Search This Blog

17.10.13

உங்கள் கஷ்டத்திற்கும் அறிவீனத்திற்கும் காரணம் என்ன? -பெரியார்

உங்கள் கஷ்டத்திற்கும் அறிவீனத்திற்கும் காரணம் என்ன? - தந்தை பெரியார்

நான் பேசும் விஷயம் உங்கள் மனத்திற்கு திருப்தியாக இருக்காது. ஆனாலும், உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என்று நான் பேச வரவில்லை. ஆனால், இதன் பயன் என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளவே நான் சில விஷயங்களைப் பேசுகிறேன்.

இன்றைய உற்சவமும், கொண்டாட்டமும் என்ன கருத்தைக் கொண்டது? சுப்பிரமணியசாமிக்குக் கல்யாணம். கல்யாணம் செய்து கொண்ட சாமி தேர் மீது ஊர்க்கோலம் வருகின்றார். இதற்காக இத்தனை ஆயிரம் ஜனங்கள் வீடு வாசல், வேலை, வியாபாரம் முதலியவற்றை விட்டு வந்து இன்று இங்கு கூட்டத்தில் நெருக்கப்படுகிறார்கள். பலர் காவடி தூக்கி ஆடுகிறார்கள். சாமிக்குக் கல்யாணம் என்பதில் ஏதாவது அறிவு இருக்கிறதா? வருஷம்தோறுமா கல்யாணம் செய்வது?

இந்தக் காவடி தூக்கிக் கொண்டு கண்டபடி குதிப்பதிலும், உளறுவதிலும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இதை அன்னிய மதக்காரனோ, அன்னிய தேசத்தானோ பார்த்தால் என்ன சொல்லுவான்? வேறு மதக்காரன் இந்தப்படி ஆடினால் நாம் என்ன சொல்லுவோம்? நமது அறிவுக்கும், நாகரிகத்திற்கும் இதுதானா அடையாளம்? எத்தனை வருஷக் காலமாக இந்தப்படி மூடக் கொள்கையில் ஈடுபட்டு வருகிறோம்? என்ன பலனைக் கண்டோம்? மனிதனுக்கு முற்போக்கே கிடையாதா? 2000, 3000 வருஷத்திற்கு முந்திய நிலை நம்மிடம் சிறிதும் மாறவில்லை.  இம்மாதிரி நடவடிக்கை நம்மை மிருக பிராயக்காரன் என்று காட்டுவதுடன் நமது பணம் எவ்வளவு செலவாகின்றது? நமது நேரமும், ஊக்கமும் எவ்வளவு செலவாகின்றது? பாருங்கள். கடவுளைப் பற்றிய எண்ணங்களும், பக்திகளும் நமக்கு என்ன பலனைக் கொடுக்கின்றன? அதிக பக்திக்காரன் தனக்கு வேண்டியதெல்லாம் கடவுள் தருவார் என்று எண்ணுகின்றான். கடவுளைப் பற்றி அதிகமாக அறிந்தவன், சகலமும் கடவுள் செயல் அவனன்றி ஓரணுவும் அசையாது என்று எண்ணுகிறான். மனிதனுடைய முற்போக்கையும், அவனது கஷ்டத்தையும், கொடுமையையும் நிவர்த்தி செய்து கொள்ளுவதையும், இந்த எண்ணங்கள் தடைப்படுத்துகின்றன.

பல ஆயிர வருஷங்களாக ஒருவன் கீழ் ஜாதியாய் இருப்பதற்கும், கல்வி அறிவு பெறாமல் இருப்பதற்கும் சதா உழைத்து உழைத்துப் பாடுபட்டும் பட்டினியாயும் போதிய ஆகாரமும், வசதியும் இல்லாமலும் இருப்பதற்கும் இந்த எண்ணங்களே காரணமாகும். இது போலவே பாடுபடாத சோம்பேறிகள் கோடீஸ்வரர்கள் ஆகவும், தலைமுறை தலைமுறையாய் பிரபுக்களாகவும், மேல் ஜாதிக்காரர்களாகவும் இருப்பதற்கும் இந்த எண்ணங்கள்தான் காரணம். இந்த எண்ணங்கள் பணக்காரனுக்கும், சோம்பேறிக்கும் (பார்ப்பானுக்கும்) தான் அனுகூலம். தொழிலாளிக்கும், கூலிக்காரனுக்கும், பண்ணைய ஆளுக்கும் கெடுதியே ஆகும்.

ஏழைகள் தங்கள் தரித்திரத்திற்கும், கஷ்டத்துக்கும் கடவுளும் தலைவிதியும்தான் காரணம் என்று சொல்லி விடுவாரேயாகில்,  எப்படி அவர்கள் தரித்திரத்தை நீக்கிக் கொள்ள முடியும்? அவன்தன் பாட்டின் பயனை எவன் அனுபவிக்கிறான்? ஏன் அனுபவிக்கிறான்?

என்று பார்த்து அவற்றைத் தடுக்க வேண்டும். இந்தக் காரியம் செய்ய ஒரு கடவுளும் ஒப்பாது, ஏனென்றால், கடவுளையும், தலைவிதியையும் பணக்காரனும், சோம்பேறியும்தான் உண்டு பண்ணுகிறான். ஆகையால், அவை தங்களுக்குத் தகுந்த மாதிரியாகத்தான் உண்டு பண்ணிக் கொள்ளுவார்கள். இதில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம். இங்கு மாத்திரம் அல்லாமல் எல்லா தேசங்களிலும் பணக்காரர்கள் தங்கள் நன்மைக்கும் அஸ்திரமாய் இருப்பதற்கும் இந்த மாதிரியாகத்தான் கடவுளைச் சிருஷ்டித்து, அதைப் பிரசாரம் செய்யப் பாதிரிகளை ஏற்படுத்தி, அவர்களுக்குப் பணம் கொடுத்து, காப்பாற்றி வருகிறார்கள். இந்தப் புரட்டுகளை உலகில் வெகுபேர் அறிந்திருந்தாலும், ரஷிய தேசத்தார்தான் முதன்முதலில் இதை அழித்து நீர்த்துளியாக்கிப் பணக்காரத் தன்மையையும், பாதிரித் தன்மையையும் ஒழித்தார்கள். ரஷியா தேசமானது இந்தியாவைப் போலவே பணக்காரருடையவும், பார்ப்பனர்(பாதிரி)களுடையவும் ஆதிக்கத்தில் இருந்து ஏழை மக்களை வாட்டி வதைத்து வந்தது. ஆனால், அவர்கள் அதற்குக் காரணம் கடவுள் புரட்டும், மதப் புரட்டும் என்பதை உணர்ந்து, அந்த இரண்டையும் அழிக்கத் தொடங்கி இன்று எல்லோரும் சமமாக வாழுகின்றார்கள். அங்கு சோம்பேறியோ, பிரபோ, பணக்காரனோ, முதலாளியோ, மிராசுதாரனோ, ஜமீன்தாரனோ கிடையாது. எல்லோரும் பாடுபட வேண்டியது. அதன் பயனை எல்லோரும் சமமாக அனுபவிக்க வேண்டியது. ஒருவனை ஒருவன் ஏய்க்கவோ, ஒருவன் பாடுபட்டதை ஒருவன் அனுபவிக்கவோ முடியாது.

ஆனால், இன்று இங்கு கடவுள் செயலால் இருக்கும் தேசத்தில் ஒரு மனிதனுக்கு  1,000 ஏக்கர் 10,000 ஏக்கர் பூமி கூட இருக்கிறது. பூமிக்குச் சொந்தக்காரன் என்பவன் உழுவதில்லை, விதைப்பதில்லை, தண்ணீர் இறைப்பதில்லை, பாத்தி கட்டுவதில்லை, அறுப்பு அறுப்பதில்லை. ஆனால், விளைந்த வெள்ளாமையை எல்லாம் தன் வீட்டில் கொண்டு போய்க் கொட்டிக் கொள்ளுகிறான். உழுது, விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, அறுப்பு அறுத்த ஆளுக்கு ஒரு படி போதாதா, இரண்டு படி போதாதா என்று அரை வயிற்றுக்குத்தான் கொடுக்கிறான். துணி வேண்டுமானால் தர்மத்துக்கு இனாம் கொடுப்பது போல் அரைத் துணி கொடுக்கிறான். வீடு வேண்டுமானால் காட்டில் கை அகலம் இடம் காட்டுகிறான். இதெல்லாம் பிச்சை கொடுப்பது போல கொடுக்கிறான். ஆனால், மிராசுதாரனோ இவ்வளவையும் விற்று மாடி வீடு, மோட்டார் வண்டி, தேவடியாள், பிராந்தி, விஸ்கி, நாடகம், சினிமா,  தாலுகா, ஜில்லா, போர்டு மெம்பர், பிரசிடென்ட், முனிசிபல் சேர்மேன் ஆகியவற்றுக்குப் பதினாயிரக்கணக்காக செலவு செய்து, ராஜபோகம் அனுபவிக்கிறான். இந்த அக்கிரமங்களுக்கு உடந்தையாய் இருக்கிற கடவுளும், அனுமதித்துக் கொண்டிருக்கிற கடவுளும், இன்னமும் நமது நாட்டுக்கு வேண்டுமா என்று கேட்கின்றேன். கடவுள் புரட்டு ஒழிந்தாலொழிய இந்த மிராசுதாரர்கள் ஒழிய மாட்டார்கள்.  இவர்களது இப்படிப்பட்ட அகந்தையும், ஆணவமுமான காரியங்களும் ஒழியாது. உங்கள் தரித்திரங்களும் ஒழியாது. ஆகையால் இவற்றையெல்லாம் நன்றாய் யோசித்து உங்கள் கஷ்டத்திற்கும், அறிவீனத்திற்கும் காரணம் என்ன என்று கண்டுபிடித்து அதன்படி நடவுங்கள்.

             ------------------------------ தந்தை பெரியார் -"குடிஅரசு", 19.2.1933

60 comments:

தமிழ் ஓவியா said...

அச்சுறுத்தும் இ-கழிவுகள்


பழுதடைந்த கணினி, வீடியோ கேம், செல்பேசிகள், குறுந்தகடுகள், டி.வி.டி.கள், தொலைக்காட்சிப் பெட்டி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகளாலும் குளிர்சாதனப் பெட்டி, ஓவன், துணி துவைக்கும் இயந்திரம் போன்ற எலக்ட்ரிக் பொருட்களின் கழிவுகளாலும் நிலர், நீர், காற்று, சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதுடன் பல்வேறு நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இ_கழிவுகள் என்றழைக்கப்படும் இவை மக்காத தன்மை உடையன.

இ_கழிவுகளில் பெலாடியம், வெள்ளி போன்ற உலோகங்களும் தீமை தரும் காரீயம், காட்மியம், பாதரசம் போன்ற உலோகங்களும் உள்ளன.

மும்பையில் மட்டும் ஓர் ஆண்டிற்கு 25,350 டன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்திய அளவில் இ_கழிவுகளைக் கொட்டுவதில் மகாராட்டிரம் முதல் இடத்திலும் தமிழகம் 2ஆவது இடத்திலும் உள்ளன.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் அதிக அளவில் இந்தக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. 5 சதவிகித இ_கழிவுகளே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

எந்த நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்ததோ அவர்களிடமே பழுதடைந்த பொருள்களைக் கொடுக்க வேண்டும். இவற்றை முழுமையாகப் பிரித்து, பின்பு மறுசுழற்சிக்கு அனுப்பி உலோகங்களைக் காய்ச்சி வடித்துப் பிரித்தெடுக்கலாம். வெளிநாடுகளில் இருந்து இ_கழிவுகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது. மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இ_கழிவுகளினால் ஏற்படும் விளைவுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அய்.நா. சபையின் தென்கிழக்காசிய இயற்கை வளப் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரும், மதுரை காமராசர் பல்கலைக்கழக சுற்றுச் சூழல் துறையின் தலைவருமான முத்துச்செழியன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

அலகு குத்துதல் - சிலுவையில் அறைதல் - சுத்தியில் வெட்டிக்கொள்ளல் உண்மை நிலை என்ன?
- சரவணா இராஜேந்திரன்

அலகு குத்துதல், பறவைக்காவடியில் தொங்குதல், தீ மிதித்தல், கற்பூரம் கொளுத்திக் கையில் வைத்தல் மற்றும் வாயில் போடுதல் ஆகிய செயல்கள் கோவில் விழாக்களில் சிலரால் செய்யப்படுவதை நாம் பார்த்திருப்போம். கடவுள் சக்தியாலோ, கடவுள் அருள் மனிதன் உடலில் ஏறுகிறது என்று பக்தர்கள் சொல்வதாலோ செய்ய இயலும் செயல்கள் அல்ல என்பதை விளக்குகிறது இந்த அறிவியல் விளக்கக் கட்டுரை.



எச்சரிக்கை: இது ஒரு மதத்தைக் குறைகூறும் பதிவல்ல, உலகில் பல பகுதிகளில் இந்தப் பழக்கம் இயற்கைக்கு மாறான மனிதச்செயல் (Taboo) மற்றும், தொழில் முறை வித்தை, வீர விளையாட்டாகவும் காணப்படுகிறது.

உடலின் அனிச்சைச் செயல்கள்: மனிதத் தசை நார்கள், திடீரெனத் தாக்கப்படும்போது அதைத் தவிர்க்க மூளைக்குச் செய்திகளை அனுப்பும். மூளை உடனடியாக வலியை உருவாக்கும் எக்ஸைம்களை அனுப்பி இரத்த ஓட்டத்தைச் சுருக்க ஆரம்பிக்கும். அப்போது பாதிக்கப்படும் தசை நார்களுடன் இணைந்துள்ள அனைத்து செல்களும் ஒரு பாதுகாப்பு எதிர்வினையை உருவாக்கும்.

முதலில் தன்னிச்சையாக அந்தத் தாக்குதலைத் தவிர்க்க உடல் முயற்சிக்கும் தற்காப்பு நடவடிக்கை (Defence Activity).. பிறகு அதை உடலில் ஏற்படும் திடீர்க் காயங்கள் மற்றும் மேலும் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்.

எ.கா: யாராவது நம்மைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்க வருவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இது திடீர்த் தாக்குதலில் மட்டும்தான். ஆனால், அலகு குத்துபவர்கள், வித்தைக்காரர்கள், டாபோக்கள் இதை ஒரு தேவைப்பட்ட ஒன்றாக எடுத்துக் கொள்கின்றனர். இந்தச் செய்தி மூளைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனை அடுத்து, மூளை இது தேவையான ஒன்றுதான் என்று உணர்ந்து ஆபத்தான சமயங்களில் செய்யும் அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் நிறுத்திவிடுகிறது.

விளைவு, தசை நார்கள் பெரிய ஸ்க்ரூ ட்ரைவரைக் கொண்டு மெல்ல மெல்ல (முக்கியமான உள்ளுறுப்புகள் இல்லாத பகுதியில்) ஊடுருவ இடைவெளி தருகிறது. அங்குள்ள இரத்த நாளங்கள் கிழிபடும்போது ஏற்படும் வலியைத் தவிர வேறு ஒன்றும் உணரமாட்டோம்.

மற்றொரு விசித்திர செய்தி, நாம் அனைவரும் இதன் அனுபவத்தை உணர்ந்திருக்கிறோம். ஆம், செவிலியர், இரத்தப் பரிசோதகர், பல் மருத்துவர் மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர் நமது உடலில் ஊசியால் குத்தும்போது ஏற்படும் அதே உணர்வுதான் அலகு குத்தும்போது ஏற்படுவது.

பறவைக்காவடி: நமது தசை நார்கள் ஒரு லாரியை இழுக்கும் அளவு வலுவானவைகள். முதுகில் கொக்கிகளைக் குத்தி அதில் ஒரு லாரியை இணைக்கும் கயிற்றைக்கட்டி இழுக்கச் சொன்னால், வலிமையுள்ளவர்கள் எளிதாக இழுத்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது நமது உடல் எடை என்பது பெரிய பிரச்சினையே அல்ல. அதாவது, ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல, உங்களுக்கு விருப்பப்படும்போது அல்லது இயற்கை உபாதைகளுக்கு மட்டும் இறங்கி வந்தால் போதும். மற்றபடி நீங்கள் தொங்கிக்கொண்டே இருக்கலாம். ஈர்ப்பு விசையால் பாதிப்பு என்பது எடை தாங்காத அளவிற்கு எடை கூடும்போது தசைகள் கிழிபடும்.

தீ மிதித்தல்: இது மிகவும் எளிமையான ஒரு மெக்கானிசம். கிராமத்தில் அடுப்பு எரிக்கும்போது சில நேரங்களில் கனன்று கொண்டு இருக்கும் கட்டையில் இருந்து கனல் வெளியில் விழுந்ததும், அதனைக் கையில் எடுத்து எரிந்து கொண்டிருக்கும் நெருப்பினுள் போடுவதைப் பார்த்திருப்போம்.

தமிழ் ஓவியா said...

இதே மெக்கானிசம்தான் தீ மிதிக்கும்போதும் ஏற்படுகிறது. நமது பாதங்கள் எண்ணிடலங்கா மெல்லிய இரத்த நாளம் மற்றும் கரோட்டின் செல்களால் ஆனது. இந்த கரோட்டின் செல்களை நுண்ணோக்கியால் பார்த்தோமென்றால் கண்ணாடிப் பொருட்களைப் பாதுகாக்கும் காற்றுக்குமிழ் அடங்கிய பிளாஸ்டிக் சீட் போன்று இருக்கும்.

அங்கு காற்றுக்குமிழ், இங்கு இரத்தம். இதுதான் வித்தியாசம். கரோட்டினுள் அதிக அழுத்தத்தில் பாயும் இரத்தம் குறிப்பிட்ட அளவு வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நமது பாதங்களை உள்ளங்கைகளைக் காப்பாற்றுகிறது.

இது குறிப்பிட்ட அளவு மட்டும்தான் தணலைக் கட்டுப்படுத்தும். அதே நேரத்தில் உலோகம், மணல், கல் போன்றவைகளில் இந்தத் தீமிதி வேலை செய்தல் கூடாது. காரணம், இவை தணலைப்போல் எளிதில் வெப்பத்தைக் குறைத்து கூட்டும் தன்மையுடையவை அல்ல.

கடவுள் சக்தி, நம்பிக்கை போன்றவைகள் இங்கு ஒரு ஏமாற்று வேலையாகத்தான் நடக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை.

பள்ளிப் பருவத்தில் ப்ளேடால் கையைக் கிழித்து பெண் நண்பரின் பெயர் எழுதுவது, மெழுகுவர்த்தியில் கம்பியைச் சுடவைத்து பெயர் எழுதுவது, காது மூக்கு குத்துவது, பச்சை குத்துவது போன்றவையும் இதே வகைதான்.

வடக்கில் உள்ள சாமி சாமியாரினிகள் செய்யும் முள்படுக்கை, ஆண்குறியில் செங்கற்களைக் கட்டித் தூக்குவது, மார்பகங்களில் கூரான உலோகங்களைக் கட்டி கடவுளர்களின் சிலைகளைத் தொங்கவிட்டு வருவதும் இதே முறையில்தான்.
இது உலகில் உள்ள அனைத்து மதங்களிலும் உள்ளது. கிறித்துவர்கள் சிலுவையில் அறைந்து கொள்வது, இஸ்லாமியரில் ஒரு பிரிவினர், கத்தியால் தங்கள் உடலில் கிழித்துக் கொள்வது போன்றவையும் இந்த வரைமுறையில் அடங்கும்.

தமிழ் ஓவியா said...

அந்தப் பதினெட்டு நாட்கள்
- பே.பா.குபேரன்

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் இந்திரனுக்கு ஒரு யோசனை. அடுத்தது மகாபாரதக் கதையைப் படமாக்க வேண்டும். மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும் _ இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி திரைக்கதையை உருவாக்க வேண்டுமே... இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு கண்ணயர்ந்தார் இந்திரன். அவரது மனத்திரையில் வியாசர் விருந்து காட்சிகளாக உருவெடுக்க ஆரம்பித்தது. அப்போது _

நாள்தோறும் செய்துவரும் விநாயகர் பூசனையை முடித்தபோது கண்ணெதிரே ஒரு வெளிச்சம். இந்திரனுக்குக் கண்கள் கூசின. சாட்சாத் விநாயகர் வந்து நின்றார்.



வணக்கம் கடவுளே! என் பாக்கியமே பாக்கியம்! என் வழிபாட்டுக்குப் பலன் கிடைத்துவிட்டது. வாழ்த்துங்கள் சுவாமி _ என்னை வாழ்த்துங்கள்!...

வாழ்த்துகிறேன் _ ஆனால் ஒரு நிபந்தனை...

சொல்லுங்கள் சுவாமி!...

நீ தயாரிக்கும் மகாபாரதக் கதையை நான்தான் எழுதினேன்; தெரியுமா...
தெரியும் சுவாமி! எழுதுகோல் இல்லாத காலத்தில் உங்களுடைய தந்தத்தை ஒடித்து எழுதினீர்களாமே_

படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதுகின்ற பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிடு. படத்தின் பெயருக்கு முன் விநாயகர் அளிக்கும் என்று குறிப்பிட வேண்டும். இதுதான் என் கண்டிஷன்!

உங்களுக்கும் சினிமா ஆசை வந்துவிட்டதா சுவாமி? உங்கள் விருப்பப்படியே திரைக்கதை வசனம் எழுதிவிடுங்கள்!...

சரி சரி! உன் முயற்சிக்கு என்னுடைய ஆசிர்வாதம்! உன் படம் வைரவிழா கொண்டாடும்!... சந்தேகமே இல்லை...

முழுமுதற் கடவுள் விநாயகரே தரிசனமாகி சினிமா சான்ஸ் கேட்டுவிட்டார். மறுக்க முடியவில்லை இந்திரனால். ஏடுகளில் செய்திகளும் விளம்பரங்களும் வெளிவரத் தொடங்கின. இந்திரன் மூவிஸ் தயாரிக்க இருக்கும் மகாபாரதக் கதைக்கு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேவை...

பிள்ளையாருக்கு வாய்ப்புக் கொடுத்தது சம்பந்தமாக பைனான்ஸியர் குபேந்திரனுக்கு மகிழ்ச்சி. பகவானின் ஆசி, அத்துடன் பிள்ளையாரின் பக்தர்கள் குவிந்து விடுவார்கள் _ வைரவிழா கொண்டாடலாம் _ மூன்றுமாத காலத்திற்கு நுழைவுச்சீட்டு முன்பதிவு ஆகிவிடும்! நிச்சயம் சுவிட்சர்லாந்து வங்கியில் பணம் போட்டு வைக்கலாம்....

இந்திரன் மூவிஸ் வாசலில் தேவர்கள் கூட்டம். நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்டு நீண்ட வரிசை... இந்த வரிசையைப் பொருட்படுத்தாமல் அலுவலகத்தில் நுழைந்தார் ஒரு முதியவர். நரைத்த தாடி, மீசை, ஒரு கையில் தடி _ இன்னொரு கையில் கமண்டலம்; இவர்தான் வியாசர். கோபம் கொந்தளித்தது அவர் முகத்தில்.

பெரியவரே! உமக்கெல்லாம் வாய்ப்புக் கொடுக்க முடியாது _ தயவுசெய்து போய் வாருங்கள்!

நான் உங்களிடம் வாய்ப்புக் கேட்டு வரவில்லை! நான்தான் வியாசர்! மகாபாரதம் என்னுடைய கதை! இந்திரனும் குபேந்திரனும் திகைத்தனர்.
அப்படியா_

இமயமலைச் சாரலில் தங்கியிருந்த சமயத்தில், நான் கதையைச் சொன்னேன். அதைத்தான் விநாயகர் எழுதினார். இனிமேல் விளம்பரத்தில் மூலக்கதை _ வியாசர் என்று குறிப்பிட வேண்டும். இல்லாவிட்டால்_

பெரியவரே! கோபப்படாதீர்கள்! நாங்கள் விநாயகரைக் கலந்துகொண்டு முடிவெடுக்கிறோம்... அவசரப்பட்டு வழக்குத் தொடர்ந்து விடாதீர்கள் _ போய் வாருங்கள்.
பெருமூச்சு விட்டபடி புறப்பட்டார் வியாசர். வியாசர் சொல்வதும் நியாயம்தானே_ இந்திரன் நினைத்துக் கொண்டார்.

தமிழ் ஓவியா said...

ஏடும் எழுத்தாணியுமாக விநாயகர் வந்து நின்றார். வாருங்கள் விநாயகரே! கொஞ்ச நேரத்திற்கு முன்னால் ஒரு பெரியவர் _ வியாசராம்! இங்கே வந்து சத்தம் போட்டார் என்ன சேதி?

மகாபாரதம் _ அவர் சொல்லிய கதையாம்! எங்களுக்கு ஒரே டென்ஷன் ஆகிவிட்டது. தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். இது உங்கள் கதையா அல்லது வியாசரின் கதையா?... _ பெரிய கதை! வியாசர்தான் கதை சொன்னார். அவர் கதை சொல்லிய பிரகாரம் இப்போது நான் கதை எழுதவில்லை... பல திருத்தங்கள், மாற்றங்கள் செய்துதான் திரைக்கதை எழுதியிருக்கிறேன். அவர் சொல்லிய கதையைப் படமாக்கினால் திவால் ஆகிவிடுவீர்கள். படத்திற்கு பாக்கியராஜ் பாணியில் அந்த பனினெட்டு நாட்கள் என்று பெயர் வைத்திருக்கிறேன். படம் வெளிவந்த பிறகு வியாசர் பார்க்கட்டும் _ அவர் சொன்ன மூலக்கதைக்கும் நான் எழுதிய திரைக்கதைக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்காது... விநாயகர் சிரித்தார்.

மகாபாரதக் கதைக்கு ராஜாஜி வியாசர் விருந்து என்றுதானே பெயர் வைத்தார். ஆனபடியால் _

பெயர் போடும்போது... கீழ்வரிசையில் ரொம்பவும் சின்ன எழுத்துகளில் மூலக்கதை _ வியாசர் என்று குறிப்பிடுங்கள்; அதுபோதும்! நான் ரொம்பவும் சிரமப்பட்டு திரைக்கதை அமைத்திருக்கிறேன். கேளுங்கள்! பதினெட்டு நாட்கள் யுத்தம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் இரவில் வீரர்கள் இன்பக் கனவு காண்பார்கள்... எல்லாம் தேன்நிலவுக் காட்சிகள். இத்துடன் அரண்மனையில் பெண்கள் குளிக்கும் காட்சி _ அஸ்தினாபுரத்தில் அழகுப் போட்டி! தாமரைப் பொய்கையில் நங்கையர் நீச்சல் போட்டி! இத்துடன் துச்சாதனன் திரவுபதியின் துகிலுரியும் காட்சி... தேவர்கள் ஆனந்தப்பரவசம் அடைவார்கள் _ ஜொள்ளு விடுவார்கள்!...

சூப்பர் சுவாமி! யுத்தக் கதையை முத்தக்கதை ஆக்கிவிட்டீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் எழுதுவீர்கள் என்று நாங்கள் நினைக்கவே இல்லை சுவாமி! நன்றி... நன்றி... நடிகர்கள் தேர்வு நடைபெற்றபோது, கருட வாகனத்தில் திருமால் வந்து இறங்கினார். எல்லோரும் சிரம்தாழ்த்தி வணங்கினார்கள். சொகுசு நாற்காலியில் உட்கார்ந்தார் பகவான். இந்திரன் உபசரித்தார்.

தமிழ் ஓவியா said...

பகவானே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நாங்களே வைகுண்டலோகம் வந்திருப்போமே! பாற்கடல் பள்ளியைவிட்டு இந்தப் படக்கம்பெனிக்கு ஏன் வந்தீர்கள் சுவாமி? உங்கள் தரிசனம் _ நாங்கள் தன்யர்கள் ஆனோம்...

பாரதக் கதை நடந்த காலத்தில் நான்தான் கண்ணபிரானாக அவதாரம் செய்தேன். ஸ்ரீகண்ணபிரான் வேஷத்திற்கு என்னையே போட்டுவிடுங்கள்... ரொம்பவும் பொருத்தமாக இருக்கும்!...

கண்ணனாக நீங்கள் நடிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை... ஆனால், _ என்.டி.ராமாராவ் பாணியில்தான் நீங்கள் நடிக்க வேண்டும். உங்கள் இஷ்டப்படி எல்லாம் நடிக்கக்கூடாது! என்.டி.ஆர். நடித்த படங்களின் வீடியோ போட்டுக் பார்த்து அவரைப் போலவே நடித்துவிடுங்கள்!...

நான்தான் கண்ணன். உங்களுக்கும் தெரியும். நான் என்.டி.ஆரைக் காப்பி அடிக்க வேண்டுமா...

ஆமாம் சுவாமி! அப்போதுதான் படம் ஓடும். விநியோகஸ்தர்கள் படத்தை வாங்குவார்கள். நடிப்புக்குச் சம்பளமாக, வைகுண்டம் ஏரியாவுக்கு நீங்கள் விநியோகஸ்தர்!... இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கண்ணனாக நடிக்க திருமால் ஒப்புக்கொண்டார். குபேந்திரா, நான் திருப்பதியில் என் கல்யாணத்திற்காக வாங்கிய கடனைச் சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்...

மகாபாரத காலத்தில் செத்துப்போன தேவர்கள் இப்போது சொர்க்கத்தில் அந்தந்தக் கதாபாத்திரங்களாக நடிக்க வந்துவிட்டார்கள்.

ஒரு வழியாக படப்பிடிப்பு ஆரம்பமானது. நாரதர், இசை அமைப்பாளராகப் பொறுப்பேற்றார். விநாயகரின் எழுத்து, இந்திரனின் இயக்கம்... அந்தப் பதினெட்டு நாட்கள் திரையிடப்படும் நாள் நெருங்கியது....

அந்தப் பதினெட்டு நாட்கள் திரைப்படத்தின் மூலமாக பகவத்கீதையின் ரகசியத்தை ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார் விநாயகர். உண்மையில் கீதா ரகசியம் என்பது என்ன?...

போர்க்களத்தில் இரு தரப்பினரும் அணிவகுத்து நிற்கிறார்கள். தேரோட்டியாகிய கண்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்கிறான். உற்றார் உறவினர்களைப் போரிட்டுச் சாகடித்துவிட்டு சக்கரவர்த்தியாக வேண்டுமா! வேண்டாம்... இப்படி முடிவு செய்த அர்ச்சுனனுக்கு மந்திர உபதேசம் செய்கிறார். ஒரே வார்த்தை... பதவியே பரமசுகம்! ஆமாம்... பதவியே சுவர்க்கம்! பதவியே வாழ்க்கை!... பதவி நாற்காலி பார்ப்பானுக்கு மட்டும்... மற்ற இனத்தவர்கள் அவர்களுக்குப் பல்லக்குச் சுமக்க வேண்டும். பிரம்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணருக்கு மட்டும் _ உத்தியோகம் புருஷலட்சணம்! ஏனையவர்கள் கர்மபலன், பழைய பிறவி, விதி என்று மூளைச்சலவை செய்யப்பட்டு பகுத்தறிவை இழந்துகொண்டு இருக்க வேண்டும்... கட்டிய மனைவியைக் காப்பாற்ற வக்கில்லாத இராமனையும், பிறன் மனையைப் பெண்டாள நினைத்த கிருஷ்ணனையும் காலமெல்லாம் வணங்கிக் கொண்டிருக்க வேண்டும்... வருணாசிரமதர்மம் என்னும் நச்சுமரத்தின் வேர்தான் பகவத் கீதை!...

கண்ணனின் உபதேசம் கேட்டபிறகு, புதிய உற்சாகத்துடன் போரிட்டான் அர்ச்சுனன்.. நாடு சுடுகாடானது; பாண்டவர்களுக்கு வெற்றி! செத்தவர்கள் எல்லாம் வைகுண்டலோகத்தில் வாழ்கிறார்கள்... சுபம்... படம் முடிவடைகிறது.

இதோ, படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது. பிரிவியு தியேட்டரில் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் மற்றும் முக்கிய தேவர்களுக்காக அந்தப் பதினெட்டு நாட்கள் திரையிடப்பட்டது. வாசலில் பெரிய அளவில் விநாயகர் கட்அவுட் _ எல்லோருக்கும் இலவச கொழுக்கட்டை, சுண்டல்!...

மயில் வாகனத்தில் முருகன், காளைமீது சிவன், அன்னப்பட்சியில் பிரம்மா, சிம்ம வாகனத்தில் பார்வதி, கருடன் மீது திருமால் அனைவரும் வந்துவிட்டார்கள். இந்திரனும், குபேந்திரனும் வந்தவர்களை வரவேற்று வணங்கி தியேட்டருக்குள் அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது_ இருவருக்கும் அதிர்ச்சி. காக்கை வாகனத்தில் ஒருவர் வந்து இறங்கினார். கால் ஒன்று நொண்டி _ கருத்த உருவம் _ அவர்தான் சனிபகவான். தேவேந்திரா, போச்சு, எல்லாம் போச்சு. இவரை யார் கூப்பிட்டார்கள்? இவர் பார்வை பட்டால் எல்லாம் சாம்பலாகிவிடுமே... சனிபகவானையும் காகத்தையும் பார்த்து தேவர்கள் கிண்டலாகச் சிரித்தனர். இந்திரன் சமாதானப்படுத்தினார். விவரம் தெரியாத தேவர்கள் _ அவர்கள் சிரிப்பதைப் பெரிசு பண்ணிக் கொள்ளாதீர்கள் சுவாமி!

இந்திரன், குபேந்திரன் இருவரும் சனிபகவானின் திருப்பாதங்களில் விழுந்தனர். ஆளுக்கொரு காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

பூலோகத்தில் நான் யாரையும் விட்டுவைப்பதில்லை. எல்லாரையும் பிடித்துக் கொள்வேன். நீங்கள் ஏன் என்னைப் பிடித்துக் கொள்கிறீர்கள்?...

ப்ளீஸ் சுவாமி ப்ளீஸ்! தயவுசெய்து நீங்கள் படம் பார்க்க வேண்டாம்! திரும்பிச் சென்று விடுங்கள். உங்கள் பார்வை எப்படிப்பட்டது என்று எங்களுக்குத் தெரியும்! படம் நூறுநாள் ஓடியபிறகு வீடியோ கேசட் அனுப்பி வைக்கிறோம். நீங்கள் சாவகாசமாக படம் பார்க்கலாம்...

அரிச்சந்திரன், நளமகாராசா கதைகளை நினைத்துப் பார்த்து இருவரும் சின்னக் குழந்தைகள்போல் கேவிக்கேவி அழ ஆரம்பித்தனர். பகவானே! வரக்கூடிய லாபத்தில் ஒரு பகுதி உங்களுக்குக் காணிக்கை வைக்கிறோம். தயவுசெய்து மனம் இரங்குங்கள்!

சனிபகவான் சொன்னார், எல்லாரையும் வா வா என்று அழைத்துவிட்டு என்னை மட்டும் போ போ என்று துரத்துகிறீர்கள். இது நியாயமா? சரி சரி... நான் போகிறேன்; என் காலை விடுங்கள்...

இந்திரன், குபேந்திரன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் சனிபகவான். காகம் அவர் அருகில் வந்து நின்றது. ஏறி அமர்ந்ததும் வானவெளியில் பறந்தது... கா, கா... ஒரே சத்தம்.

கா... கா... சத்தம் கேட்டு கண்விழித்துக் கொண்டார் தயாரிப்பாளர் இந்திரன். மகாபாரதக் கதையைப் படமாக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்... துணிமணிகளைச் சலவைசெய்து அழுக்கை நீக்கி சம்பாதிக்கிறார்கள் _ மக்களின் மூளைகளைச் சலவைசெய்து அழுக்கைச் சேர்த்து சம்பாதிக்கவும் வேண்டுமா, வேண்டாமே... இந்திரனின் மூளைக்கு மாமேதை லெனின் சொன்ன வாசகம் நினைவிற்கு வந்தது...

மதம்... மக்களுக்கு அபினி. ஏழை மக்களுக்குக் கடிவாளம். இந்தக் கடிவாளத்தை ஏழைகளுக்குப் பூட்டிவிட்டதால் அவர்கள் பணக்காரர்களுக்குச் சாதகமான பாதையில் ஒழுங்காகச் சென்றுகொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

ஆபத்தான விஷயங்கள்



மோடிக்கு குற்ற உணர்வு இல்லை. அப்படிப்பட்டவர்கள் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். மக்களைக் கொலை செய்வது அரசியலில் நியாயமானது என்று அவர்கள் கருதுகிறார்கள். மோடிக்கும், சர்வாதிகாரி ஹிட்லருக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. மோடி பிரதமர் ஆவதற்கு அவசரப்படுகிறார். ஆபத்தான விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளிடம் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் இதுவரை அரசியலும், ராணுவமும் தனித்தனியாக இருந்து வந்துள்ளன. மோடி அலையை இந்தியா முறியடிக்கும். அவர் வெற்றி பெறமாட்டார். ஊடகங்கள்தான் அவரைப் பெரிதுபடுத்தி வருகின்றன.

-_ சாகித்ய அகாடமியின்
ஜன்பித் விருது பெற்ற
கன்னட எழுத்தாளர்
ஆனந்தமூர்த்தி

தமிழ் ஓவியா said...

ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்


- நீட்சே

அய்ன்ஸ்டீன் 300க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 150க்கும் மேற்பட்ட அறிவியல் அல்லாத கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். அவரது அறிவுசார் சாதனைகளும் தனித்தன்மையும், அய்ன்ஸ்டீன் என்றால் மேதை என்ற பொருளில் உலகால் ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் (1879 மார்ச் 14 _ 1955 ஏப்ரல் 18), ஜெர்மனியில் பிறந்த சித்தாந்த இயற்பியல்வாதி. நவீன இயற்பியலின் இரண்டு தூண்கள் என்று சொல்லப்படும் அதிர்வுத் தொழில்நுட்பம் மற்றும் (குவாண்டம் மெக்கானிக்ஸ்) உறவின் தொடர்பு பற்றிய பொதுக் கருத்தும் அவரால் வளர்ச்சி பெற்றது. அவரது பரந்த சக்தி சமன் விதி, E=MC2 என்ற தேற்றம் (உலகத்தின் மிகப் புகழ் பெற்றதாகக் கூறப்படும் சமன் விதி. அவர் 1921இல் இயற்பியலில் நோபெல் பரிசு பெற்றார். அவரது செயல்முறை அல்லாத இயற்பியலுக்கான பணிக்காகவும், சிறப்பாக அவரது புகைப்பட மின் சக்திக்காகவும் (Photo Electric Effert) ஆன கண்டுபிடிப்பிற்காக அவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. இதில் போட்டோ மின்சார சக்தி பிற்பாடு குவாண்டம் கொள்கையை நிலைநிறுத்துவதற்கான அச்சாணியாக விளங்கிற்று.

அவருடைய ஆரம்பகாலப் பணிகளில், அய்ன்ஸ்டீன் நியூட்டனின் பொறியியல் கருத்து, மின்காந்த உலகின் சட்டங்களுடன் ஒத்துப் போக, இனிமேலும் போதுமானதாக இராது என்று எண்ணினார். இது அவரது சிறப்பு ரிலேட்டிவிட்டி கருத்தை வளர்ச்சி பெறச் செய்ய அவரைத் தூண்டியது. எப்படியிருந்தபோதும், ரிலேட்டிவிட்டி கொள்கை புவி ஈர்ப்பு நிலைகள் அளவிற்கு நீட்டிக்கப்படக் கூடும் என்பதை அவர் உணர்ந்தார். 1916இல் அவரது அடுத்த புவி ஈர்ப்புக் கொள்கையை அவர் ரிலேட்டிவிட்டியின் பொதுக்கருத்து என்ற பெயரில் ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டார். அவர் தொடர்ந்து புள்ளிவிவர இயந்திரவியல், மற்றும் குவாண்டம் கொள்கையைப் பற்றிய பிரச்சினைகளை ஆராய்ந்ததில் அவை துகள்களைப் பற்றிய அவரது கருத்துகளுக்கு விளக்கங்கள் கொடுத்ததுடன் அல்லாமல், மூலக்கூறுகளின் இயக்கம்பற்றியும் அறிய வைத்தது. அவர் வெளிச்சத்தின் அனல் தன்மைகளைப் பற்றி ஆராய்ந்து அதன் விளைவாக வெளிச்சத்தின் போட்டோன் (Photon) தியரியின் அடிப்படையைக் கண்டுபிடித்தார். 1917இல் அய்ன்ஸ்டீன் பிரபஞ்சத்தின் பெரிய அமைப்பை உருவகப்படுத்த பொதுக்கருத்தான ரிலேடிவிட்டியைப் பயன்படுத்தினார்.

தமிழ் ஓவியா said...

1933இல் அடால்ஃப் ஹிட்லர் பதவிக்கு வந்தபோது அமெரிக்கா வந்திருந்த அய்ன்ஸ்டீன் திரும்பவும் ஜெர்மனிக்குப் போகவில்லை. ஜெர்மனியில் அவர் பெர்லின் நகரில் உள்ள அறிவியல் கல்விக்கழகத்தில் (Academy of Sciences) பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவர் அமெரிக்காவிலேயே தங்கி இருந்து 1940இல் அதன் குடிமகன் ஆனார்.

அய்ன்ஸ்டீன் அமெரிக்க அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்டிற்கு இரண்டாம் உலகப் போரின்போது ஒரு கடிதம் எழுதினார். அதில் மிகவும் அதீத சக்தி படைத்த புதுவிதமான போர்க் குண்டுகளைக் (Bombs) கண்டுபிடிக்கத் தீவிர முயற்சிகள் நடந்து வருவதாக எச்சரிக்கை செய்து அமெரிக்காவும் அதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார். இதுவே பிறகு மன்ஹாட்டன் திட்டம் என்று பிரபலமாயிற்று. அய்ன்ஸ்டீன் இரண்டாம் உலகப் போரின்போது நேசப் படைகளுக்கு ஆதரவாயிருந்தார். ஆனால் புதிய கண்டுபிடிப்பான அணுவைப் பிளந்து ஆயுதமாக்குதலை அவர் கண்டித்தார். பிறகு பிரிட்டனைச் சேர்ந்த பெர்ட்டாரண்ட் ரஸ்ஸலுடன் இணைந்து ரஸ்ஸல்_அய்ன்ஸ்டீன் அறிக்கையைத் தயாரித்தார். அது அணு ஆயுதங்களினால் ஏற்படும் அழிவுகளை விளக்கிக் காட்டியது. அமெரிக்க நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டனில் உள்ள முன்னேற்றப் படிப்புகளுக்கான ஒரு கல்வி நிலையத்தில் 1955இல் தான் இறக்கும் வரை அய்ன்ஸ்டீன் இணைந்திருந்தார்.

தமிழ் ஓவியா said...

அய்ன்ஸ்டீன் 300 அறிவியல் கட்டுரைகளையும் 150 அறிவியல் அல்லாத கட்டுரைகளையும் வெளியிட்டு இருக்கிறார். அவரது பெரும் நுண்ணறிவுச் சாதனைகளும், சுயசிந்தனைத் தாக்கமுமே அய்ன்ஸ்டீன் என்றால் பேரறிவு கொண்டவர் என்ற பொருளை உணர வைத்தது.

போர் என்பது ஒரு வியாதியாகும். ஆகவே போரைத் தவிர்க்க வேண்டுமென்று அவர் விரும்பினார். ரூஸ்வெல்ட்டிற்கும் கடிதம் எழுதும்போது, அவர் தனது அமைதி வழிக்கு எதிராக எழுதினார். தான் இறந்துபோவதற்கு ஓராண்டுக்கு முன்னால், 1954இல் நான் வாழ்க்கையில் ஒரு பெருந்தவறு செய்துள்ளேன். அது நான் ரூஸ்வெல்டிற்குக் கடிதம் எழுதும்போது அணுகுண்டுகள் தயாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் அதில் சில நியாயங்கள் இருந்தன. அதாவது, ஜெர்மனியர்கள் அவற்றைத் தயாரிக்கக் கூடும் என்பதே.

1940இல், அய்ன்ஸ்டீன் அமெரிக்கக் குடிமகன் ஆனார். பிரின்ஸ்டன் நகரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடியில் நன்கு கால் ஊன்றுவதற்கு முன் அவர் அமெரிக்கக் கலாச்சாரத்தை அய்ரோப்பியக் கலாச்சாரத்துடன் ஒப்பிட்டு, திறமைக்கு மதிப்பு அளிக்கும் அமெரிக்கக் கலாச்சாரத்தைப் பாராட்டினார். இசாக்சன் என்ற அறிஞரின் கூற்றுப்படி, அய்ன்ஸ்டீன், தனி மனிதனின் விருப்பத்தை அவன் சொல்லுவதற்கும் அதைப்பற்றி நினைப்பதற்கும் உள்ள உரிமையை உணர்ந்திருந்தார். சமுதாயத் தடைகள் இல்லாததன் விளைவாக தனி மனிதன், அவன் ஆரம்பக் கல்வியிலிருந்தே பெரிதும் மதிப்புக் கொண்டிருந்த ஒரு வழியை, ஆக்கப்பூர்வமாக்க, உற்சாகப்படுத்தப்படுகிறான்.

அய்ன்ஸ்டீன் 1946இல், அமெரிக்காவின் மோசமான வியாதியாக இன வேற்றுமையைக் குறிப்பிட்டார். பிறகு ஒருமுறை அவர் சொன்னதாவது: துரதிர்ஷ்டவசமாக, இன வெறுப்பு அமெரிக்கப் பாரம்பரியத்தில், இடம் பெற்றுள்ளது. அது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்ததற்கு கைமாற்றி விடப்பட்டிருக்கிறது. கல்வியும் அறிவுமே அதற்கான தீர்வுகளாகும்.

இஸ்ரேல் நாட்டில் முதல் ஜனாதிபதி செய்ம் வீய்ஸ்மேன் 1952இல் இறந்தபோது, இஸ்ரேலின் ஜனாதிபதி பதவி, பெரும்பாலும் நிகழ்ச்சிகளில் பங்குபெறும் பதவி, அவருக்கு அளிக்கப்பட இருந்தது. ஆனால் அய்ன்ஸ்டீன் அதை மறுத்துவிட்டார். அதற்கு அவர் பதில் எழுதும்போது தான் மிகவும் நெகிழ்ச்சி அடைந்ததாகவும், அதேநேரத்தில், அந்தப் பதவியை ஏற்க முடியாததற்கு மிகவும் வருத்தமும் வெட்கமும் அடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

அய்ன்ஸ்டீனின் அரசியல் கருத்துகள் சோசலிசத்திற்கு ஆதரவாகவும் முதலாளித்துவத்தைக் குறை கூறுவதாகவும் இருந்தன. அதை அவர் ஏன் சோசலிசம்? போன்ற கட்டுரைகளில், பெரும் அறிவாளி என்ற பெயரும் புகழும் அடைந்திருந்த நிலையில் 20ஆம் நூற்றாண்டின் இடையில் அவரது அரசியல் கருத்துகள் வெளிப்படையாக வெளிவரலாயின. இயற்பியல் கொள்கைகள், கணிதம் ஆகியவைகளுக்குத் தொடர்பில்லாத விவகாரங்களில் அடிக்கடி அவர் கருத்துகளைச் சொல்லவும் நியாயம் வழங்கவும் அழைக்கப்பட்டார்.

முத்திரை குத்தப்பட்ட ஆத்திகர் என்ற நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அய்ன்ஸ்டீன் தன்னை ஒரு ஆத்திகரும் நாத்திகரும் இல்லாத ஒரு இடைநிலை மனிதனாக, கடவுள் இருப்பைப் பற்றியோ இல்லாமையைப் பற்றியோ அக்கறை காட்டாத ஒருவராக (Agnostic) அழைத்துக் கொண்டார். அவர் தனது வாழ்க்கை முடிவின்போது, அவர் எங்கும் நிறைந்த பல கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டவராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்; ஆனால் ஒரு தனிப்பட்ட கடவுள் என்ற நம்பிக்கையை அவர் குறை கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்கு முந்திய காலகட்டத்தில், அய்ன்ஸ்டீன் அமெரிக்கா முழுவதும் எல்லோராலும் அறியப்பட்டவராக இருந்தார். பல நேரங்களில் அவர் பொதுமக்களால் நடு வீதியில் நிறுத்தப்பட்டு அந்த அறிவியல் நெறி பற்றி விளக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார். இந்த மாதிரி திடீர்க் கேள்விகளைச் சமாளிக்க அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அவரைக் கேட்பவர்களிடம் அவர், மன்னியுங்கள். பேராசிரியர் அய்ன்ஸ்டீன் என்று அடிக்கடி நான் தவறாக கருதப்படுகிறேன் என்று சொல்லுவார்.

பல புதினங்கள், திரைப்படங்கள், நாடகங்கள், இசைப் பணிகள் ஆகியவற்றிற்கு அய்ன்ஸ்டீன் தூண்டுகோலாக இருந்துள்ளார். ஞாபக மறதிப் பேராசிரியர்கள், பைத்தியக்கார விஞ்ஞானிகள் ஆகிய உருவங்களைக் குறிப்பிட அவர் ஒரு விருப்பத்திற்குரிய மாதிரியாக விளங்கினார். கருத்துகளை வெளிப்படுத்தும் அவரது முகமும் தனித்தன்மையான தலைமுடி அமைப்பும் பலராலும், பெரிதுபடுத்தப்பட்டும், நகலாகக் கொள்ளப்பட்டும் இருந்தன.

ஒரு கேலிச் சித்திரக்காரரின் கனவு நினைவானது போல அய்ன்ஸ்டீன் இருந்ததாக, டைம்ஸ் இதழின் ஃபிரெடெரிக் கோல்டன் எழுதியுள்ளார்.

- தமிழில்: ஆர்.ராமதாஸ்

தமிழ் ஓவியா said...

இதற்குப் பின்னும் சரஸ்வதி பூஜையா?


தமிழர்களின் வரலாற்றில் நிச்சயமாக சரஸ்வதி என்ற கடவுள் இல்லை. காரணம், சரஸ்வதி என்ற பெயரே தமிழ் இல்லை. (பின்னாட்களில் பக்திமான்களான சில தமிழ் ஆர்வலர்கள் இந்த சரஸ்வதியை கலைமகள் என்று மொழிபெயர்த்தார்கள்.) பட்டறிவும், பகுத்தறிவும் வழிநடத்திட வாழ்ந்த தமிழினத்தில் தொல்காப்பியமும், திருக்குறளும் தோன்றி மொழியை வளப்படுத்தின. சங்க இலக்கியங்கள் தோன்றின. திருவள்ளுவர் கல்வி குறித்து நிறையவே எழுதியுள்ளார். கல்வியின் தேவையை வலியுறுத்தியுள்ளார். பொருளாதார பலம் உள்ளவர்களே அந்நாட்களில் ஓரளவு கல்வி பெற்றிருக்க முடியும். பெரும்பான்மையரான ஒடுக்கப்பட்ட மக்கள் உழைப்பிலேயே காலம் கடத்தியிருக்க வேண்டும்.

இந்தப் பின்னணியில் தமிழகத்திற்குள் நுழைந்த ஆரியம் கொண்டு வந்த கேடுகளில் முதன்மையானது கடவுள்களும், அதனை ஒட்டிய சடங்குகளும், பண்டிகைகளும்தான். தமிழர்களின் உழைப்பைச் சுரண்டும் கருவிகளாக இவற்றை உருவாக்கினார்கள்; அவற்றிற்குக் கதை புனைந்தார்கள். அவை அத்தனையும் ஆபாசக் குவியல்கள். அதில் ஒன்று கல்விக் கடவுள் சரஸ்வதி என்பது. இதற்காக ஆண்டுதோறும் பூஜை நடத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்றார்கள். தமிழர்களும் தமது முன்னோர்களின் வரலாறு அறியாது, பகுத்தறிவைப் பயன்படுத்தாது அப்படியே நம்பினார்கள். கல்விக் கடவுளை உருவாக்கிய பார்ப்பனர்கள்தான் மனுதர்மத்தையும் உருவாக்கியவர்கள்.
சரஸ்வதிக்கு பூஜை போடு; உனக்கு அருள் பாலிக்கும் என்று ஒருபக்கம் கூறி பூஜைகளால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வயிற்றைக் கழுவியவர்கள், உனக்குக் கல்வி கற்கும் உரிமை இல்லை என்று தமது இன்னொரு பக்கத்தைக் காட்டினார்கள். இதன் விளைவுதான் 19ஆம் நூற்றாண்டு வரை நமக்குக் கல்வி இல்லை. 1910ஆம் ஆண்டுகளில் படித்தவர்களின் விழுக்காடு 1 மட்டுமே.

தமிழ் ஓவியா said...

ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவாய் சில பள்ளிகளும், சில கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. சமூகத்தின் மேல்தட்டு மக்கள் பணம் கட்டிப் படித்தார்கள். ஆனால், பெருவாரியான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்திய விடுதலைக்குப் பின் ராஜாஜியின் ஆட்சியில் இருந்த பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. பின்னர் தந்தை பெரியாரின் ஆதரவோடு அமைத்த பச்சைத் தமிழர் காமராஜர்தான் 12 ஆயிரம் பள்ளிக்கூடங்களைத் திறந்தார். இலவசக் கல்வியை அளித்தார். பள்ளிக்கூடத்தை நோக்கி மக்களை ஈர்க்க மதிய உணவு தந்தார். இதன் விளைவு தமிழகத்தின் படிப்பறிவு நிலை உயர்ந்தது. கடந்த 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழகத்தில் படித்தோரின் எண்ணிக்கை 80.3 விழுக்காடு (ஆண்கள் 86.8, பெண்கள் 73.9). இத்தகைய கல்விப் போராட்டத்தில் எங்காவது ஓர் இடத்திலாவது கல்விக் கடவுள் சரஸ்வதிக்குப் பங்கு உண்டா? சரஸ்வதி கடவுளாக ஏற்கப்பட்ட 19ஆம் நூற்றாண்டுவரை கல்வி நிலை பூஜ்ஜியமாக இருந்ததே! சரஸ்வதியின் கடைக்கண் பார்வை ஏன் அவளை நம்பிய பக்தர்களுக்குக் கிட்டவில்லை.

6 ஆண்டுகளே பள்ளிக்கூடத்திற்குச் சென்ற காமராஜருக்கு இருந்த சமூகப் பொறுப்புணர்ச்சி, கல்விக்கடவுள் சரஸ்வதிக்கு அத்தனை ஆண்டுகளாகியும் இல்லையே ஏன்? இதற்குக் காரணம் என்ன? காமராஜர் உயிருள்ள மனிதர். சரஸ்வதி இல்லாத கடவுள். இந்தக் காரணமின்றி வேறுண்டா?

சரி, அந்த சரஸ்வதியின் கதைதான் என்ன? சரஸ்வதி என்கிற ஒரு பெண், படைப்புக் கடவுள் பிரம்மாவுடைய உடலிலிருந்து உருவாக்கினாராம். அதன்பின் அவள் அழகைக் கண்டு பிரம்மனே அவள் மீது மோகம் கொண்டானாம். அதன் காரணமாக சரஸ்வதியைப் புணர அழைக்கும்போது, பிரம்மா தந்தை என்பதால் அதற்கு உடன்படவில்லை. பின், பிரம்மாவிடமிருந்து தப்பிக்க எண்ணி பெண் மான் உருவம் எடுத்து ஓடினாளாம். உடனே பிரம்மனும் ஆண் மான் உருவமெடுத்து சரஸ்வதியை விரட்டியுள்ளான். சிவன் வேட உருவமெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பின்னர் சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் பிரம்மனை உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மாவுக்கு மனைவியாக மீண்டும் சரஸ்வதி சம்மதித்தாள் என்று சரஸ்வதி உற்பவக் கதை கூறுகிறது.

இது போக இன்னொரு கதையும் உண்டாம்.

ஒரு விதத்தில் சரஸ்வதி பிரம்மாவுக்குப் பேத்தியாம். ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஏற்பட்ட ஆசையினால் வெளிப்பட்ட இந்திரியத்தை(விந்து) ஒரு குடத்தில் நிரப்பிவைக்க, அக்குடத்தில் இருந்து அகத்தியன் என்பவன் வெளியாகி அந்த அகத்தியனே சரஸ்வதியைப் பெற்றான் என்கிறது அந்தக் கதை.

இவ்வளவு ஆபாசம் நிறைந்த கதைக்கு உரிய சரஸ்வதிதான் நமக்குக் கல்விக்கடவுள் என்று கற்பித்த ஆரியத்தை என்னவென்பது? சரஸ்வதி பூஜை செய்துவிட்டு பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டால் தேர்வில் தேர்ச்சி அடையமுடியுமா? கல்வி என்பது முயற்சியிலும், பயிற்சியிலும் கிடைக்கும் செல்வம் அல்லவா. அதில் கடவுளுக்கு என்ன வேலை?

நம் பாட்டன் வள்ளுவன் எங்காவது இந்த சரஸ்வதிகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரா? `கேடில் விழுச்செல்வம் கல்வி, `கற்றனைத்தூறும் அறிவு, `கற்க கசடற -என்பனவல்லவா வள்ளுவரின் வாக்கு. இந்த மாதிரிக் கதைகள் எதுவும் இல்லாத, கல்விக் கடவுள் சரஸ்வதி என்றால் என்னவென்றே தெரியாத இந்தியாவைத் தவிர்த்த மற்ற உலக நாடுகளில் எல்லாம் கல்வி நிலை மேம்பட்டுள்ளதே அது எப்படி? நமக்கு முன்பேயே உலக நாடுகள் பலவும் கல்வி முறையை உருவாக்கி அதனைத் தாமும் கற்று மற்ற நாட்டு மக்களுக்கும் அளித்தார்களே! அவர்களுக்கு இப்படி ஓர் கடவுள் கிடையாதே. கல்விக்குக் கடவுள் இல்லாத நாட்டுக்காரன், கல்விக்குக் கடவுளைக் கற்பித்த நாட்டுக்காரனுக்கு கல்வியைக் கொடையாக அளித்தது அவனது மனிதாபிமானம் அல்லவா? ஆனால், தனது சொந்த மக்களுக்கே கல்வி உரிமை அளிக்காத மதாபிமானிகள் கற்பித்த சரஸ்வதி பூஜையை தமிழ் மக்கள் இன்னும் கொண்டாடலாமா?

இந்துக்களாக ஆக்கப்பட்ட தமிழர்களே... அறிவுக்குப் பொருந்தாத, அனுபவத்திலும் உதவாத அர்த்தமற்ற இந்து மதப் பண்டிகைகளை இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் கொண்டாடப் போகிறீர்கள்?

- அன்பன்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1927-இல் சிதம்பரத்துக்கு காந்தியார் வந்தபோது ஆதிதிராவிடர்களை உள்ளே அழைத்துச் சென்றுவிடாமல் தடுக்க தீட்சிதப் பார்ப்பனர்கள் கோவிலின் நான்கு கதவுகளையும் இழுத்து மூடிவிட்டனர். கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அன்று முழுவதும் உள்ளேயே அடைபட்டுக் கிடந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கடவுளா? கழிப்பறையா?


வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ளாதே என்று சொல்வார்கள். அதற்குச் சரியான உதாரணமாக அமைந்துவிட்டது இந்த வாயாடித்தனம். அதிகப் பிரசங்கியாக அண்மைக்காலத்தில் விளங்குபவர் பா.ஜ.க.வின் நரவேட்டை மோ(ச)டி. 2.10.2013 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மோடி, நான் இந்துத்துவா தலைவராக அறியப்படுகிறேன். என் மீதான பிம்பம் தற்போது ஒரு கருத்தைக் கூற அனுமதிக்காது. இருப்பினும் தைரியமாகச் சொல்கிறேன். கழிப்பறை கட்டுவதற்கே முக்கியத்துவம், கோவில் கட்டுவது இரண்டாம்பட்சம்தான் எனக் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ``பிரதமர் பதவியின் மேலுள்ள கண்மூடித்தனமான ஆசையின் காரணமாக மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். வேண்டாவெறுப்பாகவே அவர் இதைக் கூறியுள்ளார். இந்த ஞானோதயம் 1992ஆம் ஆண்டு அயோத்தி பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்கு முன்னரே தோன்றியிருக்க வேண்டும் என்று நெற்றியடியாய் அடித்துவிட்டார். இதற்குப் பின் எந்த இந்துத்துவ வாயாடியும் இக்கருத்துக்குப் பதில் அளிக்கவில்லை.

மோ(ச)டியின் இந்த உளறலில் இருந்து ஒரு செய்தி தெளிவாகிறது. இந்தியாவில் இனி ராமன் கோவில் பருப்பு வேகாது. மக்களின் அடிப்படைத் தேவைகளில் மதங்களோ, கோவில்களோ இல்லை. கடவுள் பெயரால் ஏமாற்றுவது இனி இயலாத செயல். ஆனால், இவையெல்லாம் இந்துத்துவாக்களின் மறைமுகத் திட்டங்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மத உணர்வைத் தூண்டினால் வாக்குக் கிடைக்காது என்பதால்தான் காங்கிரஸ் அரசின் தவறுகளையும், இந்தியாவிற்குப் பழக்கப் பட்டுப் போன பழைய தேர்தல் ஆயுதமான ஊழல் குற்றச்சாட்டுகளையும் மோ(ச)டிகள் தேர்தல் உத்தியாகப் பயன்படுத்துகின்றன.

தமிழ் ஓவியா said...

கடவுளை மறுக்கும் துகள் கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசு


ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2013ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜேம்ஸ் ரோத்மேன், ரேன்டி ஷேக்மன், தாமஸ் சுடாப் ஆகிய மூவருக்கு வழங்கப்பட உள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு கடவுளை மறுக்கும் துகளான நிஷீபீபீணீனீஸீ ஜீணீக்ஷீவீநீறீமீ என்ற துகளைக் கண்டுபிடித்து, ஹிக்ஸ் போசன் கொள்கை பற்றி ஆராய்ச்சி செய்த ஃபிரான்காய்ஸ் எங்லெர்ட், பீட்டர் ஹிக்ஸ் ஆகிய இருவருக்கு வழங்கப்பட உள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மார்ட்டின் கார்ப்லஸ், மைக்கேல் லெவிட், ஏரியே வார்ஷெல் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழ் ஓவியா said...

கருத்து


குற்றவாளிகளிடமிருந்து சமுதாயம் எதிர்பார்ப்பது அவரிடம் ஏற்பட வேண்டிய மாறுதலையே. எனவே குற்றம் செய்தவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனைக்குப் பதில் மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டியது அவசியம். தண்டனைக்கு உள்ளாகுபவரால் அவரின் குடும்பம், அவரைச் சார்ந்திருப்பவர்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கின்றனர்.

- சுஷில்குமார் ஷிண்டே மத்திய உள்துறை அமைச்சர்

அய்.நா.வின் செயல்பாடுகளை உள் ஆய்வு செய்தபோது இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது அமைப்புரீதியாக அய்.நா. தோல்வி அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. உறுப்பு நாடுகள், தாங்கள் நிர்ணயித்த பணிகளை அய்.நா. செய்வதற்குப் போதிய ஆதரவை அளிக்கவில்லை. அய்.நா.வும் உரிய முறையில் செயல்படவில்லை.

- பான் கீ மூன், அய்.நா. பொதுச்செயலாளர்

நரேந்திர மோடியைத் தூற்றுவதற்கு நீங்கள் ஒரு இஸ்லாமியராகவோ கிறித்தவராகவோ அல்லது இந்துமத எதிர்ப்பாளராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனிதாபிமானமுடைய மனிதராக இருப்பதே போதுமானது.

- நவீன் மூடர் கூடம் திரைப்பட இயக்குநர்

பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வழங்குவதும், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை வெற்றிபெறச் செய்வதும்கூட சில நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் நடப்பதாக கூறப்படுகிறது. இதேநிலை தொடருமானால் டாக்டரைச் சந்திக்கச் செல்லும் நோயாளிகள் அந்த டாக்டர் உண்மையிலேயே மருத்துவம் படித்தவர்தானா என்பதை உறுதி செய்ய அவரது சான்றிதழை வாங்கிச் சரிபார்க்கும் நிலை ஏற்படலாம்.

- நீதிபதி கே.கே.சசிதரன், சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழ் ஓவியா said...

செய்திக் குவியல்


ஜெயேந்திரர் ஆள்வைத்துத் தாக்கினார்

நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் ஆள்வைத்து ராதாகிருஷ்ணனைத் தாக்கியதாக சங்கரராமனின் மகன் ஆனந்த் சர்மா சாட்சியம் அளித்துள்ளார்.

எனது தந்தை சங்கரராமன் காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் திருப்பணி செய்து வந்தார். அதேபோல் ராதாகிருஷ்ணனும் திருப்பணி செய்துவந்தார். இதனால் இருவருக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில், 2001இல் ஜெயேந்திரர் சீனாவுக்குப் போக முடிவு செய்தபோது, எனது தந்தை எதிர்ப்புத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதனால், எனது தந்தைக்கும் ஜெயேந்திரருக்கும் பகை இருந்தது. எனது தந்தை காஞ்சி மடத்தில் நடக்கும் பிரச்சினைகள், தவறுகள் குறித்து அடிக்கடி கண்டித்து வந்தார். இதையடுத்து, 2002இல் நசரத்பேட்டையில் உள்ள வெங்கடேஸ்வரா ஆயுர்வேத கல்லூரியில் எனது தந்தை, ரிசர்வ் பாங்க் வைத்தியநாதன் ஆகியோரை வரச்சொல்லி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, சோமசேகர கனபாடிகள் பெயரில் மடத்தில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டி எனது தந்தை கடிதம் எழுதினார். அதை மடத்தின் அபிமானிகளுக்கு தபால் மூலம் அனுப்பினார்.

நான்தான் அந்த தபால்களை அனுப்புவேன். அந்தக் கடிதங்களை ரிசர்வ் பாங்க் வைத்தியநாதன், ராதாகிருஷ்ணன், பாம்பே சங்கர், டெக்கான் சுப்பிரமணியம், ஆடிட்டர் சங்கர், ரிக்வேதி வைத்தியநாதன் உள்ளிட்ட பலருக்கு அனுப்பியுள்ளார்.

இந்த நேரத்தில்தான் மந்தைவெளியில் உள்ள வீட்டில் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டார். சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் கடிதம் எழுதியது ராதாகிருஷ்ணன்தான் என்று நினைத்து அவரை ஜெயேந்திரர் ஆள்வைத்துத் தாக்கியுள்ளார். இதையறிந்த எனது தந்தை ரிசர்வ் பாங்க் வைத்தியநாதனுக்கு போன் செய்தார். போனில், கடிதத்தை ராதாகிருஷ்ணன் எழுதியதாக தவறாகப் புரிந்துகொண்டு அவரைத் தாக்கியுள்ளனர் என்று பேசினார்.

இதையடுத்து, நானும் எனது அம்மாவும் கடிதம் எழுத வேண்டாம் என்று எனது தந்தையிடம் கூறினோம். அதனால் 6 மாதங்கள் கடிதம் எழுதாமலிருந்தார். தாக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் பட்டினப்பாக்கம் போலீசில், கடிதத்தை நான் எழுதவில்லை. ஆனால், நான் எழுதியதாக நினைத்து என்னை ஆள்வைத்துத் தாக்கியுள்ளனர். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து வந்தால் அதற்கு ஜெயேந்திரர்தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்நிலையில்தான் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜசுவாமி தேவஸ்தான அலுவலகத்தில் எனது தந்தையைக் கொலை செய்தனர். போலீஸ் விசாரித்த போது நடந்த சம்பவங்களைத் தெரிவித்தேன் என்று 5ஆவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி தண்டபாணி முன்பு ஆனந்த் சர்மா கூறியுள்ளார். 22ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் ரிசர்வ் வங்கி வைத்தியநாதன் சாட்சியளிக்க உள்ளார்.

தமிழ் ஓவியா said...

காவல்துறையால் தேடப்படும் ஆசாராம் பாபுவின் மகன்

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் இருவரும் தங்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சூரத் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனை அறிந்த நாராயண் சாய் தலைமறைவாக உள்ளார். வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக குடியுரிமை அதிகாரிகளுக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாராயண் சாய்க்கு நோட்டீசும் அனுப்பியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

தலைவர்களுக்கே பாதுகாப்பில்லை... மக்களுக்கு...?


விருத்தாசலத்தில் கடந்த 28.9.2013 அன்று நடைபெற்ற தி.க.மாணவரணி மண்டல மாநாட்டிற்குச் சென்றிருந்த தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது காவி(லி)க்கும்பல் தாக்குதல் நடத்தியது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவல்துறையினர் கண் முன்னேயே நடந்த இந்தத் தாக்குதலை ஜனநாயகச் செயல்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர்.



கல்லடிகளுக்கும் சொல்லடிகளுக்கும் மத்தியில் தாம் கொண்ட கொள்கையை கடைசி மூச்சுவரை, வன்முறை சிறிதும் கலக் காமல் பரப்பி வந்த தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணில், அவர் கண்ட இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர்கள்மீதும், தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

- தி.மு.க. தலைவர் கலைஞர்

கருத்துக்கு கருத்துதான் மோத வேண்டுமே தவிர கற்களால் மோதுவது நாகரிகமான செயல் அல்ல. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. மனிதர்களிடையே ஜாதி பார்த்து அவர்களுக்கிடையே பகைமையை வளர்த்துக் கொண்டிருந்த ஜாதி வெறியர்கள் தமது ஆதாயத்துக்காக இப்போது கடவுளுக்கும் ஜாதி கற்பித்து வன்முறையைத் தூண்டுகிறார்கள். இதை ஆரம்பத்திலேயே அடக்கி வைக்கவேண்டியது தமிழக அரசின் பொறுப்பு.

- தொல். திருமாவளவன்

கருத்துகளை வன்முறையின் மூலம் எதிர் கொள்ளும் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை அனுமதிக்கக் கூடாது. வன்முறை யாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழகத்திலும், அமைதியைக் கெடுத்து, அட்டூழியத்தை வளர்ப்பதற்கு மதவாத சக்திகள் தலையெடுத்து வருகின்றன என்பதற்கு அடையாளம்தான் இந்த வன்முறை. - பேராசிரியர்

கே.எம்.காதர் மொகிதீன்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்

தமிழக அரசு இத்தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமாக இருந்த வன்முறைக் கும்பலைக் கைது செய்யவும் அவர்களை நீதிமன்றம் மூலம் தண்டனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லை எனில் தமிழகத்தில் மக்கள் மற்றும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என உலக நாடுகள் கருதக் கூடும். - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா இப்போதே மத்திய அரசில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கருதிக் கொண்டு சிலர் ஆடும் ஆட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. கரடுமுரடான பாதை களைக் கடந்து வந்த திராவிடர் கழகத்திற்கு இவையெல்லாம் புதிதல்ல. தாக்குதல்களிலேயே வளர்ந்த இயக்கம்தான் திராவிட இயக்கம்.

தமிழ் ஓவியா said...

- திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர்
பேரா. சுப.வீரபாண்டியன்

``ஆணித்தரமான அவர்களின் வாதங்களுக்குப் பதில் சொல்ல இயலாதவர்கள் இப்படியான வன்முறைகளை தந்தை பெரியாரின் காலந்தொட்டே மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் மாநாடு நடத்துவது, கருத்துகளைப் பிரச்சாரம் செய்வது என்பதெல்லாம் நமது அடிப்படை உரிமைகள். மதவெறிக் கும்பல்கள் இவ்வாறு கருத்துப் பிரச்சாரங்களுக்கு எதிராக வன்முறை விளைவிப்பதும் அதற்குக் காவல் துறையினர் துணை போவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கன என பிரபஞ்சன், (மூத்த எழுத்தாளர், சென்னை), அறிஞர் எஸ்.வி. இராசதுரை, (மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி), பேரா. அ.மார்க்ஸ், (மனித உரிமை களுக்கான மக்கள் கழகம், சென்னை), கோ.சுகுமாரன், (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி), பேரா. பிரபா.கல்விமணி, (பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம், திண்டிவனம்) உள்ளிட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். மேலும், அகில இந்திய யாதவ மகாசபையாக இயங்கிவரும் இந்த அமைப்பின் துணைத் தலைவர் எல்.நந்தகோபால், யாதவ மகா சபையைச் சார்ந்த எம்.கோபாலகிருஷ்ணன், சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோ யாதவ், திருச்சி மாவட்ட சி.பி.அய். செயலாளர் இந்திரஜித் உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர்.

விருத்தாசலம் கண்ட அதிசயம்

- எழுத்தாளர் இமையம்

கடலூர் மண்டல மாணவரணி மாநாடு செப்டம்பர் 28-ஆம் தேதி விருத்தாசலத்தில் நடைபெற்றது. எந்த அரசியல் கட்சிக் கூட்டத்திலும் காணக்கிடைக்காத அரிய காட்சி- இருநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மாநாட்டில் கலந்துகொண்டதுதான். அதே அளவுக்கு மாணவர்களும் கலந்து கொண்டனர். மற்றொரு அரிய நிகழ்வு திராவிடர் கழகத்தினர் மட்டுமல்ல, பள்ளி மாணவ, மாணவிகளும் இடையிடையே எழுந்து மாநாட்டுப் பந்தலைவிட்டு வெளியே செல்லாதது.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக அச்சு ஊடகங்களில் மூடநம்பிக்கை, மின்னணு ஊடகங்களில் மூடநம்பிக்கை, அரசு செயல்பாடுகளில் மூடநம்பிக்கை, பாடநூல்களில் மூடநம்பிக்கை என்ற தலைப்புகளில் பேச்சாளர்கள் உரை நிகழ்த்தினர். இந்த நான்கு தலைப்புகளுமே நடைமுறை கால சமூகத்தில் ஊன்றி நிற்கின்றன. மக்கள் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சங்களாகிவிட்ட செயல்களையும், அச்செயல்களின் வழியாக எவ்வாறு சமூகவிரோத செயல்- மூடநம்பிக்கையை விதைப்பது என்பது- தீவிரவாத செயலைவிட கொடூரமானது என்பதைப் பேச்சாளர்கள் நிறுவிக்காட்டினர்.

காலையில் எழுந்ததும் நாளேடுகளைப் படிப்பது நம் அறிவுக்கு உகந்த செயல், அறிவை வளர்த்துக் கொள்கிற செயல் என்று நினைப்பது சரியா? நம்முடைய நாளேடுகள் அறிவுக்கு, உண்மைக்கு, அறிவியல்பூர்வமான செய்திகளையா வெளியிடுகின்றன. கிரக ராசி பலன்களைப் படித்து, அல்லது ராமர் விஜயம் படித்து ஒருவன் அறிவாளியாக முடியுமா? நம்முடைய நாளேடுகள் உருவாக்குகிற செய்திகள் என்பது கிட்டத்திட்ட கட்டுக்கதைகள்தான். கட்டுக்கதைகளைப் படிக்கிறவன் கட்டுக்கதைகளை நம்பாமல் வேறு எதை நம்புவான்? நாளேடுகளின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று, அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவது. தமிழ் நாளேடுகள் அனைத்துமே தனது அடிப்படைக் கடமையைத் தவறியவைதான். அச்சு ஊடகங்கள் நாள்தோறும் மக்களை மடைமையில் மூழ்கச்செய்கிற காரியங்களை எவ்வாறு வெற்றிகரமாகச் செயல்படுத்துகின்றன என்பது குறித்தும், அச்சு ஊடகங்கள் எவ்வாறு நச்சு விதைகளைச் சமூகத்தில் விதைக்கின்றன என்பது குறித்தும் பேசப்பட்டது.
அச்சு ஊடகங்கள்தான் மோசம், காட்சி ஊடகங்கள் பரவாயில்லை என்று சொல்ல முடியுமா? அச்சு ஊடகத்தைவிட படுமோசம் காட்சி ஊடகம். மின்னணு ஊடகங்கள் வேகமாக வேலை செய்கின்றன. அச்சு ஊடகத்தைவிட கூடுதலான கெடுதலைச் செய்கிறது. அச்சு ஊடகத்தால் படித்தவர்கள்தான் கெட்டுப்போவார்கள். காட்சி ஊடகத்தில் படிக்காதவர்களும் கெட்டுப்போகிறார்கள். பழமைவாதியை மேலும் பழமைவாதியாக்குகிற செயலை மின்னணு இயந்திரங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்துகின்றன. அச்சு ஊடகங்களின் கருவிகளையும், மின்னணு ஊடகங்களின் கருவிகளையும் கண்டுபிடித்தது யார்? மாணவர்கள் பதில் கூறினர். மனிதர்கள், விஞ்ஞானிகள், கடவுள் அல்ல என்று. நோயைக் குணப்படுத்துவது யார்? மருத்துவர்கள்- மாத்திரைகள். குழந்தைகள் பதில் சொல்லுகின்றன. இது பெரியவர்களுக்குத் தெரியவில்லை. மின்னணு ஊடகங்கள் எவ்வாறெல்லாம் மனித மூளையை மழுங்கச் செய்கின்றன, அறிவுக்கு ஒவ்வாத, பிற்போக்குத்தனமான காரியங்களைச் செய்யவும், பின்பற்றவும் செய்கின்றன என்பது குறித்து மாநாட்டில் பேசப்பட்டது.

தமிழ் ஓவியா said...


அச்சு ஊடகங்களும், மின்னணு ஊடகங்களும் தனியார். ஆனால், அரசு என்பது தனியார் அல்லவே. அரசு செயல்பாடுகள் ஒரு மத நிறுவனத்தின் செயல்பாடுகளாக ஏன் மாறுகின்றன என்பதுதான் ஆச்சரியம். இந்தியா ஜனநாயக நாடு. அதை நிர்வாகம் செய்கிற அரசு என்பதும் ஜனநாயகத்தன்மை பொருந்தியதாக இருப்பது அவசியம். கடமை. ஆனால் அரசு அலுவலகங்களில் பூஜைகள் நடக்கின்றன. ஆயுதபூஜை கொண்டாடாத அரசு அலுவலகம் இந்தியாவில் உள்ளதா? அய்யப்ப பக்தர்களாக இருக்கிற காவல்துறையினர் பூட்ஸ் அணியாமல் கருப்புத் துண்டு அணிந்து பணி செய்கின்றனர். இவ்வாறு பணி செய்வதற்கு எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. இது சட்டவிரோதச் செயல் அல்லவா? சட்ட விரோதச் செயல்களை அனுமதிக்கிற அரசும் சட்ட விரோதமானது, மக்களுக்கு விரோதமானதுதானே. அரசு அலுவலகங்களில் மதச்சடங்குகளைச் செய்யவும், பின்பற்றவும் அனுமதிப்பது என்பது ஜனநாயக விரோதச் செயல்களையும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் ஊக்குவிக்கிறது. இப்படியான அரசு நிர்வாகத்திற்கு சமூக நல்லிணக்கம் குறித்துப் பேசுவதற்குத் தார்மீக உரிமை இருக்கிறதா? இந்தியாவின் இறையாண்மைக்கு ஏற்ற செயல் எது? பள்ளிக் கூடங்களைக் கட்டுகிற அதே அரசுதான் கோவில் கும்பாபிசேகங்களையும் நடத்துகின்றது.

தமிழ் ஓவியா said...

அறிவியல் கண்டுபிடிப்புகளை, மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கான கருவியாக மாற்றிய பெருமை இந்தியர்களுக்கே உண்டான தனிப்பெருமை. இழிவையே பெருமையாக எடுத்துக்கொள்கிற நம்முடைய மனோபாவம் விநோதமானது என்பதோடு நம்முடைய அரசுகள் மூடநம்பிக்கைகளை வளர்ப்பதில் மத நிறுவனங்களோடு எவ்வாறெல்லாம் போட்டியிடுகிறது என்பது குறித்து மாநாட்டில் பேசப்பட்டது.

நம்முடைய பாடப் புத்தகங்கள் அறிவை வளர்ப்பதாக _ ஆளுமையை வளர்ப்பதாக இருக்கிறதா? பாடப் புத்தகங்கள் திட்டமிட்டே அறிவுக்கு ஒவ்வாத, அறிவியல் பார்வைக்கு எதிரான, பழமைவாதத்தைப் போற்றுகிறவிதமாக உருவாக்கப்படுகிற ஒரு சமூகத்தில் குழந்தைகளின் மனதில் அறிவியல் மனப்பான்மை எவ்வாறு வளரும்? நம்முடைய பாடப் புத்தகங்கள் ஒரு அறிவார்ந்த சமூகம் உருவாக்கியதுதானா? பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் எவ்வாறெல்லாம் மூடநம்பிக்கை நிறைந்த, பகுத்தறிவுக்கு ஒவ்வாத பாடங்கள் திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளன என்று மாநாட்டில் விரிவாகப் பேசப்பட்டது.

மாநாட்டின் நிறைவுரையாகப் பேசிய ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பேச்சு மிக முக்கியமானது. அச்சு ஊடகங்களை ஒருவர் விரும்பினால் தவிர்த்துவிட முடியும். அதே மாதிரி மின்னணு ஊடகங்களையும் ஒருவர் தவிர்த்துவிட முடியும். அரசின் மூடநம்பிக்கை வளர்ப்பு செயல்பாடுகளிலிருந்து ஒருவர் விலகியிருக்க முடியும். ஆனால், பாடப் புத்தகங்களிலிருக்கும் மூடநம்பிக்கைக் கருத்துகளை ஒரு மாணவன் படிக்காமலோ பரிட்சையில் எழுதாமலோ இருக்க முடியுமா? நம்முடைய பாடத்திட்டங்களும் பள்ளிக்கூடங்களும் அறிவியலுக்கு _ உண்மைக்கு எதிரான செயல்களை அல்லவா கற்றுத் தருகின்றன. நல்ல குடிமகனை உருவாக்க வேண்டிய அரசு, நல்ல பாடத்திட்டத்தினை வழங்க வேண்டிய அரசு என்ன செய்கிறது? என்று கேட்ட ஆசிரியர், பாடப் புத்தகங்களில் இருக்கக்கூடிய மூடநம்பிக்கை சார்ந்த இடங்களையெல்லாம் பட்டியலிட்டுக் காட்டினார், அந்த விஷயங்களைக் கேட்ட மாணவ மாணவிகள் ஆச்சர்யப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...

அதோடு நிற்காமல் தங்களுடைய கைகளில் கட்டியிருந்த சாமிக்கயிறுகளையெல்லாம் வரிசையில் வந்து அறுத்து எறிந்தனர். சாமிக்கயிறுகளெல்லாம் கொளுத்தப்பட்டது. இதுதான் மாநாட்டின் உச்சம். மாணவ மாணவிகளை யாருமே கேட்கவில்லை, யாருமே கட்டாயப்படுத்தவில்லை. அவர்களாகவே வந்து கையிலிருந்த அழுக்குக் குப்பைகளை _ மனதிலிருந்த அழுக்குக் குப்பைகளையும்-நமது அரசின் செயல்பாடுகளின் மீதும், பாடத்திட்டத்தின் மீதும்-, பள்ளிச் சுவர்களின் மீதும், சமூகத்தின் நம்பிக்கைகள், மடமைகள் மீதும் விட்டெறிந்தனர். நாம் நம்முடைய சமூகத்தில் விஷவிதைகளை மட்டுமே ஊன்றி வளர்ப்பவர்களாக இருக்கிறோம். குழந்தைகளை, குழந்தைகளாக இருக்கவிடாமல் செய்வது எது என்ற கேள்வி மாநாட்டில் எழுப்பப்பட்டது.

மாநாட்டின் இறுதி நிகழ்வாக மாலையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடந்தது. பேரணியில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெண் விடுதலை, சமதர்மம், ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு குறித்த முழக்கங்களும் எழுப்பப்பட்டன. பெண்கள் தீச்சட்டி ஏந்தி வந்தனர். ஆண்கள் அலகு குத்தி கார் இழுத்து வந்தனர். சிறுவர்கள்கூட கையில், நாக்கில் கற்பூரம் ஏற்றி சாமி இல்லை என்று நிரூபித்தனர். இது விருத்தாசலம் நகர மக்கள் கண்ட வியப்பு- அதிசயம். விரதம் இருக்காதவர்கள், சாமி பிடிக்காதவர்கள், பூசாரிகள் அல்லாத சாதாரண மனிதன் கூட தீச்சட்டி ஏந்த முடியும், அலகு குத்த முடியும், கையிலும் நாக்கிலும் கற்பூரத்தை எரிய வைக்க முடியும் என்ற உண்மை விருத்தாசலம் நகர மக்களின் மனதில் விதையாக முளைத்தது.

விருத்தாசலம் நகர மக்கள் நாள்தோறும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகளை பல கட்சிகள் நடத்தியதைப் பார்த்திருக்கிறார்கள். எல்லாக் கட்சிகளின் செயல்பாடுகளிலிருந்தும் வேறுபட்டதாக திராவிடர் கழக மாணவரணி மாநாடும், பேரணியும் இருந்தது என்பதை விருத்தாசலம் மக்கள் என்றும் நினைவில் கொள்ளும்விதமாக அமைந்துவிட்டது.

போலி ஜாதியப் பெருமை

- கவிஞர் கரிகாலன்

முதுகுன்றத்தில் நடந்த திராவிடர் கழக மாணவரணி மண்டல மாநாடு இந்தப் பகுதியில் மட்டுமன்றி, தமிழகம் தழுவிய அளவில் கவனம் பெற்றதாக அமைந்திருக்கிறது. இப்பகுதியில் மாநாட்டு வேலைகளை தோழர்கள் உற்சாகத்தோடு கவனித்து வந்தபோதே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற்போக்கு ஜாதி அமைப்புகள் இதை எரிச்சலோடு உற்றுநோக்கி வந்தன. இதன் எதிர்வினை மிகுந்த அநாகரிக வடிவில் மாநாடு நடந்த மாலைப் பொழுதில் வெளிப்பட்டது. மாநாட்டில் கலந்துகொள்ள திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வந்துகொண்டிருந்த போது மேற்குறிப்பிட்ட பிற்போக்கு சக்திகள் அவரது வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு கடுமையான முறையில் தாக்கினர்.

காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளும் அலட்சிய முறையில் செய்யப்பட்டிருந்தது. எதிர்க்கருத்து உடையவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட கருப்புக்கொடி காட்டுவது போன்ற வழிமுறைகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பாசிஸ்ட்டுகள் மற்றும் அடிப்படைவாத சக்திகளோ எதிர்க்கருத்து கொண்டிருப்பவர்களையே அழித்துவிடும் நோக்கத்துடன் நடந்துகொள்ளும் அநாகரிகத்தை முதுகுன்றம் மக்களும் நாடெங்கும் உள்ள முற்போக்கு சக்திகளும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தின் போலி பெருமிதங்களைக் கூறி சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டிவிடுவது இந்துத்துவாவின் முக்கியமான செயல்திட்டங்களில் ஒன்று. தன்னைத் தாழ்த்தப்பட்டவனாக, சூத்திரனாக, வேசிமகனாக வைத்திருப்பது இந்து மதம்தான் என்று உணராமல் போலி ஜாதியப் பெருமைகளைப் பேசும் ஜாதித் தலைவர்கள் பின்னால் செல்லும் கூட்டத்தைச் சேர்ந்த தலைவர்கள் எவ்வாறு வழிநடத்துவார்கள் என்பதை யாதவ மகா சபை எனும் பெயரில் அமைந்த ஒரு அமைப்பு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. (இந்த அமைப்பு முகவரியற்றவர்களால் உருவாக்கப்பட்டது என யாதவர்கள் சங்கம் கூறியிருப்பதுடன், தி.க.தலைவர் அவர்களைத் தாக்கியவர்களையும் கண்டித்திருக்கிறது) யாதவர்களை ஒத்த பிற்படுத்தப்பட்ட மக்களின் சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டும் என பாடுபட்ட இயக்கத்தின் தலைவரைத் தாக்கியிருப்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பதை அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் உணர வேண்டும்.

- தொகுப்பு : இளந்திரையன்

தமிழ் ஓவியா said...

நல்ல நேரம் - கெட்ட நேரம்?

ஜோதிடம், ஜாதகத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாத சரவணப் பெருமாள், ஏழு ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் பணத்தையும் நிறையத் தன்னம்பிக்கையையும் மூலதனமாக வைத்து, ஒரு தொழில் தொடங்கினான். எல்லாத் தொழில்களிலும் இருக்கிற சிக்கல்கள், தடங்கல்களைத் தாண்டி அய்ந்து வருடங்களில் நல்ல நிலைக்கு வந்தான். மூன்று வேளை உணவே உத்தரவாதம் இல்லாத காலத்தில் இருந்து, இன்றைக்கு 45 பேருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறான்.

தொழிலில் பிரச்சினை, மனசு சரியில்லை, குடும்பப் பிரச்சினை என்று எதுவாக இருந்தாலும், அவனிடம் 10 நிமிடங்கள் பேசினால் போதும். பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, அதைத் தீர்ப்பதற்கான தெளிவும் தன்னம்பிக்கையும் கிடைக்கும். எல்லாம் நல்லா நடக்கும்டா... நடக்கிறது எல்லாம் நல்லதுக்குனே நினைச்சுக்க... என்று ஆத்மார்த்தமாகப் பேசி உற்சாகப்படுத்துவான்.

சரவணப்பெருமாளின் சித்தப்பாவுக்கு ஜோதிடத்தில் நிறைய நம்பிக்கை உண்டு. அவரின் வற்புறுத்தலால் ஒரு ஜோதிடரைப் பார்க்கப் போனான் அவன். அரை மணி நேரம் அவன் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்த பிறகு, தம்பி... நீங்க பட்ட கஷ்டமெல்லாம் இன்னும் ஆறு மாசத்துல முடியப்போகுது என்று சொல்லியிருக்கிறார் அந்த ஜோசியர். சரவணன், எனக்கு ஒரு கஷ்டமும் இல்லையே... நான் நல்லாத்தானே இருக்கேன் எனச் சொல்ல, தம்பி உங்களுக்கு ஏழு வருஷமா ஏழரை நாட்டுச் சனி நடக்குது. அது இன்னும் ஆறு மாசத்துல முடிஞ்சிடும். அப்புறம் நீங்க அமோகமா இருப்பீங்க என்று சொல்லியிருக்கிறார். ஜோதிடரின் கணக்குப்படி, சரவணன் தொழில் தொடங்கிய காலம் ஏழரைச் சனி ஆரம்பித்த காலம். சரவணன் கணக்குப்படி அது அவன் வாழ்க்கையில் நல்ல நேரம் தொடங்கிய காலம்.

எப்படி தம்பி... நீங்க நல்லா இருந்திருக்க முடியும்? கடன் வாங்கி கஷ்டப்பட்டு இருப்பீங்களே... அவனமானப்பட்டு இருப்பீங்களே! என ஏழரை நாட்டுச் சனியை நிரூபிக்க ஜோதிடர் போராராராராடினார். ஆமாம், கடன் வாங்கினேன்; ஆனா, கஷ்டப்படலை. நிறைய நெருக்கடிகளைச் சந்திச்சேன்; அவமானப்படலை! என்று சரவணன் சிரித்துக் கொண்டே சொல்ல, சிலருக்கு ஏழரைச் சனி நிறையக் கொடுக்கும் என்று ஏறுக்குமாறான தீர்ப்பு சொன்னார்.

தமிழ் ஓவியா said...

கெட்ட நேரம் என்று ஜாதகத்தால் வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில், சாதனைகளைச் செய்து வெற்றிகளைக் குவித்த பலரை நான் அறிவேன். அதேபோல், உங்களுக்கு நல்ல நேரம் தொடங்கிருச்சு... அடிச்சு தூள் கிளப்புங்க என்று உத்தரவாத முத்திரை குத்தப்பட்ட காலத்தில், படுபாதாளத்துக்குச் சரிந்தவர்களையும் கண்டிருக்கிறேன். இந்த விஷயத்தைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானமாக முடிவெடுத்துவிட்ட பிறகு, கெட்ட நேரம் என்று எதுவும் இல்லை. ஆனால், நிறைய பேர் கடிகாரத்தில் நேரம் பார்ப்பதைவிட ஜாதகக் கட்டத்தில் நேரம் நல்லா இருக்கிறதா என்று பார்ப்பதிலேயே குறியாக இருக்கிறோம்.

அதே சமயம், நல்ல நேரத்தில் தொடங்கி இருக்கிறோம்... எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற மனநிறைவு ஒரு நேர்மறை நம்பிக்கையைத் தருகிறது என்பதும் உண்மைதான். நல்ல நேரம் பார்த்துத் தொடங்கப்படும் தொழில், நல்ல நேரம் பார்த்து நடத்தப்படும் திருமணம், நல்ல நேரத்தில் அரங்கேறும் வைபவங்கள் உளவியல் ரீதியாக நன்னம்பிக்கையைக் கொடுக்கின்றன. அவ்வளவு ஏன்...? நிலவை ஆராய்ச்சி செய்ய ஏவப்படும் செயற்கைக் கோள்களை, விண்ணில் செலுத்த நல்ல நேரம் பார்த்துத்தான் கவுன்ட் டவுன் வைக்கிறார்கள். இதெல்லாம் பன்னெடுங்காலமாக நம் மனதில் பதிந்துவிட்ட சம்பிரதாய நம்பிக்கைகள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அப்படி எல்லா இடங்களிலும் நம் நம்பிக்கை சார்ந்த விஷயங்களைச் செயல்படுத்தவும் முடியாது.

தமிழ் ஓவியா said...

எங்கள் கீழ்வீட்டு மாமா, தன் வீட்டு போர்ட்டிகோவில் காரை நிறுத்தும்போது முன் பக்கம் கொஞ்சம் இடம்விட்டு நிறுத்துவார். காலையில் வண்டியை எடுக்கும்போது, முதல் கியர் போட்டு வண்டியை ஓர்அடி முன்னால் நகர்த்தி பிறகு ரிவர்ஸில் வண்டியை வீட்டை விட்டு வெளியே எடுப்பார். காலங்காத்தால முதல்ல வண்டியை எடுக்கும்போது பின்னாடி நகர்த்தக் கூடாது. வாழ்க்கையில எப்பவும் முன்னோக்கிப் பயணிக்கணும் என்று அதற்கு விளக்கமும் கொடுப்பார். ஆனால், மாதம் ஒரு முறையேனும் அலுவல் நிமித்தமாக விமானப் பயணம் மேற்கொள்ளும் அவர், தன் சித்தாந்தத்தை அங்கு செயல்படுத்த முடியாது. பயணிகள் ஏறி அமர்ந்ததும் ரன்வேயில் இழுத்து நிறுத்துவதற்காக, விமானத்தை ரிவர்ஸில்தான் முதலில் நகர்த்துகிறார்கள்!

எனக்கு, தேசிய செய்தி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்து, ஒரு திங்கட்கிழமை பணியில் சேர வேண்டும். நானும் ஆர்வமாக புதுத் துணி எல்லாம் அணிந்து கிளம்பிய நேரத்தில், வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர், உன் ஜாதகத்துக்கு இன்னைக்கு நாள் சரியில்லை. அதனால நாளைக்கு வேலையில சேர்ந்துக்கோ என்றார். அவர் விடாமல் வற்புறுத்தியதால், அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியை தொலைபேசியில் அழைத்து, இன்னைக்கு நாள் சரியில்லையாம். நான் நாளைக்குச் சேர்ந்துக்கவா? என்று கேட்டேன். அப்படியா..! ஒருவேளை இன்று உங்கள் வேலைக்கான இன்டர்வியூவாக இருந்தால் இப்படிக் கேட்பீர்களா? என்று கேட்டார் அவர். அடுத்த அரைமணி நேரத்தில் நான் அலுவலகத்தில் பொறுப்பு எடுத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை, என்னப்பா இன்னைக்கு நாள் நல்லா இருக்கா? என்று கிண்டலடித்துக்கொண்டே இருந்தார் அந்த அதிகாரி. நான் நேரம் காலம் பார்க்கிற ஆள் இல்லை என்று அந்த கார்ப்பரேட் அலுவலகத்துக்குப் புரியவைக்க, முழுதாக ஒரு வருடம் தேவைப்பட்டது!

நேரம் நல்லா இருந்தாத்தான், எல்லாம் ஒழுங்காக நடக்கும் என்று தீர்மானமாக நம்பும் மனம், நாளடைவில் மிகவும் பலவீனமாகி விடும். முனைப்பு இல்லாமல் மேற்கொள்ளும் காரியத்தின் விளைவுகளுக்கு கெட்ட நேரத்தை பொறுப்பாக்கிவிடுகிறோம். எதையும் சாதிக்கத் திறன் கொண்டவர்கள்கூட, சம்பந்தமே இல்லாமல் தினசரி காலண்டரில் தன் ராசிக்கு என்ன போட்டிருக்கிறது என்று தேட ஆரம்பிக்கிறார்கள். பிறந்த நேரம் சரியில்லை, தொடங்கிய நேரம் சரியில்லை, கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்ட நேரம் கெட்ட நேரம் என்று நேரத்தின் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டாலே, நமக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்று உணர்ந்து கொள்ளலாம்.

கொஞ்சம் பணம் காசு வைத்திருப்பவர்களுக்குத்தான், நல்ல நேரம்... கெட்ட நேரம் எல்லாம். அது இல்லாதவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிற நேரமெல்லாம் நல்ல நேரம்தான். நேரம், சகுனங்களை எல்லாம் நம் வசதிக்கேற்றபடி மாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அது உண்டாக்கும் மனத்தடையில் இருந்து மீண்டுவரத்தான் நம்மவர்கள் தயாராக இல்லை!

பிரபல ஜோசியர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஊர் உலகமே அவர் சொல்லும் கணிப்புகளைப் பின்பற்றிக் கொண்டிருந்தது. ஆனால், அவர் பெர்சனலாக என்னிடம் சொன்னது என்ன தெரியுமா? இந்த உரையாடலைக் கவனியுங்கள்...

நல்ல நேரம், கெட்ட நேரம்... நிஜமாவே இருக்கா சார்?

நல்ல நேரம்ங்கிறது என்ன தெரியுமா தம்பி...? நமக்கு நல்ல நேரம் நடந்துட்டு இருக்குங்கிற விஷயம் நமக்குத் தெரிஞ்சிருக்கிறதுதான். அது தெரியாதவன் நல்ல நேரத்தை எப்படிப் பயன்படுத்திக்க முடியும் சொல்லுங்க...?

சரி... நமக்கு நல்ல நேரம் நடக்குதுன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது--

இந்த ஜோசியம், ஜாதகத்தை எல்லாம் தூக்கிப் போடுங்க. நமக்கு நேரம் நல்லா இருக்குனு நீங்க நம்பினா, அது நல்ல நேரம். நேரம் சரியில்லைனு நீங்களா நினைச்சுக்கிட்டா, அது கெட்ட நேரம். ஆனா, நேரம் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதை நல்ல நேரம், கெட்ட நேரம்னு முடிவு செய்யறது நாமதான்!
பொட்டில் அறைந்தது அந்தப் பதில்!

நன்றி: ஆனந்தவிகடன், 9.10.2013

தமிழ் ஓவியா said...

நான் ஏன் பெரியாரிஸ்ட் ஆனேன்?


என் தந்தை கடவுள் மறுப்பாளர்... 20 வருடம் ஆன்மீக குடும்பத்தில் வளர்ந்த தாயின்மீது தன்கொள்கையைத் திணிக்காமல்.. தாயின் விருப்பப்படி கோவில்களுக்கு அழைத்துச் சென்று வருவார்.. திருப்பூருக்கு நாங்கள் குடிவந்த புதிதில்.. அம்மா பெருமாள் கோவிலுக்குச் செல்ல விருப்பப்பட.. நான் அம்மா புறப்பட, அப்பா அழைத்துச் சென்றார்..

கடவுள் வழிபாடு முடிந்து, துளசி இலை கொடுத்தபின்.. வெள்ளியாலான கிரீடம் போல் உள்ள ஒன்றை எல்லார் தலையிலும் வைத்து வைத்து எடுத்தார் அர்ச்சகர்.. நான் இதைக் கவனியாது துளசியைத் தின்று கொண்டிருந்தபோது.. என் தலையிலும் அதை வைக்க வந்தார். நான் ஏதோவென்று திடுக்கிட்டு அதைக் கையால் தடுக்க, அந்தப் பாத்திரம் கீழே விழ.. அர்ச்சகர் என்னைச் சூத்திரவாள் என்று சொல்ல.. என் தந்தை அர்ச்சகரை அடிக்கப்போக.. சின்ன பரபரப்பு ஏற்பட்டு அமைதியானது.. வீட்டுக்கு வந்த என் தந்தை "இதனால்தான் நான் கடவுளை மறுக்கிறேன் என்றார்... சூத்திரன் என்றால் வெப்பாட்டிமகன், திருடன், ஓடிப்போனவன்" என்று பல மோசமான அர்த்தங்கள் இருப்பதைச் சொன்னார்.

"அம்மா அன்று முதல் பெருமாள் கோவிலுக்குப் போவதில்லை" "பின்னாளில் என் மனம் பெரியாரின் வசம் சென்றது"

- இளஞாயிறு மலர்கள்
(இணையத்தில் உலவியபோது முகநூலில் படித்தது)

தமிழ் ஓவியா said...

நிர்வாகம், சட்டத்துறைக்குப் பொருந்தும் இடஒதுக்கீடு நீதித்துறைக்கும் பொருந்தும்!

23.9.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் (உச்ச)நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது. சுப்ரீம்கோர்ட்டுக்கு நீதிபதிகளை நியமிக்கும் போது, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை நியமிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி, போடப்பட்ட பொதுநல மனுவின்மீது தீர்ப்பு வழங்கிய ஜஸ்டீஸ் டி.எஸ். தாக்கூர் தலைமையிலான (பெஞ்ச்) அமர்வு, அக்கோரிக்கையை ஏற்று தாங்கள் அப்படி ஒரு ஆணையைப் பிறப்பிக்க இயலாது என்று தெரிவித்துள்ளது.

இது சட்டப்படி சரியா தவறா என்ற வாதம் ஒருபுறம் இருந்தாலும், அத்தீர்ப்பில் நீதிபதிகள் ஒரு முக்கியக் கருத்தைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றனர்.



சமூக நீதி _ -அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கிய குறிக்கோள்படி அது முக்கியமானது.
மனுவின் நோக்கத்தை நாங்கள் அறிந்து கொள்ளுகிறோம். சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து இனத்தவர் மற்றும் ஜாதிகளைச் சார்ந்தவர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கலாம். (அதற்காக, தனி ஒதுக்கீடு அளிக்க முடியாது).

இது தொடர்பாக நாங்கள் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கருதினால், அரசிடமோ அல்லது தலைமை நீதிபதியிடமோ மனு செய்யலாம் என்று குறிப்பிட்டிருப்பதாக ஒரு செய்தி நாளேடுகளில் வந்துள்ளது.

இதுபற்றி, சமூகநீதிக்காகப் போராடும் இயக்கத்தின் சார்பில் நமது கருத்தை உச்ச நீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் தெளிவுபடுத்தி, வற்புறுத்திட வேண்டியது நமது முக்கியக் கடமையாகும்.

இத்தீர்ப்பில் ஒரு மய்யக் கருத்து அனைவருக்கும் (ஜனநாயகத்தில்) வாய்ப்புத் தரப்படுதல் நியாயமானதுதான் என்பதை உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மறுக்கவில்லை. இதைப்பற்றி, எடுத்த எடுப்பிலேயே ஒரு கருத்து தெளிவாக்கப்படல் வேண்டும்.

சமூகநீதி அடிப்படையில், இத்தகைய ஒதுக்கீடுகள் - உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிகளில் இடஒதுக்கீடு _- பிரதிநிதித்துவம் என்பது சலுகையோ (Concession) பிச்சையோ (Charity) அல்ல.

மாறாக, அது உரிமை, அடிப்படை உரிமை அரசியல் சட்டப்படியே (Fundamental Right) என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் உள்ள 16ஆவது பிரிவு 4ஆவது உட்பிரிவின்படி, “Equality of Opportunity in Matters of Public Employment (1) There shall be equality of opportunity for all citizens in matters, relating to employment or appointment to any office under the state.

இந்தப் பிரிவுதான் முக்கியமானது. இதில் உள்ள 4ஆவது உட்பிரிவுகள், சமூகநீதியை நடைமுறைப்படுத்தச் செய்ய துவக்கத்திலிருந்தே அதாவது முதலாவது சட்டத் திருத்தத்திற்கு முன்பிருந்தே இருந்து வரும் பிரிவு 16(4) என்பதாகும்.
இதன் தத்துவமும், நோக்கமும்.

1. எல்லோர்க்கும் வாய்ப்பு. அரசு வேலைகளிலும், நியமனங்களிலும் (Employment or Appoinments) என்ற அரசியல் சட்டப் பிரிவுப்படி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் (By Appointment) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் (By Appointment) என்பது குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அடுத்தவரி “to any office under the State”என்ற வரிகள் மிகவும் தெளிவாக்கியுள்ளன!

தமிழ் ஓவியா said...

இதனை நாளடைவில், வியாக்யானம் செய்த நீதிபதிகளும் மற்றும் சில ஆதிக்க மனப்பான்மையுடைய சட்ட வல்லுநர்களும் இந்த இடஒதுக்கீடு மாவட்ட நீதிபதிகள் வரைதான் பொருந்தக் கூடியதாகவும், அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்குப் பொருந்தாது என்றும் திசைதிருப்பி விட்டனர்! திட்டமிட்டே இப்படி ஒரு வியாக்யானம் கூறப்பட்டது. அரசியல் சட்ட விதிகள் மேலே கூறப்பட்டுள்ளவைபடி, இது எந்த நியமனத்திற்கும் “Any Office under the State” பொருந்தும் என்பதே நியாயமான பொருளாகும்.

தகுதி, திறமை பார்க்க இப்படி ஒரு பாதுகாப்பு - அதாவது உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பொருந்தாது என்று வியாக்யானம் ஒரு தரப்பாரால் கூறப்படுகிறது.

இது விசித்திரமான வாதம் ஆகும்; எப்படியெனில்,

(அ) அப்படியானால் மாவட்ட நீதிபதிகளுக்கு தகுதி, திறமை பார்க்கப்பட வேண்டாமா?

(ஆ) வந்தவர்கள் எல்லாம் அவை இல்லாதவர்களா? தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காயா!

தமிழ் ஓவியா said...

(இ) மாவட்ட நீதிபதிகளிலிருந்தும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை செல்லுகின்றனரே, அது எப்படி சரியாக முடியும்,- தகுதி, திறமைக்கு ஏன் இரட்டை அளவுகோல்?

தந்தை பெரியார் கேட்டபடி, தலைக்கு ஒரு சீயக்காய்; தாடிக்கு வேறு ஒரு சீயக்காயா?

உச்ச நீதிமன்றத்தில் இன்றுள்ள 30 நீதிபதிகளில் - ஒருவர்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்தோ, மலைவாழ் மக்களிலிருந்தோ (S.C., S.T.) இல்லையே!
66 ஆண்டு சுதந்திரத்தின் பலன் இதுதானா?

அரசியல் சட்டம் கூறிய சம வாய்ப்பு ஏன் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது?

உயர் நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையுள்ள தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதிகள் தமிழ்நாட்டில் - சென்னை உயர் நீதிமன்றத்தில்தான்.

பார்ப்பன நீதிபதிகள் எண்ணிக்கை அவர்கள் விகிதாச்சாரத்திற்கு மேல் பல மடங்கு அதிகம்தான் இன்னமும் உள்ளது.

இந்த லட்சணத்தில் மேலும் புதிதாக (சென்னை உயர் நீதிமன்றத்திற்கு) 2, 3 பார்ப்பனர்கள் - பெண்கள் உட்பட வர இருக்கிறார்கள் என்ற சமூக அநீதிச் செய்திக ளும் வந்துள்ளன!

கொலிஜியம் என்ற பெயரில் அரசியல் சட்டத்தில் இல்லாத ஒன்று மிகவும் தந்திரமாக நுழைக்கப்பட்டுவிட்டது என்ற கருத்தும், கொலிஜியம் என்பதில் மாநில உயர் நீதிமன்ற மூத்த மூன்று நீதிபதிகளில், மூவருமோ அல்லது இருவரோ வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களாக பெரும்பாலான இடங்களில் இருப்பதால், அவர்களது பரிந்துரை எவ்வளவு புரிந்துரைகளாக இருக்கும் என்பதும் கேள்விக் குறிகளாகும்!

ஆங்காங்குள்ள மக்களின் மண்ணின் மனோபாவம் (The Soil Psychology) என்பதையேகூட புரிந்து கொள்ளாது, ஏதோ சில அளவுகோல்களை வைத்து பரிந்துரைப்பது எப்படி நியாயமாக இருக்கும்?

எனவே இந்த நியமனங்களில் வெளிப்படைத் தன்மை (Transperancy-யும் சமூகநீதியும் கட்டாயம் தேவை; IAS, IPS--க்குப் பொருந்தும் அதே விதிகளும் நடைமுறைகளும் பெரும்பாலும் நியமனங்களைப் பொறுத்தவரை பொருந்த வேண்டும்.

மத்திய அரசு, சமூக நீதியை உறுதிப்படுத்திட வேண்டும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஜஸ்டீஸ் திரு. பி. சதாசிவம் அவர்கள் நீதித்துறையிலும் இடஒதுக்கீடு தேவை _ ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள கருத்தும் இதில் கவனிக்கப்பட்டாக வேண்டும்.
அரசின் மற்ற பிரிவுகளான நிர்வாகம், சட்டத் துறைக்குப் பொருந்தும் சமூகநீதி _- நீதித்துறைக்கும் பொருந்தியாக வேண்டும் அல்லவா!

இதுபற்றி ஆங்காங்கு கருத்தரங்குகளை நடத்திட சமூக ஆர்வலர்களும், சமூகநீதிப் போராளிகளும் முன்வர வேண்டும். இது அவசரம் -அவசியமாகும்.

- கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

நீதி


அவருக்கு 30 வயதுக்குள் இருக்கலாம்.
புது மணமகள் போல
கை நிறைய கண்ணாடி வளையல்கள்...
அவசரக் கோலத்தில் வைக்கப்பட்டதாய் தெரியும்
தலை நிறைய பூங்கொத்துக்கள்...
வீங்கிய முகம்....
பதினாறாம் நாளுக்கன்னு
எழவு வீழ்ந்து...
ஓலமாய் கத்துகிறார்
அம்மாவைப் பெற்றவள். இவன் செத்தான்
தாலியறுத்தான்...
பதிலுக்கு எம்பொண்ணு செத்திருந்தா
புதுத் தாலி கட்டியிருப்பான்
கிடுகிடுக்கிறாள் பாட்டி

சார்மினார் பந்தலில் கிழவன்
என்னா பேச்சு பேசுறா பாத்தியா
ஆம்பளைக்கூட்டம்
நெளிகிறது...

- மணிவர்மா

தமிழ் ஓவியா said...

போராடும் பகுத்தறிவாளர்கள்

அண்மையில், புனே நகரில் நரேந்திர தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்டது வீண்போகவில்லை. நாடு முழுதும் பரவியுள்ள பகுத்தறிவுவாதிகளின் களப்படை உறுதியாக நின்று, எல்லாவிதமான தொந்தரவுகளையும், தாக்குதல்களையும், வழக்குகளையும், ஏன் கொலை மிரட்டல்களையும்கூட எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. பஞ்சாபிய கிராமங்களிலிருந்து ஜார்கண்டின் காடுகள் வரை அந்த ஆண்களும் பெண்களும், அவர்களுடைய தர்க்க, விஞ்ஞான அறிவுகளைப் பயன்படுத்தி சாமியார்களும், பில்லி சூன்ய மந்திரவாதிகளுடையவும் ஆன ஏமாற்றுத் தந்திரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், எண்ணப்பட முடியாத கடவுளர்களைக் கொண்ட இந்த நாட்டில், தீவிர மத நம்பிக்கையில் அழுந்திக் கிடக்கும் பயந்த சுபாவம் உடைய அவர்களுக்கு நாத்திகம் அறியாத ஒன்று.

நான் இல்லாவிட்டால், அவர்கள் வேறு யாரையாவது கொல்வார்கள். பிறர் பின்னே ஒளிந்து வாழ்வதற்கு நாம் ஒன்றும் தலைவர்கள் அல்ல. எனக்குப் பல மொழிகள் தெரியும். நாடு முழுவதும் தொடர்ந்து பயணம் செய்து பகுத்தறிவைப் பரப்புவேன் என்று இந்தியப் பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டமைப்பின் தலைவரான நரேந்திர நாயக் சொல்லுகிறார். அவரது கூட்டமைப்பின் கீழ் 85 இந்திய பகுத்தறிவு, நாத்திக சங்கங்களும், மனிதாபிமான இயக்கங்களும் உள்ளன.

தமிழ் ஓவியா said...

1980இல் நாயக் பெங்களூர் கிளையைத் தொடங்கிவைத்து பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதே நேரத்தில்தான், அவரால் அன்பு நண்பர் என்றும், உடன் பணிபுரிபவர் என்றும் அழைக்கப்பட்ட தபோல்கரும் தனது பணியினைத் தொடங்கியுள்ளார். நாயக் கொலை மிரட்டல்களையும் தாக்குதல்களையும் பெற்றதுடன் அல்லாமல், மணிப்பால் பல்கலைக்கழகத்தில் அவர் பார்த்து வந்த உயிர் வேதியியல் (ஙிவீஷீ-சிலீமீனீவீக்ஷீஹ்) பேராசிரியர் வேலைக்கும் வேட்டு வைக்க முயற்சிகள் நடந்தன. 2006இல் அவர் அந்த வேலையை விட்டுவிட்டு முழுநேர பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1980களின் ஆரம்பத்தில் நாயக் தனது இந்த சங்கிலிப் பணிக்கான அடிப்படையை அமைத்துக் கொண்டிருந்தபோது, இலங்கையின் பெரும் பகுத்தறிவாளர் ஆப்ரகாம் கோவூரின் புத்தகங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை எனக் கவலைப்பட்டவர் மேக்ராஜ் மிட்டர்.

கோவூர், ஏமாற்று வேலைகளுக்கு எதிராகவும் தென் ஆசியப் பகுதிகளில் இயற்கைக்கு மாறான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் இயக்கம் கண்டவர்.

ஒவ்வொரு பெரிய கருத்துக்கும் பின்னே, ஒரு சிறு நிகழ்ச்சி நிலவுகிறது. நான் கோவூரின் புத்தகங்களை விரும்புகிறேன். என் நண்பர் ஒருவருக்கு கோவூரின் புத்தகத்தைக் கொடுத்தேன். அதைப் படித்த பிறகு, அவர் மனைவி யாரோ ஒரு பாபாவின் மயக்கத்தில் இருப்பதாகவும், அந்த பாபா அவர் மனைவியிடம் 2000 ரூபாய் அளவிற்கு வருடம் ஒன்றிற்குச் செலவழித்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், அந்தப் புத்தகத்தை பஞ்சாபியில் மொழிபெயர்க்க விரும்பினார். நான் செய்து கொடுத்தேன். மக்கள் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தனர். இம்மாதிரி ஏமாற்று வித்தைகளைப் பற்றி பல நிகழ்வுகள் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன. நாங்கள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்தோம் என்று மிட்டர் சொல்லுகிறார்.

ஆக, இப்படித்தான் பஞ்சாபின் பகுத்தறிவுக் கழகம் தர்க்ஷில் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அந்த சங்கம் ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்டிருக்கிறது. மிட்டர், கோவூரின் புத்தகங்கள் தவிர, (பின்னாளில் அவை பஞ்சாப் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன) 29 புத்தகங்களை எழுதியும் மொழிபெயர்த்துமிருக்கிறார். அதன்மூலம், மூடநம்பிக்கைகள், குருட்டு நம்பிக்கைகள், மத/ஆன்மீக ஏமாற்று வித்தைகள் ஆகியவைகளை ஒழிப்பதற்கு அவர் புத்தகங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

எப்பொழுதும் தொடர்ந்த அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஆளாகியிருக்கிறோம் எங்களிடம் ஏராளமான தொண்டர்களும், சீடர்களும் இருப்பதால், இதுவரை மோசமாக ஏதும் நடைபெறவில்லை.
சென்ற ஆண்டு பாடிண்டாவில் உள்ள பகதா கிராமத்தில் புனிதர் என்று சொல்லப்பட்ட ஒருவருக்கு எதிராக நான் ஒரு கட்டுரை எழுதினேன். பேய், பிசாசு பிடித்திருந்த பெண்களைத் தான் சரியாக்குவதாகக் கூறியிருந்தான். நான் அவன் வேடத்தைக் கலைத்தவுடன், எனக்குப் பலமுறை அச்சுறுத்தல்கள் அனுப்பியும், தனிப்பட்ட முறையிலும் பல வழக்குகள் தொடரப்பட்டுப் பின் திரும்பப் பெறப்பட்டன. விநாயகன் பால் குடித்த சமயத்தில் நான் என் வீட்டை விட்டு நகரமுடியாதபடி கேரோ செய்யப்பட்டேன். ஆனால் இப்போது பயமுறுத்தப்பட முடியாத அளவிற்கு நான் வயதானவனாகி விட்டேன் என்று சொல்லுகிறார் 64 வயதான மிட்டர்.

இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் சனல் எடமருகு இந்தியாவில் காலடி எடுத்து வைக்க முடியாத நிலையிலிருக்கிறார். இந்தியப் பகுத்தறிவாளர்கள் சங்கம் ஒரு லட்சத்துக்கு மேல் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

சென்ற ஆண்டு மும்பையிலிருந்து வேளாங்கண்ணி தேவாலயத்தில், நீர் சொட்டும் இயேசு பற்றிய பரபரப்புச் செய்தி ஒரு பெரிய தெய்வச் செயலாக கருதப்பட்டது. உண்மையான காரணம் சில உடைந்த குழாய்கள்தான் என்று எடமருகு கண்டுபிடித்தார். மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக அவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் பாய்ந்தன. அவர் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பின்லாந்து சென்றிருந்தபோது, அவரைக் கைது செய்யவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. ஆகவே இந்தியா திரும்புவதில்லை என்று அவர் முடிவெடுத்து விட்டார். இடையில், எடமருகு மன்னிப்புக் கேட்டால், அவர் மீதுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக தேவாலயம் அறிவித்தது அதுமுதற்கொண்டு நான் அய்ரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய பகுதிகளில் உள்ள ஊர்களில் என்னுடைய கொள்கைக்காக பிரச்சாரம் செய்துவரும் நிலையில், நான் திரும்பி வர உத்தேசித்துள்ளேன் என பகுத்தறிவாளப் பெற்றோருக்குப் பிறந்த அவர் கூறியுள்ளார்.
எடமருகு பள்ளி சேர்க்கப்படும் வேளையில் விண்ணப்பப் படிவத்தில் ஜாதி என்ற பிரிவில், இல்லை என்று எழுதிப் பரபரப்பை ஏற்படுத்தியவர். எடமருகின் தந்தை ஜோசப் எடமருகு, தனக்கு வந்த மிரட்டல்கள் மக்களிடமிருந்து வந்தவை அல்ல; பாதிக்கப்பட்டவர்களும் எங்களைத் தாக்கவில்லை. 1995இல் நாடு தழுவிய பிரச்சாரத்தில், நான் ஒரு மில்லியன் மக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்துள்ளேன். ஒரு தாக்குதல்கூட வந்ததில்லை. ஆனால் நான் பால்கி பாபாவைப் பற்றி அவருடைய தெய்வச் செயல்களுக்கு இடையே தோலுரித்துக் காட்டும்போது, நான் தாக்கப்பட்டேன். சுரண்டுபவர்கள்தான் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என்று எடமருகு சொல்கிறார்.

தங்களைத் தாங்களே கடவுள் மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டு திரியும் சிலருக்கு மூடப்பழக்க வழக்கங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானத்தைக் கொட்டிக் கொடுக்கும் வியாபாரமாக இருக்கிறது. காரணத்தைக் கற்றுக் கொடுப்பது மிக ஆபத்தானது.

ஆனால் நாம் அவற்றைத் தொடரத்தானே வேண்டும்? என்று அவர் கேட்கிறார்.

பீகார் மாநிலத்தில் கத்திகர் என்ற ஊரில் ஒரு புனித மனிதர் குழந்தைகள் மீது ஏறி நின்று, சில மந்திரங்களை முணுமுணுத்துவிட்டு அதன்மூலம் அக்குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக டூப் விட்டார். இது கத்திகர் மருத்துவக் கல்லூரியின் வெகு அருகாமையில் நடந்தது. எடமருகு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரையும் அப்போதைய உடல்நலத்துறை அமைச்சரையும் தலையிட்டு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டதற்கு அது மத விவகாரம் என்று சொல்லி விலகிக் கொண்டனர்.

அதில் மதச்சாயம் பூசப்பட்டுவிட்டது. எல்லோருமே அதைத் தொட அச்சப்படுகிறார்கள். கடவுள் பற்றி உறுதியான எண்ணம் இல்லாதவர்கள்கூட மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகின்றனர். அறிவியல் பற்றிய பொதுமக்களுக்கான புரிதல் முற்றிலும் இல்லை. நம் குழந்தைகள் அறிவியலிலும் கணிதத்திலும் உயர் மதிப்பெண்கள் பெற நாம் விரும்புகிறோம். ஆனால் அறிவியல் பூர்வமான வாழ்க்கை வாழ நாம் அவர்களைக் கேட்பதில்லை.

- நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, 25.08.2013

தமிழ் ஓவியா said...

நூல்

நூல்: மெக்காலே
ஆசிரியர்: இரா.சுப்பிரமணி
வெளியீடு: சாளரம்,
854 (ப.எண்.387)
அண்ணா சாலை,
சைதாப்பேட்டை,
சென்னை _ 15.
பக்கங்கள்: 120
விலை: ரூ.15/-

சமூக விழிப்புணர்-வுக்கும் மறுமலர்ச்சிக்கும் வித்திட்ட மெக்காலே கல்வித் திட்டம் தோன்றிய விதம், இந்தியாவுக்கு மெக்காலே அனுப்பப்பட்ட சூழ்நிலை, அவரது வாழ்க்கைக் குறிப்பு, சாதனைகள் வரலாற்றுப்பூர்வமாக தெளிவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆங்கில வழிக் கல்வி உருவாகக் காரணம், காரணமாக இருந்தவர்கள், வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள், இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கல்லூரி, கற்பிக்கப்பட்ட பாடங்கள், பயின்ற மாணவர்கள், கிறித்தவ மதகுருமார்கள், மத அமைப்புகளின் பங்கு ஆகியனவும் விளக்கப்பட்டுள்ளன.



அய்ரோப்பாவின் மொழிகள் ரஷ்யாவை நாகரிகமடையச் செய்த விதம் மற்றும் சாக்சான் மற்றும் நார்மனின் மூலத்தைவிட சமஸ்கிருதம் தாழ்வானது என்ற கருத்துகள் விளக்கமாக இடம் பெற்றுள்ளன. மெக்காலே கல்வித் திட்டத்திற்கு ஏற்பட்ட ஆதரவு எதிர்ப்பு அலைகள், இந்திய தண்டனைச் சட்டத்தை உருவாக்கிய மெக்காலே கருத்து மற்றும் ஆய்வாளர்களின் கருத்துகளைத் தாங்கி நிற்கிறது.

தமிழ் ஓவியா said...

இணையதளம் www.rtoaifmvd.com

இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள இணையதளம்.

வாகன ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது, புதுப்பிப்பது, NOC, சான்றிதழைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச் (duplicate) சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் (download) செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வரி தொடர்பான விவரம், தொடர்புடைய ஆர்டிஓ அலுவலகங்கள், மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களின் அட்டவணை, பயனாளர் (Member) மின் அஞ்சல் (e-mail) பகுதி என பல பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.

தமிழ் ஓவியா said...


விளங்க முடியும்

எண்ணெய் இருந்தால் தான் விளக்கு எரியும் என்பது போல சிந்தனை இருந்தால் தான் உண்மை விளங்க முடியும். - (விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாடு

இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்து உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

திராவிடர் கழகம் தமிழ்நாட்டில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. (15.10.2013)

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் இந்த வகையில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

தோழர் தியாகு இதற்காக பட்டினிப் போராட்டம் இருந்தார். சட்டக் கல்லூரி மாணவர்களும் அதனை ஆதரித்துப் பட்டினிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

5 முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்த - பழுத்த மூத்த அரசியல் தலைவரான கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பிரதமருக்குக் கடிதம் எழுதினார், தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர். பாலு எம்.பி., அவர்கள் மூலம்; பிரதமரும், கலைஞர் அவர்களுக்குப் பதில் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதித்து; கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் அதில் தெரிவித்திருப்பது திருப்தியை அளிக்கிறது.

இரண்டு வாரங்களாக இதற்காக பட்டினிப் போராட்டம் இருந்த தோழர் தியாகு அவர்களும், பிரதமரின் நம்பிக்கை மிகுந்த உறுதியை ஏற்று பட்டினிப் போராட்டத்தை நிறுத்திக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் அவர்களும் இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அவர்களும் இதே கருத்தைக் கொண்டிருக்கிறார்.

இவ்வளவுக்குப் பிறகும் பிரதமர் தயங் குவதோ, காலங் கடத்துவதோ வீணாக ஊடகங் களுக்கும் தேவையற்ற விமர்சனங்களுக்கும் தான் இடம் கொடுக்கும். கனடா நாடுகூட காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்ட மாகவே அறிவித்துவிட்டது. இதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டிய இந்திய அரசு, முதல் குரல் கொடுத்திருக்க வேண்டாமா?

லட்சத்திற்கும் மேற்பட்ட குடி மக்களாகிய ஈழத் தமிழர்கள் - யுத்த நியதிகள் எல்லாம் புழக் கடையில் தூக்கி எறிந்துவிட்டு கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டது தமிழர்களாக இல்லாமல் வேறு இன மக்களாக இருந்தாலும்கூட, இந்தியா மனித உரிமையின் அடிப்படையில் இலங்கையைக் கண்டிக்கக் கடமைப்பட் டுள்ளது.
எந்த வகையில் பார்த்தாலும் இந்திய அரசு இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான நியாயமோ, கூறுகளோ கிடையவே கிடையாது.
இவ்வளவுக்கும் இலங்கை அரசு இந்தியா வின் நெருக்கடியான நேரங்களில் எல்லாம் எதிரி நாடுகளுக்குத்தான் கைலாகு கொடுத்து வந்துள்ளது.

பாகிஸ்தான் யுத்தமாக இருந்தாலும் சரி, சீன யுத்தமாக இருந்தாலும் சரி, நம் எதிரி நாடு களின் தோள்களில் கை போட்டுக் கொண்டு திரிந்தது தான் இலங்கை.

இந்த நிலையில் இந்திய அரசு, தம் அதிருப்தியைத் தெரிவித்து கொள்ள, ராஜ தந்திர முறையில் பார்த்தாலும் இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதற்கான ஒரு நல்வாய்ப்புக் கிடைத்துள்ளது.

நழுவ விட வேண்டாம், நழுவ விட்டால் உள் நாட்டிலும் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் - எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...


குல்லா

குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு என்ற பாடல்தான் நரேந்திர மோடியை நினைத்தால் நினைவுக்கு வருகிறது.

தன்னைப்பற்றிப் புதிது புதிதாக அவிழ்த்து விட்டு, நாட்டு மக்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்தும், ஜிகினா வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

காந்தியார் பிறந்த நாளில் (அக்டோபர் 2இல்) காந்தி குல்லா 25 சதவீதத் தள்ளுபடியில் விற்பனை என்று விளம் பரம் செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஷாகாவின் போது அணி யும் குல்லாவைத்தான் காந்திக் குல்லாய் என்ற சொல்லி தள்ளுபடி விலை யில் விற்பனை செய்துள் ளனர். மோடி குல்லா என்று பெயர் சூட்டியுள் ளனர் - எத்தகு பித்த லாட்டம் இது!

காந்தியாருக்கும், இந்த மோடிக் கும்பலுக் கும் என்ன ஒட்டு உறவு? காந்தியைக் கொன்ற கோட்சேயின் உறவுக்கா ரர்கள் என்கிற முறையில் ஓர் உறவு உண்டு என்று வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.

மோடி குர்தா என்று ஓர் சட்டையை விளம்பரப் படுத்தி வருகின்றனர். எப்படி உடை உடுத்துவது, எந்த வண்ணத்தில் உடுத் துவது என்பது வரை திட்டமிட்டு இளைஞர்கள் மத்தியில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்துவதே உள் நோக்கம். பிபி சவுகான், ஜிதுபாய் சவுகான் சகோ தரர்கள் இவருக்கு உடை தைத்துக் கொடுப்பவர் களாம்.

மோடி அணியும் உடையை விளம்பரப் படுத்த ஆரம்பித்து விட்டனர். மோடி குர்தா என்று அதற்குப் பெயர். பருத்தி குர்தா ரூ.1895 (பேட்டா விலை மாதிரி) லினன் குர்தா ரூ.1900/-
முஸ்லீம்கள் அணி வது போன்ற தோற்றம் - அந்த வகையிலும் அம் மக்களைக் கவரலாம் அல்லவா! (மோடி கலந்து கொண்ட ஒரு கூட்டத் தில் போரா பிரிவைச் சேர்ந்த ஒருவர் அன்பால் கொடுத்த குல்லாவை அணிய மறுத்தவரும் இவர் தான் என்பதை மறக்க வேண்டாம்!) நமோ தேநீர் கடைகள் (நரேந்திர மோடிக்குத்தான் நமோ என்று குறுக்கம்) நமோ இனிப்புக் கடைகளாம்.

இப்படி எல்லாம் விளம்பரம் செய்வதற் கென்றே ஒரு பன்னாட்டு விளம்பர நிறுவனத்தோடு (Apcoworld in India) ஒப் பந்தம செய்துள்ளனர். அதற்காகப் பல்லாயிரம் கோடி ரூபாய் வாரி இறைக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் தேடுதல் வரிசையில், ஒபாமாவைத் தாண்டி விட்டார் என்று அவிழ்த்து விடுவதெல் லாம் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளைக் குத்தான்; மோடிப் புளுகு எத்தனை நாளைக்கு? - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


நாமக்கல்லில் பூசாரிகளால் அடிபடும் பெண்கள்!

பேய் ஆட்டம் என்பது பொய்! அது ஒரு மன நோயே!

மருத்துவர் விளக்கம்

நாமக்கல், அக்.17- கோவில் விழாவில் பெண் களை சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் கொடுமை நடந்தது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இது ஒரு மன நோய்தான் - பேய் என்பதெல்லாம் பொய் என்கிறார் மருத்துவர்.

அச்சப்பன் கோவில்: நாமக்கல் மாவட்ட எல் லையில் பவித்திரம் அருகே உள்ள வெள் ளாளப்பட்டி கிராமத் தில் அச்சப்பன் கோவில் உள்ளது. இந்த கோவி லில் குரும்பர் இன மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் விஜய தசமியை முன்னிட்டு சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் கொடுமை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் நேற்று அச்சப் பன் கோவில் திருவிழா பக்தர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர் சாமியை அலங்கரித்து, காட்டு கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனராம். ஊர்வலத் தின் முன்பு பக்தர்கள், குரும்பர்களின் பாரம் பரிய ஆட்டமான தப் பாட்டம், கோலாட்டம் ஆடியபடி சென்றனராம்.

பேய் ஓட்டும் நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து சாட்டை யால் அடித்து பேய் ஓட்டும் நிகழ்ச்சி தொடங்கியது. காட்டு கோவில் முன்பு வரிசை யாக பெண்களும், ஆண் களும் தரையில் மண்டி யிட்டு, கைகளை உயர்த் தியபடி இருந்தனர். தலைமைப் பூசாரி மண்டியிட்டு, நின்ற பெண்களின் கைகளில் சாட்டையால் ஓங்கி அடித்து, பேய் ஓட்டும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பெரும்பா லான பெண்கள் ஒரே அடியில் கைகளை உத றியபடி எழுந்து விட் டனராம். சில பெண்கள் 4, 5 அடி வரை வாங்கிக் கொண்டு அப்படியே நின்று கொண்டிருந்தன ராம். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த சுமார் ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டு சாட்டையடி வாங்கினர்.

பக்தர்கள் குவிந்த னர்: சாட்டையடி வாங் கிய ஒரு பெண் கூறும் போது, பேயின் பிடியில் சிக்கியவர்கள், பில்லி சூனியத்தால் பாதிக்கப் பட்டவர்கள் மட்டு மின்றி, திருமண தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும், கொடிய நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கவும் பெண்கள் சாட்டை அடி பெறுவது வழக்கம் என்றாராம். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பேய் ஓட் டும் நிகழ்ச்சி தொடங் கும் முன்பு பூசாரியின் தலையில் அடித்து, தேங் காய் ஒன்று உடைக்கப் பட்டது.

மனநோய் பாதிப்பு என்கிறார் மருத்துவர்

இதை நம்ப முடியா மல், நாமக்கல்லைச் சேர்ந்த மனநல மருத் துவர் சங்கரிடம் கேட் டோம், பேய் என்ற ஒன்று கிடையாது. பொதுவாக பேய், கடவுள் என்பது ஒருவித மனநோய், யாரையும் பாதிக்காத வகையில் இருப்பது மட்டுமே நம்பிக்கை. ஆனால், சாமியாடுவது, தீ மிதித் தல் போன்றவையெல் லாம் மனநோயின் அடையாளம். பணம் இருந்தாலும் வாழ்க்கை யில் போதுமான எது வும் கிடைக்காதது போன்ற பூர்த்தியடை யாத விஷயத்தால் சாமி யாடுதல் போன்றவை நிகழ்த்தப்படுகின்றன.

இது ஒரு பிரெய்ன் மெக்கானிசமாகும். சாட்டையால் அடித்து துன்புறுத்தும் விழா விற்கு காவல் துறையினர் அனுமதி மறுக்க சட் டத்தில் இடம் உள்ளது. குறிப்பாக பொதுநல வழக்கு தொடருதல் போன்றவற்றின் மூலம் இதுபோன்ற நடவடிக் கையை எடுக்க முடியும். அதே வேளையில் சம் பந்தப்பட்டவர்களையும் ஆலோசனை மூலம் நல்வழிக்கு கொண்டுவர இயலும் என்றார்.

தமிழ் ஓவியா said...


ஜாதி, மதத்தின் பெயரால் சமூக ஒற்றுமையை குலைக்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : சித்தராமையா


பெங்களூரு . அக்.17- ஜாதி, மதத்தின் பெய ரால் சமூக ஒற்றுமையை குலைக்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருநாடக முதல்வர் சித்தராமையா தெரிவித் தார்.

பெங்களூருவில் புதன் கிழமை பன்னரகட்டா சாலையில் நடந்த பக்ரீத் திருநாள் தொழுகையில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

மாநிலத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்து உள் ளிட்ட பல்வேறு மதங் களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் அமைதியாக வாழ்வதற் கான சூழ்நிலை கருநாட கத்தில் உள்ளது. அதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக் கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. இதனால் மாநிலத்தில் சிறுபான்மை சமுதா யத்தைச் சேர்ந்த மக்கள் அச்சமின்றி வாழ்ந்து வருகின்றனர். நமது மாநி லத்தில் வாழும் அனைத்து சமுதாயத்தின் மக்களும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சமுதாய மக்கள், மற்ற சமுதாயத்தை சேர்ந் தவர்கள் மரியாதையு டனும், கவுரவத்துடன் நடத்த வேண்டும். காந்தி யார் உள்ளிட்ட மகான் கள் இதனையே வலி யுறுத்தி உள்ளனர். இதனை புரிந்து மக்கள் அனைத்து சமுதாயத் தினருடன் அரவணைத் துச் செல்ல வேண்டும். ஜாதி, மதத்தின் பெய ரால் சமூக ஒற்றுமையை குலைக்க முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தமிழ் ஓவியா said...


குஜராத் மாடல் - என்றால் என்ன என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை மத்திய அமைச்சர் கபில்சிபல் பேட்டி

டில்லி,அக்.17- நரேந்திர மோடி குறித்த பில்டப் பேச்சுக்கள் அத்தனையும் நீர்க்குமிழி போல.. சீக்கிரமே இவை உடைந்து விடும் என்று கூறியுள்ளார் மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நரேந்திர மோடி குறித்து ஏகப்பட்ட பில்டப் பேச்சுக்கள் சுற்றி வருகின்றன. ஆனால் அத்தனையும் நீர்க்குமிழி போல. சீக்கிரமே இவை உடைந்து விடும். குஜராத் குறித்து தொடர்ந்து புனைக் கதைகளையே அவர் பரப்பி வருகிறார். அது மட்டுமல்லாமல், இணையதளத்திலும் தவறான தகவல்களால் அவர் நிரப்பி வருகிறார். இயற்கையின் விதி என்னவென்றால் எது ஒன்று மேலே செல்கிறதோ அது நிச்சயம் கீழே வரும். அதேசமயம், எது ஒன்று வேகமாக மேலே செல்கிறதோ, அதே வேகத்தில் அது கீழே வரும். மோடி விவகாரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஆனால் அவரைச் சுற்றிலும் நீர்க்குமிழிகள்தான் இப்போது சூழ்ந்து நிற்கின்றன. அத்தனையும் கட்டாயம் சீக்கிரமே உடைந்து போகும். குஜராத் மாடல் என்று பேசுகிறார்கள். அப்படி என்றால் என்ன என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. இல்லாத ஒரு பொருளை நீங்கள் எப்படி விற்க முடியும்... அப்படித்தான் குஜராத் மாடலும் என்றார் சிபல்.

தமிழ் ஓவியா said...


மோடியா? நவீன் எதிர்ப்பு


பாஜகவின் நரேந்திர மோடி பிரதமராவதற்கு ஆதரவு தெரிவிக்க மாட் டேன் என்று பிஜு ஜனதா தளத் தலைவரும், ஒடிசா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

இது குறித்து அய்பி என்7 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதம ராவதை, என்னைப் போலவே பலரும் விரும்பவில்லை. நான் ஏன் விரும்ப வில்லை என்பது உங்களுக்கே (பத்திரி கையா ளர்கள்) தெரியும். மோடி பிரத மராவதற்கு ஆதரவு அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு அளிப் பீர்களா எனக் கேட்டபோது, காங் கிரஸ், பாஜக ஆகிய இருகட்சிகளிட மிருந்தும் சம அளவில் விலகியிருக் கவே விரும்புகிறேன் என்றார் பட்நாயக்.

பிரதமராக நீங்கள் முயற்சிப்பீர்களா என்று கேட்டபோது, ஒடிசா வில் நான் ஆற்றிவரும் பணியே மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று பதிலளித்தார்.

நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் இதற்கு முன்பு பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அவர் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் இந்தப் பேட்டி, அந்த எதிர்பார்ப்பை தகர்த்துவிட்டது.

சமீபத்தில் பாஜகவின் ஒடிசா மாநிலப் பிரிவைச் சேர்ந்த தலை வர்கள், மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் எவ்வாறு (எந்த அணி யில் இடம்பெறப் போகிறது) எதிர் கொள்ளப் போகிறது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கோரி யிருந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் நவீன் பட்நாயக் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


வெற்றி பெறுவது நிச்சயம்!


அந்தக் காலத்தில் நமக்கும், பார்ப்பனர்களுக்கும் நடந்த தேவாசுரப் போராட்டத்தில் பார்ப்பனர் வெற்றி பெற்றதுபோல், இன்று நடக்கும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டத்தில் கட்டாயம் பார்ப்பான் தோல்வி அடைவதும், நாம் வெற்றி பெறுவதும் நிச்சயமாகும். பகை வர் பொய்ப் பிரச்சாரங்களை ஏற்காதீர்!
(விடுதலை, 29.3.1961)

தமிழ் ஓவியா said...


நீதியரசர் சந்துரு அவர்களே! மாட்டுக் கொட்டகையில் படித்தவர்கள் மட்டமா?


ஆசிரியர் பயிற்சியில் பட்டயம் பெற்றதை மட்டுமே வைத்து வேலை அளிப்பது முறையற்றது. கல்வித்தகுதி பெற்ற அனைவருக்கும் போதிக்கும் திறன் இருக்கும் என்று நம்ப முடியாது.

உள்கட்டமைப்பு வசதியின்றி மாட்டுகொட்டகைகளில் நடத்தப் படும் பயிற்சிப்பள்ளிகளில் தேர்ச்சி பெற்றோரின் உண்மை அறிவை சோதிக்கவே தகுதித்தேர்வு.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ விழையும் சட்டத்தின் நோக்கம் சம வாய்ப்பு அளிப்பதற்கே. சலுகை களுக்கு அல்ல. எனவேதான் மதிப் பெண்ணை குறைக்க அவர்கள் போட்ட ரிட் மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியாயின என்று இந்து தமிழ் நாளிதழில் கட்டுரை தீட்டியிருக்கிறீர்கள்!.

ஆசிரியர் தொழிலுக்கென்றே அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மற்றும் கல்விஇயல் கல்லூரிகளில் பயின்று அதற்கான தேர்வில் வெற்றி பெற்று அவர்கள் வாங்கும் பட்ட யத்தை "அதை" மட்டுமே வைத்து வேலை அளிப்பது முறையற்றது என்று எப்படி உங்களால் சொல்ல முடிந்தது?.

கல்வித்தகுதி பெற்ற அனை வருக்கும் போதிக்கும் திறன் இருக்கும் என்று நம்ப முடியாது என்று சொல்கிறீர்கள். வழக்குரைஞர் பட்டம் பெற்றவர்களெல்லாம் வழக்குரைக் கும் திறன் பெற்றவர்கள் என நம்ப முடியாது என்று கருதி அன்றைக்கு அரசு அப்படி ஒரு தேர்வை நடத்தி யிருக்குமானால் உங்களைப்போன்ற திறமையான பல நீதியரசர்களை நாடு இழந்திருக்குமே!

உள்கட்டமைப்பு வசதியின்றி மாட்டுக்கொட்டகைகளில் நடத்தப் படும் பயிற்சிப்பள்ளிகளில், தேர்ச்சி பெற்றோரின் உண்மை அறிவை சோதிக்கவே தகுதித்தேர்வு என்றால் அப்படிப்பட்ட குறைபாடுகளோடு பயிற்சிப்பள்ளிகள் இயங்குவது யார் குற்றம்?

அரசின் பொறுப்பற்ற தன்மைக்கு ஆசிரியர்கள் பலிகடா ஆகவேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம்?

மாற்றுத்திறனாளிகளுக்கும், பட்டியல் இனத்தவர்களுக்கும் தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவது "சலுகை" என்று எழுதுகிறீர்கள். இடஒதுக்கீட்டு அடிப்படையில் பல்வேறு துறைகளிலும் பணி நிய மனம் செய்யப்படும்போது உயர்ஜாதி யினர் வாங்கிய மதிப்பெண்ணுக்கும் பட்டியல் இனத்தவர் பெற்ற மதிப் பெண்ணுக்கும் வேறுபாடு இருக்கத் தான் செய்யும். இதனால் "தகுதித் திறமை போச்சே" என்று ஆண் டாண்டு காலமாய் அனுபவித்த கூட்டம் அலறியபோது, "எந்தத் தாழ்த்தப்பட்டவன் ஊசிபோட்டு மருந்து வேலைசெய்யாமல் போனது? எந்த பிற்படுத்தப்பட்ட இன்ஜினீயர் பாலம் கட்டி உடைந்து போனது" என்று நறுக்குத்தெறித்தாற்போல் கேட்டவர்தான் கல்வி வள்ளல் காம ராசர்!.

நீங்கள் சொல்லும் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றுவிட்டால் மட்டும் போதிக்கும் திறன் ஆசிரியர்களுக்கு வந்துவிடும் என்று எந்த அடிப் படையில் நம்புகிறீர்கள்? இரண்டாண்டு காலம் ஆசிரியர் தொழிலுக்கென பல்வேறு பயிற்சிகளைக்கொடுத்து அதற்கென அரசால் நடத்தப்படும் தேர்வையும் தாண்டி இந்தத் தகுதித்தேர்வால் என்ன சாதித்துவிட முடியும்?

படிப்பறிவு மட்டுமின்றி அர்ப்பணிப்பு உணர்வோடு பணி யாற்றும் ஆசிரியர்களே இன்றைய தேவை என்பதை காலம் நமக்கு சொல்லிகொண்டிருக்கிறது. .இவற் றையெல்லாம் இந்த தகுதித்தேர்வு கணித்து விடுமா? நடைபெற்ற தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணமல்ல. கேள்வித்தாள்களே முக்கிய காரணம்.

அவர்கள் படித்த அவர்கள் வகுப்பெடுக்கக்கூடிய பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு கேள்விகள் இருந்ததாக பெரும்பா லோர் குற்றம்சாட்டியுள்ளனர். முது நிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக் கான கேள்வித்தாளின் தரம் சந்தி சிரித்து நீதிமன்றம்வரை சென்றது தாங்கள் அறியாததா?

உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கில் சமூகநீதிக்கு எதிராக நீங்கள் அளித்த தீர்ப்பே இன்று வரை தாழ்த்தப் பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சரியான நீதி கிடைக்க தடையாக இருக்கிறது என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.
நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார் பெரியார்.எங்கள் அய்யா இன்று இல்லை என்ற நினைப்பா?

- கி. தளபதிராஜ், மயிலாடுதுறை

தமிழ் ஓவியா said...


மை தடவலாமா?

கேள்வி: வெற்றிலை யில் மை தடவி குறி சொல்லும் ஜோசியத்தை இன்னும் நிறையப் பேர் நம்புகிறார்களே?

பதில்: நமது விரல் நகத்தில் தடவும் மையி னால் எவ்வளவோ கால மாய் மோசம் போகும் நாம்; வெற்றிலை மையினால் ஒன்றும் ஆகி விட மாட் டோம்.

இவ்வாறு பதில் எழுதி இருப்பது குங்குமம் வார இதழ் (21.10.2013 பக்கம் 100)

உடன் பிறந்தே கொல் லும் நோய் என்பார்களே அது இதுதானோ!

மகாபாரதத்தை சன் தொலைக்காட்சி ஒளி பரப்பவில்லையா?

திராவிட இயக்கப் போர்வையிலே - அந்த இயக்கத்தின் கொள்கை களைப் பரப்பத் தவறினா லும்கூட மன்னித்து விட லாம்; பச்சையாக தந்தை பெரியார் அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், ஏன் முரசொலி மாறன் முதலி யோர், உயிரினும் மேலாக மதித்த கொள்கைகளை, கருத்துக்களை கொச் சைப்படுத்துவது என்றால் எப்படித்தான் பொறுத்துக் கொள்ள முடியும்?

தேர்தலில் வாக்கு பதிவுக்காக நகத்தில் மை வைப்பதும், வெற்றிலை யில் மை தடவி குறி சொல்லுவதும் ஒன்று தானா?

தேர்தலில் போட்டியி டும் ஒரு கட்சியின் பின்னணியில் வெளி வரும் ஒரு இதழ் அந்தக் கட்சியையே நையாண்டி செய்கிறதே!

தேர்தலில் நகத்தில் மை தடவி திமுகவுக்கு வாக்கு அளித்து வெற்றி பெற்றதெல்லாம் மோசம் போனதுதானா?

ஒரு முட்டாள்தனத் துக்காக வக்காலத்துப் போட்டு, ஒரு குடிமகனுக் குரிய வாக்குரிமைக்கான அடையாளத்தைக் கொச் சைப்படுத்த வேண்டுமா?

வெற்றிலையில் மை தடவி குறி சொல்லுவது முட்டாள்தனம் - பகுத் தறிவுக்கு விரோதமானது - அறிவியலுக்கு எதி ரானது என்று எழுதுவதற் குக் குறைந்தபட்ச சிந் தனையில்லாதவர்கள் எல்லாம் எழுதுகோல் பிடித்தால் இந்த விபரீதம் தான்! அறிவியல் மனப் பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என் கிறது இந்திய அரச மைப்புச் சட்டம் - ஆனால் அறிவியல் சாதனமான பத்திரிகையே அறிவிய லுக்கு விரோதமாக இப் படியெல்லாம் எழுத லாமா?

வெற்றிலையில் மை தடவி, உண்மையைக் கண்டுபிடிக்க முடியும் குற்றவாளிகள் இருக்கும் இடத்தை அறிய முடியுமா னால், காவல் நிலை யத்தை எல்லாம் இழுத்து மூடி விடலாமே! ஏன் வீண் செலவு?

அறிவியல் பூத்து நிலாவுலகில் குடியேற முன்பதிவுகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் வெற்றி லையில் மை தடவிக் கொண்டிருக்கும் பேர் வழிகளும் இருக்கிறார் களே - என் சொல்ல - வெட்கக் கேடு!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


என்ன அரசாங்கமோ - என்ன நிருவாகமோ?

வரும் டிசம்பர் முதல் தேதியன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பிரிவு (குரூப்-2) தேர்வும், அதே நாளில் அய்.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வும் நடக்கவுள்ளன.

இரண்டும் எழுதும் மாணவர்கள் இரண்டாம் கெட்ட நிலையில் திண்டாடுகிறார்கள். என்ன அரசாங்கமோ - என்ன நிருவாகமோ!

தமிழ் ஓவியா said...


இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை!


லண்டன், அக்.18- கொழும்பில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாடு விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரிட் டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித் துள்ளனர்.

காமன்வெல்த் நாடு களின் தலைவர்களின் மாநாட்டை அடுத்த மாதம் இலங்கையில் நடத்துவதற்கான முடிவை எடுத்ததில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மிகவும் பயந்து, பணி வாகச் செயற்பட்டிருக் கிறார்கள் என்று பிரிட் டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர் சித்திருக்கிறார்கள்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் விவகாரத்தில் பிரிட்டிஷ் அமைச்சர்கள் மிகவும் திடமான கொள்கை நிலைப்பாடை எடுக்க வேண்டும் என்று பிரிட் டனின் வெளிவிவகாரக் குழு கூறியுள்ளது.

2013 ஆம் ஆண்டு மாநாட்டை யார் நடத் துவது என்பது தொடர் பில் காமன்வெல்த் சமூ கத்தில் கருத்துப் பிளவு ஏற்பட்டுள்ளதாக எமது பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இலங்கையின் கொடூ ரமான உள்நாட்டுப் போர் 2009இல் முடி வுக்கு வந்தது முதல், அங்கு செய்தியாளர்கள், சட்டத்தரணிகள் மற் றும் எதிரணிக் குழுக்கள் இலங்கை அரசாங்கத் தால் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுவதாக விமர்சிக்கப்படுகின்றது.

ஆகவே, இலங்கை யில் நவம்பர் 15ஆம் தேதி காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டை நடத்துவதற்கான முடிவை எடுப்பதற்கு முன்னதாக பிரிட்டனின் வெளியுறவு அலுவலகம் கடுமையாக அதனை ஆராய்ந்திருக்க வேண் டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப் பினர்கள் நம்புகிறார்கள்.

கோர்டன் பிரவுண் பிரதமராக இருந்த வேளையில் பணியாற் றிய அமைச்சர்கள் இந்த முடிவை எடுப்பது தொடர் பில் மிகவும் பயத்துட னும், பணிவுடனும் செயற்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் இந்த விடயத்தில் ஒரு திட மான கொள்கை நிலைப் பாட்டை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், இலங்கையின் நடத்தை யில் மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கான உறுதிமொழியை வலியு றுத்த வேண்டும் என் கிறார் பிரிட்டிஷ் நாடா ளுமன்ற கீழவையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவரான ரிச்சர்ட் ஒட்டாவே .

தான் இந்த மாநாட்டை புறக்கணிக் கப் போவதாக கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கடந்த மாதம் அறிவித்திருக்கிறார். அத்துடன் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் மாநாட்டை அடுத்து இரு ஆண்டுகளுக்கு அமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங் கைக்கு வழங்குவதை அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் நிரா கரிக்க வேண்டும் என்று மனித உரிமைக் குழு வான ஹியூமன் ரைட்ஸ் வாட்ஜ் கூறியுள்ளது.

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் கனடா பிரதமருக்கு வரவேற்பு - நன்றி!


சிறீலங்காவில் மனித உரிமைகள், தமிழர்களுடனான இணக்கப்பாடு ஆகியவற்றை வெளிப்படையாக காரணம் காட்டி காமன்வெல்த் நாடுகள் மாநாட்டினை கனடிய பிரதமர் புறக்கணித்தமைக்கும் கடந்த 30 மாதங்களுக்கும் மேலாக சிறீலங்கா மனிதவுரிமை விடயத்தில் இறுக்கமான போக்கினை சர்வதேச அரங்கில் கடைப்பிடித்து, கனடியத் தமிழர்களது அபிலாசைகளை ஏற்றுப் பயணிக்கும் கனடிய அரசுக்கு குறிப்பாக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் , வெளி விவகாரத்துறை அமைச்சர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், கனடிய ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், நீதியான தமிழர் தீர்வின் அவசியத்தை எடுத்தியம்பியும், கனடியத் தமிழர் அமைப்புக்களையும் இணைத்து கனடியத் தமிழர் சமூகம் நடத்தும் மாபெரும் ஒன்று கூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்ப்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இடம் : கனடியப் பாராளுமன்ற முன்றில் ஒட்டாவா, காலம்: திங்கட்கிழமை, அக்டோபர் 28 ஆம் நாள், நேரம் : காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை.

பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.தொடர்பு கொண்டு பெயர்களைப் முன்பதிவு செய்யவும். ஒற்றுமைப்பட்ட இனமாக ஓரணியில் அணி திரள்வோம்.

தகவல்: கனடிய தமிழர் சமூகம், மேலதிக தொடர்புகளுக்கும், விவரங்களுக்கும்: 416-930-5937 647-203-6261 416-903-6058

தமிழ் ஓவியா said...


எதிர்கால தமிழகத்தை வாழ வைக்கக் கூடியது சேது சமுத்திர திட்டம்

சென்னை, அக்.18- எதிர்கால தமிழகத்தை வாழ வைக்கக் கூடியது சேது சமுத்திர திட்டம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் பதவிக்கு உங்கள் ஆதரவு நரேந்திர மோடிக்கு உண்டா என்று யாரோ கேட்டபோது அந்தப் பதவிக்கு தன் பெயரை அல்லவா முன் மொழிய வேண்டும் என்று நினைத்தவர் ஜெயலலிதா என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவர் தான் இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தன்னுடைய கட்சியின் தொண்டர்களைத் தயார்ப் படுத்துவதாக எண்ணிக் கொண்டு அவர்களை உசுப்பி விட்டு வேலை வாங்குவது என்றால், அதற்கு முதல் பலியாக என்னைத் தாக்கி தொண்டர்களைத் தூண்டிவிட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு புறப்பட்டிருக்கிறார்.

தினத்தந்தியின் புகழ் பெற்ற உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் மறைந்தபோது; ஒரே பகுதியில், மூன்றாவது வீட்டிலே இருந்த ஜெயலலிதாவுக்கு சிவந்தி வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரிக்கத் தோன்ற வில்லை. ஓர் அமைச்சரைக்கூட அதற்காக அனுப்ப வில்லை. ஆனால் இன்றைக்கு ராமச்சந்திர ஆதித்தன் மறைந்தவுடன் 4 அமைச்சர்கள், ஜெயலலிதாவால் துக்கம் கேட்க அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

திடீர் ஞானோதயங்கள்!

தேர்தல் வருகிறது என்றாலே அம்மாவுக்கு திடீரென்று இதுபோன்ற ஞானோதயங்கள் எல்லாம் பிறக்கும். காயிதே மில்லத் நினைவிடத்தில் மலராடை போர்த்த வேண்டும் என்ற எண்ணம் கூட தேர்தல் வரும்போது தான் அம்மாவுக்கு ஏற்படும். எஞ்சியுள்ள நாட்களில் காயிதேமில்லத் நினைவிடம் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாது. அவ்வளவு ஏன்? எம்.ஜி.ஆர். பற்றிய நினைவே கூட சிக்கலான வழக்கு, சிக்கலான தேர்தல் வந்தால்தான் அம்மையார் மூளையில் திடீரெனத் தோன்றும்.

அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முன்னேற்றத் திற்காக தீட்டிய திட்டங்களை, மத்திய அரசு நிறைவேற்றிட நினைத்தாலும் அதற்கு குறுக்கே நின்று அந்தத் திட்டத்தைக் குழி தோண்டிப் புதைப்பதிலே பலே கில்லாடியாக ஜெயலலிதா விளங்குகிறார்.

சேது சமுத்திரத் திட்டத்தை நுறாண்டு காலக் கனவாகத் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து அதை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும்போது அந்தத் திட்டத்திற்காக எழுச்சி நாள் கொண் டாடுங்கள் என்று எந்த அண்ணா அறிவித்தாரோ, அந்தத் திட்டத்தையே மட்டம் தட்டி மறுப்புக் கூறி, உச்சநீதி மன்றத்தில் அதற்குத் தடை கோரிய தாட்சாயணி தான் இந்த அம்மையார் என்பதை நாடு நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது.

சேது சமுத்திர திட்டத்தை எதிர்ப்பவர்

சேதுத் திட்டம் என்பது வெறும் சில்லறைத் திட்டமல்ல; எதிர்காலத் தமிழகத்தை வாழ வைக்கக் கூடியதும், பல துறைமுகங்கள் உருவாகி, வாணிபத்தை நாடுகள் பலவற்றிலும் பெருக்கிடக் கூடியதுமான வளமார் திட்டம்.

வளமான பொருளாதாரத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் திட்டம். நீரின் வந்த நிமிர் பரிப் புரவியுங் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் ஈழத்துணவும் காழகத் தாக்கமும் என வரும் பட்டினப்பாலை பாடலை மீண்டும் நினைவுபடுத்தி; மாண்ட நம் புகழையெல்லாம், மறு மலர்ச்சிக்கு உரியதாக்கும் திட்டம்; அந்தத் திட்டத் தைத் தான் நிறைவேற்ற வேண்டுமென்று அதற்காக எழுச்சி நாள் கொண்டாடுங்கள் என்று தி.மு.க. தோழர்களையெல்லாம் பேரறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு ஆட்சி அமைந்தவுடன் உசுப்பி விட்டார்.

அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு நடைபெற்ற அந்தத் திட்டத்தின் தொடக்க விழா வினை அடுத்துப் பணிகள் தொடர்ந்து நடைபெற் றிருந்தால் இந்நேரம் எத்தனையோ துறைமுக நகரங்கள் தமிழகத்தில் தோன்றியிருக்கும். அதையெல் லாம் கெடுத்தது யார்?

திட்டம் வந்து விடக் கூடாதாம்

இப்போதும் அந்தத் திட்டம் வந்து விடக் கூடாது என்பதற்காக உச்சநீதி மன்றத்திலே வழக்கு தொடுத்திருப்பது யார்?. அண்ணாவின் கனவையே நிறைவேற்ற முடியாது என்று நீதிமன்றத்திற்குச் சென்றிருப்பவர்கள் அண்ணாவைப் பற்றிப் பேச அணுவளவும் அருகதை இல்லாதவர்கள் என்பதை நாட்டிலே உள்ள நல்லறிவாளர்கள் நாடு வாழ வேண்டும் வளமாக வாழ வேண்டும், வலிமையான பொருளாதாரமும், வளமான வாணிபத் துறையும் பெற்று வையகத்தில் பெரும் புகழ் நாட்டிட வேண்டும் என்று கனவு காணுகிற நம்மைக் கயவர்கள் என்றும், துரோகிகள் என்றும், அண்ணாவின் கொள்கைகளுக்கு விரோதிகள் என்றும் பேசித் திரிபவர்கள் அறிக்கை விட்டு அங்கலாய்ப்பவர்கள் யார் என்று புரிகிறதா?.

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து சர்வாதி காரத்தைத் தர்பாரில் உட்கார வைத்திருப்பவர்களுக்கு அறவழியில், ஜனநாயகப் பாதையில் தமிழ் நாட்டு மக்கள் வாக்குச் சீட்டையே பயன்படுத்திப் பாடம் புகட்டி இவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீருவார்கள். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


இலங்கையில் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் தமிழ், முஸ்லிம் பெண்கள்

இலங்கை போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான் மையினப் பெண்கள் கடுமையாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள துடன், மோசமான பாதுகாப்பின் மையையும் எதிர்கொள்கிறார்கள் என்று மனித உரிமைகள் அமைப் பான எம் ஆர் ஜி இண்டர் நேஷனல் எனப்படும், சிறுபான்மையின உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

போர் காரணமாக ஆயிரக் கணக்கான பெண்கள் தமது கண வனை இழந்துள்ளதுடன், அவர் களுக்கு எதிராக பாலியல் வன் செயல்கள் முதல் அவர்களின் காணிகள் அபகரிக்கப்படுவது வரை பெண்களுக்கு எதிரான பல்வேறு முறைகேடுகள் அதிகரித்துள்ள தாகவும் அந்த அமைப்பு கூறி யுள்ளது.

வடக்கில் காணப்படுகின்ற மிக வும் அதிகமான இராணுவ பிரசன் னமும் இதற்கு ஒரு காரணம் என்று தாம் கண்டறிந்துள்ளதாகக் கூறு கிறார் எம் ஆர் ஜி இண்டர்நேஷனல் அமைப்பின் இயக்குநரான மார்க் லட்டிமர்.

இராணுவ பிரசன்னமும் முக்கிய காரணம்

''பெருமளவிலான இலங்கை இராணுவத்தின் இருப்பு காரணமாக அந்த பிராந்தியம் பெருமளவில் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குறிப்பாக தமிழ் பெண்களும், சில இடங்களில் முஸ்லிம் பெண் களும் மிகவும் மோசமான பாதுகாப்பின்மையை எதிர்கொள் கிறார்கள்'' என்று மார்க் லட்டிமர் பிபிசியிடம் கூறினார்.

பல வகையான ஆதாரங்களின் மூலமும் வழிமுறைகள் மூலமும் தாம் தமது ஆய்வைச் செய்ததாக அவர் கூறுகிறார்.

மன்னார், திரிகோணமலை போன்ற இடங்களில் வாழும் சிறுபான்மையின பெண்களை தாங்கள் நேரடியாகச் செவ்வி கண் டதாகவும், வேறுதகவல்களையும் தாங்கள் பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

56 சம்பவங்கள்

குறிப்பாக 2012 இல் யாழ்ப் பாணம் மருத்துவமனையில் ஒரே ஒரு மாதத்தில் இளம்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு அல்லது பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளான 56 சம்பவங்கள் பதிவாகி யுள்ளன என்றும், அனுமானத்தில் அல்லாமல் ஆதாரங்கள் பற்றும் பதிவுகளின் அடிப்படையில் அங்கு பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவதை தாங்கள் கண்டறிந்திருப்பதாகவும் மார்க் லட்டிமர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன

சிறுபான்மைப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சி யாக அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த சம்பவங்களின் எண்ணிக் கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்துள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையிலேயே ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை படிப் படியாக அதிகரித்து வந்திருப்பதை தாங்கள் புள்ளி விவரங்கள் வாயி லாக கண்டிருப்பதாகவும் அப்படி அதிகரிப்பது வழமைக்கு மாறான தாகும் என்றும் எம் ஆர் ஜி இண்டர் நேஷனல் கூறுகிறது.

இவை குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களில் ஒரு குறித்த போக் கைப் பார்க்கக்கூடியதாக இருந்ததாக மார்க் லட்டிமர் கூறியுள்ளார்.

சில சம்பவங்களில் இலங்கைக்கு உள்ளே வேறு இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வருபவர்களாலும் சிறுபான்மைப் பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள். சில வேளைகளில் உள்வீட்டு வன்முறைகளாலும் பெண்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.

தமிழ் ஓவியா said...


ராமர் கோவில்: விசுவ இந்து பரிசத்தினர்கள் கைது

லக்னோ, அக். 18-அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்போவதாக விசுவ இந்து பரிசத் அறிவித்துள்ளது. இதற்காக உத்தரபிரதேசத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அயோத்தி நோக்கி யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே இது போன்ற யாத்திரையை விசுவ இந்து பரிசத் நடத்தியது. அப்போது காவல்துறை நடவடிக்கை எடுத்து யாத்திரையை தடுத்து நிறுத்தியது. விசுவ இந்து பரிசத்தின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இன்று அயோத்தியில் மீண்டும் ராமர் கோவில் கட்ட யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளது. இதையடுத்து அயோத்தி நகரம் அமைந்துள்ள பைசாபாத் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி நகரம் மற்றும் பைசாபாத் மாவட்டத்தைச் சுற்றிலும், காவல்துறையினர் தடுப்புகள் அமைத்துள்ளனர். ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அயோத்தியில் மட்டும் 2,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக உத்தர பிரதேச சட்டம்ஒழுங்கு அய்.ஜி.ஆர்.கே. விஸ்வகர்மா தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அயோத்தி நோக்கி யாத் திரையாக வந்த விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள், பாரதீய ஜனதா தொண்டர்கள் 340 பேர் கைது செய்யப்பட்டனர். பைசாபாத்தில் முன் எச்சரிக் கையாக 42 நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

கைதானவர்களில் அயோத்தி பாரதீய ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. லல்லு சிங், விசுவ இந்து பரிசத் தலைவர் ராம் விலாஸ் வேதாந்தி ஆகியோர் முக்கிய தலைவர்கள் ஆவார்கள்.

தமிழ் ஓவியா said...


உலகில் மூன்று கோடி பேர் அடிமை வாழ்க்கையாம்!


உலகில் அடிமைத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஒரு புதிய அறிக்கை, உலக அளவில் சுமார் மூன்று கோடி பேர் இன்னும் கொத்தடிமை நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது.

உலக அடிமைகள் பட்டியல் 2013 என்ற இந்த அறிக்கை, இந்தியாவில் மட்டும் 1.4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைக்கக் கொத்தடிமைகளாகவும், கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது.

ஆனால் மவுரேடேனியாவில் மட்டும் இந்தப் பிரச்சினை மிகவும் அதிகமாக நிலவுவதாகக் கூறும் இந்த அறிக்கை, அந்த நாட்டின் மொத்த ஜனத்தொகையில் நான்கு சதவீதத்தினர் அடிமைகளாகவே வாழ்கின்றனர் என்று கூறுகிறது.

அடிமை முறையை ஒழிக்க அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் நாட்டுக்கு நாடு மாறுபடுவதாக அது கூறுகிறது.

ஆஸ்திரேலியாவின் , அடிமை முறைக்கு எதிரான ஆஸ்திரேலிய அமைப்பான, வாக் ப்ரீ பவுண்டேஷன், இந்த அறிக்கையைத் தயாரித்திருக்கிறது. '

தமிழ் ஓவியா said...

யாருக்கு அவமானம்?

ஆறுபடை
வீடு கொண்ட
திருமுருகா...
உன் பக்தன்
ஒரு வீடுகூட இன்றி
பிளாட்பாரமாய் இருப்பது
யாருக்கு அவமானம்?

- சீனு.அசோகன், புதுவை.

தமிழ் ஓவியா said...


சோதிடர் ஓடினார்!


சந்தை கூடும் இடத்திலே
சாலை ஓரம் தன்னிலே
குந்தி இருந்த சோதிடர்
குறிகள் பார்த்துக் கூறுவார்

அதிர்ஷ்டப் பரிசு கிடைக்குமா?
ஆண் குழந்தை பிறக்குமா?
மதிப்பு உலகில் உயருமா?
மனதில் கவலை நீங்குமா?

இந்த வகையில் கேள்விகள்
ஏதுஏதோ அவரிடம்
வந்து மக்கள் கேட்பது
வழக்க மாகி விட்டது!

கும்பல் ஒன்று சுற்றிலும்
கூடி அன்று நிற்கையில்
அம்பு போலப் பாய்ந்துமே
அங்கோர் பையன் வந்தனன்!

இரைக்க இரைக்க வந்தவன்
என்னே! நமது சோதிடர்
இருக்கும் வீடு தீயிலே
எரியு தென்றே கதறினன்

பையன் சொல்லைக் கேட்டதும்
பதறி எழுந்த சோதிடர்
அய்யோ, அப்பா! என்றுமே
அலறி ஓட்டம் பிடித்தார்!

முன்னால் அவரும் வேகமாய்
மூச்சுப் பிடித்து ஓடவே
பின்னால் அவரைத் தொடர்ந்தது
பெரிய கூட்டம் ஒன்றுமே!

நாடி தளர்ந்து விட்டது!
நாக்குத் தொங்கிப் போனது!
ஓடி வந்தார் அப்படி!
உடல் குலுங்கச் சோதிடர்!

மனைவி மக்கள் தீயிலே
மடிந்து, வீட்டில் உள்ளவை
அனைத்தும் பொசுங்கிக் சாம்பலாய்
ஆன தென்றே எண்ணினார்!

எண்ணம் போல வீட்டிலே
எதுவும் நடக்க வில்லையே!
என்றும் உள்ள நிலையிலே
இருந்த வீட்டைக் கண்டனர்!

புரளி செய்த பையனைப்
பிடித்துக் கொண்டு சோதிடர்
மிரட்டிக் கேட்க லானார்!
மீசை இரண்டும் துடித்தன!

நாட்டுக் கெல்லாம் சோதிடம்
நானு ரைப்பேன் என்கிறீர்!
வீட்டில் தீ! தீ! என்றதும்
விழுந்த டித்து வருகிறீர்!

எந்த விஷயம் நடப்பினும்
எனக்குத் தெரியும் என்கிறீர்!
சொந்த விஷயம் அறிந்திடச்
சோதிடத்தால் முடிந்ததோ?

பையன் இதனைச் சொன்னதும்
பக்கம் இருந்த அனைவரும்
கையைத் தட்ட லாயினர்!
கலகலென்று சிரித்தனர்!

- குழந்தைக் கவிஞர்
அழ.வள்ளியப்பா

நூல்: ஈசாப் பாடல்கள் இரண்டாம் தொகுதி பக்கம் 61-63

தகவல்: பல்லவன், திருக்கழுக் குன்றம்

தமிழ் ஓவியா said...

மேயோ கூற்று!

இந்தியப் பெண்களின் நிலையைப்பற்றி மேயோ என்ற அமெரிக்க மாது, மதர் இந்தியா என்ற நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்:

புருஷன் வீட்டுக்குச் செல்லுமுன் பெண் அதிகமாகக் கல்வி கற்றிருக்க முடியாது. சென்ற பின் கல்வி கற்பதற்குப் போதிய அவகாசமில்லை. அவளுடைய கல்வி வளர்ச்சியில் சிரத்தை எடுத்துக் கொள்வாரும் யாருமில்லை. ஆனால், புருஷன் வீட்டில் அவள் இரண்டே விஷயங்களைக் கற்றுக் கொள்ளு கிறாள்.

புருஷனுக்குத் தான் செய்ய வேண்டிய ஊழியம் என்னவென்பது ஒன்று. வீரன், இருளன், காட்டேரி, சாமுண்டி, வெறியன், நொண்டி, தூறி, தொண்டி, நல்லண்ணன், மாடன், கருப்பன், பாவாடை, காளி, கருப்பாயி முதலிய சில தெய்வங்களை வணங்குவது எப்படி? அவைகளுக்குப் பூஜை போடுவது எப்படி என்பது மற்றொன்று!

தமிழ் ஓவியா said...


இதுவும் செய்யமுடியுமா?

நோயென வந்த போது திருநீறு
கொடுத்து பிணி தீர்க்கும் மூடர்கள்
மானிடனை வாட வைக்கும்
பசிப்பிணியைத் தீர்க்க முடியுமா?
காற்றென்றும் பேயென்றும் வந்த போது வேப்பிலை கொண்டு
ஒட்டும் கேடுகெட்ட சாமியார்கள்
மானிடனை ஆட்டும் ஜாதிப்பேயை ஓட்ட முடியுமா?

- ப.வெங்கடேசன், மருதாளம்

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் அடிக்கும் கொள்ளை!

பிள்ளை பிறந்தது. ஜாதகம் கணிக்க வேண் டும். அய்யருக்கு தட் சணை கொடுக்க வேண் டும். பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக்க வேண்டும். கூப்பிடு மேற்படியானை; வை தட்சணை! பிள்ளைக்கு அய்ந்து வயதாயிற்று; கூப்பிடு அய்யரை; கொடு பணத்தை.

பைய னுக்குக் கலியாணம்! அழை அய்யரை: சாந்தி முகூர்த்தம்; மேற்படி மேற்படி! பெண்டாட்டி ஏழு மாதக் கர்ப்பவதி மேற்படி மேற்படி பிள்ளை பிறந்தது; மேற்படி மேற்படி பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள்; உடையவர் செத்தார், சாகுந்தறுவாயில் பாபம் போக்கத் தானம் கொடுக்க அழை அய்யரை! செத்தபின் அழை! கொடு: இதற்கிடையில் செத்துப் போனவரை நோக்கி இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும்.

மேற்படி மேற்படி! இவையன்றி விதை நட, வீடு கட்ட, குடிபோக, பிற, பிற: அழை அய்யரை; கொட்டு பணத்தை! இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி. அழையா வீட்டில் நுழையுஞ் சம்பந்தியாக, கிரகண தோஷத்திற்குத் தர்ப்பைப்புல் கொண்டும், கரிநாள் தேடி எலுமிச்சைப்பழம் கொண்டும் சங்கராச்சாரியா சுவாமிகள் கட்டணமென்று ரசீது கொண்டும், அய்யர் தாமே வீடு தேடி விஜயம் செய்வதுண்டு.

- புரட்சிக்கவிஞர், (பாரதிதாசன் கதை) பக்கம்:42

தமிழ் ஓவியா said...

பரமசிவன்: தேவி, நீ சில நாட்களாக கவலையாக இருக்கின்றாயே, காரணம் என்ன?

தேவி: சுவாமி! இரண்டு திருமணம் செய்தும் நம் இளைய குமாரனுக்கு குழந்தை இல்லை என்ற கவலைதான்.

பரமசிவன்: கவலைப்படாதே! நல்ல டாக்டராகப் பார்த்து நம் மகனை அழைத்துச் சென்றால் உன் கவலை தீர்ந்து விடும்!

- எம்.எஸ்.கோபு, சி.மெய்யூர்