Search This Blog

13.8.14

இல்லாத ஹிந்து மதம்


மறைந்த பெரியார் பேருரையாளர், பேராசிரியர் அ.இறையன் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவை யொட்டி, அவர் எழுதிய இல்லாத ஹிந்து மதம் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. நூலினைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார்.

இது ஒரு திராவிடர் கழக (இயக்க) வெளியீடாகும். நன்கொடை ரூ.25. இந்தக் காலகட்டத்தில் மிக முக்கிய கருத்துப் போர் ஆயுதம் இந்த நூல் என்றால், அது மிகையாகாது.


அமெரிக்காவில் வாழும் மக்கள் அமெரிக்கர்கள் என்று கூறுவதுபோல, இந்தியாவில் வாழும் மக்கள் இந்துக்கள் என்று சொல்லியிருக்கிறார் ஆர்.எஸ்.எஸின் தலைவர் திருவாளர் மோகன்பகவத்.
அவர் சொல்லுகின்ற எடுத்துக்காட்டை எடுத்துக் கொண்டாலும், அமெரிக்காவில் உள்ள மக்கள் அமெரிக்கர்கள் என்றால், இந்தியாவில் உள்ள மக்கள் இந்தியர்கள் என்றுதானே சொல்லவேண்டும் - எப்படி இந்துக்கள் என்று சொல்ல முடியும்? வெறி நெடியேறி யதால், என்ன நினைக்கிறோம் - என்ன சொல்லுகி றோம் என்று நிதானமில்லாமல் வெற்று வார்த்தைகளை வெளியிடுகின்றனர்.

இடையில் ஒரு குறுக்குச்சால் ஓட்டினார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா அளித்த ஒரு தீர்ப்புத் தங்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்று எடுத்துச் சொல்லி, அதனையே கிளிப்பிள்ளைப் பாடம்போல கீச் கீச்சென்று கத்தினார்கள்.


தான் சொன்ன கருத்தைத் திரித்துத் தவறாகப் பயன்படுத்தினர் என்று சம்பந்தப்பட்ட நீதிபதியே தெளிவுபடுத்தி விட்டார் (தி இந்து, 6.2.2003).


தங்களின் ஆதாயத்துக்காக இந்துத்துவாவைக் கடைப்பிடிக்கும் அல்லது பயன்படுத்தும் அரசியல் வாதிகள் தனது தீர்ப்புக்குத் தவறான விளக்கம் அளித்து, தவறாகப் பயன்படுத்துகின்றனர்; தீர்ப்பில் கூறப்பட் டுள்ள ஒட்டுமொத்தக் கருத்தை அவர்கள் முழுமையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சாப் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான கரன்தாபரின் கோர்ட்மன் ஷல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த நீதிபதி கூறினாரே!


குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்களை அடக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டு மாநிலத்தை மேலும் பாதுகாப்பு மிக்கதாக ஆக்குவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் தவறி விட்டதாக எனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினேன் என்று குறிப்பிட்ட நீதிபதி, தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சில நாள்களுக்குமுன் ஜனவரி 18  அன்று (2003) இதுபற்றி அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயிக்குக் கடிதம் எழுதினேன் என்று குறிப்பிட்டதையெல்லாம் அப்படியே ஜமுக்காளம் போட்டு மூடி மறைத்துவிட்டனர்.


இந்த இந்துத்துவா பாசிஸ்டுகள் எந்த எல்லைக்கும் சென்று, எந்த மாதிரியான தில்லுமுல்லுகளையும் செய்வார்கள் என்பதற்கு, நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் பேட்டியே போதுமான சாட்சியமாகும்.


இதற்கு மேலும் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்கள் ஆட்சி அதிகாரம் தங்கள் கைகளில் புதைந்திருக்கிறது என்கிற தருக்கில், அரசமைப்புச் சட்டப்படியான மதச் சார்பற்ற தன்மையை மாற்ற முயற்சிகளை மேற்கொள் வார்களேயானால், அதனை முறியடிக்க இந்திய துணைக் கண்டத்துக்கே தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளும், கோட்பாடுகளும்தான் சரியான போர் ஆயுதமாக இருக்க முடியும்.


இந்தச் சிந்தனை ஆயுதப் பட்டறையில் இடம் பெறும் ஓர் ஆயுதமே பெரியார் பேருரையாளர், பேரா சிரியர் அ.இறையன் அவர்களால் 32 ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்ட இல்லாத ஹிந்து மதமாகும் (உண்மை, 1.2.1982 இதழ் முதல் தொடராக எழுதப் பட்டவை) என்ற கட்டுரைகளின் அரிய தொகுப்பாகும்.
மதவாத ஆட்சி மத்தியில் மருட்டும் இந்தக் காலகட்டத்திற்குப் பொருத்தமாக அமைந்திருப்பது தான் இந்த நூலின் சிறப்பாகும்.


ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கை என்பார் கள் - இதோ ஓர் எடுத்துக்காட்டு.


நம்முடைய தமிழ் இலக்கண இலக்கியங் களில் ஆகட்டும்; அல்லது சங்ககால பழைய ஆதாரங்களில் ஆகட்டும், அல்லது ஆரிய பாஷை - ஆரிய நாகரிகப் பழக்கவழக்கங்களைக் கொண்ட வேதம், சாஸ்திரம், புராணம், சரித்திரம் முதலிய எவைகளிலாவது இந்து அல்லது ஹிந்து மதம் என்கிற வார்த்தை இருக்கிறதா? சித்தர்கள், முனி வர்கள், ரிஷிகள் என்று சொல்லப்பட்டவர்களாவது இம்மாதிரி வார்த்தையை உச்சரித்ததாகவோ, வழங்கினதாகவோ காணக் கிடக்கிறதா?

(குற்றாலத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து, 27.8.1927)


இதனை எடுத்துக்காட்டியதோடு, இதற்குச் சாட்சி யாக மறைந்த மூத்த சங்கராச்சாரியாரையே இறையன் அவர்கள் கூண்டில் ஏற்றியிருப்பதுதான் பிரமாதம்!

இப்போது ஹிந்து மதம் என்ற ஒன்றைச் சொல்லு கிறோமே இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. நம்முடைய பழைய சாஸ்திரங்கள் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது.

(தெய்வத்தின் குரல், முதல் பாகம், பக்கம் 122).

இந்தக் காலகட்டத்திற்கு மிகவும் இன்றியமையாத படைக்கலன் இந்நூல் என்பது இப்பொழுது புரிகிற தல்லவா!

               -----------------------"விடுதலை” தலையங்கம் 13-8-2014

0 comments: