Search This Blog

14.3.08

அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 13- சென்னை அரசு தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற அருந்ததியினருக்கு உள்ஒதுக் கீடு அளிப்பது பற்றிய அனைத் துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தின் தொடக்கவுரையில் முதல்வர் கலைஞர் குறிப்பிட்டதாவது:

ஆதித் திராவிடருக்கு வழங் கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டில், அருந்ததியர் வகுப்பின ருக்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்குவதுபற்றி முடிவு மேற் கொள்ள இன்று நடை பெறுகின்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த அரசின் அழைப்பினை ஏற்று வருகை புரிந்துள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமுதாயத்தில் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையிலே வாழும் ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியின மக்களுக்குக் கல்வி யிலும் வேலை வாய்ப்பிலும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அடிப் படையில், இந்திய அரசல மைப்புச் சட்டத்தில் ஆதி திரா விட மக்களுக்கும், பழங்குடி யின மக்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய அரசியல் அமைப் புச் சட்டத்தில் அளிக்கப்பட் டுள்ள சலுகைகள், ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியின மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள திரா விட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களை அடுத்து 1969-ஆம் ஆண்டில் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு சில மாதங்களில் அதாவது 13.11.1969 அன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், நலிந்த பிரி வினர் நலன்களை மேம்படுத் துவதற்காக திரு ஏ.என்.சட்ட நாதன் அவர்களின் தலைமை யில் இந்தியாவிலேயே முதன் முதலாக பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு ஒன்று அமைக்கப் பட்டது. அக்குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப் படையில் 1971-ஆம் ஆண்டில், 7.6.1971 அன்று ஆதி திராவி டர்களுக்கும், பழங்குடியின ருக்கும் சேர்த்துப் பலஆண்டு காலமாக இருந்த இடஒதுக்கீடு 16 சதவிகிதம் என்பது 18 சத விகிதம் என உயர்த்தப்பட்டது.

பின்னர் 1990-ஆம் ஆண் டில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பினை ஒட்டியும், தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியின மக்கள் தொகை யைக் கருத்தில் கொண்டும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 18 விழுக்காடு முழுவதையும் ஆதி திராவிடர் மக்களுக்கென (Sheduled Castes) ஒதுக்கீடு செய்ததுடன், பழங்குடியின மக்களுக்கென (Sheduled Tribes) தனியே 1 விழுக்காடும் ஒதுக்கீடு செய்து 22.6.1990 அன்று ஆணை பிறப்பிக்கப் பட்டது.
இந்திய அரசியல் அமைப் புச் சட்டத்தின் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்) ஆணை 1950-ன் கீழ் திருத்தச் சட்டம் 1976 (சட்டம் 108/1976)-ன் படி தமிழ்நாட்டில் மொத் தம் 36 சாதியினர் பழங்குடியினர் எனவும், 76 சாதியினர் ஆதி திராவிடர் இன மக்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடுகள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முறை யாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.

2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 கோடியே 24 லட்சத்து 6 ஆயிரம்;
இதில், ஆதி திராவிடர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 18 லட்சத்து 58 ஆயிரம்;
தமிழ்நாட்டில் வாழும் ஆதி திராவிடர் இன மக்களில் 76 பிரிவினர் உள்ளனர். அவற்றில் அருந்ததியர் ஒரு பிரிவினர் ஆவர். ஆதி திராவிடர் இன மக் களில் அருந்ததியினர் தமக்கு உள் இடஒதுக்கீடு கோரி வருகின்றனர்.

76 பிரிவினர்களாக உள்ள ஆதி திராவிட இன மக்களில் ஆதி திராவிடர், பள்ளர், பறையர், சக்கிலியர் மற்றும் அருந்ததியர் ஆகிய அய்ந்து பிரிவினர் பெரும்பான்மையின ராக உள்ளனர்.
இந்த அய்ந்து பிரிவினர் மொத்த ஆதி திராவிட இன மக்கள் தொகையில் 93.5 விழுக்காடு.
2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் அருந்ததியர் மக்கள் தொகை 7 லட்சத்து 71 ஆயிரத்து 659.
சக்கிலிய மக்கள் தொகை 7 லட்சத்து 77 ஆயிரத்து 139.
அருந்ததியர் மற்றும் சக்கிலியர் ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்த்தால் அவர்களின் மக்கள் தொகை 15 லட்சத்து 48 ஆயிரத்த 798.
இந்த இரு பிரிவினரும் ஆதி திராவிடரின் மொத்த மக்கள் தொகையில் 13.06 சதவிகிதம் ஆகும்.

மொத்த ஆதி திராவிட மக்கள் தொகையான ஒரு கோடியே 18 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு 18 சதவிகிதம் இடஒதுக்கீடு எனும்போது, அவர்களில் 13.06 சதவிகிதமான 15 லட்சத்து 48 ஆயிரம் பேரைக் கொண்ட அருந்ததியர் மற்றும் சக்கிலியருக்கு 2.35 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டி வரலாம்.

தமது கோரிக்கையில், உள் ஒதுக்கீட்டில், இந்து அருந்ததி யர்கள், இந்து சக்கிலியர்கள், இந்து மாதாரி, இந்து பகடை என 4 உட்பிரிவுகள் உள்ளன எனவும், இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக திருமணம் மற்றும் இதர, சமூகச் சடங்குகளை வேறுபாடின்றி நடத்தி வருகின்றனர் எனவும்,
எனவே அருந்ததியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு செய்து அர சாணை பிறப்பிக்கப்படும்பொ ழுது இந்து அருந்ததியர், இந்து சக்கிலியர், இந்து பகடை, இந்து மாதாரி என்ற 4 சாதி களுக்கும் ஒரே அரசாணையாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

23.1.2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் நடை பெற்ற மேதகு ஆளுநர் அவர் களில் உரையில்
``அருந்ததியர் வகுப்பினர் சமூகப் பொருளாதார நிலை யில் அடித்தளத்தில் இருப்ப தால், அவர்தம் முன்னேற்றத் திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியம் எனக் கருதி, தற்போது ஆதி திராவி டருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டில் இவர்களுக் குத் தனி உள் ஒதுக்கீடு வழங்குவதுபற்றி அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோ சித்து முடிவு செய்ய இந்த அரசு கருதியுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆதி திராவிடர்களில் அருந்ததி இன மக்களின் கோரிக்கை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத் துகளைத் தெரிவிக்குமாறும் அக்கருத்துக்களின் அடிப் படையில் அரசு கொள்கை முடிவு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

--------நன்றி:"விடுதலை" 13-3-2008

0 comments: