் சிந்தா நதியின் மீது கட்டப்பட்ட பாலம் உடைந்து விட்டதாக யாரோ வதந்தி கிளப்பிவிட, பாலத்தின் மீது சென்றுகொண்டு இருந்த சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டோர் (இதில் அதிக அளவு பெண்கள் மற்றும் குழந் தைகள் இருந்தனர்) முண்டியடித்துக் கொண்டு ஓட எத்தனித்தனர்.

இதனை அடுத்து பாதுகாப்பிற்கு நின்றுகொண்டு இருந்த காவல் துறையினர் தடியடி நடத்தத் துவங்கி யதால், நெரிசல் கட்டுக்கடங்காமல் போனது. பலர் நெரிசலில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தனர். ஆற்றில் தண்ணீர் குறைவாகச் சென்றதாலும், புதிதாக கட்டப்பட்ட பாலத்திற்காக தூண்கள் மற்றும் கட்டுமானப் பொருட் கள் தண்ணீருக்கடியில் இருந்ததால் பலர் தலை சிதறி கட்டுமான கம்பிகள் குத்தி இறந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை பெருந்தொகையில் உள்ளதென்றும், ஆனால் அரசும், காவல்துறையும் சேர்ந்து இந்தச் செய் தியை மறைத்து விட்டது.

லாரியில் அள்ளிக்கொண்டு சென்றனர்...

மற்றொரு நேரடி சாட்சி இந்தேல் அஹிராவ் என்பவர் கூறியதாவது:

காவல்துறையினர் சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் காயமுற்றவர்கள், இறந்தவர்கள் என அனைவரையும் ஒரு லாரியில் அள்ளி வீசி எங்கோ கொண்டு சென்றனர். அப்படி கொண்டு சென்ற உடல்களின் எண்ணிக்கை 200-க்கு மேலிருக்கும் என்றார்.

மற்றொரு பெண் நேரடி சாட்சி கூறியதாவது:

நான் அந்த சமயத்தில் பாலத்தின் இடையில் உள்ள தூண்களில் நின்று கொண்டேன், என் கண் எதிரே பலர் நசுங்கி உயிரிழந்தனர், சம்பவம் நடந்த சில நிமிடங்களில் காவல்துறையினர் வந்து குழந்தைகள் மற்றும் சிறுவர்களை ஆற்றில் தூக்கி எறிவதைப் பார்த்தேன் என்றார். ஆற்றில் வீசிய நிலையில் காயத் துடன் காப்பாற்றப்பட்ட 15 வயது ஆஷிஸ் என்பவர் கூறியதாவது:
எனது அம்மா மற்றும் உறவினர் களுடன் கோவிலுக்கு வந்தேன். ஆனால் நெரிசலில் அனைவரும் இறந்து விட்டனர். என்னுடைய 6 வயது தம்பியும் இறந்து விட்டான். என்னால் நடக்க முடியாத நிலையில், திடீரென காவல் துறையினர் இறந்து கிடந்த தம்பியையும், என்னையும், ஆற்றில் தூக்கி வீசினர். நான் எவ்வளவோ மன்றாடியும் காதில் கேட்காமல் நீ இருந்தால் எங்களுக்கு பிரச்சினைதான் என்று கூறி ஆற்றில் தூக்கி வீசினர். அதன் பிறகு கீழே இருந்த சிலர் என்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர் என்றார்

தமிழ் ஓவியா said...

குழந்தைத் திருமணத்திற்கு எதிரான அய்.நா. தீர்மானம்: ஆதரித்து கையெழுத்திட இந்தியா மறுப்பாம்!

ஜெனிவா, அக்.16- குழந்தைத் திருமணங்களை தடுக்கும் வகையிலான அய்.நா., மனித உரிமை சபையின் தீர்மா னத்தை ஆதரிக்க, இந்தியா மறுத்துள்ளது.

உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் ஆண்டு தோறும், 6 கோடி குழந்தைத் திருமணங்கள் நடைபெறு கின்றன. இதனால், பெண் குழந்தைகள், சிறு வயதிலேயே, தங்கள் உரிமைகளை இழந்து, கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள முடியாமலும், உடல் நலனை பேண முடியாமலும் அவதிப்படுகின்றனர். இந்த அவல நிலையை போக்க, அய்.நா., மனித உரிமை சபையில், குழந்தைத் திருமணத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உறுப்பு நாடுகள் பலவும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளன. குழந்தைத் திருமணங்கள் பெருமளவு நடைபெறும், எத்தி யோபியா, தெற்கு சூடான், சிரியா, ஏமன் போன்ற நாடுகள் கூட இந்த தீர்மானத்தை முழு மனதுடன் ஆதரிப்பதாக தெரிவித்து கையெழுத்திட்டுள்ளன. உலகின், 107 நாடுகள், இத்தீர்மானத்தை ஆதரித்துள்ள நிலையில், இந்தியா, இத் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட மறுப்பு தெரிவித் துள்ளது. ஆசிய நாடுகளிலேயே, இந்தியாவும், வங்கதேசமும் மட்டுமே இந்த தீர்மானத்தை எதிர்த்துள்ளன. இந்தியாவின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டு தோறும், உலகெங்கும் நடத்தப்படும், 6 கோடி குழந்தை திரு மணங்களில், இந்தியாவில் மட்டும், 2.4 கோடி குழந்தைத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இது மொத்த எண்ணிக் கையில், 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா வின் இந்த நிலைப்பாட்டிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


அர்ச்சகர் பணி: ராஜஸ்தானில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு:

கர்நாடகாவில் பூசாரிகளாக விதவைகள் நியமனம்!

தமிழ்நாட்டில்....?

ஜெய்பூர், அக்.16- ராஜஸ்தான் மாநிலத்தில் கோயில் பூசாரி, மேலாளர், உதவியாளர் பணியிடங்களில் 30 சதவிகித இடஒதுக்கீட்டில் பெண்களை நியமிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மொத்தமுள்ள 65 காலியிடங்களில், 7 மேலாளர், 47 பூசாரிகள், 11 உதவியாளர் பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வை உதய்பூர் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இதுகுறித்து தேவஸ்தானத்துறை ஆணையர் பவானி சிங் கூறுகையில், இதற்கு முன் இந்தத் துறையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. தற் போது இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கோயில் மற்றும் தேவஸ்தானத்துறை பணியிடங்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரப்பப்படுகின்றன என்றார்.

பூசாரிகளாக விதவைகள் நியமனம்!

மங்களூரு அருகே உள்ள குத்ரோலி கிராமத்தில் இருக்கும் கோகர்ணநாத ஈஸ்வரன் கோவிலில் இரு விதவைப்பெண்கள் மூலவருக்கு அர்ச்சனை நடத்தியுள்ளனர். அம்பாள் அன்னபூரணேஷ்வரிக்கும் அவர்கள் பூசை நடத்தினர். அவர்கள் கோவிலுக்கு வந்த பக் தர்களுக்கு தீர்த்தமும் பிரசாதமும் அளித்துள்ளனர். வெளிர் மஞ்சள் புடவைகள் அணிந்து வந்த விதவைப் பெண்கள் இருவரும் மேளதாளத்துடன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த ஊர்வலத்துக்கு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜனார்த்தன பூசாரி தலைமையேற்று நடத்தினார். ஒரு பெண் பூசாரி புத்தூர் தாலுகாவைச் சேர்ந்த பன்னூர் கிராமத்தைச் சேர்ந்த இந்திரா சாந்தி என்றும் மற்றொருவர் பண்ட்வால் பகுதியைச் சேர்ந்த மூடா கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி சாந்தி என்றும் அவர் அடையாளம் கூறினார். இவர்கள் இருவரும் மங்களூருவில் உள்ள குரு மந்திராவில் வேதபாடங்களைக் கற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்திரா சாந்தி பீடி சுற்றும் தொழில் செய்து வந்தவர் என்று கோவில் வட்டா ரங்கள் கூறின. இருவரும் கோவிலுக்குள் நுழைந்த வுடன் கேரளாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்த வாதியும், கோவிலின் நிறுவனருமான சிறீநாராயண குருக்களின் சிலைக்கு முதலில் பூசை செய்தனர். பின்னர் கோவிலில் உள்ள பிற தெய்வங்களுக்கு பூசை செய்தனர்.

சமூகநீதிக்கு மூலகாரணமாக தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டும், அச்சட்டம் நடை முறைப்படுத்துவதற்குமுன் பார்ப்பன சக்திகள் உச்ச நீதிமன்றம் சென்று முட்டுக்கட்டைப் போட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழக அரசும் நாங்கள் வெளியில் பேசித் தீர்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி, மாதங்கள் பல ஆகியும் இன்னும் அச்சட்டம் நடைமுறைப்படுத் தாத நிலை உள்ளது.

திராவிடர் கழகம்

இதற்காக திராவிடர் கழகம் பல போராட் டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


தீ...பா...வளி!

தீபாவளி பட்டா சால் தீ விபத்து நடக் கும் என்பதால், சென் னையில் ஏற்கெனவே உள்ள 33 தீயணைப்பு நிலையங்களைத் தவிர்த்து 54 இடங் களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக் கப்பட உள்ளனவாம்.

ஏன், கிருஷ்ண பர மாத்மாவால் தீ ஏற்படா மல் தடுக்க முடியாதா?