Search This Blog

1.12.08

குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் பஜ்ரங்தளத்திற்கு நேரடித் தொடர்பு


இந்தியாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில்
ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் பஜ்ரங்தளத்திற்கு நேரடித் தொடர்பு

தமிழர் தலைவர் பட்டியலிட்டு ஆதாரத்துடன் விளக்கம்


சென்னை, டிச. 1- இந்தியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் மதவெறிக் கூட்டமான ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், பஜ்ரங்தளத்திற்கு உள்ள நேரடித் தொடர்புகளை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

2002 ம.பி. போபாலில் குண்டு வெடிப்பு

வரிசையாகச் சில சம்பவங்களைச் சொல்லுகின்றேன். இவைகள் எல்லாம் ஆதாரப்பூர்வமான சம்பவங்கள். 2002 போபால் - மத்தியபிரதேசம் - குண்டுவெடிப்பு, அபிநவ் பாரத் - பஜ்ரங் தளத்தின் பங்கு உண்டு என்று மத்திய பிரதேசத்தினுடைய முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் சொல்லியிருக்கிறார். 2002-ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தில் யார் இருந்தது? உள்துறை அமைச்சராக யார் இருந்தது? அத்வானி ஜி அவர்கள் இருந்தார். அடுத்து 2003 -ஆம் ஆண்டு உமாபாரதி உத்தரவு போடுகிறார். அவர்தான் முதலமைச்சராக இருக்கிறார். குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட யாரையும் கைது செய்யக்கூடாது என உத்தரவு போடுகிறார். வன்முறையாளர்களைக் கைது செய்யக்கூடாது என உத்தரவு போடுகிறார்.

ஏதோ அதிகாரம் வந்துவிட்டதைபோல

இங்கு ஏதோ கூட்டத்தில் பேசினார்கள் என்றவுடனே, ஆகா அவரைக் கைது செய், இவரை கைது செய். இன்னும் முழு அதிகாரம் தங்கள் கையில் வராத நிலையில் ஏதோ அதிகாரமே வந்துவிட்டதைப்போல, தமிழ்நாட்டு முதலமைச்சர் யார் யாரை கைது செய்யவேண்டும் என்ற பட்டியலை நாங்கள்தான் வைத்திருக்கிறோம் - அதற்கு காப்பிரைட் வைத்திருக்கிறோம் என்று சில நண்பர்கள் சொல்லுவது வேதனையாக இருக்கிறது.

அவர்கள் நண்பர்களாக இருக்கின்ற காரணத்தால் நாங்கள் நாணப்படுகிறோமே தவிர, அதற்கு மேலே நான் சொல்லுவதற்கு விரும்பவில்லை.

2004-ஆம் ஆண்டு கத்ரியா மசூதி குண்டுவெடிப்பு

2004-ஆம் ஆண்டு புனே கத்ரியா மசூதி வெடிப்பிற்கு பஜ்ரங்தள் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தவர் ராகேஷ் தாவடேமீது வழக்கு உள்ளது. அவரே மாலேகான் குண்டுவெடிப்பிலும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

மாலேகான் குண்டுவெடிப்பு

மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் இப்பொழுது வெளியே வந்திருக்கிறது. இலங்கையில் என்ன நிலை? ஜெயவர்த்தனே காலத்திலும் சரி, அதற்கு முன்னாலும் சரி, ஒரு உதாரணத்தைச் சொல்லுகின்றேன். என்ன செய்வார்கள் என்றால், யாரையாவது கொல்லுவார்கள்! சிங்கள அரசே முன்னின்று சிங்களர்களைக் கொன்று விடுவார்கள்.

புலிகள்மீது பழியைப் போடுவார்கள்

கொன்றுவிட்டு அந்தப் பிணத்தைப் போட்டுவைத்து விட்டு அதற்குப் பக்கத்திலே விடுதலைப் புலிகளினுடைய அறிக்கைகள், நோட்டீசுகளை இரண்டு, மூன்று வாசகங்களைப் போட்டு வைத்து விடுவார்கள். உடனே செய்தியை எப்படிக் கொடுப்பார்கள் என்றால், விடுதலைப்புலிகள் ஈவு இரக்கமின்றி இவர்களைக் கொன்றுவிட்டார்கள் என்று அந்தச் செய்தியைப் பரப்புவார்கள்.

இப்படி ஒரு புதுக் கண்டுபிடிப்பு


அதுமாதிரி இஸ்லாமிய மக்கள்மீது பழிதூற்ற வேண்டும். புதிதாக ஒரு ஒலி முழக்கத்தை எழுப்புகிறார்கள் - கண்டுபிடித்திருக்கிறார்கள். எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை, ஆனால் தீவிரவாதிகள் எல்லோரும் முஸ்லிம்களே! என்னய்யா அர்த்தம் இது?

ஒன்று இரண்டு தவறு நடக்கலாம். எந்த மதத்துக்காரன் தவறு செய்தாலும் விட்டுவிடுங்கள் என்று சொல்லுவது நம்முடைய நோக்கமல்ல. தவறு செய்தால் திருத்தப்பட்ட வேண்டியவன். ஆனால், அதே நேரத்தில் காந்தியாரைக் கொன்ற கூட்டம் - அவர்களுடைய மத வெறியின் தத்துவமென்ன? எண்ணிப் பார்க்க வேண்டாமா?

வழக்கின் ஆதாரப்பூர்வ ஆவணங்கள் எங்கே?

அந்த வழக்காவது முதலிலே ஒழுங்காக நடந்ததா? அந்த வழக்கினுடைய ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் பறிபோய்விட வில்லையா? வழக்கு சரியானபடி நடத்தப்படவில்லை! இதெல்லாம் பழைய கதை. இந்த நிலையிலே வேண்டுமென்றே திசை திருப்புவதற்காக சொல்லுகின்றார்கள்.

2006-ஆம் ஆண்டு நான்டெட் குண்டு வெடிப்பு

2006-ஆம் ஆண்டு நான்டெட் குண்டு வெடிப்பு நடக்கிறது. குண்டு தயாரிக்கும்பொழுது இரண்டுபேர் இறந்தார்கள். வேறு விதமாக சாயம் கொடுத்து அந்த செய்தியைக் கொடுத்தார்கள்.

ஆர்,டி.எக்ஸ். வெடி மருந்து பொருட்கள் சப்ளை

இறந்தவர்கள் இரண்டுபேரும் பஜ்ரங்தளத்துக்காரர்கள் - அதிலே சம்பந்தப்பட்டவர்கள். ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து பொருள்களை சப்ளை செய்தவர்கள். புரோகித்திற்கு சம்பந்தம் இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு பல்வேறு செய்திகள் கிளப்ப கிளப்ப வந்து கொண்டிருக்கின்றன.

புதை பொருள்கள்போல வெளியே வந்து கொண்டிருக்கிறன. இராணுவத்திலே இருக்கக் கூடிய ஒருவன் இராணுவத்தையே பயன்படுத்தி காஷ்மீருக்குப் போய் இன்னும் கேட்டால் இதைத் தோண்டினால் எதுவரைக்கும் வரும் என்று சொன்னால் மேனாள் காஷ்மீர் கவர்னராக இருந்த சின்காவும் விசாரிக்கப்பட வேண்டும். அங்கே அமர்நாத் கிளர்ச்சி. அவ்வளவு வளர்வதற்கு காரணம் என்ன?

காஷ்மீர் ஆளுநர் மாற்றப்பட்ட பிறகுதான்

அந்த கவர்னர் மாற்றப்பட்ட பிறகுதான் நிலைமை சீரானது. பொதுவாக ஒரு அரசாங்கம் மாறினால் கவர்னர்கள் மாற்றப்படுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலை அந்த அரசியல் முறைகள் கூட கடைப்பிடிக்க முடியாத நிலை. பிறகு மாற்றப்பட்ட சூழல் ஏற்பட்டது. சாதாரணமாக ஏதோ பட்டாசு வெடித்தான், செத்துப்போய்விட்டான் என்று சிவகாசி பட்டாசு வெடித்த மாதிரி செய்திகளை மழுப்பிவிட்டார்கள்.

மீடியாக்கள் அவர்கள் கையில்

ஏனென்றால் அவர்களுக்கு என்ன வசதி என்றால் மீடியாக்கள் அவர்கள் கையிலே இருக்கின்றன. பத்திரிகை அவர்களுடைய கையிலே இருக்கிறது. இன்னும் கேட்டால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் நடைபெறுகிறது. ஆனால் அரசாங்க அதிகாரிகள் ஏற்கெனவே பா.ஜ.க. ஆட்சியிலே போடப்பட்டவர்கள்.

இராணுவத்துறையில் ஊடுருவல்

இராணுவத் துறையிலே ஊருடுவல் செய்யப்பட்டவர்கள். வெளியுறவுத்துறையிலே போனவர்கள், மற்ற மற்ற இடங்களிலே இருக்கக் கூடியவர்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மை. எனவே கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. அரசு மாறியிருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகளிலே பலர் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய மிக முக்கியமான அனுதாபிகளாக, ஆதரவாளர்களாகத்தான் இன்னமும் பெரிய அளவிலே இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பது மற்றொரு மறுக்கப்பட முடியாத உண்மை.

2008-இல் குற்றப்பத்திரிகை தாக்கல்

அடுத்து 25-3-2008-இல்தான் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2006 பஞ்சமார்ஹி மத்தியப் பிரதேசம் லெப்டினன்ட் கர்னல் புரோகித் - அபிநவ் பாரத் உறுப்பினர் களுக்குப் பயிற்சி கொடுத்தார். இதிலே பணம் வசூல் பண்ணு கிறார்கள். அதுமட்டுமல்ல, மோசடிக் குற்றம் வேறு, ஹவாலா பணம் வந்திருக்கிறது - ஹவாலா குற்றமிருக்கிறது.

இப்ராகீம் - கொட்டை எழுத்தில்

புரோகித் - சம்பந்தம் இல்லை

அப்துல்காதரா? அலாவுதீனா? இப்ராகீமா? கைது செய்யப் பட்டார் என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுவார்கள். அதே நேரத்தில் அபிநவ் பாரத்தைச் சேர்ந்த புரோகித் என்று சொன்னால், அவருக்கு சம்பந்தம் இல்லை என்று மறைத்து விடுவார்கள்.

The conspiracy of Silence என்ற வார்த்தையை ரொம்ப ஆழமாக அம்பேத்கர் அவர்கள் பயன்படுத்தினார். பத்திரிகை களில் அவர்களுக்கு வேண்டாத விசயங்களை ரொம்ப சுபலமாக மறைத்துவிடுவார்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் அற்புதமான வார்த்தையாக அம்பேத்கர் அவர்கள் பயன்படுத்தினார்கள். அந்த மதவெறி அமைப்புகளில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிதான் இதுவரையில் சேர்ந்தான்.

இராணுவத்தில் லெப்டினென்ட் கர்னல் துரை

ஆனால், இவை இராணுவத்தில் இருந்துகொண்டே இந்தப் பணியை செய்வதற்குத்தான் அவர் லெப்டினென்ட் கர்னல் வரைக்கும் போயிருக்கிறான். இப்பொழுது இராணுவத்தில் விசாரணை வைத்தால் இன்னும் எத்தனைபேர் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. காரணம் என்னவென்றால், அதற்கு ஆதரவான அரசாங்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே அவர்களுக்கு ரொம்ப வசதியாக சாலை போட்ட மாதிரி ஆகிவிட்டது. பச்சைக் கொடி காட்டியமாதிரி ஆக்கிவிட்டார்கள்.

2006-ஆம் ஆண்டு கான்பூர் வெடிவிபத்து

2006 - கான்பூர் வெடிவிபத்து - பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த இரண்டுபேர் இறந்தனர். விசாரணை முடித்துக் கொள்ளப் பட்டது. தற்போது மீண்டும் தொடர்கிறது. அதேபோல 2006 பக்ரீத் அன்று குஜராத் மோடாசா குண்டுவெடிப்பில் ஒரு சிறுவன் சாவு.

குற்றவாளிகள் விடுவிடுப்பு


குஜராத் காவல்துறை பிரக்யாசிங் தாக்கூரையும் கூட்டாளி களையும் ஒன்றும் செய்யாமல் செய்துவிட்டது. அதாவது அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப் பட்டது. ஏனென்றால் மோடி அரசாங்கத்தை நடத்துகிறவர் காவல்துறையை கையில் வைத்திருப்பவர்.

--------------தொடரும்


-------------------"விடுதலை" 1-12-2008

4 comments:

அக்னி பார்வை said...

மன்னிக்கவும்,
யார் தீவிரவத செயலில் ஈடுபட்டாலும் கண்டனத்திர்குரியது, இதை இசுலாமிய அமைப்புக்கல் செய்தது, சங் பரிவார் செய்தது என் பேச இது நேரமில்லை...

தமிழ் ஓவியா said...

//மன்னிக்கவும்,
யார் தீவிரவத செயலில் ஈடுபட்டாலும் கண்டனத்திற்குரியது, //

சரியாகச் சொன்னீர்கள் தோழரே.
எனக்கும் இதில் ஒரு துளியும் கருத்து வேறுபாடு இல்லை.

ஆனால் மாலேகான் குண்டு வெடிப்பை ஊடகங்களும் இணையத்திலும் உள்ளவர்கள் பார்த்த பார்வை எப்படிப்பட்டது என்பதை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.
இது குறித்து இன்றைய "விடுதலை" ஏடு சுட்டிக்காடியதை அப்படியே தருகிறேன்.

படியுங்கள்

"

மாண்புமிகு முதல்வர் அவர்களின் முக்கிய கவனத்திற்கு

மும்பை தாஜ் ஓட்டல், ஒபராய் மற்றும் கஃபே லியோ போல்டு, சத்ரபதி சிவாஜி தொடர்வண்டி நிலையம் ஆகியவைகளில் நடைபெற்ற 60 மணி நேர பயங்கரவாதிகளை எதிர்த்த நடவடிக்கைகள் மீண்டும் தொடரா வண்ணமும், நடந்த நிகழ்வுகளின் சதித் திட்டத்தின் வேர்களைக் கண்டறிந்து அடியோடு ஒழிக்கவும் வேண்டியது கட்சி, ஜாதி, மத, அரசியல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு தேசப் பாதுகாப்பு, சமூகப் பொறுப்புணர்வு இவைகளை மனதிற் கொண்டு அணுக வேண்டிய அவசர அவசியப் பிரச்சினை.

இது நாட்டுக் கண்ணோட்டப் பிரச்சினை; ஓட்டுக் கண்ணோட்டப் பிரச்சினை அல்ல!

ஆனால் இங்குள்ள பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ கொள்கையாளர்கள், இந்த சம்பவங்களை ஊதிஊதி, தாங்கள் நடத்தி அம்பலத்துக்கு வந்த இராணுவ ஊடுருவல், மலோகான் மற்றும் பல குண்டு வெடிப்புகளை மக்களை மறக்கச் செய்யவும், மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்கு முன்னணி ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கவும், அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க., தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் அமைந்து அன்றாடம் சாதனைமேல் சாதனை குவிக்கும் ஆட்சிக்கு எதிராகவும், இஸ்லாமியர்கள் மீது ஒரு நிரந்தர வெறுப்பினை இதர மக்களிடம் ஏற்படுத்திடவும் தங்கள் வசமுள்ள,

ஊடகங்கள், இணையதளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சங்கங்களில் பொது விவாதம் என்ற போர்வையில், ஆட்சிகளுக்கு எதிராக ஒரு பனிப்போர் (Coldwar) நடத்திட திட்டமிட்டு வருகின்றனர்!

இவ்வாறு திட்டமிட்டு நடத்தப்பெறும் இதனைக் கண்காணிப்பது மத்திய, மாநில காவல்துறை, குறிப்பாக உளவுத் துறையின் அவசர அவசிய தலையாய முன்னுரிமைக் கடமையாகும்!

மக்களிடையே பீதியைக் கிளப்புதல் தவறான பிரச்சாரம் - கூட்டங்கள் நடத்தி விஷமப் பிரச்சாரம் செய்தல் என்பவைகளும் இறையாண்மைக்கு விரோதமல்லவா?"

--------------நன்றி: "விடுதலை" 1-12-2008

இந்துத்துவா பயங்கரவாதி பார்ப்பனர்களை கைது செய்தால் அதன் விபரத்தை பெரிய அதிகரிகளைக் கொண்டு அத்வானி வரை சொல்லச் செய்வதையும் தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

இது மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பதை ஒக்கும் செயலா? இல்லையா?

உலகில் எந்த மதத் தீவிரவாதத்தயும் அழித்து ஒழிக்க வேண்டும்.இதி எந்த தயவு தடசன்யமும் யாருக்கும் காட்டக் கூடாது என்பதே எனது நிலை.

நன்றி தோழரே.

உங்களின் வருகைக்கும், கருத்துக்கும்
மிக்க நன்றி.

அக்னி பார்வை said...

இதை நான் அதரிக்கிறேன், நான் கொபபட காரணம், சில விஷமிகள், இதை இசுலாமிய திவிரவாத்மாக மாற்ற முனனிந்துள்ளனர், அதில் வெறுப்பான நான், நீங்களும் ஒரு சார்பு நிலையாக இருப்பதாக நினைத்தேன்.

என் பதிவை படிக்க அழப்பது ஒரு வித விளம்பரமாக தெரியும் , மன்னிக்கவும் இருந்தாலும், இதை படியுங்கள்.

”பதிவர்கள் ஜாக்கிரதை: மோடியின் அல்லக்கை ’பதிவு யாத்திரை’ மேற்க்கொண்டுள்ளது ”

http://agnipaarvai.blogspot.com/

கிட்டதட்ட இருவரும் ஒரெ கருத்தை வலியுருத்துகிறோம்

தமிழ் ஓவியா said...

//என் பதிவை படிக்க அழைப்பது ஒரு வித விளம்பரமாக தெரியும் , மன்னிக்கவும் இருந்தாலும், இதை படியுங்கள்.//


ஒத்தகருத்துள்ளவர்கள் ஒன்று கூட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
படித்துவிட்டு கருத்துத் தெரிவிக்கிரேன்.
நன்றி