Search This Blog

3.12.12

திராவிடர் தலைவர் வீரமணி வாழ்க!


திராவிடர் இயக்கத்தின் நூற்றாண்டு விழா ஆண்டு இது. திராவிட இயக்கம் கண்ட தலைவர்கள் எல்லாம் செல்வச் சீமான்கள். உப்பரிகையிலே உல்லாசமாகக் கவலையின்றி செல்வ வாழ்க்கை வாழும் சிறப்புப் பெற்றவர்கள். நடேசனார், தியாகராயர், டாக்டர் நாயர் தந்தை பெரியார் என்று அவ்வியக்கத் தலைவர்கள் எல்லோரும் வாழ்வும் வசதியும் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் ஒன்றே ஒன்றைப் பற்றி மட்டும் சிந்தித்தார்கள். தங்கள் இனம் - திராவிட இனம் விடுதலை பெற வேண்டும். வாழ்வில் கல்விச் செல்வம் பெற்று ஒவ்வொரு திராவிடனும் உயர வேண்டும் என்பதை மட்டுமே.
திராவிடம் திராவிடர்
திராவிடம், திராவிடர் ஆகிய சொற்கள் வெற்றுச் சொற்கள் அல்ல. வெறும் காற்றடைத்த பலூன்கள் அல்ல. இவற்றின் உண்மைப் பொருளைப் புரிய வேண்டியவர்கள் புரிந்தார்கள். ஆனால் புரியாத சிலதுகள் - அல்லது புரிந்தும் புரியாதது போல் நடித்த சிலர் - அவர்கள் நேற்று மழையில் முளைத்த காளான்கள்.
கொச்சைப்படுத்தினர்
திராவிடர் என்ற சொல்லைக் கொச்சைப்படுத்திக் கொக்கரித்தார்கள். ஆரியமாவது, திராவிடமாவது அத்தனையும் மாயை., பொய்யுரைத்த கற்பனை என்ற கோணல் புத்திக்காரர்கள் தாம் அந்தக் குறுகிய மனம் படைத்த விமர்சகர்கள்.
அவர்களுக்குப் பதில் சொல்ல, அவர்களிடம் படிந்துள்ள அறியாமைப் பேயை வேப்பிலை அடித்து விரட்டத் தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்து செல்வம் நம் தலைவர் வீரமணி அய்யா போய் விட்டாரே, ஆதரவற்ற அனாதையாகி விடு வோமோ என்று திராவிடர் கலங்காமல் துணிவுடன் தொடர்ந்து நடை போடக் கிடைத்த மிகப் பெரிய சொத்துதான் ஆசிரியர் கி.வீரமணி -_ தமிழர் தலைவர்.
காலம் அவருடைய தொண்டறத் திற்கும், தூய கலப்பில்லாத திராவிட இனத் தொண்டிற்குத் தொண்டறத் திற்கு அளித்த பரிசுதான் தமிழர் தலைவர். எனும் தனிச் சிறப்பு மிக்க பட்டம்.
இப்பட்டம் பெற அவரைத் தேடி வர எண்பதாண்டுக் கால வாழ்வில் ஏறக்குறைய எழுபதாண்டுக் காலத் தன்னலமற்ற  தகைசான்ற, பொது வாழ்வு. அவர் உயர்ந்தார் படிப்படியாக உழைப்பு அவருக்குக் கை கொடுத்தது. உழைப்பென்றால் சாதாரண உழைப் பல்ல. அப்படி இப்படி என்று அப் பழுக்கில்லாத எந்தவிதப் பிரதிபலனும், ஒன்று, எதிர்பாராமல் உழைத்த உழைப்பு அவரை உயர்த்தியது.
பயன் கருதாப் பணி
அரசியல் களத்தில் போட் டியிட்டு அமைச்சர் பதவி பெற வேண்டும் என அவர் உழைப்பைச் சிந்தவில்லை. ஆனால் தமிழ் மக்களின் வாழ்வு மேம்படத் தன்மானத் தோடு, அறிவோடு வாழத் தந்தை பெரியார் இட்ட கட்டளை வழியேதான் உழைத்தார். அய்யா கிழித்தகோட்டைத் தாண்டாத உழைப்புத்தான் அவரை ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இதயச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து, இதோ ஒரு மனிதர் என்றும் எவ்வித நன்றியையும், எதிர்ப்பலனையும் பாராமல் நம் நலன் காக்க இருக்கிறார் என்றும் காட்டியது.
எவ்வளவோ சாதனை
அதன் பயன்தான் தமிழர் நலனுக்கு எத்தகைய ஆபத்து எவரால் வந்தாலும் எதிர்த்துக் கடமையாற்றும் துணிவைத் தந்தது. இடஒதுக்கீடா - அதில் எம்.ஜி.ஆர்.அரசு பொருளாதார அளவு கோல் நுழைப்பா - 69 விழுக்காட்டிற்கு ஆபத்தா _- அனைத்து மக்களும் அர்ச்ச கராகும் சட்டம் நிறைவேற்றத் தடையா _- காவிரி நீருக்குக் கருநாடகத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டுமா - _ கருப்பு நிலக்கரி - பழுப்பு நிலக்கரி, பெட்ரோல் எதற்கும் இராயல்டி வேண் டுமா _ கலப்பு மனத்திற்குத் தடையா - எல்லாவற்றிற்கும் குரல் கொடுக்கத் தன் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் உழைக்க ஒரு மா மனிதராக வீரமணி எனும் வெற்றிமணி முன்வந்தார்.
பெரியார் இல்லை, அன்னையார் இல்லை
தன்னை வழி நடத்திய பெரியார் இல்லை - ஆனால் அவருடைய கொள் கைகள் உண்டு. தாயன்பு காட்டிய அன்னை மணியம்மையார் இல்லை . ஆனால் அவர் அன்பு மகனே என்று விளித்து வரைந்த கடிதங்கள் உண்டு. எனவே அவர்கள் விரல்கள் சுட்டிய பாதையை விட்டு எவ்வித ஆசா பாசங்களுக்கும், அடக்குமுறை எதிர்ப்புக் கணைகள், ஏச்சுக்கள் பேச்சுக்கள் இழி மொழிகள் - பழிச் சொற்கள் எதற்கும் கவலைப்படாமல் இரண்டுக்கும் மேற்பட்ட முறைகள் எதிரிகள் உயி ருக்கே உலை வைக்க முயன்ற போதெல் லாம் தப்பிப் பிழைத்து அறுபதுக்கும் மேற்பட்ட முறை போராட்டங்களில் கைது ஆகிக் காரர்க்கிரகத்தில் அடைக்கப்பட்ட போதும் தளர் வடையாமல் உழைக்கும் உள்ளத்திற்குச் சொந்தக்காரராய் இருக்கிறார்.
வாழ்விணையர்
தான் மட்டும் அல்லாமல் - தன் வாழ்விணையரையும் தமிழ் மக்கள் வாழ்வு சிறக்க அவ்வப்போது அழைத் துச் செல்லும் பாங்கிளை அவரிடத்தில் காண்கிறோம். அதன் அடையாளம் தான் கடந்த செப்டம்பரில் காவிரி நீருக்காகக் கருநாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் கொடுக்காதே என்று போராட்டம் வகுத்து நெய்வேலியில் வாழ்விணையர் மோகனா அம்மை யாருடன் கைது செய்யப்பட்டுக் கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த காட்சி கண்டோம்.
திராவிடர் தலைவர் என்றது ஏன்?
திராவிடர் தலைவர் என்று வீரமணி அவர்களை விளித்தது ஏன்? திராவிடர் என்ற சொல்லுக்குப் பெரி யார் அளித்த பொருள் விளக்கத்தின் (ஞிமீயீவீஸீவீவீஷீஸீ) அடிப்படையில்தான். தமிழர் தலைவரே பல முறை திராவிடர் என்றே கூறுங்கள் என்று கூறியிருக் கிறார். மக்கள் தொகைக் கணக்கு எடுப்பின் போது திராவிடர் என்றே கூறுங்கள், தமிழர் என்றால் பார்ப் பனரும் அதில் புகுந்து கொள்வார்கள் என்று பசையான விளக்கம் அளித் திருந்தார் தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரை, கடவுட் கொள்கையை மறுக்கும் பார்ப்பனரைத் திராவிடர் என்றோ, இடஒதுக்கீட்டை ஏற்கிறோம் என்றோ சொல்லச் சொல்லுங்கள். எட்டுக்காத தூரம் ஓடி விடுவார்கள்.
67 ஆண்டுகளுக்குமுன்
திராவிடர் என்பதற்கு இன்றைக்கு 67 ஆண்டுகளுக்கு முன் 14.7.1945ல் தந்தை பெரியார் அளித்த பொருத்தமான விளக்கங்கள் நமக்கு என்றும் துணை நிற்கின்றன. இது பெரியார் 67 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் வீரமணியாக இல்லாமல், மாணவர் வீரமணியாக, திராவிடர் இயக்கத்துத் திருஞான சம்பந்தர் என்றுஅண்ணா அன்போடு விளித்த காலத்தில் உரியது. அன்று பெரியார் கேட்டவை இன்றும் கேட்கிறார்களே அதுபோல் தான்.
கேள்வியும் பதிலும்
பெரியார் கேள்வி கேட்கிறார் என்றால் பொருத்தமான பதிலும் சொல்லப் போகிறார் என்பதும் அதில் இருக்கும்.
இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர், திராவிடர் என்று சொல் லப்படுகிறது? இதுவரை இருந்து வருகிற பிரிவுகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல் லாம் நீங்கள் கேட்கலாம். அவற்றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரிய வேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளாவிட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குத் துவே ஷத்தையும் பேதத்தையும் உண் டாக்கக் கூடியதென்றும் சொல்லித் திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும் முயற்சி யையும் கெடுக்கப் பார்ப்பார்கள் இதுவே எதிரிகளின் வழக்கம்.
ஆசிரியரிடம் கேட்கப்பட்ட கேள்வி
இதைத்தான். இதே கேள்வியைத் தான் சமீபத்தில் பாலிமர் தொலைக் காட்சியில் நேர்முகத்தில் வினாத் தொடுப்பவர் ஏதோ மடக்கிப் பிடிப்பவர் போல் ஆசிரியரிடம் அதிரடியாகக் கேட்டபோது, கொஞ்சமும் அசராமல், கோபப்படாமல் அதே நேரத்தில் பொருத்தமான பதிலை அவரிடத்தில் கூற முடிந்தது என்றால் பெரியார் காட்டிய நெறி தெளிவாக அவரிடத்துப் பதிந்திருந்தது.
அது மட்டுமல்ல கலைஞர் தொலைக்காட்சியில் திராவிட இயக்கம் நூறாண்டு எனும் தலைப்பில் இருபது நாட்களுக்குமேல் தினமும் பத்து நிமிடம் என்ன சொல்கிறார்? எப்படிச் சொல்கிறார் வீரமணி என்று தொலைக் காட்சி பெட்டிமுன் வளர உட்கார வைத்துச் சிந்திக்க வைத்தாரென்றால் அது பெரியார் வழியில் பிறழாமல் நடைபோட்டதன் பயனே.
திராவிடம், திராவிடர் இதுதான்
பெரியார் திராவிடர், திராவிடம் என்பதற்குக் கொள்கைச் சாசனம் வகுத்துத் தந்திருக்கிறார். சிலர், இன்று கேட்பதுபோல் ஆந்திரா ஆதரிக்க வில்லை, கர்நாடகம் காது கொடுக்க வில்லை, கேரளம் கேட்கவில்லை, இன்னும் ஏன் திராவிடம் என்று கேட்பார்கள் என்று தெரிந்து பெரியார் அன்றே விளக்கம் கொடுத்து விட்டார்.

இதை ஏன் இங்கே சொல்கிறோம் என்றால் திராவிடத்தால் பயன் பெற்றுத் திராவிடத்தால் கல்வி கற்றுத் திராவிடத்தால் அறிவு வைத்துத் திராவிடத்தால் தன்மானம் பெற்றுத் திராவிடத்தால் பட்டம் பதவி உயர்வு பெற்ற சிலர் தங்கள் முன்னிருந்த நிலை உணராமல் திராவிடத்தால் வீழ்ந் தோம். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கீரல் விழுந்த அந்தக் கால கிராமபோன்பிளேட்டுகள் போல் பார்ப்பன ஊடகங்கள் அளிக்கும் விளம்பரத்தால் பகர்கின்றனர். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லப் பெரியார் சொன்னவற்றை எடுத்துச் சொல்லி அறிவுத் தெளிவு ஏற்படுத்தத் திராவிடர் தலைவர் வீரமணி ஒருவரால் மட்டுமே முடியும்.
பயன்தான் அதனால்
பெரியார் சொன்னாரே, திராவி டர் என்ற நினைவில்லாததால் நமக்கு என் கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் கற்ற நினைவு நமக்கு இல்லாததால்தான்  நாம் 4ஆம், 5ஆம் ஜாதியாய், சமுதாயத் திலும் தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலிலும் ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச் சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும், நம் நாடு திராவிட நாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக் கான ஆண்டுகளாகவே இருந்து வருகிறோம் என்று அதைச் சொல்ல ஆசிரியர் வீரமணி ஒருவ ரால் மட்டுமே முடியும்.
குறிச்சொல்
முட்டுக்கட்டையிலிருந்து மீண்டும் தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச் சொல் வேண்டும் ஆரியன் திராவிடன் என்பது கலந்து போய்விட்டது. பிரிக்க முடியாதது. ரத்த பரீட்சை யாலும் வேறுபடுத்த முடியாதது என்றுசிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவோம். ஆரிய, திரா விட ரத்தம் கலந்து விட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட  கலாச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர் களுக்கு மாத்திரம், பிராமணன், சூத் திரன், பறையன், சக்கிலி, பிராமணரல் லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்து விட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? அறிவு கல்வி தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்து விட்டது? இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட் டாலென்ன? வாழ்வு, போக போக்கியும், உரிமை கலத்தல் வேண்டாமா?
திருவல்லிக்கேணி முதல் திருவரங்கம் வரை
இந்தக் கேள்விதான் திருவரங்கத்தில் பிராமணாள் ஒட்டல் என்று பெயர்ப் பலகையை எடுக்கச் சொல்லி, டிசம்பர் ஒன்றில் போராட்ட அறிவிப்பு வரும் என்று, 4.11.2012ஆம் திருவரங்கம் கூட்டத்தில் ஆசிரியர் முழங்கி நல்ல வேளையாக அந்த உணவு விடுதியே முடப்பட்டு, போர்க்களம் காணும் முன் னேமே வெற்றிச் செய்தி வந்து விட்டது.
திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச் சொல், லட்சியச் சொல்களும் எப்படி யாவது ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழி நிலை, முட்டுக் கட்டை, நிலை மாரி மேன்மை அடைய வேண்டும். ஆரியம் என்றால் மாற்றத் திற்கு இடமில் லாதது. திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப் பது என்பதுதான் உண்மைத் தத்துவ மாகும்.
சேலம் முதல் திருவரங்கம் வரை
இந்தச் சிந்தனைகள் எல்லாம் 11 வயது முதல் ஆசிரியர் படித்த பால பாடல்கள். நீதிக்கட்சியின் மாநாடு சேலத்தில் 1944ல் கூடியதும், நீதிக்கட்சி என்னும் பெயரைத் திராவிடர் கழகம் என்று அண்ணா பெயர் மாற்றத் தீர்மானத்தை, அண்ணாதுரை தீர்மானத்தை முன்மொழிந்ததுமான வரலாறு அதைக் குறித்து அறிந்த அனைவருக்கும் தெரியும்.
11 வயதிலேயே
ஆனால் அன்று 11 வயதுச் சிறு வனாக 1944ல் திராவிடர் கழகம் எனும் அண்ணாவின் தீர்மானத்தை வழி மொழிந்து பேசியவர்களில் ஒருவர் தான் இன்றைய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் என்பதை எத்தனை பேர் அறிவார்கள்? 1944முதல் 2012 வரை 68 ஆண்டு கள் உருண்டோடி விட்டன. அம்மா நாட்டில் பேசிய, பங்கேற்ற தலை வர்கள் எவருமே இன்று இல்லை. அத்தீர்மானத்தை வழிமொழிந்த வீரமணி இருக்கிறார் நம்மிடையே இன்று தலைவராக என்பது நாம் எண்ணி எண்ணிப் பார்த்தும் பெருமை கொள்ளும் நிகழ்ச்சி.
எதிர்ப்புக் கணைகள்
பெரியார் வாழ்வில் எத்தனையோ கல்வீச்சுக்கள், காலணி வீச்சுக்கள், காளை மாடுகளை விட்ட சம்பவங்கள் ஏராளம். அவற்றில் ஒன்று இது. கர்நாடகத்தில் பேசுவதற்குப் பெரியார் சென்றார். வத்தல் நாகராஜ் (வாட்டல் நாகராஜ்) எனும் கன்னட வெறியர் தலைமையில் ஒரு கூட்டம், கூட்டத் தின் நடுவே, கன்னடத்தில் பேசச் சொல்லித் தந்தை பெரியாரை வற்புறுத்துகிறது. எனக்குக் கன்னடம் தெரியாது. தமிழ்தான் தெரியும். கன்னடத்தில் பேச முடியாது என்று பெரியார் உறுதியாகச் சொல்கிறார். நீங்கள்தான் பலிஜா நாயுடு, கன்னட நாயுடு ஆயிற்றே கன்னடத்தில் பேசினால்தான் ஆயிற்று என்று கலாட்டா செய்கிறார்கள்.
நன்மக்களே நான் கேளீது கேளி
பெரியார் அசைந்து கொடுக்க வில்லை. தமிழில்தான் பேசுவேன், தமிழில்தான் பேச முடியும் என்று உறுதியாக இருக்கிறார். தேவராஜ் அர்சு அவர்கள் தலையிட்டு எதிர்த்த வர்களை துரத்தினார் என்பது நிகழ்ச்சி. தந்தை பெரியார் ஒரு நாலு வார்த்தை கன்னடத்தில் நன் மக்களே! நான் கேளீது கேளி என்று விளித்திருந்தால் கூடப் போதும். அது அவரால்முடியும். அப்போது அவர்கள் பெத்தவரு உத்தமராகி என்று குரல் கொடுத்து ஓடி விட்டிருப்பார்கள்.
இதுபோல் ஒன்றல்ல பல எதிர்ப்புக்களைத் தாங்கி நின்றது போல் 68 ஆண்டுகளில் ஆசிரியர் கி.வீரமணி யும் தாங்கித்தான் திராவிட இயக்கத் தொண்டாற்றினார்.
விருகம்பாக்கத்தில் வீணர்கள் தொல்லை
கடந்த ஆண்டு  சென்னை விருகம் பாக்கம் காளியம்மன் கோயில் தெருவில் தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டம் 24.9.2011ல் நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினர், பா.ஜ.க.,வினர் ஆகியோர் திட்டமிட்டு வன்முறை, கலவரத்தில் கூட்டம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை தொடர்ந்து ஈடுபட்டனர். வெளியி லிருந்து கற்களைப் பல முறை கூட் டத்தில் வீசினர். பொதுக் கூட்டத்திற்குப் போடப்பட்டிருந்த குழல் விளக்குகளை உடைத்தெறிந்தனர். இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையில் தலைவர் அவர்கள் சுமார் முக்கால் மணி நேரத்திற்கு மேல் மனித நேயத்துடன் அதே நேரத்தில் ஆவேசமாகப் பேசினார். ஓடி ஒளிந்து விடவில்லை, பெரியாரின் இந்தத் தளகர்த்தர் செலவு கணக்குதான்.
தலைவர் குறிப்பிட்டார் ஒன்றைத் தெளிவாக இந்தக் கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொள் கின்றேன். நாங்கள் கறுப்புச் சட்டை அணிந்து கொண்டு வெளியே வரும்பொழுதே உயிரைத் துச்சமென மதித்து வந்துதான் நாள்தோறும் மக்களைத் திருத்த அவர்களை அறிவாளிகளாக்க  அவர்களுடைய வாழ்வு முன்னேறப் பாடுபட்டுக் கொண்டு வருகிறோம். நாங்கள் வீட்டை விட்டு வரும் பொழுதே திரும்பி வர மாட்டோம். சென்றால் செலவுக் கணக்கு. திரும்ப வீட்டிற்கு வந்தால்தான் வரவுக் கணக்கு என்றுதான் எங்கள் பொதுத் தொண்டை நாள்தோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார் என்றால் திராவி டர் தலைவர் என்பதில் எவருக்கேனும் அய்யமேற்படுமா?
தொலைநோக்கு
தந்தை பெரியாரிடத்துக் காணும் தொலைநோக்கு அவருடைய தலைமைத் தொண்டரான நம் தலைவரிடத்தும் படிந்திருக்கக் காண்கிறோம். இட ஒதுக்கீடுச் சிக்கல் ஆனாலும், இரண்டு ஜி அலைக்கற்றைப் பிரச்சினை ஆனாலும், இவற்றில் சூது இருக்கிறது, சூழ்ச்சி இருக்கிறது. ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்பதை எவரும் உணரும் முன் உணரும் ஆற்றல் படர்ந் திருக்கப் படிந்திருக்கக் காண்கிறோம்.
இந்தப் பிரச்சினையைப் பூதாகர மாக்கப் பூணூல் ஏடுகள் புகுந்து விட்டன என்று உணர்ந்து முதன் முதலாக இது புஸ்வாணம்தான் என்று ஓராண்டிற்கு முன்னாலே தியாகராயர் அரங்கில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து பத்திரிகையாளர் பன்னீர்செல்வம், பகுத்தறிவுப் பாசறைப் பேராசிரியர் சுப.வீ., கலைஞர் தொலைக்காட்சி மேலாளர் ரமேஷ்பிரபா என்று விபரமறிந்தவர்களை வைத்து முதன் முதலில் விளக்கக் கூட்டம் போட்டு அன்றே வெளிச்சம் போட்டுக் காட்டியது இன்றுதான் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. அங்கே அவர் அரசியலைப் பார்க்கவில்லை. மனித நேயத்தைப் பார்த்தார்.

 திராவிடர் வராலற்றுஆய்வு மய்யம்
திராவிட இயக்க நூற்றாண்டு என்று பேச்சு எழும் முன்னே இவருடைய மண்டைச் சுரப்பில் உதித்ததுதான் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்.   வெறும் ஆரவாரப் பேச்சு என்றில் லாமல், அரங்கேறிப் பேசி விழாக் கொண்டாடி விட்டு விடாமல் ஆக்கப் பணியாய் இது தொடர வேண்டும் என் னும் தணியாத எண்ணம் அவருடைய மூளையில் உதித்தது பாராட்டும் செயல் வரிசையில் இடம் பெறத்தக்கது.
திராவிட இயக்க வரலாற்று மய்யம் தொடர்ந்து விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு வருவதைத் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் உற்று நோக்கிப் பாராட்டினார் என்று கேள்விப்படும்போது அந்தப் பாராட்டுக்கு உரியவர் ஆசிரியர் நம் திராவிடர் தலைவர் தான் என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் ஒப்புக் கொண்டு, அந்த எண்பது வயது இளைஞரின் ஆற்றல் இன்றுபோல் என்றும் தொடர அவர் உடல், நலனைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பணிவோடு வேண்டுகோள் விடுப்பதோடு நாமும் அதற்கு உறுதுணையாக இருப்போம் என ஒவ்வொரு வரும் உறுதிமொழி  ஏற்றுக் கொள்வோம்.
----------------- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்--”விடுதலை” 1-12-2012

3 comments:

தமிழ் ஓவியா said...


வீழ்ந்துவிடும்


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும். (விடுதலை,20.9.1964)

தமிழ் ஓவியா said...


பெண்மையைப் போற்றும் பெருமகன்!


- திருமகள்

எனக்கு அமைந்த முதல் ஊர்தி வாழ்விணையர் அவர்கள்தான். அந்த ஊர்தி இருக்கிற காரணத்தால்தான் எனது இலட்சியப் பயணம் தடையில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது.

எங்களுடைய தேனிலவு எல்லாம் தந்தை பெரியாருடைய பிரச்சாரப் பயணமே தவிர வேறு எதுவும் கிடையாது.

நானோ ஒரு காட்டுச் செடி போல இருந்தவன். அவர்களோ குரோட்டன்ஸ் செடி போன்றவர்கள்.

நான் எவ்வளவு துன்பத்தைத் தாங்குகிறேனோ அந்த துன்பத்தை அவர்கள் தாங்கித் தாங்கிப் பழக்கப்படுத்தும்படியாக ஆக்கப்பட்டு விட்டோம் என்பது இருக்கிறதே அப்படிப்பட்ட ஒரு நல்ல சமுதாய நலம் உள்ள ஒருவரை தந்தை பெரியார் எனக்கு அடையாளம் காட்டினார் என்று சொன்னால் பணி தொடருவதற்கு காரணமாக இருக்கிறது என்று சொல்லி இந்த நேரத்திலாவது நான் என் இணையருக்கு நன்றி காட்ட வேண்டும் என்ற தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் வரிகளைப் படித்ததும் ஒரே பூரிப்பாயும் இன்பமாயும் இருந்தது. (நன்றி: விடுதலை நாளிதழ் 24.8.95)

அன்றையக் காலத்தில் பெண்ணே பெண்ணைப் புகழ்ந்தாலும் ஆடவர் யாராவது வேறொரு பெண்ணைப் புகழ்ந்தாலும் பெண் வர்க்கம் சகித்துக் கொள்ளாது என்ற நிலைமை இருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு பெண்கள் பொறுமையின் சிகரம் என்று வர்ணித்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு பொறாமையின் உருவமாக வும் இருந்தார்கள். ஆனால் இன்று பொறுமையும் அவளை விட்டுப் போய்விட்டது; பொறாமையும் போய்விட்டது என்றே கூறலாம். காரணம் இன்று பகுத்தறிவுப் பகலவன் வித்திட்ட விழிப்புணர்வால் ஆணுக்குச் சரிநிகராக வந்துவிட்டாள். இருந்தா லும் இன்றும் அவளிடம் ஒரு ஏக்க உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.

தான் செய்த செயல்கள் சரியா? சரியற்றதா? தானே அதற்கு மதிப்பெண்கள் போடுவதைக் காட்டிலும், தனக்குகந்தவர்கள் மதிப்பளிப்பதில் தான் மகிழ்ச்சியும் மனநிறைவும், மேன்மேலும் தன்னை அச்செயலுக்கு ஈடுகொடுக்க ஆயத்த மாகும் நிலை உண்டாக்கும். இது நாடு நலம் பெறத் துடிக்கும் எல்லோர்க்கும் பொருந்தும்.

அடிமைப்பட்ட பெண்ணினம்; அடிவாங்கிய பெண்ணினம்; அச்சுறுத்தலுக்கு அடங்கிய பெண்ணினம்; இப்படி வாழ்ந்த இனம் இன்று நாடு நலம் பேண, துணைவனுக்கு துணையாய் இருந்து; தலைவனை தரணி போற்றும்போது, தலைவியை தலைவன் போற்றுவது பெருந்தன்மை நிறைந்த கடமை என்று எண்ணி இனமானக் காவலரின் பெருந்தன்மை நிறைந்த உள்ளுணர்வை போற்றிப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. திராவிடர் கழகத் தலைவரும் நம் குடும்பத் தலைவரும் விடுதலை நாளிதழின் ஆசிரியருமான மானமிகு கி. வீரமணி அவர்களின் பாராட்டுகள் அவரின் இணையர்க்கு மட்டும் கிடைத்தவையாக கருதவில்லை. பெண்ணினத்திற்கே கிட்டிய பாராட்டுகள் என்றே எடுத்துக் கொண்டு பெருமைப்படுகிறோம்.

எண்பதாம் அகவை விழா கொண்டாடும் இந்நாளில் மகளிர் சார்பில் பொங்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

தமிழ் ஓவியா said...


ஒரு துளிச் சந்தேகமும் இல்லை


- டாக்டர் கலைஞர்

எனக்கு, என்னுடைய ஆட்சிக்கு நான் எடுத்து வைக்கின்ற சாதனைகளுக்கு எதிர்ப்புகள் எங்கிருந்து தோன்றினாலும், அந்த நேரத்திலே மனம் சற்று சலிப்புறுமேயானால், அந்தச் சலிப்பை நீக்குகின்ற மாமருந்தாக எனக்குத் தோன்றுகின்ற இப்பெரியார் திடல், திருச்சியில் பெரியார் மாளிகை, வீரமணி அவர்களுடைய உருவம் இவர்களெல்லாம் நமக்காக இருக்கும்போது திராவிட இயக்கம் நம்மைப் பெற்றெடுத்த வீடு! திராவிட இயக்கம் நாம் தவழ்ந்து வந்திட்ட தாழ்வாரம்! திராவிட இயக்கம் நம்முடைய கைவேல்! திராவிட இயக்கம் நமக்குக் கவசம்! திராவிட இயக்கம்தான் உயிர்மூச்சு! திராவிட இயக்கத்தினுடைய முதல் போர்வாளாக, முதல் பாதுகாவலனாக, நமக்குத் திராவிடர் கழகம் இருக்கும்போது, நான் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்ற உறுதியை நான் எப்பொழுதும் பெற்றிருப்பவன்.

சில நேரங்களிலே சில அபிப்பிராயப் பேதங்கள் வரலாம். அந்த அபிப்பிராயப் பேதங்கள்கூடக் கொள்கை அடிப்படையிலே வந்ததே தவிர, உறவு அடிப்படையில் வந்தது அல்ல. கொள்கை அடிப்படையில் வந்ததென்றால், இந்தக் கொள்கையை எப்படி நிலைநாட்டுவது, எப்படி நடைமுறைப்படுத்துவது என்ற அந்த வழிமுறைகளிலே வேண்டுமானால், கருத்து வேறுபாடுகள் வரலாமே தவிர அந்தக் கொள்கையே சரியா? அல்லவா? என்று என்றைக்கும் எனக்கும், நம்முடைய வீரமணியார் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு வந்ததே கிடையாது. வரவே வராது. தமிழர்கள் அதை வரவும் விடமாட்டார்கள். அந்த அளவிற்கு இன்றைக்கு இந்த இயக்கங்கள் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு புறத்திலே சமுதாயப் பணிகளை ஆற்றிக் கொண்டு இன்னொரு புறத்திலே அரசியல் பணிகளைக் கவனித்துக் கொண்டிருக்கின்ற இரண்டு இயக்கங்கள் என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகம் சமுதாய இயக்கமாகவும் கொள்ளப்படும். திராவிடர் கழகம் அரசியல் இயக்கமாகவும் இயங்கும். இவை இரண்டுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இவை இரண்டினுடைய தாத்பர்யம் இவற்றின் மூலநோக்கம் திராவிடர்களை வாழ வைப்பது, திராவிடர்களை முன்னேற்றுவது, தமிழர்கள் சுயமரியாதைக் காரர்களாக என்றைக்கும் வாழ பாடுபடுவது, தன்மான சக்திகளாகத் தமிழர்கள் வாழவேண்டு மென்பதற்காகப் பாடுபடுவது என்பதுதான் இரண்டு இயக்கத்தினுடைய நோக்கங்கள் குறிக்கோள்கள். அந்தக் குறிக்கோள் நிறைவேறுமா? நடைபெறுமா? வெற்றி பெறுமா? என்று யாராவது எண்ணுவார் களேயானால், அதில் ஒரு துளிச் சந்தேகமும் இல்லை. அந்த ஒரு துளிச் சந்தே கமும் இன்றைய நிகழ்ச்சியை யாராவது உற்றுக் கவனித் தால் நிச்சயமாக நீங்கிவிடும். எனக்கு நீங்கிவிட்டது.

- (திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஆற்றிய உரையிலிருந்து, 11.11.2006)