Search This Blog

26.10.11

நரகாசுரன் நாளில் சிந்திப்பார்களாக! ஜெயேந்திர வதம்

ஜெயேந்திர வதம்

தீபாவளி என்றால் கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று தொலைக்காட்சிகளில் வாய் திறக்கும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதியின் முகவரி தெரிய வில்லை.

பரவாயில்லை. தொலைக்காட்சிகள் - பாராட்டுகள்; ஆனாலும் அவரால் சும்மா இருக்க முடியுமா?

திருவாய் மலர்ந்துள்ள சேதி ஒரு நாளேட்டில் வெளிவந்துள்ளது. தீபமும், ஆவளியும் சேர்ந்தது தீபாவளி. தீபங்களுடைய வரிசை, வடநாட்டில் வீடுகளில் தீபங்கள் வரிசையாக ஏற்றி வைப்பார்கள். தீய சக்திகள் எல்லாம் அழிந்து ஞான ஒளி ஏற்படும் நாள் தீபாவளி, கலியுகத்திலே அசுரர்கள் இல்லாவிட்டாலும், அசுர குணம், தீய குணம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

இன்றுள்ள நிலையில் தர்மம், நேர்மை, நீதி, பொய் செல்லாமை, திருடாமை இவைகள் எல்லாம் மிகவும் குறைந்து விட்டன. நல்லோரைக் காண்பது அரிதாக உள்ளது. காற்றடித்தால் வெகு தூரத்தில் உள்ள மணல் எப்படி அள்ளி வீசிக் கொண்டு வருமோ, அது போல தீயோர் களின் காற்று தற்போது பலமாக வீசுகிறது. நல்லோர்மீதும் இது பட்டு விடுகிறது. அப்படிப்பட்ட துஷ்டதோஷம் உள்ள காற்றை விலக்கி, நல்ல காற்று வேகமாக அடித்து, தீயோர்களையும் நல்வழிப்படுத்த உதவியாக இருக்க வேண்டும்.

எல்லோரும் கோவிலுக்கு சென்று தேவைகளை பிரார்த்திக்கின்றோம். நம் முடைய தேவைகளை பகவான் கொடுக் கிறார். இவைகளை அனு பவித்தபோதும் மேன்மேலும் ஆசைகள் நமக்கு அதிகமாகி வருகிறது. இதனால் கோவிலுக்கு செல்வது அதிகமாகிறது.

எனவே பக்தர்கள் கோவிலுக்கு சென்று கீழ்க்கண்டவாறு நல்ல பிரார்த்தனைகளை செய்ய வேண்டும்.

பேராசையைக் கொடுக்காதே, நல்ல புத்தியைக் கொடு, தர்ம மார்க் கத்தில் ஈடுபடச் செய், நல்ல காரியங் களை செய்ய நல்ல புத்தி கொடு, ஸத் சங்கத்தில் ஈடுபாடு கொடு, என் வாழ்க் கைக்கு நல்ல தேவையுள்ள பொருட்களை கொடு இது போன்ற நல்ல பிரார்த்தனை களை இறைவனிடம் செய்ய வேண்டும். தீபாவளி நன்னாளில் ஞான ஒளி, நல்ல புத்தி கிடைப்பதற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இப்படியெல்லாம் வாழ்த்து சொல்ல இந்த மாஜிக்கு அருகதை உண்டா?

தர்மம், நேர்மை, நீதி, பொய் சொல்லாமை, திருடாமை பற்றியெல்லாம் இவர் பேசலாமா? கோவிலுக்குச் சென்று பக்தர்கள் இந்தத் தீபாவளி நாளில் பிரார்த்தனை செய்ய வேண்டுமாம்!

அட பாவிகளா? அந்தக் கோவிலில்தானே (காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலில்) அக்கோயிலின் மேலாளர் சங்கரராமன் ஒரு பட்டப்பகலிலே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அந்தக் கொலை வழக்கில்தானே ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார் - 61 நாள்கள் வேலூர் சிறையில் கம்பிகளை எண்ணினார்.


இந்தியன் தண்டனைச் சட்டம் 302, 120 பி,201 (கூட்டுச்சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை) பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை படிக்கப் பட்டுள்ள ஆசாமி நேர்மை, பொய் பேசாமை பற்றியெல்லாம் கடை வாய் திறக்கலாமா?

ஜெயேந்திரரின் அருள்வாக்கை இன்னொரு முறை வேண்டுமானாலும் படித்துப் பாருங்கள்.

நெஞ்சார்ந்த பொய்களின் கூட்டுத் தொகைதானே இவை.

குங்குமம் இதழுக்கு பேட்டி கொடுத்தார் ஜெயேந்திர சரஸ்வதி; அதையும் படித்துத் தொலைப்போம்:

கேள்வி: சமீப காலமாக மக்களை ஏமாற்றும் போலிச்சாமியார்கள் நிறைய பிடிபடுகிறார்கள்.. யார்மீது தவறு?

பதில்: மனுஷனுக்குப் பேராசை இருக்கிற வரைக்கும் இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஏன்னா குறுக்கு வழியில் சம்பாதிக்கணும்னு ஆசைப் படுகிற நிறைய பேர் போலிச் சாமியாராக எழுந்தருளி இருக்காங்க. ஜனங்களும் இவங்கள நம்பிப் போறாங்க. இதனால ஜனங்க, சாமியார்கள் இரண்டு பேருக் குமே ஆபத்து வருது. ஆனா, ஜனங்க தப்பிச்சி வேறொரு சாமியார் கிட்ட போயிடுறாங்க. இவங்களை நம்பி வேஷம் போட்ட சாமியார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க. அதனால இந்த விஷயத்தில் சாமியார்கள் தான் பொது ஜனங்ககிட்ட இருந்து பயந்து ஒதுங்கி இருக்க வேண்டும். (குங்குமம் 27.3.1998).

ஆகா, ஜெயேந்திரரின் தொலை நோக்கே தொலைநோக்குதான்.

சாமியார்களில் ஒரிஜினல் சாமியார்கள் என்ன - போலி சாமியார்கள் என்ன? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.


பக்தர்களை நம்பி வேஷம் போட்ட சாமியார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க என்கிறாரே - இப்படி சொன்னவரே ஜெயிலுக்குப் போக வில்லையா? (வேஷம் கலைந்து விட்டதோ!)

இப்பொழுது இருப்பது பெயிலில்தான். ஜெயில் + பெயில் = சங்கராச்சாரியார் 2004- இதே தீபாவளி நாளில்தான் தமிழ்நாட்டை விட்டு வேக வேகமாக தப்பித்து ஓடிய ஜெயேந்திர சரஸ்வதி ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.

ஏழு தீபாவளிகள் ஓடி விட்டன. குற்றவாளிகளான சங்கராச்சாரியார்கள் நேர்மையான முறையில் வழக்கைச் சந்திக்க முடியாமல் சட்டத்தின் சந்து பொந்துகளில் ஓடி ஓடி மறைகிறார்கள்.

நரகாசுரனை ஆரியர்கள் அன்று வதம் செய்தார்கள். வதம் செய்த கூட்டத்தின் தலைவர் பெரியார் சகாப்தத்தில் வதம் செய்யப் பட்டுள்ளார்.

மதவாதிகள் கூறும் நேர்மையின் எடை என்ன? யோக்கியதையின் கனபரிமானம் என்ன? காஞ்சி ஜெயேந்திரரைப் பார்த்தால் போதாதா?

நரகாசுரன் நாளில் சிந்திப்பார்களாக!

-------------- மின்சாரம் அவர்கள் 26-10-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

SURYAJEEVA said...

அருமை

நம்பி said...

//எல்லோரும் கோவிலுக்கு சென்று தேவைகளை பிரார்த்திக்கின்றோம். நம் முடைய தேவைகளை பகவான் கொடுக் கிறார். இவைகளை அனு பவித்தபோதும் மேன்மேலும் ஆசைகள் நமக்கு அதிகமாகி வருகிறது. இதனால் கோவிலுக்கு செல்வது அதிகமாகிறது.//
.................
..................
//பேராசையைக் கொடுக்காதே, நல்ல புத்தியைக் கொடு, தர்ம மார்க் கத்தில் ஈடுபடச் செய், நல்ல காரியங் களை செய்ய நல்ல புத்தி கொடு, ஸத் சங்கத்தில் ஈடுபாடு கொடு, என் வாழ்க் கைக்கு நல்ல தேவையுள்ள பொருட்களை கொடு இது போன்ற நல்ல பிரார்த்தனை களை இறைவனிடம் செய்ய வேண்டும். தீபாவளி நன்னாளில் ஞான ஒளி, நல்ல புத்தி கிடைப்பதற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.//
**************************************
**********************************
.....உனக்குத்தான் "பேராசை" என்றால் எதுன்னு? தெரியுது! "நல்ல புத்தின்னா" என்னன்னு? தெரியுது! அப்புறம் எதுக்கு? அதை போய் (கல்லுகிட்டே) அது கிட்டே போய் கேக்கணும்!?

....."ஈ" க்கும் "பீ" க்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கிறாய்! அப்படியென்றால் பைத்தியமாகத்தான் இருக்கவேண்டும்.....அவனால் எந்த பாதகமும் இல்லை.....

;நல்லது எது? கெட்டது எது? என்றே தெரியாதவன் எப்படி நல்லது கொடு! கெட்டதை அப்புறம் கொடு! என்று பிரித்து பிரித்து கல்லிடம் கேட்பான்.
**********
அட! அனைத்தும் அறிந்த கடவுளுக்கே நல்லது எது? கெட்டது எதுன்னு? தெரியாததாக இருக்கும் போது!

யார்? எதை கேட்டாலும், அதாவது, கெட்டதை கேட்டு பிராத்தனை பண்ணாலும் வரம் கொடுக்குதுங்கரே!

நல்லதை கேட்டாலும் தருதுங்கரே!..

..அந்த கல்லு கடவுளுக்கே நல்லது எது? கெட்டது எது என்றும் தெரியவில்லை! அதுகிட்டே போய்! எனக்கு நல்லது மட்டும் கொடு! என்று கேட்பானேன்!

பிரசங்கம் பன்றதை ஒரளவுக்கு நம்மும்படியாவது பண்ணணும்! நீ அதுக்கும் லாயக்கில்லை!
***********************

"சரி! இதை யெல்லாம் ஊத்தாச்சாரியான நீ ஏன்? அந்த கல் கடவுள்கிட்டே கேக்கலை!

"கோயில்ல கொலை எல்லாம் பண்ணாம என்னைக் கட்டுபடுத்து! "

"பொம்பளைகிட்டே ஆசைவராத அளவுக்கு என்னை கட்டுப்படுத்து!"

"கடவுளே! பொய் சொல்லாத அளவுக்கு ஊத்தாச்சாரியான என்னை கட்டுபடுத்து!

"மக்கள்கிட்டே "டகால்டி" வேலை பண்ணாம இருக்கும்படி செய்!"

""பொம்பளைங்களைப் பார்த்தா "ஜொல்லு" விடாத அளவுக்கு என்னை மாத்து! இல்லையென்றால் கடவுளே! ...........அதை! (அதான் ஆண் உறுப்பை)....... அறுத்து விடு!"" என்று ஏன் கேக்கலை!?

மவனே! உனக்கு ஆசை! "துரித ஸ்கலிதம்". அதான் நீ கேக்காம மத்தவங்களை கேக்க சொல்றே! இல்லை "கடவுள்" உனக்கு மட்டும் "எக்சப்ஷன்" (விலக்கு) கொடுத்து இருக்குதா?

"எக்சப்ஷன்" (விலக்கு) கொடுத்து இருக்குன்னு இதுங்க! சொன்னாலும் சொல்லும்! அதை இந்த........கூட்டம் நம்பினாலும் நம்பும்!

இந்த ரகசியமெல்லாம் ஊத்தாச்சாரி கும்பலுக்கு மட்டும் தான் தெரியும்! அப்படின்னு அதுங்க நினைச்சுகிட்டு இருக்குதுங்க!

இப்ப இந்த நினைப்புதான், ........பொழைப்பைக் கெடுத்துகிட்டு இருக்குது! அதுங்க பொழைப்பையும் சேர்த்து...