Search This Blog
2.12.08
பெரியார் பைத்தியமாக இருப்பது நான் பெற்ற பேறு!
இன்று 2-12-2008 தி.க. தலைவரும், தமிழர் தலைவர் என்று அன்போடு அழக்கப்படுபவருமான மீ.கி. வீரமணி அவர்களுக்கு 76 ஆவது பிறந்தநாள். சுமார் 10 வயதிலிருந்தே பெரியாரின் கொள்கையை ஏற்று பேச்சாளாராக, எழுத்தாளராக, ஆய்வாளராக, இயக்கத்தின் தலைவராக, பல பரிணமங்களுக்கு சொந்தக்காரர் அவர்.அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
பிறந்த நாள் சிந்தனையாக அவர் எழுதிவரும் கீழ்கண்ட கட்டுரையை பதிப்பிக்கிறோம்.
எனது ரத்தத்தில் ஊறிய கட்டுப்பாட்டு உணர்ச்சி
எனது விடுதலை ஆசிரியர் பொறுப்பில் என்னுடைய மன நிறைவு எல்லாம், அய்யா அவர்கள் தலையங்கமோ, அறிக்கையோ எழுதி, அதற்கு மாறான கருத்தாக எனது தலையங்கம் அமைந்திருந்தது என்று சுட்டிக்காட்டி ஒரு கண்டனம் தெரிவிக்கும்படி ஒருமுறைகூட நான் எனது எழுத்துகள் - கருத்துகளை வெளியிட்டபோது ஆனதேயில்லை.
அதை வாழ்நாளில் பெரியாரிடம் பெற்ற விருதாகவே நான் கருதி எனது கடமையை மேலும் உற்சாகமாகச் செய்ய முற்படுவதுண்டு.
அதற்கு மாறாக, அய்யாவைச் சுற்றுப் பயணத்தில் இருக்கும்போது சில ஊர் நிகழ்ச்சிகளில் என்னையும் அழைக்கும்போது, நான் அய்யா அவர்களை ரயிலில் சென்று, காலையில் அய்யா அவர்களைச் சந்திக்கச் செல்லும்போது, தவறாமல் விடுதலை நாளேட்டினைக் கையில் எடுத்துச் சென்று அவர்களிடம் தருவேன்; அதைக் கொடுத்தவுடன், ஆர்வத்துடன் பிரித்துப் படிக்கத் தொடங்கி விடுவார்கள்! சில நேரங்களில் தலையங்கத்தைப் படித்துவிட்டு, இதுபற்றி தலையங்கம் எழுதுங்கள் என்று உங்களுக்கு ஒரு கார்டு எழுதச் சொல்ல நேற்று நினைத்தேன்; நீங்கள் அதையே எழுதியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி என்று கூறும்போது, நான் மிகப்பெரிய பரிசை அய்யா கையால் பெற்ற மாணவனைப்போல் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்று இப்படிப்பட்ட பாராட்டும் நிலை என்றும் தொடர மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்ற கவலையால் உந்தப்படவும் செய்வேன்.
அய்யா அவர்கள் கூறியபடி, சிற்சில சமயங்களில் அவர்கள் நண்பர் இமயவரம்பன் அவர்களிடமோ அல்லது நண்பர் மகாலிங்கம் அவர்களிடமோ ஒரு செய்தியைப் படித்து (வெளியூரிலோ, திருச்சியிலோ இருக்கும்போது) இதுபற்றி ஆசிரியரை ஒரு தலையங்கம் கண்டித்து எழுதும்படி கார்டு எழுதுங்கள் என்று கூறி, அவர்களும் எழுதி அது வரும்போது, அடுத்த நாள் காலை விடுதலையை (வெளியூர்களுக்கு சென்னையின் மாலைப் பதிப்பான விடுதலை) அய்யா படிக்க எடுக்கும்போது அந்தக் குறிப்பிட்ட செய்தியை மய்யப்படுத்தியே கண்டனத் தலையங்கம் (என்னால் எழுதப்பட்டு) வெளிவந்திருப்பதை படித்து மகிழ்வார்கள். அடுத்தநாள் கடிதம் எனக்குக் கிடைக்கும்முன்பே தலையங்கம் அதுபற்றியே எழுதப்பட்டிருக்கும்!
இரண்டும் ஒரே நேரத்தில் (கிராஸ் ஆகி) நடைபெற்றிருக்கும்!
அதுபோலவே, அய்யா அவர்கள் பேசும் முக்கிய மேடைகளில் நானும் பேச வாய்ப்பு அளிக்கப்படும்போது, அளவோடு, தலைவரின் பேச்சுக்காகவே மக்கள் கூடியிருக்கிறார்கள் என்ற நினைப்போடு, அடக்கமாக, அய்யாவின் பேச்சுக்கு முன்னோட்டக் கருத்துகளாக நமது பேச்சு - உரை அமைதல் அவசியம் என்ற பொறுப்புணர்ச்சியோடுதான் நான் நடந்து கொள்வது எனது ரத்தத்தில் ஊறிய கட்டுப்-பாட்டு உணர்ச்சியாகும்!
அய்யா முன்னிலையில், மற்றவர்கள் பேசும்போது அதிகப்பிரசிங்கித்தனமாகப் பேசினால், அய்யா, முடியுங்கள் என்று சொல்லும் வகையில் மேடையில் தடியைத் தட்டிக் காட்டுவார்கள்; முக பாவத்திலேயே மாறுதல் ரேகைகள் ஓடச் செய்யும். அந்த மாதிரியான இக்கட்டில் நான் ஒருபோதும் சிக்கியதே இல்லை என்பதும், எனக்கு மிகுந்த உள நிறைவைத் தந்த ஒன்றாகும்.
ஒருமுறை மயிலையில் நான் பேசும்போது, மேடை ஏறிய சில மணித்துளிகளில் சட்டென்று அப்படியே உரையை முடித்துவிட்டு மேடையில் அமர்ந்தேன்.
கூட்டம் முடிந்த பிறகு வேனில் ஏறி வீட்டுக்குச் செல்லும்போது, அய்யா அவர்கள் என்னை நோக்கி, ஏன் அவ்வளவு விரைவில் பேச்சை முடித்தாய்? என்று வியப்புப் பொங்கக் கேட்டார்கள்; நான் அய்யா மேடையில் தடியைத் தட்டும் சத்தம் கேட்ட மாதிரி இருந்தது; அதனால் உடனே முடித்துவிட்டேன் என்றேன்; அதற்கு அவர்கள் மிகவும் சத்தமாகச் சிரித்துவிட்டு, அட பைத்தியக்காரா, நான் சீட்டா நாய் ஏதோ செய்ததைத் தடுக்க அல்லவா தடியை அப்படித் தட்டினேன்; அதை நீ தவறாகப் புரிந்துகொண்டாய் போலும் என்றார்.
மிகவும் அன்பும், பாசமும் பொங்கும்வேளையில் அவர்கள் பயன்படுத்தும் அச்சொல், அடப் பைத்தியக்காரா என்பது. அந்த விருது எனக்கு அன்று கிடைத்தது! ஆம், என் வாழ்நாளின் இறுதி மூச்சடங்கும்வரை அந்தப் பைத்தியக்காரனாய் - பெரியார் பைத்தியமாகவே - நான் இருப்பது நான் பெற்ற பேறுகளிலேயே பெரும்பேறு அல்லவா?
ஒருமுறை சேலம் செவ்வாய்ப்பேட்டையில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டம், தந்தை பெரியாருக்குமுன் எனக்குப் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. ஆச்சாரியார் சுதந்தராக் கட்சியைத் (தனிக்கட்சி) தொடங்கி, காமராசருக்கு எதிராக எழுதியும், பேசியும் வந்த காலகட்டம் அது.
அப்போது அதுபற்றி பல்வேறு பத்திரிகைக் குறிப்புகள்; ஆச்சாரியார் முன்பு எழுதிய அபேதவாதம் (சமதர்மம் தேவை என்பதை வலியுறுத்த அவர் சிறையில் இருந்தபோது எழுதிய சிறுநூல்) மற்றும் பல்வேறு பழைய செய்தி அறிக்கைத் துணுக்குகளுடன் ஆதாரங்களை அடுக்கி அடுக்கிப் பேசினேன்; பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் உற்சாகமாகக் கைதட்டி ரசித்து ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அய்யா அவர்கள் அந்த 45 நிமிடப் பேச்சை அப்படியே கேட்டு கொண்டிருந்தார்கள்.
எனக்கு அடுத்து அய்யா அவர்கள் பேச வந்தவுடன், தனது பேச்சைத் தொடங்கும்போது, நண்பர் வீரமணி அவர்கள் மிகவும் ஆதாரபூர்வமாகவும் தெள்ளத் தெளியவும் உங்களையெல்லாம் மிகவும் சிந்திக்க வைக்கவுமானதொரு அருமையான உரையை நிகழ்த்தியுள்ளார். அதோடு இந்தக் கூட்டம் முடிந்தால் நல்ல விளைவு இருக்கும் அவர் வரைந்த ஓவியத்தை நான் கலைத்து விடக்கூடாது என்று நான் நினைக்கிறேன். அவ்வளவு தெளிவாகவும், கோர்வையாகவும் விளக்கியிருக்கிறார் நண்பர் வீரமணி; என்றாலும், என்னை அழைத்து எனது உரையைக் கேட்க நீங்கள் வந்திருப்பதால், உங்களை ஏமாற்ற விரும்பாமல், நானும் அவர் கூறிய கருத்துகளையொட்டியே எனது சில கருத்துகளையும் கூற விரும்புகிறேன் என்று உரையைத் தொடங்கி சுமார் ஒன்றரை மணிநேரத்திற்குமேல் பேசினார்கள்!
அன்று அவ்வுரையைக் கேட்டுக்-கொண்டிருந்த எனது (இயக்க) நண்பர் பேராசிரியர் சி. வெள்ளையன் அவர்கள் என்னை மிகவும் பாராட்டி (கூட்டம் முடிந்து அவரும் வந்த நிலையில்) என்ன ஆசிரியர், அய்யா இப்படிப் பாராட்டிப் பேசியதாக சரித்திரமே இல்லை; நானும் யாரும் சொல்லிக்கூடக் கேட்டதில்லை; உங்களை இவ்வளவு மனந்திறந்து பாராட்டியபோது இதோடு கூட்டம் முடிந்திருக்கவேண்டும் என்பதைவிட மிகப்பெரிய பாராட்டு வேறு எவருக்கு அய்யா கிடைக்கும்? என்று பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தார். அடக்கத்துடன் ஒரு மவுனம்மூலம் அதை ஏற்றேன்!
இரண்டாவது முறையாக, சென்னையில் அய்யா மறையும் முன்பு 1973 டிசம்பர் 8,9 ஆகிய நாள்களில் நடைபெற்ற சமூக இழிவு ஒழிப்பு மாநாட்டின் முதல் நாள் காலை - முற்பகல் 2 மணிவரையில் அய்யா அவர்கள் பேசும் முன்பு, நான் ஹிந்துலா, ஜாதி, அரசியல்சட்டத்தில் பாதுகாப்பு, பற்றிய பல்வேறு விளக்கங்களை ஆதாரங்களுடன் எடுத்துக்கூறிய பின், பகல் 1.30 மணியளவில் அய்யா அவர்கள் பேசத் தொடங்கியவுடன் (முன்பு ஒருமுறை சேலத்தில் சொன்னதுபோலவே சொன்னார்கள்) அவ்வுரையின் பகுதி தோழர் து.மா. பெரியசாமி அவர்கள் பதிவு செய்து வைத்துள்ள ஒலிநாடாவிலும் உள்ளது.
அப்பகுதிகள் இதோ:-
8.12.1973-இல் சென்னை பெரியார் திடலில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு. தந்தை பெரியார் தலைமை வகித்தார். பெரியார் ஆற்றிய தலைமை உரை:
பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர்களே! மற்றும் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வந்திருக்கும் கழகப் பிரமுகர்களே! தலைவர்களே! தோழர்களே!
இங்கே கூட்டப்பட்டிருக்கும் இந்த இழிவு ஒழிவு மாநாடு காலை நிகழ்ச்சி நல்ல வண்ணம் நடந்தது. இவற்றில் மிக முக்கியமாக பாராட்டு-தலுக்குரிய நமது வரவேற்புக் கழகத் தலைவர் அவர்கள் (கி.வீரமணி) நல்லபடி எல்லா விஷயத்தையும் தெளிவாக்கிவிட்டார். ஏதோ சடங்கு முறையிலே அதிலே கொஞ்சம் பேசவேண்டும் என்பதற்த் தவிர விஷயத்தைப் புதியதாகச் சொல்லி உங்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்கு ஒன்றும் பாக்கி இல்லை என்று பேசினார்.
09.12.1973 அன்று தமிழர் சமுதாய ஒழிப்பு மாநாட்டு இரண்டாம் நாள் மாநாட்டு இறுதி உரையில் பெரியார் பேசும்போது, இப்-பொழுது நல்ல சொற்பொழிவுகளைக் கேட்டு ரொம்ப உணர்ச்சியோடு பக்குவமான நிலையிலே இருக்கிறீர்கள். நான் பேசுவதன் மூலம் எங்கே இது கலைந்து போய்விடுமோ என்று பயப்படுகிறேன். அவ்வளவு நல் தெளி-வாக யாருக்கும் விளங்கும்படியும் ஒவ்வொருவர் மனமும் உடனே காரியத்தில் இறங்கும்படியான உணர்ச்சி ஏற்படும்படியும் நல்லவண்ணம் அவர்கள் பேசினார்கள். எனக்கும் தெரியாத, இதுவரையிலும் நான் தெரிந்திருக்காத அனேக அருமையான விஷயங்-களை எல்லாம் பேசினார்கள். நாம் செய்வது ரொம்ப அவசியமான காரியம் - ஞாயமான காரியம் என்று கருதும்படி நல்ல வண்ணம் விளக்கினார்கள். இனி நான் சம்பிரதாயத்துக்குத்தான் இரண்டொரு வார்த்தைகள் பேசவேண்டி இருக்கிறது என்று கூறினார்.
நமது வரவேற்புக் குழுத் தலைவர் (வீரமணி) காலையில் மிகச் சிறப்பான உரையை நிகழ்த்-தினார். அதற்கு மேல் ஒன்றும் நான் சொல்வதற்கு என்று ஒன்றும் இல்லை.
இன்னும் சில மேடைகளில் நான் பேசி முடிக்கும் தறுவாயில் நேரம் அதிகமாகி விட்டது. அடுத்து அய்யா அவர்கள் பேச-வேண்டும். எனவே, எனது உரையை இன்னும் ஒரு சில நிமிடங்களில் முடித்துக் கொள்கிறேன் என்று சொன்னபோது, அய்யா அவர்கள் இடைமறித்து, இல்லை; நீங்கள் பேசுங்கள் பேசுங்கள் என்று சொன்னதைவிட எனக்கு வேறு என்ன பெருமை - சிறப்பு வேண்டும்.
பெரியாரைத் துணைக் கோடல் என்பதற்கு எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மதிப்பூதியம் இதைவிட வேறு ஏது?
இவைகளையெல்லாம் நான் இங்கே குறிப்பிடுவது எனது பெருமையை, ஆற்றலை விளக்குவதற்காக அல்ல. மாறாக,
ஒரு பெரிய தலைவரிடம் - அதுவும் புரட்சியை விதைக்கும் புத்துலகச் சிற்பியான தலைவரை குருவாகக் கொண்ட நிலையில் - அவர்தம் தொண்டர்கள் எப்படி அடக்கத்துடன், கட்டுப்பாட்டுடன், கடமையைச் செய்யவேண்டும் என்று இயக்கத் தோழர்களும், மற்றவர்களும் புரிந்துகொண்டு, அவர்கள் எக்கட்சி, எந்த இயக்கத்தைச் சேர்ந்தோராயினும் பயிற்சி பெற்றவராக வேண்டும் என்ற அவாவுடன்தான்!
சில முக்கிய கூட்டங்களுக்கு அய்யா அவர்களுடன் இணைந்து பேசும் நிகழ்ச்சியாக அவை அமையும்போது, நான் முன்கூட்டியே அவர்களது கருத்துகள், அறிவுரை, எந்த அளவுக்கு எவ்வளவு நேரம் நான் பேசுவது என்பதையெல்லாம்கூட தனியே, கூட்டத்திற்குக் கிளம்பும்முன் பேசி அவர்களது விருப்பத்தை அறிந்தே பேசும் பழக்கம் எனக்கு அமைந்துவிட்ட ஒன்றாகும்! எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம். 1960 திரு. ஏ. அழகிரிசாமி என்பவரை கவர்ன்மென்ட் பிளீடராக காமராசர் ஆட்சியில் - அவரது அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த சி.எஸ். என்று அழைக்கப்படும் சி. சுப்பிரமணியம் அவர்களால், காமராசர் ஆணைப்படி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து பார்ப்பன வழக்கறிஞர்கள், பார்ப்பன ஏடுகள், பிரமாதமாக கண்டனத்தைக் கிளப்பியதோடு, சென்னை - உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு போட்டு, பார்ப்பன நீதிபதிகள் தமிழக அரசைப்பற்றியும், சட்ட அமைச்சர் திரு.சி. சுப்ரமணியம்பற்றியும் கண்டனம் எழுப்பினர்.
இந்நிலையில், திரு. அழகிரிசாமியை முன பின் பார்த்திராத தந்தை பெரியாரும், அவர்தம் விடுதலை நாளேடும் (அப்போது குத்தூசி குருசாமி அவர்கள்தான் ஆசிரியர்) பார்ப்பனர் எதிர்ப்பைக் கண்டித்து எழுதியதோடு, தந்தை பெரியார் அய்க்கோர்ட் நீதிப்போக்குக் கண்டன நாள் என்று ஒரு நாளையே (23.10.1960) அறிவித்து, நாடு தழுவிய அளவில் துணிந்து நீதிப்போக்கை - பார்ப்பன நீதிபதிகளின் மனுதர்ம மனுப்பான்மையைக் கண்டித்து ஆங்காங்கு பொதுக்கூட்டங்கள், நடத்துமாறு அறிக்கை விடுத்தார்கள்.
நீதிமன்ற நீதிக்கும் நீதி சொன்ன பெரியார் என்ற கவிஞர் கண்ணதாசன் அழகாகச் சொன்னாரே இதனடிப்படையில்,
அப்படி யார் பேசினாலும், எழுதினாலும் நீதிமன்ற அவமதிப்பு (Contempt of Court) என்று தண்டனை வரும்; வந்தாலும் துணிந்து ஏற்றுச் சிறைக்குப் போவோம்; சமூகநீதியை நிலைநாட்டுவோம் என்பதுதான் தந்தை பெரியார் தம் எண்ணம்.
லட்சியத்திற்குக் கொடுக்கும் விலையாக அதனைக் கருதவேண்டும் என்று தான் தந்தை அவர்கள் சொல்வார்கள். அதற்கேற்பவே அந்த நடவடிக்கை.
ஏற்கெனவே, 1956-இல் திருச்சி கலெக்டர் ஆர்.எஸ். மலையப்பன் அய்.ஏ.எஸ். வழக்கில், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு கன்டெம்ப்ட் ஆஃப் கோர்ட் (Contempt of Court) சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டது பழைய வரலாறு.
--------------- நினைகள் நீளும்
----------------- கி.வீரமணி- அய்யாவின் அடிச்சுவட்டில்... இரண்டாம் பாகம் - 'உண்மை' 16-30-2008
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஒரே தலைவர்
ஒரே கொள்கை
ஓயாத உழைப்பு
எளிமையின் சின்னம்
எள்ளி நகையாடும் உடன் பிறப்புக்கள்
எதையுங் கண்டு மயங்காதக் கட்டுப்பாடு
எதிரியையும் எண்ணவைக்கும் பேச்சு
ஆதாரங்கள் காட்டிடும் அற்புதம்
பெரியாரின் நடமாடும் கணிணி
வாழ்க பல்லாண்டு நீவிர்!
//பெரியார் பைத்தியமாக இருப்பது//
ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
ஆ என்னது தாடிக்காரர் ஒரு பைத்தியமா?ஒரு மாதிரி சைக்கோ என்பது அனைவரும் அறிந்தது தான்.தமிழ் நட்டில் பயங்கரவாதத்துக்கு விதை விதைத்த முதல் தாடிக்காரன் என்ற புண்ணியம் கட்டிக் கொண்டவர் என்பதும் அறிந்தது தான்.அதற்காக இது ஒரு சாதாரண பைத்தியம் என்று மானமிகு முண்டம் சப்பைக் கட்டு கட்டுவது எதனால்?சொத்தையெல்லாம் இந்த அயோக்ய முண்டத்துக்கு விட்டு பைத்தியக்காரத்தனமான ஒரு காரியம் பண்ணினதாலா?இருக்கும் இருக்கும்.
பாலா
எனக்கு பெரியாருடைய பல கருத்துக்கள் பிடிக்கும் என்றாலும் அவருடைய சில கருத்துகளில் உடன்பாடு கிடையாது. ஆனால் பெரியாருடைய தியாக உள்ளமும் இந்த சமுதாயத்தை ஆதிக்க சக்திகளிடமிருந்து பாதுகாக்கவேண்டும் என்ற அவருடைய தூய நோக்கமும் பாராட்டபடவேண்டியவை.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களைப் பற்றி சரியாகப் ப (பா)டம் பிடித்துள்ளீர்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி தமிழன் அய்யா.
//பெரியாருடைய தியாக உள்ளமும் இந்த சமுதாயத்தை ஆதிக்க சக்திகளிடமிருந்து பாதுகாக்கவேண்டும் என்ற அவருடைய தூய நோக்கமும் பாராட்டபடவேண்டியவை.//
தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி ராபின்
பார்ப்பனப் பயங்கரவாதி முட்டாள் பாலாவின் உளறல்களில், அசிங்கமான பின்னூட்டங்களில் இதுவும் ஒன்று.
//அசிங்கமான பின்னூட்டங்களில் இதுவும் ஒன்று//
ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
மானமிகு முண்டத்துக்கு, கொள்ளை அடிக்கப்பட்ட சொத்தை, தாடிக்காரன் விட்டு விட்டு சென்றது பயித்தக்காரத்தனமான செயல் என்று சொன்னால் உனக்கு ஏன் ஆத்திரம் வருகிறது என்று பதில் குரையேன் பார்க்கலாம்.
மேலும், தாடிக்காரன், அயோக்யன் மானமிகு முண்டத்தை வாரிசாக அறிவித்தது அறிவு கெட்ட கேவலமான செயல் என்று கொளத்தூர் பாசறை நாய்கள் கூட குரைக்கின்றனவே?அதற்கு என்ன பதில்?
பாசறை நாய்கள் என்றாலே வெறி பிடித்த சொறி நாய்கள் என்று அனைவரும் அறிந்தது தான்.ஆனாலும் கொளத்தூர் நாய்களை விட அதிகமாக ஜாதி வெறி பிடித்து குரைப்பது தமிழ் ஓவியா போன்ற மானமிகு சொறி நாய்கள் தான் என்று தீர்ப்பு கூறி இந்த பட்டி மன்றத்தை முடித்து வைக்கிறேன்.
பாலா
ஒரு கருத்தை முன் வைத்து ஆரோக்கியமாக விவாதம் செய்தால் அது அறிவு நாணயம்.
நான் நாய் போல் குரைப்பேன் பதிலுக்கு நீயும் குரை என்றால் விதண்டாவாதம்.
மதவெறி ஜாதி வெறி பிடித்து அலைபவர்களிடம் ஏற்கனவே சொன்னது போல் திருப்பிக் குரைத்தால் சரிபட்டு வராது.
ஜாதி வெறி மதவெறி படித்து அலையும் பார்ப்பன பாலா போன்றவர்களுக்கு வெறிநாய்க்கு என்ன தண்டணை கொடுப்பார்களோ அந்த தண்டணை கொடுத்தால் தான் சரிப்பட்டு வரும்.
அதற்கு முன் ஆயத்தமாக இருப்பது தான் பார்ப்பன பாலாவின் பின்னூட்டங்கள்.
Post a Comment