
அக்கினியின் அக்கிரமங்கள்
அட்டத்திக்குப் பாலர்கள் எனப்படும் எட்டுப்பேர்களில் ஒருவன் அக்கினி. விச்வாநரன் என்பவனுக்குப் பிறந்தவன் இவன்; சுவாகாதேவி என்பவளுக்குப் புருஷன் இந்தக் குட்டிக் கடவுள்.
இவன் தந்தையாகிய விச்வாநரன், அக்னியை அப்படி இப்படி பெற்றுவிடவில்லை. சிவனை எண்ணித் தவங்கிடந்து, அதன்பின் சிவபெருமாள் தரிசனந்தந்து , உன்னைப் போலவே எனக்கொரு பிள்ளை வேண்டுமென இவன் அவனிடம் கேட்டு அதன் பின் பிறப்பிக்கப்பட்டவன் அக்னி பகவான். இந்தக் கதையை காசிகாண்டம் என்ற நூல் அளந்துள்ளது.
ஒரு முறை இந்த அக்னி ஏழு ரிஷிகளின் யாகவேள்வியில் பயன்படுத்தப்பட்டான். கொழுந்துவிட்டு எரிந்து வந்த அக்னிக்கு அங்கிருந்த ரிஷி பத்தினிகளின் அழகும் பிறவும் அரிப்பை மூட்ட மையல் கொண்டு தகித்தான். இந்த ரகசியம் அக்னியை மணந்த சுவாகாதேவிக்குத் தெரிந்து அருந்ததி என்ற ஒரு ரிஷிக்காரியின் வேஷம் மட்டும் போடாமல் - மற்ற அரை டஜன் ரிஷிபத்தினிகளின் உருவெடுத்து அக்னியின் காமாக்கினியை சாம்பலாக்கினாளாம். ஏதோ சில காரணங்களுக்காக ஒளிந்து வாழவேண்டிய இக்கட்டில் சிக்கிக்கொண்டான் இந்த பரிதாபத்திற்குரிய பகவான்.
அப்போது இவன் - அவுரவ மகரிஷி என்பவரது மனைவியைத் தேடி அவளது தொடைக்குள் நெடுநாள் சிறையிருந்தானாம். சுதரிசனையிடம் மோகங்கொண்ட இவன் அவளை மணந்து கொள்ள பெற்ற மனிதனிடம் போய் நின்றான்; பெற்றவனுக்கு இந்த பகவானை
மருமகனாக்க மனம் ஒப்பவில்லை. ஏமாற்றத்தால் - யாகம் முதலிய ஏதும் நாட்டில் நடவாதிருக்க நடவடிக்கைகள் சிலவற்றை இவன் மேற்கொண்டபின் சுதரிசனையின் அப்பன் வழிக்கு வந்து மகளை தாரை வார்த்து தந்தான். அக்னி கொடுத்த கரு விதையை, மனைவி யாகிய சுவாகாதேவி பன்னிரண்டு தேவ வருஷங்கள் தனது கருவறையில் சுமந்து அலைந்தாளாம்.
அபிதான சிந்தாமணியின் 9,10 பக்கங்களில் இச்செய்திகள் தரப்பட்டுள்ளன.
அட்டத்திக்குப் பாலகர்களை இஷ்ட தேவர்களாக வரித்துள்ள பக்த கோடிகளே!
1. சிவனை வேண்டிப் பெறப்பட்டவன் அக்னி பகவான் என்கிறது
புராணம்; இந்த அக்னிதான் நெருப்பு; இவன் இல்லையேல்
உலகில் நெருப்பே இல்லை என்றும் நீங்கள் நம்புகிறீர்கள் ;
நம்பவும் தூண்டுகிறீர்கள்.
சிவனுக்கும் - அக்னிக்கும் முன் பிறந்த எவனுக்கும்
நெருப்பில்லா வாழ்வு எப்படி சாத்தியப்பட்டது? அல்லது
இந்த நெருப்புக்கான இலாகாவை இவன் பிறக்குமுன் எவன்
கவனித்து வந்தான்?
2. இந்தக் கடவுள் வரிசைப் பேர்வழி-மாற்றார்களின் மனைவி
களைப் பார்த்து மையல் கொண்டிருக்கிறான்; மையலை
எப்படியோ அறிந்த அவனது சுவாகாதேவி மேஜிக்கில்
ரூபமெடுத்து ஆசைவழிய வாய்க்கால் காட்டியிருக்கிறாள்.
உண்மையை அறியாமல் இவனும் ருசித்துவிட்டு
ஓடியிருக்கிறான். இப்படிச் 'சபலம்' பிடித்த ஒரு பேர்வழியை
வணங்குவது நாகரிகமா? அநாகரிகமா?
3. ஒளிந்து வாழ எத்தனையோ இடம் இருக்கும் போது ஒரு
பெண்ணின் தொடையைத் தேடுபவன் தான் கடவுளா?
4. எவனோ பெண் கொடுக்க மறுத்தால் எங்கோ போய்
கோபத்தைக் காட்டுவது தான் ஆண்மைத்தனமா?
5. இவன் பீய்ச்சிய விந்துத் துளிகளை பல்லாண்டு காலம்
சுமந்தாள் சுதரிசனை என்றால், இவன் உடம்பில் இருந்தவை
நாடி-நரம்புகளா? அல்லது விந்துவால் ஆன குளம்-
குட்டைகளா?
6. எலக்ட்ரிக் லைட் எரியத் துவங்கினாலே கன்னத்தில் 'புத்தி'
போட்டுக் கொள்ளும் கண்ணியவான்களே! ஆராதனைகளில்
தீபத்தைக் கொளுத்தி புனிதம் படைக்கும் புண்ணியவான்களே!
அன்றாடம் குடிசைகளையும் பிற பொருள்களையும் நெற்றிப்
பூச்சுக்கும் உதவாத சாம்பலாக அடித்து அல்லல்படுத்தி
அக்கிரமம் புரியும் அக்கினி தேவனை வணங்கலாமா?
தொழுகையைத் துச்சப்படுத்தி உங்கள் அழுகையை
மிச்சப்படுத்தும் ஆண்டவன் ஒருவன் இருப்பதும் உண்மை
தானா? நன்மை தானா ?
------------------நூல்: "கடவுளர் கதைகள்" பக்கம்:- 38 - 40
6 comments:
:)))
ரவி இந்த அடையாளத்திற்கு பொருள் புரியலை?
பல பெண்களை தவறாக பார்ப்பதே இந்த "ஒண்ணாம் நம்பர் யோக்கியர்களுக்கு" வேலையாக போய்விட்டது.
புராணம் அனைத்தும் உண்மை என புளுகி புளுகி எந்த கோர்ட்டில் நிரூபிக்க போகிறார்கள் என தெரியவில்லை. புராண புரட்டுகளை பகுத்தறிவு வாதம் கொண்டு அழிப்போம்.
தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி Che Kaliraj
தலைப்பே அமர்களமாய் இருக்கே
பல பெண்களை தவறாக பார்ப்பதே இந்த "ஒண்ணாம் நம்பர் யோக்கியர்களுக்கு" வேலையாக போய்விட்டது.
வாழ்வின் யதார்த்தம்
தங்களின் கருத்துக்கும்
வருகைக்கும்
நன்றி கவின்
Post a Comment