Search This Blog

20.1.13

பெரியார் பற்றி தினமலர்

ஈ.வெ.ரா. 25 ஆயிரம் ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு, நீதிமன்றத் திற்குப் போய் இதோ பணம் இருக்கிறது... என்று சொன்ன சம்பவம் ஒன்று நடந்தது. என்.எஸ்.கிருஷ்ணனுக்கு, ஒரு வழக்கில் தண்டனை கொடுத்து விட்டனர் (1945). அன்று தீர்ப்பு சொன்னபோது, நீதிமன்றத்தில் பெரும் கூட்டம்.
ஜாமினில் எடுப்பதானால் பணம் வேண்டி இருக்கும் என்று யாரோ கூறினர். அதைக் கேள்விப்பட்ட ஈ.வெ.ரா.,  25 ஆயிரம் ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு, நீதிமன்றத்திற்கு வந்தார்.

இதோ பணம், 25 ஆயிரம் நான் தருகிறேன். ஜாமினில் எடுங்கள்... என்றார். ஆனால் , ஜாமினில் எடுக்க முடியவில்லை. தவித்துப் போனார், ஈ.வெ.ரா. அண்ணாதுரை முதல்வரான பின், அவருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்கா செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. பெரும் அளவில் பணம் செலவாகும் என்று பேச்சு எழுந்தது.

அதெல்லாம் அரசு செலவுதான். ஆனாலும், ஈ.வெ.ரா. பெருந்தொகையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து, அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் தனித்தனியாக, எவ்வளவு செலவானாலும், நான் தருகிறேன்... என்று மன்றாடியபோது, கலங்காத கண்களும் கலங்கின.


ஒருபுறம் பொதுப்பணத்தில் ஒரு காசுகூட தொடாத சிக்கன சிகாமணி. மறுபுறம், உற்றவருக்கு ஓடிவந்து உதவும் மனிதாபிமானம்.
இவை, ஈ.வெ.ரா., எனும் நாணய த்தின் இரண்டு பக்கங்கள்.

-----------------------------------------"தினமலர்" வார மலர் 20.1.2013 பக்கம் 15

11 comments:

தமிழ் ஓவியா said...


பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் பற்றி....


பிற இதழிலிருந்து...

பிரமோஸ் பெருமை!

சாதிக்க நினைப்பவர்களுக்கு வானமே எல்லை என்பதை நிஜமாகவே நிரூபித்திருக்கிறார்கள் பொறி யியல் மாணவ, மாணவியான தேன்மொழி அருண் பிரகாஷ்.

விண்ணில் வெற்றிக் கோலமிடும் இந்தியாவின் கம்பீர அடையாளமான பிரமோஸ் ஏவுகணைத் திட்டப் பணிக்குத் தேர்வாகிப் பெருமை பெற்றிருக்கி றார்கள் இவர்கள் இருவரும்.

தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவ மணிகளான இவர்களைச் சந்தித்தபோது நமக்கும் பெருமிதத்தில் நெஞ்சம் நிமிர்ந்தது...

தேன்மொழி

நான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மின்னணு தொடர்பியல் நிறைவாண்டு படித்து வருகிறேன். எனக்கு சொந்த ஊர் நெய்வேலி அருகில் உள்ள சேப்ளாநத்தம் கிராமம். எனது தந்தை தேவதாஸ் விவசாயி. தாய் ராஜேஸ்வரி. எனக்கு சிறுவயது முதலே என்ஜினீயர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. எப்படியாவது என்ஜினீயர் ஆக வேண்டும். பொறியியல் துறையில் சாதனை படைத்து பெற்றோர்களுக்கும், படித்த கல்வி நிறுவனத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டு சிறுவயது முதல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன்.

ஆனால், குடும்பச் சூழ்நிலை காரணமாக பொறி யியல் படிப்புக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித் தனர். இருப்பினும் பொறியியல் துறையில் எனக்கு இருந்த ஆர்வத்தை பார்த்த எனது மாமா ஆனந்த், பொறியியல் பயிலுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் என்னுடைய இலக்கில் இருந்து சற்றும் விலகாமல், மனம் தளராமல் பாடுபட்டதன் விளைவாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பைப் பெற்றேன்.
பெண்களுக்கு உயர்கல்வி தேவையா, பெண்கள் படித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள் என கூறுபவர் கள் மத்தியில் சாதனை படைத்து அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே எனது தீர்க்கமான எண்ணம்.

அதற்கேற்ப, பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்தை பற்றி என்னுடைய சீனியர் மாணவர்கள் கூறினர். உடனே, பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்திற்குத் தேர்வாக வேண்டும் என்று திடமான உறுதியோடு உழைக்க ஆரம்பித்தேன்.

இந்த பிரமோஸ் ஏவுகணைத் திட்டம், இந்திய அரசு, ரஷ்ய அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் திட்ட மாகும். இந்தத் திட்டத்தில் பொறியியல் மாணவர் களைத் தேர்வு செய்து பணிக்கு அமர்த்துவர். அதற்கானவளாக நேர்காணல் முதலில் நடைபெறும். பின்னர் எழுத்துத்தேர்வு நடக்கும். இதில் தேர்வு பெற்றவர்களுக்குத்தான் பணி கிடைக்கும்.

தமிழ் ஓவியா said...

பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேர்வாக வேண்டும் என்பதே எனது தாகமாக இருந்ததால் படிப்பையே சுவாசமாகச் சுவாசித்தேன்.

அதனால் நான் எனது துறையில் 90 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண் பெற, பிரமோஸ் ஏவுகணைத் திட்டப் பணி யில் சேர்வதற்கான தகுதித் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டேன். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற நான், நம்பிக்கையுடன் நேர்முகத் தேர்வை எதிர்கொண் டேன். அதில் மின்னணுவியல் தொடர்பாக 40 கேள்விகள் கேட்டார்கள். எல்லாக் கேள்விகளுக்குமே சரியாகப் பதில் அளித்தேன். ஒரு வாரம் கழித்து, நான் தேர்வு செய்யப் பட்டுள்ளதை மின்னஞ்சல் வாயிலாக அறிந்தேன்.

நம்மால் இந்த திட்டத்துக்குத் தேர்வாக முடியுமா என்ற பயம் ஆரம்பத்தில் இருந்தது. முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை என எங்கள் பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் ஊக்குவித்தனர்.

அந்த ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு படிப்பில் மூழ்கினேன். சக நண்பர்களும், பேராசிரியர்களும் எனக்கு உதவியாக இருந்தனர்.
இப்படி பலரும் எனக்குக் கைகொடுத்துத் தாங்கிய தால், எனது கனவு நனவாகியுள்ளது. வருகிற ஜூலை 1 ஆம் தேதியன்று பிரமோஸ் ஏவுகணைத் திட்ட விஞ்ஞானி பணிக்குச் சேரச் சொல்லி அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்திருக்கிறது என்று கூறியதேன்மொழியின் முகத்தில் சந்தோஷப் பிரவாகம்.
இவரது எதிர்கால லட்சியம், பொறியியல் துறையில் மேலும் சாதித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கையால் விருது பெற வேண்டும் என்பதுதானாம்.

அருண்பிரகாஷ்

நான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் நிறைவாண்டு பயின்று வருகிறேன். எனது சொந்த ஊர், கடலூர் மாவட்டம் அறந்தாங்கி. தந்தை ஞானப்பிரகாசம். தாய் அந்தோணி மேரி. எனக்கும் என்ஜினீயர் ஆக வேண்டும் என்பதே சிறுவயது ஆசை. எனது தந்தை காலமாகிவிட்டார்.

இருப்பினும் எங்கம்மா எங்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்.

தமிழ் ஓவியா said...

பொறியியலில் எனக்கு இருக்கும் ஆர்வத்தை பார்த்து, குடும்ப நிலையையும் தாண்டி என்னை அம்மா பொறியியல் கல்லூரியில் சேர்த்தார். அவரது கஷ்டத்தை உணர்ந்த நானும் பொறியியலில் முதன்மை மாணவனாகத் தேர்ச்சி பெற வேண்டும், அதேவேளை யில் இத்துறையில் சாதனை புரிய வேண்டும் என்று நினைத்தேன். பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்தை பற்றி என்னோடு பயிலும் சக நண்பர்கள் கூறினர். உடனே, எப்படியாவது நாமும் பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்தை வகுத்துக் கொண்டு அதை நோக்கிய பயணத்தைத் தொடங்கினேன்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்திய, ரஷ்ய விண்வெளித் துறைகள் கூட்டாக இணைந்து இந்திய ராணுவத்துக்கான பிரமோஸ் ஏவுகணைகளைத் தயாரித்து வருகின்றன. இளம் விஞ்ஞானிகளை ஏவுகணைத் தயாரிப்பில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் விஞ்ஞானி அனில் மிஸ்ரா தலைமையிலான பிரமோஸ் விஞ்ஞானிகள் குழுவினர்,
இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய கல்வி நிலையங்களுக்குச் சென்று தகுதியுடைய மாணவர்களைத் தேர்வு செய்கிறார்கள்.

இந்த விவரங்களை அறிந்த நான், பிரமோஸ் ஏவுகணைத் திட்ட தேர்வுக்காக பல்வேறு புத்தகங் களில் இருந்து குறிப்புகளைச் சேகரித்தேன். இதற்கு முன்னர் இந்தத் திட்டத்தில் பங்கேற்றவர்களைச் சந்தித்து ஆலோசனைகளையும் பெற்றேன். அத்துடன் என்னுடைய பேராசிரியர்களும் எனக்கு சில வழி முறைகளை சொல்லிக் கொடுத்தனர். இப்படி எனது ஆர்வமான உழைப்புடன், பேராசிரியர்கள், நண்பர் களின் உறுதுணையுடன் பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேர்வானேன்.

இந்தத் திட்டத்துக்குத் தேர்வாவது ஆரம்பத்தில் மலை மாதிரியான விஷயமாகத் தெரிந்தது. ஆனாலும், மலைத்து அப்படியே நின்றுவிடாமல், நம்மால் முடியும்... முயற்சி செய்வோம் என்று கஷ்டப்பட்டு உழைத்தேன். தற்போது, நம் நாட்டின், ரஷ்ய நாட்டின் முன்னணி விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்படும் அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். புனேயில் எனக்கு தொழில்நுட்ப, செயல் முறைப் பயிற்சி வழங்கப்படும். பொறியியல் துறை என்ற பெருங்கடலில் இப்போது தான் சிறுபடகில் இறங்கியிருப்பதாக நினைக்கிறேன்.

இன்னும் நான் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம் என்பது எனக்குத் தெரியும். எனது பயணம் வெற்றிகரமாகத் தொடரும்! என்று நம்பிக்கை பொங்க முடித்தார் அருண்பிரகாஷ்.

மாணவர் சமுதாயத்துக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் இந்த இருவரும், பிரமோஸ் ஏவுகணையைப் போல மேலும் பல பிரமிப்பூட்டும் வெற்றிகளைப் பெற வாழ்த்துவோம்!

நன்றி: தினத்தந்தி இளைஞர் மலர் 19.1.2013

தமிழ் ஓவியா said...


ஜாதீய உணர்வுகளுக்கு சாவுமணி அடியுங்கள்!


அரசுக்கு மலேசிய திராவிடர் கழகம் கோரிக்கை

டான்சிறீ டாக்டர் கோ சூ கூனுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் கழகச்சுடர் பி.எஸ்.மணியம்.

கோலாம்பூர், ஜன.20- மலேசியத் தமிழர்களிடையே பிளவைக் கொண்டு வரும் பாதகச் செயல் தொடர்கிறது என்பதால் ஜாதிச் சங்கங்களுக்கு மானியங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்திக் கொண்டு ஜாதீய உணர்வுக்கு அரசாங்கம் சாவுமணி அடிக்க வேண்டும் என மலேசிய திராவிடர் கழகம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது.

மலேசியத் திராவிடர் கழகத்தின் இந்தத் தூய சிந்தனை சாத்தியப்படக் கூடிய ஒன்று என்பதால் ஜாதீயத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் உடனடியாக ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தலைநகர் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் டிச.23 அன்று மலேசிய திராவிடர் கழகத்தின் 66ஆவது தேசிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வில் தலைமையுரையாற்றிய கழகத்தின் தலைவர் கழகச்சுடர் பி.எஸ்.மணியம் மேற்கண்ட அறைகூவலை விடுத்தார்.

கூட்டத்தை தொடக்கி வைத்த பிரதமர்துறை அமைச்சர் செனட்டர் டான்சிறீ டாக்டர் கோ சூ கூன் முன்னிலையில் மேற்கண்ட கருத்து வெளியிடப்பட்டது.

நிகழ்வில் பேசிய பி.எஸ்.மணியம் பல ஆண்டுகளாக மலேசிய இந்தியர் மத்தியில் நிலவி வந்த ஒற்றுமை உணர்வு குறைந்து போனதற்கு சாதிச்சங்கங்களே காரணம் எனச் சாடினார்.

ஜாதி வாரியாக இங்கு சங்கங்கள் எதற்கு? இதற்காகவா தந்தை பெரியார் பாடுபட்டார். 1929ஆம் ஆண்டு தந்தை பெரியார் அப்போதைய மலாயாவுக்கு வருகை தந்து தீண்டாமை ஒழிப்புக்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

மீண்டும் 1954ஆம் ஆண்டு அவர் இங்கு வந்த போது மக்களிடையே ஜாதிபேதம் குறைந்து போயிருந்தது. மலேசியத் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை ஓங்கியிருந்தது. இன்று அப்படியா இருக்கிறது? நாடு முழுவதும் சாதிச்சங்கங்கள் எல்லாமே அரசாங்கத்தின் மானியத்தை நாடும்போதெல்லாம் அரசாங்கம் அள்ளியள்ளி தருகிறது.

அரசாங்கப் பிரநிதியாக இந்த நிகழ்வுக்கு வந்திருப்பதால் தங்களின் மூலமாக சாதிச் சங்கங்களுக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என பி.எஸ். மணியம் பேசினார்.

தமிழ் ஓவியா said...


நான் அறிந்த தலைவர்களிலே தந்தை பெரியார் உன்னதமானவர்



மலேசியா - பிரதமர் துறை அமைச்சர் டான்சிறீ டாக்டர் கோ சூ கூன் புகழாரம்

கோலாலம்பூர், ஜன.20- நான் அறிந்த தலைவர்களிலே தந்தை பெரியார் உன்னதமான வர் என்றார் மலேசிய அமைச்சர்.

மலேசியத் திராவிடர் கழகத்தின் 66ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மலேசிய அரசின் பிரதமர் துறை அமைச்சர் டான்சிறீ டாக்டர் கோ சூகூன் அவர்கள் உரையாற்று கையில் குறிப்பிட்டதா வது: (23.12.2012). இளம் வயதிலேயே, பினாங்குத் தீவுக்கு தந்தை பெரியார் வந்த செய்தியை அறிவேன். நண்பர்களோடு அரசி யல் பயணமாக சென் னைக்குச் சென்றபோது பெரியாரின் ஆற்றல் குறித்து அங்குள்ள அரசியல் தலைவர்கள் ஆற்றிய உரைகளைச் செவிமடுத்திருக்கிறேன்.

தந்தைபெரியாரை இளைய சமுதாயம் நன்கு அறிந்து கொள் ளும் வகையில் மலே சியத் திராவிடர் கழகம் அவர் பெயரால் வெளி வந்துள்ள பெரியார் என்ற திரைப்படத்தை பொங்கல் தினத்தன்று மலேசியத் தொலைக் காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண் டும். நானும் அந்தத் திரைப் படத்தை இன்னும் பார்த்ததில்லை என்ப தால் எனக்கும் அத னைக் காண்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்.

பல நல்ல கருத்து களைச் சொன்ன நல்ல வர் தொடர்பான விஷ யங்களை அறிந்து கொள்ள நான் எப்போதுமே ஆர் வம் காட்டுவேன் என கோசூகூன் பேசினார்.

நிகழ்வில் பிரதமர் துறை துணையமைச்சு சார்பாக 10 ஆயிரம் வெள்ளி நன்கொடையை மலேசிய திராவிடர் கழகத்திற்கு கோசூகூன் வழங்கினார்.

தமிழ் ஓவியா said...

ராஜபக்சேபற்றி கலைஞர்

சென்னை, ஜன.20- இலங் கையில் நடப்பது மக்களாட்சி யல்ல; சர்வாதிகார ஆட்சி என்று கருத்துத் தெரிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

இதுபற்றி முரசொலியில் இன்று அவர் எழுதியிருப்ப தாவது: இலங்கை உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அரசு வழக்கறிஞராக இருந்த அட்ட ர்னி ஜெனரல் அவர்களையே இலங்கை அதிபர் ராஜபக்சே நியமனம் செய்திருக்கிறாரே?

கலைஞர்: இலங்கையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஷிராணி பண்டார நாயகே, ராஜபக்சே அரசுக்கு உதவியாகவும், அனுசரணை யாகவும் நடக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்மீது செயற்கையான குற்றச்சாட்டு களை சுமத்தி, நாடாளுமன்றத் தில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற் றினார்கள். ஆனால் அந்தத் தலைமை நீதிபதியை அவ்வாறு விலக்குவது சரியல்ல என்று பெரிய எதிர்ப்பு அங்கே தெரிவிக்கப்பட்டதை, அதிபர் ராஜபக்சே ஏற்றுக் கொள்ள வில்லை.

தற்போது இலங்கை உச்சநீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியக மோகன் பெய்ரீஸ் என்பவரை அதிபர் ராஜபக்சே நியமித் திருக் கிறார். இவர் இலங்கையில் அட்டார்னி ஜெனரலாக பதவி வகித்தவர். ஓய்வுக்குப் பிறகு அமைச்சரவையின் சட்ட ஆலோச கராகப் பொறுப்பேற்றவர். இலங்கைமீது அய்.நா. சபை மனித உரிமைகள் கவுன்சில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தபோது, ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்களை நியாயப்படுத்தி, இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டும் பணி யிலே ஈடுபட்டவர். அவர்தான் தற்போது அங்கே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளவர். இலங்கையில் மக்களாட்சி என்ற போர்வையில் தனது சர்வாதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள ராஜபக்சே தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சி களில் இதுவும் ஒன்றாகும்.

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...


சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. ----------பெரியார்(விடுதலை,5.4.1961)

தமிழ் ஓவியா said...


பெண்ணுரிமைக் கோட்பாடுகள்


திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (19.1.2013) மூன்று முக்கியப் பிரச்சினை களை முன்னிறுத்தித் தொடர் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதில் ஒன்று பெண்ணுரிமைக் கோட்பாட்டை முன்னிறுத்துவதாகும்.

பெண்கள் மனித சமூகத்தின் சரி பகுதி - ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை மதங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள்கூட - பெண்கள் என்றால் அவர்கள் அடுப்பங்கரைக்குள் முடங்கிக் கிடக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.

இப்படிப் பெண்களை ஒன்றுக்கும் உதவாதவர் களாக அடிமைப்படுத்திய காரணத்தால் மனதள விலும், உடல் அளவிலும் பலகீனமானவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.

கடும் போராட்டங்களின் காரணமாக பல வகையான உரிமைகள் கல்வி, வேலை வாய்ப்பில் கிட்டி வந்தாலும் ஆண்களின் ஒடுக்குமுறை ஓய்ந்த பாடில்லை.

அதன் தீய விளைவுதான் புதுடில்லியில் மருத் துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகும்.

அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் பெண் கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும், உயர்ஜாதி ஊடகங்கள் அவற்றை இருட்டில் பதுக்கிவிட்டன; ஆம், இந்த ஊடகப் பூனைகள் கண்களை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு போய்விட்டதாகக் கற்பனையுலகில் சஞ்சரித்துக் கொண்டுள்ளன.

பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை யிலிருந்து அவர்கள் மீட்கப்படவேண்டும்; நிரந்தரப் பரிகாரம் காணப்படவேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

எதற்கும் முதற்படி என்பது விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும், தன் பலமும்தான். படித்த பெண் களாக இருந்தாலும் உடல் அளவில் ஆண் களுக்கு நிகராகப் பலம் பெற்றிருக்கவில்லை. அதற்குப் பல வகையான வரலாற்றுக் காரணங்கள், உளவியல் ரீதியான காரணங்கள் சொல்லப்படலாம்.

எவ்வளவு காலத்திற்கு இந்தச் சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு இருக்க முடியும்? திராவிடர் கழகம் தீர்மான வடிவமாகச் சொல்லும் தற்காப்புப் பயிற்சி - குறிப்பாக கராத்தே பயிற்சி கல்வி நிறு வனங்களில் தொடக்கப்பள்ளி முதலே கட்டாயமாக அளிக்கப்படவேண்டும். (பெரியார் கல்வி நிறுவனங் கள் இதனைச் செய்து வருகின்றன) துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து உடனடியாக அதற்கான அனுமதி யையும் அளிக்கவேண்டும்.

நான்கு இடங்களில் பெண்களிடம் வாலாட்டிய கொடியவர்கள் பதிலடி கொடுக்கப்பட்டனர் என்ற செய்தி வந்தால் போதும், இந்த ஆண் சூராதி சூரர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளியக் கூடியவர்கள்தாம்.

மற்றொரு முக்கிய வாய்ப்பு என்பது சட்டமன்றங் களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்குரிய 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறை வேற்றி, பெண்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக அவர்களே குரல் கொடுக்கும் பொழுதுதான் அதற்கான விடிவு விரைவில் கிடைக்கும்.

மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண் உறுப்பினர்கள் என்பது குறைந்தபட்சமாகும். அந்த நிலை ஏற்பட்டால், நாடாளுமன்றமே கிடுகிடுக்காதா?

எருதின் புண் காக்கைக்குத் தெரியாது. பெண் களுக்கான உரிமைகள், குறைபாடுகள் எந்த அள வுக்கு ஆண்களால் உணரப்பட முடியும்? அப்படியே உணர்ந்தாலும் அவர்கள் பெண்களுக்காக முன்வந்து போராடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதே!

1996 ஆம் ஆண்டு முதல் இதற்கான மசோதா நிலுவையில் உள்ளதே. மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையிலும் நிறைவேற்றப்படவேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் அந்தச் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

தேர்தல் நேரம்... அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தால், அனேகமாக எந்த அரசியல் கட்சியும் பெண்களுக்கு எதிராகச் செயல்படாது என்று எதிர்பார்க்கலாம்.

பெண்கள் அமைப்புகளும் இத்திசையில் குரல் கொடுப்பார்களாக! திராவிடர் கழகம் தொடர் பிரச்சாரத்தில் இதனை முன்னெடுத்துச் செல்ல உள்ளது - ஆதரவு தாரீர்! 23-1-2013

தமிழ் ஓவியா said...


இரிடியமா?


அய்யய்யோ, கோவில் கலசங்களில் இருப்பது இரிடி யம் அல்ல, அல்ல! என்று இந்து அறநிலையத் துறை அலறுகிறதே, ஏன்? அவசர அவசரமாக அந்தத் துறை அறிவிப்புகளை அளிக்கிறதே - ஏன்?

வேறு ஒன்றும் இல்லை. இரிடியம் என்பது மிகவும் விலை உயர்ந்த பொருள். அதைத் திருடிக் கொண்டு போய் விற்றால் கொள்ளைப் பணம் கிடைக்கும் என்று சிலர் வாயூறி நிற்கின்றனர்.

இதற்கு இப்பொழுது ஏற் பட்டுள்ள அவசியம் என்ன தெரியுமா? விருத்தாசலத் தையடுத்த மங்கலம்பேட்டை - எடைச்சித்தூரில் கேசவப் பெருமாள் கோவில் இருக் கிறது. அந்தக் கோவில் கல சத்தில் இரிடியம் இருக்கிறது என்று நினைத்து அதனைத் திருடுவதற்கு முயற்சி செய் ததாக சென்னையைச் சேர்ந்த கணவனும், மனைவி யும் கைது செய்யப்பட்டுள்ள னர்.

இதுபோன்ற முயற்சிகள் பல இடங்களிலும் மேற் கொள்ளப்படுகின்றன என் பதை அறிந்த நிலையில்தான், இந்து அறநிலையத் துறை, அதெல்லாம் இரிடியமும் கிடையாது - ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது - கோவில் கலசத்தில் இருப்ப தெல்லாம் என்ன தெரியுமா? கம்பு, கேழ்வரகு, அரிசி, எள், கொள் போன்ற நவதானி யங்கள்தான் கலசத்தில் வைக்கப்படுகின்றன; மேலும், அந்தக் கலசம் என்பது வெறும் செம்பாலானது! என்று இந்து அறநிலையத் துறை அறிக்கை கொடுத் துள்ளது.

இதனை நினைத்தால் வயிறு குலுங்க சிரிப்புதான் வருகிறது. ஒரு கோவிலின் கலசத்தைக் காப்பாற்றிட, அந்தக் கோவிலில் குடி கொண்ட கடவுளுக்குத் துப்பு இல்லை - சக்தியில்லை என்பதை இதன்மூலம் இந்து அறநிலையத் துறை அதி காரபூர்வமாக அறிவிப்ப தாகத்தானே அர்த்தம்!

இன்னொன்று, அப்படித் திருட நினைப்பவர்களும் கடவுள் மறுப்பாளர்கள் - கடவுள் நம்பிக்கையற்றவர் களும் அல்லவே!

அப்படி இருந்தும் அவர் கள் திருடுகின்றனர் என் றால், அவர்களுக்கு ஒன்று நன்றாகவே தெரிந்திருக் கிறது - கடவுளாவது கத் தரிக்காயாவது - வெறும் பொம்மை என்பதை நூற் றுக்கு நூறு தெரிந்து வைத் துள்ளனரே!

குமுதம்: பெரிய மற்றும் சிறு கோவில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம்? மக் களுக்குக் கடவுளின்மீது உள்ள பக்தி போய்விட்டதா?

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகம் பேர் பக்தர்களா கவே இருந்து ஆண்டவனி டத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள் வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம் பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொது வாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது... பணமுடை அதி கரித்துள்ளது. (குமுதம், 12.9.1996)

நாம் சொல்லுவதைத் தானே சங்கராச்சாரியாரும் வேறு வார்த்தைகளில் சொல்லுகிறார், புரிகிறதோ!

- மயிலாடன் 23-1-2013

தமிழ் ஓவியா said...


இரிடியமா?


அய்யய்யோ, கோவில் கலசங்களில் இருப்பது இரிடி யம் அல்ல, அல்ல! என்று இந்து அறநிலையத் துறை அலறுகிறதே, ஏன்? அவசர அவசரமாக அந்தத் துறை அறிவிப்புகளை அளிக்கிறதே - ஏன்?

வேறு ஒன்றும் இல்லை. இரிடியம் என்பது மிகவும் விலை உயர்ந்த பொருள். அதைத் திருடிக் கொண்டு போய் விற்றால் கொள்ளைப் பணம் கிடைக்கும் என்று சிலர் வாயூறி நிற்கின்றனர்.

இதற்கு இப்பொழுது ஏற் பட்டுள்ள அவசியம் என்ன தெரியுமா? விருத்தாசலத் தையடுத்த மங்கலம்பேட்டை - எடைச்சித்தூரில் கேசவப் பெருமாள் கோவில் இருக் கிறது. அந்தக் கோவில் கல சத்தில் இரிடியம் இருக்கிறது என்று நினைத்து அதனைத் திருடுவதற்கு முயற்சி செய் ததாக சென்னையைச் சேர்ந்த கணவனும், மனைவி யும் கைது செய்யப்பட்டுள்ள னர்.

இதுபோன்ற முயற்சிகள் பல இடங்களிலும் மேற் கொள்ளப்படுகின்றன என் பதை அறிந்த நிலையில்தான், இந்து அறநிலையத் துறை, அதெல்லாம் இரிடியமும் கிடையாது - ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது - கோவில் கலசத்தில் இருப்ப தெல்லாம் என்ன தெரியுமா? கம்பு, கேழ்வரகு, அரிசி, எள், கொள் போன்ற நவதானி யங்கள்தான் கலசத்தில் வைக்கப்படுகின்றன; மேலும், அந்தக் கலசம் என்பது வெறும் செம்பாலானது! என்று இந்து அறநிலையத் துறை அறிக்கை கொடுத் துள்ளது.

இதனை நினைத்தால் வயிறு குலுங்க சிரிப்புதான் வருகிறது. ஒரு கோவிலின் கலசத்தைக் காப்பாற்றிட, அந்தக் கோவிலில் குடி கொண்ட கடவுளுக்குத் துப்பு இல்லை - சக்தியில்லை என்பதை இதன்மூலம் இந்து அறநிலையத் துறை அதி காரபூர்வமாக அறிவிப்ப தாகத்தானே அர்த்தம்!

இன்னொன்று, அப்படித் திருட நினைப்பவர்களும் கடவுள் மறுப்பாளர்கள் - கடவுள் நம்பிக்கையற்றவர் களும் அல்லவே!

அப்படி இருந்தும் அவர் கள் திருடுகின்றனர் என் றால், அவர்களுக்கு ஒன்று நன்றாகவே தெரிந்திருக் கிறது - கடவுளாவது கத் தரிக்காயாவது - வெறும் பொம்மை என்பதை நூற் றுக்கு நூறு தெரிந்து வைத் துள்ளனரே!

குமுதம்: பெரிய மற்றும் சிறு கோவில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம்? மக் களுக்குக் கடவுளின்மீது உள்ள பக்தி போய்விட்டதா?

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகம் பேர் பக்தர்களா கவே இருந்து ஆண்டவனி டத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள் வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம் பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொது வாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது... பணமுடை அதி கரித்துள்ளது. (குமுதம், 12.9.1996)

நாம் சொல்லுவதைத் தானே சங்கராச்சாரியாரும் வேறு வார்த்தைகளில் சொல்லுகிறார், புரிகிறதோ!

- மயிலாடன் 23-1-2013

தமிழ் ஓவியா said...


ஷிண்டேமீது குதறுபவர்கள், இதற்கென்ன பதில் சொல்வார்கள்?


தீவிரவாதத் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு

பட்டியலிட்டார் மத்திய உள்துறை செயலாளர்

புதுடில்லி, ஜன.23- சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக் குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்குத் தொடர் புள்ளதாக அறிவித் துள்ள மத்திய அரசு அவற்றில் தொடர்பு டைய 10 பேர் பெயர் களையும் வெளியிட் டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு நடை பெற்றது. இந்த மாநாட் டில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச் சர் சுஷில்குமார் ஷிண்டே, இந்துத் தீவிரவாதம் குறித்து வெளியிட்ட தக வலை வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினர்.

இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி உடன டியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், உள் துறை அமைச்சர் ஷிண் டேவை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும், பாரதீய ஜனதா வற் புறுத்தி வருகிறது. இந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல் மான் குர்ஷித், ஷிண்டே வின் கருத்தை நேற்று ஆதரித்தார்.

ஆர்.எஸ்.எஸ். தொடர்புள்ள 10 பேர்

இதற்கிடையில், தீவி ரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் துக்குத் தொடர்பு இருப் பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, மத்திய உள் துறை செயலாளர் ஆர்.கே.சிங் நேற்று மாலை அறிவித்தார். சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் (அஜ்மீர்) தர்கா ஷரீப் பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்கு தல்களில், குறைந்தபட் சம் ஆர்.எஸ்.எஸ். இயக் கத்துடன் தொடர்பு டைய 10 பேர் ஈடுபட்ட தற்கான ஆதாரங்கள் உள்ளன என்று, அவர் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்த சுனில் ஜோஷிக்கு (இவர் இப் போது உயிருடன் இல்லை) சம்ஜெதா ரயில் குண்டு வெடிப்பு மற்றும் அஜ் மீர் ஷெரீப் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புள்ளது.

இவர் 1990 முதல் 2003 வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பணிகளை மேற்கொண்டார். சந்தீப் தாங்கே என்பவருக்கு (தலைமறைவாக உள்ளார்) சம்ஜெதா, மெக்கா மசூதி, அஜ்மீர் ஷெரீப் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புள்ளது. இவர் இந்தூர் உள் ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக ராகச் செயல்பட்டார். அதே போன்று லோகேஷ் சர்மா, சுவாமி அசீமானந்த், ராஜேந்தர் என்ற சமுந்தர், முகேஷ் வாசனி, தேவேந்தர் குப்தா, சந்திரசேகர், கமல் செகான், ராம்ஜி கல்சங்ரா ஆகியோருக்கு இந்த மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களிலோ அல்லது ஏதாவ தொன்றிலோ தொடர்புள்ளது. இவர்களில் ராம்ஜியை தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார் ஆர்.கே. சிங். ஜனார்த்தன் திவிவேதி

உள்நாட்டின் காவி தீவிரவாத சர்ச்சை ,தீவிரம் அடைந்து வரும் நிலையில், தீவிரவாதத்துக்கு ஜாதியோ மதமோ இல்லை என்ற தனது கருத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருந்து வருகிறது. இந்தத் தகவலை தெரிவித்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி, இந்த பிரச்சினையை நீண்ட காலத்திற்கு முன்பே காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தி இருப்பதாக தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எந்த மதமும் இல்லை என்பதே காங்கிரசின் கருத்து என்று ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்தார்.