Search This Blog

7.1.13

திருவள்ளுவர் என்றால் உதாசீனம் -விவேகானந்தர் என்றால் அரியாசனமா?

திருவள்ளுவர் சிலை? 
கன்னியாகுமரி முனையில் 133 அத்தியாயங்களைக் கொண்ட திருக்குறளை யாத்த தமிழர்கள் என்றென்றைக்கும் பெருமை கொள்ளப்பட வேண்டிய திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில், தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கலைஞர் அவர்களின் முயற்சியால் திருவள்ளுவர் சிலை கி.பி. 2000 ஆண்டு தொடக்கத்தில் நிறுவப்பட்டது.

இன்றைக்குத் தமிழர்கள் மட்டுமல்ல - வெளி நாடுகளிலிருந்து சுற்றுலாவுக்காக வருபவர்கள் கூட, மிகுந்த ஆர்வத்துடன் குமரிமுனை திருவள்ளுவர் சிலையைக் கண்டுகளித்து வரு கின்றனர். அரசின் சுற்றுலாத் துறைக்கு இலட்சக் கணக்கில் ஆண்டு ஒன்றுக்கு வருவாயையும் அது குவித்துத் தருகிறது.

வான்புகழ் கொண்ட அந்தத் திருவள்ளுவரின் சிலை அரசுக்கு உரியதே தவிர, தி.மு.க.வுக்கோ கலைஞர் அவர்களுக்கோ தனிப்பட்ட முறையில் உரிமை உடையதும் அல்ல.

அரசு என்பது பொதுவானது, ஓர் அரசு போய் அடுத்த அரசு வந்தாலும் பணி தொடர்ச்சியாக இருந்தே தீர வேண்டும்.

ஆனால் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்பது இத்தகைய செப்பமான வரைமுறைகளுக்குள் அமைவது கிடையாது. எதிலும் விருப்பு - வெறுப்பு என்ற கண்ணோட்டம்; இந்த ஆட்சிமீது வெகு மக்களின் எதிர்ப்பு நிழல் நாளும் விழுந்த வண்ணமாகவே உள்ளது.

எதிர்க் கட்சிகளும், கட்சிகளுக்கு அப்பாற் பட்டவர்களும் சிதிலம் அடைந்து வரும் குமரி முனை - திருவள்ளுவர் சிலையை அரசு முறைப் படி பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக திராவிடர் கழகப் பொதுக் குழுவிலும் (1.12.2012) தீர்மானம் நிறைவேற்றப் பட்டும் உள்ளது. மேற்கொள்ளப்பட வேண்டிய மராமத்துப் பணிகளை விஞ்ஞான முறைப்படி மேற்கொண்டிருக்க வேண்டும். அதற்கான காலம் கடந்த நிலையிலும் பலரும் வற்புறுத்திய பிறகும்கூட தமிழ்நாடு அரசு கேளாக் காதாக இருப்பது பெரிதும் வருந்தத்தக்கதாகும்.

தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றது என்பதற்காக ஒவ்வொன்றையும் அலட்சியப்படுத்துவது - எதிராகச் செயல்படுவது என்பது ஓர் ஆட்சி முறைக்கு உகந்ததல்ல.

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத் தையும் சென்னை - கோட்டூர்புரத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற எத்தனித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தடையின் காரணமாக இதுவரை தப்பிப் பிழைத்துக் கொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு தலைமைச் செயலகம் - சட்டமன்றம் உட்பட தி.மு.க. ஆட்சியில் புதிதாக உருவாக்கப் பட்டது என்பதற்காக அதனைப் பயன்படுத்துவ திலிருந்து அ.இ.அ.தி.மு.க. அரசு விலகிச் சென்றுள்ளது. பழைய கட்டடத்திலேயே சட்டப் பேரவைக் கூட்டங்கள் நடந்தும் வருகின்றன.

நாட்டின் பிரதமர் வருகை தந்து திறந்து வைக்கப்பட்ட ஒரு கட்டடத்தில் சட்டமன்றத்தை நடத்த மாட்டோம் என்று நினைப்பதெல்லாம் எந்த வகையான ஆரோக்கிய ஆட்சி முறை?

பொதுவாக நம் நாட்டு ஊடகங்களும், இதில் நாணயமாக பொறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றன என்று சொல்ல முடியாது.

திருவள்ளுவர் சிலை, அண்ணா நூலகம் தமிழகச் சட்டமன்ற கட்டடம் இவற்றின்மீது இந்த அரசு எந்தக் கண்ணோட்டத்தைச் செலுத்துகிறது?
அதே நேரத்தில் சென்னைக் கடற்கரை சாலை என்ற மிக முக்கியமான பகுதியில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாரிக் கொடுப்பதும் இந்த அரசுதான்.

திருவள்ளுவர் என்றால் உதாசீனம் -விவேகானந்தர் என்றால் அரியாசனமா? உலகத் தமிழர்கள் கேட்க மாட்டார்களா?
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதையும் தூக்கி எறிந்த அரசு அதிமுக அரசு.


தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு என்றால் அவற்றை அவமதிக்கும் போக்கு - அண்ணா பெயரில் இருக்கக் கூடிய ஒரு கட்சி - ஓர் ஆட்சியில் இருக்கலாமா? தமிழர்கள் சிந்திப் பார்களாக!

               ----------------------”விடுதலை” தலையங்கம் 7-1-2013

27 comments:

தமிழ் ஓவியா said...


பெண்கள்பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பிற்போக்குக் கருத்து: நாடெங்கும் கண்டனக் கணைகள்!



இந்தூர், ஜன.7- கணவன், மனைவி உறவு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்துக்கு நாடெங்கும் கண்டனம் வலுத் துள்ளது.

புதிய சர்ச்சை

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், கற் பழிப்பு சம்பவங்கள் இந்திய கிராமங்களில் நடக்க வில்லை, இந்திய நகரங்களில்தான் நடக்கின்றன. இது வெட்கக்கேடானது. நீங்கள் கிராமங்களுக்கு, நாட்டில் உள்ள காடுகளுக்கு சென்று பாருங்கள். இப்படி கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள் அங்கெல்லாம் நடப்பதில்லை. நகர்ப்புறங்களில் மேற்கத்திய கலாசாரத்தில் இது போன்ற சம்ப வங்கள் நடக்கின்றன என்று கூறி சில தினங்களுக்கு முன் சர்ச்சையை ஏற்படுத்தினார்.இந்த நிலையில், கணவன் மனைவி உறவு தொடர்பாக மோகன் பகவத் கூறிய கருத்து, புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒப்பந்தம்

மத்தியபிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப் போது அவர் கூறியதாவது:கணவன்-மனைவி இருவரிடையே (திருமணத்திற்கு பின்) ஒரு சமூக ஒப்பந்தம் ஏற்படுகிறது. இதில் கணவரானவர் மனைவியிடம், நீ நம் வீட்டை பார்த்துக்கொள். நான் உன் தேவைகளையெல்லாம் பார்த்துக் கொள் கிறேன். உன்னை பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் என்கிறார்.அந்த ஒப்பந்தத்தின்படி கணவர் நடந்துகொள்கிறார். ஒப்பந்தப்படி மனைவி நடந்துகொள்ளும் வரை கணவர் அவருடன் இருக் கிறார். மனைவி அந்த ஒப்பந்தத்தை மீறிவிட்டார் என்றால், அவரும் மனைவியை கைவிட்டு விடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கருத்து

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கருத்து தெரிவிக்கையில், இது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் ஆகும். நாட்டு மக்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு அமைப்பின் தலைவர் என்ற வகையில் மோகன் பகவத் கூறிய கருத்து, அவர் சார்ந்துள்ள அமைப்பின் கருத்துத்தான். இதில் நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத் கூறுகையில், மோகன் பகவத் இப்படி கூறியிருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். என்பது இதுதான். எனவே தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இந்தியாவில் உள்ள ஒரு பிற்போக்கு அமைப்பு என கருதுகிறேன். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருகிறபோது இவர்கள்தான் ஆட்சியின் காவலர்களாக இருக்கின்றனர். இவர்கள்தான் மனுநீதி அடிப்படையிலான அரசியல் சட்டம் வேண்டும் என்கின்றனர். எனவே மோகன் பகவத் இப்படி பேசுவது அவரது சித்தாந்தத்தை எதிரொலிக்கிறது என்றார்.

மம்தா சர்மா: தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் மம்தா சர்மா, பூகோளத்தின் அடிப்படையில் இப்படி பேசுவதை மோகன் பகவத் நிறுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள். நாம் இந்திய குடிமக்கள். அடித்தட்டு மக்களிடம் சென்று பாருங்கள். இந்திய பெண்களின் நிலை என்ன என்பது தெரியும் என கருத்து தெரிவித்தார்.

நியாயப்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ்.

இதற்கிடையே மோகன் பகவத் கருத்தை ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் நியாயப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்கூறும் போது, மோகன் பகவத்தின் கருத்தை திரித்துக்கூறு கின்றனர். அவர் மேற்கத்திய திருமண முறை பற்றித்தான் கருத்து தெரிவித்தார். ஆனால் அவரது கருத்து இந்திய திருமண முறையை பற்றியது என இங்குள்ள ஊட கங்கள் திரித்து விட்டன. இது தவறாகும். இந்திய திருமண முறை மிகவும் புனிதமானது என்றுதான் சொன்னார். இதில் மனைவியானவர் கணவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். குடும்பத்தின் மீது கணவருக்கு கடமைகள் இருக்கின்றன. இந்திய திருமண முறையை முன்னிறுத்தி அவர் உயர்வாகவே பேசி இருக்கிறார். ஆனால் அதை திரித்துச் சொல் கின்றனர் என்றார்.

குறிப்பு: ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பிற்போக்குக் கருத்துக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நேற்று விடுதலை 6.1.2013) கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


கபடி - பல்லாங்குழி விளையாட்டா?


கேள்வி: உலகக் கோப்பை கபடிப் போட்டி யில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா மூன் றாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளதே?

பதில்: ரொம்ப மகிழ்ச்சி. இதுபோல எப் படியாவது கஷ்டப்பட்டு பெண்கள் போட்டியில் பல்லாங்குழி ஆட்டத் தைச் சேர்த்து விட்டோ மேயானால், அதிலும்கூட இந்தியாதான் முதலிடத் தில் வரும்; சேம்பியன் பட்டத்தைப் பெறும். நாம் மீண்டும் சந்தோஷப்பட் டுக் கொள்ளலாம். (துக்ளக் 9.1.2013 பக்கம் 29)

எதிலும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பார்வையா? இதுதான் தி.க.வின் வேலையா என்று சில அதிமேதாவி ஆசாமிகள் அவசரக் குடுக் கையாக பேசுவார்கள்.

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புப் போதையில் அகப்பட்டவர்கள் திரு சோவின் இந்தப் பதிலுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்?

கபடி - என்பது பல்லாங் குழி விளையாட்டா? அப்படிச் சொல்லுகிற கூட்டத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களில் ஒரே ஒருவரை கபடி ஆடச் சொல்லுங்கள் பார்ப்போம் - பல்லாங்குழியா? பல் காணாமல் போகும் விளை யாட்டா என்பது அப்பொ ழுது தெரிந்து விடுமே!

முட்டாள்கள் விளை யாடுகிறார்கள் - 11 ஆயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கிரிக்கெட்டைப் பற்றி அறி ஞர் பெர்னாட்ஷா சொன் னதுண்டு.
ஒரே நேரத்தில் இருவர் (விக்கெட் கீப்பரைச் சேர்த்து மூவர் என்றும் வைத்துக் கொள்ளலாம்) விளையாடுவர்; மற்றவர் களோ மைதானத்தில் பேன் குத்திக் கொண்டு இருப் பார்கள் - இந்த விளை யாட்டுக்குப் பெயர்தான் கிரிக்கெட் (டு).

கபடியோ, கால் பந்தோ அப்படியல்ல; மைதானத் தில் உள்ள அத்தனைப் பேரும் ஆவேசத்துடன் அதி சுறுசுறுப்புடன் விளை யாடியே தீர வேண்டிய வர்கள். கிரிக்கெட் சோம் பேறிகளின் கூடாரமாக இருப்பதால்தான் அந்த விளையாட்டைப் பார்ப் பனர்கள் தேடிக் கொண்டு விடுகிறார்கள். அதுவும் இல்லாமல் அது பணம் காய்ச்சி மரம். கொட்டிக் கொண்டே இருக்குமே!

தேர்வுக் குழுவிலும் பார்ப்பனர்கள் (பி.சி.சி.அய்) என்பதால் தோளைத் தட் டிக் கொடுத்து, பூணூலைத் தடவிப் பார்த்து தேர்வு செய்வார்கள்.

பல்லாங் குழியோடு கபடியை ஒப்பிட்டுச் சொல் கிறாரே திருவாளர் சோ. இதுவரை ஒரே ஒரு பார்ப்பனர் சடுகுடு பக்கம் தலை வைத்துப் படுத்ததாக எடுத்துக்காட்டுக்குகூடச் சொல்ல முடியுமா?

நாலு பேர் அமுக்கிப் பிடிப்பான் ஆவேசமாக; புளியோதரைகள் தாக்குப் பிடிக்குமா? ஏனிந்த வீண் வம்பு? நமக்குத்தான் இருக் கவே இருக்கு - கிரிக்கெட் என்னும் சோம்பேறி விளையாட்டு - பணம் கொட்டும் பிழைப்புக்கு வசதி இருக்கும்போது கால் முறியுமோ, கை முறியுமோ, விலா எலும்பு முறியுமோ என்னும் ஆபத்தான விளை யாட்டை வரித்துக் கொள்ள அவாள் என்ன பைத்தியக் காரர்களா?

ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண் டுல்கர், ராகுல் டிராவிட், சவ்ரவ் கங்குலி, ஜவகர் சிறீநாத், வெங்கடேஷ் பிரசாத், அணில்கும்ளே, வி.வி.எஸ். இலட்சுமணன், கிருஷ்ணமாச்சாரி சிறீகாந்த், சுனில் ஜோஷி, மனோஜ் பிரபாகர், அஜீத் அகர்கர், ரோஹித் சர்மா, இஷாத் சர்மா, சிறீகாந்த், ரவீந்திர அஷ்வின், சடகோ பன் ரமேஷ், நிலேஷ் குல் கர்னி, சிவராமகிருஷ்ணன், வெங்சர்க்கார் டபுள்யூ வி. ராமன் = இப்படி ஒரு நீண்ட அக்கிரகாரப் பட்டியல். இவர்களையடுத்து இவர் களின் பிள்ளைகளும் களத்தில் இறக்கப்படுவதும் உண்டு. இதில் என்ன வேடிக்கை தெரியுமா? இவ்வளவுப் பார்ப்பனர்கள் இருந்தும் ஒரு கபில்தேவ், ஒரு எம்.எஸ். தோனி என்று பார்ப்பனர் அல்லாதார் (ஏதோ விதி விலக்காக இவர்கள்) அணிக்குத் தலைமையேற்றபோதுதான் உலகக் கோப்பை இந்தியா வுக்குக் கிடைத்தது!

(எம்.எஸ். தோனியை அணித் தலைவர் பதவி யிலிருந்து ஒழித்துக் கட்ட குழிபறிக்கும் வேலையில் பார்ப்பன ஊடகங்கள் இறங்கியுள் ளன).

அணி வெற்றி பெற வேண்டும் என்பதைவிட தன்னலத்தின், அடிப் படையில் விளையாடி பரிசுகளைத் தட்டிச் செல் லுவதும் பார்ப்பனர் களுக்கே உரித்தான ஒன்றாகும்.

விசுவநாதன், ஆனந்த் என்ற பார்ப்பனர் செஸ்லில் வெற்றி பெற்றால் சோ கூட்டத் திற்கு இனிக்கிறது; நம் பெண்கள் பல்லாங்குழி விளையாடினால் வேர்க் கிறதோ! அதில்கூட பெண்களை மட்டம் தட்டும் மனுதர்மப் புத்தி.

இந்த நுணுக்கங் களை எல்லாம் ஈரோட் டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் துல்லிய மாக விளங்கும்.

தமிழ் ஓவியா said...


இயற்கைத் தடைகள்


நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மை யும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத்தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன் மானத்திற்கு இயற்கைத் தடைகள்.
(குடிஅரசு, 9.1.1927)

தமிழ் ஓவியா said...


பணமே! பணமே! உன் சக்திதான் எவ்வளவு?



நம்முடைய வாழ்நாள் என்பது ஒவ்வொரு நாளும், மணியும், நிமிடமும், வினாடியும் முக்கியமானதே. அது நகரும்போது - வயது ஏறுகிறது - கீழே இருந்து கிளம்பிய வரைகோடு (Graph) மேல் நோக்கிச் சென்றாலும் 50 வயது வரை உச்சிக்குச் சென்று அது கீழ் நோக்கிப் பாய்கிறது.

வியப்படைகிறீர்களா? அதுதான் முதுமை - வயது ஏறிய நிலை - முதுமையின் பல தவிர்க்க இயலாத விளைவுகள் நம்மைப் பாதிக்கவே செய்கின்றன.

உழைத்தோ, உழைக்காமலோ இருந்து முறையே தேய்ந்து போனவை களாகவோ அல்லது துருப்பிடித்தவை களாக ஆகி விடக் கூடும்.

வளர்ச்சி என்பது உச்சிக்குச் சென்று தளர்ச்சி என்பது வளர்ச்சிக்கு வழியனுப்புச் செய்யத் துவங்குகிறது!

உடலின் பல உறுப்புகள் - என்னதான் மனம் உற்சாகத்துடன் இருந்தாலும், ஒத்துழையாமை இயக்கம் நடத்துகின்றன - சிற்சில நேரங்களில்!

உடம்பார் அழியின் உயிரார் அழியும் நிலை

தானே தள்ளாடித் தள்ளாடி வருகிறது!

இந்த வாலிப முறுக்கினை - தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்பதோடு குறுக்கிக் கொண்டால், அத்தகைய மனிதர்களால் சமூகத் திற்கு எந்த ஒரு நற்பயனும் கிட்டு வதில்லை! தன்னையும் தன் குடும்பத் தையும் வாழ வைக்கும் அதே நேரத்தில், தான் சார்ந்த சமுதாயமான உலகத் தையும் வாழ வைக்கும் தொண்டறத்தில் ஏதாவது ஒரு எளிய வழியிலாவது மனிதர் களாகிய நாம் ஈடுபடல் வேண்டாமா?

புயலுக்கு - அது சுனாமியாகட்டும், தானே புயலாகட்டும், அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட சாண்டி புயலாகட்டும் - இரங்கியவர்கள் அதிலிருந்து மீளும் - பாதிக்கப்பட்டோருக்குத் தம்மால் இயன்ற உதவிகளை செய்வதில்தான் எத்தகைய மகிழ்ச்சிப் பெரு வெள்ளம்! உவகைக் கூத்து!!

அறத்தால் வருவதே இன்பம் அல்லவா? அதுபற்றி இளைஞர்களுக்கு இளமையிலே, வீட்டிலே பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தைச் சொல்லிக் கொடுப்பதோடு, கொடுப்பதில் உள்ள கொள்ளை இன்பம், பிறரிடமிருந்து எடுப்பதில், திருடுவதில் ஒரு போதும் ஏற்படாதே!

அடுத்தவர் மகிழ்ச்சி அடைவதைப் பார்த்து மனநிறைவு கொண்டு தாமும் இன்புறுவதே தலைசிறந்த மனிதம் ஆகும்!

சிலர் பணத்தின்மீது குறியாய் இருக் கிறார்கள். பணம்! பணம்! என்று அலைந்து திரிந்து, அதிலேயே தம் வாழ்வைக் கரைத்து விடுகின்றனர்!

நியாயமான தேவைக்கு ஏற்ப பணம் இருந்தால் போதாதா? தேவைகளைச் சுருக்கி வாழும் எளிய வாழ்க்கைக்கு எது வும் ஈடாகாது. இளமையில் இளைஞர் களுக்கு இதை உணர வைக்க வேண்டும்.

இல்லத்தரசியார்களுக்கும், இங்கித மாகக் கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, பேராசைப் பெருந்தகைகளாகி, பெரு நட்டத்தினை சந்திக்கும் பல நண்பர்களையும் விரோதிகளாக்கிக் கொண்டு விடுவதால் யாருக்கு என்ன பலன்?

ஆலாய்ப் பறந்து, அள்ளி அள்ளிச் சேர்க்க, ஆடம்பரத்தின் உச்சாணி கொம்பில் ஏறி, என் நிலையை எவரும் அண்ணாந்தே பார்க்க வேண்டும் என்ற ஆணவ ஜந்துகளுக்கு ஏற்படும் இறுதி பல நேரங்களில் சொல்ல முடியாத சோகமேயாகும்!
எனக்குத் தெரிந்த ஒருவர், ஒரு சாதாரணமான கல்லூரி விரிவுரையாளர்; வளர்ந்தார் கல்வியில். அவரது துணைவியும் அரசுப் பணியாளர். பிறகு அவர் பெரியார் தயவில் பெரும் பிரபல கல்லூரி பேராசிரியர் ஆனார் - புத்தகம் ஒன்றை எழுதியதால் முதலமைச்சர் அண்ணா பாராட்டினார்!

பிறகு அதுவே அவருக்கு ஏணியா கியது! சர்வதேச ஏற்றுமதியாளராக - இயற்கைத் தாய் பயன்பட்டாள்! பிள்ளை குட்டி இல்லாதவர்கள் மகிழ்ச்சியைச் சுவைக்க நேரமே இல்லை; சேர்த் தார்கள்... சேர்த்தார்கள்... சேர்த்துக் கொண்டேயிருந்தார்கள்!

சில அரசியல் தலைவர்களும்கூட இவரால் பயன் பெற்றனர்; அவர்களைப் பயன்படுத்தியும் பிற நாட்டிலும் பொருள் சேமிப்பு செய்தார். திடீரென்று கண வன் - மனைவி கொலை செய்யப்பட்ட செய்தி. சேர்த்தது யாருக்குப் பயன் பட்டது?

யாராவது நினைக்கிறார்களா? கதை முடிந்து, வழக்கின்போது - வேலைக்காரியோ, வேலைக்காரனோ அவர்களை கொலை செய்ய திட்ட மிட்டு நிறைவேற்றியவர்கள் என்ற செய்தி களை ஊடகங்கள் தந்தன!

ஊருக்கு இதை கவனிக்கக் கூட நேரமில்லை - காரணம் ஏடுகளில் தொடர்ந்து அடுக்கடுக்காக வரும் கொலை - கொள்ளை - கற்பழிப்பு - பாலியல் வன்கொடுமை, பகற் கொள்ளை - சங்கிலிப் பறிப்புகள் - இத்தியாதி! இத்தியாதி!!

பாடுபட்டுச் சேர்த்து வைத்த இந்தக் கேடு கெட்ட மனிதர்காள்!

உங்கள் பொருளாசையும், பொன் னாசையும் பெண்ணைசையும் பதவி ஆசையும் உங்களை எங்கே சேர்த் தனவோ!

வைகுண்ட பதவியிலா?

சிவலோக பதவியிலா? தெரிய வில்லை என்கிறார் இதைக் கேட்ட ஒரு நண்பர். நான் சொன்னேன். எனக்கு எங்கே பதவி என்று கண்டுபிடிக்க லாமே - அவர் நெற்றியில் வரைந்த டிராயிங்கைப் பாருங்கள். புரியும் என்றார்!
பிறகுதான் சிரித்தார், அந்நாளில் சிந்திக்கவும் செய்கிறார்! --வீரமணி

தமிழ் ஓவியா said...


திருவள்ளுவர் சிலையை பராமரிக்கத் தவறிய அ.தி.மு.க. ஆட்சியை எதிர்த்து தி.மு.க. போராட்டம்


சென்னை, ஜன. 7 - குமரி முனையில் தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை பராமரிக்க மறுக்கும் அ.தி.மு.க. ஆட்சியை எதிர்த்து தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் போராட்டம் நடத்தப்படும். இதுகுறித்து நேற்று (6.1.2013) நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

அய்யன் வள்ளுவர் சிலையை பராமரிக்காத அ.தி.மு.க. அரசுக்கு கண்டனம் குமரி முனையில் முக்கடலும் சங்கமிக்கின்ற அலைகடல் பரப்பில் வேறெங்குமில்லாத அள விற்கு, தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் தனிப்பெரும் முயற்சியால் அமைக்கப்பட்டு, 133 அடி உயரத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கும் அய்யன் வள்ளுவருடைய சிலை; தமிழ் உணர்வே இற்று, அற்றுப் போய் விட்ட இன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் - செம்மொழி யின் சிறப்பைப் போற்றி மதிக்கத் தெரியாத இந்த ஆட்சி யில் - கழக ஆட்சிக் காலத்தில் அச்சிடப் பட்ட பாடப் புத்தகங்களில் பொறிக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தினையும், செம்மொழிப் பாடலையும் ஸ்டிக்கர் ஒட்டி அழிக்கச் செய்த இந்த ஆட்சியில் - கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக பராமரிப்பின்றி, கடல் காற்றின் உப்புத் தன்மை காரணமாக கொஞ்சம் கொஞ்சமாகச் சேதமடைந்து வருவதாகவும், தமிழ் உணர்வு மிகுந் தோர் - வள்ளுவரின் வாய்மொழியில் மனம் பறி கொடுத்தோரென அன்றாடம் சுமார் நான்காயிரம் பேர், படகில் சென்று அய்யன் வள்ளுவரின் சிலை அற்புதத்தைக் கண்டு, ஆச்சரியப்பட்டு மகிழ்ந்து வருவதாகவும், பார்வையாளர்கள் கட்டணம் மூலமாகவே ஆண்டுக்கு அறுபது இலட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறதென்றும் அந்த நிலையிலே கூட வள்ளுவரின் சிலையை அ.தி.மு.க. அரசாங்கம் கவனிக்க மனமிரங்கவில்லை என்றும், தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அமைப்புகளும் போராட் டங்கள் நடத்தியுங்கூட, அ.தி.மு.க. அரசு திருவள் ளுவர் சிலை பராமரிப்பை மேற்கொள்ள வில்லை என்றும் வருந்தத்தக்க செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. இது பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் அ.தி.மு.க. அரசை எச்சரிக்கை செய்தும் கூட, அதை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

எனவே இந்திய நாட்டின் மிகப் பெரிய பூகோள அடையாளமாகத் திகழும் திருவள்ளுவர் சிலை அ.தி.மு.க. அரசினரால் புறக் கணிக்கப் படுவதை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத் துச் சென்று, உடனடியாக பராமரிப்புப் பணியினை மேற் கொள்ளக் கோருவதென்றும்; மேலும், திருவள் ளுவர் சிலையை பராமரிப்பதற் கான நடவடிக் கைகளை அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளத் துண்டுகோலாக தி.மு. கழகம் மிகப் பெரியதோர் கண்டன ஆர்ப்பாட்டத்தை கன்னியா குமரியில் 19-1-2013, சனிக்கிழமையன்று, கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமை யில் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் நடத்துவதென்றும், மாவட்டக் கழகச் செயலாளர் களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது.

இவ்வாறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் ஓவியா said...


பெரியார் திடலில் நடைபெற்ற எளியமுறை மூச்சுப் பயிற்சி


பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் சிகாகோ மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்கள் மன அழுத்தம் சம்பந்தமாகவும், அதன்மூலமாக உடலில் ஏற்படும் விளைவுகள்பற்றியும் விளக்கிக் கூறினார். அவரின் மகள் மனநல மருத்துவர் கனிமொழி அவர்கள் பெரியார் திடலில் பணி புரியும் பணியாளர்களுக்கு மனோதத்துவப் பயிற்சி (மூச்சு பயிற்சி) அளித்தார். உடன் எக்ஸ்னோரா நிர்மல் இணையர் உள்ளனர் (சென்னை, பெரியார் திடல், 7.1.2013)

சென்னை, ஜன. 7- சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் இன்று (7.1.2013) காலை 9.30 மணியளவில் சிகாகோ மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்களின் அறிமுக உரையுடன் அவரது மகள், அமெரிக்கா நியூஜெர்சியில் சுயமாகப் பணியாற்றும் மனநல மருத்துவர் கனிமொழி இளங்கோவன் அவர்கள் பெரியார் திடலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தி உற்சாகமான சூழலை ஏற்படுத்தி சோர்வின்றி பணியாற்றவும், மனதை லேசாக வைத்துக் கொள்ளவும், பதற்றமின்றி முடிவுகள் எடுக்கும்விதமாக மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வது எப்படி என்பதை அனைவருக்கும் புரியும் விதமாக பயிற்சி கொடுத்தார்.

நாள்தோறும் குறைந்தது அரை மணிநேரம் இப்பயிற்சியை விடாமல் 8 வாரங்கள் செய்து வந்தால், நம் மனதில் நல்ல மாற்றங்களையும், சோர்வு நீங்கி திடமுடன் நல்ல முடிவுகளை மேற்கொள்ளவும், பதற்றமின்றி பணிகளைச் செய்யவும் இந்த எளிய முறை மூச்சுப்பயிற்சி நம்மை தயார் செய்கிறது என விரிவுபட எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா நிறுவனர் எம்.பி. நிர்மல், அவரது துணைவியாருடன் கலந்து கொண்டார்.

முன்னதாக பெரியார் திடல் பணியாளர்கள், மூச்சுப் பயிற்சியாளர் மருத்துவர் கனிமொழி அவர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட நிகழ்வு நடைபெற்றது.

திருமதி பண்பொளி அவர்கள் மருத்துவர் கனிமொழி அவர்களுக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.

பெரியார் திடல் மேலாளர் பி. சீதாராமன் முன்னதாக இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

தமிழ் ஓவியா said...


கடவுள் ச(ப)க்தி கோவிந்தா!


சென்னை பக்தர்கள் 16 பேர் படுகாயம்

பொள்ளாச்சி, ஜன.7- வேன், டெம்போ நேருக் குநேர் மோதிக் கொண்ட தில், சென்னையை சேர்ந்த, அய்யப்ப பக் தர்கள் உட்பட, 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை, புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அய்யப்ப பக் தர்கள், 14 பேர், நேற்று முன்தினம் இருமுடி கட்டி, வேனில் பொள் ளாச்சி வழியாக சபரி மலைக்கு சென்று கொண் டிருந்தனர்.

நேற்று மாலை, பொள் ளாச்சி - பாலக்காடு ரோடு வடுகம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, எதிர்பாராதவித மாக, எதிரே வந்த டெம் போவுடன் வேன் நேருக்கு நேர் மோதியது.

இதில், டெம்போ ஓட்டுநர், கிளீனர் மற் றும் வேனில் இருந்த அய்யப்ப பக்தர்கள் உட்பட, 16 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையி னர் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந் தவர்களை மீட்டு, பொள் ளாச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

கோயில் உண்டியல் ரூ.15ஆயிரம் திருட்டு

சென்னை, ஜன.7-அரும்பாக்கம் நாகவல்லி அம்மன் கோயில் உண் டியலை இரவில் திறந்து பணத்தை திருடிச் சென் றவர்களை காவலர் தேடி வருகின்றனர்.

அண்ணா நகர் அடுத்த அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பி பிளாக்கில் சாலை ஓரத் தில் நாகவல்லி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் உண்டியல் வெளியே இருந்தது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உண்டி யலை நெம்பி திறந்துள்ள னர். அதில் இருந்த பணத்தைத் திருடிச் சென்று விட்டனர்.

நிருவாகி கனகராஜ் நேற்று காலை கோயி லுக்கு வந்தபோது உண்டியல் பணம் திருட் டுப் போனது தெரிய வந்தது.

இதுபற்றி அரும்பாக் கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உண்டி யலில் ரூ.15ஆயிரம் இருந்திருக்கும் என்று அவர் கூறினார்.

அய்யப்ப பக்தர்கள் 69 பேர் காயம்

திருவாடானை, ஜன.7- நாகப்பட்டினம் மாவட் டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர் கள் ஒரு பேருந்தில் ராமேசுவரம் சென்று கொண்டிருந்தனர். ராம நாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மேலச் சேந்தனேந்தல் கிராமத் தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை இந்த பேருந்து சென்றது.

அப்போது, திடீரென சாலையோர பாலத்தின் சுவரில் மோதி தலைகீழா கக் கவிழ்ந்தது. இதில் 54 பக்தர்கள் காயம் அடைந் தனர். ஓட்டுநர் தூக்கத் தில் பேருந்தை ஓட்டிய தால் விபத்து ஏற்பட்ட தாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த அனை வரும் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனை யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருப் பாலைக்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Jayadev Das said...

\\கன்னியாகுமரி முனையில் 133 அத்தியாயங்களைக் கொண்ட திருக்குறளை யாத்த தமிழர்கள் என்றென்றைக்கும் பெருமை கொள்ளப்பட வேண்டிய திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில், தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கலைஞர் அவர்களின் முயற்சியால் திருவள்ளுவர் சிலை கி.பி. 2000 ஆண்டு தொடக்கத்தில் நிறுவப்பட்டது.\\ அது திருவள்ளுவரின் சிலை அல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவரின் படத்தை யார் பார்த்து இந்தச் சிலையை வடிவமைத்தது என்று ஆதாரம் இருந்தால் தரவும்.

Jayadev Das said...

\\அரசின் சுற்றுலாத் துறைக்கு இலட்சக் கணக்கில் ஆண்டு ஒன்றுக்கு வருவாயையும் அது குவித்துத் தருகிறது.\\ இதுக்குப் போயா திருவள்ளுவர் சிலையை வச்சாங்க?!!

Jayadev Das said...

\\நாட்டின் பிரதமர் வருகை தந்து திறந்து வைக்கப்பட்ட ஒரு கட்டடத்தில் சட்டமன்றத்தை நடத்த மாட்டோம் என்று நினைப்பதெல்லாம் எந்த வகையான ஆரோக்கிய ஆட்சி முறை?\\ எது சினிமா செட்டிங் போட்டு திறந்தாங்களே அதுவா?

Jayadev Das said...

\\திருவள்ளுவர் என்றால் உதாசீனம் -விவேகானந்தர் என்றால் அரியாசனமா? \\ இந்த தமிழன் வட நாட்டவன் என்ற எண்ணம் போய் மனிதன் என்ற சிந்தனை என்னைக்கு வந்து நீங்க எல்லாம் திருந்துவீங்களோ தெரியலையே??!!

Jayadev Das said...

\\உலகத் தமிழர்கள் கேட்க மாட்டார்களா? தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதையும் தூக்கி எறிந்த அரசு அதிமுக அரசு.\\ இது என்ன உங்க கழக தலைமைப் பொறுப்பு மாதிரியா உங்க இஷ்டத்துக்கு வேண்டியவங்களுக்கு கொடுத்தது மாதிரி, வேண்டிய தேதியில் வைக்க. காலம் காலமாக இருந்ததை மாத்தா நீங்க யாரு?

Jayadev Das said...

\\தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு என்றால் அவற்றை அவமதிக்கும் போக்கு - அண்ணா பெயரில் இருக்கக் கூடிய ஒரு கட்சி - ஓர் ஆட்சியில் இருக்கலாமா? தமிழர்கள் சிந்திப் பார்களாக!\\ அதென்னது டார்வின் தியரியில் தமிழ்க் குரங்குகள் என்று தனியாக இருந்து தமிழ் இனம் உருவானதாக சொல்லப் பட்டுளதா? குறுகிய சிந்தனையில் இருந்து திருந்தி வெளியே வரமாட்டீர்களா?

தமிழ் ஓவியா said...

மோடிவித்தை!

இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல், அயூப்கான் சைவ உணவகம், காந்தியார் சாராயக் கடை, அன்னை தெரசா பயில்வான் கூடம்; திருவிக சுருட்டுக்கடை, சீனிவாச அய்யங்கார் கசாப்புக் கடை என்றெல்லாம் பெயர் இருந்தால் சிரிப்பு மட்டுமா வரும்? அடுத்த நொடியில் எரிச்சல்கூட பீறிட்டுக் கிளம்பும்.

இப்பொழுது ஒரு செய்தி குஜராத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மணல் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி குஜராத் காந்திநகரில் காந்தி யாருக்குப் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்படும் என்பதுதான் அந்தச் செய்தி.

பரவாயில்லையே. நற்செய்தி தானே இதில் என்ன பிரச்சினை என்ற வினா எழக்கூடும்;

இந்த அறவிப்பைக் கொடுத்தவர் யார் என்பதுதானே முக்கியம். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடிதான். (மோடி வித்தை என்பது இது தானோ!) இந்த அறிவிப்புக்குச் சொந்தக்காரர்.

இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல் என்பதோடு இப்பொழுது இதனைப் பொருத்திப் பார்த்தால் உண்மை பட்ட வர்த்தனமாகப் புலப்பட்டு விடுமே!

பகவத் கீதையிலிருந்து சுலோகத்தை எடுத்துக்காட்டி காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்திய நாதுராம் கோட்சே கதை ஒருபுறம் இருக்கட்டும்.

நாட்டில் நல்லவர், வல்லவர் என்று பீற்றிக் கொள்ளும் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்தக் கூட்டம் மும்பை, டில்லி போன்ற முக்கிய நகரங்களில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்களே நினைவிருக்கிறதா?

மை நாதுராம் கோட்சே போல்தா என்பதுதான் அந்த நாடகத்தின் பெயர். நான் தான் நாதுராம் கோட்சே பேசுகிறேன் என்பது தலைப்பு.

நான் காந்தியார் என்ற மனிதனைக் கொல்லவில்லை; காந்தியார் என்ற அரக்கனைக் கொன்றேன் என்று அந்த நாடகத்திலே கோட்சே கூறுகிறான். காந்தியாரைக் கொன்ற கோட்சே மகான் என்பது தான் அந்த நாடகத்தின் அடிநாதம் உச்சகட்டம் .

இந்தக் கூட்டம் காந்தியாருக்கு உலகப் பல பகுதிகளிலிருந்தும் மண்ணையும், தண்ணீரையும் கொண்டு வந்து பிரம்மாண்ட நினைவுச் சின்னம் எழுப்புகிறது என்றால் இதன் பொருள் என்ன?

படிப்பவர் புத்திக்கே விட்டு விடுவோம்!

---------------- மயிலாடன் அவர்கள் 29-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

தமிழ் ஓவியா said...

இந்து மத ஆட்சியா?

தமிழ்நாட்டில் இந்து மத ஆட்சியா நடக்கிறது? டிசம்பர் 24ஆம் தேதி வைகுந்த ஏகாதசியாம். வைஷ் ணவர்களால் பெரிதும் கொண்டாடப்படும் விழா இது.

ஸ்மார்த்தர்கள் சிவராத்திரி கொண்டாட வில்லையா? இவர்களுக்குள் இது போட்டிக் கடை அது எப்படியோ தொலைந்து போகட்டும்.

வைகுந்த ஏகாதசி சிவராத்திரி கொண்டாடும் பக்தர்கள் நேரிடையாக சொர்க்கத்துக்கே போகட்டும்!

(அந்த நாள்களில் விரதம் இருந்து கொண்டாடு வோர் திரும்பி வர மாட்டார்கள். அவர்கள் சொர்க்கத்திற்குப் போய் விடுவார்கள் என்பது உண்மையாகுமானால் ஒரே ஒரு பக்தராவது கோயில் பக்கம் செல்லுவாரா? என்பது வேறு விடயம்)

இப்பொழுது என்ன பிரச்சினை? சிறீரங்கத்தில் நடக்கவிருக்கும் அந்தக் கோயில் விசேடத்துக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கூடிப் பேசி இருக்கிறார்கள். பக்தர்கள் அதிகம் வரக் கூடும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை, வசதிகளைச் செய்து கொடுப்பது குறித்து விவாதித்துள்ளனர். அதெல்லாம் சரி தான், ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையும்கூட!

ஆனால் வெளியில் வந்திருக்கும் சேதி அதிர்ச்சி தரக் கூடியதாகும். அந்த நாளில் சிறீரங்கம் வருவோர்க்குப் பேருந்தில் கட்டணம் கிடையாதாம்.

அது எப்படி என்று தெரியவில்லை. எந்தச் சட்ட விதியின்கீழ் மாவட்ட ஆட்சியர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்பதை விளக்க வேண்டும்.

வைகுந்த ஏகாதசி மட்டும் நெய்யில் பொரித்ததா? மற்ற மற்ற மதக்காரர்களும் ஏன், இந்து மதத்திலேயே இன்னொரு பிரிவுக்காரர்களும் அந்த வாய்ப்பைக் கோர மாட்டார்களா?

பகுத்தறிவுவாதிகள் மதச் சார்பற்றவர்கள் எடுக்கும் விழாக்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் சென்றால் மாவட்ட ஆட்சியரின் நிலைப்பாடு சிக்கலுக்கு ஆளாகாதா?

பக்தர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுப்பது என்பது வேறு - இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று கூறுவது வேறு.

அரசு என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் அவ்வாறுதான் கூறுகிறது.

மதச் சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராதது என்பதாகும். எல்லா மதத்தையும் சமமாகப் பாவிப்பது என்பதெல்லாம் தவறான வியாக்கியானமே!

சிறீரங்கத்துக்கு மட்டும் அப்படி என்ன தனிச் சலுகை? முதல் அமைச்சர் தொகுதி என்பதாலா? இது உண்மையாக இருக்குமானால், அதுகூட பிற மதத்தவர்கள் மத்தியில் முதல் அமைச்சர் பற்றி கடும் அதிருப்தி ஏற்படத்தான் வழி வகுக்கும்.

முதல் அமைச்சரின் தொகுதி என்பதால் சட்டத்திற்கு உட்பட்டு கூடுதல் திட்டங்களைச் செயல்படுத்துவதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக முதல் அமைச்சர் அந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்பதற்காக ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக அதிகாரிகள் செயல்படத் துடிப்பது ஆபத்தானதாகும். ஒரு கட்டத்தில் நெருக்கடி அதிகமானால் அரசே அதிகாரிகளைக் கைவிட்டு விடும்.

தமிழ்நாடு எங்கும் (சென்னையைத் தவிர்த்து) வெளி மாவட்டங்களில் 16 மணிக்கு மேல் மின் தடை! ஆனால் சிறீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா நடக்கும் காலத்தில் மூன்று நாட்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுமாம்.

இது என்ன கேலிக் கூத்து! அங்கு அடித்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீமான் ரெங்கநாதனுக்குச் சக்தியிருந்தால் அந்த மூன்று நாட்களுக்குமே சூரியன் மறையாமல் பார்த்துக் கொள்ள வைக்கலாமே - காற்றையும் வீசச் செய்து புழுக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாமே - கொசுக் கடியில்லாமலும் காப்பாற்றலாமே!

பாவம், அவர் என்ன செய்வார்? கோயில் தீப்பற்றி எரிந்து சிறீரங்கநாதனே எரிந்து வெடித்துச் சிதறவில்லையா? வேறு சிலைதானே வடித்து வைக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டில் கல்வி வளர்ந்த சமுதாயத்தில் வாழ்கிறோம் என்று சொல்லுவதற்கே வெட்கப்படத்தான் வேண்டியுள்ளது.

அய்.ஏ.எஸ்., படித்து மாவட்ட ஆட்சியர் ஆனால் என்ன? பகுத்தறிவு வேலை செய்யவில்லையே! அரசமைப்புச் சட்டத்தையும் மதிக்கவில்லையே! மாவட்ட ஆட்சியர் முடிவை மாற்றாவிட்டால் எதிர் காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் பெருகிக் கொண்டே போகும். மாவட்ட ஆட்சியர் திண்டாடத் தான் நேரும்.30-11-2012

தமிழ் ஓவியா said...

கொல்லைப் புறவழி எச்சரிக்கை!



ஜாதி மறுப்புத் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதலருக்குப் பிறக்கும் ஒரு குழந்தை, தொடர்ந்து தன் தந்தையான ஜாதி அடையாளத்தை ஏற்கும் என்றால் என்ன பயன்? வெறும் இடஒதுக்கீடு சலுகை மட்டும் தானா? அப்படியானால் ஜாதி எப்படி ஒழியும்? என்ற வினாவை தினமணி (21.12.2012) நடு பக்கக் கட்டுரை ஒன்று தொடுத்திருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்கும் பொழுது அதில் பதுங்கியிருக்கும் பார்ப்பனீயத்தை புரிந்து கொள்ளலாம்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து தன் கருத்தைப் பதிவு செய்து வந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி தருமபுரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் சரி.

போடிப் பகுதியில் ஜாதிக்கலவரம் நடைபெற்றபோது தமிழ் நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் சரி, ஒரு கருத்தினைத் தெளிவாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர் என்று பதிவு செய்து, அவர் களுக்குக் குறிப்பிட்ட அளவுக்கு இடஒதுக்கீடு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

ஜாதி மறுப்புத் திருமணத்தில் இணைய ருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப் படும் இடஒதுக்கீட்டின் அளவு வளர்ந்து கொண்டே போக வேண்டும். ஜாதி அடிப்படையி லான இடஒதுக்கீட்டின் அளவு குறைந்து கொண்டு வர வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடாகும்.

தினமணியின் கட்டுரை இடஒதுக்கீட்டைக் குறை கூறுவதில் தன் கவனத்தைச் செலுத்து கிறதே தவிர, இப்படி ஒரு கருத்தைக் கூற வரவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இரண்டாவதாக தினமணி முன் வைக்கும் குற்றச்சாற்று - ஏற்கெனவே இடஒதுக்கீடு பெற்றுப் பயனடைந்து வசதியான நிலையில் உள்ளவர்கள் கலப்புத் திருமணத் தம்பதிகளின் குழந்தைகள்தான் இடஒதுக்கீடு சலுகையில் அதிக பலன் பெறுகின்றனர் என்பதைக் குற்றச்சாற்றாக முன் வைக்கிறது தினமணி.

இந்த வளர்ச்சிப் போக்கை வரவேற்க வேண்டுமே தவிர குறையாகக் கூறக் கூடாது. இதன் மூலம் ஜாதி மறுப்புத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து மகிழ்ச்சி அடையத்தானே வேண்டும்.

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த வருமான வரம்பு என்ற அளவுகோலை ஆதரிக்கும் சன்னமான இழை இதற்குள் ஓடுவதையும் கவனிக்கத் தவறக் கூடாது.

இதற்குள்ளே இருக்கும் தந்திரம் என்ன வென்றால், பிற்படுத்தப்பட்டவர்களில் தகுதி உடையவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்று கூறி அந்த இடங்களைப் பொது இடத்திற்கும் கொண்டு செல்வதாகும்.

மத்திய அரசு துறைகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர்க்கு அளிக்கப்பட்டு இருந்தும் பிற்படுத்தப்பட்டவர் கள் இன்னும் ஏழு விழுக்காடு இடங்களைத் தாண்டவில்லையே!

பொருளாதார அளவுகோலைத் திணித்து இந்த 7 சதவிகிதத்தில்கூட எட்ட முடியாத அளவுக்குத் தந்திரக் குழியை வெட்டும் வேலைதான் இது.

ஜாதி ஒழிப்பில் ஆர்வம் உள்ளவர்கள்போல் ஒரு பக்கத்தில் காட்டிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் இடஒதுக்கீட்டுக்குக் குழி பறிக்கும் எத்துவேலை இது.

இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்க்க முடியாது என்று உறுதிபட்ட நிலையில், அதனை கொல்லைப்புறமாக ஒழிக்கப் பார்க்கின்றனர் - எச்சரிக்கை! 22-12-2012

தமிழ் ஓவியா said...

நேர்மையான பேட்டியல்ல

தமிழ்நாடு பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான கோவை இராதாகிருஷ்ணன் அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

ஜாதிய அமைப்பு - மதவாத அமைப்புகளை அவர் கண்டிப்பதாகவும் கூறினார்.

என்ன காரணத்தாலோ பேட்டி கண்டவர் சில கேள்விகளை அவரிடத்தில் வைக்கத் தவறிவிட்டார்.

இந்து ராஷ்டிரம் அமைக்க இருப்பதாக அவர் களின் கட்சி வெளிப்படையாகக் கூறவில்லையா? மதச் சார்பின்மை பற்றி அக்கட்சியின் கொள்கை என்ன? என்ற வினாக்களைத் தொடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

சிறுபான்மையினர் பற்றிய அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்ற வினாவை நேரிடை யாகக் கேட்டிருக்க வேண்டாமா?

காதல்பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் தெளிவற்றவையாகவே உள்ளன. பெரும்பாலும் வன்னியர் சங்க நிறுவனர் கருத்தோடு உடன் கட்டை ஏறுவதாகவே இருந்தது.

குறிப்பிட்ட வயதில் காதல் வயப்படுவதுபற்றிக் குறை கூறியும் உள்ளார். குறிப்பிட்ட வயதில் வருவதுதான் காதல். இதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் கருத்து போல கூறுவது நல்ல நகைச்சுவையே.

பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் காதல் திருமணங்கள் நடக்க வேண்டும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமில்லாதது.

ஜாதிய சமூக அமைப்பில் பெற்றோர்கள் அதனைக் கடந்து வந்து பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று பெரும்பாலும் எதிர்பார்க்க முடியுமா?

யதார்த்தமான உண்மைகளை மறந்து பேசுவது - உள்ளுக்குள் இந்தப் பிரச்சினையில் அவர்களுக் குள் இருக்கிற குரோத உணர்வைத்தான் வெளிப்படுத்தும்.

தருமபுரியில் நடைபெற்ற காதல் திருமணம் என்பது இருபால் இளைஞர்களும் ஒருவரை ஒருவர் விரும்பி ஏற்றுக் கொண்ட திருமணம் ஆகும். நீதிமன்றத்தில் கேட்கப்பட்டபோதுகூட அந்தப் பெண் உறுதியாக காதலனை ஏற்றுக் கொண் டதைக் கணக்கில் கொள்ள வேண்டாமா?

திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து மணமகளின் தந்தையார் தற்கொலை செய்து கொண்டது - பல்வேறு அய்ய வினாக்களை எழுப்பியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட மணமகளின் தந்தையின் உடலை, மணமகன் வீட்டுக்குமுன் கொண்டு வந்து போட்டு வெறி உணர்ச்சியைத் தூண்டியது எந்த நோக்கத்தில் என்பதை எளிதிற் புரிந்துகொள்ளலாம்.

இன்னொன்றையும் இந்த இடத்தில் குறிப் பிட்டே தீர வேண்டும். நாமக்கல் வட்டாரத்தில் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த சில பிரமுகர்கள் கூறிவரும் கருத்தின் எதிரொலியையும், கோவை இராதாகிருஷ்ணன் அவர்களின் குரலில் கேட்க முடிந்தது.

வன்முறையில் பி.ஜே.பி.க்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னது - அவரது பேட்டியிலேயே உச்சகட்டமான நகைச்சுவை!

1992 டிசம்பர் 6இல் அயோத்தியில் 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை இடித்த வர்கள் யார்?

பிஜேபியின் முக்கிய பெருந்தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர் களின் வழிகாட்டுதலில் அந்த வன்முறை அரங்கேற்றப்படவில்லையா?

அவர்கள்மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் பிரிவுகள் (இபிகோ) எத்தகையவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீதிபதி லிபரான் குழுவின் விசாரணை ஆணை யம் வாஜ்பேயி உட்பட 68 பேர்களைக் கொண்ட குற்றவாளிகள் பட்டியலை வெளியிட்டுள்ளதே.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்றுள்ள முக்கியமான - பிரபலமான வன்முறை களில் ஆர்.எஸ்.எஸ். சம்பந்தப்பட்டது. அதிகாரப் பூர்வமாகவே அறிவிக்கப்பட்டதே! இதுவரை மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர். எஸ்.எஸ். அல்லவா! அந்த ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்தானே பி.ஜே.பி.யின் பொதுச் செயலாள ராகவும் வர முடியும் என்பது கட்சியின் விதி.

இவற்றை எல்லாம் சாமர்த்தியமாக மூடி மறைக்கிறார் தமிழக முன்னாள் பி.ஜே.பி. தலைவர்.

பேட்டி கண்டவர் இன்னும் அழுத்தமான வினாக்களை எழுப்பி இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

வெறும் ஜாதி அணி சமூகநீதிக்குக் கைகொடுக்குமா?



சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், படைப் பாளிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பு கள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்குகொண்டு கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.

முக்கியமாக அந்தக் கூட்டத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் சாரம் என்று எடுத்துக்கொண்டால்,

1. ஜாதி அடிப்படையில் அரசியல் நடத்துவது ஆபத்தானது; அதன் அடிப்படையில் தேர்தல் கூட்டணி அமைப்பது சமுதாயத்தை ஜாதி அடிப்படையில் கூறு போடுவதாகும் - பிளவு ஏற்படுத்துவதும் ஆகும்.

2. காதல் என்பது இயற்கையாக அமையக் கூடியதாகும். அதனை எதிர்ப்பது - மறுப்பது என்பது பிற்போக்குத்தனமாகும். இதன்மூலம் இளைஞர்களின் கடுமையான எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும்தான் ஆளாக நேரிடும்.

3. உலகம் அறிவியல் துறையில் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொருவர் கையிலும் அலைப்பேசி வந்தாகிவிட்டது. இணைய தளம், மடிக்கணினி என்று உலகம் வாயு வேகத்தில் முன்னேற்றத் திசையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துதான் காதல் புரியவேண்டும் என்ற நிலை இல்லை. அலைப்பேசி மூலமாகவும் நடந்துவிடுகிறது. அலைப்பேசியைத் தடை செய்யவேண்டும் என்று கூறப் போகிறார்களா?

4. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள். காரணம் ஜாதி கலப்பு ஏற்பட்டுவிடுமே என்ற அச்சம்; ஜாதி - வர்ணதர்மத்தைக் காப்பாற்றுவது என்பதுதான் சங் பரிவார்களின் அடிப்படைக் கொள்கை யாகும். அதே உணர்வோடு பா.ம.க. செயல்படுவது இந்துத்துவா மனப்பான்மை கொண்டதாகும்.

5. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மை மக்களை இணைத்து ஓர் அணியை உண்டாக்க இருப்பதாகக் கூறிக் கொண்டிருந்த பா.ம.க. தலைவர் இப்பொழுது அதிலிருந்து முரண்பட்டு, வெறும் ஜாதிய அமைப்புகளோடு அணி ஒன்றை வரவேற்பது கொள்கை ஏதும் அற்ற சிந்தனையைத்தான் வெளிப்படுத்தும்.

6. சமூகநீதி என்று வரும்பொழுதுகூட தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந்து போராடும் பொழுதுதான் அதன் பலனை ஈட்ட முடியும். அதைவிட்டு ஜாதிக்கட்சிகளை இணைத்துக் கொண்டு எப்படி உரிய உரிமையினை அடைய முடியும்? தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் என்று சொன்னால், அது அகில இந்திய அளவில் அதன் பிரதி பலிப்பைக் காண முடியும். அதை விட்டுவிட்டு தமிழ்நாடு அளவில் ஜாதிகளை இணைத்து எதனைச் சாதிக்க முடியும்?

இதில் இன்னொரு உண்மையும் கவனிக்கத்தக்க தாகும். மாநில அளவைப் பொறுத்தவரையில் ஓரளவு இட ஒதுக்கீட்டின் சதவிகிதத்தை பெற்று இருக்கிறோம். 50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்று இருந்த சட்ட நிலையையும் கடந்து 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப்படியே தமிழ்நாட்டில் உறுதி செய்யப் பட்டுள்ளது. அதற்காக திராவிடர் கழகம் அளித்த பங்களிப்பு உலகம் அறிந்ததே.

இப்பொழுது பிரச்சினையே மத்திய அரசுத் துறை களிலும், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டில் உரிய சதவிகிதத்தைப் பெறுவதுதான்; அகில இந்திய அளவில் அதன் தாக்கத்தை உருவாக்குவதற்கு ஜாதி அமைப்புகள் பயன்படுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு என்ற பிரச்சினை முதற்கட்டமாக தாழ்த்தப்பட்டவர்கள் பெறுவதற்கே பெரும் பாடுபடவேண்டியுள்ளது. அடுத்து பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தவேண்டுமானால் கண்டிப்பாக தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந் தால்தான் வெற்றி கிட்டும்.

சமூகநீதிபற்றிப் பேசும் பா.ம.க. நிறுவனர் இது குறித்தும் சிந்திக்க வேண்டியவர் ஆவார்.

7. தமிழ்த் தேசியம்பற்றி ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டு அதில் தாழ்த்தப்பட்டவர்களை இணைக்கா விட்டால் அது என்ன தமிழ்த் தேசியம்? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பேசும் தமிழ்த்தேசியவாதிகள் பா.ம.க. நிறுவனரின் இந்த நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வகையில் கருத்தும் போதுமான அளவில் தமிழ்த் தேசியவாதிகளால் தெரி விக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள் பதற்றப்படாமல், உணர்ச்சி வயப்படாமல், சமூகநீதிக் களத்தில் கைகோர்க்க பா.ம.க.விற்கு அழைப்புக் கொடுத்தது அவரது முதிர்ச்சியைக் காட்டக்கூடியதாகும்.

தனிமைப்பட்டுப் போகாமல் பா.ம.க. நிறுவனர் சிந்திப்பாராக!

தமிழ் ஓவியா said...

பொங்கலில் தமிழ்ப் புத்தாண்டு!


முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்

இனிய பிஞ்சுகளே...

ஆண்டு 2013 பிறந்துவிட்டது. இது உலகின் பொது ஆண்டு. உலகம் முழுதும் கொண்டாடும் ஒரே விழா. இனம் மறந்து, மதம் மறந்து,நாடு மறந்து,ஜாதி மறந்து உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் விழாவாக இருக்கிறது. நாமும் கொண்டாடுகிறோம்.

சரி, தமிழர்களுக்கென ஒரு புத்தாண்டு வேண்டுமல்லவா...?அதற்காகத்தான் தமிழறிஞர்கள் மறைமலை அடிகள் தலைமை யில் ஒன்றுகூடி தை மாதமே தமிழர்க்குப் புத்தாண்டு என அறிவித்தார்கள். அந்தத் தமிழ்ப்புத்தாண்டுக் கணக்கை திருவள்ளுவரின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுத்தார்கள். அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் பிறந்திருக்கவேண்டும் எனக் கணக்கிட்டு, தமிழ்ப் புத்தாண்டை உருவாக்கினார்கள்.

அந்தவகையில் வரும் தை மாதம் தொடங்கும் தமிழ்ப் புத்தாண்டு 2044 ஆகும். (அதாவது2013+31=2044)

ஆனால், நம் மக்கள் கொண்டாடிவரும் தமிழ் வருஷப்பிறப்பு சித்திரை மாதத்தைத் தொடக்கமாகக் கொண்டது.அதற்கு சொல்லப் படும் கதையும் ஆபாசமானது. ஏனென்றால் அது தமிழர்களின் கதை அல்ல;மாறாக ஆரியப் பார்ப்பனர்கள் சொல்லிய கதை,நம் மக்கள் மீது புகுத்திய கதை. அதனால்தான் அத்தனை ஆபாசம்.

சித்திரையில் கொண்டாடும் புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்றுகூடச் சொல்வதில்லை. எப்படிச் சொல்கிறார்கள் தெரியுமா? வருஷப் பிறப்பு.இந்த வார்த்தையைக் கவனியுங்கள். வருஷம் என்பது தமிழ் அல்ல; ஆண்டு என்பதுதான் தமிழ்.ஆண்டு என்னும் தமிழே இல்லாமல் ஆரிய வட மொழியில் வருஷம் எனச் சொல்லப்படுவது எப்படித் தமிழ்ப் புத்தாண்டாக இருக்க முடியும்? அதுமட்டுமா? அந்த வருஷங்களின் பெயர்களில் ஒன்றாவது தமிழ்ப் பெயர் உண்டா?

பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீ முக, பவ, யுவ, தாது, ஈஸ் வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார் வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதார ண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய இந்தப் பெயர்களில் ஒன்றாவது தமிழ்ப் பெயரா? நம் வாய்க்குள்தான் நுழைகிறதா?

பெயர்களிலேயே தமிழ் இல்லை; பின் எப்படி அது தமிழ்ப் புத்தாண்டாக முடியும்?

நம் மக்கள் ஆரிய மத வலையில் வீழ்ந்தபோது அவர்களால் புனையப்பட்டதே சித்திரையில் தொடங்கும் வருஷப் பிறப்பு. இந்நிலையில் இந்த இழிநிலையைப் போக்க தமிழ் ஆய்ந்த புலவர் பெருமக்கள் வகுத்தளித்த திருவள்ளுவராண்டே நமக்குத் தமிழ்ப் புத்தாண்டு. இயற்கைக்கு நன்றி கூறும் விழாவாம் பொங்கல் விழாத் திங்களில் தொடங்கும் ஆண்டே தமிழ்ப்புத்தாண்டு எனக் கொண்டாடுவோம். தமிழின இழிவைத் துடைப்போம்.

- பிஞ்சு மாமா

தமிழ் ஓவியா said...

வேலைக்காரி


டில்லி, மும்பை, கொல் கத்தா, பெங்களூரு, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் கடந்த 15 நாட்கள்பற்றிய ஒரு கணிப்பு வெளி வந் துள்ளது.

அந்தக் கணிப்பை மேற்கொண் டுள்ள அமைப்பு அசொச் செம் என்பதாகும். 2500 பெண்களிடம் இந்த அமைப்பு ஆய்வு ஒன் றினை மேற்கொண்டுள் ளது.

கடந்த 15 நாட்களில் இந்நகரங்களில் 40 விழுக்காடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாம். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? இந் நகரங்களில் பணியாற் றும் பெண்களில் 80 விழுக்காட்டினர் சூரியன் மறைவதற்கு முன்ன தாகவே வீடு வந்து சேர்ந்து விடுவதுதான்.

பெண்கள் மீதான வன்முறை என்பது தனிப் பட்ட பிரச்சினையல்ல. ஒட்டு மொத்தமான சமூ கப் பிரச்சினை. நாட்டின் பொருளாதாரத்தை, உற்பத்தியைப் பறிக்கச் செய்யும் பிரச்சினை என்பது இதன் மூலம் தெரிகிறதா - இல்லையா!

ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் என்ன சொல்லுகிறார்? ஆண்கள் வெளி வேலை களைப் பார்த்துக் கொள் வார்களாம் -பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். இது ஓர் ஒப்பந்தமாம். பெண்கள் அந்த ஒப்பந்தத்தை மீறுவ தால் தான் இந்தப் பிரச் சினையே ஏற்படுகிறதாம்.

இதற்குள் குடி கொண்டிருந்த இந்துத்துவா மனப்பான்மை பளிச் சென்று வெளிப்படுகிறதா இல்லையா?

பெண்கள் என்றால் கூலி பெறாத சமையற் காரி என்பதுதானே இந்துத்துவாவின் கோட்பாடு? ஓர் ஆணுக்கு ஒரு சமையற்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கத்திற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை - ஓர் ஆணின் கண் அழ கிற்கு ஓர் அழகிய அலங் கரிக்கப்பட்ட பொம்மை - என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படு கிறார்கள்? பயன்படுத் தப்படுகிறார்கள்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் (குடிஅரசு 27.1.1946 பக்கம் 2) என்றாரே தந்தை பெரி யார்.

அதனை இந்த மனு தர்ம சுவீகாரப் புத்திரர்களின் கூற்றோடு, கணிப் போடு பொருத்திப் பாருங் கள். புரியும் பெரியார் கூறும் பொருளின் ஆழம்! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...

சனவரி 12 - ஆர்ப்பாட்டம் ஏன்?


அந்தக் காலத்து மனு முதல் இந்தக் காலத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்வரை பார்ப்பனர்களின் சிந்தனையில் எந்தவித மாற்றமும் இல்லை, இல்லை.

மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி, அவர்களைப் புணருகிறார்கள். (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 9; சுலோகம் 14).

பெண்கள் பெரும்பாலும் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
(மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 9; சுலோகம் 19).

இந்த மனுவின் சிந்தனையிலிருந்து இதுவரை எந்தப் பார்ப்பனர் விலகி நிற்கிறார்? சொல்லுங்கள் பார்ப்போம்!

திருவாளர் துக்ளக் சோ ராமசாமி இன்றுவரை தொடர்ந்து மனுதர்மத்திற்குப் பூச்சூட்டி ஒவ்வொரு வாரமும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வருகிறார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரெங்கநாத் மிஸ்ரா பேசினாரே - நினைவில் இருக்கிறதா?

பிரம்ம குமாரிகள் மாநாட்டில் (8.11.1990) அவ்வளவுப் பெரிய பதவியில் இருந்தவர் உதிர்த்தது என்ன தெரியுமா?

Women should go back to their homes and not think of competing with men on everything.

Since the lady is more capable of building the home, What is necessary that there must be a switch over from office to the home.

பெண்கள் வீட்டு வேலைகளை நிருவாகம் செய்வதில் திறமை உள்ளவர்கள் ஆதலால், அவர்கள் அரசு அலுவல்கள் பணிகளிலிருந்து விடுபட்டு அவரவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் பணியில் ஈடுபடவேண்டும். எதற்கெடுத்தாலும் ஆண்களோடு போட்டிப் போடும் மனோபாவத்தைக் கைவிடவேண்டும்!

- என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கக் கூடியவர் பேசினாரே!

இப்படி அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே பேசினார் என்றால், சட்டத்தையும் தாண்டி அவாளின் பூணூல் பேசுகிறது என்றுதானே பொருள்!

அதனைக் கண்டித்து கண்டனப் பேரணிகள் நடத்திட கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டாரே! அவரைப் பதவி விலகச் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுக்குழுவில் (24.11.1996) தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதே! எப்பொழுதெல்லாம் பெண்களுக்கு எதிராகப் பிரச்சினைகள் எழுகிறதோ அப்பொழுதெல்லாம் எரிமலையாவது திராவிடர் கழகம் மட்டுமே!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய அதையேதான் - அப்படியே நகலெடுத்து இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருக்கக் கூடிய பார்ப்பனரான மோகன் பகவத்தும் வாந்தி எடுக்கிறார்.

தந்தை பெரியார் பிறந்த மண் - இந்தப் பிற்போக்குவாதிகளின் முகத்திரையைக் கிழிக்கவேண்டாமா?

அதற்காகத்தான் வரும் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

சென்னை, திருச்சி, கோவை, திருவாரூர் மாவட்டங்களில் மண்டல அளவில் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

பெரியார் பிறந்த மண்ணின் உக்கிரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளட்டும்! திராவிடர் கழகத்தின் தீச்சுடர் எத்தனை டிகிரி என்பதையும் புரிய வைப்போம்! புரிய வைப்போம்!!

ஆயத்தமாவீர், தோழர்களே! (ஆண் - பெண் இருபாலரையும் சேர்த்துத்தான்!). 9-1-2012

தமிழ் ஓவியா said...


கருநாடகா தனி நாடா?


சென்னை சேப்பாக்கத்தில் டெல்டா விவசாயி கள் நடத்திவரும் பட்டினிப் போராட்டத்தின்போது கருநாடகா இந்தியாவில் இருக்கிறதா அல்லது தனி நாடா? என்ற வினா எழுப்பப்பட்டது.

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.----பெரியார் (குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


கலைஞர் பேட்டி: சில தேன் துளிகள்


கேள்வி: தந்தை பெரியாருக்கு இலக்கிய ஈடுபாடு எந்த அளவுக்கு இருந்தது? அவர் மிகவும் விரும்பிப் படித்த நூல் எது?

கலைஞர்: திருக்குறள் மாநாடு நடத்திடும் அளவுக்கு பெரியாருக்கு இலக்கிய ஈடுபாடு இருந்தது. அவர் மிகவும் படித்த நூல்கள் இராமாயணமும், மகாபாரதமும், இதிகா சங்களும் தான்; ஆனால் விரும்பிப் படித்த நூல்கள் என்று கூற முடியாது. அவற்றிலே உள்ள மூடநம்பிக்கை மற்றும் பகுத்தறிவுக் கொவ்வாத குறிப்புகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி மாய வலையிலிருந்து மக்களை விடு விப்பதற்காகத்தான் அந்த நூல்களையெல் லாம் திரும்பத் திரும்பப் படித்தார்.

கேள்வி: உங்கள் அண்மைக்கால படைப்பு களில், ஆன்மீக வாசனை லேசாக வீசுகிறதே, இது நீங்கள் அறிந்தே வருகிறதா? அறியாமல் வருகிறதா?

கலைஞர்: ஆன்மீக வாசனை லேசாகவும் இல்லை; பலமாகவும் இல்லை. இருக்கவும் இருக்காது. கேள்விக்கு காரணம்; புரிதல் பிழையாக இருக்கலாம்.

கேள்வி: தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் நீங்கள் சாதீயத்துக்கு எதிரான சிந்தனைகளை விதைத்து, தமிழ் மண்ணை சலவை செய்தீர்கள். அப்படியிருந்தும் இன்று சிலர் காதல் திருமணங்கள் கூடாது என்கிற குரலை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்களே, இது எதைக் காட்டுகிறது?

கலைஞர்: சுயநலத்தால் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மையைக் காட்டுகிறது. இது விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது. இந்த விரக்தி விரைவிலேயே கரைந்து போகும்.

நன்றி: முரசொலி, 9.1.2013

(இனிய உதயம் திங்களிதழுக்கு கலைஞர் அளித்த பேட்டி)

தமிழ் ஓவியா said...


பெரியார் ஆயிரம் வினா-விடை தொகுப்பு கி.வீரமணி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிற இதழிலிருந்து

பெரியார் ஆயிரம் வினா-விடை தொகுப்பு கி.வீரமணி

எல்லாவற்றையும் கேள்வி கேட்டவர் பெரியார். அவரைப் பற்றிய கேள்விகள் இவை. அவரது 95 வயது வாழ்க்கையைப் பற்றிய வினாக்கள் தொகுக்கப்பட்டு, அதற்கான பதில்கள் நிரம்பிய புத்தகம் இது.

அவர் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று பாரதிதாசன் எழுதினார்.

குழந்தைப் பிறப்பை கடவுளின் பாக்கியம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்த காலத்தில், பிள்ளைப்பேறுக்கு ஆண், பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக (பொலிகாளைகள் போல் தேர்ந்தெடுத்து) மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி குழந்தைகளை பிறக்கச் செய்யலாம் என்று அவர் சொல்லி 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் டெஸ்ட் டியூப் பேபி பிறந்தது.

கம்பி இல்லாத் தந்தி சாதனம் அனைவர் சட்டைப் பையிலும் இருக்கும். ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் இருக்கும். உருவத்தை தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும் என்று அவர் எப்போதோ சொன்னார். இன்று கம்ப்யூட்டர், செல்போன், டோங்கோ வசதியை அனைவரும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். அத்தகைய தீர்க்கதரிசியை முழுமையாக அறிந்து கொள்ள வழிகாட்டியாய் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது

மிக மிக நீண்டது பெரியாரின் வரலாறு. அவரே சொல்லி இருப்பதுபோல, தான் வாழ்ந்த காலத்தில் அனைத்தையுமே அவர் எதிர்த்து இருக்கிறார். நான் எதையாவது எதிர்க்காமல் இருந்திருக்கிறேனா என்று யோசித்துப் பார்க்கிறேன். எதுவுமே எனக்குப் புலப்படவில்லை என்கிறார். அப்படிப்பட்டவரின் குடும்ப வாழ்க்கை, காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து நடத்திய வைக்கம் சேரன்மாதேவி, காஞ்சிபுரம் மாவட்டங்கள், சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், அதன் தத்துவங்களாக முன்மொழியப்பட்ட கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு, மத நிராகரிப்பு போன்ற கனமான விஷயங்களை எளிமையான கேள்வி, பதில் வடிவில் திரட்டிக் கொடுத்துள்ளனர். பெரியாரின் சிந்தனைகளை திராவிடர் கழகம் ஏராளமான தொகுதிகளாக வெளியிட்டு உள்ளது. அவரது வரலாற்றை கவிஞர் கருணானந்தம் நாள் வரிசைப்படி பெரும் தொகுதியாக வெளியிட்டார். இரண்டு பகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார் கி.வீரமணி.

இவை அனைத்தையும் ஒரு சேரப் படித்தால் உணர முடிகிற அனைத்துத் தகவல்களும் இந்தச் சிறு புத்தகத்தில் கேப்சூல் வடிவில் தரப்பட்டுள்ளது.

மார்க்ஸும் ஏங்கெல்ஸும் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந் திய மொழிகளில் முதலில் எந்த மொழியில் (தமிழில்) வெளியிடப்பட்டது என்பது முதல் பெரியாருக்குப் பிடித்தமான நொறுக்குத் தீனி எது (எள்ளுருண்டை!) என்பது வரை இருக்கும் 1,000 கேள்விகளும் கடந்த 100 ஆண்டு தமிழக அரசியலைப் படிக்கத் தூண்டும் நல்ல கேள்விகளாகவே அமைந்துள்ளன. பெரியாரின் கண்ணாடியில் கடந்த காலத்தைக் காட்டுகின்றன!

- புத்தகன்


நன்றி : “ஜூனியர் விகடன் 9.1.2013

தமிழ் ஓவியா said...


வீதிக்கு வாருங்கள் வீராங்கனைகளே!


பெண்களை இழிவுபடுத்துவது - கொச்சைப்படுத்துவது என்பது பார்ப் பனர்களின் குருதியில் கலந்துவிட்ட கேவலமான சமாச்சாரம்.
பெண்களுக்கு வேதம் ஓத உரிமை கிடையாது என்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணை மேடையிலிருந்து விரட்டிய பூரி சங்கராச்சாரியாரின் கொடும் பாவியைத் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத் தோழர்கள் எரித் ததுண்டு. (17.2.1994) தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி உட்படத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கில் ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக இப்பொழுது அலைந்து கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன இலேசுப்பட்ட பேர் வழியா?

விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமமானவர்களே என்று தினமணி தீபாவளி மலருக்குப் பேட்டி கொடுத்தவர் தானே!

வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று கெட்ட வார்த்தை பேசியவர்தானே!

காஞ்சிபுரம் மடத்தின்முன் சகோதரி திருமகள் தலைமையில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதே!

மகளிரணி சகோதரிகள் புலிவலம் இராசலட்சுமி மணியம், ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், கு. தங்க மணி, அ. சித்ரா காஞ்சி ஜெயச்சுந்தரி, மு. மாலதி என்று பெரிய மகளிர் பட்டாளமே கிளர்ந்து எழுந்ததே! (9.3.1998).

விதவைப் பெண்களை தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டதற்காக தினமணியில் (12.1.1998) பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கண்டித்து சிறப்புக் கட்டுரை எழுதி னாரே.

ஹிட்லரும், சங்கராச்சாரியாரும் என்று தலைப்பிட்டு இந்தியா டுடே! இதழில் கண்டித்து எழுதினாரே பிரபல எழுத்தாளர் வாஸந்தி.

பிரதமர் இந்திரா காந்தி கணவரை இழந்தவர் என்பதற்காக மறைந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கிணற் றுக்குப் பக்கத்தில் (தோஷம் கழிப்ப தற்காகவாம்!) உட்கார வைத்துப் பேசவில்லையா?

திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரை அவ்வப்பொழுது சாட்டையடி கொடுத்துக் கொண்டு தானிருக் கிறது.

ஆனாலும் அவாளின் குருதியில் கலந்துவிட்ட இந்துமதச் சாக்கடை என்னும் துரு நாற்றத்திலிருந்து வெளியேறத் தயாராக இல்லை.

ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருந்த குப்பஹள்ளி சீத்தாராமையா சுதர்ஸன் (சுருக்கமாக கே.எஸ். சுதர்ஸன்) பி.ஜே.பி.யின் அனல் பேச் சாளர் என்று கூறப்படும் உமாபாரதி, அக்கட்சியிலிருந்து விலகிய நேரத் தில் என்ன சொன்னார் தெரியுமா?

அந்தப் பெண்ணின் குடும்பம் - வளர்ப்பு முறை சரியில்லை என்று ஜாதி உணர்வுடன் கூறவில்லையா?

அதனைக் கண்டித்து உமாபாரதி யின் உடன்பிறப்பு கன்யாலால் கருத்துச் சொல்லவில்லையா? (தி இந்து 12.4.2005 பக்கம் 11)

சுதர்சனையடுத்து ஆர்.எஸ். எஸின் தலைவராக இப்பொழுது இருக்கக் கூடிய மோகன்பகவத் அதே பாணியில் பெண்கள் வீட்டு வேலைக் குத்தான் லாய்க்கு - அதிலிருந்து பிறழ்வதால்தான் பெண்கள் மீதான வன்முறை நடக்கிறதாம் - சொல் கிறார் அரை டவுசர்!

இந்த அறிவுரையை அவாளின் அக்ரகாரத்துப் பெண்மணிகளிடம் சொல்ல வேண்டியதுதானே!

நீதிபதிகளாகவும், டாக்டர்களாக வும், அய்.ஏ.எஸ்.களாகவும், ஏ.ஜி. அலுவலகத்திலும், வருமான வரித்துறையிலும், சுங்கத் துறையிலும் - மிக முக்கியமான அலுவலகங்களி லும், அய்.டி.அய்.களிலும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் அக்கிரகாரப் பெண்களே - வெளியில் வாருங்கள் - ஒழுங்காக வீட்டுக்குள்ளிருந்து புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் சமைச்சிக் கொட்டுங்கள் - கரண்டி பிடிக்க வேண்டிய கைகள் ஏன் பேனா பிடிக்க வேண்டும் என்று கேட்க வேண்டியதுதானே!
அக்கிரகாரப் பெண்களிடம் கேட்டால் தெரியும் சேதி அப்பொழுது!

ஒருக்கால் தாழ்த்தப்பட்ட, சமூகப் பெண்களும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் இப்பொழுதெல்லாம் படிக்கிறார்களே. உத்தியோகம் பார்க்கிறார்களே என்ற ஆத்திரத்தில் அக்கிரகார ஆர்.எஸ். எஸ்., தலைவரின் பூணூல் துடிக் கிறதோ!

கருஞ்சட்டைக் குடும்பங்கள் (இரு பாலரும்) நாளை மறுநாள் (12.1.2013) வீதிக்கு வாருங்கள்! வாருங்கள்!! வேதியர் கூட்டத்தின் வீண் வம்புக்குப் பதிலடி கூறுங்கள்! கூறுங்கள்!! (ஆர்ப்பாட்ட முழக்கம் 3ஆம் பக்கம் காண்க)

தமிழ் ஓவியா said...


முழக்கங்கள்!
சனவரி 12 - ஆர்ப்பாட்டம் ஏன்?

(பெண்கள் வீட்டு வேலைக்குத்தான் லாயக்கென்று கொச்சைப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக வத்தின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!) (12.1.2013)

1. வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!

2. வாழ்க வாழ்க வாழ்கவே!
அன்னை மணியம்மையார் வாழ்கவே!

3. வாழ்க வாழ்க வாழ்கவே!
தமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே!

4. வெல்க வெல்க, வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

5. வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
பெண்ணுரிமைப் புரட்சி
பெண்ணுரிமைப் புரட்சி
வெடிக்கட்டும், வெடிக்கட்டும்

6. பெண்கள் என்றால் பேதைகளா?
ஆண்கள் கண்ணில்
ஆண்கள் கண்ணில்
போதைகளா, போதைகளா?

7. கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
வீட்டு வேலைக்கே
வீட்டு வேலைக்கே
பெண்கள் லாயக்கென்று பெண்கள் லாயக்கென்று
கொச்சைப்படுத்தும் கொச்சைப்படுத்தும்
ஆர்.எஸ்.எஸ். தலைவர்
ஆர்.எஸ்.எஸ். தலைவர்
மோகன் பகவத்தை
மோகன் பகவத்தை
கண்டிக்கிறோம்
கண்டிக்கிறோம்!

8. வேலைக்காரியா -
வேலைக்காரியா?
கூலிப் பெறாத
கூலிப் பெறாத
வேலைக்காரியா-
வேலைக்காரியா?
பெண்கள் வேலைக்காரியா-
வேலைக்காரியா?

9. சமையல்காரியா -
சமையல்காரியா?
சம்பளம் இல்லாத
சம்பளம் இல்லாத
சமையல்காரியா?
சமையல்காரியா?
பெண்கள் சமையல்காரியா-
சமையல்காரியா?

10. ஒழிக ஒழிக ஒழிகவே!
பெண்களை இழிவுபடுத்தும்
பெண்களை இழிவுபடுத்தும்
மனுதர்ம சாஸ்திரம்
மனுதர்ம சாஸ்திரம்
ஒழிக, ஒழிக, ஒழிகவே!

11. கொளுத்துவோம், கொளுத்துவோம்!
மனுநீதியை மனுநீதியை
கொளுத்துவோம், கொளுத்துவோம்!
பேயென்று பேயென்று
பெண்களை பெண்களை
சாற்றுகின்ற சாற்றுகின்ற
சாத்திரங்களை சாத்திரங்களை
கொளுத்துவோம்! கொளுத்துவோம்!
கொள்கைத் தீயால், கொள்கைத் தீயால்
கொளுத்துவோம்! கொளுத்துவோம்!

12. வேண்டும் வேண்டும்
இடஒதுக்கீடு இடஒதுக்கீடு
பெண்களுக்கு பெண்களுக்கு
50 விழுக்காடு, 50 விழுக்காடு
வேண்டும், வேண்டும்!

13. கடவுளின் பேராலே, கடவுளின் பேராலே
மதத்தின் பேராலே, மதத்தின் பேராலே
சாத்திரத்தின் பேராலே, சாத்திரத்தின் பேராலே
போட்டிடும் தடைகளை
போட்டிடும் தடைகளை, பூட்டிடும் விலங்குகளை, பூட்டிடும் விலங்குகளை
உடைப்போம், உடைப்போம்
உறுதியாய் உடைப்போம்-
உறுதியாய் உடைப்போம்!

14. தடை செய், தடை செய்!
விளம்பரம் என்ற பேராலே
விளம்பரம் என்ற பேராலே
பெண்கள் உடலை, பெண்கள் உடலை
வணிகப்படுத்தும், வணிகப்படுத்தும்
விளம்பரங்களை, விளம்பரங்களை
தடை செய்! தடை செய்!!

15. கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
பெண்களை இழிவுபடுத்தும்
பெண்களை இழிவுபடுத்தும்
இந்துத்துவா வாதிகளை
இந்துத்துவா வாதிகளை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!

16. வேண்டும் வேண்டும்
துப்பாக்கி வேண்டும்
துப்பாக்கி வேண்டும்

17. மத்திய அரசே, மாநில அரசே
அனுமதி கொடு, அனுமதி கொடு!
துப்பாக்கிக்கு அனுமதி கொடு!

18. பயிற்சி கொடு, பயிற்சி கொடு
பள்ளிகளில் பள்ளிகளில்
பெண்களுக்கு, பெண்களுக்கு
பயிற்சி கொடு, பயிற்சி கொடு!
கராத்தே பயிற்சி கொடு -
கராத்தே பயிற்சி கொடு!

19. வாழ்க, வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!

20. வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

21. வெடிக்கட்டும், வெடிக்கட்டும்
பெண்கள் புரட்சி, பெண்கள் புரட்சி!
வெடிக்கட்டும், வெடிக்கட்டும்!

- திராவிடர் கழக மகளிரணி -மகளிர் பாசறை