Search This Blog

18.2.14

சம்பளத்தைப்பற்றி கவலைப்படும் தொழிலாளி பிறவி இழிவுபற்றி ஏன் கவலைப்படுவதில்லை?




நம்முடைய முயற்சிகள், தொழிலாளி - முதலாளி ஆகியோர் கூட்டாளிகள் என்கிற தான தன்மை ஏற்பட வேண்டும் என்பதற்கே. அதற்கு வன்முறைதான் சாதனம் என்பது அல்ல! அல்லது வேலை நிறுத்தம் செய்துதான் அந்த காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்ற தன்மை இருக்கக்கூடாது. வேறு முறை களைக் கையாள வேண்டும். முதலாளி களை மிரட்டுவது என்பதையே லட்சிய மாகக் கொண்டிருக்கக் கூடாது. முதலாளி முறை ஆட்சியிலுள்ள வரையில் முதலாளி களை நம்மால் ஒன்றும் செய்துவிட முடியாது. சில ஆயிரம் ரூபாய்கள் அவர் களுக்கு நஷ்டம் ஏற்படும்படி செய்வதால் அவர்கள் இணங்கிவிட மாட்டார்கள். கூட்டுக் கம்பெனிக்கு, ல்மிடெட் கம் பெனிக்கு முதலாளியே கிடையாது. நிர்வாகிகளோடு செய்யும் போராட்டம் கல்லிலே முட்டிக்கொள்வது போன்றதே யாகும். அவர்களோடு போராடுவதால், அவர்களுக்கு நம் மீது பழிவாங்க வேண் டும் என்ற எண்ணம் தான் தோன்றும். நம் கஷ்டங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண் டும் என்கிற புத்தி தோன்றாது. இது இயற்கை. இந்த இடத்தில் நமக்குதான் அதிகப் பொறுப்பும் சரியான வழியும் தேவையாக இருக்கின்றன.
அடிக்கடி சோஷலிஸ்டுகள் ரயில்வே பொது வேலை நிறுத்தம் என்று சர்க்காரை மிட்டுவதும், அதனால் தங்களுக்கு வசதியும், பெருமையும் சம்பாதித்துக் கொள்வதுமாய் இருக்கின்றனரே, இதைச் சர்க்கார்தான் மதிக்குமா? மற்றக் கட்சிகள் தான் மதிக்குமா? பொது மக்கள் தான் மதிப்பார்களா? மற்ற கட்சிகளுக்கு இது ஒரு பிஸினஸ் வியாபாரமாகப் போய் விட்டது என்பதாகத்தானே ஆகிவிட்டது! வேலை நிறுத்தம் முறை தொழிலாளி களுக்கு வெற்றி தரவில்லை என்பதை அனுபவ மூலமாக இந்த ஆண்டுகளில் உணர்ந்து விட்டோம்.
மற்றும் அடுத்தபடியாக இன்று பார்த் தால், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் பரஸ்பரம் நல்லுறவு என்பதே கிடையாது. ஒருவருக்கொருவர் துவேஷமும் வெறுப் பும் இல்லாதபடி நடந்து கொள்ள முடியவில்லை. தொழிலாளியை கண்டால் முதலாளிகள், மேலதிகாரிகள் உர் என்று இருப்பதும் மேலதிகாரிகளைக் கண்டால் தொழிலாளர்கள் கொடூரமாக இருப்பது மாகவே எங்கும் இருந்து வருகிறது. இந்த நிலை யாருக்கும் நல்லதல்ல நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் செல்வ வளர்ச்சிக்கும் கேடானது. ஒருவருக்கொரு வர் பரஸ்பரம் அன்பு, நல்லெண்ணம் இருக்க வேண்டும்; ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொள்ளக் கூடாது; கலவரத்தை உண்டாக்கி கொள் ளக்கூடாது; ரயிலில் இருப்பவர்கள் எங்கள் சிற்றப்பன், பெரியப்பனல்ல! எல்லாம் கடைந்தெடுத்த பார்ப்பனர்கள் தாம். பின் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கலவரத்தையும், வன்முறையும் நாமே பழக்கித் தந்தால், மக்கள் கதியும் நாட்டின் பொது நிலையும் என்னாவது?
மற்றும் சொல்கிறேன், தொழிலாளர் களுக்குள் நல்ல ஒற்றுமையும், கட்டுப் பாடும் வேண்டும். குறிப்பாக எடுத்துக் கொண்டால், தொழிலாளிகள் அனைவரும் ஒரே ஜாதி மக்கள் என்ற உணர்ச்சி வேண்டும். தொழிலாளிகள் என்றால் யார்? எல்லோரும் திராவிட மக்கள் தாமே! திராவிட மக்கள்தாம் உழைக்கும் மக்களாய், பாடுபடும் பாட்டாளிகளாய் இருக்கிறார்களே தவிர, எந்தப்பார்ப்பான் தொழிலாளியாய் இருக்கிறான்?
தொழிலாளர்களுக்காகப் பாடுபடு கிறோம் என்று சொல்கிறவர்களெல்லாம் இந்தச் சங்கதியை, பேதத்தை அதாவது திராவிட மக்கள்தாம் தொழிலாளிகள்; திராவிட மக்களாய் இருப்பதாலேயே சமுதாயச் சூழ்நிலையும், விதி, மத, சாத்திர முறையும் அவர்களைத் தொழிலாளியாக்கி வைத்திருக்கிறது. அதுபோலவே, பார்ப்பானாய் இருப்ப தாலேயே முதலாளி ஜாதி மகனாய், உட் கார்ந்து சாப்பிடும் வசதி வாய்ப்பு உடைய வனாய், சமுதாய நடப்பும், தன்மையும் இருக்கின்றன என்கிறதை யாரும் எடுத்துச் சொல்லவில்லை. சொல்லாததோடு மட்டு மல்ல. இந்த சங்கதி தொழிலாளி மகனுக் குத் தெரியக்கூடாது என்றும் நினைக் கிறார்கள்.
இதைப்பற்றி நாங்கள்தான் கவலை எடுத்துக்கொண்டு காரியம் செய்து வருகிறோம். ஏன்? இது உங்கள் நாடு; எங்கள் முதல்; தொழிலாளிகள் எங்கள் ஜாதி இவை மூன்றும் பார்ப்பனருக்குக் கிடையாது; அறவே கிடையாது.
திராவிட மக்கள் அனைவரும் தொழி லாளர்கள், திராவிட மகனாய் இருக்கிற தாலே அவன் தொழிலாளியாகவும்; பார்ப் பானாய் இருக்கின்றதாலே இன்னொரு வன் முதலாளியாகவும், முதலாளி ஜாதி யாகவும் இருக்கின்றான் என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள். இந்த பேதம் இருக்கக்கூடாது.

தொழிலாளிகளின் கவனம் வேலை நிறுத்தம் சம்பள உயர்வு, அடிதடி என்கிற பக்கத்திலே செலுத்தப் பட்டதே தவிர, இந்த பேதத்தை ஒழிக்கும் முயற்சியிலே திருப்பிவிடப்படவில்லை என்பதைத் திரும்பவும் கூறுகிறேன். உள்ளபடியே சொல்கிறேன். இந்த ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமாவது இந்த இன உணர்ச்சியோடு, பார்ப்பான் திராவிடர் என்ற உணர்ச்சி யோடு அதைப் பற்றிக் கவலை எடுத்துக் கொண்டு பாடுபட்டிருப்பார்களேயா னால், இந்நேரம் இந்த ரயிலே நமக்கு ஆகி இருக்குமே!
-------------------------------------தந்தை பெரியார் பொன்மலையில் 20.9.1952-இல் ஆற்றிய உரை

84 comments:

தமிழ் ஓவியா said...


பேராசிரியரின் இன முழக்கம்


- குடந்தைக் கருணா

திமுகவின் 10-ஆவது மாநில மாநாட்டினை துவக்கி பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையில், இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணை யற்ற சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரைப் பற்றி, இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், கூறிய கருத்துகள், சிறப்பானவை; இன்றைய கால கட்டத்திற்கு தேவை யானவை.

பெரியாரின் சுய மரியாதை இயக் கம் துவங்கி, அந்த உணர்வை நமக் குத் தரவில்லை என்றால், அண்ணா இல்லை; கலைஞர் இல்லை; நாமெல் லாம் இல்லை என்றாரே பேராசிரியர், அது அங்கே கூடியிருந்த லட்சோப லட்சம் தொண்டர்களுக்கு மட்டு மல்ல; தமிழகத்திலே வாழும் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களாக இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

பெரியாரின் சுயமரியாதை இயக் கம், இன விடுதலை, வர்ணாசிரம எதிர்ப்பு, மனித நேயம் அனைத்தும் மனிதனை, மனிதனாக ஆக்கும் செயல்பாடு என்பதை பேராசிரியர் வரிசைப்பட எடுத்துக்கூறி, மாநாட் டிற்கு ஒரு புதிய சிந்தனையை விதைத் தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்த லில், நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தைவிட, சமுதாய நோக்கில் தான் எனப் பேராசிரியர் கூறியது பதவியை நோக்கி மட்டும் கட்சியில் சேரும் பலருக்கும் ஓர் எச்சரிக்கை! தமிழ் நாட்டின் அரசியல் நட வடிக்கைகள், கட்சிகளுக்கிடையே யான போட்டியாக அல்லாமல் ஆரியர் திராவிடர் போராட்டமாகத் தான் நடைபெற்று வருகிறது.

அதனால் தான், திமுகவை அழித் திட ஊடகங்களும், பார்ப்பனர் களும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியை, தனது பேச்சின் மூலம், இனமானப் பேரா சிரியர் அன்பழகன், திமுகவின் தொண்டர்களுக்கு, குறிப்பாக, இளை ஞர்களுக்கு, வகுப்பு எடுத்தது போல், கூறியுள்ளார்.

பெரியாரின் சிந்தனைகளை நெஞ் சில் ஏந்தி, பேராசிரியரின் இன முழக்கம் செயல்படுத்திட இளைஞர் கள் திரளட்டும்.

Read more: http://viduthalai.in/page-2/75465.html#ixzz2tdADox97

தமிழ் ஓவியா said...


புகழ்ந்து பேசுவதுதான்



ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/75460.html#ixzz2tdAMBuy7

தமிழ் ஓவியா said...

திமுக நடத்திய திருப்புமுனை மாநாடு


திமுக தலைவர் மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்திருந்தபடி திருச்சி - திமுக 10ஆவது மாநில மாநாடு திருப்புமுனை மாநாடாகவே அமைந்து விட்டது என்பதில் அய்யமில்லை.

மாநாட்டு ஏற்பாட்டிலும் சரி, மக்கள் கூட்டத்தின் அளவிலும் சரி, உரையாற்றியோர் வெளிப்படுத்திய கருத்து மணிகளிலும் சரி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் சரி - திமுக மாநாடு ஒரு திருப்புமுனை மாநாடுதான் - வரலாற் றில் என்றென்றும் பேசப்படும் மாநாடுதான் என்பதில் எள் மூக்கு முனை அளவும் அய்யப்பாடு இல்லை - இல்லவே இல்லை.

தலைவர்களின் படங்களைத் திறந்து வைத்துப் பேசிய திமுக முன்னணியினர், சொற்பொழிவாளர்கள் காலக் கட்டுக் கோப்புக்குள் சிறந்த வகையில் மணி மணியான கருத்துக்களை ஒலித்தனர். தலைப்புகளில் பேசியவர்களும் அப்படியே!

மகா நாடுகளாக சென்னை மாநிலத்தில் நடந்தவற்றை மாநாடாக மாற்றி, மாநாடு நடத்துவது என்பதை ஒப்பரிய கலையாக வடித்துத் தந்த சாதனையும் திராவிடர் இயக்கத் திற்கு உரிய கைவண்ணம் - கருத்து வண்ணமும் ஆகும்.

1929 முதல் செங்கற்பட்டில் தந்தை பெரியார் அவர்களால் முன்னின்று நடத்தப் பெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாடு தொடங்கி, கடந்த சனி ஞாயிறுகளில் திருச்சியில் நடைபெற்ற மாநாடுகள் வரை - அவற்றின் திரட்சியை ஒன்று சேர்த்து, அதன் தீர்மானங்களைத் தொகுத்து, எடை போட்டுப் பார்த்தோமேயானால், அவை மிகப் பெரிய, வளர்ச்சிக்கும், தாக்கத்திற்கும், திருப்பத்திற்கும், விழிப்புணர் வுக்கும் அடித்தளமிட்டவை என்பது புரியும்.

மக்கள் மத்தியில் சிந்தனை வளர்ச்சிக்கு அறிவு ஆசானாக அவை அமைந்திருந்தன. அந்தத் தீர்மானங்கள் பிற்காலத்தில் மத்திய மாநில அரசுகள் சட்டங்களை இயற்றுவதற்கும் காரணமாக இருந்தன.

தமிழ்நாட்டின் உரிமைக்கு ஓங்கிக் குரல் கொடுத்துப் போராட்டங்களை தீட்டிக்கொடுத்த பட்டறையாகவும் அமைந்ததுண்டு. மக்கள் பிறவியில் ஏற்றத் தாழ்வு என்ற பிணியை ஒழித்துக் கட்டுவதிலிருந்து சமூகநீதி, பெண் ணுரிமை, சமதர்மம், சமத்துவம், இனவுரிமை, மண் உரிமை, மூடநம்பிக்கை தகர்ப்பு, தன்னுரிமை என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

தமிழ் ஓவியா said...

மாநாடு என்றாலே பேரணி இல்லாமல் இல்லை - அண்மைக் காலமாக அரசுகள் பேரணிகளை அனுமதிக் காதது ஜனநாயகத்தின் வேரில் வைக்கப்பட்ட வெடி குண்டாகும்.

இதற்கு உச்சநீதிமன்றம் வரை துணை போவதுதான் வேடிக்கை! அதே நேரத்தில் மதம், கோயில் சம்பந்தமான பேரணிகளுக்கு (குறிப்பாக பிள்ளையார் ஊர்வலம்) அனுமதி வழங்கப்படுவது, நாடு இன்னும் பக்குவமும், பகுத்தறிவும் அற்று இருக்கிறது என்பதற்கு அடையாளமாகும்.

திமுக மாநாட்டில் திமுக பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் ஆற்றிய உரை இன்றைய அரசியல் உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களுக்குத் தேவையான பகுத்தறிவு மூலிகையாகும்.

அரசியல் என்றாலே பதவிக்குப் போவது என்ற ஒரு குறுகிய வட்டத்தை அமைத்துக் கொள்வது வருந்தத் தக்கது. அது பதவி வெறியாகவும், அதிகாரத்தைப் போதை யாகவும் மாற்றக் கூடிய ஆபத்தான போக்காகும்.

திமுகவை தேர்தலில் ஈடுபடுத்த முடிவு செய்தபோது தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்த அண்ணா அவர்கள் வெளிப்படையாகவே சொன்னது; தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை, திராவிடர் கழகக் கொள்கைகளை ஆட்சியில் அமர்த்தி சட்டமாக்குவ தற்காகத்தான் என்று சொன்னார்; தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அண்ணா சொன்னதும் இந்தப் பொருளில்தான். இந்த வகையில் சென்னையில் - பெரியார் திடலில் (7.9.2010) திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றிய திமுக பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் குறிப்பிட்டிருந்ததை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகச் சரியான நேரத்தில் பொருத்தமாக திருச்சி திமுக மாநாட்டில் எடுத்துக் காட்டினார்.
நாட்டில் இருக்கிற அரசியல் கட்சிகளின் எண்ணிக் கையில் தி.மு.க.வும் ஒன்று என்று குறுக்கிட முயலுகின் றனர். அது தவறு, - சமுதாயக் கொள்கைகளை உள்ளடக்க மாகக் கொண்டது திமுக என்று பல நேரங்களில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துக் கூறி வந்துள்ளார்.

டெல்லியில் பெரியார் மய்யத் திறப்பு விழாவின் போதுகூட முதல் அமைச்சராக இருந்த நிலையில் கலைஞர் அவர்கள் திமுக தோழர்களுக்குக் கட்டளையே பிறப்பித்தார். கோயிலுக்குப் போவது - வாஸ்து பார்ப்பது திமுகவின் கொள்கையல்ல என்று குறிப்பிட்டாரே! (2.5.2010)

திருச்சி திருப்புமுனை மாநாடு அதனை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது நிலைப்படுத்தியிருக்கிறது. சமூக சீர்திருத்தம் மறுமலர்ச்சி - இந்த மாநாட்டில் முக்கியத்துவம் பெறும் என்று மாநாட்டுக்கு முன்னதாக எழுதிய (முரசொலி) கடிதத்தில் மானமிகு கலைஞர் அவர்கள் குறிப்பிட்டு இருந்ததையும் இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும்.

தி.மு.க. நடத்தும் பொதுக் கூட்டங்களில் பகுத்தறிவுப் பிரச்சாரம், சுயமரியாதைப் பிரச்சாரம், இனவுணர்வுக் கருத்துக்கள் உரிய அளவு இடம் பெறுவதை உறுதிப் படுத்துவதும் அவசியமாகும். பொதுவாக இன்றைய இளைஞர்கள் இவற்றிலிருந்து வெகு தூரம் விலகி இருப் பதைக் கவனத்தில் கொண்டால் இதன் அவசியம் தெளி வாக விளங்குமே!

Read more: http://viduthalai.in/page-2/75461.html#ixzz2tdAe2f2K

தமிழ் ஓவியா said...

தி.மு.க. திருப்பு முனை மாநாட்டில் முத்தான 15 தீர்மானங்கள்


ஈழத் தமிழர்ப் பிரச்சினை: அய்.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்திட வேண்டும்

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிடுக! ணி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்திடுக!

தி.மு.க. திருப்பு முனை மாநாட்டில் முத்தான 15 தீர்மானங்கள்

திருச்சி, பிப். 17- ஈழத் தமி ழர்ப் பிரச்சினை, தமிழக மீன வர்கள் பிரச்சினை, சேது சமுத் திரத் திட்டம் நிறைவேற்றம் உள்ளிட்ட 15 முக்கிய தீர்மா னங்கள் திருச்சி தி.மு.கழக 10 ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. அமைப்புச் செயலா ளர் டி.கே.எஸ்.இளங்கோ வன் எம்.பி. தீர்மானங்களைப் படித்தார். அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அவைகள் வருமாறு:-

தீர்மானம் : 1

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவீர்!

அறிஞர் அண்ணா அவர் களின் கனவுத் திட்ட மான சேது சமுத்திரத் திட்டம், தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த தன் காரண மாக, மத்திய அர சால் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் தொடங்கப் பட்டு நடைபெற்றுக் கொண்டி ருந்தபோது, உச்சநீதிமன்றத் தின் உத்தரவால் நிறுத்தி வைக் கப்பட வேண்டிய நிலை ஏற் பட்டுவிட்டது. உச்ச நீதிமன் றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டப் பணிகள் ஏற்கெனவே முடிவு செய்யப் பட்ட வழியில் தொடரலாம் என பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. தென் மாவட்ட மக்களின் முன் னேற்றத்திற்கான சேது சமுத் திரத் திட்டத்திலும் முன்னுக் குப் பின் முரணாக ஜெயலலி தா கருத்துக்களைச் சொல்லிக் கபட நாடகம் ஆடுகிறார். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும், 2004ஆம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக் கையிலும் - சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்திச் சொல்லிவிட்டு; தற்போது அந்தத் திட்டத்திற்கெதிராக ஜெயலலிதா அரசு உச்ச நீதி மன்றத்திலேயே மனுத் தாக் கல் செய்திருப்பது தென் மாவட்டங்களின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கும் இந்த மாபெரும் திட்டத்தை முடக்கி தமிழர்களுக்கு இழைக் கும் மாபெரும் துரோகமா கும். பிற்போக்குச் சக்திகளின் முயற்சி களை முறியடித்து, தாமதமாகி வரும் சேதுக் கால் வாய்த் திட்டத்தை விரைந்து செயல் படுத்தி முடித்திடத் தேவையான நடவடிக்கை களை மத்திய அரசு மேற் கொள்ள வேண்டுமென திரா விட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பாக, திட் டப் பணிகள் தொடங்குவ தற்குச் சாதகமாக பிரமாண வாக்கு மூலம் தாக்கல் செய் யப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கினை விரைவு படுத்தி முடித்து, சேது சமுத்திரத் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கிட இணக் கமான சூழ்நிலையை உரு வாக்கி, தென்னக வளர்ச்சிக் குத் துணை புரிய வேண்டு மென மத்திய - மாநில அரசு களை இம்மாநில மாநாடு வலியுறுத்து கிறது.

தீர்மானம் : 2

கச்சத்தீவு பிரச்சினை - தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மனுத் தாக்கல் செய்வதா?

இந்திய நாட்டின் இறை யாண்மைக்குக் கட்டுப் பட்ட கச்சத்தீவின் உரிமையை இலங்கை நாட்டுக்கு விட்டுக் கொடுப்பது சம்பந்தமான பிரச்சினை நாடாளுமன்றத் தில் முறைப்படி விவாதிக் கப்பட்டோ, அரசியல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டோ, அதன் பிறகு நிறைவேற்றப் பட்ட ஒப்பந்தம் அல்ல என் பதால் அது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், எனவே அந்த ஒப்பந்தம் செல்லாது என்றும் தெரிவிக்க வேண்டு மென்று டெசோ அமைப்பின் மூலமாகத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு, திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு உள்ளது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலே இருக்கும்போது, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப் பதைத் தடை செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன் றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமி ழக மீனவர்களின் மரபுரி மைக்கு மாறாக மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்தி ருப்பதை இம்மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது.


தமிழ் ஓவியா said...

தீர்மானம் : 3: ஈழத் தமிழர் பிரச்சினை: அய்.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடை பெற்ற தமிழினப்படுகொலை, மற்றும் இன அழிப்புக் கொடுமைகளைக் கண்டித்து அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மீண்டும் அமெரிக்கா வருகின்ற மார்ச் மாதம் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இப் பிரச்சினையில் இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வ தேச விசாரணை வேண்டு மென்று கடந்த 2009 முதல் உலகத் தமிழ்ச் சமுதாயமும், சர்வ தேச சமூகத்தின் பல் வேறு அமைப்புகளும் வலி யுறுத்தி வருகின்றன. கடந்த காலத்தில் இரண்டு முறை இலங்கைக்கு எதிரான தீர் மானத்தை அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெ ரிக்காவினால் முன்னெடுத் துச் செல்லப்பட்டு நிறைவேற் றப்பட்டது. இலங்கையில் நடை பெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரூன் இலங்கையில் நடந்த இனஅழிப்புக்கு சுதந் திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தி யுள்ளார். அதை பிரிட்டிஷ் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் என்று உறுதியளித் துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை, இலங்கை தமிழ்ச் சங்கம், அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல்பாட்டுக் குழு மம் மற்றும் உலகத் தமிழ் அமைப்பு ஆகிய அமைப்பு கள் கடந்த 22.1.2014 அன்று தலைவர் கலைஞர் அவர்க ளுக்கு எழுதிய வேண்டு கோள் கடிதத்தில், சுதந்திரமான சர்வதேச விசார ணைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் இந்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளன. தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் இராஜபக்சேயின் செயலாளர் லலித் வீரதுங்கா அமெரிக்கா வினால் முன்மொழியப்ப டும் தீர்மா னத்தை முறியடிக்க அய்.நா. உறுப்பு நாடுகளிடம் ஆதரவு திரட்ட, தங்கள் நாட்டுப் பிரதிநிதிகள் வெவ் வேறு நாடுகளுக்கு அனுப் பப்பட்டு வருவதாக வும் கூறி யுள்ளது மனித உரிமையில் நாட்டமும் நம்பிக்கையுமுள்ள அனை வருக்கும்
அதிர்ச்சி யளிக்கக் கூடியதாகும்.

இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம் நடைபெற விருக்கும் அய்.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசின் நோக்கத் திற்கு எவ்விதத்திலும் துணை போகாமல், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழிய உள்ள தீர்மானத்தை ஆதரிப்ப தோடு; சுதந்திரமான சர்வ தேச விசாரணை வேண்டு மென்றும், ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக அய்.நா. மன்றத்தின் மேற்பார் வையில் பொது வாக்கெ டுப்பு நடத்தப்பட வேண்டு மென்றும்; இந்திய அரசே தனியாகவும் ஒரு தீர்மா னத்தை அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் முன் மொழிந்து நிறைவேற்றுவ தற்கான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டுமென்று இம்மாநில மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 4
நதிகள் தேசிய மயம் மற்றும் இணைப்பிற்கு வடிவம் தர நிபுணர் குழு உருவாக்குவீர்!

2002ஆம் ஆண்டில் இந் திய உச்சநீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட நதிநீர் தேசிய மயம் - நதிநீர் இணைப்பு தொடர்பான பொதுநல வழக்கில் வழங்கப் பட்ட தீர்ப்பினைத் தொடர்ந்து, இந் திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும், தேசிய மய மாக்கி இந்தியா வின் வட பாகத்தில் உள்ள கங்கை - மகாநதியை தென் பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் கிருஷ்ணா, பெண்ணாறு, காவேரி, வைகை, தாமிரப ரணி, நெய்யாறு ஆகிய நதி களுடன் இணைத்திட வேண்டு மென்றும், கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கி பாய்ந்து, அரபிக் கடலில் வீணாகும் அச்சங்கோவில் - பம்பா நதிகளை தமிழ்நாட் டோடு இணைத்திட வேண்டு மெனவும், இந்த நடவடிக் கைகளுக்கு வடிவம் கொடுப் பதற்கும் நிறைவேற்ற வழி வகைகள் காண்பதற்கும், நிபுணர்கள் அடங்கிய சிறப் புக் குழு ஒன்றை உருவாக்கி அதற்குரிய திட்டச் செலவை யும் ஒதுக்கீடு செய்து, இந்தி யாவில் கிடைத்திடும் முழு அளவு நீரின் பயன்பாட்டை உயர்த்தி, உரிய நீர் மேலாண்மை மூலம் இந்திய வேளாண்மையின் தரத்தை யும் உற்பத்தியையும் அதிக ரித்து வேளாண் பெருங்குடி மக்களைக் காப்பாற்றவும், அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர்த் தேவையை முழு மையாக நிறைவு செய்திட வும் போர்க்கால அடிப்படை யில் நட வடிக்கை மேற் கொள்ள வேண்டுமென மத் திய அரசை இம்மாநில மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள் கிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் : 5

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு முற்றிலும் தடுத்திட வேண்டும்

இந்திய நாட்டில் சுமார் 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள தும், மக்கள் தொகையில் இருபது கோடி மக்களுக்கு உணவு அளிப்பதுமான இந் தியாவின் சில்லரை வணி கத்தை கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பரில் ஒற்றை இலச்சினை சில்லரை வணி கத்தில் நூறு விழுக்காடு அந் நிய மூலதனத்தையும், பல இலச்சினை சில்லரை வணி கத்தில் 51 விழுக்காடும் அந் நிய நேரடி முதலீட்டை மத் திய அரசு அனுமதித் தது. இதனால் நாடு முழுவதும், ஏற்பட்ட பிரச்சினை யின் கார ணமாக உள்நாட்டுத் தொழி லையும், விவசாயத் தையும், பாதுகாப்பதாகச் சொல்லி மத் திய அரசு சில நிபந்தனை களை விதித்தது. அந்த நிபந் தனைகள் வரு மாறு:-

1. அந்நிய நிறுவனங் கள், தாம் விற்பனை செய்யும் பொருட்களில் குறைந்தபட் சம், 30 விழுக்காடு, இந்தியா வில் உள்ள சிறு தொழிற் கூடங்களில் இருந்து வாங்க வேண்டும்.

2. தங்களது முதலீட்டில் 50 விழுக்காடு தொகையை, குளிரூட்டப்பட்ட கிடங்கு கள் போன்ற பின்புல கட்ட மைப்புகளை உருவாக்கு வதற்கு ஒதுக்க வேண்டும்.

3. 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மட் டுமே பன்னாட்டு வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனை களை சில அன்னிய நிறு வனங்கள் ஆட்சேபித்ததால், பன்னாட்டு வணிக நிறுவனங் கள், 10 லட்சம் மக்கள் தொகைக்கு உட்பட்ட நகரங் களிலும் சில்லரை வணிக நிறுவனம் தொடங்கலாம் என்றும்; அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், தங்களுடைய முதலீட்டில், பாதியை, பின் புல கட்டமைப்பில் முதலீடு செய்ய வேண்டும் என்பது, அவர் களின் முதல் பத்து கோடிக்கு மட்டும் பொருந் தும் என்றும்; சிறு தொழில் முதலீட்டு வரையறையை 10 லட்சம் டாலரில் இருந்து இருபது லட்சம் டாலர். (13 கோடி ரூபாய்) என மத்திய அரசு உயர்த்தியிருக் கிறது.

இந்தச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு அந் நிய முதலீட்டு நிறுவனங்கள் சில்லரை வணி கத்தில் இறங் குமானால், சில்லரை வணி கம் முற்றிலும் பாதிக்கப் பட்டு தங்களுடைய வாழ்வா தாரத்திற்கும், அதையே நம்பியிருக்கும் பல கோடி பேர், தத்தளிக்கக் கூடிய நிலைமை உருவாகும் என் பதை உணர்ந்து, சில்லரை வணிகத்தில், அந்நிய முதலீடு என்பதை முற்றிலும் தடுத் திட வேண்டுமென, இம் மாநில மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் : 6

தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்!

மனித நேயம் மற்றும் மனித உரிமை அடிப்படை யில், உலக நாடுகளில், 140 நாடுகள் தூக்குத் தண்ட னையை ரத்து செய்துள்ளன. ஆனால் இந்தியா வில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டு மென வேண்டு கோள்களும், விமர்சனங் களும் நாள்தோறும் பத்திரி கைகளில் வந்து கொண்டிருந் தாலும், இன்னும் தூக்குத் தண்டனை ரத்து செய்யப் பட வில்லை; இரத்து செய்வதற் கான எந்தச் சட்டத் தையும் நிறை வேற்ற மத்திய அரசு இதுவரையில் முன் வர வில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் தூக்கு தண்டனை அறவே ரத்து செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து வாதாடிக் கொண்டிருப்பவர். தூக்குத் தண்டனையின் மூலம் மனித உயிர்களை மனிதாபி மானமற்ற முறை யில், முடித்து வைக்க முடி யுமே தவிர, குற்றங்களை ஒழிக் கவோ குறைக்கவோ இய லாது. குற்றங்கள் ஒழிக்கப் படுவதற்கு மனமாற் றங்கள் தேவை. அதற்குத் தூக்குத் தண்டனை உரிய தீர்வாகாது. எனவே மத்திய அரசு இதை ஆழ்ந்து பரிசீலித்து தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வர முன் வர வேண்டு மென்று மத்திய அரசை இம் மாநில மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள் ளுகிறது.

தீர்மானம் : 7

காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு 2007ஆம் ஆண்டு வெளி யிடப்பட்ட போதிலும், இது வரை அந்தத் தீர்ப்பின் அடிப் படையில் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள் காவிரி நதிநீரை, விவசாயத்திற்குத் தேவையான அளவு, உரிய காலத்தில் பயன்படுத்த முடி யாத சூழ்நிலை தொடர்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை சட்டப்படி நிறை வேற்ற அமைக்க வேண்டிய காவிரி - மேலாண்மை வாரி யம், காவிரி ஒழுங்குமுறைக் குழு இவைகளை உடனடி யாக அமைக்க வேண்டு மென மத்திய அரசை இம் மாநில மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 8

விலையேற்றத்தை கட்டுப்படுத்துவீர்!

அத்தியாவசியப் பொருள் களின் விலைவாசி உயர்வு என்பது தமிழ்நாட்டு மக் களை பெரிதும் பாதித்துள் ளது. மாதந்தோறும் நிகழ்ந்து வரும் விலை ஏற்றத்தால் ஏழையெளிய, நடுத்தர வர்க் கத்தினர் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள். இத்தகையோ ரின் வருவாயையும், வாங் கும் சக்தியையும் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, அத் தியா வசியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப் படுத்தி மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவதற் கான வழிவகை காணத் தவறிய தற்காக மத்திய, மாநில அரசு களுக்கு இம்மாநில மாநாடு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் : 9 கல்விக் கடன்களை தள்ளுபடி செய்க!

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், கல்விக் கடன் பெற்று, தங்கள் படிப்பை நிறைவு செய்துள்ளனர்; பலர் படிப்பைத் தொடர்ந்து வரு கின்றனர். கல்வி நிலையங் களில் தங்கள் படிப்பை முடித்த மாணவர்களுக்கு, உடனடியாக வேலை கிடைக் காத நிலையில் அவர்கள் பெற்ற கல்விக் கடனை வட் டியுடன் திருப்பிச் செலுத்த வங்கிகள் கடன் பெற்ற மாணவர்களின் குடும்பங் களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. மேலும், கடன் பெற்ற மாணவ - மாணவிய ரின் விவரங்களை பொது அறிவிப்பாகவும், வங்கிகள் வெளியிடுகின்றன. இதனால், மாணவர்களும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர் களும் மனரீதியாக பெரிதும் பாதிப்படைந்து சோர்வுற் றுள்ளனர். வங்கிகள் கடைப் பிடிக்கும் இத்தகைய மனிதா பிமானமற்ற அணுகுமுறை யினை வங்கிகள் மாற்றிக் கொள்ள வேண்டுமென இம் மாநாடு கேட்டுக்கொள்வதோடு, வங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வழிவகை காண வேண்டு மென்று மத் திய அரசை இம்மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...


தீர்மானம் : 10
தமிழக மீனவர்களைப் பாதுகாத்திடுக!

இலங்கைக் கடற்படை யால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவ தும் வாடிக்கையாக நடை பெற்று வருகிறது. மீனவர்கள் தாக்கப்படு வதைக் கண்டித்து கடலோர மாவட்ட மீனவர் கள் நாகப்பட்டினத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப் பதாக அறிவித்து போராட் டத்தை தொடர்ந்தனர். தலைவர் கலைஞர் அவர்கள் உடனடியாக நாடாளுமன்றத் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களை நாகப்பட்டினத் துக்கு அனுப்பி அவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி உண்ணாவிரதப் போராட்டத் தைக் கைவிடச் சொன்னது டன், மத்திய அரசுடன் பேசி ஒரு தீர்வுக்கு வழிகாண அறி வுறுத் தியதோடு, மீனவப் பிரதிநிதிகளை அவரே டெல் லிக்கு அழைத்துச் சென்றார். டெல்லியில் பிரதமரையும், வெளியுறவுத் துறை அமைச் சரையும் சந்தித்து மீனவப் பிரதிநிதிகள் தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்தி னர். அப்போது ஜனவரி 20ஆம்தேதி வாக்கில் இரண்டு நாட்டு மீனவர்களின் சந்திப் புக்கு ஏற்பாடு செய்யப்படு மென்று உறுதி அளிக்கப் பட்டது. இறுதியாக, 27.1.2014 அன்று இருநாட்டு மீனவர்க ளின் கூட்டம் நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்பட வில்லை. ஒருசில பிரச்சினை களில் தீர்வு எட்டப்பட்டி ருப்பதாக தகவல் வெளிவந் திருந்தாலும் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசே இலங்கை அரசோடு பேச்சு வார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை பாது காப்பதற்குரிய விரை வான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இம்மாநில மாநாடு வலி யுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 11

நெசவாளர்களை வேதனைக்குள்ளாக்கும் அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம்!

தமிழ் ஓவியா said...


தலைவர் கலைஞர் அவர் களின் ஆட்சியின்போது, ஒவ் வொரு ஆண்டும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவா ளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப் பினை வழங்கும் நோக்குட னும் - கிராமப்புற மற்றும் நகர்ப் புறத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் விழா காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமென்ற நல்லெண் ணத்துடனும், உரிய நேரத்தில் ஆடைகள் உற்பத்தி செய் திடத் தேவையான நெசவுப் பொருள்களை கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு அளித்து வந்ததையும், அதன் மூலம் தயாரிக் கப்பட்ட இலவச வேட்டி - சேலைகள் விழா நாட்களுக்கு முன்பே, தமிழ கம் முழுவதும் வினியோ கம் செய்யப்பட்டு வந்ததையும் தமிழக மக்கள் நன்கறிவர். ஆனால், தற்போது ஜெய லலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு பொங்கல் விழாவுக்கும் இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்திட, உரிய நேரத்தில் ஆணை வெளியிடாமலும், இலவச வேட்டி - சேலைகள் உற்பத்தி செய்வதற்கு நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேவையான நூல் மற்றும் கூலி முன்பணம் வழங்காம லும், ஒவ்வொரு ஆண்டும் காலதாமதப்படுத்தி, வெளி மாநிலங்களிலிருந்து வேட்டி - சேலைகளைக் கொள்முதல் செய்வதற்கான கட்டாய சூழ் நிலையை அ.தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் வேண்டு மென்றே உருவாக்கி வருகிறது. இப்படிப்பட்ட குளறு படிகளால் பொங்கல் விழா வுக்கு வழங்கப்பட வேண் டிய இலவச வேட்டி, சேலை பெரும்பா லானவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ப தைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசை இம்மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், விசைத்தறி நெச வா ளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உய ரிய நோக்கில், நெசவாளர்க ளுக்கு 500 யூனிட் வரை இல வச மின்சாரம் வழங்கி வந்தது தலைவர் கலைஞர் தலைமை யிலான கழக ஆட்சி. ஆனால், தற் போதைய ஜெயலலிதா வின் அ.தி.மு.க. அரசு, நெச வுத் தொழிலை நசுக்கி - நெச வாளர்களை நலிவடையச் செய்திடும் வகையில், அவர் களிடமிருந்து பன் மடங்கு நிலையான மின்கட்டணம் மற்றும் அதற்குரிய வரி ஆகிய வற்றை வசூலித்து அவர்களை வேதனைக்குள்ளாக்கி வரு வதை இம்மாநில மாநாடு வன்மையாகக் கண் டிக்கிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் : 12

நெல்லுக்கும், கரும்புக்கும், தேயிலைக்கும் உரிய விலை நிர்ணயம் செய்யவேண்டும்!

இன்றைய விலைவாசி உயர்வு, இடுபொருள்கள் விலை உயர்வு மற்றும் வேளாண்மைச் செலவினங் கள் ஆகிய வற்றிற்கு ஏற்ப, நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வழங்கிட வேண்டு மென்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனையேற்று விவசாயி களுக்கு கட்டுப்படியாகக் கூடிய வகையில், உற்பத்திச் செலவைவிடக் கூடுதலாக கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 2,000 ரூபாய் என்று நிர்ணயித்து வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டு மென்றும்;

அதுபோலவே, 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கரும்பு கொள்முதல் விலை டன் னுக்கு 2,500 ரூபாயாக உயர்த் தப்படும் என்று அறிவித்தார் கள். அதை நம்பி விவசாயிகள் எல்லாம் வாக்களித்து இவர் களை ஆட்சியிலே அமர வைத்து, மூன்றாண்டு கள் ஆகின்றன. கரும்பு வெட்டுக் கூலி மற்றும் வாகன வாட கையை, சர்க்கரை ஆலை நிர்வாகங்களே ஏற்க வேண்டு மென்றும், கரும்பு கொள் முதல் விலையை டன் ஒன் றுக்கு 3,000 ரூபாயாக வழங்க வேண்டுமென்றும் கரும்பு விவசாயிகள் கடந்த ஆண்டி லேயே கோரிக்கை வைத் தார்கள். ஆனால் இன்னமும் டன்னுக்கு 2,650 ரூபாய் என்ற அளவில் தான் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. இதனை மாற்றி கரும்பு கொள்முதல் விலையை குறைந்த பட்சம் டன் ஒன்றுக்கு 3,500 ரூபா யாவது வழங்கிட இந்த அரசு முன்வர வேண்டு மென்றும், இம்மாநில மாநாடு வலியு றுத்திக் கேட்டுக் கொள்கிறது. மலைவாழ் மக்களின் வாழ் வாதாரமாக உள்ள தேயிலை விவசாயம், தற்போதுள்ள விவசாய இடுபொருள்களின் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் தேயிலைக்கு உரிய விலை கிடைக் காமல் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ள னர். ஆகவே, அத்தொழி லையே வாழ்வாதாரத்தின் அடிப்படையாகக் கொண்டு நம்பி எதிர்பார்த் திருக்கும் விவசாயிகளைக் காப்பாற் றும் பொருட்டு 1 கிலோ பச்சைத் தேயிலைக்கு ரூபாய் 25 என கொள் முதல் விலை நிர்ணயம் செய்திடவேண்டு மென அ.தி.மு.க. அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் : 13

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குக!

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 1989ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் முதலமைச்சராகப் பொறுப் பேற்றவுடன், வேலையில் லாமல் இருக்கின்ற இளை ஞர் களுக்கு வேலை வாய்ப் பினை அளித்து, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக் கித் தர வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் 2-7-1990 அன்று நியமனம் செய் யப்பட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அவர்கள் நியமனம் பெற் றார்கள் என்ற ஒரே காரணத் திற்காக, அவர்கள் மீதும் சினம் கொண்டு, அ.தி.மு.க. ஆட்சி அமைந்த போதெல் லாம் அவர்களைப் பணி நீக் கம் செய்து வீட்டிற்கு அனுப்பி வந்தார்கள். இதுபற்றிய வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று, அங்கே அண்மையில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் மக்கள் நலப் பணியா ளர்களை பணி நீக்கம் செய் யலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட் டது. மேலும் அந்த உத்தரவில் வழக்கை மறுவிசாரணை செய்து, ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். தமிழக அரசு வழக்கை ஒத்தி வைக்கு மாறு கோரக்கூடாது. 13 ஆயி ரம் மக்கள் நலப் பணியாளர் களின் வாழ்க்கையை அரசு பாழடித் துள்ளது, கண்டிக்கத் தக்கது. இருபது ஆண்டு அர சுக்காக அவர்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித் துள்ளனர் என்பதை அரசு கருத்தில்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப் பில் கூறப்பட்டுள்ளது. தி.மு. கழக ஆட்சியில் நியமனம் செய்யப் பட்டவர்கள் என்ப தால், மக்கள் நலப் பணியா ளர் கள் மீது அ.தி.மு.க. அரசு கொண்டிருக்கும் பழிவாங் கும் போக்கை கைவிட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக் கும் வரை காத்திருக்காமல், மக்கள் நலப் பணியாளர் களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் காப் பாற்றிடத் தாமாகவே முன் வரவேண்டுமென்று இம் மாநில மாநாடு வலியுறுத்து கிறது.

தீர்மானம் : 14

அரிசி - பருத்திக்கான சேவை வரி உடனடியாக ரத்து செய்யவேண்டும்!

மத்திய நிதித்துறை அமைச் சகம் கடந்த 27-12-2013 அன்று நிதிச்சட்டம் பிரிவு 65 (பி) எஸ் என்றொரு புதிய சட்டப் பிரிவை உருவாக்கியது. அதில் அரிசி வேளாண் விளை பொருள் இல்லை என்பதால், மத்திய, மாநில அரசுக் கிடங் குகளில் அரிசியை இருப்பு வைத்திருந்தால், இருப்பு வைக்கப்படும் அரிசிக்கு கிட்டங்கிகளுக்கான மாத வாடகையோடு, சேவை வரியும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள் ளது. இந்தச் சட்டம் முன் தேதியிட்டு 1-7-2012இல் இருந்தே அமலுக்கு வருகிறது என்று கூறி 18 மாதங் களுக்கு உண்டான சேவை வரியையும் சேர்த்துக் கட்ட வேண்டுமெனக் குறிப் பிடப்பட்டுள்ளது. அரிசிக் குச் சேவை வரி விதித்தது போலவே பருத்திக்கும் மத்திய அரசு இந்தச் சட்டத்தின் மூலம் சேவை வரி விதித்துள்ளது. அரிசிக்கும், பருத்திக்கும் சேவை வரி விதித்துள்ள மத்திய அரசு கோதுமைக்கு மட்டும் சேவை வரியிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. மத்திய அரசு கோதுமையை அடிப்படை உணவாகக் கொள் ளும் வட மாநிலங்களைச் சார்ந்த மக்க ளுக்கு ஒரு நீதி, அரிசியை அடிப்படை உண வாகக் கொண்டிருக்கும் தென் னக மக்களுக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு காட்டாமல், அனை வருக்கும் சமநீதி வழங்கக் கூடிய வகையில் அரிசிக்கு மட்டும் விதிக் கப்பட்டிருக் கும் சேவை வரியையும், ஏற் கனவே பஞ் சாலைத் தொழில் நலிந்த காரணத்தால் அவ திப்படும் நெசவாளர்களை மேலும் பாதித்திடும் பருத் திக்கான சேவை வரியையும் உடனே ரத்து செய்ய வேண்டு மென மத்திய அரசை இம் மாநில மாநாடு வலி யுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் : 15

அமைதிப் பூங்கா என்று சொல்லி - தமிழகத்தை அபாயபூமியாக மாற்றி வரும் ஜெ.வுக்கு கண்டனம்!

ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாள் முதல் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பது சிதைந்து சின்னாபின்னமாகி, தற் போது முழுவதுமாக கெட் டுப் போய்விட்ட நிலைமை உருவாகி யுள்ளது. சரிந்து விட்ட சட்டம் ஒழுங்கை மீட்டு, பொது மக்களுக்குப் பாதுகாப்பான சூழ் நிலையை உருவாக்க வேண்டியதை விடுத்து, தன் அதிகாரத்தின் கீழ் உள்ள காவல் துறையின் முழு நேரக் கவனத்தையும் எதிர்க்கட்சிகளைப் பழி வாங் குகின்ற நடவடிக்கைக்குத் திருப்பி விட்டு, சட்டம் ஒழுங்கு சீர் குலைவிற்கு முத லமைச்சர் ஜெய லலிதாவே முழு முதல் காரணமாக இருந்து வருகிறார். மக்கள் நலன் - நாட்டின் முன்னேற்றம் ஆகியவற் றின் அடிப்படையில் எதிர்க்கட்சி கள் எடுத்துரைக்கும் ஆக்கப் பூர்வமான, நியாயமான கருத் துகளையும் விமர்சனங்களை யும்கூட ஏற்றுக் கொள்ளக் கூடிய ஜனநாயக உணர்வு ஜெயலலிதாவுக்கு சிறிதும் இல்லை. அவரது அகம்பா வப் போக்கின் காரணமாக சட்டம், ஒழுங்கு முறையாகப் பேணப்படாமல் சமூக விரோத நடவடிக்கைகள் பல்கிப் பெருகி தமிழ்நாட்டில் எந்தவொரு பகுதியும் மக்கள் அமைதியாகவும், சுமூகமாக வும் வாழ்வதற்கு பாதுகாப் பானதாக இல்லாமல் போய் விட்டது. தமிழகத்தில் கொலை நடக்காத நாள் இல்லை; கொள்ளை நடக்காத ஊர் இல்லை; திருட்டு, செயின் பறிப்பு நடக்காத தெரு இல்லை; என்று சொல்லும் அளவுக்கு கடும் குற்ற நிகழ் வுகள் கட்டுக்கடங்காமல் நடைபெற்று வருகின்றன. ஏன்? அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் வீட்டிலேயே 50 இலட்சம் ரூபாய் கொள்ளை என்கிற அளவுக்கு சட்டமும் ஒழுங்கும் அ.தி.மு.க. ஆட்சி யில் தமிழகத்தில் மோச மாகிவிட்டது. பெண்கள் பாது காப்பாக நடமாட முடிய வில்லை. பாலியல் கொடு மைகள் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. கூலிப் படையினரின் அட்டூழியங் கள் கொடிகட்டிப் பறக்கின் றன. மொத்தத்தில் தமிழகமே அபாயகரமான பூமியாக மாறி விட்டது. இவ்வாறு சட்டம் ஒழுங்கு நிலைமை அழுகிப் போய் விட்டதைச் சிறிதும் உணராமல், தமிழகம் அமை திப் பூங்கா என்று சொல்லிக் கொண்டே ஜெயலலிதா மாய் மாலம் செய்து வருவதை இம் மாநில மாநாடு வன்மையா கக் கண்டிக்கின்றது.

- இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more: http://viduthalai.in/page-3/75472.html#ixzz2tdBFtoe3

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் மும்பைப் பெருநகர் பயணமும், பங்கேற்ற நிகழ்ச்சிகளும்!


மராட்டிய மாநிலத்தில் சமூகநீதிப் பயணத்திற்கு வலுசேர்த்த சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கிய விழா!

தமிழர் தலைவரின் மும்பைப் பெருநகர் பயணமும், பங்கேற்ற நிகழ்ச்சிகளும்!

பெரியார் இயக்கம் என் பது நாத்திக இயக்கம் என பொது மக்களால் அறியப் பட்டாலும் அறிவார்ந்த கொள்கை சார்ந்த அந்த இயக்கத்திற்கு ஆதரவு நிலை என்பது கடவுள் மறுப்பாள ரோடு சுருங்கி விடுவதில்லை. கடவுள் மறுப்பு என்ற நிலையினையும் தாண்டி, கடவுள் நம்பிக்கையாளர் களாலும் போற்றப்படும் இயக்கமாக தந்தை பெரியார் காலம் தொட்டு தொடர்ந்து வருகிறது. இதற்கு அடிப்ப டைக் காரணம், சுயமரி யாதை எனும் தத்துவத்தை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு தந்தைபெரியார் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த வழிமுறைகளே ஆகும். பெரியார் இயக்கத்தில் மானிட மேம்பாட்டினை மய்யப் படுத்தி பல்வேறு செயல் தளங் கள் இருப்பினும், எல்லா மும் எல்லார்க்கும் எனும் சுயமரியாதை அடிப்படை நிலையினை வலியுறுத்தும் சமூகநீதித் தளம் பரந்து பட்டுள்ள பல்வேறு நம்பிக் கையாளர்களை ஒருமுகப் படுத்தும் உன்னத தளமாகும். கடவுள் நம்பிக்கையாளர் களும் பெரியார் இயக்கத்தின் சமுதாயப் பணியில் பங் கேற்று செயல்பட வைத்தி டும் சிறப்பினை உடையது சமூக நீதித் தளம்.

இந்திய நாட்டுச் சூழலில் வாழும் மக்களுக்கு பல் வேறு வகையிலான - நீதி கிடைத்திட வல்ல - சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி - என்பவைகளில் சமூக நீதி என்பதே அடிப்படை முன் னுரிமை அளிக்கப்பட்டுள் ளது. காரணம், சமூகஅநீதி என்பதே இந்த மண்ணின் வரலாற்றுப் பிம்பமாக கோலோச்சி வந்துள்ளது. சமூக அநீதி நீக்கப்பட்டால், சமூக பேதம் களையப்பட் டால் முழுமையான நீதி கிடைத்திடும் அரங்கேற்றம் விரைந்திட வழி ஏற்படும். இந்திய நாட்டு மக்களின் முன்னேற்றம் குறித்து உண் மையான அக்கறை கொள் வோர் சமூக நீதிக்கு முன்னு ரிமை அளிக்கப்படுவதையே வலியுறுத்துவர். இத்தகைய சமுதாய மேம்பாட்டுக்கு உகந்த சிந்தனைகளை சமூக நீதி பற்றி தொலைநோக்கு டன் சிந்தித்து செயல்பட்டவர் புரட்சியாளர் தந்தை பெரி யார், அவர்தம் சிந்தனைத் தடத்தில், பண்பட்ட பரப் புரை, திறன்மிக்க செயல் பாடு, பல மாநிலத்தவரையும் அரவணைத்துச் செல்லும் ஆளுமையால் சமூக நீதித் தளத்தின் பேருருவாகத் திகழ்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆவார். சமூகநீதித் தளத்தின் விரிவாக் கத்திற்கு கிடைத்திடும் வாய்ப் புகளுக்கு பயன்பாட்டு முன் னுரிமை தருவதோடு, பரந்துபட்ட வாய்ப்பினை உருவாக்கிடும் வித்தக நாயக ராக தமிழர் தலைவர் ஆசிரி யர் விளங்கி வருகிறார்.

தமிழ் ஓவியா said...

தாம் கற்ற கல்வி உயர் வால் வாழ்வாதாரம் வேண்டி வெளிநாடு சென்று, வாழ்ந்து வரும் தமிழர்களால், ஒடுக் கப்பட்டுள்ள மக்களின் உயர்வு நிலைக்கு பாடுபட்டு வரும் பெரியார் இயக்கத்தின் பணிக்கு ஆதரவாக, அமெரிக் காவில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் அமைப்பு பெரியார் பன்னாட்டு மய்யம் (றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ மிஸீமீக்ஷீஸீணீவீஷீஸீணீறீ, ஹிஷிகி) ஆகும். இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் சமூக நீதிக்கு உழைத்து வரும் பெருமக் களைப் பாராட்டிப் பெரு மைப்படுத்தும் விதத்தில் சமூக நீதிக்கான போராட் டத்தின் எழுச்சிச் சின்னமாக விளங்கி வரும் தமிழர் தலைவரின் பெயரால் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது என்பதை நிறுவி, பெரியார் பன்னாட்டு மய்யம் ஒவ் வொரு ஆண்டும் உரிய பெரு மக்களைத் தெரிவு செய்து வழங்கி வருகிறது. விருதுப் பட்டயமும், இந்திய ரூபாய் ஒரு லட்சத்திற்கு பண முடிப் பும் விருது நாயகர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

முதன்முதலாக சமூக நீதிக்கான கி.வீரமணி விருது சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் வழங்கப்பட்டது. சமூகநீதி உணர்வினை கி.வீரமணியிட மிருந்து தாம் பெற்றதாக இந்திய நாட்டின் மேனாள் பிரதமர் வி.பி.சிங் கூறினாரே அவர்தம் பெயராலேயே நிறுவப்பட்ட சமூக நீதி விரு தினாலும் பெருமைப்படுத் தப்பட்டார். அதுமுதல் ஒவ் வொரு ஆண்டும் சமூகநீதிக்கு அரிய பணி ஆற்றிவரும் பெருமக்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 2013ஆம் ஆண்டுக்குரிய சமூக நீதிக்கான கி.வீரமணி விரு தினை மராட்டிய மாநில அமைச்சர், சமூகநீதிப் போராளி ஜகன் புஜ்பல் அவர்களுக்கு வழங்கிடும் விழா, மும்பை பெருநகரில் 2014 ஜனவரி 11ஆம் நாள் நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...

மராட்டிய மாநில ஆளு நர், சமூகநீதியாளர் மேதகு கே.சங்கரநாராயணன் விழா விற்கு தலைமை வகித்து, சமூக நீதி விருதினை வழங் கினார். தமது பெயரில் சமூக நீதி விருது அமையப் பெற்றா லும், ஒவ்வொரு விருது வழங்கும் நிகழ்வினையும் பெரியார் கொள்கை பிரச் சாரப் பணியாகவே கருதிடும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மும்பை பெரு நகரில் நடைபெற்ற நிகழ்வி லும் கலந்து கொண்டு சிறப் பித்தார்.

தலைவர்களின் மறைவினால் தள்ளி வைக்கப்பட்ட மும்பை பெருநகர நிகழ்வுகள்

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புத்த மாநாடு, சமூகநீதிக் கருத்தரங்கம் மற் றும் மும்பை வாழ் தமிழ்ச் சான்றோர்களுக்குப் பாராட்டு ஆகிய விழாக்களில் தமிழர் தலைவர் கலந்து கொள்ள இருந்தார். விழா நாள்கள் நெருங்கிய வேளை யில், நிகழ்ச்சிக்கு முதல் நாளன்று மராட்டிய மாநிலத் தில் உருவான சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே காலமான தையொட்டி நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. 2013 பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய நாள்களில் தள்ளி வைக்கப் பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற் பாடு செய்யப்பட்டு இருந் தது. தமிழர் தலைவர் அந்த முப்பெரும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித் தார்.

மும்பை மேதகு ஆளுநர் கே.சங்கரநாராயணன், அமைச்சர் புஜ்பல் ஆகியோருடன் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாடல்.

சமூக நீதிக்கான கி.வீர மணி விருது வழங்கும் விழா மற்றும் இதர நிகழ்ச்சிகள் 2013 டிசம்பர் 7 மற்றும் 8 நாள்களில் நடைபெறுவதாக இருந்த சூழலில் கறுப்பர் இன மக்களின் தலைவர் நெல்சன் மண்டேலா டிசம்பர் 6ஆம் நாள் தென் ஆப்பிரிக்கா வில் காலமானதை ஒட்டி, மும்பை மாநகர நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. மீண்டும் 2014 ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய நாள்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மும்பை தோழர்களுக்கு இரண்டு முறையும், தமிழர் தலைவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்ட காரணத்தால், ஏற்பாட்டுச் செலவுகளும், உழைப்பும் இரட்டிப்பாகின. இருப்பினும் உற்சாகம் குன்றாமல் மும்பைக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து வெற்றிகர மாக விழாக்களை நடத்தி முடித்தனர். இயக்க வரலாற் றில் தமிழர் தலைவர் மும்பை மாநகரில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் முக்கிய கட்டங் களாக அமைந்துவிட்டன.

சென்னையிலிருந்து கிளம்பி மும்பை பெருநகர் வந்தடைதல்

இரண்டு நாள் நிகழ்ச்சி களில் கலந்து கொள்ள, பிப்ர வரி 10ஆம் நாள் மாலை 5.10 மணிக்கு சென்னை - காம ராசர் உள்நாட்டு விமான நிலைய முனையத்திலிருந்து தமிழர் தலைவர் புறப்பட் டார். அவருடன் சமூகநீதி விருதினை நிறுவி வழங்கி வரும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக் குநர் டாக்டர் சோம.இளங் கோவன் மற்றும் பகுத்தறி வாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் ஆகியோர் சென்றனர். விமானப் பயண நேரத் தில், தந்தை பெரியார் வெளி மாநிலங்களில் சுற்றுப் பய ணம் செய்ததை குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் பய ணம் செய்த நிகழ்ச்சிகளை தமிழர் தலைவர் நினைவு கூர்ந்தார். சாலைப் பயண மாக பல இடங்களில் தந்தை பெரியார், அன்னை மணியம் மையாருடன் உடன் சென்று தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறிய வேளையில், விடுபட்ட ஒரு பயணத்தினை முடித்திட வேண்டும் எனும் விழை வினைத் தெரிவித்தார். மராட் டிய மண்ணில், 1902 ஆம் ஆண்டில் பார்ப்பனர் அல் லாத மக்களின் உரிமைக்கு, உயர்விற்கு வித்திட்ட சமூக நீதிப் புரட்சியாளர் சாகு மக ராஜ் அவர்கள் ஆட்சி செய்த கோல்காப்பூர் (ரிஷீறீலீணீஜீக்ஷீ) நகருக்கு தந்தை பெரியார் செல்ல இயலவில்லை. விடு பட்ட பயணத்தை இயக்கத் தின் சார்பாக ஒரு குடும்பப் பயணமாக கழகத்தினர், திர ளாகச் செல்ல வேண்டும்; சாகு மகராஜ் அவர்களின் சமூகநீதிப் பங்களிப்பினைப் போற்றி விழா எடுத்திட வேண் டும்; நடப்பு ஆண்டிலேயே இந்தப் பயணத் திட்டம் நிறைவேற்றப்பட வேண் டும் எனத் தெரிவித்தார். சென்னையிலிருந்து கிளம் பிய விமானம் 1 மணி 40 நிமிட நேரத்தில் மும்பை வந்த டைந்தது.

மும்பை மேதகு ஆளுநர் கே.சங்கரநாராயணன் சமூகநிதிப் புரட்சியாளர்களுக்கு மரியாதை

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் வருகை - வாசலில் மும்பாய் நகர திரா விடர் கழகம், பகுத்தறிவா ளர் கழகம், திராவிட முன் னேற்றக் கழகம் மற்றும் அமைப்பு எல்லைகளைத் தாண்டிய மும்பை வாழ் தமிழ்க் குடும்பத்தினர் திர ளாக வருகை தந்து தமிழர் தலைவரை வரவேற்றனர். விமான நிலைய வளாகத்தில் திராவிடர் கழகக் கொடியி னைத் தாங்கிய கருஞ்சட் டைத் தோழர்கள் திரளாக வருகை தந்து, முழக்கம் எழுப்பி தமிழர் தலைவரை வரவேற்ற பாங்கு, இதர பயணிகளின் மற்றும் பார் வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழ்க் குடும்பத் தின் அன்பான வரவேற் பினை ஏற்ற தமிழர் தலைவர் விமான நிலையத்திலிருந்து கிளம்பி மும்பை பெருநகர் - அந்தேரிப் பகுதிக்கு தோழர் களுடன் பயணமானார். துங்கா விடுதியில் தமிழர் தலைவர் தங்குவதற்கு ஏற்பாடு செய் திருந்தனர்.

Read more: http://viduthalai.in/page-4/75467.html#ixzz2tdCDosCV

தமிழ் ஓவியா said...


மதவாதம் ஒழிந்து ஜனநாயகம் தழைக்க பிணிகள் தீரப் பேரணியாக எழுவோம்!


திருச்சி திருப்புமுனை தி.மு.க. மாநாட்டில் கலைஞர் சங்கநாதம்

திராவிடர் கழக வெளியீடான, பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் - தேவையும் என்ற உரையின் தொகுப்பு நூலை தமிழர் தலைவர் அவர்கள், கலைஞர், பேராசிரியர், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு வழங்கினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.

திருச்சி, பிப்.17- மதவாத சக்திகளை முறியடிக்க இந் தியாவில் ஜனநாயகம் தழைக்க, பிணிகள் அகற்றப் பட இந்த அணி பேரணி யாக மாறும் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

திருச்சியில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள் களில் நடைபெற்ற தி.மு.க. 10 ஆவது மாநில மாநாட் டில், மாநாட்டின் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மாநாட்டின் தலை மையு ரையை நிறைவுரை யாக வழங்கியபோது குறிப் பிட்டதாவது:

1956 இல் அறிஞர் அண்ணா அவர்கள் இருந்து நடத்திய மாநாடு - திருச்சியிலே இரண் டாவது மாநில மாநாடு. அந்த மாநாட்டின் வரவேற் புக் குழுத் தலைவர் மறைந்த என்னுடைய இனிய நண்பர் அன்பில் தர்மலிங்கம். 5 ஆவது மாவட்ட மாநாட் டில் நாம் எழுப்பிய அய்ம் பெரும் முழக்கங்கள்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு 1970 இல் நடை பெற்ற திருச்சி 5 ஆவது மாவட்ட மாநாட்டிலேதான் இன்றைக்கு நம்முடைய முழக்கமாக உருவாகியிருக் கிற, அண்ணா வழியில் அய ராது உழைப்போம்; ஆதிக்க மற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்;

தமிழ் ஓவியா said...

வன்முறை தவிர்த்து வறு மையை வெல்வோம்; மாநி லத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி ஆகிய நம்மு டைய கழகத்தின் அய்ம் பெரும் முழக்கங்கள் ஒலித்த மாநாடு அந்த மாநாடு. இப் பொழுது திருச்சியிலே பத் தாவது மாநில மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த 10 மாநில மாநாடு களில் 5 மாநில மாநாடுகள் திருச்சியில் நடந்தன என்ற சிறப்பு திராவிட இயக்க வர லாற்றிலே பதிவாகியிருக் கிறது. 10 மாநில மாநாடு களில் 6 மாநில மாநாடு களுக்கு தலைவராக இருந்த பெரும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது.

திருச்சி தீரர்களின் கோட்டம்!

தீரர்களின் பாடி வீடு! திருச்சி திராவிடப் பூக்காடு! திருச்சி தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தோட்டம்!

திருச்சி அறிஞர் அண்ணா வின் திராவிடப் பண்ணை! காவிரி தீரத்து திருச்சியில் மக்கள் பெருங்கடல்! மானிட சமுத்திரம்! திருப்புமுனை காணும் தீர்மானத்தோடு, கூடியிருக்கும் திராவிடக் காளைகள்! திக்கெட்டு மிருந்து திரண்டு வந்திருக் கும் திராவிடத் திருக்கூட்டத் தார்! உங்கள் திருமுகங் களைக் கண்டு நான் அகம் மிக மகிழ்கிறேன்.

அ.தி.மு.க.வினரின் மாய் மால வாக்குறுதிகளை நம்பி, மாற்றத்தை விரும்பி, தமிழ் மக்கள் வாக்களித்து ஏமாந் தார்கள். அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றினார் களா? அவர்களால் மக்களுக் குக் கொடுக்கப்பட்ட வார்த் தைகளைக் காப்பாற்றினார் களா? முடிவு என்ன? விளைவு என்ன?

கருத்துச் சுதந்திரம் பறி போய்விட்டது. அதிரடி அறி விப்புகள்; ஆடம்பர முழுப் பக்க விளம்பரங்கள்; 110 அறிக்கைகள்; நிர்வாக அலங் கோலங்கள்; அச்சத்தின் பிடி யில் பத்திரிகைகள்; தமிழகத் தின் அனைத்துப் பிரிவினரி டமும் சலிப்பு! அ.தி.மு.க. வினரிடம் மட்டுமே களிப்பு!

ஆக்கபூர்வமான திட்டம் ஏதுமில்லை; வளர்ச்சிப் பணி சிறிதுமில்லை; நடப் பது எல்லாம் - திராவிட இயக்க இலட்சியங்களுக்கு எதிரான காரியங்கள்; தி.மு. கழக ஆட்சியில் சிந்தித்து நிறைவேற்றப்பட்ட திட்டங் களுக்கு மூடு விழா! மத்திய அரசின் அடிப்படைக் கட்ட மைப்பு வசதித் திட்டங் களுக்கு முட்டுக்கட்டை!

எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற ஏகடிய பேச்சு! அரசி யலின் தரத்தைத் தாழ்த்தி, அன்றாடம் மற்றவர்கள் மீது குற்றச்சாட்டு - கேலிப்பேச்சு!

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி!

ஜனநாயக விரோத - மக் கள் விரோத ஆட்சிதான் தமி ழகத்திலே நடைபெறுகிறது. இங்கே நடைபெறுவது ஆட்சி அல்ல; காட்சி; வெறும் காணொலிக் காட்சி! இந்தக் காட்சிகளை எவ்வளவு நாளைக்கு நாம் அனுமதிக் கப் போகிறோம் என்பது தான் இன்றைய சூழ்நிலை.

மிகப் பெரிய மாநாடு இந்த 10 ஆவது மாநில மாநாடு. ஏற்பாடுகள் அதி கம். மாநாட்டின் வசூல் நிலையை தலைவர் எப் போது அறிவிக்கப் போகிறார் என்று காத்திருக்கிறீர்கள். நானே ஏற்பாடுகளைப் பார்த்து விட்டு, தலைமைக் கழகத்திடம் நேரு கோரிக்கை வைப்பாரோ என்று நினைத் துக் கொண்டிருந்தேன்.

இவ் வளவு செலவு செய்து ஏற் பாடுகளை செய்திருக்கிறார் களே, பணம் போதவில்லை என்று கையைப் பிசைந்து நிற்பாரோ என்று கருதியிருந் தேன். ஏனென்றால் நான் நேற்றைய பொருளாளர் அல்லவா? (பலத்த சிரிப்பு) கவனமாக இருக்க வேண்டு மல்லவா? இதற்கெல்லாம் பிறகு வரவேற்புக்குழுத் தலைவரும்,

தமிழ் ஓவியா said...

மாநாட்டுப் பொருளாளரும் கழகப் பொருளாளருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் எனக்குத் தெரிவித்துள்ள கணக்குப்படி மாநாட்டுச் செலவு போக தலைமைக் கழகத்திடம் வழங்குகின்ற நிதி ஒரு கோடியே ஒரு லட் சம் ரூபாய் என்பதை, அதா வது 101 லட்சம் ரூபாய் என் பதை மகிழ்ச்சியோடு அறி விக்கின்றேன். (பலத்த கைதட்டல்) நான் பேசுகி றேன் - பழைய நினைவுகள் என் எதிரிலே ஓடுகின்றன. அண்ணாவிடத்திலே தேர் தல் நிதி 11 லட்ச ரூபாய் கொடுப்பதற்கு அலையாய் அலைந்தேன்.

காடுமேடெல் லாம் சுற்றினேன். பகலென் றும், இரவென்றும் வெயி லென்றும் மழையென்றும் பாராமல் அலைந்து திரிந் தேன். அதற்கு முன்பு, 1952 ஆம் ஆண்டு காஞ்சிபுரத் திற்குச் சென்று அந்தப் பகுதி யிலே உள்ள கிராமங்களுக்கு கூட்டங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அவர்கள் தருகின்ற தேர்தல் நிதி, அந் தக் கூட்டத்தில் 50 ரூபாய், 100 ரூபாய் என்று அப்போது அளித்து அவற்றையெல்லாம் சென்னையிலே எஸ்.அய். ஏ.ஏ. மைதானத்தில் நடத் தப்பட்ட மாநாட்டிற்கு நானும் முன்னாள் அமைச்சராக இருந்த சி.வி.எம். அண்ணா மலை அவர்களும் அங்கே திரட்டப்பட்ட நிதியைக் கொண்டுவந்து அண்ணா விடத்திலே சமர்ப்பிப்போம்.

அண்ணா அப்போது சென் னையிலே எஸ்.அய்.ஏ.ஏ. மைதானத்தில் மாநாட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருப்பார். கொண்டு வந்த நிதி நூறு ரூபாய், இரு நூறு ரூபாய், அதிகமானால் அய்நூறு ரூபாய்; இதுதான் அன்றைக்கு மாநாட்டு நிதி.

அன்று என்னால் ரூ.11 லட்சம் நிதி; தம்பி ஸ்டாலினால் ரூ.101 லட்சம் நிதி!

இதுபோலத்தான் 1966 ஆம் ஆண்டு தேர்தல் நிதி. இப்படி சேர்ந்த தேர்தல் நிதிதான் ரூ.11 லட்சமாக உரு வெடுத்து; எனக்கே பதினோரு லட்ச ரூபாய் என்ற பெயர் அமைந்தது. மிஸ்டர் கரு ணாநிதி பதினோரு லட்சம் என்று அண்ணா அவர்களே அறிவிக்கின்ற அளவிற்கு அந்த பதினோரு லட்சத் திற்கு அவ்வளவு பாராட்டு கிடைத்தது.

தந்தை பொரு ளாளராக இருந்தபோது பதினோரு லட்சத்திற்கு அவ் வளவு பாராட்டு! இன்றைக்கு மகன் ஸ்டாலின் பொருளாளராக இருக்கும் போது திருச்சி மாநாட்டில் நிதி ரூ.101 லட்சம் குவிந்தி ருக்கிறது என்று சொன்னால், (பலத்த கைதட்டல்) இதை நான் எந்த அளவிற்குப் பாராட்டுவேன் என்பதை, தந்தை என்ற முறையிலே அல்ல,

கழகத் தலைவர் என்ற முறையிலே, கழகத் தினுடைய பொருளாளர் என்ற முறையிலே தம்பி ஸ்டாலினைப் பாராட்டுகி றேன். அவர் மாவட்டக் கழகச் செயலாளர்களிடத்தி லெல்லாம் எப்படி கிடுக்கிப் பிடி போட்டு அவர் தேர்தல் நிதியைச் சேகரித்தார், வழி வகைகளைச் செய்தார் என் பதை நான் அறிவேன் என் பதற்காக இதைச் சொல்லு கிறேனே அல்லாமல் வேறல்ல.

இப்பொழுது உள்ள ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி.

தி.மு.க. பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப் பட்ட இயக்கம். அந்த இயக் கத்தைச் சிதைத்து, அதை அ.தி.மு.க.வாக ஆக்கிய பெருமை அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு உண்டு. அந்த அ.தி.மு.க. தோன்றியபோது சட்டப் பேரவையிலே ஒரு விவா தம், ருசிகரமான விவாதம். நான் ஒரு பொருள் பற்றி விவாதிக்கின்ற நேரத்திலே அதுபற்றி விவரித்தேன். அ.தி.மு.க., அ.தி.மு.க. என்று சொன்னேன்.

அப்பொழுது அ.தி.மு.க.வின் பிரதான உறுப்பினராக இருந்த மதி யழகனுக்கு கோபம் வந்தது. அவர் அப்பொழுது அங்கே இருந்தார். பிறகுதான் இங்கே வந்தார். இப்படி பல பேர் அங்கே போய் இங்கே வந்தார்கள். அவர் என்னைப் பார்த்து, ஏன் நீங்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழ கம் என்று சொல்லாமல், அ.தி.மு.க., அ.தி.மு.க. என்று சொல்கிறீர்கள் என்று சட்ட சபையிலே என்னிடம் கேட் டார்.

நான் அப்போதே சொன் னேன். அப்படியெல்லாம் சொல்லமாட்டேன். அண் ணாவின் பெயருக்கு களங் கம் விளைவிக்க மாட்டேன். அ.தி.மு.க. என்று சொல்வ தற்குக் காரணம் இது தி.மு.க. அல்ல என்பதற்காகத்தான் அ.தி.மு.க. என்றேன்.

அண்ணாவின் கொள்கைகளுக்குஎதிரான ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி!

உதாரணம் சொல்ல வேண்டுமேயானால், சுத்தம் என்று சொன்னால் புரிகிறது. அதிலே அ சேர்த்து அசுத் தம் என்று சொன்னால், அதற்குப் பொருளே வேறு. தி.மு.க. என்று சொன்னால், அது ஒரு லட்சியக் கட்சி. அது அண்ணாவினால் உரு வாக்கப்பட்ட இயக்கம். ஆகவே, அண்ணாவின் தி.மு.க. என்றுதான் உச்சரிக்கிறோம்.

தமிழ் ஓவியா said...


அ.தி.மு.க. என்று உச்சரித் தால், இதில் அ சேர்த்திருக் கிற காரணத்தால் - எப்படி மங்கலம் என்பதில் அ சேர்ந்தால் அமங்கலமாகி விடுகிறதோ, எப்படி நீதி என்ற சொல் அ சேர்ந்தால் அநீதி என்று ஆகி விடு கிறதோ, அதைப்போல தி.மு.க.விலே அ என்ற எழுத்தைச் சேர்த்தால் அது அ.தி.மு.க. என்றுதான் ஆகி றது என்று சொன்னேன். கோபித்துக் கொண்டார்கள். நான் அவர்களுடைய கோபத் தைப் பொருட்படுத்தவில்லை.

உண்மையைச் சொன்ன நிம்மதி எனக்கு. அன்றைக் கும் இருந்தது. இன்றைக் கும் இருக்கிறது.

அ.தி.மு.க. என்பது திரா விட முன்னேற்றக் கழகத்தி னுடைய கோட்பாடுகளுக்கு அண்ணா உருவாக்கிய கொள்கைகளுக்கு, அண்ணா எடுத்துச் சொன்ன லட்சியங் களுக்கெல்லாம் விரோத மானது.

தி.மு.க. 10 ஆவது மாநில மாநாட்டில் திரண்டிருந்த லட்சோப லட்சம் தோழர்களால் திணறியது திருச்சி மாநகரம்!

அண்ணா போற்றிப் பாதுகாத்த திராவிட இயக்கக் கொள்கைகளையும், அடை யாளங்களையும் வேரோ டும், வேரடி மண்ணோடும் குழி தோண்டிப் புதைக்க வேண்டுமென்ற குரோத எண்ணத்தோடு ஜெயல லிதாவின் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா பற்றியும், அ.தி.மு.க. அரசு பற்றியும் தொடர்ந்து உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்ற மும் அளித்த சில கண்டனத் தீர்ப்புகளை இந்த மாநாட் டில் சுட்டிக் காட்டினாலே நீங்கள் இவர்களைப் பற்றிப் புரிந்து கொள்வீர்கள். ஜெய லலிதா ஆட்சியில் வந்து அமர்ந்தவுடன் சமச்சீர் கல் வித்திட்டத்திற்கு சவக்குழி வெட்டினார்.

அதற்கு ஜெய லலிதா மூடுவிழா நடத்திய போது, அது குறித்த வழக் கில் நீதியரசர்கள் திரு. எஸ்.எஸ்.ராஜேஸ்வரன், திருமதி கே.பி.கே. வாசுகி ஆகியோர் அளித்த தீர்ப்பில், சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது, சிறந்த வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக்குழு விரி வாக ஆராய்ந்து, சமச்சீர் கல்வி முறையை அமல் படுத்த பரிந்துரை செய்துள் ளது.

அந்தக் குழுவின் பரிந் துரைகளை எளிதாகப் புறக் கணித்துவிட முடியாது. இது தவிர, ஏற்கெனவே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையைச் செலவிடுவது அவசியம்தானா? என்று கேட்டார்கள்.

தமிழ் ஓவியா said...

சமச்சீர்க் கல்வி என்ன பாடுபட்டது?

அதற்குப் பிறகும், தமி ழக ஜெயலலிதா அரசு சென்னை உயர்நீதிமன்றத் தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்ற நீதியரசர்கள் பி.எஸ்.சவுகான், சுதந்திர குமார் ஆகியோர் அளித்த தீர்ப்பில், 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தொடர்ந்து அமல்படுத்தப் படவேண்டும். அதை இடை யில் நிறுத்தினால் குழப்பம் ஏற்படும்.

2 முதல் 5 ஆம் வகுப்பு வரையும், 7 ஆம் வகுப்புமுதல் 10 ஆம் வகுப்பு வரையும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் என்று கூறினார்கள். சென்னை உயர் நீதிமன்றமும் வழக்கை தொடர்ந்து விசாரித்து, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி யும், மற்றொரு நீதிபதியும் அளித்த தீர்ப்பில், மாநில அரசு அதனுடைய அதிகார வரம்பை மீறியுள்ளது என்று கூறுவதற்கு எங்களுக்கு எந்த விதத் தயக்கமும் இல்லை.

தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லாது. அதை ரத்து செய்கிறோம். சமச்சீர் சட்டத்தின்கீழ் வரும் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகத்தை மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண் டும் என்றெல்லாம் கூறி னார்கள். இந்தத் தீர்ப்பை யும் எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதி மன்றம் சென்றது.

உச்சநீதிமன்றம் தனது இடைக் கால உத்தரவில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க முடி யாது, 2-8-2011-க்குள் சமச்சீர் பாடப் புத்தகங்களை விநி யோகிக்க வேண்டும் என்று தெரிவித்தது. அதையும் தமி ழக அரசு மதித்து சமச்சீர் பாடப் புத்தகங்களை விநி யோகிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் சமச்சீர் கல்வி வழக்கின் இறுதி விசா ரணை நீதிபதிகள் பாஞ்சல், தீபக் வர்மா மற்றும் சவ் ஹான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடை பெற்றது.

எடுத்த எடுப்பி லேயே, நீதிபதிகள், தி.மு.க. அரசின் சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும் என்று 2010 ஆம் ஆண்டே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் - சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு, சட்டத் திருத் தம் கொண்டு வந்தது ஏன்? அதற்கான அவசியம் என்ன? என்று கேட்டனர்.

அரசுக் காக வாதாடிய வழக்கறிஞர் பி.பி. ராவ் அவர்களே, தமி ழக அரசுக்கு சரியான சட்ட ஆலோசனை வழங்கப்பட வில்லை, தேவையில்லாத சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து பிரச்சினையில் சிக்கிக் கொண்டு விட்டோம் என்று ஒப்புதல் வாக்கு மூலமே கொடுத்தார். நீதிபதிகள் இறு தியாக வழங்கிய தீர்ப்பில், சமச்சீர் கல்வியை பத்து நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும்; எந்தவொரு சட்டத்தையும் ஆட்சி மாற் றம் காரணமாக மாற்றக் கூடாது; எதிர்கால விளைவு களைக் கருத்தில் கொண்டே எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும்;

அரசியல் கட்சிகள் தங்களது விருப்பு வெறுப்புகளுக்காக கல்வி முறையை மாற்றக் கூடாது என்று கூறி, தமிழக அரசின் மனுவினை தள்ளு படி செய்தார்கள். ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஜெய லலிதாவிற்கு விழுந்த முதல் சம்மட்டி அடியாகவே இந் தத் தீர்ப்பு கருதப்பட்டது. சமச்சீர் கல்வித் திட்டம் என்பது அறிஞர் அண்ணா அவர்களால், அவரைப் போன்ற கல்வியாளர்களால் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டம்.

அந்தத் திட்டத்தை வேண்டா மென்று உச்சநீதிமன்றம் வரை சென்று, உயர்நீதிமன் றத்தின் கண்டனத்திற்கும் உள்ளாகி, இப்போது சமச்சீர் கல்வித் திட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் இந்த வெற்றிக்கு காரணம் திராவிட முன்னேற் றக் கழகமும், திராவிட இயக்கங்களும், என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

ஆக நாங்கள் எதிர்க் கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சி என்னென்ன திட்டங்களைக் கொண்டு வர வேண்டுமோ, எந்தத் திட்டங்களைக் காப்பாற்ற வேண்டுமோ அந்தச் செயல் களைச் செய்துகொண்டே இருப்போம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

நீதிமன்றங்களின் கண்டனங்கள்!

நீதிமன்றத்தின் கண்ட னத்திற்கு ஆளான தீர்ப்பு களில் மற்றொரு தீர்ப்பு. பேரறிஞர் அண்ணா நூல கத்தை ஜெயலலிதா எழும் பூரில் உள்ள டி.பி.அய். வளா கத்திற்கு மாற்றப் போவதாக அறிவித்தார். இதுகுறித்த வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகி யோர் அடங்கிய முதன்மை அமர்வு, இப்படி ஒரு அரு மையான, நவீன வசதி கொண்ட, நேர்த்தியான முறை யில் உருவாக்கப்பட்ட சிறந்த நூலகத்தை இடமாற் றம் செய்வது ஏன்?

மருத்துவமனை கட்டுவது என் றால் மெரினா கடற்கரையில் கட்டலாமே, அரசின் இந்த முடிவு உள்நோக்கம் கொண் டது என்று நீதிபதிகள் கண் டனம் தெரிவித்தார்கள். இவ் வாறு நீதிபதிகள் மூலமாக பெற்ற கண்டனங்கள் ஒன் றல்ல, இரண்டல்ல, ஜெய லலிதா ஆட்சியில், ஜெய லலிதா அரசுக்கு மாத்திர மல்ல, ஜெயலலிதா பெயரிலே உள்ள சொத்துக் குவிப்பு வழக்கிலே நடைபெற்ற விநோதங்கள் எல்லாம் கேலிக்குரியவை. அப்ப டியா என்று மூக்கில் விரல் வைக்கக் கூடியவை.

தமிழ் ஓவியா said...

உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். எங்கே யாவது ஒரு குற்றவாளி - குற்றம் சாட்டப்பட்டவர் - எனக்கு இந்த நீதிபதி கூடாது, இந்த நீதிபதிதான் வேண்டு மென்று - தன் இஷ்டத்திற்கு நீதிபதியை நியமித்தால்தான் அந்த நீதிமன்றத்திற்கு நான் வருவேன் என்று சொன்னது உண்டா? ஜெயலலிதா சொன் னார். இந்த நீதிபதியை எனக்குப் பிடிக்காது, நீதிபதி பாலகிருஷ்ணன்தான் தொடர்ந்து நீடிக்க வேண்டு மென்றார்.

அந்தப் பால கிருஷ்ணாவுக்கு ஓய்வு பெறும் வயது முடிவடைந்த நேரத்தில், அவர் ஓய்வு பெற் றாலும் விடக் கூடாது, அவரேதான் தொடர்ந்து நீடித்து என் வழக்கை விசா ரித்து தீர்ப்பு கூற வேண்டும் என்று, நம்முடைய பேரா சிரியர் தொடுத்த வழக்கிலே அழுத்தந்திருத்தமாக அந்த அம்மையார் வாதிட்டார். என்ன காரணம் என்பது பிறகு தான் தெரிந்தது.

நீதிமன்றத்தை வளைக்கப் பார்ப்பதா?

நீதிபதி ஒருவருக்குச் சாத கமாக அநியாயமாக தீர்ப்பு வழங்க முன் வருவார் என் றால் அதற்குப் பொருள் என்ன? ஏதோ ஒரு தவறு எங் கேயோ நடக்கிறது.ஏதோ ஒரு அநியாயம் எங்கேயோ நடக்கிறது. ஏதோ ஒரு நாணய மற்ற செயல் எங்கேயோ நடக்கிறது என்று தானே அதற்குப் பொருள். ஆனால் நல்லவேளையாக அந்த நீதிபதி தன்னுடைய பதவிக் காலம் முடிந்ததை ஏற்றுக் கொண்டு, அந்தப் பொறுப் பிலிருந்து போய் விட்டார்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது, நேற்று என்ன நடந் தது? சொத்துக் குவிப்பு வழக் கில் நல்லதொரு வேடிக்கை. ஜெயலலிதா தரப்பில் கடைசி யாக ஒரு மனு போட்டார் கள். இப்படி மனு போட்டு, மனு போட்டு வழக்கை இழுத்தடித்துக் கொண்டே வருகிறார்கள். ஏறத்தாழ பத்து, பதினைந்து ஆண்டுக் காலமாக நீடித்துக் கொண்டி ருக்கிறார்கள்.

சில நாள் களுக்கு முன்பு இவர்கள் தாக்கல் செய்த மனுவில், என்னுடைய வெள்ளிப் பொருள்கள் அப்போது பாஸ் கரன் என்பவரிடம் ஒப் படைக்கப்பட்டன. அவரிட மிருந்து அந்தப் பொருள் களையெல்லாம் நீதிமன்றத் திற்குக் கொண்டு வரவேண் டும் என்று மனு போட்டார் கள். உடனே நீதிபதி அது பற்றி விசாரிக்கச் சொல் கிறார். யாரிடம் அந்தப் பொருள்கள் எல்லாம் இருக் கிறது என்று சொன்னார் களோ, அந்தப் பாஸ்கர னைப் போய்த் தேடினார் கள்.

ஏன்? இவர்களுக்கு உண்மை தெரியும். அந்தப் பாஸ்கரன் உயிரோடு இல்லை, இறந்து விட்டார். இறந்து விட்டவரை அழைத்து வந்து பொருள்களை பெற வேண்டுமென்றால் எப்படி இயலும்? இந்தக் கேள்விக்கு விடை ஜெயலலிதாவுக்குத் தெரியாதது அல்ல. தெரிந் தும்கூட, அதன் காரணமாக ஒரு சில நாள்கள் வழக்கை நீடிக்கலாமே? வாய்தா வாங் கலாமே? என்பதற்காக பாஸ் கரன் வீட்டிற்குச் சென்று விசாரிக்க வேண்டுமென் றார்கள்.

பிறகு விசாரித்தால், அந்த முகவரியிலேயே அவர் இல்லை. அதை ஒரு காரண மாக குறிப்பிட்ட முகவரி யிலே அவர் இல்லை, அவரைத் தேடிக் கண்டு பிடிக்கிறோம் என்று மனு போடுகிறார்கள். உண்மை என்னவென்றால், அந்தப் பாஸ்கரன் இறந்து விட்டார். அதைப் பற்றி நம்முடைய பேராசிரியருக்காக ஆஜரான வழக்கறிஞரும், நாடாளு மன்ற உறுப்பினருமான அருமைத் தம்பி தாமரைச் செல்வன், பாஸ்கரன் இறந் ததற்கான இறப்புச் சான்றி தழைப் பெற்று நீதி மன்றத் திலேயே அதைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இறந்து போனவர் உயிரோடு இருக்கிறார் என்று ஜெய லலிதாவின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தாக்கல் செய் திருக்கிறார்கள். நீதிபதியும் கோபமடைந்து நடவ டிக்கை எடுப்பேன் என்றும் வாய்தா வாங்கினால் விட மாட்டேன் என்றும் சொன்ன பிறகுதான் அடங்கியிருக் கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


இவ்வாறு நீதிமன்றத் தில் வழக்குகளை இழுத் தடிக்க, வாய்தா வாங்க என்னென்ன ஜாலங்களைச் செய்ய முடியுமோ, அவ்வ ளவு ஜாலங்களையும் நீதி மன்றத்தில் செய்கின்ற ஜெய லலிதாதான் நீதி, நேர்மை, நியாயம் என்று பேசிக் கொண் டிருக்கிறார்.

தொடர்ந்து நீதி மன்றக் கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார் ஜெய லலிதா. ஆனால் வாய்தா வுக்கு மேல் வாய்தா வாங்கி, வழக்குகளை பல ஆண்டு களுக்கு இழுத் தடிப்பதில் ஜெயலலிதா வல்லமை காட்டுகிறார். நீதி நெறிமுறை களையே மலினப்படுத்து கிறவர் மாநிலத் தின் முதல் அமைச்சராக இருப்பது, தமிழ்நாட்டிற்கு கெட்ட வாய்ப்பு.

வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரமான காவிரி நதி நீர் பிரச்சினை யிலே ஜெயலலிதா போடு வது இரட்டை வேடம்.
தமிழக மீனவர்களுக்கு முக்கியமான கச்சத் தீவு பிரச்சினையில் ஜெயலலிதா போடுவது இரட்டை வேடம்.

தமிழ் ஓவியா said...

பிணி தீர பேரணி!

இந்தச் சூழ்நிலையிலே யேதான், இன்றைக்குக் கூட நிருபர்கள் கேட்டார்கள், இங்கே நம்மிடையே பேசிய கூட்டணிக் கட்சித் தலை வர்கள் சொன்னார்கள், நாம் யார் யாருடன் உடன்பாடு கொள்ளப்போகிறோம். யார் யாரோடு நாம் தோழ மையை பெருக்கப்போகி றோம் என்று கேட்டார்கள்.

நான் உடனடியாக அவர் களுக்கு சொல்ல முடியா விட்டாலும் கூட, நான் நினைத்துக் கொண்டிருக்கிற பதில், எங்களுடைய கூட்ட ணியிலே, யார் யார் இடம் பெற வேண்டும் என்று கருதுகிறார்களோ, சேது சமுத்திரத் திட்டத்தை யார் ஆதரிக் கிறார்களோ அவர் கள் இடம் பெற வேண்டும். யார் மதவாதத்திற்கு எதி ராக இருக்கிறார்களோ அவர்கள் இடம் பெற வேண்டும். அதுதான் தி.மு. கழகத்தின் முயற்சியாக உருவாகின்ற இந்த அணி யில் சேரக்கூடியதாக இருக்கமுடியும்.

அப்படி சேரக்கூடியவர்களை நாம் தேர்ந்தெடுத்துதான், அணி அமைத்திருக்கி றோம். அந்த அணி விரி வாவதற்கு மற்றவர்களும் முன்வருவார் களேயா னால் அவர்களும் சேர்ந்து இந்த அணி பெரிய அணி யாக ஆகும். அது பேரணி யாக ஆகும். அந்த அணி யிலே இருக்க வேண்டும் என்பது சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிப்பதாக இருக்க வேண்டும். மத வாதிகளை ஆதரிக்க மாட் டோம் என்று உறுதி எடுத் துக் கொள்பவர்களாக இருக்கவேண்டும்.

மதவாத அரசு உருவாவதற்கு ஒத்து ழைக்க மாட்டோம் என்று சொல்பவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இந்த நிபந்தனைகளை எல் லாம் ஏற்றுக் கொண்டு, இங்கே நம்முடைய தோழ மைக் கட்சித் தோழர்களை யெல்லாம், காலையிலும், மாலையிலும் பேசும்போது சொன்னார்களே, அந்த சமூக நீதிக் கொள்கைக்கும், திரா விட இயக்கத்தினுடைய இட ஒதுக்கீடு கொள்கைக் கும், இடையூறு இல்லா மல், ஆதரவு தருபவர்கள் தான் இந்த அணியிலே இடம் பெறுவார்கள்.

தமிழ் ஓவியா said...

அந்த அணி முற்போக்குக் கூட்ட ணியாக, தி.மு.க. தலைமை யிலே அமைகின்ற அணி யாக இருக்கும். அந்த அணி வெற்றி பெற ஜெயலலிதா அரசினால் ஏற்பட்ட பிணி தீர, இந்த மாநாட்டில் குழு மியிருக்கின்ற உங்களை யெல்லாம் அழைக்கின்றேன் தொண்டாற் றுங்கள் என்று.

இதே திருச்சியில் தந்தை பெரியார் அவர்கள், கூட்டிய ஒரு மாநில மாநாட்டில், உருக்கமாக பேசியது எனது ஞாபகத்திற்கு வருகிறது, அந்த மேடையிலே நானும் இருந்தேன். மறைந்த வழக் கறிஞர் டி.பி. வேதாசலம் அவர்கள், அப்போது திரா விடர் கழகத்தின் தலைவர். அவரும் அந்த மேடையிலே இருந்தார்.

நமது அணி நாடாளு மன்றத் தேர்தலில் வெல்வது உறுதி!

பெரியார் மேடைக்கு அழைக்கப்பட்டார், மேடைக்கு வந்ததும், எதிரே குழுமியிருந்த மக்களை எல்லாம் பார்த்து, பெரி யோர்களே, தாய்மார்களே என்று அழைத்துவிட்டு, சொன்னார் என்னுடைய உயிருக்கும் உயிரான வாலிப ஜீவ ரத்தினங்களே என்று அழைத்தார். எவ்வளவு தழுதழுத்த குரலில் எவ்வ ளவு உணர்வோடு எந்த அளவிற்கு பெரியார் அவர் கள் அன்றைக்கு அழைத் தாரோ, அதே உணர்வோடு என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே (பலத்த கைதட்டல், ஆரவாரம்) நீங் கள் எல்லாம், நாம் அணியை உருவாக்குகிறோமோ இல் லையோ, உருவாக்கப் போகிறோம் அது உண்மை.

அந்த அணி வெல்லப் போகி றது அதுவும் உண்மை. அந்த வெற்றிக்கு காரண கர்த்தாக் களாக இங்கே வீற்றிருக்கிற நம்முடைய கூட்டணிக் கட்சிகளுடைய தலைவர் கள் எல்லாம் இருக்கிறார் கள், அவர்களோடு கரம் கோர்த்து, தோளோடு தோள் சேர்ந்து, திராவிட முன்னேற் றக் கழகம், இந்த நாடாளு மன்றத் தேர்தலிலே தன்னு டைய கடமையை ஆற்றும்.

தமிழ் ஓவியா said...

அப்படி ஆற்றுகின்ற அந்த கடமையின் தொடர்ச்சியாக, தமிழகம் செழிப்பதற்கும், இந்தியாவிலே ஜனநாயகம் தழைப்பதற்கும் நாம் கார ணகர்த்தாக்களாக ஆவோம்.

எல்லோரும் அதற்கு ஏற்பு டையவர்களாக தயார்படுத் திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இந்த மாநாட்டை இவ்வ ளவு வெற்றிகரமாக நடத்திய என்னுடைய அருமைத் தம்பி கே.என். நேருவுக்கும், அவரோடு சேர்ந்து பணி யாற்றிய தொண்டர்களுக் கும் தோழர்களுக்கும் நன்றி யைத் தெரிவித்து என்னு டைய உரையை நிறைவு செய்கிறேன்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் கள் உரையாற்றினார்.

சேது சமுத்திரத் திட்டத்தையே கூடாது என்பதா? மாநாட்டில் கலைஞர் கேள்வி

தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் சேது சமுத்திரத் திட்டத்தில் ஜெய லலிதா போடுவது இரட்டை வேடம். சேது சமுத்திரத் திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களால் கனவுத் திட்ட மாக அறிவிக்கப்பட்ட திட் டம். அந்தத் திட்டத்தையே நிறைவேற்ற முடியா தென்று, உச்சநீதிமன்றம் வரை சென்று, வழக்கு தொடுத்து, அதற்கு வாய்தா கேட்டதின் காரண மாக, இப்போது அங்கே இந்த வழக்கு நடைபெறா மல் அதன் காரணமாக தொடங்கப்பட வேண்டிய சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்படாமல்,

அதற்கு மத்திய அரசு உதவிப் புரிய முன் வந்தும்கூட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கக்கூடிய அந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தாலும், அது நிறைவேற்றப்படக் கூடாது என்பதிலே ஜெய லலிதா அழுத்தந் திருத்தமாக இருப்பதின் நோக்கம் என்ன? காரணம் என்ன? எதற்காக வேண்டாம் என்கிறார்? அதுவும் அண்ணா அறிவித்த திட்டம்தானே?

கட்சிக்குப் பெயர் அண்ணா தி.மு.க., ஆனால் அண்ணா அறிவித்த திட்டம், அண்ணா தன்னு டைய தம்பிமார் களையெல் லாம் பார்த்து 1967ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற போது அவர்களுக்கெல் லாம் அறிக்கை விடுத்து சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி ஒவ்வொரு ஊரி லும் கூட்டங்கள் போடுங் கள் என்று ஆணையிட்டு, அப்படி நடைபெற்ற கூட் டங்களில் எல்லாம் சேது சமுத்திரத் திட்டத்தை நிறை வேற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தல் செய்தார்கள்.

தமிழ் ஓவியா said...


மத்திய சர்க்காரும், அன் றைக்கு மன்மோகன்சிங் அவர்களும், சோனியா காந்தி அவர்களும், இன்னும் சொல்லப்போனால் இன் றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கின்ற பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அந்த விழாவிற்கு வந்து, சேது சமுத்திரத் திட்ட ஆரம்ப விழா நடைபெற்று அதற்கு தடை விதிக்கக் கோரி, தடை விதிக்கப்பட்டு, இன்றைக்கு அந்த திட்டம் தமிழகத்திலே நிறைவேற்றப்படாமல் இருக் கிறது.

உண்மை என்ன? நாம் அறிவித்த திட்டம் என்பதால் அதை நிறைவேற்றாமல் செய்ய வேண்டும் என்பது ஜெயலலிதா என்ற அந்த அம்மையாருக்கு பெரிதான எண்ணம். அண்ணாவின் திட்டம் என்று சொன்னால், அ.தி.மு.க.காரர்கள் சொல் வார்கள், அண்ணா என்ன அறிவிப்பது? எங்கள் அம்மா அறிவிக்கட்டும் என்று. ஆனால் அண்ணா அறிவித்த சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் தமிழகம் வளமாகும். தமிழகம் வாணி பத்திலே முன்னேறும்.

தமி ழகம் பல நாடுகளுடன் தொடர்பு கொண்டு வாணி பத்தைப் பெருக்கும். அப் படிப்பட்ட அருமையான திட்டம். தமிழகத்தையே வளம் கொழிக்க வைக்கக் கூடிய திட்டம். தமிழகத்தி னுடைய எதிர்காலத்தை ஒளிமயமாக ஆக்கக் கூடிய திட்டம். தமிழகத்திலே இன் னும் இயற்கை வளங்களை உருவாக்கக் கூடிய திட்டம். அந்தத் திட்டத்தை வேண் டாம் என்று ஜெயலலிதா கூறுவதற்குக் காரணம். இதை தி.மு.க. கொண்டு வந்தது என்ற ஒரே காரணம் தான்.

இந்த திட்டம் அண்ணா அறிவித்த திட்டம்.அதற்கு எழுச்சி நாள் கொண்டாடுங் கள் என்று கேட்டுக் கொண்டு, வேண்டுகோள் விடுத்த திட்டம். அத்தகைய திட் டத்தை - சேது சமுத்திரத் திட் டத்தை இன்றைக்கு வேண் டாம் என்று பொதுக் கூட்டத் திலே அல்ல, உச்சநீதிமன் றத்திற்கே சென்று முறை யிட்டு, வழக்குத் தொடுத்து, ஆயிரத்தி சொச்சம் கோடி ரூபாய் செலவிலே நிறை வேற வேண்டிய திட்டத்தை, இன்றைக்கு முடக்கி வைத் திருக்கிறார் என்றால், இவரா தமிழ்நாட்டிற்கு நல்லது செய்யக்கூடிய முதலமைச் சர்? இவராலா தமிழகம் முன்னேறும்? இவரா தமி ழர்களைக் காப்பாற்றக் கூடி யவர்?

என்ன காரணம், யாரையோ சில பேரை திருப்திப்படுத் துவதற்காக ஜெயலலிதா இந்த திட்டமே வேண்டாம் என்று சொல்லுகிறார். ஆனால் உண்மை என்ன?கடந்த சில தேர்தல் அறிக்கைகளில் அ.தி. மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே சொல்லி யிருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், சேது சமுத்திரத் திட்டத்தை நிறை வேற்றும் என்று சொல்லி யிருக்கிறார்கள்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த திட்டமே வேண் டாம் என்று உச்சநீதிமன்றம் சென்றிருக் கிறார்கள். உச்ச நீதிமன்றமும் வேறு வழியில் லாமல் அதை நிறுத்தி வைத் திருக்கிறது. மிக முக்கிய மான கால கட்டத்தில் இந்த மாநாடு நடைபெற்று நிறைவு பெறவிருக்கிறது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து நமக்குப் பல பெரும் பணி கள் இருக்கின்றன. அது தான் நாடாளுமன்றத் தேர்தல் பணி.

நாடாளுமன்றத் தேர் தலில் இங்கே திராவிட முன் னேற்றக் கழகமும் வேறு சில கட்சிகளும் உடன்பாடு கொண்டு அந்த கட்சிகளின் சார்பில் அணிகள் அமைக் கப்பட்டு, அந்த அணிகள் நாடாளுமன்றத் தேர்தல் அணியாகத் திகழ இருக்கின் றது. இந்த அணியில் நம்மு டைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் காதர் மொய் தீன், அருமைச் சகோதரர் தொல். திருமாவளவன் எம்.பி., டாக்டர் கிருஷ்ண சாமி எம்.எல்.ஏ., பேராசிரியர் எம்.எச். ஜவாகிருல்லாஹ் எம்.எல்.ஏ., ஆர்.எம்.வீ., பேரா சிரியர் சுப. வீரபாண்டியன், கு.செல்லமுத்து, பொன். குமார், பேராயர் எஸ்றா சற் குணம், என்.ஆர். தனபாலன், திருப்பூர் அல்தாப், எல்.சந்தா னம்,

பி.என். அம்மாசி, லியா கத் அலிகான் (என்னுடைய உதவியாளர், வீரமணியை விட்டு விட்டீர்களே என்கி றார், அவர் இந்த அணியிலே சேரமாட்டார், ஏனென்றால் அவருக்குத் தேர்தல் அணி பிடிக்காது. அவர் விரும்பு கிற அணி எல்லாம் சமுதா யத்தை தந்தை பெரியார் வழியிலே திருத்துகின்ற அணிதான். அது தான் எல்லா வற்றையும் விடப் பெரிய பேரணி. அந்தப் பேரணி யிலே அவர் இருக்கிற கார ணத்தால் நான் வேண்டு மென்றுதான் அவருடைய பெயரைச் சொல்லாமல் விட்டேன்)

Read more: http://viduthalai.in/page-7/75468.html#ixzz2tdD0ClE9

தமிழ் ஓவியா said...

அரசில் மூக்கை நுழைக்கு மூட நம்பிக்கை

- பேராசிரியர் அ.மார்க்ஸ்

கர்நாடகாவில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரசு குடியிருப்புகளை வாஸ்து முறைப்படி மாற்றிக் கட்டக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. வாஸ்து உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை எதிர்த்து உத்தரவிட்டது நல்ல செய்திதான். ஆனால், இப்படியொரு உத்தரவு போட்டுத் தடுக்க வேண்டிய அளவுக்கு பிரதிநிதிகளே பின்பற்றி வருகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

கர்நாடகாவில் குறிப்பாக விதான் சௌதா, கர்நாடகாவின் தலைமைச் செயலகமாக இயங்கி வரும் புராதனச் சிறப்பு மிக்க கட்டிடம். சமீபத்தில் ஒரு அமைச்சர் விதான் சௌதாவில் இரண்டு அறைகளுக்கு நடுவில் இருக்கும் சுவரை அரசின் முன்அனுமதி பெறாமல் இடித்துவிட்டார். அவர் வாஸ்துவை தான் நம்புவதில்லை என்று கூறியிருந்தாலும், இடித்ததற்கான சரியான விளக்கத்தை இன்னும் தர இயலவில்லை.

இட நெருக்கடி காரணமாக விதான் சௌதாவையொட்டி விகாஸ் சௌதா என்ற கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், அதனைக் கட்டியதால்தான், கர்நாடக அரசியல் ஸ்திரத்தன்மை இழந்து விட்டதாகவும் அதனால் அதிலிருந்து வேலை பார்க்க மறுத்த அமைச்சர்கள் உண்டு.

இத்தனை மோசமான மூடத்தனங்கள் தொடர்கிற நிலையில், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வர பா.ஜ.க. வினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சட்டம் அடிப்படை நம்பிக்கைகளை எதிர்ப்பதாக அவர்கள் வாதத்தை முன்வைக்கின்றனர். ஜாதியக் கட்டமைப்பும் பெண்ணடிமைத்தனமும் பல ஆயிரம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் வேரூன்றி இருப்பதாலேயே - அவற்றை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன?

தமிழ் ஓவியா said...

பெண்களுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று அவர்களை அடிப்பதும், ஊருக்கு மழை பெய்ய வேண்டுமென்றால் நிர்வாணமாக ஊரைச் சுற்றி வர வேண்டும் என்பதும் வெறும் மூடநம்பிக்கைகள் மட்டுமல்ல, அவை ஆணாதிக்கத்தின் இன்னொரு முகமே.

இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறும் மற்றொரு கருத்து, மூட நம்பிக்கைகளில் ஈடுபடும் மக்களே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத போது சட்டம் அதைக் குற்றம் என்று சொல்வது தனி மனித உரிமையைப் பறிப்பதாகும். எவ்வளவு சாமர்த்தியமான பேச்சு அல்லவா?

அறிவியல்பூர்வமற்ற ஒரு விஷயத்தை, சரி என்று நம்பிக் கொண்டிருப்பதைத் தானே மூடநம்பிக்கை என்று கூறுகிறோம். அப்படியான நம்பிக்கையில் தன் தலையில் தானே தேங்காய் உடைத்துக் கொள்பவர்கள், உடலின் அங்கங்களைத் துளையிட்டுக் கொள்பவர்கள் எப்படி தாங்களே முன் வந்து இவற்றுக்கு எதிராக புகார் அளிப்பார்கள்?

குழந்தைத் திருமணத்தைச் சரியென்று நம்பி, அதைச் செய்பவர்கள் அதற்கு எதிராகப் புகார் கொடுப்பார்களா? ஆனால் அவைகளைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையல்லவா? இதற்காக இந்தியச் சமூகத்தில் நடைபெற்ற மக்கள் இயக்கங்களின் தொடர்ச்சியாகத்தான் இக்கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேறின.

இதே போன்றதொரு அனுபவத்தை மஹாராஷ்ட்ராவில் காண முடியும். அங்கு மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிற்போக்குவாதிகள் அந்தச் சட்டத்தை எதிர்த்ததன் காரணமாக சம்பந்தப்பட்டவர்களே புகார் அளித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்ற திருத்தத்துடன் அந்தச் சட்டம் இயற்றப்பட்டது. இதற்காக பல ஆண்டுகளாகப் போராடி வந்த நரேந்திர தபோல்கர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உயிர்த் தியாகத்திற்குப் பிறகும் இச்சட்டம் வலுவான முறையில் இயற்றப்படவில்லை என்பது ஆட்சியாளர்களின் பண்படாத நிலையைக் காட்டுகிறது.

இந்த விவாதங்களில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், மூட நம்பிக்கை எதிர்ப்பே, இந்து மதத்தை எதிர்ப்பது என திரித்துப் பிரச்சாரம் செய்வதாகும். மற்ற மதங்களிலும் மூடத்தனம் உள்ளது என்ற வாதத்தை முன்வைத்து, இந்து மதத்திலும் அந்த நம்பிக்கைகள் தொடர்வது தவறில்லை என வாய் கூசாமல் வாதம் வைக்கிறார்கள். ஆனால், இந்த வாதம் அப்பாவிகளின் ஏமாற்றத்தைத் தடுக்க எந்த விதத்திலும் பயன்படாது என்பதே உண்மை.

சட்டத்தினால் மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது ஒரு புறமிருக்க, சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளே இந்தப் பழக்கங்களின் விளம்பரப் பலகைகளாக இருக்கிறார்கள் என்ற உண்மை, நாம் அடிப்படையிலான மாற்றத்துக்குக் கடுமையாகப் போராட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

குழந்தைப் பருவத்திலிருந்தே ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளைக் கேட்டு விஷயங்களைப் புரிந்து கொள்ளும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். தண்ணீர் ஊற்றுவதால் தான் செடி வளர்கிறது என்பது நமக்குத் தெரியும், ஆனால், குழந்தை அதனை ஆர்வத்துடன் கேட்கும் போது, அதன் ஆர்வத்தைக் குறைத்து விடாமல், இது இப்படித்தான் என்று மட்டும் கூறாமல், அதற்கான சரியான விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.

நமது குடும்பங்களும் பள்ளிக்கூடங்களும் குழந்தைகளைக் கேள்வி கேட்கத் தூண்டக்கூடிய இடங்களாக மாற வேண்டும். பாடப் புத்தகங்களிலேயே மூட நம்பிக்கைகள் எவை என்று கூறப்பட்டிருக்க வேண்டும். பள்ளியில் கேள்வி கேட்காத மாணவர்களை உருவாக்கிவிட்டால், பிற்காலத்தில் அது தன்னம்பிக்கையுள்ள மனிதர்களை விளைவிக்காது.

பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே கடவுள், பூஜை, ஸ்லோகம், ஆகியவற்றைக் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்துகிறோம். உண்மையில் கேள்வி கேட்பதையும் பழக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அறிவார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்.

தமிழ் ஓவியா said...

ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம்

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந3) துறை அரசு ஆணை (நிலை) எண் 92 நாள் 11.9.2012இன்படி, +2 படித்து முடித்து சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளைப் படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிருத்துவமதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர் மாணவியர்களுக்கு முழுக் கட்டணத்தையும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு வழங்கும். இது 2011_-2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.

ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் பெற்றோர்களின் வருமானம் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் நிபந்தனை.

இத்தகு நிதி உதவியின் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பல்லாயிரக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் உட்பட படித்துப் பயன்பெற்றனர்.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தீண்டத்தகாத மக்களாக வெறுக்கப்பட்டவர்கள் கல்வி வாய்ப்புப் பெற்றால்தான் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் என்பது யதார்த்தமானதாகும்.

இந்நிலையில் ஏற்கெனவே உள்ள அரசாணை 92-க்குப் பதிலாக அரசாணை எண் 106 மற்றும் 107 என்று இரு ஆணைகள் 4.12.2013 நாளிட்டு ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஆணைகளின்படி ஏற்கெனவே சுயநிதிக் கல்லூரிகளுக்கான முழுக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்பதற்குப் பதிலாக, அரசு கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் ரூபாய் 40 ஆயிரம், தனியார் சுயநிதிக் கல்லூரி ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.70 ஆயிரம் என்ற நிலையில் இதுவரை 70 ஆயிரம் ரூபாயை முழுமையாக அரசே ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக அரசு ஒதுக்கீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வெறும் ரூ.40 ஆயிரம் மட்டும்தான் தனியார் கல்லூரிகளுக்கும் அளிக்கப்படும் என்பதுதான் புதிய ஆணையின் சாரமாகும்.

இந்தப் புதிய ஆணையின் காரணமாக அரசு செலுத்தும் தொகை போக மீதியை மாணவர்களே கட்டும் நெருக்கடியும், சுமையும் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவும், போக்கும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். இவ்வளவுக்கும் மத்திய அரசால் அளிக்கப்படும் உதவி நிதி இது.
மாநில அரசு மூலமாக, மத்திய அரசு ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக்காக நிதியை வழங்குகிறது. இடையில் நந்தியாக இருந்து தமிழ்நாடு அரசு தடை செய்வது ஏன்? மத்திய அரசு கொடுக்கும் முழு நிதியையும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்காமல், அந்த நிதியை வேறு துறைகளுக்குச் செலவிடுகிறார்கள் என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது. சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள், முதல் தலைமுறையாக கல்லூரிகளின் படிக்கட்டுகளை மிதிக்கும்போது கால்களைத் தட்டிவிட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். ஆச்சாரியார்தான் (ராஜாஜி) கல்வியில் கைவைத்தவர் என்ற கெட்ட பெயர் உண்டு. அந்த ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம். முறையான வேண்டுகோளுக்குத் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இல்லையெனில், இது குறித்துக் களம் அமைக்க கழகம் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, பார்ப்பனர் திரு வேங்கடாச்சாரியாரை நியமிக்கும்படி பிரதமர் நேரு கூறியும் ஏற்காமல், தமிழர் என்.சோமசுந்தரத்தை நியமித்த முதல்வர் ஓமாந்தூரார் ராமசாமி (ரெட்டி)யாரை தாடியில்லாத ராமசாமி (நாயக்கர்) என்று பார்ப்பனர்கள் பட்டங் கட்டியது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

குண்டுவெடிப்பும் ஆர்.எஸ்.எஸ்.தலைவரும்


இந்தியாவில் நடைபெற்ற சில பயங்கரமான குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பு வழக்கில் காவித் தீவிரவாதிகளின் நேரடித் தொடர்பு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு சாது பிரஞ்யா தாக்கூர் என்ற பெண் சாமியார், அசிமானந்தா, இந்திய ராணுவப் படையில் உயரதிகாரியாகப் பொறுப்பு வகித்த சிறீகாந்த் புரோகித் மற்றும் தயானந்த் பாண்டே போன்றோர் கைதாகி சிறையில் உள்ளனர்.



இவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்.சின் நேரடித் தொடர்பிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சம்ஜோதா விரைவு தொடர்வண்டி குண்டுவெடிப்பில் கைதான அசிமானந்தா என்ற சாமியார் ஹரியானா மாநிலம் அம்பாலா சிறையில் உள்ளார்.

அசிமானந்தா சாமியார், இன்று மத்தியில் ஆட்சி அமைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியை இயக்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமானவர் என்று பேட்டி கொடுத்துள்ளார். வழக்கம்போல இது ஒரு பொய்யான ஆதாரமில்லாத செய்தி என்றும் சில தேச விரோத சக்திகளுக்கு வளைந்து கொடுக்கும் கட்சிகளின் சதிச் செயல் என்றும் பா.ஜ.க. கூறியது. இந்தச் செய்தி பற்றி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், காரவான் இதழுக்காக இந்தச் செய்தியைச் சேகரித்த இணை ஆசிரியர் லீனா கீதா ரகுநாத் கூறியபோது,``இந்தச் செய்தி அனைத்தும் உண்மையே. இது அவரிடம் இருந்து வாய்மொழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த விசாரணைக்கும் இந்தக் குரல் பதிவைக் கொடுக்கத் தயார் என்றார். ஹரியானாவில் அம்பாலா சிறையில் உள்ள அசீமானந்தாவை சிறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சந்தித்துப் பேட்டி எடுத்தேன். மேலும் பேட்டியை அவரது அனுமதியின் பேரில்தான் குரல் பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார். காரவன் இதழ் அசிமானந்தாவின் குரல் பதிவை 7.2.2014 அன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் ஓவியா said...

சிறீரங்கம் யானைப் பாகன் வேலை இழந்த கதை



திருச்சி மாவட்டப் பத்திரிகைகளால், அண்மை நாட்களில் அதிகம் பேசப்பட்டவர். இவர் யார் என்று விசாரித்த போது யானைப் பாகன் என்றார்கள். நாம் நேரில் சென்று சிவசிறீதரன் அவர்களிடம் பேசினோம். பின்புதான் தெரிந்தது, அவர் யானைக்குப் பாகன் மட்டுமல்ல; அந்த யானையின் நண்பர்! ஆண்டாள் என்ற பெயருடைய அந்த யானையுடன் 27 ஆண்டுகள் நண்பராக இருந்துள்ளார். இப்போது என்ன பிரச்சினை என்கிறீர்களா? அது குறித்துதான் பேசப் போகிறோம். இதோ அடுத்த பக்கத்தில், அவரை நீங்கள் பார்க்கிறீர்கள். பெரிய தாடியுடன் 56 வயது நிறைந்தவராக, நெற்றி நிறைய விபூதியுடன் காட்சி தருகிறார். அவர் ஓர் ஆன்மீகவாதி என்று நமக்குத் தெரிகிறது. இருக்கட்டும்! உங்களுக்கும், எங்களுக்கும் தெரிந்தால் போதுமா? அய்யங்கார் அண்ணன்களுக்குத் தெரிய வேண்டாமா? அவர்கள் இவரை ஆன்மீகவாதியாக ஏற்கவில்லை.காரணம் என்ன? அவர் திருநீறு பட்டைப் போட்டதை நாங்கள் ஏற்கமாட்டோம், நாமம் போட வேண்டும். அதுவும் தென்கலை நாமம் போட வேண்டும், அப்போதுதான் அவரை ஏற்போம் என அய்யங்கார் அண்ணன்கள் மனு மேல் மனுவை 26 ஆண்டுகளாக, கோயில் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ளனர். இது ஒரு பிரச்சினையா? நீங்களோ தமிழர்! நீங்கள் எப்படி இருந்தால் அவர்களுக்கென்ன? என நாம் சிவசிறீதரனிடம் கேட்டோம். என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? தினமும் காலை 6 மணிக்கு யானையுடன் கோயிலுக்குச் செல்வேன். கருவறை முன்பு நான், யானை, நிறைய அய்யங்கார்கள் நிற்போம். யானை உட்பட எல்லோருமே நாமம் போட்டிருப்பார்கள். நான் மட்டும் பட்டைப் போட்டிருப்பேன்.


தமிழ் ஓவியா said...


அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல், இதை ஒரு பிரச்சினையாகப் பேசி வந்தார்கள். எனினும் அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. என் அப்பா சிவராமன் சிறீரங்கம் மற்றும் திருவானைக்காவலில் யானைப் பாகனாக இருந்தவர். மாதம் 6 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தவர், 35 ஆண்டுகள் பணி புரிந்தார். நான் பிறந்தது திருவானைக்காவல் யானைக் கொட்டகையில். அதனால் யானைகள் குறித்து நான் நன்கு அறிவேன். அதுமட்டுமின்றி யானையும், நானும் எப்போதும் சுத்தமாக இருப்போம். நேர்மையாய் இருப்பதிலும், நேர விசயத்திலும் நான் கவனமாய் இருப்பேன். எனினும் அய்யங்கார்களுக்கு இதுவெல்லாம் பெரிய விசயமல்ல. ஒழுக்கம் கெட்ட செயல்கள் எவ்வளவும் செய்யுங்கள், போதையில் தள்ளாடுங்கள், மாமிசத்தைத் தோளில் தூக்கி வாருங்கள், அவர்களுக்குக் கவலையில்லை. நாமம் இருக்கிறதா? அதுபோதும். ஆத்தில் நாராயண அய்யராக இருப்பவர், ஆலயத்தில் நாராயண அய்யங்காராக இருக்க வேண்டும். அதுதான் அவர்களின் கொள்கை, என்கிறார் சிவசிறீதரன். நாமம் போடும் விசயத்தில் எவ்வளவு கவனமாக இருந்துள்ளார்கள் பார்த்தீர்களா? இப்படித்தான் இவர்களுக்குள் பிரச்சினை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் வேணுசீனிவாசன் நியமிக்கப்படுகிறார். அவர் சிறீரங்கம் அரங்கநாதருக்கு வழங்கப்படும் மரியாதையைவிட, தனக்கு அதிகம் வேண்டும் என எதிர்பார்க்கிறார். இச்சூழலில் யானைப் பாகன் குனிவதில்லை, பணிவதில்லை என்பது அறங்காவலரின் குற்றச்சாட்டு. இதுவாவது பரவாயில்லை, யானை என்னை மதிக்கவில்லை, ஆசீர்வதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் வேறு. வேணு சீனிவாசன், திருநெல்வேலியில் உள்ள கோயில்களுக்கு நான்கு யானைகள் சொந்தமாக வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த யானைகளும், யானைப் பாகன்களும் நிறைய மரியாதையுடன் இருப்பார்களாம்.

தமிழ் ஓவியா said...

அப்படியிருக்கும் போது இப்படியிருந்தால் வேணு சீனிவாசன் எப்படி ஏற்பார்? சிறீரங்கம் கோயிலுக்கென்று சில சம்பிரதாயங்கள் (?) உண்டாம். அந்தச் சம்பிரதாயங்களை வேணு சீனிவாசன் தம் வசதிக்கு ஏற்ப மாற்ற முயற்சித்துள்ளார். அதன் உச்சமாக கடவுள் வீதி உலா (வாக்கிங்) போகும் போது, யானை முன்னால் செல்லுமாம். அந்த யானையின் மீதேறி அமர்ந்து செல்ல அறங்காவலர் ஆசைப்பட்டுள்ளார். இதை அய்யங்கார்களும், யானைப் பாகனும் ஏற்கவில்லை. உடனே வெளியிலிருந்து யானையை வாடகைக்குப் பிடித்து, அதில் ஏற முயற்சித்துள்ளார். அதை அவ்வூரின் மக்கள் ஏற்கவில்லையாம். இதனால் சீனிவாசனின் சினம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஓர் உதவி யானைப் பாகன் தேவை என்கிற விளம்பரம் 2012இல் நிருவாகத்தால் கொடுக்கப்படுகிறது. என்னால் நன்றாகப் பராமரிக்கும் போது, ஏன் உதவிப் பாகன் என சிவசிறீதரன் கேட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

கோயில்களுக்குத் தேவைப்பட்டால், உதவிப் பாகனை நியமித்துக் கொள்ளலாம் என்கிற அரசாங்க அறிவிப்பை நிருவாகம் காட்டுகிறது. தேவைப்பட்டால்தானே? இங்கு, இப்போது தேவையில்லையே என்பது இவரின் பதில். மேலும் தமிழ்நாட்டில் பல கோயில்களில் உதவியாளர்கள் இல்லை. அருகிலுள்ள திருவானைக்காவலில்கூட இல்லை என விளக்கம் அளித்துள்ளார். இவரின் விளக்கம் அவர்களுக்குக் கோபத்தை அதிகரித்துள்ளது. ஒன்று, பணிந்து குனிந்து செல்ல வேண்டும். இல்லையேல் விலகியிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் வேலையிலிருந்து தாம் விலகுவதாக அறிவிப்புச் செய்துள்ளார். அதற்கு அங்கிருந்து எந்தப் பதிலும் இல்லை. நான் 27 ஆண்டுகளாக யானையுடன் வசித்து வருகிறேன். திருமணம் செய்து கொள்ளவில்லை. சிறந்த யானைப் பாகன் என்று பெயர் பெற்றவன். யானையை என் பிள்ளைப் போல பாவித்தேன். யானைக்கு உடல் நலம் இல்லாமல் இருக்கிறது. அந்தப் பெண் யானை, 3,500 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் 4,855 கிலோ இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

அதனால் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் யானைக்கு உணவுக் கட்டுப்பாடு உள்ளது. அகத்திக் கீரை, ஆப்பிள், வாழைப்பழம், இனிப்புகள் அறவே கொடுக்கக் கூடாது. தினமும் ஒரு கிலோ கொள்ளு கொடுத்து, நடைப்பயிற்சி அழைத்துச் செல்வதுண்டு. ஆனால், வேணு சீனிவாசன் யானையின் உடல்நிலை அறிந்தும், ஒருமுறை அகத்திக் கீரையை அள்ளி வந்து கொடுத்தார். நான் மறுத்துவிட்டேன். நான் என் வேலையில் சரியாக இருக்க நினைப்பேன். மூன்று வேளை உணவு சாப்பிடுவேன். இடையில் பிரசாதம் கொடுத்தால்கூட சாப்பிட மாட்டேன். சமஸ்கிருதம் கொஞ்சம் தெரியும். யானையைப் பயன்படுத்தி அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் பொருள்(!) அறிவேன். நான் நாமம் போடவில்லை என்பது மட்டும்தான் அய்யங்கார்களின் குற்றச்சாட்டு. என் வேலையை அவர்கள் குற்றம் சொன்னதில்லை. ஆனால் நாமம் போடாவிட்டாலும் பரவாயில்லை; எனக்கு அதீத மதிப்புத் தர வேண்டும் என்பது வேணு சீனிவாசனின் எதிர்பார்ப்பு என்கிறார் சிவசிறீதரன்.

வேணு சீனிவாசனுக்கு நாமம் குறித்து ஏன் கவலையில்லை என விசாரித்த போது, அவர் வடகலையாம். சிறீரங்க ஆசாமிகளோ தென்கலை. இவர்கள் தங்களுக்குள் கலைகள் பிரித்து, கொலைகள் செய்ததுதான் அதிகம் என வரலாறு சொல்கிறது. ஆக அய்யங்கார்களுக்கு நாமம் போட வேண்டும், அறங்காவலருக்குக் காவடி தூக்க வேண்டும் என்ற நிலையில் யானைப் பாகன் இருந்துள்ளார். நான் யானைப் பாகனாய் சரியாய்த்தானே இருக்கிறேன், அது போதாதா? என்பது சிவசிறீதரனின் அடிப்படைக் கேள்வி. அதெல்லாம் எங்களுக்குப் போதாது. நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி என்பது இவாள்களின் முழக்கம். ஆகப் பிரச்சினை முற்றவும், 2013 டிசம்பரில் உதவிப் பாகனை வேலைக்கு அமர்த்திவிட்டார்கள்.

அந்த நேரம் யானைக்கு மறுமலர்ச்சி (?) கொடுக்க, இந்த ஆண்டாள் யானையை, பாகன் முதுமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, உங்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டோம். உடனே சிறீரங்கம் வரவும் என ஒரு கடிதம் போகிறது. யானைகள் முகாம் முடிந்ததும் வருகிறேன் என இவர் பதில் சொல்கிறார். எதுவும் பேச வேண்டாம், உடனே வரவும் என்பது வேணு சீனிவாசனின் உத்தரவு. வந்ததும் வேலை போனது.

யானையைப் பிரிந்த துக்கத்தில் இப்போது சிவசிறீதரன். எல்லோரும் அவர் வீட்டிற்கு வந்து போகிறார்கள். விசாரிப்புகள் நடந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பத்திரிகை நண்பர்கள் போகிறார்கள். ஆனால் அவர் சொன்னதை இவர்கள் எழுதவில்லை. அய்யங்கார்களுக்கும், அறங்காவலருக்கும் பாதிப்பு வராமல் எழுதி முடித்தார்கள். குறைந்தபட்சம் சிவசிறீதரன் சொல்வதை அப்படியே பதிய வேண்டும் அல்லவா? அதனால்தான் நாம் பதிவு செய்திருக்கிறோம்.

- வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

ஜாதி தின்ற சரித்திரம்


- சமா.இளவரசன்

காலம் 20-ஆம் நூற்றாண்டுக்குள் புகும்போதே திரைப்படம் என்னும் ஊடகத்தின் தாக்கம் உலகிற்குத் தெரிந்திருந்தது. இந்தியாவில் முதல் படம் எடுக்கப்பட்டது 1912-இல் தாதா சாகேப் டார்னே என்பவரால். அதற்குப் பிறகு இந்தியாவின் முதல் படம் என்று இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள படமான ராஜா ஹரிச்சந்திரா வெளிவந்தது 1913 மே மாதத்தில். படத்தை உருவாக்கியவர் டி.ஜி.பால்கே. பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை என பட உருவாக்கப் பணிகள் பல இடங்களிலும் தொடங்கின.

வெளிநாட்டிலிருந்து வந்த பேசாத் திரைப்படங்களை தமிழகத்தின் ஊர் ஊராகச் சென்று காட்டினார் வின்சென்ட் சாமிக்கண்ணு. தமிழ்நாட்டின் முதல் படத்தை கீசகவதம் என்ற பெயரில் உருவாக்கினார் நடராஜ முதலியார். தமிழ் பேசாவிட்டாலும் அதுதானே முதல் தமிழ்ப் படம். இத்தகைய சாதனைகளின் தொடர்ச்சியாக 1920-களின் பிற்பகுதியில் இன்றைய தென் தமிழகமும் கேரளாவும் இணைந்த அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் இத்தகைய முயற்சிகளை ஒருவர் தொடங்கினார்.

தனது 22-ஆம் வயதிலேயே சிலம்பாட்டம் குறித்து ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி வெளியிட்ட அவர், அந்த சிலம்பாட்டத்தின் சிறப்பை அசையும் படமாக உருவாக்க வேண்டும் என்றும் நினைத்தார். அப்படி திருவிதாங்கூரின் முதல் அசையும் படத்தை உருவாக்க கனவு கண்டு, அதற்காக முயன்று ஒரு திரைப்படத்தையே உருவாக்கி வெற்றி பெற்ற அவர்தான் ஜெ.சி.டேனியல். (இன்று தமிழ்நாட்டில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர்.) அவரின் வரலாற்றைத் தான் செல்லுலாய்டு என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக உருவாக்கியிருந்தார் மலையாள இயக்குநர் கமல். செல்லுலாய்டு படத்தை கோவா திரைப்பட விழாவில் காணும் வாய்ப்புப் பெற்றேன். அது முதல் மலையாளத் திரைப்படத்தின் மறைக்கப்பட்ட வரலாறு மட்டுமல்ல; ஜாதி என்னும் கொடூரத்தின் தாக்கம் எந்த அளவு இந்த நாட்டில் இருந்தது என்பதற்கான சாட்சி; ஒடுக்கப்பட்ட மக்களின் எத்தனையோ சாதனைகள் எப்படி ஜாதி ஆதிக்கத்தால் மறைக்கப்பட்டன _- அழிக்கப்பட்டன என்பதற்கான ஒரு சோறு பதம்; ஜாதி தின்று செரித்த சரித்திரம்.

தமிழ் ஓவியா said...


அதன் தமிழ் வடிவம் ஜெ.சி.டேனியல் என்ற பெயரிலேயே வெளியாகியுள்ளது. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

திரைப்படங்களின் மீது கொண்ட ஆர்வத்தால் படித்துத் தெரிந்துகொண்டது மட்டுமல்லாமல், பம்பாய் சென்று பால்கேவின் ஸ்டுடியோ உள்ளிட்ட இடங்களில் சுற்றி, அவர்களின் உதவியால் அடிப்படைத் தொழில்நுட்ப அறிவையும் பெறுகிறார் டேனியல். திருவிதாங்கூரின் முதல் படத்தை உருவாக்கும் பணியில் மனைவி ஜானட், நண்பர்களின் உதவியோடு ஈடுபடுகிறார். தன் குடும்பச் சொத்து, வளங்கள் அனைத்தையும் விற்று ட்ரவாங்கூர் நேசனல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்குகிறார். புராணப்படங்களில் மூழ்கியிருந்த அன்றைய இந்திய சினிமாவில் மாறுபட்டுச் சிந்திக்கிறார் டேனியல். பைபிளின் கதைகளிலிருந்து ஒன்றைப் படமாக எடுக்கலாம் என்ற நண்பர்களின் எண்ணத்தையும் ஏற்காமல் சமூகக் கதையொன்றைப் படமாக்க விரும்புகிறார். தொலைந்த குழந்தை என்று பொருள்படும் விகதகுமாரன் என்ற தலைப்பில் ஒரு சமூகக் கதையைத் திரைப்படமாக எடுக்கத் தொடங்குகின்றனர். எழுத்துப் பணிகளை நிறைவு செய்து முக்கியக் கதாபாத்திரங்களையும் முடிவு செய்தபின்னர், கதாநாயகியைத் தேர்வு செய்வதற்காக முயலும் போது அதற்கு யாரும் முன்வரவில்லை. பால்கேவைப் போல ஆணைப் பெண் வேடமிட்டு நடிக்க வைக்கவும் டேனியலுக்கு விருப்பமில்லை. எனவே, பம்பாயில் இருக்கும் நடிகைகளில் யாரையாவது அழைத்து வரலாம் என்ற திட்டத்தில் பம்பாய் சென்று ஆங்கிலோ இந்திய நடிகை ஒருவரை அழைத்து வருகிறார்கள். சம்பளம், ரயில் பயணம், கார், அரண்மனை என அவர்கள் கேட்ட அத்தனை வசதிகளையும் தன் சக்திக்கு மீறி செய்யத் தொடங்கினாலும், சாதாரணப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க அந்த நடிகை மறுக்கிறார். கடவுளாகவோ, அரசியாகவோதான் நடிப்பேன் என அடம்பிடிக்க, அவரை மூட்டை கட்டி ஊருக்கு அனுப்பிவிட்டு அடுத்த கட்டம் குறித்து யோசிக்கும்போதுதான் கூத்து, நாடகங்களில் நடிப்போர் குறித்து நண்பர்கள் சொல்கிறார்கள். கூத்தில் ரோசம்மாவின் நடிப்பு டேனியலை வெகுவாகக் கவர, ரோசம்மாவையே தன் படத்திலும் நடிகையாக்கிட விரும்புகிறார் டேனியல்.

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த ரோசம்மா, (முன்பே குடும்பத்தோடு கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருந்த ரோசம்மாவின் பெயர் டேனியல் மற்றும் அவர் மனைவியால் ரோசி என வைக்கப்படுகிறது) விகதகுமாரன் படத்தில் நாயர் பெண்ணாக நடிக்க வைக்கப்படுகிறாள். சிறப்பான அவள் நடிப்புடன் சில நாட்களில் அவளது பகுதி படமாக்கப்பட்டுவிட, அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பையும், படத் தொகுப்பையும் முடித்து திரையிடலுக்குத் தயாராகிறது படம். இதற்கிடையில் இன்னும் சில சொத்துகளும் டேனியலால் விற்கப்படுகின்றன. 1928-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் 1930-ஆம் ஆண்டு நிறைவடைந்து, விகதகுமாரன் படம் வெளியீட்டுக்குத் தயாராகிறது. படத்தின் முதல் காட்சிக்கு அழைக்கப்படுகிறாள் ரோசி. படத்தை வெளியிட வந்த நம்பூதிரிகளும், வழக்குரைஞர் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினரும் படத்தைப் பார்க்க கொட்டகைக்குள் நுழையும் ரோசியைக் கண்டு அருவெறுப்படைகிறார்கள். தீண்டத்தகாதோருடன் அமர்ந்து தாங்கள் எப்படித் திரைப்படம் பார்ப்பது என மறுக்க, என்ன செய்வது என டேனியல் மருகி நிற்க, வேறு வழியின்றி படத்தின் கதாநாயகி ரோசி கொட்டகைக்கு வெளியிலேயே கண்ணீருடன் அடுத்த காட்சிக்குக் காத்திருக்க, டேனியலைப் பாராட்டி வந்தோர் பேச, படம் திரையிடப்படத் தொடங்குகிறது. சிறிது நேரத்திலேயே திரைப்படக் கொட்டகைக்குள் கூச்சல். ஒரு தாழ்த்தப்பட்ட பெண் உயர்ஜாதிப் பெண்ணாக நடிக்கவைக்கப்பட்டுள்ளதைக் கண்டு ஜாதி வெறியர்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். அரங்கின் வாயிலில் காத்திருந்த ரோசி துரத்தப்படுகிறாள். ரோசியின் வீடு எரிக்கப்படுகிறது. ஜாதி வெறியர்களால் ஏற்படக்கூடிய ஆபத்தை நினைத்து, உயிருக்குப் பயந்து ஊரைவிட்டே ஓடிவிடுகிறாள் மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி.

சொத்துகளை சினிமாவுக்காக விற்று, அதுவும் திரையிடப்படும் இடங்களில் எல்லாம் ஜாதிவெறியர்களின் எதிர்ப்பைப் பெற, அகஸ்தீஸ்வரத்திற்கே திரும்பி, பல் மருத்துவம் கற்று மருத்துவராகிறார் டேனியல். புதுக்கோட்டையில் குழந்தைகள், குடும்பம் என்று இருப்பவரை மீண்டும் திரைப்படத் துறை நோக்கி இழுக்கிறார் தமிழ்த் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா. சென்னைக்கு திரைப்படக் கனவுகளை மீண்டும் சுமந்து கொண்டு வண்டியேறி, திரைப்பட ஏமாற்றிகளால் சொத்துகளை இழந்து, ஏழ்மை நிலைக்குச் சென்று அடையாளங்களற்று வாழ்க்கையைத் தொடர்கிறார். பின்னாளில் செம்மீன் படம் 1966-ஆம் ஆண்டு தேசிய விருது பெற்று மலையாள சினிமா பெருமையடைய, முதல் மலையாள சினிமாவை எடுத்த டேனியல் தமிழ்நாட்டின் அகஸ்தீஸ்வரத்தில் முதுமைப்பருவத்தைக் கழிக்கிறார். இதை அறியும் மலையாளத் திரைப்படப் பத்திரிகையாளரான சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன், தொடர் முயற்சியில் டேனியலைச் சந்தித்து பழைய வரலாற்றை நிறுவ முயல்கிறார். டேனியலின் மகன் ஹாரிஸ் டேனியல் சிறுவயதில் விளையாட்டுப் போக்கில் விகத குமாரன் படச்சுருளை எரித்துவிட, எஞ்சியிருப்பதோ அப்படத்தின் ஒரு புகைப்படமும், விளம்பரத் துண்டறிக்கையும் தான். டேனியலுக்குப் பிறகு அவரது நண்பர் சுந்தரராஜன் எடுத்த மார்த்தாண்ட வர்மா திரைப்படமும் கடனுக்கு அடமானமாகப் போய் ஒரு கொட்டடியில் நாசமாகிக் கிடக்கிறது. அதை மீட்கிறார் பத்திரிகையாளர் கோபாலகிருஷ்ணன்.

மலையாள சினிமாவின் முதல் முயற்சிகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கோடு கேரள அரசின் பண்பாட்டுத் துறையை அணுகும் கோபாலகிருஷ்ணனுக்கு மறுப்புகளும், அலட்சியமும் பதிலாகக் கிடைக்கின்றன. பேசும் படமாக வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்தின் பாலன் படம் தான் முதல் மலையாளப் படம் என அடம்பிடிக்கிறார் அய்.ஏ.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான ராமகிருஷ்ணன் அய்யர். இந்த (டேனியல்) நாடார் விசயத்தில் உனக்கென்ன இவ்வளவு அக்கறை? என்று ராமகிருஷ்ண அய்யர் கேட்கும் போது இந்த மறுப்புக்குப் பின்னால் இருப்பதும் ஜாதியே என்று உணர்ந்துவிடுகிறார் பத்திரிகையாளர் கோபாலகிருஷ்ணன். பிராமணரான டி.ஆர்.சுந்தரத்தின் படம்தானே பாலன். நீங்கள்லாம் இந்த மாதிரி சிந்திக்கிறீங்கன்னு புரிஞ்சு போச்சு சார்! என்று போட்டு உடைத்துவிட்டுக் கிளம்புகிறார் பத்திரிகையாளர். எனினும் அவரது முயற்சிகள் தொடர்கின்றன.

தமிழ் ஓவியா said...

எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் டேனியல் தன் இறுதி மூச்சை விட, அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. திரைப்படத்துறை மீது இன்று மக்களுக்கு இருக்கும் அளவற்ற மோகம் ஒரு நடிகரின் படத்துக்குச் செய்யப்படும் மரியாதை மூலம் உணர்த்தப்படுகிறது. அதைப் பார்த்தபடி பேருந்தில் பயணிக்கிறார் ஹாரிஸ் டேனியல் (ஜெ.சி.டேனியலின் இளைய மகன்). மேலே நீங்கள் படித்தது கதையல்ல; வரலாறு. அது ஜெ.சி.டேனியலின் வரலாறு மட்டுமல்ல; சமூகத்தில் ஜாதியின் இறுக்கம் எப்படி என்பதற்கான சான்று! ஜெ.சி.டேனியலையாவது இன்று நாம் அடையாளம் காண்கிறோம். ஆனால், மலையாளத்தின் முதல் கதாநாயகியான ரோசியின் நிலை? ஒளிவெள்ளத்தில் வாழும் இன்றைய திரைக்கலைஞர்கள் மத்தியில் அடையாளமே இல்லாமல் தென் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் தன் வாழ்வை முடித்திருப்பார் அந்தத் திறமைவாய்ந்த கலைஞர். படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கமல், தனது கருத்தில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்.

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அதைப் பதிவு செய்கிறார். ஜாதியின் தீவிரம் என்னவென்று தெரியாமல் இருப்பவர்களுக்கு அழுந்தச் சொல்லிப் புரியவைக்கிறது படம். அக்காட்சிகளை ஒவ்வொன்றாக விவரித்தால் நிச்சயம் புத்தகமாக நீளும். பால்கே படம் எடுக்கும் போது அதைப் பார்த்து டேனியல் கற்றுக் கொள்வதாக ஒரு காட்சி. கர்ணனின் தொடையில் பரசுராமன் படுத்திருக்கும் போது கர்ணனின் தொடையை வண்டு துளைத்து ரத்தம் வழியும் மகாபாரதக் காட்சி. வர்ணாஸ்ரமத்தின் வெளிப்பாட்டை அங்கே பதிவு செய்யத் தொடங்குகிறார் இயக்குநர். இயக்குநர் கமலின் பதிவுகளில் எடுத்துக்காட்டாக சிலவற்றைச் சொல்லலாம். கதாநாயகியாக நாயர் பெண் வேடமணிந்து, அனைவருடனும் அமர்ந்து மதிய உணவு உண்ணாமல், தான் தூக்கி வந்த சட்டியிலிருந்து கஞ்சியைத் தரையில் அமர்ந்து அருந்தும் மனநிலையை, தங்களுக்கு அதுதான் இயல்பென்றும், விதிக்கப்பட்டதென்றும் ஒரு சமூகத்தையே கருதவைத்த கொடுமையை அக்காட்சி உணர்த்துகிறது. தான் நடித்த படத்தின் ஒரு காட்சியைக்கூடப் பார்க்க முடியாமல் துரத்தி அடிக்கப்படுகிற வலி எத்தகையது? அதுமட்டுமா, வர்ணாசிரமத்தின் வெவ்வேறு அடுக்குகளில் இருப்பவர்களிடையே ஜாதிப் பற்றும், தீண்டாமை உணர்வும் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் பதிவு செய்கிறார். இப்படிப்பட்ட பதிவுகள் படம் முழுக்க கதையோடு பின்னிப் பிணைந்து நம் மூளையில் அவற்றை விதைத்துச் செல்கின்றன.

தமிழ் ஓவியா said...


படத்தில் ஜெ.சி.டேனியலாக இளம் வயதிலும், முதுமையிலும், பின்னர் ஹாரிஸ் டேனியலாகவும் நடித்துள்ள ப்ருத்விராஜ், ஜேனட்டாக நடித்த மம்தா மோகன்தாஸ், ரோசியாக நடித்த சாந்தினி, சேலங்காட்டு கோபாலகிருஷ்ணனாக நடித்த சீனிவாசன் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் உயிரோட்டத்திற்குக் காரணம். ஒரு திரைப்படத்திற்கான அத்தனை சிறப்பம்சங்களையும் பெற்று, மலையாளத்தில் வெற்றிகரமாகவும் ஓடிய இப்படம் தமிழில் அதிகம் கவனம் பெறாமல் போனது வருந்தத்தக்கதே! ஆனால், அவசியம் தேடித் தேடி பார்க்கவேண்டிய, திரையிடப்பட வேண்டிய, தொலைக்காட்சி வழியாகப் பரப்பப்பட வேண்டிய படம் இது.

ஒரு டேனியலின் வாழ்க்கையும், சாதனையும் வரலாற்றில் நிறுவப்பட வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு கோபாலகிருஷ்ணனும், கமலும் 70 ஆண்டுகள் போராட வேண்டியிருக்கிறது. இன்னும் எத்தனை டேனியல்களின் சாதனை, ஜாதிக் கொடுமையால் மறைக்கப்பட்டிருக்கிறது _- மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை மீட்டெடுக்க உறுதி பூணுதலே ஜெ.சி.டேனியலுக்கு நாம் செய்யும் மரியாதை.

தமிழ் ஓவியா said...

ஜெபம்-ஜெயம்-தருமா? - 2


விசா பாலாஜி - மலையாள வேளாங்கண்ணி வங்காள பான் பீபி

- சு.மதிமன்னன்

விசாவுக்கும் விநாயகனாம்

மருத்துவம், பொறியியல் போன்ற கல்விகளைக் கற்றுத் தருவதற்கு ஒவ்வொரு மாணவனுக்கும் இலட்சக்கணக்கில் அரசுகள் செலவு செய்கின்றன. அவர்களின் செலவுக்கு மக்களின் வரிப்பண வருவாய் செலவு செய்யப்படுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. படித்து முடிந்ததும் அவர்களின் சேவையை ஏழை எளிய இந்திய மக்கள் பயன்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதும் தவறல்ல. ஆனால், நடைமுறை என்ன? உயர்ஜாதிப் பையன்களும் வசதி வாய்ப்புள்ள பணக்காரப் பையன்களும் அமெரிக்காவுக்கு ஓடிப்போய் நிறையப் பணம் சம்பாதித்துத் தம் பெண்டு, பிள்ளைகளுக்குச் செலவு செய்தும் சேமித்து வைத்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய வாய்ப்பு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அனைவருக்கும் கிட்டுவதில்லை. அமெரிக்காவின் விசா கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இதைப் பயன்படுத்திக் காசு பார்க்கும் வேலைக்குக் கடவுளைப் பயன்படுத்துகிறது புரோகிதப் பார்ப்பனக் கூட்டம்.

விசா பாலாஜி என்று ஒரு கடவுளை உற்பத்திசெய்து விட்டார்கள். அய்தராபாத் நகரில் உள்ள இக்கோயிலை 11 முறை சுற்றி வந்தால் அமெரிக்கா போவதற்கு விசா கிடைத்துவிடுமாம். விசா கிடைத்த பிறகு 108 முறை சுற்றி வந்து வேண்டுதலை நிறைவு செய்து நன்றிக் கடனைக் கழிக்க வேண்டுமாம். மனிதன்தான் கடவுளைக் கற்பித்தான் என்று பெரியார் சொன்னது சரிதானே!

வருமானம் பிரதானம்

இந்தப் புளுகை அவிழ்த்து விட்டுக் காசு பார்க்கும் காரியத்தில் இறங்கி இருப்பவர்கள் மதபூஷி சவுந்தரராஜன் மற்றும் சீனுவாச ராகவாச்சாரி எனும் இரண்டு பார்ப்பனர்கள். உண்டி வருமானம் முழுவதும் இவர்கள் இரண்டு பேரின் தொப்பைக்கே! வருமானம் ஆயிரக்கணக்கில். பார்த்தது அரசாங்கம். இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்குமேல் இருப்பதால் உண்டியல் வருமானத்தை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்றது. கோயிலும் உண்டியலும் நிருவாக அதிகாரியின் கட்டுப்பாட்டுக்கு வரும் என்று கூறியது. பார்ப்பனப் பெருச்சாளிகள் இரண்டும் என்ன செய்தன தெரியுமா? 2001ஆம் ஆண்டில் உண்டியலை எடுத்துவிட்டார்கள். நேரடியாக வருமானம் அவர்கள் கையில்/வாயில்/வயிற்றில்/பையில் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது. கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொன்னது சரிதானே!

தமிழ் ஓவியா said...


இந்தப் பித்தலாட்டம் தொடங்கப்பட்டது 1983ஆம் ஆண்டில்தான்! என்றாலும் கோல்கொண்டா கோட்டையைவிடப் பழசு என்று கதைகட்டி விட்டுள்ளனர். இதை நம்பி 4 ஆயிரம் பேர் நாள் ஒன்றுக்கு வருகிறார்கள். அமெரிக்க நாடு கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் குடியேறி சுமார் 300 ஆண்டுகள் ஆகின்றன. அறிவியலில், பணத்தில் பெரிய நாடாகி ஏறத்தாழ 150 ஆண்டுகள் இருக்கும். அந்த நாட்டுக்குப் போகவேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு 50_60 ஆண்டுகள்தான் ஆகின்றன. விசா முறைக்கும் அதே வயதுதான். இந்த நிலையில் முகலாயர் காலத்து கோல்கொண்டா கோட்டையைவிட மூத்தது என்ற கதையை நம்பி நான்காயிரம் பேர் போகிறார்கள் என்றால், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி எனப் பெரியார் சொன்னது சரிதானே!

அரேபியக் கடவுள்

வங்காளப் புலிகள் வாழும் இடம் சுந்தரவனக் காடுகள். கங்கை_பிரம்மபுத்திரா நதிகளின் டெல்டா பகுதியான சுந்தரவனம் உலகின் பெரிய டெல்டா. இந்தக் காடுகளில் புலிகள், சதுப்புப் பகுதிகளில் முதலைகள், கொடிய பாம்புகள், மனிதர்கள் வாழ்கின்றனர். விறகுகளை வெட்டியும், காட்டுப் பொருள்களைச் சேகரித்தும் வாழ்க்கையை ஓட்டும் ஏழை மக்கள் புலிகளுக்குப் பயந்து கிலியுடனே வாழும் சோகம்! இவர்களைக் காத்து வருவது பான் பீபி எனும் கடவுளாம்! முசுலிம் பெயராக இருக்கிறது என்று திகைக்கிறீர்களா? ஆம், சரிதான்! அது அரபிப் பெயர்தான்! புலிகளின் அரசன் தட்சினராய் என்பவனைக் கொல்லும் சக்தி படைத்த கடவுள் அரபு நாட்டிலிருந்து இறக்குமதியானதுதான்! முசுலிம் பக்கீர் ஒருவருக்குப் பிள்ளை இல்லையாம். அல்லா அவருக்குக் காட்சி தந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்ததாம். பிள்ளைகளை வளர்த்து சுந்தரவனத்திற்கு அனுப்பிட வேண்டும் என்பது நிபந்தனையாம். இரட்டைப் பிள்ளைகள் பிறந்தனவாம். பெண்ணுக்குப் பெயர் பான்பீபி. ஆணுக்குப் பெயர் ஷா ஜங்லி. இரண்டுக்கும் சுந்தரவனத்தில் கிடைக்கும் களிமண்ணால் ஆக்கப்பட்ட பொம்மைகள். இந்திய பாணி/ இந்துமத பாணியில் உடைகள். கோயில்கள். இதைக் கும்பிடாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே போக மாட்டார்கள். இந்தப் பக்தர்களில் இந்து, கிறித்துவ, முசுலிம் மதத்தவர் எல்லாரும் அடக்கம்.

தமிழ் ஓவியா said...


அண்ணன், தங்கை கடவுள்களில் தங்கை பான்பீபி கையில் துக்கி எனும் குழந்தை உண்டு. யாருக்குப் பிறந்ததோ, அதன் சொந்தக்காரர்கள் புலிகளின் அரசனுக்குப் பலியாகக் காட்டில் விட்டுவிட்டுப் போய்விட்டனராம். பான்பீபி குழந்தையைத் தூக்கிக் கையில் வைத்துக் கொண்டு இருக்கிறதாம்.
அச்சப்பட்டவன் ஆண்டவனைக் கற்பித்து விட்டான்!

நாய்க்கு சீமைச்சரக்கு

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் பைரவநாதர் கோயில். பைரவர் என்றால் நாய். நாயும் கடவுள்தான் இந்துமதத்தில். இந்தக் கோயிலும் கடவுளும் ஞாயிற்றுக் கிழமைகளில் போதையில் தள்ளாடும். குஜராத் மாநிலத்தில் மது விற்பனை கிடையாது. வெளிப்படையாக இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை கனஜோர்! இல்லாவிட்டால் கடவுளுக்கு எப்படிச் சாராயம் தருவது? இந்தியச் சரக்கு இந்தக் கடவுளுக்குக் கூடாதாம்! அந்நியச் சரக்குதான் தரப்பட வேண்டுமாம்! அதுவும் கிடைக்கிறது. மோடியும் அதன் புகழ்பாடும் அருவிகளும் கவனிக்க வேண்டும்.

அந்நிய மது அருவிபோல் கொட்டுகிறது குஜராத்தில்!

ஞாயிற்றுக் கிழமை மாலை! கோயிலில் ஏராள கூட்டம். அர்ச்சனைத் தேங்காய்கள் வெளிப்படையாகச் சேகரிக்கப்பட்டு, படைத்து உடைத்து, ஒருபாதியைப் பக்தர்களிடம் கொடுத்து விடுவார்கள். இங்கிலீஷ் சாராயம் கமுக்கமாக வாங்கிக் கொள்ளப்படும். அளவு முக்கியமல்ல, ஓர் அவுன்ஸ் இருந்தால்கூடப் போதும். அர்ச்சகர் ரகசியமாக வாங்குவார். ஓர் அவுன்ஸ் சாராயத்தை விக்கிரகத்தின் மீது ஊற்றிவிட்டு மீதியை ஒருபக்கமாக வைத்துக் கொள்வார். அவருக்கு அது! பாதித்தேங்காயைத் திருப்பித் தருவதுபோல இதைத் திருப்பித் தரவே மாட்டார். தேவ அமிர்தம் அல்லவோ!

இந்தப் பூசை எதற்காம்? காதல் வெற்றி, கருத்தரித்தல், நல்ல வேலை என இப்படிப்பட்ட வேண்டுதல்கள். நடந்துவிட்டால் மீண்டும் பாட்டில் மதுவுடன் திரும்ப வருவார்களாம்!

குஜராத்திகள் மாமிசம் சாப்பிட மாட்டார்களாம்! மது குடிப்பார்களாம் அவர்களின் கடவுள்! கோயிலில் கற்ப்பூர வாடைக்குப் பதில் சீமைச்சாராய வாடைதான்!

மலையாள வேளாங்கண்ணி

கேரளா, பைத்தியக்காரர்கள் வாழும் இடம் என்றார் விவேகானந்தன். கொச்சித் துறைமுகத்தின் கழிமுகப் பகுதியில் வள்ளர் பாதம் எனும் சிறுதீவு. அதில் ஒரு கிறித்துவக் கோயில். கருணை மேரிக்கான கோயில்! பொம்மை போர்ச்சுகல் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது. 1676இல் நடந்த வெள்ளத்தில் கோயிலே மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. திவான் புதுப்பித்துக் கட்டிக் கொடுத்தார். புளியாத் ராமன் வலியச்சன் எனும் இந்து. அவரைப் பெருமைப்படுத்தும் வகையில், செப்டம்பர் 24இல் கோயிலின் விளக்குகளை ஏற்றும் உரிமை அவரின் குடும்பத்தாருக்கு இன்றளவும் தரப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


1752ஆம் ஆண்டு மே 23இல் படகில் போய்க் கொண்டிருந்த மீனாட்சி அம்மாவும் அவளது ஒரு வயதுக் குழந்தையும் படகில் பயணித்து எர்ணாகுளம் போகும்போது படகு கவிழ்ந்து மூழ்கிப் போனது. தேடிப் பார்த்து பிணம்கூட கிடைக்காமல் போனது. ஆனால், அன்றிரவு பாதிரியின் கனவில் மீனாட்சி அம்மாவும் குழந்தையும் கடலுக்கு அடியில் இருப்பதாகத் தெரிந்ததாம். தேடிப் பார்த்ததில் அவர்கள் இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனராம்! கதை விடுவதில் இந்துக்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர் கிறித்துவர்கள் என்றுதான் கூறமுடியும்! வேளாங்கண்ணி மாதா கோயில் மண்டபம் மாதிரி வள்ளர்பாதம் மாதா கோயிலிலும் மீனாட்சி அம்மா, குழந்தை படம் வரைந்து வைத்து இன்றளவும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

அற்புதங்கள் ஆண்டு ஒன்றுக்கு 15 வீதம் நடக்கின்றன என்று அளக்கிறார் பாதிரி தண்ணி காட்(THANNIKOTT)! தண்ணி காட்டுகிறார் அல்லவா!

நெருப்புத் தெய்வம்

அரேபியர்களின் தாக்குதலுக்குப் பயந்து பாரசீக நாட்டை விட்டுத் தப்பி ஓடிய பார்சிகள் கட்டிய நெருப்புக் கோயில் (FIRE TEMPLE)இருக்குமிடம் குஜராத் மாநிலம் உதவடா எனும் இடம்! 1742ஆம் ஆண்டு அக்டோபர் 28இல் கட்டினார்களாம்! பார்சிகளின் சிறப்பான ஒன்பது கோயில்களில் இதுவும் ஒன்று.

கோரிக்கை வைத்து வேண்டிக்கொள்வது பார்சிகள் ஜெரராஷ்டிரிய மதத்தில் கிடையாது. மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும் பட்சத்தில் அவர்களின் கடவுளுக்கு நன்றிக் காணிக்கை செலுத்துவார்களாம்! இசுலாமியர்களுக்கு மெக்கா போல, பார்சிகளுக்கு உதவடா கோயிலாம்!இருக்கட்டுமே!

ஃபிரான்சின் லூர்து மேரி

ஃபிரான்ஸ் நாட்டில், லூர்து எனும் ஊரின் கேவ் நதிக்கரையில் பெர்னாடெட் சவுபிரியஸ் எனும் 14 வயதுப் பெண்ணுக்கு 18 முறை காட்சி தந்தாளாம் கன்னி மேரி எனும் ஏசுவின் தாய்! இந்தக் கதையைச் சொன்னதற்காக அச்சிறுமி புனிதர் (SAINT) ஆக்கப்பட்டாள்.

தமிழ் ஓவியா said...


அவ்வூரிலுள்ள ஊற்று நீர் சகல நோய்களையும் தீர்க்கும் சக்தி பெற்றது என்ற கதையைக் கத்தோலிக்கர்கள் கட்டி விட்டனர். கடந்த 155 ஆண்டுகளில் இந்தக் கதையை நம்பி சுமார் 20 கோடிப்பேர் இந்த ஊருக்குப் புனித யாத்திரையாக வந்துள்ளனர். சுமார் 70 அற்புதங்களை லூர்துமேரி நிகழ்த்தியுள்ளதாக கத்தோலிக்கத் திருச்சபை கூறுகிறது. சும்மா, கதை விடாதீர்கள் என்ற அறிவுலகக் கருத்துக்கு இணங்க, குணம் பெற்றவர்கள் மருத்துவர் குழுவின் முன்பாக சோதனை செய்துகொள்ள வேண்டும் என்று ஏற்பாடாகியது. 1947 முதல் 1990 முடிய 1000 பேர் ஆஜராகினர். அவர்கள் கூற்று சோதிக்கப்பட்டு 944 பேர் கூறுவது பொய் என நிரூபிக்கப்பட்டது.

மற்றையோர் அதுவரை சாப்பிட்ட மருந்துகளின் காரணமாகக் குணமடைந்து இருக்கலாம்தானே! கடவுள் குணப்படுத்துகிறது என்றால் மருத்துவர்கள் ஏன்? மருத்துவமனைகள் ஏன்? மருத்துவம் சொல்லித்தரும் கல்லூரிகள் ஏன்? இவற்றையெல்லாம் கத்தோலிக்கக் கிறித்துவர்களே நடத்துவது ஏன்? அவர்களின் கடவுளின் மீது, அதன் சக்தியின்மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா?
சிக்கன வேண்டுதல்

ஒடிசா மாநிலம் கல்பதார் கிராமத்தில் உள்ள பொகாரி பாபா கோயிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளைக் கடிதம் மூலம் எழுதி அனுப்புகிறார்கள். வீண் செலவு மிச்சம்.

கருநாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தொட்ட கணேச குடி (நந்திகோயில்) எனும் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை மாட்டின் (பொம்மைதான்) காதில் கூறுகிறார்களாம்! செவிடன் காதில் சங்கு ஊதுவதைவிட மோசமான மடத்தனம்!

டெல்லியில் ஃபெரோஸ் ஷா கோட்லா மசூதியில் கடிதம் எழுதலாம், சுவர்களில் நாணயத்தை வைத்தும் பால் ஊற்றியும் இனிப்பு, பழங்கள், மாமிசம் வைத்தும் கெட்ட ஆவிகளை விரட்டலாமாம்! காட்டு விலங்காண்டித்தனம் அல்லவா!

டெல்லி அனுமன் கோயிலுக்குக் கடிதம் மூலம் வேண்டுதல் செய்யலாம். பூசாரி கடிதத்தைப் படித்து காற்று வழியாகக் கடவுளுக்கு அனுப்புவாராம்! அனுமனே காற்றுக்குப் பிறந்ததுதானே!

கான்பூரில் உள்ள காளிகோயிலில் பூட்டு காணிக்கை செலுத்தி வேண்டுதல் செய்யப்படுகிறதாம்! பரவாயில்லை, கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் செருப்பு கட்டி வேண்டுதல் செய்யப்படுகிறது!

ஆந்திராவில் புட்டபர்த்திக்கு அருகில் உள்ள புளியமரத்திடம் பக்தர்கள் கோரிக்கை சொல்கின்றனர். அவர்கள் கேட்பதைப் புளியமரம் செய்கிறதாம்! புளியுடன் கூடுதல் பலனோ?

சிக்கிம் மாநிலம் கிச்சியோபைரியில் உள்ள ஏரியில் ஒரு முழுக்குப் போட்டால், நினைப்பது நடக்குமாம்! அழுக்கும் போகிறது, ஆசையும் நிறைவேறுகிறதோ? பவுத்தக் கொள்கை எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா?

உத்திரப் பிரதேசம், அரித்வாரில் உள்ள மானசாதேவி கோயில் மரத்தில் கயிறு கட்டினால் ஆசை நிறைவேறிவிடுமாம். கோயிலின் கடவுளின் (மானசா) பெயரே ஆசை என்பதால் நல்லாத்தான் கயிறு திரித்திருக்கிறார்கள்!

டெல்லி நிஜாமுதீன் தர்காவின் சன்னல்களில் சிவப்புக் கயிறு கட்டித் தொங்க விட்டால் நினைப்பது நடக்குமாம்! வேலைப்பாடு உள்ள ஜன்னலை மறைத்து சிவப்பு நூல்கள் உள்ளன. ஆசைகளும் அவரவர் மனதில் அப்படியே கிடக்கின்றனவா எனும் விவரம் பக்தர்களால் தெரிவிக்கப்படவில்லையாம்!

அரியானா மாநிலம், குருட்சேத்திராவில் உள்ள சையத் இப்ராகிம் பாதுஷா வழிபாட்டிடத்திற்கு சுவர்க்கடிகாரம் தந்து வேண்டிக் கொண்டால், குறித்த நேரத்தில் ஒரு இடத்திற்குப் போக முடியுமாம்! வண்டி குறித்த நேரத்திற்குப் போக தர்காவுக்கு எதற்குக் கடிகாரம்? வண்டி ஓட்டிக்கல்லவா தரவேண்டும்!

கேரளாவில், மலயாட்டூர், செயின்ட் தாமஸ் கோயிலுக்கு கனமான மரச்சிலுவை தாங்கி நடந்தால், குழந்தை பிறக்குமாம்! தங்கச் சிலுவை அணிந்த பாதிரியர்கள் உலகம் முழுவதுமே கர்ப்பதானம் செய்யும் கைங்கர்யத்தில் ஈடுபடும் செய்தி நாறுகிறதே! கனமான சிலுவை எதற்கு?

புரட்சிக்கவிஞர் பாடினாரே! பெருமதங்கள் எனும் பீடை பிடியாதிருக்க வேண்டும்

ஒரு மதமும் வேண்டாம் - தம்பி

உண்மை உடையார்க்கே!

தமிழ் ஓவியா said...

தசரதன் - இராமன் இராமாயணம்
- தந்தை பெரியார்

சென்ற இதழில் `கெடுவான் கேடு நினைப்பான் என்பது பற்றி தந்தை பெரியார் அவர்கள் நாத்திகப் பார்வையில் விளக்கம் அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, ஆத்திக நோக்கில் இராமாயணத்தை உதாரணமாகக் கொண்ட பகுத்தறிவுக் கருத்து இந்த இதழில்...

ஆனால், இந்த வியாசத்தில், இப்பழமொழிக்கு (கெடுவான் கேடு நினைப்பான்) நாஸ்திக சம்பிரதாயமான கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ளாமல் ஆஸ்திக சம்பிரதாயமான கருத்தை ஆஸ்திகர்கள் என்பவர்களே சரியானபடி ஏற்றுக் கொள்ளுகின்றார்களா என்ற பிரச்சினையை முக்கியமாய் வைத்து வேடிக்கை முறையில், இராமாயணத்தின் நடவடிக்கை எப்படிப்பட்டது; அதைப் பிறர் எப்படி மதிக்கிறார்கள் என்கின்றவற்றை எடுத்துக் காட்டவும், இந்தப் பழமொழி ஆஸ்திக சம்பிரதாயப்படி பார்ப்பவருக்கு இராமாயணம் என்பது ஒரு படிப்பினையாகும் என்பதைக் காட்டவும் எழுதப்பட்டதாகும்.

இராமாயணப் புராணத்தின் கதைப்படி தசரதனும், இராமனும், பரதனுக்குக் கேடு நினைத்ததால் கெட்டார்கள் என்பது இவ்வியாசத்தின் கருத்தாகும்.

இராமாயணக் கதைப்படிக்கு தசரதனுக்கு நான்கு ஆண் பிள்ளைகள். இவற்றுள் இராஜ்ஜியப் பட்டமானது பரதனுக்குச் சொந்தமானது. எப்படி எனில், பரதனுடைய தாயாராகிய கைகேயியை தசரதன் மணக்க ஆசைப்பட்டு, கேகய ராஜனிடம் சென்று அவனது பெண்ணான கைகேயியை தனக்குத் தரும்படிக் கேட்க, கேகய மன்னன், தசரதனின் யோக்கியதையையும், நடத்தையையும் தெரிந்து, உனக்கு ஏற்கெனவே பல ஆயிரக்கணக்கான மனைவிகள் இருப்பதால் நான் என் மகளை உனக்குக் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டான். இதற்குத் தசரதன், அந்தப் பெண்ணின் மேல் ஆசையால், கேகய மன்னனிடம் வணங்கி, அய்யா எனக்கு எத்தனை மனைவிகள் இருந்தாலும், உன் மகளையே நான் பிரதான மனைவியாய்க் கொள்வேன். உன் மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே ராஜ்ஜிய பட்டாபிஷேகம் செய்வேன் என்று வாக்குத் தத்தம் செய்து கொடுத்து கைகேயியை மணந்து கொண்டான்.

அந்தப்படி மணந்து கொண்ட தசரதன் கைகேயியையே பிரதான நாயகியாக அனுபவித்து வந்து, அவள் மூலம் ஓர் ஆண் குழந்தையையும் (பரதனை) பெற்று, அது வளர்ந்து பெரியதாகி பட்டத்துக்கு யோக்கியமானவுடன் தசரதன் கெட்ட எண்ணங் கொண்டு, அதாவது ராஜ்ஜிய பட்டாபிஷேகத்தைப் பரதனுக்குக் கொடுக்காமல், இராமனுக்குக் கொடுக்க வேண்டுமென்று நினைத்துவிட்டான்.

இந்தவிதமான கெட்ட எண்ணம் தசரதனுக்கு உண்டாகும்படியாகவே இராமனும், மிக்க தந்திரமாக யோக்கியன் போலவும், தகப்பனாருக்கு மிகவும் வேண்டியவன் போலவும் நடந்து வந்ததுடன், தகப்பனாரின் ஆசைக்கு ஏற்ற வண்ணமாகவும் நடந்து வந்திருக்கிறான்.

தமிழ் ஓவியா said...

இருவரின் கெட்ட எண்ணமும் முதிர்ந்து, கடைசியாக ஒருநாள் பட்டத்துக்கு (பரதன் வாக்குறுதிப்படி) உரியவனாகிய பரதனை அவன் பாட்டனார் ஊருக்கு அனுப்பி விட்டு, அவன் இல்லாத சமயம் பார்த்து திடீரென்று ஒரே நாளில் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதாய் ஏற்பாடு செய்து அவசர அவசரமாய் (திருட்டுத்தனமாய்) பட்டாபிஷேகக் காரியங்கள் செய்து சூழ்ச்சி செய்துவிட்டான்.

ராஜ்ஜியப் பட்டமானது பரதனுக்கு வெகு காலத்துக்கு முந்தியே தன் தகப்பனால் வாக்குக் கொடுக்கப்பட்டு விட்டாய் விட்டது என்பது இராமனுக்குத் தெரிந்திருந்தும், அதைச் சிறிதாவது இராமன் லட்சியம் செய்து தகப்பனிடம் மறுத்துக் கூறாமலும், அதுதான் போகட்டுமென்றாலும், சரியொத்த சகோதரனான பரதன் ஊரில் இல்லாதபோது இப்படிப்பட்டதொரு முக்கியமான காரியத்தைச் செய்வது யோக்கியமான காரியமாகாது என்றாவது தகப்பனுக்குப் புத்தி கூறாமலும், தான் புத்தி கூறியும் தகப்பன் ஒரு சமயம் இராமனின் யோசனையை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி இருந்த போதிலும் கூட, பட்டத்துக்கு உரியவனும் என் அன்புள்ளவனுமான சகோதரன் பரதன் இல்லாமல் இப்படிப்பட்ட காரியத்திற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று ராமன் ஒரு வார்த்தையாவது சொல்லாமலும், ஆளில்லாத சமயம் பார்த்து, திடீரென்று தகப்பன் சொன்னவுடன், தானும் சம்மதித்து, பேராசையுடன் பட்டம் கட்டிக் கொள்ள இசைந்தான் என்றால், இவ்விருவரும், அதாவது தசரதனும், இராமனும் பரதனுக்குக் கேடு நினைத்தார்கள் என்ற முடிவின் பேரில் ஆஸ்திகர்கள் கொள்கைப்படியே, கேடு நினைத்தவர்கள் கெடாமல் இருக்க முடியாது என்பதை ஆஸ்திகர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

அன்றியும் இந்தச் சூழ்ச்சியை அறிந்த கைகேயியானவள், அதாவது பரதனுடைய தாயாரானவள், தன் புருஷனான தசரதனுக்குப் பல விதத்தில் எடுத்துச் சொல்லியும், பிடிவாதம் செய்தும், ஒன்றும் கேட்காமல் தசரதன் இவ்வுண்மைகளை மறைத்து கைகேயியைக் கெட்டவளாக்கி உலகம் முழுவதும் கைகேயியை நிந்திக்கும்படிச் செய்து தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள முயற்சிக்கிறான்.

இச்சூழ்ச்சியும், பிடிவாதமும் எல்லாம் இராமன் அறிந்திருந்தும், பட்டாபிஷேகத்தை ஒத்தி வைக்கக்கூட தகப்பனுக்கு யோசனை சொல்லாததால் கடைசியாக, கேடு நினைத்தவர்கள் கெட வேண்டியதாகவே நேர்ந்துவிட்டது.

தமிழ் ஓவியா said...


அதாவது எவ்விதம் என்றால், தசரதன் தனது சூழ்ச்சி வெளிப்பட்டு விட்டதால் இனி தான் அரசனாய் இருந்து ஆட்சி புரிவதில் உலகம் தன்னை மதிக்காது என்றும், இகழும் என்றும் கருதி தற்கொலை செய்து கொண்டு இறக்க வேண்டியவனேயாகி விட்டான்.

இராமனுடைய பேராசையையும், சூழ்ச்சியையும் நன்றாய் அறிந்த கைகேயி, இராமனை ராஜ்ஜியத்திற்குள் இருக்க விட்டால் பரதனுக்கு ஏதாவது கேடு செய்து விடுவான் என்று கருதி, ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறும்படிச் செய்துவிட்டாள். ஆனால், இராமன் இந்தப் பழியுடன் வேறு எங்கும் போய் வாழ்வதற்கு முடியாமல் காட்டிற்குப் போக வேண்டியதாய் முடிந்து விட்டது. காட்டிற்குப் போனாலும் அங்கும் சும்மா இராமல், மறுபடியும் எப்படியாவது, அயோத்திக்கு வந்து அரசாள வேண்டும் என்கின்ற ஆசையை வைத்துக் கொண்டு அதற்கு வேண்டிய சூழ்ச்சிகளை எல்லாம் செய்து, பரதனையும் மோசம் செய்து தனது செருப்பைக் கொடுத்தனுப்பி அந்தச் செருப்பை வைத்து தன் பேரால் அரசாள வேண்டும் என்று சொல்லி, ராஜ்ஜிய சுதந்திரத்தைத் தனக்கு ஆக்கிக் கொள்ள நினைத்ததால், காட்டிலும் இராமனுக்குப் பல தொந்தரவுகள் ஏற்பட்டதோடு, இராமனால் கைகேயிக்கு எவ்வளவு கெட்ட பேர் ஏற்பட்டதோ, அதைவிட அதிகக் கெட்ட பேரும், இழிவும், இராமன் பெண் ஜாதியான சீதைக்கும் ஏற்பட்டது.

சீதையை இராவணன் தூக்கிக் கொண்டு போனதும், இராமன் இராவணனைச் சூழ்ச்சியால் கொன்றதும், எப்படியென்றால், இராவணனைக் கொன்றுவிட்டால் அந்தப் பட்டம் இராவணன் தம்பியாகிய விபிஷணனுக்குக் கொடுப்பதாகவும், வாலியைக் கொன்று அந்தப் பட்டத்தை வாலியின் தம்பி சுக்ரீவனுக்குக் கொடுப்பதாகவும், இப்படியெல்லாம் தில்லுமுல்லும் செய்து ஜெயித்தவன், பெண் ஜாதி சீதையை அழைத்து வந்ததும், அவள் இராமன் வைத்து வாழ முடியாமல் இராமனாலேயே சீதைக்கு விபசார தோஷம் கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டும், பிறகு அதைக்கூட லட்சியம் செய்யாமல் சேர்த்துக் கொண்டும், அப்படிச் சேர்த்துக் கொண்டதும் விபசார தோஷத்தைப் பொருட்படுத்தாமலோ, அல்லது விபசார தோஷத்துக்குச் சீதை ஆளாகவில்லை என்ற பரிசுத்த எண்ணத்தோடோ அல்லாமல், தான் பட்டாபிஷேகம் செய்து கொள்ளும் போது பெண் ஜாதி இல்லாமலும், அல்லது பெண்ஜாதியை விபசார தோஷத்திற்காக வெளிப்படுத்தி விட்ட இராமன் என்கின்ற பழியுடன் இருக்கக் கூடாது என்றும் கருதி தனக்குப் பட்டாபிஷேகம் ஆகும்வரை கூட வைத்திருப்பதுபோல் பாசாங்கு செய்து, பட்டாபிஷேகம் ஆனபின் சீதையினது கர்ப்பத்தைச் சந்தேகப்பட்டு, தானாய் தன்னினதாய் இருக்கக் கூடாது என்று கருதி, அதற்கும் ஒரு சூழ்ச்சி செய்து, அதாவது சீதையின் கர்ப்பத்தைப் பற்றி ஏதோ ஓர் வண்ணான் குற்றம் சொன்னதாக ஏற்பாடு செய்து, ஏனென்றால், அந்தப்புரத்தில் ஸ்திரீகள் கர்ப்பவதியாய் இருக்கும் சேதி வெளியில் முதல் முதல் வண்ணார்களுக்குத்தான் தெரியுமாதலால், அந்த வண்ணான்தான் சொன்னான் என்றால், உலகோரும் சீதையும் நம்புவார்கள் என்று அவன் மீது பழி போட்டு, பெண் ஜாதியைக் கர்ப்பத்துடன் காட்டுக்கு அனுப்ப வேண்டியதாகி, காட்டில் அந்தம்மாள் (சீதை) இராமன் இல்லாமலேயே ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல் மற்றொரு பிள்ளையும் பெற்றுக் கொள்ள நேர்ந்து, அந்த இரண்டு பிள்ளைகளாலேயே இராமன் யுத்தத்தில் தோல்வி அடைந்து, கடைசியாக இவ்வளவு வியாகூலங்களுடனும், கஷ்டங்களுடனும், பழிகளுடனும் இராமன் சாக வேண்டியதாக ஏற்பட்டது.
இராமன் என்றைய தினம் பரதனை ஏய்த்து ராஜ்ஜியப் பட்டாபிஷேகம் பெற வேண்டுமென்று நினைத்தானோ, அன்று முதல் சாகும் வரை துக்கத்தையும், அவமானத்தையும், கஷ்டத்தையுமே அதிகமாய் அடைந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகவே, கெடுவான் கேடு நினைப்பான் என்னும் பழமொழியை ஆஸ்திக தர்மப்படி நம்புகின்றவர்கள், இராமாயணக் கதையை இப்பழமொழிக்கு ஓர் உதாரணமாகக் கொள்ள ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படிக்கில்லா விட்டால், இக்கேடு நினைத்த தசரதன், இராமன் இருவரும் ஏன் கேடு அடையவில்லை என்பதற்குச் சமாதானம் சொல்ல வேண்டும். தசரதனும், இராமனும் கேடு நினைக்கவில்லையென்றால், துன்பங்களும், தொல்லைகளும் அவர்களுக்கு ஏன் ஏற்பட்டனவென்பதற்காவது சமாதானம் சொல்லியாக வேண்டும்.

- குடிஅரசு 12.11.1933.

தமிழ் ஓவியா said...

பால்நெஞ்சு பதறலையா?


- ந.தேன்மொழி

சாணிக்குப் பொட்டிட்டு
சாமியென்று கூத்தாடி
வாசலிலே குத்தவைச்சு
வாழை இலையிட்ட
எனதருமைச் சகோதரியே!

சாணியதை நீமிதித்தால்
சாமியென்று சொல்வாயா?
சாணமென்று சொல்வாயா?
மலையுடைத்துப் பாறையாக்கி
சிலைவடித்து சாமியென்றாய்

நட்டகல்லையும் விடவில்லை
நெடுமரமாய் விழுந்திட்டாய்
அம்மன்தாலி அறுந்ததென
அய்யன் சொன்னான் கோவிலிலே
ஆளுக்கொரு புதுத்தாலி
அணிந்தீர் அவசரமாய்
தன்தாலி அறுமென
தெரியாத சாமியிடம்
அடகு வைத்தாய்
உன்தாலியை சகோதரியே!

காவியுடைக் கயவர்கள்
காலடியில் சரணம்
சாமியென்று சொல்லி
அம்மணமாய் அவனாட
அவன்முன்னே மண்டியிடும்
மானமிழந்த சகோதரியே

பக்தியோடு பாம்புக்குப்
பால்வார்க்கும் பெண்ணினமே
பச்சிளம் குழந்தையை
பக்தியென்ற பேராலே
பாவியவன் ஏறிமிதிக்க
பால்நெஞ்சு பதறலையா?
பார்த்தவிழி துடிக்கலையா?
இப்படியொரு வேண்டுதலை
சாமியவள் கேட்டாளா?
கேட்கும் அவளுன்
சாமியா சகோதரியே?
எத்தனை சாமிகள்
எத்தனை ஆயுதங்கள்
பெண்மானம் தனைக்காக்க
எந்தசாமியும் வரவில்லை

எத்தனை ஆயுதங்கள்
இருந்தாலும் என்ன
எந்தசாமியும் நம்மைக்
காப்பாற்ற வாராது
சாமிக்கே காவல்
நாம்தானடி சகோதரியே
உணர்ந்து கொள்ள
இன்னும் எத்தனை
பெரியார் தேவை
சொல்லடி சகோதரியே!

தள்ளுபடி
வியாபாரம்

அர்ச்சகர்
ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆகம விதிகளெல்லாம் அத்துப்படி!
ஆனாலும் அதெல்லாம் இப்போது தள்ளுபடி!
ஆனந்த சயனத்திலிருக்கும் ஆதிகேசவனுக்கு வியர்க்கிறதாம்?!
ஏ.சி. எந்திரம்
கண்டுபிடித்தது
மாட்டுக்கறி உண்ணும்
மிலேச்சன் கேரியர்!
கருவாட்டு வியாபாரி
கந்தசாமியிடம்,
அதில பாருங்கோ,
ஆண்டவனுக்கு....ஹி ஹி
என்று சொல்லி ஆட்டையப் போட்டு
அதை கர்ப்பக் கிரகத்தில்
போட்ட பின்னே அலுப்பில்லாமல் போகிறது...
அர்ச்சகர் கேரியர் !

- க.அருள்மொழி, குடியாத்தம்.


கடவுள் எதற்கு?

காலைக் கடன்களைக்
கழிப்பது முதல்
இரவு படுக்கை விரித்து
இல்லாளுடன் இணைவது வரை
எல்லா வேலைகளையும்
நானேதான் செய்கிறேன்!
இடையில் எனக்கு
கடவுள் எதற்கு?

- கு.நா.இராமண்ணா, சீர்காழி


ராசிக்கல்

சாலையில்
வாகனப் புழுதியினூடே
தார்ப்பாய் விரித்து
ராசிக்கல் விற்பவருக்கும்,
தொலைக்காட்சி நிறுவனத்தின்
குளிர்சாதன அறையிலமர்ந்து
கேமராவுக்கு முன்
ராசிக்கல் விற்பவருக்கும்,
இடையே உள்ள
பொருளாதார இடைவெளியில்
நழுவி விழுகிறது
ராசிக்கல் மீதான நம்பிக்கை.

- பா.சு.ஓவியச்செல்வன், சென்னை


அவன் கடவுளாம்!

மண்ணைத் தின்பானாம்!
வெண்ணை தின்பானாம்!
பெண்ணைத் தின்பானாம்!
அவன் பெயர் கண்ணனாம்!
அவன் கடவுளாம்! நான் சொல்லல...
நான் சொல்லல...
நான் சொல்லவே இல்லை!

- ஞா.சந்திரகாந்த், திருச்சி

தமிழ் ஓவியா said...

புதிய முறையில் சிக்கன மின்சாரம்


இன்றைய உலகில் மின்சாரத்தின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. அதற்கான உற்பத்தித் திறனோ மிகவும் குறைவாக உள்ளது. இத்தகு நிலையில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தைத் தயாரித்தனர். இதில், கிரிஸ்டலைன் சிலிகான் என்ற விலை உயர்ந்த பொருளும், பிளாட்டினத்தைவிட 10 மடங்கு அதிக விலை கொண்ட SpiroOmeTAD என்ற பொருளும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றுப் பொருளாக கேட்மியம் சல்பைட் பயன்படுத்தி குறைந்த விலையில் தயாரிக்கப்படும் சோலார் பேனல்களின் உற்பத்தித் திறனோ மிகவும் குறைந்த அளவில் உள்ளது.

தற்போது பெரோஸ்கைட் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இது, பூமியில் அதிக அளவில் கிடைப்பதுடன், விலையும் மிகவும் குறைவு. பெரோஸ்கைட்டைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் சோலார் பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் பெரிய கட்டிடங்களில் வெயிலை மறைக்கப் பொருத்தப்படும் கருப்புக் கண்ணாடிக்குப் பதில் இதனைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். சாதாரண சோலார் பேனல்களைவிட இரு மடங்கு மின்சாரத்தை உருவாக்கி நீண்ட தூரத்துக்கு எந்தவிதப் பாதிப்புமின்றிக் கடத்தும் சிறப்பினை பெரோஸ்கைட் பேனல்கள் பெற்றுள்ளமை இதன் தனிச்சிறப்பு.

ஒரு வாட் மின்சாரத்துக்கு 46 ரூபாய் என்ற இன்றைய சோலார் பேனல்களின் விலையினை 31 ரூபாய்க்குள் கொண்டு வந்தால் உலகில் உள்ள அனைத்துக் கார்களும் பெட்ரோலை விட்டுவிட்டு சோலார் கார்களாக மாறிவிடும்.

இன்ஹேபிடேட் என்ற அறிவியல் பத்திரிகை பெரோஸ்கைட் பேனல்கள் விற்பனைக்கு வந்தால் ஒரு வாட் மின்சாரம் 6 ரூபாயாகிவிடும் என்றும், சயின்ஸ் டெக் டெய்லி என்ற தொழில்நுட்பப் பத்திரிகை நாம் நினைத்துப் பார்க்க முடியாத மின்சாரப் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளன.

ஒரு ஃபிலிம் போன்ற தகட்டில் பெயிண்ட் அடிப்பது போல இதனை உருவாக்கிவிடலாமாம். அடுத்தகட்ட வளர்ச்சியில், இது பேனலாக விற்பனை செய்யப்படாமல் சோலார் பெயிண்ட்டாக மாறவும் வாய்ப்பு உள்ளதாம். காருக்குப் புதுசா பெயிண்ட் அடித்தாலே போதும்..., பின்னர் பெட்ரோல் போடும் வேலையே இருக்காதாம்.

தமிழ் ஓவியா said...

பூப்பெய்தாத சிறு பெண் சிவனுக்கா?

- திராவிடப்புரட்சி

பூப்பெய்தாத சிறு பெண் சிவனுக்கு_ கடவுளுக்கு எப்படித் திருமணம் செய்துவைக்கப்படுகிறாள் என்பதைக் கீழ்கண்ட செய்திகள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். இளகிய மனம் கொண்டோர் படிக்கக்கூடாத கொடுமை இது. பல பெண்கள் தமது மூடநம்பிக்கைகளின் காரணமாக தங்கள் மகள்களுடைய கன்னிமையை தமது கடவுளர் விக்கிரகங்களுள் ஒன்றுக்குத் தாரை வார்த்துத் தந்து அர்ப்பணிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்குப் பன்னிரெண்டு வயது ஆன உடனேயே, அந்த விக்ரகம் இடம் பெற்றுள்ள வழிபாட்டுத் தலம் அல்லது மடத்துக்கு அவளை அழைத்துக்கொண்டு சகலவிதமான மரியாதைகளுடன் போவார்கள். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்விக்கப்படுவதற்கு முந்தைய நல விழாவொன்றை அவளது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றுகூடி எடுக்கின்றனர்.

அவ்விடத்தின் கதவுக்கு வெளிப்பக்கமாக, மிக கடினமான கருங்கல்லால் ஆன ஒரு சதுரமான பீடம் ஓர் ஆள் உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும். அதைச் சுற்றிலும் மரப்பலகைகளினால் ஆன தட்டிகள் வைக்கப்பட்டு அதனுள் பீடம் கண் மறைவாக இடம் பெற்றிருக்கும். இவற்றின் மீது பல எண்ணெய் விளக்குகள் வைக்கப்பட்டு அதனுள் அவை இரவில் எரிக்கப்படும். விழாவுக்காக மரப்பலகைகளை பட்டுத் துணித் துண்டுகளால் அலங்கரித்திருப்பார்கள். வெளியே உள்ள மக்கள் உட்புறம் நடப்பவற்றைக் காணமுடியாதபடி அத்துணிகள் உட்புறம் செருகப்பட்டு மறைப்பாக அமைக்கப்பட்டிருக்கும். மேலே சொல்லப்பட்ட கருங்கல்லின் மேல், குனிந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதனின் உயரத்திற்கு மற்றொரு கல் இருக்கும். அதன் நடுவே உள்ள துளையில் கூர்முனையுள்ள ஒரு குச்சி செருகி வைக்கப்பட்டிருக்கும்.

அக் கன்னிப்பெண்ணின் தாயார், தனது மகளையும் உறவுக்காரப் பெண்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு மரப்பலகைகளால் ஆன அந்த இடத்திற்குள் போய்விடுவாள். பிரமாதமான பூசைகளுக்குப் பின் உள்ளே நடந்த நிகழ்வு பார்வையில் படாததால் எனக்குச் சொற்பமான அறிவே உள்ளது, அந்தப் பெண், கல் துளையுள் செருகப்பட்டிருந்த கூர்முனையுள்ள குச்சியைக் கொண்டு தனது கன்னித்திரையை தானே கிழித்துக்கொள்வாள். கசியும் குருதியை அந்தக் கற்களின் மேல் சிறிய துளிகளாகத் தெளித்துவிடுவாள். அத்தோடு அவர்களின் விக்கிரக ஆராதனையும் நிறைவடையும்.

கண்ணால் கண்ட விவரங்களை இவ்வாறு பதிந்திருப்பவர் துவார்த்தே பார்போசா.

மேற்கண்ட செயல் மூலம் நமக்குத் தெரியவருவது, கடவுளான சிவனின் பிரதிநிதிக்கு, பூப்பெய்துவதற்கு முன்னரே அப்பெண் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதே. இது வெளிப்படையாக ஆண்குறி (லிங்க) வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. சிவனுக்கு இத்தகைய பெண்களைத் திருமணம் செய்து வைப்பதற்குச் சமமான ஒரு சடங்காக இது கருதிக்கொள்ளப் பட்டிருக்கக்கூடும் என்று துவார்த்தே பார்போசா தெரிவிக்கிறார்.

பிற்காலத்தில், ஒரு சுபயோக சுபதினத்தில், இதர ஆலய ஊழியர்கள் அனைவரின் முன்னிலையிலும் இந்தச் சடங்கு நிகழ்த்தப்பட வேண்டும் என்று காட்டாயமாகியிருக்கிறது.

ஆயிரக்கணக்கான பருவமெய்தாத சிறு குழந்தைகளைப் பாலியல் வல்லுறவு கொள்ளவைத்துள்ள இந்துக் கடவுள்களை நினைத்தால் இவற்றைக் கடவுள்களாக ஏற்றுக்கொள்ள முடியுமா? நாகரிகமடைந்த இந்தக் காலத்திலும், இந்து மதம் குறித்த புரிதல் இல்லாமல், தன்னை இந்துவாக _ பெருமையாகக் கருதும் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! முகநூலில் இந்தக் கொடூர செய்தியைப் பதிவு செய்திருந்தேன். அதனைப் படித்த சில தோழர்கள் இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்!

இதற்கான ஆதாரம், முனைவர் கே.சதாசிவன் அவர்களின் ஆய்வு நூலான தமிழகத்தில் தேவதாசிகள் என்ற நூலில் உள்ளது.

அந்த நூலை அவர் சாதாரணமாக கதை வடிவில் வெளியிடவில்லை என்பது கூடுதல் சிறப்பு. நூற்றுக்கணக்கான ஆதாரங்களை அள்ளிக் கொடுத்துள்ளார் நூலில். இந்த நூலை எழுதியுள்ள கே.சதாசிவன் அவர்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை மேனாள் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், கலைப்புல ஆசிரியர் குழு. இவருடைய எம்.ஃபில் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் தேவதாசி முறை பற்றியவை. சமூகவியல் மற்றும் புதைபொருள் இயல் ஆகியவற்றிலும் இவர் கல்விபுல பட்டங்கள் பெற்றவர்.

தேவதாசிகள் தொடர்பாக 145 கட்டுரைகள் எழுதியுள்ளார். 20ஆ-ம் நூற்றாண்டின் படைப்புத்திறன் படைத்த அறிவுஜீவிகள் 2000 பேரில் ஒருவர் என கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் 2001ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டவர்.

தமிழ் ஓவியா said...

பேரழிவைத் தடுக்க முடியாத கடவுள்

- தமிழில் : த.க.பாலகிருட்டிணன்

மத, கடவுள் நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பற்றிய நமது விமர்சனங்கள் அவர்களை கேலியும் கிண்டலும் செய்வதாக இருக்கக் கூடாது என்பதையும் இந்த இடத்தில் கூறவேண்டியது அவசியமாகும். நமது விமர்சனங்கள் எவையேனும் நம்பிக்கையாளர்களைக் கேலியும் கிண்டலும் செய்வதாக எவர் ஒருவராவது கூறினால், நமது கருத்துகளைத்தான் நாம் எடுத்துக் கூறுகிறோம், அவர்களைக் கேலியோ கிண்டலோ செய்ய முற்படவில்லை என்பதை முதலிலும், நமது விமர்சனங்களை பயனற்றதாகச் செய்துவிடுவதற்கான முயற்சியாகத்தான் அவற்றை கேலி, கிண்டல் என்று அவர்கள் கூறுகின்றனர் என்பதை இரண்டாவதாகவும் அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

நம்பிக்கையாளர்களுக்கு எதிரான வாதங்களை மிகவும் மென்மையாகவும் கடுமையின்றியும் நாத்திகர்கள் எடுத்து வைக்கவேண்டும் என்றே நம்பிக்கையாளர்கள் விரும்புவர். நாத்திகம் பற்றிய நமது வாதங்களை முன்வைப்பதில் தந்திரம் மிகுந்த ஒரு அணுகுமுறையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவதை நம்ப முடியாது; நமது வாதங்களைத் தோற்கடிக்கும் ஒரு முயற்சியே அது. பாவத்தைத்தான் தாங்கள் வெறுப்பதாகவும், பாவம் செய்த மனிதரை வெறுப்பதில்லை என்று பல நம்பிக்கையாளர்களால் கூற முடியுமானால், நம்பிக்கையாளர்களின் மூடநம்பிக்கைகளை மட்டுமே நாம் வெறுக்கிறோம் என்றும், நம்பிக்கையாளர்களை நாம் சகோதர, சகோதரிகளாகவே கருதி அன்பு செலுத்துகிறோம் என்று நம்மாலும் கூறமுடியும். மதத்திற்கு எதிரானவர்களாக இருப்பதற்கு நாம் விரும்பவில்லை என்று உறுதியாகக் கூறச்செய்யும் ஒரு பொறியில் மாட்டிவிட மேற்கொள்ளப்படும் முயற்சியில் நாம் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 16 ஆம் பெனடிக்ட் போப்பை எடுத்துக் கொள்ளுங்கள் நம்பிக்கையற்றவர்களை அவர் மிகவும் கடுமையாகவும் தீவிரமாகவும் கண்டிப்பார். நாத்திகர்களுக்கு எதிரானவன் என்று தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்பது போன்ற மென்மையான முறையில் எப்போதுமே அவர் பேசியதில்லை. நம்பிக்கையாளர்களின் சட்டப்படியான உரிமைகளை ஒழித்துவிட வேண்டும் என்று நாம் கேட்காதவரை, அவர்களின் நம்பிக்கை தவறானவை, தீங்கு நிறைந்தவை என்பதை விளக்கிக் கூற நமக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன; அவ்வாறு கூறாமல் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது.

மதவாதிகள் மட்டும் எவ்வாறு மக்களின் மன்னிப்பைப் பெறுகின்றனர்?

கடவுள் வழிபாடு செய்யாத ஒருவரைத் தன்னால் நம்ப முடியாது என்றும், கடவுள் நம்பிக்கையற்ற ஒருவரால் நியாயமான, அறிவுப்பூர்வமான எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது என்றும் 2012 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களில் ஒருவரும், சட்டமன்ற முன்னாள் அவைத்தலைவருமான நியூகிங்ரிச் ஒரு முறை சொன்னார். கற்பனையிலான ஒரு கடவுளை வழிபடுவதில்லை என்று ஒப்புக் கொள்ளும் நாத்திகர்களாகிய நமது துணிவு நம்மைப் பொருத்தவரை ஓர் ஆக்கப்பூர்வமான பெருமையாகக் கருதத்தக்கதாகுமேயன்றி, இழிவின் அடையாளமாகக் கருதத்தக்கதல்ல.

தமிழ் ஓவியா said...

அறிவியலையும், தத்துவஇயலையும் நன்கு கற்று ஆய்ந்தவர்கள், இந்தப் பிரபஞ்சம் இயற்கையாகத் தானாக உருவானதேயன்றி, எந்தக் கடவுளாலும் படைக்கப்பட்டதல்ல என்ற முடிவுக்கு வந்தது மிகச் சிறந்த, நியாயமான முடிவே அன்றி, மோசமான முடிவு அல்ல. அப்படியிருந்தும், நாத்திகர்களாகிய நம் மீது நியாயமற்ற, மோசமான, இழிவான பண்புகள் நியூகிங்ரிச் போன்ற ஒருவரால் சுமத்தப்படுகிறது. இத்தனைக்கும் நம்பிக்கையாளர்கள் கண்டிக்க வேண்டிய பிறன்மனை விழையும் குற்றத்தை அவர் இழைத்திருந்தார். நமக்கு ஏன் கடவுள் நம்பிக்கையில்லை என்பதற்காக நாம் கூறும் நியாயமான காரணங்களைக் கேட்கத் தயாராக இல்லாத இந்த மக்கள் அவருடைய குற்றங்களை எல்லாம் விரைவில் மறந்து போய்விடுவார்கள்.

முழு வேகத்துடனும், ஆற்றலுடனும் நமது வாதங்களை முன் வைக்க நாம் எவ்வளவு நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறோமோ, அந்த நீண்ட காலம்வரை, பொதுமக்களிடையே நமது பரப்புரையின் மூலம் நம்மால் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது; நாத்திகம் மற்றும் நாத்திகர்கள் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் பகை உணர்வையும், வெறுப்பையும் அவ்வளவு எளிதாகப் போக்கிவிட முடியாது. பிறன்மனை விழைந்த தனது கடந்த காலக் குற்றங்களுக்காக நியூகிங்ரிச் கோரியுள்ள மன்னிப்பு பெரும்பாலான மக்களிடையே அவர் மீது பரிவை ஏற்படுத்தியுள்ளது. தனது கடந்த காலப் பாவங்களுக்கான பாவ மன்னிப்பு பெற கத்தோலிக்க மதத்திற்கு அவர் மாறியதே இதன் காரணம். மிகமிக மோசமான முறையில் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடத்தப்பட்ட ஒரு மத அமைப்பில், மக்கள் பெருக்கம் அதிகரித்து வரும் இன்றைய உலகில் கருத்தடை முறைகளைப் பின்பற்ற கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஒரு மத அமைப்பில், கத்தோலிக்க கிறித்துவ மதத்தில், அம்மதத்தினைப் பின்பற்றுபவர்களின் கடந்த காலப் பாவச் செயல்களின் பாதிப்புகளைத் துடைத்துவிடும் புனிதத்தன்மை இன்னமும் இருக்கின்றது போலும் !


நம்பிக்கையாளர் சட்டப்படியான சம உரிமைகளுக்கு நாத்திகர்கள் அச்சுறுத்தல் அல்ல

கடவுளை வழிபடுவதற்கும், தங்கள் நம்பிக்கைகளைப் பரப்புரை செய்வதற்கும் நம்பிக்கையாளர் பெற்றுள்ள சுதந்திரத்தை சட்டத்தினைப் பயன்படுத்திப் பறித்துக் கொள்ள நாத்திகர்களாகிய நாம் முயன்றோமேயானால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே தெரிவோம். இதனைச் செய்ய நாம் முற்படவில்லை. நம்பிக்கையாளர், நம்பிக்கை அற்றவர் என அனைவருக்குமே சட்ட ரீதியான சமத்துவத்தைப் பெறுவதே நமது நோக்கமாகும். நாம் பெற்று அனுபவிக்கும் பயன்களைவிட மிக அதிக அளவிலான பயன்களை அரசிடமிருந்து பெற்று மதநம்பிக்கையாளர்கள் அனுபவிப்பதை நாம் விரும்பவில்லை. தற்போது நம்பிக்கையாளர்கள் அனுபவித்து வரும் உரிமையான, தங்களது கருத்துகளைப் பொதுமக்களிடையே பரப்புரை செய்யும் அதே உரிமையைத்தான் நாமும் கேட்கிறோம்.

தமிழ் ஓவியா said...

நம்பிக்கையாளர்களுக்கும், நம்பிக்கை அற்றவர்களுக்கும் சட்டப்படி சம உரிமை இருக்கவேண்டும் என்ற நிலையை நாம் மேற்கொள்ளும் வரை, மதச் சுதந்திரத்துக்கு நம்மால் எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது. பொதுமக்களிடையே நாம் பேசி, விவாதிப்பதுவே தங்களுக்கான அச்சுறுத்தலாக மதநம்பிக்கையாளர்கள் கருதினால், அது அவர்களது பிரச்சினை. மதக் கண்ணோட்டத்தில் நம்பிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதைத் தடுக்கும் உரிமை நமக்கு எவ்வாறு இல்லையோ, அவ்வாறே நமது நாத்திகக் கருத்துகளை வெளிப்படுத்துவதைத் தடுக்கும் உரிமையும் நம்பிக்கையாளர்களுக்குக் கிடையாது.

சுதந்திரமாக எவரும் பேசுவதை அனுமதித்திருப்பதை மிக முக்கியமான மதிப்பீடாகக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில், நமது நாத்திக வாதங்களை எதிர்கொள்வதற்கு நம்பிக்கையாளர்களுக்கு உள்ள வழியானது, தங்களின் வாதங்களை முன்வைத்து நமது வாதங்களுக்குப் பதில் அளிப்பதுதான். எதிரிகளின் வாயை அடைப்பதற்காக நாட்டின் காவல்துறை அதிகாரத்தை எவர் ஒருவரும் பயன்படுத்தக் கூடாது, முடியாது. -தங்களுக்குத் தவறாகத் தோன்றும் கருத்துகளைச் சந்திக்க தங்களது பிரதிவாதங்களை முன்வைக்க வேண்டும்- என்ற நமது முதல் சட்டத் திருத்தத்தை நியாய மனமும், உணர்வும் கொண்ட ஒவ்வொரு மனிதரும் மகிழ்ந்து, போற்றி, வரவேற்க வேண்டும்.

சோதனை மூலம் மெய்ப்பிக்கப்படும் நடைமுறை அனைவருக்கும் ஒன்றுபோல் பின்பற்றப்பட வேண்டும்

மதச்சார்பற்ற ஒரு சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைக்காத ஒரு நிகழ்வுக்கு, பாரம்பரியமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மத நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதற்காக, அதற்கு மதம் சார்ந்த அற்புதம் என்ற ஒரு சிறப்பான இடத்தைத் தருவதற்கு எந்த விதக் காரணமும் இருக்க முடியாது. மனிதர்கள் தற்போதுள்ள வடிவத்திலேயே ஓர் அற்புதத்தால் கடவுளால் படைக்கப்பட்டனர் என்பதையும், பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள அனைத்துப் பிற அற்புத நிகழ்வுகளும் உண்மையிலேயே நடந்தவை என்பதையும் நம்புகிறவர்கள், இன்று மக்களால் தங்கள் எதிர்காலத்தை ஊகித்து அறியமுடியும் என்பதையோ, தங்கள் உடல்களுக்கு வெளியேயும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி, அடுத்த அறையில் எழுதப்பட்டிருக்கும் எண்களை இங்கிருந்தே படிக்க முடியும் என்பதையோ நம்பமாட்டார்கள். மேலும், மதத்தினால் கூறப்படும் அற்புதங்களைத் தர மதிப்பீடு செய்வதற்கு, அவை மதத்துடன் தொடர்புடையது என்ற ஒரே காரணத்துக்காக, ஒரு மாறுபட்ட, அதிக கடுமை அற்ற அளவுகோல்களைப் பயன்படுத்தக்கூடாது.

தமிழ் ஓவியா said...


அதற்கு மாறாக, அற்புதங்கள் பற்றிய மதநம்பிக்கையாளர்களின் கூற்றுகளை மிகச் சிறந்த முறையில் பகுத்தாய்வு செய்து, பரிசீலனைக்கு உட்படுத்துவதை முழுமையாக நியாயப்படுத்தி நாம் காட்டியுள்ளோம். இயற்கையை மீறிய அற்புத நிகழ்வுகள் என்று தாங்கள் ஏன் கூறுகிறோம் என்பதையும், அது போன்ற மற்ற வகையிலான அற்புத நிகழ்வுகளைவிட இவற்றிற்கு ஏன் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் கூறும் வாதங்களை முன்வைத்து பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு அவர்களுக்கே உள்ளது; நமக்கு இல்லை. அமெரிக்காவின் ஓய்வு பெற்ற மூன்றாவது அதிபர் தாமஸ் ஜெஃபர்சன், ஓய்வு பெற்ற இரண்டாவது அதிபர் ஜான் ஆடம்ஸ்க்கு 1823ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எழுதிய ஒரு கடிதத்தில், கன்னித்தாயின் கருப்பையில், தனது தந்தையால் உடல் உறவு இன்றி கருவுறச் செய்யப்பட்ட யேசு என்னும் கடவுள் அற்புத முறையில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் கதையை ஜூபிடரின் மூளையில் இருந்து மினர்வா பிறந்த கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு நாள் வரும் என்று எழுதினார்.

நாம் இப்போது கையாண்டு கொண்டிருக்கும் மய்யப் பிரச்சினை பற்றி ஜெஃபர்சன் இவ்வாறு எழுதி விடை அளித்துள்ளார். பண்டைய ரோமானிய கடவுள்களின் கதைகளை நம்பாமல் இருக்கும் நிலையில், கிறித்துவ மதக் கடவுளின் கதைகளை மட்டும் ஏன் நம்பவேண்டும்? நாத்திகர்களும், நம்பிக்கை அற்றவர்களும் தங்களைக் கடுமையாகத் தாக்குவதாக மதநம்பிக்கையாளர்கள் கூறுவது, மற்ற மாயமந்திரக் கதைகளுக்கு இல்லாத ஒரு தனி பாதுகாப்பைத் தங்களின் புராண, இதிகாசக் கதைகளுக்குப் பெறுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி என்பதே உண்மையாகும். மற்ற நம்பிக்கைகள் மீது மேற்கொள்ளப்படும் நுண்ணிய ஆய்வு, பரிசீலனை, எழுப்பப்படும் அய்யங்கள், செய்யப்படும் கேலி, கிண்டல்களை விட மிகக் குறைந்த அளவில் மட்டுமே மத நம்பிக்கைகள் மீது மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கண்ணோட்டத்தை இன்னமும் கொண்டிருக்கும், தங்களைத் தாங்களே வெறுத்துக் கொள்ளும் மனநோயினை நாத்திகர்களாகிய நாம் தவிர்க்க வேண்டும். பாவத்தைத்தான் வெறுக்கிறோம், பாவியை அல்ல என்று கூறி மதவாதி தப்பித்துக் கொள்ள முடியுமானால், மூட நம்பிக்கையைத்தான் நாங்கள் கேலி செய்கிறோம், மூடநம்பிக்கையாளரை அல்ல என்று நம்மாலும் மிகுந்த நம்பகத்தன்மையுடன் கூறிக் கொள்ள முடியும்.

தமிழ் ஓவியா said...

நாத்திக வாதங்களைப் பொதுமக்கள் முன் வைத்தல்

மனதத்துவ அளவிலான பட்டறிவு, நுட்பத்திறன், நாகரிகம் சமூகம் முழுவதிலும் மாறுபட்டிருப்பதாகும். எந்த ஒரு விவாதத்தின் போதும், ஒரு வாதத்தின் ஆழம் பார்வையாளர்களைப் பொருத்து மாறுபடுவதாகும். என்றாலும், எந்த அளவுக்கு ஒருவரது வாதம் நாகரிகமாக இருக்க வேண்டும் என்பது பார்வையாளர்கள் எத்தன்மையானவர்கள் என்பதைப் பொருத்தது. இப்படிக் கூறுவது, எப்போதுமே அடிப்படைப் பண்புகளை நாம் புறக்கணித்துவிட வேண்டும் என்று கூறுவதாக ஆகாது. இயற்கையை மீறிய இதர நம்பிக்கைகளைவிட மதம்சார்ந்த நம்பிக்கைகளை அதிக அளவில் பரிசீலனை செய்வதோ, சோதனைக்கு உட்படுத்துவதோ கூடாது என்று சமூகம் மேற்கொண்டுள்ள தவறான நிலையை சிறிதும் சிந்தனையே இன்றி பெரும்பாலான மக்கள் நமது கலாச்சாரத்தில் ஏற்றுக் கொண்ட போதிலும், இந்த மனநிலையை, கண்ணோட்டத்தை உடைத்தெறிய நம்மால் முடியும். இதற்கான காரண காரியங்கள், ஆதாரங்கள் ஒன்று போலவே இருப்பதைப் பற்றி எவர் ஒருவருடன் வேண்டுமானாலும் நம்மால் பேசத் தொடங்க முடியும். ஜோதிடமாக இருக்கட்டும் அல்லது இறந்தவர் புத்துயிர் பெற்று எழுவதாக இருக்கட்டும், அதே அளவுக்கு கடுமையான சோதனைகளுக்கு அனைத்து அற்புத நிகழ்வுகளும் ஏன் உட்படுத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றி விளக்கிக் கூற நம்மால் முடியும். ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்துப் பேச நம்மால் முடியாமல் போகலாம். என்றாலும், எந்த அளவுக்கு அதிக எண்ணிக்கை கொண்ட மக்களை நாம் சந்தித்துப் பேசுகிறோமோ, அந்த அளவுக்கு மதஅற்புத நிகழ்வுகள் பற்றிய உண்மை நிலையைப் பற்றிய அய்யப்பாடு என்னும் விதைகளை நம்மால் விதைத்துவிட முடியும்.

இந்தக் காரணத்தினால்தான், கடவுள் இருக்கிறாரா என்பது பற்றி மாணவர்களின் மனதில் அய்யங்களை ஏற்படுத்தும் காரணத்தினால், பல்கலைக்கழகங்களில் நடைபெறும் விவாதங்கள், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இது போன்ற விவாதங்களை மாணவர்கள், அதிக எடை கொண்ட நுண்ணறிவுச் சண்டை போன்று கவனத்தை ஈர்ப்பவையாகக் கருதுகின்றனர். அந்த ஒரு சில மணி நேரத்தில், விவாதங்களின் மீதே அவர்களது கவனம் முழுமையாக குவிக்கப்படுகிறது. விவாதங்கள் நடைபெறும்போது மாணவர்களின் கவனம் அதில் ஈடுபட்டிருப்பதால், ஒரு திறமையான நாத்திகப் பேச்சாளர் தனது வாதங்களால் மாணவர்களைப் பரிசீலனை செய்ய வைக்க முடியும்; வேறு சமயங்களில் இத்தகைய கருத்துகள் பற்றி அவர்கள் கவனம் செலுத்தமாட்டார்கள்.

தமிழ் ஓவியா said...


மேலும், மதங்களால் மனித இனம் இடைவெளியே இல்லாமல் அடையும் பெரும் துன்பங்கள், பெரும் கேடுகள், பேரழிவுகள் பற்றி மதவாதிகளுக்கு நம்மால் சவால்விட முடியும். கடவுள் பல விசித்திரமான வழிகளில் செயல்படுகிறார் என்றும், இத்தகைய துன்பங்கள் ஏற்படுவதற்கு ஏதோ ஒரு பொருத்தமான காரணம் மனிதரைவிட உயர்ந்த கடவுளிடம் இருக்கக் கூடும் என்றும், அதனை நம்மால் எப்போதுமே அறிந்து கொள்ள முடியாது என்றும் மதவாதிகள் கூறும் புரட்டு வாதங்களை எதிர்த்து முறியடிப்பதற்கு நாம் சிறிதும் அச்சப்படவோ, பின்வாங்கவோ, தயங்கவோ கூடாது. தான் இருப்பதை மக்கள் நம்பவேண்டும் என்று கடவுள் விரும்பினாலும், நம்மிடம் இருந்து, நாம் காணாதவாறு ஒளிந்து கொண்டு இருப்பதால், இயற்கையை விஞ்சிய ஆற்றல் கொண்ட கடவுள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லாதநிலையில், நடந்தேறும் பேரழிவு போன்ற சோக நிகழ்ச்சிகள், மக்களுடன் உறவு கொண்டிருக்கவேண்டும் என்று விரும்பும், எல்லாம் வல்ல இறைவன் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்துடன் முரண்பட்டு நிற்கின்றன. நாத்திகம்தான் உண்மையானது என்னும்போது இந்த தெய்வம் ஒளிந்து விளையாடும் விளையாட்டு அதிகமாகவும், ஆத்திகம் உண்மையானது என்னும்போது குறைவாகவும் இருக்கும். முதலாவதாக, அத்தகைய ஒரு கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையே இல்லாமல் நாம் இருப்பதை இவ்வாறு ஆதாரப்பூர்வமாக நியாயப்படுத்தியிருக்கிறோம்.

மேலும், கடவுள் என்று ஒருவர் இருந்து, அவர் எல்லாம் வல்லவராக இருந்திருந்தால், தனக்கு எல்லையில்லாத ஆற்றல் இருந்தும், பெரும் பேரழிவு ஏற்படுவதைத் தன்னால் தடுக்க முடியவில்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். அல்லது அத்தகைய பேரழிவு, பெருந்துன்பத்தினை நியாயப்படுத்தும் அளவு என்ன பெரும் நன்மையைத் தன்னால் செய்ய இயன்றது என்பதைக் கடவுள் கூறியிருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும், இத்தகைய பேரழிவு, பெருந்துன்பத்தினைத் தடுக்க எதுவுமே செய்ய முடியாத கடவுள் எப்படி எல்லாம் வல்ல, கருணை நிறைந்த கடவுளாக இருக்க முடியும்? தெளிவான நாத்திக வாதங்களின் நியாயத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.

வேறுவகையிலான நடைமுறை கொண்ட நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களுக்குக் காட்டப்படாத சலுகை, மென்மை, தனிக் கவனம் ஆகியவற்றைப் பெறுவதற்கு மதநம்பிக்கையாளர்கள் தகுதி பெற்றவர்கள் என்று வலியுறுத்துவது அரசியல் சந்தர்ப்பவாதத்தின் காரணமாக மேற்கொள்ளப்படும் முடிவே அன்றி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதற்கு எதிரான வாதங்களின் முழு ஆற்றலையும், பாதிப்பையும் அடக்கி ஒடுக்குவதற்கு எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லை; இருக்க முடியாது. தங்களைப் போல் கடவுளை நம்பாதவர்கள் எல்லாம் நரகத்துக்குப் போவார்கள் என்று வெளிப்படையாக மதவாதிகள் கூறும்போது, எவ்வாறு சொர்க்கம் என்ற ஒன்றோ அல்லது நரகம் என்ற ஒன்றோ இல்லை என்று காரண காரியங்களுடன் நாம் வெளிப்படையாக விளக்கி நியாயப்படுத்தி வருகிறோம். நம்பிக்கையாளர்கள் பெற்றிருப்பது போன்ற அதே உரிமையுடன் நாமும் நமது வாதங்களை முன் வைக்கிறோம் என்பதால் கோபம்கொண்ட நாத்திகர்கள் என்று நம் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அவர்களைப் பார்த்து கோபம் கொண்ட ஆத்திகர்கள் என்று நம்மாலும் குற்றம் சுமத்தமுடியும். மூடநம்பிக்கைகளில் இருந்து விடுதலை பெற்று, நல்ல சுதந்திரமான வாழ்க்கை முறையை அனுபவித்து வாழ்ந்து வரும் மற்றவர்களைப் போன்ற மகிழ்வான வாழ்வை வாழமுடியாதவர்கள் இந்த நம்பிக்கையாளர்கள்.

தமிழ் ஓவியா said...

ராம வன்ம பூமியில் கொலைகாரக் காவிகள்!

- சரவணா ராஜேந்திரன்

1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பின் காரணமாக ஒரே நாளில் `ராம ஜென்ம பூமி உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியானது. ராமர் பிறந்த புனித பூமி வன்முறைக்களமானதே என உலகம் முழுவதிலுமுள்ள இந்து மதத்தினர் வேதனைப்பட்டதாக ஓர் ஆங்கில மாத இதழ் தலைப்பிட்டிருந்தது. 2006-ஆம் ஆண்டு இரண்டு சாமியார்கள் குழு நில அபகரிப்பு தொடர்பாக மோதிக்கொண்டதும் அதில் சிலர் கொல்லப்பட்டதும், செய்தியாக வந்தவுடன் பத்திரிகைகளின் பார்வை மீண்டும் அயோத்தியின் மீது திரும்பியது.



அதற்கு அடுத்த ஆண்டு கழிவறைத் தொட்டியில் ஒரு சாமியார் மற்றும் இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டிப் புதைக்கப்பட்ட விவகாரம் ஜன்மோர்ச்சா என்ற பத்திரிகையில் வெளிவந்தவுடன் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலான ஊடகங்கள் ஒரு சிலரின் கைப்பாவையாக மாறி இருப்பதால், உண்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்டு பொய்யான தகவல்களே கிடைக்கின்றன. இந்த நிலையில் அயோத்தியின் உண்மை நிலையை அறிய `ஓபன் என்ற ஆங்கில இதழ் கடந்த ஆண்டு (2013) ஆகஸ்ட் மாதம் களமிறங்கியது. களமிறங்கிய உடனேயே சாதுக்களின் நில ஆக்ரமிப்பு விவகாரத்தைப் பூதாகரமாக வெளிக்கொண்டு வந்தது. இதனை அடுத்து தெகல்காவும் களமிறங்க, நூறாண்டு காலமாக நடந்து வரும் ஒரு பயங்கரம் வெளியானது. ராம ஜென்ம பூமி என்பது ராம வன்ம பூமியே என்ற இத்தனை ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த பயங்கர உண்மை வெளிவந்தது. 21 ஜூலை 2013-_இல் சராயு நதிக்கரையில் உள்ள ஒரு சிறிய நிலத்திற்காக இரண்டு சாமியார் குழுக்கள் இடையே பெரிய கலவரம் நிகழ்ந்தது. பகவான் தாஸ் என்ற சமாஜ்வாதி கட்சி ஆதரவு பெற்ற சாமியாரின் குழுவும் ஹரி சங்கர் தாஸ் என்ற பாரதிய ஜனதா கட்சி ஆதரவு பெற்ற சாமியாரின் குழுவும் அயோத்தியின் புறநகரில் மோதிக்கொண்டன. எப்போதும் போல கல், கம்பு கத்தியுடனான கலவரமல்ல; வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி சகிதம் மோதிக் கொண்டனர். இதில் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒருவர் கொலை செய்யப்பட்டார். சுமார் 200 ஆண்டுகாலமாக நடந்துவரும் இது போன்ற வன்முறைகள் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பரிணாமத்தில் ஆயுதங்களுடன் சேர்ந்து வளர்ந்து வருகிறது. ராமரின் ஜென்ம பூமி என்று இவர்களால் கதைக்கப்படும் நிலம் ராம வன்ம பூமியாக மாறி நீண்ட காலமாகிவிட்டது.

தமிழ் ஓவியா said...

நவீன ரக துப்பாக்கிகளுடன் சாமியார்கள்

சாமியார்களின் கரங்களில் ஜெபமாலையும், கமண்டலமும்தான் இருக்கும் என்பார்கள். ஆனால் அங்கே சாராய பாட்டில்கள், குடிலின் இரகசிய அறையில் விபச்சாரிகள் மற்றும் இடுப்பின் முன்பு கத்தி மற்றும் வாள் போன்றவை இருந்தன. தற்போது உக்ரேன் தயாரிப்பு துப்பாக்கிகளும், நவீன ரக கையடக்க பிஸ்டல்களும் இருக்கின்றன. அயோத்தியாவில் பல சாமியார்களின் மீது வயதுக்கு வராத குழந்தைகளைக் கற்பழித்த குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், சாமியார் வேடம் மற்றும் மக்களின் மூடத்தனத்தால் அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள்.

குருவைக் கொலை செய்து அந்த இடத்தைப் பிடி

முன்பு அயோத்தியா(பைசாபாத்) நகரின் காவல்துறை இணை ஆணையராக இருந்தவரும் தற்போது ரேபரேலி மாவட்டத்தின் ஆணையராக இருக்கும் ஆர்.கே.எஸ் ராதோட் கூறும்போது,

தமிழ் ஓவியா said...

பைசாபாத்(அயோத்தியா) நகரில் இருக்கும் சாதுக்களில் பொரும்பாலானோர் மிகவும் கடுமையான குற்றங்களைச் செய்தவர்களாக உள்ளனர். அவர்களில் பலரது குற்றப் பின்னணியைப் பார்க்கும் போது, பெரிய பெரிய கொலை மற்றும் வழிப்பறிக் குற்றவாளிகள் அனைவரும் சாதாரணமானவர்கள்தான். நீண்டகாலமாக பைசாபாத் காவல்துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தர்மேந்திர சிங் கூறுகையில், ஏதாவது ஒரு சாமியாரின் மீது புகார் வராத நாளே கிடையாது. குழுக்களுக்குள் சண்டை, சிறுமிகள் மற்றும் பெண்களைச் சீண்டியது, போதைப்பொருள் உட்கொண்டு பொது இடத்தில் அநாகரிகமாக நடந்தது என தினசரி புகார்கள் வந்துகொண்டு தான் இருந்தன. சில நேரங்களில் நான் மிகவும் வேதனைப்பட்டதுண்டு, இது போன்ற காரியங்கள் செய்வதற்கு சாமியாராக ஏன் இருக்கவேண்டும் பேசாமல் ரவுடிகளாக மாறிவிடலாமே? என நினைப்பதுண்டு.

தமிழ் ஓவியா said...

காவிகளிடம் கண்ணை பறிகொடுத்த சகோதரர்கள்

அயோத்தியாவின் மாஜிஸ்ரேட் தரக்கேஷ்வர் பாண்டே மற்றுமொரு திடுக்கிடும் தகவலைக் கூறியுள்ளார். இராவணன் சீதையைக் கவர எத்தனையோ வேடங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் தேர்ந்தெடுத்தது சாமியார் வேடம்தான். காரணம், சாமியார் வேடத்தில்தான் மக்களை எளிதில் ஏமாற்ற முடியும். அயோத்தியாவில் உள்ள அனைத்து சாதுக்கள் மீதும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்குற்றம் அல்லது போதை உட்கொண்டு ரகளை செய்தல் மற்றும் கொலைக்குற்றம் போன்றவை உண்டு. சராயு நதிக்கரையில் உள்ள ராம்ஜானகி கோவில் மடத்தின் தலைமை குருவான கிஷோர் சரண் சாஸ்திரி, பக்தர்களின் உள்ளத்தில் சாமியைவிட சாமியார்கள்தான் உயர்ந்தவர்கள். சாமியார்களுக்குத் தலைவர் குரு. அவரே எல்லா அதிகாரங்களையும் கையில் கொண்டவர். ஆகையால் குருவின் காலைப் பிடித்து சீடனாகவேண்டும். பிறகு அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தான் குருவாகிவிடவேண்டும். இதுதான் தற்போதைய சாமியார்களின் நடவடிக்கை என்கிறார். சாமியார் பாரம்பரியம் ஒழுக்கம் எல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது, எல்லா மடங்களிலும் தலைமை குரு தனக்கு எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு சீடர் வழியில் மரணம் நேரலாம் என்று பயத்துடன் தினசரி நாட்களைக் கழிக்கின்றனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மத குருமார்களின் மரணம் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது. 2012ஆம் ஆண்டு நகரின் முக்கிய கோவிலான ஹனுமான் கோவில் மடத்தின் தலைமை குருவான ஹரிசங்கர் தாஸ் மீது நவீன ரக கைத்துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 8 குண்டுகள் கழுத்து வயிறு மற்றும் தொடையில் பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய நீண்ட நாளைய சீடன் ஒருவனே அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். அதே மடத்தின் புதிய தலைமை குரு ரமேஷ் சரண் தாஸ் மடத்தில் உள்ள 4 சீடர்கள் மீது கொலைமுயற்சியில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டினார். இதற்குக் காரணம் ஹனுமான் கோவிலுக்குப் பாத்தியப்பட்ட ஏராளமான சொத்துக்களையும் பெருமளவில் குவிந்து இருக்கும் தங்க நகைகளையும் அபகரிக்கும் நோக்கமே ஆகும். அடியாட்களை வைத்து கொலை மற்றும் நிலங்களை அபகரிக்கும் அயோ(க்கிய)த்தி சாமியார் டான் சாமியார் எனப்படும் திரிபுவன் தாஸ்.

தமிழ் ஓவியா said...

அகில பாரதிய வினர்ய மற்றும் சாமியார்கள் சங்கம் என்ற அமைப்பின் தலைவர் கவுரி சங்கர் தாஸ் என்பவர் பைசாபாத் நகர காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், சாமியார் ஹரி சங்கர் தாஸை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சாமியார் திரிபுவன் தாஸ் என்ற தலைமைச் சீடன் தன்னையும் கொலை செய்யும் நோக்கத்தில் திட்டமிட்டு வருவதாகவும், மற்றும் அவனது ஆயுதக்கிடங்கு பற்றியும் குறிப்பிட்டிருந்தார். 2012ஆம் ஆண்டு திரிபுவன் தாஸின் வலதுகரமான சாமியார் ஹரிநாராயண் தாஸ் அயோத்தியா நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்த போது போலீஸாருக்கும் சாமியார் குழுவிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தச் சண்டையில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். போலீசாரால் கொல்லப்பட்ட ஹரிசங்கர் தாஸ் மீது 17 குற்ற வழக்குகள் உள்ளன. இதில் குழந்தைகள் மீதான பாலியல் வழக்கு மூன்று உள்ளது. இது போன்ற சம்பவங்களைத் தொகுத்தால் பல தொடர் புத்தகங்களே எழுதலாம்.
குற்றச்செயல்களுக்கான பயிற்சிப் பள்ளிக்கூடம்

சிறையில் இருக்கும் ராம்சரண் ராமானந்த சாமியார் கொடுத்த பேட்டியில், அயோத்தியில் குற்றங்கள் பெருக உஜ்ஜைன் மடத்தைச் சேர்ந்த திரிபுவன் தாஸ்தான் காரணமாக இருந்தார். இவர் பிறருடைய சொத்தை அபகரிக்க வேறு வேறு மடத்தின் சீடர்களை போதை மருந்து மற்றும் பெண்கள் மூலம் அவர்களின் மனதை மாற்றி கொலை வரை செய்ய பயிற்சியளித்தார். மேலும் அவர் கூறியபோது, ``தன்னுடைய கமண்டலத்தில் துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு திரியும் திரிபுவன் தாஸின் குற்ற நடவடிக்கை காரணமாக அவனை ஹனுமான் காடி மடத்தில் இருந்து வெளியேற்றினார்கள். ஆனால் அவன் வெளியேறி வெளியிடங்களில் இருந்து சாமியார்களை அழைத்துக்கொண்டு புதிய மடத்தை ஆரம்பித்தான். அவன் அழைத்து வந்த சாமியார்கள் அனைவருமே பெரும் குற்றப்பின்னணி உடையவர்களாக இருந்தனர். அயோத்தியில் நடந்த அனைத்துக் குற்றச் சம்பவங்களுக்கும் மூல காரணம் திரிபுவன் தாஸ் என்ற திரிதாஸானந்த். இவனே நேரடியாக 70க்கும் மேற்பட்ட கொலைகளைச் செய்துள்ளான். மேலும் தனது சீடர்கள் மூலம் 200க்கும் மேற்பட்ட கொலைகளைச் செய்துள்ளான். இவன்தான் அயோத்தியாவில் குற்றச்செயல்களுக்கான பயிற்சிப் பள்ளிக்கூடமே தொடங்கியவன் என்றார். கவுரி சங்கர் என்ற சாமியார் கூறுகையில், திரிபுவன் தாஸ் நேரடியாக எந்தக் குற்றச்செயலும் செய்யமாட்டான், அவன் தன்னுடைய சீடர்கள் மூலம் தன்னுடைய காரியத்தை அரங்கேற்றிவிடுவான். இவனுடைய சீடர்கள் அனைவருமே சிறையில் இருந்தவர்கள், சிறையில் இருக்கும் வேறு குற்றவாளிகளும் வெளியில் வந்த பிறகு இவரிடம் தீட்சைபெற்று சாமியாராகி குற்றச்செயல்களில் இறங்கிவிடுகின்றனர். திரிபுவன் தாஸ் இன்றும் தன்னுடைய மடத்தில் இருந்துகொண்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறான் என்றார்.

தமிழ் ஓவியா said...

நிருத்திய கோபால் தாஸ்

ராம ஜென்மபூமி சமிதி தலைவர் ராமச்சந்திர பரமஹம்சரின் ஆலோசகரும் துணைத்தலைவருமான நிருத்திய கோபால் தாஸ் என்ற சாமியார் பெயரிலும் பல குற்றவழக்குகள் உள்ளன. தன்னுடைய பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒரு மடத்தின் தலைவர் கூறியபோது, நிருத்திய கோபால் தாஸ், சாமியார் அல்ல; ஒரு காலத்தில் கல்கத்தாவில் பல குற்றச்செயல்களைப் புரிந்த பயங்கரமான குற்றவாளி. குற்றவாளிகளை போலீசாரின் பிடியில் இருந்து விடுவிப்பது, மடத்தின் சொத்துக்களை போலிப் பத்திரங்கள் மூலம் விற்பது மற்றும் சாதுக்களுக்குப் பெண்களை அனுப்புவது போன்ற காரியங்களைச் செய்து வருகின்றான். இவன் கண்ணில் ஒரு இடம் தென்பட்டுவிட்டால் அதை வாங்கியே தீருவான். அதைக் கொடுக்க மறுத்தால் இறுதியாக அந்த இடத்தின் உரிமையாளர்களைக் கொலை செய்யும் அளவிற்குச் சென்றுவிடுவான். இப்படியே பல இடங்கள் மடங்களாக மாற்றப்பட்டு அவனுடைய சொத்துக்களாக மாறிவிட்டன என்றார்.
எழுத்தாளர் சாரதா துபே தன்னுடைய புத்தகமான போட்டரஸ் ஆப் அயோத்தியாவில், அயோத்தியா நகரில் உள்ள பிரமோத் வனம் பகுதியில் பழைய கால ஆடம்பர பங்களா ஒன்று இருந்தது. அங்கு இருந்தவர்கள் சுமார் 5 தலைமுறைகளாக அங்கு வசித்து வந்தார்கள். ஒரு முறை தற்செயலாக அந்தப் பகுதிக்குச் சென்ற நிருத்திய கோபால் தாஸ் பார்வையில் அந்த பங்களா பட்டது. அந்த நிமிடமே காரில் இருந்து இறங்கி அந்த பங்களாவை வாங்குவது குறித்து வீட்டு உரிமையாளரிடம் பேசினார். ஆனால், தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகிறோம். இதை விற்க முடியாது என்று உரிமையாளர் கூறிவிட்டார். பலமுறை தானே நேரடியாக வந்து கேட்டுவிட்டார். இறுதியாக, 2008ஆம் ஆண்டு அந்த வீட்டின் உரிமையாளர் அடையாளம் தெரியாத 8 நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். நீண்ட நாட்களாக மருத்துவமனையில் இருந்த பிறகு இறுதியில் அவர்கள் குடும்பத்துடன் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை, தற்போது அந்த பழங்கால மாளிகை நிருத்திய கோபால் தாஸின் உல்லாச மாளிகையாக மாறிவிட்டது என்று தனது நூலில் எழுதியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

சுமார் 5 தலைமுறைகளாக வாழ்ந்த பங்களாவை அபகரித்த மகான் குறித்து மற்றொரு திடுக்கிடும் செய்தியும் உண்டு. மணிராம்தாஸ் என்ற புகழ்பெற்ற மடாதிபதியின் பிந்து சரோவர் கோவில் தொடர்பானது. மணிராம் தாஸின் முக்கிய சீடர்களில் ஒருவரான திரிவேணி தாஸ் என்பவருக்கும் நிருத்திய கோபால் தாஸுக்கும் பிந்து சரோவர் கோவில் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இந்தச் சம்பவம் காவல்துறை தலையீடு வரை சென்றுவிட்டது. காவல்துறை இருவருக்கும் சமரசம் செய்துவைத்தது. சில நாட்கள் கழித்து திரிவேணி, சராயு நதிக்கரை ஓரத்தில் தலை முற்றிலும் நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். காவல்துறையும் அதிகாலையில் குளிக்க வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்துவிட்டார் என்று கூறி வழக்கை முடித்துவிட்டது. ஆனால் அந்தச்சாலையில் டிராக்டர் கூட மிகவும் மெதுவாகத்தான் செல்ல முடியும். இது திட்டமிட்ட கொலை என்று பலரும் கூறுகின்றனர். இந்தக் கொலைக்குப் பின்னால் நிருத்திய கோபால் தாஸின் சதித்திட்டம் உள்ளது என அனைவருக்கும் தெரியும். ஆனால் யாரும் அவருக்கு எதிராக புகார் கொடுக்கத் துணிவதில்லை. என்ன செய்ய சாமியார்களுக்கும் உயிராசை!? கத்தி எடுத்தவன் கத்தியால்....

தமிழ் ஓவியா said...


வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்ற முதுமொழிக்கேற்ப நிருத்திய தாஸ் மீது அவருடைய பகைவர்கள் தாக்குதல் நடத்தினர். 2001 மே 12ஆம் தேதி பிரபல அரசியல் தலைவரின் சந்திப்பிற்கு முதல் நாள் அதிகாலை அய்ந்து மணியளவில் தனது பாதுகாவலர்களுடன் நதிக்கரையில் குளித்துக்கொண்டு இருந்த நிருத்திய கோபால் தாஸ் மீது நாட்டுவெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த நிருத்திய கோபால் தாஸ் மற்றும் அவரது சீடர்களில் இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மறுநாள் பிரபல அரசியல்வாதி மருத்துவமனையில் சந்தித்துவிட்டு வெளியில் வந்ததும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நிருத்திய கோபால் தாஸ்மீது தாக்குதல் நடத்தியதாக பொய்யான செய்தியை பத்திரிகையாளர்களிடம் கூறி சம்பவத்தைத் திசை திருப்பிவிட்டார். இந்தத் தாக்குதல், அர்த்தாத் சாது சமாஸத்தில் இருந்து விரட்டப்பட்ட தேவ்ராம் தாஸ் வேதாந்திரி என்ற சாமியாரின் சதித்திட்டம் என்று கூறப்படுகிறது. இந்த வேதாந்திரி சாதுவை சமாஸத்தில் இருந்து துரத்திவிட்டவர் நிருத்திய கோபால் தாஸ் தான். இந்தச் சம்பவத்திற்குப் பழிக்குப் பழிவாங்கும் விதமாக இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வேதாந்திரி தாஸ் என்ற சாமியாரை போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தேடிவந்த போலீசார் 1995-ஆம் ஆண்டு 13 வயது பெண்ணுடன் தனிமையில் பாகல்ப்பூர்(பிகார்) நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து கைது செய்தனர்.

தமிழ் ஓவியா said...

அம்மண சாமியார்கள்

அயோத்தியில் நடக்கும் குற்றங்களில் அம்மண சாமியார்களின் பங்கு அதிகம். சுமார் எழுநூற்றுக்கும் அதிகமான நாகா சாதுக்கள் இங்கு தங்கி இருக்கின்றனர். பொதுவாக இந்த மடாலயத்தில் உள்ள சாதுக்கள் அனைவருமே தங்களை மடாலயத்தின் தலைவராகவே கருதிக்கொண்டு இருக்கின்றனர். அப்படியென்றால் அந்த மடாலயத்தின் நிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்த மடாலயத்தின் தலைவராக இருந்த ஹரிபஜன் தாஸ் சாமி, 1984-ஆம் ஆண்டு சக சாமியார்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்குப் பிறகு தற்காலிகமாக மஹந்த் தீன் பந்து தாஸ் என்பவரை நியமித்தார்கள். அதன் பிறகு இரண்டு குழுவாகப் பிரிந்து நாகா சாதுக்கள் தங்களுக்குள் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர். பல முறை இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து நடக்க தற்காலிக மடாலயத் தலைவர் உயிர் பயத்தில் மடத்தைவிட்டு வெளியேறி தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார். 1995-ஆம் ஆண்டு நாகா சாது நவீன் தாஸ் என்பவன் தன்னுடைய 4 கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவில் வளாகத்திலேயே ராமஜா தாஸ் என்ற நாகா சாதுவைக் கொலை செய்துவிட்டான். 2005-ஆம் ஆண்டு நாகா சாதுக்கள் தங்களுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் பல நாகா சாதுக்கள் படுகாயமடைந்தனர். 2010-ஆம் ஆண்டு ஹர்பஜன் தாஸ் மற்றும் பஜ்ரங் தாஸ் என்ற இரண்டு நாகா சாதுக்கள் கோவில் வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ரவுடி பாபா

ஹனுமான் காடியில் பிரஹலதாஸ் என்பவன் அங்குள்ள மக்களால் ரவுடிபாபா என்று செல்லமாக அழைக்கப்படுகிறான். இவன் மீது பல கொலைவழக்குகள் உள்ளன. இதன் காரணமாக இரண்டு முறை இவன் மீது நகர மாஜிஸ்ட்ரேட் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார். ஆகையால் இவர் மக்களிடையே ரவுடி சாமியார்(குண்டாபாபா) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார். இவரும் 2011-ஆம் ஆண்டு எதிர்க் குழுவினரால் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சாமியார்களின் பெயர்கள்
சாது ஹரி நாராயந்தாஸ், சாது ராம் சங்கர் தாஸ், சாது ராம் பிரகாஷ் தாஸ் போன்ற பிரபல ரவுடி சாமியார்கள் காவல்துறையின் துப்பாக்கி ரவைக்குப் பலியானார்கள். இவர்கள் அனைவரும் பல கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பைசாபாத் நகர காவல்துறையின் கணக்கின்படி 2001-லிருந்து 2012 வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட சாமியார்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் காவல்துறையுடனான நேரடி மோதலில் ஈடுபட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். சாமியார்களின் துப்பாக்கி ரவைக்குப் பலியான காவலர்களும் இந்தப் பட்டியலில் உண்டு.
பதவி ஆசை+பொருளாசை=கொலை

2007-ஆம் ஆண்டு அயோத்தியாவையே அதிர வைத்த ஒரு சம்பவம் இருக்கிறது. மோக்ஷமுக்தி(முக்ஷி)பவன் என்ற மடத்தின் மடாதிபதி சுதர்ஷணாச்சார்யா என்பவர் திடீரென காணாமல் போய்விட்டார். பல மாதங்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவர் மனநிலை சரியில்லாதவர், ஆகையால் எங்காவது ரயிலேறிச் சென்றுவிடுவார். இம்முறையும் அப்படி ஆகிவிட்டது என்று கூறி மடத்தின் தலைமைப் பொறுப்பை ஜித்தேந்திர தாஸ் என்பவர் ஏற்றுக் கொண்டார். தலைமைப் பொறுப்பை ஏற்ற சில வாரங்களில் கோவிலின் தங்க நகை மற்றும் சுமார் 8 லட்சம் ரொக்கத்துடன் காணாமல் போய்விட்டார்.

தமிழ் ஓவியா said...

மனநிலை சரியில்லாமல் காணாமல் போன சுதர்ஷணாச்சார்யாவின் சகோதரர் தலைமைப் பொறுப்பேற்க ஹரித்துவாரில் இருந்து திரும்பி மடத்தைக் கவனித்து வந்தார். மடத்தைப் புதுப்பிக்கும் பணியைத் தொடங்கினார். வேலைக்காரர்கள் கழிப்பறைத் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, அது மண் கொண்டு நிரப்பப்பட்டிருப்பது கண்டு திகைத்தனர். மணலைச் சிறிது அகற்றிய போது சில எலும்புகள் மணலுடன் வெளியே வந்தன. இதனை அடுத்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்க, காவல்துறையினர் முன்னிலையில் மணலை அகற்ற இரண்டு நபர்களின் எலும்புக்கூடுகள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. அதில் ஒன்று சுதர்ஷணாச்சார்யா, மற்றொன்று ஒரு இளம்பெண்ணின் எலும்புக்கூடு. இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் மத்தியபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் தங்கி இருந்த ஜித்தேந்திர தாஸை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜித்தேந்திரதாஸ் விசாரணையில், முக்ஷி பவனில் உள்ள தங்கம் மற்றும் ரொக்கப்பணத்தின் மீது நீண்ட நாட்களாக ஒரு கண் இருந்தது. இதற்காகத் திட்டமிட்டு, பனாரசில் இருந்து கூலிக்கு ஆட்களை வரவழைத்து தக்க சமயத்திற்காகக் காத்திருந்தேன். சுதர்ஷணாச்சார்யா தனது சிஷ்யையுடன் தனிமையில் இருந்த போது இரகசியமாக அவரைக் கொலை செய்தேன். சாட்சியாக இருந்த சிஷ்யையையும் கொலை செய்தேன். செப்டிக்டாங்கில் இருவரின் பிணங்களையும் வெட்டிப்போட்டு அதில் மணலை நிரப்பி மூடிவிட்டேன். மறுநாள் மனநிலை சரியில்லாததால் காணாமல் போனதாக கதைவிட்டேன் என வாக்குமூலம் கொடுத்தான்.

அயோத்தியில் உள்ள சாதுக்கள் பற்றி பைசாபாத் வழக்குரைஞர் ரஞ்சீவ் வர்மா, பைசாபாத் நகர நீதிமன்றத்தில் 90 விழுக்காடு வழக்குகள் சாமியார்கள் பற்றியே உள்ளன. இங்குள்ள அனைத்து மடங்களும் ஏதாவது ஒரு வழக்கில் தொடர்புடையதாகவே உள்ளன. சீடர்கள் மீது கொலைவழக்கு மற்றும் பாலியல் தொடர்பான வழக்குகள் என்றால் மடத்தலைவர்கள் மீது நில அபகரிப்பு, அடியாட்களை வைத்து மிரட்டுதல் போன்ற வழக்குகள் உள்ளன என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

சாமியார்களும் ஜாதியும்

அயோத்தியில் பார்ப்பனர்கள், தாக்கூர் மற்றும் யாதவ் ஜாதிகளைச் சேர்ந்த பூசாரிகள் அதிகம் உள்ளனர். இதில் பல்வேறு மடத்தில் உள்ள சீடர்கள் தங்கள் ஜாதி சாமியார்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பார்கள். -ஜாதிப் பிரச்சினைகள் எழுந்தால் மொத்தமாகப் போய் தாக்குதல் நடத்தவும் தங்கள் ஜாதிச் சாமியார்களை ஒன்று கூட்டி கலகம் செய்யவும் ஆரம்பிப்பார்கள். நமது ஊரில் ஜாதிச் சங்கங்கள் போல் அங்கு ஜாதிமடங்களும் உண்டு. அதில் சில பெயர் நாவூ கோவில், பதாயி கோவில், விஷ்வகர்மா கோவில், சந்த ரவிதாஸ் கோவில், ஹல்வாயி கோவில், தோபி கோவில், திரிகுப்த கோவில் என தங்கள் ஜாதிக்களுக்கு என கோவில்களை உருவாக்கி அதற்கு மடங்களையும் உருவாக்கி விடுகின்றனர். இவர்களுக்கு அந்த அந்த ஜாதியைச் சேர்ந்த மக்களும் அங்கே சென்று தங்களுடைய காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். வேறு ஜாதிக்காரர் கோவிலுக்குச் சென்று காணிக்கையோ வழிபாடோ நடத்தினால் தண்டனையுடன் அபராதமும் விதிக்கும் பழக்கமும் அயோத்தியில் உண்டு. ஒரு ஜாதிக்குள் உள்ள பிரிவினருக்குள்ளும் வெட்டுகுத்துக்கள் வந்ததுண்டு. இது குறித்து தெகல்ஹா இதழுக்கு சாதுக்கள் அளித்த பேட்டியில், ஒருவர் வங்காள பூம்ஹாரராக (பிற்படுத்தப்பட்ட ஜாதிப்பிரிவு) இருந்தால் எங்களுக்கு அவர் சமமாக மாட்டார், நாங்கள் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தூய பூம்ஹார், அவர்களோ பஹோரா பூம்ஹார்(கலப்பில் பிறந்தவகளாம்). ஆகையால் ஒரே ஜாதியாக இருந்தாலும் அவர்களை நாங்கள் சேர்த்துக்கொள்வதில்லை. எங்களிடம் வரும் பக்தர்களை போலியான ஜாதிப்பெயர் கூறி அவர்கள் பக்கம் இழுத்தால் நாங்கள் அவர்களைக் கொலை செய்யக்கூடத் தயங்கமாட்டோம் என்று தங்கள் ஜாதிப் பற்றைப் பறைசாற்றியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ஊரைக்காலி செய்த கொடூரம்

12 நவம்பர் 1998-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடூரத்திற்கு பார்வையற்ற சகோதரர் இருவர் இன்றும் சாட்சியாக உள்ளனர். அயோத்தியா நகரத்திற்கு 8 கி. மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குப்தார் காட் என்ற மீனவர் கிராமத்தில் இரவு 10 மணி அளவில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட சாதுக்கள் நுழைந்தனர். மீனவர் கிராமத்தில் கட்டப்பட்டு இருந்த ஆடுமாடுகளை அடித்து விரட்ட ஆரம்பித்தனர். சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த மக்கள் பார்த்த காட்சி, சாதுக்கள் கையில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் அனைவரையும் மிரட்டிக்கொண்டு இருந்தனர். கூட்டத்தில் நின்று கொண்டு இருந்த லாலாஜி நிஷாத் மற்றும் ராம் ஜி நிசாத் இருவரையும் கூட்டத்திற்குள் புகுந்து இழுத்து வந்தனர். அவர்களை விட்டுவிடச் சொல்லி அவர்களின் 13 வயது தங்கை சாமியார்களின் காலில் விழுந்து கதறியது. உடனே சில சாமியார்கள் அந்தக் கூட்டத்தின் முன்பே அச்சிறுமியின் ஆடைகளைக் களைந்தனர். இதனிடையே என்ன நினைத்தார்களோ என்னவோ, ஒரு சாமியார் சிறுமியின் கைகளைக் கத்தியால் வெட்டியபிறகு தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அந்தச் சிறுமி மரணமடைந்தார்.

இந்தக் கொடூரங்களைக் கண்டு சிறிதும் கலங்காத சாமியார்கள் இரண்டு சகோதரர்களின் ஒவ்வொரு கண்ணைத் தோண்டி எடுத்து தரையில் வீசிவிட்டுச்சென்றனர். இதில் ராம்ஜி நிசாத்தின் பார்வை பறிபோனது. லாலாஜியின் ஒரு கண் பார்வை மட்டும் இருந்தது. ஏன் நடந்தது? யஞ்யசாலா பஞ்சமுகி கோவிலின் தலைமைச் சாமியாரான மணிபாபா தலைமையில் சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் கிராமத்திற்கு வந்த சாமியார்கள் இது எங்கள் மடத்திற்குச் சொந்தமான பூமி ஆகையால் நீங்கள் விரைவில் இந்த இடத்தைக் காலிசெய்து விட்டுச் செல்லுங்கள் என்று கூறினார்கள். இந்தச் சம்பவத்தை அடுத்து நாங்கள் அனைவரும் மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் செய்தோம். பாதிக்கப்பட்ட சகோதரர்கள் சாமியாரின் மீது காவல்துறையில் புகார் செய்தனர். இதனடிப்படையில் காவலர்கள் பஞ்சமுகி கோவிலுக்குச் சென்று அங்கிருந்த சில சாமியார்களைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தினால் கோபமடைந்த சாமியார்கள், சகோதரர்கள் இருவரின் கண்களையும் நோண்டி எடுத்தனர். அவரது சகோதரியையும் கொலை செய்தனர். இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து 6 சாமியார்களைக் கைது செய்தது. அவர்களும் சிறிது காலம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தனர். தொடர்ந்து நடந்த வழக்கில் அந்த 6 சாமியார்களுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. தீர்ப்பை அறிந்துகொண்ட சாமியார்கள் மடத்திலிருந்து தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் இன்றுவரை காவல்துறையினரிடம் சிக்கவில்லை என்பதே அங்கிருப்போரின் பதில். ராமஜென்ம பூமி இவ்வளவு வன்முறை நிறைந்ததா? அப்படி என்றால் அங்கு சட்டம் ஒழுங்கு என்று ஒன்றும் கிடையாதா? அது இந்தியா சட்டவிதிகளுக்கு உட்பட்ட நகரமில்லையா என்ற கேள்வி எழலாம். என்ன செய்ய, அது ராமர் ராஜ்யம் செய்த ஊராமே! காவல்துறை அங்கு உண்டு.

ஆனால் அவர்களின் கரங்கள் அரசியல்வாதிகளால் கட்டுப்போடப்பட்டுள்ளன. ஊடகங்கள் அயோத்தி சாமியார்கள் பற்றி எழுதுவதில் மிகவும் கண்ணியமானவை. இவ்வளவு நடந்தும் எந்தச் செய்தியும் அயோத்தியை விட்டு வெளியில் தெரியாதவாறு செய்துவிடுவார்கள் அப்படியே ஒன்றிரண்டு செய்தி வெளியேறினாலும் இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான், இங்கு நடந்த பல சம்பவங்கள் ஊடகங்களால் வெளிஉலகிற்குத் தெரிந்தவுடன், உடனடியாக பாகிஸ்தானின் அய்.எஸ்.அய்.-யின் கரம் இதில் உள்ளதென்று செய்தி பரப்பி விசயத்தை மூடிவிடுவார்கள். அரசியல் தலையீடு மற்றும் அதிகாரமையம் முழுவதும் சாதுக்கள் மீது எந்த ஒரு களங்கமும் வராமல் அவர்கள் எந்தத் தவறுகள் செய்தாலும் அதை மூடி மறைத்துக் கொண்டு வருகிறது. இது அசிங்கத்திற்கு அத்தர் பூசி ஊர்வலம் கொண்டு வருவது போல் ஆகும். அயோத்தியில் காவி உடையில் திரியும் குண்டர்களின் செயல்களில் நாங்கள் அறிந்தது சிறு பகுதியே. முக்கியமாக எவரும் அவ்வளவு சமானியத்தில் செய்திகளைத் தர முன்வரவில்லை. இறுதியாக சராயு நதிக்கரையில் ஒரு சாமியாரிடம் இது பற்றிக் கேட்ட போது அவர் ரவிதாஸ் கவிதையில் இருந்து சில வரிகளை மாத்திரம் கூறி விலகினார். பாவம் அவர் பாதிக்கப்பட்ட சாமியார் போலும். பொய்யர்கள் மாத்திரம்தான் வேடமிடுவார்கள், சாமியார்கள் வேடம் என்றும் பாதுகாப்பானது. ஆனால் உண்மை முகம் மறைக்கப்படுவதுமில்லை _ மறைவதுமில்லை. நாளை என்று ஒன்று வரும். அப்போது உண்மை வெளிவரும். ஆனால், மூடர்கள் வாழும் ஊரில் உண்மை வெட்கப்பட்டு ஓடிவிடும்.

தமிழ் ஓவியா said...


சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் வாழ்க!


தந்தை பெரியாரின் உற்ற தோழராகவும், கொள்கைப் பயணத்தில் சக பயணாளி களில் ஒருவருமான சிந் தனைச் சிற்பி. ம. சிங்கார வேலர் அவர்கள், சுயமரி யாதை சமதர்மத்தைச் செதுக் கிய அரும்பெரும் சிந்தனை யாளர் ஆவார்!

பச்சை அட்டைக் குடி அரசு ஏட்டில் தகத்தகாய பொன்னாக ஒளி வீசும் - கைவல்யம் அவர்களின் சிந்தனைப் பொறியைத் தீட்டும் கட்டுரை ஒருபுறம்.

சிங்காரவேலரின் பொதுவுடைமை, சமதர்ம, மூடநம்பிக்கைகளை எதிர்த்த, அறிவியல் ஆய்வு வெளிச்சத்தைப் பாய்ச்சிடும், காலத்தை வென்ற கருத் துக்கள் மறுபுறம் என்பது சுயமரியாதை இயக்க வரலாறு, பிரபல கம்யூனிஸ்ட் பேராசிரியரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான பேராசிரியர் ஹிரேன் முக்கர்ஜி அவர்கள் எழுதிய ஒரு நூலில், இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்திய வரலாற்றில் பேசப்படும் இருபெரும் இந்தியத் தலைவர்கள் தந்தை பெரியாரும், ம. சிங்காரவேலரும் தான் என்று சரியாகக் கணித்து எழுதியுள்ளார்கள். அவரது 155ஆவது பிறந்த நாளான இன்று அவரது சிந்தனைகளை செயலாக்கிட, ஒத்தக் கருத்துள்ளவர்கள் ஓரணியில் திரண்டு ஜாதி, மத, கடவுள் மூடநம்பிக் கைகளை முறியடித்து, புதிய உலகம் காண்போமாக!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

18.2.2014

சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/75493.html#ixzz2tj2d5kEn

தமிழ் ஓவியா said...


கோயில் வழிபடுவதற்காகவா? கொலை செய்யப்படுவதற்காகவா?


உதகை, பிப்.18- உதகை அருகேயுள்ள நஞ்ச நாடு கிராமத்தில் அமைந் துள்ள கோவிலில் முதலில் யார் வழிபாடு நடத்துவது என்ற பிரச்னையில், இரு வர் வெட்டிக் கொல்லப் பட்டனர். இதுதொடர்பாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். உதகை அருகே உள்ளது நஞ்சநாடு கிராமம். இக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு பூர்வீகமாக வசித்து வருவோர் எனவும், இக் கிராமத்திற்கு வெளிப் பகுதி களிலிருந்து வந்து குடி யேறியவர்கள் எனவும் இரு பிரிவினராக அழைக்கப் பட்டு வந்தனர். இந் நிலையில், நஞ்ச நாடு கிராமத்திலுள்ள சிவன் கோவில் யாருக்கு என்பதிலும் பல ஆண்டு களுக்கு முன்பிருந்தே பிரச் சினை இருந்து வருகிறது.

இந் நிலையில், நஞ்சநாடு கிராமத்திலுள்ள கோவி லில் வழிபாடு நடத்துவது தொடர்பாக ஒரு பிரிவினர் சென்னை உயர் நீதிமன்றத் தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இரு பிரி வினருக்கும் பூஜை செய்வ தற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் தனித் தனியாக நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. ஆனால், இதை அந்தக் கிராமத்தில் வசித்துவரும் பிரதான மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத் துள்ளனர். இச்சூழலில் நஞ்சநாடு கிராமக் கோவிலில் வழி பாடு நடத்துவதற்காக ஒரு பிரிவினர் பெற்றிருந்த உத் தரவின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண் காணிப்பாளரிடம் உத்தரவு கேட்டும், நஞ்சநாடு கிராமத்திலுள்ள கோவி லின் பொறுப்பாளராக உள்ள செயல் அலுவல ரிடம் அனுமதி பெற்றும் திங்கள்கிழமை காலையில் ஒரு பிரிவினர் பூஜை நடத் தவுள்ளதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இந் நிலையில், இப் பூஜைக்கு எதிர்ப்புத் தெரி வித்த ஒரு பிரிவினர் ஞாயிற் றுக்கிழமை இரவு பேச்சு வார்த்தைக்கு அழைப்ப தாகக் கூறி, ஒரு சிலரை தாங்கள் கூடியிருந்த இடத் திற்கு வரவழைத்து தாக் கினார்களாம்.

இதில், ஆனந்த் (34) மற்றும் ராஜன் (44) ஆகியோர் உயிரிழந் தனர். இதையடுத்து அப்பகு தியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட் டது. இதுகுறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் பி.சங் கர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர். அப்போது, இப் பிரச்சினை தொடர்பாக இருவர் வெட்டிக் கொல் லப்பட்டதாகவும், 10-க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத் துக் கொளுத்தப்பட்டதாக வும் புகார்கள் தெரிவிக்கப் பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். கோவை சரக காவல் துணைத் தலைவர் கணேச மூர்த்தி உத்தரவின்படி நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையிலான நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட் டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் பாதுகாப்பு பணி களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/75494.html#ixzz2tj2kjBQ2

தமிழ் ஓவியா said...



ஹாட்ரிக்

சென்னை - சேத்துப்பட் டில் உள்ள விநாயகர் கோயி லில் உண்டியல் மூன்றாவது முறையாக உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப் பட்டு உண்டியல் முட் புதரில் வீசி எறியப்பட்டது.

நம்பித் தொலையுங்கள்!

நடக்கவிருக்கும் நாடா ளுமன்றத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இதுவரை இந்துமுன்னணி முடிவு செய் யவில்லையாம் - சொல்லு கிறார் அதன் மாநில அமைப் பாளர் ராம. கோபாலன்.

யாத்திரை

யாத்திரை என்று சொன் னாலே அத்வானியின் ர(த்)த யாத்திரைதான் நினைவிற்கு வந்து தொலைகிறது (சோம நாதபுரத்திலிருந்து அந்த யாத்திரையைத் தொடங்கிய போதே அதன் உள்நோக்கம் புரிந்தது. யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் மதக் கலவரங்கள்! இப்பொழுது தமிழ்நாட்டிலே காந்தியாரை படுகொலை செய்த கூட்டத் தின் வாரிசுகள் ஒரு யாத் திரையைத் தொடங்கி உள் ளனர். வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை என்று அதற்குப் பெயராம்.

இதன் பொருள் இல்லம் தோறும் மதவெறியூட்டல் - உள்ளம்தோறும் மனுதர்மச் சிந்தனைக்குப் புத்துயிர் ஊட்டல்! தந்தை பெரியார் மண்ணில் இவுர்களின் சித்து விளையாட்டுகள் பலிக்கப் போவதில்லை பலிக்கவும் விடமாட்டோம்!

தப்புத்தாளம்

சென்னை அண்ணா சதுக்கம் - பூவிருந்தவல்லி செல்லும் வழித்தடம் எண் 25ஜி பேருந்து நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது தனி யார்க் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி, தாளம் போட்டு, பாட்டுப்பாடி ஆபாச வார்த்தைகளை அள்ளிக் கொட்டினார்கள் நடத்துநர் பாண்டியன் அவ் வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போது நடத்துநரை மாண வர்கள் தாக்கியுள்ளனர்.

மாணவர்களே, நீங்கள் எல்லாம் படித்துப் பட்டம் பெற்று வேலைக்குச் சென்று சம்பாதித்து நம்மைக் காப் பாற்றுவார்கள் என்று ஒவ் வொரு நொடியும் கனவு கண்டு கொண்டிருக்கும் பெற்றோர்களின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டு விடாதீர்கள்.

நம் இனத்து மக்கள் எல்லாம் கல்வி உரிமை பெற்று, உத்தியோகப் படிக்ககட்டுகளில் மதிப்புப் பெற வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டாரே தந்தை பெரியார். பாடுபட்டுக் கொண்டிருக் கிறதே திராவிடர் கழகம் அவர்களின் எதிர்ப்பார்ப்பு களைப் பொய்த்துப் போகச் செய்ய வேண்டாமே! நீங்கள் போடுவது தாளமா? அல்ல அல்ல - தப்புத் தாளம்!

கா(ம)ள கஸ்தி!

காளகஸ்தி கோயிலில் சாமி கும்பிடச் சென்ற பக்தையை பக்தர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனராம். கோயில்களை விபச்சாரக்கூடம் என்று காந் தியார் சொன்னது தவறாகி விடக் கூடாதல்லவா! காஞ் சிபுரம் தேவநாதன்கள் நாட் டில் இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார் கள். என்பதற்கு மேலும் இது ஓர் எடுத்துக்காட்டே!

Read more: http://viduthalai.in/e-paper/75492.html#ixzz2tj2v6Ocw

தமிழ் ஓவியா said...


காரணம்

வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலா ஷைகளையும் புரிந்து கொள்ள முடியாத வாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகை கள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம். - (விடுதலை, 28.8.1963)

Read more: http://viduthalai.in/page-2/75495.html#ixzz2tj3MeHR5

தமிழ் ஓவியா said...


கலைஞர் சட்டசபைக்கு வந்தார்

சென்னை, பிப்.18- தமிழக சட்டமன்ற வளாகத்திற்கு தி.மு.க. தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கலைஞர் அவர்கள் இன்று வருகை தந்து கையெழுத்திட்டு சென்றார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் சட்டசபைக்குள் வருவதற்கு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று கூறி சட்டசபைக்குள் செல்லாமல் அங்குள்ள லாபியில் கையெழுத்திட்டு வருகிறார். இதேபோல் இன்று (18.2.2014) காலை 10.20 மணிக்கு கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தபோது, சட்டசபை வருகை பதிவேட்டில் கையொப்பமிட காலை 10.40 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அவரை வாசலில் தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர்கள் ஜெ.அன்பழகன், செங்குட்டுவன், சக்கரபாணி, பெரியகருப்பன், சாக்கோட்டை அன்பழகன் உள்பட எம்.எல்.ஏக்கள் வரவேற்று சட்டசபை வளாகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றம் செய்தனர். அவையில் துரைமுருகன் சஸ்பெண்ட் குறித்து விளக்கம் கேட்க திமுக உறுப்பினர்கள் முயற்சித்தனர். திமுகவினர் பேச அனுமதி மறுக்கபட்டதால் பேரவைத் தலைவர் இருக்கை அருகில் சென்று ஒலி முழக்கமிட்டனர். ஒலி முழக்கமிட்ட தி.மு.க உறுப் பினர்கள் அனைவரும் உடனடியாக வெளி யேற்றப்பட்டனர். கூட்டத் தொடர் முழுவதும் புறக்கணிப்பு

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு சபைக்கு வெளியே தி.மு.க. கொறடா சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சிகளே கூடாது என்ற முறையில் செயல்படுவது ஜனநாயக விரோத செயல். எங்கள் கருத்துக்களை சொல்ல அனு மதிக்காததால் இந்த கூட்டத் தொடர் முழுவதையும் தி.மு.க. உறுப் பினர்கள் புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம். - இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தமிழகம்- ம.ம.க வெளிநடப்பு

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சட்ட மன்றத்தில் இருந்து பேரவைத் தலைவர் வெளியேற்றி யதை கண்டித்து புதிய தமிழக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம்பாஷா உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.

கலைஞர் பேட்டி

சட்டமன்ற வளாகத்தில் வெளியேயும்- அண்ணா அறிவாலயத்திலும் செய்தியாளர்களுக்கு கலைஞர் அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர் :- கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தம் இல்லை என்று மத்திய அரசு மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் சொல்லியிருக்கிறதே?

கலைஞர் :- அது தவறான வாதம். அதை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.

செய்தியாளர் :- தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகனை பேரவையிலிருந்து அய்ந்து நாட்கள் இடை நீக்கம் செய்திருப்பது பற்றி?

கலைஞர்:- இந்த அரசின் அவை நடவடிக்கை களில் அது ஒன்று. இந்த ஆட்சியில் இப்படித் தான் தொடர்ந்து சில முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலே ஒன்று தான் இது. செய்தியாளர் :-பொதுவாக இந்த ஆட்சியில் எதிர்க் கட்சிகள் பேரவையில் பேசுவதற்கு அனுமதி தரப் படுகிறதா?

கலைஞர்:- நீங்களே இந்தக் கேள்வியைக் கேட்டால், அதற்கு என்ன அர்த்தம்?

செய்தியாளர் :- இன்னொரு கேள்வி?

கலைஞர் :- கேள்வி நேரம் இங்கே இல்லை. அது அவைக்கு உள்ளே தான் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றது. (கலைஞரைச் செய்தியாளர்கள் அவைக்கு வெளியே சந்தித்த போது, பேரவைக்குள் கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது) செய்தியாளர் :- பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை உச்சநீதி மன்றம் விடுவித்திருப்பது பற்றி?

கலைஞர் :- இது பற்றி என்னுடைய அறிக்கையை நான் ஏற்கெனவே வெளி யிட்டிருக்கிறேனே? செய்தியாளர் :- இவர்கள் மூவரையும் மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா?

கலைஞர் :- சாத்தியக் கூறுகள்என்ன, வழி வகைகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் நான் ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன். கழக ஆட்சியின் போதும் நடத்திக் காட்டியிருக்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-3/75523.html#ixzz2tj3nhlPE

தமிழ் ஓவியா said...


சட்டமன்றத்தில் இன்று:


சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை செய்யப்படுவர்
முதலமைச்சரின் அறிவிப்புக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் வரவேற்பு


சென்னை, பிப்.19- ராஜீவ்காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் குற்றவாளி களாக ஆக்கப்பட்ட பேரறி வாளன், முருகன், சாந்தன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவதாக சட்ட மன்றத்தில் இன்று முதல மைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பை சட்டமன்றத் தில் அனைத்து கட்சிகளும் வரவேற்றன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை கண்டித்து வெளி நடப்பு செய்தனர்.

சட்டமன்றத்தில் இன்று (19.2.2014) காலை 10 மணி யளவில் அவை கூடியதும் கேள்வி - பதில் நிகழ்வு நடைபெற்று முடிந்ததும், சிறப்புக் கவன ஈர்ப்பு தீர் மான அடிப்படையில் முத லமைச்சர் விதி 110- இன் கீழ் ஒரு அறிவிப்பை வாசிப் பார் என பேரவைத் தலை வர் ப. தனபால் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கீழ்க்கண்ட அறி விப்பை வாசித்தார்:

இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண் டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-இன்படி தமிழ் நாடு அமைச்சர வையின் முடிவு குறித்து மத்திய அர சுடன் கலந்தாலோசிக்கப் பட வேண்டும். எனவே, மத்திய அரசின் கருத்தி னைப் பெறும் வகையில், திருவாளர்கள் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், சிறீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ் நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடி யாக அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு 3 நாள் களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக் கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச் சரவைக் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், சிறீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகி யோர் விடுவிக்கப்படுவார் கள் என்பதை இந்த மாமன் றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சட்ட மன்றத்தில் இன்று முதல மைச்சர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/75554.html#ixzz2tp0Y8xpJ

தமிழ் ஓவியா said...


கல்கிகளின் ஆசை

கல்கிகளின் ஆசை

கேள்வி: மோடி அலை வெறும் மாயை என்கிறாரே திருமாவளவன்?

பதில்: வண்டலூர் மாநாட் டுக்குத் திரண்டவர்களின் எண்ணிக்கையை தினமலர் பத்து ல,ட்சம் என்றது; தின மணி ஒரு லட்சம் என்றது; எண்ணிக்கை எதுவானலும் கூட்டம் பிரியாணி பொட் டலத்துக்கும், குவார்ட்டர் பாட்டிலுக்கும், ரூபாய்க்கும் திரண்ட கூட்டமல்ல; மோடி மீது நம்பிக்கை கொண் டோரின் கூட்டம். யதார்த்தம் எடுத்துரைக்கும் உண் மையைக் கண்டறிந்தும் மாயாஜாலமாகப் பேசுவது எதிர் அணி அரசியல்வாதிக்கு அவசியமாகி விடுகிறது.

இப்படி எழுதுவது ஆர். எஸ்.எஸின் விஜயபாரதம் அல்ல கல்கி தான் (23.2.2014 பக்கம் 43).
வண்டலூரில் மோடி கூட்டம் பேசிய அன்று (8.2.2014) அங்கு டாஸ்மாக் விற்பனை புதிய சாதனை படைத்ததாம் - ரூ.4.9 கோடி விற்பனையாம் - இந்தக் குவார்ட்டர்களை சொந்த மாகப் பணம் கொடுத்து வாங்கியதுதான் என்று கல்கி கூறுகிறதோ?

கோயம்பேட்டில் தனி யார்ப் பேருந்துகளை நிறுத்தி, கூவிக் கூவி மக்களை அழைத்த கதை ஊர் சிரிக்க வில்லையா? ஆகா! கல்கி களுக்குத்தான் மோடியைச் சிம்மாசனத்தில் உட்கார வைக்க எவ்வளவுப் பெரிய ஆசை!

நற்குடி மக்களா?

ஏடுகளில் அன்றாடம் ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. டாஸ்மாக் கடையை இங்கே வைக் காதே! பெண்கள் நடமாட முடியவில்லை! என்று பொது மக்கள் குறிப்பாகப் பெண்கள் வீதிக்கு வந்து போராடுவதை அறிய முடிகிறது. இதில் உள்ள நியா யத்தைப் புரிந்து கொள்ள வேண்டமா? குடிகுடியைக் கெடுக்கும் என்ற விளம்பரப் பலகையையும் ஒரு பக்கத் தில் மாட்டிக் கொண்டு - இன்னொரு பக்கத்தில் - மக்கள் அதிகமாகப் புழங் கும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை வைப்பது சரி தானா? இந்த மதுபானக் கடைகளை இழுத்து மூடி விட்டு, கள்ளுக் கடைகளைத் திறப்பது பற்றி அரசு யோசிக் கலாமே! திராவிடப் பெருங் குடி மக்கள் நற்குடி மக்க ளாக வாழ ஒரு வழி செய்யக் கூடாதா? மதுவை ஒழிக்க வேண்டும் என்று போடப் படுகின்ற மாநாட்டுத் திடலில், பொழுது விடிந்து பார்க்கும் பொழுது தான் உண்மை புரி கிறது - எங்குப் பார்த்தாலும் காலி மதுப்பாட்டில்களின் அணி வகுப்பு!

பேஷ், பேஷ்!

தாம்பரத்தையடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பட்டப் பகலில் படுகொலை செய் யப்பட்டுள்ளார். இதற்கு முன்புகூட அவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இப் படியே படுகொலை செய் யப்பட்டுள்ளனர். பேஷ், பேஷ்! சட்டம் ஒழுங்கு மிக நன்னாயிருக்கு...

வாராக்கடன்

வங்கிகளின் மொத்த வாராக் கடன் நடப்பு நிதி யாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 35.2 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/75561.html#ixzz2tp0fsfAc

தமிழ் ஓவியா said...

திடீர்க் காதல்!

பொதுவுடைமைச் சிற்பி ம. சிங்காரவேலரின் பிறந்த நாளில் அவரது சிலைக்கு பி.ஜே.பி.யினர் மாலை அணிவித்தனர் என்பது சேதி. திடீரென்று பாபு ஜெக ஜீவன்ராம் - கான்சிராம், ம. சிங்காரவேலர்கள் மீதெல்லாம் பி.ஜே.பிக்குக் காதல் பீறிட்டுக் கிளம்பியுள்ளது பார்த்தீர்களா? எல்லாம் தேர்தல் ஜுரம்தான்.

Read more: http://viduthalai.in/e-paper/75555.html#ixzz2tp0zKdlI

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கவனச் சிதைவோ!

செய்தி: காஞ்சிபுரம் உலக ளந்த பெருமாள் கோயில் தேர் சக்கரம் உடைந்தது! சிந்தனை: உலகை அளந்த வருக்கே இந்தக் கதியா? ஒருக்கால் உலகை அளந்து கொண்டிருந்தபோது கவ னச் சிதைவால் இது நடந்து விட்டதோ!

Read more: http://viduthalai.in/e-paper/75555.html#ixzz2tp15lop7

தமிழ் ஓவியா said...


உலகளந்த பெருமாள் தேர் உடைந்து போனதே!


வாலாஜாபாத், பிப்.19- காஞ்சீபுரம் உலகளந்த பெரு மாள் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் தேர் சக்கரத் தில் விரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந் தனர். காஞ்சீபுரத்தில் உலக ளந்த பெருமாள் கோவில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 6 நாட்களாக நடை பெற்று வந்தது.

7-ஆம் திருநாளான நேற்று காலை திருத்தேர் உற்சவம் நடந்தது. முன்ன தாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனை யும் நடந்ததாம். பின்னர் திருத்தேரில் எழுந்தருளினா ராம். திருத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். காஞ்சீபுரத்தில் உள்ள ராஜ வீதிகளில் தேர் வலம் வந்தது.

செங்கழுநீரோடை வீதி யில் வந்தபோது திடீரென தேரின் முன்சக்கரத்தில் லேசான சத்தம் வந்தது. உடனே தேரை நிறுத்தி பார்த்தனர். அப்போது சக்கரத்தில் லேசான விரிசல் ஏற்பட்டு இருந்தது. இத னால் தேர் நிறுத்தப்பட்டு முன்பக்க சக்கரத்தை கழற்றி பின்பக்கமும், பின்பக்க சக் கரத்தை கழற்றி முன்பக்கத் திற்கும் மாற்றி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பூக்கடை சத்திரம் என்ற இடம் அருகே வந்தபோது சக்கரத்தில் திடீரென விரிசல் அதிகம் ஆனது. பின்னர் தேரை உடனடியாக நிறுத்தி சக்கரத்தை சீரமைக்கும் பணியை கோவில் நிர்வாகத் தினர் மேற்கொண்டனர். இதனால் அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக் குவரத்து பாதிக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் கூடி விட்டனர். பின்னர் சக் கரத்தை தற்காலிகமாக சரி செய்து தேரை கோவில் நிலைக்கு பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர்.

திருத்தேர் உற்சவம் நடத் துவதற்கு அறநிலையத் துறை சார்பில் நேற்று முன் தினம் தான் திருத்தேர் நல்ல நிலையில் உள்ளது என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/75559.html#ixzz2tp1Ce2Z9

தமிழ் ஓவியா said...


மோடி ஸ்வாமிகளின் தனிமை உபதேசம்


- குடந்தை கருணா

இமாச்சல பிரதேசத்தில் பேசிய மோடி, தனக்கு குடும்ப வாழ்க்கை இல்லாததால், தான் ஊழல் செய்து பணம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், குடும்ப சூழல் இல்லாதவர் மட்டுமே,ஊழலை ஒழிக்க முடியும் என ஊழல் ஒழிப் புக்கு புதிய இலக்கணத்தை உதிர்த் துள்ளார் மோடி ஸ்வாமிகள்.

மோடி ஸ்வாமிகளிடம் சில கேள் விகளை கேட்கும் விரும்புகிறோம்.

1. ஊழலை ஒழிக்க குடும்ப ஸ்தர்களால் முடியாது என்பதால் தான், அத்வானியை பிரதமர் வேட் பாளராக பாஜக அறிவிக்கவில்லையா?

2. பிரதமர் மட்டுமே முடிவு செய்து, ஊழலை ஒழிக்க முடியுமா?

3. ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், என அனைவரும் குடும்ப சூழல் இல் லாதவர்களாக இருக்க வேண்டுமா?

4.மோடி ஸ்வாமிகளின் கருத்தை, பாஜக ஏற்றுக் கொள்கிறதா?

5. இல்லற வாழ்க்கை இல்லாத வர்களுக்குத்தான் இம்முறை பாஜக சார்பில் வேட்பாளராக வாய்ப்பு தரப்படுமா?

6. அத்வானி, சுஸ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி போன்றோர் இம்முறை வேட்பாளர்களாக போட் டியிடுவார்களா?

7. எந்த ஆய்வின் அடிப்படையில் மோடி ஸ்வாமிகள் இந்தக் கருத்தை உபதேசிக்கிறார்?

8. எனக்கு குடும்ப வாழ்க்கை கிடையாது, முதல்வர் பதவியில் மாத ஊதியமாக ஒரு ரூபாய் தான் பெறு கிறேன் எனக் கூறியவர் தான்,கடந்த பதினேழு ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றப் படிகளில் ஏறி வருகிறார். அதற்கு மோடி ஸ்வாமிகளின் விளக்கம் என்ன?

9. யோகேந்திர யாதவ் மோடி ஸ்வாமிகளிடம் கேட்ட கேள்வியான, அதானி குழுமத்திற்கு அதிகப்படி யான சலுகைகள் அளிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதற்கு மோடி ஸ்வாமிகளின் பதில் என்ன?

அண்மையில் ஒரு திரைப் படத்தில் ஒரு வசனம் வரும். வெள் ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று வசனம் வரும். அது போலத்தான் இருக்கிறது மோடி ஸ்வாமிகளின் பேச்சு.

Read more: http://viduthalai.in/page-2/75567.html#ixzz2tp1ss9mW

தமிழ் ஓவியா said...


மதம் தேவையா?


மதத்தைக் காப்பாற்றவே கோவில்களும், சொத்துக்களும், அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா?அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா? என்பதைத்தான் கவனிக்கவேண்டும். - (விடுதலை, 3.12.1962)

Read more: http://viduthalai.in/page-2/75562.html#ixzz2tp2xh2L1