

எல்லா மதமும் ஒன்றுதான்!
இந்துமதமும், இஸ்லாம் மதமும் ஒழுக்கத்தைப்பற்றி போதிப்பதில் ஒன்றுக்கொன்று - தானே சிறந்த ஓழுக்கத்தையுடையது என்று போட்டி போடுகின்றன. ஒழுக்கயீனங்களில் எல்லாம் மிகக் கேடானதாகவும் குற்றங்களில் எல்லாம் மிக இழிவான குற்றமாகவும் கருதப்படும் குற்றமாகிய பெண்களைப் பலாத்காரம் செய்து கற்பழித்தல், மானபங்கம் செய்தல் என்னும் குற்ற விஷயத்தில் இரு மதஸ்தர்களும் வங்காள மாகாணத்தில் எப்படி நடந்து இருக்கின்றார்கள் என்பதைக் காட்ட மார்டன் ரிவியூ பத்திரிகையில் வெளியாகியுள்ள ஒரு புள்ளி விவரத்தை இங்கு குறிப்பிட்டுவிட்டு இதை முடிக்கின்றோம். (புள்ளிவிபரம் மேலே காண்க)
மதம் ஒழுக்கத்தை, கூட்டு வாழ்க்கை ஒழுங்கு முறையை மனிதர்களிடத்தில் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய தன்மையை எங்கே - எப்படி கற்பித்து இருக்கின்றது? என்று மத பக்தர்களைக் கேட்கிறோம்.
"பகுத்தறிவு" வார இதழ் : 9-9-1934
2 comments:
பயங்கரவாதிகளுக்கு மதம் என்பது ஒரு முகமுடி அவ்வளவே. மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகளுக்கு அது ஒரு வருமானம்.
தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி தோழர்.
Post a Comment