Search This Blog

17.2.14

பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். வகுக்கும் வியூகத்தை முறியடிப்பீர்!-கி.வீரமணி

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பறிக்க பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். வகுக்கும் வியூகத்தை முறியடிப்பீர்! 


ஆர்.எஸ்.எஸ். பூனைக்குட்டி வெளியில் வந்தது - பிஜேபிக்கு நேரடிக் கட்டளை!

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பறிக்க பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். வகுக்கும் வியூகத்தை முறியடிப்பீர்!

ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து எழ வேண்டிய தருணம் இது!

இதுவரை பி.ஜே.பி.யைப் பின்னணியில் இருந்து இயக்கி வந்த ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது வெளிப்படையாக வெளியில் வந்து,  பிஜேபிக்குக் கட்டளையிட்டு விட்டது. 

ஹிந்துத்துவாவை அதிகார பீடத்தில் அமர வைக்க தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களான பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பறிக்க வியூகங்களை வகுத்துள்ளனர்.

இந்தச் சூழ்ச்சியை ஒடுக்கப்பட்ட மக்களும், புரிந்து கொள்ள வேண்டும்;  மதவாத எதிர்ப்புச் சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

15.2.2014 நாளிட்ட மதுரை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள 7 கலம் செய்தியின் தலைப்பு “RSS  Aims for Bigger Role in Electoral Duties’’ என்பதாகும். அதாவது, வரும் (நாடாளுமன்ற) பொதுத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் மிகப் பெரிய பங்காற்றும் கடமையைக் கையில் எடுத்துள்ளது என்பதாகும்.

பா.ஜ.க. என்ற அரசியல் கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமாகும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை, லட்சியங்களை அரசியலில் ஈடுபட்டு நிறைவேற்றவே முந்தைய பாரதீய ஜனசங்கம் என்பது 1980 முதல் பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைக்கப்பட்டு தேர்தல் களத்தில் இறக்கி விடப்பட்டது.

இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் பின்னணியில் இருந்து, பா.ஜ.க.வை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பு, இந்தத் தேர்தலில் துவக்கம் முதலே தானே நேரிடையாக சற்றும் ஒளிவு மறைவு இன்றி, கூச்சநாச்சமின்றி வெளிப்படையாகவே பிரதமர் வேட்பாளராக குஜராத் மோடியைத் தேர்வு செய்து அறிவித்தது.

நரேந்திரமோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர்; ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவா கொள்கையை அப்பட்டமாகக் கடைப்பிடிப்பதில் சற்றும்கூட பின் வாங்காதவர் என்பதால் அவரையே - பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அதற்காக தனது அத்துணைப் பிரச்சார ஊடகங்களிலும் - இணையதளம் உட்பட மிக வேகமாக முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது!  சமூகநீதி உணர்வு நாடு முழுவதும் அலைவீசிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு யுத்தியை அரசியல் வியூகமாக வகுத்து, தற்போது காங்கிரசின் தலைமையில் நடைபெறும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நிலவும் மக்களின் அதிருப்தியைத் திட்டமிட்டு, தன் பக்கம் சாதகமாகத் திருப்பி, மதச் சார்பின்மை, ஜனநாயகம், உண்மையான சமூகநீதி இவைகளுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு ஹிந்துத்துவா ஆட்சியாகவே உருவாக்கிட துணிந்து களத்தில் வெளிப்படையாகவே  இறங்கி விட்டது! அந்தந்த மாநிலங்களில் பதவிப் பசி கொண்டவர்களை  - புகலிடம் தேடியவர்களையெல்லாம் தங்களது அணிக்கு அழைத்துக் கொள்ள, பணபலம், பத்திரிகைப் பலம், இனபலம் எல்லாவற்றையும் - சகல அஸ்திரங்களையும் பயன்படுத்தி, களத்தில் நேரிடையாகவே ஒரு யுத்தத்திற்கு ஆயத்தமாகி விட்டது!

எனவே இப்போது நரேந்திர மோடி என்பவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏவி விடும் மன்மத அம்பு என்பதை நாடும் மதச் சார்பற்ற, சமதர்மக் கொள்கையில், பாசீசம் அல்லாத ஜனநாயகத்தைக் காப்பாற்ற முயலுவோர் மிகக் கவனமாக வரும் பொதுத் தேர்தலை அணுக வேண்டியவர்களாவர். மேற்சொல்லப்பட்ட (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) செய்தியின் முக்கிய சாராம்சத்தை அப்படியே தருகிறோம்.

ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர் மோகன்பகத் அவர்கள் தலைமையில் வாராணாசியில், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடிய ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரபிரதேசத் (அதிகமான எம்.பி.களைக் கொண்ட மாநிலம்)திற்குப் பொறுப்பான பா.ஜ.க.வின் மாநில தலைவர் லட்சுமிகாந்த் வாஜ்பேயி, அமைப்புச் செயலாளர் ராதேஷ் ஜெயின், கட்சித் தேர்தல்  பொறுப்பாளர் (குஜராத்தில் மோடியை வெற்றி பெறச் செய்த) அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் தனது தேர்தல் பணிக்கான திட்டங்களை முன் வைத்துள்ளார்.

1. பிரதமர் வேட்பாளர் எப்படி ஹிந்துத்துவா கொள்கையில் ஊறித் திளைத்தவரான மோடியையே தேர்ந்தெடுத்துள்ளோமோ, அதே போல் அக்கொள்கையில் வேரூன்றியவர்களையே நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களாக இந்தஅணி சார்பில் நிறுத்தப்பட வேண்டும்.

2. இப்படி தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் நல்ல பெயரையும், பொது மக்கள் மத்தியில் மதிப்பையும் கொண்ட கேள்விக் கேட்கபட முடியாத  தகுதியான வேட்பாளராகவும் அமைதல் வேண்டும்.

3. பா.ஜ.க.வுக்குச் சொல்லப்பட்ட கருத்து வென்னவென்றால் ஆணைகள் ஆர்.எஸ்.எஸ்.ஸால் தரப்பட்டால் அதை அப்படியே கட்சி (பா.ஜ.க.) அமைப்பு பின்பற்றியாக வேண்டும்.

4. அவ்வமைப்புகள் கிராமாந்திரங்களிலும் இறங்கி ஆதரவாளர்களான வாக்காளர்களை ஒன்று திரட்ட ஆவன செய்ய முன்வர வேண்டும்.

5. மற்ற இடங்களில் தெரிகின்ற மோடி அலை எப்படி 2014-இல் வீசுகிறதோ, அதை உ.பி.யில் 80 இடங்கள் உள்ள மாநிலத்தில் வீச வைக்கத் தேவையான அத்தனை உத்திகளையும் கையாளத் தயங்கக் கூடாது. பிற்படுத்தப்பட்டோர், தலித் என்ற தாழ்த்தப்பட்டோரின் வாக்குகளைக் கவர்ந்திழுக்கத் தேவையான அத்துணை முயற்சிகளையும் செய்யத் தவறக் கூடாது. இதற்காக தனித்தனி மாநாடுகளை ஆங்காங்கே நடத்திட வேண்டும்; சமூக சீர்திருத்தவாதியான கான்சிராம் பெயரில் நிகழ்ச்சிகளை உ.பி.யில் கவுதம சவுத்ரி என்பவர் நடத்தியதுபோல் நடத்த வேண்டும். பாபு ஜெகஜீவன்ராம் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு, இந்தத் தேர்தல் பயணத்தை சளைக்காது பா.ஜ.க. நடத்திட வேண்டும்.

பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகள் நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு அதிகம் (அங்கே) இல்லை என்றாலும், பிரதமர் வேட்பாளரான மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவர் என்பதை சதா விடாமல் எங்கும் தொடர்ந்து பிரச்சாரத்தை செய்து கொண்டே இருக்க வேண்டும். இவைதான் ஆர்.எஸ்.எஸ்., - பிஜேபி சேர்ந்து எடுத்துள்ள முடிவுகளும், வியூகங்களும் ஆகும்.

அது மட்டுமா?  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்  வெளிப்படையான பிரகடனம் தான் இவை. லால்கிஷன் அத்வானிபோன்ற மூத்த தலைவரைப் புறக்கணித்தது ஏன் என்பதை விளக்கக்கூடிய ஒன்றாகும்  இந்தப் பிரகடனம்.

அ) சில வருடங்களுக்குமுன் அத்வானி ஒருமுறை தனது குமுறலை வெளிப்படையாகவே வெளியிட்டார். பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முழுமையாக கட்டுப்படுத்த வேண்டுமென்ற ரீதியில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது விரும்பத்தக்கதல்ல; பா.ஜ.க. என்ற அரசியல் கட்சி சுதந்திரமாக இயங்கும் தன்மை ஏற்பட வேண்டும் என்றும் கூறினார்.

அன்று முதலே அவர் பல வகையிலும் புறந்தள்ளப்பட்டு வரும் தலைவரானார்; ஜின்னாவைப் பாராட்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, கட்சித் தலைவர் பதவியிலிருந்தே விலகும்படி ஆக்கப்பட்டார். சென்னையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் எல்.கே. அத்வானி இவ்வாறு குறிப்பிட்டார்:

ஆர்.எஸ்.எஸின் அனுமதியில்லாமல் தனது கட்சியினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ள முடியாது என்ற எண்ணத்தை இந்நிகழ்ச்சி (அத்வானி கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிகழ்ச்சி) வலுப்படுத்தி விட்டது. நாம் கொண்டிருக்கும் இந்தக் கண்ணோட்டத்தினால் பா.ஜ.க.வுக்கோ அல்லது ஆர்.எஸ்.எசுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது.

ஓர் நாட்டை மறு கட்டமைப்புச் செய்ய இயன்ற ஒரு தலைவரை உருவாக்குவதற்குப் பதிலாக இத்தகைய கண்ணோட்டம் அவரது நற்தோற்றத்தைக் குறைத்துவிடும் என்பதுபற்றி ஆர்.எஸ்.எஸ். கவலைப்பட வேண்டும்; மக்களிடையே நிலவும் இந்த எண்ணத்தைச் சிறிது சிறிதாகப் போக்குவதற்கு ஆர்.எஸ்.எசும், பிஜேபியும் உண்மையாகப் பாடுபட வேண்டும் என்று தனது குமுறலை வெளிப்படுத்தினார் எல்.கே. அத்வானி (தி இந்து 8.10.2013).

மோடியைக் காட்டினால்தான் பிற்படுத்தப்பட்டோர் என்ற போர்வையில் சமூக நீதியாளர்களின் வாக்குகளைப் பறிக்க ஏதுவாகும் என்கிற வியூகத்தில், அத்வானியை முன்னிலைப்படுத்தினால் வெற்றி பெற்று 10 ஆண்டுகளாக இழந்த ஆட்சியை மீண்டும் அடைய முடியாது என்பதும் அதன் உத்தி - வியூகம் என்பது இதன் மூலம் புரிகிறது அல்லவா? இதுவரை ஒளிந்திருந்து பிஜேபியை வழி நடத்திய ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது முக்காட்டைக் கலைத்துவிட்டு, நாட்டின் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்களின் வாக்குகளைப் பறிக்க வியூகங்களை வகுத்து மாயமானாக செயல்படத் துடிக்கிறது.

இதனைத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நாட்டின் பெரும்பான்மையான மக்கள் புரிந்துகொண்டு, ஹிந்துத்துவா கூட்டத்தின் தந்திர வலையில் சிக்காமல், வீறுகொண்டு எழ வேண்டும்; பிஜேபியின் வியூகத்தை முறியடிக்க மதச்சார்பின்மைச் சக்திகள் ஒன்று திரண்டு பிஜேபிக்கு எதிரான சரியான வியூகங்களை  வகுத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும், செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

அதே நேரத்தில் இப்போது பா.ஜ.க. அணியை எதிர்ப்பதாகக் காட்டி பிறகு அவருடன் சேரும் அணியையும் சரியாக அடையாளம் கண்டு, ஏமாறாமல் புறந்தள்ளி, உண்மையான மதச் சார்பற்ற அணியை அடையாளம் காண வேண்டும்.

------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்"விடுதலை” 17-2-2014

16 comments:

தமிழ் ஓவியா said...


பேராசிரியரின் இன முழக்கம்


- குடந்தைக் கருணா

திமுகவின் 10-ஆவது மாநில மாநாட்டினை துவக்கி பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையில், இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணை யற்ற சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரைப் பற்றி, இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், கூறிய கருத்துகள், சிறப்பானவை; இன்றைய கால கட்டத்திற்கு தேவை யானவை.

பெரியாரின் சுய மரியாதை இயக் கம் துவங்கி, அந்த உணர்வை நமக் குத் தரவில்லை என்றால், அண்ணா இல்லை; கலைஞர் இல்லை; நாமெல் லாம் இல்லை என்றாரே பேராசிரியர், அது அங்கே கூடியிருந்த லட்சோப லட்சம் தொண்டர்களுக்கு மட்டு மல்ல; தமிழகத்திலே வாழும் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களாக இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

பெரியாரின் சுயமரியாதை இயக் கம், இன விடுதலை, வர்ணாசிரம எதிர்ப்பு, மனித நேயம் அனைத்தும் மனிதனை, மனிதனாக ஆக்கும் செயல்பாடு என்பதை பேராசிரியர் வரிசைப்பட எடுத்துக்கூறி, மாநாட் டிற்கு ஒரு புதிய சிந்தனையை விதைத் தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்த லில், நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தைவிட, சமுதாய நோக்கில் தான் எனப் பேராசிரியர் கூறியது பதவியை நோக்கி மட்டும் கட்சியில் சேரும் பலருக்கும் ஓர் எச்சரிக்கை! தமிழ் நாட்டின் அரசியல் நட வடிக்கைகள், கட்சிகளுக்கிடையே யான போட்டியாக அல்லாமல் ஆரியர் திராவிடர் போராட்டமாகத் தான் நடைபெற்று வருகிறது.

அதனால் தான், திமுகவை அழித் திட ஊடகங்களும், பார்ப்பனர் களும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியை, தனது பேச்சின் மூலம், இனமானப் பேரா சிரியர் அன்பழகன், திமுகவின் தொண்டர்களுக்கு, குறிப்பாக, இளை ஞர்களுக்கு, வகுப்பு எடுத்தது போல், கூறியுள்ளார்.

பெரியாரின் சிந்தனைகளை நெஞ் சில் ஏந்தி, பேராசிரியரின் இன முழக்கம் செயல்படுத்திட இளைஞர் கள் திரளட்டும்.

Read more: http://viduthalai.in/page-2/75465.html#ixzz2tdADox97

தமிழ் ஓவியா said...


புகழ்ந்து பேசுவதுதான்



ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/75460.html#ixzz2tdAMBuy7

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடந்த போர்க்குற்றம் சர்வதேச அளவில் விசாரணை


அய்.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம்பிள்ளை பரிந்துரை

கொழும்பு, பிப்.17-இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் - இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போரில் பெரும் அளவில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. அப்பாவி தமிழர்களை கொத்துக் கொத்தாக ராணுவம் சுட்டுக் கொன்றது. சித்திரவதை செய்தும் கொன்றுள்ளது. இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றம் பற்றி சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. இந்த கோரிக்கையை அய்.நா மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை பரிந்துரை செய்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே இறுதி கட்ட போர் நடைபெற்றது. இதில், குழந் தைகள், பெண்கள் உள்பட ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமைகள் மீறப்பட்டு, போர்க்குற்றம் புரிந்ததாக இலங்கை மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட ஏராளமான நாடுகள் குற்றம் சாட்டின.

இது குறித்து அய்.நா மனித உரிமை கள் ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை 74 பக்க அறிக்கையை அய்.நா. சபைக்கு அனுப்பியுள்ளார். அதில், இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மீறப்பட்ட மனித உரிமைகள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச அளவில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

இலங்கையில், தீவிரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காணா மல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும். சிறுபான்மையினரான தமிழர்களை கொன்று குவித்தவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்று பரிந் துரை செய்துள்ளார்.

ஏற்கெனவே, இறுதி கட்ட போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப் பட்டதாக, இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களை அய்.நா. சபை கண்டித்து இருந்தது. ஆனால் இதை இலங்கை மறுத் தது. உள்நாட்டு விவகாரத்தில் வெளி நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. நாட்டில் அமைதியை ஏற் படுத்தும் முயற்சிக்கும் மறுகுடியமர்த் தும் பணிக்கும் இது பாதிப்பை ஏற் படுத்தும் என்றும் இலங்கை கூறுகிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் அய்.நா மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக மூன் றாவது தீர்மானத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இலங்கையில் மனித உரிமைகள் விஷயத்தில் முன்னேற்றமின்மை. உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், செய்ய வேண்டிய மறுசீரமைப்பு வேலைகள் சரியாக நடைபெறாதது குறித்து இலங்கையை கண்டிக்கும் என தெரிகிறது. இந்த இரண்டு தீர்மானங் களுக்கும் இந்தியா ஆதரவு தெரிவித்து இருந்தது.

இலங்கை சென்ற இங்கிலாந்து பிரதமர் போர்க்குற்றத்திற்கு எதிரான இலங்கையின் உள்நாட்டு விசாரணை தோல்வி அடைந்ததாக குற்றம் சாட் டினார். இந்நிலையில் நவிபிள்ளையின் அறிக்கை இலங்கை அரசுக்கு நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் உடன டியாக எந்தவித பதிலையும் தரவில்லை. போர்க்குற்றத்தை விசாரிக்க பன்னாட்டு சுதந்திர விசாரணை குழு அமைந்து விடுமோ என்று இலங்கை அரசு அச்சப்படுகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே வேற்றுமைகளை அகற்ற அதிக காலம் வேண்டும் என்று அமெரிக் காவின் ஆதரவை கோரியுள்ளது. மேலும், அய்.நா மனித உரிமைகள் தீர்ப்பாயம் மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் விடு தலைப்புலி ஆதரவாளர்களின் கட்ட ளைக்கு ஏற்ப இலங்கைக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி யுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/75462.html#ixzz2tdB0IIqV

தமிழ் ஓவியா said...

ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம்

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந3) துறை அரசு ஆணை (நிலை) எண் 92 நாள் 11.9.2012இன்படி, +2 படித்து முடித்து சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளைப் படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிருத்துவமதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர் மாணவியர்களுக்கு முழுக் கட்டணத்தையும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு வழங்கும். இது 2011_-2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.

ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் பெற்றோர்களின் வருமானம் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் நிபந்தனை.

இத்தகு நிதி உதவியின் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பல்லாயிரக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் உட்பட படித்துப் பயன்பெற்றனர்.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தீண்டத்தகாத மக்களாக வெறுக்கப்பட்டவர்கள் கல்வி வாய்ப்புப் பெற்றால்தான் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் என்பது யதார்த்தமானதாகும்.

இந்நிலையில் ஏற்கெனவே உள்ள அரசாணை 92-க்குப் பதிலாக அரசாணை எண் 106 மற்றும் 107 என்று இரு ஆணைகள் 4.12.2013 நாளிட்டு ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஆணைகளின்படி ஏற்கெனவே சுயநிதிக் கல்லூரிகளுக்கான முழுக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்பதற்குப் பதிலாக, அரசு கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் ரூபாய் 40 ஆயிரம், தனியார் சுயநிதிக் கல்லூரி ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.70 ஆயிரம் என்ற நிலையில் இதுவரை 70 ஆயிரம் ரூபாயை முழுமையாக அரசே ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக அரசு ஒதுக்கீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வெறும் ரூ.40 ஆயிரம் மட்டும்தான் தனியார் கல்லூரிகளுக்கும் அளிக்கப்படும் என்பதுதான் புதிய ஆணையின் சாரமாகும்.

இந்தப் புதிய ஆணையின் காரணமாக அரசு செலுத்தும் தொகை போக மீதியை மாணவர்களே கட்டும் நெருக்கடியும், சுமையும் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவும், போக்கும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். இவ்வளவுக்கும் மத்திய அரசால் அளிக்கப்படும் உதவி நிதி இது.
மாநில அரசு மூலமாக, மத்திய அரசு ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக்காக நிதியை வழங்குகிறது. இடையில் நந்தியாக இருந்து தமிழ்நாடு அரசு தடை செய்வது ஏன்? மத்திய அரசு கொடுக்கும் முழு நிதியையும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்காமல், அந்த நிதியை வேறு துறைகளுக்குச் செலவிடுகிறார்கள் என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது. சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள், முதல் தலைமுறையாக கல்லூரிகளின் படிக்கட்டுகளை மிதிக்கும்போது கால்களைத் தட்டிவிட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். ஆச்சாரியார்தான் (ராஜாஜி) கல்வியில் கைவைத்தவர் என்ற கெட்ட பெயர் உண்டு. அந்த ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம். முறையான வேண்டுகோளுக்குத் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இல்லையெனில், இது குறித்துக் களம் அமைக்க கழகம் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, பார்ப்பனர் திரு வேங்கடாச்சாரியாரை நியமிக்கும்படி பிரதமர் நேரு கூறியும் ஏற்காமல், தமிழர் என்.சோமசுந்தரத்தை நியமித்த முதல்வர் ஓமாந்தூரார் ராமசாமி (ரெட்டி)யாரை தாடியில்லாத ராமசாமி (நாயக்கர்) என்று பார்ப்பனர்கள் பட்டங் கட்டியது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

குண்டுவெடிப்பும் ஆர்.எஸ்.எஸ்.தலைவரும்


இந்தியாவில் நடைபெற்ற சில பயங்கரமான குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பு வழக்கில் காவித் தீவிரவாதிகளின் நேரடித் தொடர்பு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு சாது பிரஞ்யா தாக்கூர் என்ற பெண் சாமியார், அசிமானந்தா, இந்திய ராணுவப் படையில் உயரதிகாரியாகப் பொறுப்பு வகித்த சிறீகாந்த் புரோகித் மற்றும் தயானந்த் பாண்டே போன்றோர் கைதாகி சிறையில் உள்ளனர்.



இவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்.சின் நேரடித் தொடர்பிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சம்ஜோதா விரைவு தொடர்வண்டி குண்டுவெடிப்பில் கைதான அசிமானந்தா என்ற சாமியார் ஹரியானா மாநிலம் அம்பாலா சிறையில் உள்ளார்.

அசிமானந்தா சாமியார், இன்று மத்தியில் ஆட்சி அமைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியை இயக்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமானவர் என்று பேட்டி கொடுத்துள்ளார். வழக்கம்போல இது ஒரு பொய்யான ஆதாரமில்லாத செய்தி என்றும் சில தேச விரோத சக்திகளுக்கு வளைந்து கொடுக்கும் கட்சிகளின் சதிச் செயல் என்றும் பா.ஜ.க. கூறியது. இந்தச் செய்தி பற்றி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், காரவான் இதழுக்காக இந்தச் செய்தியைச் சேகரித்த இணை ஆசிரியர் லீனா கீதா ரகுநாத் கூறியபோது,``இந்தச் செய்தி அனைத்தும் உண்மையே. இது அவரிடம் இருந்து வாய்மொழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த விசாரணைக்கும் இந்தக் குரல் பதிவைக் கொடுக்கத் தயார் என்றார். ஹரியானாவில் அம்பாலா சிறையில் உள்ள அசீமானந்தாவை சிறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சந்தித்துப் பேட்டி எடுத்தேன். மேலும் பேட்டியை அவரது அனுமதியின் பேரில்தான் குரல் பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார். காரவன் இதழ் அசிமானந்தாவின் குரல் பதிவை 7.2.2014 அன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் ஓவியா said...

பால்நெஞ்சு பதறலையா?


- ந.தேன்மொழி

சாணிக்குப் பொட்டிட்டு
சாமியென்று கூத்தாடி
வாசலிலே குத்தவைச்சு
வாழை இலையிட்ட
எனதருமைச் சகோதரியே!

சாணியதை நீமிதித்தால்
சாமியென்று சொல்வாயா?
சாணமென்று சொல்வாயா?
மலையுடைத்துப் பாறையாக்கி
சிலைவடித்து சாமியென்றாய்

நட்டகல்லையும் விடவில்லை
நெடுமரமாய் விழுந்திட்டாய்
அம்மன்தாலி அறுந்ததென
அய்யன் சொன்னான் கோவிலிலே
ஆளுக்கொரு புதுத்தாலி
அணிந்தீர் அவசரமாய்
தன்தாலி அறுமென
தெரியாத சாமியிடம்
அடகு வைத்தாய்
உன்தாலியை சகோதரியே!

காவியுடைக் கயவர்கள்
காலடியில் சரணம்
சாமியென்று சொல்லி
அம்மணமாய் அவனாட
அவன்முன்னே மண்டியிடும்
மானமிழந்த சகோதரியே

பக்தியோடு பாம்புக்குப்
பால்வார்க்கும் பெண்ணினமே
பச்சிளம் குழந்தையை
பக்தியென்ற பேராலே
பாவியவன் ஏறிமிதிக்க
பால்நெஞ்சு பதறலையா?
பார்த்தவிழி துடிக்கலையா?
இப்படியொரு வேண்டுதலை
சாமியவள் கேட்டாளா?
கேட்கும் அவளுன்
சாமியா சகோதரியே?
எத்தனை சாமிகள்
எத்தனை ஆயுதங்கள்
பெண்மானம் தனைக்காக்க
எந்தசாமியும் வரவில்லை

எத்தனை ஆயுதங்கள்
இருந்தாலும் என்ன
எந்தசாமியும் நம்மைக்
காப்பாற்ற வாராது
சாமிக்கே காவல்
நாம்தானடி சகோதரியே
உணர்ந்து கொள்ள
இன்னும் எத்தனை
பெரியார் தேவை
சொல்லடி சகோதரியே!

தள்ளுபடி
வியாபாரம்

அர்ச்சகர்
ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆகம விதிகளெல்லாம் அத்துப்படி!
ஆனாலும் அதெல்லாம் இப்போது தள்ளுபடி!
ஆனந்த சயனத்திலிருக்கும் ஆதிகேசவனுக்கு வியர்க்கிறதாம்?!
ஏ.சி. எந்திரம்
கண்டுபிடித்தது
மாட்டுக்கறி உண்ணும்
மிலேச்சன் கேரியர்!
கருவாட்டு வியாபாரி
கந்தசாமியிடம்,
அதில பாருங்கோ,
ஆண்டவனுக்கு....ஹி ஹி
என்று சொல்லி ஆட்டையப் போட்டு
அதை கர்ப்பக் கிரகத்தில்
போட்ட பின்னே அலுப்பில்லாமல் போகிறது...
அர்ச்சகர் கேரியர் !

- க.அருள்மொழி, குடியாத்தம்.


கடவுள் எதற்கு?

காலைக் கடன்களைக்
கழிப்பது முதல்
இரவு படுக்கை விரித்து
இல்லாளுடன் இணைவது வரை
எல்லா வேலைகளையும்
நானேதான் செய்கிறேன்!
இடையில் எனக்கு
கடவுள் எதற்கு?

- கு.நா.இராமண்ணா, சீர்காழி


ராசிக்கல்

சாலையில்
வாகனப் புழுதியினூடே
தார்ப்பாய் விரித்து
ராசிக்கல் விற்பவருக்கும்,
தொலைக்காட்சி நிறுவனத்தின்
குளிர்சாதன அறையிலமர்ந்து
கேமராவுக்கு முன்
ராசிக்கல் விற்பவருக்கும்,
இடையே உள்ள
பொருளாதார இடைவெளியில்
நழுவி விழுகிறது
ராசிக்கல் மீதான நம்பிக்கை.

- பா.சு.ஓவியச்செல்வன், சென்னை


அவன் கடவுளாம்!

மண்ணைத் தின்பானாம்!
வெண்ணை தின்பானாம்!
பெண்ணைத் தின்பானாம்!
அவன் பெயர் கண்ணனாம்!
அவன் கடவுளாம்! நான் சொல்லல...
நான் சொல்லல...
நான் சொல்லவே இல்லை!

- ஞா.சந்திரகாந்த், திருச்சி

தமிழ் ஓவியா said...

புதிய முறையில் சிக்கன மின்சாரம்


இன்றைய உலகில் மின்சாரத்தின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. அதற்கான உற்பத்தித் திறனோ மிகவும் குறைவாக உள்ளது. இத்தகு நிலையில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தைத் தயாரித்தனர். இதில், கிரிஸ்டலைன் சிலிகான் என்ற விலை உயர்ந்த பொருளும், பிளாட்டினத்தைவிட 10 மடங்கு அதிக விலை கொண்ட SpiroOmeTAD என்ற பொருளும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றுப் பொருளாக கேட்மியம் சல்பைட் பயன்படுத்தி குறைந்த விலையில் தயாரிக்கப்படும் சோலார் பேனல்களின் உற்பத்தித் திறனோ மிகவும் குறைந்த அளவில் உள்ளது.

தற்போது பெரோஸ்கைட் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இது, பூமியில் அதிக அளவில் கிடைப்பதுடன், விலையும் மிகவும் குறைவு. பெரோஸ்கைட்டைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் சோலார் பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் பெரிய கட்டிடங்களில் வெயிலை மறைக்கப் பொருத்தப்படும் கருப்புக் கண்ணாடிக்குப் பதில் இதனைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். சாதாரண சோலார் பேனல்களைவிட இரு மடங்கு மின்சாரத்தை உருவாக்கி நீண்ட தூரத்துக்கு எந்தவிதப் பாதிப்புமின்றிக் கடத்தும் சிறப்பினை பெரோஸ்கைட் பேனல்கள் பெற்றுள்ளமை இதன் தனிச்சிறப்பு.

ஒரு வாட் மின்சாரத்துக்கு 46 ரூபாய் என்ற இன்றைய சோலார் பேனல்களின் விலையினை 31 ரூபாய்க்குள் கொண்டு வந்தால் உலகில் உள்ள அனைத்துக் கார்களும் பெட்ரோலை விட்டுவிட்டு சோலார் கார்களாக மாறிவிடும்.

இன்ஹேபிடேட் என்ற அறிவியல் பத்திரிகை பெரோஸ்கைட் பேனல்கள் விற்பனைக்கு வந்தால் ஒரு வாட் மின்சாரம் 6 ரூபாயாகிவிடும் என்றும், சயின்ஸ் டெக் டெய்லி என்ற தொழில்நுட்பப் பத்திரிகை நாம் நினைத்துப் பார்க்க முடியாத மின்சாரப் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளன.

ஒரு ஃபிலிம் போன்ற தகட்டில் பெயிண்ட் அடிப்பது போல இதனை உருவாக்கிவிடலாமாம். அடுத்தகட்ட வளர்ச்சியில், இது பேனலாக விற்பனை செய்யப்படாமல் சோலார் பெயிண்ட்டாக மாறவும் வாய்ப்பு உள்ளதாம். காருக்குப் புதுசா பெயிண்ட் அடித்தாலே போதும்..., பின்னர் பெட்ரோல் போடும் வேலையே இருக்காதாம்.

தமிழ் ஓவியா said...

பூப்பெய்தாத சிறு பெண் சிவனுக்கா?

- திராவிடப்புரட்சி

பூப்பெய்தாத சிறு பெண் சிவனுக்கு_ கடவுளுக்கு எப்படித் திருமணம் செய்துவைக்கப்படுகிறாள் என்பதைக் கீழ்கண்ட செய்திகள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். இளகிய மனம் கொண்டோர் படிக்கக்கூடாத கொடுமை இது. பல பெண்கள் தமது மூடநம்பிக்கைகளின் காரணமாக தங்கள் மகள்களுடைய கன்னிமையை தமது கடவுளர் விக்கிரகங்களுள் ஒன்றுக்குத் தாரை வார்த்துத் தந்து அர்ப்பணிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்குப் பன்னிரெண்டு வயது ஆன உடனேயே, அந்த விக்ரகம் இடம் பெற்றுள்ள வழிபாட்டுத் தலம் அல்லது மடத்துக்கு அவளை அழைத்துக்கொண்டு சகலவிதமான மரியாதைகளுடன் போவார்கள். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்விக்கப்படுவதற்கு முந்தைய நல விழாவொன்றை அவளது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றுகூடி எடுக்கின்றனர்.

அவ்விடத்தின் கதவுக்கு வெளிப்பக்கமாக, மிக கடினமான கருங்கல்லால் ஆன ஒரு சதுரமான பீடம் ஓர் ஆள் உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும். அதைச் சுற்றிலும் மரப்பலகைகளினால் ஆன தட்டிகள் வைக்கப்பட்டு அதனுள் பீடம் கண் மறைவாக இடம் பெற்றிருக்கும். இவற்றின் மீது பல எண்ணெய் விளக்குகள் வைக்கப்பட்டு அதனுள் அவை இரவில் எரிக்கப்படும். விழாவுக்காக மரப்பலகைகளை பட்டுத் துணித் துண்டுகளால் அலங்கரித்திருப்பார்கள். வெளியே உள்ள மக்கள் உட்புறம் நடப்பவற்றைக் காணமுடியாதபடி அத்துணிகள் உட்புறம் செருகப்பட்டு மறைப்பாக அமைக்கப்பட்டிருக்கும். மேலே சொல்லப்பட்ட கருங்கல்லின் மேல், குனிந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதனின் உயரத்திற்கு மற்றொரு கல் இருக்கும். அதன் நடுவே உள்ள துளையில் கூர்முனையுள்ள ஒரு குச்சி செருகி வைக்கப்பட்டிருக்கும்.

அக் கன்னிப்பெண்ணின் தாயார், தனது மகளையும் உறவுக்காரப் பெண்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு மரப்பலகைகளால் ஆன அந்த இடத்திற்குள் போய்விடுவாள். பிரமாதமான பூசைகளுக்குப் பின் உள்ளே நடந்த நிகழ்வு பார்வையில் படாததால் எனக்குச் சொற்பமான அறிவே உள்ளது, அந்தப் பெண், கல் துளையுள் செருகப்பட்டிருந்த கூர்முனையுள்ள குச்சியைக் கொண்டு தனது கன்னித்திரையை தானே கிழித்துக்கொள்வாள். கசியும் குருதியை அந்தக் கற்களின் மேல் சிறிய துளிகளாகத் தெளித்துவிடுவாள். அத்தோடு அவர்களின் விக்கிரக ஆராதனையும் நிறைவடையும்.

கண்ணால் கண்ட விவரங்களை இவ்வாறு பதிந்திருப்பவர் துவார்த்தே பார்போசா.

மேற்கண்ட செயல் மூலம் நமக்குத் தெரியவருவது, கடவுளான சிவனின் பிரதிநிதிக்கு, பூப்பெய்துவதற்கு முன்னரே அப்பெண் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதே. இது வெளிப்படையாக ஆண்குறி (லிங்க) வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. சிவனுக்கு இத்தகைய பெண்களைத் திருமணம் செய்து வைப்பதற்குச் சமமான ஒரு சடங்காக இது கருதிக்கொள்ளப் பட்டிருக்கக்கூடும் என்று துவார்த்தே பார்போசா தெரிவிக்கிறார்.

பிற்காலத்தில், ஒரு சுபயோக சுபதினத்தில், இதர ஆலய ஊழியர்கள் அனைவரின் முன்னிலையிலும் இந்தச் சடங்கு நிகழ்த்தப்பட வேண்டும் என்று காட்டாயமாகியிருக்கிறது.

ஆயிரக்கணக்கான பருவமெய்தாத சிறு குழந்தைகளைப் பாலியல் வல்லுறவு கொள்ளவைத்துள்ள இந்துக் கடவுள்களை நினைத்தால் இவற்றைக் கடவுள்களாக ஏற்றுக்கொள்ள முடியுமா? நாகரிகமடைந்த இந்தக் காலத்திலும், இந்து மதம் குறித்த புரிதல் இல்லாமல், தன்னை இந்துவாக _ பெருமையாகக் கருதும் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! முகநூலில் இந்தக் கொடூர செய்தியைப் பதிவு செய்திருந்தேன். அதனைப் படித்த சில தோழர்கள் இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்!

இதற்கான ஆதாரம், முனைவர் கே.சதாசிவன் அவர்களின் ஆய்வு நூலான தமிழகத்தில் தேவதாசிகள் என்ற நூலில் உள்ளது.

அந்த நூலை அவர் சாதாரணமாக கதை வடிவில் வெளியிடவில்லை என்பது கூடுதல் சிறப்பு. நூற்றுக்கணக்கான ஆதாரங்களை அள்ளிக் கொடுத்துள்ளார் நூலில். இந்த நூலை எழுதியுள்ள கே.சதாசிவன் அவர்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை மேனாள் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், கலைப்புல ஆசிரியர் குழு. இவருடைய எம்.ஃபில் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் தேவதாசி முறை பற்றியவை. சமூகவியல் மற்றும் புதைபொருள் இயல் ஆகியவற்றிலும் இவர் கல்விபுல பட்டங்கள் பெற்றவர்.

தேவதாசிகள் தொடர்பாக 145 கட்டுரைகள் எழுதியுள்ளார். 20ஆ-ம் நூற்றாண்டின் படைப்புத்திறன் படைத்த அறிவுஜீவிகள் 2000 பேரில் ஒருவர் என கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் 2001ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டவர்.

தமிழ் ஓவியா said...


காளஹஸ்தி சிவன் கோயிலா காமக் களியாட்டக் கூடாரமா?


சிறீகாளஹஸ்தி, பிப்.18- சிறீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் சென் னையைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்முறை செய்ய முயன்ற 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், சித் தூர் மாவட்டத்தில் உள்ள சிறீகாளஹஸ்தி சிவன் கோவிலில், ஆந்திர மாநி லம் மட்டுமின்றி தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் தின மும் சர்ப்ப தோஷ பரிகார பூஜை செய்து வருகிறார்கள்.

சென்னையை சேர்ந்த இணையர் தங்களது 20 வயது மகளுடன் கடந்த சனிக்கிழமை (15-ஆம் தேதி) சிறீகாளஹஸ்தி சிவன் கோவி லுக்கு அவர்கள் சிறீகாள ஹஸ்தியில் உள்ள ஒரு தனி யார் விடுதியில் தங்கினர். 15-ஆம் தேதி மாலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப் போது பூஜை பொருட்கள் விற்கும் இளைஞர் ஒருவர், அவர்களிடம் என்ன பூஜை செய்ய வந்துள்ளீர்கள் என கேட்டார். அதற்கு அவர்கள் தனது மகளின் திருமண தடை நீங்க, பரிகார பூஜை செய்ய வந்துள்ளோம் என் றனர். உடனே அந்த இளை ஞர், குறைந்த கட்டணத் தில் பரிகார பூஜை செய்ய ஏற்பாடு செய்வதாக கூறியத ற்கு அவர்களும் சம்மதித் தனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பூஜை செய்தால் மிகவும் நல்லது என அந்த இளைஞர் கூறினார். அதன் படி நள்ளிரவு அவர்களை கோவில் வளாகத்தில் உள்ள வீரபத்திரசாமி கோவில் சன்னதி அருகே அழைத்துச் சென்றார். அங்கு, ஏற்கெ னவே 2 வாலிபர்கள் இருந் தனர். அந்த கோவில் அருகே அந்த இளம்பெண்ணை அமர வைத்தனர். தோஷம் உள்ளவர்கள் மட்டும் தான் இங்கு இருக்க வேண்டும். மற்றவர்கள் இங்கிருந்து சென்று விடுங்கள் என கூறி பெற்றோரை அனுப்பி விட்டனர்.

இளைஞர்களில் ஒருவர் திடீரென இளம் பெண் ணின் வாயை பொத்தினார். பின்னர் 3 பேரும் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் வன்முறை செய்ய முயன்றதாக கூறப்படு கிறது. அந்த பெண், கூச்சல் போட்டார்.

மகளின் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் சிறீகாளஹஸ்தி நகர காவல் நிலையத்தில் முறையீடு செய்தனர். காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். சிறீ காளஹஸ்தியை அடுத்த சூரமாலையை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது 25), சிறீகாளஹஸ்தியை சேர்ந்த பாட்ஷா, காந்தி என்ற 3 பேரை கைது செய்தனர். மக் களிடையே மூடநம்பிக்கை உள்ளவரை இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கும்.

Read more: http://viduthalai.in/e-paper/75490.html#ixzz2tj2VASz2

தமிழ் ஓவியா said...


சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் வாழ்க!


தந்தை பெரியாரின் உற்ற தோழராகவும், கொள்கைப் பயணத்தில் சக பயணாளி களில் ஒருவருமான சிந் தனைச் சிற்பி. ம. சிங்கார வேலர் அவர்கள், சுயமரி யாதை சமதர்மத்தைச் செதுக் கிய அரும்பெரும் சிந்தனை யாளர் ஆவார்!

பச்சை அட்டைக் குடி அரசு ஏட்டில் தகத்தகாய பொன்னாக ஒளி வீசும் - கைவல்யம் அவர்களின் சிந்தனைப் பொறியைத் தீட்டும் கட்டுரை ஒருபுறம்.

சிங்காரவேலரின் பொதுவுடைமை, சமதர்ம, மூடநம்பிக்கைகளை எதிர்த்த, அறிவியல் ஆய்வு வெளிச்சத்தைப் பாய்ச்சிடும், காலத்தை வென்ற கருத் துக்கள் மறுபுறம் என்பது சுயமரியாதை இயக்க வரலாறு, பிரபல கம்யூனிஸ்ட் பேராசிரியரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான பேராசிரியர் ஹிரேன் முக்கர்ஜி அவர்கள் எழுதிய ஒரு நூலில், இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்திய வரலாற்றில் பேசப்படும் இருபெரும் இந்தியத் தலைவர்கள் தந்தை பெரியாரும், ம. சிங்காரவேலரும் தான் என்று சரியாகக் கணித்து எழுதியுள்ளார்கள். அவரது 155ஆவது பிறந்த நாளான இன்று அவரது சிந்தனைகளை செயலாக்கிட, ஒத்தக் கருத்துள்ளவர்கள் ஓரணியில் திரண்டு ஜாதி, மத, கடவுள் மூடநம்பிக் கைகளை முறியடித்து, புதிய உலகம் காண்போமாக!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

18.2.2014

சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/75493.html#ixzz2tj2d5kEn

தமிழ் ஓவியா said...


கோயில் வழிபடுவதற்காகவா? கொலை செய்யப்படுவதற்காகவா?


உதகை, பிப்.18- உதகை அருகேயுள்ள நஞ்ச நாடு கிராமத்தில் அமைந் துள்ள கோவிலில் முதலில் யார் வழிபாடு நடத்துவது என்ற பிரச்னையில், இரு வர் வெட்டிக் கொல்லப் பட்டனர். இதுதொடர்பாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். உதகை அருகே உள்ளது நஞ்சநாடு கிராமம். இக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு பூர்வீகமாக வசித்து வருவோர் எனவும், இக் கிராமத்திற்கு வெளிப் பகுதி களிலிருந்து வந்து குடி யேறியவர்கள் எனவும் இரு பிரிவினராக அழைக்கப் பட்டு வந்தனர். இந் நிலையில், நஞ்ச நாடு கிராமத்திலுள்ள சிவன் கோவில் யாருக்கு என்பதிலும் பல ஆண்டு களுக்கு முன்பிருந்தே பிரச் சினை இருந்து வருகிறது.

இந் நிலையில், நஞ்சநாடு கிராமத்திலுள்ள கோவி லில் வழிபாடு நடத்துவது தொடர்பாக ஒரு பிரிவினர் சென்னை உயர் நீதிமன்றத் தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இரு பிரி வினருக்கும் பூஜை செய்வ தற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் தனித் தனியாக நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. ஆனால், இதை அந்தக் கிராமத்தில் வசித்துவரும் பிரதான மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத் துள்ளனர். இச்சூழலில் நஞ்சநாடு கிராமக் கோவிலில் வழி பாடு நடத்துவதற்காக ஒரு பிரிவினர் பெற்றிருந்த உத் தரவின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண் காணிப்பாளரிடம் உத்தரவு கேட்டும், நஞ்சநாடு கிராமத்திலுள்ள கோவி லின் பொறுப்பாளராக உள்ள செயல் அலுவல ரிடம் அனுமதி பெற்றும் திங்கள்கிழமை காலையில் ஒரு பிரிவினர் பூஜை நடத் தவுள்ளதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இந் நிலையில், இப் பூஜைக்கு எதிர்ப்புத் தெரி வித்த ஒரு பிரிவினர் ஞாயிற் றுக்கிழமை இரவு பேச்சு வார்த்தைக்கு அழைப்ப தாகக் கூறி, ஒரு சிலரை தாங்கள் கூடியிருந்த இடத் திற்கு வரவழைத்து தாக் கினார்களாம்.

இதில், ஆனந்த் (34) மற்றும் ராஜன் (44) ஆகியோர் உயிரிழந் தனர். இதையடுத்து அப்பகு தியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட் டது. இதுகுறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் பி.சங் கர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர். அப்போது, இப் பிரச்சினை தொடர்பாக இருவர் வெட்டிக் கொல் லப்பட்டதாகவும், 10-க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத் துக் கொளுத்தப்பட்டதாக வும் புகார்கள் தெரிவிக்கப் பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். கோவை சரக காவல் துணைத் தலைவர் கணேச மூர்த்தி உத்தரவின்படி நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையிலான நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட் டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் பாதுகாப்பு பணி களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/75494.html#ixzz2tj2kjBQ2

தமிழ் ஓவியா said...



ஹாட்ரிக்

சென்னை - சேத்துப்பட் டில் உள்ள விநாயகர் கோயி லில் உண்டியல் மூன்றாவது முறையாக உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப் பட்டு உண்டியல் முட் புதரில் வீசி எறியப்பட்டது.

நம்பித் தொலையுங்கள்!

நடக்கவிருக்கும் நாடா ளுமன்றத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இதுவரை இந்துமுன்னணி முடிவு செய் யவில்லையாம் - சொல்லு கிறார் அதன் மாநில அமைப் பாளர் ராம. கோபாலன்.

யாத்திரை

யாத்திரை என்று சொன் னாலே அத்வானியின் ர(த்)த யாத்திரைதான் நினைவிற்கு வந்து தொலைகிறது (சோம நாதபுரத்திலிருந்து அந்த யாத்திரையைத் தொடங்கிய போதே அதன் உள்நோக்கம் புரிந்தது. யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் மதக் கலவரங்கள்! இப்பொழுது தமிழ்நாட்டிலே காந்தியாரை படுகொலை செய்த கூட்டத் தின் வாரிசுகள் ஒரு யாத் திரையைத் தொடங்கி உள் ளனர். வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை என்று அதற்குப் பெயராம்.

இதன் பொருள் இல்லம் தோறும் மதவெறியூட்டல் - உள்ளம்தோறும் மனுதர்மச் சிந்தனைக்குப் புத்துயிர் ஊட்டல்! தந்தை பெரியார் மண்ணில் இவுர்களின் சித்து விளையாட்டுகள் பலிக்கப் போவதில்லை பலிக்கவும் விடமாட்டோம்!

தப்புத்தாளம்

சென்னை அண்ணா சதுக்கம் - பூவிருந்தவல்லி செல்லும் வழித்தடம் எண் 25ஜி பேருந்து நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது தனி யார்க் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி, தாளம் போட்டு, பாட்டுப்பாடி ஆபாச வார்த்தைகளை அள்ளிக் கொட்டினார்கள் நடத்துநர் பாண்டியன் அவ் வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போது நடத்துநரை மாண வர்கள் தாக்கியுள்ளனர்.

மாணவர்களே, நீங்கள் எல்லாம் படித்துப் பட்டம் பெற்று வேலைக்குச் சென்று சம்பாதித்து நம்மைக் காப் பாற்றுவார்கள் என்று ஒவ் வொரு நொடியும் கனவு கண்டு கொண்டிருக்கும் பெற்றோர்களின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டு விடாதீர்கள்.

நம் இனத்து மக்கள் எல்லாம் கல்வி உரிமை பெற்று, உத்தியோகப் படிக்ககட்டுகளில் மதிப்புப் பெற வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டாரே தந்தை பெரியார். பாடுபட்டுக் கொண்டிருக் கிறதே திராவிடர் கழகம் அவர்களின் எதிர்ப்பார்ப்பு களைப் பொய்த்துப் போகச் செய்ய வேண்டாமே! நீங்கள் போடுவது தாளமா? அல்ல அல்ல - தப்புத் தாளம்!

கா(ம)ள கஸ்தி!

காளகஸ்தி கோயிலில் சாமி கும்பிடச் சென்ற பக்தையை பக்தர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனராம். கோயில்களை விபச்சாரக்கூடம் என்று காந் தியார் சொன்னது தவறாகி விடக் கூடாதல்லவா! காஞ் சிபுரம் தேவநாதன்கள் நாட் டில் இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார் கள். என்பதற்கு மேலும் இது ஓர் எடுத்துக்காட்டே!

Read more: http://viduthalai.in/e-paper/75492.html#ixzz2tj2v6Ocw

தமிழ் ஓவியா said...


காரணம்

வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலா ஷைகளையும் புரிந்து கொள்ள முடியாத வாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகை கள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம். - (விடுதலை, 28.8.1963)

Read more: http://viduthalai.in/page-2/75495.html#ixzz2tj3MeHR5

தமிழ் ஓவியா said...


கலைஞர் சட்டசபைக்கு வந்தார்

சென்னை, பிப்.18- தமிழக சட்டமன்ற வளாகத்திற்கு தி.மு.க. தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கலைஞர் அவர்கள் இன்று வருகை தந்து கையெழுத்திட்டு சென்றார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் சட்டசபைக்குள் வருவதற்கு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று கூறி சட்டசபைக்குள் செல்லாமல் அங்குள்ள லாபியில் கையெழுத்திட்டு வருகிறார். இதேபோல் இன்று (18.2.2014) காலை 10.20 மணிக்கு கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தபோது, சட்டசபை வருகை பதிவேட்டில் கையொப்பமிட காலை 10.40 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அவரை வாசலில் தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர்கள் ஜெ.அன்பழகன், செங்குட்டுவன், சக்கரபாணி, பெரியகருப்பன், சாக்கோட்டை அன்பழகன் உள்பட எம்.எல்.ஏக்கள் வரவேற்று சட்டசபை வளாகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றம் செய்தனர். அவையில் துரைமுருகன் சஸ்பெண்ட் குறித்து விளக்கம் கேட்க திமுக உறுப்பினர்கள் முயற்சித்தனர். திமுகவினர் பேச அனுமதி மறுக்கபட்டதால் பேரவைத் தலைவர் இருக்கை அருகில் சென்று ஒலி முழக்கமிட்டனர். ஒலி முழக்கமிட்ட தி.மு.க உறுப் பினர்கள் அனைவரும் உடனடியாக வெளி யேற்றப்பட்டனர். கூட்டத் தொடர் முழுவதும் புறக்கணிப்பு

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு சபைக்கு வெளியே தி.மு.க. கொறடா சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சிகளே கூடாது என்ற முறையில் செயல்படுவது ஜனநாயக விரோத செயல். எங்கள் கருத்துக்களை சொல்ல அனு மதிக்காததால் இந்த கூட்டத் தொடர் முழுவதையும் தி.மு.க. உறுப் பினர்கள் புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம். - இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தமிழகம்- ம.ம.க வெளிநடப்பு

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சட்ட மன்றத்தில் இருந்து பேரவைத் தலைவர் வெளியேற்றி யதை கண்டித்து புதிய தமிழக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம்பாஷா உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.

கலைஞர் பேட்டி

சட்டமன்ற வளாகத்தில் வெளியேயும்- அண்ணா அறிவாலயத்திலும் செய்தியாளர்களுக்கு கலைஞர் அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர் :- கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தம் இல்லை என்று மத்திய அரசு மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் சொல்லியிருக்கிறதே?

கலைஞர் :- அது தவறான வாதம். அதை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.

செய்தியாளர் :- தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகனை பேரவையிலிருந்து அய்ந்து நாட்கள் இடை நீக்கம் செய்திருப்பது பற்றி?

கலைஞர்:- இந்த அரசின் அவை நடவடிக்கை களில் அது ஒன்று. இந்த ஆட்சியில் இப்படித் தான் தொடர்ந்து சில முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலே ஒன்று தான் இது. செய்தியாளர் :-பொதுவாக இந்த ஆட்சியில் எதிர்க் கட்சிகள் பேரவையில் பேசுவதற்கு அனுமதி தரப் படுகிறதா?

கலைஞர்:- நீங்களே இந்தக் கேள்வியைக் கேட்டால், அதற்கு என்ன அர்த்தம்?

செய்தியாளர் :- இன்னொரு கேள்வி?

கலைஞர் :- கேள்வி நேரம் இங்கே இல்லை. அது அவைக்கு உள்ளே தான் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றது. (கலைஞரைச் செய்தியாளர்கள் அவைக்கு வெளியே சந்தித்த போது, பேரவைக்குள் கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது) செய்தியாளர் :- பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை உச்சநீதி மன்றம் விடுவித்திருப்பது பற்றி?

கலைஞர் :- இது பற்றி என்னுடைய அறிக்கையை நான் ஏற்கெனவே வெளி யிட்டிருக்கிறேனே? செய்தியாளர் :- இவர்கள் மூவரையும் மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா?

கலைஞர் :- சாத்தியக் கூறுகள்என்ன, வழி வகைகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் நான் ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன். கழக ஆட்சியின் போதும் நடத்திக் காட்டியிருக்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-3/75523.html#ixzz2tj3nhlPE

தமிழ் ஓவியா said...


கலைஞர் சட்டசபைக்கு வந்தார்

சென்னை, பிப்.18- தமிழக சட்டமன்ற வளாகத்திற்கு தி.மு.க. தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கலைஞர் அவர்கள் இன்று வருகை தந்து கையெழுத்திட்டு சென்றார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் சட்டசபைக்குள் வருவதற்கு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று கூறி சட்டசபைக்குள் செல்லாமல் அங்குள்ள லாபியில் கையெழுத்திட்டு வருகிறார். இதேபோல் இன்று (18.2.2014) காலை 10.20 மணிக்கு கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தபோது, சட்டசபை வருகை பதிவேட்டில் கையொப்பமிட காலை 10.40 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அவரை வாசலில் தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர்கள் ஜெ.அன்பழகன், செங்குட்டுவன், சக்கரபாணி, பெரியகருப்பன், சாக்கோட்டை அன்பழகன் உள்பட எம்.எல்.ஏக்கள் வரவேற்று சட்டசபை வளாகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றம் செய்தனர். அவையில் துரைமுருகன் சஸ்பெண்ட் குறித்து விளக்கம் கேட்க திமுக உறுப்பினர்கள் முயற்சித்தனர். திமுகவினர் பேச அனுமதி மறுக்கபட்டதால் பேரவைத் தலைவர் இருக்கை அருகில் சென்று ஒலி முழக்கமிட்டனர். ஒலி முழக்கமிட்ட தி.மு.க உறுப் பினர்கள் அனைவரும் உடனடியாக வெளி யேற்றப்பட்டனர். கூட்டத் தொடர் முழுவதும் புறக்கணிப்பு

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு சபைக்கு வெளியே தி.மு.க. கொறடா சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சிகளே கூடாது என்ற முறையில் செயல்படுவது ஜனநாயக விரோத செயல். எங்கள் கருத்துக்களை சொல்ல அனு மதிக்காததால் இந்த கூட்டத் தொடர் முழுவதையும் தி.மு.க. உறுப் பினர்கள் புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம். - இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தமிழகம்- ம.ம.க வெளிநடப்பு

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சட்ட மன்றத்தில் இருந்து பேரவைத் தலைவர் வெளியேற்றி யதை கண்டித்து புதிய தமிழக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம்பாஷா உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.

கலைஞர் பேட்டி

சட்டமன்ற வளாகத்தில் வெளியேயும்- அண்ணா அறிவாலயத்திலும் செய்தியாளர்களுக்கு கலைஞர் அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர் :- கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தம் இல்லை என்று மத்திய அரசு மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் சொல்லியிருக்கிறதே?

கலைஞர் :- அது தவறான வாதம். அதை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.

செய்தியாளர் :- தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகனை பேரவையிலிருந்து அய்ந்து நாட்கள் இடை நீக்கம் செய்திருப்பது பற்றி?

கலைஞர்:- இந்த அரசின் அவை நடவடிக்கை களில் அது ஒன்று. இந்த ஆட்சியில் இப்படித் தான் தொடர்ந்து சில முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலே ஒன்று தான் இது. செய்தியாளர் :-பொதுவாக இந்த ஆட்சியில் எதிர்க் கட்சிகள் பேரவையில் பேசுவதற்கு அனுமதி தரப் படுகிறதா?

கலைஞர்:- நீங்களே இந்தக் கேள்வியைக் கேட்டால், அதற்கு என்ன அர்த்தம்?

செய்தியாளர் :- இன்னொரு கேள்வி?

கலைஞர் :- கேள்வி நேரம் இங்கே இல்லை. அது அவைக்கு உள்ளே தான் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றது. (கலைஞரைச் செய்தியாளர்கள் அவைக்கு வெளியே சந்தித்த போது, பேரவைக்குள் கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது) செய்தியாளர் :- பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை உச்சநீதி மன்றம் விடுவித்திருப்பது பற்றி?

கலைஞர் :- இது பற்றி என்னுடைய அறிக்கையை நான் ஏற்கெனவே வெளி யிட்டிருக்கிறேனே? செய்தியாளர் :- இவர்கள் மூவரையும் மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா?

கலைஞர் :- சாத்தியக் கூறுகள்என்ன, வழி வகைகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் நான் ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன். கழக ஆட்சியின் போதும் நடத்திக் காட்டியிருக்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-3/75523.html#ixzz2tj3nhlPE