Search This Blog

27.4.13

இப்பொழுது சொல்லுங்கள் கங்கை புனித நீரா?

எதற்காக மன்னிப்பு? 



கங்கை நதியை பழித்துப் பேசியதற்காக, மலேசிய தலைவர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மலேசியாவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி, பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. மலேசியா சுதந்திரம் அடைந்த நாள் முதல், பாரிசான் தேசியக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்தக் கட்சியில் தற்போது பெர்காசா கட்சி இணைந்துள்ளது.

இந்தக் கட்சியின் துணைத் தலைவர் சுல்கிபிலி நூருதீன், 10 ஆண்டுகளுக்கு முன், கங்கை நதியைப் பழித்துப் பேசியிருந்தார். கங்கை நதியைப் பழித்துப் பேசி, இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதற்காக தற்போது தேர்தலில் போட்டியிடும் நூருதீன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், 10 ஆண்டு களுக்கு முன் நான் எதிர்க்கட்சியில் இருந்தேன். அப்போது, உணர்ச்சி வேகத்தில் நான் பேசியது தவறுதான் இதற்காக மன்னிப்புக் கோருகிறேன் என்றார். இப்படி ஒரு செய்தி நேற்றைய ஏடுகளில் வெளிவந்துள்ளது.

சொன்னவர் முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் ஏன் வீண் பிரச்சினை என்று கருதி மன்னிப்புக் கோரி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

உண்மையைச் சொல்லப் போனால் அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில்தான் நாள்தோறும் கலக்கிறது. இதன் அளவு 20 மில்லியன் காலனாகும். நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கையில் தள்ளப்பட்டுக் கொல்லப்படுகின்றன - மோட்சத்துக்காக. இதன்விளைவாக 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி ஆயிரக்கணக்கில் மாண்டனர்.

இன்னொரு புள்ளி விவரம் மிகவும் முக்கியமானது. இந்தியாவில் மற்ற மற்ற பகுதிகளில் எல்லாம் குழந்தைகள் மரணம் நூற்றுக்கு 94 என்றால் கங்கை பாயும் காசி வட்டாரத்திலோ 133.94 ஆகும்.

பீகாரில் துர்காபூர், பொகாரோ, பிலாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்தும், உரத் தொழிற்சாலைகளிலிருந்தும் அம்மோனியா, சயனைடு நைட்ரேட், முதலிய நச்சுக் கழிவுகள் ஏராளமாகக் கலக்கின்றன. பீகார் தலைநகரமான பாட்னாவில் மட்டும் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு மோட்சத்திற்குச் செத்தவர்களை அனுப்புவதற்காக(?) அந்தச் சாம்பல் கங்கைக்கரையில் கரைக்கப்படுகின்றன.
 
கொல்கத்தாவில் மட்டும் 296 தொழிற்சாலை களின் ஒட்டு மொத்த கழிவுகளும் சங்கமம் ஆவது இந்துக்கள் புனிதம் என்று கூறுகிறார்களே - அந்தக் கங்கையில் தான்.

இவற்றை எல்லாம்விட இன்னும் அதிர்ச்சி தரும் தகவல்கள் உண்டு. கங்கை புனித நதி பாயும் பகுதிகளில் தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது.

சுவிஸ் அரசின் நிதி உதவியால் இப்புனித நகரங்களில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுதான் இந்த அதிர்ச்சியான தகவலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. (தி பயணியர் 27.7.1997).
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (19.6.2003) வேறு பல ஒழுக்கக் கேடான தகவல்களை வாரி வாரி இறைத்துள்ளது.

காலையில் புனித கங்கையில் முழுக்கு இரவோ மது, மாது, மாமிச விருந்து தடபுடல்கள்!

சிரகான் இடைத் தேர்தலுக்காகக் கடுமையான பிரச்சாரத்தில் நாள் முழுவதும் ஈடுபட பிரச்சாரகர்கள் ஒரு பெருங் கொண்டாட்டத்தை எதிர் நோக்கியிருந் தனர். இந்தப் பெரு விருந்து வேறு எந்த ஓட்டலிலும் நடைபெறவில்லை. கங்கையில் குளிக்கும் இடத்தில் இருந்த இரு தோணிகள் மற்றும் ஒரு பெரிய படகில்தான் அந்த விருந்து நடந்தது. மது, பீர், கோழிக் கறி, புலவு, ரொட்டி மற்றும் இனிப்பு வகைகள் மிகப் பொருத்தமாக இருந்தன என்று விலா வாரியாக எழுதியது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
 
இப்பொழுது சொல்லுங்கள் கங்கை புனித நீரா?

உண்மையைக் கூறிய மலேசியாவைச் சேர்ந்த ஒரு கட்சித் தலைவர் மன்னிப்புக்கோருகிறாராம். எப்படி இருக்கிறது? உண்மை என்னவென்றால் உலகில் மிகவும் மாசு அடைந்த  ஆறுகளின் பட்டியலில் கங்கை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்பதுதான்.
                      --------------------------------------”விடுதலை” தலையங்கம் 27-4-2013

68 comments:

தமிழ் ஓவியா said...


விலங்கு வழிபாடு


விலங்குகளைக் காப்பதற்கான மத நோக்கங்கள்:-

பல விலங்குகள் மதசம்பந்தமான நோக்கங்களுக் காகவும் பாதுகாக்கப் படுகின்றன. சிறப்பாக எகிப்தில் மதத் தினரால் பாதுகாக்கப்பட்ட விலங் குகள் மிகப் பலவாக இருந்தன. கிட்ட தட்ட நூறு விலங்கினங்கள் அங்கே தெய்வமாக வழிபடப்பட்டன. ஆனால் விஞ்ஞானம் வளர்ச்சி அடைய அடைய, எகிப்திலும், பிறநாடு களிலும் மத சம்பந்தமான தடைகள் வலிவிழந் தன. ஒரு காலத்தில் எகிப்தில் முதலை வழிபாடு இருந்தது.

பயங்கர ஊருண்ணியான முதலைகள் நைல் ஆற்றில் வெள்ளம் பெருகச் செய்கின்றன என்று எண்ணி மனிதர்கள் அவற்றை வணங்கி வந்தார்கள். ஆனால் இந்தப் பேராற்றின் மேற்பகுதிகளில் வெண்பனி மளமளவென்று உருகுவதே நைல் நதியின் வெள்ளப் பெருக்குக்கு காரணம் என்பது தெரிந்ததும் முதலையை கடவுளாக வழிபடுவதை மக்கள் நிறுத்தி விட்டார்கள்.

எகிப்தில் அப்பிஸ் என்னும் எருது இருந்தது. அது கடவுளாகப் போற்றிப் பேணப்பட்டது. அது தெய்வம் என்று பூசாரிகள் சொன்னார்கள். எகிப்தை வென்று அடிமைப்படுத்திய பாரசீக மன்னன் கட்பீஸ் இது தெய்வம் அல்ல, மாட்டிறைச்சி என்று ஒரு முறை கூவி, கட்டாரியால் அந்த எருதைக் குத்தி னான். அவனுடைய மெய்க்காவ லர்கள் அப்பிஸின் பூசாரிகள் மக்களை ஏமாற்றியதற்காக மிலாறுகளால் நய்யப்புடைத்தார்கள். அந்தநாள் முதல், அதாவது கி.மு. 525ஆம் ஆண்டு முதல் இந்த எருது வழிபாடு நின்று விட்டது.

இவ்வாறு விஞ்ஞானத்தின் செல்வாக்கினால் எகிப்தில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் விலங்குப் பாதுகாப்புக்கான மதநோக்கங்கள் படிப்படியாக வழக் கொழிந்து போயின. அந்த நிகழ் முறை நம் காலத்திலும் தொடர்கிறது.

விலங்கியல் (பக்கம் 392 -393) முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ வெளியீடு
தொகுப்பு: மதி, செங்கோட்டை

தமிழ் ஓவியா said...


கிருபானந்தவாரியார் ஒப்பம்


தேக்கி வைக்கப் பட்டுள்ள மின்சாரத்தை செலுத்துவதற்கு செம்புக் கம்பியை இன்றைய விஞ் ஞானம் கண்டுபிடித்துள் ளது. ஆனால், அக்காலத் திலேயே ஆண்டவன் அருள் ஒளியைக் கடத்து வது செப்பினால் முடியும் என உணர்ந்து, இறை வன் உருவங்களைச் செப்பினால் சிலை வடித் தார்கள்.

- கிருபானந்தவாரியார்
சொற்பொழிவிலிருந்து அ.சம்பத்
ஆதாரம்: தாய் வார இதழ், 28.8.83

இவை உண்மையென்றால் கல்லால் வடிக்கப் பட்டுள்ள கடவுளர் சிலைகள் (சர்வ சக்தி படைத்த) அருள் ஒளியைக் கடத்துவதில்லை என்றுதானே அர்த்தம்? பிறகு ஏன் அவற்றை வணங்குகிறார்கள்?

தகவல்: ஆர்.வி.குப்புசாமி, இரங்கம்புதூர்

தமிழ் ஓவியா said...


கொள்ளைக்காரன் திருமங்கை ஆழ்வார்


நாகப்பட்டினத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந்தது. அதனை ஆலிநாடர் களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச்சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கினார். அவரை குற்றம் கூறுநர் ஒருவரும் இலர்.

(சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை வெளியிட்டுள்ள தஞ்சை வாணன் கோவை - பக்கம் 7 - வரிகள் 26-30)

பார்ப்பனீய மதத் தலைவர்களுள் ஒருவர் பிறமதத்தைச் சார்ந்த - புத்தமதத்தைச் சார்ந்த - இடத்திலிருந்து கொள்ளையடித்த செய்தியையும், பிறமதங்களை அழிப்பதற்கு கையாண்ட முறையையும் இச்செய்தி தெரிவிக்கிறது. இவரைக் குற்றங் கூறுநர் இலர் என்று கூறப்பட்டதன் மூலம் மற்றவர்களையும் இவ்வாறு செய்யத் தூண்டுகின்றது.

தகவல்: சு.ஆறுமுகம், வேலூர்-6 (வ.ஆ)

தமிழ் ஓவியா said...


கடவுள் காப்பாற்ற மாட்டார்!


சோமநாதபுரத்தில் இருந்த மிகப் பெரிய கோயிலில் பல நூற்றாண்டு களாகப் பக்தர்களால் அளிக்கப்பட்ட செல்வம் குவிந்து கிடந்தது. கஜினி முகம்மது அங்குச் சென்ற காலத் தில் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்குள் சென்று ஒளிந்து கொண்டார்களாம். ஏதாவது அற்புதம் நிகழும், தாங்கள் வழிபடும் தெய்வம் தங்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பினார்கள்.

ஆனால் பக்தர்களின் கற்பனையாலன்றி மக்கள் உலகில் அற்புதம் நிகழ்வது அபூர்வமாகத் தானே இருக்கிறது. ஆகவே அற்புதம் ஒன்றும் நிகழவில்லை. முகமது கோயிலை இடித்து பாழாக்கி னான், பொருளைச் சூறையாடினான். நிகழாத அற்புதம் நிகழும் என்றும் நம்பியிருந்த 50 ஆயிரம் பேர் அவனால் கொல்லப்பட்டனர்.

(நேரு எழுதிய உலக வரலாறு)

தமிழ் ஓவியா said...


இந்துமதம் பற்றி தாகூர்!


டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம். இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம்.

இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை. இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம்.

நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்

தமிழ் ஓவியா said...


அன்று ஆச்சாரியார் சொன்னார்


நம் நாட்டில் மற்றவர்கள் சண்டை யைக் காட்டிலும் பக்தர்கள் சண் டையே அதிகம். என் தெய்வம் பெரி தா? உன் தெய்வம் பெரிதா? என்ற சண்டை தான் அதிகம்.

சென்னை தமிழிசைச் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் முதலமைச்சர் சி.ஆர். - 15.4.1953

தமிழ் ஓவியா said...


செல்வா


தந்தை செல்வா என்றால் அது ஈழத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் செல்வ நாயகம் அவர்களைத் தான் குறிக்கும். அவரின் மறைவு நாள் இந்நாள் (1977).

தொண்டு செய்யும் தூய வர்களும், சாதனை செய்யும் செம்மல்களும் மறைவதில்லை - பொருத்தமான சந்தர்ப் பங்களில் எல்லாம் மக்கள் மனதில் மலர்ச்சியுற்று மணம் வீசுவர். அந்த வகையில் சீலமிக்க செல்வா அவர்கள் அடிக்கடி நினைக்கப்படும் நிலாவொளியே! அகிம்சை யில் அவர் காந்தியாருக்கு சளைத்தவரல்லர். ஈழத் தமி ழர்களின் சுயமரியாதையுடன் கூடிய சுய நிர்ணயத் தன் மைக்காக அறவழிக் கொடி களை இலங்கை வீதிகளிலே ஏந்திச் சென்றவர் தான்.

1949 டிசம்பர் 18இல் கொழும்பில் நடைபெற்ற தமிழரசு கழக மாநாட்டின் தலைமை உரையில் செல்வா சிந்திய கருத்தென்ன?

பெரிதும் சிறிதுமாக உள்ள மொழியினங்களி டையே ஏற்படும் முரண் பாடுகள் போருக்குக் காரண மாக இருந்தன. இப்போர் களில் வல்லரசுகள்கூட இழுக்கப்பட்டுள்ளன. மொழி இனங்களிடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்ப தற்கு இரு வழிகள் உண்டு. ஒவ்வொரு மொழியினத்திற் கும் அரசுரிமை உடைய தனித்தனி நாடுகளை அமைக்க பரந்த நிலப் பரப்பைத் துண்டாடுதல் ஒரு வழி. ஒவ்வொரு மொழியினத் திற்கும் தன்னாட்சி மாநிலங் களை அமைத்து மத்தியில் கூட்டாட்சி அரசை உடைய ஒரு நாட்டை அமைத்தல் மற்றொரு எளிதான வழி.

நாங்கள் கேட்கின்ற தீர்வு இதுதான். தன்னாட்சி உடைய தமிழ் மாநிலம்; தன்னாட்சி உடைய சிங்கள மாநிலம். இரண்டு மாநிலங் களுக்கும் பொதுவான மத்திய அரசு இவற்றை உள்ளடக்கும் கூட்டாட்சி அரசியல் அமைப்பு; சிறிய தான தமிழ்ப் பேசும் தேசிய இனம் அழிந்து போகாமலும் பெரியதான சிங்களத் தேசிய இனத்தால் விழுங்கப்படா மலும் இருப்பதற்குரிய மிகக் குறைந்த ஏற்பாடு இதுதான் என்று செல்வா 64 ஆண்டு களுக்குமுன் சொன்ன ஒவ் வொரு சொல்லும் செஞ் சொல் அல்லவா?

இன்றைக்குக்கூட அரசி யல் தீர்வு என்று சொல்லப் படுவது இதனைத் தழுவியது தானே!

சுயாட்சி மாநிலம் என்ற கோரிக்கை தனி நாடு என்று மாற்றப்படுவதற்கு யார் காரணம்? சிங்களவர்களும், அவர்களின் ஆணவ மிக்க பாசிச ஆட்சியும்தானே?

தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து இல்லை; பவுத்தம் சார்ந்த சிங்களர் ஒருவர்தான் அதிபராக வர முடியும் என்ப தில் ஆரம்பித்து ஒவ்வொன் றிலும் தமிழர்களை அழிக்கும் நச்சுக் குப்பிகளை அடுக்கிக் கொண்டே போனதாலும், உரிமைக்காகக் குரல் கொடுத்த தமிழீழ மக்களை அரசு துணை கொண்டு வேட்டையாடியதாலும், தன்மானமிக்க தமிழினத்தின் பெண்களை மாமிசப் பிண்ட மாகக் கருதிக் கடித்துக் குதறியதாலும்தானே இளை ஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக் குத் தள்ளப்பட்டார்கள்.

செல்வா நினைவு நாளில் அவரை நினைப்போம்! அவர் நினைப்பிற்கு வடிவம் கொடுப் போம், வாழ்க செல்வா!

கூடுதல் தகவல்: (Tail-Piece) பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்களின் ஈழத் தமிழர்களின் உரிமைப் போர் வரலாறு (திராவிடர் கழக வெளியீடு) நூலைப் படியுங்கள். - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


தாயாருக்கு எழுதி வைத்த ரமணரிஷி எங்கே? மக்களுக்காக அறக்கட்டளையாக்கிய பெரியார் எங்கே?


பக்தியின் பெயரால் மக்கள் கொடுத்த பணத்தையெல்லாம்

தாயாருக்கு எழுதி வைத்த ரமணரிஷி எங்கே?

மக்களுக்காக அறக்கட்டளையாக்கிய பெரியார் எங்கே?

புதுக்கோட்டைவிடுதி பெரியார் சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஒப்பிட்டு அளித்த உயரிய விளக்கம்

புதுக்கோட்டை, விடுதி, ஏப்.26- பக்தியின் பெயரால் மக்கள் குவித்த பணத்தை எல்லாம், சொத்துக்களை எல்லாம் தன் தாயாருக்கும், சகோதர ருக்கும் எழுதி வைத்த ரமணரிஷி யையும் மக்கள் தனக்களித்த ஒவ் வொரு காசையும் சேர்த்து, தன் சொத் துக்களையும் இணைத்து அவற்றை அறக்கட்டளையாக்கி, தனக்கு பிறகும் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று ஏற்பாடு செய்த தந்தை பெரி யாரையும் ஒப்பிட்டுப் பாருங்கள், பகுத்தறிவுக்கும், ஆன்மீகத்துக்கும் உள்ள வேறுபாடு புரியும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி கழக மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டைவிடுதியில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நேற்று நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு அறந்தாங்கி கழக மாவட்டத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார். திராவிடர் கழக அமைப்புச் செய லாளர் இரா.குணசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிட மணி, பொதுச் செயலாளர் இரா. செயக்குமார் மாவட்டச் செயலாளர் க.மாரிமுத்து புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, செயலாளர் ப.வீரப்பன், அறந்தாங்கி மாவட்டத் துணைத் தலைவர் முத்து , மாவட்ட அமைப்பாளர் அ.தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவரங்குளம் ஒன்றிய தி.க.தலைவர் இரா.இளங்கோ அனைவரையும் வரவேற்றார்.

புதுக்கோட்டைவிடுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி யின் முன்புறம் அமைக்கப் பட்டிருந்த முழுஉருவச் சிலையை திராவிடர் கழகத்தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது புதுக்கோட்டைவிடுதி வரலாற்றி லேயே இன்று ஒரு சிறப்பான திருவிழா நாளாகும். இதில் கட்சி ஜாதி மத பேத மின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த ஒரு விழாவாகும். நமக்கெல் லாம் விழிதிறந்து தன்விழி மூடி இங்கு சிலையாக தந்தை பெரியார் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இராவணனின் அரிய பணி!

இங்கு சிறுமி தமிழருவி தந்தை பெரியாரின் தொண்டினைப் பற்றி

அழகாக எடுத்துச் சொன்னார். அதுபோல் ராவணன் அவர்களும் இங்கு ஏராளமான தொண்டுகளைச் செய்திருக்கிறார். தான் படிக்காவிட்டாலும் இப்பகுதியில் உள்ளவர்கள் ஏராளமானவர்களைப் படிக்க வைத்திருக்கிறார். உயர்படிப்பு நிறையப் பேர் படித்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இங்கு வந்து சிலைக்கும், விடுதலைக்கும் நன்கொடை கொடுத்த பலரும் தாங்கள் படிப்பிலும் கல்வியிலும் சமூகத்திலும் உயர்ந்ததை நன்றியோடு குறிப்பிட்டுச் சொன்னார்கள். அந்தளவுக்கு அவர்களை எல்லாம் இக்கிராமத்தில் உயர்த்தி வாழ்க்கையை அமைத்து கொடுத்தவர் ராவணன் என்பதில் ஊருக்குத் தொண்டு செய்து உயர்ந்தது அவருக்கும் இந்த ஊருக்கும் பெருமை.

இந்த ஊரில் இருந்த ரேசன்கடை வேறு ஊருக்குக் கொண்டு போகப்பட்டு விட்டது. அதை இங்கு பகுதிநேர அங்காடிக் கடையாகக் கொண்டு வருவதற்கு ராவணனும் மற்றவர்களும் மிகவும் அலைந்தார்கள். என்னிடம் வந்து சொன்னபிறகு கலைஞர் ஆட்சியின்போது உணவு அமைச்சராக இருந்த எ.வ.வேலு அவர்களிடம் எடுத்துச் சொல்லி அதிகாரிகளிடமும் பேசி சட்டம் குறுக்கே நிற்க அதற்கும் மக்களுக்காகத்தான் சட்டமேதவிர சட்டத்துக்காக மக்கள் அல்ல என்று எடுத்துச் சொல்லி ரேசன்கடை கொண்டு வரப் பட்டது. அந்தளவுக்கு ராவணன் போராடிப் பெற்றுத் தந்திருக்கிறார்.

பெரியாரின் கண்டிப்பு!

தமிழ் ஓவியா said...

அந்தக்கால ராவணனுக்கு கதைப்படி பத்துத்தலை என்பார்கள். இந்த ராவணனுக்கு அய்யா அவர்களிடம் பத்துமுறை அடிவாங்கிய பெருமை உண்டு. அய்யா பெரியார் அவர்களைப் பற்றிச் சொல்லும்போது மிகவும் கண்டிப்பானவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கண்டிப்பைப் பற்றி அனைவரும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை பெரியார் என்றாலே கடவுள் இல்லை என்று கடவுளைத் திட்டுவார் என்றும் பார்ப்பானையும் திட்டுவார் என்றுதான் நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது கண்டிப்பு நியாயமானது. அதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவரது சிக்கனம் என்பது பொதுவாழ்விற்கும் சொந்த வாழ்விற்கும் மிகவும் அவசியமானதாகும்.

நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும். அய்யா அவர்களிடம் பெயர் வைக்கக் குழந்தையைக் கொடுத்து பெயர் வைத்துக் கொள்வார்கள். அதற்கு நாலணா. தந்தை பெரியாரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள பலரும் விரும்புவார்கள். அவ்வாறு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு ஐந்து ரூபாய் அய்யா அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அப்போது நாங்கள் எல்லாம் புலவர் இமயவரம்பன் ஆகியோர் அந்தக் காசை வசூலிப்போம். நிகழ்ச்சி முடிந்து அந்தப் பணத்தை எண்ணிக் கொடுக்கும்போது யாராவது ஓரிருவர் பணம் கொடுக்காமல் சென்று விடுவார்கள். பணத்தை எண்ணிப் பார்த்து விட்டு என்ன பணம் குறைகிறதே என்பார். இத்தனைமுறை பிளாஷ் லைட் அடித்தது இத்தனை ரூபாய்தான் இருக்கிறதே என்பார். தன்னை யாரும் ஏமாற்றி விடக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருப்பார். அவ்வாறு கண்டிப்பாக இருந்து வசூலித்த பணத்தையும் தன்னிடம் இருந்த சொத்துக்களையும் கல்விக் கூடங்களாக கல்லூரிகளாக பொறியியல் கல்லூரிகளாக பல்கலைக் கழகங்களாக நமக்குத் தந்திருக்கிறார். இப்போது டில்லி பெரியார் மய்யங்களாக வளர்ந்து உயர்ந்து நிற்கின்றன. அவையெல்லாம் மக்களுக்காகச் சேர்த்து வைத்த சொத்துக்களாகும். தனக்காக எதையும் எடுத்துக் கொண்டதில்லை. அனைத்தும் மக்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சட்டக் கல்லூரி விழாவில் பெரியார்

நான் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். தந்தை பெரியார் அவர்களை அழைத்து வந்து கல்லூரியில் பேச வைக்க ஆசைப்பட்டோம். என்னுடன் வகுப்புத் தோழராக இருந்தவர் பின்னாளில் அதிமுக அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஒருவர் எல்லோருமாகச் சேர்ந்து அய்யா அவர்களிடம் தேதி வாங்கினோம். ரூபாய் அய்ம்பது தருவதாக ஒத்துக் கொண்டு ஆளாளுக்கு வசூல் செய்து முன்பணமாக அய்யா அவர்களிடம் 25-ரூபாய் கொடுத்து விட்டோம்.

அந்தக் கூட்டமானது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு கூட்டமாகும். அதாவது அய்யா அவர்களுக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி ஏஎஸ்பி அய்யர் அதே போல் வேறொரு சந்தர்ப்பத்தில் அய்யா அவர்களுக்குத் தண்டனை வழங்கிய உயர்நீதி மன்ற நீதிபதி சுப்பிரமணிய நாடார் ஆகியோரெல்லாம் வந்து சட்டம் சம்பந்தமாகப் பேசியிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் அய்யா அவர்களின் பேருரை நடந்தது. தமிழரும் தமிழர் இலக்கியமும் என்ற தலைப்பில் நீண்ட நேரம் பேசினார்கள். நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்தது. அனைவரும் கலைந்து சென்று விட்டார்கள். அய்யா அவர்களிடம் நீதிபதிகளும் நானும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். நிகழ்ச்சி குறித்து கருத்துக்கள் பேசப் பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அய்யா அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியவில்லை. அதன் பொறுப்பாளரைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

உடனே அப்போது அங்கு அய்யாவுடன் இருந்த மணியம்மையிடம் தனியாக அழைத்து அவர்களிடம் 25-ரூபாய் கடனாகக் கேட்டேன். என்ன இப்போது திடீர் செலவு என்று அம்மா அவர்கள் கேட்டார்கள். கடனாகத்தான் கேட்கிறேன். பிறகு தந்து விடுகிறேன். இப்போது தாருங்கள் என்றேன். உடனே எண்ணித் தந்து விட்டார்கள். சுற்றி வந்து அய்யா அவர்களிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தேன். என்ன என்று கேட்டார்கள். நிகழ்ச்சிக்குக் கொடுக்க வேண்டிய பாக்கிப் பணம் என்றேன்.

சட்டக் கல்லூரி மாணவர்கள்தானே அவர்களிடம் பணம் இருக்காது என்றுதான் முன்பணம் வாங்கிய 25-ரூபாயும் போதும் என்று இந்நேரம் அந்தப் பணம் பற்றிப் பேசாமல் இருந்து விட்டேன் என்று கூறி மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார். இந்த விபரம் குறித்து நான் கடன் வாங்கிக் கொடுத்ததை மணியம்மை அறிந்து அந்த விபரத்தை தந்தை பெரியார் அவர்களிடம் சொல்லி விட்டார். அந்தளவுக்குக் கறாராக இருந்து சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாம் நம் மக்களுக்குக் கல்வி அறிவு பெறவும் பகுத்தறிவு பெறவும் பயன் பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...


அந்த நிகழ்ச்சியில் ஏஎஸ்பி அய்யர் பேசும்போது சொன்னார் யாரையும் மேற்கோள் காட்டாமல் சுயமாகச் சிந்தித்து சுயமாகப் பேசுபவர் இந்தியாவிலேயே தந்தை பெரியார் ஒருவர்தான் என்று பேசினார். பெரியாரின் கண்டிப்பு இயக்கத்திற்காகவும் தன்வாழ்வில் கடைப்பிடிக்கவும் பெரிதும் பயன்படுகிறது.

வெங்கட்ரமணன் ரமண ரிஷியான ரகசியம்

மதுரையில் உள்ள ராம் நகரில் இருந்து ஒரு பத்துவயது பார்ப்பன வெங்கட்ரமணன் என்ற சிறுவன் திருவண்ணாமலைக்குப் போகிறான். அப்போது உண்ண உணவில்லாமல் மயக்கம்போட்டுக் கீழே விழுந்து விடுகிறான். அருகிலிருந்தவர்கள் பார்த்து விட்டுத் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவிக்கிறார்கள். சோர்விலிருந்து மீண்ட சிறுவன் ஏதேதோ உளறுகிறான். மக்கள் திடீரென்று அந்தச் சிறுவன் காலில் விழுகிறார்கள். சிலர் விழுந்ததைப் பார்த்து பலர் விழுகிறார்கள். கூட்டம் கூடுகிறது. வெங்கட்ரமணன் ரமணா ஆகிறான். கொஞ்சநாளில் ரமணரிஷி ஆகிறான். அப்பாவி மக்கள் பக்தர்களாகக் கூடுகிறார்கள். பலர் செல்வங்களைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். நிறையச் சொத்துகள் சேர்ந்து விடுகிறது. கோடிக்கணக்கில் பெருகி விடுகிறது. ஆசிரமம் அமைக்கிறான்.

உடனே ஊரில் இருந்து தன் தம்பியை அழைத்து வந்து சொத்துக்களை நிர்வகிக்கச் செய்கிறான். கூடவே தன் தாயாரையும் அழைத்து வந்து விடுகிறான். ரமணரிஷி ரமண மகான் ஆகிறான். அத்தனை சொத்துக்களையும் தன் தாயார் பெயரில் உயில் எழுதி மாற்றம் செய்து விடுகிறான். அதன் தொடர்ச்சியாக பிரச்சினைகள் வந்து விடுகின்றன. இதெல்லாம் நடந்தது 1930-ஆம் ஆண்டு வாக்கில். திருவண்ணாமலை முனிசிபல் நீதி மன்றத்தில் வழக்கு நடந்தது.

பெரியார் எங்கே? ரமணரிஷி எங்கே?

நாங்கள் சொல்வது எல்லாம் ஆதாரமில்லாமல் சொல்லவில்லை. ரமணரிஷியின் மர்மம் என்ற புத்தகத்தில் உள்ளது. புகார் போகிறது. வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன் இருந்த வெங்கட்ரமணன் ரமணாவாகி ரமணரிஷி ஆகி ரமண மகான் ஆகி ரமண பகவான் ஆகிவிட்டார். பகவான் நீதிமன்றம் வரமாட்டார் என்று அவரது பக்தர்கள் சொல்லி விட்டார்கள். நீதிமன்றம் ஒரு கமிஷன் அமைத்தது. இரண்டு வழக்குரைஞர்கள் விசாரித்தார்கள். பக்தி மார்க்கத்தில் இருக்கும் நீங்கள் பொதுமக்கள் கொடுத்த சொத்தை தாயார் பெயரில் உயில் எழுதி வைத்து விட்டீர்களே என்று கேட்டபோது நான் சந்நியாசம் வாங்கவில்லையே. அதனால் என் தாயாருக்கு நான் எழுதி வைத்த உயில் செல்லும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இன்றுவரை அந்தப் பிரச்சினை தீரவில்லை.

இங்குதான் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பக்தி என்ற பெயரில் பிறர் சொத்துக்களை எல்லாம் தன் பெயருக்கு மாற்றி தன் தாயாருக்கும் தம்பிக்கும் மாற்றம் செய்த ரமணமகரிஷியின் பக்தி வேஷம் எங்கே? பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்கு உழைப்பதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு தான் சேர்த்த சொத்துக்களை தன் சொத்துக்களை எல்லாம் மக்களுக்காகச் சேர்த்து அறக்கட்டளை ஆக்கி அதை பின் தங்கிய மக்கள் எல்லாம் அய்ஏஎஸ் அய்பிஎஸ் அதிகாரிகளாகவும் பெண்கள் உட்பட தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் உயர் நீதிமன்ற உச்சநீதிமன்ற ஜட்ஜ்களாகவும் உயர்வதற்குப் பாடுபட்ட தலைவர் தந்தை பெரியாரின் உயர்ந்த மனிதநேயச் சிந்தனை எங்கே என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்தான் இங்கு மக்கள் மத்தியில் சிலையாய் உயர்ந்து நிற்கிறார்.

தமிழ் ஓவியா said...

பெரியார் தோன்றியிரா விட்டால்....

தந்தை பெரியார் என்று ஒருவர் மட்டும் இங்கு இல்லை என்றால் நாம் யாரும் படித்திருக்கவும் முடியாது. கையில் பேனா பிடித்திருக்க முடியாது. கையில் குச்சியைப் பிடித்துக் கொண்டு மாடு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்திருப்போம். பெண்களைப் படிக்க வைக்க யாரும் முன்வரவில்லை. அப்போது தந்தை பெரியார் அவர்கள் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் படிக்க வேண்டும் என்றார்.

பெண் படிக்கவில்லையென்றால்...

சமூகத்தில் எண்ணிக்கையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் ஆண்களுக்கு இணையாகப் படிக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு படிக்கவில்லை என்றால் என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள். உடம்பில் வலது இடது என்று இரு பாகங்களும் சரி சமமாகத்தான் இருக்கிறது. அதில் ஒரு கை இயங்கி மறு கை இயங்காமல் இருந்தால் என்னவாகும்? அதற்குப் பெயர் பக்கவாதம் என்று பெயர். அதுபோல் சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக இருக்கும் பெண்கள் கல்வி கற்காமல் இருந்தால் பக்கவாதம் பிடித்த உடம்புபோல்தான் இருக்கும்.

அதனால்தான் 1929-ஆம் ஆண்டில் செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில் அய்யா அவர்களால் தீர்மானம் இயற்றப் பட்டது. அதில் பெண்கள் போலீஸ் வேலைக்கு வரவேண்டும். நாட்டின் பாதுகாப்புப் பணிக்கு ராணுவத்தில் பெண்களையும் சேர்க்க வேண்டும் என்று இயற்றப் பட்ட தீர்மானம்தானே இன்று பெண்களை உயர்த்தி இருக்கிறது. இன்று விமானம் ஓட்டப் பெண்கள் வந்து விட்டார்களே!

கல்வியறிவு இல்லாவிட்டால் சமூகம் கெட்டுப்போகும். அந்த சமூகத்தில் நிம்மதியாக வாழ முடியாது. 1992இல் பாபர் மசூதியை இடித்தபிறகு நாட்டில் நிம்மதியே போய் விட்டது. போலீஸ்காரர்கள் உட்பட எந்தத் துறையும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஏதோ லட்டு செய்கிற மாதிரி குண்டுகள் செய்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


புத்தர்பூமி என்று சொல்லப்படும் பர்மாவில் தீவிரவாதம் இருக்கிறது. புத்தம் சரணம் கச்சாமி என்று சொல்லப் படும் இலங்கையில் ரத்தம் சரணம் என்று ஆகிவிட்டது. அங்கு காட்டு மிராண்டி ஆட்சி நடக்கிறது. மக்கள் நிம்மதியாய் இருக்க முடியவில்லை. எல்லாம் மதவாதம்தான் காரணம். அதனால்தான் மதவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார் பெரியார்.

சமீபத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ரத்ததானம் கண்தானம் உறுப்புதானம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இன்றைக்கு ஒருவர் விபத்தில் பாதிக்கப் பட்டிருக்கிறார் அவருக்கு ரத்தம் தேவைப் படுகிறது என்று வைத்துக் கொள்வோம். பாதிப்புக்கு உள்ளானவர் அய்யங்கார் என்று வைத்துக் கொள்வோம். அவரது ரத்தவகை தாழ்த்தப் பட்ட ஒருவரிடம்தான் கிடைக்கிறது என்று மருத்துவர் சொன்னால் தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக மருத்துவரிடம் அந்த அய்யங்கார் சொல்வார் யாருடைய ரத்தமாக இருந்தால் என்ன டாக்டர் நான் பெரியார் கட்சியில் ஏற்கெனவே சேர்ந்து விட்டேன் என்று சொல்லி விடுவார். ரத்தத்திற்கு சாதியோ மதமோ கிடையாது என்பதை உணர வேண்டும்.

மேலும் அறிவை அனைத்திலும் பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள். ஜப்பான்காரனுக்கு என்ன ஏழறிவா இருக்கிறது? அவன் அறிவியல் கண்டு பிடிப்புகளைக் கண்டு பிடித்து உலகம் முழுவதும் பயன்படுத்தச் செய்கிறான். நமக்கு என்ன அய்ந்தறிவா இருக்கிறது? நமக்கும் ஆறறிவுதானே. ஆறாம் அறிவைப் பயன்படுத்த வேண்டுமல்லவா? பகுத்தறிவு வேலை செய்தால் அறிவியல் கண்டு பிடிப்புகளைக் கண்டு பிடித்து விடலாம்.

தமிழ் ஓவியா said...


கள்ளழகரின் தாமதம்

மதுரையில் ஆண்டுதோறும் அழகர் ஆற்றில் இறங்குகிறார். அதன் கதைகளைக் கேட்டால் அருவருப்பாக இருக்கும். தங்கையான மீனாட் சிக்கும் சுந்தரேசுவரருக்கும் நடக்கும் திருமணத்திற்கு தாமதமாக வருகிறார். அழகர் வருவதற்குள் திருமணம் நடந்து விடுகிறது. அதனால் கோபித்துக் கொண்டு ஆற்றில் இறங்குகிறார். ஒரு முறை என்றால் சரி. ஆண்டுதோறும் தாமதமாக வருவதும் ஆற்றில் இறங்குவதும் எந்த வகையில் நியாயம்? பகுத்தறிவின் துணை கொண்டு சிந்திக்க வேண்டும்.

அதனால் அனைவரும் பகுத்தறிவின் துணை கொண்டு சிந்திக்க வேண்டும் என்று நினைத்து செயல் பட்டவர் தந்தை பெரியார் அவர்கள். தாழ்ந்து கிடந்த மக்கள் அனைத்து வகையிலும் உயரச் செய்தவர் அவர். பெரியார் படம் அல்ல பாடம். சிலை அல்ல சீலம். இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் மேலும் மண்டல திக. மாணவரணிச் செயலாளர் கு.கருணாகரன், மண்டல இளைஞ ரணித் தலைவர் அ.சரவணன் பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் சோம. நீலகண்டன் , தலைமைக் கழகப் பேச்சாளர் மாங் காடு மணியரசன் பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.சரசுவதி, தேன்மொழி புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் சுப்பையா, பெரியார் பெருந்தொண்டர் இராமதிராசன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் வனவேந்தன், புதுக்கோட்டை நகரத் தலைவர் கண்ணன் செயலாளர் ரெ.மு.தருமராசு, பெரியார் சுயமரியதை திருமண அமைப்பாளர் ஜெயலெட்சுமி , மகளிரணி வீர.வசந்தா இராசேந்திரன், பட்டுக்கோட்டை மாவட்ட துணைத் தலைவர் அரு.நல்லதம்பி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் சி.வேலு, செயலாளர் மோகன், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் பெரியராசன் ஆலங்குடி நகரத் தலைவர் சீனிவாசன், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி செயலாளர் குழ.சந்திரகுமார், அறந்தாங்கி நகரச் செயலாளர் பன்னீர்செல்வம், மருத்துவர் மதியழகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சௌ.ஞானாம்பாள், நகர ப.க. அமைப்பாளர் முரளிதரன், நகர துணைத் தலைவர் அமானுல்லா, செயலாளர் யோகராஜ் , நாகுடி நகர செயலாளர் நெல்லுப்பட்டு ராமலிங்கம், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் சிவசாமி, கந்தரவகோட்டை ஒன்றியத் தலைவர் சித்திரைவேல், செயலாளர் சேகர் , பேராவூரணி ஒன்றிய செயலாளர் வை.சிதம்பரம் , அறந்தாங்கி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ப.மகாராசா, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் சவுந்தரராசன், மணமேல்குடி ஒன்றியத் தலைவர் பச்சமுத்து, ஆவுடையார் கோயில் நகர அமைப் பாளர் அழகப்பன், அரிமளம் ஒன்றியத் தலைவர் ராஜலிங்கம், கறம்பக்குடி அமைப்பாளர் சிவசாமி , கே.வி.கோட்டை அமைப்பாளர் நாகராசன், அறந்தாங்கி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், பொறியாளர் கதிர்வேல் , நகர அமைப்பாளர் சந்திரமோகன், பாண்டியராசன் பாண்டித்துரை , கிருபாகரன், ஜெகதீசன் புருசோத் தமன், புதுக்கோட்டைவிடுதி தோழர்கள் தங்கவேலு கருப்பையா உட்பட தோழர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் ராவணன் அவர்களின் மகள் மீனாதிருப்பதி நன்றி கூறினார்.

(செய்தி: ம.மு.கண்ணன்)


புதுக்கோட்டைவிடுதி சிலை திறப்பு விழாவில் சிறப்புச் செய்திகள்

இந்நிகழ்ச்சியில் அந்த ஊரின் பிரமுகரும் சி.பி.எம் கட்சியின் ஆலங்குடி நகரச் செயலாளருமான தோழர் ரகுநாதன் பேசும்போது இந்த ஊருக்கு மிகவும் சிரமப் பட்டு ராவணன் முயற்சி எடுத்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் மூலம் நிறைவேற்றி ரேஷன்கடை கொண்டு வந்தமைக்காக அய்யா அவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நன்றி சொல்வதற்காக ராவணனுடன் சென்றோம். அங்கு அய்யா ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

அய்யா அவர்கள் தங்கியிருந்தது ஒரு சிறிய அறை. திராவிடர் கழகச் சொத்து நிறைய இருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள். அய்யா அவர்கள் இந்த சிறிய அறையில் தங்கியிருக்கிறார்களே என்று வியந்து போனேன். அய்யா அவர்களின் இந்த எளிமைதான் அய்யாவை உயர்த்தியிருக்கிறது என்பதையும் தந்தை பெரியார் அவர்களால் சேமிக்கப் பட்ட சொத்துக்கள் மக்களுக்காகவும் மக்களின் உயர்வுக்காகவும்தான் என்பதை அன்றுதான் உணர்ந்தேன் என்று பேசினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய கூட்டுறவுத்துறை ஊழியர் குணசேகரன் என்பவர் பேசுகையில் இந்த ஊரில் தனியாக இருந்த ரேஷன்கடையை வேறு ஊருக்கு விட்டுக் கொடுத்தோம். ஆனால் பகுதி நேர ரேஷன்கடை கொண்டு வருவது என்றால் கூட எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பதை அய்யா ராவணன் அவர்கள் பாடுபட்டபோதுதான் உணர்ந்தோம். இந்த ஊருக்காகவும் அவரது கோரிக்கைக்காகவும் இந்த ஊருக்கு ரேஷன்கடை மீண்டும் வரக் காரணமாக இருந்த திராவிடர் கழகத்துக்கும் அதன் தலைவர் அய்யா வீரமணி அவர்களுக்கும் இந்த ஊர் மக்கள் மிகவும் நன்றிக்கடன் பெற்றிருக்கிறோம் என்று பேசினார்.

தமிழ் ஓவியா said...


காஞ்சிபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்து ஓடவில்லை, மதம் பிடிக்காததால் ஓடியது!


சென்னை புத்தகச் சங்கமத்தில் கவிஞர் வாலி - கவிதை மழை!

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் கவிஞர் வாலி அவர்களுக்கும், அபிராமி ராமநாதன் அவர்களுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களும் நினைவுப் பரிசினையும், நூல்களையும் வழங்கி சிறப்பு செய்தனர்.

சென்னை, ஏப்.26- மாற்றுக் கருத்து உடையவர்களையும் மதிக்கின்ற பண்பு தந்தை பெரியாரிடம் உண்டு. அதை வீரமணியிடமும் காண்கிறேன் என்றும், அறிவியல் வளராத காலத்திலேயே செல் போன் பற்றியும், சோதனைத் குழாய்க் குழந்தை பற்றியும் பெரி யார் பேசியிருக்கிறார் என்றும் கவிஞர் வாலி, அபிராமி ராமநாதன் ஆகியோர் பேசினர்.

சென்னை புத்தகச் சங்கமத்தின் சிறப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கிறது. மக்கள் குடும்பம் குடும்ப மாக வந்து புத்தகங்கள் வாங்கி, கருத்தரங்கங் களில் ஆவலுடன் கலந்து கொண்டு, குதூகலத் துடன் வீடு திரும்புவது அன்றாட நிகழ்வாகி விட்டது. இதை, எட்டா வது நாளும் (25.04.2013) எண்பித்தது.

நகைச்சுவை எனும் சம்மட்டி

தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சிகளில் அன்றாடம் பேச்சு வழக்கில் இருப்பதை யும், மூடநம்பிக்கையை யும் சாடுகின்ற வகையில் கேள்வி பதில் பாணியில் அமைந்த டாடி எனக் கொரு டவுட்டு நிகழ்ச்சி ஏற்கெனவே தொலைக்காட்சிகளில் வெற்றி பெற்ற நிகழ்ச்சி என்பதால், மக்கள் பெரு வாரியாக வந்திருந்தனர். அதை நன்கு பயன் படுத்திக் கொண்ட திண்டுக்கல் சரவணன், சேட்டை செந்தில் இரு வரும், நகைச்சுவை என்ற சம்மட்டியால் மூடநம்பிக்கைகளையும், தவறான பேச்சு வழக்கு களையும் அடித்து நொறுக்கினர். இருவரும் மக்களை நொடிக்கு நொடி சிரிக்கவும் சிந்திக் கவும் வைத்து விட்டனர்.


தமிழ் ஓவியா said...

படிக்கும் பழக்கம் அதிகமாக வேண்டும்

கருத்தரங்கம் தொடங்கியது. பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொழிலதிபர் அபிராமி ராமநாதன் தலைமையேற்றார். கவிஞர் வாலி சிறப்புரை வழங்கி சிறப்பித்தார். வரவேற்புரையைத் தொடர்ந்து, அபிராமி ராமநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி உரை யாற்றினார். அவர் தனது உரையில், புத்தக கண் காட்சிக்கு இவ்வளவு பேர் வந்திருப்பது மகிழ்ச் சியைத் தருகிறது என்று தொடங்கினர். இத்தனை பேரும் புத்தகங்களை படிக்கிறார்கள் என்றெண்ணும் போது எனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.

ஏனெனில், நானும் படிக்கிற பழக்கம் உள்ளவன் என்பதால்தான் என்று, தனது மகிழ்ச்சிக்கு காரணமும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 15-20 - ஆண்டுகளுக்கு முன்பு சினிமாத் தொழிலே சாகும் நிலையில் இருந்ததாகவும், தான் அந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்காக டிக் கெட்டை வீட்டுக்கே சென்று கொடுக்கும் முறை யை அமுல்படுத்தியதாகவும், கூறிவிட்டு, இது போன்ற புதிய உத்திகளை பதிப்பாளர்களும் ஏன் செய்யக் கூடாது என்ற கேள்வியையும் வைத்தார்.

படிக்கிற பழக்கத்தை பிள்ளைகளுக்கு ஏற்படுத்துங்கள்

மேலும், ஒரு நுட்பமான கருத்தை முன் வைத்தார். அதாவது, வீரபாண்டிய கட்ட பொம் மனின் வரலாற்றைப் படிக்காமல், வீரபாண்டிய கட்டபொம்மன் - திரைப்படத்தைப் பார்த்தால், சிவாஜி கணேசன்தான் வீரபாண்டிய கட்ட பொம்மன் என்ற கருத்து நம்முள் நிலை பெற்று விடுகிறது. உண்மையை அறிய வேண்டுமானால், அல்லது இந்த கருத்து மயக்க நிலையிலிருந்து விடுபட வேண்டுமானால் புத்தகங்களை படிக்க வேண்டியது அவசியம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தான் சேகரித்த சுமார் 5000 புத்தகங்களை ஒரு நூலகம் போல வீட்டில் வைத்திருப்பதாகவும், அதை என் பிள்ளைகள் தொட்டுக்கூட பார்ப்ப தில்லை என்று குறைபட்டுக் கொண்டு, என் பேரப் பிள்ளைகளுக்காவது படிக்கிற பழக்கத்தை உண் டாக்க வேண்டும் என்று எண்ணியிருப்பதாக குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

புத்தக வங்கிக்கு ஆதரவு

மேலும் அவர், சென்னை புத்தகச் சங்கமத்தின் புத்தக வங்கித் திட்டத்தைப்பற்றி குறிப்பிட்டு, தான்கூட - தன்னிடம் இருக்கும் புத்தகங்களில் - 500 புத்தகங்களை கொண்டு வந்து புத்தக வங்கிக்கு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுவிட்டு, புத்தகங்களின் அவசியம்பற்றி பெரியாரை சுட்டிக்காட்டி, அதாவது 70 ஆண்டுகளுக்கு முன்பே, அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில், செல்போன் பற்றியும், சோதனைக் குழாய்க் குழந்தை பற்றியும், தந்தை பெரியார் பேசியிருக்கிறார். இதை அரிய வரலாற்றை நாம் எதிலிருந்து பெற முடியும். புத்தகத்திலிருந்து தானே என்று சுட்டிக்காட்டி தன் கருத்தின் அழுத்தத்தை மேலும் கூட்டினார். தொ டர்ந்து பேசிய அவர், ஆகவே படிக்கும் பழக்கம் அதிகமாக வேண்டும். அதற்கு, இந்தப் பழக்கத்தைப் பிள்ளைகளிடம் வலியுறுத்த வேண்டும். அவர் களுக்கு பிடித்தால் தொடருவார்கள் - என்று கூறி, புத்தக விரும்பிகளின் கடமை அது என்பதை சொல்லாமல் சொல்லி, இது ஒரு கலை. அது அழிந்து விடாமல் இருக்க இதுபோன்ற புத்தக சங்கமங்கள் தொடரட்டும் என்று கூறி அமர்ந்தார்.

தொடத் தொடக் கவிதைத் தேன் சொட்டியது

அபிராமி ராமநாதனின் தலைமையுரையைத் தொடர்ந்து, கவிஞர் வாலி தனது சிறப்புரையை நிகழ்த்தினார். திண்டுக்கல் சரவணனின் நிகழ்ச்சியில் விநாடிக்கு விநாடி சிரிப்பும் சிந்தனையும் என்றால், வாலியின் உரையில் நொடிக்கு நொடி சிரிப்பும் சிந்தனையும் தெறித்து விழுந்தது. அவர் தம் உரையில், தொடக்கத்தில் அனைவரையும், புத்தக அன்பர்களே! என்று விளித்தார். முன்னதாக அபிராமி ராமநாதன் பேசுகையில், சினிமா தொழிலில் இருக்கும் சிரமங்களை சொல்லியிருந் தார். அவருக்கு ஆறுதல் சொல்லுவது போலவும், நகரத்தார் தமிழுக்கு செய்த சிறப்பை எடுத்துக் காட்டுவது போலவும், தான் எழுதிய கவிதை ஒன்றை நினைவு கூர்ந்தார். அதாவது, அகரத்தில் தொ டங்கி, னகரத்தில் வைத்து சிகரத்தில் ஏற்றியவர் நகரத்தார் - என்பதுதான் அது. இதைக் கேட்டு அபிராமி ராமநாதன் தலையசைத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து தன்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்த திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களை நினைவு கூர்ந்து பேசும்போது, சட்டென்று, காந்திக்கு பிடித்தது கிராமராஜ், வாஜ்பேயிக்கு பிடித்தது ராமராஜ், நாட்டுக்கு பிடித்தது பஞ்சாயத்து ராஜ், உலகம் வாழத் தேவை அன்புராஜ்.. அன்புராஜ் என்றதும், அரங்கினர் கைதட்டி ஆர்ப்பரித்தனர். இந்த திடீர் கவிதை பொதுச் செயலாளரை சற்று வெட்கப்பட வைத்துவிட்டது அபிராமி ராமநாதனைப் போலவே.

தொடர்ந்து பேசிய கவிஞர் வாலி, வீரமணியின் பண்பு, செயல்திறன் என்னை வியக்க வைத்திருக் கிறது. அது இவரிடம் வந்திருக்கிறது. வாழ்த்துகள் என்றார்.

தமிழ் ஓவியா said...

எது கவிதை

மேலும் அவர், மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ என்றெல்லாம் இருந்தாலும் கவிதை புரிய வேண்டும். அது சமூகத்திற்கு பயன்பட வேண்டும். பயன்பாட்டைப் பொறுத்துத்தான் அதை கவிதை என்று சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு விட்டு தந்தை பெரியாரின் கருத்தும் இதுதான் என்று தனது கருத்துக்கு வலு சேர்த்தார். தொடர்ந்து அவர், பெரியார் திடலுக்கும் எனக்குமான தொடர்பு இப்பொழுது ஏற்பட்டது. ஆனால் பெரியாருடன் 40 ஆண்டுகளுக்கு முன்பே பழக்கம் ஏற்பட்டு விட்டது என்று கூறியதோடல்லாமல், 40 ஆண் டுகள் பின்னோக்கியும் சென்று ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டி பேசினார். அதாவது தான் சிறுவயதாக இருந்த போது, எம்.ஆர்.பாலு எழுதிய பேராசை பிடித்த பெரியார் என்ற நாடகத்தில், பெரியாரையே தலைமையேற்கச் செய்ய வேண்டும் என்று திருச்சி சௌந்திரராஜன் , நான் இருவரும் சென்று பெரியாரிடம் கேட்டோம். எங்களை எழுந்து நின்று வரவேற்றார் என்று குறிப்பிட்டு விட்டு, நான்கு வயதுக்குள் சென்றாலுமே எழுந்து நின்று வாங்க என்று வரவேற்பார். பெரியார் என்பதை சேர்த்து சொன்னார். அரங்கினர் அதை ஆமோதித்து கையொலி செய்தனர். உண்மைத் துறவி பெரியார்
தொடர்ந்து அவர், தாங்கள் வந்த காரியத்தை சொன்னதும், நாடகத்தின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, எனக்கு ஆசையே கிடையாதே. பிறகு எப்படி பேராசை இருக்கும் என்றார் என்று குறிப்பிட்டுவிட்டு, சென்னை ராஜதானிக்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க பெரியார் .. என்பது தான் நாடகத்தின் கருத்து என்று கூறியதை நினைவு கூர்ந்தார். அந்த நாடகத்தில் தான் எழுதிய பாடல் ஒன்றையும் குறிப்பிட்டார். அதாவது, இவர்தான் பெரியார் - இவரை எவர்தான் அறியார் - என்பது தான் அது! இப்படி பெரியார் பற்றற்று இருந்த தால்தான் இந்த சமூகத்தில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது என்றார்.

நாணயமற்ற ஆத்திகனை விட
நாணயமான நாத்திகனே மேல்

தொடர்ந்து தலைப்புக்கு வருவதும், பிறகு விலகிச் செல்லுமாறு இருந்த கவிஞர் வாலி, புத்தகம் படிப்பதை பற்றி குறிப்பிடுகையில், ஒரு புத்தகத்தை மேலிருந்து கீழே படித்தால், நீங்கள் கீழிருந்து மேல் நோக்கிச் செல்லுவீர்கள் - என்று ஒரு கவிதைத் துணுக்கு சொன்னார். தொடர்ந்து தான் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் இருந்ததையும் இரவு 8.30 மணிக்கு வீரமணி தன்னை பார்க்க வந்ததையும் குறிப்பிட்டு விட்டு, தனக்கு பேச்சே வராமல் தவித் ததையும் சொல்லி, வீரமணி தனக்கு ஆறுதல் தரும் விதமாக, தானும் இது போன்ற ஒரு நிலையை கடந்துதான் வந்துள்ளேன். ஆகவே மூன்று மாதத் தில் சரியாகி விடும் என்று கூறியதையும் குறிப்பிட்டு விட்டு, நாணயமற்ற ஆத்திகனை விட, நாணயமான நாத்திகனே மேல் - என்று மேற்கண்ட சம்பவத் திற்கு பொருத்தமான விவேகானந்தரின் வாசகம் ஒன்றையும் கூறியதும் மக்கள் வியந்து கை தட்டினர்.
ஒரு சாண் வயிறு இல்லாட்டா

தமிழ் ஓவியா said...


இங்கு ஏது கலாட்டா

தன் நினைவலைகளிலிருந்து மீளாவிட்டாலும், அதனூடே தலைப்புக்கும் வந்தார். சிவகாமி - என்று ஒரு படத்தில் ஒரு பாடல். அதன் சூழல், இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருக் கிறது. அரிசி கிடையாது. கோதுமைதான் அதுவும் ரேசனில்... இந்த நிலையை பிரதிபலிக்கக்கூடிய ஒரு பாடல் எழுத வேண்டும். தஞ்சை ராமையாதாஸ் பாடல் எழுதுகிறார். பாருங்கள் என்று சொல்லி விட்டு, ஒரு சாண் வயிறு இல்லாட்டா, இங்கு ஏது கலாட்டா - என்று எழுதியதைச் சொன்னவுட னேயே மக்கள் கைதட்டினர். அதை சட்டென்று பிடித்துக் கொண்ட அவர், இதுதான்,எவ்வளவு எளிமையாக புரிந்து விடுகிறது. இப்படித்தான் பாடல் இருக்க வேண்டும் என்று தொடக்கத்தில் எதுவாக இருந்தாலும் புரிய வேண்டும், மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற கருத்தை மேலும் அழுத்தமாக பதிய வைத்தார்.

கலைஞரும் கவிஞரும்

தொடர்ந்து பேசிய அவர், கலைஞரை நினைவு கூர்ந்தார். கலைஞர் தனக்கு 40 ஆண்டுகால நண்பர் என்று குறிப்பிட்டார். அவரிடம்தான் நிறைய பரிசுகள் பெற்றிருப்பதை கூறி பெருமைப்பட்டு கொண்டார். தொடர்ந்து தன்னுடைய கவிதை ஒன்றை குறிப்பிட்டு பேசினார். நிஜ கோவிந்தா - என்று பஜ கோவிந்தா-வுக்கு பதிலாக வைத்த தலைப்பில், காஞ்சிபுரத்தில் கோயில் யானைக்கு தென்கலை நாமம் போடுவதா, வடகலை நாமம் போடுவதா என்ற சர்ச்சை, வழக்கு மன்றம் சென்று வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருக் கையில் அந்த யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி விட்டது. அப்போது யானைக்கு மதம் பிடித்ததால் ஓட வில்லை. மதம் பிடிக்காததால் ஓடிவிட்டது - என்று எழுதியதைக் குறிப்பிட்டதும் வெடிச் சிரிப்பும், கைதட்டலும் ஒருங்கே எழுந்தது. அந்த வெடிச்சிரிப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சிரிப்பு வெடியை எடுத்து போட்டார் கவிஞர் வாலி.

அதாவது தனக்கு பரிசளிக்க இருந்த கலைஞர் இந்த கவிதையை சுட்டிக்காட்டி, இந்த ஒரு கவிதைக்கே லட்ச ரூபாயை பரிசாகத் தரலாம் என்று அறிவித்ததையும், தொடர்ந்து கலைஞர், இதையே நான் எழுதியிருந்தால் சோ வென்று மழை பெய்திருக்கும் என்று குறிப்பால் உணர்த்திச் சொன்னதாக சொன்னவுடன் சிரிப்பும் கை தட்டலும் இடி மின்னலுடன் மழையாக பொழிந்து அரங்கை அதிர வைத்தது.

தமிழ் ஓவியா said...

கவிதை துணுக்குகள்

கூனியின் முதுகில் மண்ணுருண்டையில் ராமன் அடித்தான் பின்னாளில் அவள் அவ னுக்கு மண்ணே இல்லாமல் அடித்தாள் - என்றும், இந்த மனிதர்கள் தம்மைக் கொண்டு நிறைய சிலுவைகள் செய்கிறார்கள். ஏன்? தம்மைக் கொண்டு ஒரு இயேசுவை தயாரிக்க வில்லை, என்றும், நான் அம்மா, அண்ணன், தம்பி, தங்கை அனைவரும் பீடி கத்துகிறோம். ஏன்னா, அப்பன் ஊரைச் சுத்துறான், புத்தகங் களை காசு கொடுத்து வாங்கிப் படிப்பவன் வாசகன். இரவல் வாங்கிப் படிப்பவன் யாசகன் - என்று விட்டுவிட்டும், விடாமலும் சொல்லிக் கொண்டே வந்து, இறுதியாக புத்தகம் பற்றிய கவிதை ஒன்றை சொன்னார்.

இன்றைய இளைஞனே! புகு புத்தகச் சந்தை! புகுந்து புறப்படுகையில், உன்னுள்ளே விளைந்திருக்கும் வித்தகச் சிந்தை! நல்ல நூல் களுக்காக நாலு காசு செலவளி! அது காட்டும் நன்னிலைக்கு புது வழி! இயற்கை நமக்களித்தது இரண்டு கால்! அந்த இரண்டு காலோடு இன்னும் ஒரு கால்! எப்படி? புத்தகம் இருக்கும் அப்படி! என்று ஒரு நீண்ட கவிதையைச் சொல்லி இறுதியாக, சமுதாயத்தை மாற்றிய முக்கியத் தலைவர்களையும் சொல்லி, அம்பேத்கர் படி! கலைஞர் படி! பெரியார் படி! வீரமணி படி! இந்தப் படிதான் உன் வாழ்வின் வெற்றிப்படி! - என்றும் நிறைவு செய்தார். கருத்தரங்கத்தின் பய னைப் பெற்ற நிறைவுடன் அரங்கினர் கைதட்டினர்.

டாடி எனக்கொரு டவுட் எனும் தலைப்பில் நகைச்சுவை விருந்து படைத்த திண்டுக்கல் சரவணன், சேட்டை செந்தில் ஆகியோருக்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு மற்றும் நூல்கள் அளித்துச் சிறப்பு செய்தார். (சென்னை புத்தகச் சங்கமம் - 25.4.2013)

கருத்தரங்கம் நிறைவு பெற்றவுடன், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் இருவருக்கும் சிறப்பு செய்தார். தொடர்ந்து இன்றைய (25.4.2013) சிறப்புப் பரிசை கவிஞர் வாலியும், முதல் பரிசை அபிராமி ராமநாதனும் முறையே சென்னை சசிக்குமார், சுமதி ஆகியோரைத் தெரிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அடுத்தப் படியாக கே.சேகர், பட்டுக்கோட்டை வித்யா, வேலூர் ஆர். கண்ணன், சென்னை மோகன்ராம், புதுக்கோட்டை தமிழ்மாறன், சென்னை கே.அருண் குமார் ஆகியோரும் தேர்வு பெற்றதாக அறிவிக்கப் பட்டது. நேற்று தேர்வானவர்களுக்கு இன்று பரிசளிக்கப்பட்டது. பரிசளிக்கும் நிகழ்வை பிரின்சு என்னாரெசு பெரியார் ஒழுங்கு செய்தும், நன்றி கூறியும் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு, வீ.அன்புராஜ், மயிலாடுதுறை தளபதிராஜ், திருமகள் இறையன், வி.சி.வில்வம், திரைப்பட கவிஞர் பழனிபாரதி, கயல் தினகரன், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களான வேணுகோபால், புகழேந்தி மற்றும் எத்திராசன், வாசுதேவன், லட்சுமி ஆகியோரும், ஏராளமான பொதுமக்களும் அரங் கம் நிறைந்தும், பால்கனியில் அமர்ந்தும் கருத்து களை செவிமடுத்து சிறப்பு செய்தும், பெற்றும் மகிழ்ந்தனர்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


வளருமா?

செய்தி: அட்சய திரிதியையில் எந்தப் பொருளை வாங்கினாலும் அது பல மடங்காகப் பெருகும்.

சிந்தனை: அப்படியா? ஒரு மொடா குடிகாரன் பாட்டில்களை அன்று வாங்கினால்...?

தமிழ் ஓவியா said...

பரிதாபத்துக்குரிய பூசாரிகள்

கோயில் பூசாரிகள் மாநாடு நாளை சென்னையில் நடக்கிறதாம் - அவர்களின் வேண்டுகோள்கள் என்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் 6 லட்சம் கிராமக் கோயில் பூசாரிகள் உள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு இரு முறை தமிழ்நாட்டில் உள்ள பெரிய பெரிய கோயில்களுக்கு வழிபடக் குடும்பத்துடன் சென்றால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல், சிறப்புத் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டுமாம்.

அடேயப்பா, எப்படிப்பட்ட கோரிக்கை!

அற்பம்! அற்பம்!! ஏன் இவர்களின் சொந்த கோயில்களில் உள்ள கடவுள்களுக்குப் பவர் கட்டா?

தமிழ் ஓவியா said...


வரியில்லை தடையுண்டு



சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ராமசுப்பிர மணியன் அவர்கள் சென் னையில் மறைமுக வரி வல் லுநர்கள் கூட்டமைப்பின் ஆண்டு விழாவில் பேசும் போது சிந்திப்பதற்கு மட்டும்தான் இந்த நாட்டில் வரியில்லை என்று அழ காகக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைதான் ஆனால் சிந்திப்பதற்கு இந்த நாட் டில் தடை இருந்தது. எதற் கெடுத்தாலும் நம்பு - நம் பினால் மோட்சம் நம்பா விட்டால் நரகம் என்ற அச் சுறுத்தல் உண்டே!

தமிழ் ஓவியா said...


தானாக வீழ்ந்துவிடும்



பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை, 20.11.1964)

தமிழ் ஓவியா said...


திக்கெட்டும் பரவும் பெரியார் திடல்!


- வி.சி.வில்வம்

2012 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தின் ஓர் இறுதி வாரத்தில் , தமிழ்ப் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்விணையர் கிடைக்க, மன்றல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பெரியார் திடல் நிரம்பிக் கிடந்தது. அதைத் தொடர்ந்து தமிழர் திருநாள் பொங்கல் விழாவிலும் கூடி மகிழ்ந்தார்கள்!

இதோ ... இப்போதும் போய் பாருங்கள்! தினமும் ஆயிரக்கணக்கில் வந்து போகிறார்கள்; வாங்கிப் போகி றார்கள்! ஆம்... சென்னை புத்தகச் சங்கமம் குறித்துப் பேசுகிறோம்!

தமிழ்நாட்டின் நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், தொலைக் காட்சிகளிலும் சென்னை புத்தகச் சங்கமம் குறித்துப் பார்த்திருப் பீர்கள்! "ஹலோ எப்.எம்" வழியே கேட்டிருப்பீர்கள்! ஏப்ரல் - 23 உலகப் புத்தக நாள்! அப்புத்தக நாளுக்கே, புத்தாக்கம் கொடுக்கும் வகையில், தனது வீச் சைப் பதிவு செய்து வருகிறது சென்னை புத்தகச் சங்கமம்!

ஏப்ரல் 18 - இல் தனக்கான தொடக் கத்தைக் கொண்டாடி மகிழ்ந்தது. ஏப்ரல் 19 முதல் 27 வரை மாபெரும் புத்தகக் கண் காட்சியைத் தன்னகத்தே கொண்டு அது பய ணித்து வருகிறது.

தமிழ் ஓவியா said...

பொதுவாக விழாக் காலங்கள் மற்றும் குறிப்பிட்ட மாதங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறும். ஆனால் முதன்முறையாக உலகப் புத்தக நாளை முன்னிட்டு நடை பெறுவது இதன் மொத்தச் சிறப்பு! "புத்தகக் கண்காட்சி என்றால் புத்தகங்கள் விற்பனை", என்பது தான் அதன் பொருள். ஆனால் அந்தப் பொருளையே புரட்டிப் போட்டு, புது வரலாறு எழுதி வருகிறது இப்புத்தகச் சங்கமம்! இது

பதிப்பாளர்கள் சங்கமம்:

இந்தப் புத்தகச் சங்கமத்தில் பதிப்பாளர்கள் மட்டும்தான்! விற்பனையாளர்கள் கிடையாது. இரண்டுக்குமான வேறுபாடு என்ன ? விற்பனையாளர்கள் பங்கு பெற்றால் குறிப்பிட்ட ஒரே புத்தகங்கள் நிறைய கடைகளில் இருக்கும். பார்த்த புத்தகத்தையே பார்க்க வேண்டிவரும். குறிப்பிட்ட எழுத்தாளர்களின் நூல்களுக்கு மட்டுமே முதல் வரிசை கிடைக் கும். அப்படி இருக்கலாமா? கூடாது. எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதானே திடல் பண்பாடு

அதன் அடிப்படையிலே இந்த ஏற்பாடு. ஆம்! இது பதிப்பாளர் களுக்கான சங்கமம்! ஒரு அரங்கில் நீங்கள் காணும் நூல்களை, வேறொரு அரங்கில் காண முடி யாது. (திருக்குறள், பாரதிதாசன் கவிதைகள் போன்ற ஒரு சில விதிவிலக்கு) தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த அனைத்து நூல்களையும் நீங்கள் வாங்குகிறீர்களோ இல்லையோ, உங்களால் காண முடியும், ரசிக்க முடியும், வியக்க முடியும்! எண் ணற்ற நூல்களும், குட்டி, குட்டி எழுத்தாளர்களும் உங்களுக்கு அறிமுகம் ஆவார்கள். இது மட்டுமா கண்காட்சி சிறப்பு? இல்லை யில்லை...!

இந்தப் பதிப்பாளர்கள் மற்றும் அவர்களின் பணியாளர் களுக்குப் பயிற்சிப் பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாசகர்கள் மற்றும் பொது மக்களை எவ்வாறு அணுகுவது, அவர்களின் தேவைகளைப் புரியும் விதம், நூல் களின் சிறப்புகள் குறித்து எடுத்துக் கூறுவது, மொத்தத்தில் மேன்மை பொருந்திய அணுகுமுறைகளை வளர்த்துக் கொள்ளும் விதம் குறித் தெல்லாம் பயிற்சிப் பட்டறையில் தீட்டிக் கொடுக்கப்படுகிறது. "நடந் தது கண்காட்சி, முடிந்தது விற்பனை", என்பதாகவே பழகிய பதிப்பாளர் நண்பர்கள், இந்தப் பயிற்சிப் பட்டறை குறித்து மெய்சிலிர்த்து தான் போனார்கள். நம் குழந்தை களிடம் பிறர் அன்பாகப் பழகினால் யாருக்குத்தான் பிடிக்காது? மக்கள் சங்கமம் :

மே மாதம் கல்வி நிலையங்கள் விடுமுறை. எல்லோரும் ஊர் செல்வார்கள், மாதக் கடைசி, புத்தகக் கண்காட்சிக்குப் பெரியார் திடல் புதிய இடம், கிரிக்கெட் வேறு நடை பெறுகிறது என்றெல்லாம் வார்த் தைகள் வந்து விழுந்தன. ஆனாலும் என்ன, மக்கள் வந்து குவிந்தனர். மக்கள் என்றால் பல்வேறு தரப்பு மக்கள்.

மடிசார் கட்டிய மாமி, தங்கள் வழக்கப்படி சுருட்டிக் கட்டிய வேட்டியுடன் அய்யர்வாள், உருது பேசும் இஸ்லாமியப் பெண்கள், வெள்ளை அங்கியுடன் கிறிஸ்துவப் பெண்கள், வெளிநாட்டு மனிதர்கள், மாற்றுத் திறனாளிகள் என வகை வகை மனிதர்கள் ஒன்று கூடி பெரியார் திடலை மக்கள் சங்கமமாக மாற்றிவிட்டார்கள்.

குழந்தைகள் சங்கமம்!

தமிழ் ஓவியா said...

புத்தகக் கண்காட்சியில் குழந் தைகள் சங்கமம் வெகு சிறப்பு. அவர்கள் உலகமே அங்கு தனிதான் ! கதைப் படைத்தல், கோட்டுச் சித்திரம் வரைதல், பேச்சுத் திறன் வளர்த்தல், சூழலியல், கவிதை எழுதுதல், நடிப்புக் கலை, வித்தியாசமான விளையாட்டுகள், வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டும் போட்டிகள் மற்றும் பயிற் சிகள் என குழந்தைகள் மகிழ்ந்திட வாய்ப்புகள் குவிந்துள்ளன. குழந் தைகளுக்கான பயிற்சியாளர்கள் குழந்தைகளாகவே மாறி ஆடுவதும், பாடுவதும், குதிப்பதும், சிரிப்பது மான காட்சிகள் தேர்ந்த ஒருங் கிணைப்பின் ஆகச் சிறந்த அடையாளங்கள் ஆகும். போட்டிகளில் வெல்ல முடியா மல் போன குழந்தைகளுக்கும் கழுத்தில் பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கி, அவர்களை உயர உயரத் தூக்கிப் பிடிக்கும் அழகை இங்கன்றி வேறெங்கு நாம் காண முடியும்!

பல்வேறு சங்கமங்கள்:

ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்படவில்லை; செதுக்கப்பட்டுள்ளன! தினமும் பேசும் ஒவ்வொரு பேச்சாளர்களும் மனதில் நின்று போகிறார்கள். பேச்சாளர்களின் சங்கமம் மேடையை அதிர வைக்கின்றன. இது பொழுது போக்குப் பேச்சுகள் இல்லை, புலர வைக்கும் பேச்சுகள் ! அதேபோன்று சமூகக் கருத்துகள் இடம் பெறும் நகைச்சுவைச் சங்க மத்தில் தமிழக இளைஞர்கள் படுத்தும்பாடு சொல் லிமாளாது. அழகழகாய் சிந்தனை களை அள்ளித் தூவுகிறார்கள். இலவசமாய் வயிற்று வலியும் தரு கிறார்கள்!

புத்தக வங்கி :

பண வங்கி தெரியும் தெரியும், இரத்த வங்கி தெரியும். அது என்ன புத்தக வங்கி? நாம் பயன்படுத்தி முடித்த புத்தகத்தைப் பிறரும் பயன்படுத்தி மேன்மை யடைய பிறருக்கு நன்கொடை யாகக் கொடுத்து உதவுவதே புத்தக வங்கி ஆகும். இந்த ஏற்பாடும் இப்புத்தகக் கண் காட்சியில் இருக்கிறது. அவ்வாறு புத்தகம் வழங்கும் அன்பர்களுக்கு "புத்தகக் கொடைஞர்" எனும் பெயரிட்டு சான்றிதழும் வழங்கப்படு கிறது. இப் புத்தகங்கள் கிராமப்புற நூலகங்களுக்கு அளிக்கப்பட்டு, எண்ணற்ற இளைஞர்களும், மாண வச் செல்வங்களும் பயன்பெற உதவு கிறது. அவ்வகையில் நன்கொடை யாக வந்த புத்தகங்கள் ஆயிரத்தைத் தொடவிருப்பதும் ஆச்சர்யப் பட்டியல்களில் ஒன்று. அதேபோன்று இக்கண்காட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறு கிறது.

புத்தகக் கண்காட்சிக்கும், பரிசோதனை முகாமுக்கும் என்ன தொடர்பு எனச் சிலர் கேட்கிறார் கள். நல்ல செயல்கள் செய்வதற்குக் காரணங்கள் எதுவும் தேவை யில்லை. அதேநேரம் கண்காட்சி - கண் சிறப்பாக இருந்தால் தான் காட்சியைப் பார்க்க முடியும். எனவே புத்தகக் காட்சிக்கு வரு கிறவர்கள் கூடுதல் பயன் பெற வேண்டியே இந்த ஏற்பாடு களையும் சிறப்பாகச் செய்திருக் கிறார்கள். அதோடு முடிந்ததா? இல்லை. கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதிச் சீட்டுக் கொடுத்து, அதில் அவர்களின் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, தினமும் சிலரைத் தேர்ந்தெடுக்கின்றனர். முதல் பரிசாக திறன் பேசி என அழைக்கப்படும் கணினி சாதன மும், பல்வேறு தொகைகளில் புத் தகப் பரிசுகளும் வழங்கி மகிழ்விக் கின்றனர். கடற்கரைப் பேரணி:

உலகப் புத்தக நாளை முன் னிட்டு ஏப்ரல் 21 ஆம் தேதி, புத்தக வாசிப்புக் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம், சென்னை மெரி னாவில் நடைபெற்றது. பல நூறு மாணவர்கள், புத்தகப் பதிப்பாளர் கள், நடைப் பயிற்சியாளர்கள், பொது மக்கள் எனத் திரண்ட அந்தப் பேரணியைத் திரைப்பட நடிகர் விவேக் தொடங்கி வைத் தார்.

உழைப்பாளர் சிலை தொடங்கி, காந்தி சிலையில் முடிந்த அந்தக் கடற்கரை நடைப்பயணம் அவ் வளவு அழகு; அவ்வளவு நேர்த்தி ! குழந்தைகளும், மாணவர்களும் வாசிப்பின் நேசிப்புக் குறித்த பதாகைகளை தங்களின் மெல்லிய கரங்களில் ஏந்தி, வலுவான சமூகத்திற்கு வித்திட்டனர்.

இவ் வாறாக ஒரு புத்தகக் கண்காட் சியில் புத்தகங்கள் விற்பனை என்பதைக் கடந்து, வேறு என் னென்ன செய்ய முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டி, சாதனைப் படைத்திருக்கிறார்கள். ஒரு நாளின், ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்காமல் அனைவருக்கு மான நிகழ்ச்சியாகச் செதுக்கி இருக்கிறார்கள். அந்த அழகை எல்லோரும் பார்த்து மகிழ வேண் டும். சிற்பிக்கு நமது பாராட்டுகள் !

தமிழ் ஓவியா said...


ஊருக்கு அருள்வாக்கு சொன்ன சாமியார் கொலையுண்டு செத்தார்


சென்னை, ஏப்.26- சென்னை சூளையில் அருள்வாக்கு சொல் லும் சாமியார் படு கொலை செய்யப்பட் டார். நடுரோட்டில் அவரை வெட்டி சாய்த் தனர்.இதுதொடர்பாக 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சென்னை சூளை சி.கே.பி. தெருவில் வசித்து வந்தவர் சிறீ பாச்சி சுவாமிகள். இவ ரது உண்மையான பெயர் ஜானகிராமன் (வயது 42). இவரது மனைவி பெயர் இந்திரா (38). 9 ஆவது வகுப்பு படிக்கும் பாலாஜி என்ற மகனும், 6 ஆவது வகுப்பு படிக்கும் மாதவன் என்ற மகனும் உள்ளனர்.

இவர் சூளை பகுதி யில் கடந்த 20 ஆண்டு களாக ஆன்மிக பணி செய்து வந்தாராம். அங் குள்ள அங்காளம்மன் கோவிலில் உட்கார்ந்து, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அருள் வாக்கு சொல்வாராம். மேலும் தனது வீட்டு முன்பு, பெரியபாளை யம் பவானி அம்மன் கோவிலையும் சிறிய அளவில் கட்டி வழி பட்டு வந்தாராம். தனது வீட்டில் வைத்து பக்தர் களுக்கு தினமும் குறி சொல்வாராம். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சிறீபாச்சி சாமியார் மிக வும் கொடூரமாக நடு ரோட்டில் வெட்டி படு கொலை செய்யப்பட் டார். இவர் நேற்று அதிகாலையில் எழுந்து பால் பாக்கெட் வாங்கி விட்டு கோவிலை திறந்து பூஜை செய்தாராம்.

பின் னர் டீ சாப்பிட ரோட் டுக்கு வந்தார். அப்போது காலை 6.30 மணி இருக் கும். திடீரென்று ஒரு கும்பல் அரிவாளுடன் பாய்ந்து வந்தனர். பாச்சி சாமியாரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவருக்கு 12 இடங்களில் வெட்டு விழுந்தது.

அவரது கழுத்தில் படிக மாலைகள் போட் டிருந்தார். கொலையா ளிகள் அந்த மாலையை கழற்றி எடுத்து விட்டு, அதன்பிறகுதான் கழுத் தில் அரிவாளால் வெட்டி உள்ளனர். ரத்த வெள் ளத்தில் கீழே சாய்ந்த பாச்சி சாமிகளை உடன டியாக அரசு பொது மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவு டன் காவல்துறை இணை ஆணையர் சங்கர், துணை ஆணையர் பவானீஸ் வரி, உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, ஆய் வாளர்கள் பழனிவேலு, வீரக்குமார்,ஜெயக்குமார் ஆகியோர் காவல்துறை யினருடன் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார் கள். கொலையாளிகளை பிடிக்க உடனடியாக இரண்டு தனிப்படையி னர் களத்தில் இறக்கப் பட்டனர்.

தனிப்படை காவல் துறையினர் ஒரு பக்கம், கொலையாளிகளை தேடிய நிலையில், வீரா, அப்பு, சாரதி, சுரேஷ், கோபால் என்ற 5 பேர், சைதாப்பேட்டை 18 ஆவது நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர் கள் 5 பேரும் பாச்சி சாமி யார் வசித்த சி.கே.பி. தெருவைச் சேர்ந்தவர் கள்தான். இவர்கள் 5 பேரும், நீதிமன்ற காவ லில் புழல் மத்திய சிறை யில் அடைக்கப்பட்ட னர்.

இவர்களை காவல் துறையினரின் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள னர். பாச்சி சாமியார், செய்வினை வைத்தல், செய்வினை எடுத்தல் தொழிலும் செய்து வந்த தாகவும் இவர் செய்த மாந்திரீக வேலையால் பெண் உள்பட 2 பேர் அந்த பகுதியில் இறந்து போனதாகவும், அதற்கு பழிக்குப்பழி வாங்கவே சாமியார் கொலை செய் யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

தமிழை ஏன் அழிக்க முடியவில்லை?


நமது இனம் அழிந்து போய், இனிமேல் எழ முடியாது என்று இருந்த காலத்தில் தந்தை பெரியார் வந்தார்!

சென்னை புத்தக சங்கமத்தின் 7ஆம் நாள் சிந்தனை அமர்வில் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், வழக்குரைஞர் காந்தி உரைவீச்சு!

சென்னை, ஏப்.25- நமது இனம் அழிந்து போய் இனிமேல் எழ முடியாது என்று இருந்த காலத்தில் தந்தை பெரி யார் வந்தார் என்றும், லத்தீன், எகிப்து, சமஸ் கிருதம் போன்ற செவ் வியல் மொழிகளெல் லாம் அழிந்து போனது போல, தமிழ் அழிந்து போகவில்லையே என்று புத்தக சங்கமம் விழா வில் வழக்குரைஞர் காந்தி, அருட்தந்தை கஸ்பர் ஆகியோர் பேசினர்.

பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறு வனமும், நேசனல் புக் ட்ரஸ்ட் இந்தியாவும் இணைந்து மாபெரும் அளவில் நடத்திவரும் சென்னை புத்தக சங்க மம் ஈடு இணையில் லாத கருத்தரங்குகளை வாசிப்பாளர்களின் செவிகள் குளிர நடத்திக் கொண்டு வருகிறது. அந்த வரிசையில், நேற் றும் (24.04.2013) அப்படி ஒரு கருத்தரங்கத்தை நடத்திக் காட்டியது. பெரியார் திடலில் ராதா மன்றம் நிறைந்து வழிந் தது. பிரின்சு என்னா ரெசு பெரியார் அனை வரையும் வரவேற்று தொடங்கி வைத்தார். மூத்த வழக்குரைஞர் காந்தி தலைமையேற்று சிறப்பித்தார்.

அருட் தந்தை கஸ்பர் சிறப்புரை ஆற்றினார். நான் ஈரோட்டுக்காரன் வரவேற்புரையைத் தொடர்ந்து வழக்கறிஞர் காந்தி தலைமை உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையின் தொடக்கத்திலேயே, சென்னை புத்தக சங்கமம் இவ்வளவு அழ காக, சிறப்பாக இருக் கும் என்று நான் எண்ணிக் கொண்டு வரவில்லை என்று தமது வியப்பை வெளிப்படுத்தினார். மேலும் இதனுடைய சிறப்பைப் பார்க்கும் பொழுது இன்னும் பல இடங்களிலும் இது போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தலாம். அதற் கான தேவை இருக்கிறது என்று கருத்துக் கூறினார். நான் ஈரோட்டுக்காரன் என்று தொடர்ந்த அவர், தந்தை பெரியாரின் குடும்பத்திற்கும், தனது குடும்பத்திற்கும் தொன்றுதொட்டு இருந்து வந்த உறவு முறை போன்ற வழக் கினை பெருமையோடு குறிப்பிட்டு விட்டு, தான் நின்று பேசிக் கொண்டி ருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, இந்த பெரியார் திடலில், தந்தை பெரியார் இருந்த இடத்தில் நான் நின்று பேசிக் கொண்டிருப் பதை பெருமையாகக் கருதுகிறேன் என்று உணர்வு வயப்பட்டு பேசிய அவர், அழிந்து போக இருந்த நமது இனத்தை - இனிமேல் எழ முடியாது என்று இருந்த நிலையில் தந்தை பெரியார் வந்தார். அவர் வந்ததால்தான் இங்கு நல்ல பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டன என்று அவர் பெருமையாக கருதியதற்கான பின்னணியை குறிப்பிட்டார்.

மேலும், அவர், காந்தி எழுதிய என் வாழ்க்கைக் கதை மார்ட்டின் லூதர் கிங் குறிப்பிட்ட ‘I Have a dream’ போன்றவற்றை கூறி, அவை எப்படி யெல்லாம் நாட்டின் எல்லைகள் கடந்து சமூக மாற்றங்களை உண்டாக்கியது என்பது பற்றி விவரித்து புத்தகங்களின் அருமையைப் பதிவு செய்தார்.

தமிழ் ஓவியா said...


இலக்கணமில்லாத இலக்கியம்

வழக்கறிஞர் காந்தியைத் தொடர்ந்து அருட் தந்தை கஸ்பர் அவர்கள், எது இலக்கியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவரும் தனது உரையின் தொடக்கத்தில், செறிவான, அழகான, இந்த அறிவுத் திருவிழாவை அமைத்துத் தந்த அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து அவர், இலக்கியம் என்பதற்கு யாரும் சரியான இலக்கணம் வகுத்துக் கொடுக்கவில்லை. ஆகவே, இலக்கு நோக்கி செல்வது அல்லது செலுத்துவது என்று நான் புரிந்து கொள்கிறேன் என்று இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்துக் கொண்டு உரையைத் தொடர்ந்தார்.

சென்னை புத்தகச் சங்கமத்தில் பல்வேறு பள்ளிகளிலிருந்து பேச்சுப் போட்டியில் பங்கேற்க ஆர்வமுடன் பங்கேற்ற குழந்தைகள்

அதாவது, இலக்கியம் என்பதை அந்தந்த காலத்தோடு ஆய்வு செய்து பார்த்தால், ஒவ்வொரு இலக்கியத்திற்கும் காலத்தோடு ஒட்டிய சில தனி கூறுகள் இருக்கும். ஆனாலும், பொதுவான தோராயமான அளவீடுகள் வைத்து நான் பேசத் தயாரில்லை. காரணம், இது பெரியார் திடல் என்றதும் தன்னெழுச்சியாக கை தட்டல் எழுந்தது. தொடர்ந்து பகுத்தறிவு பகலவனின் பாதங்கள் பதிந்த இடமாக இது இருக்கிறது என்று கூறி, உண்மையைத்தான் பேச வேண்டும் என்பதை சொல்லாமல் சொன்னார்.

இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது

தொடர்ந்து பேசிய அவர், புராணங்கள், சங்ககாலம், சமய மரபு, சிற்றிலக்கியம் என்ற காலவரிசைப்படி தனது உரையை அமைத்துக் கொண்டார். தொடக்கத்தில், இராமாயணம், மகாபாரதம் பற்றி குறிப்பிட்டுவிட்டு, நக்கீரனாரிடம் வந்தார். தான் படித்த அவரின் ஒரு சூழலியல் பாடலைப் பற்றி Stunning narrative என்று இங்கிலீசில் வியந்து குறிப்பிட்டார். அந்தப் பாடல், கவிதை அழகியலும், சூழலியலும், காட்சியை உயிர்ப்போடும் காட்டுகிறது என்று கட்டியம் கூறிவிட்டு, சந்தனம், செண்பகம், தேம்பாவும், வேம்பும் விரிந்து என்று தொடங்கும் நீண்ட பாடலை படித்துக் காட்டி விட்டு, சிறப்பான இயற்கைச் சூழலில், புள்ளினங்களின் கூட்டணி யோடு, ஒரு பெண் நடனமிடுவதை சொல்கிறது இந்தப்பாடல் என்று விளக்கமும் சொல்லிவிட்டு, இதைவிட சிறப்பாக இப்படி சொல்ல முடியுமா என்று கேள்வியும் கேட்டார்.

தொடர்ந்து அவர், இதை நாம் வெறும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது. காரணம், இப்படி எழுத முடிகிறது என்றால், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந் தால்தான் எழுதவே முடியும் என்று கூறிவிட்டு, கடவுளும் மதங்களும் இல்லாமலேயே நம் சமூகம் வாழ்ந்திருக்கிறது என்று நமது தொன்மத்தையும் தொட்டுக் காட்டினார்.

தமிழ் ஓவியா said...

குழந்தைகளுக்கான சீனியர் பிரிவு பேச்சுப்போட்டியில் முதல் பரிசினை சண்முகப்பிரியா பெற்றுக் கொள்கிறார்
Hopeless God

மேலும் அவர், நமது பண்டைய நாகரிகத்தின் பெருமையைச் சொல்லும்போது, பனி நீரும் மண்ணும், மலையும் காடும், ஒரு நாட்டுக்கு அரண் என்ற பாடலைச் சுட்டிக் காட்டி, இப்படி இருந்தால் தான் ஒரு நாட்டுக்கு அரண் என்று அன்று இருந்த இலக்கணத்தோடு நாம் வாழவில்லை என்று பார்வையாளருக்கு வியப்பைக் காட்டினார். அதாவது, நமக்கு பனி மலைகள் கிடையாது. ஆனாலும், வற்றாத நதிகளைக் கொண்டது, நமது மேற்கு தொடர்ச்சி மலைகள். எப்படி? என்று மீண்டும் வியப்பை ஏற்றினார். இயற்கைச் சமநிலை பற்றி சிறிது தொட்டுக் காட்டிவிட்டு, மரங்களில் இருந்து உதிரும் இலைகள் அப்படியே படிந்து மண்ணின் மேற்பரப்பையே மூடி, மலைகளில் பரந்து விரிந்திருக்கும் புல் - பனி நீரும், பொழியும் மழை நீரும் மண்ணுக்குள் செல்வதை தடுத்து விடுகிறது. அந்த நீர்தான், சிறுகச் சிறுகச் சேர்ந்து கோதாவரி, மகாநதியாக வந்து சேர்கிறது என்று அதற்கான பின்னணியையும் விவரித்துவிட்டு, அதனால் தான் சூழலியல் இலக்கியங்களை நம் சமூகம் பேணியிருக்கிறது என்றும் கூறினார்.

மேலும் அவர், ஆகவே, மனிதனும் இயற்கையை யும் தான் பராமரிக்கப்பட வேண்டியவர்கள். கடவுளும், மதமும் அல்ல. அப்படியொரு கடவுள், தான் பராமரிக்கப்பட வேண்டும் என்று எதிர் பார்த்தால், அது கடவுளே அல்ல. அது Hopeless God என்று குறிப்பிட்டதும், கடவுள் நம்பிக்கையா ளர்களும் வெடித்துச் சிரித்து கைதட்டினர்.

ஜூனியர் பிரிவு பேச்சுப்போட்டியில் முதல் பரிசினை ஜான்சிராணி தமிழர் தலைவரிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்

தமிழ் ஓவியா said...

யாயும் ஞாயும் யாராகியரோ

தொடர்ந்து பேசிய அவர், இன்று நிலவும் ஜாதிச் சண்டைகளை குறிப்பிட்டுவிட்டு, 2000 ஆண்டு களுக்கு முன்னால் இருந்த நமது சமூகத்தின் பெருமையை, நாகரிகத்தின் அருமையை குறிப் பிட்டார். அதில்தான், யாயும் ஞாயும் யாராகி யரோ என்பதையும், யாதும் ஊரே யாவரும் கேளிர், மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற என்பதையும் படம் பிடித்துக் காட்டினார். அப்போது, நெடு முகத் துப் பகல், நடுவு நின்ற நன் நெஞ்சிலோர், வடு கஞ்சி வாய் மொழிந்து, தம்மாலும் பிறரும் ஒப்பல நாடி, கொள்வதும் மிகை கொள்ளாது, கொடுப்பதும் குறை கொடாது - என்ற கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பாடலைக் கூறி அதற்கு விளக்கமும் தந்து, அப்படிப்பட்ட ஒரு அக வாழ்க்கையை, நாகரிகத்தைக் கொண்டது நமது சங்க காலம் என்று கூறினார்.

தொடர்ந்து சமய மரபு பற்றி குறிப்பிடும்போது, மதங்களால் பிரச்சினை என்பதைவிட, இடைத் தரகர்களால்தான் அனைத்தும் காரணம் என்று சுட்டிக்காட்டிவிட்டு, நாம் யாருக்கும் குடி அல்லோம் என்பதைக் கூறி, சமயக் காலத்திலும் கூட இந்த ஞானத்திமிர் இருந்தது. இன்று நாம் இப்படி கூற வேண்டுமானால் வழக்கறிஞர்களிடம் கேட்டுத்தான் கூறமுடியும் என்று மேடையில் இருந்த வழக்கறிஞர் காந்தியைப் பார்க்க, அவரும் சரி, பார்வையாளர்களும் சரி கொல்லென்று சிரித்து விட்டனர். தமிழை ஏன் அழிக்க முடியவில்லை?

தமிழ் ஓவியா said...

சமய மரபைத் தாண்டி அடுத்து சிற்றிலக்கியத் தின் பக்கம் வந்தார். அப்போது, சுமார் 400 ஆண்டு கள்தான் இங்கு தமிழ் மன்னர்கள் ஆண்டிருக் கிறார்கள். சுமார் 1600 ஆண்டுகள் தமிழ் அல்லாத மன்னர்கள்தான் நம்மை ஆண்டிருக்கிறார்கள். சோழ மன்னர்கள் கூட தமிழுக்குச் சேவை செய் தார்கள் என்று நான் கருதவில்லை. அப்படி இருந்தும், இன்னும் தமிழ்மொழி செழுமையாக இருக்கிறதே, எப்படி? என்று ஓர் அறிவார்ந்த வினாவை எழுப்பினார்.

24.4.2013 சிறப்புப் பரிசான திறன்பேசியை செந்தில்குமாருக்கு எமரால்டு பதிப்பக உரிமையாளர் கோ.ஒளிவண்ணன், சீதை பதிப்பக உரிமையாளர் கவுரா ராஜசேகர் ஆகியோர் வழங்கினர்.

தொடர்ந்து, லத்தீன், எகிப்து, சமஸ்கிருதம் போன்ற செவ்வியல் மொழிகள் பெரிய பெரிய மன்னர்களால் பேணப்பட்டு வந்தன. அதனால், மன்னர்கள் சென்ற பிறகு அதுவும் வழக்கொழிந்து போயின. ஆனால், தமிழ் சாதாரண மக்களால் வாழ்வியலோடு கலந்து பேசப்பட்டது. அதனால் தான், இவ்வளவுக்கும் பிறகு தமிழை யாராலும் அழிக்க முடியவில்லை என்று கூறி தமிழ் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு புதிய கோணத்தில் பார்க்கச் செய்தார். முத்தாய்ப்பாக, பலவீனமான காலத்தில் கூட, சந்தமும், இசையும், இவைகளோடும் சேர்ந்து வளர்ந்தது தமிழ் என்று சேர்த்துச் சொன்னார்.

இறுதியாக, நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப் படுபவை அனைத்தும் வாழ்வியலோடு கலந்து சொல்லப்படுபவைதான் பெரும்பாலும் தேர்வு செய்யப்படுகிறது. புரட்சிகரமான கருத்துக்கள்தான் தேர்வாகின்றன. கருத்துக்களால் மாறுபடலாம் - வேறுபடலாம் - ஆனால், அச்சமின்றி ஆக்கத்திற் காக சொல்பவை அனைத்தும் இலக்கியங்கள்தான் என்று இயற்கையோடு இயைந்த, முற்போக்கை, அடுத்த தலைமுறைக்கான வாழ்வியலை, நாகரி கத்தை சொல்வதுதான் இலக்கியம் என்பதைச் சொல்லி, அந்த வரிசையில் பெரியாரின் துணிச் சலையும், ஈழப் படுகொலையிலும் முகிழ்த்த கவிஞர்களையும் நினைவூட்டி, நமது கொள்கைக் காக எதிர்த்து நிற்போம், போராடுவோம், வெல்வோம் என்று கூறி தமதுரையை நிறைவு செய்தார்.

கழக துணைத் தலைவர் இருவருக்கும் சிறப்பு செய்தார்.

தொடர்ந்து நேற்று அறிவிக்கப்பட்ட பரி சாளர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து, அன்றைய தினம் புத்தகங்கள் வாங்கியவர்களுக்கான தேர்வு நடைபெற்றது. சிறப்புப் பரிசை கஸ்பர் அவர்களும், முதல் பரிசை வழக்குரைஞர் காந்தி அவர்களும், மற்ற பரிசுகளான என்.ரம்யா, டி.அபராஜிதன், எஸ்.பாலச்சந்தர், டி.பாலமுருகன், சி.செங்குட்டுவன், இ.மகாராஜா ஆகியோர் முறையே ரூ.500, ரூ.400, ரூ.300, ரூ.300, ரூ.200, ரூ.200 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பரிசுகளை முறையே நக்கீரன், எமரால்ட், மணிமேகலை, செம்பரிதி, முல்லை ஆகிய பதிப்பகளும் மற்றும் பாலாஜி இன்ஸ்டி டியூட் அன்ட் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் நிறு வனமும் அளித்தன.

எஸ்.ராஜா, ஆர்.குணசேகரன் ஆகியோர் உயிர்மை பதிப்பகம் சார்பிலும், கீதம் பப்ளி கேசன்ஸ் சார்பில் க.சண்முகம் ஆகியோர் ஆண்டு சந்தாக்களைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வரவேற்பு கூறி தொடங்கி வைத்த பிரின்சு என்னாரெசு பெரியாரே, நன்றியும் கூறி நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்யநாராயண சிங், பொருளாளர் மனோகரன், புத்தக நிலைய மேலாளர் நடராஜன், புலவர் வெற்றியழகன், வழக்குரைஞர் வீரசேகரன், ஆவடி மாவட்டச் செயலாளர் தென்னரசு, கோ. கருணாநிதி, கோவி.கோபால், ராமு, செங்குட்டுவன், திருமகள் இறையன், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பா ளர்களும், ஆலோசகர்களுமான ஒளிவண்ணன், புகழேந்தி, வேணுகோபால் மற்றும் அரங்கு நிறை யும் வகையில் கூடியிருந்த புத்தக வாசகர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்று வரும் புத்தகச் சங்கமத்தில் 7ஆம் நாளில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்திருந்து தங்களுக்கு பிடித்த நூல்களை வாங்கிச் சென்றனர் (24.4.2013)

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


தீண்டாமை

செய்தி: அரசியலில் தீண் டாமை அதிகரித்து வருகிறது.
- குஜராத் முதல்வர் நரேந்திரமோடி

சிந்தனை: தீண்டாமை க்ஷேமகரமானது எனும் இந்துத் துவாவின் தத்துப் புத்திரர்கள் தீண்டாமைப்பற்றிப் பேசலாமா?

தமிழ் ஓவியா said...


2012 தேர்தலில் பாடம் கற்கவில்லையா மாயாவதி?


கான்ஷிராம் அவர்களால் தொடங்கப்பட்டது பகுஜன் சமாஜ் கட்சி. பகுஜன் என்றால் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் என்பவர்கள்தான் - இந்த ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் (பகுஜன்). இவர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்பது தான் அதன் அடிப்படையாகும்.

பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்டாலும், இது இந்திய அரசியலுக்கே ஒட்டு மொத்தமாகத் தேவைப்படக் கூடிய ஜனநாயகக் கோட்பாடாகும்.

கான்ஷிராம் அவர்கள் அந்த அடிப்படையிலேயே தேர்தல் களத்தைச் சந்தித்து, வெற்றி பெற்று, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்வி மாயாவதி அவர்களின் கரத்தில் ஆட்சியையும் கொண்டு வந்து சேர்த்தார்.

அந்தக் கோட்பாட்டுத் தளத்தில் உறுதியாக நின்று, லக்னோவிலிருந்து அந்தச் சுழல் விளக்கை உயர்த்திப் பிடித்திருந்தால் மூன்றாவது அணி இங்கு முளைக்கவில்லையே என்ற ஏக்கத்துக்கு நல்ல மருந்தும் கிடைத்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் மதவாத இந்துத்துவா கட்சியான பிஜேபி கூட காணாமல் போயிருக்கும்.

அவசரப்பட்ட காரணத்தாலும், அடிப்படையைத் தொலைத்த தன்மையாலும், உத்திரப்பிரதேசத்தில் தான் இந்தியாவிலேயே பார்ப்பனர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்களை பிடித்துத் தம் வலையில் போட்டால் எளிதாக உத்தரப்பிரதேச அதிகார நாற்காலி நகர்ந்து தன் பக்கம் வந்து சேரும் என்று கணக்குப் போட்டார்.

கட்சியின் பொதுச் செயலாளர் என்ற மதிப்பு மிக்க பொறுப்பை பார்ப்பனரான சதிஸ் சந்திர மிஸ்ரா என்பவருக்குத் தாரை வார்த்தார்.

2007 சட்டப் பேரவைத் தேர்தலில் 80 இடங்களைப் பார்ப்பனர்களுக்குத் தூக்கிக் கொடுத்தார் அதில் 51 இடங்களில் வெற்றி பெற்றனர். முக்கிய துறைகளில் எல்லாம் அமைச்சர்களாக அவர்களை நியமித்தார்.

2009 மக்களவைத் தேர்தலிலும் பார்ப்பனர்களுக்கு 20 இடங்கள்; ஆனால் தாழ்த்தப்பட்டவர் களுக்கோ 17 இடங்களை அளித்தார். எங்கே கிளம்பி, எங்கே பயணிக்கிறார் என்பதை எண்ணினால் வெட்கமும், வேதனையும் இரட்டிப்புத் தாக்குதலைத் தொடுக்கின்றன.

இதே சூத்திரம் (Formula) 2012 சட்டப் பேரவைத் தேர்தலில் கை கொடுக்கவில்லையே! கண்ணிய மாகக் கருத்தூன்றி கணித்தாரா மாயாவதி?

2007இல் ஆட்சியைக் கொடுத்த உ.பி. மக்கள் 2012இல் ஏன் பறித்தனர் என்று சிந்திப்பதுதானே - சிறப்பானது சீலமானது.

206 இடங்களைப் பெற்றவர் இப்பொழுது வெறும் 80-க்குள் முடங்கிக் கிடப்பது ஏன்? எண்ணிப் பார்க்க வேண்டாமா?

2014இல் நடக்க இருக்கும் 15 ஆவது மக்களவைத் தேர்தலில் முதல் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார் மாயாவதி. 36 இடங்களில் 18 இடங்கள் பார்ப்பனர் களுக்காம்.

பதவி என்று வந்து விட்டால் பத்தும் பறக்கும் என்பது இதுதானோ! கான்ஷிராம் இதற்காகத்தானா இந்த மாயாவதியை முன்னிறுத்தினார்?

பகுஜன் சமாஜ் எனும் கான்ஷிராம் குரலை மாற்றி, திரிபு செய்து சர்வஜன் என்று புதுப்பெயர் சூட்டிக் கொண்டார்.

பார்ப்பனர்களையும், சத்திரியர்களையும், உயர் ஜாதியினரையும் செருப்பால் அடியுங்கள் என்று சொல்லும் அளவுக்குத் தன்னை ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவி என்று காட்டிக் கொண்டவர் - இன்றைக்குப் பார்ப்பனர்களின் கைப்பாவை ஆகி விட்டாரே!

பார்ப்பனீயம்தான் எவ்வளவு வலிமை உடையது தந்திரமானது;

செருப்பாலடிப்பேன் என்று சொன்ன மாயாவதியையே தடம் புரளச் செய்யும் அளவுக்குச் சாமர்த்தியம் கொண்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தனது கொள்கைக்காக மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த அண்ணல் அம்பேத்கர் எங்கே?

பதவிக்காக அடிப்படைக் கொள்கைகளை ஆழப் புதைத்து அதன்மேல் நின்று பதவிக்காகப் பரிதாபப்பட்டு நிற்கும் - அவலம் எங்கே?

நாமே விமர்சனம் செய்யும் - அளவுக்கு மாயாவதி ஆகிவிட்டாரே! என்ன செய்ய!

மாயாவதி தவறான உதாரணம் என்பதை ஒடுக்கப்பட்ட மக்களும் உணர்ந்திடத் தவறக் கூடாது எச்சரிக்கை!
25-4-2013

தமிழ் ஓவியா said...


பிரச்சாரக் கதைகள்


திராவிட மக்களை ஆரிய வலையில் விழச் செய்து அவர் களைத் தன்மானமற்றவராக, பகுத் தறிவற்றவராக ஆக்கி மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் பிரச்சாரக் கதைகளே பாரதம், இராமாயணம், பாகவதமாகும்.
(விடுதலை, 18.2.1968)

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

மதுரையில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஏப்.25- அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2007ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஆறு முக்கியமான கோவில்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு துவங்கியது. 2007-2008 கல்வி ஆண்டில் ஒரு வருட அர்ச்சகர் கல்விப் பயிற்சியும், இருமாத புத்தாக்கப் பயிற்சியினையும் 206 பேர் முடித்தனர். 2006ஆம் ஆண்டில் தமிழக அரசின் அவசர சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்ததால் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கவில்லை.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினை உருவாக்கி உச்சநீதிமன்ற வழக்கில் எதிர்மனுதாரர்களாகிப் போராடி வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இறுதி நிலையினை எட்டி அன்று விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில் ஜெயலலிதா அரசாங்கமோ சுமுக மாகப் பேசித் தீர்ப்பதாக கழுத்தறுப்பு வேலையினை செய்யத் துவங்கியுள்ளது.

தமிழ் ஓவியா said...

கருவறைக்குள் நுழைந்து பூசை செய்யும் தகுதி பார்ப்பன ஜாதியினருக்குத் தவிர மற்றவருக்குக் கிடையாது என்பது பார்ப்பன வர்ணாஸ்சிரமம் உருவாக்கிய அநீதி. தமிழக அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட ஆய்வுக் குழு, 2008இல் சமர்ப்பித்த அறிக்கையின்படி தமிழகத்தில் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பூசை செய்யும் பார்ப்பனர்களில் 80 சதவீதம் பேர் முறையான பயிற்சியில்லாமலும், வாரிசுதாரர் உரிமையிலும்தான் பூசை செய்து வரு கின்றனர். கேடுகெட்ட தேவநாதன்களும், ஜெயேந்திரர் களும் சாமியைத் தொடலாம், அது தீட்டில்லை.

ஆனால், அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி களில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் பூசை செய்யக் கூடாதாம். ஏனெனில் இம்மாணவர்கள் ஜாதியால் பார்ப்பனர்கள் இல்லை. எனவே சாமியைத் தொட்டால் தீட்டாம்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வேலை வாய்ப்பு பிரச்சினை அல்ல இது. கருவறைக்குள் நிலவும் ஜாதித் தீண்டாமையை ஒழிக்க வேண்டிய பிரச்சினை, குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, 1976ஆம் ஆண்டு சேஷம்மாள் வழக்கிற்குப் பின்பாக, அர்ச்சகர் நியமனம் மத சார்பற்ற நட வடிக்கை, அது எவ்வகையிலும் மத சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கருத முடியாது என பல வழக்குகளின் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

பிறப்பால் இழிவானவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினர், இவர்கள் பூசை செய்தால் புனிதம் கெட்டு, சாமி தீட்டாகி விடும் என்று பார்ப்பனரல்லாதோர் மேல் சுமத்தப்படும் இழிவினை இன்னமும் ஏற்கத்தான் வேண்டுமா என தமிழகம் கிளர்ந்தெழவில்லை. கருவறைக்குள் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தினை எதிர்க்க வேண்டிய நேரத்தில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் திரட்டப்படுகின்றனர். அதனால் தான், தமிழக அரசால் இவ்வழக்கினை நாங்கள் பேசி முடித்துக் கொள் கிறோம் என உச்சநீதிமன்றத்தில் மிகத் துணிச்சலாகக் கூற முடிகின்றது.

பெரியார் பிறந்த மண் என்ற மூச்சுக்கு முன்னூறு தடவை பேசுவதால் பயனில்லை. மாறாக ஜெயலலிதா அரசாங்கத்தின் பார்ப்பன ஆதிக்க நிலை நாட்டல் நடவடிக்கைக்கு எதிராக தமிழகமே கிளர்ந்து எழுந்து அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கு என முழங்க வேண்டிய தருணமிது. கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வெளியில் ஈன ஜாதியாய், சூத்திரர்களாய் வாழ்வதை விட கிளர்ச்சி செய்து சிறை செல்வது மேல் அல்லவா? என தனது 95 வயதில் தமிழக மக்களை நோக்கி கேள்வி எழுப்பினார் பெரியார். இன்று எமது கேள்வியும் அதுதான். நாம் என்ன செய்யப் போகிறோம்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தான் இந்த அர்ச்சக பட்டர்களின் முன்னோர்கள். கோவில் நுழைவுப் போராட்டம் வெற்றியடைந்த நிலையில் மீனாட் சியைத் தவிக்க விட்டு பூசை செய்யாமல் ஓடிப் போனவர்கள்தான் இந்த ஆதி சிவாச்சாரியர்கள். பிரிட்டிஷ் ஆட்சி போனவுடன் எங்கள் அதி காரமும் போய் விட்டது என்று சொல்லி வெள்ளைப் பரங்கியர்களுக்கு வெஞ்சாமரம் வீசிய தேசபக்தர் கள்தான் இவர்கள். இன்றைக்கு அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்று உச்சநீதிமன்றத் தில் போராடுகிறவர்களும் இவர்கள்தான். இவர் களிடம் கடவுள் பக்தி மட்டும் அல்ல. கடவுள் மீது மரியாதை கூட கிடையாது. அப்படி இருந்திருந்தால் மீனாட்சியைப் புறக் கணித்து பூசை செய்யாமல் ஓடிப் போயிருப்பார்களா? கோவிலில் சாமியின் பெயரால் அடிக்கின்ற கொள்ளை பறிபோய் விடக் கூடாது என்பதே அவர்கள் நோக்கம். அதனால்தான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக விடாமல் இந்து மத உரிமையைக் காட்டி மீனாட்சி கோவில் பட்டர்கள் தடுத்து வருகின்றனர். அப்படியானால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் இந்துக்கள் இல்லையா?

தமிழக அரசே!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை இழுத்தடிக் காமல் விரைவுபடுத்து!

மீனாட்சி கோவில் பட்டர்களுக்கு ஆதரவாக பார்ப்பன ஆதிக்கத்தினை கருவறைக்குள் நிலை நாட்ட முயற்சிக்காதே!

பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்களுக்கு பாரபட்ச மின்றி உடனே வேலை கொடு!
தமிழக மக்களே!

கருவறைக்குள் நிலவும் ஜாதி தீண்டாமைக்கு எதிராகப் போராடுவோம்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக்கப்பட கிளர்ந்தெழுவோம்!

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மய்யம் தமிழ்நாடு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தமிழ்நாடு

தமிழ் ஓவியா said...


வெள்ளுடைவேந்தர்


நவம்பர் புரட்சி என்று பொது வுடைமை உலகம் போற்றிப் புகழும்; பார்ப்பன அல்லாதா ருக்கும் ஒரு நவம்பர் புரட்சி உண்டு. அதுதான் நவம்பர் 20 (1916) அந்த நாளில்தான் பார்ப்பனர் அல்லாதார் மத்தியில் ஒர் உணர்வு பிறந்து வடிவமும் மலர்ந்துள்ளது.

வழக்குரைஞர் டி. எத்தி ராஜூலு முதலியார் இல்லத்தில் சென்னை வேப்பேரியில் பார்ப் பனர் அல்லாத பெரு மக்கள் பலரும் கூடி இதனைப் பெற் றெடுத்தார்கள்.

திவான் பகதூர் பிட்டி தியாகராய செட்டியார், டாக்டர் டி.எம். நாயர், திவான் பகதூர் பி. ராஜரத்தின முதலியார், டாக்டர் சி. நடேச முதலியார், திவான் பகதூர் பி.எம். சிவஞான முதலியார், திவான் பகதூர் பி. இராமராய நிங்கர் (பனகல் அரசர்) திவான்பகதூர் எம்.ஜி. ஆரோக்கியசாமிபிள்ளை, ராவ் பகதூர் ஜி. நாராயணசாமி செட்டி, இராவ் பகதூர் ஓ. தணி காசலம் செட்டி, இராவ்பகதூர் எம்.சி. ராஜா, டாக்டர் முகம்மது உஸ்மான் சாகிப், ஜே.எம். நல்லசாமிபிள்ளை, வேங்கட்ட ரெட்டி நாயுடு, இராவ்பகதூர் ஏ.பி. பாத்ரோ, டி. எதிராஜு முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார் ஜே.என். இராமநாதன், கான்பகதூர் ஏ.கே.ஜி. அகமதுதம்பி மரைக் காயர், திருமதி அலமேலு மங்கைத் தாயாரம்மாள், ஆற் காடு இராமசாமி முதலியார், திவான்பகதூர் கருணாகர மேனன், டி. வரதராஜூலு நாயுடு, மதுரை வக்கீல் எல்.கே. துளசி ராம், கே. அப்பாராவ் நாயுடுகாரு, எஸ். முத்தையா முதலியார் (வகுப்புரிமைத்தந்தை) மூப்பில் நாடார் ஆக 26 பெரு மக்கள் முதன் முதலாகக் கூடிப் பார்ப் பனர் அல்லாதார் உரிமைக்கான கால்கோள் கொடியை உயர்த் தினர்.

அப்பெரு மக்களுக்கு இந்நாளில் நமது அகங் கனிந்த வணக்கத்தையும், மனம் நெகிழ்ந்த நன்றி உணர்ச்சி மலர்களையும் சூட்டுவோம்!

அன்று அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட அரசியல் கட்சிதான் தென்னிந்திய நலவு ரிமைச் சங்கம் ஆகும். (South Indian Liberal Federation).

அவ்வமைப்பின் செயலாள ரான பிட்டி தியாகராஜ செட்டியார் கையொப்பமிட்டு வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை (20.12.1916) (20.12.1916) (Non Brahmin Manifesto) திராவிடர் இனத் தின் உரிமைச் சாசனமாகும் (Magnacarta).

அதன் விழுமிய நோக் கங்கள் காலப் பெட்டகமாகும்.

1) தென்னிந்தியாவில் பார்ப் பனர் அல்லாத அனைத்து மக்களின் கல்வி, சமுதாய, பொருளாதார அரசியல் தார்மீக ஆக்கப் பூர்வ மேம்பாட்டிற்குப் பாடுபடுவது.

2) பார்ப்பனர் அல்லாதாரின் நலன்களைப் பாதுகாத்தல், மேம் படுத்துதல் ஆகிய நோக்கங் களுடன் பொதுப் பிரச்சினை களை விவாதித்துத் தென் னிந்திய மக்களின் கருத்து களையும், நலன்களையும் உள் ளது உள்ளபடியே அவ்வப்போது அரசுக்கு எடுத்துரைப்பது.

3) பொதுப் பிரச்சனைகள் குறித்து ஆரோக்கியமான ஜனநாயகக் கருத்துக்களை பொதுக் கூட்டங்கள் மூலமும், பிரசுரங்கள் விநியோகப்பதன் மூலமும். இதர வழிகளாலும் பரப்பி, அதன் மூலம் பொது மக்களின் கருத்தை உருவாக்கு வதும், வகைப்படுத்துவதுமாகும்.

இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதார் உயர்வுக்கு ஒரு துவக்கத்தைக் கொடுத்த முறை யில் பிட்டி தியாகராயரைக் குறியீடாகக் கொண்டு அப்பெரு மக்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோமாக!

அதற்கான விதை விதைத்த வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் பிறந்த நாள் இந்நாள் (1852).

- மயிலாடன் 27-4-2013

தமிழ் ஓவியா said...


சர்.பிட்டி தியாகராயரின் மக்கள் தொண்டு

- டாக்டர் கவிஞர் மகாபாண்டியன் பி.எச்.டி.

(மாநில தலைவர், சர்.பிட்டி தியாராயர் பேரவை)

அரசியல், பொருளாதாரம், கல்வி போன்ற பல்வேறு துறை களில் தமிழகம் கண்ட பல்வேறு அறிஞர்களுள் தலையாய அரசியல் ஞானியாக - தென்னாடு கண்ட திராவிடச் சூரியனாகத் திகழ்ந்தவர் சர்.பிட்டி தியாகராயர் அவர்கள் ஆவார்கள். சென்னை கொருக்குப் பேட்டையில் 27.4.1852இல் தெலுகு தேவாங்க சமூகத்தில் பிட்டி என்ற வீட்டுப் பெயர் கொண்ட குடும்பத் தில் பிறந்தார். மிகப்பெரும் செல்வந்தராய் பிறந்த சர்.பிட்டி தியாகராயர் தன் குலத்திலேயே 1876இல் முதன்முதலில் பி.ஏ. பட்டம் பெற்றவர்.

அக்காலத்தில் குதிரைகள் பூட் டிய சாரட் வண்டியில் பயணம் செய்தவர். சென்னைக்கு மோட் டார் வாகனம் வந்ததும், அதை வாங்கிப் பயன்படுத்தியவர். அவர் தம் வாழ்நாளில் மக்களுக் காக வாரி வழங்கிய தொகை தற்காலத்து கோடி பல கோடிக்குச் சமமாகும்.

சென்னை மாநகராட்சி உறுப் பினராக அவர் தொடர்ந்து 40 ஆண்டுகள் சேவை புரிந்தார், 1919ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை நகர முனிசிபல் சட்டப் படி மாநகராட்சிக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் தலைவர் அவர் தான். சென்னை நகர மன்றத் தலைவராக 1919 முதல் 1923 வரை இருந்து மகத்தான பணிகள் செய்தார். இவர்காலத்தில் ட்ராம் (Tram) வட சென்னையின் பல பகுதி களுக்கு சென்னை சென்ட்ரலிலிருந்து பாதைகள் போடப்பட் டன.

தென்னிந்திய வர்த்தக சபையை ஆரம்பித்தவர்களில் ஒருவரான இவர் 1910 முதல் 1921 வரை அதன் தலைவராகி வர்த்தக வளர்ச்சிக்கு அரும்பெரும் தொண்டாற்றினார்.

வெள்ளுடைவேந்தர்

1921 ஜனவரி 12ஆம் நாள் (12.1.1921) சென்னை மாகாணத்து முதலாவது சட்டசபைத் துவக்க விழாவிற்கு கன்னாட் பிரபு சென்னை வந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்க சென்னை நக ராட்சி தீர்மானித்தது. அக்காலத் தில் பிரிட்டிஷ் ஆட்சியில் முக்கிய தலைவர்களை வரவேற்க தலைப் பாகையும், நீண்ட கறுப்பு அங்கி யும் வெள்ளை முழுக்கால்சட்டை யும் அணிந்திருக்க வேண்டுமெனற் சம்பிரதாயம் இருந்தது. வெண் ணிற ஆடையைத் தவிர வேறு எந்த வண்ண ஆடைகளையும் அணிய மறுத்த சர்.பிட்டி. தியாகராயரை ஆளுநர் வெலிங்டன் பிரவு, வெண் ணிற ஆடையணிந்தே வந்து வரவேற் கும்படி கேட்டுக்கொண்டார். வெள் ளையரின் தாசன் தானல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தினார். அன்று முதல் வெள்ளுடை வேந்தர் என அழைக்கப்பட்டார்.

இரண்டாம் வள்ளலார்

வள்ளலாரைப் போன்று வெள்ளு டையையே அணிந்தார். நமது தலைவர் 5.10.1923இல் மருதூரில் பிறந்த வள்ளலார் சென்னை ஏழுகிணறுப் பகுதியில் சுமார் 35 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். வள்ளற் பெருமான் 25 வயது வாலிபராக இருந்தபோது அதே வட சென்னைப் பகுதியில் சர்.பிட்டி.தியாகராயர் 27.4.1852இல் பிறந்ததாலேயே, 1876ஆம் ஆண்டு ஏற்பட்ட தாது ஆண்டு பஞ்ச காலத்தில் சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் தங்கள் பகுதியைச் சார்ந்த ஊர்மக்களுக்குப் பசி நீங்க உணவு கொடுத்து உதவியது சர்.பிட்டி.தியாகராயர் குடும்பம். (வள்ளலார் வடலூரில் தருமசாலை ஏற்படுத்தி மக்களுக்கு உணவு வழங்கினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது) இலவச மதிய உணவு திட்டத்தை முதன் முதலில் தன் சொந்த செலவில் செய்தார். சர்.தியாகராயர் வடலூரில் பாடசாலை, பத்திரிகை முதலியவை துவக்கி முதன் முதலில் திருக்குறளுக்கு வகுப்பு எடுத்தவர் வள்ளலார். தியாகராயரும் 3.12.1892இல் இலவச மதிய உணவுடன் கூடிய தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார். தன் சொந்த செலவில் ஏற்படுத்தியதோடு, திராவிடன், ஆந்திர பிரகாசிக ஜஸ்டிஸ் ஆகிய பத்திரிக்கைள் துவக்கி அதற்காக தானே ஒரு லட்ச ரூபாயை அக்காலத்திலேயே செல விட்டார். இது தற்போது சர்.பிட்டி. தியாகராயர் கல்லூரியாக உயர்ந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மீனவ குடும்பம்சார் எளிய பிள்ளைகளுக்குக் கல்வியறிவு ஊட்டி வருகிறது. சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப்பினராக வும், தலைவராகவும் 1887 முதல் 1924 வரை தியாகராயர் தொண்டாற்றி வந்தார். கண்பார்வையற்றோர் பள்ளி, பிச்சைகாரார் இல்லம், இலவச மருத் துவ வசதி ஆகியன ஏற்படுத்தினார்.

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்த் தாரும் எவரும்
ஒருமையுள ராதல் வேண்டும் - வள்ளலார்.

இதனை உணர்வில் கொண்ட தியாகராயரின் நீதிக்கட்சி ஆட்சி, பஞ்சமர், பறையர் எனக் கூறாது, ஆதி திராவிடர் என்றே அழைக்கப் பட வேண்டும் என சட்டமன்றத்தில் சட்டமே இயற்றியது. வட சென்னை யில் இந்துப் பெண்கள் பள்ளி நிறுவப்பட்டது. மேலும் ஆந்திர பல்கலைக்கழகம் உருவானது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக நம் தலைவரே காரணமா வார். இதே போன்று அஞ்சுமான் இ-முஃபித்-இ-அல்லா-இ இசுலாம் எனும் இசுலாமியக் கல்விக் கழகத்தின் உறுப்பினராக இருந்து இசுலாமியர் தம் கல்வி வளர்ச்சிக் காகவும் பாடுபட்டார். இதனாலேயே, டாக்டர் டி.எம்.நாயர் தமது ஸ்பர்டாங் சாலை பேருரையில் என் மாபெரும் - முதுபெரும் தலைவர் பிட்டி.தியாகராய செட்டி யார் வள்ளலார் அவர்களே என விளித்து நன்றி கூறினார் போலும்!

தமிழ் ஓவியா said...

மது விலக்கு

மதுவருந்தும் பழக்கத்தால் நம் நாட்டு மக்கள் குறிப்பாக விவசாயி கள், நெசவாளர்கள், தொழிலாளர் கள் ஆகியோரின் குடும்பங்கள் அடையும் இன்னல்களைக் கண்ட தியாகராயர் மது ஒழிப்பிற்கு அருந் தொண்டாற்றினார். காந்தியடிகளின் மதுவிலக்குக் கொள்கையை ஆதரித் தார். 1922ஆம் ஆண்டு இவரது தலை மையில் கூடிய நகரமன்றக் கூட்டத் தில், நகரமன்றத்திற்குச் சொந்தமான மரங்களைக் எடுப்பதற்கு குத்தகைக்கு விடுவதில்லை என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டு செயல்படுத்தப்பட் டது.
சட்டமன்றத்திலும் மக்கள் மது அருந்துவதால் கிடைக்கும் கலால் வரியைச் சுட்டிக்காட்டி மதுவின் அடர்த்தியை படிப்படியாகக் குறைத்து வந்தால் மக்களின் உடலுக்குத் தீங்கு ஏற்படாது. மக்கள் தாங்களாகவே மதுப் பழக்கத் தினின்றும் விடுபடுவர் என்றார். இதன் காரணமாக, தியாகராயர் மறைந்த நாளாம் 28.4.1925 அன்று சென்னை உலகப் பற்றாளர் கழகம் (Cosmopolitan Club) இனிமேல் கழகத்தில் மது வகைகள் பயன்படுத் துவதில்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

தியாகச் செம்மல்

1916 நவம்பர் 20ஆம் நாளன்று வேப்பேரி எத்திராசுலு முதலியார் இல்லத்தில் பார்பனரல்லாத கூட்டம் கூடியது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உதயமானது. இதன் கொள்கைகளை வெளியிட 1917 பிப்ரவரி 26இல் ஜஸ்டிஸ் என்ற ஆங்கில ஏடும், 1917 சூன் திங்களில் திராவிடன் என்ற தமிழ் நாளேடும், ஆந்திர பிரகாசிக என்ற தெலுகு நாளேடும் துவக்கப்பட்டன. நீதி (Justice) என்ற புகழ் பெற்ற ஏட்டின் பெயரே பிற்காலத்தில் நீதிக்கட்சி என்ற பெயர் பெறக் காரணமாயிற்று. இக்கட்சி 1920இல் நடந்த முதல் பொதுத் தேர்தலிலும், 1923இல் நடந்த இரண்டாவது பொதுத் தேர் தலிலும் வென்றது. இக்கட்சியின் தலைவரான தியாகராயரை அன் றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு அமைச்சரவை அமைக்க அழைத் தார். இரு முறையும் தாம் முதல் அமைச்சர் ஆகாமல் தவிர்த்தார். முதலில் திவான் பகதூர் ஏ.சுப்ப ராயலு ரெட்டியாரையும், இரண் டாம் முறையாக பனகல் அசைரை யும் முதல்வராக்கி மகிழ்ந்தார். நமது தியாகராயராம் தியாகச் செம்மல்.

தற்காலத்தில் மேனாள் மேயர் திரு.ஸ்டாலின் அவர்கள் தியாகராய நகரில் பனகல் பார்க் எதிரில் தியாகராயர் கலையரங்கம் கட்டி நன்றி பாராட்டினர். மேனாள் முதல் வர் கலைஞர் அவர்கள் வெள் ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாக ராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக் டர் நடேசனார் ஆகிய நீதிக் கட்சியின் முப்பெரும் தலைவர் களுக்கு மத்திய அரசின் சார்பாக கவுரவ அஞ்சல்வில்லைகள் வெளி யிட்டுப் போற்றியமை இன்று நினைவு கூரத்தக்கது. விரைவில் மணிமண் டபம் அமைத்திட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்.

தமிழ் ஓவியா said...


ஓர் ஆன்மிகவாதியின் பலே மோசடி!



கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த சாரதா சிட் பண்ட் நிறுவனம் திவாலாகி விட்டது என்ற தகவல் ஏடுகளில் முக்கியமான இடத்தை நிரப்பிக் கொண்டு விட்டது.

ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சாரதா குழுமம் சார்பில் நடத்தப்பட்டு வந்த இந்த நிதி நிறுவனத்தில் மே.வங்காளம் அசாம், திரிபுரா மாநிலங்களிலிருந்தெல்லாம் முதலீடு செய்துள்ளார்கள்.

இதனுடைய உரிமையாளர் சுதிப்தா சென் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப் பட்டுள்ள நிதிகளைக் கொண்டு ரியல் எஸ்டேட், பிஸ்கட் பேக்டரி முதலிய துறைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இவ்வளவுத் தூரம் கொடி கட்டிப் பறந்த ஒரு நிறுவனம் திவாலானதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் குறிப்பாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தி பெருந் தொகையைப் பெற்றுக் கொண்டனர் என்றெல்லாம் ஒரு பக்கத்தில் கூறப்படுகிறது.

யார் இந்த சுகிப்தாசென்? சாரதா என்ற பெயரில் இவ்வளவு நிறுவனங்களை நடத்து வதன் பின்னணி என்ற கேள்விகள் எல்லாம் எழுந்து நிறுகின்றன.

இவர் ஆன்மீகத்தில் மூழ்கி முத்து எடுக்கக் கூடியவராம்; ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதாதேவியின் தீவிரப் பக்தராம்; அதனால்தான் அவர் நடத்தும் நிறுவனங்களுக் கெல்லாம் அந்த அம்மையாரின் நாம கரணத்தைச் சூட்டியிருக்கிறார்.

தொடக்கத்தில் நக்சலைட்டு இயக்கத்தில் இருந்திருக்கிறார். அதன்பிறகுதான் ஆன்மீகத் துக்குத் திரும்பியிருக்கிறார். இதுதான் சரியான வேடம் என்று தெரிந்து கொண்டு இராம கிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதா அம்மையாரின் பக்தராக வலம் வந்தார்.

நிதி நிறுவனத்தை இந்தப் பின்னணியில் ஆரம்பித்தவுடன் மக்களும் நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் உண்மை.

ஏமாற்றுக்காரர்களுக்கு வசதியான வேடம் ஆன்மீகம் தானே - அதன் மூலம்தானே நம்ப வைத்துக் கழுத்தறுக்கலாம்.

இந்த ஆசாமியின் பாஸ்போர்ட்டில் உள்ள தந்தையாரின் பெயர் வேறு; வேறு ஆவணங்களில் வேறாக இருக்கிறதாம்.

பக்தி வேடம் போட்டால் எளிதில் மக்களை ஏமாற்றலாம் என்பது வெளிப்படை!

சாமியார்களும், சாயிபாபாக்களும் எந்தவித முதலீடும் செய்யாமல் மக்களைச் சுரண்டுவது எந்த அடிப்படையில்? சுதிப்தா சென் என்பவராவது ஒரு நிறுவனத்தைத் தொடங்கி ஏமாற்றியிருக்கிறார். சாயிபாபாவும், சாமி யார்களும் எந்தவித நிறுவனத்தையும் நடத் தாமல், எந்தவித முதலீட்டையும் செய்யாமல், மக்களின் பக்தி முட்டாள்தனத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு அன்றாடம் சுரண்ட வில்லையா?

சாயிபாபாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எந்தத் தொழிலைச் செய்தார்?

பகவான் சாயிபாபா என்ற பிரச்சாரம் - அதனை நம்பி, விளக்கொளியைக் கண்டு பாய்ந்து வரும் விட்டில் பூச்சிகளாக மக்கள் அவர் வலையில் விழுந்தனர். பணத்தைப் பணம் என்று பார்க்காமல் கொட்டிக் கொட்டிக் கொடுத்தனர்.

எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியானார்! முதலில்லா வியாபாரம் என்பது மதமும், பக்தியும் இவற்றைச் சார்ந்த சேர்ந்த ஆன்மீகம்தானே?

இவ்வளவு நடந்தாலும் படித்த, படிக்காத பாமர மக்களின் பக்திப் போதை தெளிவ தில்லையே! ஒரு சில நாட்கள் பரபரப்பாகப் பேசப்படுவதோடு சரி. அதற்குப் பிறகு வழக்கம்போல பக்தி வேடக்காரர்களின் பகற் கொள்ளைத் தொழில் ஜாம் ஜாமென்றுதானே நடக்கிறது.

பக்தி ஒழுக்கத்திற்குத் துணை போகிறதா?

மோசடிக்குத் துணை போகிறதா?

சிந்திப்பீர்! 27-4-2013

தமிழ் ஓவியா said...

மறக்க முடியுமா?

1985 இதே நாளில் தான் (27.4.1985) வெள்ளுடை வேந்தர் தியாகராயர் பிறந்த நாள் பொதுக் கூட்டத் தில் கலந்து கொண்டு உரையாற்றித் திரும்பிய நேரத்தில் வடசென் னையில் ஆர்.எஸ்.எஸ். கூலிகள் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்மீது கொலை முயற்சி தாக்குதலை மேற்கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

மடிசார் மாமி!

மடிசார் மாமி என்று ஒரு திரைப்படம் தயாரிக் கப்பட்டு வருகிறது. இந்தத் தலைப்பை மாற்ற வேண்டும்; பார்ப்பனப் பெண்களின் உடையைக் கேலி செய்வதுபோல் இருக்கிறது என்று தமிழ் நாடு பார்ப்பனர் சங்கம் சென்னை மாநகரக் காவல் துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
ஏன் அய்யர் ஆத்து மாமிகள் எல்லாம் இப்பொ ழுது மடிசார் கட்டுவ தில்லையோ! சுடிதார் போட ஆரம்பித்து விட் டனரோ!
இன்னொன்று: மடிசார் கட்டுவது கேவலம் என்று பார்ப்பனர்களே நினைக்க ஆரம்பித்து விட்டனரோ!

தமிழ் ஓவியா said...


சபர்மதி, ராஜியின் முறிவு

சுயராஜ்யக் கட்சியாருக்கும் பரஸ்பர ஒத்துழைப் பாளர்களுக்கும் வெளிப்படையாய் உள்ள வித்தியாச மெல்லாம் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங் களை ஏற்றுக்கொள்வ தென்பது முன்னவருக்கும், கவர்ன்மெண்டார் எவ்வளவு இணங்கி வருகிறார் களோ அவ்வளவுக்குத் தகுந்தபடி 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங்களை ஏற்றுக் கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்வதென்பது பின்ன வருடையதுமான வெளிப்படை கொள்கைக ளாகும்.

இந்த கொள்கைக்கும் மிதவாதம், ஜஸ்டிஸ், பெசண்டம்மையார் ஆகியோர்களுடைய கட்சிக் கொள்கைக்கும் யாதொரு விதமான வித்தியாசமும் வெளிப்படையாகவுமில்லை, இரகசியமாகவுமில்லை. சுயராஜ்யக் கட்சிக்கும் மேற்கண்ட மற்ற கட்சிகளுக் கும் அந்தரங்கத்தில் யாதொரு விதமான வித்தியாசமு மில்லை. சுயராஜ்யக் கட்சி சாத்தமுதில் மலஅமுது விழுந்து விட்டது, வடிகட்டினாப் போல்வாறு என்பது போல் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் உத்தி யோகம் ஏற்றுக் கொள்வதென்று சொல்லுவது ஓட்டர் களை ஏமாற்றுவதற்குத் தமிழ்நாட்டு அய்யங்கார் கோஷ்டிகள் செய்த சூழ்ச்சியேயல்லாமல் வேறல்ல.

ஏனென்றால் அவர்கள் தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் கட்சி யாரைப் போலவும், மிதவாதக் கட்சியாரைப் போலவும், தாங்களும் உத்தியோகம் பெற்றுக் கொள்ளுவதற்கு வந்துவிட்டோமென்று சொன்னால் பாமர ஜனங்கள் ஏமாற மாட்டார்கள் என்று நினைத்து அதற்காகக் கண்டுபிடித்த தந்திரமாகும். இந்த தந்திரக்காரரே சுயராஜ்யக் கட்சியிலும் காங்கிரஸிலும் ஆதிக்கம் செலுத்துகிறவர்களானதினால் அவைகளிலும் தங்கள் தந்திரங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

பம்பாய்க்காரரும், மஹாராஷ்டிரக்காரரும் இவர்களைப் போலவே உத்தியோக வேட்டைக்காரர்களானதினாலும், அங்குள்ள பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்கு இவ்வளவு தந்திரம் வேண்டியதில்லையானதினாலும், அவர்கள் இவர்களுடைய தந்திரத்தை வெளிப்படுத்த முன் வந்தார்கள்.

அவர்கள் கட்சி வலுக்க ஆரம்பிக்கவே அவர் களை எதிர்த்து நிற்க யோக்கியதையில்லாத சுயராஜ்யக் கட்சியார், பம்பாய்-மராட்டா மாகாணக்காரர்களின் காலுக்குள் நுழைந்து அவர்களுடன் ராஜி செய்து கொள்ள சபர்மதி ஆசிரமத்தின் பெயரையும் மகாத் மாவின் பெயரையும் உபயோகப்படுத்திக்கொண்டு புதுத் திருடன், பழைய திருடன் ஆகிய இருவரும் இனிமேல் திருடப் போவதில் ஒரே முறையைத்தான் உபயோகப் படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர ஆளுக்கு ஒரு முறையை அனுசரித்து ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுக்கலாகாது என்ற ராஜிக்கு வந்தார்கள்.

இந்த ராஜியை மேற்கண்ட திருட்டில் பங்குள்ளவர்களெல்லாம் ஆனந்தமாய்ப் பாராட்டினார்கள். ஆனால், தமிழ்நாட்டி லுள்ள பங்குக்காரர் களுக்கு இதற்கு முன்னமேயே மூக்கு அழுகிப் போயி ருந்த படியினால் இந்த ராஜியைப் பாராட்ட ஆரம்பித்தால் மூக்கில் புழு உண்டாகி விடுமோவென்று அஞ்சி அந்த ராஜியை ஒப்புக்கொள்ள மனமில்லாதவர்கள் போல் பொய்யழுகை அழுதார்கள்.

தமிழ்நாட்டுக்குப் பெரிய சந்தோஷ சமாச்சாரம் கொண்டுவருவது போல் இந்த ராஜி சங்கதியைக் கொண்டுவந்த அய்யங்கார் கோஷ்டிக்குத் தமிழ்நாட்டுப் பங்குக்காரர்களின் அழுகை பெரிய ஆபத்தை உண்டாக்கிவிட்டது. இவ்வெச்சரிக்கையைத் தூக்கிக் கொண்டு மறுபடியும் ஆமதாபாத்துக்கு ஓடினார்கள். தலைவர் பண்டிதநேருவைப் பிடித்து ஒரு கரணம் போடச் சொன்னார்கள். அவர் அப்படியே ஒரு அந்தர் அடித்தார்.

இவ்வந்தரை ஜெயகர், கெல்கர் கூட்டத்தார் மதிக்காமல் அவரவர் கையாலானதை அவரவர் பார்த்துக் கொள்வதென்பதன் முடிவின் பேரில் ராஜி முறிந்தது என்கிற பெயரோடு கலைந்து விட்டார்கள். இந்த ராஜி முறிவுக்குப் பண்டிதநேரு ஒரு சமாதானம் சொல்லு கிறார்.

அது எதுபோலென்றால், தேங்காய் திருடுவதற் காக ஒரு திருடன் தென்னை மரத்தின்மேல் ஏறினான்; மரக்காரன் கண்டு கொண்டவுடன் திருடன் தானாகவே கீழே இறங்கி வந்தான்; மரக்காரன் திருடனைப் பார்த்து ஏன் மரத்தின் மேல் ஏறினாய் என்று கேட்டான்; திருடன் கன்றுகுட்டிக்குப் புல்லுப் பிடுங்கப் போனேன் என்று சொன்னான்; அதைப்போல் பண்டிதநேரு என்கிற பிராமணர் சமாதானமும், தமிழ்நாட்டு அய்யங்கார் என்கிற பிராமணர் சமாதானமுமிருக்கிறது.

பண்டித நேரு யோக்கியமான நிலைமையில் இந்த சமாதானம் செய்து கொண்டிருப் பாரேயானால் தனது சமா தானத்தைத் தன்னைப் பின்பற்றுவோர் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவுடனே தலைமைப் பதவியி லிருந்து விலகியிருப்பார். இதுதான் சுயமரியாதைக்கு லட்சணம். அதைவிடுத்து நான் அப்படி நினைத்தேன்; இப்படி நினைத்தேன்; கன்றுக்குட்டிக்குப் புல்லுப் பிடுங்கப் போனேன்;

இல்லாததால் திரும்பி வந்துவிட்டேன் என்று சொல்லுவது சுயராஜ்யக் கட்சியின் யோக்கியதையைப் பற்றியும் அது பிராமண ருடைய கட்சியென்பதாகவும், அது யோக்கியமான கட்சி அல்லவென்றும் நாம் இதுவரையிலும் எழுதியும் பேசியும் வந்ததை வெட்ட வெளிச்சமாய் மெய்ப்பித்துக் காட்டி விட்டது என்றே திருப்தி அடைகிறோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 09.05.1926

தமிழ் ஓவியா said...


இந்து மகாசபை


இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகி விட்டால் நமது சர்க்காருக்கு எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிக சங்கடம் நமது பிராமணர்களுக்கு ஏற்பட்டுவிடும். ஏனெனில் சிறு வகுப்பாயுள்ளவர்கள் வாழ வேண்டுமானால் பெரு வகுப்பாய் உள்ளவர்களை ஒருவருக்கொருவர் உதைத்துக் கொள்ளும்படி செய்து பிரித்து வைத்தால் தான் முடியும் என்பது ஒரு பழமொழி.

அப்பழமொழிக் கிணங்கவே சர்க்காராரும் பிரித்தாள பல தந்திரங்கள் செய்து அதில் வெற்றிபெற்று வருகிறார்கள். அது போலவே நமது பிராமணர்களும் பிராமணரல்லாதாரை அடக்கியாள அவர்களுக்குள் பிரிவினையுண்டாக்கி ஒருவருக்கொருவர் துவேஷமும் பொறாமையும் நிரந்தரமாய்க் கொள்ளும்படி பல தந்திரங்கள் ஆதியிலிருந்தே செய்து வந்திருக்கிறார்கள்.

அவை களின் குறிப்புதான் இன்றைய தினம் இந்தியாவைக் காட்டிக் கொடுக்கும் வர்ணா சிரமமும் பஞ்சமர் என்னும் ஜாதியும்.இதை மகாத்மா எப்படியா வது ஒழித்து விடுதலை சம்பாதிக்கலாம் என்று எண்ணியவு டன், நமது பிராமணர்கள் புதுதந்திரம் ஒன்று செய்திருக் கிறார்கள். அதுதான் இந்து மகா சபை. அது இந்துக் களை மாத்திரம் நிரந்தரமாய்ப் பிரித்து வைப்பதோ டல்லாமல் இந்து முஸ்ஸீம் ஒற்றுமையும் நிரந்தரமாய் ஏற்படாமலிருப்பதற்குச் செய்த சூழ்ச்சியாகும்.

தற்காலம் தேசமெங்கும் ஏற்பட்டிருக்கும் இந்து முஸ்லீம் கலவரத்திற்கு இந்து மகாசபையே காரணம் என்பது நாம் சொல்லாமலே விளங்கும். தற்கால பிராமணீயம் உள்ள வரை தேசம் உருப்படப் போவ தில்லை என்பது நிதர்சனமாகி வருகிறது.

- குடிஅரசு துணைத் தலையங்கம் 09.05.1926

தமிழ் ஓவியா said...


காந்தியின் மகிமை


இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷணை

சாமுண்டி: ஏ,அண்ணே மதுரை வீரா! எல்லோரும் காந்தியை மகாத்மா, மகாத்மா என்று கூப்பிடுகிறார்களே, அவர்கிட்ட ஏதாவது மகிமை இருக்கிறதா?

மதுரை வீரன்: மகிமை என்றால் என்ன?

சாமுண்டி: மகிமை என்றால் தெரியாதா? சித்து விளையாட்டு. கல்லைக் கற்கண்டு செய்கிறது; சாணியைச் சந்தனம் செய்கிறது; கள்ளைப் பன்னீராக்குவது. இந்த மாதிரி சித்து விளையாட்டுக்கள்தான்.

மதுரைவீரன்: அடேயப்பா! இதுதானா சித்து என்கிறது! இதெல் லாம் அவருடைய சிஷ்யப் பிள்ளைகள் செய்து விடுவார்கள். அதிலும் தமிழ் நாட்டிலிருக்கும் குட்டி மகாத்மாக்கள் இப் பொழுது கூட செய்து வருகிறார்கள். இது ஒரு அதிசயமா?

சாமுண்டி: அதிசயம் சொல்லுகிறேன் கேளு. சேலம் ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டி யாருக்கு வடஆர்க்காடு ஜில்லாவிலே சட்டசபை மெம்பரா யிருக்கிறது. இது எப்படிப்பட்ட சித்து பார்த்தாயா? அப்புறம் சென்னைக் கார்பொரே ஷனைப் பாரு. பார்த்தாயா? இன்னம் கேளு; இதுகளைவிட ஒரு பெரிய சித்து விளையாட்டு காட்டுகிறேன் பார். ஸ்ரீமான் எம்.கே.ஆச்சாரி யாருக்கு இந்தியா சட்டசபை மெம்பராயிருக்கிறது. இதைவிட இன்னும் என்ன பெரிய சித்து வேணும். இந்த சித்துக்கள் எல்லாம் அவருடைய பெயர் என்கிற மந்திரத்தைச் சொன்னதினாலேயே ஏற்பட்டது. இனி இந்த வருஷத்திற்கு அவருடைய சிஷ்யர்கள் குட்டி மகாத்மாக்கள் வேலை செய்யப் போகிறார்கள். அப்பொழுது மகாத்மாவின் மகிமையை ஒரு கை பார்க்கிறாயா?

மதுரை வீரன்: ஓட்டைக் காசு, உடைந்த சலங்கை, செல்லாக் காசு, செம்பு, பித்தளைத் துண்டு இதுகள் எல்லாம் இந்தியா சட்டசபைக்கும் சென்னை சட்டசபைக்கும் போய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அய்யம்மார் சொற்படி ஆடப் போகின்றதுகள். இதைவிட இன்னும் என்ன மகிமை வேண்டும்?

சாமுண்டி: அடேயப்பா! இது போதாதா? போதும் போதும். மகாத்மாவின் பெயரைச் சொன்னாலே இவ்வளவு காரியம் நடக்கிறதா! இனி அந்த மகான் தங்களுக்குச் சுவாதீனமாய் விட்டால் எவ்வளவு நடக்காது? சரி சரி, இனிமேல் பேசுவதில்லை!

- குடிஅரசு - உரையாடல் - 09.05.1926

தமிழ் ஓவியா said...

புரட்சிக் கவிஞரும் ஈழத் தமிழர்களும்

புரட்சிக் கவிஞரின் பிறந்த நாள் ஏப்ரல் 29. (1891) இந்நாளில் ஈழத் தமிழர் நிலை குறித்து அப்பொழுதே நேரு பிரதமராக இருந்த போதே நிலைமை என்ன?

இதோ புரட்சிக் கவிஞர் பாடலை ஒரு முறை படித்துப் பாருங்கள்.

நம் இனத்தார் செம்மைத் தமிழர்கள்

இலங்கை அரசினால் எய்தும் இன்னலை

ஆதரித்தது நேருவின் ஆட்சி

மலையகத் தமிழர்கள் நிலைமை நன்றெனில்

நெஞ்சு கொதித்தது நேருவின் ஆட்சி!

அங்குள்ள தமிழர்கள் தொல்லை அடைந்திடில்

ஆம் ஆம் என்றது அறமிலான் ஆட்சி!

தமிழை அழிக்கத் தமிழனைத் தேடிக் காசு தந்து அலுவல் காட்டி

ஊக்கம் செய்தது உயர்விலான் ஆட்சி!

என்று பாடினாரே புரட்சிக் கவிஞர்! இன்னும் சொல்லப் போனால் 1939ஆம் ஆண்டிலேயே இந்தப் பிரச்சினையில் நீதிக் கட்சி அக்கறை காட்டியுள்ளது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் நிருவாகக் கமிட்டிக் கூட்டம். 10.8.1939 அன்று ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்பதாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர். ஏ.டி. பன்னீர்செல்வம், ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர்களை இலங்கைக்குச் சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாறு. இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது என்பது முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது (விடுதலை 11.8.1939 பக்கம் 3)

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்த இயக்கத்துக்குள்ள தொடர்பையும் அக்கறையையும் விமர்சிக்க யாருக்கும் யோக்கியதை போதாது.

தமிழ் ஓவியா said...

செய்திகளின் பின்னணியில் அமெரிக்காவில் திருவையாறாம்


- மின்சாரம்

பார்ப்பனர்கள் சந்திர மண்டலத் திற்குச் சென்றாலும் அவாளின் கலாச்சாரத்தைக் கால்கோள் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

பாரதியார் சங்கம் என்று கூறிப் பிள்ளையார் சுழி போடுவார்கள். அதன் மூடு திரையில் அவாள் சமாச்சாரங்கள் ஜாம் ஜாமென்று சலங்கை கட்டி ஆடத் தொடங்கி விடும்.

அமெரிக்காவில் குடியேறிய பார்ப்பனர்களால் அமெரிக்காவின் செனட் சபையில் ரிக்வேதம் உபநிஷத், பகவத் கீதையிலிருந்து சில பாடல்களைப் பாட ஏற்பாடு செய்யப்பட்டது. ராஜன்சேட் என்னும் சமஸ்கிருதப் பண்டிதரும் அதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 27.6.2007).

அமெரிக்காவில் வாசிங்டன் ஹவாய் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற துளசி கப்பார்ட் என்ற இந்து மதப் பார்ப்பனப் பெண் நாடாளுமன்றத்தில் கீதையின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார்.

(பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும், பாவயோனியில் பிறந்தவர்கள் -_ கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32).

ஒரு கால கட்டத்தில் ருசியாவிலும் இந்தக் கேடு கெட்டத்தனம் வாலை நுழைத்து, அதை ஒரு வழியாக்கி விட்டது.

இப்பொழுது என்னடா என்றால் அமெரிக்காவில் திருவையாறாம்! திருவையாறில் தொடங்கிய வியாதி இப்பொழுது அமெரிக்காவிலும் குடி யேறி விட்டது. தியாகராஜர் ஆரா தனை விழாவுக்குக் கொடியேற்றி விட்டார்கள். மார்ச்சு 30 தொடங்கி ஏப்ரல் 7 வரை பிர்மாண்டமாம்! சூத்திர ஏடான குமுதம் (24.4.2013 பக்கம் 102-_104) குதூகலிக்கிறது. சென்னையி லிருந்து நூறு கலைஞர்கள் இதற்காகப் படையெடுத்துச் சென்றிருக்கிறார்கள். (அமெரிக்காவுக்கு நூறு பேர் செல்லுவது என்றால் இதற்கெல்லாம் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு வசதி இருக்கிறது என்பதைக் கவனிக்கவும்)

சுதா ரகுநாதன், திருச்சூர் ராமச் சந்திரன், நெய்வேலி சந்தான கோபால கிருஷ்ணன், கே. காயத்ரி எல்லாம் அவாள் பட்டியல்தான்.

தவில், நாதஸ்வரம் என்று தவிடு பொடிதான், 500 அமெரிக்கா வாழ் குழந்தைகள் தியாகராஜரின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை ஓகோவாம்!

36 வருடங்களுக்கு முன்பே சாதா ரணமாகத் தொடங்கியது இப்பொழுது இந்த அளவுக்கு உச்சத்திலாம்!

இதில் சிறப்பு விருந்தினராக ஒருவர் கலந்து கொண்டு இருக்கிறார். அவரை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்தான் அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதர் நிருபமாராவ். இவரும் அவாள் ஆத்துப் பெண்தான்.

இந்தியாவின் வெளி நாட்டுச் செய லாளராக இருந்து அவர் பங்குக்கு இலங்கையில் ஈழத் தமிழர்களை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னாலான கைங்கரியத்தைச் செய்தவர்! இல்லாவிட்டால் பதவி ஓய்வுக்குப் பிறகு தனியே அழைத்து அம்மை யாரைக் கவனித்து, உபசரித்து அனுப் புவாரா இலங்கை அதிபர் ராஜபக்சே?

தமிழ் ஓவியா said...

வெறும் பாட்டுக் கச்சேரி மட்டு மல்ல; - நடன நிகழ்ச்சிகளும் உண்டு - அதற்கும் அவாள் ஆத்துப் பெண்கள்தான் ஏற்றுமதி.

எங்கே போனாலும் தமிழ்க் குரல்தான், நம்ம சங்கீதம்தான், நம்ம பேச்சுத்தான் அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற உணர்வே துளியும் உண்டாகவில்லை.

அமெரிக்காவிலிருந்து செய்தி படங்கள் யோகா! (ஆகா எப்படி!) _ குமுதம் இவ்வாறு கூறுகிறது.

இதெல்லாம் உண்மைதானா? எங்கே போனாலும் தமிழ்க் குரல்தானா? நம்ம சங்கீதம் தானா?

இங்கே திருவையாற்றில் நடக்கும் தியாகராஜர் ஆராதனையிலேயே தமிழ் கிடையாது; - ஆம், மருந்துக்கும் தமிழ் கிடையாது. அப்படி இருக்கும் பொழுது அங்கு எங்கு பார்த்தாலும் தமிழ் என்பது யாரை ஏமாற்ற? பெயருக்குத் தமிழ் என்ற நாமகர்ணம் அவ்வளவுதான்; பாடல்கள் எல்லாம் தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனைகள்தாம்.

திருவையாறு தியாகராஜர் விழாவில் தண்டபாணி தேசிகர் சித்தி வினாயகனே! என்ற தமிழ்ப் பாடலை (இவ்வளவுக்கும் அது பக்திப் பரவசப் பாடல்தான்!) பாடியதற்காக சந்நிதானம் தீட்டாயிடுத்து என்று கூறி, தீட்டுக் கழிக்கும் சடங்குகளைச் செய்த பிறகு தானே அரியக்குடி ராமானுஜ அய்யங் கார் திருவாய்த் திறந்து தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடினார்.

அதனைக் கண்டித்து தீட்டா யிடுத்து! என்று தலைப்பிட்டு குடி அரசில் அப்பொழுதே (9.2.1945 பக்கம் 7) கட்டுரை தீட்டியவர்தான் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

சென்னைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சென்னை ராஜா அண்ணா மலை மன்றத்தில் நடைபெற்ற தமிழிசை விழாவில், முதல் அமைச் சராகக் கலந்து கொண்ட கலைஞர் அவர்கள் (21.12.1989) செம்மங்குடி சீனி வாசய்யர், அக்கிரகாரத்து அம்மணி யாகவே ஆகிவிட்ட எம்.எஸ். சுப்பு லட்சுமி அம்மையார் ஆகியோரை அருகில் அமர வைத்தே நினை வூட்டினாரே (இவருக்குப் பெயர்தான் கலைஞர் என்பது) உள்ளபடியே தமிழிசைமீது தீராத காதல் அமெரிக்கா வாழ் இந்தத் தமிழர்களுக்கு(?) இருந்திருக்குமேயா னால் இந்தத் தியாகராஜருக்கு முன்னோடியான _- காலத்தால் முந்தியவர்களுமான மும்மணிகளான சீர்காழி முத்துத் தாண்டவர் (1525_-1600), அருணாசலக் கவிராயர் (1711-_1779) தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை (1712-1787) ஆகியோருக்கு அல்லவா அமெரிக்காவில் விழா எடுத்திருப்பார்கள்!

பார்ப்பனர்களின் இந்தப் பம்மாத் துக்களை நம் தமிழர்கள் என்றுதான் புரிந்து கொள்வார்களோ!

இந்த நேரத்தில் இன்னொன்றைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

உண்மையான தமிழிசை மும்மணிகளாகிய சீர்காழி முத்துத் தாண் டவர். அருணாசலக் கவிராயர், தில்லை விடங்கன் மாரி முத்தாபிள்ளை ஆகியோரைச் சிறப்பாக நினைவு கூரும் வண்ணம் சீர்காழியிலேயே மணி மண்டபம் ஒன்றை ரூ.1.51 கோடி செலவில் கடந்த தி.மு.க. ஆட்சியிலே மானமிகு மாண்புமிகு முதல் அமைச் சர் கலைஞர் அவர்கள் உருவாக்கி, நிறைவு பெறும் கால கட்டத்தில் ஆட்சி போயிற்று. அக்கிரகார ஆட்சி அதனைத் திறப்பு விழா செய்யுமா என்பது கேள்விக் குறிதான்!

தமிழ் ஓவியா said...


தன்னைப் பற்றி பெரியார்


பெரியார் ஒரு முழுப் புரட்சியாளர் (நெ.து. சுந்தரவடிவேலு) நூலில் 10ஆம் பக்கத்தில் இருப்பது:

எனது வார்த்தைகளும், எழுத்துக்களும், செய்கைகளும் தேசத்துரோகமென்றும், வகுப்புத் துவேஷமென்றும், சிலர் சொல்லவும், ஆத்திரப்படவும் ஆளானேன்.

அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள், தேச பக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும், என்னைக் கண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.

இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும்? என்று யானே யோசிப்பதுண்டு.
சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும்!

நாம் ஏன் இக்கவலையும் தொல்லையும் அடைய வேண்டும்?

நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி சம்பார்த்தனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவி உண்டா? ஒரு தலைவராவது உதவி உண்டா? ஒரு தேச பக்தராவது உதவி உண்டா? இமயமலை வெய்யிலில் காய்கிறது என்று குடைபிடிப்பது போல் இருக்கிறது என்பதாகக் கருதி விலகி விடலாமா? என்று யோசிப்பதுண்டு.

ஆனால், விலகுவதில்தான் என்ன லாபம்?

ஏறக்குறைய நமது ஆயுட்காலமும் தீர்ந்துவிட்டது. இனி நாலோ, அய்ந்தோ அதிகமாக இருந்தால் பத்து வயதுக்காலமோ இருக்கலாம்.

இந்தக் கொஞ்சக் காலத்தையும் ஏன் நமது மனசாட்சிக்கு விட்டுவிடக் கூடாது?

விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகின்றோம்? என்பதாகக் கருதி உழன்று கொண்டிருக்கின்றோமேயல்லாது வேறில்லை.

இக்கஷ்டமானதும் மனதுக்கு இன்பத்தைக் கொடுக்கக் கூடியதுமான காரியத்தில் இறங்கி விட்டோம்.

உலகம் ஒப்புக் கொண்டாலும் சரி, தள்ளி விட்டாலும் சரி, நமக்கு அதைப்பற்றி கவலையில்லை.

- என்று பெரியார் எழுதியிருப்பது, அவருக்கிருந்த ஒட்டு மொத்தமான எதிர்ப்பைக் காட்டுகின்றன.

சமுதாயத்தின் மேல்தட்டில் இருந்து கொண்டு நாட்டை இயக்கிக் கொண்டிருந்தோர் அனைவரும் எச்சம் சொச்சம் இல்லாமல் எதிர்த்தனர்.

இந்த உண்மையை மிகத் தெளிவாக விளக்கும் பெரியாரின் இத்தலையங்கத்தை உலகப் புகழ் வாய்ந்த தன்னிலை விளக்கக் கட்டுரைகளில் தலைசிறந்ததாகக் குறிக்கலாம்.

கற்றவர், அறிந்தவர், தெரிந்தவர், பொது நலத் தொண்டர் யாவரும் முழுமையாக எதிர்த்தனர் என்றால், மற்றவர் நிலையை நாம் என்ன எண்ண முடியும்.

மற்றவர்கள் பெரியாருடைய கூட்டங்களை நடத்த விடாமல் கலகம் செய்யும் நிலையில் தொடங்கிப் பெரியாரை அடிக்கின்ற அளவுக்கு முன்னேறி நின்றனர்.

இந்திய நாட்டில் பொது வாழ்வில் ஈடுபட்ட எவரும் இவ்வளவு பெரிய எதிர்ப்பைச் சந்திக்கவில்லை.

தன்னுடைய கைப்பணத்தைச் செலவு செய்து கொண்டுதான் அவருடைய கருத்துக்களை விளக்கினார்.

படித்த இளைஞரில் சிலர் அவ்வப்போது பெரியாருடன் சேருவதும் பிறகு பிரிந்து போவதும் எதிரணியில் சேர்ந்து கொள்ளுவதுமாக இருந்தனர்.

- க. பழனிசாமி, தெ. புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


Pan Card என்பது...

Pan (பேன்) என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number)
என்பது இந்திய வருமான வரி சட்டம் 1961இன் கீழ் வழங்கப்படும் தனித்தன்மை வாய்ந்த எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்டதாகும். இந்திய வரித்துறையின்கீழ் உள்ள Central Board for Direct Taxes (CBDT)-ன் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படுகிறது. இது தேசிய அடையாள எண்ணிற்கு சமமாக கருதப்படுகிறது. இதனை சிறந்த அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.

வங்கிகளில் கணக்கு தொடங்குதல், வரி விதிக்கப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள சொத்துக்களை வாங்குதல், விற்பனை செய்தல் போன்ற நிதி பரிவர்த்தனைகளுக்கு Pan எண் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் அடையாளம் காண்பது மற்றும் வரி ஏய்ப்பை தடுத்தல் ஆகியவையே. . Pan கார்டின் பிரதான நோக்கமாகும். தனித்த, தேசிய அளவிலான நிரந்தர ஒன்றாகும். குடியிருக்கும் முகவரி மாற்றத் தின் போதும் பாதிக்கப்படாத ஒன்றாகும். அதாவது மாநில அளவில் இருப்பிடத்தை மாற்றுபவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. . Pan ன் வடிவம் AAAAA9999A என்ற முறையில் அமையும்.

முதல் 5-ம் எழுத்துக்களாகவும், அடுத்த 4ம் எண்களாகவும் அடுத்துள்ள கடைசி ஒன்று எழுத்திலும் காணப்படும். ஒவ்வொரு உறுப்பும் தனித் தன்மை வாய்ந்தது.

C - Company P - Person H - HUF(Hindu Undivided Family) A - Association of Persons (AOP) F - Firm T - AOP (Trust) B - Body of Individuals (BOI) L - Local Authority J - Artificial Juridicial Person G - Government

Pan இன் 5ஆவது உள்ள உறுப்பு முதல் உறுப்பாக அமையும். நான்காவது எழுத்து தனி நபரின் பெயர் அதாவது Personal Pan Card எனில் P அல்லது நிறுவனத்தின் பெயர் Company/HUF/Film/AOP/BOI/Local Authority/Artifical Jurdical Person//Govt. இவற்றை பொறுத்து ‘’C, H, F, A,T, B,L, J, G” எனவும் அமையும். தற்போது வெளிவரும் களின் புகைப்படத்தின் வலது புறம் Pan Card வெளியிடப் படும். நாள் DOI-Date of Issue குறிப்பிடப்படுகிறது. Know your PAN என்ற மத்திய அரசின் புதிய ஆன்லைன் சேவையை பயன்படுத்தி பழைய மற்றும் புதிய பேன் எண்ணைப்பற்றி அறிந்து கொள்ளலாம். இதற்காக https://incometaxindiaefilling.gov.in/portal/know pan.do என்ற இணையதளத்தை பார்க்கலாம். வணிகம் அல்லது தொழில் செய்பவர்கள் ஒவ்வொருவரும் Pan கார்டு வைத்துக் கொள்வது அவசியம். ஆடிட்டர்கள் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.

தமிழ் ஓவியா said...


ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா? இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!


ஜாதியை ஒழித்து இன ஒற்றுமை காத்தார் தந்தை பெரியார், ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா?

இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!

தமிழர் தலைவரின் காலங் கருதிய அறிக்கை

அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் ஒற்றுமை மிகவும் தேவை, ஜாதி தீயை மூட்டி இன ஒற்றுமையைக் குலைக்க வேண்டாம். இரு தரப்பினரையும் அழைத்து நல்லிணக்கத்தை உருவாக்கக் கழகம் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சில மாதங் களுக்குமுன் தருமபுரியிலும், சில நாட்களுக்கு முன் மரக்காணம் பகுதியிலும் ஜாதியை வைத்து நடைபெற்று இருக்கிற கலவரங்கள், தீவைப்புகள், கொலைகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்து கின்றன.

தந்தை பெரியாரின் கோட்பாடு

ஜாதிகளால் பிளவுபட்ட தமிழர்கள் மத்தியில் முக்கால் நூற்றாண்டு காலம் அயராது பாடுபட்டு, தந்தை பெரியார் அவர்கள் ஜாதி மனப்பான்மையை அகற்றி தமிழர் என்ற ஓரினக் கோட்பாட்டை உருவாக்கினார்கள்.

பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் ஒழிந்திருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் என்பது நாம் பெருமைப்படக் கூடிய ஒன்றாகும். இந்த நிலையில் அண்மைக் காலத்தில் இந்த நிலை மாற்றப்படுவதற்குக் காரணம் என்ன? தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் - ஒடுக்கப்பட்டவர்கள்!

வன்னியர், தேவர், நாடார் போன்ற மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற நிலைப்பாட்டுக்கு உரியவர்கள் அல்லர் என்றாலும், கல்வி உரிமை, உத்தியோக உரிமை மறுக்கப்பட்டு வந்த உடலுழைப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் இவர்களின் முன்னேற்றம்தான் சமுதாயத்தின் முன்னேற்றமாக இருக்க முடியும்.

இந்நிலையில் இவர்கள் ஒன்றுபட்டு நின்றால் தான், போராடினால்தான் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு சமூகத்தில் சுயமரியாதைக்கான தகுதிகள் கிடைக்க முடியும்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய சமூகப் புரட்சித் தலைவர்கள் இந்த அடிப்படையில்தான் கருத்துக்களைக் கூறி வந்துள்ளனர். பாடுபட்டும் வந்திருக்கிறார்கள்.

இதனை தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் உணர்ந்திட, உணர்ந்து நடந்திடத் தவறக் கூடாது.

ஏணிப்படி ஜாதிமுறை

வருணாசிரம அமைப்பு முறையில் ஏணிப்படி ஜாதி முறை (Graded Inequality) என்பதன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே அவ்வப்போது நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.


தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் தெளிவாகவே மிக திட்டவட்டமாகவே பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது! என்று சொன்னதை பார்ப்பனர் அல்லாதார், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக் களும், அவர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்புள்ள தலைவர்களும் உணர வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற சித்திரை முழு நிலவு இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாஸ் அவர்களும், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிலரின் உரைகளும், எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை, இவற்றைப் பேசியவர்கள் ஒலி நாடா மூலமாகவோ, வீடியோ மூலமாகவோ போட்டு மறுபடியும் கேட்டுப் பார்க்கட்டும்.

சமூக நல்லிணக்கத்தை வளர்க்கக் கூடிய உரைகளா அல்லது தீண்டத்தகாத மக்களாக ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பகைமை, வெறுப்பு உணர்வை தூண்டக் கூடியவைகளா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும்.

18 சதவிகித இடஒதுக்கீட்டைக் குறை கூறுவதா?

ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்கள்மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை என்று இடை இடையே பேசிக் கொண்டே, ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டை சுட்டிக்காட்டி, அதன்மீது எதிர் விமர்சனம் செய்தது எந்த அடிப்படையில்?

விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களும் இணைந்து இருவரும் கைகோர்த்து பண்பாட்டுக் களத்தில் வலம் வந்தபோது அக மகிழ்ந்தோம்.

இன்று அந்த நிலை, சீர்குலைவு அடைந்தது நியாயம்தானா?

தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர்களுக் கிடையே ஜாதி மறுப்புத் திருமணம் நடைபெறுவது சமுதாயக் குற்றமா?

இன்னும் சொல்லப் போனால் தந்தை பெரியார் அவர்களின் பெயரை அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருக்கும் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டாமா?

அங்கொன்றும், இங்கொன்றுமாக காதல் திருமணத்தில் சில பிழைகள் நடந்திருந்தால்கூட அதனைச் சரி செய்ய முயல வேண்டுமே தவிர, அதனை ஒட்டு மொத்தமாக ஒரு சமுதாயத்திற்கு எதிரான பிரச்சாரமாகப் பெரிதுபடுத்தி, ஏதோ ஒரு தத்துவார்த்தம் போல திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யலாமா?

இளைஞர்களைப் பெரும் திரளாகக் கூட்டி தாழ்த்தப்பட்டவர்கள்மீது வெறுப்புத் தீயை மூட்டும் பணி பொறுப்பானதுதானா?

தலைவர்கள் என்றால் யார்?

தலைவர்கள் என்றால் நெருக்கடியான ஒரு சூழலிலும் கூட பொறுமை காட்டி மக்களை ஆற்றுப்படுத்தி வழிகாட்ட வேண்டும். அதற்கு மாறாக எரியும் நெருப்பில், பெட்ரோலை ஊற்றும் வகையில் நடந்து கொள்ளலாமா?

பிரச்சினைக்கே சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவது அவர்கள் யாராக இருந்தாலும் நியாயம்தானா?

அவர்களின் வீடுகளும், கடைகளும் கொளுத் தப்படுவதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?
அருள்கூர்ந்து சமுதாயத்துக்கு வழிகாட்டும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

தந்தை பெரியார் தமிழர்களை ஒன்று படுத்தினார் - சிலர் ஒன்றுபடுத்தப்பட்ட தமிழர் களை - பார்ப்பனீயத்தின் தொங்கு சதையாக மாறி மீண்டும் ஜாதி பிளவுக்குள் தள்ளுவது மன்னிக்கப் படக் கூடியதா? ஜாதிக் கலவரம் போன்ற நிகழ்வுகள் நடை பெறும்போது அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது - அரசியல் ஆதாயம் என்ற தூண்டிலைப் போட்டுப் பார்க்க ஆசைப்படக் கூடாது.

இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; கடைசியாக ஒரு வேண்டுகோள்: தமிழ்நாட்டுத் தலைவர்கள், அமைப்புகள் கட்சிகளை மறந்து, ஜாதித் தீ எங்கு மூட்டப்பட்டாலும் அதனைக் கண்டிக்க, தடுத்து நிறுத்திட, நான் முந்தி, நீ முந்தி என்று முன்வர வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். யாரோ ஒரு பக்கத்துக்கு வக்காலத்து வாங்குவதாகக் யாரும் கருதக் கூடாது.

நல்லிணக்கத்தை உருவாக்கத் தயார்!

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை ஓங்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு! ஜாதி ஒழிந்த சமத்துவ - ஒப்புரவுச் சமுதாயம் மலர வேண்டும் என்பதற் காகவே பாடுபடக் கூடிய இயக்கம் திராவிடர் கழகம்.

தேவைப்பட்டால் இரு தரப்பினரையும் அழைத்து நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் என்றுமே தயாராக இருக்கிறது.

முன்பு தென் மாவட்டங்களில் ஜாதிக்கலவரம் மூண்டபோதுகூட இதே கருத்தைத்தான் முன் வைத்தோம் என்பதையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
ஒழியட்டும் ஜாதித் தீ!

ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை உணர்வு!

இனமானம் வளரட்டும் - ஜாதி அபிமானம் மடியட்டும்! வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை
28.4.2013

தமிழ் ஓவியா said...


சமாதி


புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்யசாயி மஹோத் சவம் எனும் தலைப்பில் தினமலர் (25.4.2013 பக்கம் 3) ஆறு பத்தி தலைப்புடன் செய்தியை வெளியிட்டுள்ளது.

சத்யசாயிபாபாவின் இரண்டாம் ஆண்டு மகா சமாதி தினத்தை முன்னிட்டு, சத்ய சாயி மகாசமாதி அமைந்துள்ள, பிரசாந்தி நிலையத்தில், சத்ய சாயி ஆராதனை மற்றும் மஹோத்சவம் சிறப்பாக நடை பெற்றது. மூன்று நாட்கள் நடை பெற்ற விழாவில் ஏராளமான பண்டிதர்களும், பக்தர்களும் கலந்து கொண்டு பாபாவின் அருளாசி பெற்றனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. பாபா செத்துப் போனாலும் அவரின் சமாதி ஆசீர்வாதம் செய்கிறதாம். அவர் ஆசீர்வாதத்துக்கு அவ்வளவு சக்தியிருந்தால் சாய்பாபா ஏன் ஒரு மாத காலம் நோய்த் துன்பத்தில் படாத பாடுபட்டார்? (அதன்மீது நமக்கு அனுதாபம் உண்டு!)

எவ்வளவுத் தீவிரமாக சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன! மிகப் பெரிய மருத்துவ நிபுணர்கள் எல்லாம் மண் டையைக் கசக்கியும் (கோடிக் கணக்கில் செலவு செய்தும்) நவீன மருத்துவ வசதிகளைக் கையாண்டும் கடைசியில் பயனில்லையே!

விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைக்க வில்லை என்று கிராமங்களில் ஒரு பழமொழியைச் சொல்லு வார்கள். அதுதான் நினைவிற்கு வருகிறது. சாயிபாபா குளியல் அறை யில் வழுக்கி விழுந்து எலும்பு முறிந்து சக்கர நாற்காலியில் நடமாடினார். புட்டபர்த்தியில் அவரைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓடிப் போய் அறையைத் தாழிட் டுக் கொண்டதால் உயிர் தப்பினார். இவை எல்லாம் நம் சொந்த சரக்குகள் அல்ல! அப் பொழுதே ஏடுகளில் சாங்கோ பாங்கமாக வெளி வந்தவை தான். பிரபல மேஜிக் நிபுணர் பி.சி. சர்க்கார் நேரிடையாகவே சாயிபாபாவைச் சந்தித்து சாயி பாபாவின் மாயா ஜாலத்தை அவருக்கு எதிரிலேயே செய்து காட்டி அசத்தவில்லையா? (பி.சி. சர்க்கார் பேட்டி (இம்பிரிஸ்ட் ஜூன் 1983).

இவற்றிற்கு மேலும் சாயி பாபாவிடம் மனிதனுக்கு மேலாக தெய்வ சக்தி ததும்பி வழிந்தது என்று சொல்ல வருவார்களே யானால் சொல்லுகிறவர்கள் அசல் ஏமாற்றுக்காரர்கள், அவற்றை நம்புபவர்கள் அசல் ஏமாளிகள் - மடையர்கள் என்ப தல்லாமல் வேறு என்னவாம்?

பாபா மறைந்த நிலையில் அங்கு சமாதி கட்டி அதற்கு அற்புதங்களை உண்டாக்கி மறுபடியும் பக்தி வியாபாரம் கிளம்பி விடும் என்று புட்ட பர்த்திக்கு நேரில் சென்று பார்வையிட்ட திராவிடர் கழகப் படை எழுதியது. (உண்மை 15.1.2011) அதுதான் இப்பொழுது நடக்கிறது.

சமாதி என்று சொன்ன வுடன் நேரில் பார்த்துச் சொன்ன தந்தை பெரியாரின் ருசிய நாடகக் கதைதான் நினைவிற்கு வருகிறது.

பாதிரியார் ஒருவர் தன் மகனிடத்தில் ஒரு கழுதையைக் கொடுத்து இதை வைத்துப் பிழைத்துக் கொள் என்று வெளி யூருக்கு அனுப்பி வைத்தார்.

அந்தக் கழுதை நடக்க முடியாமல் இடையில் செத்து விட்டது. மகன் என்ன செய் தான்? அந்தக் கழுதையை அதே இடத்தில் புதைத்துவிட்டு மகான் அடக்கமாகி விட்டார் என்று கிளப்பி விட்டான். பக்தர் கள் பணத்தைக் குவித்தனர். பெரிய பணக்காரன் ஆகி விட்டான். இதைக் கேள்வியுற்ற தந்தை பாதிரியார் அங்கு வரு கிறார். மகன் நடந்ததைச் சொன்னான்.

மகன் அப்பாவைப் பார்த்துக் கேட்டான் நீங்கள் பணம் சம் பாதித்தது எப்படி? அப்பா பாதிரி யார் சொன்னார் புன்னகையோடு செத்துப் போன குட்டிக் கழுதையின் அம்மாதான் என் றாரே பார்க்கலாம் சமாதியின் லட்சணம் இது தான்!

- மயிலாடன் 28-4-2013

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும் அதற்கு துப்பாக்கி முனையில் பதில் சொல்வதும் நல்லதல்ல! கலைஞர் பேட்டி


சென்னை, ஏப். 28 - தமிழ்நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும் அதன் காரணமாக துப்பாக்கி முனையில் பதில் சொல்வதும் நல்ல அறிகுறியல்ல என்று தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (27.4.2013) செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தபோது தெரிவித்தார்.

கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர் :- மரக்காணத்தில் நேற்றைய தினம் பெரிய கலவரம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது? கலைஞர் :- அதைப்பற்றித்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், ரவிக்குமாரும் இந்நேரம் வரை என்னைச் சந்தித்துப் பேசினார்கள். தமிழ் நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும், அதன் காரணமாக துப்பாக்கி முனை யிலே பதில் சொல்வதும் தமிழ்நாட்டிற்கு நல்ல அறிகுறியல்ல. உடனடியாக காவல் துறை தகுந்த கவனம் செலுத்தி, அமைதியை உருவாக்க முன்வர வேண்டும். கட்சித் தலைவர்களும் தங்கள் கடமை யை மறவாமல் பிரச்சினையை அக்கறையோடு அலசி, அவர்களும் அமைதிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

செய்தியாளர் :- மாமல்லபுரத்தில் நடை பெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் எல்லா கட்சிகளின் தலைவர்களையும் ஒருமையில் சாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கெல்லாம் திராவிடக் கட்சிகள்தான் காரணம் என்று கூறி யிருக்கிறார். ஜாதிகளை யெல்லாம் அடையாளப் படுத்திப் பேசியிருக்கிறாரே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- ராமதாஸ் பேசியதைப் பற்றி பத்திரிகையாளர்களாகிய உங்கள் உணர்வு என்ன? அதிலே உங்களுக்கு ஏற்பட்டுள்ள உணர்வுதான் எனக்கும்.

செய்தியாளர் :- நிலக்கரி சுரங்க ஊழலில் மத்திய சட்ட அமைச்சர் சி.பி.அய். விசாரணையிலே தலையிட்டார் என்று சி.பி.அய். இயக்குநரே உச்ச நீதிமன்றத்திலே அறிக்கை தாக்கல் செய்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- நேர்மையாக எல்லாம் நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

செய்தியாளர் :- தமிழகச் சட்ட சபையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை யெல்லாம் வெளி யேற்றி வருகிறார்கள். அதைப் பற்றி எதிர்க்கட்சிகள் எல்லாம் கேட்டுக் கொண்டும், அரசு அதற்கு செவி சாய்க்க வில்லையே?

கலைஞர் :- உங்கள் முடிவுக்கே விட்டு விடு கிறேன். -இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ் ஓவியா said...


ஜாதிக்கலவரத்தை அனுமதிக்க கூடாது: மார்க்சிஸ்ட் தீர்மானம்


சென்னை, ஏப். 28 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (27.4.2013) சென்னை யில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவுக்கு வாகனங்களில் வந்த பாமகவினர் புதுவையை அடுத்து வழிநெடுகிலும் வன்முறை யில் ஈடுபட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சமூக நீதி பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் ஜாதி கலவரத்தை திட்டமிட்டு உருவாக்க முனை வதை அனுமதிக்கக் கூடாது.

உழைப்பாளி மக்களாக உள்ள பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையே மோதலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் சக்திகள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...


சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு


ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா? இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!

மே 4ஆம் தேதி ராஜபாளையத்தில் நடக்க இருக்கும் மாநில இளைஞரணி மாநில மாநாடு - ஜாதி ஒழிப்புக்குத் திட்டம் தரும் மாநாடு - சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு என்று குறிப்பிட்டு பெரியார் பிஞ்சுகள் முதல் அனைவரும் ராஜபாளையத்திற்கு வருகை தருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் 1944-இல் எழுதினார் தமது குடிஅரசு வார ஏட்டில்: நான் ஒருவரை வாலிபர் என்று சொல்வது அன்னாருடைய வயதைப் பொறுத்தது அல்ல; என்னைப் பொறுத்த வரை எனக்கு இயக்கப் பொறுப்பைத் தவிர, வேறு பொறுப்பு இல்லை. எனவேதான் என்னை நான் ஒரு வாலிபனாகவே (இளை ஞனாகவே) இருந்து தொண்டாற்ற எனக்கு இயற்கை வசதி அளித்திருக்கிறது என்றார்.

உற்சாகம் பொங்க வாரீர்!

நமது இயக்கத்தின் புதிய ரத்த ஓட்டமான புத்துணர்ச்சி பொங்கும் எமது ஈடு இணையற்ற லட்சியப் படை வீரர்களான இளைஞர்களே, எம் அரும் தோழர்களே, (தோழியர்களும் இதில் அடக்கம்).

உங்களை உற்சாகம் பொங்க ஓடிவர அழைக்கிறோம் - ராஜபாளையம் நோக்கி! ஆம் -தென் திசையில் நடைபெறும் நமது மாநில இளைஞரணி மாநாடு இதுவே முதல் தடவை! கழகத்தின் கறுஞ்சிறுத்தைப் பட்டாளத்தைக் கண்டு தென் திசை திகைக்க வேண்டும்! அழைப்பது கேளிக்கைக்காக அல்ல; சுற்றுலா இன்பம் சுவைக்க அல்ல, சுயமரியாதைச் சூரணம் உண்டு; சூடேற்றி சோர்விலா லட்சியப் போரில் ஈடுபட்டு பெரியார் பணி முடிக்க, அணி திரண்டு வாருங்கள்! இச்சமுதாயத்தின் பிணி - ஜாதி, மதம், மூடநம்பிக்கை, பெண்ணடிமை முதலியவை ஒழிக்க அறுவை சிகிச்சை செய்ய, அய்யா வழியில் அரும்பணி ஆற்றிட ஆற்றல் மிகு இளைஞர்களே, எம் அருந்தோழர்களே, புறப்படத் தயாராகுங்கள் - ராஜபாளையம் நோக்கி!

சங்கடமில்லை - சபலமில்லை!

நமது அறிவு ஆசான் வாலிபத்திற்குக் கூறிய வரையறையினைத்தான் யானும், பெரியார் தந்த புத்தியையே கொண்டு சொந்த புத்தியை ஒதுக்கி வைத்து விட்டு, நாளும் பணியாற்றிடும் நிலைக்கு என்னுள் நியாயம் கற்பித்துக் கொள்ளுகிறேன்.

சலிப்பில்லை; சங்கடமில்லை. சபலமில்லை; சலனமில்லை. பயணம் தொடர்கிறது; காரணம் நாம் நடைபோடுவது - அதிலும் வீர நடைபோடுவது பெரியார் பாதையில்,

இணையற்ற ஈரோட்டுப் பாதையில் இந்த லட்சியப் பயணத்தில் நம்மை நோக்கி இருட்டடிப்புகள், எதிர்ப்புகள், ஏளனங்கள், அடக்கு முறைகள், தரமற்ற நாலாந்தர நரகல் நடைப் பேச்சுகள், ஏச்சுகள் வீசப்படுவதை அலட்சியம் செய்து, குறிக்கோள்தான் நமது குறியேதவிர, குதர்க்கப் புத்திக் குறும்பர்களுக்கு, பதிலை சொல்லி நமது காலத்தை, கருத்தை, உழைப்பை ஒருபோதும் வீணாக்க மாட்டோம்!

குக்கல்கள் குரைக்கட்டும்!

குரைக்கும் குக்கல்கள் எத்தனையோ பெரியார் காலந்தொட்டு இன்றுவரை; அவை இன்று குப்பைத் மேடுகளுக்குள் மக்கிச் சீரழிந்து கொண்டுள்ளன!

அந்தக் குப்பைகளை நமது கொள்கைப் பயிர் களுக்கு உரமாக்கி; நல்ல செழிப்பான கொள்கைக் கதிர் மணிகளை அறுவடை செய்து காட்டியவர் நம் தலைவர்.
அவர் வழியே நம் வழி!

எனவே அவர் இட்ட பணி முடிக்க, நம் இனத்தின் பழி துடைக்க, இழிவை நீக்க, அடுத்து போராட்ட களம் ஆயத்தப் பாடிவீடுதான் - பாசறைக்கான போர்ச்சங்கு முழக்கிடத்தான் ராஜபாளையத்தில் உங்களைச் சந்திக்க விழைகிறோம் தோழர்களே!

95 வயது நிறைந்த இளைஞர்தான் நமது தலைவர்

குடும்பம் குடும்பமாகப் புறப்படுங்கள், எல்லா வயதினருமான நம் இயக்கத்தின் இளைஞர்களே!

காரணம் - 95 வயது நிறைந்த இளைஞர் தான் தலைவர்தான் இறுதி மூச்சடங்கும் வரை நம்மை வழி நடத்திட்ட தலைவர்!

வயது இடைவெளி - இவ்வியக்கம் அறியாத சமவெளி என்பதை மறவாதீர்!

இருபாலரும் - ஏன் பெரியார் பிஞ்சுகளும்கூட - குடும்பம் குடும்பமாகத் திரள வேண்டும்!

அதைப் பார்த்து அந்த ஊர் சிறுக்க (குறுக) வேண்டும்!

உலகம் வியக்க வேண்டும்!!

இயக்கத்தவர்களை சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் வழியனுப்பு மாநாடு! சங்கமிப்போம் வாரீர்!

ராஜபாளையம் - நமக்கு, ராஜபாட்டையைக் காட்டி, பெரியார் பணி முடிக்க, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் எழுந்து நடமாடிடும் வண்ணம் செய்ய, சமரசமற்ற கொள்கைச் சமரில் ஈடுபட நாம் அனைவரும் சங்கமிப்போம்! வாரீர்! வாரீர்!!

கருங்கடல் பொங்கட்டும்! தியாக தீபங்களின் சுடரொளியாக வெளிச்சம், நமது வெற்றிப் பாதைக்கு வழிகாட்டட்டும்!

வாருங்கள், தோழர்களே வாருங்கள்!

அன்போடு அழைக்கும் உங்களின் ஓய்வு விரும்பா

தொண்டன் தோழன்



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை, 29.4.2013

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக் கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ, நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


முதல் அமைச்சர் அவசரம் காட்ட வேண்டும்


தமிழ்நாடு சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மான்யக் கோரிக்கைமீது கடந்த வெள்ளிக்கிழமையன்று (26.4.2013) இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்லிஸ்ட்) உறுப்பினர் ஏ. லாசர், அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு தொடர்பாக மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு முறையை அமலுக்குக் கொண்டு வர வேண்டும். தகுதித் தேர்வில் உயர் ஜாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் வெற்றி பெறுவதற்கு தனித்தனி மதிப்பெண்களை மத்திய அரசு தீர்மானித்துள்ளது; ஆந்திரத்தில்கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகபட்ச இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளனர். முற்பட்ட மக்களுக்கு (உயர் ஜாதியினருக்கு) 60 சதவீத மதிப்பெண், பிற்படுத்தப் பட்டோருக்கு 50 சதவீத மதிப்பெண், தாழ்த்தப் பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 40 சதவீத மதிப்பெண் என்று தனித் தனியே நிர்ணயிக்கப் பட்டுள்ளன.

ஆனால் தமிழ்நாட்டில் ஒரே தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் சாசன உரிமையான இடஒதுக்கீடு முற்றிலு மாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

சி.பி.எம் உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் எழுப்பியுள்ள இந்தப் பிரச்சினை மிகவும் முக்கிய மானது.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விரிவாக அறிக்கையினை விடுதலையில் (2.4.2013) வெளியிட்டுள்ளார்கள்.

இந்த அறிக்கைக்கு 24 நாட்களுக்குப் பிறகு சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது. மாநில அரசு இந்த மிக முக்கியமான பிரச்சினையில் சரியான முடிவுக்கு வந்திருக்க வேண்டாமா?

சட்டமன்ற, உறுப்பினர் எழுப்பிய பிரச்சினைக்குக் கல்வி அமைச்சர், இதுகுறித்து முதலமைச்சர் பரிசீலித்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இன்னொரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நடத்தப்படும் தேர்வு, ஒரு தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் அத்தனைப் பேரும் தேர்ச்சி பெற்றால் அத்தனைப் பேருக்கும் வேலை கொடுக்க முடியாது. வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள் பணிய மர்த்தப்படுகின்றனர் என்று பதில் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சர் கூறிய பதிலைப் பார்க்கும்போது, குறிப்பிட்ட பிரச்சினை என்ன என்பதை அறியாமல் பதில் சொல்லியிருக்கிறார் என்றே கருத வேண்டி யுள்ளது.

குற்றச்சாற்று - தகுதித் தேர்வுக்குத் தாழ்த்தப் பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், உயர் ஜாதியினர் என்ற பிரிவுகளுக்குத் தனித்தனியே மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படாதது ஏன்?
சகட்டுமேனியாக உயர் ஜாதியினருக்கு என்ன மதிப்பெண்ணோ, அதே மதிப்பெண் 60 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நிர்ணயித்திருப்பது இடஒதுக்கீடு சட்டத்திற்கு விரோதமானதாயிற்றே என்பதுதான் குற்றச்சாற்று.

இதற்குக் கல்வி அமைச்சரின் பதில் என்ன என்பதுதான் பிரச்சினையே - அதற்கு நேரிடையான பதில் சொல்லாமல், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என்று குறுக்குச்சால் ஓட்டுகிறார்.

தனித்தனியே மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இன்னும் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருப்பார்களே, அந்த வாய்ப்பு இப்பொழுது பறிக்கப் பட்டுள்ளது என்பதுதான் முக்கிய குற்றச்சாற்று.

இன்னொரு பிரச்சினையையும் சி.பி.எம். சட்டமன்றக் குழுத் தலைவர் தோழர் சவுந்தரராசன் கூறியிருப்பதும் முக்கியமானதாகும்.

தகுதி மதிப்பெண்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கும், அதிக மதிப்பெண் ஒருவர் பெற்றால் அவரைப் பொதுப் பிரிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும்; அப்படி நடைமுறையில் கொண்டு செல்லப்படுவதில்லை என்று கூறியிருக்கும் குற்றச்சாற்று மிகவும் கடுமை யானது. இதனை அலட்சியப்படுத்தவும் கூடாது. சி.பி.எம். உறுப்பினர் கூறிய குற்றச்சாற்றின் பொருள் தெளிவானது. இடஒதுக்கீடு இத்தனை சதவிகிதம் என்று சட்டப்படி பெற்றிராத உயர் ஜாதியினருக்குத் திறந்த போட்டிக்குரிய 31 சதவீதம் ஒட்டு மொத்தமாகத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

இது எவ்வளவுப் பெரிய கொடுமை! சமூக அநீதி! முதல் அமைச்சர் விரைந்து இதற்கு நியாயமான தீர்வு காணாவிட்டால் கடும் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

முதற்கட்டமாக மக்கள் மத்தியில் பெரும் அளவில் எடுத்துச் செல்லப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 29-4-2013

தமிழ் ஓவியா said...


இனக்குறையைப் போக்க, புரட்சிக்கவிஞர் அழைக்கிறார்!


- மின்சாரம் -

உனக்குமா ஓர் இயக்கம்? அதைக்
கலைக்க என்ன தயக்கம்?
இனக் குறையை நீக்கப் பெரியார்
இயக்கம் நாட்டில் இருக்கையிலே
- உனக்குமா ஓர் இயக்கம்?
என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பிறந்த பொன்னாள் இந்நாள் (1891).

இனக்குறையை இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் புறப்பட்ட தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமாம் திராவிடர் கழகம் நாட்டில் இருக்கையில், ஏன் உனக்கு இன்னொரு கட்சி என்ற வினாவை எழுப்பியுள்ளார் நம் புரட்சிக் கவிஞர்.

உண்மைதானே, இந்த இனத்துக் குள்ள குறை என்ன? இன்றும் சாஸ் திரப்படியும், சட்டப்படியும் நாம் சூத்திரர் கள்தானே - பார்ப்பனர்களின் வைப் பாட்டி மக்கள் தானே!

இதனைச் சுட்டிக்காட்டி எம்மின மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத் தித் தன்மானத் தீயை மூட்டும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எது?

இந்த இழிவை நீக்க இராமாயணத் தில் தீப்பரவட்டும் என்று எடுத்துச் சொன்னதோடு மட்டுமல்லாமல், அதனை எரித்த தீரர்கள் கொண்ட கோட்டம் திராவிடர் கழகம்தானே!
ஜாதியைப் பாதுகாக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவை பட்டப் பகலில் பகிரங்கமாக எரித்து, அதன் சாம்பலைப் பிரதமருக்கு அனுப்பி வைத்த ஆற்றல் - சட்டத்தை எரித்தால் மூன்றாண்டு காலத் தண்டனை என்று இதற்காகவே சட்டம் கொண்டு வந்தபோதும்கூட அச்சம் இல்லை - அச்சம் இல்லை என்று கூறி பத்தாயிரக் கணக்கில் சட்டத்தை எரித்து மூன் றாண்டுகள் வரை கடும் தண்டனை யைச் சிரித்த முகத்தோடு ஏற்றுச் சிறைக் கோட்டம் ஏகிய இலட்சிய வீரர்களை கொண்ட இவ்வியக்கம் அல்லாமல் வேறு எங்கு இருக்கிறது என்று கேட்கிறார் புரட்சிக்கவிஞர். எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் நம் இனத்திற்கு? ஜாதித் தீயை மூட்டும் பிற்போக்குச் சக்திகள் தலை தூக்கப் பார்க்கின்றன! சவால்களைச் சந்திக்க வேண்டியது நாம்தானே!

30 கல் தொலைவில் உள்ள நமது ஈழத் தமிழர்கள் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கிறனரே!

தமிழின மீனவர்களை சிங்கள கடற்படை நாள்தோறும் வேட்டையாடிக் கொண்டு இருக்கிறதே!

அந்த இயக்கத்தின் இளைஞர் சேனை ராஜபாளையத்தில் ஓர் எழுச்சி மாநாட்டை நடத்துகிறது வரும் மே 4ஆம் நாள்.

சமூகநீதித் துறையில் நாம் செல்ல வேண்டிய தூரம் - இன்னும் இருக்கிறது.

நூற்றண்டுக்கு மேலாக நமது கனவிலே இருந்த சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் - கைக்கு எட்டி வந்த நேரத்திலே அதனைத் தட்டிப் பறிக்கும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

காவிரி நீர்ப்பிரச்சினையிலும் இன்னும் நாம் கையேந்தும் நிலைதான்!

முல்லைப் பெரியாறு பிரச்சினை யிலும் மூக்கு அறுந்துதான் தொங்கு கிறது!

நமது ஒகேனக்கல் பகுதிக்கே வந்து கருநாடகத்துக்காரன் கலாட்டா செய்கிறான்.

ஆந்திரக்காரனோ பாலாற்றின் குறுக்கே அணையைக் கட்டி, உன்னால் ஆனதைப் பார் என்கிறான்.

தமிழன் கட்டிய கோயிலுக்குள் தமிழுக்கு முழு உரிமை கிடையாது. தமிழன் கட்டிய கோயிலுக்குள் தமிழன் அர்ச்சகனாக முடியாது.

இந்த அவலங்களுக்கெல்லாம் முடிவு தான் என்ன? வஞ்சிக்கப்படும் தமிழ் நாட்டை மீட்டெடுப்பது யார் பொறுப்பு?

பண்பாட்டுத் தளத்தில் படை நடத்துவோர் யார்?

புரட்சிக்கவிஞர் இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன் குயிலில் (3.3.1959) குரல் கொடுத்தாரே - அடையாளம் காட்டினாரே அந்த இயக்கமான திராவிடர் கழகத்தின். தலையில்தானே தமிழர் பிரச்சினைகள் விடிந்திருக்கின்றன.

நம்முன் னிற்கும் இந்தக் கடமை களை ஒரு கணம் நினைத்துப் பார்த் தால், ராஜபாளையத்தில் நமது கழகம் நடத்தும் இளைஞரணி மாநில மாநாட் டின் அருமை என்னவென்று புரியும்.

வெறும் பொழுது போக்கு மாநாடல்ல - கேளிக்கைகளுக்கு இடமில்லை.

இலட்சிய முழக்கம் இருக்கும், ஈடேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வெடிக்கும்.

இளைஞர்களின் அணிவகுப்பு மிக முக்கியமானது. சமூக காப்பணியின் வேழ நடை வீர உணர்வைத் தூண்டக் கூடியது. இயக்க வரலாற்றிலும் ஒரு பொன் னேடு - புகழேடு

- புறப்படு தோழா புறப்படு!
போர்ப்பாட்டுப் பாடுவோம்
புறப்படு தோழா புறப்படு!
தனிமனிதனாக அல்ல
குடும்பம் குடும்பமாகப் புறப்படுக! புறப்படுக!!

பெரியார் இயக்கத்தின் மாட்சியை அது கையில் எடுத்துக் கொண்டிருக் கும் மீட்சியின் பட்டியலைக் காணப் போகிறோம்!

வா தோழா வா! தொல்லுலகுக் குள்ளே அல்லல் அறுப்பதென் தோள் தோள் தோள்.

வல்லவன் உன்னை வெல்ல நினைப் பவன் தூள் தூள் தூள்! என்று புரட்சிக் கவிஞர் அழைக்கிறார்.

ராஜபாளையம் - புது ராஜபாட் டையைக் கொடுக்கப் போகிறது புறப்படு! புறப்படு!

தமிழ் ஓவியா said...


மே தின வாழ்த்துக்கள்


நாளை மே முதல் நாள் - மேதினியெங்கும் கொண்டாடப்படும் உழைப்பாளர்களின் உரிமையை மீட்ட உன்னதத் திருநாள்!

உழைப்பவரே உயர்வானவர் என்பதனை மறுக்கும் ஜாதி உள்ள சமுதாயத்தில், மீண்டும் ஒரு புதிய புரட்சி பூத்து, சமத்துவ சமூகத்தை உருவாக்கிட உறுதியேற்க வேண்டும் - நம் நாட்டில் உழைப்பே உயர்வுதரும் என்று சொன்னால் மட்டும் போதாது; உழைப்பவரையும் உயர்த்திடும் உரிமை பெற்ற புதியதோர் சமுதாயம் பூக்கட்டும்!

தந்தை பெரியார் விரும்பிய தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தில் உரிமையும், லாபத்தில் பங்கும் தந்து - முதலாளி - தொழிலாளி பேதம் மறைந்து பங்காளிகள் அனைவருமே என்ற சமத்துவம் மலரச் சங்கநாதம் செய்வோம்!

அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை
30.4.2013

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது

சட்டப்படியான நடவடிக்கைகள் தேவை

திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

சென்னை, ஏப்.30- ஜாதிவெறியைத் தூண்டி கலகம் விளைவிப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

தீர்மான எண் (1)
இரங்கல் தீர்மானம்

30.4.2013 செவ்வாயன்று சென்னை பெரியார் திடலில் - துரை சக்ரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் தலைவர் மான மிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தினத்தந்தி அதிபரும், தமிழ்ப் பத்திரிகை உலகில் தனி சாதனை படைத்தவருமான டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் (76) அவர் களின் மறைவிற்கும் (19.4.2013).

தி.மு.க. தொழிற்சங்கத் தலை வரும், மக்களவை முன்னாள் உறுப்பினரும், சுயமரியாதை வீரருமான செ. குப்புசாமி (வயது 87) மறைவு (19.4.2013) அவர் களின் மறைவிற்கும் இச்செயற் குழு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரரும், பெரியார் உரைகளை ஒலிநாடா மூலம் பதிவு செய்து தமிழர்களுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த வருமான திருச்சி து.மா. பெரியசாமி (வயது 80) அவர் களின் மறைவிற்கும் (12.03.2013), திருவாரூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர், சீரிய இயக்க வீரர், குடவாசல் வீ. கல்யாணி அவர் களின் மறைவிற்கும் (15.3.2013) இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தீர்மான எண் (2)

ஜாதி உணர்வைத் தூண்டுவதற்குக் கண்டனம்!

(அ) தாழ்த்தப்பட்ட - மக் களுக்கு எதிராக ஜாதி உணர் வைத் தூண்டும் சக்திகளுக்கு இச்செயற்குழு தனது கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள் கிறது. ஜாதி வெறியை ஊட்டித் தவறான திசைக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்போரைப் புறந் தள்ளுமாறும் இச்செயற்குழு பிற்படுத்தப்பட்ட மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத் தப்பட்டோர் ஒற்றுமை சமூக நீதிக் கண்ணோட்டத்தில் மிகமிக முக்கியமானது என்ற உணர் வைத் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஊட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடுவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது. ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண் டுமென்று தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

(ஆ) ஜாதி ஒழிப்புத் திசையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட் டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதால், இதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுத்து வெற்றிப் பெறச் செய் வதில் நமது பணியை முடுக்கி விடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. மே 4-இல் நடைபெற இருக்கும் இளை ஞரணி மாநில மாநாட்டில் அதற்கான போராட்டத் திட்டத்தை அறிவிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மான எண் (3)
இராஜபாளையம் மாநில இளைஞரணி மாநில மாநாடு

இராஜபாளையத்தில் வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில இளைஞரணி மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிப் பெறச் செய்ய முனைப்புக் காட்டுமாறு கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

பெரியார் பிஞ்சு முதல் முதியோர் வரை குடும்பம் குடும்பமாக வருமாறு இச்செயற்குழு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறது.30-4-2013

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில்....

இன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் கழகத் தலைவர் தெரிவித்த பொறுக்கு மணிகள்:

தலைமைக் கழகம் தொடர்ந்து கிளைக் கழகம் வரை ஒரு வலைப்பின்னல் (Network).

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தலைமைச் செயற்குழுக் கூட்டத்திற்கு வரும்போது தலைமைச் செயற்குழு உறுப்பினர் களுக்குப் பொறுப்பான மாவட்டங்கள் பற்றிய இயக்க செயல்பாடுகள் உள்ளிட்ட அறிக்கை தாக்கல்.

மாவட்டக் கழகத் தலைவர்கள் ஒன்றிய வாரியாக சுற்றுப் பயணம் மாதம் ஒரு முறை.

பிரச்சார முறையில் புதிய அணுகுமுறைகள், இணைய தளம், கணினி இவற்றையும் பயன்படுத்துதல் அவசியம். கழகச் செயல்பாடுகள், மறுப்புகள், பொதுச் பிரச்சினகளில் நமது செயல்பாடுகள் அவ்வப்போது இணையதளத்தில் இடம் பெற வேண்டும்.

கழகத்தின் செயல்பாடுகள் அதிகம். ஆனால் அவை பற்றிய விளம்பரம் குறைவு; சரி செய்யப்பட வேண்டும்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சென்னை புத்தக சங்கமம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பு; மாநகரங்களில் இது விரிவுபடுத்தப்பட வேண்டும்.

உறுப்பினர் சேர்க்கை ஒன்றிய வாரியாக நடைபெற வேண்டும். தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் சரிவர நிறைவேற்றப் பட உறுதி செய்ய வேண்டும்.

பாலியல் வன்கொடுமைகள் பெருகி வரும் நிலையில் பெண்களைப் பற்றிய தந்தை பெரியார் அவர்களின் புரட்சி மொழிகள் - சிந்தனைகளை விரிவாகப் பரப்புவதற்கு உரிய நேரமாக இக்கால கட்டத்தைக் கருத வேண்டும்.

ராஜபாளையம் மாநில இளைஞரணி மாநில மாநாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகருக்கான போராட்டத் திட்டம் அறிவிப்பு வெளி வரும்.

ராஜபாளையம் மாநாட்டை ஏதோ இளைஞரணி மாநாடாக மட்டும் கருதாமல் அனைத்து அணியினரும் குடும்பம் குடும்ப மாகத் திரள வேண்டும்.

பயிற்சிப் பட்டறை ஆண்டு முழுவதும் சனி, ஞாயிறுகளில் நடத்தப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...


அவசியம்



கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டமும் அ.இ.அ.தி.மு.க.வும்



சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைக் கைவிட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க.வின் இந்த நிலைப்பாட்டுக்கு காலா காலத்திற்கும் பதில் சொல்லித் தீர வேண்டும்.

தமிழ் நாட்டுக்கு அதிகாரப் பூர்வமாக செய்யப்பட்ட துரோகம் என்பதில் கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்தாகும்.

150 ஆண்டு காலமாக தமிழர்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்துக் கனவு காணப்பட்ட திட்டம், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், திமுகவைச் சேர்ந்த திரு. டி.ஆர். பாலு அவர்கள் அத்துறை அமைச்சராக இருந்து, அந்தக் கனவுத் திட்டத்தை நனவு திட்டமாக மாற்றப்படும் ஒரு கால கட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. இத்தகைய முட்டுக் கட்டையைப் போட்டு வருகிறது.

இவ்வளவுக்கும் இக்கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார்; திராவிட இருக்கிறது; அந்த அண்ணாவின் கொள்கை நிலைப்பாட் டுக்கும் திராவிட இயக்கத்தின் நோக்கத்துக்கும் முற்றிலும் விரோதமாக செயல்படுவது மன்னிக் கவே முடியாத பெருங் குற்றமாகும்.

இவ்வளவுக்கும் 2001 சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் 2004 மக்களவைத் தேர்தல்களில் அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப் பட்ட திட்டமாகும்.

2001 மே மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவையின்போது அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (பக்கம் 84 மற்றும் 85)யில் என்ன கூறப்பட்டுள்ளது?

இந்திய தீபகற்பத்தை சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டு மானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம் இத்திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும் இலங்கை யின் தலைமன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் திற்குத் தடையாக உள்ள மணல்மேடுகள், பாறைகளை அகற்றி, ஆழப்படுத்தி, கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்..

இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1981இல் ஆட்சியில் இருந்த டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான் கொடுத்தது; இருப்பினும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு. இத்திட்டத்திற்கான உரிய கவனத் தையோ, முக்கியத்துவத்தையோ கொடுக்க வில்லை என்று இவ்வளவுத் திட்டவட்டமாக அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு அதற்கு முற்றிலும் முரணாக அந்தத் திட்டத்தையே கை விட வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் உச்சநீதி மன்றத்திற்குச் செல்லுவது ஏன்?

இப்படி முரண்பட்டதற்கு நியாயமான காரணத்தை இதுவரை செல்வி ஜெயலலிதா கூறியதுண்டா?

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுமானால் அதன் அரசியல் இலாபம் தி.மு.க.வுக்குப் போய் விடும்.

தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் அத்துறை அமைச்சராக இருந்து செயல்படுத்தப் பட்டதால் தி.மு.க.வுக்குச் செல்வாக்கு ஏற்பட்டு விடும் என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சியும் பொறாமையும்தான் இதற்குள் புதைந்து கிடக்கின்றன.

நாட்டு நலனைவிட அரசியல் நலன்தான் முக்கியம் என்று கருதுகிற மனப்பான்மை இதன் பின்னணியில் இருக்கிறது.

முதலில் ராமன் பாலம் - அதனை இடிக்கக் கூடாது என்று சொன்னவர் இப்பொழுது இந்தத் திட்டமே கூடாது என்று சொல்லுகிறார் என்றால் இதற்குக் காரணம் அரசியல்! அரசியல்!! அரசியலே!!!

தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.

அடுத்த தேர்தல்களில் தங்கள் வெறுப்பை - எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ் ஓவியா said...


ஜெயங்கொண்டத்தில் ஜெயபேரிகை!


ஜெயங்கொண்டத்தில் தோழர்களே, ஜெயபேரிகை கொட்டப் போகிறோம்.

மே 2 ஆம் தேதி ஜெயங்கொண்டத்தில் தமிழர் தலைவர் முழக்கமிடுகிறார்.

வட்டார மாநாடாக அது நடைபெறப் போகிறது.

மண்டல செயலாளர் தோழர் சி.காமராஜ், சுற்று வட்டார மாவட்டக் கழகத் தோழர்களின் அரும் ஒத்துழைப்பால் மாநாட்டின் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறுகின்றன.

எங்கு பார்த்தாலும் சுவர் எழுத்துகள் - அவை செந்துறைவரை நீண்டு விட்டது. இந்தப் பக்கம் கடலூர் மாவட்டம் வரை நீள்கிறது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் மாநாட்டு நடவடிக்கைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் அலை அலையான மண்டல மாநாடுகள், வட்டார மாநாடுகள் - புரட்சிப் பெண்கள் மாநாடு - அடுத்து ராஜபாளையத்தில் மாநில இளைஞரணி மாநாடு! (மே 4)

இயக்க வரலாற்றில் வேறு எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு மாநாடுகளின் அணிவகுப்புகள்.
ஒவ்வொரு மாநாட்டிலும் முத்து முத்தான தீர்மானங்கள் - உரை முழக்கங்கள் - கருத்தரங்குகள் - பட்டிமன்றங்கள் என்று கருத்துப் பிரச்சாரம் கனமழையாகப் பெய்து கொண்டிருக்கிறது.

ஜெயங்கொண்டம் மாநாட்டில் தமிழர் தலைவருடன் செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநிலங் களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியம், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கரன் முதலியோர் கொட்டு முழக்கமிடுகின்றனர்.

நமது இயக்க வரலாற்றில் இந்தப் பகுதிகளுக்கென்று தனித்த சிறப்புகள் உண்டு. புகழ்பெற்ற கருஞ்சட்டைத் தோழர்கள் எல்லாம் சாதனைகள் பல புரிந்து, களங்கள் பல கண்டு வெஞ்சிறைகள் பல ஏற்று என்றென்றும் பேசப் படும் பெரியார் பெருந்தொண்டர்களாக - சுயமரியாதைச் சுடரொளிகளாக மறைந்தும் மறையாமல் நமது நெஞ்சங் களில் பசுமைத் தோட்டமாக நிறைந்து இருக்கிறார்கள்.

அந்தத் தலைமுறையோடு இயக்கம் முடிந்துவிட வில்லை. இப்பொழுதெல்லாம் அந்த வட்டாரங்களில் இளைஞர்களின் அணிவரிசை! இயக்கப் பொறுப்பாளர்கள் எல்லாம் இளைஞர்கள்.

இனமுரசு இயக்கம் இதுதான்!
சமூகநீதி இயக்கம் இதுதான்!
பகுத்தறிவு இயக்கம் இதுதான்!
பெண்ணடிமை ஒழிப்பு இயக்கம் இதுதான்!
ஜாதி ஒழிப்பு இயக்கம் இதுதான்!
சகோதரத்துவம் பேணும்,
சமத்துவ இயக்கம் இதுதான்!
நோய் வந்த பின் வைத்தியம் பார்க்கும் இயக்கமல்ல;
வருமுன் காக்கும் தொலைநோக்கு இயக்கம் இதுதான்!
அறிவை மட்டுமல்ல,
ஒழுக்கத்தை உயிரினும் மேலாக
ஓம்பும் கொள்கை
இதனிடம்தான் உள்ளது.

இது ஓர் உலக இயக்கம்;

மதமற்ற அமைதி உலகினைப் படைத்திடும் இயக்கம் இதுதான்!

இவற்றை உணர்வதால், இளைஞர்கள் இங்கே அணிவகுத்து வருகிறார்கள் - நேரில் காண வாருங்கள் தோழர்களே!

மதவாதம் தலைதூக்காமல் மானுடத்தை வழிநடத்துவோம்!

ஜாதீயம் தலை தூக்காமல் சமத்துவம் படைப்போம்!

ஜெயங்கொண்டத்தில் கொடுக்கும் குரல் ஜெகம் எங்கும் கேட்கட்டும்!

ஜெயபேரிகை கொட்டுவோம் வாருங்கள் தோழர்களே, வாருங்கள்!

மே 2 ஆம் தேதி மாலை உங்களுக்கான இடம் ஜெயங்கொண்டம்; ஜெயங்கொண்டம்;

கேட்கட்டும் ஜெயபேரிகை!

- மின்சாரம்

தமிழ் ஓவியா said...

பெரியார் என்னை ஈர்த்தார் - நம்பூதிரிபாத்

எங்களுடைய சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட நான், என்னுடைய இளம்வயதில் ஒரு பக்தி உணர்ச்சியுடைய இந்துவாக இருந்தேன். நான் பங்கெடுத்திருந்த சமூக சீர்திருத்த இயக்கம்கூட இந்துமதவாதத்தின் வடிவமைப்பிற்குள்ளேயே சமூகத்தைச் சீர்திருத்த வேண்டுமென்று கருதி வந்ததாகும். சுவாமி விவேகானந்தரைக் குறித்தும் நான் ஏராளமாகப் படித்தேன். நான் பள்ளிக்குச் செல்லும் முன்பு எனக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர், விவேகானந்தரின் தீவிரமான அனுதாபியாவார். எனவே, இந்துமகாசபை மீது எனக்கு சிறிது பற்றுதல் இருந்தது. அதனுடைய தலைவர்களான பண்டிட் மாளவியா, டாக்டர் மூஞ்சே ஆகியோர் கேரளத்திற்கு ஒரு முறை வந்தனர். எனினும் படிப்படியாக நான், தமிழ்நாட்டிலிருந்த ராமசாமி நாயக்கரின் போதனைகளினாலும், கேரளாவிலிருந்த பகுத்தறிவுவாத கோஷ்டியினர் செய்த பிரச்சாரத்தினாலும் ஈர்க்கப்பட்டேன்.

(இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் எழுதிய ஓர் இந்தியக் கம்யூனிஸ்டிக் நினைவலைகளில் என்னும் நூலிலிருந்து)

தமிழ் ஓவியா said...

கேள்வியும் - பதிலும்

- சித்திரபுத்திரன்

கேள்வி:- பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.

பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும் விபசாரதோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழுவிடுதலையும் பெற்றிருப்ப தற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுத லையும் பெற்று இருக்கிறார்கள்.

ஆதலால் பெண்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்கவேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் “புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன்” என்றோ, ஆண்கள் தங்கப்பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூடவேண்டியதில்லை துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால், கழுவினால் கூட தீட்டுப்போகாது. அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.

குடி அரசு - வினா விடை - 29.10.1933