Search This Blog

9.5.08

பெரியார் சொன்னது போல் பெண் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும்

மார்ச் 2007 முதல் தமிழக மெங்கும் குடும்ப வன்முறை களிலிருந்து பெண்களை பாது காக்கும் சட்டம் 2005 பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஒரு காலத்தில் மகளிர் ஆணையத்தை தேடி மக்கள் சென்றது மாறி இன்று வீட்டுக்குள் படுக்கை அறை, சமையல் அறைக்குள்ளே தேடி வந்து பெண்களுக்குண்டான பிரச்சினைகளை கேட்கும் நிலை வந்துள்ளது. அந்த அளவுக்கு ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. முதலில் பெண்களுக்கு சம உரிமை வேண்டுமென தந்தை பெரியார் அவர்கள் போராடினார். அதன் விளைவாக தான் இன்று ஓரளவுக்கு பெண் களுக்கு உரிமையும் சுதந்திர மும், சமத்துவமும், கல்வியும், வேலை வாய்ப்பும் கிடைத் துள்ளது. பெண்களை பாதுகாக்க 33 சட்டங்கள் உள்ளன. அதில் அதிகாரம் உள்ளனவாக குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 ஆகும்.

தருமபுரி மாவட்டத்தில் ஆயிரம் ஆணுக்கு 887 பெண் கள் என்ற நிலை உள்ளது. இந்த நிலை நீடித்தால் மகாபாரதத் தில் ஒரு பெண்ணுக்கு 5 கண வன்கள் இருந்ததைபோல ஆகிவிடும். இதனால் பல பிரச் சினைகள் தலை தூககும். இதை தவிர்க்க பெண் - ஆண் என்ற பிறவி பேதம் காட்டாமல் பெண் குழந்தையை கொல்லா மல் பாதுகாக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஆணுக்கு என்ன உரிமைகள் இருக் கிறதோ, அத்தனை உரிமை களும் பெண்ணுக்கு உண்டு. அதிலும் சம பங்கு உண்டு. தரவில்லை என்றால் குடும்ப வன்முறை சட்டத்தை பயன் படுத்துங்கள். சிசுக் கொலை செய்வது ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பதற்கு சமம். சிசுக் கொலைக்கு கரணமாக இருக்கும் அறியாமை, மூட நம்பிக்கைகளை தூக்கி எறியுங்கள்

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என் கின்ற நிலை மாறவேண்டும். மண்புழுக்கள் கூட தாக்கப் பட்டால் தலையை தூக்கி நின்று எதிர்ப்பை காட்டுகிறது. அதைபோல பெண்களுக்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சுயமரியாதை இருக்கவேண் டும்.
தந்தை பெரியார் சொன்னது போல ஒரு தட்டில் 10 பிள்ளைகள் இருந்தால் அதில் ஒரு பெண் குழந்தையை மட் டும் படிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். பெரியார் சொன்னது போல் பெண் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். அதை பயன்படுத்தி பெண்கள் படிக்க முன் வரவேண்டும்.

பெண்கள் மூடப் பழக்க வழக்கங்களில் இருந்து முதலில் விடுபட வேண்டும். பீடி சாமியார், சுருட்டு சாமியார், பிள்ளை வரம் கொடுக்கும் சாமியார்கள் என யாராவது வந்துவிட்டால் உடனே நமது பெண்கள் வரிசையில் நின்று வணங்க ஆரம்பித்து விடுகிறார் கள். அத்தோடு குடும்பத்தில் காதுகுத்தல், மொட்டை அடித்தல், பூப்பூ நீராட்டுதல் என்று வைத்து வெட்கமில் லாமல் பெண்கள் பருவமடை வதை கூட டிஜிட்டல் பேனர் வைக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 வயது பெண் குழந்தைக்கு திருமணம் நடத்தி உள்ளார்கள். எனவே புராண இதிகாசங்களில் சொன்னபடி சொர்க்கம், நரகம் என்பது எதுவும் இல்லை. அவ்வாறு கூறுவதை நம்பாதீர்கள்.

இதுவரை பெண்கள் கேள்வி கேட்காமல் இருந்து விட்டார்கள், எழுதப்படாத சாசனத்தில் பெண்கள் இன் னும் அடிமைகளாக இருந்து வந்தனர். பெரியார் 1920-லேயே கேள்விகள் கேட்க ஆரம்பித்த தினால்தான் இன்று பெண் களாகிய நாம் பேச முடிகிறது. வெளியில் வரமுடிகிறது. பெண்கள் ஆக்கம், ஊக் கம், பகுத்தறிவு, துணிவு, தெளிவு பெறவேண்டும். பாலியல் பாகுபாடு இருக்குமட்டில் சுதந்திர ஜனநாயகம் இல்லை என்றே சொல்லலாம்.


----------தருமபுரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாது காக்கும் சட்டம் 2005 என்ற தலைப்பில் தருமபுரி ரோட்டரி அரங்கில் கருத்தரங்கத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவர் கு.ம. ராமாத்தாள் அவர்கள் பேசியது

0 comments: