

``அந்த ஆண்டின் மிக முக்கியமான நிகழ்ச்சி என்னவெனில் , ராமசாமி நாயக்கர் என்ற பார்ப்பனரல்லாத தலைவரால் திருவாங்கூர் ராஜ்ஜியம் வைக்கம் என்ற ஊரில், தாழ்த்தப்பட்ட `கீழ்சாதி'மக்கள் சில தெருக்களில் நடக்கவே கூடாது என்பதை எதிர்த்து நடத்திய `வைக்கம் சத்தியாக்கிரகம்' ஆகும்.
இதன் விளைவாக ஏற்பட்ட அறவழித் தாக்கமும் சரியான உரிமைகளை நிலைநாட்டும் மனப்பான்மையும் வைதிக உணர்வு படைத்த இந்துக்களை வெகுவாகச் சிந்திக்க வைத்தது. சுகாதார அறிவும், தெளிவும் அவர்கட்கே ஏற்பட்டுத் தெருக்கள் தாழ்த்தப் பட்டோருக்குத் திறந்து விடப்பட்டன.
அம்பேத்கர் இந்த நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே வந்தார்.
மகத் என்ற இடத்தில் ( பொதுக் குளத்தில் தாழ்த்தப் பட்டோருக்கு தண்ணீர் எடுக்க உரிமை கேட்டு) போராட்டம் நடத்து வதற்கு முன்பு அவரது மனத்தில் இது மிகுந்த தாக்கத்தை உண்டாக் கியது. `ஊமையர்களின் குரல்' என்று டாக்டர் அம்பேத்கர் நடத்திய இதழில் வைக்கம் போராட்டத்தின் வெற்றி பற்றி உள்ளத்தைத் தொடக்கூடிய வகையில் மிக அருமையானதொரு தலையங்கத்தை எழுதினார்கள். பின்னால் வரும் நிகழ்ச்சிகளின் நிழலை முன் கூட்டியே காட்டும் அரிய நிகழ்வாக அது அமைந்தது'' .
----------------- தனஞ்செய்கீர் எழுதிய டாக்டர் அம்பேத்கர் வாழ்வும் தொண்டும் என்ற ஆங்கில நூலின் 66 ஆவது பக்கத்திலிருந்து
0 comments:
Post a Comment