Search This Blog

8.4.13

பழனி முருகன் கோயிலில் முன்பு அர்ச்சகராக இருந்தது யார்? களம் காண கருஞ்சட்டைப் பட்டாளமே தயாராக இரு!

 
கருஞ்சட்டைப் பட்டாளமே களம் காணத் தயாராக இரு! 

சிறீரங்கத்தில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் ஏழும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தந்தை பெரியார் அவர்கள் தம் வாழ்நாளில் இறுதியாக கூட்டிய மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட ஒரு தீர்மானம் ஜாதி ஒழிப்புத் திசையில் தந்தை பெரியார் அவர்கள் முடித்து வைக்கும் முத்திரை பொறித்ததாகும். இன்று சட்டப்படியோ, சாஸ்திரப்படியோ ஜாதியைச் சொல்லி தீண்டாமையைச் சொல்லி எங்கும் எந்த இடத்திலும் பிரிவினை பேதம் காட்ட முடியாது.

இது சட்ட ரீதியான நிலை, அதே நேரத்தில் மதத்தின்படி இன்று வரையிலும் தீண்டாமையை நிலை  நிறுத்த முடியும். அந்த இடம் கோயில் கருவறையாகும்.

இந்துக் கோயிலில் பார்ப்பான் மட்டுமே அர்ச்சகன், அதே இந்து மதத்தைச் சேர்ந்த இன்னொருவன் அர்ச்சகனாக முடியாது அப்படி அந்தக் கோயில் கருவறைக்குள் பார்ப்பனர் அல்லாதவர் சென்றால் சாமி தீட்டுப்பட்டுவிடும் - ஆகமத்துக்கு விரோதம் என்று எந்தக் காலத்திலோ எந்தப் பார்ப்பன விஷமியோ எழுதி வைத்ததை இந்த சுதந்திர ஜனநாயக நாட்டில்  நிலை நிறுத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்பதுதான் நமது கேள்வி.
இன்னொரு மதக்காரன் இந்து மதக் கோயில் கருவறைக்குள் நுழைய வேண்டும் என்று அடாவடித்தனம் செய்யவில்லை.

அர்ச்சனை பற்றித் தெரியாத ஏதோ ஓர் ஆசாமிக்காக நாம் உரிமைக் குரல் கொடுக்க வில்லை.

அதே மதத்தைச் சேர்ந்தவனுக்கு, ஆகமங்களில் பயிற்சி கொடுத்து அதில் தேர்ச்சியும் பெற்ற நிலையில்தான் அந்த அர்ச்சகர் உரிமையைக் கோருகிறோம்; அது கூடாது என்று கூறுவோர் அர்ச்சகராக இருந்தாலும் சரி, ஊடகக்காரனாக இருந்தாலும் சரி, நீதிபதிகளானாலும் சரி - அது சரியான நேர்மையான நடு நிலையான முடிவாகாது.

இது மனித உரிமைப் பிரச்சினை, கடவுள் - மதப் பிரச்சினைகூட அல்ல.
முன்னோர் செய்து வைத்த ஏற்பாடு என்று கூறி, அதனை எடுத்து முக்காடு போட்டு மறைக்க முயற்சிக்கக் கூடாது.

பழனி முருகன் கோயிலில் முன்பு அர்ச்சகராக இருந்தது யார்? பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக அங்கு இருந்ததில்லையே!

போகரால் நிர்மாணிக்கப்பட்ட பழனி யாண்டவன் கோயிலில் போகரின் சீடர் புலிப்பாணியாரும், அவருக்குப் பின் அவர்தம் பரம்பரையார்களும்தானே  பழனிக் கோயிலில் பூஜைகளைச் செய்து வந்தனர். அந்தப் பண்டாரங்கள் ஒழிந்து போனது எப்படி?

இதைப்பற்றியெல்லாம் சங்கராச்சாரியார் சொல்லுகிறாரா? பார்ப்பன ஏடுகள் எழுது கின்றனவா?

கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையினை ஆண்டு வந்த திருமலைநாயக்கன் காலத்தில் அவருடைய படைத் தளபதியாகவிருந்த ராமப்பய்யன் என்ற பார்ப்பானின் ஆணையால் தானே பழனிக் கோயிலில் பண்டாரங்களின் கோயில் பூஜைப் பணி முடிவு பெற்றது - பார்ப்பனர்கள் குடியமர்த்தம் செய்யப்பட்டனர்.

தமிழன் என்றால் ஏமாந்தவன் - வரலாறு தெரியாதவன் என்ற நினைப்பா?
தந்தை பெரியார் மறைந்து 40 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதற்கு மேலும் பொறுத்திருக்கப் போவதில்லை. சிறீரங்கம் திராவிடர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவிப் பினைக் கொடுத்து விட்டார்.

ஜூன் மாதத்தில் போராட்டம் தொடங்கப் படும். முடிவு தெரியும்வரை ஓயப் போவதில்லை.

களம் காண கருஞ்சட்டைப் பட்டாளமே தயாராக இரு! இரு!!

                       -----------------------”விடுதலை” தலையங்கம் 08-04-2013

20 comments:

தமிழ் ஓவியா said...

தமிழக மீனவர் பிரச்சினை: எப்போதுதான் விடிவு?
கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலியர்களிடம் காட்டிய வேகத்தில் நூறில் ஒரு பங்கை தமிழக மீனவர்களுக்காகக் காட்டக்கூடாதா?
இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை!
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

கேரள மீனவர்கள் இருவரை இத்தாலிய மாலுமிகள் இருவர் சுட்டுக் கொன்ற பிரச் சினையில் இந்திய அரசு காட்டிய வேகத்தில் நூறில் ஒரு பங்கை தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்லும் விடயத்தில் இந்திய அரசு காட்ட கூடாதா என்ற நியாயமான - அர்த்தமுள்ள வினாவை எழுப்பிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இலங்கையை நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டு இருப்பது சரியானதுதானா? என்ற வினாவையும் எழுப்பியுள்ளார் - இந்தியாவுக் கான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை என்றும் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் உள்ள மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலையே செய்ய முடியாத அளவுக்கு இலங்கைக் கடற்படை, இலங்கை சிங்கள அரசு நாள்தோறும், தமிழக மீனவர்கள் - இராமேசுவரம், காரைக்கால், நாகை போன்ற பல துறைமுகங்களிலிருந்து சென்று மீன்பிடிப்பவர்களைத் தாக்குவது, வலைகளை அறுப்பது, பறிமுதல் செய்வது, கைது செய்து பல நாள் இலங்கை சிறையில் அடைப்பது என்பது வாடிக்கையாக நடைபெறும் ஒன்றாகி விட்டது! இராஜபக்சே அரசின் கொடுஞ்செயல்கள் பட்டியலிடப்பட முடியாத அளவுக்குப் பெருகி விட்டன!!

இதற்குப் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்காமல், ஏதோ சடங்காச் சாரமான சம்பிரதாய கண்டனங்கள் - கவலை கொள்ளு கிறோம் என்ற மொழியில், இலங்கை அரசுக்குத் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்காமல் பாம்புக் கும் நோகாமல், பாம்படித்த கோலுக்கும் நோகாமல் செய்து கொண்டிருக்கின்றன. தமிழன் என்றால் அவ்வளவு இளக்காரம்?

கடிதம் எழுதினால் போதுமா?

இதைவிட வெட்கக்கேடான விஷயம் வேறு உண்டா? முன்பெல்லாம் திமுக ஆட்சியில், பிரதமருக்கு தமிழக முதல் அமைச்சர் (கலைஞர்) கடிதம் எழுதியதைச் சுட்டிக் காட்டி நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய தமிழக முதல்வர் என்ன சொன்னார்?

வெறும் கடிதம் எழுதி விட்டால் போதுமா? மேல் தொடர் நடவடிக்கை என்னவென்று பார்க்க வேண் டாமா? என்று விமர்சனம் செய்யத் தவறவில்லை; இன்றைக்குமட்டும் இங்கே மீனவர் பிரச்சினையானாலும் வேறு முக்கியப் பிரச்சினையானாலும் இதேபோல் கடிதங்கள் தானே எழுதப்படுகின்றன?

இது எவ்வகையில் மாற்றமான அணுகுமுறையாகும்? மக்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள மீனவ சகோதரர்கள் கேட்க மாட்டார்களா?

கேரள மீனவர்களுக்கு வேறொரு நீதியா?

கேரள மீனவர்கள் இருவர் இத்தாலியக் கப்பல் மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை குற்றமாக்கி, அவர்களைக் கைது செய்து, அவ்விருவரும், நீதிமன்ற பிணையில் விடுத்ததையொட்டி, இங்கே வழக்கு விசாரணைக்காக இத்தாலியிலிருந்து திரும்பி வராமல் சண்டித்தனத்தை அந்நாட்டு அரசு உதவியுடன் செய்த போது, கேரள முதல்வர் வற்புறுத்தியதால் இத்தாலியத் தூதுவரை, இந்தியாவின் வெளி உறவுத்துறை அழைத்து எச்சரிக்கை செய்து, கைது செய்வதாக அறிவிக்கப் பட்டது.

அவரது பாஸ்போர்ட் பறிமுதல் அறிவிப்பு வரை செய்த பிறகே இத்தாலிய மாலுமிகளான குற்றவாளிகள் திரும்பி இங்கே அனுப்பப்பட்டனர்.

அதில் நூறில் ஒரு பங்கு வேகத்தைக்கூட தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசும், பிரதமரும் வெளி உறவுத் துறையும் காட்டுகிறதா? கலைஞர் போன்ற பொறுப்புள்ள மூத்த அரசியல் தலைவர்கள் சுட்டிக் காட்டியும், இந்திய அரசும் தனது மெத்தனப் போக்கை விடுவதில்லை.

இன்னமும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் இராமேசுவர- நாகை (தமிழக) மீனவர்கள். இதற்கு ஒரு விடிவே இல்லையா?

எங்களுக்கு ஒரு முடிவே கிடையாதா? எங்களுக்கு அரசுகள் விஷம் வாங்கி தந்து விட்டால் அத்தனைப் பேரும் குடித்து மாளுவோம் என்று வேதனைத் தீயில் வெந்து கருகி விரக்தியில் உருகி இரத்தக் கண்ணீர் விடுகிறார்களே மீனவத் தோழர்கள் - தலைவர்கள் தாங்கள் அளிக்கும் பேட்டியில்.

இதற்கு எப்போது தான் விடியல்? இப்படியே போனால் அவரவர்களே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்படாதா?

வெளியுறவுத்துறைக் கொள்கையில் மாற்றம் தேவை!

மத்திய அரசின் கேளாக்காது, மெத்தனம் மாற வேண்டும். வெளியுறவுக் கொள்கை மறுபரிசீனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
எமது மக்களை அங்கும் இங்கும் அழிக்கும் படலம் நாளும் தொடரும் நிலையில், இலங்கையை இந்தியாவின் நட்பு நாடு என்று சொல்வது, வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது, நொந்த உள்ளத்தை நொறுங்கச் செய்வதாக ஆகாதா?

எனவே கடும் நடவடிக்கை இலங்கைக்கு எதிராக அவசரத் தேவை!

சென்னை
8.4.2013

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

கலைமகள்


பெரியார் விருதுடன் சீன தமிழ் வானொலித் தலைவர் கலைமகள் (எ) ஸாவோ ஜியாங்.

சீன - தமிழ் வானொலி(CRI-Tamil)யின் தலைவர் கலைமகள் (ஸாவோ ஜியாங்) அவர்களுக்கு அவர் ஆற்றிவரும் தமிழ்ப் பணியைப் பாராட்டி, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் பெரியார் விருது அறிவிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 26ஆம் நாள் நடைபெற்ற திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் விருது வழங்கப்பட்டது.

அப்போது விழாவில் நேரடியாகப் பங்கேற்க இயலாமையால், அவருக்குரிய விருது சீன - தமிழ் வானொலி அலுவலகத்தில் கடந்த வாரம் (மார்ச் மாத இறுதியில்) நேரில் வழங்கப்பட்டது.

பெரியார் விருதைப் பெற்றுக் கொண்ட கலை மகள் (ஸாவோ ஜியாங்) பெரு மகிழ்வு தெரிவித்தார். தமிழர் தலைவர் கி.வீ

தமிழ் ஓவியா said...


பிரதமர் பதவியா? கனவு காண்கிறாரா மோடி! மத்திய அமைச்சர் கபில்சிபல்

புதுடில்லி, ஏப். 8- மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இந்த நிலை யில் பிரதமர் பதவி பற்றிய விவாதம் வலுத்து வருகிறது. காங்கிரஸ் சார்பில் பிரதமர் பத விக்கு வேட்பாளர் அறிவிக்கப்படப் போவ தில்லை என தெரிவிக் கப்பட்டுள்ளது. காங் கிரஸ் தலைவர் சோனி யாகாந்தி, பிரதமர் மன் மோகன்சிங் ஆகியோ ரின் தலைமையில் நாடா ளுமன்ற தேர்தலை சந்திக்கப்போவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

முக்கிய எதிர்க் கட் சியான பாரதீய ஜனதா கட்சி சார்பில், பிரதமர் பதவிக்கு குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி முன்னிலைப் படுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. நாட்டுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் என்று கூறி, பிரதமர் பதவி மீதான தன் ஆசையை நரேந்திரமோடி மறை முகமாக வெளிப்படுத்தி யுள்ளார். ஆனால் நரேந் திரமோடியின் பிரதமர் பதவி ஆசையை, காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலை வர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான கபில் சிபல் கூறும் போது, நரேந்திரமோ டிக்கு டில்லி (பிரதமர் பதவி) இன்னும் எட் டாக்கனவாகத்தான் உள்ளது. தேசிய அரசியலுக்கு வர விரும்புகிற வர்களுக்கு இரண்டு அம்சங்கள் தேவை. ஒன்று, அவர்கள் அர்த்த முள்ள பேச்சைப்பேச வேண்டும். இரண்டாவது, டில்லிக்கு வருவதில் மிகவும் அவசரம் காட்டக்கூடாது என்றார்.

இதே போன்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மத்திய அமைச்சரு மான மணீஷ் திவாரியும் நரேந்திர மோடியை வீண் வீரம் பேசும் தீவிர வாதி என ஒரு சமூக வலைத் தளத்தில் சாடி இருக் கிறார். மற்றொரு மத்திய அமைச்சரான ராஜீவ் சுக்லா, மோடி பாரத மாதா பற்றி பேசுகிறார். பாரத மாதாவுக்காக சுதந்திர போராட்டத் தில் எந்தவொரு பாரதீய ஜனதா தலைவரும் ஈடு பட்டதாக நான் கருத வில்லை. பாரத மாதாவுக்கு தியா கங்கள் செய்வது எப்படி என்பதை மோடி முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறினார்.

டில்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித்தும் நரேந்திரமோடியை விட்டு வைக்கவில்லை. மோடி குறித்து நேற்று அவர் கூறும்போது, ராகுல் காந்தியையும், நரேந்திரமோடியையும் ஒப்பிடக்கூடாது. ஒருவர் (ராகுல் காந்தி) மதச் சார்ப்பற்ற தலைவர். மற் றொருவர் (மோடி) மதவாத தலைவர். இவர் (மோடி) இயற்கையிலேயே ஒரு சர்வாதிகாரத் தலைவர். அவரை கணிப்பது கடினமான ஒன்று. இவர் இந்தியாவை பிரதிபலிப்பதாக நான் கருதவில்லை என்றார்.

தமிழ் ஓவியா said...


பொருளல்ல...

மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.

(விடுதலை, 10.6.1970)

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்களையும், கேரள மீனவர்களையும் பாகுபடுத்திப் பார்ப்பது ஏன்? கலைஞர் எழுப்பும் வினா

சென்னை, ஏப்.8- கேரள மாநில மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் பாகுபடுத்திப் பார்ப்பது ஏன் என்ற வினாவை எழுப்பியுள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

இது குறித்து முரசொலியில் இன்று அவர் எழுதியிருப்பதாவது:

கேள்வி: தமிழகக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 51 மீனவர் களை சிங்களக் கடற்படையினர் சிறைப் பிடித்துச் சென்று விட்டார்களே?

கலைஞர்: ராமேஸ்வரம் பகுதியி லிருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று நேற்று மாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்துப் படகில் வந்த சிங்களக் கடற்படையினர், மீனவர்கள் 25 பேரைச் சிறைப் பிடித்துப் படகுகளுடன் இலங்கைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதைப் போலவே, புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சிங்களக் கடற் படையினர், மீன்பிடிப்படகுகள் அய்ந்தை யும், அவற்றில் இருந்த 26 மீனவர் களையும் சிறைப்பிடித்து இலங்கைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இலங்கைக் கடற்படையினர், தமிழகக் கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, சிறைப்பிடித்து இலங்கைக் குக் கொண்டு செல்லும் நிகழ்வுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இலங்கைக் கடற்படையின் இத்தகைய கடுமையான அணுகுமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது.

கேரள மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொலை செய்த இரண்டு இத்தாலிக் கடற்படையினர் குறித்து அகில இந்திய அளவில் பல்வேறு நிலைகளில் விவா தித்து, வேகமும் விறுவிறுப்பும் காட்டும் மத்திய அரசு; தமிழக மீனவர்களை, தொடர்ந்து பல்வேறு வகையான கொடுமைகளுக்கும் துயரங்களுக்கும் ஆளாக்கி வரும் இலங்கைக் கடற் படையினரிடம் மென்மையான அணுகு முறையைக் கடைப்பிடிப்பது வேதனை அளிக்கிறது.

கேரள மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வில், கேரள முதல்வர் திரு. உம்மன்சாண்டி மேற் கொண்ட தீவிரமான நடவடிக்கையைப் போலவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக மீனவர்களைக் காப்பாற்று வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதும்; கேரள மீனவர்களையும் தமிழக மீனவர்களையும் பாகுபடுத்திப் பார்க்காமல் நியாயமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதும்; தவறல்லவே?

தமிழ் ஓவியா said...

நீதியரசர் பி.எஸ். சோமசுந்தரம் நூற்றாண்டு விழா:பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் அறக்கட்டளை தமிழர் தலைவர் அறிவிப்பு


நீதியரசர் பி.எஸ். சோமசுந்தரம் படத்தினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன் மத்திய அமைச்சர், நீதியரசர், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (7.4.2013)

சென்னை, ஏப்.8- மறைந்த நீதியரசர் பி.எஸ். சோமசுந்தரம் அவர்களின் நினைவைப் போற் றும் வண்ணம், தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மைப் பல் கலைக் கழகத்தில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, நீதியரசரின் நினைவினைப் போற்றும் வண் ணம் மாணவர்களுக்குச் சிறப்பு உதவி செய்யப்படும் என்று அறி வித்தார் பல்கலைக் கழக வேந் தரும், திராவிடர் கழகத் தலைவரு மான கி.வீரமணி அவர்கள்.

நீதியரசர் பி.எஸ். சோமசுந்தரம் நூற்றாண்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் (7.4.2013) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பி.எஸ். சோம சுந்தரம் அவர்களின் உருவ ஓவியத் தினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். நூற்றாண்டு விழா மலரை, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் வெளியிட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் பெற்றுக் கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு மறைந்த நீதியரசர் பிஎஸ்எஸ் அவர்களின் குடும்பத்தினர் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினர். தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டியின் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் வரவேற்புரையாற்றினார். உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதியும், நீதியரசர் பிஎஸ்எஸ் அவர்களின் நண்ப ருமான நீதிபதி மோகன் நினைவுரை வழங்கினார்.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் உரைக்குப் பின்னர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நினைவு உரையாற்றினார். முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், மத்திய அரசின் அடிசனல் சொலிசிடர் வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி ஆகி யோரின் நினைவு உரைக்கு பின்னர் அய்.ஓ.பி. வங்கியின் முன்னாள் அதிகாரி ஏ. நவசிவாயம் நன்றி கூறினார்.

அமைச்சர் ஜி.கே. வாசன்

அமைச்சர் வாசன் தமது உரையில் நீதியரசர் பி.எஸ். சோமசுந்தரம் நாவன்மைமிக்க வழக்குரை ஞர், சிறந்த நீதிபதி. அவர் நேர்மைத் திறனுடன் வழங்கிய தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்ட கருத்துகள் இன்றும் பல தீர்ப்புகளில் எடுத்தாளப்படுகின்றன.

தமிழ் ஓவியா said...

சட்டத்தின் மேன்மையைப் புரிந்து கொண்டு, நேர்மையுடனும், மனிதாபிமானத்துடனும் வாழ அவரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத் தின்போது உறுதி எடுத்துக் கொள்வோம் என்றார். தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன் பேசுகையில், அண்ணா மலைப் பல்கலைக்கழக துணைவேந்தராக சோம சுந்தரம் பணியாற்றியது இரண்டே ஆண்டுகள்தான்.

அவரின் பணிகள் 2,000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். அவருடைய காலத்தில் மருத்துவக் கல்வி, சட்டக் கல்வி, மாலை நேரப் பொறியியல் கல்வி, திறந்தவெளி பல்கலைக்கழக கல்வி, நூலக விரிவாக்கம், தமிழ்த்துறை விரிவாக்கம் என பல்வேறுபட்ட தளங்களில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கிளை பரப்பியது'' என்றார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவிப்பு

தமிழர் தலைவர் கி.வீரமணி தமதுரையில் இங்கே பிஎஸ்எஸ் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று சுருக்கங்கள் படமாக காண்பித்தார்கள். அதிலே தந்தை பெரியாருடன் உள்ள படம் வரவில்லை; தந்தை பெரியாரிடத்திலே மிகுந்த அன்பு கொண்ட வராக இருந்த பிஎஸ்எஸ், அய்யா அவர்களை சந்தித்து பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றிருந்தாலும் நம்முடைய இன உணர் வாளர்கள் உயர்ந்த பொறுப்பிலே உள்ளவர்கள் சந்திக்கும்போது அய்யா அவர்கள் நிழற்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் கூறுவார்.

ஜஸ்டிஸ் பிஎஸ்எஸ் அவர்களிடத்திலே எந்த அளவிற்கு அய்யா அவர்கள் நெருக்கமாக இருந்தாரோ அந்த அளவிற்கு அவருடைய மகன் டாக்டர் அய்யப்பன் எங்களிடத்திலே அன்போடு நெருக்கமாக இருக்க கூடியவர். ஜஸ்டிஸ் பிஎஸ்எஸ் அவர்கள் நேர்மையான நீதிபதியாக பணியாற்றியவர் அவரது நினைவை போற்றும் வகையில் அவருக்கு சிறப்பு செய்ய வேண்டும்.

அந்த வகையில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நூற்றாண்டு விழா நாயகர் பி.எஸ். சோமசுந்தரம் அவர்களின் நினைவை போற்றும் வகையில் அவரது பெயரில் ஓர் அறக் கட்டளை தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் மாண வர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும். அதற்காக திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ.25,000 நன்கொடை வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி., (நீதிபதி பி.எஸ். சோமசுந்தரம் அவர்களின் தம்பி மகன்) பிஎஸ்எஸ் மருத்துவமனை மருத்துவர் அய்யப்பன் குடும்பத்தினர் சார்பில் ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் மேலும் எங்களது உறவினர்கள் சார்பில் சேர்த்து ஒரு பெரிய தொகை வழங்குவோம் எனவும் பலத்த கரவொலிக் கிடையே அறிவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பீட்டர் அல்போன்ஸ் (காங் கிரஸ்), டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன், முன் னாள் நீதிபதிகள் பு. இரா. கோகுல கிருட்டிணன், பாஸ்கரன், வள்ளிநாயகம், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் திடல் மேலாளர் ப. சீத்தாராமன், இரா. வில்வநாதன், செ.ர. பார்த்தசாரதி, மயிலை சேதுராமன், கோ.வி. இரா கவன் மற்றும் பல்வேறு இயக்கத்தை சார்ந்தோரும் பிரபல மருத்துவர்களும், பிஎஸ்எஸ் மருத்துவமனை பணியாளர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


இராஜபாளையத்தை கழக பாளையமாக்குவோம் ஆயத்தமாவீர்! தஞ்சை கலந்துரையாடலில் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை


தஞ்சையில் 5.4.2013 நடைபெற்ற மண்டல இளைஞரணி மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் தஞ்சை நகர தி.க. அமைப்பாளர் வெ.இரவிக்குமார் அவர்கள் 10 அரையாண்டு சந்தா, ஓராண்டு சந்தா ஒன்று மொத்தம் 11 விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ. 7200 வழங்கினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.

தஞ்சாவூர் ஏப்ரல் 8- மே 4ஆம் தேதி இராஜபாளையத்தில் நடத்தப்பட இருக்கும் இளைஞ ரணி மாநில மாநாட்டின் மூலம் இராஜபாளையம், கழக பாளையமாக மாறப்போகிறது என்றார் கழகத் துணைத்தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன்.

இராஜபாளையம் மாநாடு மே 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இராஜபாளையம் கருஞ்சட்டைப் பாளையமாக மாறும் என திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கூறினார்.

தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி கலந்துரையா டல் கூட்டம் ஏப்ரல் 5ஆம் தேதி தஞ்சாவூர் பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக் குத் தலைமையேற்று கலி.பூங் குன்றன் பேசியதாவது.

இராஜபாளையம் மாநாட் டில் நடைபெறும் இளைஞ ரணி அணிவகுப்பில் தஞ்சை மாவட்டம் முதல் பரிசைப் பெறவேண்டும் என ஆவலாக இருக்கின்றீர்கள். இராஜபா ளையம் கருஞ்சட்டைப் பாளை யமாக மாறப்போகும் அளவிற்கு தமிழ்நாடு முழுக்க விளம்பரங் கள் செய்யப்பட்டுள்ளன. இம் மாநாடு மிகப்பெரிய வெற்றி யைப் பெறும் என்பதற்கான கூறுகள் தெளிவாகத் தெரி கின்றன.

நம்மால் முடியும்

இங்கே பேசிய சில இளைஞ ரணித் தோழர்கள் இம்மாநாட் டிற்கு என்னால் முடிந்தவரை ஒத்துழைப்பேன் என்றார்கள், முடிந்தவரை என்ற சொல்லை நாம் பயன்படுத்தக்கூடாது, முடியும் என்றே நாம் சொல்ல வேண்டும். மாநாட்டிற்கு சீருடை, கொடிகள், காலணி ஆகியவற் றுடன் தயாராய் இருங்கள்.

இந்த ஆண்டு இயக்க வேலை களைக் கணக்கிட்டுப் பார்த் தால் நாமே அசந்து போவோம். அந்தளவிற்கு இயக்கம் இயங்கி வருகிறது. தோழர்களும் உயி ரோட்டமாய் இருந்து ஈடு கொடுக்கிறார்கள். இதைக் காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் நமது இயக்கத்தில் இளைஞர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது. கட்டமைப்புகளும், கழக வெளியீடுகளும் மெருகேறி வரு கின்றன.

அன்றைக்கு ஒரே தஞ்சை மாவட்டமாக இருந்தது. இன்றைக்கு 7 மாவட்டங்களாக விரிந்துள்ளது. இது ஒரு பெரிய வளர்ச்சி ஆகும். முன்பு தஞ்சை மாவட்டத்தைச் சுற்றிவர 5 நாள்கள் தேவைப்படும். இன்றைக் குத் தனியாகப் பிரிக்கப்பட்டு பணிகள் செய்திட எளிதாக விஞ்ஞான பூர்வமான முறை யில் தமிழர் தலைவர் அவர்கள் உருவாக்கியுள்ளார்.

தமிழர்கள் மத்தியில் கழகம்

பல லட்சம் பேர் திராவிடர் கழகத்தில் நேரடி உறுப்பினர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் திராவிடர் கழகம் குறித்து தமி ழர்கள் நல்ல மதிப்பு வைத்திருக் கிறார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவர தொடர்ந்து நாம் பாடுபட்டு வருகிறோம். அந் நிலை வந்தால் சமூகம் மாறும், மக்கள் மனதில் புரட்சி ஏற்படும். சமூக நீதியில் எப்படி தமிழ்நாடு வழிகாட்டியோ அதனால் இந்தியாவே பயன் பெறுகிறதோ, அதேபோல அனைத்து ஜாதியினரும் அர்ச் சகர் என்ற நிலை வந்தால் இந் தியாவின் சனாதன கோட்டை கள் தூள் தூளாகிப் போகும்!.

தமிழ்நாட்டு மாணவர்கள் விட்டில் பூச்சிகள், ரசிகர் மன் றங்களை நோக்கியே போவார் கள் என்ற எண்ணத்தையெல் லாம் போக்கி, பிரச்சினை என வந்தால் நாங்கள் பெரியாரின் மாணவர்கள் என நிரூபிப்போம் என களத்திற்கு வருகிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள் குறித்து நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.

அரசியல் கட்சிகள் தேர்தல் குறித்து கவலைப்படும். நாம் சமூகம் குறித்துக் கவலைப்படு கிறோம். இன்றைக்கு மன்றல் எனும் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரும் தாக்கத்தைத் தமிழ் நாட்டில் ஏற்படுத்தியுள்ளோம். அதேபோல ஆசிரியர் பணி யிடங்களில் இடஒதுக்கீடு முற் றிலுமாகப் பின்பற்றாததை நாம் கண்டுபிடித்து அதன் தீர்வு நோக்கி சிந்தித்து வருகிறோம்.

பெரியார் திடலில் புத்தகக் கண்காட்சி

ஏப்ரல் 18 தொடங்கி 27 வரை உலக புத்தக நாளை யொட்டி பெரியார் திடலில் புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. பொதுச்செயலா ளர் வீ.அன்புராஜ் வேகமாகப் பணிகளைச் செய்து வருகிறார். இந்த 2013 மிகப்பெரிய வேலைத் திட்டம் கொண்ட ஆண்டாக அலை அலையான பிரச்சாரம் கொண்டதாக இருக்கிறது. 24 மணி நேரமும் தூங்காத கடிகா ரம் போல நம் தோழர்கள் விழிப்புடன் பணியாற்றி வரு கிறார்கள் என கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் பேசினார்.

இராஜபாளையத்தை கழக பாளையமாக்குவோம் வாரீர் என்று குறிப்பிட்டுள்ளார் கழ கத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.

தமிழ் ஓவியா said...


ரிலையன்ஸ் மூலமாக பணம் பறிக்கும் தந்திரம்!



தமிழர்களே, தமிழர்களே கவனியுங்கள்! கவனியுங்கள்!!

பார்ப்பனீயத்தை வளர்க்க சங்கராச்சாரியார்

ரிலையன்ஸ் மூலமாக பணம் பறிக்கும் தந்திரம்!


சென்னை, ஏப்.9- பார்ப்பனீயத்தை வளர்க்க வேத பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ரிலையன்ஸ் முதலாளிகளின் கூட்டுச் சதியோடு காஞ்சி சங்கரமடம் எப்படி எல்லாம் வலை பின்னுகிறது என்பதைத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

1966ஆம் ஆண்டு சமயத்தில் முன்னாள் சங்கராச் சாரியார் ஒரு பிடி அரிசித் திட்டத்தை அறிமுகப்படுத் தினார். அதன்படி குடும்பத் தலைவிகள், சங்கராச்சாரியாரின் அறக் கட்டளைத் தொண்டர்கள் தங்களை அணுகும்போது நாள்தோறும் ஒரு பிடி அரிசி கொடுத்து வந்தனர். இவ்வாறு பெறப்பட்ட அரிசியும் மற்ற தானியங்களும் அருகில் உள்ள கோயில்களில் சமைக்கப்பட்டு, ஏழைகளுக்கும், தேவைப்படும் தகுதி படைத்த மாணவர் களுக்கும் பிரசாதமாகக் கொடுக்கப்பட்டு வந்தது.

அந்த திட்டத்தைத் தொடர்ந்து காஞ்சி மகாசுவாமி வித்யாமந்திரர் சங்கரா அட்டை என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது.

அதன்படி நீங்கள் அருகில் உள்ள ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில்(Fresh Stores)
பொருள்கள் வாங்கும் போது, அதற்குண்டான விலையுடன், ஒரு விழுக்காடு அதிகமாகக் கொடுக்க வேண்டும். மாத இறுதியில் இவ்வாறு பலரிடமும் பெறப்படும் ஒரு விழுக்காடு பணத்துக்குரிய பொருள்கள் காஞ்சி மகா சங்கரமட வித்யா மந்திருக்கு அனுப்பப்படும். இந்த செயலின் விளைவாய், வேதம் படிக்கும் மாணவர்களுக்கான நிதி தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.

(அதாவது தகுதி பெற்ற பார்ப்பனருக்கே கிடைக்கும்)

தகுதி பெற்ற ஒரு ஏழை வேதம் படிக்கும் (பார்ப்பனருக்கே) மாணவர் ஒரு பயனுள்ள கல்வியைப் பெறுவதற்கு உதவிய திருப்தியும் உங்களுக்குக் கிடைப்பதுடன் காஞ்சி சங்கராச்சாரியாரின் ஒருபிடி அரிசித் திட்டத்தில் இணைந்து கொண்டாலும் கிட்டும். மேலும் சங்கரா அட்டை வைத்து இருப்ப வர்களுக்கு, இத்திட்டத்தை ஆதரிக்கும் நிறுவனங்களிடமிருந்து விலை தள்ளுபடியும் மற்ற சலுகைகளும் கிடைக்கும். அதுபற்றிய விவரங்கள் அவ்வப்பொழுது தெரிவிக்கப்படும்.

நீங்கள் கொடுப்பது ஒரு விழுக்காடுதான். ஆனால் நூறு விழுக்காடு நிறைவுகிட்டும்.

எப்படி சங்கரா அட்டை உறுப்பினராவது?

சங்கரா அட்டை உறுப்பினராவதற்கான விண்ணப்பத் தாள், இணையதளத்தில் *(அந்த முகவரியை நாம் ஏன் வெளியிடுவானேன்?) அல்லது ஏதாவது ஒரு ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடையிலோ விண்ணப்பத்தை வாங்கி, நிறைவு செய்து அத்துடன் ரூ.101-க்கான காசோலை யும் சேர்த்து மேலே குறிப்பிட்ட இடங்களிலோ, கீழ்க்காணும் முகவ ரிக்கோ அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. பார்ப்பனர்களின் நரித் தந்திரத்தைப் பார்த்தீர்களா?

எப்படி எப்படி யெல்லாம் பார்ப்பனீயத்தை வளர்க்கிறார்கள் - முதலாளிகளின் கூட்டோடு? பார்ப்பனர் அல்லாதார் புரிந்து கொள்ள வேண்டாமா?

(பல முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன அதை நாம் வெளியிடத் தேவையில்லை).

தமிழ் ஓவியா said...


வெற்றி பெறக் கற்றுக் கொள்ளுவோம் (1)

தமிழ் ஏடுகள் பலவும் சினிமா - பயனற்ற பல வகைக் கேளிக்கை பொழுது போக்குகள் - இவைபற்றியே விளம்பரப்படுத்தி இளைஞர்களின் உணர்ச்சிகளுக்குத் தீனி போட்டு, தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்காகவே நடத்தப்படுபவை ஆகும்!

மக்களின் வாழ்க்கையைச் செப்பனிட்டு, செம்மைப்படுத்தி, குறிக்கோளை அடைந்தால் மட்டும் போதாது; அதை அடையும் வழியும் முறையும் நேர்மையானதாகவே இருக்க வேண் டும் என்று வலியுறுத்தும் வாழ்வியல் ஏடுகள் வெகு சிலவே தமிழ்நாட்டில் உள்ளன.

அவற்றில் ஒன்று நண்பர் ஜெயகிருஷ்ணன் அவர்களின் வளர் தொழில் ஏடு ஆகும்.

ஊக்கமும், முயற்சியும், உழைப்பும் எவரையும் முன்னேற்றுவது உறுதி. அப்படி விரும்புவோருக்கு தொழில் உலகில் வழிகாட்டும் ஏடாக உள்ளது இந்த வளர்தொழில் ஏடு அதன் ஆசிரியர் - நிறுவனர் ஜெயகிருஷ்ணன் அவர்கள் உழைப்பால் உயர்ந்த, உயரும் உண்மையான பெருமகன் ஆவார்!

இந்த இதழில் (ஏப்ரல், 2013இல்) உலகப் புகழ் பெற்ற ஊக்கமூட்டும் எழுத்தாளரான திரு. ஜேக்கேன்ஃபீல்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் சென்னை வந்திருந்தபோது ஒரு கருத்தரங்கில் பேசிய பின் அவரோடு தனியே பேசிக் கொண்டிருந்தபோது, அவர் பகிர்ந்து கொண்ட சிந்தனைகள்:

நாள்தோறும் அய்ந்து செயல்கள், இலக்கை அடைவீர்கள் என்ற தலைப்பில் தலையங்கமாகவே எழுதியுள்ள சுவையான கருத்துக் கோவை படித்தேன். சுவைத்தேன்.

உங்களுடன் பகிர்ந்து கொள்ளுமுன் அந்த பிரபல எழுத்தாளரான திரு. ஜேக் கேன் ஃபீல்ட், சிக்கன், "சூப் ஃபார் சோல்" Chicken soup for soul’ என்ற வரிசையில் 225 சிக்கன் சூப் தொகுதிகள் (நூல்கள்) பல்வேறு வயதினர் பல்வேறு நிலையினர் அனைவருக்கும் அவரவர்களுக்குப் பயன்படும் வகையில் ஊக்கமூட்டும் அனுபவ அறிவுரைத் தொகுப்புக்களா கவே அவை அமைந்துள்ளவைகளாகும்!

ஒவ்வொரு தொகுதியும் இப்போது பல்வேறு பதிப்புக்களை பல்வேறு மொழிகளில் - 47 மொழிகளில் 50 கோடி மக்கள் இப்புத்தங்களைப் படிக்கும் வகையில் எழுதி பிரபலமாகியுள்ளார் இவர்.

இதன் துவக்கம் - இவரது முயற்சி முதலில் தோல்விகள் - அடுக்கடுக்கான தோல்விகள் என்பவைகளே அடிப் பீடங்களாகி, அதனைத் தாண்டி மேல் ஏறியே வெற்றியின் உச்சத்திற்கு இவர் சென்றுள்ளார்.

முதல் புத்தகம் (சிக்கன் சூப்) எழுதிய நிலையில் 144 புதிய பதிப்பாளர்களை சென்று பார்த்து அவர்களில் எவரும் அச்சிட முன் வரவில்லை. என்றாலும் இவரே சொந்த முயற்சி செய்து அச்சிட்டு, 3 ஆண்டுகள் அதனை விற்கச் சிரமப்பட்டுள்ளார்!

என்றாலும் இவரது தளரா முயற்சி - விடா முயற்சி - கடும் உழைப்பு - நன்னம்பிக்கை - இவருக்கு வெற்றியை அழைத்து வந்து முன்னே நிறுத்தி விட்டது போலும்!

இன்னொரு சுவையான விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டும்கூட வளர்தொழிலில் சுட்டிக் காட்டப்பட் டுள்ளது!

உலகின் சுவை மிகுந்த கோழி இறைச்சி உணவான (KFC) கே.எஃப்.சியை அறிமுகப்படுத்த கெண்ட்டகி (Kentahey)அவர்கள் 1100 உணவகங்களைப் போய் பார்த்து தோல்வி அடைந்தார்! எல்லோரும் அன்று இவரது கெண்ட்டகி சிக்கனைப் புறக்கணித்தனர்.

இன்று..? அமெரிக்காவில் மட்டும் 5100 (உலகெங்கும் பற்பல நாடுகளில் - ஏன் நம் சென்னையிலும் இளைஞர் களை ஈர்த்ததாகி விட்டதே சிக்கன் சூப் புத்தக ஆசிரியர். கூறிய 5 செயல்கள் பற்றிக் கூறுமுன் அவ்வறிஞர் கூறிய ஒரு முக்கிய கருத்து கல்வியாளர்களின் கேளாக் காது பாராமுகங்களுக்கு எட்ட வேண்டும். இந்தியாவில் மொழியைக் கற்றுத் தருகிறார்கள்; வரலாற்றைக் கற்றுத் தருகிறார்கள்; அறிவியலைக் கற்றுத் தருகிறார்கள். ஆனால் வெற்றிக்கான வழிமுறைகளைக் கற்றுத் தருவ தில்லை. அதைச் சொல்லித் தரத்தான், நான் இங்கே வந்திருக்கிறேன் என்று துவங்கிய அவர்தந்த அறிவுரைகளை நாளை பார்ப்போமா?

- கி.வீரமணி

- (நாளை தொடர்ச்சி)

தமிழ் ஓவியா said...


சிறிதும் இராது


பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்கவேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மைபற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர்பற்றியோ கவலை சிறிதும் இராது.
(விடுதலை, 10.6.1968)

தமிழ் ஓவியா said...


சுனிதா வில்லியம்ஸ்


அமெரிக்காவில் வாழும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லி யம்ஸ் விண்வெளியில் அதிக நேரம் பயணம் செய்த பெண்மணி என்ற புகழுக் குரியவர் - இருமுறை பயணித்தவர்.

பெண்ணால் எதனை யும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர்.

ருசிய பெண் வாலண் டினா விண்வெளி சென்று வியக்க வைத்தார் அன்று.

சுனிதா வில்லியம்ஸின் தந்தையார் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் - தாயாரோ அய் ரோப்பாவின் சுலோவேனி யாவைச் சேர்ந்தவர்.

இந்து மதமும், கிறித் துவ மதமும் இணைந்த குடும்பத்திற்குச் சொந்தக் காரர் - அதனால்தானோ என்னவோ சுனிதா வில்லி யம்ஸ் விண்வெளிக்குச் சென்றபோது கீதையையும், உபநிஷத்துக்களையும் எடுத்துச் சென்றேன் என்று கூறியுள்ளார்.

விண்வெளி தொடர் பான நுணுக்கங்கள் அவற் றில் நிரம்பி வழிகின்றன என்ற எண்ணத்தில் அவற்றை எடுத்துச் சென் றிருக்க முடியாது. இவற் றைப்பற்றிதான் உலகெங் கும் பறைசாற்றி வைத்துள் ளார்களே - அவற்றின் தாக்கமாக இருக்கக்கூடும்!

உண்மையைச் சொல்லப் போனால், கீதை பெண் களுக்கு உகந்த நூலே அல்ல.

பாவ யோனியில் பிறந்த வர்கள் பெண்கள் (கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32) என்று கூறுவதுதானே கீதை - அதைப்பற்றி சரி யாகத் தெரிந்திருந்தால் இந்த வீராங்கனை கீதை யைத் தீண்டியிருக்கவே மாட்டார்.

வான்வெளியில் பறந்த ராகேஷ்சர்மா என்ற இந் தியன் விண்வெளிக் கலத் தில் காலடி பதித்தபோது காயத்ரி மந்திரம் உச்சரித் தார் என்பதற்காக உச்சிக் குடுமி பார்ப்பன ஏடான தாம்பிராஸ் (மே 1962) ஒரு முறை பூணூலை இழுத்துப் பார்த்து சந்தோஷப்பட்ட துண்டு.

அவ்வளவு தூரம் போவானேன்? முதல் மனி தன் ககாரின் 1962 இல் விண்வெளி அகண்ட காஸ் மாசில் (Cosmos) சென் றதை விஞ்ஞானியான டாக்டர் சி.வி.இராமன் அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத் திற்கு மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிக மிகப் பாவம் என்று சொல்ல வில்லையா?

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் பெரும் பாலும் நாத்திகர்களாக இருந்தாலும், இதுபோன்ற இந்து சாயல் உடையவர்கள் அந்தச் சிறையிலிருந்து அறிவை விடுவித்துக் கொள்ளாதது இரங்கலுக் குரியதே!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


அடே, அப்படியா?


அரசியல்வாதிகளுக்குத் தான் பிரதமர் பதவிமீது ஆசை ஏற்படும். நான் அரசியல்வாதி அல்ல. அரசியல் ஆசைகள் இல்லாத சாதாரண மனிதன். எனவே, பிரதமராக வேண் டும் என்ற ஆசை எதுவும் எனக்கு இல்லை.

- கொல்கத்தாவில் நரேந்திர மோடி, 9.4.2013

தமிழ் ஓவியா said...


பாடம் போதிப்பார்கள் பெண்கள்!


பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திர மோடி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், அவர்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்ற தகவல் பரவலாகத் திட்டமிட்டு உரு வாக்கப்பட்டது. இதில் மோடியைப் பொறுத்தவரை தந்திரசாலி - இதுபோல் காய்களை நகர்த்துவதில் வல்லவர்.

பி.ஜே.பி.யின் பார்லிமெண்ட் குழுவில் இடம் பிடித்துவிட்டார். அத்வானியின் மனதில் பிரதமர் நாற்காலி எண்ணம் இருந்ததில் தவறு இல்லைதான். கட்சியின் மூத்த தலைவர், துணைப் பிரதமர்வரை எட்டிப் பிடித்தவர்.

கடந்த முறை பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுத் தேர்தலைச் சந்தித்த நேரத்தில் தோல்வியைத் தழுவிக் கொண்ட நிலையில், இந்த முறை மாற்று வேட்பாளரைத் தேடும் நிலைக்குப் பி.ஜே.பி. தள்ளப்பட்டு விட்டது.

தன்னை ஒதுக்கிவிட்டு மோடியை முன்னிறுத் தும் நிலையில், அத்வானி தன் மனக்கிலேசத் தையும் வெளிப்படுத்தத் தயங்கவில்லை. காங்கிரசைப் போல பி.ஜே.பி.யையும் மக்கள் அதிருப்தியுடன் பார்க்கத் தொடங்கிவிட்டனர் என்று குறிப்பிட்டதுடன் நிற்கவில்லை; இன்றைய பி.ஜே.பி.யின் செயல்பாடுகள் என் சிந்தனை களுக்கு ஒத்துப்போகவில்லை என்று பி.ஜே.பி. யின் 33 ஆம் ஆண்டு விழாவில் இந்தியாவின் தலைநகரில் முன்னணித் தலைவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே மனந்திறந்துள்ளார் அத்வானி.

அதே கூட்டத்தில் மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று கட்சியின் அகில இந்தியத் தலைவர் கூறியபோது, இல்லை இல்லை, அத்வானிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று டில்லி மாநில பி.ஜே.பி. தலைவர் விஜய்கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானும் தொடர்ந்து முதலமைச்சராக இருந்து வருபவர்தான். மோடிக்குக் கொடுக்கும் முக்கியத் துவம் அவருக்குக் கொடுக்கப்படாததும் - பார்லிமெண்ட் போர்டில் அவருக்கு இடம் அளிக்கப்படாததும் இன்னொரு பக்கத்தில் அதிருப்திப் புயல் மய்யம் கொண்டுதானிருக்கிறது.

போலி என்கவுண்டர் வழக்குகளில் சம்பந்தப் பட்ட - மோடியின் நெருங்கிய சகாவான அமித்ஷா (முன்னாள் அமைச்சரும்கூட) பி.ஜே.பி.யின் அகில இந்திய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார். இதுவும் கட்சியில் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார் மோடி என்றே சொல்ல வேண்டும்.

மக்கள் தொகையில் சரி பகுதி கொண்ட பெண்களின் வாக்குகளின்மீது குறி வைத்துள் ளார். பெண்களுக்காக, தானொன்றும் அதிகம் செய்திடவில்லை என்று தன்னடக்கத்துடன் கூறுவதுபோலக் கூறினாலும், உண்மையும் அதுதானே!

இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் குஜராத் 14 ஆம் இடத்தில்தானே இருக்கிறது. இந்நிலையில், பெண் கல்வியைப்பற்றிப் பேச என்ன இருக்கிறது?

குஜராத்தின் வளர்ச்சிபற்றி திட்டக் குழுவின் கணிப்பு என்ன? நுண்ணூட்டச் சத்துக் குறை பாட்டில் இன்னொரு சோமாலியா என்று கூறியுள்ளதே!

இது ஒருபுறம் இருக்கட்டும், மோடியின் அமைச்சரவையில் இருந்த ஒரு பெண் மாயா கோத்வானி, நரோடா பாடியா எனும் இடத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகளுக்குப் பொறுப்பானவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்துள்ளதே!

இவ்வளவுக்கும் அந்தப் பெண் ஒரு டாக்டர். கொலை செய்யப்பட்டவர்களோ 97 பேர் - அதுவும் குழந்தைகள் 35 பேர் - என்ன கொடுமை!

இந்த லட்சணத்தில் பெண்கள் முன்னேற்றத் தில் அக்கறை கொண்டதுபோல பசப்புகிறார் மோடி.

யார் முறியடித்தாலும், முறியடிக்காவிட்டாலும் இந்தியப் பெண்கள் முன்னின்று தோற்கடிக்கப்பட வேண்டியவர் நரேந்திர மோடிதான் - நினைவிருக் கட்டும்!

தமிழ் ஓவியா said...


செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)

தமிழ் ஓவியா said...


வெற்றி பெறக் கற்றுக் கொள்ளுவோம் (2)



சிக்கன் சூப் தொகுதிகள் எழுதிய ஊக்கமூட்டும் எழுத்தாளர் ஒரு கருத் தரங்கில் - பயிற்சி முகாமில் பேசியதை நேற்றைய கட்டுரையில் வளர்தொழில் ஏட்டிலிருந்து எடுத்துக் குறிப்பிட் டிருந்தேன்.

நாள்தோறும் நாம் அய்ந்து செயல்களில் விடாமுயற்சியுடன் ஈடுபட வேண்டும்; அப்படிச் செய்தால் நிச்சயம் நமது இலக்கை அடைய முடியும் என்று மிகுந்த தன்னம்பிக்கை ததும்பும் வகையில் அவர் பேசியிருக்கிறார்.

வெற்றி பெற விரும்பும் அனைவரும் முதலில் தங்களுடைய வெற்றிக்கு தாங்களே முழுப் பொறுப்பு என்பதை உணரவேண்டும். தாய், தந்தை பரிந் துரைப்பர்; உறவினர் கைகொடுப்பர் என்றெல்லாம் பிறரை நம்பி இருப்பதை விட நாமே சொந்தமாக முயற்சி செய்யவேண்டும்.

Event + Response = Out come என்ற ஃபார்முலாவைப் புரிந்துகொண் டால் உங்கள் பொறுப்புணர்வை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு நிகழ்வு (Event) நடைபெறுகிற போது, அதையொட்டி நீங்கள் மேற் கொள் கிற செயல்பாடே (Response) விளை வாக (Outcome) வெளிவருகிறது.

உலக நிகழ்வை யாராலும் மாற்ற முடியாது. ஆனால், விளைவை நீங்கள் மாற்ற விரும்பினால், உங்கள் செயல்பாடு களை மாற்றிக் கொள்ளவேண்டும்.

செயற்பாடுகளை நிர்ணயிப்பது மூன்று காரணிகள்தான்.

1. மனப்போக்கு (Behaviour) நடத்தை

2. எண்ணங்கள் (Thoughts)

3. மனதிற்குள் கற்பனை செய்து பார்த்தல் (Visualizing Images)

இந்த மூன்றும்தான் உங்கள் செயல்பாட்டைத் தீர்மானிக்கின்றன.

இந்த மூன்றையும் தெளிவாகப் புரிந்து கொண்டால் நீங்கள் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

முதலில் மனப்போக்கை எடுத்துக் கொள்வோம். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? அதை எப்படிச் சொல்ல விரும்புகிறீர்கள்? என்பது மிக முக்கியம்.

காலங்காலமாக நீங்கள் உங்களிடம் உள்ள பழக்கங்களையும், மனப்போக்கு களையும், திரும்பிப் பார்க்கவேண்டிய நேரம் இது.

எதையெல்லாம் முடியாது என்று எண்ணி இருந்தீர்களோ அதையெல்லாம் முடியும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு செயல்படத் தொடங்குங்கள். எதிர்மறைச் சிந்தனைகள் அனைத்தை யும் நேர்மறைச் சிந்தனைகளாக மாற்றிக் கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மனிதரும் நாள்தோறும் அதிகபட்சமாக தன்னைச் சுற்றி இருக்கக் கூடிய அய்ந்து பேரிடம் தான் அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்கள். அந்த அய்வரையும் உங்களைப் போன்ற வெற்றி ஆர்வலராக இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள்.

அயல்நாடுகளில் கார்களில் ஜி.பி.எஸ். என்ற கருவியைப் பொருத்தியிருப் பார்கள். நீங்கள் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமோ, அந்த முகவரியை அதில் பதிவு செய்துவிட்டால், அக்கருவி இடது பக்கம் செல், வலது பக்கம் செல், நேராகப் போ என கட்டளையிட்டுக் கொண்டே வரும். அதுபோன்றுதான் மனமும். இலக்கைக் கொடுத்துவிட்டால் வழியை நமக்கு அது காட்டும்.

சரி, இதனை எப்படிச் செயல்படுத்து வது? இதோ... அதற்கு நான்கு நிலை களை நான் சொல்கிறேன்.

முதல் நிலை:

உங்கள் இலக்கை வரையறை செய்யுங்கள் (Set Your Goal)

நீங்கள் எங்கே செல்லவேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்துக் கொள் ளுங்கள். அது ஒரு இலக்காகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. வெவ்வேறு வகையான தன்மை கொண்ட பல இலக்குகளாகக்கூட இருக்கலாம். இலக்கை நீங்கள் எப்போது அடைய விரும்புகிறீர்களோ, அதை தேதி மற்றும் நேரத்தோடு குறித்துக் கொள்ளுங்கள்.

இரண்டாவது நிலை:

இலக்கை சிறுசிறு கூறுகளாகப் பிரியுங்கள் (Break Your Goals)

அந்த இலக்குகளை அடைய ஒவ் வொரு ஆண்டும் நீங்கள் செய்யவேண் டிய பணிகளைத் திட்டமிடுங்கள்; பெரிய இலக்கை சிறுசிறு இலக்கு களாக மாற்றிக் கொள்ளவேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளும் அந்த இலக்கை அடைய ஏதாவது அய்ந்து செயல்களைச் செய்யுங்கள்.

மூன்றாவது நிலை:

உறுதிப்படுதல்
(Affirmations)

உங்கள் இலக்குகளை எல்லாம் உறுதியான சொல் தொடர்களாக எழுதி நாள்தோறும் அதைப் படியுங்கள்.

நான்காவது நிலை:

மனக் கண்களில் வெற்றியைக் காணுதல் (Visualization)

அந்த இலக்கு எட்டப்பட்டவுடன், நீங்கள் எவ்வளவு உற்சாகமாக இருப்பீர்கள் என்ற காட்சியை உங்கள் மனதிற்குள் கட்டாயப்படுத்தி, அதை நாள்தோறும் ஓட விட்டுப் பாருங்கள்.

இப்படிச் செய்தால் உங்களாலும் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

ஆம், நீங்கள் எதை விரும்பினாலும், அதை அடையக்கூடிய சக்தி மனதிற் குள் இருக்கிறது. எனவே, நிச்சயம் உங்களால் வெற்றி பெற முடியும்.

வாழ்க்கையில் சாதாரண மனித னாக வாழ்வதற்கும், சாதனை மனித னாக வாழ்வதற்கும் ஒரே அளவு நேரத் தையும், ஆற்றலையும்தான் செல வழிக்கப் போகிறீர்கள்.

அதற்கு ஏன் சாதாரண மனித னாக நாம் வாழவேண்டும்? சாதனை மனிதனாக வாழலாமே? என்றார் எழுத்தாளர் ஜேக் கேன்ஃபீல்ட்!

நண்பர்களே, இதனை செயல்படுத் தத் தொடங்குங்கள் - வெறும்படித்ததோடு கீழே போட்டுவிடாதீர்கள்!

தமிழ் ஓவியா said...


இன்பமுடன் வாழ 26 - கட்டளைகள்


1) காலையில் வழக்காக எழுவதற்கு 15 - நிமிடங்களுக்கு முன்னதாகவே எழுந்து விடுங்கள். வெளியே செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்ன தாகவே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்

2) நாட்குறிப்பேட்டில் அன்றைய நாள் செய்ய வேண்டிய பணிகளையும் எப்போது செய்யப் போகிறோம், என்பதையும் குறித்து வைத்து விடுங்கள்.

3) அன்றாடப் பணிகளைத் தள்ளி வைப்பது, மன அழுத்தத்தை அதிகரிக்கும், செய்யும் பணிகளை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள். எதிலும் முன்னதாகவே திட்டமிடுங்கள், எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்த பின் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்.

4) செல்ல வேண்டிய இடத்திற்கு சற்று முன்கூட்டியே செல்ல வழக்கப்படுங்கள். பத்து நிமிடத்திற்குள் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

5) சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள்.

6) மன இறுக்கத்தை தளருங்கள், சில வேலைகள் தடைபடுவதாலோ, உலகம் முடிந்துவிடப் போவதில்லை என்பதை உண ருங்கள்.

7) தவறாப்போன ஒரு விடயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதைவிட சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

8) நாம் செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

9) சில நேரங்களில் கைப்பேசியையும், தொலைப்பேசியையும், அணைத்து வைத்துவிட்டு (ஸ்விட்ச் ஆப்) ஓய்வு எடுங்கள். எந்த தொந்தரவும் இன்றி இருக்கலாம்.

10) நாம் செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமின்மையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் மன்னிக் கவும்..... என்னால் செய்ய இயலாது என்று சொல்லப் பழகுங்கள்.

11) உணவு, உடை, உறைவிடம், தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

12) எளிமையாக வாழுங்கள்.

13) உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

14) நன்றாகத் தூங்குங்கள், முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள், தடையற்ற தூக்கத்திற்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள், அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருட்களால் தேவையற்ற மன அழுத்தம் தரும்.

15) ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிட வேண்டும்.

16) பிரச்சனைகளை எழுதப் பழகுங்கள், கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை, குறைக்க எழுத்து வடிகாலாகும்.

17) குழப்பம், கவலைகளை மனதிற்குள் போட்டு குழம்பாமல் உங்களின் நம்பிக்கைக் குரியவர் களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

18) தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் ஏதேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

19) பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள், செய்யும் அனைத்துச் செயல்களையும், மனமார்ந்த அன்போடு செய்யுங்கள்.

20) என்னை யாரும் புரிந்து கொள்ள வில்லையே! எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

21) உங்கள் உடை, நடை, பாவணைகளில் தன்னம்பிக்கை மிளிரட்டும். ஆடைகளை நன்றாக அணிவதன் மூலமாக தன்னம்பிக்கை மிளிரட்டும். ஆடைகளை நன்றாக அணிவதன் மூலமாக தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிருபிக்கப்பட்ட உண்மையாகும்.

22) அதிகமாக வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள், ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

23) வாரத்தின் இறுதி நாள், விடுமுறை நாட்களை மிகச்சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

24) இன்றைய பணிகளை செவ்வனே செய்வதால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதிற் கொள்ளுங்கள்

25) பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்துவிடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

26) மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

தமிழ் ஓவியா said...


கோவைக்கு வாருங்கள் உரக்கப் பேசுவோம்!


நாளை மறுநாள் 13.4.2013 சனியன்று கோவை - சுந்தராபுரத்தில் புரட்சிப் பெண்கள் மாநாடு நடைபெற உள்ளது. இது ஒரு மாநில மாநாடு எனும் அளவுக்குப் பெருமையும், தகுதியும் உடையதாக இருக்கப் போகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன.

மாநாட்டுக்குத் தீர்மானங்கள் வரவேற்கப்பட்டன. இந்தக் கால கட்டத்திற்குத் தேவையானதும், எதிர்காலத்தில் சந்திக்கப்பட வேண்டியதும் சிந்திக்கப்பட வேண்டியதுமான தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவின் தலைநகரில் மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவி ஒருவருக்கு நிகழ்ந்த கொடூரம் உலகையே உலுக்கி எடுத்து பெண்கள் பாதுகாப்புப் பற்றி உரக்கச் சிந்திக்க வைத்தது.

பெண்களுக்குத் துப்பாக்கிக் கொடுக்கப்பட வேண்டும் என்கிற அளவுக்குக்கூட கருத்துகள் உலா வந்தன.

இதுபோன்ற ஒரு கால கட்டத்தில் திராவிடர் கழகம் நடத்தும் கோவை மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் அய்யமில்லை.
என்னதான் கல்வி வாய்ப்புகள் பெண்களுக்குப் பெருகி இருந்தாலும் பெண்கள் தங்களைக் காத்துக் கொள்வது, தேவைப்பட்டால் எதிர்தாக்குதல் கொடுப்பதெல்லாம் தேவைப்படுகிறது.

அதற்காகப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டிய இடம் கல்விக் கூடங்கள்தாம்! உடற்பயிற்சி, கராத்தே போன்ற சிறப்புப் பயிற்சிகள் கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும். உள ரீதியாக தன்னம்பிக்கை, துணிவு - இவை எல்லாம் அவசியம் தேவை. அதற்கான கல்வித் திட்டம் நம் நாட்டில் இல்லை என்பதை மரியாதையாக ஒப்புக் கொண்டே தீர வேண்டும்.

1929ஆம் ஆண்டிலேயே பெண்களை இராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறச் செய்தவர் தந்தை பெரியார்.

பெண்களுக்குக் கும்மி, கோலாட்டம் கற்றுக் கொடுப்பதும், கோலம் போடச் சொல்லிக் கொடுப்பதும் தேவையில்லை. மாறாக கைக்குத்து, குஸ்தி போன்றவை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்று அந்தக் காலத்திலேயே கோடிட்டுக் காட்டியுள்ளார் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
1987இல் கோவையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தென் மாநில ஒடுக்கப்பட்டோர் சமூக நீதி மாநாட்டில் பெண்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் மிக முக்கியமாக பெண்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு பெண் களுக்குத் தேவை என்று வலியுறுத்தப்பட்டது.

ஆசிரியர் பணிகளில் ஓரளவு இந்த வாய்ப்பு இருந்தாலும் பொதுவாக பெண்களுக்கென்று தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை.

நாடாளுமன்றம், மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு என்ற மசோதா 1996 முதல் நிலுவையில் இருக்கிறது. கட்சிகளைக் கடந்து ஆண்கள் இதற்கு எதிர்ப்பாகவே இருக்கிறார்கள். இதுதான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணம் ஆகும். பெண்கள் மத்தியில் போதிய விழிப்புணர்ச்சி இல்லாமையும் முக்கிய காரணமாகும்.

இதுகுறித்து கோவை மாநாட்டில் முக்கியமாகக் கருத்துகள் உருவாகும் என்று எதிர்ப்பார்க்கலாம். இந்த மாநாட்டின் தனிச் சிறப்பு என்னவென்றால், காலை கருத்தரங்கமாக இருந்தாலும் சரி பிற்பகல் நடக்கும் பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, மாலையில் நடக்கவிருக்கும் திறந்த வெளி மாநாடாக இருந்தாலும் சரி அனைத்து நிகழ்விலும் பெண்களே கலந்து கொள்வார்கள். கழகத் தலைவர் என்கிற முறையில் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு மட்டுமே விதி விலக்கு.

இந்திய அளவில்கூட இப்படி ஒரு மாநாடு இந்த வகையில் நடப்பது கோவை மாநாடே! இதற்கு முன்பு கடந்த ஆண்டு மே மாதத்திலும் வேலூரில் நடத்தப் பட்டது.

ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு என்பது திராவிடர் கழகத்தின் இரு கண்கள் போன்றவை யாகும்.

இந்த இரு நிலைகளிலும் வெற்றி பெற்றால்தான் சமுதாயத்தில் சமத்துவம் ஏற்பட முடியும். ஏற்றத் தாழ்வுகள் பிளவுகள் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளும் கட்டுப்படுத்தப்படும்.

சமூக நிலையிலே இருக்கக் கூடிய இத்தகைய ஏற்றத் தாழ்வைப் போக்காத நிலையில், வேறு எந்த சீர்திருத்தம், மாற்றம் வந்தாலும் அது நிலைக்காது என்பது கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்தாகும்.
உரக்கப் பேசுவோம் - வாருங்கள் - கோவைக்கு!

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரும் அல்லாதாரும்


ஆண்களும் பெண்களும் கோயில் களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப் பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
(விடுதலை, 29.8.1950)

தமிழ் ஓவியா said...


சிறீரங்கம் - திராவிடர் எழுச்சி மாநாடு

சிறீரங்கத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 4.4.2013 அன்று மாலை வெகு எழுச்சியோடு நடைபெற்றது. மாநாட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.

மாவட்டக் கழகத் தலைவர் வரவேற்புரை

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டக் கழகச் செயலாளர் ச.கணேசன் நன்றி கூறினார். மாநாட்டுத் தீர்மானங்களை கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் முன்மொழிந்தார்.

முனைவர் துரை.சந்திரசேகரன்

பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்கள் தமதுரையில் இதே சிறீரங்கத் தில் பார்ப்பனர்கள் மாநாடு நடத்தியுள்ளனர். அதில் கிராமக் கோயில் பூஜாரிகள் மாநாடும் ஒரு நாள் நடைபெற்றது.

இதன் நோக்கமென்ன? கிராமக் கோயில் பூஜாரிகள் என்பவர்கள் பார்ப்பனர் அல்லாதார் தான். அவர்கள் நகரப் பகுதியில் உள்ள பெரிய பெரிய கோயில்களில் அர்ச்சகர்களாக ஆகக் கூடாதா?

அந்த எண்ணம் - அந்த ஆசை அவர்களுக்கு எப்படியும் வந்து விடக்கூடாது என்பதுதான் இதற்குள்ளிருக்கும் சதி என்று குறிப்பிட்டார்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு

மாநாட்டினைத் திறந்து வைத்து உரையாற் றினார் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

இந்து என்ற சொல் வெள்ளைக்காரன் கொடுத் தது என்று மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் தமது தெய்வத்தின் குரல் எனும் நூலில் (பக்கம் 266) குறிப்பிட்டுள்ளார். சிறீரங்கம் மாநாட்டில் பேசிய மாஜி சங்கராச்சாரியர் ராமன் கோயில் கட்டுவதன் அவசியம் பற்றி சிலாகித்துள்ளார்.

மக்களுக்கு இப்பொழுது முக்கிய பிரச்சினை ராமன் கோயில் கட்டுவது தானா? ராமன் கோயில்தான் சர்வரோக மருந்தா?

இதே ஊரில் பிராமணாள் என்ற பெயரில் ஒருவர் உணவு விடுதியை நடத்தி வந்தார். கழகம் களத்தில் குறித்த காரணத்தால் அந்தப் பெயர் நீக்கப்பட்டதோடு, கடையையே காலி செய்து விட்டார்.

சாஸ்திரப்படியே கேட்கிறோம் பிராமணர் ஓட்டல் நடத்தலாமா? உணவை விற்கலாமா? கூடாது என்று மனுதர்ம சாஸ்திரம் கூறியுள்ளதே!

பார்ப்பான் பிச்சை எடுத்துதான் ஜீவனம் செய்ய வேண்டும் என்று அதே மனுதர்மத்தில் எழுதப்பட்டுள்ளதே (மனுதர்மம் அத்தியாயம் 10, சுலோகம் 112).

பார்ப்பனர்கள் சங்கீதக் கச்சேரிகளை நடத்து கிறார்களே. மனுதர்மத்தில் சங்கீதம், பார்ப்பனர் களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே (மனுதர்மம் 4, சுலோகம் 15).

மற்றவர்களுக்கு சாஸ்திரத்தை உபதேசிக்கும் பார்ப்பனர்கள் முதலில் தாங்கள் அவற்றைப் பின்பற்றட்டும் என்று குறிப்பிட்டார்.

துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்

சிறீரங்கத்தில் விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்கள் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய காஞ்சி சங்கராச்சாரியார் இந்துக்கள் ஒற்றுமை யாக இருந்தால் விரைவில் ராமன் கோயிலைக் கட்டலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

450 ஆண்டுகால வரலாறு படைத்த முசுலீம் களின் வழிபாட்டுத் தலத்தை சங்பரிவார் பிஜேபி கும்பல் ஒரு பட்டப்பகலில் இடித்தது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், வினய் கட்டியார் போன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டுள்ள நிலையில் ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக அலைந்து கொண் டிருக்கக்கூடிய சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று பேசலாமா?

அது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? சட்டத் தின் முன் அனைவரும் சமம் என்றால் அவர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமல்ல, பாபர் மசூதி என்பது வெறும் கட்டடம்தான் - அதை இடித்தது குற்றமல்ல என்றும் பேசியதும் இதே சங்கராச்சாரியர்தான் இதன்மீதுகூட சட்டப்படி வழக்குத் தொடுக் கலாம் ஏன் செய்யவில்லை?

நாளைக்கு யாரோ ஒருவர் ஆத்திரப்பட்டு காஞ்சி மடத்தையோ ரங்கநாதர் கோயிலையோ இடித்தால் அது வெறும் கட்டடம்தான் - இடித்ததது குற்றமில்லை என்று சொன்னால் சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்வாரா? இடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சங்கராச்சாரியார் கூறியிருப்பதால் அதற்குப் பதிலாக இதனைக் கூறுகிறோம். வன்முறையை தூண்டுவது கழகத்துக்கு உடன்பாடல்ல என்றும் குறிப்பிட்டார்.