Search This Blog

17.10.11

ஆயுத பூசை,தீபாவளியை அரசின் விடுமுறை நாள்களாகக் கொண்டாடலாமா?


சர்க்கார் (அரசு) விடுமுறை நாள்கள்

இரு நூறு ஆண்டுகளாக நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். நம்முடைய அடிமைத்தளையை எந்த மதமும் அறுக்கவில்லை. பார்த்துக் கொண்டுதான் இருந்தன, எப்படி? உன்னுடைய தலைவிதி, நீ அடிமையாக இருக்கும்படி நேரிட்டது என்று கூறுவதுபோல் இருந்தது. மதம் ஏற்படுத்திய அந்தத் தலை விதியை, நாட்டின் நலிவை தலைவர்கள், தங்கள் உழைப்பால் மண்டையில் அடித்து நொறுக்கினார்கள். தலை நொறுங்கவே - தளை அறு பட்டது. அடிமைநிலை மாறிற்று.

சுதந்திரம் கிடைத்தது. ஆனால், ஓயா, உழைப்பின் பயனாகவும், பல உத்தமர்களின் தியாகத்தினாலும் பெற்ற சுதந்திரத்தை ஏற்று நடத்திய மறக்க முடியாத ஒரு சரித்திர நிகழ்ச்சியை, மதக்கோட்பாட்டின்படி நாள் கோள் பார்த்தே நடத்தினர் என்றால் - அதிலும் ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டின்படி நல்ல நாள் பார்த்து சுதந்திர அரசாங்கத்தைத் தொடங்கினர் என்றால், மதக் கலப்பற்ற அரசியலையே இவர்கள் நடத்துகிறார்கள் என்று எப்படிக் கூற முடியும்? மதமா நமக்குச் சுதந்திரத்தை வாங்கித் தந்தது? மக்களின் உழைப்பன்றோ இன்று நாம் சுதந்திரமாக வாழ் வதற்கு அடிகோலித் தந்தது.

இதனை மறந்து மதங்களின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஆவணி அவிட்டத்தையும், கிருஷ்ண ஜெயந்தியையும், விநாயக சதுர்த் தியையும், மஹாய அமாவாசையையும், ஆயுத பூசையையும், பக்ரீத்தையும், மொகரத்தையும், தீபாவளியையும், வைகுந்த ஏகாதேசியையும், சிவராத்திரியையும் அரசின் விடுமுறை நாள்களாகக் கொண்டாடலாமா?

மத சம்பந்தமான நாள்களை அரசு விடுமுறை நாள்களாக்கிக் கொண்டாடுவது, இருநூறு ஆண்டுகளாக நாங்கள் அடிமைப்பகுதியில் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த மதமே! எமது அரசியல் விடுதலைக்கு உதவி புரியாத மதமே! சமுதாய ஒற்றுமையைக் குலைத்து எங்களுக் கிடையே ஒட்ட முடியாத பிளவை உண்டாக்கிய மதமே இருக்கின்ற சிறிதளவு ஒற்றுமையையும், அரசியலில் நுழைந்து குலைத்து விடாதே!
அரசியலை விட்டுச் சற்று விலகியிருப்பதே நீ எங்களுக்குச் செய்யும் பேருதவியாகும் என்று கூறி அதனை அரசியலோடு பிணைக்காமலும் அரசி யலின் பெயரால் அதற்கு விடுமுறை நாள்களை ஏற்படுத்தி மீண்டும் அரசியல் நெருக்கடிகளை உண்டாக்கி, அரிதில் பெற்ற விடுதலையை இழக்காமல் இருப்பதையுமே மத அடிப்படையின்மீது எழுப்பப்படாத இன்றைய அரசாங்கம் தன்னுடைய கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றோம்.

----------------அறிஞர் அண்ணா - "திராவிட நாடு" இதழ் - 23.5.1948

3 comments:

ஆகமக்கடல் said...

அட லூசு,
அரசாங்கம் அறநிலையத்துறை னு ஒரு அமைச்சகம் வச்சிக்கும்.அது மூலமா உண்டிகாசு கோடி கோடி யா லாபம் பாக்கும்.ஆனா மதம் சார்ந்த விழாவுக்கு லீவு கூடாதுன்னா எப்படி நியாயமாகும்.
சார் நீங்க ஒன்ன மறந்துட்டிங்க.இது மன்னர் ஆட்சி அல்ல.அவனுக இஷ்டப்படி சாமி கும்புடகூடாது,நெத்தில பொட்டு வச்சிக்கக்கூடாது,பண்டிகை கொண்டாடக்கூடாதுன்னு சட்டம்போட.

நடக்கரது மக்களாட்சி.இஷ்டத்து சட்டம் போட்டா மக்கள் வகுந்துருவாங்க வகுந்து.

போய்யா போயி உங்க புள்ள குட்டிகள கவனிங்க.இல்லாட்டி கூடங்குளம்,ஜனலோக்பால் மசோதா...போன்ற சமூக விஷயங்கள்ல அக்கரை செலுத்துங்க.அத விட்டுட்டு.

ஆகமக்கடல் said...

தைரியமிருந்தா அந்த கமென்ட்ட போட்டு அதுக்கு பதிலும் சொல்லு(ங்க)

நம்பி said...

ஆகமக்கடல் said...

// அட லூசு,
அரசாங்கம் அறநிலையத்துறை னு ஒரு அமைச்சகம் வச்சிக்கும்.அது மூலமா உண்டிகாசு கோடி கோடி யா லாபம் பாக்கும்.ஆனா மதம் சார்ந்த விழாவுக்கு லீவு கூடாதுன்னா எப்படி நியாயமாகும்.//

உண்டியல்ல காசு போடறவங்க! அறநிலையத்துறை அமைச்சகத்துக்கு வரிகட்டறவங்கதான்!, இந்த கோரிக்கையை வைக்கிறாங்க! இதில என்ன தப்பு இருக்கு ""டைட்டு!""

(மக்களோட ஒட்டுமொத்த வரிப்பணம் தான் கோயில் அரச்சகர் சம்பளம் முதற்கொண்டு....அறநிலையத்துறை செயல்பாட்டுக்கும், கோயில் நிர்வாக செலவுக்கும் செல்லுகிறது...இதில் வேண்டாமென்று சொல்லுகிறவர் பணமும், பிற சமயத்தவர் பணமும் அடங்கியிருக்கிறது)


ஆகமக்கடல் said...
//நீங்க ஒன்ன மறந்துட்டிங்க.இது மன்னர் ஆட்சி அல்ல......//

இப்படி சொல்லிட்டு ''புள்'' ''டைட்டு'' ''மப்புல'' மறந்துட்டா எப்படி....?

(''கடலில...'' குளிச்ச பிறகுமா? போதை தெளியலை!)

அதேதான் எல்லா விஷயத்துக்கும்....''பிரியலையா!''.............

இந்த மதச்சடங்குகள் எல்லாம் வேண்டாம்! என்று சொல்லுவதற்குத்தான் அதிக உரிமை இருக்குது......

''அரசியலமைப்பு சட்டம்''....... அப்படி....? முகப்புரையில (Preamble)......''மதசார்பற்ற'' ''மதசார்பற்ற'' (Secularism, Secularism)...........என்று எழுதிவைச்சிகிட்டு, மனிதனின் அடிப்படை உரிமைகளை (Human...Indian Fundamental Rights) எழுதி வைச்சிகிட்டு உட்கார்ந்து கிடக்குது!

'சரி! அப்படியே! 'புள்'' ''டைட்டுல'' யோசிச்சு பார்த்தாலும் தப்பா வறாதே! எல்லாருடைய பணமும் தானே கோயிலுக்கும் போகுது!

கக்கூசுல விழுந்த காசும் கோயில் உண்டியலுக்குத் தானே போகுதே!

மோந்து பாத்தா, இடுப்புல சொருவுறானுங்க!

நாத்தம் அடிச்சா, துட்டைத் தூக்கி போட்டுறானுங்களா! இல்லையே! கண்ணுல ஒத்திகிட்டு இடுப்புல சொருவிக்கிறானுங்க இல்லே!