Search This Blog

3.12.08

பெரியார் மறைவிற்குப் பிறகு இயக்கம் பல மடங்கு வேகமாக வளர்வதைக் கண்டு பெருமையடைகின்றோம்


திராவிடர் இயக்கத் தலைவர்கள் இருவர்தான். ஒருவர் கலைஞர்; மற்றொருவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தான் என்று மின்துறைஅமைச்சர் ஆர்க்காடு நா.வீராசாமி தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவில் கூறி விளக்க உரையாற்றினார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 76ஆம் ஆண்டு பிறந்த நாள் நேற்று (2.12.2008) சென்னை பெரியார் திடலில் ஒரு கொள்கை பரப்பு நிகழ்ச்சியாக, இன உணர்வு நிகழ்ச்சியாக நடைபெற்றது.



மின்துறைஅமைச்சர் ஆர்க்காடு நா.வீராசாமி தமது உரையில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு:


கலைஞருடன் - முதலாமவராக இருப்பவர்

முதல்வர் கலைஞர் அவர்களுடன் மாலை நேரத்தில் ஆட்சிக் கடமைகள், அரசியலில் அன்றாட நிகழ்ச்சிகள், தமிழ்நாட்டு அரசியல் நிலவரங்கள், மக்கள் நலப்பணிகள் என்று அன்றாடம் உரையாடுகின்ற ஒரு அய்ந்தாறு பேர்களில் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள் முதலாமவராக இருப்பதைக் கண்டு நாங்கள் எல்லாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

கலைஞர் ஆரம்பிப்பார் - வீரமணி முடிப்பார்


கலைஞர் அவர்களும், நமது ஆசிரியர் அவர்களும் இருவரும் உரையாடிக் கொண்டிருப்பார்கள். முதல்வர் கலைஞர் அவர்கள் பாதி வரலாற்றுச் செய்திகளைச் சொல்லிக் கொண்டே வருவார். கலைஞர் அவர்கள் பேசுகிறார்கள் என்றால் நாங்களெல்லாம் இடைமறித்துப் பேசமாட்டோம். ஆனால் நம்முடைய ஆசிரியர் அவர்கள் இடைமறித்து மீதிச் செய்திகளை எல்லாம் சொல்லி இவர் முடிப்பார். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் பொதுநலனில் பற்றோடு உரையாடி வருபவர்கள்.

ஆற்காட்டில் மாநாட்டுப் பந்தல் கொளுத்தப்பட்டது

ஆற்காட்டில் பெரியார் அவர்கள் கலந்து கொள்கிற மாநாட்டை அன்றைய திராவிடர் கழகத் தோழர் குப்பன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். எதிரிகள் மாநாட்டுப் பந்தலை கொளுத்திவிட்டார்கள். நான் அப்பொழுது ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்.

வீரமணி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அய்யா அவர்கள் கலந்து கொள்கிற மாநாட்டுப் பந்தலை எதிரி கள் கொளுத்தி விட்டார்கள் என்கிற செய்தி உங்களுக்குத் தெரி யுமா? என்று கேட்டார். நான் உடனே அய்யா அவர்களை சென்று சந்தித்தேன். வீரமணி அவர்களும் உடனே புறப்பட்டு அய்யா அவர்கள் தங்கியிருக்கின்ற ராணிப்பேட்டை பயணியர் விடுதிக்கு வந்துவிட்டார்.

அய்யா அவர்கள் தன்னந்தனியராக கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அய்யா அவர்களை நான் சந்தித்தேன். நான் ஆற்காடு சட்டமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினர் என்று அய்யா அவர்களிடம் சொன்னேன்.

வீரமணி அவர்களும் அங்கு இருக்கின்றார். 24 மணி நேரத்தில் அதே ஆற்காட்டில் அதைவிட சிறப்பாக அழகுறப் பந்தல் அமைத்து மாநாட்டை நடத்தி, அதே மேடையிலே அய்யா அவர் களுக்கு புது வேன் வாங்க நிதியையும் திரட்டித் தந்து அய்யா அவர்களிடம் பாராட்டுப் பெற்றேன். இவ்வளவு சுறுசுறுப்பான வரா நீங்கள் என்று என்னைப் பாராட்டினார்.

1976 ஜனவரி 31 அவசர நிலைப் பிரகடனம் முதலில் என்னைத் தான் கைது செய்தார்கள். நானும் ஆசிரியர் வீரமணி அவர்களும், மறைந்த சம்பந்தம் அவர்களும், குணசீலன் போன்றோரும் சிறை யில் வாங்கிய அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவ்வளவு செய்தி களையும் இந்த நேரத்தில் சொல்ல காலம் இல்லை.

அப்பொழுது வீரமணி அவர்களை ஒரு சிறை வார்டன் பூட்சு காலால் எட்டி உதைத்தான். அவர் அங்கிருந்து எறியப்பட்டு கீழே விழுந்து சரிந்தார். சிட்டிபாபு இறந்தார். சாத்தூர் பாலகிருஷ்ணன் இறந்தார். பெரியார் இல்லையென்றால்

தந்தை பெரியார் அவர்கள் இல்லை என்றால் - இந்த இயக்கம் இல்லை என்றால் நாங்கள் எல்லாம் அமைச்சராகவே ஆகியிருக்க முடியாது. தி.மு.க. ஆட்சிக்கே வந்திருக்காது. சூத்திரனுக்கு எதையும் கொடுக்கக்கூடாது என்ற நிலைதான் இருந்தது. நாம் மனிதர்களாகவே இருந்திருக்க முடியாது; வெறும் அடிமை களாகத்தான் இருந்திருப்போம்.

எங்களால் செய்ய முடியாத காரியத்தை

கலைஞர் அவர்கள் அய்ந்து முறை முதலமைச்சராக வந்திருக் கின்றார். நான் மூன்று முறை அமைச்சராகியிருக்கின்றேன்.

எங்களால் செய்ய முடியாத காரியத்தை திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் செய்து காட்டியிருக்கின்றார். திராவிடர் இயக்க வரலாற்றை தெரிந்த தலைவர்கள் இருவர்தான். ஒரு வர் கலைஞர். இன்னொருவர் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி.

பெரியார் கல்வி நிறுவனப் பிள்ளைகளின் சாதனைகள்

பெரியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த பிள்ளைகள் தி.மு.க. ஆட்சியின் சாதனைகளைச் சொன்னது போல - வேறு எந்தக் கல்வி நிறுவனமும், வேறு எந்தப் பல்கலைக்கழகமும் செய்து காட்ட முடியாது.

கலைஞர் ஆட்சியின் சாதனைகளை அவர்கள் ஒவ்வொன் றாகச் சொன்னபொழுது கலைவாணர் அரங்கில், செங்கல் பட்டில் செய்து காட்டியபொழுது முதல்வர் கலைஞர் அவர் களும், நாங்களும் வியந்து போனோம்.

எவ்வளவு செலவு ஆகும்?

தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை - ஒரு சூத்திர ஆட்சியின் சாதனைகளை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுத்துச் சொல்லி பரப்ப வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று வீரமணி அவர்களிடம் கேளுங்கள் என்று கலைஞர் சொன்னார். நான் உடனே வீரமணி அவர்களிடம் பேசிய பொழுது - ஒன்றும் வேண்டாம். வந்துபோக வாகனச் செலவு மட்டும் கொடுங்கள். மற்றவைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னார்.

முதலில் விழுப்புரத்தில்

அதன்படி முதலில் விழுப்புரத்தில் - பெரியார் கல்வி நிறு வனங்களின் மாணவச் செல்வங்களின் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். அடுத்து திருவண்ணாமலையில் நடைபெறும். இப்படி தமிழகம் முழுக்க நடைபெற இருக்கிறது. இந்த இயக்கம் என்ன ஆகுமோ?...

தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கம் என்ன ஆகுமோ என்று நினைத்தோம். தந்தை பெரியாரின் கொள்கை கள் - பணிகள் இன்றைக்கு அவர் இருந்த காலத்தைவிட பல மடங்கு வேகமாக வளர்வதைக் கண்டு பெருமையடைகின்றோம்.


நம்முடைய ஆசிரியர் அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்தையும் தாண்டி நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

--------------------"விடுதலை" 3-12-2008

21 comments:

கரிகாலன் said...

தோழர் தமிழ் ஓவியா அவர்களுக்கு வணக்கம்.

நான் பெரியார் தொண்டன் அல்ல. பெரியார் தொண்டனாக இருக்க முயற்சிப்பவன்.

ஆற்காடு வீராசாமி அவர்கள் பேசியதற்காக நான் இதை எழுதவில்லை. அவர் பேச்சு உங்களுக்கு உடன்பாடானதாக இருப்பதால் நான் இதை எழுதுகிறேன்.

பெரியாரின் கருத்துகளை முழுவதுமாக வீரமணியாரும் கலைஞரும் ஏற்றுக்கொள்கிறார்களா?

தந்தை பெரியாரின் இறுதிப் பிரகடனம் மேற்குறிப்பிட்டவர்களால் கைவிடப்பட்ட ஒன்று. அவர்களை எப்படி பெரியார் தொண்டர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

பெரியாரின் படைப்புகளை அரசுடமையாக்க வாய்ப்பிருந்தும் மேற்குறிப்பிட்ட இருவரும் இன்றுவரை முயற்சிக்காதது ஏன்?

பெரியார் மறைவிற்குப் பிறகு இயக்கம் பல மடங்கு வேகமாக வளர்வதாக எதன் அடிப்படையில் தாங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்?

ஈழத்தமிழர்களின் இன்னல்களுக்காக அனவரும் குரல்கொடுக்கும் இன்றையச் சூழலில் அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பட நடிகர்கள் வரை தாங்கள் பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழர் தலைவர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் வீரமணியார் அவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவது எதற்காக? கொள்கைப் பிரச்சாரத்திற்காக என்றால் தமிழ்நாடெங்கும் பிறந்தநாளுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் கொள்கைப் பிரச்சாரம் எங்கேயும் காணவில்லையே?

என்பன போன்ற ஐயங்கள் எனக்குள் எழுந்தது. தாங்கள் பெரியார் தொண்டர் என்ற அடிப்படையிலேயே இதை தங்கள் முன் வைக்கிறேன்

தமிழ் ஓவியா said...

தோழர் கரிகாலன் அவர்களுக்கு,

உங்கள் கேள்விகள் , அய்யங்களுக்கு இந்த வலைபூவில் உள்ள கட்டுரைகளைப் படியுங்கள். பதில் கிடைக்கும்.

தங்களின்
வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி

தமிழ் ஓவியா said...

தங்களின் அய்யங்களுக்கு இந்தக் கட்டுரை விடைஅளிக்கும், அய்யம் போக்கும். அருள்கூர்ந்து விருப்பு வெருப்பின்றி வாசிக்கவும்.

"தமிழர் தலைவரின் தலைமைப்பண்பு

பெரியார் பிறவாதிருந்தால் கிடத்திருக்குமா சுயமரியாதை வாழ்வு?
நீ பிறவாதிருந்தால்
புலப்பட்டிருக்குமா அடுத்த தலைமுறைக்கு
நம் தந்தையின் சிந்தனைச் சிறகடிப்பு?
"பெரியாரைப்பற்றி பேசா நாள்கள்
பிறவாத நாள்களே -
இயக்கப் பணியின் இலக்கணம் இதுதான் என
அய்யாவின் அடிச்சுவட்டில்
அன்றாடம் பயணித்திடும்
ஆழ்கடல் அனைய - செயல்
அணுகுமுறைக் கருவூலமே
பல்லாண்டு நீ வாழ்க!

பொது வாழ்க்கைப் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தலைவர்கள் தங்களது தனித்துவ ஆற்றலால் மனித சமுதாயத் திற்குப் பயன்பட்டு வருகின்றனர். அறிவார்ந்த பெருமக்களில் பலர் தமது சிந்தனைகளைச் செயல்படுத்தும் ஆற்றல் இன்றி முடங்கிக் கிடக்கின்ற நிலைமைகள் - மக்கள் மத்தியில் பரவலாக சிலர் அறிமுகமாகி பின்னர் பிரபலப்பட்டு இருந்தாலும் பொதுப் பிரச்சனைகளைப் பொறுத்த அளவில் அவர்களிடம் நிலவும் தெளிவற்ற நிலை - என பரிதாபகரமான நிலவரங்களே தற்கால சமுதாயச் சூழல்களாக பெருகி வருகின்றன. தனி மனித நல்லெண்ணங்கள் கருத்துப் பரவலுக்குப் பயன்படுவதைவிட பெரும்பாலான நேரங்களில் தன்னிலையை முதன்மைப் படுத்துவதில்தான் முடிகிறது. இயக்க அடிப்படையில் இணைந்து, களம் கண்டு, கருத்துகள் கனிந்து மக்களுக்குப் பயன்படும் நிலைகளை உருவாக்கிடும் பணிக்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்டோரே பொது வாழ்க்கையின் ஆயத்த நிலைக்கு முழுமையாகத் தம்மை அணியப்படுத்துபவராவர். அத்தகைய நிறைவு நிலையை எட்டிய தலைவர்கள் அருகி வரும் சூழல் நம் நாட்டில் - குறிப்பாக தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. கொள்கை கருத்து மாறுபாடுகள் நிலவலாம்; இருப்பினும் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைப் பரவலுக்கு ஆதாரம் சேர்ப்பவர்கள் மதிக்கப்பட வேண்டும். கொள்கையை ஏற்றுக்கொள்வது என்பதைவிட மாறுபட்ட கொள்கையை மதித்து பொது வாழ்க்கைப் பணிக்கு அணி சேர்க்கும் நல் அணுகுமுறை உருவாக்கம் நிலைப்பட வேண்டும்.

அருகில் இருந்தாலே அருமை தெரியாது

அருகில் இருந்தாலே அருமை தெரியாது என்பது எதார்த்த மொழி. Familiarity breeds contempt – fatalistic closeness எனும் ஆங்கில மொழி வழமைகளும் இப்பொருள் கொண்டவைதான். அருகில் இருந்து, அடிக்கடி பார்த்துப் பழக்கப்பட்ட தலைவர்களின் தனித்திறனை, செயல்திறனை அடையாளம் கண்டுணர்ந்து மதிக்கும் பண்பு பொது நல ஆர்வலர்களிடையே பரவ வேண்டும். வெறும் உணர்ச்சி வெளிப்பட்டு, கவர்ச்சிவயப்பட்டு, பரபரப்பாக வந்து, மின்மினிப்பூச்சி போல தோன்றி மறையும் கவனத்தை ஈர்ப்போரை அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்கும் - ஓரங்கட்டும் பக்குவம் மக்கள் மத்தியில் பெருக வேண்டும். வாழ்நாளின் பெரும்பகுதி வீணான விளைவுகளுக்கு வலு சேர்க்காத வகையில் அமைய வேண்டும். முறையான தலைவர்களை அடையாளம் காணும் முழுமையான பொதுநல உணர்வினை ஆக்க ரீதியில் வெளிப்படுத்தும் போக்கால் மனித சமுதாயம் மென்மேலும் வளம் பெற முடியும்

ஒருவர் வாழ்கின்ற காலத்தில் அவரைப் போற்றுதல் என்பது முகஸ்துதி என்னும் தவறான எண்ணம் களையப்பட வேண்டும். அறியப்படும் ஆற்றல்களை அடையாளப்படுத்தி அவற்றை வெளிப் படுத்துவது, வருங்காலத்தில் நல்ல தலைவர்கள் இளைய தலைமுறையில் இருந்து உருவாகிட வழி வகுக்கும். இருக்கின்ற தலைமையையும் முழுமையாகப் பயன்படுத்தி பொதுவான பலன்களைப் பெருக்க முடியும்.

இப்படி முழுநிலைப் பொதுவாழ்க்கைப் பணிக்கு தம்மை ஈடுபடுத்திக் கொண்டு சமுதாயப்பணி ஆற்றி வரும் தமிழ் நாட்டுத் தலைவர்களில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மீ.கி. வீரமணி அவர்கள் தனித்துவம் நிறைந்தவர்; பத்து வயதில் பொதுக்கூட்ட மேடையேறிப் பேசத் தொடங்கி இன்று (2.12.2008) 76ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கும் 66 ஆண்டு கால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். தமிழகத்தில் - இந்தியாவில் - ஏன் உலக அரங்கில்கூட அவருடைய பொதுவாழ்க்கைப் பணிக்கு ஒப்பிட்டு யாரையும் காட்ட இயலாது. முழுமையான பொது வாழ்க்கைக்கு அவசியம் தேவைப்படும் அடிப்படை ஆற்றல்கள் - பேச்சு, எழுத்து, செயல் - இம்மூன்று தளங்களிலும் தனித்தன்மை யோடு விளங்கி மக்கள் தொண்டு ஆற்றிவரும் தலைவர்களில் மானமிகு முனைவர் மீ.கி. வீரமணி அவர்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவர். நேரடி அரசியலில் பங்கேற்காமல், மக்களிடையே மக்கள் நல கருத்து உருவாக்கத்திற்கு வலு சேர்த்து, மக்கள் ஆட்சிக்கு மாண்பு சேர்க்கும் அவரது பணி அரும்பணியாகும்.

75 ஆண்டு நிறைவடையும்வரை தன்னுடைய பிறந்த நாளுக்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்காத தலைவர் மானமிகு மீ.கி. வீரமணி அவர்கள். அன்புத் தொல்லைகள் அதிகம் வரும் எனக் கருதி பிறந்தநாள் அன்று இல்லம் - தலைமையிடம் நீங்கி, இருக்கும் இடம் வெளிப்படுத்தாத, விளம்பரம் வேண்டாத தலைமைப் பண்பு அவரிடம் இருந்தது. இருப்பினும் பவள விழாக் கண்ட நிலையில் இயக்கத் தோழர்களின் அன்பு வற்புறுத்தலுக்கிணங்க தனது பிறந்தநாளை கொள்கை வழிப்பட்ட நாளாக - மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூக நீதிக் காப்பு, அறிவியல் வளர்ச்சி என கருத்துப் பரவலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் நாளாக மாற்றிய தலைவர் தமிழர் தலைவர் மீ.கி. வீரமணி அவர்கள்.

பொது வாழ்க்கைப் பயணத்தில் தன்னை முன்னிலைப் படுத்தாமல், தாம் கடைப்பிடித்து வரும் இயக்கத்தின் கொள்கையினை முன்நிறுத்திப் பார்க்கும் மனப்பக்குவம் பெரிதும் நிறைந்த தலைவர் அவர். மேலும் தேவையின் அவசியம், காலச்சூழல், கனிந்து வரும் வேளை - இவை அனைத்தையும் உள்வாங்கி எந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிப்பது என்ற திட்டம் வகுத்து, அதனை செயல் வடிவம் காணக் களம் அமைத்துப் பணியாற்றிடும் ஆற்றல் அவரிடம் காணும் தனித்தன்மையாகும். உன்னதக் கொள்கைக்காக உரிமை உடையவர்களிடம் எழுச்சியை உருவாக்கி அதனை ஒருமுகப்படுத்தி உரிய அதிகார நிலையினருக்கு - கொள்கை எதிரிகளுக்கு எடுத்துச் சொல்லும் கருத்தாற்றல் அரிமாவாக பொது வாழ்க்கைப் பணியினை அமைத்துக்கொண்டவர் அவர்.

உணர்ச்சிவயப்பட்டுப் பேசும் தன்மை வாய்ந்தவர் களையும், உள்ளபடியான நிலைமைகளை எதார்த்தமாக வெளிப்படுத்தி தனது கொள்கைத் தெளிவு மற்றும் வாதத் திறமையால் பகுத்தறிவுக் கடிவாளம் இட்டு, ஆக்கப்பூர்வச் செயலுக்கு ஆதாரம் சேர்ப்பவர் என அனைத்துக் கட்சியினராலும், பிற இயக்கத்தினராலும் அறியப்படுபவர், தமிழர் தலைவர் ஆவார்.

இயக்கம் சம்மந்தப்பட்ட செயல்பாடுகளில் பொறுப் பாளர்களின் பணிகளை ஒருங்கிணைத்து அவர்களை நெறிப்படுத்திக் கொண்டு செல்லும் அணுகுமுறைப் பாங்கால், மேலாண்மை நெறிகளின் கொள்கலனாக விளங்குகிறார். இயக்கத்தினரின் செயல்பாடு பற்றிய தன்னுடைய கணிப்பு தவறு என்றால் சுட்டிக்காட்டும் கடமை இயக்கப் பொறுப்பாளர்களுக்கு உண்டு என்பதை செயல் பாட்டு ஆய்வு நேரங்களில் வெளிப்படையாகப் பறைசாற்றி, இயக்கத்தின் உள்செயல்பாடுகளில் அணுகுமுறைச் சுதந்திரம் அளித்து, கொள்கைப் பிரச்சாரத்திற்குக் கட்டுக்கோப்பான வலுசேர்த்து வருகிறார்.

தனது கவனத்திற்கு கொண்டு வரப்படும் சிறிய அன்றாடச் செயல்களில் கூட தவறான அணுகுமுறையைக் காணும் சமயங்களில் கண்டிப்புடன் அறிவுறுத்தி நெறிப்படுத்தும் திறன் - அவர் நிலையில் உள்ள தலைவர்களிடம் காண்பது அரிது. தவறுகள் நிருவாகச் செயல்பாடுகளில் நிகழலாம்; செய்த தவறினை உரியவர்கள் ஏற்றுக்கொண்டு மீண்டும் அவை நிகழா வண்ணம் பார்த்துக்கொள்வது என்பதுதான் எதிர்பார்ப்பு. அதனை விடுத்து தவறினை மூடி மறைத்து அல்லது அவற்றிற்கு நியாயம் கற்பிக்கும் அணுகுமுறையால் யாருக்கும் பலன் இல்லை என்பதை தயவு தாட்சண்யம் இன்றி இயக்கத்தின் நன்மையை மட்டுமே கருதி நெறிப்படுத்தும் தன்மை - இளைய தலைமுறை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய அணுகுமுறை ஆகும்.

இதழாசிரியர் என்ற நிலை

எந்தவிதச் சூழலில் தாம் இருந்தாலும், விடுதலை மற்றும் இயக்கத் தொடர்பான இதழ்களின் செயல்பாட்டில் செய்தி, பிரசுரம் என அவரது கவனத்திற்குக் கொண்டுவரப்படும் நேரங்களில் தன்னுடனேயே ஊறி வளர்ந்துள்ள இதழாளர் பண்பிற்கு ஏற்ப காலதாமதமின்றி உடனுக்குடன் முடிவு, திருத்தம், அறிக்கை என அவற்றிற்கு ஆவன செய்யும் தன்மை, உள்ளபடியே வியப்படைய வைக்கும். அப்படி கவனம் செலுத்தும் வேளையில் உடன் இருப்பவர்களை உதாசீனம் செலுத்துவதாக அமைந்து விடாத வண்ணம் அவர்களிடம் காலச்சூழலைத் தெரியப்படுத்தி, சிறிது நேரம் காத்திருக்க வேண்டுகோள் விடுத்து, எந்த நிலையில் இருந்தாலும் தான் ஓர் இதழாசிரியர் என்பதை நினைவுபடுத்திச் செயலாற்றும் பாங்கு, பலதரப்பட்ட பணியினை மேற்கொண்டு பணியாற்று பவர்க்குப் பாடமாக அமையும்.

தலைமைப் பண்புகளில் தலையாய கூறு, ஆற்றப்பட வேண்டிய பணிகளை உரிய பிறருக்கு அளித்து, காரியம் ஆற்றும் கலையாகும். Delegating என ஆங்கிலப் பயன்பாட்டில் நிலவும் மேலாண்மைப்பண்பே அது. ஆற்றவேண்டிய பணிகளை கூறுபோட்டுப் பிரித்துக்கொடுத்து, செயலாற்றும் சிக்கலை முன்கூட்டியே உணர்ந்து, செயலாற்றுவோர் துவண்டுவிடாமல் உரிய வகையில் ஊக்கம் அளித்து, தேவைப் படும் நேரத்தில் பக்க பலமும் அளித்து,

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன் கண்விடல்

என வள்ளுவர் கூறும் மேலாண்மை இலக்கணத்திற்கு இலக்கியமாக வாழ்ந்து வருகிறார் தமிழர் தலைவர் மீ.கி. வீரமணி அவர்கள்.

ஆற்ற வேண்டிய பணிக்கு முனைப்படுத்தப்பட்ட இயக்கப் பொறுப்பாளர்கள், முதல் கட்ட களப்பணியில் பலன்கிட்டா நிலையில் துவண்டு விழும் நேரங்களில், களப்பணி என்றால் அப்படித்தான் இருக்கும்; தாமாக சமூக சீர்திருத்தங்கள் நடந்துவிடும் என்றால் நம் பணிக்கு அவசியமே எழாது. வினையாற்றும் செயல்நுட்பத்தினை மேலும் விளக்கி, துணை புரிவோர்கள் தாமாகக் கனிந்து நமது செயலுக்கு வலு சேர்த்து விட மாட்டார்கள்; உரியவர்களை மீண்டும் மீண்டும் விடாமல் சந்தித்து நமது நோக்கத்தினை விளக்கி அவர்களது துணை வலிமையை எடுத்துக்காட்டி காரியம் ஆற்றிட வேண்டும் என பக்குவமாய் எடுத்துச் சொல்லி, கடந்தகால வரலாற்று நிகழ்வுகள், சீர்திருத்தம் நிலைகொள்ள முதலில் தயக்கம் காட்டிய பலரும் - எடுத்துச் சொன்ன பின்னர் வழிக்குவந்து வலுசேர்த்த செய்திகளை எல்லாம் சுவைபட எடுத்துச் சொல்லி பொறுப்பாளர்களை முனைப்படுத்தி, மீண்டும் அவர்களை களம் இறக்கும் அவரது பணிப்பாங்கே அலாதியானது.

படைப்பின் முழுமையான நயம் படைப்பாளிக்கே தெரியாது என்பர். சுவைஞருக்குத்தான் அதன் அருமை முழுமையாகப் புரியும். நல்ல செய்திகள், உரிய ஆற்றல் எங்கிருந்தாலும் அதனை காந்தமாகப் பற்றி இழுத்து சமுதாய நலனுக்கு ஒருங்கிணைத்துக் கொடுக்கின்ற (Integrating Force) ஆற்றல்மிக்க தலைவராக ஆசிரியர் மீ.கி.வீரமணி விளங்கு கின்றார். படைப்பாளிக்கே புலப்படாத பல்வேறு செய்தி களை உரியவர்களின் முழுமையான கவனத்திற்கு எடுத்துச் செல்லும் சமூக இசைவு ஏற்றுநர் (Social Facilitator) என்பதோடு மட்டுமல்லாமல் வினை முடிக்கும் வித்தகராகவும் விளங்கி வருகிறார்.

செயலாற்றும் வித்தகம்

செயலாற்றும் வித்தகத்தை சிறப்பாகக் கடைப்பிடிப்பது எப்படி என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு. அண்மையில் ஈழத்தமிழர் துயர்துடைக்க திராவிடர் இயக்கத்தின் வாழும் வரலாறாய் விளங்கிடும் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சென்னை - மயிலை மாங்கொல்லையில் உரையாற்றினார். அந்த உணர்ச்சிப்பூர்வமான - கருத்துப்பூர் வமான உரையினை தாய்த்தமிழக உறவுகளிடம் எடுத்துச் செல்லும் விதமாக, கலைஞர் உரையடங்கிய குறுந்தகடுகளை சென்னை - பெரியார் திடலில் ஈழத்தமிழர் துயர்நீக்க, தான் ஆற்றிய சிறப்புரையைக் கேட்க வந்தோர் மத்தியில் ஒலி - ஒளிபரப்பி ஈழத் தமிழர் இன்னல் நெடியினை வலுவாக உணரச் செய்தார். தமிழகம் முழுவதும் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களைக் கொண்டு பல்வேறு இடங்களில் அதே நாளில், அதே வேளையில் கலைஞர் உரையினை ஒலிக்கச் செய்து ஈழத் தமிழரின் துயரத்தை தமிழர்தம் இதயம் நெகிழ - இன எதிரிகள் நடுக்கமுற எடுத்துச்சென்ற செயல்திட்ட வித்தகர் தமிழர் தலைவர் மீ.கி. வீரமணி ஆவார்.

உலகில் எந்தவொரு கருத்தாளருக்கும் கிடைக்காத வழித் தோன்றல் பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியாருக்குக் கிடைத்துள்ளார். தமிழர் தலைவர் ஆசிரியர் மீ.கி. வீரமணி அவர்கள் வழித்தோன்றலாக வந்தமைந்தார். பெரியார் சிந்தனைகளின் பல்வேறு பரிமாணங்கள், பிரமிப்புப் பிம்பங் களை தொடர் சொற்பொழிவுகளாக வழங்கி அவற்றை பேச்சு வடிவிலேயே புத்தகமாக - பெரியாரியலாகத் தொகுத்த தமிழர் தலைவரது தனிப்பெரும் செயல் போற்றுதலுக்குரியது. கொள்கைப் பேராசானுக்கு, கொள்கை வழிப்பட்ட இம்மாணவர் காட்டிய நன்றிப்பெருக்கு சொல்லில் அடங் காது. பெரியாரைப்பற்றி பேசாத நாள்கள் பிறவாத நாள்களே என ரத்தினச் சுருக்கமாகச் சுட்டிக்காட்டி இயக்கத்தினை நடத்தி வருகிறார்.

ஒப்பிட முடியாத அணுகுமுறை

பெரியாரியல் கருத்துப் பரவலுக்கு தமிழர் தலைவர் காட்டும் செயல்திட்ட அணுகுமுறை ஒப்பிடமுடியாத, உவமை சொல்ல இயலாத தன்மை வாய்ந்தது. பெரியாரது கொள்கைப் பரவலுக்கு ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களையும், புதிய பதிப்பித்தலையும் நேர்த்தியாக மேற்கொண்டு, காண்பவர் கவனத்தைக் கவர்ந்து, கருத்து உள்வாங்கலுக்கு ஏதுவாக்கும் அவரது பதிப்பகப்பணி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முக்கிய ஊர்களில் - குறிப்பாக மக்கள் கூடும் பேருந்து நிலையம் போன்ற மய்யங்களில் திராவிடன் புத்தக நிலையத்தினை (Dravidian Book House – DBH) திறந்தும், நகர்வுப் புத்தகச் சந்தை (Mobile Book House) என - நுகர்வாளர் விற்பனையாளரிடம் வருவதை விடுத்து, விற்பனையாளர் நுகர்வோரிடத்திற்குச் செல்லும் திட்பமான அவரது மேலாண்மை அணுகுமுறை (Polarising at buyers’ point) - - பதிப்பக மற்றும் புத்தக விற்பனை சார்ந்த தனிநபர் மற்றும் பிற இயக்கத்தினரை வியப்படைய வைக்கிறது. பொதுக்கூட்டங் கள், தெருமுனைப் பிரச்சாரம், தலைமையிடச் சிறப்பு சொற்பொழிவுக் கூட்டங்கள் நடைபெறும் நாள்களில் புத்தக விற்பனை மேலாண்மையின் வித்தகம் பெரியார் இயக்கத்தவர் களுக்கு கைவந்த கலையாகிவிடும். அக்கலையினை கற்பித்த வித்தகர் தமிழர் தலைவரே.

மற்றொரு பரிணாமம்

கொள்கை வழிப்பட்ட படைப்புகளோடு, பலதரப்பட்ட மக்களும் ஆர்வமுடன் படித்து வாழ்வில், மகிழ்ச்சிக்கு வித்திடும் திறனுடன் செயல்படுவதற்கு ஏதுவாக நடைமுறைச் செய்திகளை, ஆலோசனைகளை எளிமையான மொழியில் வாழ்வியல் சிந்தனைகள் என விடுதலை நாளிதழில் தொடர்ந்து வெளியிட்டு வரும் தமது கருவூலக் கருத்துகளை புத்தகங்களாகப் பதிப்பித்து புதுமை படைத்து வருகிறார். இச்செயல்பாட்டுத்தளம் அவரது மற்றொரு அணுகுமுறைப் பரிமாணமாகும்.

நாள்தோறும் கடவுள் மறுப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம், போராட்டக்களம் என மும்முரமாய்ப் பொதுப்பணி ஆற்றிவரும் ஒரு தலைவர், அக்கொள்கை சாராமல் வாழ்வியலுக்குப் பயன்படும் சிந்தனைகளை மக்களிடம் விதைக்க முடியும் என்பதற்கு மீ.கி. வீரமணி அவர்களே ஓர் எடுத்துக்காட்டு என மாற்றுக்கருத்துகொண்ட நாளிதழ்களும் மதிப்புரை வழங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் அவர்.

திராவிடர் கழகம் ஓர் அரசியல் கட்சி அல்ல; அது ஒரு சமூக சீர்திருத்த இயக்கம். இயக்கம் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படும் தன்மை வாய்ந்தது - ஆதிக்கவாதிகளின் விமர்சனத்திற்கு அஞ்சாத பயணம் - கொள்கையை வெளிப்படையாகப் பேசினால் மக்களது வாக்கு வங்கியின் தாக்கம் ஏற்படுமோ என்ற தயக்கமில்லாத செயல்தன்மை - இயக்கத்தில் பொறுப்பு என்பது பதவி அல்ல; பணிசெய்கின்ற வாய்ப்பு - என கட்சிக்கும் இயக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டு எல்லைகளை எடுத்துக்கூறி ஒரு மாணவனுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியரைப்போல விளக்கம் அளித்து இளைய தலைமுறையினரை தன்பால் ஈர்த்து, தலைமுறை இடைவெளியில்லா இயக்கம் - திராவிடர் கழகம் எனும் நிலைமையை உருவாக்கியவர் அவர்.

கொள்கை வழித்தோன்றல்

தமிழ்நாட்டுப் பொதுவாழ்க்கைப் பணியில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற தலைவர்களிடம் தந்தை பெரியாரின் தொடர்பு, கொள்கைத் தாக்கம் ஏதேனும் ஓரு வகையில் சூல்கொண்டிருக்கும். பெரியார் தாம் வாழ்ந்த காலத்தில் அனைத்துப் பொதுப்பிரச்சனைபற்றிய கருத்து களையும் வெளிப்படையாகத் தெரிவித்து பதிவு செய்த தலைவர் ஆவார். அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் மதிக்கப்பெற்ற மாபெரும் தலைவராக வாழ்ந்தார். பெரியாரின் கொள்கை அடிச்சுவட்டில் அன்றாடம் பயணித்திடும், பவள விழா நாயகரான தமிழர் தலைவர் மீ.கி. வீரமணி அவர்கள் அய்யாவின் கொள்கை வார்ப்பு என அனைவராலும் பாராட்டப்படுபவர். தனது இயக்கத்தினருக்கு பதவி, அதிகாரம் என எதையும் எதிர் பாராமல் பொதுப்பணி ஆற்றும் தன்மையால் சிறப்புப் பெற்று வருகிறார். தமது கருத்துகளின் வெளிப்படையான நோக்கத்தினை விளக்கி, உள்நோக்கம் ஏதும் இல்லா அணுகுமுறையினைக் கடைப்பிடித்து, பிற இயக்கத்தவர் மத்தியிலும் மதிப்புறு தலைவராக மாண்பமைந்து விளங்கு கிறார். இந்நிலையில் வயது முதிர்ச்சி, அனுபவம் தந்த ஆற்றல், ஏற்றுக்கொண்ட கொள்கையின் வலு, எடுத்து விளக்கும் அணுகுமுறை ஆற்றல் ஆகியவற்றால் அரசியல் இயக்க எல்லைகளைத் தாண்டிய பொது வாழ்க்கைப் பணியின் நாயகராக பரிமாணம் பெற்று அவர் செயலாற்றும் காலம் தொடங்கிவிட்டது. பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியானது தனது இயல்பான மூச்சு போன்றது என்று கூறும் பெரியாரது முழுமையான கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் மீ.கி. வீரமணி அவர்கள் பல்லாண்டு வாழ்க ! பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள் பார் முழுவதும் பரவிடுக !

- வீ. குமரேசன்
பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்"

தமிழ் ஓவியா said...

தோழர் கரிகாலன் அவர்களுக்கு,

தி.க.தலைவர். மீ.கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள பிறந்தநாள் செய்தியிலிருந்து ஒரு பகுதியை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

"தமிழர் தலைவர் விடுத்துள்ள பிறந்த நாள் சேதி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தம் பிறந்த நாள் செய்தியாக அளித்துள்ள அறிக்கை வருமாறு:

எனக்கு இன்று 76-வது பிறந்த நாள். வயது ஏறுவது இயற்கை; வாழ்க்கையை லட்சிய நோக்கோடு வாழ்வதுதான் முக்கியம். தனக்கு மட்டுமே வாழ்க்கை என்றெண்ணாது சமுதாயத்திற்காக அதன் முன்னேற்றத்திற்கும் உழைப்பதே உயர் தனிக்குறிக்கோள் என்று கருதி வாழ்வதே பயனுறு வாழ்வு என்பதை நம் அறிவுக்கு தந்தை பெரியார் போதித்ததோடு, சாதித்தும் வாழ்ந்தும் காட்டியுள்ளார்.

அய்யாவிடம் கற்ற பாடம்

அவர்தம் தொண்டர்களுக்குத் தொண்டனான தோழனான எனது வாழ்க்கையும் அவர்கள் விட்ட பணி தொடருவதே குறிக்கோள் என்ற அடிப்படையிலேயே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ் வொரு மணித்துளியும், ஒவ்வொரு நொடியும் வாழ்க்கை உழைப்பின் மூலமே நகர வேண்டும் என்பதே அய்யாவிடம் யாம் கற்ற பாடம்!

எம்மினத்தவர் ஈழத் தமிழர் குண்டு மழையை நாளும் சந்தித்து, குழந்தைக் குட்டிகளுடன் பாலுக்கும் நீருக்கும் தவியாய்த் தவித்துக் கொண்டு குற்றுயிரும் குலை உயிருமாக லட்சணக்கணக்னோர் வாழும் நிலையில் இதயத்தில் இரத்தம் கசிகிறது! கண்ணீரும் வற்றி விடுகின்றது.

இந்நிலையில் எதற்குப் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் -தேலையில்லை என்றுதான் திராவிடர் கழகச் செயற்குழுவில் மன்றாடிக் கேட்டுக் கொண்டேன்.

பிரச்சாரக் கூட்டம்

பிரச்சாரக் கூட்டங்களில்கூட ஈழத் தமிழர்ப் பாதுகாப்புப் பிரச்சாரமாக, மக்களை நிம்மதியாக வாழவிடாத மதவெறிக் கூட்டத்தின் பயங்கரவாதத்தின் வேர் நிலை எதுவோ, அதைக் கருவறுக்க எத் தகைய அறிவியல் அணுகுமுறை தேவை என்பதை விளக்கிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். நூல்கள் வெளியிடுவது இயக்கப் பிரச்சாரம்தான்.

விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, ‘The Modern Rationalist’ - ஆகிய ஏடுகளுக்கு சந்தாக்களை அதிகம் சேர்த்தல் அவசியம்!

விடுதலையின் பவளவிழா!

விடுதலையின் பவள விழா 75-ம் ஆண்டு வரும் ஜூன் அன்று! அதற்கான அடிக்கட்டுமானத்தைப் பலப்படுத்தி பொது மக்கள் கையில் திகழும் வெகு மக்கள் ஏடு விடுதலை என்ற நிலையை உண்டாக்குவதை இலக்காக்கிக் கொண்டு இமை கொட்டாது உழையுங்கள் தோழர்களே! தோழியர்களே!

அந்த ஏடு மட்டுமில்லாமலிருந்தால் நம் இனத்தின் மான வாழ்வு, உரிமை வாழ்வு மிகப் பெரிய கேள்விக் குறியாகி இருக்குமே!

அய்யா, அம்மாவின் தலைமைக்கும் வழிகாட்டுதலுக்கும் பிறகு அவர்கள் நமக்கு மட்டுமின்றி நாட்டுக்கே நம் இனத்திற்கே விட்டுச் சென்ற கலங்கரை விளக்கு விடுதலை நாளேடு.

அதுதான் வீழ்ச்சியுறும் தமிழ்நாட்டைக் காப்பாற்றும் நம் இனத்தின் எஃகுக் கவசமாகும்.'

வீரமணி என்றால் பெரியாரின் குறியீடு என்றுதான் பொருள்.
வீரமணியின் பிறந்தநாளை பெரியாரின் கொள்கைப் பரப்பல் நோக்கிலேயே கொண்டாடப்படுகிறது.

நட்புடன் ஜமால் said...

\\திராவிடர் இயக்கத் தலைவர்கள் இருவர்தான். ஒருவர் கலைஞர்; மற்றொருவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தான் என்று மின்துறைஅமைச்சர் ஆர்க்காடு நா.வீராசாமி தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவில் கூறி விளக்க உரையாற்றினார்.\\

கரண்ட் கட்டாகம இருந்திச்சா ... ;)

தமிழ் ஓவியா said...

இயற்கையின் கோணல் புத்தியால் மின்தட்டுப்பாடு பல முரை வந்துள்லது. இப்போது அது சரி ச்ய்யப்பட்டு வருகிறது. மாற்றம் என்ற சொல்லைத் தவிர அனைத்தும் மாறும்.


தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி ஆதிரை ஜமால்.

தமிழ் ஓவியா said...

வீரமணி அவர்களின் தொண்டு பற்றி

1." தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது, இனி திராவிடர் கழகம் இருக்குமா, இருக்காதா என்று யாரோ அவசரக்காரர்கள் கேள்வி கேட்க, நம்முடைய இளவல் வீரமணி அவர்கள் இரண்டும் இருக்கும். திராவிடர் கழகம் இணையாது. அதே நேரத்தில் அணையாது என்றும் அவர்கள் சொன்ன அந்தச் சொல். திராவிடர் கழகம் என்ற அமைப்புக்கு மாத்திரமல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்புக்கு மாத்திரமல்ல. தந்தை பெரியார் அவர்கள் ஏற்றி வைத்த திராவிட இயக்கத் தீபத்திற்கு அவர்கள் அன்றைக்கு வழங்கிய உறுதிமொழி தான் இது. அந்தத் தீபத்தை அணையாமல் காப்பாற்ற இரண்டு கரங்கள் அந்தத் தீபத்தை இன்றைக்குப் பிடித்திருக்கின்றன. ஒரு கரம் என்னுடையது. மற்றொரு கரம் நம்முடைய இளவல் வீரமணி அவர்களுடையது."

------- முதலமைச்சர் கலைஞர்


2.தொடர வேண்டிய தொண்டு

"தமிழ் இனத்தின் விழிப்புக்கு வழிகண்ட தந்தை பெரியாரின் வழித் தோன்றலாக, பெரியாரின் தேர்வுகளில் வென்று அவரின் நம்பிக்கையைப் பெற்றவராக பெரியாரின் கொள்கைக் காவலராக, அவற்றைப் பரப்பும் பொறுப்பினராக, அதற்குரிய தகுதியும், திறமையும், தெளிவும், உறுதியும், ஊக்கமும், முயற்சியும் உடையவராக விளங்குபவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். பெரியாரின் பெருந்தொண்டின் பயன் மங்கி, மறையாது தொடர்ந்து நிலைத்திட ஆசிரியர் வீரமணியின் தொண்டு தொடர்ந்தாக வேண்டும்."

---------- நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன்

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் சாதனைகளில் சில துளிகள்:-

* சாரங்கபாணி என்ற தம்பெயரை வீரமணி என மாற்றி பெயர்ப் புரட்சிக்கு வித்திட்டவர்.

*
பத்து வயதில் இயக்கத்தில் சேர்ந்தார்.

* அண்ணாமலைப் பல்கலைக்கழக முதுநிலைத் தேர்வில் முதல்மாணவராய்த் தங்கப் பதக்கம் பெற்றார்.

* தமிழரின் இனமானக் கேடயம், பகுத்தறிவுப் போர்வாள் விடுதலை, ஏடு தொடர பொறுப்பேற்றார்- (1962).

* இந்திய அளவிலும், உலக அளவிலும், மனித நேய, நாத்திக அமைப்புகளை ஒருங்கிணைத்து, நாத்திகத் தலைநகர் சென்னைதான், தலைவர் பெரியார்தான் என பேசவைத்தார்.

* உத்தரப் பிரதேசத்தில் பெரியார் மேளா நடத்தி, சமூக நீதி தலைவர்கள் பெயரில் பரிவர்த்தன் சவுக்-பூங்கா லக்னோவில் அமையச் செய்தார்.

* தொண்டர்களால் உலகிலேயே தங்கத்தால் எடைபோட்டு அதன் நிதியை இயக்கத்தில் சேர்த்த தலைவர் எனப் பெரும்புகழ் பெற்றார்.

* புதுடில்லி-பாம்னோலி, ஜைசோலா 2 பெரியார் மய்யங்களை உருவாக்கியவர்.

* இந்துக்களின் புனித நூலான கீதைக்கு மறுப்பாக கீதையின் மறுபக்கம் எழுதினார்.

* பெரியார் பெயரில் தமிழக அரசு சமூக நீதி விருது அமையக் காரணமானார்.

* 21-ஆண்டுகாலப் போராட்டத்தால் நுழைவுத் தேர்வு ரத்து ஆணை வந்து உயர்கல்விப் புரட்சிக்குக் காரணமானார்.

* பிற்படுத்தப்பட்டோருக்கு 31% இருந்து 50% உயர்ந்து, 69% இடஒதுக்கீடு உயர காரணமாகத் திகழ்ந்தார்.

* இடஒதுக்கீடு பாதுகாப்பு சட்டம் 31-சி தந்து 76-வது திருத்தம் செய்து 9-ஆவது அட்டவணையில் (1994-ல்) சேர்த்து சமூக நீதியைக் காப்பாற்றினார்.

* மண்டல் கமிஷன் அறிக்கை நிறைவேறி மத்திய அரசு கல்வி, வேலை வாய்ப்புகளில் 27% பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்கிடு செய்ய தொடர்ந்து போராடினார்.

* நெய்வேலி என்.எல்.சி.நிலக்கரி நிறுவனம், சேலம் உருக்காலை தனி யார் மயமாவதைத் தடுத்திடக் காரண மானவர், நெய்வேலி நிலக்கரி, நரிமணம் பெட் ரோலியத்திற்கு ராயல்டி மத்திய அரசிடமிருந்து, மாநில அரசுக்கு கிடைக்க வழிவகை செய்தார்.

* பகுத்தறிவோடு குழந்தைகள் வளர பெரியார் பிஞ்சு இதழ் தொடங்கியவர், விடுதலை நாளேடு 1995 இல் முதன் முதலில் இணையத் தளத்தில் வெளியிட்டவர், திருச்சி பதிப்பு விரிவுபடுத்தினார்.

* பெரியார் திரைப்படம் எடுத்து இளைய தலைமுறைக்கு பெரியாரின் வாழ்வையும் தொண்டையும் புரியவைத்தார்.

* பெரியாரின் அறிவுச் சொத்துகளான 338-க்கும் மேற்பட்ட நூல்களும், பெரியாரின் எழுத்துகளையும், சொற்பொழிவுகளையும் 33-தொகுப்பு களஞ்சியங்களாக 10,064-பக்கம் கொண்டதோடு, தொடர்கிறது ஆவணக் காப்பு பணி.

* உலகில் முதன் முதலில் நாத்திகத் தலைவர் பெயரால், நாத்திக பகுத்தறிவு இயக்கத்தால் நடத்தப்படும் பெரியார்-மணியம்மை பல்கலைக்கழகம் வளர கல்வி அறப்பணி தொடர்ந்தார்.

* பெரியாரின் இறுதி விருப்பமான ஜாதி ஒழிப்பின் இறுதி எல்லை அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டம் கலைஞர் அரசு கொண்டுவந்து நடைமுறைப்படுத்தக் காரணமானவர்.

* தமிழர்களுக்குப் புத்தாண்டு தை முதல் நாளே என கலைஞர் அரசு ஆணை பிறப்பிக்கக் காரணமானவர்.

* சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றவும், ஈழத்தமிழர் விடுதலைக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடிவரு பவரும் ஆவார்.

தொகுப்பு: வெற்றி (நன்றி: "உண்மை" 1-15 2008)

தமிழ் ஓவியா said...

ஈழத்தமிழர்களின் இன்னல்கள் களைய வீரமணி அவர்களும் திராவிடர்கழகமும் பாடுபட்டதின் விபரங்கள் வருமாறு:

"பற்றி எரியும் ஈழமும் திராவிடர் கழகத்தின் பணிகளும்!
- தொகுப்பு: கவிஞர் கலி.பூங்குன்றன்,
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

ஈழத் தமிழர்கள் நெடுங்காலமாக சிங்கள வெறியர்களின் குரூரத் தாக்குதல்களுக்கு ஆளாகி வந்துள்ளார்கள் என்றாலும் 1983-ல் புதிய சக்தியுடன் அந்தத் தாக்குதல்கள் தீவிரமாகத் தொடங்கின. சிங்கள வெறியர்கள் மட்டுமல்ல - அரசு பயங்கரவாதமும் சேர்ந்து தமிழின மக்கள்மீது கொடிய தாக்குதல் போர் தொடங்கியது.

அந்தக் கால கட்டத்தில் திராவிடர் கழகம் இப்பிரச்சினையின்மீது கண்களை வைத்து தொடர்ந்து விடாமுயற்சியுடன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதனுடைய ஒரு தொகுப்பை இங்குக் காணலாம்.

1. 18.6.1983 சனி மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி தமிழின மக்களின் உணர்வை வெளிப்படுத்தியது. 2.7.1983 அன்று சென்னை அண்ணா நகரில் புல்லா ரெட்டி அவின்யுவில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட பிரமாண்ட எழுச்சிப் பொதுக் கூட்டத்தை நடத்தியது. அநேகமாக அக்கால கட்டத்தில் இப்பிரச்சினைக்காகத் துவக்கப்பட்ட ஒரு முக்கிய நிகழ்ச்சி இது என்றே குறிப்பிட வேண்டும்.

2. 23.7.83 அன்று பிரதமர் இந்திரா காந்திக்கு மடல் எழுதப்பட்டது. தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமரைச் சந்தித்து ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண வற்புறுத்துமாறு கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி கடிதம் எழுதினார்.

3. 1983 ஆகஸ்டு 15-ஆம் நாளைத் துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் அன்று கறுப்புச் சின்னம் அணிந்தும் வீடுகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிட்டும், பொது இடங்களில் கறுப்புக் கொடி ஏற்றியும் நமது துக்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்றும் 8.8.1983-இல் சென்னையில் கூடிய திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு கூட்டம் முடிவு செய்தது.

தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்டு 15-இல் நடைபெறும் விழாக்களில் பங்கு கொள்ள வேண்டாம் என்று அவர்களுக்குத் தனித்தனியே கழகத்தின் சார்பில் மடல் எழுதப்பட்டது. முதலமைச்சருக்கும் அன்று கோட்டையில் கொடி ஏற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

4. 16.8.1983 அன்று ஈழ அகதிகளாகத் தமிழகம் வந்து சேரும் குழந்தைகளுக்குப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் கல்வி உதவிகள் வழங்கப்படும் என்று பொதுச் செயலாளர் அறிவித்தார்.

5. இலங்கைத் தமிழர்க்காகத் துப்பாக்கி ஏந்துவோம் என்று சொன்ன இனமான மதுரை ஆதீன கர்த்தர்மீது தமிழக அரசு ஏவிய வழக்கைக் கழகம் சந்தித்தது.

6. தமிழன் இறைச்சிக் கடைகளைத் திறந்திருக்கும் ஜெயவர்த்தனே டில்லிவந்த பொழுது, எதிர்த்துக் கறுப்புக் கொடி! கழகப் பொதுச் செயலாளரும், கழகத் தோழர்களும் பங்கு கொண்டு கைது செய்யப்பட்டனர் (23.11.1983).

7. ஈழத் தமிழர் பிரச்சினையில் உலகத் தமிழர்கள் உணர்ச்சி எரிமலையாக விண்ணில் ஒரு காலும் - மண்ணில் ஒரு காலும் வைத்து கிளர்ந்து நிற்கின்றனர். என்பதை உலகுக்குக் காட்டும் மாநாடுகள் மதுரை மாநகரில் (17,18-12-1983) நடத்தப்பட்டன.

ஈழ விடுதலை மாநாடு என்றே நடத்தப்பட்டது. எழுச்சி மிக்க பேரணி - மதுரை வரலாற்றில் நெருப்புக் கொப்பளமாக வெடித்தது. ஈழ விடுதலைக் கொடியை தோழர் குமரிநாடன் ஏற்றினார்.

ஈழத் தமிழினத் தலைவர்களும், தமிழ்நாட்டுத் தலைவர்களும் பங்கேற்றனர்.

உலகத் தமிழர்கள் மத்தியில் என் இளவல் வீரமணி உயர்ந்து நிற்கிறார் என்பது அறிந்து பெருமிதபடுவதாக அம்மாநாட்டில் கலைஞர் அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த அளவு எழுச்சி மிக்க மக்கள் கடல் திரண்ட மாபெரும் இன எழுச்சி மாநாடு அது.

8. அமெரிக்காவில் நியூயார்க்கில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் பொதுச் செயலாளர் கி. வீரமணி கலந்துகொண்டார்.

(ஜூன் 3 முதல் ஜூலை 2 வரை) லண்டனில் நடைபெற்ற ஈழப் போராளிகள் வீர வணக்க நாளிலும் பங்கேற்றார் (24.7.1984).

9. இங்கிலாந்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினையில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, அவர்கள் கையொப்பமிட்டு கூட்டு அறிக்கை வெளியிடச் செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் கி. வீரமணி, ப. நெடுமாறன், எல். கணேசன் எம்.பி., ஆகியோர் இப்பணியில் முன் நின்றனர் (29.7.84).

10. ஈழத் தமிழர் பிரச்சினை-யில் இந்திய நடுவணரசு காட்டி வரும் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டித்து ஆகஸ்டு 15 சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்து நாடெங்கும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. திருச்சியில் பொதுச் செயலாளர் அதற்காகக் கைது செய்யப்பட்டார். நாடெங்கும் அய்யாயிரம் தோழர்கள் கைதாயினர்.

11. இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பச் சொல்வது முட்டாள்தனம் என்று சொல்லி தமிழினத் தலைவர்களை இழித்தும், ஈழத் தமிழர்களுக்குத் துரோகமும் செய்த இராணுவ அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் துணைக் குடியரசுத் தலைவராகப் பதவி-யேற்று முதன் முதலாகத் தமிழகத்தில் சென்னைக்கு வந்தபொழுது, அவருக்குக் கறுப்புக்கொடி காட்டிட முனைந்து கழகப் பொதுச் செயலாளர் உள்பட திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

12. ஈழத் தமிழர் பிரச்னையைக் கொச்சைப்படுத்தி, இந்தியா டு டே இதழுக்குப் பேட்டி கொடுத்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் கொடும்பாவி கழகத்தின் சார்பில் எரியூட்டப்பட்டது. (6.10.1984)

13. இராமேசுவரம் தீவைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது அவர்களை சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். அதற்கு எந்தவித எதிர்ப்பு நடவடிக்கையையும் எடுக்காத இந்திய அரசே செயல்படு! தமிழக அரசே தூங்காதே! என்று கழகப் பொதுச் செயலாளரும் மதுரை ஆதீனமும் மதுரையில் முகவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக முன் மறியல் செய்து கைது. (3.12.1984)

பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்குக் கழக சார்பில் நிதியும் வழங்கப்பட்டது.

14. ஈழப் பிரச்சினை என்ற முறையில் டெசோ உருவாக்கப்பட்டது. (TESO - TAMIL EALEM SUPPORTERS ORGANISATION) உருவாக்கப்பட்டது. (13.5.1985)

டாக்டர் கலைஞர் தலைவராகவும், பேராசிரியர் க. அன்பழகன், கி. வீரமணி, மதுரை நெடுமாறன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் கொண்டு தனி ஈழம் உருவாக உருப்படியான பணிகளில் ஈடுபட உறுதி எடுத்துக் கொண்டு பிறந்த அமைப்பு இது!

தமிழ்நாட்டில் இருந்து தமிழீழத் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள் என்ற செய்தி வந்ததும் - வராததுமாக இது கொடுத்த 24 மணி நேரம் அழைப்பினைச் செவிமடுத்து இலட்சோப லட்சம் தமிழினத்தார் தலைநகரிலே அணி வகுத்து அரிமாக் குரல் கொடுத்தனர் (25.8.1985)

15. டெசோ சார்பில் இரயில் நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து தமிழ்நாட்டையே வெறிச்சோடச் செய்யப்பட்டது. (30.8.1985).

16. விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கிட திராவிடர் கழகத்தின் சார்பில் நிதி வசூலும் உணவுப் பொருள்களும் வசூல் செய்து கொடுக்கப்பட்டது.

17. தமிழ் ஈழப் பகுதிகளில் உயிரைப் பணயம் வைத்து வீரப்பயணம் நடத்தி, கண்ட கொடுமைகளை வீடியோவாக்கித் தமிழகம் திரும்பிய மாவீரன், ப. நெடுமாறனை பிரதமர் ராஜீவ்காந்தி சந்திக்க மறுப்பது ஏன்? அசாம், பஞ்சாப் தலைவர்களுடன் பேச்சு நடத்தும் ராஜீவ் - தமிழர்களை மதிக்கும் லட்சணம் இதுதானா? என்று மயிலைப் பொதுக் கூட்டத்தில் (3.3.1986) பொதுச் செயலாளர் கி. வீரமணி வினா எழுப்பினார்.

18. 7.3.1986: திருச்சி மேற்கு மாவட்டக் கழகத் துணைத் தலைவர் கரூர் பழ. இராமசாமி விடுதலைப்புலிகளுக்கு ஜீப் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கினார்: ஜீப் சாவி, தமிழர் தளபதி மூலம் விடுதலைப்புலித் தோழர் ஒருவரிடம் தரப்பட்டது.

இடையாற்றுமங்கலத்தில் (8.3.1986) நடந்த இ.ச. தேவசகாயம் மணவிழாவில், திருச்சி கிழக்கு மாவட்ட திராவிடர் தொழிலாளரணி அமைப்பாளர் முத்துச்செழியன் புலிகளுக்காக தமிழர் தளபதி மூலம் சுவேகா மோட்டார் சைக்கிள் ஒன்றினை அன்பளிப்பாக அளித்தார்.

19. 20.5.1986: சிங்கள ராணுவம் விமானத்திலிருந்து குண்டு வீசும் போக்கை தடுத்து நிறுத்தவலியுறுத்தி பிரதமருக்கு கழகப் பொதுச் செயலாளர் இன்று தந்தி தந்தார்.

20. இல்லினாய்ஸ் கருத்தரங்கில் 15.7.1986: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நகரின் இல்லியனாய்ஸ் பல்கலைக் கழக மண்டபத்தில் ஈழத் தமிழர் குறித்த கருத்தரங்கம் - டாக்டர் இளங்கோ ஏற்பாட்டில் நடந்தது. இதில் 25 நிமிடங்கள் ஆங்கில உரையாற்றிய தமிழர் தளபதி - இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழமே தீர்வு என வலியுறுத்தினார்.

18.7.86: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வாஷிங்டன் ஏரியா உயர்நிலைப் பள்ளியில் தமிழர் தளபதிக்கு நிகழ்த்திய வரவேற்புக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து உரை நிகழ்த்தினார்.

தமிழர் பிரச்சினை பற்றி தமிழர் தளபதியை அமெரிக்க வானொலி (வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா) பேட்டி கண்டது.

21. பெங்களூர் சார்க் மாநாட்டிற்கு இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே வந்தபோது நமது எதிர்ப்புணர்வைக் காட்டும் வகையில் தமிழ்நாடெங்கும் ஜெயவர்த்தனே கொடும்பாவி கழகத் தோழர்களால் எரியூட்டப்பட்டது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர் (17.11.1986).

22. ஈழப் போராளிகளின் தொலைத் தொடர்பு கருவிகளைத் தமிழக அரசு பறிமுதல் செய்தபோது கழகம் கடுமையாக கண்டித்தது. அரசின் நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகளின் தளபதி தம்பி பிரபாகரன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணாவிரதத்தை பொதுச் செயலாளர் கண்டித்து எழுதினார். மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அன்றே பொதுச் செயலாளர் நேரில் வீட்டுக்குக்கூட செல்லாமல் உண்ணா விரதத்தை முடித்து வைத்தார் (23.11.1986).

23. யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு உணவை அனுப்பாமல் முற்றுகையிட்டுக் கொன்ற கொலைகார சிங்களவெறி அரசுக்குத் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இந்திய அரசு கப்பல் மூலம் உணவு ஏற்றுமதி செய்த கொடுமையைக் கண்டித்து திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரசும் இணைந்து கப்பல் மறியல் போராட்டம் நடத்தியது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர். (20.2.1987).

24. யாழ் மருத்துவமனையை மூடி தமிழீழ மக்களை அவதிக்குள்ளாகக் திட்டமிட்டிருந்த ஜெயவர்த்தனே அரசை எதிர்த்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன் திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரசும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின (8.5.1987). இதன் காரணமாக யாழ் மருத்துவமனை மூடாமல் தடுக்கப்பட்டது.

25. சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இரண்டு தமிழர்களின் குடும்பத்தினரை சேது பாவா சத்திரத்திற்கு உடனடியாக கழகப் பொதுச் செயலாளர் சென்று அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி கழகத்தின் சார்பில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக அளிக்கப்பட்டது. (26.5.1987)

26. சென்னை சைதாப்பேட்டையில் தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் தனது எடைக்கு ஈடாக அளிக்கப்பட்ட ரூபாய் நாணயங்களையும் (10 ஆயிரம் ரூபாய்) அதோடு கழகத்தால் வசூல் செய்யப்-பட்ட நிதியையும் சேர்த்து ரூ.25,684-57 தொகையையும், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகளையும் விடுதலைப்புலிகளுக்குப் பொதுச் செயலாளர் அவர்கள் கடற்கரை விழாவில் (1.5.1987) வழங்கினார்கள்.

27. ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு காட்டிவரும் அலட்சியத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இரயில் மறியல் போராட்டம் நடத்தியது. திராவிடர் கழகத்துடன், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தோழர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள நாடெங்கும் தோழர்கள் கைது செய்யப்பட்டனர் (1.6.1987)

28. சென்னையில் உள்ள இலங்கைத் தூதர் திசா ஜெயக்கொடி என்பவரின் நடவடிக்கைகள் இந்தியப் பாதுகாப்புக்கு ஆபத்தானவை - அவரை வெளியேற்ற வேண்டும் என்று வீரமணி அவர்களும் நெடுமாறன் அவர்களும் விட்ட அறிக்கையைத் (5.6.1987) தொடர்ந்து 2.7.1987 அன்று மத்திய அரசால் அவர் வெளியேற்றப்பட்டார்.

29. ஈழத் தமிழர்கள்மீது சரித்திரம் காணாத துரோக ஒப்பந்தத்தைத் திணித்த இந்திய அரசைக் கண்டித்தும், ஒப்பந்தத்தை எதிர்த்தும், ராஜீவ்காந்தி -ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை எரித்து அதன் சாம்பல் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது (2.8.1987) திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரசும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தின. நாடெங்கும் பல்லாயிரக்கணக்கில் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

30. நாடாளுமன்றத்தில் கொழும்பு ஒப்பந்தம்பற்றி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கும் நோக்கத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்களும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நெடுமாறன் அவர்களும், டெல்லி சென்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் சந்தித்து, கொழும்பு ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள துரோகத் தனங்களைத் தோலுரித்துக் காட்டினர் (13.8.1987). அதன் எதிரொலியை நாடாளுமன்றத்தில் கேட்க முடிந்தது.

31. கொழும்பு ஒப்பந்தத்தின் நயவஞ்சகத்தை தமிழ்நாட்டு மக்களிடத்திலே எடுத்துரைக்கும் கட்டுப்பாட்டுடன் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்களும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நெடுமாறன் அவர்களும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு கட்டமாகச் சூறாவளிச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்கள் (16-6-1987 முதல் 21.6.1987 முடிய 7.9.87 முதல் 11.9.1987 முடிய)

32. 1.10.1987-இல் மறைந்த மாவீரன் திலீபனுக்காக இரங்கல் ஊர்வலம்.

33. 9.10.1987 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் பார்ப்பன உணர்வோடு செயல்படும் இலங்கைத் தூதர் தீட்சத்துக்குப் பதில் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டுகோள் விடப்பட்டது.

34. 14.10.1987, 19.10.1987 ஆகிய இரு நாள்களிலும் சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு.

17.10.1987 அன்று தமிழ்நாடெங்கும் அரைநாள் கடையடைப்புப் போராட்டம்.

26.10.1987 அன்று தமிழ் நாடெங்கும் உள்ள வானொலி நிலையங்கள் சென்னைத் தொலைக்காட்சி நிலைய முன் மறியல் - பொதுச் செயலாளரும் தலைவர்களும் தொண்டர்களும் கைது - சிறை.

நாடெங்கும் நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தில் பங்கேற்பு (6.11.1987).

21,22.12.1987

தமிழ்நாடு வந்த பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கு கழகத்தின் சார்பில் ஆங்காங்கே கறுப்புக் கொடி காட்டப்பட்டது.

25.1.1988

இந்தியக் குடியரசு நாள் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் அழைக்கப்பட்டார். அதனைக் கண்டிக்கும் வகையில் சனவரி 26 அன்று கருப்புக் கொடி ஏற்றவும் - ஜெயவர்த்தனேயின் கொடும்--பாவியைக் கொளுத்தவும் திராவிடர் கழகம் அறிவித்தது. எங்கெங்கும் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கொடும்பாவியைக் கொளுத்த முயன்றபோது காவல்துறையினர் தடியடி நடத்தினர். கழகப் பொதுச் செயலாளர் உட்பட கழகத் தோழர்கள் பலரும் காயம் அடைந்தனர். கழகப் பொதுச் செயலாளர் உள்பட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

(22-ஆம் முறையாகக் கழகப் பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டார்)

21.3.1988

ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் உள்பட தோழர்கள் கைது.

7.6.1988

பிரபாகரன் உயிருக்குக் குறி வைக்காதே! என்று குரல் கொடுத்து சென்னையில் உள்ள தென் மண்டல இராணுவம் தலைமையகம்முன் ஆர்ப்பாட்டம்

29.7.1988

ராஜீவ் - ஜெயவர்த்தனே துரோக ஒப்பந்தத்திற்கு ஒரு வயது ஆனதை முன்னிட்டு அந்நாளில் நாடெங்கும் கண்டன ஊர்வலங்கள்.

28.7.1988 - 22.8.1988

உலக அரங்கில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் சக்திகளின் முகத்திரைகளைக் கிழித்தெறிந்திட கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கனடா, அமெரிக்கா சுற்றுப் பயணம்.

31.7.1988

அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் குடியரசுத் தலைவரின் வெள்ளை மாளிகைமுன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மானமிகு கி. வீரமணி கலந்து கொண்டார்.

18.8.1988

தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த விடுதலைப்புலிகளை சிறையில் அடைத்தமையைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு.

மாநாடுகள்

விடுதலைப்புலிகளின் கைதைக் கண்டித்து நாட்டின் பல முக்கிய பகுதிகளில் கண்டன மாநாடுகள் மதுரை -2.9.1988, தஞ்சாவூர் - 8.9.1988 சேலம் - 14.9.1988

10.9.1988

கால் ஊனமுற்று வீட்டில் இருந்த விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவைச் சந்திக்கச் சென்ற திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் கைது.

19.9.1988

தமிழகத்தில் இருந்த ஈழப் போராளிகளைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தபோது அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் விடுதலைப்புலிகளை அழைத்துப் பேச வேண்டியும் பிரதமர் ராஜீவ்காந்திக்குக் கழகப் பொதுச் செயலாளர் தந்தி கொடுத்தார். 26.9.1988

பாதுகாப்புச் சட்டத்தின் பேரால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை விடுதலை செய்யக் கோரி திலீபன் நினைவு நாளில் சென்னை, மதுரை மத்தியச் சிறைச்சாலைகள் முன் ஆர்ப்பாட்டம். பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட போராளிகள் பிரச்சினைமீது நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழுமுன் கழகத்தின் சார்பில் போராளிகளுக்காக வாதாடப்பட்டது.

14.5.1989

இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழர் மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் கலந்து கொள்ளல் (29,30.4.1989) வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்புப் பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பங்கேற்பு (14.5.1989).

24.7.1989

மாவீரன் பிரபாகரன் சுட்டுக்கொலை என்று கோழைத்தனமாகக் கிளப்பப்பட்ட புரளியை எதிர்த்து உலகிற்கு உண்மையை எடுத்துரைத்த முதல் தலைவர் வீரமணி. முதல் ஏடு விடுதலை (24.7.89).

29.7.1989

ஈழத்தைவிட்டு இந்திய இராணுவம் வெளியேறக் கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன் தமிழ் நாடெங்கும் ஆர்ப்பாட்டம் தமிழர் தேசியக் கட்சியுடன் இணைந்து நடத்தப்பட்டது.

12.7.1990

ஈழத்தில் தமிழினப் படுகொலை புரியும் இலங்கை அரசை எதிர்த்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் அலுவலக முன் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

26.9.1990

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் எல்லாம் கண்டனப் பேரணிகள் - திராவிடர் கழகத்தின் சார்பில்.

13.7.1992

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் ஈழ அகதிகள் கல்விப் பாதுகாப்பு மாநாடு

6.6.1995

ஈழத்தில் இந்திய ராணுவத் தலையீடு கூடவே கூடாது என்ற பொருளில் தியாகராயர் நகர் சங்கர்தாஸ் கலையரங்கில் பழ. நெடுமாறன் தலைமையேற்க திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி பங்கேற்று கருத்துரையாற்றினார்.

17.7.1995

ஈழத்தில் முப்படைகளைக் கொண்டு தமிழர்களை அழிக்கும் சிங்கள அரசின் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் இலங்கைத் துணைத் தூதர் அலுவலகத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தூதரக அதிகாரியிடம் - போரை நிறுத்தக் கோரி மனுவும் அளிக்கப்பட்டது. முன்னதாக சென்னை பெரியார் திடலிலிருந்து கண்டன ஊர்வலம் புறப்பட்டு, கல்லூரி சாலையில் உள்ள தூதர் அலுவலகத்திற்கு முழக்கமிட்டு ஊர்வலமாகச் சென்றனர் கழகத் தோழர்கள்.

29.7.1995

ஈழத்தில் இனப் படுகொலை என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் எழுச்சியுரை ஆற்றினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி.

1.8.1995

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்த அய்.நா.விடம் கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை திராவிடர் கழகம் இன்று தொடங்கியது. 31.9.1995 அன்றுவரை இப்பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

10.8.1995

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், கையெழுத்து இயக்கம் நடத்திடவும் தென் சென்னை மாவட்டத்தில் இன்று துவங்கி நூறு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

6.11.1995

ஈழத் தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய இடங்களில் கண்டனப் பேரணி திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி பங்கேற்றார்.

கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு அனைத்துத் தரப்பினரும் எரியும் தீயை அணைப்போம் வாரீர்! என்று வேண்டுகோள் விடுத்தார் கழகப் பொதுச் செயலாளர்.

9.11.1995

ஈழத்தில் நடைபெறும் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்திட திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்டது. 23.2.1996

சென்னை பெரியார் திடலில் ஈழத் தமிழர்களுக்கெதிரான இந்தியத் தலையீடு பற்றி கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, பழ. நெடுமாறன், பழ. கருப்பையா, சேவியர் அருள்ராஜ் ஆகியோர் பேசினர்.

30.4.1996

ஈழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்-களில் மனிதச் சங்கிலி அறப்போர் நடைபெற்றது.

20.8.1996

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை மே தினப் பூங்கா அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து பேரணி புறப்பட்டு, ஆதித்தனார் சாலை பாந்தியன் சாலை, கல்லூரி சாலை வழியாக இலங்கைத் துணைத் தூதரகத்தின்முன் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் ஆயிரக்கணக்கான கழகத் தோழர்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்-பட்டது.

28.5.1997

சென்னைப் பெரியார் திடலில் ஈழத் தமிழர்ப் பிரச்சினைபற்றி முடிவு எடுக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை திராவிடர் கழகம் கூட்டியது.

6.6.1997

ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்காக தமிழகம் தழுவிய அளவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. ஆயிரக்-கணக்கில் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

17.6.1997

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில், தமிழர் தலைவர் கி. வீரமணி, பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, பழ. நெடுமாறன் ஆகியோர் உரையாற்றினர்.

26.7.1997

தமிழக மீனவர் பாதுகாப்பு, கச்சத் தீவு மீட்புரிமை மாநாடு இராமேசுவரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. தமிழர் தலைவர் கி. வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசு, மருத்துவர் ச. இராமதாசு, பழ. நெடுமாறன், கா. ஜெகவீரபாண்டியன், டாக்டர் இரா.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து-கொண்டனர்.

29.7.1997

கச்சத்தீவு உரிமை தமிழக மீனவர் பாதுகாப்பு கோரி திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. (வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

14.12.1997

ஈழத் தமிழர் ஆதரவு பன்னாட்டு மாநாடு டில்லி-யில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசு அவர்களை அமைப்பாளராகக் கொண்ட அம்மாநாட்டில் தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் பங்கு கொண்டனர். அரங்கில் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜார்ஜ் பெர்னாண்டசு இல்லத்தில் நடத்தப்பட்டது. நடுநிலையாளர்கள் முன்னிலையில் விடுதலைப்புலிகள் - இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

25.2.1998

ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தீர்ப்பு குறித்து சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோர் உரையாற்றினர். ராஜீவ் கொலை வழக்கில் மறு விசாரணை தேவை என்றார் திராவிடர் கழக பொதுச் செயலாளர்.

7.1.2006

இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மா.வை. சேனாதி ராஜா, மலைவாழ் மக்கள் முன்னணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பொ. சந்திரசேகரன் ஆகியோர் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடினர்.

1.6.2006

சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார். பாவலர் அறிவுமதி, பா.ம.க., தலைவர் கோ.க. மணி (எம்.எல்.ஏ.,) ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்.

12.11.2006

நாள்தோறும் ஈழத் தமிழர்கள் சிங்கள இராணுவத்-தால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்தும், பட்டினியால் சாகடிக்கப்படும் கொடுமையைக் கண்டித்தும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பி திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலை-நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கி நடத்தினார். சென்னையில் திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை தலைமை தாங்கினார்.

19.12.2006

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்திட இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்று கோரி தந்தி அல்லது தொலைப்பதிவி மூலம் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரசு தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு அனுப்பி வைக்குமாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர்களுக்கு வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டார்.

22.12.2006

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்புக் கோரி தமிழ்நாடெங்கும் மனிதச் சங்கிலி அறப் போராட்டம் திராவிடர் கழகத்தால் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. திமுக., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சியினர் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன், மதிமுக சார்பில் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு அணி வகுக்கப்பட்டது.

5.2.2007

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜி லிங்கம், பத்மநாபன் அரியநேத்திரன் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை சென்னைப் பெரியார் திடலில் இன்று சந்தித்து உரையாடினர். உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளர் டாக்டர் இரா. ஜனார்த்தனமும் உடன் வந்தார்.

6.3.2007

ஈழத்தில் நடைபெறுவது என்ன? என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டத்தில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும் உரையாற்றினர்.

20.7.2007

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை கோரி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் மெமோரியல் ஹால் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையேற்றார்.

31.12.2007

இலங்கை சுதந்திர தினவிழாவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் கலந்து கொள்வதை எதிர்த்து சென்னை மெமோரியல் ஹால் முன் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. அதன் காரணமாக பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

4.8.2008

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை கோரியும், தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கோரியும் திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை மெமோரியல் ஹால்முன் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

22.9.2008 ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை சென்ட்ரலில் இரயில் மறியல் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் - திருமாவளவன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளரும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்-கில் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

20.10.2008 பற்றி எரிகிறதே ஈழம் என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பொதுக் கூட்டத்-தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.

24.10.2008 தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி இன்று சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலிப் பேரணியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் கொட்டும் மழையில் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

6.11.2008 பற்றி எரியும் ஈழமும் பார்ப்பனப் பத்திரிகைகளும் என்ற தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரை நிகழ்த்-தினார். திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை தலைமை தாங்கினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் வரவேற்-புரையாற்றினார்.

1983 முதல் இந்நாள் வரை ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் தொய்வின்றித் தொடர்ச்சியாக ஒரே நிலையில் (Consistency) நின்று குரல் கொடுத்தும், போராடியும் வரும் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு வரலாற்றில் என்றும் நின்று பேசக் கூடியதாகும்.

பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் எழுச்சியூட்டும் தொடர் பயணங்கள் மாநாடுகள், பேரணிகள், போராட்டங்கள் மட்டுமல்ல தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்கும் கண்காட்சிகளையும் கழகம் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்."

பெரியார் மறைவுக்குப் பின் ஈழப் பிரச்சனையில் தி.க. பாடுபட்ட விபரம் மட்டுமே இங்கு தொகுத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. மற்ற விபரங்கள் அவ்வப்போது வரும் என்பதை தோழர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி தோழரே.

தமிழ் ஓவியா said...

//அந்த சட்டத்தை இயற்றியதே நம் அம்பேத்கர் தான். அவர் முற்போக்கு சிந்தனையுடன் சட்டத்தை வடிவமைக்கவில்லை என்று சில கும்பல் பரப்பினால் என்னாவது?//

தோழர் ஆதவன் அவர்களுக்கு,

வணக்கம்

அம்பேத்கர் அவர்களின் மேற்கோள் இது. படியுங்கள்:

"இந்திய அரசியல் சட்டத்தை நான் எழுதியதாகச் சொல்லுகிறார்கள்.இப்போது ஆன் சொல்லுகிறென் "அந்தச் சட்டத்தை தீ வைத்துக் கொளுத்த முதல் ஆளாக இருக்கிறேன்" என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
-----டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் 3-9- 1953 பாராளுமன்ற உரையிலிருந்து .

தோழர் ஆதவன்,

அம்பேத்கர் அவர்கள் பொதுக்கூட்டத்தில் மேற்கண்ட கருத்தை தெரிவிக்கவில்லை. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்கள். அது அவைக்குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது.

அம்பேத்கர் ஏன் சட்ட அமைசர் பதவியிலிருந்து விலகினார் என்பது பற்றியெல்லாம் தெளிவாக எழுதியுள்ளார். அருள்கூர்ந்து அம்பேத்கர் தொகுப்பு நூல்கள் கிடைக்கிறது படிக்க வேண்டுகிறேன்.

சட்ட வரைவுகளை நிறை வேற்ற விடாமல் எப்படியெல்லாம் தடுத்தார்கள் என்பது பற்றி அம்பேத்கர் தெரிவித்த விபரம் இதோ:

"இந்து சட்டவரைவை பிரதமர் நேரு திட்டமிட்டே நிறைவேற்ற மறுத்தார் - V

இந்து சட்ட வரைவு அவையின் முன்னால் இருந்த போதே, அது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. ஓர் ஆண்டுவரை அதைப் பொறுக்குக் குழுவுக்கு அனுப்புவது அவசியம் என்றே அரசு கருதவில்லை. 1948 ஏப்ரல் 9 அன்று தான் அது பொறுக்குக் குழுவின் பரிசீலனைக்காக அளிக்கப்பட்டது. 1948 ஆகஸ்டு 12 அன்று தான் அந்த சட்டவரைவு குறித்த அறிக்கை அவைக்கு வழங்கப்பட்டது. 1948 ஆகஸ்டு 31 அன்று அந்த அறிக்கையை ஆய்வு செய்யக்கோரும் தீர்மானத்தை, அவையில் கொண்டு வந்தேன். தீர்மானத்தைக் கொண்டு வருவதற்காகவே சட்ட வரைவு அவையின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், 1949ஆம் ஆண்டின் பிப்ரவரி கூட்டத்தொடர் வரை, இந்தத் தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற அனுமதிக்கப்படவில்லை. பின்னர் விவாதம் அனுமதிக்கப்பட்டது.

அப்போதும் கூட தொடர்ந்த விவாதத்திற்காக அது அனுமதிக்கப்படவில்லை. அது விட்டுவிட்டுப் பத்து மாதங்களும், பிப்ரவரியில் 4 நாட்களும், மார்ச்சில் 1 நாளும், 1949 ஏப்ரலில் 2 நாட்களும் நடைபெற்றது. இதற்குப் பின்னர் 1949 டிசம்பரில் இச்சட்ட வரைவுக்கு ஒரு நாள் ஒதுக்கப்பட்டது. அது டிசம்பர் 19 ஆகும். அன்று தான் பொறுக்குக்குழுவினால் பரிந்துரைத்தபடியான எனது சட்ட வரைவு, பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1950ஆம் ஆண்டில் சட்ட வரைவுக்கு நேரம் எதுவும் கொடுக்கப்படவில்லை. அடுத்தபடியாக, அவையின் முன் சட்ட வரைவு வந்தது 1951 பிப்ரவரி 5ஆம் தேதியாகும். அப்போது சட்ட வரைவு ஒவ்வொரு விதியாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிப்ரவரி 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே சட்ட வரைவுக்கு ஒதுக்கப்பட்டு, பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது.

இது, இப்போதைய நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத் தொடராதலால், இந்த நாடாளுமன்றம் முடிவடைவதற்கு முன்பே இந்து சட்டத் தொகுப்பு சட்ட வரைவை நிறைவேற்றுவதா அல்லது புதிய நாடாளுமன்றத்திற்கு அதனை விட்டு விடுவதா என்பதை அமைச்சரவை தீர்மானிக்க வேண்டியிருந்தது. இந்த நாடாளுமன்றத் தொடரிலேயே இந்த சட்ட வரைவை நிறைவேற்றுவது என்று அமைச்சரவை ஒருமித்ததாக முடிவு செய்தது. ஆகவே சட்ட வரைவு நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டது. மேற்கொண்டு விதி வாரியான பரிசீலனைக்காக 1951 செப்டம்பர் 17 அன்று அது எடுத்துக் கொள்ளப்பட்டது.

விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிரதமர் ஒரு புதிய யோசனையை முன்வைத்தார். அதாவது, கிடைக்கக்கூடிய கால நேரத்திற்குள் சட்ட வரைவை முற்றிலுமாக நிறைவேற்ற இயலாது. ஆகவே சட்ட வரைவு முழுவதையும் நிறைவேற்ற அனுமதி அளிப்பதற்குப் பதிலாக, அதன் ஒரு பகுதியை சட்டமாக இயற்றுவது விரும்பத்தக்கது என்று அவர் யோசனை கூறினார். “மொத்தமும் இழந்துவிடக்கூடிய நிலையில் இருக்கும் போது, ஒரு பகுதியையாவது பாதுகாப்பது நல்லது” என்ற முதுமொழிக்கு இணங்க நானும் அதை ஏற்றுக் கொண்டேன்.

திருமணம் மற்றும் மணவிலக்குக்கான பகுதியை நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று பிரதமர் யோசனை கூறினார். இந்த வகையில், சிதைக்கப்பட்ட வடிவத்தில் சட்ட வரைவு தொடர்ந்தது. சட்ட வரைவு குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் விவாதங்களுக்குப் பின்னர், பிரதமர் மற்றுமொரு யோசனையை முன்வைத்தார். திருமணம் மற்றும் மணவிலக்குப் பகுதி உட்பட, சட்ட வரைவு முழுவதையுமே கைவிட்டு விடலாம் என்பது அவரது யோசனையில் இருந்தது.

தலைமீது இடி விழுந்தது போல, இது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் பெரிதும் திகைத்துத் திணறிப் போய் எதையும் சொல்ல முடியாத நிலைக்கு வந்தேன். இந்த சிதைக்கப்பட்ட சட்ட வரைவும் போதிய கால நேரம் இல்லாத காரணத்தால் கைவிடப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை. அமைச்சரவையின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பிற உறுப்பினர்களின் சட்ட வரைவுக்கும் பத்திரிகைத் துறை சட்ட வரைவுக்கும் எப்படி முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை...

ஆகவே அவகாசம் இல்லை என்பதால் சட்ட வரைவைக் கைவிடும் பிரதமரின் முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனது பதவி விலகலுக்காக இந்த விரிவான விளக்கத்தை நான் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில் நான் நோய்வாய்ப்பட்டிருப்பதன் காரணமாகவே பதவி விலகுவதாகக் கூறும்படி என்னிடம் சிலர் யோசனை கூறியுள்ளனர். இத்தகைய யோசனைகள் எதையும் நான் ஏற்கத் தயாரில்லை. நோய்வாய்ப்பட்டிருப்பதன் காரணமாக எனது கடமையைக் கைவிடும் கடைசி மனிதன் நான்தான்.

எனது பதவி விலகல் காலங்கடந்து நடந்துள்ளது என்றும், அரசின் வெளியுறவுத் துறைக்கொள்கை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் நடத்தப்படும் விதம் எனக்கு நிறைவளிப்பதாக இல்லை என்றும் நான் எண்ணியிருந்தால், முன்னதாகவே நான் பதவி விலகியிருக்க வேண்டும் என்று சிலர் கூறலாம். இக்குற்றச்சாட்டு நியாயமானது போல் தோன்றக்கூடும்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1324)

அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டம் எழுத நான் வாடகைக் குதிரையாகப் பயன் படுத்தப் பட்டேன் என்றும் எழுதியுள்ளார்.

அருள்கூர்ந்து மேலோட்டமாக பார்க்கமல் ஆழமாக சிந்தித்தி முடிவு எடுக்க வேண்டுகிறேன்.

நன்றி.

தமிழ் ஓவியா said...

"ஆர்,எஸ்.எஸ் அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே"

என்ற கட்டுரைக்காக (வேறொரு பதிவுக்காக) திரு ஆதவன் அவர்களுக்காக எழுதப்பட்ட பின்னூடம் தவறுதலாக இங்கு பதியப்பட்டுவிட்டது.
மன்னிக்கவும்.

தமிழ் ஓவியா said...

திரு. வி.சி. வில்வம் அவர்கலின் கட்டுரையுடன் இதை முடிக்கலாம் என்று கருதுகிறேன்.

அருள்கூரிந்து விருப்பு வெறுப்பின்றி சிந்தியுங்கள்.
நன்றி தோழர்களே.

சந்திப்போம்.

"தமிழர்களுக்கான நேர்க்கோடு
- வி.சி.வில்வம்

திராவிடர் கழகத் தலைவரும், தமிழர் தலைவர் எனத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் உள்ளிட்ட அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட அன்புத் தலை-வரும், ஆசிரியருமான கி.வீரமணி அவர்கள் மிகுந்த பாராட்டுக்கும், பெருமைக்கும் உரியவர் ஆவார்.

பொதுவாக அவருடைய சமூகப் பணியைக் காணும் அனை-வருமே அவரைப் பாராட்டுவர். இன்னும் அவரை அருகில் இருந்து பார்ப்பவரோ வியந்து போவர்.

காரணம் தமிழ்ச் சமூகத்திற்கான அவரின் களைப்பில்லாத உழைப்பு. அவரின் 100 விழுக்காடு பணியில், குறிப்பிட்ட 10 விழுக்காடு பணியை ஒருவரிடம் ஒப்படைக்கிறார். அதைப் பெற்ற அவர்கள் அவசரம் காட்டுவதும், பொறுமை இழப்பதும், மன உளைச்சல் அடைவதும்... அப்பப்பா! 24 மணி நேரமும் பரபரப்பு மனிதராகவே அவர் காட்சியளிப்பார். ஆனால் ஆசிரியர்?

அவரின் அமைதித் தோற்றத்திற்குப் பின்னால் பல ஆச்சரியங்கள் குவிந்து கிடக்கின்றன. அவரை ஏதோ ஒன்றை மட்டும் காட்டி அடையாளப்படுத்தி விட முடியாது. அவரிடம் தனித்துவம் என்ற சொல்லையே கூட பயன்படுத்த முடியாது. காரணம் பலத்துவம் பெற்றவர்.

திராவிடர் கழகத் தலைவர், பத்திரிகை ஆசிரியர், நூலாசிரியர், பல்கலைக் கழக வேந்தர், நாற்பதுக்கும் மேற்பட்ட கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை நிருவகிப்பவர் என அவரின் பொறுப்பும், உழைப்பும் எல்லையற்றது.

சாதாரணமாக ஒரு தொடக்கப்பள்ளி இருக்கிறது. அப்பள்ளி-யின் அலுவலக உதவியாளராக ஒருவர் பணி செய்கிறார். அவரிடம் சென்று வேலை குறித்துக் கேட்டால், வேலை அதிகம். காலை வந்தால் மாலை வரை சரியாக இருக்கிறது. கொஞ்சம் கூட ஓய்வு இல்லை. (கவனிக்க - சனி, ஞாயிறு விடுமுறை) என்னு-டைய உழைப்புக் கடுமையானது என ரொம்பவே சலித்துக் கொள்வார்.

ஆக அலுவலக உதவியாளரே இப்படி என்றால், அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என அந்நிருவாகமே பரந்து விரிந்து நிற்கிறது. ஒரு நிருவாகமே இப்படி என்றால் நாற்-பதுக்கும் மேற்பட்ட நிருவாகம் எந்தளவிற்கு இருக்கும்?

இப்படியாக பெரிய அளவிலான நிருவாகங்-களுக்குப் பொறுப்பேற்பதும், தலைமை வகிப்பதும் அசாதாரணம் அல்லவா? அனைத்து வேலைகளையும் செய்வதற்குத்தான் ஊழியர்கள் இருக்கிறார்களே! எனும் சிந்தனை இங்கே குறுக்கிடலாம். அவரவர் வேலை-யைச் செய்வது ஒருபுறமிருந்தாலும், அவற்றை ஒருங்-கிணைப்பது என்பது சாதாரண பணியல்லவே! அது மிக மிகக் கடினமான ஒன்று!

ஒரு நிருவாகம் வெற்றி பெறுகிற போது அனைவருமே அதைப் பங்கிட்டுக் கொள்வர். அதே-நேரம் தோல்வி ஏற்படும் போது அது தலைமையை மட்டுமே பாதிக்கும். இங்கே வெற்றியைப் பங்கிட்டுக் கொடுக்கும் தலைமை தான் இருக்கிறதே தவிர, தோல்வி என்பது, அது தோல்வியடைந்திருக்கிறது. எத்தனையோ பேர், எத்தனையோ நிருவாகத்தை நடத்தவில்லையா? எனக் கேட்கலாம். பலரும் நடத்துகிறார்கள், அனை-வருக்குமே நம் பாராட்டுகள்!

ஆனாலும் அது அவர்களின் தனி மனித சொத்து. இலாபத்தை மட்டுமே முன்னிறுத்தி நடத்தப்படுபவை. இலாபத்தை அதிகரிக்க, எல்லாவற்றையும் அதிகரிப்-பார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஆனால் அதேநேரம் பொது நலன் கருதி, சமூக முன்னேற்றம் கருதி, சுய இலாபம், சுய முன்னேற்றம், சுய மகிழ்ச்சியின்றி பொதுவுக்காக உழைப்பவர்கள் நூறு கோடிகளில் ஒரிருவர்தானே இருப்பர். இங்கே நூறு கோடி என்பதைக் கூட அதிகரித்துக் கொள்ளலாம்.

இப்படி அதிசயத்தக்க சமூகத்தின் சாதனையாக இருப்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் என்றால் அதில் மிகையேதும் இல்லை. கல் தடுக்கியதால் எனக்கு ஏற்பட்ட வலி அதிகம். நெஞ்சு வலியால் அவருக்கு ஏற்பட்ட வலி ரொம்ப சாதாரணம் என நினைக்கும் மனோபாவம் மாற-வேண்டும். பிறரை உணரும் போதுதான், நாம் உணரப்-படுகிறோம். இந்த ஒப்பீடுதான் நம்மைக் கொஞ்சமாவது உயர்த்தும்!

அவ்வகையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் செயல்பாடுகளும், உழைப்பும் வரலாற்றில் நிலை பெறத்தக்கவை. 58 வயது என்றாலே அது ஓய்வுக் காலம் என்பதாக இங்கே பொருள் கொள்ளப்-படுகிறது. அது-வரை உழைத்த உழைப்பும் கூட தனக்கே தனக்-கானது என்பதையும் மனதில் நிறுத்த வேண்டும். இந்நிலையில் 10 வயது தொடங்கி 76 வயது வரையிலான பொது வாழ்வு என்பது அட்டகாசமான சாதனை!

இயக்கப் பார்வை, நட்புப் பார்வை, இனவுணர்வுப் பார்வை இவைகளைக் கடந்து, பொதுக் கண்-ணோட்டத்தோடும், நேர்மையோடும் சிந்தித்தால் இவ்வுண்மை உண்மையாகவே புலப்படும். ஒருவர் 28 வயதில் அரசுப் பணி ஏற்று, 58 வயதில் ஓய்வு பெறுகிறார். ஆக அரசு ஊழியர்களின் வாழ்நாள் சற்றொப்ப 30 ஆண்டுகளில் முடிவு பெறுகிறது. ஆனால் ஆசிரியரோ 65 ஆண்டுகள் மத்திய, மாநில அரசுகளோடு இணைந்து சமூகத்திற்காக உழைத்து வருகிறார். ஓர் அரசு ஊழியரின் பணிக் காலத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகி இன்னும் தொடர்ந்து உழைக்கிறார்.

இதனால்தான் பல கோடி மனிதர்களில் ஒருவர் எனவும், சமூகச் சாதனையாளர் எனவும் நாம் விளிக்க விரும்புகிறோம்.

பொதுவாகத் தமிழர் ஒருவர் சோர்வுற்று இருந்தாலோ, தாழ்வு மனப்பான்மைக் கொண்டிருந்-தாலோ அவரை உற்சாகப்படுத்த வேண்டியது நமது கடமைகளில் ஒன்று எனத் தந்தை பெரியார் கூறியிருக்கிறார்.

அதேபோல தமிழர்கள் நல்ல நிலையிலும், சாதனைப் படைப்பவராகவும் இருந்தால் அவர்களைப் பாராட்டி பெருமைப்படுத்த வேண்டும் என்பதும் பெரியாரின் கொள்கை.

இந்நிலையில் மேற்கூறிய இரு பெரும் செயல்-களையும் தம் வாழ்நாள் பணியாக ஏற்று, அதற்குத் தலைமை தாங்கி உழைத்து வரும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இனத்தின் சொத்தாகவும், தமிழினத்தின் முன்னோடியாகவும் கருதுவதில் மாற்று ஏதும் இருக்க முடியாது.

சிலருக்கு சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அது நிஜமான உண்மைகளை சேதாரப்படுத்தி விடக் கூடாது.

அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரி எனப் பல பிரிவுகள் இருந்தாலும்,கோவில்களில் அர்ச்சகர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், நிறுவனங்களில் உயர்ந்த அதிகாரி, சாதாரண ஊழியர் எனும் இடைவெளி இருந்தாலும், சமூகத்தில் ஏழை, பணக்காரர் என்கிற பாகுபாடு இருந்தாலும் தமிழின விரோதப் போக்கு என வரும் போது அனைத்து வகைப் பார்ப்பனர்களும் ஒரே நேர்கோட்டில் நிற்கின்றனரே, அந்த உணர்வு தமிழர்களிடம் வர வேண்டும்.

தமிழர்களை அழிக்க நினைக்கும் போதெல்லாம் பார்ப்பனர்கள் ஒன்றுபடுகிறார்கள். நல்ல செயல்-களுக்காக அவர்கள் எப்போது ஒன்றுபடுவதில்லை. ஆனால் நாமோ தமிழர்களின் உயர்விற்காக ஒன்றுபட மறுக்கிறோம். இந்நிலை மாற வேண்டும். எனவே சில, சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எப்படி பார்ப்பனர்களுக்கு ஒரு நேர்க்கோடு இருக்கிறதோ, அதேபோல தமிழர்களுக்கும் ஒரு நேர்க்கோடு வேண்டும். அக்கோட்டில் தமிழர்கள் இனவுணர்வோடு வரிசைப்பட வேண்டும்.

அவ்வரிசையின் முதல் நபராக, பெரியாரின் தளபதியாக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிற்கிறார். வாருங்கள் நாமும் கைகோப்போம்.

----உண்மை - டிசம்பர் 1-15 2008

கரிகாலன் said...

தந்தைப் பெரியாரின் நூல்களை அரசுடமையாக்குவது பற்றி தங்கள் கருத்து என்ன?

தமிழினத்தின் மானங்காக்க தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி எழுச்சியை உருவாக்கி அதை புரட்சியாக மாற்றுகிற நேரத்தில் தந்தை பெரியாருக்கு துரோகம் செய்த கூட்டம்தான் தி.மு.க.வினர்.

அப்போது தந்தை பெரியார் அடைந்த மனவேதனைகள் என்ன என்பது அப்போதைய குடியரசை படித்தவர்களுக்கும் அவரின் பேச்சக் கேட்டவர்களுக்கும் நன்கு புரியும்.

அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு பெரியாரால் அவர்கள் பதிவிக்கும் சுகத்திற்கும் எந்தவித ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதால்தான் அவர்கள் பெரியாரின் காலில் விழுந்தனர்.

ஓய்வரியாமல் தமிழர்களுக்காக உழைத்தவரை துவளச்செய்தவர்கள்தான் இந்த துரோகிகள். உண்மையான பெரியார் தொண்டன் தி.மு.க.வின் துரோகத்தை மறக்க மாட்டான்.

தமிழ் ஓவியா said...

//தந்தைப் பெரியாரின் நூல்களை அரசுடமையாக்குவது பற்றி தங்கள் கருத்து என்ன?//

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மூலம் நூல்களை வெளியிட வேண்டும் என்று பெரியார் விரிவான ஏற்பாடுகளை செய்து விட்டு போயிருக்கிறார்.அவர்களும் நூல்களை வெளியிட்டு பரப்பி வருகின்றனர்.
அப்படியிருக்கும் போது அரசுடமை ஆக்கவேண்டும் என்ற கோரிக்கை தேவையில்லாதது.

மற்றவர்களின் நூல்களை வெளியிட நிறுவனம் இல்லாதபோது அரசுடமையாக்கி வெளியிடுகிறார்கள்.

தி.மு.க துரோகம் செய்தது என்றெல்லாம் எழுதியுள்ளீர்கள். அதை பெரியார் நன்கு உனர்ந்து பிற்காலத்தில் அதை மறந்து அவர்களை தந்தைக்குரிய பக்குவத்தில் ஏற்றுக் கொண்டார்.

அதற்குப் பிறகுதான் பெரியார் கலைஞருக்கு சிலை வைக்கவேண்டும் என்று கூறியதோடு இல்லாமல் சிலையும் தி.க. சார்பில் வைக்கப்பட்டது.

பெரியாரே மறந்து மன்னித்துவிட்ட நிலையில் இது பற்றி பேசுவது அழகல்ல.

தமிழ் ஓவியா said...

//தந்தைப் பெரியாரின் நூல்களை அரசுடமையாக்குவது பற்றி //

ஒரு சிலரின் கருத்தை இங்கு தருகிறேன். முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

"

பெரியார் நூல்களை அரசுடைமை ஆக்கக் கூடாது - ஏன்?

நோர்வே நாட்டைச் சேர்ந்த உணர்வாளரின் கருத்து

பெரியார் கருத்துக்கள், அறிவுரைகள், சொல்லோவியங்கள் அனைத்தும் திராவிடர் கழகத்திற்கும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்குமே சொந்தமானது. அண்மையில் பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ள செய்தியானது வேதனை அளிப்பதாகவும் அதற்கு ஒத்து ஊதுவோர் முழக்கம் நம்மை சங்கடப்படுத்துவதாகவும் உள்ளது.

முதலில் நான் யார் என்பதை கூறுகிறேன். நான் திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்தவன். ஆனாலும் அடிப்படையில் பகுத்தறிவாளன். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் உள்ளுக்குள் திராவிடர் கழகத்துக்காரன் என்ற முறையில் இம் மடலை நோர்வேயிலிருந்து எழுதுகிறேன்.

தந்தை பெரியார் என்பார் எக்காலத்திலும் இனி தோன்ற முடியாத ஒரு தலைவர். மதத்தால் இங்கு ஏற்பட்ட வர்ணாசிரமக் கொள்கைகளால் விளைந்த கேடுகளை மன்னர்கள், புலவர்கள் எவராலும் எதிர்த்துச் செய்ய முடியாத ஒப்பற்ற செயலை - தமது பேச்சாலும், செயலாலும், அறிவுரையாலும், வாழ்க்கையிலும் செய்து காட்டிய ஓர் புரட்சியாளர். அவர் இல்லையேல் இன்று நாங்கள் இல்லை.

புத்தர் கொள்கை என்னவானது?

ஒரு காலத்தில் அசோகர் மன்னர் (ஹீனாயணம்-புத்தர் கடவுள் இல்லை) புத்தர் கொள்கைகளை அப்படியே பின் பற்றி நாடு முழுதும் பரப்பி வெற்றி கண்ட பின்னர், அவருக்குப் பின்னர் வந்த கனிஷ்கர் (மகாயாணம் - புத்தர் கடவுள்) புத்தர் கடவுளாக சித்தரிக்கப்பட்டு அவரையும் அவரின் கோட்பாடுகளையும் சிதைத்து விட்டனர். அதுபோல் பெரியார் கொள்கைகளை நாட்டு உடைமை என்ற பெயரில் இன எதிரிகள், பெரியார் கொள்கைகளை போட்டுக் குழப்பும் குழப்பவாதிகள் கையில் கிடைத்து விட்டால் மகாயாணம் மாதிரி சிதைத்து விடுவார்கள். எனவே மிக விழிப்புணர்வுடன் என்ன விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும்.

முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். சொன்ன ஓர் கருத்து:

முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என கோரிக்கை விடுத்தபோது - கோயிலே வேண்டாம் என்ற சொன்ன பெரியார் அப்படிச் சொல்லி இருப்பாரா? எனக்குச் சந்தேகமாக உள்ளது என்றபோது, அய்யாவின் கருத்துகள் - அவர் வாழ்ந்த காலத்தில் - இருந்த ஓர் முதல் அமைச்சர் இப்படிச் சொன்னால் அவரின் கருத்துகளுக்கு எதிர்காலத்தில் ஓர் பாதுகாப்பு இல்லை எனில், குழப்பி குட்டிச் சுவராக்கிவிடுவர் இன எதிரிகள்.

கீற்று செய்தி (www.keetru.com)

அண்மையில் என்போன்று வெளி நாட்டில் இருப்போர் கீற்று எனும் இணைய தளத்தில் வெளிவந்துள்ள ஒலி வழி செய்திகளை கேட்டு வருத்தம் அடைகிறோம். கீற்றில் என்னுடைய இக்கருத்தை பதிவு செய்தால் நாளை அது பழுத்த ஓலையாகிப் போய்விடும். ஆனால் எக்காலத்திலும் பதிவு செய்வதற்காக அய்யாவின் கருத்துகள் சுயமரியாதை இயக்கத்துக்குத்தான் சொந்தம் அடையவேண்டும் என்பதற்காக விடுதலை யில் எழுதுகிறேன். முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் எவ்வவளவு பேருடைய நூல்களை நாட்டு உடமை ஆக்குகிறார்! அவருக்குத் தெரியாதா? எதைச் செய்ய வேண்டும் என்று? அண்ணா, பாரதிதாசன், ஏன் கலைஞர், ஆசிரியர் வீரமணியின் வாழ்வியல் சிந்தனைகள் போன்ற நூல்கள் நாட்டு உடமை ஆனாலும் - அய்யாவின் கருத்துக்கள் காலத்தால் திருடப் படாமலும், திரிபு வாதங் களுக்கு இடம் கொடாமலும் இருக்க, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் கி. வீரமணி அவர்களிடம்தான் பதிப்பக உரிமை இருக்கவேண்டும். எல்லோரும் பதிப்பிக்கிறேன் என்ற போர்வையில் இலவசமாகக் கூட எதிர்மாறான கருத்துகளைக் கூறி விடுவர்.

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில்...

அய்யா அவர்கள் வேலூர் மருத்துவமனையில் உடன் நலம் குன்றி கண் உறக்கத்திலும் ஆசிரியர் வீரமணியைத்தான் முனகி அழைத்தார். என் போன்றோர் ஆசிரியரிடம் பற்றாக இருக்க இதுதான் காரணம். தொண்டு செய்து பழுத்த பழமாம் அய்யாவின் கடைசி காலம்வரை ஆல மர விழுதைப்போல் மேடையிலும், திடலிலும் அவரைத் தாங்கி, அவரின் நம்பிக்கைக்கு உரியவராகி, அய்யா உருவாக்கிய கல்வி நிறுவனங்களை அவரிருந்தாலும் இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்று இருக்குமா? என பேராசிரியர் வியக்கும் வண்ணம் திட்டம் தீட்டி வளர்த்திட்ட ஆசிரியர் செயல் பாடுகள் - அய்யாவிற்கு பிறகு இந்நாள் வரையில் சிறந்த செயற்பாடுகள்தான்! அது போல் அண்ணாவை எந்த ஓர் சிறு கால இடை வெளியில் அண்ணாவே எதிர் பார்க்காத போது, தலைவர் கலைஞர் அன்றைய காலக் கட்டத்தில் (உணவு இடை வேளை நேரத்தில்) பத்திரிகையாளர் முன் நம் அண்ணாவை முதல் அமைச்சராக் கினார் என்பது இன்றளவும் அவர் மீது பற்றும் பாசமும் நீங்கா அன்பும் கொள்ளச் செய்கிறது. என் அண்ணாவின் இதயம் ஆயிற்றே அவர். இப்படித்தான் துரோகிகள் அண்ணா அறிவாலயம் எமது என்றனர். இதுபோல் தான் பெரியார் கருத்துகள் நாங்கள் பயன்படுத்துவோம் இன்று. இது சினிமா திருட்டு போன்றது. நாளைக்கு எனது செய்தியை யாராவது விமர்சனம் செய்யலாம். ஆனால் அய்யாவின் கருத்துகள் பாது காக்கப்பட வேண்டியது மிக மிக அவசியம். நம்மை விட தீவிரவாதி களாக காட்டிக் கொள்வோர் வரலாறு எல்லாம் தெரியும் கடைசியில் என்னவாகும் என்று? விடுதலை ஞாயிறுமலரில் மூத்த திராவிடர் கழகக் குடும்பப் பேட்டிகளை காணும்போது இந்த திராவிடர் இயக்கம் எத்தைகைய இடர்ப்பாடுகள், போராட்டங்கள் மூலம் நிலை பெற்று வருகிறது என்பது வெள்ளிடை மலையாகும்.

எனவே, இன்றைய ஆட்சிக்கு பாதுகாப்பாகவும், பெரியார் உயர் எண்ணங்களை, தீர்மானங்களை, திட்டங்களை நடைமுறைப்படுத்த எப்படி திராவிடர் கழகம் உள்ளதோ, அதுபோன்று பெரியார் எண்ணங்களை போற்றிப் பாதுகாக்க - அதனை வரும் சந்ததிகள் பிழை தவறாது கற்கவும், ஏற்கவும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முழு உரிமையுடன் அய்யாவை அவர்களின் கருத்துகளை தொடர்ந்து வழங்கி எங்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். வாழ்க கலைஞர்! வெல்க உதய சூரியன்!!

இங்ஙனம்,

- கி. அறவாழி,
Levil: 27, Thonning Owensens Gate-23, 7044, Trondheim, Norway"

தமிழ் ஓவியா said...

பெரியாரின் நூல்களை நாட்டுடமை ஆக்குவது பற்றி விடுதலையில் மின்சாரம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை
தங்களின் பார்வைக்கு.

"தினமணியின் விஷமம்

மின்சாரம்

அடடே, தினமணி என்னும் ஆர்.எஸ்.எஸ். ஏட்டுக்குத் திடீர் அக்கறை பெரியார்மீது பீறிட்டுக் கிளம்பியிருக்கிறது என்றால் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
மதத்தின் பெயராலும் ஜாதியின் பெயராலும் சமூகத்தில் புரையோடியிருந்த மூடநம்பிக்கை, அடிமைத் தனம் போன்றவற்றிற்கு எதிராகப் போராடி சமத்துவத்தை நிலை நாட்டிய சமூகப் போராளி பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கவேண்டும் என்று தினமணி எழுதுகிறது.
தினமணி யின் இந்தக் கருத்தின்படி 350-க்கு மேற்பட்ட நூல்களை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுதான் உள்ளது. அந்த நூல்களின் பட்டியலை ஒருமுறை தினமணி கூட்டம் படித்துப் பார்க்கட்டும்!
திராவிடர், ஆரியர் உள்பட கடவுள் மறுப்புத் தத்துவம், இந்து மதப் பண்டிகைகள், இராமாயண பாத்திரங்கள், இந்து மதமும் தமிழர்களும், மதமும், மனிதனும், கோயில் பகிர்காரம் ஏன்? ஜோதிட ஆராய்ச்சி, அய்க்கோர்ட்டுகளின் போக்கு, நீதி கெட்டது யாரால்? புரட்டு, இமாலயப் புரட்டு, பெண் ஏன் அடிமையானாள்? புராணம் என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.
பார்ப்பன வேத, புராண இதிகாசங்களின் அயோக்கியத் தனங்களை அங்கம் அங்கமாகப் புரட்டி எடுக்கும் சிவானாந்த சரஸ்வதியின் ஞானசூரியன் எத்தனையோ பதிப்புகள் வெளி வந்ததுண்டு.
இந்து என்றால் திருடன் என்று பொருள் என்பதற்கான ஆதாரங்களும் அந்த நூலில் உண்டு. அந்தக் கருத்தைச் சொன்ன கலைஞரை எதிர்த்து வழக்குப் போட்ட - கூப்பாடு போட்ட கூட்டம் தான் பெரியார் நூல்களை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது.
இந்த மாய்மாலங்களையெல்லாம் அறியாதவரா மானமிகு முதல்வர் கலைஞர் அவர்கள்?
போதும் போதாதற்கு சங்கராச்சாரியார்களின் வண்டவாளங் களைத் தண்டவாளத்தில் ஏற்றும் அரிய நூல்களும் அந்தப் பட்டியலில் உண்டு.
கீதையின் முகத்திரையை கிழித்தெறியும் ஆய்வு நூலையும் இந்த நிறுவனம் வெளியிட்டதுண்டு.
முதல் அமைச்சரைப் பார்த்து இந்த நூலை தடை செய்யுங்கள் என்று கெஞ்சியவர்கள் - இப்பொழுது பெரியார் கருத்துகள் பரவ வேண்டும் என்று மூக்கைச் சிந்தி, அழுகிறார்கள், அந்தோ பரிதாபம்!
பெரியார் நூல்களை அரசே வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை தினமணி வைத்துள்ளது.
ரொம்ப சரி, இராமனை செருப்பாலடிக்கவேண்டும் ஏன்? என்பதற்கான வியாக்கியானங்களை தந்தை பெரியார் கூறியுள்ளார். உன்னை சூத்திரன் என்று சொல்லும் குழவிக்கல் சாமியை குப்புறத் தள்ளி துணி துவைக்க வேண்டும் என்று பெரியார் கூறியிருக்கிறார். அரசு வெளியிடுமா? நம்மை சூத்திரன் என்று கூறி பூணூலை போட்டுக் கொண்டு வரும் பார்ப்பானைப் பார்த்து வாடா என் தேவடியாள் மகனே! என்று கூப்பிட வேண்டும் என்று பெரியார் தன் இறுதி உரையிலேயே சொல்லியிருக்கிறார். அரசு அதனை அட்டியின்றி வெளியிடுமா!
பெரியார் கொள்கைகள் நாட்டு மக்கள் மத்தியில் பரவ வேண்டும் என்று கூறுகிற தினமணி குறைந்தபட்சமாக பிராமணன் என்று போடாமல் பார்ப்பான் என்று வெளியிடுமா? கமால் பாட்சா செய்ததுபோல மூலைக்கு மூலை போலீசை நிறுத்தி பூணூலை அறுக்க வேண்டும் என்கிறாரே தந்தை பெரியார், அதனை அதிகரிக்குமா இந்தத் தர்ப்பைப்புல் கூட்டம்?
ஜாதியை சாதி என்று போட்டாலே தந்தை பெரியார் கருத்தைத் தலைகீழாகப் புரட்டியதாக ஆகி விடுமே. மற்ற தலைவர்களின் நூல்களை அரசுடைமை ஆக்கவில்லையா என்ற விவாதம் முன் வைக்கப்படுகிறது.
மற்ற தலைவர்களுக்கு, அவர்களின் எழுத்துகளை, பேச்சுகளை வெளியிட, அந்தத் தலைவர்களுக்குப் பின்னால் முறையான அமைப்புகள் இல்லை.
தந்தை பெரியார் அவர்களுக்கு அந்த நிலை ஏற்படவில்லையே! அவர் உயிரோடு இருந்தபோதே நூல்களை வெளியிடுவது என்கிற முறையை ஏற்படுத்தி, அதற்கான அமைப்பையும் உருவாக்கி வைத்துவிட்டாரே! தந்தை பெரியார் அவர்களின் சிலை பீடங்களில் கடவுள் மறுப்பு வாசகம் பொறிக்கப்பட்டதற்கே எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், நீதிமன்றம் சென்றவர்கள், ஆசிரியருக்கு கடிதங்கள் என்ற பெயரில் அக்னிக் குழம்புகளை அள்ளித் தெளித்தவர்கள் எல்லாம், பெரியார் கருத்துகள் பரவ வேண்டும் என்று ஆவேசப்படுவதன் பொருள் என்ன?
1971-இல் சேலத்தில் ராமன் உருவம் செருப்பாலடிக்கப் பட்டபோது, இதே தினமணி நடந்து கொண்ட முறை சாதாரண மானதா? ஏ.என். சிவராம அய்யர் வேண்டாத தெய்வங்கள் உண்டா? அய்யப்பனையும், விக்னேஸ்வரனையும் பிரார்த்தித்து பெட்டி செய்திகளை வெளியிடவில்லையா?
இந்தத் தரத்தில் உள்ளவர்கள் பெரியார் கருத்துகள் பரவ வேண்டும் என்று ஆசைப்படுபவார்களா?
பார்ப்பனர்களின் இந்த ஆவேசத்தைப் பார்க்கும்போது இதன் பின்னணியில் பெரும் சதி இருக்குமோ என்றுதான் கருத வேண்டியுள்ளது.
பெரியார் - உண்மையான பெரியார் இயக்கம் - தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை - மக்கள் மத்தியில் வேர்பிடித்து நிலை பெற்றுள்ள தலைமை, உலகம் அறிந்த பெரியார் இயக்கத் தலைமைமீது புழுதி வாரி இறைக்க அந்த இயக்கத்தின் பெயர் சொல்லி கொண்டிருக்கும் ஒரு சிறு குழு கிடைக்குமானால், அதனை பெரிதுபடுத்துவது பார்ப்பனர்களின் தந்திரமாகும் - நரித்தனமாகும்.
இந்தச் சிறு குழுவை பாராட்டுவதாலோ, அந்தக் குழுவுக்காக வக்காலத்து வாங்குவதாலோ எந்தவித இழப்பும் பார்ப்பனர் களுக்கு கிடையாது. காரணம் அந்தக் குழுவால் எந்த ஒரு உருப்படியான மாற்றத்தையும் உருவாக்க முடியாது என்பது பார்ப்பனர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்!
அதே நேரத்தில் திராவிடர் கழகத்தையோ, அதன் தலைவர் வீரமணி அவர்களையோ கொச்சைப்படுத்தினால், புழுதிவாரி தூற்றினால் அதன் மூலம் பார்ப்பனர்கள் பயன் அடைவார்கள் என்ற அசைக்க முடியாத - திடமான எண்ணத்தின்மீது தான் இந்த நரித்தன வேலையில் பார்ப்பனர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சென்னைப் பதிப்பு தினமணியில் வெளியிடாமல், திருச்சி பதிப்பில் வெளியிட்டதற்குக் காரணம் இன்று திருச்சியில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. கலைஞர் அவர்களுக்குப் பெரியார் விருது வழங்கப்படுகிறது என்பதற்காக தமக்கே உரித்தான சில்லுண்டித் தனமான வேலையை பூணூல் தினமணி குசும்பு செய்திருக் கிறது. அவ்வளவுதான்! வைத்தியநாதய்யரா - கொக்கா!
தந்தை பெரியார் அவர்களின் பேச்சுகளை எழுத்துகளை எந்த வடிவத்தில் எந்த முறையில் வெளியிட வேண்டும் என்று பார்ப்பனர்கள் சொல்லி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இல்லை.
தலைப்பு வாரியாக வெளியிடும் பணி சிறப்பாகத் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஒரு இயக்கத்தின் தலைவருடைய கட்டுரையை, கட்டுரையாக வெளியிடாது. ஆசிரியருக்கு கடிதங்கள் பகுதியில் வெளியிட்ட தினமணிகளின் சிண்டு முடியும் வேலை எங்களிடம் நடக்காது. விளம்பர சடகோபங்களுக்கு ஆசைப்படும் அரைவேக்காடுகள் வேறு இடங்களில் மலிவாக கிடைப்பார்கள். அவர்களைப் பிடித்து எந்த அளவுக்கும் சென்று தினமணிகள் மூக்கை சொறிந்துவிடட்டும். எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.
திராவிடர் கழகத் தலைவரை குறை கூறவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் அவர்களையே குறை கூறத் துணிந்துவிட்டவர்கள்தானே தினமணிகளுக்குத் தேவை!
பெரியார் பற்றாளர்கள் விருப்பம் என்றெல்லாம் தினமணி வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
-இது போன்றவர்கள் தந்தை பெரியார் அவர்களின் காலத் திலேயே கூட அவ்வப்போது விட்டில் பூச்சிகளாக கிளம்பி விளக்கில் மோதி தனக்குத்தானே முடிவுகளைத் தேடிக் கொண்டுதானிருக்கின் றனர். விஷமிகள் என்ற ஒரு சொல் மூலம் அந்தச் சக்திகளுக்கு சமாதி எழுப்பியவர்தான் தந்தை பெரியார். இந்த வரலாறுகள் எல்லாம் தினமணிக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது தெரிந்திருந்தும் கிடைத்தவரை தங்கள் இனத்துக்கு ஆதாயம் என்ற போக்கில் தூண்டில் போட்டுப் பார்க்கலாம் - குட் டையைக் குழப்பி பார்க்கலாம்; ஆனால், இவையெல்லாம் திராவிடர் கழகத்துக்கு அத்துப்படியானவையே என்பதை இலேசான புன்னகையோடு இந்த அக்கப்போர்களை நிராகரிக்கிறோம்"

கரிகாலன் said...

பெரியாரின் நூல்களை அரசுடமையாக்கினால் பெரியாரின் கருத்துக்களை திரித்துவிடுவார்கள் என்று கூறுகிறீர்கள். பெரியாரின் பல்வேறு கருத்துக்கள் தோழர் வீரமணி அவர்களால் தரிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கான சான்றுகளையும் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. அதற்கான பதில் இன்று வரை வீரமணியிடமிருந்து வரவில்லை.

தமிழ்நாடு தமிழருக்கே! என்ற கொள்கையை பெரியார் கைவிட்டுவிட்டுவிட்டதாக வீரமணி அவர்கள் குறிப்பிட்டது திரிபுவாதமில்லையா?

“குடியரசு” இதழை தொகுத்து வெளியிட வீரமணி அவர்கள் இதுவரை முயற்சிக்காது ஏன்?

தமிழ் ஓவியா said...

1.//பெரியாரின் நூல்களை அரசுடமையாக்கினால் பெரியாரின் கருத்துக்களை திரித்துவிடுவார்கள் என்று கூறுகிறீர்கள். பெரியாரின் பல்வேறு கருத்துக்கள் தோழர் வீரமணி அவர்களால் திரிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கான சான்றுகளையும் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. அதற்கான பதில் இன்று வரை வீரமணியிடமிருந்து வரவில்லை.//

திரிபுவாதத் திம்மன்கள் என்ற த்லைப்பில் இதுவரை எட்டுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளது .

எட்டுமே என்னப் பொறுத்தவரை அதை அவதூறுக் கட்டுரைகளாகவே பார்க்கிறேன்.

உண்மையான திரிபுவாதத் திம்மன்கள் யார்? என்ற கட்டுரை கூட என்னால் எழுதப்பட்டு இவ்வலைப்பக்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்.நம்மிடையே கருத்து மாறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அது கொள்கை மாறுபாடாக அமைந்து விடக்கூடாது?

2.//தமிழ்நாடு தமிழருக்கே! என்ற கொள்கையை பெரியார் கைவிட்டுவிட்டுவிட்டதாக வீரமணி அவர்கள் குறிப்பிட்டது திரிபுவாதமில்லையா?//

இது பற்றி ஏற்கனவே எஸ்.வி.ராஜாதுரை அவர்களுடன் விவாதம் தொடங்கி அது பெரியாரின் "மரபும் திரிபும்" என்று நூலாக வந்துள்ளது.

பிரிவினைக்காக பிரிவினை கேட்கவில்லை என்று பெரியார் பதிவு செய்துள்ளார் என்றும் தனது இறுதிக் காலத்தில் பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது.எனவே இருதரப்பு வாதத்தையும் நோக்கும் போது இது குறித்து இன்னும் விரிவான ஆய்வு தேவைப்படுகிறது.

3.//“குடியரசு” இதழை தொகுத்து வெளியிட வீரமணி அவர்கள் இதுவரை முயற்சிக்காது ஏன்?//

வீரமணி அவர்கள் "பெரியார் களஞ்சியம்" என்ற தலைப்பில் ஒவ்வொரு தலைப்பு வாரியாக 31 தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.மற்றும் பல நூல்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

குடிஅரசு தொகுப்பு என்பது நாள் ஆண்டு வாரியாக வெளியிடுவது.

அவர்கள் அவர்களின் முடிவுப்படி வெளியிட்டு வருகிறார்கள். இவர்கள் இவர்கள் முடிவுப் படி வெளியிட முயலுகிறார்கள். இடையில் பதிப்புரிமை பிரச்சினை.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. முடிவு எப்படி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் ஓவியா said...

//“குடியரசு” இதழை தொகுத்து வெளியிட வீரமணி அவர்கள் இதுவரை முயற்சிக்காது ஏன்?

இது குறித்து "விடுதலை' யில் வெளிவந்துள்ள கட்டுரைகளைத் தொகுத்து தந்துள்ளேன். படியுங்கள்

"அவனாம் - இவனாம்!"

மாநாட்டுச் சிந்தனைகள்

- மின்சாரம்

எல்லோருக்குமே தெரியும் தந்தை பெரியார் நூல்களை வெளியிடுவதிலோ, பகுத்தறிவு வெளியீடுகளைக் கொண்டு வருவதிலோ திராவிடர் கழகத்தோடு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தோடு போட்டி போட முடியாது என்று அந்தக் குழுவுக்கு மட்டுமா - எல்லோருக்குமே தெரியும்.
மிக நன்றாகவே தெரியும்! தந்தை பெரியார் கருத்துகளை பகுத்தறிவுச் சிந்தனைகளை யார் எடுத்துச் சொன்னாலும் மானமிகு வீரமணி என்ன சொல்லுகிறார் என்பதுதான் எடுபடும் என்பது அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே தெரியும்.
உலகுக்கே தெரியும்! தந்தை பெரியார் கருத்துகளுக்குக் சட்டம் வடிவம் கொடுக்க தேவையான அழுத்தத்தைத் தந்து, சாதிக்கக் கூடிய ஆற்றல் ஆசிரியர் வீரமணிக்குத்தான் உண்டு என்பது அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல. அகில உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மிக மிக நன்றாகவே தெரியும்.
யாருக்குத்தான் தெரியாது? தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை எல்லைக் கோடுகளைத் தாண்டி, உலகின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் திறனும், திட்பமும் - அதற்கான அமைப்புகளை உருவாக்கித் தொடர்ந்து செயல்படச் செய்விக்கும் செயல் திறன் சிறு வயது முதலே இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, ஈரோட்டுத் தந்தையால் அடை யாளம் காட்டப்பட்ட அந்த மாமனிதர் வீரமணிக்குத்தான் உண்டு என்று அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல உலகமே ஒப்புக் கொண்ட ஒன்றுதான்.
ஒரு தலைவரின் கொள்கைகள் தொடர்ச்சியாகக் கொண்டு செலுத்தப்பட கல்வி நிறுவனங்கள் என்பவை தலை சிறந்த ஏற்பாடு என்பது அந்தக் குழுவுக்குத் தெரியாது - கல்வியாளர் களுக்கும் தொலைநோக்குச் சிந்தனையாளர்களுக்கும் நுட்பமாகவே தெரியும்.
மத நிறுவனங்கள்கூட இந்த நுட்பத்தைப் புரிந்து கொண்டு இருக்கும்போது, பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்ப வர்களுக்கு விளங்காமல் போனால் அதற்குக் காரணமும் ஆத்திரமும் அறியாமையும்தான்!
வீரமணி என்ன சொல்கிறார்? விடுதலை என்ன எழுதுகிறது? பெரியார் திடலின் செயல்பாடு என்ன என்ற இந்த மூன்று ஆய்தப் புள்ளிகள்தான் பெரியாரியலின் விவேகம் - வேகம் நிறைந்த அதிகாரப் பூர்வமான மையம் என்பது மக்களுக்குத் தெரியும். அதற்கு மேல் யார் எழும்பிக் குதித்தாலும், குடலை அறுத்துக் கொண்டு காட்டி குரக்கலி வித்தை காட்டினாலும், குரங்காட்டம் போட்டுக் கரணம் அடித்துக் காட்டினாலும் அவற்றைத் தமாஷாகக் கருதித் தட்டி விட்டுப் போவார்களே தவிர, அவற்றினை ஒரு பொருட்டாக யாரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
காரணம் தொலைநோக்காளரான தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய அமைப்பும், ஏற்பாடும், வார்த்துக் கொடுத்து விட்டுச் சென்ற தலைமையும் அத்தகையவை!
வேறு யாருக்கும் தந்தை பெரியார் அவர்களிடமிருந்து இந்த அளவு அங்கீகாரம் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களுக்குக் கிடைத்த அளவுக்குக் கிடைத்திடவில்லை.
தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை பிளவுகள் கழகத்தில் தோன்றியது போல தோற்றம் அளித்தாலும், அது அடியிழந்து போனதற்கு இதுவே காரணம் - அடிப்படையும்கூட!
அந்த அங்கீகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவர் கொடுத்த உழைப்பும், திட்டங்களும், ஏற்பாடுகளும் நுட்பங்களும் அணுகுமுறைகளும் சாதனைகளும் அவரை அசைக்க முடியாத அடையாறு ஆலமரமாக்கி விட்டது!
ஆத்திரப்பட்டு என்னப்பா செய்வது? அசிங்கப்படுத்த முயற்சிக்கலாம். அதற்கான ஆள்கள் தமிழர்களிடத்தில் மலிவாகக் கிடைக்கத்தான் செய்வார்கள் - அதையும்தான் தந்தை பெரியார் சொல்லி வைத்துச் சென்றுள்ளாரே!
ஒரு சினிமா நடிகரை புரட்சித் தலைவர் என்று அவர் பின்னால் சுற்றித் திரிந்தவர்களுக்கு எல்லாம் இப்பொழுதுதான் உண்மையான புரட்சித் தலைவர் பெரியார் என்று தெரிய ஆரம்பித்திருக்கிறது.
அவன் இவன் என்று தமிழர் தலைவரை ஒருமையிலே பேசி அந்தக் கூடாரத்தின் தகுதியை தலைக்குமேல் உயர்த்திக் காட்டுகிறது ஒரு ஜீவன்! பெண்களுக்கே தாலி கூடாது என்கிற ஒரு இயக்கத்தில் தன் பணக்கார அகங்காரத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட, அரை கிலோ தங்கத்தைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு திரியும் அசல் பத்தரை மாற்றுத் தங்கம் கொள்கையில் அவர்.
யார் எதைப் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டதே!
காலமெல்லாம் தந்தை பெரியாரை வசைபாடியே திரிந்த, பெரியாரைக் கொச்சைப்படுத்துவதிலேயே காலத்தைக் கழித்த மார்க்சிஸ்ட் போர்வையில் திரிந்த (அ) சிங்கங்கள், வீரமணியை வசைபாடுவதற்கென்றே பெரியார் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு போர் குரல் கொடுக்கக் கிளம்பியுள் ளது. வாழ்க அவர்தம் தனி ஒழுக்கமும் தியாகச் சீலமும்!
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற இழி குணத்தில் இத்தகு ஆசாமிகளைத் தேடிப் பிடித்து இழுத்து வந்திருக்கின்றது ஒரு குழு. திராவிடர் கழகத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்துள் ளது என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கின்றன.
அட, மடசாம்பிராணிகளே! நீங்கள் சொல்லுகிற வாதப் படியே வைத்துக் கொண்டாலும், வீரமணி பெரியார் விட்டுச் சென்ற சொத்துகளை ஆயிரம் மடங்கு வளர்த்திருக் கிறார் என்பதை இதன் மூலம் ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?
நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் கழுத்தில் சூட்டப்படும் புகழ் மாலையாக அல்லவா மாறுகிறது! வீரமணி - அவருக்குள்ள தனித் தன்மையான ஆற்றலே அதுதான்!
கூர்தீட்டிய மரத்தையே பதம் பார்க்கக் கிளம்புவது தமிழர்களின் சுபாவம்!
பெரியார் கருத்துகளையும், இயக்க ஆவணங்களையும் பிற்காலத்திலும் பேசப்பட வைக்கும் ஏற்பாட்டில் ஆருயிர் இளவல் வீரமணிக்கு நிகராக இன்னொருவரை உலகத்திலே ஈடாகக் கூற எவரும் இல்லை என்று சொன்ன முதல் அமைச் சரிடம், இப்படி ஒரு கோரிக்கை வைக்கிறீர்களே, உங்களைவிட விவரமற்ற பைத்தியக்காரர்கள் வேறு யார்?
தோழர்களே, தந்தை பெரியார் அவர்களை ஒரு காலத்தில் கொச்சைப்படுத்திய ஒரு கூட்டம், அய்யா கண்டெடுத்த அறிவுக் கருவூலமாம் நமது ஆசிரியரை தமிழர் தலைவரை கொச்சைப்படுத்தி, காயப்படுத்த கிளம்பியிருக்கிறது.
சிலிர்த்தெழும் கறுஞ்சிறுத்தைகளே! கருஞ் சட்டைப்போர் மறவர்களே! உங்கள் நெருப்புப் பார்வைகண்டு பொசுங்கட்டும் அந்தப் பஞ்சுப் பொதிகள்!


நன்றி: விடுதலை-http://files.periyar.org.in/viduthalai/20080827/news39.html




மோதல் போக்குதான் நோக்கம்!

- மின்சாரம்

தந்தை பெரியாரின் நூல்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனதிற்குச் சொந்தமானவை. அவை பதிப்புரிமை பெற்றவை என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஓர் அறிவிப்பினை செய்தாலும் செய்தார்-
இது என்ன அநியாயம்! பெரியாரின் சிந்தனைகள் தனி உடைமையா? பெரியாரின் கருத்துகள் மக்களுக்குப் போய்ச் சேரவேண்டாமா? - அதனைத் தடுப்பதா? என்று பெரியார் கொள்கையைப் பரப்புவதற்கென்றே பிறந்தவர்கள்போல் தாம் - தூம் என்று எகிறிக் குதிக்கிறார்கள். கருத்துப் பஞ்சம் ஏற்பட்டு வற்றிப் போய்க்கிடக்கும் சில இதழ்களும், தொலைக்காட்சிகளும் ஆகா - கிடைத்தது ஒரு விஷயம்; அதை வைத்துக் காலட்சேபம் செய்வோம் என்று புறப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இதுதான் சந்தர்ப்பம் என்று பார்ப்பனர் ஒருவர் கூடப் புறப்பட்டு விட்டார் - பெரியார் கருத்துகளைப் பரப்புவதில் அவ்வளவு ஆர்வம் பீறிட்டுக் கிளம்பியிருக்கிறது அவாளுக்கு. தொலைக்காட்சி ஒன்றில் ஒருபட்டி மன்றத்தையே நடத்தினர். பொதுவாக நடுவராகயிருக்கின்றவர் திறந்த மனத்தோடு ஆசனத்தில் அமர்ந்திருக்கவேண்டும். அந்த இலக்கணம் கூடத் தெரிந்து கொள்ளாமலே சில்க் புகழ் வீரர் நடுவராக அமர்ந்து வாய்ச் சவடால் அடித்தது பரிதாபமானது.
எங்களுடைய நோக்கத்தைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் - என்று நடுவராக இருக்கிறவரே சொல்லிவிட்ட பிறகு, மற்ற பேச்சாளர்களைப்பற்றி கேட்கவா வேண்டும்?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பெரியாரை சிறை வைக்கலாமா? அவர் கருத்துகள் போய் சேர்வதைத் தடுக்கலாமா? என்கிற போக்கிலே, தட்டிக் கேட்க ஆளில்லாதால் சண்டப் பிரசண்டம் செய்தனர்.
அவர்கள் யாருக்குமே திராவிடர் கழகம் என்ன செய்கிறது? எவ்வளவு நூல்களை வெளியிட்டிருக்கின்றது? எத்தனைக் குறுந்தகடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன? என்பது பற்றிய அடிப்படைத் தகவல்கள் இல்லாமல் - தெரிந்துகொள்ளவும் ஆசைப்படாமல், முயற்சியும் செய்யாமல் கேமிரா முன் உட்கார வாய்ப்புக் கிடைத்ததே என்று வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறிக் கொட்டினர்.
தன்மான இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட காலந்தொட்டு, வேறு எந்த காலகட்டத்திலும் இவ்வளவு பகுத்தறிவு நூல்கள் வெளியிட்டதில்லை என்கிற அளவுக்கு 338 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தலைப்பு வாரியாக இதுவரை ஒரு தொகுதியைக்கூட வெளியிடவில்லை என்று குற்றப்பத்திரிகை ஒன்றைப் படித்தார் ஒருவர் - பெயர் சூரியதீபனாம் - ஆனால், அவர் அறிவோ தீபத்தில் கருகிப் போய்விட்டதை அறிய முடிகிறது. களஞ்சியம் தொகுதிகள் கடவுள்-2, மதம் தொகுதிகள் - 7, பெண்ணுரிமை தொகுதிகள் - 5, ஜாதி தீண்டாமை ஒழிப்பு - 17, இவற்றோடு குடிஅரசு இதழ்கள் - குறுந்தகடுகள் - 19 வெளியிடப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்டதோடு மட்டுமல்ல - இவற்றை தமிழ்நாடு முழுமையும் கொண்டு சேர்க்க இரு நடமாடும் வாகனங்கள் மாதம் முழுவதும் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன.
புத்தகக் கண்காட்சி எங்கெல்லாம் நடக்கின்றனவோ அங்கெல்லாம் அந்நூல்களை விற்பனை செய்வதற்கென்றே தனிக் குழுவே இருக்கிறது!
முக்கிய நகரப் பேருந்து நிலையங்களில் எல்லாம் புத்தகக் கடை சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் அத்தகைய விற்பனையகங்களைத் திறந்திட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு தலைவரின் கருத்துகளைப் பரப்பிட திராவிடர் கழகமும் அதன் தலைவரும் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு, செயல்பாடுகளுக்கு நிகராக உலகில் வேறு எந்த அமைப்பையோ, தலைமையையோ சுட்டிக்காட்ட முடியுமா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.
பெரியாரின் கருத்துகள் மக்களிடம் போய்ச்சேரவில்லை என்று கூறுவது அறியாமையா? அல்லது மனமறிந்த பொய்யுரையா? பெரியார் கொள்கைகள்மீது இவ்வளவு அக்கறை உள்ளதுபோல பம்மாத்து செய்யும் அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், பெரியாரின் கருத்துகளை - பகுத்தறிவுச் சிந்தனைகளை - பரப்பிட ஒரு அய்ந்து நிமிடம் நாள் ஒன்றுக்குச் செலவழித்ததுண்டா?
இந்தப் பிரச்சினை கூட ஒரு நல்ல தீனி என்கிற முடிவில் - வியாபாரத்துக்கான ஒரு சரக்கு - தலைப்பு என்பதைத் தவிர, வேறு தந்தை பெரியாரின் கொள்கைகள் பரவ வேண்டும் என்ற நல்லெண்ணமா? நாள் முழுவதும் மூடக் குப்பைகளைக் கொட்டி கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள், பெரியார் கொள்கை மீது திடீர்க் காதல் கொள்வதை நினைத்தால் வாயால் சிரிக்க முடியாது.
அறிவுக்குத் தடையா? என்று தாண்டி குதித்தார் ஒரு பார்ப்பனர். அவர் ஒரு பத்திரிகை நடத்தினார். எப்படி தெரியுமா? 1982 இல் மூன்று இதழ்கள்; 1985 இல் ஆறு இதழ்கள், 2002 இல் மீண்டும் துளிர்த்து வந்த வேகத்திலேயே கருகி விட்டது.
ஒரு இதழைக்கூட ஒழுங்காக நடத்த இயலாத துப்புக்கெட்டதுகள் எல்லாம் 74 ஆண்டு காலம் ஏடு நடத்தி நாள்தோறும் தந்தை பெரியார் கருத்துகளைப் பரப்பும் இயக்கத்தின்மீதும், தலைவர்மீதும் குப்பை வாரி இறைக்கிறார்.
நா தழும்பேற கருணாநிதியும் வீரமணியும் பெரியாருக்குத் துரோகம் செய்துவிட்டதாக பேசிய இந்தப் பார்ப்பனர், இதுதான் சந்தர்ப்பம் என்று கலைஞர்மீது காழ்ப்புணர்வைக் கொட்டுகின்றனர்.
இடையில் நேயர் ஒருவர் குறுக்கிட்டு (கும்பகோணத்துக்காரர்) புத்த ஜாதக கதை போல் கயிறு திரித்தார். சிலவற்றை பெரியார் சொன்னதுபோல கதைத்தார். பெரியார் வாழ்ந்த இந்தத் தலைமுறையிலேயே இப்படிப் புளுகுகிறவர்கள் என்றால் பெரியார் நூல்களை மற்றவர்கள் வெளியிட அனுமதித்தால் எவ்வளவு ஆபத்து என்பதை இது உணர்த்துகிறது.
இன்னொரு நேயர் - சந்தடி சாக்கில் பந்தலிலே பாகற்காய்... ஒன்றைப் பாடினார்.
பெரியார் நூல்களை அரசுடமை ஆக்கினால் பெரியார் சிந்தனைகள் தொகுப்புக்காக அந்தப் பணத்தை ஆனைமுத்து அவர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்று ஒரு மகஜரையும் கொடுத்துவிட்டார்.
அது தொடர்பாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பெரியார் சிந்தனைகள் என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளை தோழர் ஆனைமுத்து வெளியிட்டார். சிந்தனையாளர் கழகத்தின் சார்பில்.
34 ஆண்டுக் காலமாக மறு பதிப்புச் செய்யவில்லை; என்பதால் அதனைப் பதிப்பிக்க மற்றவர்கள் யாரும் முன் வரவில்லையே - ஏன்? அதுபற்றி கோரிக்கையை (நமது நோக்கம் அது அல்ல) எழுப்பாதது ஏன்? திராவிடர் கழகத்தோடு - அதன் தலைவரோடு மோதல்போக்கை உண்டாக்க எப்படியோ குறுக்கு வழியில் விளம்பரம் தேடும் அற்ப ஆசை அல்லாமல் இது வேறு என்ன?
தோழர் ஆனைமுத்து அவர்கள் அந்தத் தொகுதிகளை வெளியிட்ட போது - திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் ஏன் தடுக்க முன்வரவில்லை என்று ஒருங்கிணைப்பாளர் ஒரு கேள்வியை எழுப்பினாரே பார்க்கலாம்!
இவ்வளவு அறியாமை இருட்டில் அவர் இருப்பார் என்று நினைக்கவில்லை. இதில் கறுப்புச் சட்டை வேறு - கறுப்புச் சட்டை போட்டவர்களை எல்லாம் பெரியாரிஸ்டாக நினைக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!)
அந்தத் தொகுதிகள் கூட தந்தை பெரியார் அவர்களின் அனுமதிபெற்றுத்தான் கொண்டு வரப்பட்டது - பதிப்புரிமை பெற்றது என்பதை இப்பொழுதுதாவது அவரைப்போல இருட்டில் சஞ்சரிப்பவர்கள் தெரிந்துகொள்ளட்டும்!
என்.சி.பி.எச். என்ற ஒரு நிறுவனம் இருக்கிறது. அது வெளியிடும் நூல்களை அப்படியே மற்றவர்கள் வெளியிட முடியுமா?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் - பெரியார் கருத்தை மற்றவர்கள் பிரச்சாரம் செய்வதைத் தடுப்பது போலவும், முடக்குவது போலவும் கீழ்த்தரமான குற்றச்சாட்டை திருப்பித்த திருப்பி, ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு தெரிவித்தது விஷமத்தனமானது - கண்டிக்கத் தக்கதாகும்.
தெருமுனைக் கூட்டங்கள் போடட்டும், பொதுக்கூட்டங்கள் நடத்தட்டும், பேரணிகளையும் அணிவகுக்கச் செய்யட்டும். தந்தை பெரியார் அவர்களைப் பற்றி ஏராளமான நூல்களை வெளியிடட்டும். நமது வெளியீடுகளிலிருந்து மேற்கோள்களைக் காட்டட்டும்! பெரியார் திடல் நூலகம், ஆய்வகத்துக்கு வந்து ஆய்வுப் பணிகளை அறிவு ஜீவிகள் மேற்கொள்ளட்டும் - வரவேற்கதக்கதாகும்.
ஆனால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள பதிப்புரிமை பெற்ற நூல்களை தங்கள் வெளியீடாகக் கொண்டு வர யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி சில நூல்களை கொஞ்சமும் அறிவு நாணயமின்றி வெளியிட்டு தங்களின் தராதரத்தை புலப்படுத்திக் கொண்டுவிட்டார்கள்.
தந்தை பெரியார் அவர்களால் நடத்தப்பட்ட குடிஅரசு பகுத்தறிவு, திராவிடன், விடுதலை, உண்மை முதலிய இதழ்களை அப்படியே வெளியிடுவதைத்தான் கூடாது என்கிறோமே தவிர, வேறு எந்தத் தடையும் இல்லையே!
ஒரு சர்ச்சையைக் கிளப்பி விளம்பரக் குளிர்காய வேண்டும் என்கிற குறுக்குப் புத்திதான் இதில் புதைந்து கிடக்கிறது.
மோதல் போக்கு என்னும் வெறிபிடித்து அலைகிறார்கள் - இது பண்பாடல்ல!
குடிஅரசு இதழ்களை குறுந்தகடுகளாக வெளியிட்டுள்ளோம் - அவற்றைப் பயன்படுத்தி அப்படியே நூலாக வெளியிடுவது தார்மிக அடிப்படையில் சரியானதுதானா? என்ற கேள்விக்கு நியாயப்புத்தியோடு பதில் சொல்லவேண்டும்.
தந்தை பெரியார் மாபெரும் சமூகப் புரட்சியாளர். அவர் தம் படைப்புகளை வெளியிடும்போது எங்கள் அளவுக்குப் பொறுப்புணர்ச்சி மற்றவர்களுக்கு இருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது.
ஜாதி என்பது தமிழ்ச் சொல் அல்ல. தமிழர்களிடையே ஜாதி என்பது கிடையாது என்று சொன்னவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் கருத்துகளைத் தொகுத்த ஒரு பேராசிரியர் ஒருவர் ஜாதி என்று வருகிற இடங்களிலெல்லாம் சாதி என்றே தொகுத்துள்ளார். இது எவ்வளவு பெரிய ஆபத்து! தந்தை பெரியார் கருத்துகளைக் கூறுவதாக நினைத்துக் கொண்டு, தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளையே தலைகீழாகப் புரட்டும் தன்மைதானே இது.
தொகுத்த பேராசிரியருக்குக் கெட்ட நோக்கம் இருக்க நியாயமில்லை என்றாலும், தனித்தமிழ் என்று ஜவுக்குப் பதில் ச போட்டதால், புரட்சியாளர் பெரியாரின் கருத்தே மாறிவிடுகிறதே!
பெரியாரால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு - அதன் தலைவர் தலைமையின்கீழ்தான் கருத்துச் சேதாரமின்றி வெளியிட முடியும் என்பது கல்லுப் போன்ற உறுதியாகும்.
எந்தப் பிரச்சினைகளையும் ஒரு கோணத்தில் மட்டும் பார்க்கக் கூடாது; பல கோணங்களிலும் பார்ப்பதுதான் பகுத்தறிவு!
என்ன புரிகிறதா?

http://files.periyar.org.in/viduthalai/20080825/news21.html






ஊன்றிப் படித்து உண்மையை அறிக!
சென்னை மாநாடுகளும் - நமது சிந்தனையும்!
- கலி. பூங்குன்றன்,
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.

மதவாதம் இந்தியத் துணைக் கண்டத்தை மட்டுமல்ல - உலகப் பந்தையே உருட்டி மிரட்டிக் கொண்டு இருக்கிறது!வெடிகுண்டுகள் ஒரு பக்கம்; மனிதனே வெடிகுண்டாகி ரத்தத்தைக் குடித்துக் கொண்டு இருக்கிறான் மறுபக்கம்! ஓருயிர் போகட்டும் - அதற்கு விலையாக ஒரு நூறு உயிர்களைக் குடிப்போம் என்கிற குரூரப் புத்தியை மதங்கள் மலிவாக வழங்கிக் கொண்டு இருக்கின்றன.கடவுளிடம் அனுமதி பெற்று ஈராக்கின் மீது போர் தொடுத்தோம் என்று படித்த மனிதன் - அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் விஷம் கக்குகிறார்.ஒரு மதத்துக்கும், இன்னொரு மதத்துக்கும் மட்டுமல்ல - ஒரு மதத்தின் குட்டிகளுக்குள்ளேயே கூட அடிதடி - ரணம் - ரத்த ஆறு!மதம் வழி காட்டியது போதும், போதும்! புது வழியைத் தேடும் - புதுப் பார்வையை நாடும் ஒரு காலகட்டம் இது.இதற்குத் தேவைப்படும் மாமனிதர்தான் தந்தை பெரியார் - மாமருந்துதான் தந்தை பெரியார் என்ற சமூக விஞ்ஞானி கண்டுபிடித்துக் கொடுத்த சுயமரியாதை - சமத்துவ - பகுத்தறிவுச் சித்தாந்தம்!உலகில் இதற்கான ஒரே ஒரு தனித்தன்மை வாய்ந்த இயக்கம் திராவிடர் கழகம் மட்டுமே! பகுத்தறிவுக் கருத்தினை மக்கள் இயக்கமாக நடத்தும் ஒப்புவமை இல்லாத ஒரே இயக்கம் இதுதான்!
74 ஆண்டுகள் இந்தக் கொள்கைக்காக ஒரு நாளேடு வீறு நடைபோடுகிறது என்றால், அது சாதாரணமானதல்ல.விடுதலை விடுவித்த கட்டுகள் ஒன்றல்ல இரண்டல்ல! அது எத்தனையோ தளைகளை தகர்த்திருக்கிறது - எத்தனையோ விலங்குகளை உடைத்திருக்கிறது.எல்லாத் திசைகளிலும் விடுதலை தன் முழக்கத்தை ஓங்கி ஒலித்திருக்கிறது - நெடுநாள் தூக்கங்களையெல்லாம் ஓட ஓட விரட்டியிருக்கிறது.கல்வி நீரோடையில் ஆரிய முதலைகளையெல்லாம் வெளியேற்றியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் நீச்சல் குளமாகவும் அது மாற்றப்பட்டதற்கு விடுதலை நிச்சயமாக மார் தட்டலாம்.பெண்ணுரிமையின் பீரங்கியாக முழங்கியிருக்கிறது. ஜாதி ஆணி வேரைச் சுட்டெரிக்கும் எரிமலையாக வெடித்திருக்கிறது.மூட நம்பிக்கைகளின் மூச்சை நிறுத்தும் போர் வாளாகச் சுழன்றிருக்கிறது.
தரை தட்டிப்போன கப்பலாக இருந்த தமிழர் வாழ்வில் தன்மான விசை கொடுத்த தளகர்த்தராக சமர் புரிந்திருக்கிறது.சுருக்கமாகச் சொல்லப்போனால், தமிழன் தலை நிமிரவும், தோள்கள் புடைக்கவும், கூன் விழுந்த முதுகு நிமிரவும், புதுநடை போட - புதுத் தெம்பூட்டும் பூகம்பமாய், புயல் கலனாய் தன் பணியை ஆற்றியிருக்கிறது.விடுதலை இல்லையென்றால் - கெடுதலைதான் என்ற நிலையிருந்தும், அதற்கொரு சோதனை ஏற்பட்டதுண்டு.அதன் கர்த்தாவாகிய தந்தை பெரியார் விடுதலையை நிறுத்தி விடலாம் என்கிற முடிவுக்கு வரும் ஒரு நிலை ஏற்பட்டது.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் வாராது வந்த மாமணியாய் தந்தை பெரியாருக்குக் கிடைத்தவர்தான் எம்.ஏ., பி.எல். படித்த அன்றைய இளைஞர் மானமிகு வீரமணி அவர்கள்.விடுதலை தொடர்கிறது என்றால், அதற்குக் காரணம் இவர் தான் - ஆம் இவரேதான்! தந்தை பெரியார் அவர்களே வெளிப்படை யாக இதனை எழுதவும் செய்தார் (விடுதலை, 6.6.1964).அந்த நேரத்திலும்கூட, தந்தை பெரியார் அவர்கள் துரோகிகளை அடையாளம் காட்டவும் செய்தார்.
இயக்கத் தோழர்களை எனது இயக்கத்தில் இருந்து மனிதர்கள் ஆகி எனக்கும், இயக்கத்திற்கும் கத்தி தீட்டும், தீட்டி வெளியேறிய தோழர்களைத் தவிர்த்து மற்ற இன்று இயக்கத்தில் இருக்கும் அதுவும் இயக்கத்தால் தங்கள் நலனுக்கு எந்தவித பலனும் அடையாமல், அவர்களது பணத்திலேயே வாழ்ந்து கொண்டு, அவரவர்கள் நேரத்தைச் செலவு செய்துகொண்டு பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து இயக்க வளர்ச்சிக்கு இரவும் பகலும் பாடுபடும் உண்மைத் தொண்டர்களான இயக்கத் தோழர்களை வேண்டிக் கொள்கிறேன்.
விடுதலை பத்திரிகை - நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின் கீழ் நல்ல நிலையில் நஷ்டமில்லாத நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால், இப்போது இருப்பதைவிட இன்னும் குறைந்தது 2500 சந்தாதாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டாகவேண்டும் (விடுதலை, 6.6.1964) என்று தந்தை பெரியார் அவர்கள் கையெழுத்திட்டு விடுதலை தலையங்கமாகவே எழுதினார்களே - அதனை இந்த நேரத்தில் நினைவு கூர வேண்டியது மிகவும் அவசியமாகும்.
எந்த நம்பிக்கையில் தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களிடம் விடுதலையை ஏக போக நிர்வாகத்தில் ஒப்படைத்தார்களோ, அந்த நம்பிக்கை பொய்த்துப் போய் விடாமல், கம்பீரமாக வெற்றிகரமாக வீறுநடை போடச் செய்துவிட்டாரே - மனதில் மாசில்லாத மக்கள் அனைவரும் மனமொப்பி அதற்காக நன்றி பாராட்டுவார்கள்.தந்தை பெரியார் அவர்கள் தம் அறிக்கையில் சுட்டிக் காட்டியதுபோல, இந்த இயக்கத்தால் மனிதர்கள்ஆனவர்கள் இயக்கத்துக்கும், இயக்கத் தலைமைக்கும் எதிராகக் கத்தி தீட்டத்தான் செய்வார்கள்.ஆனால், நமக்கு தந்தை பெரியார் அவர்களின் அளவுகோல்தான் முக்கியம்.
தம்மிடம் ஏகபோகமாக தந்தை பெரியாரால் ஒப்படைக்கப்பட்ட அந்த விடுதலையை எந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்? நவீன அச்சுக்கூடம் உருவாக்கப்பட்டு, பல வண்ணத்தில் ஆறு பக்கங்களுடன் (முன்பு நான்கு பக்கங்களே!) திருச்சியில் இரண்டாம் பதிப்பு என்ற சாதனை மகுடத்துடன் உலகத் தமிழர்கள் மத்தியிலே ஜொலிக்கச் செய்துவிட்டாரே!உலகம் முழுவதும் உள்ள தமிழ் தெரிந்த அனைவரும் அடுத்த சில மணிநேரங்களிலேயே (நாம் படிப்பதற்கு முன்பே) இணைய தளத்தின் மூலம் படிக்கச் செய்யும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட்டாரே! இந்த வகையில், தமிழ்நாட்டில் முதன் முதலாக வெளிவந்த ஏடு விடுதலைதான் என்பது வைர வரிகளால் பொறிக்கத் தகுந்ததாகும்.
விடுதலையைப் படிப்பதற்கே ஒரு தனிப் பயிற்சி வேண்டும் என்ற நிலை மாறி, பல நாளேடுகளை நாம் அச்சிட்டுக் கொடுக்கிறோம் என்கிற அளவுக்குக் கொண்டு சென்றுள்ளது வளர்ச்சியா? - தேய்மானமா?உண்மை மாதமிருமுறை, பெரியார் பிஞ்சு (குழந்தைகள் இதழ்), தி மாடர்ன் ரேசனலிஸ்ட் என்பவை எல்லாம் எந்தத் தரத்தில் - காலத் துக்கேற்ற பொலிவோடு, வலிவோடு பூத்து மணம் கமழ்விக்கிறது என்பதை புலன்கள் கெட்டுப் போகாத அனைவரும் அறிவர் - பாராட்டுவர்!தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் அடங்கிய நூல்கள் பகுத்தறிவு நூல்கள் அச்சிடும் பணி என்பது போர்க்கால வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே!
அதனை ஒரு தனி நிறுவனமாக்கி, ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அதிகாரியை நிர்வாகப் பொறுப்பாளராக்கி, நூல்கள் அச்சிடும் பணி எந்த நிலையிலும் தடங்கலில்லாமல் நடைபெறுவதற்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்டு, ஓய்வு ஒழிச்சலில்லாமல் அப்பணி நடந்துகொண்டு இருக்கிறதே!
338 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன.
தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் பொருள் வாரியாகத் தொகுக்கப்பட்டு பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பின்கீழ் சராசரி 300 பக்கங்கள் என்ற அளவில் மக்கள் பதிப்பாக மலிவாக நன்கொடை அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகின்றன.கடவுள்-2 தொகுதிகள், மதம்-7 தொகுதிகள், பெண்ணுரிமை - 5 தொகுதிகள், ஜாதி - தீண்டாமை 17 தொகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன.
தலைப்பு வாரியாக வெளிவந்து கொண்டேயிருக்கும்.


ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக தொகுதிகளை வெளியிடுவதால் யாருக்குப் பயன்? பணம் கொடுத்து வாங்கும் சக்தி உள்ளவர்களின் அலமாரிகளில் அழகு செய்யும் - சாதாரண மக்களுக்குச் சென்றடையாது!மகாபாரத ஆராய்ச்சி - கீதையின் மறுபக்கம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சந்திரசேகர பாவலரின் இராமாயண ஆராய்ச்சி (தொகுப்பு) இவையெல்லாம் வெளியிடப்பட்டுள்ளதே - பெரியார் கொள்கையைப் பரப்பும் பணியில் இவை மிக முக்கியத்துவம் பெறவில்லையா? உலகம் பூராவும் பார்ப்பனர்கள் கீதையைத்தானே அறக்கட்டளை வைத்துப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்? தமிழர் தலைவர் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலைத் தடை செய்யவேண்டும் என்று ராமகோபாலன்கள் முதலமைச்சரிடம் முறையிட்டனரே - அதற்குப் பிறகாவது நமது ஆசிரியரின் அரும்பணியைப் புரிந்துகொண்டிருக்க வேண்டாமா?ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையென்றால் அதற்காகவே பெரியார் நூலகம், ஆய்வகம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட் டுள்ளதே! பழம்பெரும் இதழ்களும், ஏடுகளும் நவீன முறையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனவே! ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். 46267 நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன. மாணவப் பருவந்தொட்டு அரிதிற் சேர்த்த தமது சொந்த 10,227 நூல்களை பெரியார் நூலகம் - ஆய்வகத்திற்குத் தந்துள்ளார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.அய்யாவின் உரைகள் மட்டுமல்ல - குடிஅரசு இதழ்களும்கூட குறுந்தகடுகளாக வெளியிடப்பட்டுள்ளன (Digitalisation). அப்படி வெளியிடப்பட்டவைகளை நூல்களாகத் தொகுத்து சிலர் வியாபாரம் செய்யப் பார்ப்பது அறிவு நாணயமான செயலா?தமிழகம் முழுவதும் பகுத்தறிவு இயக்க நூல்களைப் பரப்புவதற்கு இரு நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அப்பணி முழு வீச்சில் நடந்துகொண்டு இருக்கிறது. (இவற்றை முதல்வர் அல்லவா 2.12.2007-இல் தொடங்கி வைத்தார்) முக்கிய நகரங்களின் பேருந்து நிலையங்களில் திராவிடன் புத்தக நிறுவனத்தின் சார்பில் விற்பனையகங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யும் ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. செங்கற்பட்டில் இவ்வாண்டு பிப்ரவரி 18 இல் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 80 ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் அருமையாகக் குறிப்பிட்டாரே!திராவிடர் கழகம் - நூல்களை வெளியிட்டு வருவதுபற்றி அவ் விழாவில் முதலமைச்சர் கலைஞர் அழுத்தந்திருத்தமாகவே கூறினாரே!
"உலகத்திலே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப்பற்றியும் சொல்லவேண்டுமேயானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களை சேகரித்து வைத்து, அதை எதிர் காலத்திற்குத் தரக்கூடிய இந்த ஆற்றல், நம்முடைய வீரமணியாருக்கு இருப்பதைப்போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் இதற்காகப் பாடம் படிக்கவேண்டும்"
இது வெறும் புகழ்ச்சிச் சொற்கள் அல்ல. உண்மையான கணிப்பாகும். இந்த வகையில் முதல் இடத்தில் இருப்பது நமது நிறுவனமே!நமது நிறுவனம் வெளியிடும் நூல்கள் அனைத்தும் பதிப்புரிமை பெற்றவை என்று அச்சிடப்பட்டுள்ள நிலையில், அந்த நூல்களை நமது நிறுவனத்தின் அனுமதியில்லாமல் வெளியிடுவது சட்ட விரோதமாகும் - பொது ஒழுக்கச் சிதைவுமாகும்.பதிப்புரிமை என்ற சட்டம் எதற்காகத்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா?
இதனைச் சொன்னால், பெரியார் கொள்கைகள் தனி உடைமை யானவையல்ல என்று புரட்சியாளர்கள்போல சிலர் வேடங்கட்டி குதிக்கிறார்கள். பெரியார் இயக்கத்தின்மீது சேறுவாரி இறைக்க இதோ ஆள்கள் கிடைத்திருக்கிறார்கள் என்ற சாக்கில் பார்ப்பனச் சக்திகள் சபாஷ் என்று சூ காட்டுகின்றன. கொம்பு சீவி விளம்பரம் தருகின்றன.

பெரியார் நூல்களை அரசுடைமை ஆக்கவேண்டும் என்று ஒரு பக்கத்தில் கோரிக்கை; அப்பொழுதுதான் அந்த நூல்களை மற்றவர்கள் வெளியிடலாம் என்று கூறுவது ஒரு பக்கம் - இதன்மூலம் அவர்களை அறியாமலேயே ஒரு உண்மையை சட்ட நிலையை - ஏற்றுக்கொள்கிறார்கள். பெரியார் நூல்கள் அரசுடைமை ஆக்கப்படாத நிலையில், அவற்றை வெளியிடுவது குற்றம் என்பதை ஏற்றுக்கொண்டு விட்டார்களே! இருந்தும் ஏன் அடாவடித்தனம்?ஒரு மோதல் போக்கை உருவாக்கினால் சுலபமாக விளம்பரம் கிடைக்கக் கூடும் என்ற எண்ணத்தில் சிறு பிள்ளைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது பரிதாபத்துக்குரியதே! அக்கப்போர்களை அவதானிப்பதற்கு இங்கு ஏடுகளுக்கும், ஊடகங்களுக்கும் பஞ்சமா? அதில் ஒரு அற்ப சந்தோஷம் - அவ்வளவுதான்!வாழ்வியல் சிந்தனைகள் என்று வீரமணி அவர்கள் எழுது கிறாராம். அவை நூலாகவும் வெளிவந்து விட்டனவாம்! பார்த்தீர்களா, பார்த்தீர்களா? பெரியார் நூல்களை வெளியிடாமல், வீரமணி தன் நூல்களை வெளியிடுகிறார் என்று ஒருவகைப் பிரச்சாரம்!தந்தை பெரியார் நூல்களையும் வீரமணி அவர்களையும் மோத விடுகிறார்களாம் - இது கடைந்தெடுத்த ஒரு பார்ப்பன அணுகு முறையல்லாமல் வேறு என்ன?கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கூறுவதுடன் நாம் நிறுத்திக் கொள்ளப் போகிறோமா? அந்தக் கடவுள் மறுப்புத் தத்துவம் என்பது விரிந்த வாழ்வியல் சிந்தனைக்கான கூறு அல்லவா?உணவு முறையிலிருந்து, உடை, இருக்க வீடு, பொதுத்தொண்டு, குடும்ப வாழ்க்கை முறை, ஆண் பெண் உறவு, மக்கள் பேறு, குழந்தைகள் வளர்ப்பு, மனிதநேயம் என்பதுபற்றியெல்லாம் தந்தை பெரியார் சிந்திக் கவில்லையா? பேசவில்லையா? எழுதவில்லையா? தந்தை பெரியார் கொள்கைகள் ஒரு வாழ்க்கை நெறியல்லவா?.
அந்த அடிப்படையில், இக்கால வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, புதிய பொருளாதாரச் சூழல் இவற்றையொட்டி பல்துறைகளைச் சார்ந்த கருத்துகளையும், தகவல்களையும் திரட்டித் தருவதற்கு ஆற்றலும், ஓயாமல் படிக்கும் முனைப்பும் உழைப்பும், சிந்தனையும் தேவைப்படும்.தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் - இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களையும்கூட பெரியார் இயக்கத்தின்பால் புதிய பார்வையைச் செலுத்தும் ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதானே உண்மை.வெறும் சாமியில்லை - பூதமில்லை என்று சொல்லக்கூடியவர்கள் தானே இவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தோம் - ஒவ்வொருவர் வீட்டிலும் நிகழும் நடப்புகள், பிரச்சினைகள்பற்றி எல்லாம் இந்தக் கட்டுரைகள் பேசகின்றனவே - தீர்வு தருகின்றனவே! என்று படித்துவிட்டுப் பாராட்டுக் கடிதங்களை எழுதிக் கொண்டு இருக் கின்றனர். கடவுள் மறுப்பாளர்கள் - தலைசிறந்த மனிதாபிமானிகள், வாழ்வியலின் திறவுகோல் கருத்துகளைக் கூறக் கூடியவர்கள் என்ற நிலையை உருவாக்குவது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்கான பரிமாணமே தவிர, தேய்மானமல்ல!வாழ்வியல்பற்றி எழுதுவதும், பேசுவதும் குற்றம் என்று சொல்லும் பாமரர்களையும், பிற்போக்குவாதிகளையும் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. ஏதாவது குறைசொல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தை அறிய முடிகிறது.தங்கள் மூக்கை வெட்டிக் கொள்ளுகின்றனரே இந்த அறிவு ஜீவிகள்!
இடதுசாரி சிறுபிள்ளைத்தனம் என்ற ஒரு சொலவடை உண்டு. அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.நம்மை திசை திருப்ப சிலர் முயலக்கூடும். அதனை இலட்சியப் படுத்தத் தேவையில்லை.சமுதாய நோக்கத்துக்காக - தடையாக இருந்த அரசியல் சட்டத்தையே கொளுத்தினார்களாம். அதுபோல, வீரமணி விதித்திருக்கும் தடையையும் சந்திப்பார்களாம்.
சமுதாய நோக்கத்துக்காக தந்தை பெரியார் செய்து வைத்துள்ள ஏற்பாடு அவர்கள் கண்ணோட்டத்தில் தடையாம். எது தடை? எது பாதை? என்பதிலேயே எவ்வளவு பெரிய தடுமாற்றம்!கட்டுப்பாடுகளை உடைப்பதுதான் பெரியார் கொள்கையாம். அதனால், வீரமணியார் சொல்லும் கட்டுப்பாட்டை உடைப்பார்களாம்!
சபாஷ், வார்த்தையை வைத்து விளையாட்டா!கட்டுப்பாடு என்ற சொல் இடத்தைப் பொறுத்து வேறுபடக் கூடியது.மதத்தின் கட்டுப்பாட்டை உடைப்பது என்று பெரியார் சொன்னதும் இயக்கத்தின் கட்டுப்பாட்டைக் காப்பது என்று அவர் சொன்னதும் ஒரே பொருள் தானா?பெரியாருக்குப்பின் அவர் கண்ட இயக்கம் இருக்காது என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த கூட்டத்தின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்ட ஒரு தலைவர்மீது பார்ப்பனர்கள் ஆத்திரப்படுவது இயல்புதான். அதனால்தான், மாநாடு கூட்டி அவரைப் பாடை கட்டி தூக்கினார்கள்.பெரியார் திரைப்படம் முதல் பெரியார் வலைக்காட்சி (Periyar Webvision) வரை பல்முறையிலும் அறிவியலைப் பயன்படுத்தி தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளைப் பரப்புவதையே மூச்சாகக் கொண்டு உழைத்து வருகிறார்.
பெரியார் இயக்கம் என்றால், திராவிடர் கழகம்தான்! பெரியார் இயக்கத்தின் தலைவர் என்றால், அது மானமிகு வீரமணி அவர்கள்தான். இது அடிமுதல் நுனிவரை அண்டம் அறிந்த அறுதியிட்ட உண்மையாகும்.
அவர்மீது வீசி எறிவது தூசு அளவு என்றாலும் சரி, தூண் அளவு என்றாலும் சரி அது பார்ப்பனர்களுக்குப் பரிமாறக் கூடிய பால் பாயாசமே!அதேநேரத்தில், பெரியார் கொள்கையை ஏதோ ஒரு வகையில் பலகீனப்படுத்திட (முடியுமா என்பது வேறு பிரச்சினை) மேற்கொள்ளும் துரோகச் செயல்தான் அது என்பதும்தான் உண்மை! என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே செய்யும் சிறுபிள்ளைத்தனத்துக்காகப் பரிதாபப்படுவோம்!
அனைத்து ஜாதியினருக்கு அர்ச்சகர் உரிமை என்றாலும், சமூகநீதியில் அடுத்துப் பெறவேண்டிய உரிமைகள் என்றாலும் அவற்றைச் சாதிக்கக் கூடிய அமைப்பும் சரி, தலைமையும் சரி - நம்மைச் சார்ந்ததே!
75 ஆண்டு அகவையில் 65 ஆண்டு பொது வாழ்க்கை - தந்தை பெரியார் அவர்களின் அங்கீகாரம் - அர்ப்பணிக்கும் பொதுத் தொண்டு - இவற்றால் வைரம் பாய்ந்து உருப்பெற்ற ஒரு வலிமையான தலைமையால்தான் எதையும் சாதிக்க முடியும். அந்தத் தலைமையின் சொற்களுக்கும், எழுத்துகளுக்கும்தான் வலிமை உண்டு - சமூகத்தின் அங்கீகாரமும் உண்டு.
சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் வரை தமது கருத்தால் அணுகுமுறையால் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர் மானமிகு வீரமணி.
அரசியல் போக்குகளை மாற்றக் கூடியவர் - தம் கொள்கை வழியில் ஆட்சிகளை உருவாக்கக் கூடியவர். அந்தத் தலைவரைப் பற்றிக் கொண்டு பணியாற்ற முடியவில்லை என்றால், அது வாய்ப்புக்கேடே! ஸ்தாபன ரீதியாகப் பணியாற்றும் - கற்றுக் கொள்ளும் பண்பாடு என்பது நமது தமிழர்களிடம் குறைவே! தமிழர் வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.



நன்றி: http://files.periyar.org.in/viduthalai/20080824/news03.html"

முடிவை உங்களின் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

நன்றி.

கரிகாலன் said...

தோழர் தமிழ் ஓவியா அவர்களுக்கு,

என்னுடைய ஐயங்களுக்கு எனக்கு உடன்பாடில்லாத பதில்களையும் கேள்விக்கு பொறுத்தமில்லாத பதில்களையுமே தொடர்ந்து விரிவாக அளித்து வருகிறீர்கள்.

இருப்பினும் பொறுப்புணர்வோடு கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி!

தமிழ் ஓவியா said...

//பொறுப்புணர்வோடு கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி!//

மிக்க நன்றி தோழர்.

ஒவ்வொரு அமைப்பிற்கும் செயல் திட்டங்கள் வெவ்வேறாக இருக்கும்,இருப்பது ஒன்றும் தவறுமில்லை. ஆனால் கொள்கை அடிப்படையில் நாம் என்றும் ஒன்றிணைந்தே செயல்பட்டு ஆக வேண்டும்.

நான் கட்சிக்காரன் இல்லை கொள்கைக்காரன் என்று பெரியார் சொன்னது போல் நம் செயல்பாடுகளும் இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர்.