Search This Blog

23.10.13

மோடியைப் பிரதமராக்கினால்? எச்சரிக்கை! எச்சரிக்கை!!-கி.வீரமணி


சென்னையில் தமிழர் தலைவர் முழக்கம்!
சென்னை, அக்.23- குஜராத்தில் பாடத் திட்டத்தில் மனுதர்மம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மோடி இந்தியாவின் பிரதமர் ஆனால், மனுதர்மப்படி ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்தான் வரும் என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் நேற்று இரு பெரும் ஆபத்துகள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!! எனும் தலைப்பில், திராவிடர் கழகத்தின் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில், உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

ஜாதியின் பெயரால் கூட்டணி, மதத்தின் பெயரால் அணிவகுப்பு என்று சிலர் புறப்பட்டுள்ளனர். இவற்றை எல்லாம் எதிர்த்துதான் இந்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றம் - வளர்ச்சி அடைந்துள்ளனர். கல்வி, உத்தியோக வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

கடந்தகால வரலாறு என்ன?

நமது கடந்தகால வரலாறு, இன்று 18 வயது நிறைந்த இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்க லாம்.

இப்பொழுது நாம் பெற்றுள்ள வளர்ச்சி முன்பிருந்தே பெற்று வந்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது உண் மையல்ல என்பதை நாம் புரிய வைக்கவேண்டும் - பழைய வரலாற்றை எடுத்துக்கூற வேண்டும்.

கொஞ்சம் நாம் அயர்ந்தால்...

கொஞ்சம் நாம் அயர்ந்தால், ஜாதியைச் சொல்லி, மதத்தைக் காட்டி நம்மை மீண்டும் பழைய காலத் துக்கே துரத்தி விடுவார்கள்;  மீண்டும் கோவணம் கட்டிக்கொண்டுதான் கிடக்கவேண்டும்.

இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லி, ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கவே இந்தச் சிறப்புக் கூட்டம். தந்தை பெரியார் கேட்டாரே - சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா? என்று கேட் டாரே - சூத்திரன் என்றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள் என்று தானே பொருள்?

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி!

அதனால் அல்லவா சூத்திரன் என்றால், ஆத்திரம் கொண்டடி என்ற முழக்கத்தை தந்தை பெரியாரும், இந்த இயக்கமும் கொடுத்தனர். இந்து மதத்தில் ஏணிப்படி ஜாதி அமைப்பு முறை.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற உயர்வு - தாழ்வு அடுக்குமுறை - பிறப்பின் அடிப்படையில் இருக்கிறதே 5 ஆவது இடத்தில் பஞ்சமரும் - 6 ஆவது இடத்தில் எல்லா ஜாதிகளை யும் சேர்ந்த பெண்களும் இருக்கிறார்களே!

அதிகமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கே முன்னுரிமை!

இதில் யார் அதிகமாக ஒடுக்கப்பட்டார்களோ, உரிமைகள் மறுக்கப்பட்டனவோ, அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுதானே சமூகநீதி.

இதற்காக அரும்பாடுபட்டு, போராடி இட ஒதுக்கீட்டை வாங்கிக் கொடுத்தால், இதற்குக் காரணமான தந்தை பெரியாரையும், மறந்துவிட்டு திராவிட இயக்கத்தையும் கொச்சைப்படுத்து கிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை அடையாளம் காணவேண்டாமா?

நூறு ஆண்டுகால சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் ஒரு தாழ்த்தப் பட்டவர் நீதிபதியாக வர முடிய வில்லையே, என்று தந்தை பெரியார் கேள்வி எழுப்பியதற்குப் பிறகுதானே முதலமைச்சர் கலைஞர் அவர்கள்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வரதராசன் அவர்களைத் தேடிப் பிடித்து, அந்தப் பதவியில் அமர்த்தினார்.

பொது எதிரி யார்?

தாழ்த்தப்பட்ட மக்களும், பிற் படுத்தப்பட்ட மக்களும் ஒன்றி ணைந்து பொது எதிரிகளை அடை யாளம்கண்டு, இன்னும் பெறவேண் டிய உரிமைகளை ஈட்டுவதுதான் நம்முன் உள்ள பிரச்சினை.

இந்த இயக்கத்துக்கே பள்ளன் கட்சி, பறையன் கட்சி, சக்கிலியன் கட்சி என்றுதான் பெயர்.

அதை நாங்கள் இழிவாகக் கருத வில்லை; பெருமையாகத்தான் கருதினோம் - இன்றும் கருதுகிறோம்.

அடையாளம் காண்பீர்!

யாரை எதிர்த்தோம்? எப்படி உரிமைகளைப் பெற்றோம்? என்பதை யெல்லாம் மறந்துவிட்டு, பார்ப் பனர்களைச் சேர்த்துக்கொண்டு, தாழ்த்தப்பட்டவர்களை எதிர்த்து அணிதிரட்டுகிறார்கள் என்றால், அவர்களை அடையாளம் காண வேண்டாமா?

சமூகநீதிக்கு ஆதரவானவர்களா பார்ப்பனர்கள்? அவர்களைச் சேர்த் துக் கொண்டால் அதன்பின் விளைவு என்ன? இட ஒதுக்கீடே கூடாது என்ற நிலைக்குத்தானே தள்ளப் படுவீர்கள் - எச்சரிக்கை! எச் சரிக்கை!!

மதவாதக் கூட்டணி!

மற்றொரு அணி - மதவாதக் கூட் டணி - மனுவாதக் கூட்டணி புறப் பட்டுள்ளது. ஒரு வார்த்தையில் சொன்னால், மோடியின் ஆட்சியில் குஜராத்தில், மனுதர்மம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? மோடி பிரதமரானால் ஒரு குலத்துக் கொரு நீதி, சூத்திரர்களுக்கு, பஞ்சமர் களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்குமா?
மீண்டும் குலக்கல்வித் திட்டமா?

தமிழ்நாட்டில் ராஜாஜி  குலக் கல்வித் திட்டம் எதற்குக் கொண்டு வந்தார்? பார்ப்பனர் அல்லாதார் - சூத்திரர்களின் கல்விக் கண்ணைக் குத்துவதற்காகத்தானே!

குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த ராஜாஜி பதவியைவிட்டு ஓடும் படிச் செய்தோம் - 1952 மீண்டும் திரும்புகிறதா?

மோடி பிரதமர் ஆனால், அந்தக் குலக்கல்வித் திட்டம் வேறு பெயரில் வரும் அவ்வளவுதான்.

மோடியின் குஜராத்தில் முஸ்லிம் ஒருவர்கூட சட்டமன்ற உறுப்பினர் கிடையாது!

குஜராத் சட்டமன்றத்தில் ஒரே ஒரு முஸ் லிம்கூடக் கிடையாது என்று பெரு மையாகச் சொல்லுகிறார்களே, இது பெருமைக்கு உரியதுதானா?
உலகில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா. அம்மக்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா?
குடிமக்கள் உரிமையும் இன்றி அவர்கள் வாழவேண்டும் - முஸ்லிம் கள், ராமனைக் கும்பிடவேண்டும்; கிறித்தவர்கள் கிருஷ்ணனைக் கும்பிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கோல்வால்கர் சொல்ல வில்லையா?

மோடியை முன்னிறுத்தியது ஆர்.எஸ்.எஸ்.தானே! மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் நீதிமன்றம் ஒரு தீர்ப்புக் கூறியது?

பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட் டோரைக் கற்பழிக்க மாட்டார்களாம் - சொன்னது நீதிமன்றம்

பன்வாரி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண், குழந்தைத் திருமணத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். அதற்காகப் பாடுபட்ட  அந்தப் பெண்ணை உயர்ஜாதி பார்ப் பனர்கள் பாலியல் வன்முறை செய் தனர்.
நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்ன தீர்ப்பு எழுதினார்கள் தெரியுமா? ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை பிராம ணர் எப்படி கற்பழித்திருக்க முடியும் என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தார்களே!

கனவு காணவேண்டாம்!

ஆட்சியில் சில குறைபாடுகள் இருக்கின்றன - விலைவாசி உயர்வு என்கிற சூழ்நிலையைப் பயன்படுத்தி மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். சாமியார் கண்ட தங்கச் சுரங்கக் கனவு என்னவாயிற்று?

பன்னாட்டு முதலாளிகள் பின் பலமாக இருக்கின்றனர். உயர்ஜாதி ஊடகங்கள் பக்க பலமாக இருக் கின்றன என்ற துணிச்சல் அவர்க ளுக்கு - ஆனால், உண்மை நிலை என்ன?

காஷ்மீர், மேற்கு வங்காளம், கேரளா, எடியூரப்பா உபயத்தால் கருநாடகா - தமிழ்நாடு முதலிய இடங்களில் இவர்களால் கால் பதிக்க முடியுமா? தமிழ்நாட்டை நினைத் துத்தான் பார்க்க முடியுமா?

இந்த நிலையிலே, எப்படி ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள்? என்று கேட்டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றி னார். (உரை நாளை வெளிவரும்).

தொடக்கத்தில் கழக அமைப்புச் செய லாளர் வெ. ஞான சேகரன் வரவேற் புரையாற்றினார்.

6.30 மணிக்குத் தொடங்கிய சிறப்புக் கூட்டம் 8.50 மணியளவில் நிறைவுற்றது.
கூட்டத்தில் தொடக்கத்தில் உடுமலை பேராசிரியர் என்.சுப்பிர மணியம், பகுத்தறிவாளர்  தோழர் புலவர் பா.வீரமணி அவர்களின் குடும்பத்தில் மூவர் மறைவுற்றமைக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது - அனைவரும் எழுந்து நின்று மரி யாதை செலுத்தினர்.

ஜாதி கலவரத்துக்காக ஜாதி கட்சிக் கூட்டணியா?

15 ஜாதி கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கப் போவதாகச் சொல்லுகிறார்கள். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 197 ஜாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 41; ஆக மொத்தம் 238. இதில் 15 கட்சிகளை இணைத்துக்கொண்டு, அதில் பெரும்பாலும் லெட்டர் பேடு அமைப்புகள். இவற்றை இணைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்கிறார்கள் - எப்படி இருக்கிறது? தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அணிதிரட்டி, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைத்து ஜாதிச் சண்டைகளை உருவாக்கி, அதன்மூலம் குளிர்காயலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களை - தீண்டத்தகாதவர்கள் என்று ஊருக்கு ஒரு கோடியில் ஒதுக்கப்பட்ட மக்களை எதிர்ப்பதற்காக ஒரு கூட்டணியா?

இந்தக் கூட்டத்தின் வாயிலாக ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறோம்.
அன்று பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று திராவிடர் கழகத்தைச் சொன்னார்களே, அந்த நிலைக்கு - அந்தப் பணியை மீண்டும் முனைப்பாக செய்வதற்குத் திராவிடர் கழகம் தயார்! தயார்!!

----------------------- சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 22.10.2013
----------------------------------------------------------------------------------------------------------------------------
                    ---------------------"விடுதலை” 23-10-2013

24 comments:

தமிழ் ஓவியா said...


மதவாத சக்திகளை முறியடிப்போம்!


திண்டிவனத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் மற்றொரு முக்கியமான ஒன்று - மதச் சார்பின்மைக்கு விரோதமான மதவாத சக்திகளை முறியடிப்பதாகும்.

தீர்மானம் வருமாறு:

மதச்சார்பின்மைக்கு விரோதமான, இந்துத்துவா என்கிற நிகழ்ச்சி நிரலை (ஹழுநுசூனுஹ) கையில் எடுத்துக் கொண்டு, குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகப் பெரும் வன்முறைகள் தூண்டப்பட்டதற்குக் காரணமாக இருந்த ஒருவர் பிரதமருக்கான வேட்பாளர் என்கிற முறையில் திக்விஜயம் போல் புறப்பட்டு இருப் பதும், அதற்கு இந்த நாட்டில் உள்ள பார்ப்பன ஊடகங் களும், இந்துத்துவா சக்திகளும், பெருமுதலாளிகளும் பின்புலத்தில் பலமாக இருந்து வருவதையும் எச்சரிக் கையுடன் சுட்டிக்காட்டி, இந்த ஆபத்திலிருந்து நாட்டி னைக் காத்திட மதச்சார்பின்மைக் கொள்கை உடையோர் மற்றும் சமூகநீதி கொள்கையாளர்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து ஒன்று சேரவேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொள்ளும் எந்த அரசும், எந்த கட்சியும் பி.ஜே.பி.க்குத் துணை போகு மானால், அது திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஊட்டிய உணர்வுகளுக்கும், கொள்கைகளுக்கும் முற்றிலும் முரணானது என்பதோடு, அத்தகைய வர்கள் வரலாற்றுக் குற்றத்தைச் செய்த பழிக்கு ஆளாவார்கள் என்பதையும் இப்பொதுக்குழு தொலைநோக்கோடு வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவைப்பற்றிச் சொல்லும்பொழுது எல்லோரும் ஒன்றைச் சொல்லுவது உண்டு. பன்முகத்தன்மை கொண்டது என்பதுதான் அது. பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், மத நம்பிக்கையற்றவர்கள் எல்லோரையும் கொண்ட சீனாவுக்கு அடுத்தபடியாக பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். அரசமைப்புச் சட்டப்படி மதச்சார்பின்மைக் கொள்கையைக் கொண்டது மாகும்.

பி.ஜே.பி. என்பது இவற்றை ஏற்றுக்கொள்கிறதா? திருச்சியில் பேசிய பிரதமருக்கான பி.ஜே.பி. வேட்பாளர் நரேந்திர மோடி என்ன கூறினார்?

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைக் குறைகூறிப் பேசினாரே - மாநிலங்களே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் கொள்கை என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதே!

மொழிவாரி மாநிலங்கள் கூடாது என்றால் இதன் பொருள் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி பேசும் இன மக்களும் தங்கள் அடையாளங்களை இழந்துவிட்டு, இந்துத்துவா கடலில் கரைந்துவிட வேண்டும். ஒரே நாடு- பாரத நாடு, ஒரே மதம்- ஹிந்து மதம், ஒரே மொழி - சமஸ்கிருதம் என்கிற ஹிந்துத்துவா நிகழ்ச்சி நிரலைத் (அஜெண்டா)தானே மறைமுகமாக மோடி கூறிச் சென்றுள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள மதச்சார்பின்மைக் கொள்கையை இவர்கள் ஏற்றுக்கொள்வது உண்மையானால், எங்களுக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அயோத்தியில் ராமன் கோவில் கட்டுவோம் என்று சொல்லுவார்களா?

ஹிந்துராஷ்டிரம் அமைப்பதுதான் எங்கள் கொள்கை என்று சொல்லுபவர்கள் எப்படி மதச்சார்பின்மைக் கொள்கைக்கு உரியவர்கள்?

சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்தக் கொள்கைகள் எங்களுக்கு உடன்பாடானவையல்ல என்று திட்டவட்டமாக எழுத்துபூர்வமாக, அதிகாரபூர்வமாக அறிவித்த நிலை யில்தான் தேர்தலில் நிற்கவே சட்டப்படி உரிமைப் படைத்தவர்கள் ஆவார்கள்.
உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசும் நயவஞ்சக அமைப்பு ஒன்று இந்தியாவை ஆளவேண்டும் என்று துடிக்கிறது - இது ஆரோக்கியமானதுதானா?

உச்சநீதிமன்றத்திலே உத்தரவாதம் கொடுத்த பிறகு, அதற்கு மாறாக அயோத்தியில் ராமன் கோவிலை இடித்தார்களே! அதற்குப் பி.ஜே.பி.யின் பெருந்தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்களே துணை போனார்கள், வழிகாட்டினார்கள் என்றால், எத்தகைய ஆபத்தான நிலை!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாற்றுப் பட்டியலில் முதல் வரிசையில் உள்ள இவர்கள், அதற்குப் பிறகு இந்தி யாவின் துணைப் பிரதமராகவும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்ல!

இன்றைக்கு பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ள மோடி யார்? அவர் முதல மைச்சராக இருந்த நிலையில்தானே - மாநிலத்தில்தானே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்?

குறைந்தபட்சம் அதற்கு ஒரு வருத்தம் தெரிவிக்கக் கூடத் தயாராக இல்லையே! தான் காரில் செல்லும்பொழுது ஒரு நாய்க்குட்டி அடிபட்டால் ஏற்படும் சோகம் போன்றதுதான், குஜராத்தில் கொலை செய்யப்பட்டதும் என்று ஆயிரம் ஆயிரம் இடிஅமீன்கள்போல பேசக்கூடிய ஒரு மத வெறியர்தான் இந்தியாவுக்கான பிரதமரா? இப்படிப்பட்ட ஒருவரை அறிவிப்பதற்கு அந்தக் கட்சிக்குத்தான் எப்படிப்பட்ட புத்தி இருக்கவேண்டும்?

குஜராத் ஒளிர்கிறது என்று பொய் வெளிச்சத்தைக் காட்டிக் கண்களைக் கூசச் செய்து வாக்குகளைத் திருடி விடுவார்கள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.
(விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...

மோடி-டெண்டுல்கர் மற்றும் விநாயகர்: இவை எல்லாம் பார்ப்பனீயம் நம்மை வீழ்த்த வைத்திருக்கும் ஆயுதங்கள்

சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மோடியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்றார்.

பிற்படுத்தப்பட்டவர் என்பதால் கொலைகாரன், கொள்ளைக்காரன், முடிச்சவிழ்க்கி, பிக்பாக்கெட், காமக் கொடூரன், சாமியார்கள் இவர்களை யெல்லாம் கண்மூடித்தனமாக ஆத ரித்துவிடமுடியுமா? அதே நேரத்தில், இதே தவறுகளை செய்த பார்ப் பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி என்று பாகுபாடு பார்த்தால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் வெகுண்டெழுவோம்.

காஞ்சி சங்கரனிலிருந்து சவுண் டிப் பார்ப்பான்வரை குற்றம் செய்து விட்டு ஒன்றும் தெரியாத மாதிரி பவனி வரும்பொழுது, பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்த லாலுவை (குற்றம் நிரூபிக்கப்பட்ட பொழுதும்) உள்ளே தள்ளியது மனசை நெருடுகிறது; என்ன செய்வது! பார்ப்பானுக்கு நீதி அஞ்சலில் வருகிறது என்றால் (பெரும் பான்மையான நேரத்தில் விலாசம் எழுதப்படாத அஞ்சல் மாதிரி அலைக் கழிக்கப்படுவதும் உண்டு), மற்றவற்கு ஈமெயிலில் அல்லவா வருகிறது.

மோடி பிற்படுத்தப்பட்டவர் என் றாலும் கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ். காரர். அக்மார்க் இந்துத்துவா வெறி யர். ஆயிரக்கணக்கான இசுலாமியர் களை வெட்டிச் சாய்க்க துணை நின்றவர். வரலாற்றில், ஹிட்லருக்குப் பிறகு ஒரு அரசாங்கமே தனது குடி மக்களை கொன்று குவிப்பதைக் கண்டு ரசித்தவர். (ராஜபக்சே அதை யும் விஞ்சி விட்டார் என்பது வேறு விஷயம்). துப்புரவுத் தொழிலாளியை நீ செய்யும் வேலை கடவுளுக்கு செய்யும் காரியம். கடவுளின் அன்பும், ஆதரவும் உனக்கு கிடைக்கும். துப்புரவு செய் பவர்கள், வால்மீகிக்கு ஒப்பானவர்கள் என்று எழுதியது, மோடி யார், எப்படிப் பட்டவர் என்பதை பட்டவர்த்தனமாக அல்லவா சொல்கிறது. அவர் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்-இன் இந்து கர்மா கருத்தினை நிறுவும் செயல்தானே அது?

பார்ப்பானுக்கு நேரடியாக பருப்பு வேகாது என்றால் மோடி போன்ற குறி யீடுகள் மூலம் நம்மை ஒடுக்க முயற்சிப் பான். அக்குறியீடுகளை சந்திரன், இந் திரன் என்றும் புகழ்வான். அவர்களுக்கு எல்லா நல்ல குணங்களையும் ஏற்றுவான். (கல்லுக்கே மந்திரத்தை ஏற்றி கடவுள் ஆக்கியவனுக்கு இது எம்மாத்திரம்?) அக்குறியீடுகளை அங்ஙனம் புனிதப் படுத்தி, அவர்களை யாரும் எதுவும் விமர் சிக்க முடியாத இடத்தில் வைப்பான். நம்மவர்களும் வாய்பிளந்து கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். அப்படிப்பட்ட புனிதர்களை ஜோடித்து ஊர் ஊராய் உற்சவம் நடத்துவார்கள். ஊரிலே இருக் கும் எல்லா பார்ப்பானும் வழக்கத்துக்கு மாறாக புது சொக்காய் போட்டுக்கிட்டு கிளம்பிடுவான்.

மோடியின் சமீப சென்னை விஜயத் தின் பொழுது விட்டல் மாமாவிலிருந்து பழைய கிரிகெட் வீரர் சிறீகாந்த் அத்திம் பேர் வரை முண்டியடிச்சுக்கிட்டுப் போறாங்கனா ஒரு வேளை மோடி பிரதமர் ஆக வந்துட்டாருன்னா அவாளும் பூணூ லில் கொஞ்சம் முதுகை சொரிஞ்சிக் கிலாம் பாருங்க.

தமிழ் ஓவியா said...

அக்ரகாரத்து அம்பிங்க துள்ளி குதிக் கிறாங்கன்னாலே அதற்கு அர்த்தமே வேற. மோடி வந்தவுடன் எப்படியாவது, இட ஒதுக்கீட்டுக்கு சாவு மணி அடிச் சிடலாம்; இந்து, தருமம், வருணாசிரமம் என்ற இத்துப் போன பாத்திரத்திற்கு எல்லாம் புது முலாம் பூசி, பவனி விடலாம். மீண்டும் பேஷா எங்கும் அவா, எதிலும் அவாஎன்று ஆக்கிடலாம். நன்னா வயிறு முட்ட பருப்பும், நெய்யும் கலந்த சோற்றை சாப்பிட்டு விட்டு, வாய் மணக்க கும்ப கோணம் வெற்றிலையும் (வெத்தல்ல செல்லம்) சீவலையும் போட்டுக்கிட்டு இந்த சூத்திரப் பசங்களையும், சேரிப்பசங் களையும் மோத விட்டு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் மாதிரி ரசித்துப் பார்ப்பான் (அதான் பார்ப்பான் ஆச்சே). அதனாலேதான் கன்னியாகுமரி பார்ப்பான் வரை நெரிக் கட்டின மாதிரி துடிக்கிறான். எப்படியாவது மோடியை, பிரதமர் ஆக்கிட. குஜராத், நாட்டிலேயே வளர்ச்சியில் முதல் மாநிலம்ன்னு சொன்ன கதை இப்ப சாயம் வெளுத் துடிச்சி. நேர்மை, லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு பாஜக தரும்னு சொன்னா அவங்க கட்சிக்காரனே நம்ப மாட்டான். நிலையான ஆட்சி கொடுப்பாங்க ளான்னா. பழைய வாஜ்பேயி ஆட்சி வேற நினைவுக்கு வந்து பயமுறுத்துது. அப்ப மோடி முட்டி மோதிப் பார்த்தாலும் அமெரிக்காக்காரன் விசா கொடுக்க மாட்டேன்கிறான். வாஜ்பேயி, பிரதமர் என்று சொன்ன பொழுதாவது கூட ரெண்டுக் கட்சி வந்து சேர்ந்தது. மோடி மாமா பேரைக் கேட்டவுடனே இருந்த இரண்டு கட்சியும் ஓடிப்போயிடிச்சி. அத் வானி தாத்தாவும் முடுக்கிக் கிட்டு நிக்க றாரு. அப்படி மோடி என்னதான் கிழிப் பாரு?

பார்ப்பான்களுக்கு எல்லா கதவுகளை யும் திறந்து விடுவது மட்டுமின்றி, எதிர்ப் புக் குரல்களை மெல்ல நசுக்கி, ஹிட்லர் போல பாசிச ஆட்சி நடத்துவார். சாமான்ய மக்களுக்கு பல வருடங் களாகவே அரசு நிர்வாகத்தின் மீது கோபம் உண்டு. காரணம், லஞ்சம், வேலையில் அலட்சியம், அதிகார போதை இந்தக் காரணங்களால் மக்களுக்கு அரசாங்க நிருவாகத்தின் மீது எப்பொழுதும் ஒரு வெறுப்பு உண்டு. (முன்பு ஒரு முறை ஜெ அரசாங்கம், அரசு அதிகாரிகளையும், ஊழியர்களையும் ஒட்டு மொத்தமாக சிறையில் அடைத்த பொழுது சாமா னிய மனிதன் அதைக் கண்டு ரசித் தான். பாராட்டினான்.) அதனால் மோடி ஆட்சியில் நிருவாகத்தில் சீர் திருத்தம். கண்டிப்பு என்கிற பெயரில் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும், சிறு பான்மையினரும் பழி வாங்கப்படலாம். மக்கள் அதை உணராமல் தவறு களைத்தானே களை எடுக்கிறார்கள் என்று பாராட்டுவார்கள். எதிர்த்து எழுதுபவர்களும் கேள்விக் கேட்பவர் களும், திடீரென காணாமல் போய் விடு வார்கள்; என்கவுன்ட்டர்கள் சாதார ணமாக நடக்கும். அதை நியாப்படுத்தி பத்திரிகைகள் 23-10-2013

தமிழ் ஓவியா said...


சீனம் மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு


சென்னை, அக்.23- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சீனம் மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படுவதாக அரசு செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம் தெரிவித்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- உலகத் தமிழாராய்ச்சி நிறு வனத்தில் நேற்று முன் தினம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம் தலை மையில் மொரீசியஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் கலந்து கொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அரசு செயலாளர் மூ.ராசாராம், உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட இருக்கும் திருக்குறள் காட்சி கூடம் பற்றியும், சீனம் மற்றும் அரபு உலக மொழிகளில் திருக் குறள் மொழி பெயர்க்கப்படுவது பற்றியும் எடுத்துக்கூறினார்.

மொரிசியஸ் நாட்டு அமைச்சர்

மொரிசியஸ் நாட்டின் முன் னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், மொரி சீயஸ் நாட்டின் அமைச்சராக இருந்த 1983 முதல் 1995 வரை யிலான காலத்தில் மொரீசியஸ் நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கென்றும், தமிழர்களுக் கென்றும் தாம் ஆற்றிய பல்வேறு பணிகளைப் பற்றி எடுத்துக் கூறினார்.

நிறைவாக, உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் நன்றி கூறினார்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

எங்களைப் பொறுத்தவரை அவர் மறையவில்லை; வாழ்கிறார், வாழ்ந்துகொண்டே இருப்பார்

வரலாற்றுப் பேராசிரியர் என்.சுப்பிரமணியம் இறுதி நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரை

உடுமலை, அக். 23- எங்களைப் பொறுத்தவரை பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்கள் மறைய வில்லை; வாழ்கிறார், வாழ்ந்துகொண்டே இருப் பார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் இரங்கலுரை ஆற்றினார்.

மதுரைப் பல்கலைக் கழகத்திலும், ஷில்லாங் பல்கலைக் கழகத்திலும் வரலாற்றுத் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற மூத்த பேரா சிரியர் டாக்டர் என்.சுப்பிரமணியம் அவர்கள் நேற்று (22.10.2013) காலை இயற்கை எய்தினார். இறுதி நிகழ்ச்சி இன்று (23.10.2013) காலை 8 மணியளவில் உடுமலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கலந்துகொண்டு இரங்கலுரை யாற்றினார்.

இரங்கலுரை வருமாறு: மூத்த பேராசிரியர் வரலாற்றுப் பெருமகன் திரு.என்.எஸ். என்று எல்லோராலும் அந்த வட்டாரத்தில் அழைக்கப் படுகின்ற திரு.என்.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி, மிகப்பெரிய துன்பத்திற்கும், துயரத்திற்கும் உரிய செய்தி அது.

துணிச்சலாக சொல்லக்கூடியவர்

இவர்களைப் பொறுத்தவரையிலே, அவர்கள் வெறும் வரலாற்றுப் பேராசிரியராக மட்டும் வாழ்ந்ததில்லை. மாறாக, ஒரு பல்கலைக் கொள் கலனாக ஆங்கில இலக்கியமானாலும், தமிழ் இலக்கியமானாலும், எல்லாவற்றிலும் ஒரு தனித்தன்மையோடு, சுதந்திரமாக சிந்திக்கக் கூடிய, ஆற்றல்வாய்ந்த சுதந்திர சிந்தனையாளர்.

அவருடைய கருத்துகள் மற்றவர்கள் உலகியலிலே எப்படியெல்லாம் சிந்திக்கிறார்களோ, அப்படி, அந்த வழியிலேயே இல்லாமல், எதிர்நீச்சல் பல நேரங்களில் இருக்கும், தனித்தன்மையோடு இருக்கும். மற்றவர்கள் ஏற்கிறார்களா, இல் லையா? என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படு வதில்லை. தனக்குச் சரியென்று பட்ட கருத்தை அவர்கள் துணிச்சலாக சொல்லக்கூடியவர்கள்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னாலே, அவர் கள் நோயோடு போராடி, வாழ்க்கையில் பல கட்டங்களிலே வெற்றி பெற்றதைப்போல, அதிலும் வெற்றி பெற்றார்கள். 99 ஆண்டுகாலம் அவர்கள் வாழ்ந்த காலம் பயனுள்ள காலம்; பல பேர் ஓய்வு பெற்ற பிறகு, அவர்கள் சருகுகளைப் போல ஒதுக்கப்படக் கூடியவர்களாக இருப்பார் கள்.

தமிழ் ஓவியா said...

ஆனால், இவர்களுடைய வாழ்வில், அவர்கள் பேராசிரியராக மதுரைப் பல்கலைக் கழகத்தில், ஷில்லாங் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியதை விட, அவர்கள் ஓய்வு பெற்ற பிறகுதான், அதிகம் உழைத்த காலம் - இலக்கியத் துறைக்கு - தமிழ்ச் சிந்தனைக்கு ஒரு புதிய மெருகேற்றி - ஒரு புதிய கருத்தாக்கத்தைத் தந்தார்கள்.

என்னுடைய வாழ்க்கைப் போராட்ட வரலாறு!

நாங்கள் எல்லாம் அவர்களிடத்தில் உரையா டிக் கொண்டிருக்கும் நேரத்தில், என்னுடைய வாழ்விணையர் திருமதி.மோகனா அவர்களிடம் தனிப் பற்று கொண்டவர். நிறைய கேள்விகளைக் கேட்பார். அவர்கள் என்னுடைய வாழ்க்கைப் போராட்ட வரலாறு நான் எழுதி முடித்துவிட் டேன் என்று சொன்ன பிறகும்கூட, சில திங்கள் களுக்கு முன்னால் இவர்கள் சொன்னார்கள், இல்லை, இல்லை, கடைசிவரையில் நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதை எடுத்துச் சொல்லுங்கள் என்றார்.

கோவை வானொலி செய்த மகத்தான தொண்டு

இதைவிட சிறந்த பணி, கோவை வானொலி - அற்புதமாக அவரிடம் நான்கு வாரங்கள் அவர் களுடைய அனுபவங்களை, சிந்தனைகளைப் பதிவு செய்திருக்கிறதே, அது இலக்கியத்திற்கும், சிந்தனை உலகத்திற்கும் செய்த மிகப்பெரிய மகத்தான தொண்டு.

வானொலியின் 75 ஆம் ஆண்டினைக் கொண்டாடுகின்ற இன்றைய காலகட்டத்திலே இப்படிப்பட்ட கிடைத்தற்கரிய அறிஞர்களுடைய கருத்தாக்கங்களையெல்லாம் அந்த வானொலிக் களஞ்சியத்திலே பதிவு செய்தது மிகப்பெரிய வாய்ப்பாகும்.

பல்கலைக் கழகம் பெருமை பெற்றது!

எங்களுக்கு இன்னொரு பெருமை என்னவென் றால், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் - மக்கள் பல்கலைக் கழகம் என்ற பெருமை பெற்ற ஒரு பல்கலைக் கழகம் - தஞ்சையிலே, அதனை ஆரம்பித்து ஒரு சில ஆண்டுகள்தான் ஆகின - அதற்கு முன்பு அது கல்லூரியாக இருந்து, வெள்ளி விழாவினைக் கொண்டாடிய ஒன்று என்று சொன்னாலும்கூட, அதனுடைய பெரு மைகளில் ஒன்று என்னவென்றால், அய்யா நம் முடைய பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்க ளுக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தினை வழங் கியதன்மூலமாக அந்தப் பல்கலைக் கழகம் பெரு மைப்பட்டிருக்கிறது.

அவர் பெருமை பெற்றார் என்று சொல்வதைவிட, பல்கலைக் கழகம் பெருமை பெற்றது என்பதைத்தான் நாங்கள் மிகவும் இன்றைக்கு பெருமையோடும், ஆழ்ந்த துயரத்தோடும் பதிவு செய்யக் கடமைப்பட் டிருக்கிறோம்.

அந்த நேரத்தில் அவர்கள் உடல்நலக் குறை வாக இருந்தாலும்கூட, பல்கலை;க கழகப் பட்ட மளிப்பு விழாவிலே கலந்துகொண்டு, அதனைப் பெறுவதற்கு இசைவு தந்து அவர்கள் வந்த உறுதி இருக்கிறதே, அது என்றென்றைக்கும் எங்களால் மறக்க முடியாத ஒன்றாகும்.

அவர் மறையவில்லை; வாழ்கிறார்!

அப்படிப்பட்ட ஓர் அரிய மாமேதை; எல்லாத் துறையிலும் நிறைந்த ஒருவர்; நிறைகுடம் தளும் பாது என்று சொல்வதைப்போல, அவர்களிடத் தில் எவ்வளவு நேரம் உரையாடினாலும், புதுப் புதுக் கருத்துகள் அருவிபோல் கொட்டிக் கொண் டிருக்கும்; ஆழ்கடல் முத்துக்கள்போல் வெகு வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கும். அப் படிப்பட்ட அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்று சொல்ல, நா எழவில்லை;

மாறாக, நம் நெஞ்சங்களில் நிறைந்துவிட்டார்; அன்பால் நிறைந்தார்; பண்பால் நிறைந்தார்; அவருடைய அற்புதமான சிந்தனையால் எங்கள் ரத்தத்தில் உறைந்தார் என்று கூறி, அவருக்கு வீர வணக்கம் செலுத்துவதில் நாங்கள் ஒரு சிறிய பங்களிப் பையும் இப்போது செய்தோம் என்பதுதான், அவர்களுக்கு நிகழ்ந்த இறுதி முடிவுகூட, அவருக்குத் தொல்லையில்லாத ஒரு இயற்கை முடிவாக ஆகிவிட்டது என்பதே, அவர் வாழ்க் கையில் எல்லாவற்றையும் துறந்தவராக இருந்தார்.

நீண்ட நாள்களுக்கு முன்னால், நான் துறவியாகி விட்டேன் என்று சொன்னார். ஆனால், அவரை யும் துறந்த அவர்; எங்கள் நட்பைத் துறக்க வில்லை; எங்கள் அன்பைத் துறக்கவில்லை; எங் களிடம் காட்டிய பாசத்தை மறக்கவில்லை எனவேதான் எங்களைப் பொறுத்தவரை அவர் மறையவில்லை; வாழ்கிறார், வாழ்ந்துகொண்டே இருப்பார்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரையாற்றினார்.

இதற்கு முன்னதாக, மறைந்த பேராசிரியர் சுப்பிரமணியன் அவர்களின் உடலுக்கு இன்று (23.10.2013) காலை 7.30 மணிக்கு தமிழர் தலைவரும், அவரது துணைவியாரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரது குடும்பத்தாருக்கு தமிழர் தலைவர் ஆறுதல் கூறினார்.

தமிழர் தலைவருடன் கழகப் பொதுச் செயலாளர் உரத்தநாடு குணசேகரன், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் பேரா.சுப்பிர மணியன், தென்மண்டல அமைப்புச் செயலாளர் வே.செல்வம், தாராபுரம் மாவட்ட தலைவர் சக்திவேல், கோவை மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், உடுமலை ஆசிரியர் நடராசன் உள்பட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...


பெரியார் வீச்சு நாட்டுக்குத் தேவை தாராபுரம் கண்டனப் பொதுக்கூட்டத்தில் அதிரடி அன்பழகன் முழக்கம்

தாராபுரம், அக். 24- அறிவு ஆசான் தந்தை பெரியார் 135-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டமும், தமிழர் தலைவர் அவர்கள் மீது நடத் தப்பட்ட தாக்குதலைக் கண் டிக்கும் கண்டனப் பொதுக் கூட்டமுமாக திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் தாராபுரம் நகர திக சார்பில் 4.10.2013 வெள் ளிக்கிழமை இரவு 7 மணி யளவில் தாராபுரம் அண்ணா சிலை அருகில் தொடங்கி நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு கழக பொதுக்குழு உறுப்பினர் தாரா புரம் ப.வடிவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எழுச்சியுரையாற்றிய திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் தமது ரையில் குறிப்பிட்டதாவது:-
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கை முழக் கங்கள் நாட்டிற்குத் தேவை யான அருமருந்தாகும். அத்த கைய கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி பெரியார் பணி முடிப்பதையே ஒரு குறிக் கோளாகக் கொண்டு செயல் படுபவர் தான் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாதத்தின் 30 நாட்களிலும் மக்கள் மத்தியில் உரையாற்றும் தலைவர் கி.வீரமணி அவர்கள் 10 வயதில் தொடங்கி 80 வயதிலும் ஒரே கட்சி, ஒரே கொடி, ஒரே தலைவன் என்று வீறு நடைபோடுகின்ற புரட்சி யாளர் தான் கி.வீரமணி அவர்கள்

69 சதவிகித இடஒதுக்கீட் டிற்கு ஆபத்து வந்த போது 31 சி என்ற தனிச்சட்டத்தை இயற்றி அதை அரசியலமைப்புச் சட்ட அட்டவணை 9-இல் இடம் பெறச் செய்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையை எந்த சக்தியாலும் சீர் குலைக்க முடியாத நிலையை ஏற்படுத்தி யவர் தான் கி.வீரமணி அவர்கள்

அத்தகைய தலைவர் மீது விருத்தாசலத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு தமிழக முதல்வர் ஏன் கண்டனம் தெரிவிக்க வில்லை?

வார்த்தை பேசினால் வழக்கு என்றால்! உயிருக்கு உலை வைத்து திக தலைவர் மீது தாக்குதல் நடைபெற்றதுக்கு ஏன் நடவடிக்கை இல்லை?

அப்படியென்றால் இது சமூக விரோதிகளை ஊக்கு விக்கும் ஏற்பாடா?

ஒரு மூத்த தலைவருக்கே இப்படி பாதுகாப்பற்ற நிலைமை என்றால் நாட்டில் குப்பனுக் கும், சுப்பனுக்கும் என்ன பாது காப்பு?

இது தான் தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சியின் இலட்சணமா, நடப்பது நாட் டாட்சியா? காட்டாட்சியா? வீரமணி தனி மனிதரல்ல! தமிழர்களின் முகவரி! தமிழர் களின் தலைவர், பெரியாரின் இடத்தில் இருப்பவர், தமிழி னத்தின் மூச்சுக்காற்று இவரை அசைக்க நினைத்தால் நடக் காது. வீரமணியைப் பாதுகாக்க கருப்புச் சட்டைக்காரனுக்குத் தெரியும்.
பெட்ரோலும், தீப்பந்தமும் அப்படியே இருக்கிறது. பெரி யார் கட்டளையும் அப்படியே இருக்கிறது.

ஒருவேளை திராவிடர் கழகத் தலைவரின் உயிருக்கு ஊறு நேர்ந்தால்... ஒரு பார்ப் பானும் இல்லாத நாடு உரு வாக்கப்படும்.. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


சட்டமன்ற தீர்மானம்: வழிமொழிந்து பேசினார் மு.க.ஸ்டாலின்


சென்னை, அக். 24- இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை டெசோ அமைப்பு வலியுறுத்திய தீர்மானம் போட்டுள்ள நிலையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் இக் கருத்தை வலியுறுத்தி முன்மொழிந்து கொண்டு வந்துள்ள இத்தீர்மா னத்தை, வழிமொழிந்து வரவேற்க கடமைபட்டுள்ளதாக சட்டமன்றத்தில் இன்று திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் இன்று (24.10.2013) காலை கேள்வி நேரம் முடிந்தவுடன், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இத்தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்து பேசிய திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
முதலமைச்சர் கொண்டுவந்துள்ள இத்தீர்மானத்தை தி.மு.க. சார்பில் வழிமொழிந்து வரவேற்க கடமைப் பட்டுள்ளேன்.

காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில் அந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலி யுறுத்தி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருக்கிறார். இது தொடர்பாக இந்திய பிரதமருக்கு இரண்டு முறை கடிதமும் எழுதியிருக்கிறார்.

டெசோ அமைப்பின் சார்பில் 16.7.2013 அன்று நடைபெற்ற இப்பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை தீர்மான மும் நிறைவேற்றி பிரதமருக்கு தெரிவித்துள்ளோம்.

திமுக மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பாக தமிழ கத்தில் இப்பிரச்சினை தொடர்பாக ஆர்ப்பாட்டங் களும், போராட்டங்களும் நடைபெற்று இருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
காமன்வெல்த் மாநாட்டை கனடா அரசு புறக் கணித்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் இது தொடர்பாக கையெழுத்து இயக்கமும் தொடங் கப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானம் கொண்டு வந்திருப்பதும் ஒன்றுபட்டு குரல் கொடுத்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடை பெற்றால் அடுத்த மாநாட்டிற்கு ராஜபக்சேதான் தலைவராக இருப்பார். எனவே இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவேண்டும். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை தி.மு.க. சார்பில் வரவேற்று அமர்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் இத்தீர்மானத்தை வரவேற்று பேசினார்.

முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட் டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இன்று கொண்டு வந்த தீர்மானத்தினை ஒருமனதாக ஆதரித்து கீழ்க்கண்ட கட்சிகளின் சார்பில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), கதிரவன் (பார்வர்டு பிளாக்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஜவஹருல்லா (மக்கள் மனிதநேய கட்சி), கோபிநாத் (காங்கிரஸ்), ஆறுமுகம் (சிபிஅய்), சவுந்தரராஜன் (சிபிஎம்), பண்ருட்டி ராமச் சந்திரன் (தேமுதிக) ஆகிய உறுப்பினர்கள் பேசினர்.

இதையடுத்து பேரவைத் தலைவர் பா.தனபால் அவர்களும் இத்தீர்மானத்தின்மீது தனது கருத்தை பதிவை செய்தார். பின்னர் முதலமைச்சர் எழுந்து தான் கொண்டுவந்த இத்தீர்மானத்தை சட்டமன்ற உறுப் பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்.

பேரவைத் தலைவர் இத்தீர்மானத்தை நிறைவேற் றும் வகையில் குரல் வாக்கெடுப்பு நடத்தி, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...


அட கடவுளே!


தாம்பரம், துரைப்பாக்கம், திருவொற்றியூரில்
ஒரேநாளில் 4 கோயிலில் கொள்ளைகள்

தாம்பரம், அக். 24-தாம்பரம் மற்றும் துரைப் பாக்கத்தில் ஒரே நாளில் 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் கிரீடம் உள்பட 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு தாம்பரம்

மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் வங்கி காலனியில் ஆர்டிஓ அலுவலகம் எதிரே அருள் தந்த விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலில் பட்டம்மாள் (70) என்பவர், தினமும் சுத்தம் செய்து தீபம் ஏற்றுவது வழக்கமாம்.

நேற்று காலை கோயிலைத் திறக்க பட்டம் மாள் வந்தபோது கோயிலின் பூட்டு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

தாம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோயில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப் பட்டு பணமும், விநாயகருக்கு பூஜை காலங்களில் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த வெள்ளி கிரீடம் உள்பட 21 கிலோ வெள்ளி பொருட் களையும் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோயிலில் பதிவாகி இருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்தவர்களைத் தேடி வருகின்றனர்.

தாம்பரத்தில்....

இதேபோல் தாம்பரம் திருநீர்மலை சாலையில் மகமாயி அம்மன் கோயிலிலும் நேற்று முன்தினம் இரவு சில நபர்கள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் தங்க தாலியை

கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

துரைப்பாக்கத்தில்...

துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் செங்கழுநீர் விநாயகர் கோயில் உள்ளது. இதையொட்டி அய்யப்பன், முருகன் கோயில்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டிவிட்டு பூசாரி வேணு, வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று காலை நடையை திறக்க முயன்றபோது முடியவில்லை. அப்போதுதான் கிரில் கேட் அருகே வைக்கப்பட்டிருந்த கோயில் உண்டியல் கடப்பாரை யால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டு இருந்தது தெரிந்தது. சில்லரை காசுகள் சிதறிக்கிடந்தன. இதுபோல பக்கத்தில் உள்ள முருகன் கோயில் உண்டியலும் கடப்பாரையால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருந்தது.

உடனே கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையரைத் தேடி வருகின்றனர்.

கிறிஸ்தவ கோயிலில்
உண்டியல் கொள்ளை

திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் கிறிஸ்தவ கோயில் உள்ளது. நேற்று அதிகாலை சர்ச் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் உடைக்கப் பட்டு இருப்பதை அங்கு வந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து திருவொற்றியூர் காவல்துறை யினர் விரைந்து வந்து விசாரித்தனர். சிலுவைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. 2 உண் டியல்களில் ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருந்தி ருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

ஒரேநாளில் 4 கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ கோயிலில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்தந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளன.

தமிழ் ஓவியா said...

ஏற்காடு தேர்தல்

திண்டிவனம் - திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஏழாவது தீர்மானம் நடக்க இருக்கும் ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுப்பது என்பது பற்றியதாகும்.

தீர்மானம் வருமாறு:

தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்புத் திட்டமான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் வலியுறுத்தி வந்த சேது சமுத்திரத் திட்டத்தை அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் அந்தத் திட்டமே கூடாது என்று வழக்குத் தொடுத்திருப்பதை, தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாக இப்பொதுக்குழு கருதுகிறது.

அ.இ.அ.தி.மு.க.வின் இருதேர்தல் அறிக்கைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்திவிட்டு, இப்பொழுது அந்தத் திட்டமே கூடாது என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத - சந்தர்ப்பவாதமும், அரசியல் உள்நோக்கமும் கொண் டது என்று இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரி வித்துக் கொள்கிறது.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில், சமூகநீதிக்கு எதிரான போக்கு, மதச் சார்பின்மைக்கு விரோதமான செயல்முறைகள், கடுமையான வகையில் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு - இவற்றின் காரணமாக, ஆளும் கட் சிக்கு ஒரு கடிவாளம் தேவைப்படுவது அவசியம் என்ப தாலும், நடைபெறவிருக்கும் ஏற்காடு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் தி.மு.க. வேட்பாளருக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்யத் தேவையான ஒத்துழைப்பைக் கொடுப்பது என்று திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தமிழ் ஓவியா said...

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட தீர்மானத்தில் ஏற்காடு தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பதற்கான காரணம் தெளிவாக, காரண காரியத் தோடு விளக்கப்பட்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். அதில் பெரிய குற்றத்தைக் கண்டுபிடித்ததுபோல துள்ளிக் குதிக்கிறது.

ஆளும் கட்சிக்குக் கடிவாளம் என்று இருக்கிறதாம் - அதனைப் பிடித்துக்கொண்டு சிலம்பம் ஆடிப் பார்க்கிறது.

ஆளும் கட்சிக்குக் கடிவாளம் என்றால், தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிக்குக் கடிவாளம் போட எதிர்க்கட்சியை ஆதரித்ததா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தீர்மானத்தின் முன்பகுதி வாசகங்களை மறைத்துவிட்டு ஒட்டு வெட்டு வேலை செய்து வினா எழுப்புவது அறிவு நாணயம் ஆகுமா?

சேது சமுத்திரத் திட்டம் என்பது திராவிடர் இயக்கத்தின் நீண்ட காலத் திட்டம் - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் வரவேற்ற திட்டத்தை, ராமனைக் காட்டி எதிர்ப்பது, சமூகநீதிக்கு எதிரான போக்கு, கடுமையான வகையில் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு - இவற்றின் காரணமாக ஆளும் கட்சிக்கு, அவசியம் ஒரு கடிவாளம் தேவைப்படுகிறது என்பதை மறைப்பானேன்?

மேலே கூறப்பட்டுள்ள காரணங்களை மறுத்து எழுத சரக்கு இருந்தால் தாராளமாக சிலம்பம் ஆடலாமே!

அவற்றை மறுக்க முடியாது என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் ஏன் வீண் வம்பு என்று அதற்குள் சிக்கிக் கொள்ளாமல், அரைகுறை கிணறு தாண்டும் வேலையில் இறங்கி இருப்பது பரிதாபமே!

அ.இ.அ.தி.மு.க.வை இந்த இடைத்தேர்தலில் தோற் கடிக்க இன்னும் எத்தனை எத்தனையோ காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அவற்றையெல்லாம் ஏன் மறந்துவிட்டீர்கள் - அவை பற்றியும் விளாசுங்கள் என்று நமக்கு எடுத்துக் கொடுத் திருக்கிறது என்றே எடுத்துக்கொள்வோம்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் திராவிடர் இயக்கக் கொள்கைக்கும், கலாச்சாரத் தன்மைக்கும் ஏற்ப தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று மானமிகு கலைஞர் அவர்கள் ஆட்சியின்போது அறிவிக்கப் பட்ட தமிழர் பண்பாட்டுத் தொடர்பான சட்டத்தை மாற்றி, நாரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் பிறந்த அறுபது பிள்ளை கள்தான், சித்திரையில் தொடங்கும் தமிழ் வருடங்கள் என்று அறிவித்தது ஒன்று போதாதா?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களை உச்சரிக்கும் தகுதியை இதன்மூலம் அ.இ. அ.தி.மு.க. ஆட்சி இழந்துவிடவில்லையா?

இவர்கள் கூறும் அந்த அறுபது வருடங்களில் ஒரே ஒரு பெயராவது தமிழில் உண்டா? மொழிக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் தமிழைத் தூக்கி எறிந்துவிட்டு, சமஸ்கிரு தத்துக்கு அல்லவா ஆலவட்டம் சுழற்றியிருக்கின்றனர்!

எந்தப் பெயரை - எந்தக் குழந்தைக்குச் சூட்டினாலும், மருந்துக்கும்கூட தமிழ் அதில் ஒட்டிக்கொண்டு இருக்கக் கூடாது என்ற தன்மையில் சமஸ்கிருதப் பெயர்களாகத் தேடிப்பிடித்து, பொறுக்கி எடுத்துச் சூட்டுபவர்தானே செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்?

அந்த நிலையில் உள்ளவர் - தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்னும் தமிழர் பண்பாட்டுக் கண்ணோட்டத்தில் அதனை எப்படி அணுகுவார் என்று எதிர்ப்பார்க்க முடியும்?
அண்ணா அவர்களின் நூற்றாண்டையொட்டி உரு வாக்கப்பட்டுள்ள நூலகத்தையே குப்பைத் தொட்டியாக ஆக்கி வைத்திருக்கும் அந்த ஒரு காரணம் போதாதா - இந்த ஆட்சிக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்பதற்கு?

துறைமுகத்திலிருந்து, மதுரவாயல் வரை போடப்பட வேண்டிய விரைவு பாலத்தையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.இ.அ.தி.மு.க. அரசு வழக்கு போட்டுத் தடுத்துள்ளதே - இது ஒன்று போதாதா நாட்டின் வளர்ச்சிக்குக் கேடான அரசு அ.தி.மு.க. அரசு, என்பதற்கு?

நமது எம்.ஜி.ஆர். சீண்டினால் வண்டி வண்டியாக எடுத்துக்கொட்ட ஏராளமான சரக்குகள் நம் கைவசம் உண்டு என்பதை மட்டும் அடக்கமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...


அட கடவுளே!


தாம்பரம், துரைப்பாக்கம், திருவொற்றியூரில்
ஒரேநாளில் 4 கோயிலில் கொள்ளைகள்

தாம்பரம், அக். 24-தாம்பரம் மற்றும் துரைப் பாக்கத்தில் ஒரே நாளில் 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் கிரீடம் உள்பட 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு தாம்பரம்

மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் வங்கி காலனியில் ஆர்டிஓ அலுவலகம் எதிரே அருள் தந்த விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலில் பட்டம்மாள் (70) என்பவர், தினமும் சுத்தம் செய்து தீபம் ஏற்றுவது வழக்கமாம்.

நேற்று காலை கோயிலைத் திறக்க பட்டம் மாள் வந்தபோது கோயிலின் பூட்டு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

தாம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோயில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப் பட்டு பணமும், விநாயகருக்கு பூஜை காலங்களில் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த வெள்ளி கிரீடம் உள்பட 21 கிலோ வெள்ளி பொருட் களையும் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோயிலில் பதிவாகி இருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்தவர்களைத் தேடி வருகின்றனர்.

தாம்பரத்தில்....

இதேபோல் தாம்பரம் திருநீர்மலை சாலையில் மகமாயி அம்மன் கோயிலிலும் நேற்று முன்தினம் இரவு சில நபர்கள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் தங்க தாலியை

கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

துரைப்பாக்கத்தில்...

துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் செங்கழுநீர் விநாயகர் கோயில் உள்ளது. இதையொட்டி அய்யப்பன், முருகன் கோயில்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டிவிட்டு பூசாரி வேணு, வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று காலை நடையை திறக்க முயன்றபோது முடியவில்லை. அப்போதுதான் கிரில் கேட் அருகே வைக்கப்பட்டிருந்த கோயில் உண்டியல் கடப்பாரை யால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டு இருந்தது தெரிந்தது. சில்லரை காசுகள் சிதறிக்கிடந்தன. இதுபோல பக்கத்தில் உள்ள முருகன் கோயில் உண்டியலும் கடப்பாரையால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருந்தது.

உடனே கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையரைத் தேடி வருகின்றனர்.

கிறிஸ்தவ கோயிலில்
உண்டியல் கொள்ளை

திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் கிறிஸ்தவ கோயில் உள்ளது. நேற்று அதிகாலை சர்ச் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் உடைக்கப் பட்டு இருப்பதை அங்கு வந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து திருவொற்றியூர் காவல்துறை யினர் விரைந்து வந்து விசாரித்தனர். சிலுவைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. 2 உண் டியல்களில் ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருந்தி ருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

ஒரேநாளில் 4 கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ கோயிலில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்தந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளன.

தமிழ் ஓவியா said...

அதிக சக்தி!

செய்தி: ஆந்திர மாநி லம் புத்தூரில் பயங்கர வாதிகள் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து ஏழுமலையான் கோவி லுக்குச் சிறப்புப் பாது காப்புப் படை அமைக் கப்பட்டுள்ளது.

சிந்தனை: இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவெனில், திருப்பதி ஏழுமலையானைவிட பயங்கரவாதிகள் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்க!

தமிழ் ஓவியா said...


கடவுளை நம்புகிறாயா?


ருஷ்ய நாட்டு பிரஜை ஒருவன் வேலை தேடுகிறான் என்றால் அவனைப் பார்த்து ஒரு பேட்டியாளர் நீ கடவுளை நம்புகிறாயா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது இல்லை. அவ்வாறு கேட்பதை சட்டம் தடை செய்கிறது.

- ருஷ்ய வெளியீடு: 100 வினாக்களும் விடைகளும் என்ற புத்தகத்திலிருந்து பக்கம் 48.
தகவல்: ந.சுப்ரமணியன், கோவை

தமிழ் ஓவியா said...

காய்மீது காய்ச்சல்!



அத்திக் காய் கோவை தேத் தானை
ஹிலிக் காய் வெள்ளைக்
கத்தரி சோற்றுக் காந்தல்
கண்டிதை யாவரேனும்
நத்தியே யுண்பார்க் கெல்லாம்
நாரணன் தாளின் மீது
புத்திதான் வாரா தென்றும்
பரமனார் அருளினாரே. (நீதிச் சாரம்)
இதன் பொருள்: அத்திக்காய், கோவைக்காய், தேத்தரங்காய், சோற்றுக்காந்தல் இவைகளை உண்டால் நாராயணக் கடவுள் மீது பக்தி ஏற்படாது - அக்கடவுளை மறக்கச்செய்யும்.

தமிழ் ஓவியா said...

இப்போ பிராமணனும் இல்லே பிராமண தர்மமும் இல்லே!

வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலை பேசி விற்கலாமா?

புரோகிதர் பதில்: எல்லாம் காலக்கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு. நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே.. பிராமண தர்மமும் இல்லே.

வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது?

புரோகிதர் விடை: பக்தியாவது. ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி, அம்பாளை நெனச்சுக்கிறா!

- துக்ளக், 1-6-1981 இதழ், பக்கம் 32
தகவல்: கிருட்டினசாமி, செகந்திராபாத்

தமிழ் ஓவியா said...


ஒழிக்கப்பட வேண்டியவை

1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழி லாளர்களிடையே சுகமும், நாணய மும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

கொடிது கொடிது (ஈ.வெ.ரா)



கொடிது கொடிது கோவிலுக்குப் போதல். அதனினும் கொடிது பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்குப் போதல்.

அதனினும் கொடிது குழவிக்கல்லையும் செம்பையும் கும்பிடுதல். அதனினும் கொடிது தேர்த் திருவிழா உற்சவத்திற்குப் போதல். அதனினும் கொடிது பெண்களை அங்கு கூட்டிப்போதல். அதனினும் கொடிது கோவில் கட்டுதல். அதனினும் கொடிது காணிக்கை போடுதல். அதனினும் கொடிது (அர்ச்சகப்) பார்ப்பானுக்கு ஈதல். -

விடுதலை 21.10.1957

தமிழ் ஓவியா said...

இந்துவாய் சாகமாட்டேன்

மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம்மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய்விட்டன.

இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது முறைகளும் இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத்தான் அளிக்கும்.

இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம்முடிவு என்னவென்றால், நாம் இந்து மதத்தைவிட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்.

நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்பந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் நம்மை இந்துக்கள் என்று கூறிக்கொள்வது கூடாது. அதனால்தான் மேல் ஜாதிக்காரர்கள் நம்மை இழி வாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள். நாம் வேறு மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இப்படி கொடுமைப்படுத்த அவர் களுக்கு துணிவு இருந் திருக்காது.

எந்த மதத்தினர் உங்களுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்துகிறார்களோ அப்படிப் பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள். பிறக்கும் போதோ நான் தீண்டப்படாத வனாய் பிறந்தேன். என்றாலும் அது நான் செய்த குற்றமல்ல.

ஆனால் இறக்கும் போது தீண்டப்படாத வனாய் இறக்கமாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையிலேயே இருக்கிறது. அதாவது நான் ஒரு இந்துவாய் இறக்கப் போவதில்லை

(நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் குடிஅரசு 20.10.1935)

தமிழ் ஓவியா said...


பொன்மொழிகள்


தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும் அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது. - காண்டேகர்

ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது. - ஸ்டேட்ஸ்மென்

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும். - எமர்சன்

சோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும் தோல்வி என்பது இல்லை. - டென்னிசன்

நம்நாடு முன்னேற வேண்டுமானால், ஜாதகத் தையோ, ஜோதிடத்தையோ நம்பி பயன் இல்லை. உழைப்பு - உழைப்பு கடுமையான உழைப்புதான் தேவை.
- நேரு

முன்னேற்றத்திற்கு அதிர்ஷ்டத்தை நம்புகிறவன் சோம்பேறி அவன் ஒரு காலும் உயர்வடையமாட்டான். தன் உழைப்பை நம்புகிறவனே மனிதன். நிச்சயம் அவன் உயர்வடைவான். - இப்ஸன்

எதைச் சொன்னாலும் நம்பிவிடுவது சரியல்ல. சந்தேகிக்கும் பண்பே சிறந்தது. - பிராகன்

பலவீனர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கின்றனர். பலமுடையவரோ காரணகாரியத் தொடர்பிலேயே நம்பிக்கை வைக்கின்றனர். - எமர்சன்

தமிழ் ஓவியா said...


சொல்லவேண்டும்



பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும். -(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


ராகுல் சொன்னது உண்மை


மத்தியப் பிரதேச தேர்தல் - பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி, பி.ஜே.பி. மீது ஒரு பொதுவான குற்றச்சாற்றை வீசியுள்ளார்.

குளிர் சாதனம் பொருத்தப்பட்டுள்ள அறை களில் சுகமாக வாழும் முதலாளிகளுக்கானது பிஜேபி என்பதுதான் அந்தக் குற்றச்சாற்று.

ராகுல்காந்தி கூறியிருக்கிறார் என்றாலும் அது நூற்றுக்கு நூறு உண்மையே!

எடுத்துக்காட்டாக, குஜராத் ஒளிர்கிறது என்றும், நரேந்திர மோடியைப் பிரதமர் ஆக்கினால் இந்தியாவையே குஜராத்தாக ஆக்கிக் காட்டுவார் என்றும் திட்டமிட்ட பிரச்சாரத்தை வாரி இறைத் துக் கொண்டு இருக்கிறார்களே - உண்மையில் குஜராத்தில் முதலமைச்சர் மோடி, யார் பக்கம் இருக்கிறார்? யாருக்காக ஆட்சி நடத்துகிறார் என்பதைத் தெரிந்து கொண்டால் ராகுல் காந்தி சொன்னதன் உண்மைக்கான அர்த்தம் புரியும்.


மேற்கு வங்காளத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது நானோ கார் தொழிற்சாலையை உருவாக்க டாட்டா திட்டமிட்டிருந்தார் விவசாய நிலங்கள் அவருக்காகத் தாரை வார்க்கப்பட்ட தாகக் கூறி பெரும் கிளர்ச்சி, அம்மாநிலத்தில் ஏற்பட்டதால் அங்கு நினைத்தபடி டாட்டா கார் தொழிற்சாலையைத் தொடங்கிட முடியவில்லை.

சும்மா இருந்து விடுவாரா குஜராத் முதல் அமைச்சர் மோடி, தொழிலதிபர்களை ஈர்ப்பதில் பன்னாட்டு நிறுவனங்களைத் தூண்டில் போட்டு இழுப்பதில் மோடிக்கு நிகர் யார் என்று நலுங்கு பாடுவதில் பொருள் உண்டு.

மேற்கு வங்கத்திலிருந்த டாட்டாவின் நானோ கார் தொழிற்சாலையை தம் மாநிலத்தில் தொடங்குமாறு டாட்டாவுக்குத் தாம்பூலம் வைத்து அழைத்தார் மோடி அதற்காக முதல் அமைச்சர் மோடி, கொட்டிக் கொடுத்த சலுகைகள், விட்டுக் கொடுத்த தொகை அசாதாரணமானது.

1100 ஏக்கர் விவசாய நிலம் தாரை வார்க்கப்பட்டது. அதற்கு முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்பட்டது. மேற்கு வங்கத்திலிருந்து இயந்திரங்களை குஜராத்துக்குக் கொண்டு வர வேண்டுமே - அதற்காக ஆன போக்குவரத்துச் செலவு ரூ.700 கோடி. அந்தத் தொகையையும் ஏற்றுக் கொண்டார் முதல் அமைச்சர் மோடி.

ஏழையல்லவா டாட்டா - அதற்காகக் கடனாக கொடுக்கப்பட்ட தொகை ரூ.9750 கோடி 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தினால் போதும் அதற்கு விதிக்கப்பட்ட வட்டி - கேட்பவர்கள் அதிர்ந்து போய்விட வேண்டும்.

புள்ளி ஒரு சதவீதம் (.1ரூ)

ஒரு விவசாய நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றினால் குஜராத் மாநில அரசின் விதிமுறைப்படி சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.6 அரசுக்குச் செலுத்த வேண்டும். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

தொழில் வரியிலும் சலுகையாம். அம்மாநில சட்டப்படி எந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட் டாலும் உள்ளூர்க்காரர்களுக்கு 85 சதவீதம், வேலை வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும். இது தவிர, மேலாண்மை மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களில் குறைந்தபட்சம் 60 சதவீதம் உள்ளூர் மக்களால் நிரப்பப்பட வேண்டும். இதற்கும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மொத்த சலுகைகளின் கணக்கைப் பார்த்தால் குஜராத் மக்களின் வரிப் பணம் ரூ.30ஆயிரம் கோடி, பரம ஏழை(?) டாட்டாவுக்கு தாராளமாக தாரை வார்க்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளில் 50 லட்சம் நானோ கார்களை உற்பத்தி செய்வதாக டாட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.கார் ஒன்று ஒரு லட்சம் ரூபாய் என்று கணக்கிட்டால் 50 லட்சம் கார்களுக்கு குஜராத் மக்கள் கார் ஒன்றுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் மான்யமாக அளிக்கிறார் கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்று சாலைகளில் ஓடும் ஒவ்வொரு நானோ காரும் பெட்ரோலில் ஓடவில்லை. குஜராத் மக்களின் வரிப் பணம் என்னும் ரத்தத்தில்தான் ஓடுகிறது.

இப்பொழுது எளிதாகப் புரிந்து கொண்டு இருக்கலாமே - காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிஜேபி பற்றி சொன்ன குற்றச்சாற்று துல்லிய மானது நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதை!

தமிழ் ஓவியா said...


அக். 25: தகவல் அறியும் உரிமை சட்ட தினம்


அரசு மற்றும் அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ஆம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ஆம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

2004 டிச., மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே 11இல் மக்களவையிலும், மே 12இல் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ஆம் தேதி குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார். ஜூன் 21இல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அக்.12ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், பொதுமக்கள் யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப் பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. நாடாளுமன்ற, சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம்.
குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை குடிமக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு இயந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.