Search This Blog

2.12.08

ஆர்,எஸ்.எஸ் அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே


ஆர்.எஸ்.எஸ்.தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதி




ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925 ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ்.எஸ் அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர்,எஸ்.எஸ் அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

“இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வெண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை. எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.” (1)

“இந்திரன், அக்கினி, வாயு, வருணண் என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்த மூர்த்திகளை தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்துமதம் ஒற்றுமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதீக ஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று பூமண்டலத்தின் ஆசார்ய பதவி கொண்டு வாழ வேண்டுமாயின் அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன” என பாரதி கூறுகிறார்.

1. “வேதம், உபநிஷத்துகள், புராணங்கள் இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்க வேண்டும்.

2. புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொதுவேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றை விளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ராமணமாகக் கொண்டு, இதர தேவ தூஷணை செய்யும் அம்சங்களையும் பிராணமில்லாதன என்று கழித்துவிட வேண்டும்

3. வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்தோரும் ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும் புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான பிரச்சாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்.” (2)

மதமாற்றம் குறித்து அப்போதே பாரதி மிகவும் கவலைப்பட்டார்.

“இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறித்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது...

ஆம் ... ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான் அது. ஹிந்துக்கடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல வாலில் நெருப்பு பிடித்தெரியும்போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள். ஜனத்தொகை குறையும்போது பார்த்துக்கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும்போது தூங்குகிறார்கள். அவர்கள் கண்ணிருந்தும் குருடர்” (3) என்றார் பாரதி. பொருளாதார வளர்ச்சிக்கு வழி சொல்லாமல் மதக் கண்ணோட்டத்தில் மக்களைப் பெருக்க வேண்டும் என்கிறார்.

மேலும் இவர் இந்து தர்மத்தைப் பற்றிக் கூறும்போது, “ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை அதனால் தொல்லைப்படுவோமேயன்றி அழிந்து போய் விட மாட்டோம். ஹிந்துக்களுக்குள் இன்றும் வறுமை மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும். இருந்தாலும் நமக்குச் சர்வ நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தை கவனியாமல் அசிரத்தையாக இருப்போமேயானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும். அதில் சந்தேகமில்லை” (4) என்கிறார் பாரதியார். 1917 ம் ஆண்டு நவம்பர் 19 ம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் உலகம் முழுவதும் ஹிந்து தர்மத்தைப் பரப்ப வேண்டும் என எழுதியுள்ளார். சோவியத்தில் அக்டோபர் (நவம்பர்) புரட்சி ஏற்பட்ட பிறகுதான் பாரதி இதை எழுதுகிறார் என்பது குறிப்படத்தக்கது.

“வாரீர் நண்பர்களே, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஹிந்து தர்மம் பரவும்படிச் செய்ய வேண்டுமானால் அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம். ஆஹா, ஸ்வாமி விவேகானந்தரைப் போலப் பத்துப் பேர் இப்போது இருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகமெங்கும் நாட்டலாம்... சண்டை காலந்தான் நமக்கு நல்லது (முதல் உலகப்போர் 1914 முதல் 1918 வரை நடைபெற்றது. அந்தச் சமயத்தில்தான் பாரதி இதை எழுதியுள்ளார்). இவ்விஷயத்தை ஆழ்ந்து யோசனை பண்ணி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு நூற்றுக்கணக்கான பிரசங்கிகளை அனுப்பும்படி ராஜாக்களையும், ஜமீன்களையும், செட்டியார்களையும், மடாதிபதிகளையும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.” (5)

சண்டை காலந்தான் நமக்கு நல்ல காலம். மதத்தை வெளிநாடுகளில் நிலைநாட்ட இதுவே ஏற்ற தருணம் என்கிறார் பாரதியார். அவரைப் பின்பற்றித்தான் இன்றைய இராமகோபாலன் போன்றோர் “மூன்றாம் உலகப்போர் மூளுகிறது என்று நினைத்துக் கொள்வோம். அந்த வேளையில் ஆசிய நாடுகள் தங்களைக் காத்துக்கொள்ள ஒன்றுபட்டு நிற்க வேண்டி வரும். அப்போது இயல்பாகவே பாரதம் ஆசியக் கூட்டமைப்பின் தலைமை ஏற்கும். அந்த நிலையில் அகண்ட பாரதமோ, அதற்குச் சமமான நிலவரமோ உதயமாவது சாத்தியம்” என எழுதியுள்ளார் போலும்.

மேலும், “இப்பொழுது நம்முடைய தேசத்தில் இருக்கும் தாழ்ந்த ஜாதியார்களையெல்லாம் கிறிஸ்துவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் நம்முடைய குடியைக் கெடுக்கக் கோடாலியாய் இருக்கும்” (6) என்கிறார் பாரதியார்.

இந்தியாவிற்குப் பாரததேசம் என்ற பெயர்தான் வேண்டும் என்பதற்கான காரணத்தை பாரதி கூறுகிறார். “பாரதம் பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன் துஷ்யந்த் ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்னியாகுமரி முனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்றுசேர்த்து அதன்மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால் இந்நாட்டிற்கு ‘பாரததேசம்’ என்ற பெயர் உண்டாயிற்று.” (7)

இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்தப் பெயர் தான் வேண்டும் என்கின்றனர். பாரதி கூறுவதுபோல் இந்தியா முழுவதையும் பரதன் ஆண்டதாக வரலாற்றுச் சான்று ஏதும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. இந்தியாவில் 56 தேசம் இருந்ததாகவும், 56 அரசர்கள் ஆண்டதாகவும் தான் பாரதக் கதையிலும் காண முடிகிறது. ஆங்கிலேயர் வருவதற்கு முன் இந்தியா என்ற ஒரே நாடு இருந்ததற்கான சான்று எதுவுமே இல்லை.

இசுலாமியர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது மதமாற்றம் ஏற்பட்டது குறித்துப் பாரதியார் குறிப்பிடுவதாவது: “திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாதிபதியொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல் யாதொரு சண்டையுமின்றி தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்கோட்டில் ஹிந்துக்களை அடக்க ஆரம்பித்த போது இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கி கோமாமிசம் புசிக்கச் செய்தான்” (8) என்கிறார் பாரதியார்.

ஆனால் உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததற்குச் சான்றாதாரம் நமக்குக் கிடைக்கவில்லை. மாறாக, திப்புசுல்தான் பார்ப்பனர்களை ஆதரித்த செய்திகள்தான் நமக்குக் கிடைக்கின்றன. திப்புவின் ஆட்சியின் 45,000 முதல் 50,000 பார்ப்பனர்கள் அரசுப் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் தவறு செய்தால் தண்டிக்கும் உரிமையைக் கூட அவன் ஏற்றுக்கொள்ளாமல் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடமே ஒப்படைத்துள்ளான். திப்பு சிருங்கேரி சங்கரமடத்திற்கு 1791இல் எழுதிய கடிதம் மூலம் இதை அறிய முடிகிறது.

aasu There are more than 45 to 50 thousand Brahmins in our service it is wondered if the Government alone is bestowed with judiciary powers of handing their cases and punishing them for offences like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras. (9)

இன்னும் ஒருபடி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்கச் சாஸ்தரா சண்டி ஜபம் நடத்த திப்பு சிருங்கேரி சங்கராச்சாரியைக் கேட்டுக் கொண்டார். ஓராயிரம் பார்ப்பனர்கள் 40 நாட்கள் ஜபம் செய்தார்கள். அந்தச் செலவு முழுவதையும் திப்புவே ஏற்றுக் கொண்டார். (10)

இப்படிப்பட்ட திப்புவா, பாரதி கூறுவது போல, பார்ப்பனரைக் கொடுமைப்படுத்தியிருப்பார்? பாரதிக்கு இஸ்லாமியரின் மீது இருந்த வெறுப்பையே இது காட்டுகிறது.
பறையர்களின் பேரில் பாரதி இரக்கங்காட்டுவதாகப் பலர் எழுதுகிறார்கள். ஏன் பாரதி அவ்வாறு செய்தார் என்றால், அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்குப் போய்விடுகிறார்கள் என்ற எண்ணத்தில்தான்.

“1200 வருஷங்களுக்கு முன்பு, வட நாட்டிலிருந்து மதம் மாறியவர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்தபோது, நம்மவர்களின் இம்சை பொறுக்க முடியாமல் வருத்திக் கொண்டிருந்த பின்னர், பறையர் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிகாசம் சொல்கிறது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது.”

“... எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக்கணக்கான மனிதர்களையும், முக்கியமாக திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறார்கள். ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. மடாதிபதிகளும், ஸந்திதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள், ஹிந்து ஜனங்கள்! நமது ரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர். கோமாமிசம் உண்ணாதபடி அவர்களைச் சுத்தப்படுத்தி, அவர்களை நமது சமூகத்திலே சேர்த்து, அவர்களுக்குக் கல்வியும் தர்மமும் தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லாரும் நமக்குப் பரிபூரண விரோதிகளாக மாறி விடுவார்கள். (11)

சாதிக் கொடுமையினால் ஒடுக்கப்பட்டவர்கள் அதிக அளவில் மதம் மாறிய காரணத்தால் பாரதியார் கிழச்சாம்பன் கூறுவதைப் போல மதமாற்றம் வேண்டாம் என்பது பற்றி எழுதியுள்ளார். கிழச்சாம்பான் சொல்லுகிறார்: “ஹிந்து மதத்திலே எங்களுடைய நிலைமை தாழ்ந்திருக்கிறதென்றும், கிறிஸ்து மதத்தில் சேர்ந்தால் எங்களுடைய நிலைமை மேன்மைப்படுமென்றும் சொல்லி கிறிஸ்துவப் பாதிரிகள் எங்களிலே சிலரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்தார்கள். அதில் யாதொரு பயனையும் காணவில்லை. நூற்றிலொருவனுக்குப் பத்துப் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கிறது. மற்றவர்களெல்லாரும் துரைமாரிடத்தில் சமையல் வேலை பண்ணுதல், பயிரிடுதல், குப்பை வாருதல் முதலிய பழைய தொழில்களைதான் செய்து வருகிறார்கள். எனக்கு முன்னோருடைய மதமே பெரிது. கிறிஸ்துவர்களுடன் எங்களுக்குக் கொடுக்கல் வாங்கல், சம்மந்தம், சாப்பாடு ஒன்றுமே கிடையாது. என்ன கஷ்டமிருந்தாலும் நாங்கள் ஹிந்து மதத்தை விடமாட்டோம்.” (12)

பாரதி இந்து மதத்தை நிலைநிறுத்த எப்படியெல்லாம் சிந்திக்கிறார் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. ஆக முகமதியர்களையும், கிறித்துவர்களையும் எதிரிகள் என்றே பாரதியார் குறிப்பிடுகிறார். இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். போடுகின்ற பசுவதைத் தடுப்புச் சட்டம் என்ற கூச்சலை அன்றே போட்டவர் பாரதியார் ஆவார். 1917 நவம்பர் 8ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் பசுவதைத் தடுப்பைப் பற்றி எழுதியுள்ளதாவது:

“பசுவின் சாணத்துக்கு நிகரான அசுத்த நிவாரண மருந்து உலகத்தில் அக்னியைத்தான் சொல்லலாம். வீட்டையும், யாகசலையையும், கோவிலையும், நாம் பசுவின் சாணத்தால் மெழுகிச் சுத்தப்படுத்துகிறோம். அதனைச் சாம்பல் ஆக்கி அச்சாம்பலை வீபூதி என்று ஜீவன் முக்தியாக வழங்குகிறோம். பசுமாடு பத்தினிக்கும் மாதாவுக்கும் ஸமானம். அதன் சாணமே வீபூதி. அதன் பால் அமிர்தம், வைத்தியரும், யோகிகளும் பசுவின் பாலை அமிர்தம் என்கிறார்கள். வேதமும் அப்படியேதான் சொல்கிறது.

பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும்பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்தாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும். இதைத்தான் ஆப்கானிஸ்தானத்து அமீர் சாஹெப், தமது தேசத்து முஸல்மான்களிடம் சொல்லிவிட்டுப் போனார். ஹிந்துக்களின் கண்ணுக்குப் படாமல் என்ன எழவு வேண்டுமானாலும் செய்து கொண்டு போங்கள்” (13) என்கிறார் பாரதியார்.

இன்றைக்குக் கிறித்துவ மிஷனரி பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கூறுவதை, பாரதியார், 18.8.1906 இலேயே மிஷின் பாடசாலைகளை விலக்கி வைத்தல் வேண்டும் என்று கூறி இந்தியா ஏட்டில் தலையங்கம் எழுதியுள்ளார். “அதில் படிப்பவர்கள் இந்து மதக் கடவுள்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு தேசபக்தி வராது. கிறிஸ்துவர்களாக மாறிவிடுவார்கள். எனவே அவர்களை அப்பள்ளிகளில் சேர்க்க வெண்டாமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.” (14)

1906 முதலே பாரதியார் கிறித்தவர்களைத் தேசபக்தி அற்றவர்கள்; இந்து மதத்தைக் கெடுக்க வந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 1909இல் இசுலாமியர்கள் தேசபக்தி அற்றவர்கள் என்றும் ‘இந்தியா’ ஏட்டில் கருத்துப் படம் போட்டு எழுதியுள்ளார். இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், “இந்தியாவிற்குப் பொது மொழிப்பிரச்சனை தீர ஒரேவழி - சமசுகிருதம்தான் இந்தியாவின் பொது மொழியாக வேண்டும்” (15) என்கின்றனர். இதே கருத்தைப் பாரதி, இந்தியாவிற்குப் பொது மொழியாக சமசுகிருதம்தான் வரவேண்டும் என்று 1920இலேயே எழுதியுள்ளார். (16)

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சமசுகிருதம் மட்டும்தான் (தேவ பாஷை)தெய்வமொழி என்கின்றனர். பாரதியும் இதே கருத்தைத் தான் கூறியுள்ளார். (17) பாரதி, இன்னும் ஒரு படி மேலே போய், இந்தியாவிற்குச் சுதந்திரம் ஏன் தேவையென்றால் இந்து தர்மத்தைக் காப்பாற்றவே என்று, 1921இல் ‘லோக குரு பாரதமாதா’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

“எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக் கிடக்கிறது. ஆனால் இக்கொள்கையை முற்றும் அனுஷ்டித்தல் அன்னிய ராஜ்ஜியத்தின் கீழே ஸாத்யப்படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி. (18)

பாரதி அகன்ற பாரதக் கொள்கை உடையவர். என்றைக்கும் இந்தியா உடையக் கூடாது என்பதில் மிகவும் உறுதியானவர். பாரதியின் காலத்திலேயே 1917இல் தெலுங்கர்கள் தங்களுக்குத் தனி மாகாணம் தேவை என்ற கொள்கையை முன்வைத்தார்கள். அப்போது பாரதி கீழ்க்கண்ட கருத்துகளை முன் வைக்கிறார்:

“என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கண்ட கொள்கையெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது. ஆனாலும் அந்தச் சமயத்தில் ஆந்திரத்தைத் தனிப்பிரிவாக ருஜுபடுத்துவதைக் காட்டிலும், ஆப்கான் முதல் குமரி வரை உள்ள ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம், வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர், பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகள், நமக்குள் மதபேதம், ஜாதிபேதம், குலபேதம், பாஷாபேதம் ஒன்றும் கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடல், ஒன்று.” (19)

பாரதி பாப்பா பாட்டில் கூட,

சேதமில்லாத இந்துஸ்தானம் அதை
தெய்வமென்று கும்பிடடி பாப்பா

என்றுதானே கூறியுள்ளார்?

இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் போலவே பாரதியும் உடன்கட்டை ஏறி இறந்து போனவர்களை உத்தமிகள் என்று கூறுகிறார். (20) இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கொள்கைகளை அன்றைக்கு வகுத்துக் கொடுத்தவர் பாரதியார் என்று ஆணித்தரமாக நாம் சொல்லலாம்.

சுருங்கக் கூறின் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருதல், இசுலாமியரும் கிறித்துவரும் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள், அவர்கள் தேசபக்தி அற்றவர்கள், கிறித்தவர் பள்ளிகளில் இந்து மாணவர்களைச் சேர்க்கக் கூடாது, முகமதியர்களும் கிறித்துவர்களும் இந்துக்களின் விரோதிகள், இந்தியா முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்து மதத்தைப் பரப்ப வேண்டும்; இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; பிளவுண்டு மடியக் கூடாது, வேதத்தையும், தர்மத்தையும் நிலைக்கச் செய்ய வேண்டும், மீண்டும் நால்வருணம் வரவேண்டும், வகுப்புரிமை கூடாது, ஆரியர், திராவிடர் என்பது பொய், பாரதமாதா லோக குரு, பசுவதை கூடாது, சமஸ்கிருதம் உயர்ந்த மொழி; அது இந்தியாவிற்குப் பொதுமொழியாக வரவேண்டும் முதலான ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் எல்லாக் கொள்கைகளையும் வகுத்துக் கொடுத்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அன்றே கெட்டியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் பாரதியாரே என்பதை அவரது எழுத்துகளிலிருந்து அறிய முடிகிறது.

அடிக்குறிப்பு

1. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம்,ப.423
2. மேற்படி நூல், ப.121-123
3. மேற்படி நூல், ப.379
4. மேற்படி நூல், ப.381
5. பாரதி தமிழ் (தொ,ஆ) பெ.தூரன், வானதி பதிப்பகம்,ப.281-282
6. பாரதியார் புதையல் பெருந்திரட்டு,(தொ.ஆ) ரா.அ. பத்மநாபன், வானதி பதிப்பகம், சென்னை 1982,ப.478
7. பாரதியார் கட்டுரைகள்,ப.53
8. மேற்படி நூல், ப.176
9. Tippu Sulran,A Fanatic? V.Jalaja Sakthidasan, Ninhyananda jothi nilayam, P25, chennai-28.
10. மேற்படி நூல், ப
11. பாரதியார் கட்டுரைகள்,ப.334,335
12. பாரதி தமிழ் (தொ,ஆ) பெ.தூரன், வானதி பதிப்பகம்,ப.241
13. மேற்படி நூல், ப.278-280
14. பாரதி தரிசனம் தொகுதி 1,நி.செ.பு.நி, ப.258
15. M.S.Golwaker Bunch of Thoughts. Page 150
16. பாரதியார் புதையல் பெருந்திரட்டு, ப.274,275
17. பாரதியார் கட்டுரைகள்,ப.46
18. பாரதியார் புதையல் பெருந்திரட்டு, ப.500,501
19. பாரதி தமிழ் (தொ,ஆ) பெ.தூரன்,ப.255
20. பாரதியார் புதையல் பெருந்திரட்டு, ப.331,332

--------------வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் எட்டாம் அத்தியாயம் - பக்கம் 73-81


-----------------------நன்றி: "கீற்று"

11 comments:

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொரிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

என்ன, பாரதி அடித்தளம் அமைத்தாரா?அப்ப அல் கெய்தாவுக்கு அடித்தளம் அமைத்து தந்தது நம்ம ஊர் தாடிக்காரனா?இருக்கும் இருக்கும். பின் லேடனும் தாடிக்காரனும் ஒரே லெவல்ல சிந்திக்கும் குண சுந்தரங்களாயிற்றே.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பனப் பயங்கரவாதி முட்டாள் பாலாவின் உளறல்களில், அசிங்கமான பின்னூட்டங்களில் இதுவும் ஒன்று. இதில் ஏதாவது விவாதமுறை என்று ஒன்று இருக்கிறதா? தூற்றதுவதைத் தவிர.
உன்னுடைய பின்னூட்டங்களே உனக்கு
பதில் சொல்லும்.

தமிழ் ஓவியா said...

இந்தக்கட்டுரையில் இது தவறு, இது உண்மைக்கு மாறானது என்பதை சான்றுகளுடன் நிரூபிப்பதுதான் அழகு.

அதை விட்டு விட்டு கீழ்தரமாக பின்னூட்டம் போடுவது எந்த தர்க்க வகையில் சேர்ந்தது?

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொரிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ஏண்டா கருப்பு சட்டை வெறி நாய்களா உங்களுக்கு நாகரிகமாக,பகுத்தறிவோட பதிவோ,பின்னூட்டமோ போடத் தெரியாதா?

பாலா

தமிழ் ஓவியா said...

"ஆர்,எஸ்.எஸ் அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே"
என்ர கட்டுரையில் அசிங்கமாகவோ கீழ்த்தரமாகவோ ஏதாவது ஒரு வாக்கியம் உண்டா?
ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை. அதைமறுக்க துணிவின்றி கீழ்தரமாக பின்னூட்டம் போடுவது பார்ப்பானின் இழி நிலையைத்தான் காட்டுகிரது.
.

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

தமிழ் ஓவியா,

வாலாசா வல்லவனின் பாரதி குறித்த எண்ணங்களை முன்பே நான் கீற்றில் பார்த்தேன். ஆனால் அந்த கட்டுரைகளுக்கான நோக்கம் புரியவில்லை. அனைத்திலும் மிக சிரமப்பட்டு பாரதியை ஒரு வில்லனாக சித்தரிக்கும் நோக்கம் தான் புலனாகிறது. உண்மையில் சாதி இரண்டொழிய வேறில்லை என்று கூறிய பாரதி பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தது தான் இந்த அவதூறுகளுக்கு வாரி இறைக்க காரணம் என்பதைக் கண்டுபிடிக்க நாம் ஒன்றும் பெரிய விஞ்ஞானியாக இருக்க வேண்டாம்.

பாரதியாரின் கட்டுரைகளில் ஒரு சில பத்திகளை மட்டும் தவறான மேற்கோள் காட்டி கூறுவது ஆபத்தானது. பெரியார் ஒரு முறை "தமிழர்கள் காட்டு மிராண்டிகள்" என்று கூறி விட்டார் என்பதற்காக அவரை தமிழின எதிரி என்று சித்தரிப்பது எப்பேர்பட்ட பிழையோ , அத்தனை தவறானது இவ்வாறு ஜோடிப்பது.

ஜாதிகள் ஒழிய வேண்டும் என்பதோ, நாட்டில் சமதர்மம் தழைக்க வேண்டும் என்பதோ நோக்கமானால் அதற்கு இவ்வாறு சேற்றை வாரி இறைத்து விளம்பரம் தேடிக் கொள்வது சரியான வழியாக தெரியவில்லை.
அரை வேக்காட்டு சிந்தனைகளை பரப்புவது ஆபத்தாக முடியலாம். இவை ஏன் அரை வேக்காடு என்பதற்கு நான் தனி பதிவு போட்டு தான் விளக்க முடியும். இதற்கு
பதில் அயோத்திதாசர் சிந்தனைகளையோ, அம்பேத்கர் பெரியார் கருத்துக்களில் தற்போது - கவனிக்க - தற்போது பொருத்தமானவற்றைக் கூறி தற்போது நிலவும் சமுதாய அவலங்களை எவ்வாறு களையலாம் என்று ஆக்கப் பூர்வாக நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
இன்னொன்று - தரக்குறைவான பின்னூட்டங்களை அனுமதிப்பதன் மூலம் நீங்களும் தரம் தாழ்ந்து எழுத வேண்டி வருகிறது என்பதை மட்டும் நினைவு கொள்ளுங்கள்.

தமிழ் ஓவியா said...

//பாரதி பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தது தான் இந்த அவதூறுகளுக்கு வாரி இறைக்க காரணம் என்பதைக் கண்டுபிடிக்க நாம் ஒன்றும் பெரிய விஞ்ஞானியாக இருக்க வேண்டாம்.//

தோழர் வந்தியத் தேவன் அவர்களே

தங்களின் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.


தோழர் வாலாசா வல்லவனின் பாரதி குறித்த கட்டுரைகளில் இந்த இடம் தவறானது, அல்லது இட்டுக்கட்டியது என்பது பற்றிஎழுதினால் அல்லது ஆய்வு செய்து அதுபற்றி நிரூபித்தால் நான் மடுமல்ல அறிஞர் பெருமக்கள் அனைவரும் ஏற்பர்.

பாரதி பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்ததால் எதிர்க்கவில்லை. பார்ப்பனியத்தை கடைபிடித்ததால் எதிர்க்கிறோம்.

எனது வலைப்பூவில் பாரதியார் பற்றி தலைப்பு வாரியாக ஒரு சில கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன். அருள்கூர்ந்து படியுங்கள்.
அதே போல் வே.மதிமாறன் அவர்கள் "பாரதிய ஜனதா பார்ட்டி" என்ற நூல் எழுதியுள்ளார். அந்த நூலும் இணையத்தில் கிடைக்கிறது. படியுங்கள். மாற்றுக் கருத்து இருந்தால் ஆரோக்கியமான விவாதத்தை தொடரலாம்.

//அயோத்திதாசர் சிந்தனைகளையோ, அம்பேத்கர் பெரியார் கருத்துக்களில் தற்போது - கவனிக்க - தற்போது பொருத்தமானவற்றைக் கூறி தற்போது நிலவும் சமுதாய அவலங்களை எவ்வாறு களையலாம் என்று ஆக்கப் பூர்வாக நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.//

தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

//இன்னொன்று - தரக்குறைவான பின்னூட்டங்களை அனுமதிப்பதன் மூலம் நீங்களும் தரம் தாழ்ந்து எழுத வேண்டி வருகிறது என்பதை மட்டும் நினைவு கொள்ளுங்கள்.//

இப்படியெல்லம்கூட கீழ்தரமாக எழுதமுடியுமா? என்று வியந்தேன். இது குறித்து எனது தோழர்களிடம் கலந்து பெசியபோது அவர்கள் நகரிகம் அப்படி. முடிந்த அளவு நாம் நாகரிகமாக எழுதலாம் என்று கூறினார்கள்.

இன்னும் கூட இந்திய அரசியல் சட்டப்படி நாம் இழிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாது பெரியார் அவ்ர் வாழ்ந்த காலத்தில் எப்படியெல்லாம் இழிவு படுத்தப்பட்டார் அதையெல்லாம் பொருட்படுத்தாது பாடுபட்டார்.

எனவே ஒரு சிலரின் கீழ்த்தரமான பின்னூட்டங்கள் பற்றி அலட்சியப்படுத்தி, அதைப்பற்றியும் எடுத்துச் சொல்லி மாற்றத்தை உண்டு பண்ன வேண்டும் என்ற அடிப்படையிலேயே பின்னூட்டங்கள் அனுமதிக்கப் படுகிறது.

தங்களின் கருத்துக்கு மீண்டும் நன்றி.

☀நான் ஆதவன்☀ said...

அய்யா தமிழ் ஓவியா ஏன் இந்த விபரீத விளக்கங்கள். பாரதியார் நீங்கள் கூறியபடியே ஒரு வேளை இருந்தாலும் இன்றைய என் போன்ற இளைய தலைமுறையினரிடையே அவர் விடுதலை கவி மற்றும் குழந்தை கவி போன்ற எண்ணமே இருந்து வருகிறது. ஒரு அரசியல் தலைவராக அல்ல...
நம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட ஒரு கவிஞரை பார்ப்பனர் என்ற ஒரே காரணத்திற்காக இப்படி இழிவுபடுத்துதல் நியாயமா?. பாடபுத்தகங்களில் அவர் ஒரு கவிஞராக கூறப்பட்டுள்ளாரே தவிர அரசியல் தலைவராக இல்லை. உண்மையிலேயே நீங்கள் நம் சமுதாயத்தை சீரமைக்க தந்தை பெரியாரின் கருத்துக்களை முழுமையாக மக்களிடம் சேர்த்தாலே போதுமானது என்பது என் எண்ணம். வீணாக இறந்து போன ஒரு கவிஞனை இழிவுபடுத்துதல் வேண்டாம்.

//இன்னும் கூட இந்திய அரசியல் சட்டப்படி நாம் இழிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். //

அந்த சட்டத்தை இயற்றியதே நம் அம்பேத்கர் தான். அவர் முற்போக்கு சிந்தனையுடன் சட்டத்தை வடிவமைக்கவில்லை என்று சில கும்பல் பரப்பினால் என்னாவது?

தமிழ் ஓவியா said...

//பாடபுத்தகங்களில் அவர் ஒரு கவிஞராக கூறப்பட்டுள்ளாரே தவிர அரசியல் தலைவராக இல்லை.//

சரிதான் தோழரே. ஆனால் பார்ப்பனர்கள் தங்களின் ஆளுமையை தக்க வைக்க பாரதியாரத் தூக்கிப் பிடிக்கும் போது பாரதியார் கட்டுடைக்கப் படுகிறார்.
பாரதியின் உண்மை முகம் தோலுரிக்கப்படுகிறது.

பாரதியார் பற்றி தவறாக கருத்துக் கூறியிருந்தால் ஆதாரங்களுடன் மறுக்கலாமே?

பார்ப்பனர் என்ற காரணத்துக்காக பாரதியாரை நாங்கள் விமர்சிக்க வில்லை. அவரின் உண்மை முகம் பார்ப்பனியமாக இருப்பதால் கட்டுடைக்கப் படுகிறார்.

பாரதிக்கு கொடுக்கும் அதி முக்கியம் புரட்சிக் கவிஞருக்கு கொடுப்பதில்லை என்பதை தங்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

யாரையும் இழிவு படுத்தல் என்பது எமது நோக்கம் அல்ல அது தேவையும் அல்ல.

பாரதியின் உண்மை முகத்தை அறிந்து கொள்ள ஒரு சோறு பதம் என்பது போல் "வே.மதிமாறனின் ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி நூலிலிருந்து
இக்கட்டுரையை தருகிறேன். படியுங்கள் உண்மையை உணருங்கள் தோழரே.
இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பின் ஆரோகியமாக விவாதிப்போம்.

"வே.மதிமாறனின் ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி



(பாரதியார் பற்றியான ஆய்வு)
அப்படியென்ன பொல்லாத பாரதியின் காலம்..?
-வே. மதிமாறன்
முன்னுரை

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த துணைக் கண்டத்தில் இருந்தபோது, நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன.
அதில் முக்கியமான இரண்டு,
1. இந்தியா என்ற ஒரு நாடு உருவானது.
2. இந்த இந்தியச் சமூகம், நிலப்பிரபுத்துத்திலிருந்து முதலாளித்துவ சமூகமாக மாறும் முயற்சியில் இறங்கியது. ஏறக்குறைய மாறியது.
இதில் மிகக் குறிப்பாக இந்தியாவின் நகரங்கள், செழிப்பான பகுதிகள் முதலாளித்துவ முகம் பெறலாயின. இந்த நகரங்களிலும், செழிப்பான பகுதிகளிலும் வாழ்ந்த - இந்திய மன்னர்கள், செல்வந்தர்கள், பார்ப்பனர்கள் இவர்களுக்கு நிலப்பிரபுத்துவ தோல் உறிந்து, முதலாளித்துவ தோல் வளர ஆரம்பித்தது.
மன்னர்களும், செல்வந்தர்களும் கள்ளுப் பானையிலிருந்து - விஸ்கி பாட்டிலுக்கு மாறினார்கள். முதலாளித்துவ `சொகுசு` தன் மீது படரும் வரை பொறுமையாக அமைதி காத்தார்கள்.
ஆனால், பார்ப்பனர்கள் முதலாளித்துவம் தம்மை வந்து அடையும்வரை காத்திருக்க அவர்களுக்குப் பொறுமை இல்லை அல்லது பொறுமையாக இருந்தால், ‘வேலைக்காகாது’ என்ற காரணத்தால், முதலாளித்துவத்தை தன் இரண்டு கைகளையும் நீட்டி அன்போடு, `வருக, வருக` என்று வரவேற்றபடி, அதிவேக வாகனத்தில் ஏறி, முதலாளித்துவத்திடம் முதலில் சென்றடைந்தார்கள்.
மன்னர்களிடம் இருந்த தனது மரியாதைக்குரிய புரோக்கர் பணியை அல்லது ஆலோசனை வழங்கும் பணியை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குத் தானாகவே `பணி மாற்றம்` செய்து கொண்டார்கள்.
ஆம்,
மன்னர்களிடம், மன்னர்களுக்குக் கீழ் ராஜ குருவாக, ஆலோசகராக இருந்த பார்ப்பனர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வருகைக்குப் பிறகு மன்னர்களைவிடவும் அதிக எல்லைகளைக் கொண்ட பகுதிகளை ஆண்டார்கள். மன்னர்கள் மண்ணைக் கவ்வினார்கள்.
ஏகாதிபத்தியம் கொண்டு வந்த முதலாளித்துவத்தை அடைய பார்ப்பனர்கள் ஏறிய அதி வேக வாகனம் எது தெரியுமா?
ஆங்கிலம்.
சமஸ்கிருதம் தெரியாத பார்ப்பனர்களைக் கூட நிறைய பார்க்கலாம். ஆனால், ஆங்கிலம் தெரியாத பார்ப்பனர்களைப் பார்ப்பது அரிது, அரிது பார்ப்பதரிது.
ஆங்கிலத்தின் மீதான இந்த அன்பு, அந்த மொழியின் மீது ஏற்பட்ட காதலா?
ஆம். அவர்கள் அப்படியும் சொல்லிக் கொள்கிறார்கள்.

பிரிடடிஷ்காரனின் தாய் மொழி, தந்தை மொழி இரண்டுமே ஆங்கிலம்தான். அதன் பொருட்டேதான் பார்ப்பனர்களுக்கு, `சில்வர் டங்க்` முளைத்தது. இரண்டாம் உலகப் போரின் போது இட்லர் வெற்றி பெற்று விடுவான் என்று நம்பி பார்ப்பனர்கள் ஜெர்மன் படிக்க ஆரம்பித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
தனது சனாதனதர்மங்களோடே முதலாளித்துவத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட பார்ப்பனர்கள், தனது ஜாதிக்குள் எந்த சீர்திருத்தக் கருத்துகளையும் அறிவிக்காமல், சுற்றிக்கை விடாமல் குடுமியில் இருந்து கிராப்புக்கு மாறினார்கள்; மீசை வளர்த்துக் கொண்டார்கள்; சிரைத்துக் கொண்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, தன் குலப் பெண்களுக்கு கல்வியை தீவிரமாகக் கற்பிக்க ஆரம்பித்தார்கள்.
இப்படியாக ஆண்களூம், பெண்களூம் அரசு உத்தியோகம் பார்க்கத் தயாரானார்கள். கணவனை இழந்த பெண்களை மொட்டை அடித்து, முக்காடு போட்டு மூலையில் ‘உக்காத்தி வைச்ச‘ பார்ப்பனியம், உடல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் மாத சுழற்சியை ‘தீட்டு‘ என்று சொல்லி அவளை அந்த மூன்று நாளும் வீட்டுக்கு வெளியே ஒதுக்கி வைத்து, அவள் மீது தீண்டாமையை அனுஷ்டித்து பெண்ணைக் கேவலப்படுத்திய பார்ப்பனியம், எந்த அறிவிப்பும் இன்றி, அந்தக் கொடுமைகளைத் தன் ஜாதிக்குள் முற்றிலுமாக ஒழித்துக் கொண்டது.
இது, முதலாளித்துவ தாக்கத்தால் அன்றி வேறு எதனால்?
இப்படி பார்ப்பன ஜாதிக்குள் கல்வி கட்டாயமக்கப்பட்ட சூழ்நிலையிலேயே பாரதி - சமூக சீர்திருத்தம், பெண்கல்வி குறித்துப் பாடுகிறார்.
இது பாரதியிடம் மட்டும் நிகழ்ந்த மாற்றமல்ல, ஒட்டுமொத்தப் பார்ப்பன சமூகத்திலேயே நிகழ்ந்த மாற்றம்.
தன் நலனில் அக்கறை கொண்டு ஆங்கிலக் கல்வி கற்ற பார்ப்பனியம், வழக்கம்போல் அந்தக் கல்வியையும் அடுத்தவற் கற்காமல் இருப்பதற்கு, அனைத்துத் தடைகளையும் விதித்தது.
(மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில் சமஸ்கிருதம் ஒரு பாடமாக இருந்தது. பின்னர் வந்த நீதிக்கட்சி அரசு (பனகல் அரசர்) அதை நீக்கியது.)
அதையும் மீறி படித்தவர்களின் புகழை மறைத்தது.
ஆம், இதை முதலாளித்துவ வடிவம் பெற்ற சனாதன தர்மம் எனலாம்.
முதலாளித்துவ வடிவம் பெற்ற இந்த சனாதன பாணி முற்போக்கு, பாரதியிடமும் இருந்தது. பெண் கல்வி குறித்து, வீரவேஷம் கடடிப் பாட்டுப் பாடிய பாரதி, மிகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பல சிரமங்களுக்கிடையே படித்து 1912 ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப்பற்றி, ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடவில்லை. அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் சுயநினைவோடுதான் வாழ்ந்தார் பாரதி.

வேத, புராணக் காலத்துப் பெண்களின் புகழ், வெளிநாட்டு பெண்களின் புகழ் குறித்தெல்லாம் விரல் நுனியில் தகவல் வைத்திருந்த பாரதிக்கு, தான் வாழ்ந்த ஊரிலேயே வாழ்ந்த, ஒரு தமிழச்சியின் சாதனை தெரியாமல் போனது ஏன்? இதுதான் ‘செலக்டிவ் அம்னீஷியாவோ?’
ஆம், முத்துலட்சுமி அம்மையார், பாரதி பரம்பரையினரால் கல்வி மறுக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்.
நிற்க.
தொடர் கட்டுரையாக எழுதும்போது, ‘இந்துத்துவா‘ என்று குறிப்பிட்டிருந்தேன்.
இந்த ‘இந்துத்துவா‘ என்கிற வார்த்தை இந்த மதத்தைப் பாதுகாப்பது போலவும், ‘இந்துத்துவாதான் மோசமானது இந்து மதம் மிகவும் நல்லது‘ என்பது போன்ற அர்த்தத்தைத் தருவதாகவும் எனக்குப்பட்டதால், ‘இந்துத்துவா‘ என்கிற வார்த்தையை இந்து மதம் என்று மாற்றிக் குறிப்பிட்டிருக்கேறன்.

தோழமையுடன்
வே. மதிமாறன்
டிசம்பர் 2002
`பாரதி` ய ஜனதா பார்ட்டி நூலின் முதல் பதிப்புக்கான முன்னுரையில்


முதல் அத்தியாயம்
‘மார்க்சியம் பெண்களுக்காகப் பேசவில்லை’
‘அம்பேத்கர் வெறும் ஜாதித் தலைவர்’
‘பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதி’
‘இட்லர் வரிசையில் ஸ்டாலின்’
என்று அறிவுக் கொழுப்பெடுத்து அவதூறு அள்ளி வீசும் அறிஞர்கள்,
முரண்பாடுகளின் தொகுப்பான (’இந்து மத’ கருத்துகளில் மட்டும் முரண்பாடில்லாத) ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியைப் பற்றி சொல்லும்போது மட்டும் - தன் கருத்துகளை எல்லாம் பாரதி தலையில் சுமத்தி -
‘அவரை இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்’, ‘அப்படிப் பார்ப்பது பாரதியை புரிந்து கொள்ளாத வறட்டுத் தன்மை’ என்று சுப்பிரமணிய பாரதிக்கு கிரீடம் சூட்ட முயற்சித்து, நம்மைத் தெளிவாக குழப்புவார்கள் - குழப்புவதில் தெளிந்தவர்கள்.
தொடர்ச்சியான முரண்பாடு, அதுவே பாரதியின் தனித்துவம்.
முரண்பாடுக்கான காரணம், தான் சொல்லுகிற செய்தியில் அர்ப்பணிப்பின்மை; நம்பிக்கையின்மை (சமூக சீர்த்திருத்தக் கருத்துகளில் மட்டும்)
பெண்விடுதலை குறித்த தனிப்பாடல்களில், தனிக் கட்டுரைகளில் ஓ…. வென்று சப்தமிடும் சுப்பிரமணிய பாரதி-அதை தொடச்சியாக மற்ற பாடல்களில் கடைப்பிடிப்பதில்லை.
தீவிரவாத(?) இயக்கத்தில் பங்கு கொண்டு மிதவாதிகளின் உப்பு சத்தியாக்கிரகத்தை, அவர்களின் இயக்கத்தை கடுமையாகச் சாட வந்த பாரதி,
‘கண்கள் இரண்டிருந்தும காணுந்திறமையற்ற
பெண்களின் கூட்டமடி! கிளியே!
பேசிப் பயனென்னடி|? - என்கிறார்,
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தியவர்.
சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்கு வீர உரை ஆற்றுவது போல் பாடல் அதில்,
‘வீரரைப் பெறாத மேன்மை தீர் மங்கையை
ஊரவர் மலடியென்றுரைத்திடு நாடு’
……………………………………………………………………………..
……………………………………………………………………………..
‘ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும்
விணில் இங்கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்’
……………………………………………………………………………..
……………………………………………………………………………..
‘பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்’
……………………………………………………………………………..
……………………………………………………………………………..
பெரும்படையுமாம் பெண்மையெங் கெய்தினை?’
-என்று பாரதியின் வாயால் சத்ரபதி சிவாஜி ‘ஆண்மையுரை‘ ஆற்றுகிறார்.
பாஞ்சாலி சபதத்தில், பெண்மைக்கு இழைக்கப்படும் தீங்கைக் கண்டு ‘கோ…’ வென்று கதறிக் கொண்டே வந்து, ‘பொம்பளைங்கள கேவலப்படுத்தறானுங்க பொட்டப்ப பசங்க’ என்கிற ரீதியில் -
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்கு துணையாகுமோ?’
-என்று
‘சேம்சைடு கோல்’ போடுகிறார் சுப்பிரமணிய பாரதி.
‘2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பெண்களுக்கு எதிராக சிந்தித்து இருக்கிறார்’ என்று கோபப்படுகிற ‘ஞாநி’ கள், 80 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இப்படி முன்னுக்குப் பின் முரணாக இருந்திருக்றாரே என்று சந்தேகிப்பதுகூட இல்லை.
சுப்பிரமணி பாரதிக்கு மட்டும் இலக்கியத்தில் ‘இடஒதுக்கீடு’ போலும்.

முரண்பாடுகளின் தொடரச்சியில், காந்தியை - காந்தியத்தை கேலி செய்து,
‘உப்பென்றும் சீனி என்றும் உள்நாடடுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடி! கிளியே; செய்வதறியாரடீ!’
என்று கை கொட்டி சிரித்து கேலி செய்யும் பாரதி - மற்றொரு பாடலில்,
‘வாழ்க நீ; எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க; வாழ்க!’ - என்று வானுயர ‘கட்அவுட்’ வைத்து கைதட்டுகிறார்.
காரணம் - நல்லது கெட்டது என்று நாட்டில் பேசப்படுகிற அனைத்துச் செய்திகளையும் கவிதையாக்கி ரசிப்பது. அதன் பொருட்டே - அல்லாவைப் பற்றி பாடல், ஏசுவைப் பற்றிய பாடல், ரஷ்ய புரட்சி பற்றிய கவிதை, பெண் விடுதலை குறித்த பாடல்கள் இன்னும் குள்ளசாமி, கோவிந்தசாமி, யாழ்ப்பாணசாமி மீது பாடல்கள்.
தன் தேவைகளுக்காக எட்டயபுரம் ராஜா, மகாராஜாக்கள் மீதான சீட்டுக் கவிகள்.

முரண்பாடுகள் என்பது, ‘கவிதா மனோபாவம்’ போலும்.
‘உலகில் இந்து மத்திற்கு இணையாக ஒரு மதமும் கிடையாது. அதில் எல்லாம் இருக்கிறது.’ - என்று தோள்தட்டி, தொடை தட்டி - பாகம், பாகமாக அர்த்தமுள்ள இந்து மதம், யோக மாலிகா, ராக மாலிக என்று பேப்பர்களை வீணடித்த கண்ணதாசன், சாகும்போது மரண வாக்குமூலம் போல, ‘ஏசு காவியம்’ பாடிவிட்டு செத்துப் போனார்.
கண்ணதாசன் மாதிரி தனக்கென்று தத்துவம், இலக்கு எதுவும் இல்லாத பித்துக்குளி, புகழ் விரும்பி, தேவைகளுக்கு அடிமையானவர் என்று சுப்பிரமணிய பாரதியை நாம் சுருக்கிவிட முடியாது.
பெண் விடுதலை, சுதந்திரம், ரஷ்ய புரட்சி, உலகச் செய்திகள் என்று ‘எனக்கு இதெல்லாம் தெரியும் பார்’ என்ற பந்தா இருந்தாலும், பார்ப்பனியம், ‘இந்து மத’ சிந்தனையில் முரண்பாடுகள் இல்லாத முழு சுப்பிரமணய பாரதியை நாம் ‘தரிசிக்க’ முடிகிறது.
இந்தியாவை ‘பாரதம்’ என்று சொல்வதிலேயே கவனமாக இருந்திருக்கிறார்.
‘இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தியாவில் இல்லையே’
-என்ற ஒரு இடத்தைத் தவிர - தன் கவிதைகள் எல்லாவற்றிலும் ‘பாரத தேசம் என்று தோள் கொட்டுவதி’லேயே குறியாக இருந்திருக்கிறார், ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர். அதுவும் பாரதத்தில் வாழ்கிற அனைவரும் ‘ஹிந்துக்கள்’ என்று அடையாள அட்டை வேறு வழங்குகிறார்.
‘பாரதம், பரதன் நிலை நாட்டியது, இந்த பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இந்நாட்டை இவன் ஒன்று சேர்ந்து, அதன் மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால், இந்த நாட்டிற்கு பாரத தேசம் என்று உருவாயிற்று’ என்று புளுகுகிறார் என்றால், அது மகாகவியை கேவலப்படுதியதாகும். அதனால் ‘வரலாற்று ஆதாரங்களை அள்ளித்தருகிறார்’ என்று நாம் புளுகி வைப்போம்.

பாரத தேசம் என்று சொல்லாத நேரங்களில் - ‘இது ஆரிய நாடு’ எனறு அழுத்தமாகச் சொல்கிறார்.
‘ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொலும் வீரிய வாசகம்’
(வந்தே மாதரம்)
என சுதந்திர தீ மூட்டி,
‘உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவும் இஃதை எமக்கில்லை ஈடே’
-என்று யாகம் வளர்க்கிறார்.
‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ என்ற குதூகலிக்கிற பாடலில்,
‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்றார்.
பார்ப்பனர்கள் மூன்றுசதவிதமே உள்ள இந்த இந்திய துணைக் கண்டத்தை ‘ஆரிய பூமி’ என்று துணிச்சலோடு சொல்லும் பாரதி, தமிழர்கள் பெருவாரியாய வாழும் நாட்டை - ‘சிங்களத் தீவு’ என்று சொன்னாலும் அதை மறந்து, ‘அன்றே சொன்னான் பாரதி.
அவன் சொன்னது போல் பாலம் கட்டியிருந்தால், திபு, திபுவென்று பாலத்தின மீதே ஓடி என்னுயிர்த் தமிழர்களின் துயர்துடைக்க உதவி இருக்குமே’ என்று வீரம் பேசவாவது உதவுகிறது. நல்லது!
‘வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’
ஆஹா! அற்புதமான நதிநீர் பங்கீடு.
‘கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’
‘கங்கை-காவிரி’ன்னு இதுவும் பொருத்தமாதான் இருக்கு.
‘சிங்க மாராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்’
-’இந்து மத திலகர் பிறந்த பூமி என்பதால் அது சிங்க மராட்டியம் போலும். பரவாயில்லை. யானைகள் அதிகம் நிரம்பிய கேரளாவில் இருந்து தந்தங்களைக் கொடுத்துவிடடு, இளிச்சவாய்த் தனமாக கவிதைகளை வாங்கி வைத்துக் கொள்ளட்டும்.
இப்படி எதைக் கொடுத்து, எதை வாங்குவது என்கிற பொருளாதார கவிதை எல்லாம் சரிதான். ஆனால், இதற்கெல்லாம் சேர்த்து வேட்டு வைப்பது மாதிரி,
‘காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்கிறார்.
இதை ‘காவுக்கு கா’ போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பாரக்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழுங்கவும் முடியாது.
தேசிய கவிஞனாக இருந்தால்,
‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்
கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’
என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.
சரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான்? அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரததுக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?
‘வேற ஒண்ணுமல்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச ‘பெரியவாளெல்’ லாம், மார்க்கிய அடிப்படையில் புரட்சிகரத் திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜகத்குருக்களிடம் தெரிவித்தால் - ‘ஜகத் குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னு சொன்னாலும் சொல்வார்கள்- மார்க்சிய பாரதியவாதிகள்!
தோழமையுடன்
வே. மதிமாறன்
டிசம்பர் 2002
`பாரதி` ய ஜனதா பார்ட்டி நூலின் முதல் அத்தியாயம்

தமிழ் ஓவியா said...

//அந்த சட்டத்தை இயற்றியதே நம் அம்பேத்கர் தான். அவர் முற்போக்கு சிந்தனையுடன் சட்டத்தை வடிவமைக்கவில்லை என்று சில கும்பல் பரப்பினால் என்னாவது?//

தோழர் ஆதவன் அவர்களுக்கு,

வணக்கம்

அம்பேத்கர் அவர்களின் மேற்கோள் இது. படியுங்கள்:

"இந்திய அரசியல் சட்டத்தை நான் எழுதியதாகச் சொல்லுகிறார்கள்.இப்போது ஆன் சொல்லுகிறென் "அந்தச் சட்டத்தை தீ வைத்துக் கொளுத்த முதல் ஆளாக இருக்கிறேன்" என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
-----டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் 3-9- 1953 பாராளுமன்ற உரையிலிருந்து .

தோழர் ஆதவன்,

அம்பேத்கர் அவர்கள் பொதுக்கூட்டத்தில் மேற்கண்ட கருத்தை தெரிவிக்கவில்லை. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்கள். அது அவைக்குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது.

அம்பேத்கர் ஏன் சட்ட அமைசர் பதவியிலிருந்து விலகினார் என்பது பற்றியெல்லாம் தெளிவாக எழுதியுள்ளார். அருள்கூர்ந்து அம்பேத்கர் தொகுப்பு நூல்கள் கிடைக்கிறது படிக்க வேண்டுகிறேன்.

சட்ட வரைவுகளை நிறை வேற்ற விடாமல் எப்படியெல்லாம் தடுத்தார்கள் என்பது பற்றி அம்பேத்கர் தெரிவித்த விபரம் இதோ:

"இந்து சட்டவரைவை பிரதமர் நேரு திட்டமிட்டே நிறைவேற்ற மறுத்தார் - V

இந்து சட்ட வரைவு அவையின் முன்னால் இருந்த போதே, அது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. ஓர் ஆண்டுவரை அதைப் பொறுக்குக் குழுவுக்கு அனுப்புவது அவசியம் என்றே அரசு கருதவில்லை. 1948 ஏப்ரல் 9 அன்று தான் அது பொறுக்குக் குழுவின் பரிசீலனைக்காக அளிக்கப்பட்டது. 1948 ஆகஸ்டு 12 அன்று தான் அந்த சட்டவரைவு குறித்த அறிக்கை அவைக்கு வழங்கப்பட்டது. 1948 ஆகஸ்டு 31 அன்று அந்த அறிக்கையை ஆய்வு செய்யக்கோரும் தீர்மானத்தை, அவையில் கொண்டு வந்தேன். தீர்மானத்தைக் கொண்டு வருவதற்காகவே சட்ட வரைவு அவையின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், 1949ஆம் ஆண்டின் பிப்ரவரி கூட்டத்தொடர் வரை, இந்தத் தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற அனுமதிக்கப்படவில்லை. பின்னர் விவாதம் அனுமதிக்கப்பட்டது.

அப்போதும் கூட தொடர்ந்த விவாதத்திற்காக அது அனுமதிக்கப்படவில்லை. அது விட்டுவிட்டுப் பத்து மாதங்களும், பிப்ரவரியில் 4 நாட்களும், மார்ச்சில் 1 நாளும், 1949 ஏப்ரலில் 2 நாட்களும் நடைபெற்றது. இதற்குப் பின்னர் 1949 டிசம்பரில் இச்சட்ட வரைவுக்கு ஒரு நாள் ஒதுக்கப்பட்டது. அது டிசம்பர் 19 ஆகும். அன்று தான் பொறுக்குக்குழுவினால் பரிந்துரைத்தபடியான எனது சட்ட வரைவு, பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1950ஆம் ஆண்டில் சட்ட வரைவுக்கு நேரம் எதுவும் கொடுக்கப்படவில்லை. அடுத்தபடியாக, அவையின் முன் சட்ட வரைவு வந்தது 1951 பிப்ரவரி 5ஆம் தேதியாகும். அப்போது சட்ட வரைவு ஒவ்வொரு விதியாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிப்ரவரி 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே சட்ட வரைவுக்கு ஒதுக்கப்பட்டு, பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது.

இது, இப்போதைய நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத் தொடராதலால், இந்த நாடாளுமன்றம் முடிவடைவதற்கு முன்பே இந்து சட்டத் தொகுப்பு சட்ட வரைவை நிறைவேற்றுவதா அல்லது புதிய நாடாளுமன்றத்திற்கு அதனை விட்டு விடுவதா என்பதை அமைச்சரவை தீர்மானிக்க வேண்டியிருந்தது. இந்த நாடாளுமன்றத் தொடரிலேயே இந்த சட்ட வரைவை நிறைவேற்றுவது என்று அமைச்சரவை ஒருமித்ததாக முடிவு செய்தது. ஆகவே சட்ட வரைவு நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டது. மேற்கொண்டு விதி வாரியான பரிசீலனைக்காக 1951 செப்டம்பர் 17 அன்று அது எடுத்துக் கொள்ளப்பட்டது.

விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிரதமர் ஒரு புதிய யோசனையை முன்வைத்தார். அதாவது, கிடைக்கக்கூடிய கால நேரத்திற்குள் சட்ட வரைவை முற்றிலுமாக நிறைவேற்ற இயலாது. ஆகவே சட்ட வரைவு முழுவதையும் நிறைவேற்ற அனுமதி அளிப்பதற்குப் பதிலாக, அதன் ஒரு பகுதியை சட்டமாக இயற்றுவது விரும்பத்தக்கது என்று அவர் யோசனை கூறினார். “மொத்தமும் இழந்துவிடக்கூடிய நிலையில் இருக்கும் போது, ஒரு பகுதியையாவது பாதுகாப்பது நல்லது” என்ற முதுமொழிக்கு இணங்க நானும் அதை ஏற்றுக் கொண்டேன்.

திருமணம் மற்றும் மணவிலக்குக்கான பகுதியை நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று பிரதமர் யோசனை கூறினார். இந்த வகையில், சிதைக்கப்பட்ட வடிவத்தில் சட்ட வரைவு தொடர்ந்தது. சட்ட வரைவு குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் விவாதங்களுக்குப் பின்னர், பிரதமர் மற்றுமொரு யோசனையை முன்வைத்தார். திருமணம் மற்றும் மணவிலக்குப் பகுதி உட்பட, சட்ட வரைவு முழுவதையுமே கைவிட்டு விடலாம் என்பது அவரது யோசனையில் இருந்தது.

தலைமீது இடி விழுந்தது போல, இது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் பெரிதும் திகைத்துத் திணறிப் போய் எதையும் சொல்ல முடியாத நிலைக்கு வந்தேன். இந்த சிதைக்கப்பட்ட சட்ட வரைவும் போதிய கால நேரம் இல்லாத காரணத்தால் கைவிடப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை. அமைச்சரவையின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பிற உறுப்பினர்களின் சட்ட வரைவுக்கும் பத்திரிகைத் துறை சட்ட வரைவுக்கும் எப்படி முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை...

ஆகவே அவகாசம் இல்லை என்பதால் சட்ட வரைவைக் கைவிடும் பிரதமரின் முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனது பதவி விலகலுக்காக இந்த விரிவான விளக்கத்தை நான் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில் நான் நோய்வாய்ப்பட்டிருப்பதன் காரணமாகவே பதவி விலகுவதாகக் கூறும்படி என்னிடம் சிலர் யோசனை கூறியுள்ளனர். இத்தகைய யோசனைகள் எதையும் நான் ஏற்கத் தயாரில்லை. நோய்வாய்ப்பட்டிருப்பதன் காரணமாக எனது கடமையைக் கைவிடும் கடைசி மனிதன் நான்தான்.

எனது பதவி விலகல் காலங்கடந்து நடந்துள்ளது என்றும், அரசின் வெளியுறவுத் துறைக்கொள்கை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் நடத்தப்படும் விதம் எனக்கு நிறைவளிப்பதாக இல்லை என்றும் நான் எண்ணியிருந்தால், முன்னதாகவே நான் பதவி விலகியிருக்க வேண்டும் என்று சிலர் கூறலாம். இக்குற்றச்சாட்டு நியாயமானது போல் தோன்றக்கூடும்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1324)

அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டம் எழுத நான் வாடகைக் குதிரையாகப் பயன் படுத்தப் பட்டேன் என்றும் எழுதியுள்ளார்.

அருள்கூர்ந்து மேலோட்டமாக பார்க்கமல் ஆழமாக சிந்தித்தி முடிவு எடுக்க வேண்டுகிறேன்.

நன்றி.

தமிழ் ஓவியா said...

"வே.மதிமாறனின் ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி நூலின் இரண்டாவது அத்தியாயம்

படியுங்கள்.

‘பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான்,
-என்று பார்ப்பனர்களையே சாட்டை எடுத்து விளாசி இருக்கிறான் முண்டாசுக் கவி.
அது மட்டுமா-
‘ஒரு கிழச் சாம்பான் என்னிடம் வந்து “முப்போதும் நீரில் முழுகிக் குளித்தால் முனிவர்களாவாரோ? எப்போதும் இன்பத்திலிருப்பவரன்றோ இருபிறப்பாளாவார்? என்ற தத்துவராயர் வாக்கைச் சொல்லிப் பறையென்பது ஹிந்து தர்மத்தில் கோயிற் பேரிகை யென்றும், அதைக் கொட்டுவோன் பறையன் என்றும், பறையென்பது சக்தியின் பெயரென்றும், அவளே ஆதி என்றும், சிவனே பகவன் என்று பிராமண ரூபங்ககொண்டு அவளுடன் வாழ்ந்தானென்றும், பறையர் மேன்மைப் பட்டால் பார்ப்பார், வேளாளர், முதலியார், செட்டியார் முதலிய இதர ஜாதியாரும் மேன்மையடைவார்கள் என்றும் பலவித நீதிகளைச் சொன்னான். அதே கருத்துடையவராய் ஹிந்துக்களுடைய விடுதலையிலும், மேம்பாட்டிலும் மிகுந்த நாட்டத்துடன் உழைத்துவரும் ஸ்ரீ நீதிபதி மணி அய்யரும், வைத்தியர் நஞ்சுண்டராயரும், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்காரும் பறையர் குலத்தைக் கைதூக்கி விடுவதில் தம்மால் இயன்ற வரை உதவி செய்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’
“தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அக்கறையுடன் அழுதிருக்கிறான் பாரதி” என்று புல்லரிக்கும் அறிஞர்களின் கவனத்திற்கு,
‘ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திருப்பவர் அன்றோ?”
‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற இந்த விஷம் தோய்ந்த வார்த்தை அல்லது விஷமாகவே இருக்கிற வார்த்தை எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
எம்முடன் என்பது யாருடன்?
ஆரியர்களா?
அவர்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்களோ?
அவர்கள்தான் மற்றவர்கள் இந்த மண்ணில் வாழ்வதற்கு ‘குடியுரிமைப் பட்டயம்’ அளிப்பவர்களோ?
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வருத்தப்பட்டு பாரம் சுமந்தாக சொல்லப்படும் இந்தக் கவி, தாழ்த்தப்பட்ட மக்களை ஈவு இரக்கமற்ற முறையில் நடத்தும் - இந்து மதத்தின் தலைமை கர்த்தாக்களான - பார்ப்பனர்களை அவர்களின் ‘மனுஸ்மிருதி‘ செய்கையைக் கண்டித்து,
‘ஈன்ப் பார்ப்பனர்களேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவர் அன்றோ’
-என்று எழுதியிருந்தால்,
“தன் சொந்த ஜாதியை சேர்ந்த பார்ப்பனர்களையே வெளுத்து வாங்கியிருக்கிறான் முண்டாசுக் கவி” என்று அறிஞர்கள் ‘முண்டா’ தட்டுவதில் அர்தமிருக்கும்.



‘ஈனப் பறையர்’ என்கிற இந்த மோசமான விளித்தலை, தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பிடுகிற இந்த ஜாதியக் குறியீட்டை, சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்கு வீர உணர்ச்சி ஊட்டுகிற பாடலிலும் பார்க்கலாம்.
‘வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பாளோ பாரத தேவி’
‘மிலேச்சர்’ என்பது இந்தப் பாடலில் நேரடியாக அவுரங்கசீப் தலைமையிலான முகலாயர்களைக் குறிப்பதாக இருக்கிறது. இன்னும் அதை பாரதியின் காலத்தில் பொருத்தி வெள்ளையர்களைக் குறிப்பதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மிலேச்சர்க்ள் - வேதநூலைப் பழிப்பதால் வெகுண்டெழுகிறார் பாரதி. வேதநூலைப் பழித்தால் வெகுண்டெழுவது பாரதியின் பிறப்புரிமை! சரி.
‘ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்’
இப்படி குறிவைத்து ஆலயத்தையும்-பசுக்களையும் அழித்தால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதாவில் இருக்கும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவில் பலகோடி முதலீட்டில் தோல் பதனிடும் தொழிற்சாலை வைத்திருக்கும், அசைவ ‘ஹை-டெக்’ பார்ப்பானுக்குக் கூட கோபம் வரும். பாரதிக்கு வராதா பின்னே, வந்திருக்கிறது.
அடுத்து பாய்கிறார்,
‘வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்’
பசு மாமிசம் உண்ணும் பழக்கமுடைய முகலாயர்களை, வெள்ளையர்களை இழிந்துக் கூறவந்த பாரதி, அதே உணவு முறைப் பழக்கமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களை குறியீடாகப் பயன்படுத்தி ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்கிறார்.
தாழ்த்தப்பட்டவர்களாக அல்லாத - ஜாதி இந்துக்கள், ஜாதி கிருத்துவர்கள், முஸ்லிம்கள் இப்படி யாரயினும் தங்களுக்குள் ஒருவரை மட்டுப்படுத்தி பேசும்போது ‘பறைச்சி மாதிரி’ ‘பறையன் மாதிரி’ ‘போடா பறையா’ என்று திட்டிக் கொள்வது போல் - அதே பதத்தில், ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
‘ஈனப் பறையர்களேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ?
என்ற வரியில் ‘எம்முடன்’ என்பது ஆரியர்கள்தான் என்று- ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்ற வரியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே தெரிந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
‘பேரசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்’
என்ற வரிகளுக்கு அறிஞர்கள் புல்லரித்தால், இந்த வரிகளுக்கெல்லாம் என்ன செய்யலாம்?
பின் குறிப்பு; ‘புலையன்’ தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற இன்னொரு சொல். பெரிய புராணத்தில் ‘நந்தனை’ அவருடைய ஆண்டையான பார்ப்பனர், ‘மாடும் தின்னும் புலையா’ என்று குறிப்பிட்டிருக்கிறார். கேரளாவில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள், இந்த சொல்லால்தான் அடையாளப் படுத்தப்படுகிறார்கள்.
'ஈனப் பறையர்களேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ?
என்ற வரியில் 'எம்முடன்' என்பது ஆரியர்கள்தான் என்று- 'ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்' என்ற வரியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
'ஈனப் பறையர்களேனும்' என்கிற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே தெரிந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
'பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்'
என்ற வரிகளுக்கு அறிஞர்கள் புல்லரித்தால், இந்த வரிகளுக்கெல்லாம் என்ன செய்யலாம்?

சிவாஜி-அவுரங்கசீப் சண்டையை உதாரணம் காட்டி முகலாயர்களுக்கு எதிராக, 'நம் கலாச்சாரத்தையும், நம் புனித மண்ணையும் பாதுகாக்க போர் புரிந்த மாபெரும் இந்து மன்னன் சிவாஜி, என்று நிறுவி, அதை கிறித்துவ வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நாம் புரிந்து கொள்ள வேண்டும்' என்று கடந்த காலவரலாற்றில் இருந்து மிகத் தந்திரமாக பாடம் கற்பிக்கும் பாரதி, அதே சிவாஜி மன்னாகும்போது, 'நீ சூத்திரன், மன்னனாகக் கூடாது' என்று ஆகமங்களை அள்ளிப்போட்டு குறுக்கே நின்ற பார்ப்பன பட்டர்களைப் பற்றி, ஆதரித்தோ, எதிர்த்தோ ஒரு வார்த்தைக் கூட பாடவில்லை, பாட்டுக்கார பாரதி.இஸ்லாமியர்களை விரோதிகளாகச் சித்தரித்து தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களை அடியாட்களாக மாறி, மாறி பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கே குழிபறிக்கும் பார்ப்பனீய இந்து மதச் சிந்தனை இதில் இருக்கிறதா இல்லையா?

வேதத்தில் ஜாதிய வேறுபாடு கிடையாது,
‘வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே’
என்றெல்லாம் ஜாதிய எதிர்ப்பாளர் மாதரி, கவிதையளக்கிற சுப்பிரமணிய பாரதி - மனுஸ்மிருதியையோ, நாலு வர்ணத்தையோ-தன் நெருப்புக் கவிதைகளால் ‘தீமூட்ட’ மறுக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் நாலு வர்ணத்துக்கு நல்வாழ்த்து ஒன்று பாடியிருக்கிறார்,
‘வேத மறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி.
…………………………………………………………………………
…………………………………………………………………………
நாலு வகுப்பும் இங் கொன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி’
-என்று ராஜகோபால ஆச்சாரியருக்கே குலக்கல்வி திட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறார், இந்த ராஜகுரு.
“அந்தப் பாடலில், பாரதி தனக்கே உரிய முறையில் - ஜாதி ஒற்றுமையை வலியுறுத்துகிறார். ஜாதியக் கல்வியை ஆதரிக்கவில்லை”
-என்று அவரின் பாடலுக்கு ஒட்டுப் போட முயற்சிப்பவர்களை, உருட்டுக் கட்டை எடுத்துக் கொண்டு ஓட, ஒட விரட்டுகிறார்-தன் கட்டுரையில்.
‘அந்நிய-வஸ்து - வர்ஜனம், ஜாதீயக் கல்வி, பஞ்சாய்த்து, சரீரப் பயிற்சி - இந்த நான்குமே சுதேசியம் என்ற புண்ணிய பலத்தைத் தாங்குகின்ற நான்கு தூண்களாகும். இவற்றை ஆதரிப்பது நமது கடமை. இதில் சட்டத்திற்கு எவ்விதமான விரோதமும் கிடையாது. இவற்றை ஆதிக்காமலிருப்பவர்கள் தேசத் துரோகிகள் ஆவார்கள்.’
-என்று தன் நாலுவர்ண தேச பக்தியை வெளிப்படுத்துகிறார்.

ஆதிக்க வெறி கொண்ட முகலாயர்களும், ஏகாதிபத்திய வெறியர்களான வெள்ளையர்களும் - பல்லாயிரம் மைல் கடந்து வந்து இந்த மிதவாத, தீவிரவாத சுதந்திரப் போராட்ட கோஷ்டிகளைவிடவும் அதிகமாக ரத்தம் சிந்தி - இந்த ‘போங்கு’ மன்னர்களிடம் சண்டையிட்டுத் தியாகம் செய்து - பாடுபட்டு உருவாக்கிய இந்த நாட்டை, கவிராஜன் பாரதி கொஞ்சமும் கூசாமல்,
பாரதம் என்கிறார்
ஆரிய பூமி என்கிறார்
ஆரியர் என்கிறார்
‘இந்தியா’ என்பது கூட ‘இந்து’ என்பதின் திரிபு என்பதில் பெருமை கொள்கிறார்.
சற்றே கீழ் இறங்கி வந்து,
தமிழ் நாடு என்கிறார்,
தமிழர் என்கிறார்.
ஆனால் நிரம்ப ஞாபகத்தோடு திராவிடம் என்பதையே மறந்து போகிறார்.
ஏன்?
ஆரியம்-ஆரியர்-தமிழ் நாடு-தமிழர்-இந்தியா-இந்தியர் இப்படி- எப்படி மாற்றிச் சொன்னாலும் அதனுள் பார்ப்பனரும் அடங்குவர்.
திராவிடம் - திராவிடர் என்று சொன்னால் - அதில் பார்ப்பனர்களை எப்படிச் சேர்ப்பது?
இந்தக் கேள்வி சுப்பிரமணிய பாரதியை புரட்டி எடுத்திருக்கிறது.
அதன் பொருட்டே ‘ஆரிய நாடு - ஆரிய பூமி’ என்று அழுத்தந்திருத்தமாக சாட்சிகளோடு பொய் சொல்கிறார்.

***
‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்’
-என்று சூதில் மன்னனான கண்ணன், கீதையில் சொன்னதாக சொல்லப்பட்டதை, சூதாட்ட சகோதரரான அர்ஜுனன் மேற்கோளாகச் சொல்வது போல், ‘பாஞ்சாலி சபதத்தில்’ சொல்கிறார்.
அதையே நாம் பாரதியின் சிந்தனைகளுக்கும் சொல்லி வைப்போம்,
‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்’
தோழமையுடன்
வே. மதிமாறன்
டிசம்பர் 2002
`பாரதி` ய ஜனதா பார்ட்டி நூலின் இரண்டாவது அத்தியாயம்