Search This Blog

5.8.14

இதுதான் வால்மீகி இராமாயணம் -17



(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)



அயோத்தியா காண்டம்

முதல் அத்தியாயம் தொடர்ச்சி 

என்னுடைய விருப்பப்படி குடிகளெல் லோரும் இராமனிடம் பேரன்பு கொண்டதை யுணர்ந்த தசரதன் தன்னுடைய மந்திரிமார் களோடு ஆலோசித்து இராமனுக்கு முடிசூட்டத் தீர்மானித்திருக்கிறான். உண்மையையுணர்ந் தவர் களாகிய வசிட்டமுனி, சுமந்திரன் முதலிய அமைச்சரும் அரசனுடைய சூழ்ச்சிக்கு உடந்தையாயி ருக்கின்றனர். இராமனும் முடிசூட்டு விழா மிக விரைவில் நடைபெற வேண்டுமென வேண்டுவன செய்கிறான். தசரதன் தனது வஞ்சகம் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தால், அவன் எல்லா அரசர்களுக்கும் விரைவில் ஓலை விடுகிறான். ஆனால், பரதனிருக்கும் கேகய நாட்டுக்குச் செய்தியனுப்பவில்லை. ஏனென்றால், உண்மையுணர்ந்த கேகய மன்னன் உடனே வந்து தனது பேரனாகிய பரதனுடைய உரிமையை நிலைநாட்டி அவனுக்கே முடிசூட்டி விடுவான். பின்னர் உண்மை வெளிப்படுமிடத்துச் சாக்குச் சொல்லவே அவன் சனகனுக்கும் செய்தியனுப்பவில்லை.


விரைவில் வந்த சேர்ந்த அரசர் பலரையும் தன் குடிமக்களையும் சேர்த்துச் சபைகூட்டி அவர்களி டத்திலே தனது எண்ணத்தைத் தெளிவாகச் சொல்லு கிறான். பின்னர் அவர்களுடைய அபிப்பிராயம் தெரியாதவன் போலப்பாசாங்கு செய்து வினவுகிறான். அரசனுடைய எண்ணத்துக்கு மாறாக யாவரே வாய் திறப்பர்? அவர்களோ அவன் விருப்பத்திற்கு அதிகமாக முகஸ்துதி கூறினர். பரதன் பிரிந்தபின் தசரதனுக்கும் மற்ற அரசர்களுக்கும் யாதொரு போரும் நிகழாதிருக்க, அக்குடிகள் போருக்குச் சென்று திரும்பும்போதெல்லாம் இராமன் அவர்களிடத்தில் வந்து சுகம் வினவிப் போவான் என்று அவர்கள் கூறுகின்றார்கள். உடனே தசரதன் மகிழ்ந்து, மறுநாளே முடிசூட்டுவிழாவென்று கூறி வேண்டுவன செய்யக் கட்டளையிடுகிறான். வசிட்ட னோ, பிராமணனானதால், அநேக ஆயிரம் பிராமணர் களுக்குச் சாப்பாட்டுக்கும் தக்ஷணைக்கும் ஏற்பாடு செய்கிறான். அவ்வசிட்டன் பிராமணர்களுக்குச் சுவஸ்தி வாசனத்தைப்பற்றி ஞாபகப்படுத்துங்கள் என்று கூறுவதால், அவர்கள் விலாப்புடைக்க உண்டு மயங்கிக் கிடப்பர், பிறர் நினைப்பூட்டினாலே செயல் புரிவர் என்ற உண்மை அறிய இருக்கிறது. அம்முனி வேசையரையும் வரவழைக்கக் கூறுகிறான். என்னே அவன் மதி?
அரசர்களுக்கு மத்தியிலிருந்த தசரதன் இராமனை வரவழைத்து, நாளை உனக்கு முடிசூட்டப்போகிறேன் என்று கூறுகிறான். சகோதரத்துரோகியாகிய இராமனும் தனது பேராசை நிறைவேறுகிற காலம் வந்துவிட்டதென்ற மகிழ்ச்சியோடு ஒன்றும் கூறாமல் இணங்குகிறான்.



பின் விடைபெற்றுச் சென்ற இராமனைத் தசரதன் மறுபடியும் சுமந்திரனை விடுத்து அழைத்துவரச் சொல்லு கிறான். அப்போது இராமனுக்குச் சந்தேகமுண்டாகி விட்டது. தனது முடிசூட்டலுக்கு ஏதேனும் தடை ஏற்பட்டுவிட்டதோ என நடுநடுங்கித் தசரதனைக் காண ஓடுகிறான். அப்போது இராமனை நோக்கிச் சுமந்திரன் கூறிய பேச்சும் வியப்பாக இருக்கிறது.
திரும்பவும் வந்து சேர்ந்த இராமனை நோக்கித் தசரதன் கூறிய சொற்களே மிகவும் கவனிக்கத்தக்கன. நம் குடிகளுக்கு உண்மை தெரிந்தால், அவர்கள் மனம் மாறிவிடும். ஆதலின் அதன் முன்னரும் என் மனம் மாறுவதன் முன்னரும் இக்காரியத்தை முடிக்க வேண்டும். உனக்கு வேண்டிய நண்பர்கள் உன்னைக் கவனமாகப் பாதுகாக்கட்டும். ஏனென்றால், பரதனுக்கு வேண்டி யவர்கள் யாரேனுமிருந்தால், உனக்குக் கேடு நினைப்பர். பரதனோ அவனுடைய அம்மான் வீட்டுக்குப்போய் நெடுநாளாய் விட்டபடியால், அவனக்கு உண்மை தெரிந்திருக்கக்கூடும். ஆதலின் அவர் வருமுன் இக் காரியத்தை முடிக்க வேண்டும் என்று தசரதன் கூறுகிறான். இராமனும் அப்பொழுதும் அவ்வநியா யத்தைக் கண்டிக்காமல் பேராசையாலே தூண்டப்பட்டு அப்பெரிய அநியாயத்தைக் கண்டிக்காமல் பேராசை யாலே தூண்டப்பட்டு அப்பெரிய அநியாயத்திற்கு இசைகிறான்.


இராமன் மிகவும் தந்திரசாலி, தந்தை சொற்படித் தனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களோடு நெடுநேரம் பேசியிருக்கிறான். இராமன் தன் தாயிடம் சென்றபோது, பொறாமைக்காரியாகிய கோசலையும் தனக்கு வேண்டி யவர்களாகிய சுமித்திரைக்குப் பரிந்து பேசுகிறாளே யொழிய கைகேயியிடத்தில் பரிவு இல்லாதிருக்கிறாள். இராமன் இலக்குமணனிடம் பேசிய பேச்சு சிறந்த இராஜ தந்திர நிபுணனுடையதாகவே காணப்படுகிறது. அவ்விதமான பேச்சில் மயங்கி ஈடுபடாதாருமுளரோ?

இவ்வாறுளது இராமனுடைய யோக்கியதையும். இவ்விதக் கொடிய மனத்துப் பேராசையனாகிய இராமனையும் அவன் தாயையும் உண்மையறியாப் பாமர ஜனங்கள் புகழ்கிறார்கள்.


மேலேகண்ட வரலாற்றைப் படித்த பின்னராவது உண்மையுணர்ந்து நல்வழிப்படும்படி உலகினருக்கு இறைவன் அருள் செய்வானாக! இக்கட்டுரையில் தசரதன், இராமன், கோசலை முதலியோர் மிகவும் கெட்ட மனமுடையவர்களென்பதும், வசிட்டன் சுமந்திரன் முதலியோரும் அவர்கள் செய்யத்துணிந்த அநியா யத்துக்கு (இராமன் முடிசூட்டலுக்கு) உடந்தையாயிருந் தார்களென்பதும் தெளிவாகிறது. இனி கம்பர் புரளியை ஆராய்வோம். கம்பர் முதன் முதலாகத் தசரதன் பந்துக்கள் முதலியவர்களையெல்லாம் அனுப்பி விட்டுத்தன் அறுபதினாயிரம் மந்திரிமாருடன் ஆலோசிக் கிறான் என்று கூறுகிறார். தசரதனுக்கு வாழ்நாளும் அறுபதினாயிரம், மனைவியரும் அறுபதினாயிரம், மந்திரிமாரும் அறுபதினாயிரமாம், இது வியப்பே. இந்த வியப்பே. இந்த அறுபதினாயிரம் பேருடனும் தசரதன் எப்படி ஆலோசித்தானோ? இத்தனை பேரும் தங்குவதற்கமைந்திருந்த கட்டடம்தான் எப்படி அமைந்தி ருந்ததோ? இவர்கள் ஒன்று சேர்ந்து எவ்வாறு பேசி ஆலோசித்தனரோ? எல்லாம் வியப்பே.

இராமனை முதன்முதலாக அழைத்து வரச்சொன்னது அரசரும் குடிகளும் கூடிய சபையிலன்று என் வால்மீகி கூறக் கம்பரோ, அதை அமைச்சரோடு கூடி ஆலோ சித்தபோதென்கின்றனர். அதன் பின்னரே மன்னர் களுக்குக் கடித மனுப்பி வரவழைக்கிறானென்கிறார் கம்பர். அவர் கள்ளத் தனங்களையெல்லாம் மறைத்த தோடு நில்லாது, இராமனுடைய சகோதரத் துரோகச் செயல்களையும் மறைக்கிறார். பேராசையனாகிய இராமன் அரசையேற்க ஆவலோடு தன் தந்தையுடன் சூழ்ச்சிக்கு உடந்தையாயிருக்கிறானென்று வால்மீகி எழுத, அதை மறைத்துக் கம்பர்,
தாதையப்பரி சுரைசெயத் தாமரைக் கண்ணன்
காதலுற்றிலன் இகழ்ந்திலன் கடனிதென்றுணர்ந்தும்
யாது கொற்றவன் ஏவியது செயலன்றோ?
நீதியெற்கென நினைந்து மப்பணிதலை நின்றான்
என்று கூறுகின்றனர். இதனால் இராமனை மிகவும் உத்தமன்போலக் கூறி உலகினரை மயக்குகிறார்.

அரசரோடுங்கூடி ஆலோசித்த தசரதன் முன்னரே நாள்பார்த்த நாளையே இராம பட்டாபிஷேகம் நடைபெறுகிறதெனக் கூறியதாக வால்மீகி எழுதியிருக்க, அதற்கு மாறாகக் கம்பர் மன்னரை அனுப்பியபின் சோதிடரை வரவழைத்து யோசித்து நாளையென நாள் வைக்கிறானென எழுதுகிறார்.
தசரதன் இராமனை இராண்டாம் முறையழைத்தும், இராமன அய்யுற்று நடுங்கியதும், பின்னர்த் தசரதனைக் கண்டதும், அவன் கூறிய வஞ்சகச் சொற்களும் ஆகிய இவற்றையெல்லாம் கம்பர் மறைத்துவிட்டார். உலகத் தாரை மயக்கிப் பல கேடுகளை விளைவிக்கக் கம்பர் ஏன் பிறந்தார்? இக்கம்பராலேயே இராமன் வரலாற்றில் பல உண்மைகள் மறைந்தன. நல்லவர்களாகிய கூனி கைகேயி முதலியோரை உண்மைக்கு மாறாகக் கெட்ட வர்களாகவும், மிகவும் கெட்டவர்களாகிய தசரதன், இராமன் முதலியவர்களை நல்லவர்களாகவும் எழுதி மிகக்கொடும்பாவத்தை கம்பர் ஏற்றார்.

இரண்டாம் அத்தியாயம்

கேகய நாட்டரசன் வீட்டிலிருந்து கைகேயியுடன் வந்து, அவளோடு வெகுகாலமாக வாழும் மந்தரை யென்னும் வேலைக்காரி தற்செயலாய் மாடியில் ஏறி அயோத்தியை முழுவதும் பார்த்தாள். இராமனுக்கு மறுநாள் விடிந்ததும் முடிசூட்டலால், ஊர் நன்கு அலங் கரிக்கப் பெற்றிருந்தது. அதுகண்ட கூனியாகிய மந்தரை ஆச்சரியமடைந்தாள். உடனே அவள் ஒரு தோழியை நோக்கி, கோசலை பொருளைச் சேர்ப்பதில் ஆசையுடை யவளே. அவள் பொருளை மேலும் மேலும் கொடுக் கும்படி உண்டான மகிழ்ச்சிக்குக் காரணமென்னே? என்று கேட்டாள். அத்தோழி மறுநாள் நடக்கவிருக்கும் இராமனது முடிசூட்டை அறிவித்தாள். உடனே மந்தரைக்குச் சினமிக மூண்டது. அவள் மாடியிலிருந்து கீழே வந்து தூங்கிக்கொண்டிருந்த கைகேயியை யெழுப்பி, அடீ என்ன தூக்கம்? உனக்குப் பெரிய ஆபத்து வந்துவிட்டது. நீ அரசனுக்கு வேண்டிய வளென்று புகழ்ந்து கொள்ளுகிறாய். அவனுக்கு உன்னிடத்தில் உண்மையான பிரியம் இல்லையென்று எனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறினாள். கைகேயி, அடீ, உன் முகம் மிகவும் வாடியிருக்கிறதே, காரண மென்ன? என்றாள். மந்தரை கோபம் பொங்கி, தேவி! அரசர் இராமனுக்கு யுவுவன இராஜ்ய அபிஷேகம் செய்யப்போகிறார். அதனால் உனக்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது. நான் உனக்கு மிகவும் வேண்டியவளல் லவா? அதனால் பெரிய துக்கக் கடலில் முழுகி உனக்கு நலஞ்சொல்ல வந்தேன். நீ சுகமாக இருந்தால்தானே நானும் சுகமடைவேன். நீ அரச வமிசத்திற் பிறந்து அரசனுக்கு மகிஷியாயும் உனக்கு இராஜ தந்திரம் தெரியவில்லை. நீயோ நல்ல மனமுள்ளவள். உன் கணவனோ மகா வஞ்சகன். நல்லவனைப்போலப் பாசாங்கு பண்ணி உனக்குப் பிரியமாகப் பேசினும் மிகவும் தீய நடத்தையுள்ளவன். இப்போது கோசலை மகன் இராமனுக்கு நாட்டைக் கொடுக்கப்போகிறான். வரும் கெடுதியை அறியாத முட்டாளே! அரசனுடைய கெட்ட எண்ணம் தெரிந்ததா? பரதனை உன் தகப்பன் வீட்டிற்கு அனுப்பிவிட்டாள். நாளை காலையில் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய நிச்சயித்துவிட்டான். அவன் உன் ஜென்மப்பகைவன். பாம்புக்குட்டியின் அழகில் மயங் கியதுபோல நீ அவன் அழகில் மயங்கினாய். பாம்பையும் பகைவனையும் கவனிக்க வில்லையென்றால் அவை தீங்கு செய்வனபோல இன்றைக்கு உனக்கும் உன் மகனுக்கும் தீமை செய்யப் போகிறான். கபடமற்றவளே! உனக்கு நன்மை தேடுபவனைப்போலப் பாசாங்கு செய்யும் மகா பாவியான தசரதன் உன்னையும், உன் மகனையும், உன் பந்துக்களையும் நிர்மூலம் செய்வான். இனியாவது மோசம் போகாதே. அவனை வசப்படுத்தும் சக்தி உனக்குண்டன்றோ? அதை உபயோகித்து எங் களைக் காப்பாற்று என்றாள்.


இராம பட்டாபிஷேகத்தைக் கேட்ட கைகேயி மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஒரு விலையற்ற மணி மாலையை மந்தரைக்குப் பரிசாகக் கொடுத்து, இராமனிடத்திலும் பரதனிடத்திலும் எனக்குப் பேத புத்தியில்லை; எனக்கு இராமன் நலத்தால் நன்மையே. உனக்கு வேண்டியதைக் கேள் என்றாள். அதைக்கண்ட மந்தரை, அறி வற்றவளே! உனக்குப் பேராபத்து விளையும்போது மகிழ்ச்சியடைகிறாய். இராமன் உனக்கு சக்களத்தி பிள்ளையன்றோ? அவன் உனக்கு எமனன்றோ? ஆத லால், இராமனுக்குப் பரதனால் பெரும் பயன் நேரும்.


                       -----------------------தொடரும்... "  5-8-2014

15 comments:

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

தெலங்கானா நல கொண்டா மாவட்டத்தில் உள்ள லட்சுமிதேவி கூடம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கோம்பல்லி சைது - கீதா ஆகிய பெற்றோருக்கு ஒரே குழந்தை ஜான்சி (8 மாதம்).
ஆடு, மாடு, கோழிகள் வளர்த்து வருகின்றனர்.

வளர்ப்புக் கோழி குழந்தை யின் தலையில் கொத்திய தால் ரத்தம் பீறிட்டது.

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பல னில்லை - பரிதாபமாக பெற்றோரின் ஒரே குழந்தை இறந்து விட்டது.

செல்லப் பிராணிகளை குழந்தை களுடன் விளையாட அனு மதிக்க வேண்டாமே!

Read more: http://viduthalai.in/e-paper/85271.html#ixzz39buvQ9br

தமிழ் ஓவியா said...

கடவுளுக்கு நன்றியா?

உண்பதற்கு முன்னால் தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற உணவுக்காக நன்றி தெரிவித்தாலோ அல்லது வழிபாடு செய்தாலோ அவர்களின் உணவுக் கட்டணத் தில் 15 விழுக்காடு தள்ளுபடி செய்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் உணவகம்.

அப்படியானால் தங்களுக்கு உணவு கிடைக்காமல் பட்டினியால் சாகும் கோடானு கோடி மக்கள் கடவுளை என்ன செய்ய வேண்டுமாம்?

Read more: http://viduthalai.in/e-paper/85271.html#ixzz39bv5ZohM

தமிழ் ஓவியா said...


தூங்கிக் கொண்டிருக்கும் தமிழக தேசிய நெடுஞ்சாலை துறை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆசிரியருக்குக் கடிதம் >>>


தூங்கிக் கொண்டிருக்கும் தமிழக தேசிய நெடுஞ்சாலை துறை

சாலைகள் என்பது பொதுமக்களின் பயணத்திற்கு இதயத்துடிப்பாக, முதுகெ லும்பாக விளங்குகின்றன. சாலைகளுடைய தரம் மிகவும் உயர்ந்திருந்தால் தான் பயணிகளின் பயணங்கள் விபத்தில்லாமல் சிறப்பாக இருக்கும். இந்திய அரசின் தங்க நாற்கர சாலைத்திட்டம் என்பது மிகவும் ஒரு சிறப்பான திட்டம். அந்த சாலைகள் மிகவும் நீண்ட சாலைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் மாநிலங்களையும் இணைக்கும் சாலைகளாக அச்சாலைகள் விளங்குகின்றன.

ஒரு மாவட்டத்திற்குள் பயணம் செய்யும்போது அந்த மாநில சாலைகள், மாவட்ட சாலைகள் மற்றும் கிராம சாலைகள் மிகவும் பயன்படுகின்றன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான சாலை மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. இந்த சாலையைத் தவிர மற்றும் அனைத்துச் சாலைகளும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.

இந்நிலையில் சென்னை - திருவனந்த புரம் சாலையை இணைக்கின்ற சாலை நாகர் கோவில் பார்வதிபுரம் முதல் காவல்கிணறு சந்திப்பு வரை உள்ளது. இந்த சாலையானது தேசிய நெடுஞ்சாலை 47 பி என்று அழைக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலேயே மிகமிக மோசமான பராமரிப்பு இல்லாத சாலை இது தான்.

பார்வதிபுரம் முதல் காவல் கிணறு வரை இந்த சாலையை சுற்றி ஏராளமான ஆக்கிர மிப்புகள் வழிபாட்டுத் தலங்கள், வணிக நிறுவனங்கள், வீடுகள், விளம்பர தட்டிப் போர்டுகள் என்று இந்த சாலை முழுக்க முழுக்க ஆதிக்கவாதிகளின் ஆக்ரமிப்பில் தான் உள்ளது.

இந்த சாலையை தினமும் ஒவ்வொரு வரும் ஆக்ரமித்து வருகின்றனர். இதன் கோட்டப் பொறியாளர் அலுவலகம் திருநெல்வேலியிலும், உதவிக்கோட்டப் பொறியாளர் அலுவலகம் நாகர் கோவிலி லும் உள்ளது. இந்த ஆக்ரமிப்புகள் தொடர் பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டும் எந்தவித நடவடிக் கையும் அந்த அதிகாரிகள் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் வருத்தப்படுகிறார்கள்.

ஆக்ரமிப்புகள் மட்டுமா? இந்த சாலை மிகவும் பழுதடைந்து எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த வித நடவடிக் கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

மேலும் இந்த சாலையில் பல்வேறு இடங்களில் மிக மிக குறுகலான பாலங்கள் தான் இருக்கின்றன. இதனால் இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இந்த பாலங்களையாவது அதிகாரிகள் அகலப் படுத்துகிறார்களா என்றால் இல்லை. இந்த சாலையை சீர்படுத்தவும் ஆக்ரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் நாகர் கோவிலில் இருக்கும் உதவிக்கோட்டப் பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றால் அங்குள்ள உதவிக்கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப்பொறியாளர்கள் பொதுமக்களிடம் எரிச்சலுடன் பேசுகின்றனர். அன்பாக நடந்து கொள்ளவில்லை என்று பொது மக்கள் வருந்துகிறார்கள்.

தமிழக அரசு ஏன் இந்த தே.தெ.சா. 47 பி - யை கவனிக்கவில்லை குமரிமாவட்டம், தமிழகத்துடன் தான் இருக்கிறதா? தமிழக தேசிய நெடுஞ்சாலைத் துறையும் செயல் படுகிறதா? இல்லை தூங்கிக் கொண்டிருக் கிறதா என்பது புரியாத புதிராகவே உள்ளது. உடனடியாக இந்த சாலையை செப்பனிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் ஆதிக்கவாதிகள் ஆக்கிர மித்து இந்த சாலை ஒற்றையடிப்பாதையாக மாறிவிடும். நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு

- கோ.வெற்றிவேந்தன், குமரி மாவட்ட விடுதலை, செய்தியாளர்.

Read more: http://viduthalai.in/page-2/85270.html#ixzz39bvQmrPU

தமிழ் ஓவியா said...


மோடி சொன்னது....மோடி சொல்ல முடியாதது


மோடி சொன்னது....

ஹிரோஷிமா அணு குண்டு வீச்சில் பலியா னோரை நினைவு கூரும் அதே நேரத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாத வகையில், உலக அமைதிக்காக பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
- பிரதமர் மோடி

மோடி சொல்ல முடியாதது

குஜராத்தில் இரண்டாயி ரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பலி யானது எனது ஆட்சி யில்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/85379.html#ixzz39iNhFrBZ

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படி யான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படு கின்ற மூட நம்பிக்கை ஒழியவேண் டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.
(விடுதலை, _ 22.6.1973)

Read more: http://viduthalai.in/page-2/85381.html#ixzz39iNsgr4r

தமிழ் ஓவியா said...


இந்திய குடிமைப் பணி தேர்வு: சிக்கலுக்குத் தீர்வு என்ன?

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணி தேர்வு (அய்.ஏ.எஸ். உள் ளிட்டவை) இப்பொழுது பெரும் பிரச்சினைக்கு ஆளாகியிருக்கிறது.

இதற்குக் காரணம் இந்தியா முழுமையிலிருந்தும் தேர்வு எழுதக் கூடிய இரு பால் மாணவர்களுக்கும் பொதுவானதாக இல்லை என்பதுதான்.

மூன்று நிலைகளில் இதன் தேர்வு முறை இருந்து வருகிறது. ஆரம்பத் தேர்வு, இரண்டாம் நிலைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்பவைதான் அந்த மூன்று நிலைகளும்.

இதில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலை; இதுவே அடிப்படையில் தவறாகும். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்குத் தேர்வு எழுதுவது எளிதாக இருக்கிறது. ஆனால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத வர்கள் ஆங்கிலத்தில் எழுத வேண்டியுள்ளது. ஆங்கிலம் இந்த மக்களுக்குத் தாய்மொழி இல்லை.

குடிமைப் பயிற்சித் தேர்வில் இந்தி பேசும் பகுதியில் அதிகமாகத் தேர்வு செய்யப்படுவதற்கு இதுதான் முக்கிய காரணமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் அந்தத் தேர்வு எழுத வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வருகிறது. இது ஒரு நியாயமான கோரிக்கை என்பது மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுதேகூட உணர முடியும்.

இப்பொழுது தமிழில் தேர்வு எழுதவில்லையா என்று கேட்கலாம்; உண்மைதான் அதில் உள்ள நிபந்தனை என்ன தெரியுமா?

குறைந்தபட்சம் அந்த மொழி பிரிவில் 25 பேர் தேர்வு எழுத வேண்டுமாம். இது என்ன முறை? அறிவியல் வளர்ந்த இந்தக் கால கட்டத்தில் இத்தகைய நிபந்தனைகள் தேவைதானா?

தமிழில் தேர்வு எழுத விரும்பும் ஒருவர் 25 பேர்களைச் சேர்க்க அலைந்து திரிய வேண்டுமா?

இதிலும் உள்ள இடர்ப்பாடு என்ன தெரியுமா? இந்தி, ஆங்கிலத்தைத் தவிர வேறு எந்த மொழியில் தேர்வு எழுதினாலும் கேள்வித்தாள் மட்டும் ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டும்தான் இருக்குமாம்.

சுற்றிச் சுற்றி வந்தாலும் இந்தியைத் தாய்மொழி யாகக் கொண்டவர்களுக்குக் கூடுதல் வசதியும், வாய்ப்பும், சலுகையும் உள்ள வகையில்தான் இந்தத் தேர்வு முறை இருந்து வருகிறது.

இப்பொழுது வடமாநில மாணவர்கள் புதியதோர் கோரிக்கையை முன் வைத்துப் போராடுகிறார்கள்; இது நாடாளுமன்றம் வரை எதிரொலிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளுமே நடத்தப்பட முடியாத அளவுக்கு முடக்கப்பட்டு விட்டன.

தேர்வில் 400 மதிப்பெண்களில் 22 மதிப்பெண் களுக்குரிய வினாக்கள் ஆங்கில மொழியைச் சார்ந்ததாக இருக்கிறது. இது எங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்பதுதான் இந்தப் போராட்டத்தின் நோக்கமாகும். மத்திய அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று, குடிமைப் பணியில் ஆங்கிலத்திற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதியின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது என்று அறிவித்துள்ளது.

இன்னொரு பிரச்சினையும் இதன் உள்ளீட்டில் உண்டு மாற்றப்பட்டுள்ள தேர்வு முறை என்பது நகரப்புறங்களைச் சார்ந்த மாணவர்களுக்குத்தான் சாதகமாக உள்ளது. கிராமப்புறங்களைச் சேர்ந்தவர் களுக்கும், முதல் தலை முறையாகத் தேர்வு எழுதக் கூடியவர்களுக்கு கடினமாகவே உள்ளது.

எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அதில் சமூக நீதிப் பார்வை என்பது மிகவும் முக்கியமானது. அத் தகைய கண்ணோட்டம் இல்லையென்றால் சமூகத்தில் சம நிலை என்பது சாய்ந்த தராசாகத்தான் இருக்க முடியும்.

வடமாநிலங்களில் கல்லூரிகளிலேயே மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வைச் சந்திக்கும் வகையில் பாடத் திட்டங்களை வைத்துள்ளனர். இந்தி பேசும் பகுதிகளைச் சேர்ந்த வர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இது பற்றி தமிழ்நாடு அரசும், கல்வித் துறையும் ஏன் சிந்திக்கக் கூடாது?

மத்திய அரசு நடத்தும் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) நடத்தும் தேர்வு மூலம் அதிக எண்ணிக்கையில் பணியாளர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதில் மெட்ரிக் அளவில்தான் அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுத முடியும். பட்டதாரி அளவில் அந்த நிலை இல்லை என்பது பாரபட்சமானதாகும்.

அதுபற்றியும் மத்திய அரசு புதிய முடிவை அறிவிக்க வேண்டும். இந்தத் தேர்விலும் தென்னக மாநிலங்களைச் சேர்ந்தவர்களை விட இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வருகின்றனர்.

காரணம் மொழிப் பிரச்சினையே; அனைத்திந்திய தேர்வுகள் அனைத்தையும் இந்தியாவில் அங்கீகரிக்கப் பட்டுள்ள 22 மொழிகளிலுமே எழுதலாம் என்று பொதுவான சட்டம் பிறப்பிக்கப்பட்டால் ஆங்காங்கே அவ்வப் பொழுது இதுகுறித்த சர்ச்சைகளும், போராட் டங்களும் வெடிக்காதே!

நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்திசையில் குரலை உயர்த்த வேண்டும்; தமிழ்நாடு தந்தை பெரியாரின் சமூகநீதி மண்ணாயிற்றே - எடுத்துக் காட்டாகச் செயல்பட வேண்டாமா?

Read more: http://viduthalai.in/page-2/85382.html#ixzz39iPBbfHd

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

விஷ்ணுவின் பிள்ளை களான பிரம்மாவுக்கும், மன்மதனுக்கும் வழிபாடு கிடையாது. இவர்கள் லட்சுமியின் சம்பந்தம் இல்லாமல் பிறந்தவர்கள். விஷ்ணுவின் நாபித் தாமரையில் பிறந்ததால், கமலஜர் என்று பிரம்மா வுக்குப் பெயர். அவர், மன்மதனை மனதால் உண்டாக்கியதால், அவ னுக்கு மனசிஜன் என்று பெயர். இந்த இருவரும் இல்லாவிட்டால், உயிர் கள் மண்ணில் பிறக்க முடியாது. மன்மதனே, மலர்க்கணை தொடுத்து, ஒரு ஜீவனின் உற்பத்திக் குக் காரணமாகிறான். அந்த உயிர் புகுவதற் கான உடலைக் கொடுப்ப வர் பிரம்மா. இப்படி, உயிர்களை, பிறவிப் பிணி யில் சிக்கித் தத்தளிக்கச் செய்வதால், இவர்களுக்கு வழிபாடு இல்லாமல் போய்விட்டது என்று கூறுகிறார், காஞ்சிப் பெரியவர்.

படைப்புக் கடவு ளுக்கே - இந்தக் கதியா? எங்காவது பெண் சம்பந் தம் இல்லாமல் கொப் பூழ்கொடியில் பிறக்க முடியுமா? உயிர்களைப் படைத்தவன் பிறவிப் பிணியில் சிக்க வைக்கத் தானா? அப்படியானால், பெரியவாள் சங்கராச் சாரியாரின் பிறப்பும் அதைச் சார்ந்ததுதானா?

உளறல்களுக்கெல்லாம் ஓர் அளவேயில்லையா?

Read more: http://viduthalai.in/page1/85334.html#ixzz39iQBft5l

தமிழ் ஓவியா said...

நரம்பியல் மருத்துவரின் எச்சரிக்கை

பக்தியின் பெயரால், மத மூடநம்பிக்கை காரணமாக தலையில் தேங்காய் உடைப்பதுபற்றி நரம்பியல் மருத்துவர் என்.திலோத்தம்மாள் கூறுவது:

தேங்காயைக் கையால் உடைக்கும் போது எலும்பு, சதைக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படும். ஆனால் தேங் காயைத் தலையில் உடைக்கும்போது மூளை பாதிக்கும். அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். கராத்தே பயிற்சியில் கையால் உடைப்பதுபோல் செய்யலாமே என்று கேட்கலாம். தலையில் எலும்பு மட்டுமல்ல; உள்ளே மிகவும் மிருதுவான ஜெல்லி மாதிரி இருப்பதுதான் மூளை. ஒரு குழந்தையைத் தூக்கிக் குலுக்கினால்கூட மூளை ஆடலாம்.

மூளையில் மூன்று நிலை உண்டு. முதலில் அதிர்ச்சி (Concussion) அடுத்து அடிபடுவதால் கன்னிப்போதல் (Contusion) மூன்றாவது Nuronal Damage, Oxonal Damage.

ஆக்சோனல் என்பதுதான் அடிப்படை செல். அதாவது நரம்புகள் சிதறிப் போவது.

குத்துச் சண்டையில் பத்து அடி அடித்தவுடன் பார்த்தால், அடி வாங்கியவர் தள்ளாடித் தள்ளாடிப் போய் குடிகாரன் மாதிரி மயக்கமாகி விடுவார். இந்த நிலை தலையில் தேங்காய் உடைக்கும் பொழுதுகூட நிகழலாம்.

இதன் காரணமாக ரத்தக் குழாய் உடைந்து கட்டி ஏற்படலாம். இது உடனேயும் நடக்கலாம். தாமதமாகவும் ரத்தக் கட்டி வரலாம். இது உயிருக்கே ஆபத்தில் முடியக் கூடும், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் பிற்காலத்தில் இழுத்துச் செல்லலாம் என்று நரம்பியல் மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/85337.html#ixzz39iQKyP13

தமிழ் ஓவியா said...

வரலாற்றில் திரிபுவாதம்!


திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் (5.8.2014) சிறப்பு வாய்ந்ததாகும். வரலாற்று நோக்கும் அதன் திரிபும் எனும் தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் அது.

கூட்டத்தில் கூறப்பட்ட அத்தனைக் கருத்துகளும், தகவல்களும் கருத்து என்னும் கண்களில் ஒத்திக் கொள்ளத்தகுந்த ஒளிமுத்துக்கள்.

இந்தியாவின் வரலாறு என்பது வேத நாகரிகம் என்பதைச் சாதிக்கப் பார்க்கும் போக்கு இருந்தது; உண்மை வரலாறு என்பது காவிரிக் கரையில் தொடங்கப்படவேண்டும் என்ற குரல் அண்மைக் காலமாகத்தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய மேனாள் டில்லிப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் டி.கே.வெங்கட சுப்பிரமணியன் தெரிவித்த கருத்து முக்கியமானது.

வேதகால பிராமண நாகரிகம் இந்து நாகரிகமாக மாற்றப்பட்டது எப்படி என்பது சிந்தனைக்கு விருந்தளிக்கக் கூடியதாகும். வேத காலத்தில் மாட்டுக் கறியை ஆரியர்கள் உண்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு; இன்றோ பசுப் பாதுகாப்புப்பற்றிப் பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். புத்த மார்க்கத் திற்குப் பிறகுதான் ஆரியர்கள் தங்கள் உணவில் மாற்றம் செய்துகொண்டனர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஓர் வரலாற்று உண்மையை எடுத்துரைத்தார்.

வரலாறு என்பது உண்மையின் அடிப்படையிலா னது. புராணம் என்பது அத்தகையதல்ல - கற்பனை மயமானது. இரண்டையும் குழப்புவது ஆபத்தானதாகும்.

ஆனாலும், இந்திய வரலாறு என்பதற்கு கற்பனை வண்ணம் தீட்டி ஆரிய வரலாறாக மாற்றிட பல காலமாக முயன்று வருகின்றனர்.

சிந்துச் சமவெளி நாகரிகம் - திராவிடர் நாகரிகம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். கடந்த பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் கணினிமூலம் திராவிடர்களுக்குரிய எருதினை ஆரியர்களுக்குரிய குதிரையாக மாற்றிக் காட்டவில்லையா?
தொல்பொருள் துறை ஏற்காத சரஸ்வதி நதி என்பது உண்மையானது என்று சாதிக்க முற்படவில்லையா?

இப்பொழுது மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு வரலாற்று ஆய்வுக் கழகத்திற்கு யாரை நியமித்துள் ளது? எல்லப்ப பிரகத சுதர்ஷன் ராவ் என்பவர்; இவர் யார் என்றால் ஆர்.எஸ்.எஸ்-இன் துணை அமைப் பான அகில் பாரதீய இதிஹாஸ் யோஜனாவின் (இந்திய வரலாற்றுப் பாதுகாப்பு) ஆந்திர மாநிலத் தலைவர் ஆவார்.

இந்தியாவில் உள்ள வரலாற்றுப் பேராசிரியர்கள் யார் இந்த ராவ் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். காரணம், வரலாற்றுப் பேராசிரியர்கள் இவரைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு வரலாற்றுத் துறையில் எந்த சாதனையையும் செய்யாதவர் - குறிப்பிடத்தக்க அளவில் எந்த வரலாற்று நூலையும் எழுதாதவர். இவ ருக்குரிய ஒரே தகுதி நாக்பூரிலிருந்து (ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பீடத்திலிருந்து) வரும் ஆணைகளை அடியொற்றி அட்டியின்றி நிறைவேற்றுவதுதான்!

தமிழ் ஓவியா said...

சிறப்புச் சொற்பொழிவாளரான திரு.டி.கே.வெங்கட சுப்பிரமணியன் அவர்கள் ஒரு கருத்தை அழகாகச் சொன்னார். அயோத்தியில் ராமன் பிறந்ததாகச் சொல் கிறார்களே - தொல்.பொருள் துறையின் ஆய்வுப் படி அந்தப் பகுதியில் 800 ஆண்டுகளுக்குமுன் மனிதர்கள் இருந்தார்கள் என்பதற்கான எந்தவிதத் தடயமும் கிடைக்கப் பெறவில்லை என்று கூறினார். அமெரிக்க அய்க்கிய நாட்டிலிருந்து கொண்டு இந்தியாவின் வரலாற்றை தங்கள் மனப்போக்கிற்கு ஏற்ப திரித்து எழுதுவோரையும் ஒரு பிடி பிடித்தார் பேராசிரியர் வெங்கட சுப்பிரமணியன்.

திராவிடர் இயக்கத்தைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம் இம்மூன்றும் அதன் முக்கிய கோட்பாடுகளாகும். எதையும், அது வரலாற்றுப் பிரச்சினையானாலும் பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்கவேண்டும். பகுத் தறிவிற்கு ஒத்துவராத எதையும் நிராகரித்தே ஆக வேண்டும் - விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

கடந்த முறை பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது, அவர்கள் என்ன செய்தார்கள்? பாடத் திட்டங்களி லிருந்து அவர்களுக்குப் பிடிக்காத, ஒத்துவராத பகுதி களை நீக்கச் செய்தார்கள் - அதனையும் தெளிவாக எடுத்துக் காட்டினார் பேராசிரியர் வெங்கட சுப்பிர மணியன்.

வரலாற்றைத் திரிபுக்கு உட்படுத்த முயலும் இந்தக் காலகட்டத்தில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கு இருக்கக்கூடிய முக்கியமான மேலான கடமையை, பொறுப்பை மய்யத்தின் புரவலர் மானமிகு டாக்டர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மய்யத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், புரவலர் தெரிவித்த கருத்தினை முழுமையாக ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே சமுதாய மாற்றத்திற்கான - ஜாதி - தீண்டாமைக்கு எதிரான முதல் போராட்டம் தந்தை பெரியார் முன்னின்று நடத் திய வைக்கம் போராட்டமாகும். அதனை எப்படி யெல்லாம் வரலாற்றில் மறைக்கிறார்கள் என்று மய்யத் தின் புரவலர் சுட்டிக்காட்டியது கவனத்திற்குரியதாகும்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், நேற்றைய சிறப்புக் கூட்டம் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கக் கூடியது என்பதில் அய்யமில்லை.
பி.ஜே.பி. ஆட்சியில் வரலாற்றைப் புரட்டும் வேலைகள் வேகமாக நடக்கலாம்; அதனை எதிர் கொள்ளும் சக்தியை தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண், இந்தியத் துணைக் கண்டத்திற்கே கொடுக்கும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page1/85340.html#ixzz39iQY4Gvf

தமிழ் ஓவியா said...


தொழிலாளி அன்று - பங்காளியே!



தொழிலாளி, முதலாளி தன்மை முறை இருக்கவே கூடாது. தொழிலாளர் சங்கம் என்கின்ற பெயரும் இருக்கக்கூடாது. ஒரு தொழிற்சாலைக்கு அங்கு வேலை செய்பவர்கள் பங்காளிகள் அல்லாமல், கூலிக்காரர்களாக இருப்பது என்பது முட்டாள்தனம், மானமற்றதனம் ஆகும்.
_ (குடிஅரசு, 6.7.1946)

Read more: http://viduthalai.in/page1/85339.html#ixzz39iQhzuye

தமிழ் ஓவியா said...


கல்வியில் மதவெறி பிரகாஷ் காரத் எச்சரிக்கை

கொல்கத்தா, ஆக. 6_- நாடு முழுவதும் மதவெறி வன்முறை அபாயம் நிறைந்த அரசியல் சூழலை உருவாக்குவதில் ஆர்எஸ் எஸ் அமைப்பின் ஆலோ சனையோடு நரேந்திர மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.கல்வித்துறையிலும் சங்பரிவாரம் வெகுவேகமாக ஊடுருவி வருகிறது என் றும் அவர் சாடினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மேற்குவங்க மாநிலக் குழு கூட்டம் கொல்கத் தாவில் முசாபர் அகமது பவனில் வெள்ளியன்று துவங்கியது. இக்கூட்டத்தில் பங் கேற்று உரை நிகழ்த்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், ஆர்எஸ் எஸ் அமைப்பின் அறிவுரை யோடு மோடி அரசு மேற் கொண்டுள்ள மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக தத்துவார்த்தப் போராட்டத்தை தீவிரப் படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று கட்சியின் அணிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

ஒருபுறம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத வெறி பதற்றத்தை உருவாக் குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது; மறுபுறம் ஆர்எஸ்எஸ்சின் அறிவுரைப்படி கல்வித் துறையை மதவெறிமயமாக் கும் நடவடிக்கையும் துவங் கியுள்ளது. இன்றைக்கு இந்திய வரலாற்றியல் ஆய்வு நிறுவனத்தின் மிக உயர்ந்த தலைமைப் பொறுப்பில் அமர்ந்துள்ள ஒரு நபர், எந்தவிதமான வரலாற்று ஆய்வுப் பின் புலமும் இல்லாதவராக இருக்கிறார்; அதுமட் டுமல்ல அவர் இந்தியாவின் கேடுகெட்ட சாதிய கட்ட மைப்பை தீவிரமாக ஆதரித்தும் பேசுகிறார் என பிரகாஷ் காரத் சாடினார்.

மதவெறி சித்தாந்தத் திற்கு எதிரான தத்து வார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரி சக்திகளும் முன்னணிப் பங்கு வகிக்க வேண்டும் எனக்குறிப்பிட்ட அவர், இத்தகைய போராட்டத்தில் பல்வேறு இடதுசாரி கட்சிகளையும், இடதுசாரி தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஏராளமான தனிநபர்களையும் ஒருங் கிணைக்கும் வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் எனக்குறிப் பிட்ட பிரகாஷ் காரத், ஒட்டுமொத்த இடதுசாரி சக்திகளின் ஓர் உறுதியான ஒற்றுமையே இன்றைய உடனடித் தேவை என்றும் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்துறையில் மோடி அரசு எந்தப் பாதையில் செல்கிறது என்பது தெள்ளத்தெளி வாக வெளிச்சத்திற்கு வந்து விட்டது எனத்தெரிவித்த பிரகாஷ் காரத், இன் சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் வரம் பை அதிகப்படுத்துவதன் மூலமாக அத்துறையை நாசமாக்குவதில் தீவிரமான முனைப்போடு இறங்கி யுள்ள மோடி அரசு, ஏற்கெனவே ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை சீரழிக்கவும் முடிவு செய்துவிட்டது ; ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க் கவும் துவங்கிவிட்டார்கள்; பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகளை வெறும் 51 சதவீதம் என்ற அளவிற்கு குறைத்து கிட்டத்தட்ட சரிபாதி அளவிற்கு தனியார்மய மாக்க முயற்சி மேற்கொண் டிருக்கிறார்கள்; நாட்டின் அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் திருத்தவும் சீர்குலைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என மோடி அரசின் தேச விரோத நடவடிக்கைகளை பிரகாஷ் காரத் பட்டிய லிட்டார்.

இத்தகைய நடவடிக்கை களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும், அதை எதிர்த்து பெரும் போ ராட்டங்களை நடத்தவும் வர்க்க, வெகுஜன அமைப்பு கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என அழைப்பு விடுத்த பிரகாஷ் காரத், சமூகத்தின் பல்வேறு பிரிவு களைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளையும் அவர்களி டையே எழும் கோரிக்கை களையும் மய்யப்படுத்தி போராட்டங்களுக்கு திட்ட மிடவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத் தார்.இரண்டு நாட்கள் நடைபெற்ற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழு கூட்டத்தில் மாநிலச் செய லாளர் பிமன்பாசு உள் ளிட்ட தலைவர்கள் பங் கேற்றனர். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்க நாளாக கடைப் பிடிப்பது என்றும், அன் றைய தினம் மேற்குவங்கம் முழுவதும் அனைத்து நகரங்கள் மற்றும் கிரா மங்களிலும் பத்து நிமிடம் மனிதச்சங்கிலி இயக்கத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேற்குவங்கத்தில் மத்திய அரசின் மதவெறி மற்றும் நாசகர பொருளாதார நட வடிக்கைகளை எதிர்த்தும், மாநிலத்தில் ஆளும் மம்தா அரசின் ஜனநாயக விரோத ஆட்சியை எதிர்த்தும் இயக் கங்களையும் பிரச்சாரத் தையும் தீவிரப்படுத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டது.

Read more: http://viduthalai.in/page1/85317.html#ixzz39iRFPhFy

தமிழ் ஓவியா said...

பின்லாந்தில் பெரியார் பன்னாட்டு மய்யம்

ஏற்கெனவே ஒரு திருமணம், மணமகள் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர்; மணமகன் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர். சிதம்பரத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு, நான் செல்ல முடியாத காரணத்தினால், நம்முடைய அறிவுக்கரசு அவர்களை அனுப்பினேன். அவர்கள் அந்த மணவிழா வினை நடத்தி வைத்தார். அந்த மணமக்களும் பின்லாந்தில் பணியாற்றுபவர்கள்தான். இன்னும் ஏராளமான நண்பர்கள் பின்லாந்தில் இருக்கிறார்கள். மணமகன் இங்கே பேசிக் கொண்டிருக்கும்பொழுது சொன்னார், நாங்கள் பின்லாந் திற்குச் சென்றதும், பெரியார் பன்னாட்டமைப்பை உருவாக் குவோம்; அதுதான் மிக முக்கியம் என்று சொன்னார்.

பெரியார் தத்துவம் என்பது, நமக்கு மட்டுமல்ல; இந்த ஊருக்கு மட்டுமல்ல; இந்த சமுதாயத்திற்கு மட்டுமல்ல; எங்கெல்லாம் சமூக அநீதி இருக்கிறதே, எங்கெங்கெல்லாம் மூட நம்பிக்கைகள் இருக்கிறதோ, எங்கெங்கெல்லாம் வாய்ப்பற்ற மக்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் பூக்கும், வளரும் என்பதற்கு அடையாளமாகும்.

Read more: http://viduthalai.in/page1/85313.html#ixzz39iT2CabI

தமிழ் ஓவியா said...

திருமணத் தடை

சென்னை தாம்பரம் - காஞ்சிபுரம் சாலையில் உள்ள முடிச்சூர் பிரம்ம வித்யாம்பிகை ஆலயத்தில் கொடுக்கப்படும் கொம்பு மஞ்சளை அம்பிகையின் சன்னிதியில் கட்டி பிரார்த் தனை செய்தால் திருமணத் தடை விலகும்.

திருமண தடை உள்ள வர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் உள்ள நாழிக் கிணற்றில் நீராடி, பின்னர் கடலில் குளித்து செந்தூரானை வணங்க வேண்டும். தொடர்ந்து அங்குள்ள வள்ளி குகையை தரிசித்தால் திருமணத் தடை நீங்கும்.

மதுரை - சோழவந்தான் சாலையில் பதினாறு கரவன துர்க்கை ஆலயம் உள்ளது. இந்த அம்மனுக்கு பூமாலை அணிவித்து, அதை பிர சாதமாகப் பெற்று அணிந்து, வீட்டில் வைத்து பூஜித்து வந்தால் விரைவில் திரு மண பாக்கியம் கிட்டும்.

கடவுள் என்ன திரு மணப் புரோக்கரா? திரு மணத் தடை என்று சொல் லப்படுகிறதே - அந்தத் தடையைப் போட்டவர் யாராம்?

Read more: http://viduthalai.in/page1/85272.html#ixzz39iUS7l7O

தமிழ் ஓவியா said...


தீராது


பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கிய மான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page1/85264.html#ixzz39iUdICmu