Search This Blog

3.1.13

முதலில் ஒழிக்கப்படவேண்டியது கடவுள் நம்பிக்கையும், பக்தியும்தான்!

புண்ணிய நதிகளா? 
 
இந்தியாவின் வட மாநிலங்களில் பாயும் கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள் குளிப்பதற்கு ஏற்ற தகுதிகூட இல்லாத அளவிற்கு மாசு அடைந்துள்ளன என்று பத்மஸ்ரீ விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் அனில் ஜோஷி தலைமையில் டேராடூனில் இயங்கிவரும் ஹெஸ்கோ என்ற அரசு சாரா அமைப்பு ஆய்வு செய்து அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

ஒரு நாளல்ல; இரு நாள்கள் அல்ல, 27 நாள்கள் 1800 கி.மீ. அளவிலான தூரத்தைக் கடந்து இந்த ஆய்வினைத் துல்லியமாக  மேற்கொண்டுள்ளது.
கங்கை, யமுனை நதிகளை மட்டுமல்ல; 24 நதிகளில் இந்த ஆய்வினை நடத்தியுள்ளனர். இந்த நதிகளில் பெரும்பாலும் சாக்கடை நீர் ஓடுகின்றது. இதன்மூலம் அந்நதிகளைச் சார்ந்து வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் எதிர்காலம் கேள்விக் குறியே என்றும் எச்சரித்துள்ளனர்.

பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வழிகோலுகிறதோ, அதேபோல இயற்கை நீர் வளங்களான இத்தகைய நதிகள் உள்ளிட்ட நீர் நிலைகளைக் காக்கும் பொருட்டு, ஜி.இ.பி. எனப்படும் மொத்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற திட்டத்தை அரசு வகுத்து, நீர் நிலைகளைப் பாதுகாக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று அக்குழு தெரிவித்துள்ளதோடு, இதுகுறித்து பிரதமர் மற்றும் அனைத்து முதலமைச்சர்களுக்கும் அறிக்கை தயாரித்து அனுப்ப இருப்பதாக ஆய்வுக் குழுவின் தலைவர் அனில் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் எதையும் தெய்வத்தோடு முடிச்சுப் போட்டு விடுவதால் அதைப்பற்றி சிந்திக்கும் கூர்மையை இழந்துவிடுகின்றனர்.
ஆறுகளை எல்லாம் கடவுளாகப் பாவிக்கும் மனப்பான்மை, கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்பதெல்லாம் எத்தகைய மூட நம்பிக்கை! தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்ற ஆபத்தான பழமொழிகள் எல்லாம் இந்த நம்பிக்கையில் வந்தவைதான்.

செத்த மனிதர்களை மட்டுமல்ல; மாடுகளையும் தூக்கிக் கங்கையில் வீசி எறிவார்கள் என்றால், இந்த மூட நம்பிக்கையை எள்ளி நகையாட வேண்டியதுதான்.

இப்பொழுது மட்டுமல்ல, இதற்கு முன்பும்கூட இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு.

மும்பையைச் சேர்ந்த மருத்துவக் குழு ஒன்று அத்தகைய ஆய்வினை மேற்கொண்டது. அந்தக் குழுவில் இடம்பெற்ற மருத்துவர் ஜெகன்நாத் என்பவர் தெரிவித்துள்ள தகவல் பெரிதும் கவலை அளிக்கக் கூடியதாகும்.
பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் மட்டும் ஆண்டுக்கு 20 முதல் 30 ஆயிரம் மக்கள் வரை பித்த நீர்ப் பையில் உருவாகும் புற்றுநோயால் பாதிக்கப்படு கின்றனர். மும்பையில் உள்ள டாடா நினைவு மருத் துவமனையில், பித்த நீர்ப் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளில் பெரும்பாலோர் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கங்கை நதிக் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

கங்கை நதியில் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கலந்து மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் கங்கை நதிக்கரையோரத்தில் நிலத்தடி நீரும் கடுமையாக மாசுபட்டுள்ளது. அந்த நிலத்தடி நீரில் அளவுக்கும் அதிகமாக இரும்புச் சத்துக்களும், நச்சுப் பொருள்களும் கலந்துள்ளன என்று அந்தக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இன்னும் ஒரு கூடுதலான அருவருக்கத்தக்க தகவல் உண்டு. இப்புனித நதிகள் ஓடுவதாகக் கருதப்படும் பகுதிகளில் வாழ்வோரிடையே எய்ட்ஸ் நோய் தொற்றியவர்கள் அதிகம் என்பதுதான் அந்தத் தகவல். சுவிஸ் அரசு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதனைத் தெரிவித்துள்ளது. கஞ்சா மற்றும் ஹெராயின் போதைக்கு ஆளாகின்றனராம் - இப்பகுதிக்குச் சுற்றுலாவாக வரும் பயணிகள்.

பக்தி என்னும் மூட நம்பிக்கை அறிவை மட்டுமல்ல, ஒழுக்கத்தையும், உடலையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறதே!

இதனை எடுத்துச் சொல்லும் பகுத்தறிவுவாதிகள் தானே உண்மையில் மனித குலத்துக்குத் தேவை யான நற்றொண்டு செய்யக் கூடியவர்கள்.
முதலில் ஒழிக்கப்படவேண்டியது இந்தக் கடவுள் நம்பிக்கையும், பக்தியும்தான்! அப்பொழுதுதான் மனித குலம் தப்பிப் பிழைக்கும் - எச்சரிக்கை!


                              -------------------------"விடுதலை”  தலையங்கம்   3-1-2012

18 comments:

தமிழ் ஓவியா said...


சொல்லவேண்டும்


பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கிய மான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எச்சரிக்கை அறிக்கை !


உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அரசிதழில் தீர்ப்பை வெளியிடவில்லை என்பது நொண்டிச் சாக்கே!

இயல்பான சட்டக் கடமையைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்?

மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை!

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் (கெசட்டில்) வெளியிடுவது மத்திய அரசின் இயல்பான கடமையாகும். அதை வெளியிடக் கூட தயங்கும் நிலையில், மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு - இறுதித் தீர்ப்பு வெளியானது 2007 ஆம் ஆண்டு!

காவிரி நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக நடுவர் மன்றம் அமைக்கும் தமிழ்நாட்டின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றியவர் - மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியின்போது - மத்தியில் சமூகநீதிக்காவலர் வி.பி. சிங் அவர்கள்.

அதன்படி இடைக்கால நிவாரணமாக அந்நடுவர் மன்றம் தமிழ்நாட்டிற்கு கருநாடக அரசு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்கவேண்டுமென்று ஆணை பிறப்பித்தது!

தொடக்கத்திலிருந்தே, கருநாடக அரசு இதன்படி, ஒரு சில ஆண்டுகள் தவிர, முழுமையாக நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வழங்கவில்லை.

கருநாடகம் எந்தச் சூழலில் தண்ணீரைத் திறந்துவிடும் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

வறட்சி ஏற்படும் காலத்தில் பங்கீடு எப்படி என்ற Distress Formula- வையும் பின்பற்றியும் நடந்துகொள்ளவே இல்லை.

நடுவர் மன்றத்தையே ஒப்புக்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும், அவசரச் சட்டம், பிறகு தனிச் சட்டம், வழக்கு, தாவா என்றெல்லாம் திட்டமிட்டே தண்ணீரைத் தர மறுத்தே வந்துள்ளது.

கிருஷ்ண ராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) மற்றும் கபினி போன்ற அணைகளில் குடகு பகுதியில் ஏராளம் மழை பெய்து, கருநாடகத்தில் உபரி மழைநீர் வெள்ளத்தைத் தடுக்க முடியாது என்ற நிர்பந்த நிலையில் மட்டுமே அவர்களது அணைகளைக் காப்பாற்றும் பொருட்டே, தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்துவிடுவது சில ஆண்டுகளில் நடந்தது!

இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து 2007 இல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தரப்பட்டது. அதன்படி, 419 டி.எம்.சி. (தமிழ்நாடு கேட்டது 562 டி.எம்.சி.) கருநாடகாவிற்கு 270 டி.எம்.சி. (அது கேட்டது 465 டி.எம்.சி.), கேரளாவிற்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி., சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு 10 டி.எம்.சி. தனி ஒதுக்கீடாக (Reserved) வைக்கப்பட்டது.

128 முறை பேச்சுவார்த்தை

முன்பு பேச்சுவார்த்தைகள் இரு மாநிலங்களுக்கிடையே 127 முறை; சில வாரங்களுக்கு முன் ஒரு தடவை ஆக, சுமார் 128 தடவை நடைபெற்றும், உருப்படியான பலன் ஏதும் ஏற்படவில்லையே.

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றம், பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதி நீர் ஆணைய ஆணைப்படிகூட விடப்படும் நீரின் அளவால் தமிழ்நாட்டிற்குக் குறுவை சாகுபடியை தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பகுதி நிலங்களில் மட்டுமே நடைபெறக்கூடிய நிலையில், 2 பகுதி நடைபெறாமலும், சம்பா பயிர் நட்டும் காய்ந்து, கருகி வாடியதாலும், மனமுடைந்த காவிரிப் பாசன விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 12-க்குமேல் பெருகியும் வந்துள்ள நிலையில்கூட, மேற்சொன்ன உச்சநீதிமன்ற ஆணைக்கும் கட்டுப்படாமல், பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுக்குக் கட்டுப்படாமல் தண்ணீர் தர மறுத்து அடம் பிடிக்கிறது கருநாடகம்.

கருநாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில்!

சற்றும் மனிதாபிமானம் அற்று, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்குத் தர இயலாது என்று அடம் பிடிக்கிறது கருநாடக அரசு. (வாக்கு வங்கி அரசியல் முழு முதற்காரணம்) அங்கு அனைத்துக் கட்சிகளும் ஒரே அணி; ஒரே குரல் அங்கே! அந்த முதலமைச்சர் 10 முறை அனைத்துக் கட்சிக் கூட்டம்; பிரதமரைச் சந்திக்க சர்வக் கட்சிக் குழு என்ற நடைமுறை கருநாடகத்தில்.

தமிழ்நாட்டில், அது அறவே இல்லை; எல்லாம் முதலமைச்சர் நினைப்பதுதான்! எத்தனைக் கட்சிகள் கோரிக்கை வைத்தும், இப்பிரச்சினையில் அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமுறை கூட கூட்டப்படவே இல்லை.

இங்கும் எதிர்க்கட்சிகள் மீதும், ஆளுங்கட்சியும், மற்றவர்களும் பரஸ்பர குற்றச்சாற்று வைத்து அரசியல் நடக்கும் அவலமான நிலை!

இந்நிலையில், இறுதித் தீர்ப்பு (நடுவர் மன்றத்தின்) வந்த 90 நாள்களில் மத்திய அரசின் கெசட்டில் வெளியிட்டிருக்கவேண்டிய நடுவர் மன்றத் தீர்ப்பு - 5 ஆண்டுகளாகியும் மத்திய அரசால் வெளியிடப்படாத வேதனையான நிலை!

அரசிதழில் வெளியிட்டால்...

இப்படி வெளியிட்டால்தான் அத்தீர்ப்புக்கு சட்ட வலிமை ஏற்படும்; அப்படி வெளியிட்ட பிறகு நடுவர் மன்றம் முடிந்துவிட்டதாகவும், அதன்படி பிரதமர் தலைமையில் அமைந்த காவிரி நதிநீர் ஆணையமும் தானே முடிவுக்கு வந்ததாகக் கருதப்படும்.
உடனடியாக தீர்ப்பு செயல்படுத்தப்படவேண்டியதாகி விடும்.

இதனைக் கருநாடக அரசு வேண்டுமென்றே எதிர்க்கிறது.

அதனை மத்திய அரசு கெசட்டில் வெளியிடவேண்டும் என்பது சட்டப்படி கடமை. சலுகையோ, விருப்பத்தையொட்டியதோ அல்ல; கட்டாயம் வெளியிடப்படவேண்டியதாகும்.

சில வாரங்கள் முன்பு உச்சநீதிமன்றமே உரத்த குரலில் மத்திய அரசு வழக்குரைஞரைப் பார்த்து, ஏன் இன்னும் தீர்ப்பை வெளியிடாமல் உள்ளீர்கள் என்று கேட்டு, அதற்கு விரைவில் வெளியிடுவோம் என்று கூறி பல வாரங்களுக்குமேல் ஓடிவிட்டன!

மத்திய அரசின் போக்கு...

இப்போதும் மத்திய அரசின் போக்கு பாம்புக்குத் தலை; மீனுக்கு வால் காட்டுவது மாதிரி தட்டிக் கழிக்கும் வகையில், சில செய்திகளை சட்ட அமைச்சகம் பரிசீலிக்கிறது என்று கசிய விடுவது, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும், சட்டக் கடமைக்கும், உச்சநீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிக்கும் விரோதமானது - கண்டிப்பாக விரோதமானதே!

உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது நொண்டிச்சாக்கு - அடிப்படையற்றது. (அந்த உச்சநீதிமன்றம்தானே கெசட்டில் வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது).

ஸ்டே ஏதாவது உள்ளதா? உச்சநீதிமன்றம் இதை வெளியிடத் தடையா வழங்கியுள்ளது? இல்லையே! பின் ஏன் இந்த செப்படி வித்தை, ஜாலங்கள்? உடனடியாக வெளியிடாவிட்டால் பெரும் போராட்டம் வெடிப்பது - மக்கள் கிளர்ச்சியாக வெடிப்பது தவிர்க்க இயலாது!

மத்திய அரசின் இயல்பான சட்டக் கடமையைச் செய்வதில்கூட, இப்படி ஓர் அரசின் அழுத்தமா தேவை?
வெட்கம்! மகாவெட்கம்!! வேதனை!!!



- கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை

3.1.2013

தமிழ் ஓவியா said...


எவ்வளவு பயங்கரமான குற்றமாக இருந்தாலும் மரண தண்டனை தீர்வு அல்ல அய்.நா. மனித உரிமை ஆணையர் கருத்து


புதுடில்லி, ஜன.3- எவ்வளவு பயங்கரமான குற்றமாக இருந்தாலும், மரண தண்டனை தீர்வு அல்ல, சட்ட ஆட்சி முறையை வலுப்படுத்து வதே அவசியம் என்று அய்.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.

டில்லி மாணவி பாலியல் வன்கொடுமை யால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அய்.நா. மனித உரிமை ஆணை யர் நவநீதம் பிள்ளை ஓர் அறிக்கை வெளியிட்டுள் ளார். அதை டெல்லியில் உள்ள அய்.நா. உயர் அதிகாரி வாசித்து காண் பித்தார். அதில், நவநீதம் பிள்ளை கூறி இருப்ப தாவது:

டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமையால் உயி ரிழந்த சம்பவம் தொடர் பாக நான் ஆழ்ந்த துய ரத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா வில் உள்ள அனைத்து தரப்பு பெண்களையும் பாதித்துள்ள இப்பிரச் சினை, இந்தியாவின் தேசிய பிரச்சினை. இதற்கு தேசிய தீர்வு காணப்பட வேண்டும். இந்த ஆண்டு, பெண்கள் வன்முறைக்கு எதிராக திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன். அனைத்து பெண்களும் அச்சமின்றி நடமாட முடியும் என்று கருதுகிறேன்.ஏனென்றால், பாலியல் வன்கொடுமை வியாதியில் இருந்து தன் னைத்தானே விடுவித்துக் கொள்ள முடியும் என்று தனது சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலமாக கடந்த காலத்தில் இந் தியா நிரூபித்துள்ளது.

பாலியல் குற்றவாளி களுக்கு மரண தண் டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது. எவ்வளவு பயங்கரமான குற்றமாக இருந்தாலும், மரண தண்டனை விதிப்பது தீர்வு ஆகாது. இப் போதைய தேவை, பொதுமக்களின் விழிப் புணர்ச்சியும், பெண் களின் நலனுக்காக சட் டத்தை உறுதியாகவும், உணர்வுபூர்வமாகவும் அமல்படுத்துவதுமே ஆகும். சட்டத்தின் ஆட்சி முறையை வலுப்படுத் துவதற்கு இதுவே உரிய தருணம். மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து அவசர விவாதம் நடத்த வேண்டும். டெல்லி பாலியல் சம்ப வத்தை விசாரிக்க விசா ரணை ஆணையமும், பாலியல் வழக்குகளுக் கான சட்டங்களை ஆய்வு செய்வதற்காக நீதிபதி குழுவும் அமைக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன்.

இந்த சட்டங்களை திருத்தி அமைப்பது தொடர்பாக மகளிர் குழுக்களுடன் இந்தியா ஆலோசனை நடத்த வேண்டும். சமூக ஆர்வ லர்களையும் அழைத்து பேச வேண்டும். பெண் களுக்கு எதிரான வன் முறை தொடர்பான அய்.நா. சிறப்பு அதிகாரி யையும் அழைத்து பேசி, அவரது உதவியை பெற லாம். இந்த கடினமான நேரத்தில், எனது அலு வலகம், இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் உதவ தயாராக இருக் கிறது. -இவ்வாறு நவ நீதம் பிள்ளை கூறியுள் ளார்.

தமிழ் ஓவியா said...


மோடியை பிரதமர் ஆக விடமாட்டேன்: மாயாவதி உறுதி!


புதுடில்லி, ஜன.3- குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் ஆக விட மாட்டேன் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி 4 ஆவது முறையாக குஜராத் முதல்வராகியுள்ளார். இதையடுத்து அவர் பிரதமர் ஆவார் என்று பலரும் துதிபாடும் வேளையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி செய்தியாளர்களிடம் கூறுகையில், நரேந்திர மோடியை பிரதமராக விட மாட்டேன். வரும் காலத்தில் அவர் பிரதமராகாமல் இருக்க வேண்டியவற்றை செய்வேன் என்றார்.

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தி இதுதானா?

சபரிமலையில் தமிழக பக்தர்கள் 2 பேர், மாரடைப்பால் உயிரிழந்தனர்

சபரிமலை, ஜன.3-சபரிமலையில் தமிழக பக்தர் கள் 2 பேர் மாரடைப்பால் உயிர் இழந்தனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை திருவிழா கடந்த 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் காஞ்சீபுரம் சத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர் நாகப்பன் (வயது 40) சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர் குழுவினருடன் சபரிமலைக்கு சென்றார். அவர் பம்பையில் இருந்து நீலிமலை ஏறி சன்னிதானம் பகுதியை அடைந்தார்.

அங்கு சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பிற பக்தர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு சிகிச்சை மய்யத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறினர்.

தமிழ் ஓவியா said...

தாம்பரம் பெண் பக்தர்

இதைப்போல, சென்னை அருகே உள்ள தாம்பரத்தை சேர்ந்த பெண் பக்தர் மல்லிகா (60) சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு வந்தார். அவர் நீலிமலையில் நடந்து செல்லும் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பம்பையில் உள்ள அரசு சிகிச்சை மய்யத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மல்லிகா உயிர் இழந்தார்.

பெங்களூரு கோட்டிகரை பகுதியை சேர்ந்த பக்தர் ரமேஷ் (25) நீலிமலையில் ஏறும்போது மாரடைப்பு காரணமாக இறந்தார்.

தமிழ் ஓவியா said...

வேன் கவிழ்ந்து உயிரிழப்பு...

சென்னை வில்லிவாக்கம், ராஜமங்கலம் பகுதி யை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 30 பேர் சபரிமலைக்கு செல்வதற்காக பொதிகை ரயில் மூலம் நேற்று தென்காசி வந்தனர். பின்னர் அங் கிருந்து 2 வேன்களில் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கேரளா மாநிலம் தென்மலை காவல்நிலையம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் இருந்த அனைவரும் இடிபாடு களுக்குள் சிக்கி படுகாயமடைந் தனர். இவர்க ளது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு தென்மலை காவல் துறையினருக்கும், மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித் தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த 15 பேரும் புனலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சென்னை வில்லிவாக் கத்தை சேர்ந்த அன்பு(38) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்

தமிழ் ஓவியா said...

கிறிஸ்தவ மத விழா: 10 பேர் சாவு

ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் தலை நகர் லுவாண்டா. இங்கு கிறிஸ்தவர்களின் ஒரு பிரிவான பெந்தகோஸ்தே பிரிவினரின் கிறிஸ்தவ கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் சார்பில் அங்குள்ள மைதானத்தில் புத்தாண்டையொட்டி ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மைதானத்தில் 70 ஆயிரம் பேர் உட்காரும் வசதி உள்ளது. ஆனால் அதைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் வந்து விட்டனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து அங்கோப் செய்தி நிறுவனம் கூறுகையில், கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள், பெரிய வர்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர் கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெந்தகோஸ்தே பிஷப் பெர்னர் பட்டல்ஹா கூறும்போது, 70 ஆயிரம் பேர் தான் இந்த விழாவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கடுங்கூட்டம் வந்து விட்டது. இதுதான் பிரச்சினைக்கு காரணம் ஆகி விட்டது என்றார்.இந்த துயர சம்பவத்தால் லுவாண்டா நகரமே துக்கத்தில் மூழ்கி உள்ளது. தங்களை கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பிக் கொண்டு செல்லும் பக்தர்களை காப்பாற்றாத கடவுளின் சக்தி சந்தி சிரிக்கிறது அல்லவா!

தமிழ் ஓவியா said...


உலகம் முழுவதும் கொடுக்கப்படும் லஞ்சத்தின் அளவு ரூ. 50 லட்சம் கோடி! உலக வங்கி தகவல்


ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 1,000 பில்லியன் டாலர்கள் (ரூ. 50 லட்சம் கோடி) அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்து உள்ளது. அதேபோல லஞ்சம் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியில் 17 சதவீதத்தை சுருட்டி விடுகிறது என்று ஆசிய வளர்ச்சி வங்கியும் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் லஞ்சத்தை ஒழிக்க அய்.நா. சபையின் வளர்ச்சித் திட்டத்தின் (GDP) கீழ் செயல்படும் ஜனநாயக ஆட்சிமுறை பிரிவு உலகளாவிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழலும் லஞ்சமும் ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை உருக்குலைய வைக்கின்றன.

ஜன நாயக அமைப்புகளை சிதைக்கின்றன. ஏழைகளுக் கும் பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சம உரிமைகளும், வேலைவாய்ப்புகளும் தரப்படுவதை லஞ்சமும் ஊழலும் தடுக்கின்றன என்கிறது அய்.நா. சபை. (United Nations Development Programme) இதனால் தான் 2005 ஆம் ஆண்டில் ஊழலுக்கு எதிரான அய்.நா. மாநாடே (UN Convention Against Corruption-UNCAC) நடத்தப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாக வைத்து அய்.நா. பொதுக் கவுன்சிலின் சட்டமே திருத்தப்பட்டது. பன்னாட்டளவில் ஊழலையும், லஞ்சத்தையும் எதிர்க்கும் கருவியாக இந்த சட்டம் உள்ளது.

ஒரு நாட்டின் வளம் லஞ்சம்-ஊழல் மூலம் சுரண்டப்பட்டால் அந்த நாட்டில் பள்ளிகள் கட்டவோ, மருத்துவமனைகள் கட்டவோ, சாலைகள் அமைக் கவோ, குடிநீர் வழங்கவோ பேதிய பணம் இருக்காது. வெளிநாட்டு உதவிகளும் சுருட்டப் பட்டால் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சிகள் ஸ்தம்பிக்கும் என்கிறது இந்தத் தீர்மானம்.

லஞ்சம் ஏழைகளையே அதிகம் பாதிக்கிறது

அதே போல ஊழல் தலைவிரித்தாடும் தேசத்தில் போலி மருந்துகளும், தரம் குறைந்த மருந்துகளும் அதிகமாக புழங்கும். கடலிலும் நதிகளிலும் கழிவுகள் மிக அதிகமாகக் கொட்டப்படும். குறிப் பாக ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவர் என்கிறது அய்.நா. சபையின் ஆய்வறிக்கை.

தமிழ் ஓவியா said...


வினா தொடுக்கிறது உச்சநீதிமன்றம் பெண்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் என்னென்ன?


புதுடில்லி, ஜன. 3- பெண்கள் பாதுகாப்புக்கு எடுத்த நடவடிக் கைகள் என்னென்ன என்று உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய் யப்பட்ட மருத்துவ மாணவி உயி ரிழந்ததை தொடர்ந்து நாடு முழு வதும் கொந்தளிப்பான நிலை உருவானது. பெண்களுக்கு எதி ரான குற்றங்களில் ஈடுபடுபவர்க ளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். பாலியல் வன் முறை செய்பவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இதற்கிடையே உச்ச நீதிமன் றத்தில் வழக்குரைஞர் முகுல் குமார் என்பவர் தாக்கல் செய்த பொது நலன் வழக்கில் பெண் களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க கோரி யிருந்தார். மனுவில் முகுல் குமார் கூறியிருப்பதாவது:

பொது இடங்களில் தங்க ளுக்கு பாதுகாப்பில்லை என்று பெண்கள் நினைக்கத் தொடங்கி உள்ளனர். பேருந்து, ரயில் போன் றவற்றில் பெண்கள் பயணம் செய் வதுகூட ஆபத்தானதாகிவிட்டது. பெண்களுக்கு எதிரான வன் முறை சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கவில்லை. பரவலாக நடக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன் முறையை தடுக்க ஒவ்வொரு நகரி லும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பாலியல் வழக்குகளை விசாரிக்க அனைத்து மகளிர் காவல் நிலை யம் அமைக்கப்பட வேண்டும். அய்.நா ஒப்பந்தப்படி பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பது உள் ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத் தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் முகுல் குமார் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகய் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது, பெண்களை பாதுகாக்க என் னென்ன நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கு ரைஞரிடம் நீதிபதிகள் சரமா ரியாக கேள்விகள் கேட்டனர். இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு தாக் கீது அனுப்ப நீதிபதிகள் உத்தர விட்டனர்.

மற்றொரு வழக்கு

ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ் அதி காரி புரோமிளா சங்கர் தாக்கல் செய்திருந்த மற்றொரு பொது நலன் வழக்கில், இந்தியாவில் 40 நிமிடத்துக்கு ஒரு பெண் பாலி யல் வன்முறை செய்யப்படுகிறார். இதில் பெரும்பாலான சம்பவங் கள் குறித்து காவல்நிலையங்க ளில் புகார் செய்யப்படுவதே இல்லை.

பாலியல் வன்முறை சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சை ஏற்பட்ட பிறகுதான், நடவடிக்கை எடுக் கிறார்கள். தடுப்பு நடவடிக்கை கள் எதையும் அரசு எடுப்ப தில்லை. பாலியல் வன்முறை வழக்குகளை ஆண் காவல்துறை அதிகாரிகளும், ஆண் நீதிபதி களும் விசாரிப்பதால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு பல்வேறு வகையில் இடைஞ்சல் ஏற்படு கிறது.

எனவே, பெண் காவல் துறை அதிகாரிகளும், பெண் நீதிபதிகளும் மட்டுமே பலாத்கார வழக்குகளை விசாரிக்க வேண் டும். மேலும், பலாத்கார வழக்கு களை விசாரிக்க விரைவு நீதிமன் றங்கள் அமைக்க வேண்டும். பெண் களுக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் எம்.பி, எம்.எல்.ஏகளை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக கருதி இன்று விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது.

தமிழ் ஓவியா said...


இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1942இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த திருவாங்கூர் மகாராணி சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை தந்த போது - தந்தை பெரியார் அதை எதிர்த்து போராடி _ அந்தப் பணத்தை மாணவர் விடுதி வளர்ச்சிக்குச் செலவிட ஏற்பாடு செய்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

####

நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக் கல்லூரிப் பட்டப் படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்று இருந்த நிலைபற்றி உங்களுக்குத் தெரியுமா?

####

1938இல் ஆச்சாரியார் கட்டாயமாக இந்தியைப் புகுத்தியதோடு _ இந்தியோடு _ சமஸ்கிருதத்தையும் சேர்த்துப் புகுத்த வேண்டும் என்று ஆனந்த விகடன் பார்ப்பன ஏடு தலையங்கம் தீட்டியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

####

15.10.1927இல் பாலக்கோட்டில் காந்தியார் காஞ்சி சீனியர் சங்கராச்சாரியை சந்திக்கச் சென்றபோது தாழ்த்தப்பட்டோர் கோயில் பிரவேசம் சாஸ்திரங்களுக்கு எதிரானது என்று சமஸ்கிருதத்திலேயே காந்தியிடம் அவர் சொன்னார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

####

பார்ப்பனப் பெருச்சாளிகளிடமிருந்து கோயில் சொத்துக்களைக் காப்பாற்ற 1920இல் பனகல் அரசர் இந்துஅறநிலையத்துறை மசோதாவைக் கொண்டு வந்தபோது சத்தியமூர்த்தி அய்யர் சட்டசபையிலே காட்டுக் கூச்சல் போட்டு எதிர்த்து இந்துக் கோயில்கள் தங்கள் சமூகத்துக்காக உரியது என்று சமஸ்கிருதத்திலேயே பேசினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

####

1927இல் திருச்சி தேசிய கல்லூரிக்கு வருகை தந்த காந்தியாருக்குப் பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்திலே வரவேற்பு தந்தார்கள் என்பதும் அதைக் காந்தியார் எதிர்த்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1935 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரஹாரத்துக்கு மலம் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக்கூடாது-அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று பார்ப்பனர்கள் வலியுறுத்தினார்கள்.

இதன்மூலம் மலம் எடுக்கக்கூட அக்கிரஹாரத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்ககூடாது என்கிற அளவிற்கு தீண்டாமையைக் கடைப்பிடித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இதில் புதைந்திருக்கும் இன்னொரு உண்மை என்ன? தாழ்த்தப்பட்டவர்களையும்,சூத்திரர்களையும் பார்ப்பனர் ஒரே கீழ் நிலையிலேயே வைத்திருந்தனர் என்பதுதானே?

தமிழ் ஓவியா said...

வாக்கு வங்கி அரசியல் ஓட்டுப்பயிற்சியாளர்களை ஓரங்கட்டுங்கள்!


கடும் நோய்க்கான கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்த மருந்துகளில்கூட அளவான அளவே பயன்படுத்தப்பட வேண்டிய ஜாதி என்ற விஷத்தை, மருந்தை மறந்து விட்டு விஷத்தை மட்டுமே குடித்தால் நீங்கள் என்னாவீர்கள்?

தந்தை பெரியாரும், அம்பேத்கரும் கூறியபடி, பிற்படுத்தப்பட்ட ஜாதி சூத்திரர்களும், அடுக்கின் வெளியே தள்ளப்பட்டு அவதிக்குள்ளாகும் பஞ்சமர்கள் என்ற இரு சகோதரர்களும் கைகோர்த்துப் போராட வேண்டிய சகோதரர்கள் அல்லவா? அதைவிட்டு உட்ஜாதி - அரசியல் லாபத்திற்காக - தேர்தல் அரசியலில் வாக்கு வங்கிகளைத் தேடி சந்தர்ப்பவாத சதிக்குப் பலியானால் இதுவரை நீங்கள் பெற்றுள்ள - இனி பெற வேண்டிய சமூக நீதி உரிமைகள் - இடஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்புகள் திடீரென்று காணாமற்போகும் என்பதை நினைத்து, வீடு எரிவதைப் பார்த்து, புரியாத சிறுபிள்ளைகள் கூத்தும் கும்மாளமும் கொள்வதுபோல ஆடாதீர்!

பார்ப்பனர்கள் - ஊடகங்கள் - உங்களில் சிலரை கொம்பு சீவி விட்டு மோத விட்டு, ரத்தம் குடிக்கக் காத்திருக்கும் நரிகளாகி உசுப்பேற்றுகின்றனர்! ஏமாறலாமா?

மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் முழுவதும் அமுலாகி விட்டவனவா? யோசித்துப் பார்த்தீர்களா?

இளைய பெருமாள் கமிட்டி (மத்திய அரசு கமிட்டி) செயல் வடிவம் கண்டு விட்டதா?

உச்சநீதிமன்றத்திலும், பல மாநில உயர்நீதிமன்றங்களிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நீதியரசர்கள் போதிய அளவுக்கு Adequate Representation அடைந்து விட்டார்களா?

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தால் இவர்கள் இடஒதுக்கீடு கேட்பார்கள்; பார் பார் இதோ இவற்றை தனியார் மயமாக்கி இடஒதுக்கீட்டிற்கு - சமூக நீதிக்குச் சமாதி கட்டுகிறோம் என்று ஓசைபடாமல் திட்டமிட்டு வெற்றி பெறுகிறதே ஆரியமும் அதில் நுழைந்த அதிகார வர்க்க ஆட்சியும்! புரிந்து கொண்டீர்களா?

மத்திய அரசுப் பதவிகளில் செயலாளர்கள் என்ற சக்தி வாய்ந்த பதவிகளில் 132ல் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்தான் ராஜ்யம் என்பது போல ஒருவர்கூட இல்லை என்று துறை சார்ந்த அமைச்சரே 6.12.2012இல் நாடாளுமன்றத்தில் கூறியது கேட்டு, உங்களைத் தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முயலும் சிலர் அவர்கள் திருவாசகங்களில் கூறுவதானால் ஓட்டுப் பொறுக்கிகள் அந்தத் தலைவர் விரிக்கும் வலையில் வீழ்ந்து வாழ்வுரிமையை -வளர்ச்சியை - முன்னேற்றத்தை இழக்கத் துடிக்கலாமா?

மண்டல் குழுப் பரிந்துரைகளுக்காகவும், இளைய பெருமாள் கமிட்டி பரிந்துரைக்காகவும் திராவிடர் இயக்கம் போராடியபோது இவர்கள் எங்கே போய் இருந்தனர்? வீட்டின் கதவைச் சாத்திக் கொண்டு வீணைக் கச்சேரி அல்லவா கேட்டுக் கொண்டிருந்தனர்; இப்போது இப்படி வீண் கச்சேரி நடத்தி, மாயையை உருவாக்கி, உங்களுக்கு ஜாதிப் போதையை ஏற்றும் மயக்கப் பானங்களை அல்லவா தரத் துடிக்கிறார்கள்?

நியாயந்தானா? சிந்தியுங்கள்! 18 வயது வந்த பெண்ணுக்குத் தனது வாழ்விணையரைத் தேர்வு செய்யத் தகுதி இல்லை என்பது உங்கள் வாதமானால், 18 வயதில் வாக்குரிமையை - ஓட்டுப் போடும் வாய்ப்பை - மாற்றிட நாடு தழுவிய அளவில் பிரச்சாரம், போராட்டம் செய்ய முன் வருவீர்களா? சட்டத்தை மாற்றிடப் போராடுவீர்களா?

21 வயது பெண் மாற்று ஜாதியில் காதல் செய்தால் அதை ஏற்பீர்களா?

பெற்றோர்களைக் கேட்டுத்தான் காதல் திருமணம் வயது வந்தபெண் முடிவு செய்ய வேண்டும் என்றால், இது மகளிரை மறுபடியும் அடிமையாக்கும் சமூக அநீதி அல்லவா?

பெற்றோர்கள் கூறுகிறபடி 18 வயது வந்த ஆண் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பெற்றோர்கள் ஆணைப்படி- சம்மதம் பெற்ற பிறகே அவர்கள் கூறும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுவீர்களா?

அப்படிக் கூறுவது எப்படி நியாய விரோதம், சட்ட விரோதம், மனித உரிமைப் பறிப்புக் குற்றமோ, அது போன்றது தானே மகளிர் உரிமையைப் பறிப்பதும்?

தமிழ்ப் பாங்கு, தமிழன், தமிழினம் என்று கூறும் இவர்களால் காதல் இல்லாமல், குறுந் தொகைப் பாடல்கள் இல்லாத தமிழ் இலக்கியங்கள் உண்டா? குறளின் காமத்துப் பாடல் எழுதி, கண்ணொடு கண் நோக்கொக்கின் குறளும் குற்றமானதா?

வாக்குவங்கி அரசியலில் நடத்தும் ஒட்டுப் பசியாளர்களை ஓரங்கட்டுவீர்!

உண்மையான உரிமைகளை வென்றெடுக்க, திராவிடர் கழகத்தின் - திராவிடர் இயக்கத்தின் பெரியார் தத்துவங்களின் கொள்கையை ஏற்பீர்! வலங்கை, இடங்கைகளைப் பிரிக்காதீர்!

பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்களையும் மோதவிட்டு அரசியல் பதவிப் பசியைத் தீர்க்க எண்ணாதீர்!

இணைப்பீர்!
இணைப்பீர்!

இன்றேல் வீழுவது நாமே!

வாழ்வது ஆரியமே, அவாளே! புரிந்து கொள்வீர்.

சிந்திப்பீர், செயல்படுவீர் தனியார் துறை இடஒதுக்கீட்டுப் போர்க் குரல் கொடுக்க ஆயத்தமாவீர்!

பெரியார் நினைவு நாள் சூளுரை இதுவே!



கி.வீரமணி
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

திலகர் சொல்கிறார் . . .

சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார் உணர்வு தோன்ற அதன் எதிரொலியாக மகாராட்டிரத்திலும் அந்த உணர்வு தலை தூக்கியது. அப்பொழுது (1918) இந்தத் திலகர் என்ன பேசினார் தெரியுமா?

"இப்பொழுது எல்லோரும் சட்ட சபைக்குச் செல்லல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். செருப்புத் தைக்கிறவனும், எண்ணெய் செக்கு ஆட்டுகிறவனும், வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருப்பவனும் () சட்டசபைக்குப் போக வேண்டுமென்று ஏன் முயற்சி செய்கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டுமென்று ஒரு வரைமுறை கிடையாதா?" என்று பேசினார்.

ஆதாரம்: டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ''காந்தியாரும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?'' என்ற நூல்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரின் இனப்பற்று

வட இந்திய நகர் ஒன்றில் சாலை விபத்தில் ஒருவன் இறந்து விட்டான். இறந்தவன் ஒரு நிறுவனத்தில் சுருக்கெழுத்துத் தட்டச்சராக இருந்தவன் என்பது அவனுடைய சட்டைப் பைக்குள் கிடந்த அடையாளச் சீட்டிலிருந்து தெரிய வந்தது. அதைப் பார்த்து அந்தக் கணத்திலேயே மற்றொரு பிராமணன் சைக்கிளில் அஞ்சல் நிலையத்துக்குப் பஞ்சாய்ப் பறந்தான் ""................ அலுவலகத்தில் சுருக்கெழுத்துத் தெரிந்த தட்டச்சர் வேலை காலியாக உள்ளது. உடனே புறப்பட்டு வா"" என்று திருவரங்கத்தில் உள்ள தன் தம்பிக்குத் தந்தி அடித்தானாம். இது கதை அன்று. நகைச்சுவைத் துணுக்கும் அன்று. இடையிடையே நிகழும் உண்மைச் சம்பவம்.

(ஆதாரம்: ""வட மாநிலங்களில் தமிழர்"" . - ஆசிரியர் சோமலே. பக்கம் 2)

தமிழ் ஓவியா said...

சிங்கால்களின் திசை திருப்பங்கள்!


சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது என்ற பழமொழி உண்டு. அதனை அப்படியே பின்பற்றுபவர்கள்தான் சங்பரிவார கும்பலான ஹிந்துத்துவாவாதிகளான பார்ப்பனர்களும் அவர்தம் தாசானுதாசர்களும்!

பாலியல் வன்கொடுமைகளுக்கு நாட்டில் கடுமையான தண்டனை தர சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பெண்களை வெறும் உடைமையாக்கியும், அடிமையாக்கியும், கொச்சைப்படுத்திய நிலை ஆரிய சனாதன மத நூல்களான இராமா யணம், பாரதம், பகவத் கீதை மனுசாஸ்திரம் மற்றும் புராணங்களில் வண்டி வண்டியாக உள்ளன!

இந்துக் கடவுள்களின் லீலா வினோதங் கள் ஏராளம் உண்டு; அத்தனையும் இ.பி.கோ. என்ற இந்திய கிரிமினல் சட்டத்தின்கீழ் வராத குற்றங்களே அரிதேயாகும்.

இந்த லட்சணத்தில், விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் (பார்ப் பனர்) நேற்று துறவிகள் (?) மாநாட்டில் பேசியுள்ளார். (இதில் சங்கராச்சாரியாரும் பாலியல் வன்கொடுமைபற்றி அலசிப் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்!)
மேற்கத்திய கலாச்சாரத் தினால் தான் இப்படிப் பல பாலியல் வன்கொடுமைகள் நடை பெறுகின்றன என்று கூறியுள்ள அசோக் சிங்கால்களுக்கும் அவரது தொண்டரடிப் பொடி களுக்கும் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம்.

1. ஆண்டவன் அவதாரமான பகவான் கிருஷ்ணன் இளவய திலேயே, ஆற்றில் குளிக்கும் பெண்களின் சேலைகளைத் திருடி, மரத்தின்மேல் வைத்துக் கொண்டு, நீருக்குள் இருந்த பெண்களை ஆடையில்லாத நிலையில் நீருக்கு மேலே வரச் சொன்னது, பாலியல் வன்கொடுமைக்கு முன்னோடி அல்லவா?

2. தாருகாவனத்து ரிஷி பத்தினிகளை (3000 பேர்கள் - அப்பாடி!) கற்பழித்த சிவ லீலை ஹிந்து தர்மத்தின் சிறப்புகளா?

3. அகலிகையைக் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிட - தேவர்களின் தலைவன் இந்தி ரன் முனிவர் வடிவம் ஏற்று, தவறாக அகலி கையும் நடந்து கொண்ட கதை - மேற்கத்திய கலாச்சாரமா? ஹிந்து கலாச்சாரமா?

4. முன்பு இந்திய பிரிட்டனில் இந்திய ஹை கமிஷனராக இருந்த பண்டிட் விஜயலட்சுமி அவர் களுக்கு, பிரிட்டிஷ்காரர் ஒருவர் விருந்து வைத்தார். அப்போது அவரிடம் இந்த அம்மையார் உங்கள் படையெடுப்பில்தான் எங்கள் கலாச்சாரம் கெட்டது என்றாராம். அவர் அதற்கு மிகுந்த மரியாதையுடன், இருக் கலாம் மேடம், ஆனால் நாங்கள் அங்கே வந்திருக்காவிட்டால் நீங்களே உயிருடன் இருந்து இங்கே வந்து என்னுடன் தேநீர் அருந்த முடியாமற் போயிருக் கும் என்று பட்டென்று பதிலளித்தாராம்!

அதாவது விதவையான இவரை சதி என்ற உடன்கட் டையில் ஏற்றி எரித்திருப்பார் களே, அதைச் சட்டம் போட்டு, சதி அல்லது உடன்கட்டை ஏற்றுதலை ஒழித்துக் கட்டியது வெள்ளைக்கார ஆட்சிதானே! என்ற பொருளில் கூறியது கேட்டு, வெட்கி வெலவெலத்துப் போய் விட்டார் இந்த விதவையரான அம்மணி!

இன்னமும் ராஜஸ்தானில் ரூப் கன்வார்கள் எரிக்கப்பட்ட - சதி மாதா கோயில் உள்ளது! குழந்தை மணங்கள் குஜராத் உட்பட பல பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற வண்ணமே உள்ளன!

இவை எல்லாம் மேற்கத்திய கலாச்சாரமா? மேற்கத்திய கலாச்சாரம்தான் காப்பாற்றியும் உள்ளது. மனுதர்மத்திலேயே மாதர், ஆடவர் நிலை பற்றி வெவ்வேறு விதமாகத் தண்டனை கூறியுள்ளதே! உபநிஷத்துக்களில் குருபத்தினி - சீடர்கள் ஒழுக்கக் கேட்டிற்குத் தண்டனை பற்றி வேறுவிதமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுள் ளதே! அது எதைக் காட்டுகிறது?

இந்தப் பாலியல் வன்கொடுமை மிகவும் பழைமையான புராதன நடப்பு ஹிந்து கலாச் சாரத்தில் என்பதைத்தானே காட்டுகிறது?

இதனை ஏன் மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவு என்று திசை திருப்புகின்றனர் - இந்த மதவாதிகள்? இன்னும் எத்தனையோ கூற முடியுமே!

- ஊசி மிளகாய்